Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    38756
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87990
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    20014
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/22/24 in Posts

  1. இந்தியா கோப்பை வென்றால் கூடுத‌லா 5புள்ளி கிடைக்கும் அடி ம‌ட்ட‌த்தில் இருந்து மெதுவாய் மேல‌ வ‌ர‌லாம் கிரிக்கேட்ட‌ ப‌ற்றி அதிக‌ம் தெரிந்த‌ என‌க்கு . ந‌ல்ல‌ அணிக‌ளை தெரிவு செய்து கீழ் ம‌ட்ட‌த்தில் நிக்கிற‌தை நினைக்க‌ விச‌ரா இருக்கு.......................................
  2. 👍......... எனக்கு எந்த ஆட்சேபணைகளும் இல்லை, கிருபன். நாலு புள்ளிகள் போனாலும், நம்மை தாங்குவதற்கு நாலு உறவுகள் கீழே இருக்குதே என்ற துணிவு தான்.........🤣..........மதுரை, சென்னை, திருச்சி, கோவை...... மிக்க நன்றி கிருபன் உங்களின் நேரத்திற்கும், தொடர் உற்சாகத்திற்கும்.
  3. போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்தாலும் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் இந்த முறை மூலம் புள்ளிகள் கொடுப்பது பாகுபாடான அனுகூலத்தை (unfair advantage) முதல் சுற்றுப் போட்டிகளில் குழு B இல் அவுஸ்திரேலியா முதலாவதாகவும் இங்கிலாந்து இரண்டாவதாகவும், குழு C வரிசையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலாவதாகவும் கணித்தவர்களுக்குக் கொடுக்கின்றது என்பதாக ஒருவர் முறைப்பட்டிருந்தார். இங்கிலாந்து-தென்னாபிரிக்கா போட்டியில் அவுஸ்திரேலியா வெல்லும் கணித்தவர்களுக்கு புள்ளிகள் கொடுக்கப்பட்டது சரியில்லை என்பது முறைப்பட்டவரின் வாதம். எனவே குழு B மற்றும் குழு C போட்டியில் இருந்து, அவற்றில் வெல்லும் அணியின் குழுவுக்கு ஏற்ப புள்ளிகளை வழங்கலாம் என்று நினைக்கின்றேன். இதன் பிரகாரம் அவுஸ்திரேலியா விளையாடும் போட்டியில் இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்திருந்து, அவுஸ்திரேலியா வென்றால் இரு அணிகளையும் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு இரு புள்ளிகள் கிடைக்கும். அவுஸ்திரேலியா தோற்றால் இரு அணிகளையும் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் கிடையாது. அதாவது, போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்திருக்கும் பட்சத்தில், சுப்பர் சுற்றுப் போட்டிகளில் இங்கிலாந்து (B1) அல்லது அவுஸ்திரேலியா (B2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. அதே போன்று ஆப்கானிஸ்தான் (C1) அல்லது மேற்கிந்தியத் தீவுகள் (C2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. இப்படி மாற்றும்போது பின்வரும் போட்டிகளில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட புள்ளிகளை நீக்கவேண்டி ஏற்படும். 55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், ஆப்கானிஸ்தான் (C1) எதிர் இந்தியா (A1) AFG எதிர் IND இந்தியா ஆப்கானிஸ்தானை வென்றதால் மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் எனக் கணித்த ஈழப்பிரியன், தியா, ரசோதரன் ஆகியோர் புள்ளிகளை இழப்பார்கள். 57) சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, இங்கிலாந்து (B1) எதிர் தென்னாபிரிக்கா (D1) ENG எதிர் SA தென்னாபிரிக்கா இங்கிலாந்தை வென்றதால் பின்வரும் பத்துப்பேர் புள்ளிகளை இழப்பார்கள். சுவி, புலவர், P.S.பிரபா, நுணாவிலான், பிரபா USA, ஏராளன், ரசோதரன், கந்தப்பு, நந்தன், நீர்வேலியான் ஆட்சேபனைகள் இல்லாத பட்சத்தில் இன்றிரவு புதிய விதியின்படி புள்ளிகளை வழங்குகின்றேன்!
  4. "கலங்காதே மகனே" கவலைப்படாதே / கலங்காதே நாம் அடிக்கடி கேட்கும் ஒரு ஆறுதல் வார்த்தை. எமது மனதை அறியக்கூடிய ஒரு கருவி இருக்குமாயின், எம் வாழ்வில் பலதடவை கட்டாயம் இந்த வார்த்தை எதிர் ஒலித்து இருக்கும். கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக மிக மகிழ்வாக இருந்த என் மகன் இன்று கவலையுடன் கணனியில் இருப்பதைக் கண்டேன். எனக்கு என்ன நடந்தது என்று புரியவில்லை. எது எப்படியாகினும் அவன் அருகில் சென்று, முதுகில் தட்டி ஆறுதல் படுத்தி 'கலங்காதே மகனே' என அவனுக்கு ஒரு தெம்பு கொடுத்தேன். அது நாம் முதல் கட்டாயம் செய்யவேண்டிய ஒன்று! இரு ஆண்டுக்கு முன்பு, அவன் உயிருக்கு உயிராய் காதலித்த அவனின் சக மாணவி, இறுதி ஆண்டில் மிக திறமையாக சித்தியடைந்தாள். அதுவரை அவளும் என் மகனையே விரும்பி, அன்னியோன்னியமாக நெருக்கமாக இருந்தவள், இப்ப அதே பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக பதவி பெற்றதும், என் மகனில் இருந்து ஒரேயடியாக விலக தொடங்கினாள். மகன் சந்திக்கப் போனால், யாரோ தெரியாதவன் போல. கண்டும் காணாமல் விலகி விலகிப் போனாள். பிறகு தான் மகனுக்கு தெரிய வந்தது, அவள் ஒரு மூத்த விரிவுரையாளர் ஒருவரை இப்ப காதலிக்க தொடங்கி விட்டாள் என்று! தாய் இல்லாமல் வளர்ந்தவன் என்பதால், நான் செல்லமாகவே அவனை வளர்த்து விட்டேன். அது தான் அவனால் எந்த சோகங்களையும் தாங்கும் வல்லமை குறைவாக காணப்பட்டது. அவன் அன்று வீட்டிற்கு வந்து கட்டிலின் ஒரு மூலையில் முடங்கி கிடந்துவிட்டான். காதலையே பணத்துக்கும் பதவிக்கும் மாற்றும் இப்படியானவளை கல்யாணம் கட்டி வாழ்வதை விட, அவளை மறந்து ஒரு புது வாழ்வை ஆரம்பிப்பதே நல்லது என்று ஆறுதல் கூறி, அவனை ஒரு பொழுதுபோக்காக, நடந்தவற்றை மறக்கவும் வெளியே கூட்டிச் சென்றேன். நான் பொதுவாக சமயத்திலோ ஆண்டவனிலோ நம்பிக்கை இல்லை. ஆனால் என் மனைவி அதற்கு எதிர் மாறு. அவள் எதாவது துக்கம் அல்லது மகிழ்வு நடந்தால், நயினாதீவில் உள்ள நாகபூசணி அம்மன் கோயில் போய் வழிபடுவது வழமை. அவள் எப்பவும் தன் மகனையும் அங்கு கூட்டிப் போவார். ஆகவே மகனுக்கும் அந்தப் பழக்கம், தாயின் மேல் உள்ள அதி உயர் மதிப்பினால் தானாகவே வந்துவிட்டது. நான் அதை தடுக்கவில்லை. அவன் இப்ப தான் அங்கேதான் தான் போகவேண்டும் என்று கூறினான். நானும் சம்மதித்து அங்கு சென்றோம். அப்படி அன்று போகும் பொழுதுதான் தனது இன்றைய நண்பியை ஒரு ஆண்டுக்கு முன் சந்தித்தான். அவள் பாலர் பாடசாலை இளம் ஆசிரியை. உயர் வகுப்பு வரையும் தான் படித்து இருந்தாலும், மிகவும் பண்பாக மரியாதையாக காணப்பட்டாள். அவள் அந்த ஊரையே சேர்ந்தவளும், அந்த ஆலயத்துக்கு அண்மையில் வாழ்பவளும் ஆவாள். அவளின் தந்தை ஒரு போலீஸ் உத்தியோகத்தர் என்றாலும், ஒரு விபத்தில் அவர் இறந்துவிட்டார் என்று அறிந்தோம். அவள் தாய் சகோதரர்களுடன் வாழ்ந்து வந்தாள். அவளின் பெயர் கூட நாகபூசணி அம்மனின் பெயரையே பிரதிபலித்தது. அன்று தற்செயலாக ஆலயத்தில் சந்தித்த இருவரும், நாம் கொழும்பு திரும்பிய பிற்பாடு முகநூலிலும் தொலை பேசியிலும் தமது நட்பை வளர்த்தார்கள். எனக்கு மகன் மகிழ்வாக இருக்க வேண்டும் என்பதாலும், அவளை நேரடியாக பார்த்தத்தாலும் அவர்களின் நட்பிற்கு நான் எந்த இடையூறும் கொடுக்கவில்லை. ஆனால் அவன் மீண்டும் சோர்ந்து இருப்பது எனக்கு புதிராக இருந்தது. திறந்து இருந்த கணணியை பார்த்தேன், அது அவளின் முகநூல் பக்கம் தான். அவன் மீண்டும் மீண்டும் ஹாய் / ஹலோ என அவளுக்கு அழைப்பு விட்டிருப்பது அதில் பதியப் பட்டிருந்தது. ஆனால் எந்த மறுமொழியையும் காணவில்லை. மகனிடம் இனி இல்லை என்ற அளவுக்கு நண்பியாக தினம் கதைத்துக் கொண்டு இருந்தவள், ஒரு ஆண்டு முடிந்து சில மாதங்களிலேயே மாறி விட்டாள் என்பது புரியாத புதிராக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குள் மகனின் வாழ்வில் இரண்டாவது தோல்வி. அதுவும் இது ஆண்டவன் சன்னதியில் ஏற்பட்ட காதல்! அவள் இப்ப மகனை தவிர்ப்பது வெளிப்படையாக தெரிகிறது. ஏன் ? எதற்கு என மகன் அறிய விரும்பினாலும் நான் ஆராய விரும்பவில்லை. புவனமுழுதாடுகின்ற புவனேஸ்வரி.. புறமிருந்தோர் புறமிருக்கும் பரமேஸ்வரி.. நவநவமாய் வடிவாகும் நாகேஸ்வரி.. ஆமாம் புதுமை புதுமையாய் உருவெடுக்கும் அவள், இன்று என்ன உருவத்தில் எங்கே, யாருடன் ... அது எமக்கு அப்பாற்பட்டது! நான் மகனைப் பார்த்தேன். அவன் அந்த முகநூலை முறைத்து பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் நான் பின்னால் நிற்பதை கவனிக்கவில்லை. நான் அவனின் முதுகில் தட்டி ஆறுதல் படுத்தும் பொழுது தான் அவனுக்கு உணர்வே வந்தது. அவனின் கண்களில் கண்ணீர் நிறைந்து இருந்தது. அது என்னை பார்த்ததும் ஆறாக பெருகியது. அவன் என்னை பார்த்து, 'இந்த பெண்ணுக்கு என்ன நடந்தது?, ஏன் இப்படி செய்கிறாள்? என் நட்பு , காதல் தேவை இல்லை என்றால், வெளிப்படையாக கூறலாம் தானே? நான் அவளின் புது நட்பு யார் என்று கேட்கப்போவதில்லை ?, உண்மையை கூறி ஒதுங்கலாம் தானே?' என்னிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டான். எனக்கு என்ன சொல்வது என்று புரியவே இல்லை. இன்று இவை எல்லாம் சகயமாக வந்துவிட்டது. நான் அவனுடன் கதைத்ததில், இதற்கு என்ன செய்வது என்று அவனுக்கே தெரியவில்லை என்பதை அறிந்தேன். நான் அவனை பார்த்தேன், இதற்கு தீர்வு உன்னிடமே என்றேன். அவன் உடனே என்னைப் பார்த்து, என்னிடமே விடை இருக்கு என்றால், நான் ஏன் கவலைப் படுகிறேன் என்றான்! 'மகனே எல்லாவற்றுக்கும் மறுமொழியோ அல்லது தீர்வோ காணமுடியாது. சிலவேளை அதை கைகழுவி விடுவதே தீர்வாக இருக்கும். உன்னால் இனி ஒன்றும் செய்யமுடியாது என் நீ நம்பும் பொழுது அல்லது எண்ணும் பொழுது, எப்படி நீ மட்டும் தீர்வு காண கவலைப்பட முடியும், கொஞ்சம் சிந்தி , கலங்காதே மகனே!' நான் மகனிடம் உருக்கமாக கேட்டேன். மகன் கொஞ்ச நேரம் என் முகத்தையும், தாயின் படத்தையும் உற்றுப் பார்த்தான், பின் அவளின் முகநூலை எடுத்து தன் நட்பை அதில் இருந்து அகற்றினான். இனிமேல் தனக்கு ஒரு காதலும் வேண்டாம், பெண் நட்பும் வேண்டாம். நீங்கள் பார்த்து தெரிந்து எடுக்கும் பெண்ணே உங்கள் மருமகள் ஆகட்டும்! என்று கூறிவிட்டு தன் படுக்கைக்கு சென்றுவிட்டான்! ஒன்றை கவனத்தில் வையுங்கள், நீங்கள் எதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி இருந்தீர்கள் என்றால், ' இதற்க்கு என்னால் தீர்வு காண முடியுமா ?' உங்களை நீங்களே கேளுங்கள், இல்லை என்றால், அதை உங்கள் மனதில் இருந்து அகற்றி விடுங்கள். அது உங்களுக்கு நிம்மதி கொடுக்கும்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  5. இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஹார்டிக் பாண்டியாவில் அதிரடியான ஆட்டமிழக்காமல் எடுத்த 50 ஓட்டங்களுடன் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி அடித்தாடமுயன்று விக்கெட்டுகளை இழந்து, இறுதியில் 8 விக்கெட் இழப்பிற்கு 146 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: இந்திய அணி 50 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்திய அணி வெல்லும் எனச் சரியாகக் கணித்த 17 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன . சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா, பாகிஸ்தான் அணிகளைத் தெரிவு செய்த 05 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றில் குழு D இல் தென்னாபிரிக்கா இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த @kalyaniக்குப் புள்ளிகள் கிடையாது. 47வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 101 2 ரசோதரன் 99 3 சுவி 94 4 ஈழப்பிரியன் 93 5 கோஷான் சே 93 6 கந்தப்பு 91 7 நந்தன் 89 8 நீர்வேலியான் 89 9 கிருபன் 88 10 வாத்தியார் 88 11 எப்போதும் தமிழன் 88 12 P.S.பிரபா 87 13 குமாரசாமி 86 14 தமிழ் சிறி 86 15 அஹஸ்தியன் 85 16 வாதவூரான் 84 17 நிலாமதி 83 18 ஏராளன் 81 19 வீரப் பையன்26 80 20 தியா 78 21 புலவர் 74 22 கல்யாணி 73 23 நுணாவிலான் 72
  6. பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள்* நாம் – முதல் தலைமுறை, தந்தை + தாய் – இரண்டாம் தலைமுறை, பாட்டன் + பாட்டி – மூன்றாம் தலைமுறை, பூட்டன் + பூட்டி – நான்காம் தலைமுறை, ஓட்டன் + ஓட்டி – ஐந்தாம் தலைமுறை, சேயோன் + சேயோள் – ஆறாம் தலைமுறை, பரன் + பரை – ஏழாம் தலைமுறை, ஆக, பரன் + பரை = பரம்பரை ஒரு தலைமுறை – சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால், ஏழு தலைமுறை – 480 வருடங்கள்.. ஈரேழு தலைமுறை – 960 வருடங்கள்.. (கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)ஆக, பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்குதலை முறையாக என்று பொருள் வரும். வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை.. ஆதாரம் கூக்கிள் ஆண்டவர்.
  7. ரசோதரன் கூற்றை நான் ஆமோதிக்கிறேன்........ஆனால் புள்ளிகளில் நாங்கள் மோதிக்கிறோம் ......நீங்கள் யோசிக்காமல் புள்ளிகள் போடுங்கள் ........! 😂
  8. உங்களின் எல்லா முடிவுக்கும் நான் ஆதரவு. மழை வந்தால் DUCKWORTH-LEWIS METHOD இருப்பது போல போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதினால் ‘கிருபன் Method’ இணை உபயோகித்து புள்ளிகளை வழங்குங்கள் 😀
  9. ஆச்சரியமானதும், பிரயோசனமானதுமான அருமையான தகவல் தந்தமைக்கு நன்றி ஏராளன். இதுவரை.. பறவைகள், மிருகங்கள் மூலம் மனிதன் கற்றவை அனேகம், இன்னும் பல கண்டறிய வேண்டி உள்ளது. "பறவையை கண்டான் விமானம் படைத்தான்" ஒட்டகச்சிவிங்கி தண்ணீர் அருந்தும் போது.... தனது முள்ளந்தண்டுக்கு பாதிப்பு இல்லாமல் நன்றாக காலை அகட்டி குனிந்து குடிக்கும் போது அதன் முள்ளந்தண்டுகள் பாதுகாக்கப் படுகின்றன. மனிதர் தமது தவறான செயல்களால் ஐந்து பேரில் ஒருவருக்கு முள்ளந்தண்டு பிரச்சினை உள்ளதாக ஒரு கணிப்பு தெரிவிக்கின்றது.
  10. இறக்கும்தருவாயில் ஏற்படும் மூச்சிழுப்பு. இந்த நிலையில் மரணமும் நிகழாது, வாழவும் முடியாது தொடர்ச்சியாகத் தத்தளிக்கும் மிகப் பயங்கரமன, பரிதாபகரமான நிலை. வாழ்க்கை முழுவதும் பாவம் செய்தவர்கள், அநியாயம் , அழிச்சாட்டியம் செய்தவர்களுக்கு இந்த வகை மரணம் நிகழும் என்பது சாதாரண மக்களின் பொதுவான கருத்து. நிற்க, (கொஞ்சம் இளகிய மனமுள்ளவர்கள் மனதைத் திடப்படுத்திவிட்டு கீழே வாசிக்கவும். ) எனக்குத் தெரிந்த ஒருவரது இறுதி நிமிடங்களுக்கு அவரருகில் நின்ற ஞாபகம். அவர் பேய் ஓட்டுபவர். மிகவும் நல்ல மனிதர். எல்லோராலும் மதிக்கப்படுபவர். ஆனால் அவரது இறுதி நிமிடங்கள் மிகவும் கடினமானதாக இருந்தது. சேடம் இழுத்துக்கொண்டே இருந்தார். உயிர் பிரிவதாக இல்லை. இறுதியில் மூத்தோர் பலர் ஒன்று சேர்ந்து ஒரு மந்திரம் தெரிந்த ஒருவரைக் கூட்டி வந்தார்கள். அவர் அவரருகில் வந்து பார்த்துவிட்டு ஒரு சேவலைக் கொண்டு வரும்படி கூறினார். அதன்படி சேவலும் கொண்டுவரப்பட்டது. அவர் எல்லோர் முன்னிலையில் வளவின் ஒரு மூலையில் சேடம் இழுப்பவர் கிடத்தப்பட்டிருக்கும் யன்னல் அருகில் சேவலின் கழுத்தை வெட்டி எறிந்தார். கழுத்தில்லாத சேவல் இறக்கைகளை அடித்து பயங்கரமாகத் துடிதுடித்து சிறிது சிறிதாக அடங்கியது. . சேவலின் உயிர் அடங்கும் பொழுதில் சேடம் இழுத்தவரது உயிரும் அடங்கியது. 😥
  11. இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி குயின்ரன் டிகொக்கினதும் டேவிட் மில்லரினதும் அதிரடி ஆட்டங்களுடன் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணி ஆரம்ப ஆட்டக்காரர்கள் நிலைத்து ஆடமுடியாமல் போனதாலும், வேகமாக அடித்தாடிய ஹரி புரூக்கும் லியல் லிவிங்ஸ்ரனும் இறுதிவரை நின்று ஆடாததாலும் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 7 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனச் சரியாகக் கணித்த @ஈழப்பிரியன் ஐயாவுக்கும், @வாத்தியார் அண்ணாவுக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. இப்போட்டியில் இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குப் புள்ளிகள் கிடையாது! முதல் சுற்றில் குழு B இல் அவுஸ்திரேலியா முதலாவதாகவும், இங்கிலாந்து இரண்டாவதாகவும் வரும் எனச் சரியாகக் கணித்தமையால், போட்டிகளுக்கான அணிகள் குழம்பியமையால் இப்போட்டியில் அவுஸ்திரேலியா வெல்லும் எனக் கணித்த 10 பேருக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்! சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா அணியைத் தெரிவு செய்த @வாதவூரான்க்குப் புள்ளிகள் கிடையாது. 45வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 101 2 ரசோதரன் 101 3 சுவி 94 4 ஈழப்பிரியன் 93 5 கந்தப்பு 91 6 நந்தன் 91 7 கோஷான் சே 91 8 நீர்வேலியான் 87 9 கிருபன் 86 10 எப்போதும் தமிழன் 86 11 P.S.பிரபா 85 12 குமாரசாமி 84 13 தமிழ் சிறி 84 14 வாத்தியார் 84 15 ஏராளன் 83 16 அஹஸ்தியன் 83 17 வாதவூரான் 82 18 நிலாமதி 81 19 தியா 80 20 வீரப் பையன்26 78 21 புலவர் 76 22 நுணாவிலான் 74 23 கல்யாணி 73
  12. "ஜாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின்−மேதினியில் இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி. என்று அன்று உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பாகுபாடு கூடாது என்று ஒளவையார் பாடியிருந்தார். ஆனால் இன்று உலகம் ஆண், பெண்,அல்லது அதற்கும் மேல் என நீ எதுவாக இருந்தாலும் மனிதனே என்ற முடிவிற்கு வந்து அதிக காலம் ஆகி விட்டது உலகம் முழுவதும் ஓரினச் சேர்க்கை வந்து விட்டது இனி மனித குல உற்பத்திக்கு ஆபத்து வந்து விட்டது என்று ஒரு பாலர் அஞ்சுகின்றனர் அதனால் உலகிற்கே ஆபத்து என்று ஒருபடி மேலே சென்று கூச்சல் இடுகின்றனர் இன்னொரு பாலர் யாரும் யாரையும் நேசிக்கலாம் விரும்பியவர்களுடன் சேர்ந்து வாழலாம் . குழந்தை பெறுவது தான் மனித குலத்தின் தொழிலா? என்று வாதாடுகின்றனர். உலகத்தை மனிதன் உருவாக்க வில்லை இது தான் உண்மை. இந்த உலகத்தில் நடப்பவை எல்லாம் உங்களுக்கானது அல்ல. ஆனால் இங்கே உனக்கு என்ன வேண்டும் என்பதை நீயே தீர்மானிக்கலாம். இந்த விதிப்படி ஆண் ஆண் / பெண் பெண் / அதற்கும் மேலானவர்கள்/ உண்மையில் மனித குலம் அதற்கும் மேலானவர்களே
  13. நோயுற்ற அல்லது காயமடைந்த மனித குரங்குகள் தனக்குத் தானே மருத்துவம் செய்து கொள்வது எப்படி? பட மூலாதாரம்,ELODIE FREYMANN படக்குறிப்பு,மனித குரங்குகள் என்ன சாப்பிட விரும்புகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். கட்டுரை தகவல் எழுதியவர், விக்டோரியா கில் பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மனித குரங்குகள் (chimpanzees), வலி நிவாரணி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட தாவரங்களை சாப்பிடுகின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். உகாண்டாவின் காடுகளில் தாங்கள் செய்த ஆய்வை அவர்கள் விவரித்தனர். காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்டதாக தோன்றிய விலங்குகள் தாவரங்கள் மூலம் சுய மருந்துவம் செய்துகொள்கின்றனவா என்பதை அவர்கள் ஆய்வு செய்தனர். காயமடைந்த விலங்கு ஒன்று காட்டில் இருந்து குறிப்பிட்ட ஒரு செடியை தேடிய போது, ஆராய்ச்சியாளர்கள் அந்த தாவரத்தின் மாதிரிகளை சேகரித்து அதை பகுப்பாய்வு செய்தனர். பரிசோதிக்கப்பட்ட பெரும்பாலான தாவரங்கள் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருந்தன. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். PLOS One இதழில் தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிட்ட விஞ்ஞானிகள், புதிய மருந்துகளின் கண்டுபிடிப்பில் சிம்பன்சிகள் உதவக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். "இந்த காடுகளில் உள்ள எல்லா தாவரங்களையும் மருத்துவ குணங்களுக்காக நம்மால் சோதிக்க முடியாது. எனவே நம்மிடம் இந்த தகவல் உள்ள தாவரங்களை நாம் ஏன் சோதிக்கக் கூடாது, அதாவது சிம்பன்சிகள் தேடும் தாவரங்கள்?" என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை க்கழகத்தைச் சேர்ந்த முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் எலோடி ஃப்ரீமேன் குறிப்பிட்டார். கடந்த நான்கு ஆண்டுகளாக, தொடர்ச்சியாக பல மாதங்களை புடோங்கோ மத்திய வனக் காப்பகத்தில் செலவிட்டுள்ள டாக்டர் ஃப்ரீமேன் அங்கு காட்டு மனிதக் குரங்குகளின் இரண்டு சமூகங்களை கவனமாக பின்தொடர்ந்து ஆய்வு செய்தார். பட மூலாதாரம்,ELODIE FREYMANN படக்குறிப்பு,காயம் அல்லது நோயின் அறிகுறிகளைக் காட்டிய சிம்பான்சிகள் ஆய்வின் மையமாக இருந்தன வலியின் அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதையும் ஒரு விலங்கு நொண்டியபடி செல்கிறதா அல்லது அசாதாரணமான முறையில் தன் உடலைப் பிடித்துக் கொண்டுள்ளதா என்பதையும் அவரும் அவரது குழுவினரும் கவனிப்பார்கள். பின்னர் அவற்றுக்கு என்ன நோய் அல்லது தொற்று இருக்கிறது என்று அறிய சோதனை செய்வதற்காக அவற்றின் மலம் மற்றும் சிறுநீரின் மாதிரிகளை சேகரிப்பார்கள். காயம்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட சிம்பான்சி தான் பொதுவாக சாப்பிடாத மரத்தின் பட்டை அல்லது பழத்தோல் போன்ற ஒன்றைத் தேடும் போது அவர்கள் குறிப்பாக அதன் மீது கவனம் செலுத்தினர். "தாவரங்கள் மருத்துவ குணம் கொண்டதாக இருக்கலாம் என்பதற்கான இந்த தடயங்களை நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம்" என்று டாக்டர் ஃப்ரீமேன் விளக்கினார். கையில் மோசமாக காயம்பட்டிருந்த ஒரு ஆண் மனித குரங்கு பற்றி அவர் விவரித்தார். பட மூலாதாரம்,AUSTEN DEERY படக்குறிப்பு,மனித குரங்குகள் தேடிய மரங்கள் மற்றும் தாவரங்களிலிருந்து டாக்டர் எலோடி ஃப்ரீமேன் மாதிரிகளை சேகரித்தார். "அந்தக் குரங்கு நடப்பதற்கு காயம்பட்ட கையை பயன்படுத்தவில்லை. அது நொண்டிக் கொண்டிருந்தது. இந்த சமூகத்தின் மற்ற குரங்குகள் ஒரு இடத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, காயமடைந்த இந்தக் குரங்கு மட்டும் நொண்டியபடி ஒருவகை செடியை (fern) தேடிச்சென்றது. இதைத்தேடி உண்ட ஒரே சிம்பன்சி அதுதான்," என்று அவர் நினைவு கூர்ந்தார். கிறிஸ்டெல்லா பாராசிட்டிகா என்று அழைக்கப்படும் இந்த தாவரத்தை ஆராய்ச்சியாளர்கள் சேகரித்து பகுப்பாய்வு செய்தனர். அதில் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருந்தன. மொத்தத்தில் ஆராய்ச்சியாளர்கள் 13 வெவ்வேறு தாவர இனங்களில் இருந்து 17 மாதிரிகளை சேகரித்து அவற்றை சோதிக்க ஜெர்மனியில் உள்ள நியூபிரான்டன்பர்க் அப்ளைடு சயின்சஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் ஃபேபியன் ஷுல்ட்ஸுக்கு அனுப்பி வைத்தனர். கிட்டத்தட்ட 90% சாறுகள், பாக்டீரியா வளர்ச்சியைத் தடுத்தன. மேலும் மூன்றில் ஒரு பங்கு செடிகள் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருந்தன. அதாவது அவை வலியைக் குறைத்து குணப்படுத்துவதை ஊக்குவித்தன. பட மூலாதாரம்,AUSTEN DEERY படக்குறிப்பு,அழிந்துவரும் இந்தக் காடுகளில் ஆய்வு மேற்கொண்டால் சில புதிய மருத்துவ தாவரங்களை கண்டுபிடிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வில் பின்தொடரப்பட்ட எல்லா காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட மனித குரங்குகளும் முழுமையாக குணமடைந்துவிட்டதாக டாக்டர் ஃப்ரீமேன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். "ஃபெர்ன்களை சாப்பிட்ட அந்தக்குரங்கு அடுத்த சில நாட்களில் மீண்டும் தனது கையைப் பயன்படுத்தியது," என்று அவர் விளக்கினார். "ஆயினும் இவை அனைத்துமே இந்த வளங்களை உண்டதன் நேரடி விளைவு என்பதை எங்களால் 100 சதவிகிதம் நிரூபிக்க முடியாது," என்று அவர் பிபிசி நியூஸிடம் கூறினார். "ஆனால் காடுகளில் உள்ள மற்ற உயிரினங்களை கவனிப்பதன் மூலம் நாம் பெறக்கூடிய மருத்துவ அறிவை இது எடுத்துக்காட்டுகிறது. எதிர்கால சந்ததியினருக்காக இந்த 'வன மருந்தகங்களை' பாதுகாக்க வேண்டிய அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது." என்று அவர் குறிப்பிட்டார். https://www.bbc.com/tamil/articles/c4nnq1glz9no
  14. இந்துஜா குடும்பத்தினருக்கு 4.5 வருட சிறை தண்டனை adminJune 22, 2024 சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துஜா குடும்ப உறுப்பினர்களான பிரகாஷ் இந்துஜா, அவரது மனைவி கமால், மகன் அஜய் மருமகள் நம்ரதா ஆகியோா் சட்டவிரோதமாக தங்கள் வீட்டில் இந்திய வேலையாட்களை பணிக்மர்த்தி, அவர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கியதாகவும், அதிக மணி நேரம் வேலை செய்யுமாறு மிரட்டுவதாகவும் சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, இந்துஜா குடும்பத்தினர் தங்கள் வீட்டு வளர்ப்பு நாய்க்கு நாள் ஒன்றுக்கு 23.51 பிராங்க் செலவு செய்யும் அதேவேளை வீட்டுப் பெண் பணியாளருக்கு நாளொன்றுக்கு 18 மணி நேரம் வேலை செய்வதற்கு 7 பிராங்க் மட்டுமே வழங்குவதாகவும் ஊழியர்களின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்து அவர்களை மிரட்டி வேலை வாங்குகின்றனர் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது இந்த வழக்கு தொா்பில் தீர்ப்பு வழங்கிய சுவிட்சர்லாந்து நீதிமன்றம் இந்துஜா குடும்ப உறுப்பினர்களான பிரகாஷ் மற்றும் அவரது மனைவி கமால் இருவருக்கும் தலா நான்கு ஆண்டுகள் ஆறு மாதங்களும் அவரது மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதாவுக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீா்ப்பளித்ள்ளது. எனினும் அவர்கள் மீது தொடரப்பட்ட மனிதக் கடத்தல் தொடர்பான வழக்கை மட்டும் தள்ளுபடி செய்துள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இந்துஜா குழுமம். இந்தியாவில் அசோக் லேலண்ட், இன்டஸ்இண்ட் பேங்க் , ஹிந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் லிமிடெட், ஹிந்துஜா லஹிந்துஜா லேலண்ட் பைனான்ஸ் லிமிடெட் உள்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருவதுடன் 37-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நிறுவனங்களின் கிளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2024/204557/
  15. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மார்கரிட்டா ரோட்ரிக்ஸ் பதவி, பிபிசி செய்தியாளர் 20 ஜூன் 2024 நரம்பியல் விஞ்ஞானி ஜிமோ போர்ஜிகினுக்கு அது ஆச்சரியமாக இருந்தது. 'இறப்பது வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு பகுதி' என்ற உண்மை ஒருபுறம் இருந்தாலும், இறக்கும் தருவாயில் செயலிழக்கும் மூளையைப் பற்றி நமக்கு 'கிட்டத்தட்ட ஒன்றும் தெரியாது' என்பதைத் தன்னால் நம்ப முடியவில்லை என்கிறார் அவர். இது 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு விபத்து மூலம் தெளிவாகத் தெரிந்தது. “நாங்கள் ஆய்வகத்தில் எலிகளை வைத்துப் பரிசோதனை செய்து கொண்டிருந்தோம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவற்றின் நரம்பியல் சுரப்புகளை நாங்கள் ஆய்வு செய்தோம்," என்று அவர் பிபிசி முண்டோ சேவையிடம் விவரித்தார். இதில், இரண்டு எலிகள் திடீரென உயிரிழந்தன. இந்த நிகழ்வு அவற்றின் மூளையின் மரணிக்கும் செயல்முறையை அவதானிக்க அவர்களுக்கு வழிவகுத்தது. “அதில் ஒரு எலிக்கு செரோடோனின் என்ற ரசாயனம் பெருமளவில் சுரந்தது,” என்கிறார். அந்த எலி மாயத்தோற்றத்தில் (hallucinating) இருந்ததா? என்று நினைத்து அவர் ஆச்சரியப்பட்டார். "செரோடோனின் 'ஹேலுசினேஷன்’ உடன் தொடர்புடைய ரசாயனம் ஆகும்," என்று அவர் விளக்கினார். அந்த நரம்பிடைக் கடத்தியின் ( neurotransmitter) அதீதச் சுரப்பு அவரது ஆர்வத்தைத் தூண்டியது. "மூளையின் இந்தச் செயல்முறை பற்றி கண்டிப்பாக ஒரு விளக்கம் இருக்க வேண்டும் என்று நம்பினேன். அந்த வார இறுதியில் இதுதொடர்பாக நான் நிறைய படிக்க ஆரம்பித்தேன். நான் தொடர்ந்து தேடினேன், இறுதியில் இறக்கும் செயல்முறை பற்றி நமக்கு அதிகம் தெரியவில்லை என்ற முடிவுக்கு வந்தேன்,” என்றார். அப்போதிருந்து, மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் நரம்பியல் மற்றும் மூலக்கூறு மற்றும் ஒருங்கிணைந்த உடலியல் இணைப் பேராசிரியராக இருக்கும் ஜிமோ போர்ஜிகின், இறக்கும் போது மனித மூளையில் என்ன நடக்கிறது என்பதைப் ஆய்வு செய்வதற்காக தன்னை அர்ப்பணித்தார். மேலும், அவர் கண்டறிந்தது அனுமானங்களுக்கு முரணானது என்பதை அவர் உணர்ந்தார். படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பட மூலாதாரம்,COURTESY: UNIVERSITY OF MICHIGAN படக்குறிப்பு,ஜிமோ போர்ஜிகின் மரணம் என்றால் என்ன? "யாருக்காவது மாரடைப்பு (cardiac arrest) ஏற்பட்டதை நீங்கள் நேரில் பார்த்ததுண்டா?” என்று அவர் என்னிடம் கேட்டார். “ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் போது சரிந்து விழுவது வெளிப்படையாக தெரியும் நிகழ்வு,” என்றார். "நீங்கள் அந்த நபரைப் பெயர் சொல்லி அழைக்கும் போது அவர் பதிலளிக்க மாட்டார், நீங்கள் அவரைத் தொட்டால் அசைவில்லாமல் இருப்பார், அவர் இறந்துவிட்டதைப் போலச் செயல்படுவார்,” என்றார். அந்த நோயாளி உயிருடன் இருக்கிறாரா என்பதை உறுதிபடுத்த மருத்துவ நிபுணர்கள் தேவை. அவர்கள் இறப்பை உறுதிப்படுத்த எலக்ட்ரோ கார்டியோகிராம் இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். “ஆனால், நீண்ட காலமாக வழக்கத்தில் இருப்பது என்னவென்றால், யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டால், மருத்துவர் அவர்களின் கைகளையோ கழுத்தையோ பரிசோதிப்பர், அவர்களுக்கு நாடித் துடிப்பு இல்லை என்றால், இதயம் ரத்தத்தை 'பம்ப்' செய்யவில்லை என்று அர்த்தம். பின்னர் இது மருத்துவ மரணம் என வரையறுக்கப்படுகிறது," என்று விவரித்தார். "இந்தச் செயல்பாட்டின் போது இதயம் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது, எனவே தான் இந்தச் செயல்பாட்டை 'பெருமூளை அடைப்பு’ ( cerebral arrest) என்று சொல்லாமல் 'மாரடைப்பு' (Cardiac arrest) என்று சொல்கின்றனர்,” என்கிறார். "ஒட்டுமொத்த மருத்துவம் மற்றும் விஞ்ஞான அறிவைப் பொருத்தவரை, மூளை செயலிழக்கிறது. ஏனெனில் அந்த நபரிடம் இருந்து எந்த எதிர்வினையும் வருவதில்லை. அந்த நபரால் உட்காரவோ பேசவோ முடியாது,” என்கிறார். மேலும், மூளை செயல்பட பெருமளவில் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இதயம் ரத்தத்தை பம்ப் செய்யவில்லை என்றால், ஆக்ஸிஜன் மூளையை அடையாது. போர்ஜிகின் கூற்றுப்படி, "அனைத்து வெளிப்படையான சமிக்ஞைகளும் மூளை செயலிழந்ததை சுட்டிக்காட்டுகின்றன." இருப்பினும், அவரது ஆராய்ச்சிக் குழுவின் கண்டுபிடிப்புகள் வேறு முடிவை பிரதிபலிக்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,எலிகளை வைத்து போர்ஜிகின் தலைமையிலான குழு நடத்திய ஆய்வில், மரணத்தின் போது அவற்றின் மூளையில் சில தீவிரமான செயல்பாடுகள் கண்டறியப்பட்டது இறக்கும்போது மூளையில் என்ன நடக்கிறது? எலிகளை வைத்து 2013-இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், விலங்குகளின் இதயம் செயல்படுவது நின்றுபோய், அவற்றின் மூளைகள் ஆக்ஸிஜன் பெறுவதை நிறுத்திய பிறகு, பல நரம்பிடைக்கடத்திகளின் (நியூரோடிரான்ஸ்மிட்டர் - neurotransmitter) தீவிரச் செயல்பாட்டைக் கண்டனர். “செரோடோனின் 60 மடங்கு அதிகரித்தது. நல்ல உணர்வைத் தூண்டும் 'டோபமைன்’ 40 முதல் 60 மடங்கு அதிகரித்தது. விழிப்பூட்டும் திறன் கொண்ட நோர்பைன்ப்ரைன் ரசாயனமும் அதிகரித்தது. நரம்பிடை கடத்திகளின் இத்தகைய உயர் நிலைகளை, அந்த விலங்குகள் உயிருடன் இருக்கும்போது கூட நம்மால் பார்க்க முடியாது," என்று அவர் கூறுகிறார். 2015-இல், இந்த ஆய்வுக்குழு எலிகள் இறக்கும் போது அவற்றின் மூளை செயலிழப்பது குறித்த இரண்டாவது ஆய்வு முடிவுகளை வெளியிட்டனர். "இரண்டு ஆய்வின் போதும், இறக்கும் தருவாயில், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட விலங்குகளில் மூளையின் செயல்பாட்டில் தீவிரத்தன்மை இருந்தது,” என்கிறார். "அவற்றின் மூளை ஒரு அதிவேக செயல் நிலையில் இருந்தது," என்கிறார். அதிவேக மூளை அலைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,காமா அலைகள் கவனம், நினைவாற்றல் மற்றும் சிக்கலைத் தீர்ப்பது உள்ளிட்ட பல்வேறு அறிவாற்றல் செயல்முறைகளுடன் தொடர்புடைய அதிவேக மூளை அலைகள் 2023-ஆம் ஆண்டில், அவர்கள் கோமாவில் இருந்தவர்கள், மற்றும் எலெக்ட்ரோ என்செபலோகிராபி மின்முனைகள் போன்ற உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் உயிர் வாழ்ந்த நான்கு நோயாளிகளை ஆய்வு செய்தனர். "அவர்கள் வெவ்வேறு நோய்களால் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருந்தனர்," என்று விஞ்ஞானி கூறுகிறார். 'அவர்கள் பிழைப்பது சாத்தியமற்றது. உதவக்கூடிய எந்த ஒரு மருத்துவ நடைமுறைக்கும் அப்பாற்பட்டவர்கள்' என்று மருத்துவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் முடிவுக்கு வந்தனர். இதன் விளைவாக, அவர்களை இந்த உலகில் இருந்து விடுவிக்க குடும்பத்தினரும் மருத்துவர்களும் முடிவு செய்தனர். உறவினர்களின் அனுமதியுடன், அந்த நோயாளிகளின் இயந்திர வென்டிலேட்டர்கள் அல்லது சுவாசக் கருவிகள் அகற்றப்பட்டன. அவ்வாறு செய்யும்போது, அவர்களில் இரண்டு நோயாளிகளில், புலனுணர்வு செயல்பாடுகளுடன் (cognitive functions) தொடர்புடைய அதீத மூளைச் செயல்பாடுகள் பதிவு செய்யப்பட்டதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அவர்களின் மூளையில் காமா அலைகளும் கண்டறியப்பட்டன. காமா அலைகள் கவனம், நினைவாற்றல் மற்றும் சிக்கலைத் தீர்ப்பது உள்ளிட்ட பல்வேறு அறிவாற்றல் செயல்முறைகளுடன் தொடர்புடைய அதிவேக மூளை அலைகள் ஆகும். நரம்பியல் நிபுணரின் கூற்றுப்படி, நோயாளியின் வென்டிலேட்டர் துண்டிக்கப்படும் போது பொதுவான ஹைபோக்ஸியா (hypoxia) நிலை ஏற்படுகிறது. இது ரத்தத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை (Generalized hypoxia) விவரிக்கப் பயன்படும் சொல். இதயம் ரத்தத்தை பம்ப் செய்ய முடியாத போது ஏற்படும் நிலையில் ஹைபோக்ஸியா ஏற்படுகிறது. இது மாரடைப்புடன் தொடர்புடைய நிலை ஆகும். "மூளையைச் செயல்படுத்துவதில் ஹைபோக்ஸியா என்னும் நிலை பங்கு வகிக்கிறது என்று தோன்றுகிறது. மேலும், வென்டிலேட்டர்கள் அகற்றப்பட்ட சில நொடிகளில் நான்கு நோயாளிகளில் இருவரின் மூளை நொடியில் செயல்படத் தொடங்கியது,” என்கிறார். ஒட்டுமொத்த மூளையும் செயல்படுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மூளையின் ஃப்ரண்டல் லோப் இளஞ்சிவப்பு நிறத்திலும், பாரிட்டல் லோப் நீல நிறத்திலும், ஆக்ஸிபிடல் லோப் ஆரஞ்சு நிறத்திலும், டெம்போரல் லோப் மஞ்சள் நிறத்திலும் காட்டப்படுள்ளது இந்த ஆய்வைச் செய்த விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, "இறக்கும் தருவாயில் மனிதர்களின் மூளையின் சில பாகங்கள் மட்டுமே செயல்படுகிறது. ஆனால் எலிகளைப் பொருத்தவரை மூளையில் பெருமளவு செயல்படுகிறது.” அவை மூளையின் விழிப்புணர்வுடன் இருக்கும் செயல்பாடுகளுடன் தொடர்புடைய பகுதிகள். அவற்றில் ஒன்று டெம்போரோ பேரியட்டல் ஆக்ஸிபிடல் சந்திப்பு (TPO), இது தற்காலிக, பாரிட்டல் மற்றும் பாரிட்டல் லோப்கள் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் புள்ளியாகும். மேலும், இது 'பின்புற கார்டிகல் வெப்ப மண்டலம்' (posterior cortical hot zone) என்று குறிப்பிடப்படுகிறது. "உங்கள் மூளையின் பின்பகுதி உணர்திறனைக் கட்டுப்படுத்துகிறது," என்று அவர் தெளிவுபடுத்துகிறார். இது கனவுகள், காட்சி மாயைகள் மற்றும் விழிப்புணர்வு (consciousness) ஆகியவற்றுடன் தொடர்புடையது. மொழி, பேசுதல் மற்றும் கேட்பது ஆகியவற்றுடன் தொடர்புடைய வெர்னிக்கே பகுதி (Wernicke area) தூண்டப்பட்டதையும் அவர்கள் கண்டறிந்தனர். "இருபுறமும் உள்ள 'டெம்போரல் லோப்' மிகவும் செயல்திறன் கொண்டு இயங்கியது என்பதையும் நாங்கள் கவனித்தோம்,” என்கிறார். நமது காதுகளுக்கு அருகில் இருக்கும் அந்தப் பகுதி நினைவகச் சேமிப்பு மற்றும் பிற அறிவாற்றல் செயல்முறைகளுக்கு முக்கியமானது. மூளையின் வலது பக்கத்தில் உள்ள டெம்போரோபரியட்டல் சந்திப்பு (TPJ) ஒத்துணர்வு (empathy) பண்புடன் தொடர்புடையது என்பதை பேராசிரியர் போர்ஜிகின் சுட்டிக்காட்டுகிறார். "உண்மையில், மரணத் தருவாய் அனுபவங்களை (near-death experience) அனுபவித்தப் பல நோயாளிகள் மற்றும் மாரடைப்பில் இருந்து தப்பியவர்கள் தங்கள் அனுபவங்கள் தங்களை மேம்படுத்தி, அவர்களின் ஒத்துணர்வை (empathy) அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்,” என்கிறார். போர்ஜிகின், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகளில் ஒருவரைப் பற்றி பேசுகையில், "அவர் உயிர் பிழைத்திருந்தால், அவர் நிச்சயமாக இதே விஷயங்களைச் சொல்லி இருப்பார்," என்று நம்புகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES மரணத்தை நெருங்கிய அனுபவங்கள் புத்துயிர் பெறும் மருத்துவ நுட்பங்களின் வளர்ச்சி காரணமாக மருத்துவ மரணம் அல்லது மரணத்தில் இருந்து தப்பிய பலர், மரணத் தருவாய் அனுபவங்களை (near-death experience) அனுபவித்ததாகத் தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் தங்கள் வாழ்க்கை எப்படித் தங்கள் கண்முன் விரைவாகக் கடந்து சென்றது, அல்லது சில நிகழ்வுகளை எப்படி நினைவில் நிறுத்தியது என்பதை விவரித்தார்கள். பிரகாசமான ஒளியைப் பார்த்ததாக நிறைய பேர் சொன்னார்கள். இன்னும் சிலர் தங்கள் உடலில் இருந்து தப்பித்து என்ன நடக்கிறது என்பதை பார்க்கச் சுற்றித் திரிந்ததாகச் சொல்கின்றனர். இறப்பதற்கு முன்பு சிலர் அனுபவித்த சக்திவாய்ந்த உணர்வுகளை, போர்ஜிகின் தனது ஆய்வுகளில் கண்ட அதிவேக மூளைச் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு விளக்க முடியுமா? "செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் பதிலளிக்கிறார். அவர்களின் 2023 ஆய்வின்படி, குறைந்தது 20% அல்லது 25% பேர் மாரடைப்பில் இருந்து தப்பியவர்கள். அவர்கள் ஒரு ஒளியைக் கண்டதாகக் கூறினர். இது அவர்களின் பார்வை திறனுக்கான மூளைப்பகுதி ( visual cortex ) சுறுசுறுப்பாக இருந்ததைக் குறிக்கிறது. "ஒரு வாகன விபத்தில் சிக்கிய பிறகு, அறுவை சிகிச்சை மூலம் உயிர் பிழைத்த சில நோயாளிகள் தங்கள் சிகிச்சையின் போது மருத்துவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு இருந்ததாகக் கூறினர். அவர்கள் காப்பாற்றப்படும் போது அவர்களைச் சுற்றி நடந்தவற்றை கேட்டு கொண்டிருந்ததாக கூறினர்,” என்கிறார். "பேச்சு மற்றும் மொழியின் உணர்வுக்குக் காரணமான மூளையின் பகுதி, மற்றும் ஹாட் சோன் (later hot zone) எனப்படும் மண்டலம் ஆகிய இரண்டும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்துள்ளது," என்று இறந்த இரண்டு நோயாளிகளைப் பற்றிப் பேராசிரியர் கூறினார். முரண்பாடான நம்பிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நவீன மருத்துவ உபகரணங்களின் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் எண்ணற்ற நோயாளிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. உதாரணமாக, டிஃபிபிரிலேட்டர் மின் அதிர்வுகள் மூலம் இதயத் துடிப்பை மீட்கிறது "மரணம் என்பது இதயத்தை மையமாகக் கொண்டுள்ளதாக நீண்ட காலமாக நம்பப்படுகிறது. எனவே, ஒரு நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் மூளை செயல்படுவதை நிறுத்துகிறது என்று நம்புகின்றனர்,” என போர்ஜிகின் கூறுகிறார். "இருப்பினும், இந்த நம்பிக்கை மரணத்திற்கு அருகில் சென்று உயிர்பிழைத்தவர்களின் அனுபவங்களுடன் ஒத்துப்போவதில்லை,” என்கிறார். அவரைப் பொறுத்தவரை, மாரடைப்பின் போது மூளை வேலை செய்வதற்கான எந்த வெளிப்படையான அறிகுறியும் இல்லை என்றாலும், அதை நிராகரிக்க முடியாது. "ஒளியைப் பார்ப்பது, குரல்களைக் கேட்பது, உடலை விட்டு வெளியேறுவது, அல்லது நடுவானில் மிதப்பது போன்ற ஆழமான நகரும், தாக்கும் அனுபவங்களை ஒருவர் மனதில் கொண்டிருப்பது எப்படி?" இவை அனைத்தும் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதன் ஒரு பகுதியாகும். "இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் உடலுக்கு வெளியில் இருந்து தோன்றுபவை என்றும், இவை உடல் ரீதியானவை அல்ல என்றும் நினைப்பவர்கள் உள்ளனர், ஏனெனில் மருத்துவ வல்லுநர்கள் பலர் மூளை செயல்படவில்லை என்று நம்புகிறார்கள்,” என்கிறார். "ஆனால் நாங்கள் அதை நம்பவில்லை, 2013-இல், விலங்குகளை வைத்து நடத்திய முதல் ஆராய்ச்சியை நாங்கள் வெளியிட்ட போது, இந்த அகநிலை அனுபவங்கள் உடலுக்கு வெளியில் இருந்து வருகின்றன என்ற கருத்தை நிரூபிக்க முடியாது, அது சாத்தியமற்றது என்று நாங்கள் எழுதினோம்,” என்கிறார். இதன் காரணமாக, அவை மூளையில் தோன்றியவை என்று நம்பப்படுவது எதிர்மறையானதாகத் தோன்றினாலும், மூளை செயல்படுகிறது என்று உறுதியாக நம்பியதாகக் கூறுகிறார். "மரணத்திற்கு அருகாமையில் நிகழும் அனுபவங்கள் அனைத்தும் மரணத்துக்குப் பிறகு நடப்பவை அல்ல, ஆனால் இதயம் மற்றும் மூளையின் முக்கிய அறிகுறிகளை நிறுத்துவதற்கு முன்பு மூளையின் செயல்பாட்டிலிருந்து உருவாகின்றன என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்கிறார். ஒரு புதிய புரிதல் மனிதர்களைப் பற்றிய தனது ஆய்வு மிகவும் சிறியது என்றும், நாம் இறக்கும் போது மூளையில் என்ன நடக்கிறது என்பது குறித்து இன்னும் அதிக ஆராய்ச்சி தேவை என்றும் போர்ஜிகின் கருதுகிறார். இருப்பினும், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இதில் கவனம் செலுத்திய பிறகு, ஒரு விஷயம் தெளிவாகி உள்ளது: "இதயம் நின்றுபோகும் போது, மூளையின் செயல்பாடுகள் மங்கும் (hypoactive) என்பதை விட அதிவேகமாக செயல்படும் (hyperactive) என்பதே சரி,” என்கிறார். "இதுபோன்ற நெருக்கடியான காலங்களில் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி நாம் மேலும் அறிய வேண்டும்,” என்கிறார். "உண்மையில், அவர் தனது ஆய்வில் கண்டறிந்தது மூளையின் உயிர்வாழும் செயல்முறையின் (survival mode) ஒரு பகுதி. அது ஆக்ஸிஜன் இல்லாத சூழல் உருவாகும்போது அதிகமாக செயல்படத் தொடங்குகிறது,” என்கிறார். ஆனால், மூளை தனக்கு ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்பதை உணரும்போது என்ன நடக்கும்? "நாங்கள் அதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம், அதுபற்றி அதிக ஆராய்ச்சிகள் இன்னும் செய்யப்படவில்லை,” என்று அவர் பதிலளித்தார். உறக்க நிலையைப் பற்றி விளக்கிய அவர், "குறைந்த பட்சம் எலிகள் மற்றும் மனிதர்கள் உட்பட விலங்குகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறையைச் சமாளிக்க ஒரு எண்டோஜெனஸ் பொறிமுறையைக் (endogenous mechanism) கொண்டுள்ளன," என்று தனது கோட்பாட்டை என்னுடன் பகிர்ந்து கொண்டார். ”இதயம் செயலிழக்கும் போது மூளை எதுவுமே செய்ய முடியாமல், அதுவும் செயலிழந்துவிடும் என்று இப்போது வரை நம்பப்படுகிறது. ஆனால், இது நமக்கு உறுதியாகத் தெரியாது,” என்று அவர் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார். உயிர் பிழைத்தல் மூளை, தனது செயல்பாடுகளை எளிதில் நிறுத்தாது என்று போர்ஜிகின் நம்புகிறார். வழக்கமாக நெருக்கடிகளின் போது அது போராடுகிறது. "ஆக்ஸிஜன் பற்றாக்குறையைத் தக்கவைக்க மூளை உறக்கநிலையை (Hibernation) ஏற்படுத்துகிறது. மூளைக்கு நெருக்கடிகளைச் சமாளிக்கும் திறன் உள்ளது என்று நம்புவதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளில் தூக்கநிலையும் ஒன்று,” என்கிறார். "என் மூளை என்னிடம், பொருளாதார வீழ்ச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டு, பெற்றோர்கள் வேலை இல்லாமல், வருமானம் இல்லாத நிலையில் இருக்கும் ஒரு குடும்பத்தைக் கற்பனை செய்து பார்க்கச் சொல்கிறது,” என்கிறார். "அவர்கள் என்ன நடவடிக்கைகள் எடுக்கிறார்கள்? அவர்கள் செலவைக் குறைத்து, தேவையில்லாத பொருட்களைப் பட்டியலில் இருந்து நீக்குகிறார்கள். அவர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்,” என்கிறார். இந்தச் சூழலை மூளையோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், அந்த குடும்பத்துக்குப் பணத்தேவை எப்படியோ அப்படித்தான் மூளைக்கு ஆக்ஸிஜன் தேவை என்று அவர் நினைக்கிறார். "மூளையும் அதையே செய்கிறது என்று நான் நினைக்கிறேன். அதன் மிக முக்கியமான செயல்பாடு என்ன? நடனமாடவோ, பேசவோ, நகரவோ அனுமதிக்கும் ஒன்றல்ல. அந்த செயல்பாடுகள் அத்தியாவசியமானவை அல்ல. இன்றியமையாதது சுவாசிப்பது, இதயத்தை துடிக்க வைப்பது,” என்கிறார். அதனால்தான், " 'வரவிருக்கும் பிரச்னைக்கு நான் ஏதாவது செய்வது நல்லது' என்று மூளை நினைக்கிறது. கூடுதலாக, இது உங்கள் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனின் அளவைக் குறைந்துப் பாதுகாக்க வேண்டிய சூழலிலும் உள்ளது,” என்கிறார். ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் போர்ஜிகின் தனது ஆய்வில் கண்டது ஒரு மாபெரும் பனிப்பாறையின் நுனி மட்டுமே என்று கருதுகிறார். அதன் கீழே ஆய்வு செய்யப்பட வேன்டியவை ஏராளம் உள்ளன என்று நம்புகிறார். "தனது நிதி முன்னுரிமைகளை மறுவரையறை செய்ய வேண்டிய ஒரு குடும்பத்தின் உதாரணத்துடன் எனது கோட்பாட்டை நான் உங்களுக்கு விளக்கியபோது, மூளையும் அதையே செய்கிறது என்று நான் நம்புவதால் தான், நமக்குப் புரியாத ஹைபோக்ஸியாவைச் சமாளிப்பதற்கான உடல்சார்ந்த வழிமுறைகள் இருப்பதாக நான் நம்புகிறேன்,” என்கிறார். "இது மேற்பரப்பில் தெரியும் பெரிய பனிப்பாறைக்கு அடியில் உள்ள ஏதொ ஒன்றை பற்றியது,” என்கிறார். "மேற்பரப்பில், இந்த நம்பமுடியாத அகநிலை அனுபவத்தைக் எதிர்கொண்ட, இதயம் செயலிழக்கும் தருவாய்க்குச் சென்றுதிரும்பிய நபர்கள் உள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம். மேலும், அந்த அனுபவம் மூளையின் அதீதச் செயல்பாட்டின் காரணமாக நிகழ்ந்தது என்பதை எங்கள் தரவு காட்டுகிறது,” என்கிறார். ஆனால், இறக்கும் தருவாயில் மூளை ஏன் இவ்வளவு தீவிரமான செயல்பாட்டைக் கொண்டுள்ளது? "இறப்பைப் பற்றி, அந்த நிகழ்வைப் பற்றி மூளையை மையமாக வைத்து தெரிந்துக் கொள்ள அதிக முயற்சி செய்யவில்லை. நாம் அதைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டும், கண்டுபிடிக்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும். அது நடந்தால், கோடிக்கணக்கான மக்களின் மரணத்தை முன்கூட்டியே கண்டறியலாம்,” என்கிறார். https://www.bbc.com/tamil/articles/c977w50jz7do
  16. அவ‌ர் பெய‌ருக்கு தான் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்ற‌ம் ப‌டி த‌மிழ் நாட்டில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ள் அவ‌ருக்கு சுத்த‌மாய் தெரியாது உள் க‌ட்சி பூச‌ல் அதிக‌ம் அதோட‌ முத‌ல‌மைச்ச‌ரே சொல்லி இருக்கிறார் த‌ன்னால் நின்ம‌தியாய் தூங்க‌ முடிய‌ வில்லை என்று.........................ஊட‌க‌ங்க‌ளை ச‌ந்திக்க‌ இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு ப‌ய‌ம் அவ‌ர்க‌ள் ஏதும் கேட்க்க‌ இவ‌ர் க‌ண்ட‌ மேனிக்கு உள‌றி கொட்டுவார்......................இன்னும் முன்னேற்ற‌ம் இல்லை துண்ட‌றிக்கை பார்த்து மேடையில் பேசுவ‌தில்...................... ந‌ல்ல‌ ம‌னுஷ‌ன் ஆனால் முத‌ல‌மைச்ச‌ர‌ சுற்றி இருப்ப‌வ‌ர்க‌ளால் திமுகா க‌ட்சிக்கு கெட்ட‌ பெய‌ர்...................... 10ல‌ச்ச‌ம் கொடுப்ப‌தில் என‌க்கு கூட‌ உட‌ன் பாடு இல்லை ம‌து இல்லா த‌மிழ‌க‌த்தை உருவாக்க‌னும்.....................பல‌ பெண்க‌ள் வித‌வையா வாழுகின‌ம் த‌மிழ் நாட்டை எடுத்து கொண்டால் பெண்க‌ளை விட‌ ஆண்க‌ள் தான் அதிக‌ம்.......................பெரிய‌ வ‌ய‌தாகியும் ப‌ல‌ ஆண்க‌ள் திரும‌ண‌ம் செய்ய‌மாலே வாழுகின‌ம்..........................பெண் குழ‌ந்தை பிற‌ந்தால் க‌ள்ளி பால் கொடுத்து கொல்லுகிற‌வை...................அத‌ன் தாக்க‌ம் 1980க‌ளில் பிற‌ந்த‌ ஆண்க‌ளுக்கு பெண்க‌ள் இல்லை த‌மிழ் நாட்டில்.......................எங்க‌ட‌ த‌மிழீழ‌த்தில் ம‌க்க‌ள் என்னிக்கை நாளுக்க்கு நாள் குறைந்து கொண்டு வ‌ருது என்று நாம் க‌வ‌லைப் ப‌டுகிறோம் ஆனால் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் த‌மிழ் நாட்டில் பெண் பிள்ளைக‌ளை பெத்த‌ பெற்றோர்க‌ள் மிக‌ பெரிய‌ த‌வ‌றுக‌ளை இழைத்து விட்டின‌ம்..........................
  17. நல்ல தீர்ப்பு. இவர்கள் குடும்பத்துக்கே அவமானம். புதிதாக இவர்கள எந்தத் தவறும் செய்யவில்லை. ஆண்டாண்டு காலமாக ஏழை மக்களை வருத்தி வேலை வாங்குவது இந்திய பணக்காரர்களுக்குச் சாதாரண விடயம். சக மனிதரை மதிக்கத் தெரியாதவர்கள். தனக்குக் கீழ் உள்ளவரை மிதிப்பதூம் மேலுள்ளவர்களுக்குப் பணிந்து போவதும் கலாச்சாரத்தில் ஊறிய ஒன்று. பிரான்சில் சில வருடங்களுக்கு முன் பிரான்சிலுள்ள இந்திய தூதரகத்தில் வேலை செய்த பணிப்பெண் ஒருவர் அவர்கள் செய்த கொடுமை தாங்க முடியாமல் தப்பித்து வெளியே வந்து தனக்கு நடந்த கொடுமைகளை வெளிப்படுத்தியிருந்தார். இவரும் சரியான தூக்கமின்றி ஒரு நாளைக்கு 16 மணித்தியாலம் வேலை செய்துள்ளார். உலகிலுள்ள ஏனையவர்களும் இத் தீர்ப்பைப் பார்த்து ஓரளவாவது அறிவு பெறட்டும்.
  18. புள்ளிகள் வழங்கும் முறை திருத்தப்பட்டுள்ளது. போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்திருக்கும் பட்சத்தில், சுப்பர் சுற்றுப் போட்டிகளில் இங்கிலாந்து (B1) அல்லது அவுஸ்திரேலியா (B2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. அதே போன்று ஆப்கானிஸ்தான் (C1) அல்லது மேற்கிந்தியத் தீவுகள் (C2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. 55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், ஆப்கானிஸ்தான் (C1) எதிர் இந்தியா (A1) AFG எதிர் IND இந்தியா ஆப்கானிஸ்தானை வென்றதால் மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் எனக் கணித்த ஈழப்பிரியன், தியா, ரசோதரன் ஆகியோரின் புள்ளிகள் மீளப் பெறப்பட்டுள்ளன. 57) சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, இங்கிலாந்து (B1) எதிர் தென்னாபிரிக்கா (D1) ENG எதிர் SA தென்னாபிரிக்கா இங்கிலாந்தை வென்றதால் பின்வரும் பத்துப்பேர் புள்ளிகள் மீளப்பெறப்பட்டுள்ளன. சுவி, புலவர், P.S.பிரபா, நுணாவிலான், பிரபா USA, ஏராளன், ரசோதரன், கந்தப்பு, நந்தன், நீர்வேலியான் 57)வது கேள்வியுடன் புள்ளிகள் வழங்கும் முறை திருத்தப்பட்ட பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (இன்றைய போட்டிகளுக்கான புள்ளிகள் பின்னர் வழங்கப்படும்): நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 99 2 ரசோதரன் 97 3 சுவி 92 4 ஈழப்பிரியன் 91 5 கோஷான் சே 91 6 கந்தப்பு 89 7 நந்தன் 89 8 கிருபன் 86 9 எப்போதும் தமிழன் 86 10 நீர்வேலியான் 85 11 குமாரசாமி 84 12 தமிழ் சிறி 84 13 வாத்தியார் 84 14 P.S.பிரபா 83 15 அஹஸ்தியன் 83 16 வாதவூரான் 82 17 நிலாமதி 81 18 ஏராளன் 81 19 வீரப் பையன்26 78 20 தியா 78 21 புலவர் 74 22 கல்யாணி 73 23 நுணாவிலான் 72
  19. மூன்று நான்கு விளையாட்டுகளில் தொடற்சியாக "சேம் சைட் கோல்" போட்டிருக்கிறார்கள்........அது நல்லா இருக்கு........! 😂
  20. ந‌ல்ல‌ ம‌ன‌சுக் கார‌ன் ஜ‌யா நீங்க‌ள் ஹா ஹா..........................என்ன‌ ஒரு ம‌ன‌சு ஹா ஹா😁😁😁😁.................
  21. புள்ளி போடும் புதிய முறையை ஆமோத்தித்த அனைவருக்கும் நன்றி. இன்றிரவு புள்ளிகளின் பட்டியல் மாற்றப்படும்!
  22. கள்ளக்குறிச்சி கல்லவராயன் மலையில் ஏறி கள்ளச்சாராயம் காய்ச்சும் இடங்களை தீ வைத்துக் கொளுத்தி விட்டு, நீட் பிரச்சனையை தீர்க்க வருவார்கள்............ ஒரு ஒரு கிழமை டைம் கொடுங்கள்........ நீட் தேர்வு இன்னுமொரு அட்சய பாத்திரம்...... எப்ப உள்ளுக்குள் கையை விட்டாலும் அங்கே ஒரு போராட்டம் தயாராக இருக்கும். நீட் தேர்வு பற்றி இங்கு களத்தில் ஒரு பெரிய விவாதம் நடந்திருக்கும் என்று நினைக்கின்றேன். ஆனால், இப்ப நடக்கும் பிரச்சனை நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகள் பற்றியது மற்றும் முழு இந்தியாவும் இதில் பங்கேற்கின்றது. எவர் குத்தினால் என்ன, எப்படிக் குத்தினால் என்ன, அரிசி வந்தால் சரி என்று தமிழ்நாட்டு தலைகள் எல்லோரும் ஒவ்வொரு உலக்கையை இப்ப போடுவார்கள் பாருங்கள்..........
  23. எங்களுக்கு எம்மதமும் சம்மதம்
  24. 20 ஓவர் போட்டி என்டாங்கள்.ரெஸ்ற் போட்டி நடக்குது.🤣
  25. உங்களுக்கு எது வசதியாக உள்ளதோ அப்படியே புள்ளிகளை வழங்குங்கள். நாம கடைசியில் நின்றால்க் கூட போட்டி இனிதாக முடிவடைந்தால் சந்தோசமே.
  26. பூமியைத் தாங்கும் ஆமைகள் போல அவர்கள் எல்லோரையும் தாங்கிப் பிடிப்பார்கள்!
  27. ஆம், எப்படியும் அழைக்கலாம். உறவை சொல்லுவதற்கே சந்ததி என்பதை பாவித்தேன் இப்போதும் அப்படித்தானே, ஆண் வழிதானே துடக்கு.
  28. பாடசாலை சுற்றுலா....... மகாபலிபுரம் வரமாட்டேன்.........! 😂
  29. இன்றைய முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 128 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஷாய் ஹோப்பினதும், நிக்கொலஸ் பூரனினதும் அதிவேகமான துடுப்பாட்டத்தால், 10.5 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 130 ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த மூவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத அயர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான் அணிகளைத் தெரிவு செய்த 15 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றில் குழு A இல் இந்தியா இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத இந்தியாவை வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் கிடையாது.
  30. மாட்சிமை பொருந்திய ஐயன் நாவலர் பெருமான் தமிழை தலையில் சுமந்து திரிந்தார்........அவர்களை முத்திரையில் இட்டு சிறப்பித்து மகிழ்ந்தோம் ........... ஐயகோ அவரின் சந்ததிகள் தட்டுவடை பலகாரங்கள் எல்லாம் தட்டுடன் கடத்திக் கொண்டு திரிகிறார்களே, இவர்களை என் செய்வோம் ......... ! 😂
  31. இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரும், ஜனாதிபதி ரணிலும்... கொழும்பில் யோகா செய்தபோது..... கண்ட காட்சி. 😂 இந்தியா... எள் என்றால், வெ(எ)ண்ணையாக நிற்போமில்ல. 🤣
  32. கொஞ்ச நாளா இந்த தமிழ் பிபிசி இருக்கும் இல்லையா எடுக்கும் இல்லையா இப்படித்தான் செய்தி போடுகிறது லேபர் வரட்டும் இருக்குது கைமா .
  33. இதில் ஒரு மாற்றம். பெண் சிங்கம்தான் வேட்டைக்கும் போகும். 🙂
  34. ஓங்கல் நடைக்குப் போயிருந்ததால் போட்டியைப் பார்க்கவும் இல்லை. போன இடத்தில் சிக்னலும் இல்லை! இனித்தான் புள்ளிகளின் சிக்கல் சிடுக்குகளைப் பார்க்கவேண்டும்!
  35. மிகவும் வித்தியாசமான கண்ணோட்டம் ........ அருமையான பேச்சு ........! 👍
  36. நீங்கள் இப்பொழுது யாழின் முன் இருந்து கொண்டு கிருபனின் அட்டவனையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்....... அவர் வந்து கொண்டிருக்கிறார் ........! 😂
  37. For Narthaki, her love for Bharatanatyam became her life right from her childhood. Besides being a Padma Shri recipient, she has been granted distinctive honors such as the Sangeet Natak Akademi Puraskar Award from the President of India, the title of Nrithya Choodamani, and the Kalaimamani title from the government of Tamil Nadu, among other accolades. This beautiful dancer received the very first award of the evening for Excellence in Performing Arts from the multi-faceted actor Parthiban. நர்த்தகி நடராஜ் பற்றிய காணொளி 5.30 நிமிடங்களில் இருந்து பாருங்கள்.
  38. வணக்கம் பாஞ் அண்ணா. எனக்கும் உங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி. உங்களை இதற்கு முன் சந்திக்கவிட்டாலும், சிறி உங்களை கூட்டி வந்து "யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்” என்றபோது, உடனேயே பாஞ் அண்ணா தான் என்று சொல்லிவிட்டேன். நிறைய உறவினர்களை 30, 40 வருடங்களுக்கு பிறகு சந்தித்தேன். சிலரை முதல்தடவையாக சந்தித்தேன். என்றாலும், பாஞ் அண்ணாதான் இவர் என்று சரியாக கணித்துவிட்டேன். பலகாரப்பகுதியில் சந்தித்தாலும், குசா அண்ணா வராததால் பலகாரத்தால் தலைகள் இந்தத்திரியில் உருளாது. வேற உருட்டல் தான் இந்த திரியில் நடைபெறும் கலியான வீட்டில் ஒரு பொதி, ரிசெப்ஷனில் ஒரு பொதி என்று ஒன்றுக்கு இரண்டாக கிடைத்து. வீடுவரை கொண்டு வந்து சேர்த்துவிட்டேன். தொடர்ந்து எழுதுகிறேன் அண்ணா. சுவாரசியமாக திரி போகிறது.
  39. நீங்கள் சந்ததி. என்பது ஆண் வம்சத்தின் வழி. அதாவது உடக்குகாரர்கள். ....7 தலைமுறை வரை ஆண் வழியில் உடக்கு இருக்கும் என்பார்கள் எனது உறவினர்கள் இந்த உடக்குகாரருக்கு முக்கியம் அளிப்பது உண்டு எந்தவொரு வைப்பதற்கும் அவர்களுக்கு சொல்வது உண்டு இரத்த உறவுகள் பெண் வழியில் இரண்டாவது அல்லது மூன்றாவது உடன். கொண்டாட்டம் இல்லை,.. .மேலும் ஆறுமுகநாவலர். பிறந்த இடம் நல்லூர் எனறு படித்த ஞாபகம் மற்றும் சந்ததி. என்று சொல்லாமல் சொந்தம் என்று சொல்லலாம் அல்லவா??? 🙏
  40. தன்னைப் போல "கவ்வ" வேணும் என்று... குட்டிக்கு இப்ப இருந்தே பழக்குது போலை இருக்கு. 😂
  41. திருமண தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நில்மினி. 🙏 இப்போதைய அவசர உலகில் மற்றவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் திருமணத்தை ஜேர்மனியில் உள்ளவர்களுடன் மட்டுமே நடத்துவது என நாம் யோசித்து இருந்தோம். மகளின் திருமண நிச்சயதார்த்தம் நடை பெற்ற போது... அதனை ஒரு தகவலாக அறிவிக்கும் வகையில் உறவினர்களின் WhatsApp குழுமத்தில் அந்தச் செய்தியை பகிர்ந்து கொண்டேன். செய்தி பகிர்ந்த அன்றும் அதற்கு அடுத்த நாளும் எல்லோரும் திருமணம் எப்போ என்றும்... அதற்கு தாமும் நிச்சயம் வருவதாக 16 குடும்பத்தினர் உலகின் பல பாகங்களில் இருந்தும் தகவல் அனுப்பி இருந்தார்கள். நில்மினியும் வருவதாக தெரிவித்து இருந்தமை மகிழ்ச்சியாக இருந்தாலும்... வேலைகளுக்கு லீவு போட்டு, விமானத்தில் இவ்வளவு தூரம் வந்து சிரமப்படப் போகின்றார்களே என்ற ஆதங்கமும் இருந்தாலும் எல்லா உறவினர்களையும் ஒரே இடத்தில் பல வருடங்களுக்குப் பின் சந்திக்கும் அருமையான சந்தர்ப்பத்தையும் தவறவிடக்கூடாது என்ற ஆசையும் மனதில் இருக்கத்தான் செய்தது. நில்மினியை ஊரில் சந்திக்கவில்லை என்றாலும்... அவரின் சித்தப்பா, மாமா போன்றோருடன் உறவினர் முறையைத்தாண்டி நட்புடன் பழகி வந்துள்ளதை மறக்க முடியாது. உறவினர்கள் பலரும் நில்மினியை... சந்தித்த நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்கள். வந்தவர்களில் சிலரை தொலைபேசி மூலம் உரையாடி இருந்தாலும் அப்போதான் நேரில் சந்திக்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது. இருவரை 40 வருடங்களின் பின்பு சந்தித்து இருந்தேன். வந்தவர்களில் ஆறு மாத குழந்தையில் இருந்து 78 வயது வரை உள்ளவர்களும் இருந்தமை மகிழ்ச்சியாக இருந்தது.
  42. தோட்டத்தில வேலை செய்து கொண்டு தம்பி இதைப் பார் என்றால் தம்பி பைலைப் பார்க்காமல் ஆiஒப் பார்த்துட்டே பதில் சொல்லுறார். மெதுவா நெஞ்சு நோவுது என்று சொல்லி படுத்துப் பாருங்கோ. அப்புறம் தெரியும் டாக்ரரின் விளையாட்டை.
  43. பிரான்ஸ் 1 ஒஸ்ரியா 0 இம்முறை சிறிய குழு ஒன்று இறுதி போட்டிக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை. சுலவேனியா, ஒஸ்ரியா மிக திறைமையாக விளையாடினார்கள்.
  44. இன்றைய போட்டி முடிவுகள் போலந்து 1 நெதர்லாந்து 2 ------------------ ஸ்லொவேனியா 1 டென்மார்க் 1 ----------------------- சேர்பியா 0 இங்கிலாந்து 1
  45. 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா? / அறிமுகம் 02 புத்தர் நிர்வாணம் அடைந்து ஒன்பது மாதத்தின் பின் காற்றினூடாக பறந்து இலங்கைக்கு வந்ததாகவும், அவரின் முக்கிய நோக்கம் அங்கு வாழும் மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட மனிதர்களை [sub human] அகற்றி, இலங்கையை மனிதர்கள் வாழும் இடமாக மாற்றுவது என்கிறது. ஆனால் இலங்கையில் நடைபெற்ற தொல்பொருள் ஆய்வுகள், இலங்கையில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதை நிரூபிக்கிறது. உதாரணமாக, 34,000 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவதாக இலங்கையிற் காணப்பட்ட உடற்கூற்றியல் அடிப்படையிற் நவீன மனித இனத்தினன்னாக [modern human] பலாங்கொடை மனிதன் இருக்கிறான். அவனுடைய எலும்புக்கூடு 1950 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அது மட்டும் அல்ல, 2900 ஆண்டுகள் அளவில், இரும்பு கால பண்பாடு, உதாரணமாக, குதிரை வளர்ப்பு, இரும்பு உற்பத்தி மற்றும் நெல் சாகுபடி அனுராதபுரத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதை R. பிரேமாதிலகே [Mr. R. Premathilake] உலகளாவிய பார்வையில் முதலாவது விவசாயி [‘First Farmers in Global Perspective’] என்ற ஆய்வு குறிப்பில் பதிந்துள்ளார். அவ்வாறே பேராசிரியர் T. W. விக்ரமநாயகே [Prof T. W. Wikramanayake] விஜயனுக்கு முன் இலங்கையில் விவசாயம் இருந்ததை உறுதி படுத்துகிறார். மேலும் ஹோமோசேபியன் [Homo sapiens] தென் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு, அவை பிரிக்கப் படும் முன் நடந்தே வந்திருப்பார்கள் என்கிறார். இவை இரண்டு பக்கமும் காணப்பட்ட தொல்பொருள் சான்றுகளில் இருந்து உறுதியாக நிறுவப்பட்டும் உள்ளது. அது மட்டும் அல்ல, R. L. Kirk of the Department of the Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia, தமது ஆய்வு மூலம் சிங்களவர்கள் தென் இந்திய தமிழர் மற்றும் கேரளத்தவர்களுடன் [‘Sinhalese population are closer to the Tamils and Keralites of South India and the upper caste groups of Bengal than they are to the populations in Gujarat and the Panjab’]. ஒத்து போகிறார்கள் என்கிறார். மகாவம்சம் / விஜயனின் பட்டாபிஷேகம், பாடல் 46 - 50 இல். அங்கு பல குடியிருப்புகளை ஏற்படுத்திய பிறகு விஜயனுடைய மந்திரிகள் அவனிடம் ஒன்றாக வந்து ‘ஐயனே ! தாங்கள் முடி சூட்டிக் கொள்ள இசைய வேண்டும்" என்கிறார்கள். ஆனால், அவர்கள் வேண்டியும் அவன் மறுத்தான். 'உயர் குல மங்கை ஒருத்தியை', அதே சமயத்தில் அவளை ராணியாகக் கொண்ட பிறகே, பட்டாபிஷேகம் செய்து கொள்ள முடியும்’ என்று கூறி வேண்டு கோளை ஏற்க மறுத்தான். எனவே, ராணியையும் மற்றவர்களுக்கு மனைவிமார்களையும் பெற, விலையுயர்ந்த பரிசுப் பொருள்கள், ஆபரணங்கள், முத்துக்களுடன் சிலரை தென்னிந்தியாவிலுள்ள மதுரை மாநகருக்கு அனுப்பி வைத்தனர்' என்கிறது. இது அன்று, அதாவது கி மு 6ஆம், 5ஆம் நூறாண்டில், தமிழருக்கு உள்ள மதிப்பை பறைசாற்றுகிறது, சிங்கள இனத்தின் முதல் மூதாதை என இன்று சிங்களவர்களால் கருதப்படும் விஜயன் வாயினூடாகவே 'உயர் குல மங்கை' என மதுரை தமிழ் இளவரசியை கூற வைத்ததிற்கும், மற்றும் விஜயனுடன் சேர்ந்த சிங்கள இனத்தின் முதல் மூதாதையர்களான அவனது எழுநூறு கூட்டாளிகளும் தமிழ் மதுரை பெண்களையே மணந்து, அவர்களினூடாகவே, அதாவது தமிழ் பெண்களுடாகவே, சிங்கள வம்சத்தை விருத்திசெய்தனர் என கூறிய மகாவம்ச கதையின் நூலாசிரியருக்கு கட்டாயம் நாம் நன்றி செலுத்த வேண்டும். உடலை மறைக்கும் உடை ஒன்று இல்லாமல் எவராலும் ஒரு நாகரிக மனிதனை சிந்திக்க முடியாது. 2500 ஆண்டுகளுக்கு முன்பு, சிங்கள இனத்தின் முதல் குடிமகனாக கருதப்படும் விஜயன் நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு வந்து இறங்கும் பொழுது, வட இலங்கையை நாகர் மன்னர்கள் ஆட்சி செய்கிறார்கள், குவேனி என்ற இலங்கை பெண் ஒருத்தி நூல் நூற்றுக்கொண்டு அவனை வரவேற்கிறாள். அதாவது, மகாவம்சம் மூலமே, விஜயன் வருவதற்கு முன்பே, சிங்கள இனம் என்ற ஒன்று உலகில் தோன்ற முன்பே, இலங்கை ஒரு மன்னன் ஆட்சி என்ற கட்டமைப்புக்குள் நாகரிகம் அடைந்து விட்டது என்பது உறுதியாகிறது. அப்படி என்றால் அந்த நாகரிகத்தின் சூத்திரக்காரர்கள் யார் என்ற கேள்வி தானாகவே எழுகிறது ? இன்னும் ஒன்றையும் நான் இந்த அறிமுகத்தில் தெளிவு படுத்தவேண்டும். புத்தரின் முதல் இரண்டு இலங்கை வருகையிலும் அவர், தன்னுடைய கருணை, இரக்கம், அன்பு என்ற மனித தன்மையில் இருந்து முற்றிலும் வேறுபட்டு ஒரு பயங்கரவாதி போல், இலங்கையின் பூர்வீக குடிகளின் மேல் தாக்கம் செய்ததை காண்கிறோம். அதிலும் முதலாவது வருகையில், பூர்வீக குடிகளை பயமுறுத்தி, அங்கிருந்து திரும்பி வராதபடி அகற்றி, விஜயனும் அவனது கூட்டாளிகளும் இலங்கையில் இலகுவாக குடியேற வழிவகுத்தார் என்கிறது. புத்தர் பிறந்து வளர்ந்த இந்தியாவில் புத்தரின் எந்த வரலாற்றிலும் இப்படியான குறிப்பு இல்லை என்பதுடன், அவரின் மேலான குணநலனும் முரணாக உள்ளது. இப்படியான கதையின் விளைவுகள் தான் இன்று இலங்கையில் தமிழர் படும் பல நெருக்கடிகளுக்கும் காரணமாகும். ஒரு தேசத்தின் வரலாறு நிச்சயமற்ற நிலை ஏற்படும் போது இனங்களுக்குள் உண்டாகும் குரோதங்களும், பகைமைகளும் அதிகரிக்கும். இதனாலேயே ஒரு பெரும்பான்மை அல்லது வல்லமையுள்ள இனம் மற்ற இனத்தை அடக்கி ஆளவும் முற்படும். அத்தகைய வரலாற்றாய்வுகளை மேற்கொள்ளப் பக்கச்சார்பில்லாத நடுநிலையான ஆய்வாளர்களின் கடுமையான உழைப்புத் தேவைப்படு கின்றன. இதை மனதில் பதித்து, மிக விரைவில் 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' என்ற எனது இந்த தொடர் கட்டுரையை உங்களுடன் பகிரலாம் என்று எண்ணுகிறேன். இது இலங்கை வரலாற்றின் ஆழமான பகுப்பாய்வு அல்ல. அதை கல்வியாளர்கள் மற்றும் அறிஞர்கள் ஏற்கனவே செய்துள்ளனர். எனவே இது அதில் புதைந்துள்ள உண்மைகளை முன்னிலைப்படுத்தும் ஒரு கண்ணோட்டம் மட்டுமே ஆகும். அன்புடன் உங்கள், [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] அறிமுகம் முற்றுப்பெற்றது , இனி பகுதி: 01 தொடரும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.