Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    24
    Points
    87990
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    3055
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46783
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/12/24 in all areas

  1. இட்டார் கெடுத்தார் ------------------------------- வாகனத்தை சிவப்பு விளக்கில் நிற்பாட்டி விட்டு பக்கக் கண்ணாடி வழியே வெளியே பார்த்தால், 'தயவு செய்து உதவி செய்யுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.' என்று எழுதப்பட்ட மட்டைகளுடன் ஒருவர் அல்லது இருவர் வீதியின் ஓரத்தில் அமர்ந்திருப்பார்கள். இது எல்லா சமிக்ஞை விளக்குகளிலும் நடக்கும் ஒன்றல்ல. மிக அதிக வாகனங்கள் கடந்து போகும் சமிக்ஞை விளக்குகளையும், மிகக் குறைவான வாகனங்கள் கடந்து போய் வருமிடங்களையும் இவர்கள் தவிர்த்து விடுகின்றனர். சிலர் உதிரியான வேறு சில தகவல்களையும் தங்களின் விளம்பர மட்டையில் எழுதி வைத்திருப்பார்கள். உதாரணமாக, 'நான் ஒரு முன்னாள் போர் வீரன்....' என்ற வசனமும் இந்த மட்டைகளில் அடிக்கடி காணப்படும் ஒன்று. காலையிலிருந்து ஒரு எட்டு அல்லது பத்து மணித்தியாலங்கள் அங்கேயே இருப்பார்கள். ஒரு முழுநேர வேலை. மழை என்றால் அங்கு இருக்கமாட்டார்கள். ஆனால் கடும் வெயில், கடும் குளிர் என்றாலும் அங்கே நிற்பார்கள். சில உடமைகளும் அவர்களை சுற்றி இருக்கும். ஒரு சைக்கிள், ஒரு பெட்டி அல்லது வாளி போன்றன. ஒரு சிலருடன் நாய் ஒன்றும் நிற்கும். அவர்களின் வளர்ப்பு நாயாகத்தான் இருக்கவேண்டும். இப்படியான ஒருவரை வாகனங்களை பதிவு செய்யும் அலுவலகம் ஒன்றில் ஒரு தடவை கண்டிருக்கின்றேன். அவரை அங்கு வரிசையில் அடையாளம் கண்டு கொண்டேன் என்று தான் சொல்லவேண்டும். அவரின் வளர்ப்பு நாயுடனேயே அங்கு வந்திருந்தார். இவர் ஏன் இங்கு வந்திருக்கின்றார் என்று எனக்கு சம்பந்தம் ஏதும் இல்லாத கேள்வி ஒன்றுக்கு சில கணங்கள் விடை தேடிக் கொண்டிருந்தேன். இங்கு ஒரு தொலைக்காட்சியில் ஒரு நிகழ்வில் இவர்களை, இவர்களின் செயல்களை வெளிக் கொணர்ந்தார்கள். இவர்களில் பலர் ஒரு இரட்டை வாழ்க்கை வாழ்வதை அந்த நிகழ்வில் காட்டினார்கள். இதையே சில நண்பர்களும் எப்போதும், இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதற்கு பல காலம் முன்னிருந்தே, சொல்லிக் கொண்டிருந்தனர். இவர்கள் பகலில் பணத்தை சேகரித்து, இரவுகளில் கொண்டாட்டமாக இருப்பார்கள் என்று. இவர்களில் சிலரின் இரண்டாவது வாழ்க்கை வசதியானது என்று கூடச் சொல்லியிருக்கின்றனர். நண்பர்கள் ஆதாரம் எதுவும் இல்லாமல் வெறும் அனுமானமாகத் தான் சொன்னார்கள். இப்படி எங்களுக்கு நாங்களே மற்றவர்களில் தான் குறை, குற்றம் என்று சொல்லிக் கொள்வது எங்களின் குற்ற உணர்வைக் குறைக்கும் அல்லது முற்றாக இல்லாமல் செய்யும் ஒரு வழி. குற்ற உணர்வுடன் வாழ்வது ஒரு மருந்தற்ற கொடிய நோயுடன் வாழ்வது போலவே. ஆனாலும் நான் மாறவில்லை. ஏதோ கொடுத்துக் கொண்டேயிருந்தேன். ஒரு தடவை ஒரு பெண்ணும், ஒரு சிறு பிள்ளையும் மட்டையில் எழுதப்பட்ட செய்தியுடன் ஒரு சமிக்ஞையில் வீதியின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர். இது அவர்களின் ஒரு புது வழி, ஒரு புதிய நுட்பம் என்று ஏற்கனவே நாங்கள் எங்கள் வட்டத்தில் கதைத்திருந்தோம். ஒன்றும் கொடுக்கவே கூடாது, நீண்ட கால நோக்கில் இது எவ்வளவு தீன்மையை உண்டாக்கும் என்று ஆழமாக ஆரய்ந்தும் இருந்தோம். ஆனாலும், கண்ட அந்தக் கணத்தில், மனம் கேட்கவில்லை. மனம் புத்தியை வென்றது. பின்னர் ஒரு நாள், பொழுது கருகிக் கொண்டிருந்த ஒரு செக்கல் நேரம், என் வீட்டருகே இருக்கும் சமிக்ஞை விளக்கில் வாகனத்தில் நின்று கொண்டிருந்தேன். அவர்களின் வேலையும் முடியும் நேரம் என்பதால், அங்கு மட்டையுடன் நின்றவர் எழும்பியே நின்றிருந்தார். வாகனத்தை நோக்கி வந்தார். அன்றைய நாளில் அவருடைய கடைசி வருமானம் நானாகத்தான் இருந்திருக்க வேண்டும்...... ஆனால், இந்த மனிதருக்கு சற்றுத் தள்ளி ஒரு பெண் மிகப் பெரிய வயிறும், நிச்சயமாக அதனுள் ஒன்றைச் சுமந்த படியே, ஒவ்வொரு வாகனமாக எட்டி எட்டி அவர் கையில் இருக்கும் பூங்கொத்தைக் காட்டி வேணுமா என்று கேட்டபடியே மிக மெதுவாக வந்து கொண்டிருந்தார். பத்து டாலர்கள் என்று அவர் சொன்னதும் கேட்டது. சிறிது தள்ளி ஒரு வாளி நிறைய பல பூங்கொத்துகள் இருந்தது. அன்று அங்கு நான் வாகனத்தின் கண்ணாடியை இறக்கவே இல்லை. அதன் பிறகு மட்டையுடன் நிற்பவர் எவரையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ஆனாலும் அன்று நான் ஒரு பூங்கொத்து வாங்காமல் விட்டது தப்பு என்று இன்றும் மனம் சொல்லிக் கொண்டிருக்கின்றது.
  2. "கலப்படம்" "தாய்ப் பால் ஒன்றைத் தவிர தாரத்தின் உறவிலும் பிள்ளையின் அன்பிலும் தாரக மந்திரத்திலும் மதத்தின் போதனையிலும் தாராளமாக இன்று பலபல கலப்படம்" "எந்த பொருளிலும் செயலிலும் கலப்படம் எங்கும் எதிலும் சுத்தம் கிடையாது எச்சில் படும் முத்தத்திலும் கலப்படம் எழுதும் காதல் மொழியிலும் கலப்படம்" "பெண் முட்டையுடன் விந்து இணையும் பெரும் கலவையிலும் சிலசில கலப்படம் பெருத்து குழந்தை வயிற்றில் உருவாகி பெற்று எடுத்தால் அரவாணியென்ற கலப்படம்" "குழந்தை சிரிப்பும் குறும்பும் தவிர குமரி தோற்றத்திலும் வனப்பிலும் கலப்படம் குடும்ப அன்பிலும் பண்பாட்டிலும் கலப்படம் குறிஞ்சிநில முருகன் தமிழிலும் கலப்படம் " "ஓதிடும் மந்திரத்திலும் போதகர் போதனையிலும் ஓதுவார் ஓசையிலும் ஒழுகிடும் நெறியிலும் ஓர்மனமாய் நின்று வழிபடும் அடியாரிலும் ஓகை கொண்டு இணைந்துவிட்டது கலப்படம்" "உழைத்து பெற்ற ஊதியத்திலும் கலப்படம் உண்மை தந்த உயர்விலும் கலப்படம் உணர்வுகொள் தாய் மொழியிலும் கலப்படம் உணவுப் பொருட்கள் அனைத்திலும் கலப்படம்" "கூட்டம் சேர்க்கும் அரசியலில் கலப்படம் கூர்மையான அரச அறிக்கையில் கலப்படம் கூறிடும் ஊடக செய்தியில் கலப்படம் கூசாமல் பேசிடும் வரலாற்றில் கலப்படம்" "தெரிந்து வேண்டும் என்று சேர்ப்பதும் தெரியாமல் தவறி அங்கு சேர்ப்பதும் தெளித்து பட்டும் படாமலும் சேர்ப்பதும் தெளிவாக அவை எல்லாம் கலப்படம்தான்" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ஓகை - உவகை, மகிழ்ச்சி
  3. உண்மையில் ஒரு கார் களவு போகுதென்றால் அந்த காரை தயாரித்த நிறுவனத்தின் குறைபாடே காரணம் மேல் உள்ள லிஸ்ர்ரில் டெஸ்லா இல்லை . அதே போல் புதிய மொடல் வெளிவந்த உடனே போட்டி கொம்பனிகள் மாத்திரம் அல்ல டார்க் வெப் கூட்டமும் அடித்து பிடித்து வாங்கி கொள்கிறார்கள் அதன் பின் அக்கு வேறு ஆணி வேறாக ரிவேர்ஸ் எஞ்சினியரிங் செய்து அதன் முக்கிய பலவீனத்தை எப்படி இலகுவாக அந்த புதிய மொடல் காரை திருடும் உத்திகளை அதே டார்க் வெப்பில் பிட் காயின்களுக்கு விற்கிறார்கள் இப்படி திருடர்கள் உலகம் அடுத்த கட்டத்துக்கு பாய்ந்து விட்டது நாங்கதான் இன்னும் சம்பந்தருக்கு ஏன் அஞ்சலி செய்யவில்லை என்று அடிபட்டு கொண்டு இருக்கிறம் 😀
  4. தமிழ்நாட்டில் உள்ள பொன்னாக்குடி என்னும் ஊரில் தகவல் கொடுப்பவர்களால் 50க்கும் மேற்பட்ட இளைஞர்களின் திருமணம் தடைப்பட்டிருக்குதாம்.........🫣. அந்த இளைஞர்கள் தகவல் கொடுப்பவர்களுக்கு எதிராக அந்த ஊரில் ஒட்டியிருக்கும் போஸ்டர் தான் மேலேயுள்ளது. ஆயிரம் பொய்கள் சொல்லி என்றாலும் ஒரு திருமணத்தை நடத்தி வை என்று சொல்வார்கள்....... இவர்கள் புறம் சொல்லி திருமணத்தை நிற்பாட்டுகின்றார்கள். https://minnambalam.com/archives-trending-news-in-tamil/local-informers-to-prevent-marriages-90s-kids-are-shocked/
  5. நீங்கள் சொன்னவுடன், நினைவே மணக்குது........ இந்த உணவுச் சங்கிலியில் இந்த மூட்டைப் பூச்சிகளை பிடித்து தின்னும் ஒரு சில உயிர்கள் இருக்க வேண்டுமே.......... பல்லி?
  6. வீரகேசரிக்கும், பிபிசிக்கும் கனடாவிலை நடக்கிற எங்கட கலியாண பிராமண்டங்களை பற்றி ஒண்டும் தெரியேல்லை போல.....😂
  7. ரொறோண்டோவில் வாகனத் திருட்டு: உங்கள் வாகனங்களைப் பாதுகாப்பது எப்படி? August 17, 2023 கடந்த சில வருடங்களாக ரொரோண்டோ பெரும்பாகத்தில் வாகனத் திருட்டுகள் அதிகரித்து வருகின்றன. திருடப்படும் வாகனங்களாக அறியப்பட்ட பெரும்பாலான வாகனங்கள் உயர் ரக சொகுசு SUV, Truck வகைகளாக இருக்கின்றன. கோவிட் வருகையின் தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையைத் தொடர்ந்து வாகனங்களின் தயாரிப்புக்கான கணனி சிப்ஸ் (computer chips) பற்றாக்குறை காரணமாக புதிய வாகனங்களைத் தருவிப்பதிலும் பழைய வாகனங்களைத் திருத்துவதிலும் ஒன்ராறியோ மாகாண வாகன விற்பனையாளர்கள் நீண்டகால தாமதத்தை எதிர்கொள்கிறார்கள். சிப்ஸ் பற்றாக்குறை காரணமாக 2021 இற்குப் பின்னர் தயாரிக்கப்பட்ட பல வாகனங்களில் பழைய வாகனங்களிலுள்ளதைப் போல சொகுசு வசதிகள் செய்யப்படவில்லை. இதன் காரணமாக 2016 முதல் 2021 வருட காலத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் திருடர்களிடையே மிகப் பிரபலம் பெற்று வருகின்றன. மே 2023 இல் ஒன்ராறியோ பீல் பிரதேசத்தில் பொலிசார் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின்போது $2.8 மில்லியன் பெறுமதியான 31 வாகனங்கள், $30,000 காசு, ஸ்கானர் கருவிகள், திறப்புகளை புரோகிராம் செய்யும் கருவிகள், 100 க்கும் மேற்பட்ட மாஸ்டர் திறப்புகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2022 இல் ஒன்ராறியோ மாகாணத்தில் அதிகம் திருடப்பட்ட வாகனங்கள் எக்குயிட்டே (Équité) என்ற நிறுவனத்தின் ஆய்வின்படி 2022 இல் ஒன்ராறியோவில் அதிகம் திருடப்பட்டவையாகப் பின்வரும் வாகனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 2016-2021 Lexus RX Series 2016-2021 Honda CR-V 2015-2020 Ford F-150 Series 2013-2019 Toyota Highlander 2016-2021 Honda Civic 2015-2021 Land Rover Range Rover Sport 2018-2021 Honda Accord 1999-2006 Chevrolet/GMC Silverado/Sierra 1500 Series 2009-2018 RAM 1500 Series 2016-2021 Toyota Tacoma திருடர்களின் வித்தைகள் http://veedu.com/wp-content/uploads/2023/08/Trailer2-scaled-e1692269382269-300x169-1.jpg திருடர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஸ்கானர் கருவிகள் (Sorce: Peel Police) பெரும்பாலான வாகனங்களின் திறப்புகள் எலெக்ட்றோனிக் வகைகளாலானவை. திறப்புக் கோர்வையில் கையடக்கமாகக் கொழுவிக்கொள்ளும் ஒரு சிறு கருவியிலிருக்கும் (Fob) பொத்தான்களை அழுத்தும்போது புறப்படும் மின்காந்த அலைகள் (transmitters) வாகனத்திலுள்ள இன்னுமொரு கருவியினால் (receivers) பெறப்பட்டு சரிபார்க்கப்பட்ட பின்னர் கதவுகள் திறக்கப்படுவதோடு எஞ்சினை ஸ்ரார்ட் பண்ணுவதற்கான ஆயத்தத்தையும் அது செய்துவிடுகிறது. இதற்காகவே இக் கருவிகளில் (fobs) உள்ளே சிறிய மின்கலம் வைக்கப்பட்டிருக்கிறது. இக்கலம் பலமிழந்து போகையில் இக்கருவியிலிருந்து புறப்படும் மின்காந்த அலைகளும் பலமிழந்து போவதால் சிலவேளைகளில் பூட்டுகள் திறக்கப்படுவதில்லை. இக் கருவிகளை வாகன உரிமையாளர்கள் பொதுவாக வீட்டு வாசலினுள்ளே கொழுக்கியில் தொங்கவிடுவதோ அல்லது தட்டுகளில் வைப்பதோ வழக்கம். வீட்டுக்கு வெளியே தமக்கு விருப்பமான வாகனத்தைக் காணும் திருடர்கள் தம்மிடமுள்ள ஸ்கானர் கருவிகளால் ஸ்கான் செய்து பார்க்கும்போது வீட்டினுள்ளே வைக்கப்பட்டிருக்கும் திறப்புக் கருவிகள் என்ன அதிர்வெண்ணில் அல்லது சங்கேதக் குறிகளை (codes) எழுப்பி கதஹ்வைத் திறக்கின்றன என்பதை அறிந்துவிடுவார்கள். பின்னர் அவ்வெண்ணைத் தமது கருவியில் புரோகிராம் செய்து வாகனத்தைத் திறந்து அதைத் திருடிச் சென்று விடுவார்கள். இதற்கு அவர்களுக்குத் தேவையானது சில நிமிடங்கள் மட்டுமே. தவிர்க்கும் வழிகள் வாகனத் திருட்டைத் தவிர்க்க சில வழிகளைப் பொலிசார் பரிந்துரைக்கிறார்கள். அவற்றில் சில: http://veedu.com/wp-content/uploads/2023/08/Faraday-Box.jpg Faraday Box திறப்புக் கருவிகளை வாசலுக்கு அருகில் வைக்காதீர்கள். வாகனத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் அவை வைக்கப்படுகின்றனவோ அவ்வளவுக்கு மின்காந்த அலைகள் பலமிழந்து போகின்றன. அதே வேளை இம் மின்காந்த அலைகளைத் தடுக்கும் பெட்டிகளை மிக மலிவான விலையில் அமசோன் அல்லது பெஸ்ட் பை போன்ற இடங்களில் வாங்கலாம். Faraday Box என அழைக்கப்படும் இப்பெட்டிகள் மின்காந்த அலைகளைத் தடுக்கும் சுவர்களால் ஆக்கப்பட்டவை. சகல எலெக்ட்றோனிக் திறப்புக்களையும் இப்பெட்டிக்குள் போட்டு மூடிவிட்டால் திருடர்களால் ஸ்கான் செய்ய முடியாது. கராஜ் வசதி உள்ளவர்கள் வாகனத்தை உள்ளே வைத்துப் பூட்டிக்கொள்ளுங்கள். கராஜ் திறப்பும் எலெக்ட்றோனிக் வகையானால் அதைத் திறக்கும் மோட்டாருக்கு ஒரு தனி சுவிட்சைப் போட்டு உள்ளே போனதும் அதை ‘ஓஃப்’ செய்துகொள்ளலாம். அல்லது கராஜ்க்கு உள்ளே மெக்கானிக்கல் பூட்டு இருப்பின் அதைப் பூட்டிக் கொள்ளலாம். வாகனங்களில் ஸ்டீயரிங் வளையத்துக்கு பூட்டுப் போடலாம். திருடர்கள் இதைக் கண்டவுடன் இதை வெட்டுவதற்கு அதிக நேரமெடுக்கும் என்பதால் திருட்டில் மினக்கெட மாட்டார்கள். வாகனத்தின் ‘டேற்றா போர்ட்’ (Data Port) இற்கு ஒரு எலெட்றோனிக் பூட்டு ஒன்றைப் போடுங்கள். இதை ஒரு அதிகாரம் பெற்ற மெக்கானிக் ஒருவரே செய்யலாம். இப்பூட்டு திருடர்கள் எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முடியாமல் எஞ்சினின் டேற்றா போர்ட்டை மூடிவிடுகிறது (ignition immobilizer). Anti Theft System எனப்படும் இந்நடைமுறை பல புதிய வாகனங்களில் இணைக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட திருடப்படும் வாகனங்கள் இவ்வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. வீட்டுக்கு வெளியே சீ.சீ.ரி.வி. வீடியோ வசதிகளைச் செய்துகொள்ளுங்கள். https://veedu.com/ரொறோண்டோவில்-வாகனத்-திரு/
  8. ஒரு ராத்திரி ------------------- பகலுக்கும் இரவிற்கும் இடையில் இருக்கும் இடைவெளி நடுச்சாமத்தில் வெளியே போகும் போது தெரியும். இரவின் இருட்டில் உயிர்களுக்கு சுதந்திரம் அதிகமாகக் கிடைக்கும். இருட்டு கட்டுப்பாடுகளை அவிழ்த்து தளர்த்தி விடுகின்றது. ஆறு போல வாகனங்கள் நில்லாமல் ஓடிக் கொண்டிருந்த பெரும் தெருக்கள் நிலத்தில் கீறப்பட்ட கறுப்புக் கோடுகள் போல அரவமற்ற இரவில் நீண்டு தெரியும். சிறு தெருக்கள் அசைவில்லாமல் நெளிந்து படுத்திருக்கும் பாம்புகள் போல அப்படியே கிடக்கும். வீடுகள், வீடுகளுக்குள் மனிதர்கள், நகரங்கள் என்று எல்லாமே எல்லாம் மறந்த ஒரு தூக்கத்தில் கிடக்கும். 'மோனத் திருக்குதடீ இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே........' என்ற வரிகளை இப்படியான ஒரு சாமத்தில் வெளியே வந்து பார்த்து விட்டுத் தான் அவர் எழுதினாரோ. தூங்கா நகரங்கள் என்றும் சில இருக்கின்றன தான். மதுரையைச் சொல்வார்கள். இரவு இரண்டாம் காட்சி படம் பார்த்து விட்டு, நடுச்சாமத்தில், அங்கே ரோட்டுக் கடையில் ஆவி பறக்கும் மல்லிகைப் பூ இட்லியும், மட்டன் குழம்பும் சாப்பிடலாம், சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். அப்பவும் அந்த நேரத்திலும் கூட்டம் தெருக்கடைகளில் அள்ளும். லாஸ் ஏஞ்சலீஸ் நகரும் அப்படியான ஒன்று தான். 24 மணி நேரங்களும் திறந்திருக்கும் கடைகள், எப்போதும் நடமாடித் திரியும் மனிதர்கள், ஓயாத தெருக்கள் அத்துடன் அங்கங்கே சில சூட்டுச் சம்பவங்கள் என்று இதுவும் ஒரு தூங்கா நகரம் தான். சமீபத்தில் ஊர் போயிருந்த போது, ஒரு நாள் வவுனியாவில் இருந்து யாழ் போகும் புகையிரதம் அன்று கொஞ்சம் பிந்திப் போய்ச் சேர்ந்தது. இரவு ஏழு மணி ஆகிவிட்டது. யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து பஸ் தரிப்பிடம் போனால், கடைசி 751 பஸ் ஆறே முக்காலுக்கே போய் விட்டது என்றார்கள். இனி அன்றைக்கு பஸ் இல்லை. அங்கே நின்ற கடைசி 750 பஸ்ஸில் ஏறி புறாப்பொறுக்கியில் இறங்கினால், அங்கே ஒரே ஒரு ஆட்டோ நின்றது. அதில் ஏறி வீடு போனோம். எட்டு மணிக்கெல்லாம் அடங்கி விடுகின்ற ஒரு பிரதேசம் ஆகி விட்டது பிறந்து வளர்ந்த இடம். முன்னர் இப்படி இல்லை. ஊரில் இரண்டு தியேட்டர்கள் இருந்தன. அங்கும் இரண்டு இரவுக் காட்சிகள் இருந்தன. யாழ் - பருத்தித்துறை பஸ் இரவிலும் ஓடிக் கொண்டிருந்தது. சிவராத்திரிக்கு பல நாட்கள் முன்னரேயே வீச்சு ஊஞ்சல்கள் கட்டி ஆட ஆரம்பித்து விடுவோம். சில ஊஞ்சல்கள் பெரியவை. பல பேர்கள் ஒன்றாக இருந்து ஆடலாம். பாட்டு சுத்தமாக வராதவர்களும் ஒரு கூச்சநாச்சம் இல்லாமல் பாடுவதற்கு இந்த வீச்சு ஊஞ்சல்கள் ஒரு நல்ல இடமும் கூட. ஊஞ்சல் கயிறு அறுந்து, பலகையுடன் சேர்ந்து பாடிக் கொண்டிருந்த மனிதர்களும் பறந்து போய் விழுந்த நிகழ்வுகளும் உண்டு. ஊரில் முறிவு நோவு பார்ப்பதற்கென்றே இரண்டு பரியாரிகள் அந்த நாட்களில் இருந்தார்கள். 'மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு.......' என்ற பாடல் வழமையான ஊஞ்சல் பாடல்களை எல்லாம் தூக்கி வீசி விட்டு முன்னுக்கு வந்தது ஒரு வருடம். இந்தப் பயிற்சி, அடுக்குத் தடுக்கு எல்லாம் சிவராத்திரி அன்று முழு இரவும் முழித்திருப்பதற்காகவே. ஆனாலும் ஆறு காலப் பூசைகளுக்கும் சிவன் கோவில் போகும் சிலர் தவிர பெரும்பாலானோர் முழு இரவும் முழித்து இருப்பதில்லை. ஆனால் நாங்கள் சிலர் காத்துக் கொண்டு இருப்போம். அதிகாலையில் கோவிலில் இருந்து வந்து கொண்டிருக்கும் அல்லது கோவிலுக்கு போய்க் கொண்டிருக்கும் சிலர், அங்கங்கே நிற்கும் எங்களைப் பார்த்து 'என்னடா, நீங்கள் இரவிராக முழித்து இருந்தனீங்களோ.......... உங்களுக்கு சிவபெருமானின் அருள் கிடைக்குமடா.........' என்று சொல்லிக் கொண்டே போவார்கள். பொழுது விடிந்தவுடன், சில வீடுகள் அல்லோலகல்லோலப்படும். சில வீடுகளின் படலைகளைக் காணவில்லை என்று தேடுவார்கள். ஒருவரின் வீட்டின் முன் நின்ற அவரது கார் அடுத்த தெருவில் போய் நின்றது. 'இங்கு சாஸ்திரம் பார்க்கப்படும்' என்று எழுதப்பட்டு ஒரு வீட்டின் முன் இருந்த விளம்பரம் நடு வயலில் நின்று கொண்டிருந்தது. இப்படி பல இடமாற்றங்கள். வருடா வருடம் ஒரு ராத்திரியில் மட்டும் இப்படி நடந்து கொண்டேயிருந்தது.
  9. இந்தியாவில் 10 கோடி என்றால் தாத்தா நீங்க‌ள் சொல்ல‌ வ‌ருவ‌தை நினைக்க‌ இந்திய‌ர்க‌ளை மிஞ்சின‌வ‌ர்க‌ளாய் எம்ம‌வ‌ர்க‌ள் இருப்பின‌ம் போல் தெரியுது😁........................... நீங்க‌ள் வேவு பார்க்க‌ ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொருத‌ர‌ வைச்சு இருக்கிறீங்க‌ள் போல் தெரியுது உப்ப‌டியான‌ விடைய‌த்தில் என‌க்கு விடியிற‌தும் தெரியா இருளுற‌தும் தெரியா..................
  10. ஒரு வயதுக்கு மேல பொய் சொல்லுறது வலு கஷ்ரம் கண்டியளோ🤣. உண்மை அமெரிக்காவுக்கு தெரியும்.
  11. கவிதை, தலைப்பு + படங்கள் யாவும் அசத்தல்..........! 👍
  12. நல்லதொரு தலைப்பும் கவிதையும்.
  13. இல்லை.....இப்ப நான் என்ன சொல்ல வாறனெண்டால்.... ஐரோப்பா சனம் கொண்டாட்டம் செய்யிறத விட எங்கட கனடா சனம் கொஞ்சம் எக்ஸ்ரா பிரமிப்பாய் செய்வினம் எண்டத சொல்லுறன். பாகுபலி ஸ்ரையில் கலியாணவீடு,பாகுபலி ஸ்ரையில் சாமத்திய வீடு.... எண்டு எனக்கு தெரிஞ்சத சொல்லுறன்....😀
  14. தம்பியர்! இஞ்சை பாரும்.....உதுகளுக்கெல்லாம் துரோணாச்சாரியார் ஏகலைவன் சிஷ்டம் எல்லாம் ரூமச்...... இதெல்லாம் ரத்தத்திலை ஊறின விசயம் 🤣
  15. நீங்கள் சொல்வதும் சரி தான்.......... தலைகணையின் மூலைத் தையலுக்குள்ளும் இது ஒளித்திருக்கும், எவரால் என்ன செய்ய முடியும்....... இங்கு சில வருடங்களின் முன் நுளம்புத் தொல்லை அதிகமாகி, அத்துடன் அது சைனாவில் இருந்து வந்த நுளம்பு என்றும் சொல்லப்பட்டு, ஒரு 'எதிர் நுளம்பு' வகை ஒன்றை உருவாக்கி மில்லியன் கணக்கில் வெளியில் விட்டார்கள். இந்த எதிர் நுளம்பு மனிதர்களை ஒன்றும் செய்யாது, இனப் பெருக்கம் செய்யாது, ஆனால் அந்நிய நுளம்பு, பொல்லாத நுளம்பு என்று எல்லாவறையும் பிடித்து தின்றுவிடும்.......😗.
  16. இதைத்தான் அநியாயம் என்று சொல்லுறது. குமாரசாமியார், தனது உறவினர்/நண்பர் திருமணத்துக்கு, உங்கள் இருவரையும் அழைத்தார் அல்லவா. அங்கே தெரிந்தவர்,தெரியாதவர் என்றெல்லாம் அவர் பார்க்கவில்லைத்தானே. அதுசரி, சிறியர் மூக்குக்கு என் நடந்தது? வீட்டுக்காரியா? வைத்தியசாலைத் தாதியா?
  17. தப்பு அல்ல. தவறு. தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம். யேர்மனியில் சுரங்கப்பாதையில் நின்று ஒருவர் சில்லரைக் காசுகளுக்காக மவுத்தோக்கன் வாசித்துக் கொண்டிருந்தார். ஒரு தொலைக்காட்சி இசைப் போட்டியில் பங்கேற்கப் போய் முதல் பரிசான 100,000 யூரோக்களை அவர் பெற்றுக் கொண்டார். பல திறமையானவர்கள் சந்தர்ப்பங்களும் தளங்களும். கிடைக்காமல் இன்றும் வீதிகளில் நிற்கிறார்கள். எல்லோருக்கும் எப்போதும் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. முடிந்தால் கொடுக்கலாம். அதற்காக இப்படி வாழ்நாள் பூராவும் கலங்கிக் கொண்டு நின்றால், ‘ரொம்ப நல்லவண்டா’ என்று சொல்லத் தொடங்கி விடுவார்கள்.
  18. எனக்கு, கொஞ்ச பயத்தம் பணியாரம் கட்டிக் கொண்டு வாங்கோ.
  19. கனடாவில் ஒரு குடும்ப நிகழ்விற்காக போயிருந்த ஒரு தருணம். பல நாடுகளிலிருந்தும் ஆட்கள் வந்திருந்தனர், இலங்கை உட்பட. ஒன்றிரண்டு நாட்களின் பின், ஒரு கட்டிலில் இரவில் மூட்டைப் பூச்சி ஊர்கின்றது என்று ஆரம்பித்தனர். அந்த வீடே தலைகீழாகியது. எல்லாவற்றையும் பிரித்து, வெயிலில் போட்டு, சுடு தண்ணீர் ஊற்றி........... இது மூட்டைப் பூச்சியின் முட்டை, அது அதன் எச்சம், நசுக்கினா வரும் இரத்தம்.... என்று டி ராஜேந்தர் தோற்றார் அங்கே..........🤣
  20. வெட்கம் கெட்ட இழிவான மனிதன். புத்தர் பிறந்தது லும்பினியில் அது நேபாளில் உள்ளது. அப்போது இந்தியா என்றொரு நாடே இல்லை.
  21. இங்கேயும் ஊருக்கு போய் வந்தவர்கள் வீட்டில் கட்டாயம் அன்பளிப்பு கிடைக்கும் ஒரு மூட்டைப்பூச்சி எடுத்தால்😂 இரண்டு பேன்கள் இலவசம் ...
  22. 🤣.......... ஒரு பதினைந்து வருடங்களின் முன் இங்கு கலிஃபோர்னியாவில் ஒரு நகரில் இது பெரிய பிரச்சனையாகவே வந்தது. அந்த நேரத்தில் அங்கு இருந்த ஒரு பெரிய நிறுவனம் ஒன்றின் புதிய மென்பொருள் ஒன்றை உருவாக்க இந்தியாவிலிருந்து பலர் வந்து போய்க் கொண்டிருந்தனர். வேலைக்கு அருகில் இருக்கும் இடங்களில் வாடகைக்கு குடியிருந்தனர். ஒரே அறையில் பலர் தங்கினர். வந்து போனவர்களுடன் மூட்டைப் பூச்சிகளும் வந்து, போகாமல் அங்கேயே தங்கி, பெருகி, அந்தப் பகுதியையே சில நாட்கள் மூடி மருந்து அடிக்க வேண்டியதாகியது. அத்துடன் இந்தியர்கள் என்றாலே அவர்களுக்கு வாடகைக்கு இடம் கொடுப்பதில்லை என்ற போக்கும் வந்தது.
  23. ஹி...ஹி... ஹீ.... இது, திராவிடியன்சுக்கு கிடைத்த வெற்றி. 😂 🤣
  24. நிச்சயமாக, இதை தான் முதலில் சிந்தித்தேன். ஏனெனில், புவியின் காந்தபுலம் ஏற்படுவது மையத்தில் இருக்கு குழம்பின் ஓட்டத்தால் ஏற்படும் இலத்திரன் ஓட்டத்தால். மற்றும், உண்மையில் எதிர்வளமாக (நிரந்தகமாக) மையப்பகுதி சுழன்றால், அநேகமாக இலத்தினரன் ஓட்டத்தின் போகும் மாறுவதற்கு இடம் இருக்கிறது (எனவே காந்த புல போக்கும் மாறுவதற்கு இடம் இருக்கிறது). அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. சூரிய புயல், மற்றும் கதிர் வீசிசில் இருந்து புவியை பாதுகாப்பது இந்த காந்தப்புலத்தின் தொழிற்பாடு, கிட்டத்தட்ட புவியைச் சுற்றி ஒரு கவசமாக இருக்கிறது. உ.ம். கண்ணுக்கு தெரியும் Northern light (aurora borealis) உருவாகுவது, காந்தப்புலம், சூரிய புயல், மற்றும் கதிர் வீச்சை வட துருவத்துக்கு ஏறத்தாழ உறுஞ்சுவதால் என்று சொல்லலாம் (அங்கு தான் செறிவாக தெரிவது, மற்ற பகுதியிலும் தடுப்பது நடக்கும் ஆனால் கண்ண்ணுக்குக்கு தெரிவது குறைவு அல்லது இல்லை), உண்மையில் (உச்ச கட்டத்தில்) அதில் காந்த புலத்தின் காந்த விசை கோடுகள்,படலங்கள் தெரியும். அப்படி கண்ணனுக்கு தெரிவதே northern light. வட துருவத்தில் தெரிவதால் Northern light என்று பெயரிடப்பட்டு உள்ளது, (இதை அவர் சுருக்கமாக சொல்லி இருக்கிறார்) (தென்துருவதிலும் தெரியும், இது aurora australis அல்லது southern lights என்று பெயரிப்பட்டு உள்ளது) இப்போதைய காந்த துருவங்கள், புவியின் புவியியல் துருவங்களோடு ஏறத்தாழ ஒத்து இருக்கிறது. (உ.ம். ஆக, கந்த புல துருவங்கள் மாறி மத்திய கோட்டுக்கு கிடாவாக வந்துவிட்டது என்றால், சூரிய புயல் , கதிர்வீச்சு மதியகோட்டு பகுதியில் உறிஞ்சப்படும், மத்திய கோட்டு பகுதி மனிதன் மற்றும் உயினங்கள் வாழ்வதற்கு ஏற்ற பகுதி, இங்கே பல வருத்தங்கள், சொல்லமுடியாத, கற்பனை பண்ண முடியாத அழிவுகள், விளைவுகள் ஏற்படும்). மற்றும் புவியின் காந்த புலம், பல (பாரிய தூரங்கள், கண்டங்கள், காலநிலைகளை கடக்க) இடம்பெயரும் பறவைகள், விலங்குகளுக்கு திசை காட்டியாக இருக்கிறது. இது பரிசோதனை நிலையில் தான் இருக்கிறது. அனால், இது biological quantum effect என்பது ஏறத்தாழ முடிவாகி இருக்கிறது. அனால், அவ்வப்போது (மில்லியன் காலக்கணக்கில்) காந்த துருவங்கள், புவியியல் துருவங்களில் இருந்து விலத்தி இருக்கிறது என்பதற்கு (மறைமுகமான) geology (பாறைப்படிவுகள் (sediments), lava உறைந்ததில் ) ஆதாரம் இருக்கிறது. வேறு பல, இதுவரை அறியபடாத பாதுகாப்புக்கள், உயிரினங்களின் வேறு தக்கென பிழைக்கும் நோக்கத்துக்கும் காந்த புலம் இன்றியமையாததாக இருக்கலாம்
  25. “கடுகு சிறிது என்றாலும், காரம் பெரிது” என்று சொல்வார்கள். 😂
  26. எங்கள் குடும்ப நண்பர் ஒருவரின் மகளுக்குத் திருமணம், எங்ளுக்கு அழைப்புவந்து நாங்கள் அங்கு புறப்படுகின்றோம், நண்பருக்கு சாமியாரைத் தெரியாது, சிறியரும் வைத்தியசாலையில் இருப்பதால் அவரால் வரமுடியாது, வந்தாலும் மூக்கு அறுபட்டிருப்பதல்….அவரால் மூக்குமுட்ட சாப்பிடவும் முடியாது, கவலையோடு செல்கிறேன்.😒
  27. இப்ப ஆட்களை கடத்திய வழக்கை விட மூட்டைப்பூச்சியை கடத்தியது தான் அதிகம் தண்டனையை தரப் போகிறது.🤣
  28. ஆள் கடத்தலுக்கு… அனுபவம் காணாது போலை இருக்கு. 🤣 வாறவங்கள் தங்களுடன் மூட்டைப் பூச்சியையும் கடத்திக் கொண்டு வந்தால், அவங்களும் என்ன செய்யிறது… பாவங்கள். 😂 இனி சிறையில் இருந்து மூட்டைப் பூச்சி கடி வாங்கப் போகிறார்கள். 🤣
  29. ஒரு நாள் உண்ணாவிரதி கருணாநிதி.. ஈழத்தமிழர் துரோகி கருணாநிதி.. சிங்களன் மகிந்தவின் பொன்னாடைத் தோழன் கருணாநிதி.. ஈழ இரத்தம் குடி பிசாசு.. சோனியாவின் சொக்கத்தங்கம் கருணாநிதி.. இப்படி.. இன்னும் பல வகையில் நீளக் கூடியது இப்பாடல். எழுதியவருக்கும் பாடியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
  30. இப்ப, வலம்புரியின் போலிச்செய்தியை வட்சப்பில் இருந்து எடுத்துப் போட்டு "உண்மை ஜெயித்தது" என்று டயலாக் விட்ட @சுண்டல் சக நண்பர்கள் "முகத்தை மூடிக்" கொண்டாவது வரிசையாக வரவும்😂! பிகு: தேசம்நெற் ஜெயபாலன் ஆறுதிருமுருகனைப் பற்றி முன்னரும் எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். யாழ் பல்கலையின் மூதவையில் இருந்தபடி சில முன்னேற்றகரமான விடயங்கள் பல்கலையில் நிகழாமல் தடை போடும் ஒருவராக ஆறுதிருமுருகன் அவர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார். உதாரணமாக, வவுனியா வளாகம் (அடுத்து கிளிநொச்சி வளாகம்) தனியான பலக்லைகளாகத் தரமுயர்த்தப் பட்டால், இந்து/சைவர் அல்லாதவர்கள் தலைமைப் பதவிக்கு வந்து விடுவர் என்ற அச்சத்தை மறைமுகமாக ஆறுதிருமுருகன் வெளிப்படுத்தியிருக்கிறார்.
  31. கிளிநொச்சியில் (Kilinochchi) 90 வீதம் நீரை மீதப்படுத்தும் மாதிரி சொட்டு நீர்பாசனமுறையிலான மரக்கறிச் செய்கை வெற்றி பெற்றுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் (University of Jaffna) சமுதாயம் சார் மேம்பாட்டுக்குழுவினால் இந்த பரீட்சார்த்த பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில், இதுவரை காலமும் இறைப்பு முறை மூலம் நீர்பாசனம் மேற்கொள்ளப்பட்டு மரக்கறிப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. மரக்கறிச் செய்கை இதனையடுத்து சொட்டு நீர்ப்பாசன முறை மூலம் மரக்கறிச் செய்கை மேற்கொள்வது தொடர்பில் கிளிநொச்சி திருவையாறு பகுதியில் இவ்வாறு பரீட்சாத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த முறைமை மூலம் மரக்கறி செய்கைக்கு பயன்படுத்தப்படும் நீரை 90 வீதம் வரை மீதப்படுத்தலாம் எனவும், தேவையான பசளையை கரைசலாக நீருடன் சேர்த்து நீர் பாய்ச்சுவதனாலும், புற்கள் வளர்வதை தடுப்பதனாலும் செலவும் மீதப்படுத்தப்படுவதாக யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் அரசகேசரி தெரிவிக்கின்றார். குறைந்த செலவில் உற்பத்தி குறைந்த செலவில் உற்பத்தி அத்தோடு, குறைந்த செலவில் அதிக உற்பத்தியை பெற முடியும் எனவும், மிக முக்கியமாக நீர் விரயமாவதையும், நீர் பாய்ச்சலுக்காக செலவிடும் நேரத்தையும் குறைக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்ட விவசாய நிலங்களை விவசாய திணைக்களத்தினரும் இன்று சென்று பார்வையிட்டுள்ளனர். https://ibctamil.com/article/good-news-for-farmers-from-jaffna-university-1720709331
  32. உலகம் எங்கும் திருமணச் செலவு கொரோனாவுக்குப் பின் இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளது. உணவு, உடை, திருமண மண்டபம் என்று 100 பேருடன் சாதாரணமாக ஒரு திருமணத்தை செய்யவே 15,000 ஐரோவை தாண்டி விடும். நகையையும் சேர்த்தால் 25,000 ஐரோ நிச்சயம். பிற் குறிப்பு: சீதன கணக்கை மேலே சேர்க்கவில்லை. 🤣
  33. வணக்கம் வன்னியரே! உங்கள் மனம் வெள்ளை மனம், அதுதான் எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகிறீர்கள், ஆனாலும் இதனால் எங்களுக்கு வரக்கூடிய ஆபத்தையும் நீங்கள் உணரவில்லையா? எங்கள் மூவரையும் உருக்கி உருமாற்றி விற்கவா, அடகுவைக்கவா என்று பல கள உறவுகள் கூட்டம்போட்டுத் திட்டமிடுவதை இன்னுமா அறியவில்லை???😲🤭

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.