Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    3055
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87990
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46783
    Posts
  4. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    2954
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/15/24 in all areas

  1. ஏமாற்றம் --------------- எங்கே போனாலும் அங்கே நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள், அதனால் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்று சொல்லிச் சொல்லியே எல்லோரும் வளர்க்கப்பட்டிருக்கின்றோம். கடைக்காரர்கள் ஏமாற்றுவார்கள், ஆட்டோக்காரர்கள் ஏமாற்றுவார்கள், வேலைக்கு வருபவர்கள் ஏமாற்றுவார்கள், இவ்வளவும் ஏன், நண்பர்களே ஒரு நாள் ஏமாற்றுவார்கள் என்று அவரவர்களின் பல சொந்த அனுபவங்களும், கதைகளும் எங்கள் எல்லோருக்கும் சொல்லப்பட்டிருக்கும். கடவுளே எங்களை ஏமாற்றி விடுவார் என்று சொல்லுகின்றவர்களும் இருக்கின்றார்கள். நாங்கள் கடவுளை ஏமாற்ற முயன்ற கதைகளை இதுவரை எவரும் வெளியில் சொல்லவில்லை. மொழி தெரியாமல் ஏமாற்றப்படுவது மிகச் சாதாரணமாக உலகெங்கும் நடக்கும் ஒரு நிகழ்வு. சிங்கள மொழி தெரியாததால் கொழும்பில் ஏமாற்றப்பட்டவர்கள் எங்களில் பலர். பல வருடங்களின் முன் ஒரு தடவை நண்பன் ஒருவன் இடுப்பு பட்டி ஒன்றை அங்கு சந்தையில் வாங்கினான். பட்டியில் ஓட்டைகள் போட்டிருக்கப்பட்டிருக்கவில்லை. ஐந்து ஓட்டைகள் வேண்டும் என்றான். ஐந்து ஓட்டைகளை போட்டு விட்டு மேலதிகமாக ஐந்நூறு ரூபாய்கள் கொடு என்று அவர்கள் கட்டாயப்படுத்தி வாங்கிக் கொண்டனர். முன்னமே சொன்னோமே, சிங்களத்தில், என்றார்களாம். பல வருடங்களின் முன் சென்னை விமான நிலையத்தில் இறங்கி சென்னையில் இருக்கும் வேறோர் இடத்திற்கு, அண்ணா நகருக்கு, போக வேண்டி இருந்தது. என்னை ஏற்றிக் கொண்டு போக இருந்தவர் கடைசி நேரத்தில் வர முடியாத நிலை. ஒரு பிரச்சனையும் இல்லை, நானே சமாளித்துக் கொள்கின்றேன் என்று அங்கு இருக்கும் உறவினர்களுக்கு சொன்னேன். அவர்கள் நான் போக வேண்டிய இடத்திற்கு கார் வாடகை எவ்வளவு, எங்கே கார் எடுக்க வேண்டும், எங்கே கார் எடுக்கக் கூடாது என்று ஒரு நாலு பக்கங்கள் வரும் அளவிற்கு தகவல்கள் கொடுத்திருந்தனர். மிக முக்கியமாக, நான் வெளிநாட்டிலிருந்து அங்கு வந்திருப்பதாக சொல்லக் கூடாது என்றனர். இந்தியப் பணம் இங்கிருந்து கிளம்பும் போதே என்னிடம் கொடுக்கப்பட்டும் விட்டது. அப்பொழுது சென்னை விமான நிலையத்திலிருந்து அண்ணா நகருக்கு வாடகைக் கார் கட்டணம் அறுநூறு ரூபாய்கள். விமான நிலையத்தில் இறங்கி ஏற்கனவே எனக்கு சொல்லப்பட்டிருந்த இடத்திற்கு போனேன். சொல்லப்பட்டது போலவே பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத கார்கள் அங்கு நின்றன. பதிவு செய்யும் இடத்திற்கு போய், அண்ணா நகருக்கு போக வேண்டும் என்றேன். ஒரு காரைக் காட்டி அதில் போங்கள் என்றனர். பற்றுச்சீட்டு கொடுங்கள் என்றேன். பற்றுச்சீட்டு கட்டாயமாக கேட்டு வாங்க வேண்டும் என்று எனக்கு சொல்லப்பட்டிருந்தது. பற்றுச் சீட்டு வேணும் என்றால், உள்ளே போய் அங்கிருக்கும் ஒரு இடத்தில் காத்திருக்கச் சொன்னார்கள். காத்துக்கொண்டே இருந்தேன். எவரும் வரவில்லை. பின்னர் இது வேலைக்கு ஆகாது என்று வெளியில் வந்ததும் பதியாத கார்கள் ஓடுபவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர். பல வித பேரங்கள். கடைசியாக ஒருவர் அறுநூறு ரூபாய்க்கு வருவதாக சொன்னார். ஃபோனில் படம் எடுத்தேன், கூப்பிட்டு உறவினர்களுக்கு சொன்னேன். அவர்களும் அந்த சாரதியுடன் கதைத்தனர். இலங்கையிலிருந்து அங்கு வருவதாக சாரதிக்கு சொன்னேன். அவர் கோயம்புத்தூர் சொந்த ஊர் என்றார். காதலித்து, இரு வீட்டார்களையும் எதிர்த்து மணம் முடித்ததாகவும், அப்படியே ஓடி வந்து சென்னையில் தங்கி விட்டதாகவும் சொன்னார். இந்தக் கார் அவருடைய சொந்தக் கார், வங்கிக் கடனில் வாங்கியது என்றார். சென்னைக்கு வந்து விடுங்கள் என்றார். கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதித்து ஒரு கார் வாங்கி விடலாம் என்றார். இலங்கையில் படும் கஷ்டம் எதுவும் இங்கு படத் தேவையில்லை என்றார். கலங்கின கண்களை மூடி, கைகளால் பொத்தினேன். ஏன் அவர்கள் வீட்டில் காதலுக்கு எதிர்த்தார்கள் என்று கேட்டேன். அவருடைய ஒரு கால் செயற்கை என்றார். அவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை. மிக நன்றாக படிக்கிறாராம் அவர். எப்படியும் ஒரு கலெக்டர் ஆக்கி விடுவோம் என்றார். முத்திரைகள் சேர்க்கின்றார் என்றார். நானும் சிறுவயதில் முத்திரைகள் சேர்த்திருக்கின்றேன். அப்படியே வெளிநாட்டு நாணயங்களும் சேர்க்கின்றாராம். இலங்கை முத்திரைகள், நாணயங்கள் எல்லாம் தங்கள் வீட்டில் இருக்கின்றது என்றார். இறங்கிய பின் அவரின் காலைக் கவனித்தேன். பேசியது போலவே அறுநூறு ரூபாய்கள் கொடுத்தேன். அப்படியே ஒரு இருபது டாலர்களும், அப்பொழுது ஒரு டாலரின் பெறுமதி அறுபது ரூபாய்கள், கொடுத்தேன். இது என்ன சார் என்று நின்றார். இது உங்களின் மகளுக்கு என்று சொல்லி விட்டு, அவரைப் பார்க்காமலேயே திரும்பி நடந்தேன். உண்மையில் பார்க்கும் துணிவு இருக்கவில்லை.
  2. முதியோருடன் ஒரு அலசல்: "காதும் கேட்டலும்" உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத்தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருக்கலாம் என மதிப்பிடப் படுகிறது. இன்றைய கால கட்டத்தில், சுமுக அரசியல் சூழலும் பொருளாதார வளர்ச்சியும் வாழ்நாள் எதிர்பார்ப்பைக் கூட்டிக் கொண்டு போகின்றன. மேலும் ஆண் - பெண் இருபாலாரும் இன்று வேலைக்குச் செல்லுதலும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அளவு சுருங்கியிருப்பதும், கூட்டுக் குடும்ப முறை அநேகமாக இல்லாதிருப்பதும், மற்றும் நகரமயமாதல், உலகமயமாதல் காரணமும் சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இதனால், முதியோர்கள் தனிமையை உணர தொடங்குவதையும், தாம் தனித்து விடப்பட்டு விடுவார்கள் என ஏங்க தொடங்குவதையும் காண்கிறோம். இது அவர்களின் [முதியோர்களின்] உடல் நிலையை / சுகாதாரத்தை மிகவும் பாதிக்கும் காரணியுமாகும். இந்த நிலையில் ஐந்து புலன்களில் முக்கியமான காது கேட்டலையும் இழந்தால், அவரின் நிலை மேலும் விரக்தியைத் தான் ஏற்படுத்தும். ஆகவே இன்று நாம் "காதும் கேட்டாலும்" பற்றி சிறுது அலசுவோம். காது வழியாக நாம் ஒலியை கேட்பதால் தான், எங்களால் பேச முடிகிறது. குழந்தைகள் முதலில் ஒலியை உணர்கின்றன. அதனால்த் தான் குழந்தைகள் பேசவே ஆரம்பிக்கின்றன என்பதே உண்மை. எனவே, மனிதனின் முக்கியமான புலன்களில் ஒன்று காது எனலாம். தூக்கத்தின்போது 1. கண் (eye), 2. காது (ear), 3. மூக்கு (nose), 4.நாக்கு(tongue), 5.தோல்(skin) ஆகிய ஐம்பொறிகளில் நான்கு புலன்களும் ஓய்வு பெற்ற பிறகு கடைசியாக தன்னுடைய செயல்பாட்டை நிறுத்துவது இந்த காது தான் ! அதேபோல், விழிக்கும் பொழுது முதலில் செயல்படத் தொடங்கும் புலனும் இதுவே தான் ! எனவே, கேட்கும் சக்தி மனிதனுக்கு கிடைத்த மிகப் பெரிய வரம் என்று நாம் கூறலாம். உதாரணமாக, காது கேட்காமல் வாழ்வதும் [செவிடனாக] அல்லது குறிப்பிடத்தக்க அளவு, கேட்கும் சக்தியை அல்லது திறனை இழந்து வாழ்வதும் கட்டாயம், ஒரு மனிதனில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. கேட்கும் உணர்வை இழப்பது அவனை தனிமைக்கு இட்டு செல்லலாம் அல்லது ஒரு மனச்சோர்வை அவனில் ஏற்படுத்தலாம். அது மட்டும் அல்ல சில ஆய்வுகள் இது பாரதூரமான நோய்களுக்கும், உதாரணமாக மனச் சோர்வினால் ஏற்படும் ஒரு வித மறதிநோயை [Dementia / டிமென்ஷியா] ஏற்படுத்தலாம் என்றும் உறுதி படுத்துகிறது. ஒலி (Sound) என்பது பொதுவாக காதுகளால் கேட்டு உணரக்கூடிய அதிர்வுகளைக் குறிக்கும் என கூறலாம். இது ஒரு வித சக்தி ஆகும். இது ஒரு ஊடகத்தினூடாக பயணிக்கும் பொழுது, ஊடகத்தில் உள்ள மூலக்கூறுகளை [அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் / atoms and molecules] அதிர்வுறச் செய்கிறது. அதன் மூலம் ஒலி பரவுகின்றது. உதாரணமாக, மத்தளத்தை தட்டியவுடன், மத்தளத்தின் தோல் அதிர்வுறுகின்றது. அத்தோலில் ஏற்படும் அதிர்வுகள் காற்றில் [வளிமம் அல்லது நீர் போன்ற ஊடகம்] உள்ள மூலக்கூறுகளையும் அதிர்வுறச் செய்கின்றன. அம்மூலக்கூறுகள் நம் செவியில் உள்ள சவ்வுகளை அதிர்வுறச் செய்து, அங்கு நரம்புக் கணத்தாக்கங்களாக மாற்றப்பட்டு மூளைக்கு அனுப்பப்படும்போது, மூளையினால் அந்தக் கணத்தாக்கங்கள் ஒலியாக உணரப்படும். ஆனால் இது வெற்றிடத்தின் [vacuum] ஊடாக செல்லாது. அதிர்வினால் ஒலி அலைகள் ஏற்படுகின்றன. எல்லா ஒலி அலைகளும் மனிதனால் கேட்க முடியாது. உதாரணமாக, மனிதனின் கேட்கும் திறனின் எல்லை கிட்டத்தட்ட நொடிக்கு 20 அதிர்வுகளிலிருந்து 20,000 அதிர்வுகள் ஆகும். 20 அதிர்வுகளைவிடக் குறைவாயின், அது அக ஒலி அல்லது தாழ் ஒலி (infrasound) எனவும், 20000 அதிர்வுகளை விட அதிகமாக இருந்தால் அது மிகை ஒலி அல்லது மீயொலி (ultrasound) எனவும் அழைக்கப்படுகின்றது. மனிதனை விட, ஏனைய விலங்குகளின் கேட்கும் வீச்சு எல்லை வேறுபட்டதாக இருக்கும். காது அல்லது செவி (Ear) என்பது ஒரு புலனுறுப்பு ஆகும். இது கடவுளால் அல்லது பரிணாம வளர்ச்சியால் அல்லது படிவளர்ச்சியால் வடிவமைக்கப்பட்ட ஒரு பொறியியல் பகுதி என்று கூறலாம். இதனால் நாம் எல்லாவிதமான ஒலிகளையும் கேட்டு இன்று மகிழ்கிறோம். அது மட்டும் அல்ல, ஒலி பிறந்ததால் தான் எழுத்தும் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவருடன் ஒருவர் கலந்து பேசவும், தொடர்பு கொள்ளவும் இதுவே வழிசமைத்தது எனலாம். மனிதக் காது மூன்று பாகங்களால் ஆனதாகும். அவை புறச்செவி, நடுச்செவி, உட்செவி என்பனவாகும். உதாரணமாக, காது மடல், துவாரக்குழாய் சேர்ந்த இடம், வெளிக்காது ஆகும். நடுக்காது என்பது காது திரையின் உள்ளேயிருக்கும் வெற்றிடத்தைக் குறிப்பது ஆகும். அங்கு மூன்று சிறிய எலும்புகள் இருக்கின்றன. அவை ஒன்றோடொன்று தொடர்பில் இருக்கின்றன. உள்காதில் நத்தை வடிவில் `காக்லியா’ (Cochlea) என்ற உறுப்பு இருக்கிறது. அதில் சிறு சிறு நரம்புகள் ஒன்றாக இணைந்து, பெரிய நரம்பாகி, மூளையைச் சென்றடைகின்றன. ஒலியைக் காது மடல் உள்வாங்கி, துவாரத்தின் வழியாக உள்ளே அனுப்பி காதின் திரையிலுள்ள எலும்புகளில் அதிர்வை ஏற்படுத்தும். இந்த திரை மிருதங்கம் போல் மெலிதான தோலாகும். அந்த அதிர்வு உள்காதுக்குள் சென்று, அங்குள்ள திரவத்தில் அதிர்வலைகளை உருவாக்கும். அந்த அதிர்வுகள் அங்குள்ள நரம்புகளில் பிரதிபலிக்கும். இதையடுத்து அங்கு சிறிதாக ஒரு மின்னோட்டம் ஏற்பட்டு மூளையைச் சென்றடையும். மூளை ஒரு அதிநவீன கணினி போல், இதை ஒலியின் உணர்வாக எமக்கு மாற்றி தருகிறது. அதாவது இது மின்சார ஒலிபெருக்கி [Microphone / மைக்ரோஃபோன்] போல் தொழிற்படுகிறது எனலாம். காதுகள் சரியாகக் கேட்க வேண்டுமானால், செவிப்பறை சீராக இருக்க வேண்டும். உதாரணமாக காது கால்வாயை [ear canal] துப்பரவாக வைத்திருக்க வேண்டும். மேலும் கேட்டல், நுகர்தல், சுவைத்தல் [காது, மூக்கு, தொண்டை / வாய்] ஆகிய புலன்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. உதாரணமாக செவித்திரைக்கும் (Tympanic Membrane) உட்செவிக்கும் (Inner Ear) இடையில் உள்ள பகுதியான நடுச் செவியில் (Middle Ear) தான் நடுச்செவி குழாய் [Eustachian Tube or middle ear tube] உள்ளது. இது மூக்குக்கும் தொண்டைக்கும் நீண்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே மூக்கு, தொண்டைகளில் ஏற்படும் தடை அல்லது அடைப்பு, காதின் கேட்கும் திறனைப் பாதிக்கக் கூடியது. மனிதர்கள் மூப்படைய, செவிப்பறையும் ['eardrum' காது நடுச் சுவர்] தடிப்பாகவும் மற்றும் அதிர்வது கடினமாகவும் மாறுகிறது. நடுச்செவியின் உள்ளே உள்ள எலும்புகளும் ஒன்றுக் கொன்று இணைந்து [get fused] தன்பாட்டில் அதிராமல் [vibrate] விடலாம். இதனால், உட்செவியின் நரம்பு தொகுதி [inner ear nervous system] சரியாக தொழிற் படாமல் போகலாம். அது மட்டும் அல்ல வேறு செயலிழப்புகளும் [malfunction] ஏற்படலாம். காது கேளாமைக்கு ஒரு மாற்று வழியாக கேள் உதவிக் கருவிகள் [hearing devices / செவிப்புலன் உதவி சாதனம்] இன்று பயன் படுத்தப் படுகின்றன. இது மின்கலத்தால் இயங்கும் மின்னணு கருவியாகும். கேட்கும் திறனை மேம்படுத்துவதற்காக இக்கருவி மூன்று கட்டங்களினூடாக அல்லது பகுதிகளினூடாக ஒலியினை பெருக்குகிறது. காது கேள் கருவியில் ஒரு சிறிய ஒலிவாங்கி [microphone ] ஒலியினைப் பெற்று ஒலி அலைகளை மின் சமிக்ஞைகளாக மாற்றுகின்றன. இந்த சமிக்ஞைகளை ஒரு பெருக்கியானது [amplifier] அதிகரிக்கச்செய்கிறது. அதன் பின் ஒலிபெருக்கி [speaker] ஒன்று காதுக்குள் பெருக்கப்பட்ட ஒலியை [amplified sound] ஏற்படுத்துகிறது. இவ்வாறு காது குறைபாட்டை செவிப்புலன் உதவி சாதனம் நிவர்த்தி செய்கிறது. [மூலம்: ஆங்கிலத்தில் என் அண்ணா, கலாநிதி கந்தையா சுந்தரலிங்கம் மொழிபெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  3. கதைக்க விட்டால் ஜனநாயகம் என மூச்சுக்கு ஒரு தடவை சொல்வார்கள்.போதாதற்கு ரஸ்யா, சீனா, ஈரான், வடகோரியா ஆகிய நாட்டு அரசுகளை, தலைவர்களை கிண்டல், கேலி செய்வது. இவ்வளவு தலைவர்கள் ஏதாவது நாட்டில் சுடப்பட்டார்கள் என நான் நினைக்கவில்லை.
  4. நாணயங்கள் இல்லாட்டி என்ன நீங்களே நாணயமாக இருந்திருக்கிறீர்களே.
  5. இரத்த பொட்டு புகழ் அமிரும் மங்கையர்கரசியும் இளைஞர்களை உசுப்பேத்தி அவர்களை ஆயுத போருக்கு அடித்தளம் இட்டவர்கள் . குறிப்பாக தமிழர் விடுதலை கூட்டமைப்பினர். ஒரு பா உறுப்பினரின் மகள் உயர்தர பரீட்சையில் குண்டடித்தவர் 😆தற்போது டாக்டராக உள்ளார்.
  6. யூரோ கிண்ணத்தை நான்காவது தடவையாக ஸ்பெய்ன் சுவீகரித்தது 15 JUL, 2024 | 12:57 PM (நெவில் அன்தனி) பேர்லின் ஒலிம்பியா விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட ஸ்பெய்ன் நான்காவது தடவையாக ஐரோப்பிய சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. ஐரோப்பிய சம்பியன்ஷிப்பில் இதற்கு முன்னர் 1964, 2008, 2012 ஆகிய வருடங்களில் ஸ்பெய்ன் சம்பியனாகியிருந்தது. இறுதிப் போட்டியில் போடப்பட்ட 3 கோல்களில் கடைசி இரண்டு கோல்களை மாற்று வீரர்கள் போட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்த வருட யூரோ கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஏழு போட்டிகளிலும் வெற்றியீட்டிய ஸ்பெய்ன் தோல்வி அடையாத அணியாக சம்பியன் ஆனது. மேலும் சகல போட்டிகளிலும் முழு ஆட்டநேரத்தின்போது ஸ்பெய்ன் வெற்றியீட்டியது ஐரோப்பிய சம்பியன்ஷிப்பில் ஒரு சாதனையாகும். பீபா உலகக் கிண்ணத்தில் சம்பியனான ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, 2018இல் இரண்டாம் இடத்தைப் பெற்ற குரோஏஷியா ஆகியவற்றை வெற்றிகொண்டே ஐரோப்பிய சம்பியன் பட்டத்தை ஸ்பெய்ன் சுவீகரித்தது. குழுநிலையில் குரோஏஷியாவை 3 - 0 எனவும், இத்தாலியை 1 - 0 எனவும், அல்பேனியாவை 1 - 0 எனவும், 16 அணிகளுக்கான இரண்டாம் சுற்றில் ஜோர்ஜியாவை 4 - 1 எனவும் கால் இறுதியில் ஜேர்மனியை 2 - 1 எனவும் அரை இறுதியில் பிரான்ஸை 2 - 1 எனவும் கடைசியில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2 - 1 எனவும் ஸ்பெய்ன் வெற்றிகொண்டிருந்தது. இங்கிலாந்துக்கும் ஸ்பெய்னுக்கும் இடையிலான இறுதிப் போட்டி மிகவும் இறுக்கமாக அமைந்தது. போட்டியின் முதலாவது பகுதியில் இரண்டு அணிகளும் வேகம், விவேகம், சிறந்த புரிந்துணர்வு ஆகியவற்றுடன் விளையாடியபோதிலும் முதல் 45 நிமிடங்களில் எந்த அணியும் கோல் போடவில்லை. எனினும் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்து 2ஆவது நிமிடத்தில் (போட்டியில் 47ஆவது நிமிடம்) 17 வயதான இளம் வீரர் லெமின் யமால் பரிமாறிய பந்தை நிக்கோ வில்லியம்ஸ் கோலாக்கி ஸ்பெய்னை 1 - 0 என முன்னிலையில் இட்டார். வில்லியம் தனது 22ஆவது பிறந்த தினத்தை கடந்த வெள்ளிக்கிழமையும் லெமின் யமால் தனது 17ஆவது பிறந்த தினத்தை சனிக்கிழமையும் கொண்டாடினர். அவர்கள் இருவரும் சிறந்த நண்பர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இரண்டு நிமிடங்கள் கழித்து ஸ்பெய்ன் வீரர் ஒல்மோ இரண்டாவது கோலைப் போட எடுத்த முயற்சி மயிரிழையில் தவறியது. அதன் பின்னர் கோல் நிலையை சமப்படுத்த இங்கிலாந்து கடுமையாக முயற்சித்தது. போட்டியின் 73ஆவது நிமிடத்தில் சாக்கா, பெலிங்ஹாம் ஆகியோரிடையே பரிமாறப்பட்ட பந்தை இறுதியாகப் பெற்றுக்கொண்ட கோல் (Cole) பாமர் மிக இலாவகமாக கோலினுள் புகுத்தி கோல் நிலையை 1 - 1 என சமப்படுத்தினார். கோல் பாமர் 72ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக களம் புகுந்த அடுத்த நிமிடத்திலேயே கோல் போட்டமை விசேட அம்சமாகும். தொடர்ந்து இரண்டு அணிகளும் வெற்றிகோலை போடுவதற்கு கடுமையாக முயற்சித்தன. போட்டியின் 87ஆவது நிமிடத்தில் ஸ்பெய்ன் அணியின் மற்றொரு மாற்றுவீரரான மிக்கேல் ஒயாஸ்பாபல் மிகவும் அலாதியான கோல் ஒன்றைப் போட்டு தனது அணியை 2 - 1 என முன்னிலையில் இட்டார். அதுவே ஸ்பெய்னின் வெற்றிகோலாக அமைந்தது. இந்த சுற்றுப் போட்டியில் அதிசிறந்த வீரர்களாகத் தெரிவுசெய்யப்பட்ட லெமின் யமால், டெனி ஒல்மோ ஆகிய இருவரும் தங்கப் பந்து விருதை பகிர்ந்துகொண்டனர். ஐரோப்பியன் சம்பியன்ஷிப்பில் மிக குறைந்த வயதில் விளையாடி தங்கப் பந்தை வென்ற வீரர் என்ற பெருமையை லெமின் யமால் பெற்றுக்கொண்டார். https://www.virakesari.lk/article/188496
  7. நம்பிடாதங்கையா நம்பிடாதீங்க….. சிறீலங்கா அரசியல்வாதிகளின் புழுகுகளை…. இதுவரை இப்படி ஒன்று விமானநிலையத்தில் இல்லவே இல்லை….
  8. தாய்லாந்து மசாஜ் ஜேர்மனியிலையும் இருக்குத்தானே? ஏன் தேவையில்லாமல் காசு செலவழிச்சு அங்கை போய் நெருக்குப்படவேணும்? 😂 நான் மூண்டு தரம் போயிருக்கிறன். எப்பிடியிருந்தது எண்ட அனுபவம் வேணுமெண்டால் சொல்லுங்கோ. எழுதுறன்
  9. ஜேர்மனியில் தற்போது ஏராளமான தென்னிந்தியர்கள் வாழ்கின்றார்கள். அதில் தமிழ்நாட்டு தமிழர்களும் அடங்கும். இப்போது ஜேர்மனியில் உள்ள இந்து கோவில்களிலும் சரி,தமிழ் பாடசாலைகளிலும் சரி இவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆதிக்கம் என்றும் சொல்லலாம்.. இவர்களுக்கு ஈழத்தமிழர்களின் பண்பாடு பிடித்திருக்கின்றது. அதிலும் ஆங்கில கலப்பில்லாத தமிழ் பேச்சு வழக்குகளை மெச்சுகின்றனர். சுத்த தமிழுக்காகவே தமிழ்பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளை கொண்டுவந்து சேர்க்கின்றனர். புலம்பெயர்ந்து வந்தும் தொப்புள்கொடி உறவுகள் என்பதை நிரூபிக்கின்றனர்.
  10. 🤣...... வீட்டில் இரு பிள்ளைகளும் சிறுவர்களாக இருந்த நாட்களில் மத்தியானம் சாப்பிட்டுக் கொண்டே இரவுக்கு என்ன சாப்பாடு என்று தாயைக் கேட்பார்கள். இனித்தான் யோசிக்க வேண்டும் என்று அவரும் சொல்லுவார். இப்ப என்னுடைய நிலையும் கிட்டத்தட்ட அப்படித்தான், 'இனித்தான் யோசிக்க வேண்டும்' .........🤣. நான் தான் ஆரம்பிக்கின்றேன் என்றாலும், உண்மையில் இங்கு களத்தில் உள்ள சிலரும் சேர்ந்து தான் இவை எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றது............🙏.
  11. இது எந்த நாட்டு நாணயமாக இருக்கும்..யோசித்துக்கொண்டே இருக்கின்றேன்..அடுத்த குறும்கதை வரும்வரை...
  12. கண் கலங்க வைத்து விட்டீர்கள், தில்லை ஐயா........... 'கடவுளே......' என்று சொல்வதை விட வேறு என்ன சொல்வதென்றும் எனக்குத் தெரியவில்லை....🙏.
  13. உள்ளூரில் ஓரளவு ஆட்களை விசாரித்து உறுதிப்படுத்தலாம் அண்ணை. புதிய இடங்களில் அறிவு சொல்வதை விட மனம் இரங்கினால் செய்துவிட வேண்டியது தான். நண்பர் ஒருவர் கடன் தொகை கூடி(வட்டி குட்டி போட்டு) தற்கொலை செய்யும் நிலையில் இருந்தார். கனடிய நண்பன் ஒருவன் பல இலட்சம் கொடுத்து உதவியதோடு பகுதி பகுதியாகத் தருமாறு கூறி இருந்தான். 3 ஆண்டுகள் ஆகியும் ஒரு ரூபா கூட திருப்பி வழங்கவில்லை. இதே நண்பரின் நிலையை அறிந்து வேறு நண்பர்களிடம் அவர் பேசிய காணொளியை தனிப்படப் பகிரந்திருந்தேன். அவர்களும் உதவி இருக்கிறார்கள், ஆனால் இவர் எனக்கு சொல்லவில்லை. சற்று வருத்தமாக இருந்தாலும் அவருடைய நிலை இப்போது நன்றாகிவிட்டதை நினைத்து நிம்மதி.
  14. அறியாத தெரியாத இடங்களுக்கு போகும் போது ஒரு விழிப்புணர்வு alert இருக்க வேண்டியது கடடாயம் தானே . நல்ல சேவை கிடைக்கும்போது அமையறியாமலே கொடுக்கும் உணர்வு வரும். சின்ன வயதில் படித்த ஈசாப் நீதிக்கதைகள் நினைவுக்கு வருகிறது. வரும் காலத்தில் உங்கள் குறுங்கதைகளைத் தொகுத்து ‘ரசோதரன் நீதிக்கதைகள்’ என யாராவது வெளியிட வாய்ப்பிருக்கிறது. (ஏமாந்திட்டீங்களா?)... Kavi arunasalam ‘ரசோதரன் நீதிக்கதைகள்’ தொகுப்பை விரைவில் எதிர் பார்க்கிறோம்.
  15. யார் இந்தப் போக்கை ஆரம்பித்து வைத்தார்கள் என்ற தகவல்கள் எனக்குத் தெரியாது. ஆனால் முயன்றால் இதை மெதுமெதுவாக நிற்பாட்டலாம். மற்றவர்களை நிற்பாட்டு என்று சொல்வதை விட, ஒவ்வொருவரும் தன்னளவில் மாறினாலே காலப் போக்கில் ஒரு மாற்றம் வரும். அரசியலுக்கு மட்டும் இல்லை, இது எல்லா பொது வெளிக்கும் பொருந்தும்
  16. நீங்கள் கூறுவது ஒரு வகையில் உண்மைதான். இனிவரும் நாட்களில் இன்னும் பல அரசியற் கொலைகளை உலகம் எதிர்கொள்ள நேரிடலாம்.
  17. வைத்தியர் அர்ச்சுனா உளரீதியாக பாதிக்கபட்டதா மற்றவர்கள் எழுதியதை பேட்டி எடுப்பவர் படித்தாராம். பின்பு டொக்டரிடமே நேரில் கேட்கிறார் நீங்கள் உளரீதியாக பாதிக்கபட்டிருக்கின்றீர்களா இந்த பேட்டி எடுத்தவர் பேட்டி எடுப்பதற்கே தகுதி இல்லாதவர்.
  18. சஜித்… 13’வது திருத்தச் சட்டத்தை அமுல் படுத்துவேன் என்று சிங்களப் பகுதியில் நின்று சொல்வாரா.
  19. எல்லோரும் ஏமாற்றுவார்கள் என்றில்லை ......... 500 பேர் நிற்கும் வாடகை வண்டி நிலையத்தில் ஒரு 4 பேர் ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் ....... என்ன .......எங்களது காலக்கொடுமை அந்த நாளில் ஒன்றுதான் நாங்கள் போகும் நேரம் வந்து நிக்கும்.......! எங்களிடம் ராக்சி இருந்தது ........ அதில் அப்பப்ப சிலர் பொருட்கள் பார்சல்கள் தவறவிட்டு விடுவார்கள்.......அவற்றை சாரதிகள் பத்திரப்படுத்தி அன்றோ அடுத்தநாளோ உரிமையாளர் வந்து தேடும்போது கொடுத்து விடுவார்கள்........பக்கத்து சவாரி என்றால் மற்ற டாக்சி சாரதிகள் சொல்வார்கள் அவர் இப்ப வந்து விடுவார் கொஞ்சம் நில்லுங்கள் என்று சொல்லுவினம், தூர சவாரி என்றால் இன்னொரு நல்ல சாரதியிடம் குடுத்து விட்டு செல்வார்கள்......இப்படி ஒரு எழுதப்படாத விதி அன்று அவர்களுக்குள் இருந்தது .........! (இன்னொன்றும் இருக்கு இப்ப நேரமில்லை பிறகு).
  20. யூரோக் கிண்ணத்தை சுவீகரித்த ஸ்பெயின்! ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்திற்கிடையிலான யூரோ (Euro) கிண்ணக் காற்பந்துத் தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஸ்பெயின்அணி 4ஆவது முறையாக யூரோக் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வரும் 24 அணிகள் பங்கேற்கும் யூரோக் கிண்ணக் காற்பந்துத் தொடரானது கடந்த ஜூன் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமானது. இத் தொடரில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள்இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றன. இந்நிலையில் நேற்றைய தினம் பெர்லின் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வீழ்த்தியது. இதன்மூலம் 1964, 2008 மற்றும் 2012க்குப் பிறகு, நான்காவது முறையாக ஸ்பெயின் யூரோ காற்பந்து கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது. https://athavannews.com/2024/1392258
  21. வைத்தியர் அர்ச்சுனா கடும் வாக்குவாதம் - நாந்தான் இங்க வைத்தியர் - பொலிசார் கைதுசெய்ய முயற்சி
  22. ‘ஆற்றில் போட்டு குளத்தில் தேடுவது’ என்பது இப்பொழுது சற்றுப் புரிகிறது. கில்லாடி சார் நீங்கள். ‘இட்டார் கெட்டார்’இல் விட்ட தவறை ‘ஏமாற்றம்’ இல் சரி செய்திருக்கிறீர்கள். ஏமாறாமல் மட்டுமல்ல ஏமாற்றாமலும் இருக்க வாய்ப்பில்லை. ஏதோ ஒரு வழியில் நாங்களும் அதை செய்து கொண்டுதான் இருக்கிறோம். சில சமயங்களில் எங்களை நாங்களே. சின்ன வயதில் படித்த ஈசாப் நீதிக்கதைகள் நினைவுக்கு வருகிறது. வரும் காலத்தில் உங்கள் குறுங்கதைகளைத் தொகுத்து ‘ரசோதரன் நீதிக்கதைகள்’ என யாராவது வெளியிட வாய்ப்பிருக்கிறது. (ஏமாந்திட்டீங்களா?)
  23. ஏமாறாமலே போய்ச் சேர்ந்துட்டீங்க. தெரியாத இடங்களில் தமது பணத்தை செலவு செய்தே உதவுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இப்போ நம்மை ஏமாற்றும் இடமென்றால் நம்ம பிறந்த இடம் தான்.
  24. 👍....... ட்ரம்ப் அவர்களின் கையில் எதுவும் இல்லை. எல்லாம் பைடனின் கையில் தான் உள்ளது. இன்றைய நிலையில் பைடன் நினைத்தால் மட்டுமே ட்ரம்ப் அடுத்த அதிபராக வருவது தவிர்க்கப்படலாம். இந்த வாரம் சூட்டின் சூட்டை ஆற விட்டு, அடுத்த வாரம் பைடன் தான் போட்டியிலிருந்து விலகுவதாக சொன்னால், இறங்கின ரேட்டிங் மீண்டும் ஏறும். என்ன ஆனாலும் கலிஃபோர்னியாவில் எந்த மாற்றமும் ஏற்படாது. இந்த மாநிலத்திற்கு எவரும் பிரச்சாரத்திற்கு கூட வருவதில்லை.........🤣.
  25. இலங்கையில் ஆரம்ப காலங்களில் தமிழர் உரிமைகள்,இனப்பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை அது இது ஆரம்பித்த காலங்கள் என பலருக்கும் ஞாபகம் இருக்கும். எல்லாம் தோல்வியடைந்த நிலையில் தந்தை செல்வாவினால் தனித்தமிழீழமே ஈழத்தமிழர்களுக்கு தீர்வு எனும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது எந்தவொரு ஆயுத வாசனைகளும் இருக்கவில்லை. இருந்தாலும் ஒருவித உந்துதலின் காரணமாக இளைஞர் அணிகள் ஆயுதம் தூக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். எல்லோரின் நோக்கமும் தனித்தமிழ் தனிநாடாகவே இருந்தது. அதில் ஒரு சில அமைப்புகள் தனி நாடு சரிவராது என ஒதுங்கியது மட்டுமல்லாமல் சிங்கள இனவாத கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தனர். அது அவர்கள் தனிப்பட்ட விடயம். இருந்தாலும் இலங்கை தமிழ் மக்களுக்கு தனித்தமிழீழம் சாத்தியம் என சாதித்து காட்டியவர்கள் விடுதலைப்புலிகள்.தமக்கென சகல துறைகளையும் உருவாக்கி தனி அரசு போல் நடத்தி காட்டியவர்கள் விடுதலைப்புலிகள். துரோகத்தால் மட்டும் வீழ்ந்தவர்கள் விடுதலைப்புலிகள். தவறுகளால் அல்ல.
  26. என்ன‌ த‌மிழ்சிறி அண்ணா சுட்ட‌வ‌ருக்கு ப‌யிற்ச்சி காணாது போல் தெரியுது....................இத்த‌னை தோட்டாவாலும் சுட்டு ர‌ம் ம‌லை போல் நின்று வெறித்த‌ன‌த்தோடு கைய‌ உய‌ர்த்தி காட்டுகிறார்😛 த‌லைக்கு தினா வெட்டு அதிக‌ம் தான்..................... அது ச‌ரி ர‌ம்ப‌ சுட்ட‌ துப்பாக்கி எந்த‌ வ‌கை துப்பாக்கி இதை ஏன் கேட்க்கிகிறேன் என்றால் ப‌ல‌ மாடி உய‌ர‌த்தில் இருந்து கென‌டிய‌ ஒரு சூட்டின் மூல‌ம் கென‌டியின் மண்டை சித‌ரி மருத்துவமனைக்கு கொண்டு போக‌ முதலே இற‌ந்து விட்டார் .......................இதில‌ ஏதோ குள‌று ப‌டி இருப்ப‌தாக‌ தெரியுது......................துப்பாக்கியால் சுட்டால் தொண்ட‌ர்க‌ள் தொட்டு ப‌ல‌ர் ப‌த‌றி அடிச்சு ஓடுவின‌ம் ஆனால் இந்த‌ காணொளியில் அப்ப‌டி ஒன்றும் ந‌ட‌ந்த‌ மாதிரி தெரிய‌ வில்லையே ஹா ஹா.ர‌ம்பின் உட‌ம்பில் தோட்டா போன‌ மாதிரி தெரிய‌ வில்லை..................இது முன் கூட்டியே போட்ட‌ பிலான் மாதிரி தெரியுது...................இது வெறும் ராமா 😁😛........................................
  27. எது எப்படியோ..... ஈழ அரசியலின் முக்கிய அரசியல்வாதி சம்பந்தனின் மரண சடங்கின் நிகழ்வுகள் ஏனைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு நல்ல படிப்பினையாக அமையும். இன்றைய காலகட்டத்தில் வாயில்லா பூச்சிகளான தமிழினம் தாம் கொண்ட கொள்கையில் மாறவில்லை என்பதை சம்பந்தனின் மரண நிகழ்விற்கு வந்த மக்கள் தொகை உணர்த்தி நிற்கின்றது. சாது மிரண்டால் காடு கொள்ளாது.
  28. டிரம்பின் டிரம்ப் card தான் இத்த துப்பாக்கிச் சம்பவம். இருவாரங்களுக்குமுன்னே டிரம்ப் பயங்கரவாத தாக்குதல் தடக்குமென்று அடிச்சு சொன்னது ஞாமகமிருக்குதோ? இது வாக்கு வங்கியை வைத்த குறி.
  29. தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஏறெடுத்தும் பார்க்கமறுத்த ஒப்பந்தங்களில் பத்தோடு பதினொன்றாவதாக சேர்க்கப்பட்ட ரஜீவ் காந்தியின் தில்லி ஒப்பந்தம் திம்புப் பேச்சுக்களில் கலந்துகொண்ட புலிகளின் உறுப்பினர் லோரன்ஸ் திலகருடன் பாலசிங்கம், தலைவர் பிரபாகரன் மற்றும் இந்தியாவின் டிக்ஷிட் தில்லியில் தொடர்ச்சிய ஒருவார காலம் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட இந்திய அதிகாரிகளும், இலங்கை அதிகாரிகளும் பேச்சுக்களுக்கான அடிப்படை ஆவணமாக ஒன்றைத் தயாரித்துக்கொண்டனர். அதற்கு "ஒப்பந்தத்திற்கான அடிப்படைகளை வரையறுத்துக்கொள்ளுதலும் அதனை புரிந்துக்கொளுவதற்குமான வரைபு" என்று பெயரிட்டனர். பின்னாட்களில் அதுவே தில்லி ஒப்பந்தம் என்று அழைக்கப்படலாயிற்று. மேலதிகப் பேச்சுக்களுக்கான ஆரம்ப ஆவணமாக இது அமையவேண்டும் என்று ரஜீவ் விரும்பியிருந்தமையினால் அதனை "தொடக்க ஆவணம்" என்று அவர் அழைத்தார். இந்த ஆவணத்தில் இலங்கை சார்பாக ஹெக்டர் ஜெயவர்த்தனவும் இந்தியா சார்பாக ரொமேஷ் பண்டாரியும் கைய்யெழுத்திட்டனர். ஒப்பந்தத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் இருவரது கைய்யொப்பங்களும் இடப்படுவதை இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்திக்கொண்டனர். ஜெயாருடனான முன்னைய கசப்பான அனுபவங்களையடுத்தே இந்திய அதிகாரிகளை இதனைச் செய்தனர். முன்னர் அனெக்ஸ் சி (இணைப்பு சி) இயில் தான் கையொப்பம் இடவில்லை என்று அதிலிருந்து ஜெயார் தன்னை அந்நியப்படுத்தி நாடகமாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆனி 2 ஆம் திகதிய ஆவணம் எழுத்துவடிவில் இடம்பெறவில்லையென்பதாலும், அதில் தான் கையொப்பம் இடவில்லையென்பதாலும் அவ்விணக்கப்பாட்டினை தான் ஏற்றுக்கொள்ளவில்லையென்றும் அவர் வெளிப்படையாகக் கூறியிருந்தார். ஆகவே, ஜெயாரின் சொந்தச் சகோதரரான ஹெக்டருடன் தாம் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தினைக் கூட ஜெயவர்த்தன மிக எளிதாக தட்டிக் கழித்துவிடலாம் என்று இந்திய அதிகாரிகள் ஓரளவிற்கு ஊகித்தே இருந்தனர். இணைப்பு சி இனை மேம்படுத்திய தீர்வாகவே தில்லி ஒப்பந்தம் உருவாக்கப்பட்டிருந்தது. மாகாண சபைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படை அலகாக தில்லி ஒப்பந்தம் பரிந்துரை செய்திருந்தது. மாகாணங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க தில்லி ஒப்பந்தத்தில் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று உருவாக்கப்பட்டு, தமிழரின் நலன்களைப் பாதிக்கும் எந்தச் சட்டமும் இக்குழுவின் ஒப்புதல் இன்றி நடைமுறைப்படுத்தப்படமுடியாது என்கிற சரத்தையும் அரசியல் யாப்பினூடாக இவ்வாலோசனைகளில் உள்ளடக்குவதென்றும் இவ்வொப்பந்தம் பரிந்துரை செய்தது. தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய மிக அடிப்படையான விடயங்களைக் கூட பூர்த்தி செய்ய தில்லி ஒப்பந்தம் தவறியிருந்தது. முதலாவதாக, தமிழரின் தயகக் கோரிக்கையான வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைப்பதை தில்லி ஒப்பந்தம் நிராகரித்திருந்தது. அரசியல் யாப்பு மாற்றங்களுக்கூடாகவன்றி, பாராளுமன்றத்திற்கூடாகவே மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று தில்லி ஒப்பந்தம் கூறியது. இதன்படி சிங்களக் கட்சிகள் மிகச் சிறிய பெரும்பான்மையினூடாக சட்டம் ஒன்றினை உருவாக்கி மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை எப்போது வேண்டுமானாலும் இரத்துச் செய்யக்கூடிய நிலை காணப்பட்டது. தேசிய கொள்கைகளை வகுக்கும் அதிகாரமும், கோட்பாடுகளை வழங்கும் அதிகாரமும் மத்திய அரசிடமே விடப்பட்டிருந்தது. சட்டம் ஒழுங்கினை பரவலாக்கம் செய்யலாம் என்று கூறப்பட்டிருந்த போதிலும், காவல்த்துறையினை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே விடுவதென்று தில்லி ஒப்பந்தம் கூறியது. காணி மற்றும் குடியேற்றங்கள் தொடர்பான விடயங்கள் குறித்து இவ்வொப்பந்தம் எதனையும் குறிப்பிடவில்லை. மேலும் மாகாணங்களுக்கான ஆளுனருக்கும் முதலமைச்சருக்குமிடையினால தொடர்பாடல், நீதிமன்றங்கள் மற்றும் அவற்றின் கட்டமைப்புக்கள் குறித்தும் தெளிவான வரையறைகளை இவ்வொப்பந்தம் முன்வைக்கத் தவறியிருந்தது. தில்லியில் இந்திய இலங்கை அதிகாரிகளைடையே தீவிரமான கலந்துரையாடல்கள் நடைபெற்று வந்த வேளையில் சென்னையிலும் இலங்கையிலும் சில விடயங்கள் நடக்க ஆரம்பித்திருந்தன. ஆவணி 22 ஆம் திகதி திருகோணமலையில் இராணுவ ஜீப் ஒன்றின்மீது புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர். மறுநாளான ஆவணி 23 ஆம் திகதி சென்னை அடையாறில் அமைந்திருந்த புலிகளின் அரசியல் அலுவலகத்தில் கூடியிருந்த பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அன்ட‌ன் பாலசிங்கம், " இலங்கை இராணுவம் யுத்த நிறுத்தத்தினைக் கடைப்பிடிக்கத் தவறி வருவதனால், எமது மக்களைக் காப்பதற்கான பதில்த் தாக்குதல்களில் நாம் இறங்குவதற்கான முழு உரிமையும் எமக்கு இருக்கிறது" என்று அறிவித்தார்.
  30. பேச்சுக்களில் இருந்து வெளிநடப்புச் செய்தமைக்காக போராளிகளைப் பழிவாங்கிய ரஜீவ் காந்தி போராளிகளின் நிலைப்பாடு குறித்து இந்தியா கடுமையாக அதிருப்திய‌டைந்தது. குறிப்பாக பாலசிங்கத்தின் மீதே அதன் முழுக் கவனமும் திரும்பியிருந்தது. பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்ட தமிழர் தரப்பின் குழுவினருக்கும் சென்னையில் தங்கியிருந்த போராளிகளின் தலைவர்களுக்குமிடையிலும் தொடர்பாடலைப் பேணுவதற்கென்று இந்திய அரசால் செய்துகொடுக்கப்பட்டிருந்த நேரடித் தொலைபேசித் தொடர்பினை ரோ அதிகாரிகள் தொடர்ச்சியாக ஒட்டுக் கேட்டுவந்தனர். அதன் அடிப்படையில் பேச்சுக்களில் இருந்து விலகும் அழுத்தத்தினை பாலசிங்கமே தமிழர் தரப்புக் குழுவினருக்கு வழங்கினார் என்று ரோ அதிகாரிகள் ரொமேஷ் பணடாரியிடமும் ஏனைய அதிகாரிகளிடமும் தெரிவித்தனர். இந்தியாவின் சமரச முயற்சிகளை தோற்கடித்தவர் என்கிற பிரச்சாரம் பாலசிங்கம் மீது இந்தியர்களால் நிகழ்த்தப்பட்டது. சத்தியேந்திராவும் பண்டாரியுடன் திம்புப் பேச்சுக்களின்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். சிறீசபாரட்ணத்தின் மீது செல்வாக்குச் செலுத்திவந்த சந்திரகாசனை அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ. ஏ யின் முகவர் என்றும் இந்திய அதிகாரிகள் சந்தேகித்து வந்தனர். அதுவரை ரோவின் செல்லப்பிள்ளையாக வலம்வந்துகொண்டிருந்த சிறீசபாரடணம் திடீரென்று அவர்களுக்கெதிராகப் பேச ஆரம்பித்திருந்தார்.ரோ அதிகாரிகளைப் பொறுத்தவரையில் சிறீசபாரடணம் தீவிர நிலைப்பாட்டை வரிந்துகொண்டவரைப் போல் தெரியத் தொடங்கினார். பிரபாகரனைப் போல அவரும் தலைமறைவு வாழ்க்கையினை வாழத் தொடங்கியிருந்தார். இதற்குச் சந்திரகாசனே காரணமாக இருக்கலாம் என்று ரோ அதிகாரிகள் நம்பத் தொடங்கினர். தமிழ்ப் போராளி அமைப்புக்கள் பேச்சுக்களில் இருந்து வெளிநடப்புச் செய்தமைக்குப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியது. அதனடிப்படையில் பாலசிங்கம், அடேல் மற்று நடேசன் சத்தியேந்திரா ஆகிய மூவரையும் அது நாடுகடத்தியது. இவர்களை நாடு கடத்தும் முடிவினை தானே எடுத்த‌தாக இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தி மத்திய கிழக்கிலிருந்து வெளிவரும் செய்தித்தாளான கல்ப் நியூஸிற்கு ஆவணி மாதத்தின் இறுதிப்பகுதியில் வழங்கிய செவ்வியில் வெளிப்படையாகக் கூறியிருந்தார். "அவர்கள் இந்தியர்களோ, இலங்கையர்களோ கிடையாது, அதனாலேயே அவர்களை நாடு கடத்தும் முடிவினை எடுத்தேன். அவர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள்" என்று ரஜீவ் விமர்சித்திருந்தார். இந்தியாவை விட்டு வெளியேறும் பாலசிங்கமும், அடேலும் இவர்கள் மூவருக்கு எதிராகவும் கடுமையான தண்டனைகளை வழங்கும் தருணத்திற்காக இந்திய அதிகாரிகள் காத்திருந்தார்கள். தமது எண்ணத்தை இந்திய மத்திய அரசும் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று அவ்வதிகாரிகள் எண்ணியிருந்தார்கள் என்றுஅடேல் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். தம்மீதான பழிவாங்கல் நடவடிக்கைகளை பேச்சுக்களிலிருந்து தமிழர் தரப்பு வெளியேறிய நாளிலிருந்தே இந்திய அதிகாரிகள் திட்டமிட்டு வந்தது தமக்குத் தெரிந்தே இருந்தது என்றும் அவர் எழுதுகிறார். ஆவணி 23 ஆம் திகதி மதிய உணவு வேளையின்போது தம்மீதான பழிவாங்கல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தம்மை நாடுகடத்த இந்திய மத்திய அரசு முனையலாம் என்று பேசிக்கொண்டதாகவும், அன்றே இந்திய மத்திய அரசு தம்மை நாடுகடத்தும் உத்தரவினைப் பிறப்பித்தத்து என்றும் அவர் மேலும் குறிப்பிடுகிறார். பேச்சுக்களிலிருந்து தமிழர் தரப்பு வெளியேறியதையடுத்து திம்புவில் உல்லாசமாகப் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த இலங்கை அரசின் பேச்சுவார்த்தைக் குழுவினரை தில்லியில் வந்து தன்னைச் சந்திக்குமாறு ரஜீவ் காந்தி பணித்தார். கல்ப் நியூஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் மேலும் பேசிய ரஜீவ் காந்தி பேச்சுவார்த்தைகளின் தோல்விக்கு இரு காரணங்களை முன்வைத்தார். அவர் முன்வைத்த முதலாவது காரணம், பேச்சுக்களுக்களை ஆரம்பித்து தொடர்ந்து நடத்துவதற்கான ஆரம்ப்பத் தீர்வு ஒன்றினை முன்வைக்க இலங்கையரசு தவறியமை என்று அவர் கூறினார். இரண்டாவது காரணமாக தமிழ் மக்கள் மீதான இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான வன்முறைகளை அவர் குறிப்பிட்டார். ஆகவே, தான் குறிப்பிட்ட முதலாவது காரணம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார். மேலும், வருங்காலப் பேச்சுக்களுக்கு ஏற்ப நியாயமான அடிப்படைகளை முன்வைக்குமாறு இலங்கைப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜயவர்த்தனவிடம் அவர் கோரிக்கை முன்வைத்தார். திம்புவிலிருந்து தில்லிக்கு ஆவணி 23 ஆம் திகதி பயணமான ஹெக்டர் ஜயவர்த்தன, ஆவணி 30 வரை அங்கேயே தங்கியிருந்து ரஜீவ் காந்தியுடனும், ஏனைய இந்திய அதிகாரிகளுடனும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வந்தார். ஹெக்டருடனான தனது முதலாவது சந்திப்பில் பேசிய ரஜீவ், பங்களாதேசின் தலைநகரான டாக்கவிற்கான பயணத்தின்போது தன்னுடன் உடனிருந்த ஜெயார் ஜெயவர்த்தனவுடன் தான் பேசும்போது அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படை அலகாக மாகாண சபைகளை அவர் ஏற்றுக்கொள்வதாக தன்னிடம் உறுதியளித்திருந்ததைக் குறிப்பிட்டுப் பேசினார். "நாம் அந்தக் கலந்துரையாடல்களை எழுத்துவடிவில் ஒரு ஒப்பந்தமாகத் தயாரிக்க அப்போது விரும்பியிருக்கவில்லை. அது இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழருக்கும் இடையிலான பிரச்சினை என்பதால் நான் அது எழுத்துவடிவில் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்று நினைக்கவில்லை" என்று ரஜீவ் கூறினார். தொடர்ந்து ஹெக்டருடன் பேசிய ரஜீவ், அடுத்த பேச்சுக்களுக்கான அடிப்படையாக மாகாணசபைகளை அதிகாரப் பரவலாக்க அலகாக முன்வைத்து ஆவணங்களைத் தயாரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
  31. மூன்று அரை லட்சம் இழப்பு என்பது மிகப்பெரிய தொகை. இது பெரும் கொந்தளிப்பை ரசியாவில் உருவாக்கும். உக்ரைனில் புட்டின் கால் பதிக்கிறாரோ இல்லையோ ரசியாவில்????
  32. மாவைக் கந்தன் கொடியேற்றம் -2024
  33. சம்பந்தரின் அந்திரட்டிக்கு பிறகுதான் அவர் எமலோகம் வருவார் என்று எமதர்மராஜாவிடம் சொல்லி விடுங்கள். அவர் 91 வயது மட்டும் செய்த வேலைக்கு… இங்கை கிழிச்சு தொங்க விட்டுட்டுத்தான் அங்கை அனுப்புவம். 😂
  34. வணக்கம் இங்கே இறந்து போன ஒரு வயதானவர் பற்றிய கருத்துக்கள் அல்ல எழுதப்படுபவை. தனது ஏலாத வயதிலும் தமிழர்களின் முக்கிய காலகட்டத்தில் தனது சொந்த தனிப்பட்ட தேவைகளுக்கு மட்டுமே பாவித்தபடி சாகும் வரை அப்பதவியில் ஓட்டிக் கொண்டு இருந்தது. அவரது பதவியும் அந்த பதவி மூலம் அவர் அனுபவித்த சலுகைகளுமே இங்கே எழுதப்படுகின்றன. அவர் வந்து பதில் தரப்போவதில்லை. ஆனால் இனி வருபவர்களுக்கு எச்சரிக்கை . ..
  35. திம்புப் பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைந்தமைக்கான காரணங்கள் திம்புப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தமைக்கான காரணங்களாக நான்கு விடயங்களை பாலசிங்கம் தனது புத்தகமான போரும் சமாதானமும் என்பதில் குறிப்பிட்டிருக்கிறார். முதலாவது காரணம் இந்திய வெளியுறவுச் செயலாளரான ரொமேஷ் பண்டாரி. "இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினை குறித்த அடிப்படை அறிவினை அவர் கொண்டிருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், தமிழ் மற்றும் சிங்கள தேசங்கள் இரண்டிலும் நிலவிவரும் வேறுபட்ட நிலைப்பாடுகளையும், உணர்வுகளையும் புரிந்துகொள்ளும் அறிவும் அவரிடம் இருக்கவில்லை. சிக்கலானதும் , கடிணமானதுமான இனச்சிக்கலுக்கு உடனடியான இலகுத் தீர்வுகளை வழங்கமுடியும் என்று அவர் பொறுப்பற்ற விதத்தில் அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தார்" என்று பாலசிங்கம் கூறுகிறார். பண்டாரி தொடர்பான தொண்டைமானின் அவதானிப்பும் இதனையே கூறியிருந்தது. நான் முன்னர் கூறியதுபோல, இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை குறித்து ரொமேஷ் பண்டாரிக்கு அடிப்படை அறிவெதுவும் கிடையாது என்று தொண்டைமான் என்னிடம் ஒருதடவை கூறியிருந்தார். பேச்சுக்களின் தோல்விக்கு இரண்டாவது காரணமாக அமைந்தது இந்திய உளவுத்துறையும், அதிகாரிகளும் ஆகும். தமிழ்ப் போராளிகளுடனான அவர்களின் தொடர்பாடல்களின்போது ஆண்டான் - அடிமை மனநிலையே அவர்களிடம் காணப்பட்டது. "நாம் சொல்வதன்படி கேட்டு நடவுங்கள், அல்லது இந்தியாவிலிருந்து வெளியேறுங்கள்" என்பதே அவர்களின் எச்சரிக்கையாக இருந்து வந்தது. அவர்கள் வெளிப்படையாகவே இந்திய நலன்களைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருந்ததை தமது செயற்பாடுகளில் காட்டிவந்தார்கள் . தமிழர்களின் நலன்கள் குறித்த சிறிதளவு கரிசணையும் அவர்களிடத்தில் இருக்கவில்லை. மூன்றாவது காரணம் இலங்கை அரசாங்கம் நடந்துகொண்ட முறை. பேச்சுவார்த்தையில் ஜெயவர்த்தன கலந்துகொண்டதன் ஒற்றை நோக்கமே தான் சமாதானத்தில் நாட்டம் கொண்டிருக்கிறேன், ஆனால் தமிழர்கள்தான் விட்டுக்கொடுப்பின்றிப் பிடிவாதம் பிடிக்கிறார்கள் என்று உலகிற்கும், இந்தியாவிற்கும் காட்டுவதுதான். பேச்சுவார்த்தைக்காக தான் தேர்ந்தெடுத்த சிங்களப் பிரதிநிதிகள், அப்பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் காட்டிய கடும்போக்கு, பேச்சுவார்த்தையில் அவர்கள் முன்வைத்த தீர்வு ஆகியன‌ சர்வதேச சமூகத்தினை ஏமாற்றி தமிழர்கள் மீது இராணுவத் தாக்குதல்களை முடுக்கிவிட ஏதுவான களநிலையினை உருவாக்கிக் கொள்வதற்காக அவர் ஏற்படுத்திய நாடகம் என்றால் அது மிகையில்லை. இவற்றுள் மிகவும் முக்கியமான காரணி என்னவெனில் தமிழீழ விடுதலைப் போராளிகள் தமக்கென்று தனியான இலட்சியம் ஒன்றினைக் கொண்டிருக்கிறார்கள் என்பதனையும், அவ்விலட்சியத்தில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்பதனையும் இந்தியாவும், இலங்கையும் உணரத் தவறியமைதான். தனது தேசிய நலன்களுக்காக பேச்சுவார்த்தையினையும், போராளிகளையும் இந்தியா பாவிக்க விரும்பியது. இந்தியாவிற்கும் தமிழ்ப் போராளிகளுக்கும் இடையில் பகைமையினை உருவாக்கி, அதன்மூலம் தமிழர்களின் போராட்டத்தை முற்றாக நசுக்கிவிட இப்பேச்சுவார்த்தை நாடகத்தை இலங்கையரசு பாவிக்க விரும்பியது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த போதிலும், தமிழீழ விடுதலைப் போராட்டச் சரித்திரத்தில் அது முக்கியமான திருப்புமுனையாக மாறியது. முதன்முறையாக இந்தியாவும், இலங்கையும் தமிழீழ மக்களின் அரசியல்த் தலைமைத்துவம் ஜனநாயக அரசியல்வாதிகளிடமிருந்து போராளித் தலைமைகளுக்கு மாறியிருப்பதை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டிருந்தன. மேலும், ஆயுதப் போராட்டத்தினையும் மறைமுகமாக அவை ஏற்றுக்கொண்டிருந்தன. இந்த அங்கீகாரத்தின் மூலம் சர்வதேச ரீதியில் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்திற்கான நியாயத்தன்மை உருவாக வழியேற்படுத்தப்பட்டிருந்தது. அடுத்ததாக, திம்புப் பேச்சுக்களின் ஊடாக, தமிழீழத்திற்கு மாற்றான தீர்விற்கான அடிப்படைகள் 1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைப் பிரகடணத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிப்படுத்தப்பட்டிருந்தன. இறுதியாக, தமிழ் மக்களின் எந்தத் தீர்விலும் பிரபாகரனே தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார் என்கிற நிலையினையும் இப்பேசுவார்த்தைகள் ஏற்படுத்தியிருந்தன.
  36. கேணி.... cradle, ditch, trench சிரமதானம் Social work
  37. கேணி - Small Tank? சிரமதானம் - Community Service? பிழையாகக் கூட இருக்கலாம், அதனால் தான் '?' அங்கே இருக்கின்றது.......😀.
  38. என் மகள் சோம.அழகு 'திண்ணை' இதழில் எழுதிய கட்டுரையை இங்கு பதிவு செய்துள்ளேன். நன்றி தோழர். "அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை" (குறள் 315; அதிகாரம் : இன்னா செய்யாமை) (குறளின் பொருள் : பிற உயிர்களுக்கு ஏற்படும் துன்பத்தைத் தனக்கே ஏற்பட்ட துன்பமாய்ப் பாவிக்காவிட்டால், ஒருவன் பெற்ற அறிவினால் என்ன பயன் ?) மேற்கண்ட குறள் நீங்கள் சொன்ன கருத்துடன் பொருத்தி நோக்கத்தக்கது. 'பிறிதின் நோய்' என்று அஃறிணைகளுக்கு ஏற்படும் துன்பத்தையும் வள்ளுவன் குறித்தது குறளின் சிறப்பு. 'பிறிதின் நோய் தந்நோய்' எனும் தலைப்பில் முன்னர் நமது இந்த 'யாழ்' தளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். ஆகையால் குறள் உடனே நினைவுக்கு வந்தது. தங்களின் பின்னூட்டத்திலிருந்து சற்று விலகி, ஒரு கருத்தையும் இவ்விடத்தில் கட்டுரைக்கான எனது பின்னூட்டமாகப் பதிவு செய்ய விழைகிறேன். சில நேரங்களில் சில அழிவுகளை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதயாததாய் அமையும் - சாலை அமைக்க மரம் வெட்டுவது போல. இருப்பினும் அவற்றைக் கேள்விக்கு உட்படுத்தாமல் கடந்து செல்வது பேரழிவுகளுக்கு வழி வகுக்கும். அவ்வாறு கேள்விக்கு உட்படுத்துவதாகவும் கட்டுரையைப் பார்க்கிறேன். இக்கண்ணோட்டமும் கட்டுரையில் குறித்த 'கண்ணோட்ட'மும் இணைந்து செல்வன என்று நினைக்கிறேன்.
  39. ஐயா உங்களுடைய முகப்புத்தக இணைப்பினூடாகச் செல்ல புதுத்திண்ணை இணைப்பு வருகிறது, சிலர் தொடரச் சிரமப்பட்டு அருமையான ஆக்கத்தை வாசிக்காமல் விடக்கூடாது என்பதனால் நான் முழு ஆக்கத்தையும் இணைத்துவிட்டேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.