Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    87990
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    3057
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    20018
    Posts
  4. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    10
    Points
    15791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/25/24 in all areas

  1. லுங்கி டான்ஸ் ---------------------- புதுச் சாரம் தான் புது உடுப்பு என்ற எண்ணம் எனக்கு ஒரு காலத்தில் இருந்தது என்றால் சிலருக்கு அது ஆச்சரியமாகக் கூட இருக்கலாம். உண்மையில் ஆச்சரியம் என்னவென்றால், இன்றும் 'புது உடுப்பு ஒன்றைப் போடுங்கோ...........' என்று வருட நாளிலோ அல்லது தீபாவளி அன்றோ சொல்லப்படும் போது, என்னையறியாமலேயே ஒரு புதுச் சாரத்தை கட்டிக் கொண்டு வந்து நிற்பது தான் ஆச்சரியமாக இருக்கின்றது. புதுச் சாரம் மடங்காமல், இடுப்பில் அப்படியே ஒட்டாமல், கோதுமை மா களி பூசின மாட்டுத்தாள் பேப்பர் போல நிற்கும் அந்த உணர்வை வேறு எந்த புது உடுப்பும் கொடுப்பதில்லை. ஒரு வருடம் முழுவதும் பாடசாலைக்கு வெள்ளை சேட் இரண்டு, நீலக் காற்சட்டை ஒன்று போதும். அடுத்த வருடம் கூட அந்த வெள்ளை சேட்டுகள் வரும். ஆனால் காற்சட்டையில் பல முக்கியமான இடங்களில் ஓட்டை விழுந்து விடும், அதனால் ஒவ்வொரு வருடமும் ஒரு காற்சட்டை புதிதாக வாங்கியே தீர வேண்டும். ஆனாலும் புதுக் காற்சட்டையையும், புதுச் சாரத்தையும் ஒப்பிடவே முடியாது. புதுச் சாரங்களை விட்டுப் பார்த்தால், வேறு எந்த புது உடுப்பினதும் நினைவும் மனதில் இன்று இல்லவே இல்லை. சங்கு மார்க், கிப்ஸ், பின்னர் டிசைன் டிசைனாக கொஞ்சம் நைசான துணிகளில் அம்பானியின் லுங்கிகள், சவுதி சாரம், மட்டக்களப்பு சாரம், பற்றிக் சாரம் என்று பல சாரங்களை இடுப்பில் சுத்தி சுத்தி வளர்ந்தவர்கள் நாங்கள். இன்றும் சாரம் தான். முன்னர் வேலை முடிந்து வந்தவுடன் சாரத்திற்கு மாறி விடுவேன். இப்பொழுது பெரும்பாலும் வீட்டில் இருந்தே வேலை செய்வதால், சில நாட்களில் 24 மணி நேரமும் கர்ணனின் கவச குண்டலம் போல சாரம் ஒட்டியே இருக்கின்றது. பல வருடங்களின் முன், இங்கு சாரத்தை பற்றி எல்லோருக்கும், எங்கள் மக்களிலேயே, ஒரே அபிப்பிராயம் இல்லை என்ற உண்மை முதன் முதலில் தெரிய வந்தது. சாரம் என்பது ஒரு 'மரியாதை குறைந்த' உடுப்பாக பார்க்கப்படுவதும் தெரிந்தது. வீட்டிற்கு நண்பர்கள் வரும் போது சாரத்துடன் நிற்பதை பலர் தவிர்த்தனர். சந்தியில் நாள் முழுக்க சாரத்துடன் நின்று வளர்ந்து விட்டதால் சாரத்தை விட்டுக் கொடுப்பதாக இல்லை. எவர் வந்தாலும் சாரம் தான் என்று மனம் இறுக்கமாக இருந்தது. தமிழ்நாட்டில் ஒருவரின் உணவுப் பழக்கத்தை அவரின் ஒரு வித அடையாளமாக எடுத்துக் கொள்வார்கள். மொத்தமான, ஒரே ஒரு வகை தோசை சுட்டுச் சாப்பிடுபவர்கள் வேறு. பேப்பர் தோசை, நெய் தோசை, ஆனியன் தோசை என்று சுட்டுச் சாப்பிடுபவர்கள் வேறு என்பார்கள். ஒருவர் குடிக்கும் கோப்பியையும், டீயையும், பிளேன் டீயையும் வைத்தே அவர்களை வகைப்படுத்தும் வல்லமை பல தமிழ்நாட்டவர்களுக்கு உண்டு. அவர்கள் கும்பிடும் சாமியை வைத்தும் வகைப்படுத்துவார்கள். நாங்கள் இந்தளவிற்கு இல்லை தான், ஆனாலும் சங்கு மார்க்கிலும், கிப்ஸிலும் ஒரு தயக்கம் இருந்தது. ஒரு தடவை மகிந்த ராஜபக்ச மாலத்தீவிற்கு போயிருக்கும் போது, மகிந்தவை வரவேற்ற சில மாலத்தீவு முக்கியஸ்தர்கள் சாரமே கட்டியிருந்தனர். படத்தில் பார்க்கும் போது அவை மட்டக்களப்பு சாரம் போன்றிருந்தன. இது போதுமானதாக இருந்தது எனக்கு, இன்னும் நிறைய சாரங்களை வாங்கி வீட்டில் அடுக்க. பின்னர் 'லுங்கி டான்ஸ்............. லுங்கி டான்ஸ்......' என்றொரு பாட்டும், ஆட்டமும் வந்து மேடையெல்லாம் கலக்கியது. பல கலை விழாக்கள், தமிழ் விழாக்களில் இந்த லுங்கி டான்ஸ் ஆடப்பட்டது. இது மிக இலகுவான ஒரு ஆட்டம், அதனால் இன்னும் புகழ் பெற்றது. ஆடுபவர்கள் பெரிதாக ஆடத் தேவையில்லை. வெளியால் கட்டியிருக்கும் சாரத்தை மட்டும் கீழேயும், மேலேயும் , பக்கவாட்டிலும் வேகமாக அசைத்தால் அதுவே லுங்கி டான்ஸ். என்றாலும் சாரத்திற்கு உரிய மரியாதை இன்னும் கொடுக்கப்படவில்லை என்றே எனக்குப்பட்டது. மாலத்தீவில் கட்டிக் கொண்டாடுகின்றார்களே. பின்னர் வந்தன ஒன்றுகூடல்கள். எங்காவது, கேரளா, மலேசியா, பாங்காக், இப்படி எங்காவது போய் ஒன்று கூடுவது. பொதுவாக ஒரே விதமான நிகழ்ச்சி நிரல்கள் தான். மேலதிகமாக, அந்தக் கூட்டத்தில் யாராவது ஒருவர் ஏதாவது ஒன்றில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தால், அதுவும் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படும். உதாரணமாக, நான் போயிருந்த ஒன்றுகூடல் ஒன்றில் ஒருவருக்கு யோகா மிக நன்றாகவும், இன்னொருவருக்கு ஓரளவும் தெரியும் என்பதால். விடிகாலையில் யோகாசனம் என்பது நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டிருந்தது. அதிர்ஷடவசமாக அந்த உல்லாசப் போக்கிடத்திலிருந்து (resort) வெளியே போய் வருவதற்கு இரண்டு வழிகள் இருந்தன. இன்றைய ஒன்றுகூடல்களில் முக்கியமான இன்னொரு நிகழ்வு எல்லோரும் சாரம் கட்டி வரிசையாகவும், வட்டமாகவும், பல கோணங்களிலும் நின்று படங்கள் எடுத்து சமூக ஊடகங்களில் போடுவது. பெண்கள் படங்கள் எடுப்பதற்கு சேலைகளுடன் சளைக்காமல், நாள் முழுக்க நிற்பது போல. இப்பொழுது அப்பாடா என்றிருக்கின்றது. கடைசியில் சாரமும் ஒரு இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டது.
  2. நானும் உங்க பக்கம்தான்..சாமி...கன்டாவிலை $ 10க்கு 3 சரம் விற்பினம்.. $20 க்கு 6 வாங்கி வச்சிருக்கிறன்..இரவு படுக்கைக்கு சாரம் இல்லையென்றால் நித்திரையே வராது..அப்பிடி ஒரு சுகம்..பொண்டாட்டி ஒருநாள் கட்டின சரத்தோடை மறுநாள் பெட்டிலை ஏறவிடாது...இதனாலை எப்பவும் 6 வாங்கிப் போடுவன்... கனடா இதிலை பெற்றர்.. சங்கு மார்க், கிப்ஸ், பின்னர் டிசைன் டிசைனாக கொஞ்சம் நைசான துணிகளில் அம்பானியின் லுங்கிகள், சவுதி சாரம், மட்டக்களப்பு சாரம், பற்றிக் சாரம் என்று பல சாரங்களை இடுப்பில் சுத்தி சுத்தி வளர்ந்தவர்கள் நாங்கள். சின்னவயதிலை 7 கடுவன் உருப்படி....இதாலை புதுவருசம் ..தீபாவளிக்கு புது உடுப்பு எடுப்பது கஸ்டம் ..எப்படியும் முதல்நாள் கூப்பன் கடையிலை சீத்தை துணி எடுத்து மச்சாள் மாரட்டைக் குடுத்து பெரியாட்களுக்கு இரட்டைமூட்டுச் சாரமும் ..சின்னாக்களுக்கு ஒற்றைமூட்டுச்சரமும் ரெடியாகும்... துணி மிஞ்சினால் வாலாக்கொடியும் (பென்ரர்) தைபடும்...அதின் பிறின்ற் பெயின்ரு மணத்தோடை முழுகிவிட்டுகட்டிக்கொண்டு கோவிலுக்கு போவதில் உள்ள சந்தோசம்...அம்பனியின் மகன் கலியாணத்துக்கு போட்ட உடுப்பின் சந்தோசத்தைவிட ..கூடின சந்தோசம் அடைதிருப்பம்...
  3. கன காலத்திற்கு முன்…. மகள் சிறிய வயதாக இரண்டாம் வகுப்பு படிக்கும் போது, அவரின் பாடசாலை ஜேர்மன் நண்பி ஒருவர் வீட்டிற்கு விளையாட வருகின்றவர். சின்னப் பிள்ளைதானே… சாரத்துடன் நிற்பதை பெரிதாக கவனிக்க மாட்டுது என்று நான் சாரத்தை அணிந்து இருந்ததை பார்த்து… அது தனது வீட்டிற்க்குப் போய் தாய், தந்தையரிடம் இன்னாரின் அப்பா… அம்மாவின் பாவாடைய (Rock - Skirt) அணிந்து இருக்கின்றார் என்று சொல்லி விட்டது. 🤣 இந்த அவமானம் தேவையா என்று, எனக்கு… சீய் என்று போய் விட்டது. 😂
  4. அவ்வப்போது மருத்துவர் அர்ச்சனா பற்றிய செய்திகளை பார்க்கின்றேன். கட்சி தொடங்குவது என அவர் முடிவெடுத்து நிதி ஆதரவு கேட்டால் எனது சிறிய பங்களிப்பை வழங்க தயாராக உள்ளேன். சாவகச்சேரி/தென்மாராட்சிக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரை; மக்கள் மக்களின் தேவைகளுக்கு உழைக்கக்கூடிய ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என ஏற்கனவே கூறி உள்ளார். இவர் போன்று துணிவாக கதைக்கக்கூடிய, வீதியில் இறங்கி போராடக்கூடிய ஒருவர் கட்சி தொடங்கினால் அதற்கு நாம்ஆதரவை வழங்குவது சிறப்பு. மக்களின் அடிப்படை தேவைகள் பற்றி இங்கே உண்மையான கரிசனை கொண்ட ஒருவர் உழைக்கின்றேன் என திடசங்கற்பம் செய்யும்போது நாம் அதை நையாண்டி செய்தால் எங்களில் ஏதோ குறைபாடு உள்ளது என்பது தவிர வேறு ஏதும் இல்லை.
  5. ஒரு நாள் எனது அயலவர் ஒருவரின் கார் வழியில் நின்று விட்டது. அது ஒரு பிரபல சிட்னி சந்தையின் அருகாமை. அவர் காரின் வெளியே இறங்கி நின்று கொண்டிருந்தார். காலைச் சூரியனின் ஒளி அவரின் கால்களுக்கிடையால் புகுந்து வெளி வந்தது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக விரிந்தது. அவர் சாரம் அணிந்திருந்த்தார்.எனது காரை நிறுத்தி அவரை ஏற்றினேன். ஆனால் நான் வெளியே இறங்கவில்லை. காரணம் இன்னும் விளங்கவில்லை.
  6. இவர்கள் எல்லோரும் தமிழ்நாட்டில் 'ஆதாய அரசியல்' தான் செய்கின்றார்கள் என்பதில் நாங்கள், ஈழத்தமிழர்கள், ஒரே கருத்தையே கொண்டிருக்கின்றோம். இவர்களின் ஆதாய அரசியல் பெரும்பாலும் இவர்களின் குடும்ப உறவுகளின், வாரிசுகளின் மேம்பாட்டை நோக்கியே. இவர்களில் ஒரு சிலர், இரண்டாம் பட்சமாக, அவர்கள் சார்ந்த சாதி சனங்களிற்காகவும் சில அரசியல் முடிவுகளை எடுக்கின்றனர், உதாரணம்: பாமகவின் உள் ஒதுக்கீட்டு கோரிக்கை. முழு தமிழ்நாட்டிற்கு என்றோ, அங்கு வாழும் எல்லா தமிழர்களுக்கும் என்றோ இவர்களிடம் ஒரு பரந்த பார்வை கிடையாது. அப்படியான இவர்கள் ஈழத்தமிழர்களான எங்களை மட்டும் எவ்வாறு பரந்த ஒரு பார்வையுடன் அணுகுகின்றார்கள் என்று நாங்கள் நினைக்கவேண்டும்? இவர்களின் ஆதாய அரசியலுக்கு எங்களை ஒரு ஆயுதமாகவே இவர்கள் பயன்படுத்துகின்றனர் என்பது தான் பொருத்தமாக இருக்கும். சரி, என்னவானாலும் இவர்களால் எங்களுக்கு, எங்கள் நோக்கத்திற்கு நன்மை ஏதாவது கிடைத்தால், அது நல்லது தானே என்று நாங்கள் நினைக்கலாம். ஆனால் மிக நெருக்கடியான நேரத்தில், அதே சுய ஆதாயம் கருதி, இவர்கள் எங்களை கைவிடவும் கூடும் அல்லவா.......... கைவிட்டார்கள் என்று தானே நாங்கள் நினைக்கின்றோம். தங்கள் தகுதிக்கு மீறிய விடயங்களை நம்பிக்கைகளாக ,பொய்யான வாக்குறுதிகளாக இவர்கள் எல்லோரும் எங்களின் தலைமைக்கு கொடுத்தும் இருக்கலாம் அல்லவா, ஏனென்றால் இவர்களின் முதல் மற்றும் இரவு பகல் தேவை இவர்களின் ஆதாய அரசியல் மட்டுமே, நாங்கள் அல்ல.
  7. மிகவும் தவறான அனுமானம். வைகோ கொள்கை பிடிப்பு இல்லாத, நேரத்துக்கு நேரம் நிறம் மாறுகின்ற, கூட்டணி மாறுகின்ற அரசியல்வாதி. வாரிசு அரசியலை எதிர்த்து குரல் கொடுத்து, அதனால் திமுக வில் இருந்து 1991-ம் ஆண்டு, நவம்பர் 26-ம் தேதி விலக்கப்பட்டு, அதனால் இவருக்காக 5 தீக்குளித்து உயிரை கொடுக்க இவரால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்(மதிமுக) 1994-ம் ஆண்டு, மே மாதம் உருவாக்கப்பட்டது. அதன் பின் திமுக வில் இருக்கும் போது, பரம வைரியாக இருந்த ஜெயலலிதாவுடன் 1998 பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்து தோற்றார். பின் 5 இற்கும் மேற்பட்டவர்கள் தீக்குளித்து மாண்டு போக காரணமான, வாரிசு அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்து பிரிந்த திமுகவை / கருணாநிதியை ஆதரித்து அவர்களுடன் 1999 இல்கூட்டணி வைத்து பெரியளவில் சறுக்கினார். பின் வந்த காலத்தில் தவறான கூட்டணிகளை அமைத்து தன் அரசியல் கட்சியை நாசமாக்கியது மட்டுமல்லாமல், விஜயகாந்தின் கட்சியையும் நாசமாக்கினார். ஈற்றில் எந்த வாரிசு அரசியலுக்கு எதிராக திமுகவில் இருந்து பிரிந்தாரோ, அதே வாரிசு அரசியலை துரை வைகோ வின் மூலம் தன் கட்சிக்குள்ளும் நுழைத்து தொடர்கின்றார். நல்ல மனிதராக இருக்கலாம், ஆனால் அரசியல் கோமாளி இவர், இவரின் இந்த நிலைக்கும், எம் இனத்துக்கான போராட்டத்துக்கான ஆதரவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
  8. விடுதலைப் புலிகள் என்பது கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் அப்பால், ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டத்தின் குறியீடு. எம் நியாயமான போராட்டத்தை பயங்கரவாதமாக அடையாளப்படுத்தி வைத்திருக்கும் முறைமை இது. அவர்கள் மீதான தடை என்பது, ஈழத்தமிழர்களின் தமிழ் தேசிய போராட்டத்தின் மீதான தடையாகும். எம் மக்களின் உரிமைப் போராட்டத்தின் மீதான தடையாகும். புலிகள் மீதான தடைதான், அவர்கள் பெயரைப் பயன்படுத்தி குளிர்காயும், அவர்களின் சொத்தை கொள்ளையடித்த பலர் மீதான சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை தடுத்துக் கொண்டு இருக்கின்றது. இலங்கை, இந்திய அரசுகளை விட இப்படியானவர்களுக்குத் தான் புலிகள் மீதான தடை நீடித்துக் கொண்டு இருக்க வேண்டிய தேவையும் உள்ளது. விசுகு கூறியது போன்று, யார் குற்றியும் அரிசி ஆனால் சரி.
  9. இலங்கையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவருடன் இன்றும் மருத்துவர் அர்ச்சனாவின் முறைப்பாடுகள் சம்மந்தமாக உரையாடினேன். மருத்துவர் அர்ச்சனா சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றுவந்த முறைகேடுகளை துணிகரமாக செயற்பட்டு வெளி உலகுக்கு கொண்டு வந்துள்ளார். இங்கே அவர் புகழுக்காகவும், பேஸ்புக் லைக்ஸ் இற்காகவும் சமூக ஊடகத்தில் தொடர்ச்சியாக கருத்து தெரிவிக்கின்றார் எனும்படியாக பின்னூட்டங்கள் உள்ளன. உண்மையில் அவரது நிலையில் நின்று பார்த்தால் தனது இருப்பை தக்க வைக்க சமூக ஊடகத்துடன் தொடர்ச்சியாக தொடர்பை பேணவேண்டியது தனிப்பட்ட பாதுகாப்பு உத்திகளில் ஒன்றாகவும் காணப்படலாம். அவருக்கு எதிராக எத்தனை எதிரிகள் உள்ளார்களோ தெரியாது. இந்தவகையில் பார்த்தால் சமூக ஊடகத்தில் தொடர்ச்சியாக பதிவுகளை அவர் இடுவதும், நேரலைக்கு வருவதும் தவறாக தெரியவில்லை. சமூகத்திற்காக குரல் கொடுக்க வந்த ஒருவரை பைத்தியக்காரன், தலை சுகமில்லாதவர், அங்கோடை கேஸ் என சிலர் விளிப்பது, கதை கட்டிவிடுவது எமது சமூகத்தின் தரத்தை காண்பிக்கின்றது. காலங்காலமாக தாத்தா, பாட்டா, அம்மா, அப்பா என சாகவச்சேரி ஆதார வைத்தியசாலையில் குழந்தைகள் பிறந்த சரித்திரம் மாற்றப்பட்டு ஆறு மாதங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய பிரசவங்களே நடந்தன எனும்போது இந்த அசமந்த போக்கை, அக்கறையீனத்தை மருத்துவர் அர்ச்சனா சுட்டிக்காட்டியது பலருக்கு கெளரவ பிரச்சனையாகிவிட்டது. தமது கெளரவங்களை காப்பாற்றிக்கொள்ள மருத்துவர் அர்ச்சனாவிற்கு தலை சுகம் இல்லை, இவர் புகழிற்கு அடிமையாகிவிட்டார் என பிரச்சாரம் செய்தால் தாம் தப்பிக்கொள்ளலாம் என தவறுகள் செய்தவர்கள் நினைக்கின்றார்களோ என்னவோ.
  10. மீண்டும் இவ்வருடம் பிரம்மாண்டமாகவும் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளுடனும் யாழ் ஐடி ஹப்(Yarl IT Hub) இன் YGC புத்தாக்க திருவிழாவாக நடைபெற உள்ளது ! ஆகஸ்ட் மாதம் 2, 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் புத்தாக்கம், தொழில்நுட்பம் மற்றும் முயற்சியாண்மை என அனைத்தும் ஒரே இடத்தில் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய கொண்டாட்டம் - YGC புத்தாக்க திருவிழா. YGC புத்தாக்க திருவிழாவில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் Pitching போட்டி, ரோபோட்டிக் போட்டி (Robotic Competition), வலையமைப்பு நிகழ்வுகள் (networking events), மாஸ்டர் கிளாஸ்கள் (master classes), கண்காட்சிகள் (mini expo), சந்திப்புகள் (ecosystem meetups), பாடசாலை மாணவர்களின் கண்காட்சி (YGC juniors alumni expo), அனுபவ கற்கை நெறிகள் (Experiential Learning), புத்தொழில் கண்காட்சி, செயற்கை நுண் அறிவு, கைத்தறி, களிமண், ஓலை போன்றவற்றின் செயன்முறைகள், Fun Activities மற்றும் பல. இத் திருவிழாவில் பங்கு பெறுவதன் மூலம் நீங்களும் முயற்சியாண்மை, புத்தாக்கம் என்பவற்றை முயற்சித்து அதில் வெற்றி பெற்ற பலரை நேரடியாக சந்தித்து அவர்களின் அனுபவங்களைப் பெற முடியும். நீங்கள் ஒரு தொழில்முனைவோராகவோ, சிறுவர்களாகவோ, மாணவர்களாகவோ, பல்கலைக்கழக மாணவர்களாகவோ, கல்வி ஆர்வலராகவோ அல்லது புதிய விடயங்களில் ஆர்வமுடையவர்களாக இருந்தாலும் உங்களுக்கு ஏற்ற நிகழ்வுகள் இப் புத்தாக்க திருவிழாவில் காணப்படும் . ஒன்றிணைவோம், ஊக்குவிப்போம், புதுமைப்படுத்துவோம்! https://www.facebook.com/yarlithub
  11. அது 1935 ஆண்டு , தென்மாகாணத்தில் இருந்து பிழைப்புக்கும் , உழைப்புக்குமாக கொழும்பு நோக்கி வருகிறான் ஒரு இளைஞன் பல்வேறுப்பட்ட சிரமம் , அலைச்சல் , தேடல் , தியாகம் அனைத்தையும் அனுபவித்தான் அந்த இளைஞன் . பல வகையான மனிதர்கள், பல்வேறு போராட்டங்கள் அனைத்தையும் கடந்து கொழும்பில் உள்ள முதலாம் குறுக்கு தெருவில் தேநீர் கடை ஒன்றை நிறுவுகிறான். அந்த இளைஞனின்முழுப்பெயர் பெயர் அங்கல்காஹ கமகே ஹினி அப்புமுஹாமி என்பதாகும் . கடினமான உழைப்பு , ஓய்வில்லாத முயற்சி , தூக்கமில்லாத வேலை , இப்படியே ஓட்டுகிறான் தேநீர் கடையை. . சொற்ப வருடத்திலேயே அந்த இளைஞனின் கடினமான முயற்சிகளுக்கு பலன் கிட்டியது , விரைவிலேயே தேநீர் கடை , ஒரு ஹோட்டலாக மாற்றம் பெற்றது . கொழும்பின் மலிபன் தெருவிலே அந்த ஹோட்டல் திறக்கப்பட்டதால் , அந்த ஹோட்டலுக்கும் மலிபன் ஹோட்டல் என்ற பெயரையே சூட்டினார் திருவாளர் அப்புஹாமி அவர்கள் . அவரது உதவி ஒத்தாசைக்கென்ன தங்களின் சகோதரர்களான A.G.விக்ரமபால மற்றும் A.G.ஜினதாச ஆகியோரையும் இணைத்து கொண்டார் . கூட்டு முயற்சியாலும் , கடின உழைப்பாலும் அவரின் வர்த்தகம் வேகமாக வளர்ந்ததோடு , அது பல கிளைகளையும் பரப்பியது . மலிபன் ஹோட்டலுக்கு மக்களின் அபிமானமும் , வரவேற்பும் பல மடங்கு பெருகுகிறது. அதை அப்படியே தக்கவைத்துக்கொண்ட அப்புஹாமி அவர்கள் அடுத்த கட்ட முயற்சிகளை சிந்தித்து , செயலாற்ற தொடங்குகிறார் . அந்த முயற்சியிலே குதிக்கிறார் . அந்த சிந்தனையும் முயற்சியும் , அப்புஹாமி அவர்களை கொழும்பு கொட்டாஞ்சேனையில் , ஒரு பேக்கரி தொடங்கி , வியாபாரத்தை விரிவுபடுத்த வைக்கிறது . . பேக்கரியும் தொடங்கியாயிற்று , அங்கே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த தரம் மற்றும் சுவை கொண்ட தயாரிப்புகளின் மதிப்பும் அதிகரிக்கிறது . இதனால் , ஹோட்டலுக்கு போலவே , பேக்கரிக்கும் மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பும் , நற்பெயரும் கிடைக்கிறது . அப்புஹாமி வழங்கிய நல்ல வியாபாரமே , வாடிக்கையாளர்களிடம் இருந்து அவருக்கு நல்ல மதிப்பை கொடுத்தது . வியாபாரத்தின் தாரக மந்திரம் வாடிக்கையாளர்கள் என்றால் , அந்த வாடிக்கையாளர்களுக்கு நாம் கொடுப்பதும் சிறப்பானதாய் இருக்க வேண்டும். அப்படி சிறப்பானதை கொடுத்தால் தான் , வாடிக்கையாளர்களையும் நாம் தக்க வைக்க முடியும். இதனை செவ்வனவே செய்தார் அப்புஹாமி , விளைவு நல்ல வாடிக்கையாளர்கள் தக்க வைக்கப்பட்டனர் , அந்த வாடிக்கையாளர்கள் தக்க வைக்கப்பட்டதால் , இவரின் வர்த்தக பெயரும் மக்கள் மனதில் பதிந்தது . வாடிக்கையாளர்களும் உள்ளனர் , நல்ல பெயரும் இருக்கிறது , இது ஒரு வரமல்லவா ? இப்போது அடுத்த கட்டத்தை பற்றி யோசித்தார் அப்புஹாமி . ஒரு இயந்திரமயமாக்கல் மூலமான உணவு உற்பத்தி செயல்முறையை ஆரம்பிக்க முடிவெடுக்கிறார் . அந்த முடிவே , 1954 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் , நாட்டின் முதலாவது இயந்திரம் மூலம் தயாரிக்கப்பட்ட பிஸ்கட் உற்பத்தியை இலங்கை தீவுக்கு அறிமுகம் செய்கிறது . அப்புஹாமி முதல் வியாபாரம் பழகிய இடத்தின் பெயரையே , தனது பிஸ்கட் நிறுவனத்திற்கும் வைக்கிறார் - அதுவே மலிபன் என்பதாகும் . 1935 ம் ஆண்டு தொடக்கம் 1954 ம் ஆண்டு வரையான , வெறும் 19 ஆண்டுக்குள் ஒரு இமாலாய சாதனையே இதுவாகும் . இன்று மலிபன் நிறுவனமானது பிஸ்கட் துறையில் மட்டுமல்ல , பால்மா வியாபாரத்திலும் தனக்கென தனியிடம் பிடித்துள்ளது . சிறிய ஆரம்பமே பெரிய அடைவுகள் என்பதற்கு அப்புஹாமி மெலிபன் வீதியில் ஆரம்பம் செய்த மெலிபன் ஹோட்டலும் , இன்றைய அந்த நிறுவனத்தின் வளர்ச்சியும் சிறந்த எடுத்துக்காட்டு . முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை என்பதற்கு அப்புஹாமி நல்லதொரு உதாரணம் . அது போல , கம்பீரமாய் வளர்ந்து நிற்கும் மலிபன் நிறுவனம் ஒரு சான்று . படித்ததில் பிடித்தது Copied from : Hafy Abdeen https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0N4hCg53DXZ5xmsoZEyYozSLAkkSA2kGzrfZ88qJNtoxGfS8DDadftdLBUu8h856Cl&id=100068724064386&mibextid=cr9u03
  12. ஒரு ஊரில் ஒரு ஆசாமி இருந்தான். அவன் ரொம்பவும் சுத்தம் பார்க்கிற ஆளு. அவனுக்கு எதைக் கண்டாலும் அருவெறுப்பா இருந்தது. ஒரு சமயம் நம்ம ஆளு ஒரு கல்யாண வீட்டுக்கு போயிருந்தான். கல்யாணம் முடிஞ்சு சாப்பாடு பந்தி ஆரம்பமாச்சு. நம்ம ஆளு ஒரு ஓரமா போய் உக்கார்ந்து கிட்டான். சாப்பாடு பிரமாதமா இருந்துச்சு. இவனுக்குப் பக்கத்து இலையில் உக்கார்ந்திருந்த ஆசாமி பால் பாயசத்தை உறிஞ்சி உறிஞ்சி குடிச்சிட்டுருந்தான். அப்போ எச்சில் நம்ம ஆளு மேலே தெறிச்சிட்டுது . நம்ம ஆளு தான் ரொம்பவும் சுத்தம் பார்க்கிற ஆளாச்சே. இந்த கறுமத்தைக் காசியில் போய்த் தான் தொலைக்கணும்னு நினைச்சிகிட்டு மறுநாளே காசிக்குக் கிளம்பிப் போனான். அந்த காலத்தில் இப்போ மாதிரி பஸ், ரயில் வசதி எல்லாம் கிடையாதே. வசதி இருக்கிறவங்க வண்டி கட்டிக்கிட்டு போவாங்க. வசதி இல்லாதவங்க கால் நடையாவே போவாங்க.. போய் சேரவே பல நாள் ஆகும். பகல் முழுக்க நடப்பாங்க, இரவு நேரத்தில் ஏதாவது சத்திரத்திலோ அல்லது யார் வீட்டு திண்ணையிலோ படுத்து தூங்கி விட்டு மறுநாள் பயணத்தைத் தொடங்குவாங்க. இப்படி மத்தவங்க தங்கறதுக்கு வசதியாகவே அந்த காலத்தில் பெரிய திண்ணைகள் வைத்து வீடு கட்டினாங்க. திண்ணையில் வந்து தங்குறவங்களுக்கு சாப்பாடோ, அல்லது நீர் மோரோ அல்லது தங்கள் சக்திக்கு முடிஞ்ச ஏதோ ஒன்றை அவங்களுக்கு சாப்பிடக் கொடுப்பாங்க. நம்ம ஆளு பகல் முழுக்க நடந்து, இரவில் ஒரு வீட்டுத் திண்ணையில் வந்து சுருண்டு படுத்தான். அந்த வீட்டு ஆள் வந்து "ஐயா, உங்களைப் பார்த்தால் ரொம்ப தூரம் நடந்து களைச்சு போனவராத் தெரியுது. வாங்கையா... வந்து சாப்பாடு சாப்பிட்டுட்டு படுங்க" என்றார். நம்ம ஆளுக்கு நல்ல பசி தான். ஆனால் ஆசாரம் தடுத்தது. கடைசியில் வயிறு தான் ஜெயித்தது. நம்ம ஆளு சாப்பிட சம்மதிக்கவும், அந்த ஆளு தன்னோட மனைவியைக் கூப்பிட்டு இவனுக்கு சாப்பாடு போடச் சொன்னார். கை கால் சுத்தம் பண்ணி விட்டு சாப்பிட உட்கார்ந்த நம்ம ஆளு "அம்மா எனக்கு இலையில் சாப்பிட்டுத் தான் பழக்கம். அதனாலே இலையில் பரிமாறணும்"னு சொல்ல, கொஞ்சம் யோசித்த அந்த அம்மா "சரி",ன்னு சொல்லி ஒரு இலையைக் கொண்டு வந்து போட்டு சாப்பாடு பரிமாறினாங்க. சும்மா சொல்லக் கூடாது. சாப்பாடு அருமையா இருந்துச்சு. நம்ம ஆளு நல்லா திருப்தியா சாப்பிட்டான். சாப்பிட்டு முடிச்சு இலை எடுக்கும் போது அந்த அம்மா ஓடி வந்து "ஐயா, நான் எடுக்கிறேன்"னு சொல்லி ரொம்ப பத்திரமா எடுத்துட்டுப் போனாங்க. இதைப் பார்த்த நம்ம ஆளு "தூர வீசி எறியப் போற இலையை என்னத்துக்கு இவ்வளவு பத்திரமா எடுத்துட்டு போறீங்க"ன்னு கேட்க, அந்த அம்மா "இந்த ஊரில் வாழை இலை கிடைக்கிறது குதிரைக் கொம்பு தான். என்னோட மாமனாரும் உங்களைப் போல வாழை இலையில் சாப்பிடற ஆள். அவருக்காக ஒரே ஒரு வாழை இலை வாங்கி வச்சிருக்கோம். அவர் சாப்பிட்டதும் அதை கழுவி பத்திரமா எடுத்து வச்சிருவோம். நீங்க வந்து வாழை இலையில் தான் சாப்பிடுவேன்னு சொன்னதும் இலை இல்லைன்னு சொல்லவும் மனசு வரலே. உங்களைப் பட்டினியாப் போடவும் மனசு வரலே. அதான் என்னோட மாமனார் சாப்பிடுற இலையில் உங்களுக்குச் சாப்பாடு போட்டுட்டு இப்போ பத்திரமா எடுத்து வைக்கிறேன்"னு சொல்லவும் இவனுக்குச் சாப்பிட்ட சாப்பாடெல்லாம் தொண்டையிலே சிக்கிக் கிட்ட மாதிரி ஆகிப் போச்சு. சரி. இந்த கறுமத்தையும் காசியிலே போய் தொலைசிடுவோம்னு நினைச்சிகிட்டு படுத்துத் தூங்கினான். மறுநாள் எழுந்து நடக்க ஆரம்பித்தான். அன்றைக்கு பகலெல்லாம் நடந்து விட்டு ராத்திரி ஒரு வீட்டுத் திண்ணையில் தங்கினான். அந்த வீட்டம்மா இவனைப் பார்த்ததும் "ஐயா சாப்பாடு சூடா இருக்கு. வந்து ஒரு வாய் சாப்பிட்டுட்டு படுங்க " என்றதும் நம்ம ஆள் முன்னெச்சரிக்கையா வாழை இலை வேண்டாம்னு சொல்லிட்டு, "தினமும் புழங்காத மண் பாத்திரம் இருந்தால் அதில் சாப்பாடு போடுங்க" என்றான். அந்த அம்மா ஒரு அறைக்குள் போய் ரொம்ப நேரம் தேடித் துருவி ஒரு மண் பாத்திரத்தைக் கொண்டு வந்து அதில் இவனுக்குச் சாப்பாடு வைத்தாள். திருப்தியா சாப்பிட்ட இவன் மண் பாத்திரத்தை கிணற்றடிக்கு கொண்டு போய் கழுவ ஆரம்பித்தான். கை தவறி கீழே விழுந்து மண் பாத்திரம் உடைஞ்சு போச்சு. இதைப் பார்த்ததும்... அந்த வீட்டில் இருந்த ஒரு கிழவி, குய்யோ முறையோன்னு கத்த ஆரம்பிச்சிட்டுது . "என் புருஷன் சாகக் கிடந்த கடைசி காலத்தில் இந்த பாத்திரத்தில் தான் அவர் கை கழுவி வாய் கொப்பளிப்பார். என்னோட கடைசி காலத்துக்கு இது உதவும்னு பத்திரமா வச்சிருந்தேன். அதை இந்த பாவி இப்படிப் போட்டு உடைச்சிட்டானே"ன்னு அலறுச்சு. நம்ம ஆளுக்கு ஒரு மாதிரி ஆயிட்டுது . இருந்தாலும் இருக்கவே இருக்கு காசி. அங்கே போய் இந்த கறுமத்தையும் தொலைச்சிடுவோம்"ன்னு நினைச்சிகிட்டு படுத்தான். மறுநாள் எழுந்து நடக்க ஆரம்பிச்சான். அன்னிக்கு ராத்திரி ஒரு வீட்டுத் திண்ணையில் தங்கினான். அந்த வீட்டிலிருந்த பாட்டி இவனைச் சாப்பிடச் சொன்னாள். இவன் முன்னெச்சரிக்கையா "இலை, பாத்திரம் எதுவும் வேண்டாம். நான் கையை நீட்டறேன். நீங்க கரண்டியாலே எடுத்து போடுங்க"ன்னு சொன்னதும் அந்த பாட்டியும் அது மாதிரி செய்ய, வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு திண்ணையில் வந்து உட்கார்ந்தான். அங்கிருந்த ஒரு மாடபிறையில் வெத்திலை பாக்கு இருந்தது. பாட்டி நமக்குத் தான் வச்சிருக்கு போலிருக்கு என்று நினைச்சு இவன் பாக்கை எடுத்து வாயில் போட்டுக் கடித்தான். இவன் கடிச்சதும் பாக்கு உடைபடுற சத்தம் வீட்டு உள்ளே இருந்த பாட்டிக்கு கேட்டது. பாட்டி குடுகுடுன்னு ஓடி வந்து "என்ன"ன்னு விசாரித்தாள். "ஒன்னுமில்லே. இங்கிருந்த பாக்கை எடுத்து வாயில் போட்டு கடிச்சேன். அந்த சத்தம் தான்"ன்னு நம்ம ஆளு சொல்ல... "பரவாயில்லை. உங்க பல்லு ரொம்பவும் பலமாத் தான் இருக்கு. நானும் இந்த பாக்கை பத்து நாளா வாயிலே போட்டுக் கடிக்க முடியாமே எடுத்து வச்சிருந்தேன். நீங்க ஒரே கடியிலே கடிச்சு வச்சிங்கன்னா நீங்க பலசாலி தான்"ன்னு பாராட்டுப் பத்திரம் வாசிச்சா. நம்ம ஆளு ரொம்பவும் நொந்து போயிட்டான். "போதும்டா சாமி காசிக்குப் போன லட்சணம்"ன்னு முடிவு பண்ணிட்டு மறுநாள் தன்னோட ஊருக்கு திரும்ப ஆரம்பிச்சிட்டான். இது தான் ஆசாரம் பார்த்தவன் காசிக்குப் போன கதை...! 😂 🤣 பழமையும் புதுமையும்
  13. அதே...... சீமானும் ஈழப்பிரச்சனையை தன் அரசியலில் சேர்க்காமல் இதர கொள்கைகளை முன்னெடுத்திருந்தால் உச்சிக்கு சென்றிருப்பார். ஈழம் எனும் ஒரு சாக்கடை.
  14. படித்தவர்கள், சமூக அக்கறை உள்ளவர்கள் அரசியலுக்கு வருகின்றார்கள் இல்லை. ஒதுங்கி நிற்கின்றார்கள் என நீண்டகாலமாக எல்லோரும் குறைப்படுகின்றோம். இந்த தம்பி யாழ் மருத்துவபீடத்தில் கற்ற பட்டதாரி என ஆட்கள் கதைக்க கேட்டேன். தவிர அரச மருத்துவ அதிகாரியாக நியமனம் பெற்ற ஒருவர். இவரில் சிறிய குறைபாடுகள், அனுபவம் அற்ற தன்மை காணப்படலாம். இது யார் என்றாலும் இயல்பு தானே. அவர் தன்னை காத்து கொள்வது அவரது இருப்பை தக்கவைப்பது அவர் கெட்டித்தனம். ஆனால், உதவி கொடுப்பது நமது தார்மீக கடமை.
  15. நமது புதிய குடிவரவாளர்களும் தொடங்கி விட்டார்கள்.மார்க்கம்/ லாறன்ஸ் பகுதியில் நடை பாதையில் ஜலம் கழிக்கினம் ஜயா.சன்சிற்றி பிளாசாவிலும் வாகனங்களின் அருகில் இதே விளையாட்டு நடக்கிறது என்றும் அறிந்தேன்.நான் பொய்யாக எல்லாம் வந்து எழுத மாட்டேன்..இப்போ எல்லாம் கனடாவே வேணாம் என்ற மாதிரி ஆகிவிடுகிறது.லோறன்ஸ் பகுதி எல்லாம் பஸ்ராண்டில் நிற்பதற்கு கூட பயமாக இருக்கிறது..😏
  16. 🚶‍♀️🚶🚶🏼‍♂️🚶‍♀️🚶🚶🏼‍♂️ அப்படி சொல்லாதீங்க.... விடிய 4:30 க்கு எழுந்து,பக்கத்தில் உள்ள வயல் பகுதியில் 7 கிலோ மீற்றர் வேக நடை, நடந்து போட்டு வந்திருக்கின்றேன். 🚶🏼‍♂️🚶🚶‍♀️
  17. பொறுங்கோ..பொறுங்கோ..நம்மின விசிட்டர்ஸ்..இந்த சமருக்குத்தான் ..வெளிக்கிட்டிருக்கினம்..இப்ப ஸ்லாண்ட் குந்திலை இருந்து அட்டகாசம்....பார்க்கிலை பியரடித்து..மரத்துக்கு தண்ணி பாச்சுகினம்...ரோட்டையும்ம் கலகலப்பாய் வைச்சிருக்கினம்..நாள் இருக்கு நம்மைப் பற்றியும் சொல்ல..
  18. இலங்கை முஸ்லீம்கள்… ஈழத்தமிழர் மீது கட்டவிழ்த்து விட்ட அட்டூழியங்களை ஆவணப் படுத்தும் உங்கள் செயலுக்கு மிக்க நன்றி நன்னிச்சோழன். 🥰 👍🏽 🙏
  19. "உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / கறுப்பு ஜூலையில் ஒரு சிந்தனை" / பகுதி 01 [இது என் சிறிய சிந்தனை. இதில் பிழையும் இருக்கலாம் சரியும் இருக்கலாம். இதை சமாதான விரும்பிகளிடம், அவர்களின் கருத்துக்காக சமர்ப்பிக்கிறேன். உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் !] காந்தி, ஒரு வெளிநாட்டு அதிகாரத்துக்கு எதிராக சுதந்திரம் வேண்டி போரிட்டார் நெல்சன் மண்டேலா நிறவெறிக்கு எதிராகப் போரிட்டார் மார்ட்டின் லூதர் கிங் சமூக உரிமைக்காக போரிட்டார் இவர்களில் இருந்தும் பெண் விடுதலைக்கு எதிராக போரிட்ட பாரதியார் சாதி, மதத்திற்கு எதிராக போரிட்ட பெரியார் தமிழர்களின் சம அரசியல் உரிமைக்காக போரிட்ட தந்தை செல்வா இவர்களில் இருந்தும், மற்றும் இதனுடன் தொர்புடைய மற்றும் பலரிடம் இருந்தும், அதேவேளை வரலாற்று செய்திகளிலும் இருந்தும் உதாரணமாக சமயத்தை எடுத்துக் கொண்டால், மேல் பழைய கற்காலப் பகுதியில் [Upper Palaeolithic Revolution] தோன்றிய முதலாவது சமய அமைப்பு ஒரு வாய்வழியாக ஒவ்வொரு இனக் குழு உறுப்பினர்களிடமும் அவர்களின் புதிய தலைமுறைக்கும் பரப்பபட்டன. அதன் பின் பல காலங்கள் கடந்து, எழுத்து முறை கண்டு பிடிக்கப்ப ட்டதும் அவை முதலில் எழுத்துருவில் பதியப்பட்டன. இதனால் அவை கால, சூழ்நிலை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றம் அடையக் கூடிய நெகிழ்வுத் தன்மையை இழந்தன. பொதுவாக வாய்வழி மரபுகள் காலப்போக்கில்- அவர்களின் அறிவு அனுபவத்திற்கு ஏற்ப- விட்டுக்கொடுப்புகளுடன் விரிவுபடுத்தக் கூடியவை, ஆனால் எழுத்துருவில் பதியப்பட்டவை அப்படியல்ல. இது ஒரு துரதிருஷ்டவசமே. ஏனென்றால், வெவேறு இடங்களில் அந்த அந்த காலக், சூழ்நிலைக்கு ஏற்ப, அவர் அவர்களின் ஒரு ஊகத்தின் அடிப்படையில் ஏற்பட்ட வெவேறு சமயங்கள் தனித்துவமாக விட்டுக் கொடுப்பு செய்ய முடியாத நிலையில் அவை வெவ் வேறாகவே இருக்கவேன்டியதாயிற்று. அவைகளின் போதனைகள், சிந்தனைகள் மாறுபட்ட வையாக இருந்தன. அது மட்டும் அல்ல, தமது மத அறிவுறுத்தல்கள், சடங்குகள், நம்பிக்கைகள் தமது ஆண்டவனே தமக்கு நேரடியாக தந்தவை என திடமாக நம்பினர். ஆகவே வெவ்வேறு மதங்களுக்கிடையான சமரசம் அல்லது இணக்கம் அடைவது கடினமாகவும் அதிகமாக முடியாத ஒன்றாகவும் இருந்தது. உலகின் சமாதானத்திற்கு எதிரான போர், முதல் முதலில் அதிகமாக தமது சமயங்களை, நம்பிக்கைகளை பரப்புவதற்கான போராகவே ஆரம்பித்ததாக உள்ளது. அது இன்றுவரை பலவழிகளில் தொடர்கிறது. இன்று அது போராக இல்லாவிட்டாலும், பரப்புரை, சிலவேளை பொய்களும் கலந்து மற்றும் உதவி போன்றவற்றால் தொடர்கிறது. ஒரு உதாரணமாக, நான் பிறந்து வளர்ந்த யாழ்ப்பாணத்தை எடுத்துக் கொண்டால் ... போர்த்துக்கேயர் கைப்பற்றி ஆண்ட காலத்தில், கிராமவாசிகளை ஓர் இடத்தில் கூடச் சொல்லி,பின் கிறிஸ்தவ மதப் போதகர், உங்கள் பொய் கடவுளான சிவன் முருகன் போன்றோரை நீங்கள் நிராகரித்து எங்கள் உண்மைக் கடவுளான ஜேசுவை ஏற்றுக் கொள்ளுங்கள் என கேட்டனர். இது ஒரு வேண்டுகோள் அல்ல, இது ஒரு போர்த்துக்கேய அரசாங்கத்தின் அதிகாரம் பெற்ற ஒரு கட்டளை. - பைபிளுடன் தொடங்கு, அது வெற்றி தரவில்லை என்றால், வாளை பாவி என்பதாகும் - அபராதம் அல்லது உடல் ரீதியான தண்டனை போன்றவற்றுக்கு எதிரான பயம், அந்த கிராமவாசிகளை, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொண்டாட்ட நாட்களிலும் ஒழுங்காக கிறிஸ்தவ ஆலயங்களுக்கு போகவைத்தது. இப்படித்தான் தமிழர் மதம் மாற்றப்பட்டார்கள். விரும்பியோ அல்லது ஒருவரின் தனிப்பட்ட சம்மதத்துடனோ அல்லது இரு சமயத்தையும் ஒப்பிட்டு பார்த்தோ இது நடைபெறவில்லை. முழுக்க முழுக்க பணத்தாலும் பதவியாலும் அதிகாரத்தாலும் இது நடந்தது. இது மேலும் மேலும் பிளவையே வளர்த்தது. சமாதான வாழ்வு சுக்கு நூறாகியது சமயத்தின் அல்லது ஆண்டவனின் பெயரால்!! இன்னும் ஒரு உதாரணமாக, நான் பிறந்து வளர்ந்த இலங்கையை எடுத்துக்கொண்டால், சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப்பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப்பட்ட தமிழ் பரவர் அல்லது பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப்பிரிவு மூடப்பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப்பட்டார்கள். வீட்டிலே தமிழ் பேசினாலும் பிள்ளைகளின் பாடசாலை மொழி சிங்களம் ஆனது. பின்னர் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம் 20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்பது வரலாறு ஆகும். எனவே தமிழர்கள் நாளடைவில் ஒருமைப்படுத்தல் (Assimilation) மூலம் சிங்களவர்களாக மாறினார்கள். அதாவது தமிழர் என்ற ஒரு இனமே அங்கு சாக்கடிக்கப் பட்டது. இவர்கள் இனமாற்றம் செய்வதற்கு தமிழர் என்ற அடையாளத்தை மெல்ல மெல்ல மத மாற்றத்தால் இழந்ததும், மற்றும் தமிழர் பெருவாரியாக உள்ள நிலத்தை விட்டு அகன்றதும் ஒரு முக்கிய இலகுவான காரணமாக அமைகிறது ? இந்த இனப்படுகொலைக்கு காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்! பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!! அவர் கத்தோலிக்க பள்ளிக் கூடங்களில் கற்கை மொழியாக இருந்த தமிழ் மொழியை அகற்றி விட்டு சிங்களத்தை புகுத்தினார். இதன் விளைவாக தமிழ்க் கத்தோலிக்கர்கள் சிங்களக் கத்தோலிக்கர்களாக மாற்றம் அடைந்தனர். [This historic process was embraced by the educational policies of a local Bishop Edmund Peiris who was instrumental in changing the medium of education from Tamil to Sinhalese] ஆகவே சமயத்தை, சாதியை, நிறத்தை, இனத்தை, பொருளாதாரம் / வசதி அல்லது ஆண் பெண் வேற்றுமைகள் கடந்தால் தான் சமாதானம் கிடைக்க வழிவரும் என்று நம்புகிறேன். அதேவேளை எம் குழந்தை / இளைஞர் பாட திட்டம் கட்டாயம் இவைகளை கடந்ததாக உதாரணங்கள் மூலம் கற்பிக்க வேண்டும். ஒரு உதாரணமாக, நான் பிறந்து வளர்ந்த இலங்கையை எடுத்துக் கொண்டால், இன்னும் புராணக் கதையான, உண்மைக்கு புறம்பான மகாவம்சத்தின் அடிப்படையிலேயே இலங்கை வரலாற்றை போதிக்கிறார்கள். அது தான் இன்னும் இலங்கையில் உள்நாட்டு சமாதானம் ஏற்படாததற்கு ஒரே ஒரு காரணமாகும். எனவே, நாம் இன்று அறிவியலில் மிக மிக முன்னேறி இருந்தாலும் சமாதானம் ஒரு கேள்வி குறியாகவே உள்ளது. எனவே பொருள்முதல்வாத வளர்ச்சி [materialistic development] மனிதனுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தாலும், சமாதானம் அதனால் வந்துவிடும் என்று சொல்லமுடியாது. அதற்க்கு கலாச்சார ஞானம் / அறிவு உள்ளத்தில் முழுமையாக வரவேண்டும். இங்கு தான் எம் பண்டைய அனுபவங்கள் மற்றும் இலக்கியங்கள் துணை நிற்கின்றன என்று நம்புகிறேன்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] தொடரும் பகுதி : 02
  20. "குடும்பம் ஒரு கோயில்" "கோவில் கூடாது என்று சொல்லவில்லை. கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிட கூடாது" - பராசக்தி உண்மையில் கலைஞர் மு கருணாநிதியின் இந்த வசனம் அன்று எனக்கு விளங்கவில்லை. நான் அதை பெரிதுபடுத்தவில்லை. எதோ சந்தையில் வாங்கும் தலையணையில் கவர்ச்சியாக எழுதி இருக்கும் ஒரு வசனம் போல் அதை எடுத்துக்கொண்டேன். வீடு என்பது நான் இரவில் உறங்கும் இடமாக, வீட்டு புறா மாதிரி, தினம் திரும்பும் ஒரு வசிப்பிடமாக கருதினேன். வீடு என்பது கட்டாயம் ஒரு குடும்பத்தின் அடையாளம் என்று கூட கருதலாம். ஆமாம் நான் பாதுகாப்பாக, குடும்ப வலைக்குள் அகப்பட்டவனாக, அதே நேரம் பொதுவாக மகிழ்வாக, அன்பு விளையும் ஆலயமாக உணர்ந்தேன். ஆமாம் ’ஆ’ என்றால் ஆன்மா.’லயம்’ என்றால் வயப்படுதல் அல்லது ஒன்றுபடுதல். எனவே ஆலயம் என்றால் உயிர்கள் ஒன்றுபடும் இடமே! அதுவே வீடும் குடும்பமும்!! கோவில் என்பது கோ + இல், இங்கே கோ என்பது அரசனையும், இல் என்பது இல்லம் அல்லது வீடு என்பதையும் குறிக்கும். நானும் அங்கு அரசனாக, இளவரசனாக, இரண்டு தங்கைகளுடன் மகிழ்வாக இருந்தேன். ஆனால் 2023 தொடக்கத்தில் இருந்து இலங்கையில், அசாதாரணமான முறையில் வரி அதிகரிக்கப்பட்டமை, மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டமை, சம்பளம் மற்றும் ஓய்வூதியம் குறைக்கப்படுகின்றமை உள்ளிட்ட பல காரணங்களால், அடிக்கடி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தன. 2021 ஆம் ஆண்டில், வெளிநாட்டுக் கடன், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 101% ஆக உயர்ந்தது. இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் 2022 ஆண்டில் இருந்து இலங்கைப் போராட்டங்களுக்கு வழிவகுத்தன என்பது வரலாறு. ஆனால் இது எப்படி சிறு வியாபாரம் செய்துவந்த எம் குடும்பத்தையும் பாதிக்கிறது என்பதை இன்று தான் உணர்ந்தேன். 2023 மார்ச் தொடக்கத்தில் ஒரு நாள் இரவு, நான் வீட்டில் உறங்கிக்கொண்டு இருக்கும் பொழுது. திடீரென நான் ஏதோ அம்மா அப்பா அறையில் இருந்து கேட்டேன். இதுவரை நான் அப்படி ஒரு சம்பவத்தை கண்டதோ கேட்டதோ இல்லை. என் அம்மா, அப்பாவிடம், 'இப்படியே போனால் நான் வீட்டை விட்டு, குடும்பத்தை விட்டு எங்கேயாவது போய் தொலையப் போகிறேன்' என கடும் தொனியில் மிரட்டுவது, அதட்டி பேசுவது கேட்டது. நான் எப்படி அந்தநேரம் அதை உணர்ந்தேன் என்பதை என்னால் விளக்குவது கடினம். மகிழ்வு, சோகம் என்ற ஒரு இலகு சொல்லால் விளக்குவதை விட உணர்வுகள் மிகவும் சிக்கலானவை என்பதை இப்ப நான் அறிகிறேன். எத்தனை சொற்களும் இதற்கு போதாது. என்றாலும் நான் சோர்ந்தேன், பயம் கொண்டேன், அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன் என்று சுருக்கமாக என்னால் கூறமுடிகிறது. இது முழு உணர்வுகளையும் வெளிப்படுத்தாவிட்டாலும் ஓரளவு என் நிலைமையைப் புரிய வைத்திருக்கும். நானும் என் தங்கைகளும் தனிமையில் கை விட்டது போல ஒரு உணர்வு. என் இதயம் வெடித்தது, என்றாலும் நான் என் குமுறலை வெளியில் காட்டவில்லை. அன்பு, பாசம் நிலவிய எம் குடும்பம் என்ற கோவிலில் என்ன நடந்தது? நான் எனக்குள் கத்தி அழுதேன். எம் குடும்பம் என்ற வீட்டின் ஒவ்வொரு சுவரும் இடிந்து விழுவது போல உணர்ந்தேன். நேரம் இப்ப இரவு பத்துமணி இருக்கும். என் தங்கைகள் உறங்கிக் கொண்டு இருந்தார்கள். அவர்களின் அறைக்குள் இருந்து எப்படியோ அந்த சண்டை கொல்லைப்புறத்துக்கும் போய்விட்டது. அக்கம் பக்கத்தாரின் காதில் விழுந்திடுமோ என்ற பயம் எனக்கு மறுபக்கம். ஒருவரை யொருவர் கத்துகிறார்கள், அதை கேட்கும் பொழுது நானும் என் தங்கைகளும் மிகவும் வேதனைப்பட்டு வெட்கப்படும் அளவுக்கு இருந்தது. எனக்கு சரியாக தெரியவில்லை, எப்படி கல்யாணம் செய்து, இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு பின், அவர்களுக்கு இடையில் இந்த தகராறு வெடித்தது என்று ? என்றாலும் எவ்வளவு மோசமானது என்பதை மட்டும் உணர்ந்தேன். அதேநேரம் இது சில உண்மைகளை, இதுவரை தெரியாத செய்திகளை, எமக்கு சொன்னது. 'கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது' என்றதின் அர்த்தமும் ஓரளவு புரியத் தொடங்கியது! அம்மா, அப்பா எம்மை பெற்றதால், நாம் எப்பவும் அவர்களை உயர்வாகவே கருதுகிறோம். அவர்களும் எம் மேல் பாசம் பொழிகிறார்கள். ஆனால் அவர்களிலும் சிலவேளை கொடிய குணங்கள், செயல்கள் இருக்கும் என்பதை மறந்து விடுகிறோம். எமது குடும்பம் ஒரு ஆலயமாக வெளியே பிரகாசித்துக் கொண்டு இருந்தாலும், உண்மையில் அது கொடியவர்களின் கூடாரம் என்பதை உணர்ந்தேன். என் தங்கைகள் இருவரும் தமது அறையில் இருந்து ஓடிவந்து என்னை கட்டிப்பிடித்து அழுதார்கள். இதை பார்த்த, அப்பா , ஒன்றும் இல்லை , நாம் ஓகே என்று அம்மாவும் அப்பாவும் ஒருவருக்கு ஒருவர் மன்னிப்பு கேட்டபடி தம் அறைக்கு போய்விட்டார்கள். ஆனால் அவர்கள் மூட்டிய தீ இன்னும் என் மனதில் எரிந்து கொண்டே இருந்தது. அது அணையவில்லை? என் அம்மா கல்யாணம் செய்து சில ஆண்டுகளின் பின், வீட்டின் தேவைகள் அதிகரித்ததால், என் அப்பா ஏற்கனவே வேலை பார்த்து வந்த பல்பொருள் அங்காடியில் வேலைக்கு சேர்ந்தார். அவர் மிகவும் அழகாக, எல்லோருடனும் அன்பாக பேசக்கூடியவராக இருந்ததால், முதலாளிக்கு அவரை நன்றாக பிடித்துவிட்டது. காலம் கொஞ்சம் போக, முதலாளி என் அம்மாவை தனது நேரடி உதவியாளராக பதவி உயர்வு கொடுத்தார். இது அவர்கள் இருவரும் தனிய பல நேரம் சந்திக்கும், கதைக்கும் சந்தர்ப்பங்களை கொடுத்தது. முதலாளி ஏற்கனவே திருமணம் செய்து இருந்தாலும், அவர் மெல்ல மெல்ல அம்மாவுடன் நெருக்கமாக பழக தொடங்கினார். அம்மா, தான் பிள்ளைகளின் தாய் என்று முதலில் மறுத்தாலும், சூழ்நிலை சிலவேளை சாதகமாகவும் அமைந்து விட்டது. ஆனால், அம்மா எல்லாவற்றையும் ஒளிவுமறைவு இன்றி அப்பாவிடம் கூறுவார். அப்படி ஒரு கட்டத்தில் தான், முதலாளியின் ஆசைக்கு இணங்குவது போல நடித்து, அதை களவாக வீடியோ எடுக்க திட்டம் போட்டனர். அவர்களின் நோக்கம் அதை வைத்து முதலாளியிடம் இருந்து பெருந்தொகை பணம் கறப்பதாக இருந்தது. அப்படி கடைசியில் ஏமாற்றி பெற்றது தான் இப்ப அப்பா முதலாளியாக இருக்கும் கடை. அந்த முதலாளியும் தனது கடையை இழந்த சோகத்தில் தன்னை மாய்த்துக் கொண்டார். இப்ப இலங்கை பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த நிலையில், வியாபாரம் மந்தமாக போக, அந்த பாவம் தான் தம்மை வாட்டிவதைக்குது என்று, ஒருவரை ஒருவர் பழியை போட தொடங்கியதே இந்த தகராறு என ஒருவாறு ஊகித்துக் கொண்டேன். எனினும் அதை நான் தங்கைகளுக்கோ அல்லது வெளியேயோ காட்டவில்லை. அந்த கொடியதை நினைக்க நினைக்க ஆத்திரமாக வந்தது. இதுவும் ஒரு வாழ்வா ?, அதில் நானும் ஒரு உறுப்பினரா ?? எனக்கு இப்ப அந்த முதலாளியின் குடும்பம் எங்கே, எப்படி என அறிய ஆவலாக இருந்தது. நான் வங்கி உதவி முகாமையாளராக, பல்கலைக்கழக படிப்பு முடித்து சென்ற ஆண்டு முடிவில் பதவி ஏற்றதால், விசாரிப்பது இலகுவாக இருந்தது. முதலாளியின் மனைவியும் அவரது இரு பெண் பிள்ளைகளும் மிகவும் கஷ்டத்துடன் வாழ்வதாக அறிந்தேன். எம் குடும்பம் மீண்டும் ஒரு கோவிலாக வேண்டும் என்றால், கட்டாயம் அவர்களுக்கு நல்ல வாழ்வு அமைக்க வேண்டும் என்ற எண்ணமே என்னிடம் ஓங்கியது. அதேநேரம் அம்மா அப்பாவின் தகராறையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அப்ப தான், ஏன் நான் அவர்களின் ஒரு மகளைக் கல்யாணம் கட்டக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது. அது அம்மா அப்பாவுக்கும் ஒரு ஆறுதலை கொடுக்கலாம்? 'புண்ணியம் பாவம் இரண்டும் பூமியிலே, சொர்க்கம் நரகம் கற்பனை மட்டுமே' என்று நம்புபவன் நான். 'தவறு அறிந்து சரியாய் செய், விளைவு இருக்கு புரிந்து செய்' என்பதை அம்மா அப்பா இனியாவது புரிந்து கொள்ளட்டும்! "மனம் நற்குணங்களுடன் கூடும் பொழுது மதிக்கப் படுகிறான் போற்றப் படுகிறான் மகிழ்ச்சியுடன் சுகம், இன்பம் பிறக்கிறது மனிதா இதுதான் உண்மையில் புண்ணியம்!" "குடும்பம் ஒரு கோவில் என்றால் அன்பே அதில் தெய்வம் ஆகும் கருணை ஒளி கண்கள் வீசினால் மங்கலம் என்றும் நின்று ஜொலிக்கும்!" அதனால் தான் நான் அந்த முடிவு எடுத்தேன். இன்று மார்ச் 15, 2023, அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக இலங்கை முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவை உத்தரவுகளை மீறி இன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். அதில் நானும் ஒருவன். அந்த நேரத்தில் ஒரு சில மணித்தியாலத்தை, அம்மா அப்பாவின் பாவத்தை கழுவ, அந்த முதலாளியின் குடும்பத்தை சந்திக்க, பெண் கேட்க இப்ப போய்க்கொண்டு இருக்கிறேன். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  21. உங்கள் கருத்திற்கு நன்றி, உங்கள் கதையினை குறுக்கிட மனதளவில் சங்கடமாகவே உணர்ந்தேன், பின்னர் ஒரு நகைசுவையாக அடுத்த தரப்பு எவ்வாறு சிந்திக்கலாம் என்பதாக எழுதியிருந்தேன்,பொதுவாக சில காலமாக கதைகள் வாசிப்பதில்லை ஆனால் உங்கள் கட்கை கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதாக உணர்கிறேன் அதனால் வாசிப்பதுண்டு. பரவலாக உங்கள் கதை யாழில் நல்ல வரவேற்பை பெறுகிறது தொடர்ந்து எழுந்துங்கள் அத்துடன் வித்தியாசமான முயற்சிகளையும் செய்யுங்கள்.
  22. "நியூயோர்க் ஸ்ரைலில்" சாரம் கட்டும் முறை. 😂 🤣
  23. ❤️......... இந்தப் படம் மிகவும் அருமை, அண்ணா. 'விருமாண்டி' படத்தில் வரும் 'உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணுமில்ல..........' என்ற பாடலின் ஒளிப்பதிவு பற்றி கமல் ஒரு தடவை சொல்லியிருந்தார். அதே போலவே இதுவும் இருக்கின்றது.
  24. மலிபன் பிஸ்கெட்டுகளின் ரசிகன் நான். இப்போதும் இங்குள்ள தமிழ்க்கடைக்குப் போனால்... இரண்டு பக்கற் பிஸ்கெட்டாவது வாங்கிக் கொண்டு வருவேன். அதன் வரலாறை அறியத் தந்த ஈழப்பிரியனுக்கு நன்றி. 🙂
  25. சொந்தக் கதைகளை எழுதினால் நான் பிறகு காசிக்குத்தான் போக வேணும்........! 😂
  26. வைக்கோவின் அரசியல் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக போய்க் கொண்டிருக்கிறது. அண்மையில் வந்த செய்தியில் இவர்கள் கட்சியிலிருந்து வேறுவேறு கட்சிகளுக்கு இவருக்கு மிகவும் நெருக்கமானவர்களே தாவிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு மிகவும் பிடித்த மனிதர். புலிகளின் தடையை காங்கிரசால்த் தான் ஏதாவது செய்யலாம் என்று சொல்கிறார்கள்.
  27. அப்படி இரண்டையும் நான் ஒப்பிட்டது தவறாக இருக்கலாம், விசுகு ஐயா. எனக்கு தோன்றியதை ஒரு அவசரத்தில் அலசி ஆராயாமல் எழுதி விட்டேனோ என்று இப்பொழுது தோன்றுகின்றது. பொதுவாகவே தமிழ்நாட்டில் காசு வாங்கி வாக்குப் போடும் எவரும் சொல்லும் ஒன்று: எங்களின் பணத்தை தானே அவர்கள் எங்களுக்கு கொடுக்கின்றார்கள் என்று. இதைப் பின் தொடர்ந்து வரும் எந்தப் பாதிப்பை பற்றியும் பலரும் அங்கு நினைத்துப் பார்ப்பதில்லை. இங்கும், அமெரிக்காவில், வரி வேண்டாம் என்பவர்கள் சொல்வதும் அதுவே: எங்களின் உழைப்பு எங்களுக்கு மட்டுமே, என் வீட்டிற்கு மட்டுமே என்று. அந்த வகையில் தான் இரண்டையும் ஒப்பிட முயற்சித்தேன். அமெரிக்காவில் இது வெறும் பேச்சு மட்டுமே. இப்படியான ஒன்று இங்கு வரவே முடியாது. மத்திய அரசின் முதுகெலும்பே மக்கள் கொடுக்கும் வரிப்பணம் தான்.
  28. வாக்களிக்கும் வயதை அடைந்த பின் நான் இலங்கையில் வாக்களித்த போது, இவருக்கு மட்டுமே (கொழும்பில்) வாக்களித்து இருந்தேன். அதன் பின் எந்த சிங்கள தலைவர்களுக்கும் நான் வாக்களித்தது கிடையாது. மஹிந்த காலத்தில் மரண அச்சுறுத்தலை எதிர்கொண்டதுடன் தாக்குதலுக்கும் உள்ளானார். இறுதி வரைக்கும் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர். ஆனாலும், அதே தமிழ் மக்களால் புறக்கணிப்பட்டவரும் ஆவார். ஆழ்ந்த இரங்கல்கள்.
  29. வீட்டில் வளர்க்கும் நாய்தான் காலைக் கடிக்கும்..... ஏனென்றால் அதுக்கு பூனை எலியைத் திரத்திப் பிடிக்குமளவு கூட வேட்டை தெரியாது....... ஆனால் காட்டில் வாழும் மிருகங்கள் நேரே தொண்டையைத்தான் கவ்விப்பிடிக்கும்...... அந்த நல்ல காசு விழுந்த வங்கிக் கணக்கைக் கூட பார்க்கிறதுக்கு ஆள் இருக்க வேணுமே.......! ( பரவாயில்லை என்ர மனிசி பிள்ளைகள்தானே அனுபவிக்கப்போகுதுகள் என்று சொல்லலாம், அது வீண் பேச்சு.......வெறும் சால்ஜாப்பு......! )
  30. சன்டிகட்டை இறக்கி கொடுக்கு கட்டிவிட்டு நரியிடம் கடி வாங்க வேண்டியதுதான் .......! 😂
  31. எனக்கும் இப்படித்தான் ஆகிப்போச்சு பிரியன்.......இப்பதான் இந்தக் கதையைப் பார்த்து விட்டு இங்கு பதிய கொண்டு வந்தால் நேற்று சிறியர் பதிந்து இருக்கிறார்.......! 😂
  32. இன்று அதிகாலை மணி 5.56 க்கு வாட்ஸ் அப்பில் வந்தது 😄 தனிய போய் நரி துரத்தினால் என்ன செய்வியள்? 😂
  33. புறோ! மண்ணெண்ணை வாசனை வீசும் சீத்தைதுணியின் மகத்துவம் எல்லோருக்கும் தெரிவதில்லை
  34. ஆஹா ஒரு சரத்தைக் கட்டி என் மானத்தை காப்பாற்றிப் போட்டீர்கள் ரசோதரன்.....! நான் எப்பவும் வீட்டில் சரம்தான்......இங்கும் ஒரு கடையில் மூன்று சாரம் 10 ஈரோ வுக்கு தருவார்கள்......! பிறந்தநாளில் இருந்து நினைவில் தெரிந்ததும்,நினைவில் நிற்பதும் சரம்தான்.......! 7 / 8 வயதில் சீசன்களுக்கு இலந்தைப்பழம், நாவல் பழம் எல்லாம் சன்டிக்கட்டுக்குள்தான் அள்ளித் போட்டுக்கொண்டு வீட்டுக்கு வாறது ....... சரமெல்லாம் கையர் பிடித்து விடும்....... பின் வீட்டில் அடியும் உதையும் இனாமாக வாங்குவது......! ம்.......அது ஒரு கனாக்காலம்........!
  35. கத்தரிக்காய் வெங்காயம் கூட இந்தக் கத்தி வெட்டுதில்லை என்று என் மனைவி ஆதங்கப்பட, இப்போதுதான் நன்றாகத் தீட்டிக் கூராக்கிக் கொடுத்தேன்.😳
  36. போனனான்...ஆனால்...நாசாவிலை வேலை கிடைக்கவில்லை.. சாரு இந்தப் படம் உண்மையா.. எனக்கு இப்படி பெட் போட்டு தனிய படுக்க விருப்பம் ..அதுவும் சரத்தை கட்டி காலை விரிச்சுக்கொண்டு ..சரத்தின் மேல்கட்டையும் தளர்த்திப் போட்டுபடுத்தால்...காற்றூ... சிலுசிலென்று பாய ஏசி பிச்சை வாங்கவேணும்..
  37. சிறியர் இன்னும் தூக்கம் போல.
  38. இது இந்திய தூதுவர் டிக்சித் சொன்னதாகவே எண்ணியிருந்தேன்.
  39. தமிழ்கலவனில் படித்த கலாம் இஸ்ரோவுக்கு தலைவரானார். தமிழ்கலவனில் படித்த ஈழப்பிரியன் நாசாவின் தலைவர். இதுகளை வெளியில சொன்னதில்லை.கேட்டதால் சொன்னேன். உங்க வீட்டுக்காரர் போனால் விமானப்படை போனமாதிரி எல்லோரும் ஒரே நிறத்தில் பார்க்க நன்றாகத் தான் இருக்கும்.
  40. அவர் உள்ளுக்கு ஜட்டி போடவில்லை போலுள்ளது. 😂 அதுதான்… சூரிய ஒளியில், பளிச்சென்று தெரிந்திருக்கு. 🤣
  41. படுகொலை விரிப்புகள் புத்தகம்: தமிழினப் படுகொலைகள் 1956-2008 பக்கம்: - மொழிபெயர்ப்பு: நன்னிச் சோழன் நூல் வெளியீட்டு ஆண்டு: 2005 ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை, 12 ஆகஸ்ட் 1990 படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I 11.08.1990 அன்று இராணுவத்தினர் செங்கலடி, கிரான் போன்ற கிராமங்களைச் சுற்றிவளைத்து மக்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். இராணுவத்தினரின் துப்பாக்கி பிரயோகத்தினால் காயமடைந்தவர்களில் பத்துப் பேரிற்கும் மேற்பட்டவர்கள் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்கள். 12.08.1990 அன்று இரவு 11.00 மணிக்கும் 12.00 மணிக்கும் இடையில் இராணுவத்தினரும் முசுலிம் குழுக்களும் இணைந்து வைத்தியசாலையிற் சிகிச்சைபெற்று பொதுமக்கள் பத்துப் வைத்தியசாலையினுள் வைத்தே வெட்டியும் சுட்டும் படுகொலை செய்தார்கள். ஏறாவூர் வந்த பேரையும் *****
  42. இந்த இடத்தில்த் தான் எனக்கு மிகுந்த எரிச்சலை ஊட்டும். புதிய உடுப்பு எதுவானாலும் ஒருதடவை தண்ணீரில் போட்டெடுத்தாலே மனதுக்கு இதமாக இருக்கும். நாங்க பாடசாலை போகும்போது யூனிபோம் பிரச்சனை இருக்கவில்லை. இன்றுவரை அதன் தாக்கம் தெரியாது. இந்தப் பாட்டோடு சரத்தோடு வீதிக்கே இறங்கிவிட்டீர்களோ?
  43. என்னைப் பொறுத்தவரைக்கும் நான் உடுக்கும் உடுப்புகளிலேயே சொர்க்க உடுப்பு எண்டால் சாரம் தான்.....அதிலை உள்ள சுகம் வேறை எதிலையும் இல்லை.குளிர்ந்தால் இழுத்து போர்த்துக்கொண்டு படுக்க......வெய்யிலுக்கு சண்டிக்கட்டு கட்டிக்கொண்டு திரிய.....😄 all in one உடுப்பு
  44. சாரத்தை பற்றிய வர்ணனை அருமை ரசோதரன். எனக்கும் சாரம்தான் பிடித்த உடை. வீட்டில் நிற்கும் போது அதனைத்தான் அணிவேன். ஆனால் வீட்டிற்கு ஆட்கள் வரும் போது அதனுடன் நிற்க எனக்கு விருப்பம் இருந்தாலும், வீட்டுக்காரி நொய்… நொய்… என்று நச்சரித்து காற்சட்டைக்கு மாற வைத்து விடுவா. 😁
  45. நீங்கள் இதன் அடுத்த பகுதியை இன்னமும் எழுதவில்லையே என்று சில தடவைகள் நினைத்திருக்கின்றேன்...... நீங்கள் தான் அலைகளுக்குள்ளும் இறங்க வேண்டும்...........🙏.
  46. இங்கு கொடுக்க்கப்படும் சில வாக்குறுதிகள் திட்டவட்டமானவை. அவற்றை மீறமுடியாது. வருமான வரி குறைப்பு என்பது ஒரு திட்டவட்டமான வாக்குறுதி. அதுதுடன் இங்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஒரு சுழற்சி முறையில் வேறு தேர்தல்களும் வந்து கொண்டேயிருக்கும். அவையும் மிக முக்கியமானவையே, ஆதலால் சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி விட்டு ஓடித் தப்ப முடியாது. சில வாக்குறுதிகள் திட்டவட்டமானவை அல்ல. உதாரணம்: ரஷ்யா - உக்ரேன் சண்டையில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என்ற வாக்குறுதி. வெளியேற முடியா விட்டால், வேறு விதமாக உருட்டுவார்கள். வேறு வழிகளில் அரசாங்கம் பணத்தை மக்களிடமிருந்து அறவிடுவதற்கு திருத்தங்களும், வாக்களிப்பும் நடக்க வேண்டும். பல மாநிலங்கள் எதிர்க்கும். ஆனால் சமூக நலத் திட்டங்களை, ஆராய்ச்சிகளை, உதவிகளை மத்திய அரசு குறைக்கலாம். அதைத் தான் செய்வார்கள்.
  47. அமெரிக்க கடற்கரைகளில் அளவுக்கதிகமான கழிவறைகள் கட்டியுள்ளனர். நான் ஒருதடவை வீதியில் சிறுநீர் கழித்ததற்கு 50 டாலர்கள் தண்டமாக கட்டியுள்ளேன்.
  48. முதலில் அவர்களுக்கு நான் இந்தியன் / பாகிஸ்தான் முஸ்லீம் இல்லை என்பதை தெளிவாக விளங்கப் படுத்தி சொல்லி விடுங்கோ... ஏனென்றால், ஒரு கலவரம் வந்து அடி விழும் போது, முதல் அடி அவர்களுக்குத்தான் விழும். ஏனென்றால்... அந்தளவுக்கு ஊத்தை வேலை பார்த்து வைத்திருக்கின்றார்கள். ஸ்ரீலங்கனுக்குத்தான் கடைசி அடி என்பதால்.. அதற்கிடையில் நாங்கள் சுதாகரித்துக் கொள்ளலாம். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.