Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    88827
    Posts
  2. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    15827
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3127
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46979
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/29/24 in Posts

  1. முதலில் எண்ணத்துக்கு சண்டை தொடங்கியது ? இரண்டாவ்து அப்படி தமிழர் சிங்களவர்கள் சண்டை தொடங்கியதால் யாருக்கு லாபம் ? கடைசியில் புலி கள் மீது தடை போட்டு லாபம் அடைந்தவர்கள் யார் ? மேல் உள்ள கேள்விகளுக்கு பதிலை ஆராயுங்கள் நீங்கள் கேட்ட கேள்விக்கு விடை வரும் . மேலும் சிங்களவருக்கு உள்ள உரிமையுடன் பூர்வீக குடிகளான தமிழர்கள் நாங்களும் வாழனும் என்று கேட்டது தப்பா ? அதெல்லாம் கிடையாது அடிமை போல் இருங்கள் என்று கூறியது யார் ? முதலில் சிங்களவர்களுக்கு நல்ல படிப்பை கொடுங்க அந்த தீவு திருந்தும் எங்களுக்கு வகுப்பெடுத்து ஒன்றும் நடக்காது . நேற்று சனிக்கிழமை பிரைவேட் ஜெட் ல் கனடாவில் இருந்து வந்து லண்டனில் சாமத்திய வீடு கொண்டாடி விட்டு பின்னேரமே அவர்களின் உறவினர் கூட்டம் அதே பிரைவேட் நான்கு விமானம்களில் பறக்கின்றனர் புலம்பெயர் என்கோ போயிட்டினம் . சிங்களம் இன்னும் பாண் விலை இறங்குமா என்று பார்த்து கொண்டு இருக்கினம் . ஆரம்பத்தில் எங்களை சம உரிமையுடன் நிம்மதியா இருக்க விடுங்க என்றுதானே கேட்டோம் ? இன்னிக்கு பாணுக்கும் பணிசுக்கும் அடி பட வேண்டி யாரல் வந்தது எல்லாம் உங்கடை மோட்டு சிங்கள அரசியல்வாதிகளால் வந்தது அதை சிங்களம் உணராது காரணம் எங்களில் உள்ள கோடரி காம்புகள் அவங்களை உசுபேத்தி கொண்டு இருப்பினம் .
  2. ஆதித்தாயின் மொழி --------------------------------- 'ஆதித்தாய்' என்றொரு சிறுகதையை ஈழத்து எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் சில வருடங்களின் முன்னர் எழுதியிருக்கின்றார். எனக்கு மிகவும் பிடித்த ஈழத்து எழுத்தாளர் முத்துலிங்கம் அவர்கள். செங்கை ஆழியானையும் மிகவும் பிடிக்கும். இன்னும் சிலரையும் பிடிக்கும். முத்துலிங்கம் ஒரு எழுத்தாளர் என்பதை விட, அவரை ஒரு கதை சொல்லி என்றே சொல்லவேண்டும். அவருடைய பல கதைகளை வாசிக்கும் போது, இந்தக் கதை எங்கள் வீட்டில், அக்கம்பக்கத்தில், ஊரில், உலகத்தில் நடந்த, எங்களுக்கு முன்னரேயே தெரிந்த நிகழ்வுகளாகவே தெரியும். ஆனாலும் அவர் அதை சொல்லும் விதமும், அதை முடித்து வைக்கும் விதமும் ஒவ்வொரு தடவையும் அலுக்காத ஒன்று. விளையாடி விட்டு, அடுத்த போட்டியிற்காக காத்துக் கொண்டு, அப்பொழுது நடந்து கொண்டிருக்கும் போட்டியொன்றை பார்த்துக் கொண்டிருந்த போது, தோளில் பினபக்கமாக மெதுவாக யாரோ தட்டினார்கள். திரும்பிப் பார்த்தேன். அவருக்கே உரிய மிக அகலமான சிரிப்புடன் அந்த மனிதர் நின்று கொண்டிருந்தார். போன வாரம் இதே இடத்தில், கிட்டத்தட்ட இதே நேரத்தில் அவரை, ஒரு முறை, சந்தித்திருந்தேன். போன தடவை பேரனைக் கூட்டி வந்திருந்தார். இந்த தடவை பேத்தியை சிறு வண்டில் ஒன்றில் தள்ளி வந்திருந்தார். பேத்திக்கு மூன்று வயது இருக்கும். பேரனுக்கு ஐந்து வயது. தான் அடுத்த மாதம் பள்ளிக்கூடம் போகப் போகின்றேன் என்று அந்தப் பேரன் ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் போன வாரம் சொல்லியிருந்தார். மகள் வீட்டில் வந்து நிற்பதாகச் சொன்னார். அவருக்கு ஒரு மகனும் இருப்பதாகச் சொன்னார். மகன் பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்வதாகச் சொன்னார். இதையெல்லாம் போன வாரமே சொல்லியிருந்தார். நான் ஶ்ரீ லங்கா என்றவுடன் அதை ஒரு உலக அதிசயம் போலவும் கேட்டுக் கொண்டார். காலையில் என்ன சாப்பிட்டீர்கள் என்று இந்த வாரம் ஆரம்பித்தார். இல்லை, ஒன்றும் இல்லை, ஏழு மணிக்கே இங்கே வந்து விட்டேன் என்றேன். தொடர்ந்து மேலே சொல் என்பது போல பார்த்துக் கொண்டே நின்றார். மத்தியானம் எக்கச்சக்கமான சோறும், மீன் குழம்பும் சாப்பிடுவேன் என்றேன். அவர் முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது. மகளும், மருமகனும் வேலைக்கு போக, வீட்டுக்குள்ளேயே பெரும்பாலும் இருந்து விடுகின்றார் போல. அவர் ஒரு முன்பின் பழக்கமேயில்லாத அந்நியன் மேல் காட்டும் இந்தப் பிரியத்திற்கு வேறு எதுவும் காரணமாக இருக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் மீன் சாப்பிடுவீர்களா என்று கேட்டேன். அவர் ஒரு நாயுடு என்றார். நாயுடு என்றால் எல்லாமே சாப்பிடுவார்களாம். சந்திரபாபு நாயுடுவும் ஒரு நாயுடுவா என்று கேட்டேன். ஆமாம் என்றார், என் டி ராமராவ் கூட ஒரு கம்மா, நல்லாவே சாப்பிடுவார் என்றார். சினிமா, அரசியல், கிரிக்கேட், இந்த மூன்றும் எங்கும் செல்லும். சினிமாவை ஆரம்பித்தேன். 'சாகர சங்கமம்' பார்த்திருக்கின்றீர்களா என்றேன். கமல் தான் மிகவும் பிடித்த நடிகர் என்றார். 'சுவாதி முத்யம்' கூட பார்த்திருப்பதாகச் சொன்னார். இந்தப் படமெல்லாம் எனக்கு எப்படி தெரியும் என்று அவரின் கண் புருவங்களை உயர்த்தினார். ரஜனி படங்கள் என்று இழுத்தேன். சும்மா பார்ப்பேன் என்றார். சிரஞ்சீவி படங்களும் அவருக்கு பிடிக்குமாம். ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா எங்குமே மக்கள் வாழ முடியாது என்றார். ஒரே போட்டி, எங்கும் பொறாமை, மனிதர்கள் அங்கே ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு ஓடிக் கொண்டே இருக்கின்றார்கள் என்றார். இங்கு நாங்கள் எல்லோரும் போட்டி பொறாமைகள் இல்லாமல் வாழ்கின்றோம் என்றார். இந்தியாவிற்கு விடுமுறையில் போய் வரும் சில அமெரிக்கர்கள் இந்தியர்கள் திருப்தியாக வாழ்கின்றார்கள் என்று சொல்வதும், இவர் சொல்வதும் ஒன்றே தான். ஆனால் இரண்டுமே உண்மைகள் அல்ல என்று நிரந்தரமாக ஒரு இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும். அடுத்தது எங்கள் போட்டி. சரி, அடுத்த வாரம் நாங்கள் சந்திப்போம் என்று சொல்லி விட்டு களத்திற்குள் போனேன். அவரும் கை அசைத்து விட்டு, வண்டிலைத் தள்ளிக் கொண்டு கிளம்பினார். நீங்கள் இருவரும் என்ன கதைத்தீர்கள், இங்கு ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவேயில்லை என்றனர் அங்கு நின்றவர்கள். அவருக்கு தமிழோ, ஆங்கிலமோ தெரியாது. எனக்குத் தெலுங்கு தெரியாது. ஆனாலும் இருவரும் முழுதாக உரையாடினோம். அது என்ன மொழியில் என்று எனக்கும் தெரியவில்லை. ஆதித்தாய் ஒருவர் இருந்ததாகவும், அவரின் மரபணுவே எங்கள் எல்லோரிலும் இருப்பதாகவும் சொல்கின்றனர். அதையொட்டியே முத்துலிங்கம் அவர்களின் சிறுகதையும் இருக்கும். மரபணு மட்டும் இல்லை, ஆதித்தாய்க்கு ஒரு மொழி கூட இருந்து இருக்க வேண்டும், அந்த மொழியும் இன்றும் எங்கள் எல்லோரின் உள்ளேயும் இருக்கின்றதும் போல.
  3. நீங்களும் சாதாரண சிங்களவர்கள் சிந்திப்பது போலவே தேவையற்ற பயங்களை உருவாக்கி வைத்து உள்ளீர்கள் தடை நீங்கினால் உடனே திரும்பவும் ஆள் சேர்த்து சண்டை சிங்கள ஆமியுடன் நடக்கும் என்பதெல்லாம் தேவயற்ற பயம் இனி சண்டை என்பதே இருக்காது . அதே நேரம் இந்த தடையை காட்டி முக்கியமாய் சிங்களவர்களுக்கு ஆதரவு போல் நடித்து பல நாடுகள் இலங்கையின் வளம்களை சிங்களவர் தமிழர் கண்ணுக்கு முன்னே கொள்ளை அடிக்கிறார்கள் பல வளம்கள் சுரண்டபடுகிறது முக்கியமாய் இந்திய அரசின் சுரண்டல் கள் எல்லாவற்றையும் விட மோசமானது உலகத்தில் காலாவதியாகிய மருந்துகளின் பயன்பாடு தெரிந்தே இறக்குமதி செய்கிறார்கள் இன்னும்நிறைய சொல்லலாம் . முதலில் இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்கள் நிம்மதியான வாழ்வையும் சிங்களவருக்கு நிகரான உரிமைகளுடன் வாழ விடுங்க பார்ப்பம் அதன் பின் யாரும் பிரிவினை என்பது நினைத்தும் பார்க்க மாட்டார்கள் இதுதான் உண்மையான விடயம் அப்படி சிங்களவரும் தமிழரும் ஒற்றுமையாக வாழ வெளிகிட்டால் பக்கத்தில் இருக்கும் இந்திய பரதேசி கூட்டத்துக்கு நித்திரை போயிடும் .
  4. அது 1935 ஆண்டு , தென்மாகாணத்தில் இருந்து பிழைப்புக்கும் , உழைப்புக்குமாக கொழும்பு நோக்கி வருகிறான் ஒரு இளைஞன் பல்வேறுப்பட்ட சிரமம் , அலைச்சல் , தேடல் , தியாகம் அனைத்தையும் அனுபவித்தான் அந்த இளைஞன் . பல வகையான மனிதர்கள், பல்வேறு போராட்டங்கள் அனைத்தையும் கடந்து கொழும்பில் உள்ள முதலாம் குறுக்கு தெருவில் தேநீர் கடை ஒன்றை நிறுவுகிறான். அந்த இளைஞனின்முழுப்பெயர் பெயர் அங்கல்காஹ கமகே ஹினி அப்புமுஹாமி என்பதாகும் . கடினமான உழைப்பு , ஓய்வில்லாத முயற்சி , தூக்கமில்லாத வேலை , இப்படியே ஓட்டுகிறான் தேநீர் கடையை. . சொற்ப வருடத்திலேயே அந்த இளைஞனின் கடினமான முயற்சிகளுக்கு பலன் கிட்டியது , விரைவிலேயே தேநீர் கடை , ஒரு ஹோட்டலாக மாற்றம் பெற்றது . கொழும்பின் மலிபன் தெருவிலே அந்த ஹோட்டல் திறக்கப்பட்டதால் , அந்த ஹோட்டலுக்கும் மலிபன் ஹோட்டல் என்ற பெயரையே சூட்டினார் திருவாளர் அப்புஹாமி அவர்கள் . அவரது உதவி ஒத்தாசைக்கென்ன தங்களின் சகோதரர்களான A.G.விக்ரமபால மற்றும் A.G.ஜினதாச ஆகியோரையும் இணைத்து கொண்டார் . கூட்டு முயற்சியாலும் , கடின உழைப்பாலும் அவரின் வர்த்தகம் வேகமாக வளர்ந்ததோடு , அது பல கிளைகளையும் பரப்பியது . மலிபன் ஹோட்டலுக்கு மக்களின் அபிமானமும் , வரவேற்பும் பல மடங்கு பெருகுகிறது. அதை அப்படியே தக்கவைத்துக்கொண்ட அப்புஹாமி அவர்கள் அடுத்த கட்ட முயற்சிகளை சிந்தித்து , செயலாற்ற தொடங்குகிறார் . அந்த முயற்சியிலே குதிக்கிறார் . அந்த சிந்தனையும் முயற்சியும் , அப்புஹாமி அவர்களை கொழும்பு கொட்டாஞ்சேனையில் , ஒரு பேக்கரி தொடங்கி , வியாபாரத்தை விரிவுபடுத்த வைக்கிறது . . பேக்கரியும் தொடங்கியாயிற்று , அங்கே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த தரம் மற்றும் சுவை கொண்ட தயாரிப்புகளின் மதிப்பும் அதிகரிக்கிறது . இதனால் , ஹோட்டலுக்கு போலவே , பேக்கரிக்கும் மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பும் , நற்பெயரும் கிடைக்கிறது . அப்புஹாமி வழங்கிய நல்ல வியாபாரமே , வாடிக்கையாளர்களிடம் இருந்து அவருக்கு நல்ல மதிப்பை கொடுத்தது . வியாபாரத்தின் தாரக மந்திரம் வாடிக்கையாளர்கள் என்றால் , அந்த வாடிக்கையாளர்களுக்கு நாம் கொடுப்பதும் சிறப்பானதாய் இருக்க வேண்டும். அப்படி சிறப்பானதை கொடுத்தால் தான் , வாடிக்கையாளர்களையும் நாம் தக்க வைக்க முடியும். இதனை செவ்வனவே செய்தார் அப்புஹாமி , விளைவு நல்ல வாடிக்கையாளர்கள் தக்க வைக்கப்பட்டனர் , அந்த வாடிக்கையாளர்கள் தக்க வைக்கப்பட்டதால் , இவரின் வர்த்தக பெயரும் மக்கள் மனதில் பதிந்தது . வாடிக்கையாளர்களும் உள்ளனர் , நல்ல பெயரும் இருக்கிறது , இது ஒரு வரமல்லவா ? இப்போது அடுத்த கட்டத்தை பற்றி யோசித்தார் அப்புஹாமி . ஒரு இயந்திரமயமாக்கல் மூலமான உணவு உற்பத்தி செயல்முறையை ஆரம்பிக்க முடிவெடுக்கிறார் . அந்த முடிவே , 1954 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் , நாட்டின் முதலாவது இயந்திரம் மூலம் தயாரிக்கப்பட்ட பிஸ்கட் உற்பத்தியை இலங்கை தீவுக்கு அறிமுகம் செய்கிறது . அப்புஹாமி முதல் வியாபாரம் பழகிய இடத்தின் பெயரையே , தனது பிஸ்கட் நிறுவனத்திற்கும் வைக்கிறார் - அதுவே மலிபன் என்பதாகும் . 1935 ம் ஆண்டு தொடக்கம் 1954 ம் ஆண்டு வரையான , வெறும் 19 ஆண்டுக்குள் ஒரு இமாலாய சாதனையே இதுவாகும் . இன்று மலிபன் நிறுவனமானது பிஸ்கட் துறையில் மட்டுமல்ல , பால்மா வியாபாரத்திலும் தனக்கென தனியிடம் பிடித்துள்ளது . சிறிய ஆரம்பமே பெரிய அடைவுகள் என்பதற்கு அப்புஹாமி மெலிபன் வீதியில் ஆரம்பம் செய்த மெலிபன் ஹோட்டலும் , இன்றைய அந்த நிறுவனத்தின் வளர்ச்சியும் சிறந்த எடுத்துக்காட்டு . முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை என்பதற்கு அப்புஹாமி நல்லதொரு உதாரணம் . அது போல , கம்பீரமாய் வளர்ந்து நிற்கும் மலிபன் நிறுவனம் ஒரு சான்று . படித்ததில் பிடித்தது Copied from : Hafy Abdeen https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0N4hCg53DXZ5xmsoZEyYozSLAkkSA2kGzrfZ88qJNtoxGfS8DDadftdLBUu8h856Cl&id=100068724064386&mibextid=cr9u03
  5. ஒருவரும் சேர்க்கவில்லை. 😂 போற இடம் எல்லாம் கட்சிகளை பிளந்து கொண்டு இருந்தால், யார்தான் பக்கத்தில் வைத்திருப்பார்கள். 🤣
  6. ஐரோப்பாவில இப்ப பரவலாய் கத்திக்குத்துகள் நடக்குது... போற போக்க பார்த்தால் இனி வெங்காயம் வெட்டுற சின்ன கத்தி வாங்கிறதெண்டாலும் லைசன்ஸ் வரும் போல கிடக்கு 🤪
  7. பதில் வரும் ஆனா வராது 😀 முதலில் யாழில் எதிராளிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தாங்கள் விரும்பிய வண்ணம் திரியை கொண்டு கொண்டு போவதில் பேராண்டி வல்லவர் இவரை போல் ஒரு சிலர் இருக்கினம் நாங்களும் இவர்களை போல் எழுத வெளிக்கிட்டால்திரிக்குள் வைரஸ் பாய்ந்ததுபோல் இருக்கும் .
  8. 1980க்குப் பின் புத்தகங்கள் வாசிப்பது முற்றாக நின்றுவிட்டது என்றே சொல்லலாம்.வேறுவேறு சோலிகள் பின்பு வேலை. யாழுக்குள் வந்த பின்னரே சிறிது வாசிக்கத் தொடங்கினேன். அதிவும் மேலே இருந்து கீழேவரை இழுத்து எந்தளவுக்கு இருக்கிறது என்று பார்ப்பது. சிறிய கதைகள் கட்டுரையாக இருந்தால் வாசிப்பது. உங்கள் கதைகள் கட்டுரைகள் ஒரு அளவோடு இருப்பதால் பொறுமையாக வாசிக்கலாம். பொறுமையை தோதித்துப் போடாதேங்கோ. இதே வேளை எனது தகப்பனார் எனக்கு விபரம் தெரிந்தது முதல் கல்கி கலைமகள் வாங்கி வாசித்து சேர்த்து கதைகள் முடிய புத்தகமாக கட்டிகட்டி வைத்திருந்தார். அந்தநேரம் புத்தகம் கட்டியபின் வாசிப்பேன். அப்பா காலமாக ஒவ்வொருவராக வந்து வாசித்துவிட்டு தருகிறேன் என்று கொண்டு போனவர்கள் போனது தான். மிகுதி இருந்தவைகளை 95 இல் இடப்பெயர்வின் போது ராணுவம் துடைத்தெடுத்துவிட்டது.
  9. ஆண்டவனை [சமயத்தை] கொஞ்சம் மறவுங்கள், மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் சிந்தியுங்கள்! / FORGET GOD [RELIGION] FOR THE TIME BEING; AND THINK HUMAN [HUMANITY] FROM TODAY!” பகுதி / Part : 01 நாம் தவழ தொடங்கும் போதே, ஆண்டவனைப் பற்றிய கருத்து, அல்லது சமயம், அல்லது அதனுடன் சேர்ந்த சமய சம்பந்தமான சந்தேகமான நடைமுறைகள் எல்லாம் எமக்கு அல்லது எம்மில் பலருக்கு, எம்மை சூழ்ந்து இருப்பவர்களால் திணிக்கப் படுகின்றன. நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும், ஆண்டவனும் நாத்திகமும், சாதியும் சமத்துவமும், போன்ற அனைத்துமே ஒன்றாக பிறந்த இரட்டை எதிரிகள் ஆகும். இதில் எது ஒன்றாயினும் தலை காட்டும் போது, மற்றது அதை எதிர்க்க தலை காட்டும். எல்லோருக்கும் நன்றாகத் தெரியும், கேள்விகளுடன் தான், அறிவு வளர்ச்சி அடையும் என்று. "பறவையைக் கண்டான் விமானம் படைத்தான், பாயும் மீன்களில் படகினைக் கண்டான், எதிரொலி கேட்டான் வானொலி படை த்தான் .... மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்.... பொய் நீதியும் நேர்மையும் பேசுவான், தினம் ஜாதியும் பேதமும் கூறுவான், அது வேதன் விதி என்றோதுவான், மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்..." இப்படி இன்றைய நூற்றாண்டு கவிஞன் கூறினான். ஆமாம், என்னை அடிக்கடி தொந்தரவு செய்வது அல்லது அதிகமாக எனது ஆவலைக் கிளறுவது அவர்களின் நம்பிக்கையை கேள்வி கேட்கும் போது ஏன் இந்த மத பக்திமார்கள் அதை அவமதிப்பாக கருதுகிறார்கள் என்பதே! எமது தமிழ் சித்தர்கள் இதைத் தான் செய்தார்கள். உண்மை அல்லது நிஜ நிலை அடைய முயன்றவர்களே இந்த சித்தர்கள் ஆவார். சாதி, சமய சடங்குகளை கடந்து; சமுகத்தில் பயனுடையவை எவை, என்பதைப் பிரித்தறிந்து அவற்றுள் புதுமைகளைப் புகுத்துகின்ற அறிஞர்களாகவும், சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, சாதி சமய மன மாச்சரியங்களை [பகைமைகளை] மாற்றக் கருதிய சீர்த்திருத்த வாதிகளாகவும் இவர்கள் வாழ்ந்தார்கள். இவர்கள் இந்த மத பக்தியாளர்களை வெளிப்படையாக கேள்வி கேட்டு எதிர்த்தார்கள். கடவுளைத் தேடி எங்கும் அலைய வேண்டாம். 'உன்னுள்ளும் இருப்பான் என்னுள்ளும் இருப்பான், உருவம் இல்லா உண்மை அவன். இதை உணர்ந்தார் இங்கே உலவுவதில்லை' என்று உறுதியாகக் கூறினான். இன்னும் ஒரு சித்தர் 'சாஸ்திரங்களை எரித்தவனே' சித்தர் என்கிறார். இந்த எல்லா சாஸ்திரங்களும், வேதங்களும், புராணங்களும் மற்றும் பல்வேறு மத தரப்பினரும் மனித இனத்தை ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட மிருகம் போல் மாற்றுகிறார்கள். பொதுவாக, அதிகமான சமயம் மனிதனை சிந்திக்க விடாமல் கட்டுப் படுத்துகிறது. பல தெய்வ வழிபாடு நம்பிக்கைகள் இருந்த ஒரு காலத்தில், அதை எதிர்த்து அடுக்கடுக்காய் வினாக்கள் கொடுத்த சித்தர் சிவவாக்கியர் ஆகும். பிராமணர்களின் அர்த்தமற்ற சடங்குகளை எதிர்த்து குரல் கொடுத்தவர். 'வேதம் ஓதுபவர்கள் திருவடி ஞானம் அடைந்ததுண்டோ? பெறவில்லையெனின் பாலில் நெய் இருப்பது பொய்யாகிப் போகுமே. கோயில் ஏது? குளம் ஏது? கண்ட இடமெல்லாம் குழம்பி திரியும் மூடர்காள்!' என்று சிவவாக்கியர் உரத்துப் பேசும் போது நாத்திகத்தின் குரலாகவே அவரது பாடல்கள் ஒலிக்கிறது. எம்முள்ளேயே அவன் குடிகொள்ளும் பொழுது, ஏன் நாம் புனித நீராட வேண்டும்? ஆலயம் போகவேண்டும்? புனித மலை எற வேண்டும்? இப்படி பல முக்கிய கேள்விகளை வினவுகிறார். கடவுளின் பெயரால் சிலை உருவங்கள் செய்து வைத்து வணங்குவதும், அவைகளுக்குத் தினசரி பூசைகள், நைவேத்தியங்கள், திருவிழாக்கள் செய்வதும் என்று தொன்று தொட்டு நடந்து வரும் வழமைகளை மூடப் பழக்கங்கள் என்று இவர் சாடுகிறார். ஒரு பவுல் [Baul] பங்காள மொழி நாட்டுப் புற பாடல் 'எல்லாம் வல்லவனை எப்படி நீ அடைவாய்? போகும் வழி யெல்லாம் ஆலயம், போகும் வழியெல்லாம் மசூதி, போகும் வழியெல்லாம் குருக்கள், எல்லா பாதையும் மூடி விட் டனவே?? [the road to the Absolute is blocked by temples, mosques and the teachers '] என்கிறது. மற்றும் ஒரு பவுல் பாடல்: "இவ்வுலகில் உன் மதம் என்ன? ஒவ்வொருவனும் லாலனை கேட் டனர். லாலன் சொன்னான்: 'எப்படி மதம் இருக்கும்? நான் அதன் மேல் கண் வைக்கவில்லை. சிலர் கழுத்தை சுற்றி பூ மாலை அணிகிறார்கள், சிலர் தஸ்பீஹ் [tasbis] என்ற பிரார்த்தனை மணிகள் வைத்திருக்கிறார்கள் .எனவே மக்கள் சொல்கிறார்கள் இவர்கள் வேறு வேறு மதத்தினர் என, ஆனால் நான் கேட் கிறேன் , நீங்கள் பிறக்கும் போதும் உங்கள் மதத்தின் சின்னம் அணிந்த பிறந்தீர்களா? இல்லை சாகும் போது தானும் அதை அணிந்து போகிறீர்களா ? ' [Everyone asks: "Lalan, what's your religion in this world?"Lalan answers: "How does religion look?",I've never laid eyes on it.Some wear malas [Hindu rosaries] around their necks,some tasbis [Muslim rosaries], and so people say they've got different religions.But do you bear the sign of your religion when you come or when you go? "] என்று சித்தர்கள் மாதிரி வினாவுகிறது. சித்தர்கள் எந்த சமயத்துடனும் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை. மேலும் அவர்களின் சில சித்தாந்தங்கள் சங்க காலத்திலேயே ஆரம்பிக்கப் பட்டதாக கருதப்படுகிறது [கி மு 700 to கி பி 300], எனினும் அவை ஏழாம் நூற்றாண்டு முதல் பதினோராம் நூற்றாண்டுவரை வளர்ச்சி அடைந்து பண்ணிரெண்டாம் ஆண்டில் முழுமையடைந்ததாக கருதப் படுகிறது. “நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ! நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்” என்று சிவவாக்கியர் நேரடியாக கேட் கிறார். அந்த மந்திரத்தால் என்ன பயன் என்று யோசித்துப் பார்த்தீர்களா? அட மூடர்களே, கடவுள் என்பவர் தனியாக வெளியில் இல்லை, உள்ளத்திலே இருக்கிறான். அப்படி இருக்கையில் நட்ட கல்லைச் சுற்றி வந்தால் அது பேசுமோ? அடுப்பில் வைத்துச் சுடப்பட்ட சட்டியும் அதனுள்ளே இருக்கும் அகப்பையும் அதில் சமைக்கும் உணவின் ருசியை அறியாதது போலவே நீர் செய்யும் புற வழிபாட்டினால் இறைவன் வெளித்தோன்ற மாட்டார். இறைவனை உள்ளத்தால் மட்டுமே காண இயலும். அவனை கல்லில் காண முடியும் என்று சொல்லுவது வெறும் பிதற்றலே என்று அந்த காலத்தில் சாடுவதென்றால், அவர்களின் கண் மூடித் தனமான பழக்க வழக்கங்களைப் ஆட்டிப் பார்ப்பதென்றால், எவ்வளவு துணிவு இவர்களுக்கு இருந்து இருக்க வேண்டும்? அதே போல,"மாரி தான் சிலரை வரைந்து பெய்யுமோ? காற்றுஞ் சிலரை நீக்கி வீசுமோ? மானிலஞ் சுமக்க மாட்டேனென்னுமோ? கதிரோன் சிலரைக் காயே னென்னுமோ? ...... குலமு மொன்றே குடியுமொன்றே, இறப்புமொன்றே பிறப்பு மொன்றே" என பிற் கால கபிலர் [கபிலர் அகவல்] கேட்கிறார். ஆண்டவனோ அல்லது சமயமோ , எதற்க்காக இவ்வுலகில் ஏற்படுத்தப் பட்டதோ அதை இன்று அவை வழங்க வில்லை. ஒவ்வொரு சமயத்தினதும் முக்கிய கடமை எப்படி ஒருவரை ஒருவர் அன்பு செலுத்துவது என்பதை போதித்து, அதன் மூலம் எம்மை, எமக்கும் உண்மைக்கும் அருகில் கொண்டுவருவதே ஆகும். "உன்னை அறிந்தால் ... நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்... தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா "ஆனால் , இன்று இதற்கு எதிர் மாறே நடைபெறுகிறது. சமயம் எம்மை ஒன்று சேர்க்கவில்லை, எம்மை பிரிக்கிறது. சமயத்திற்கு சமயம் மட்டும் அல்ல, அவை தமக்குள்ளும் பிரிந்து நிற்கின்றன. சமயம் பழைமை நெறிவாதத்தையும் சகிப்பு தன்மையின்மையையும் எமக்கு கொண்டுவந்து இன்று மிகப் பெரிய பிரச்சனை கொடுக்கிறது. இதனால், மத வெறியர்களை உண்டாக்கி , எமது சுதந்திரத்தை ஆண்டவனின் பெயரால் நாசம் பண்ணுகிறது. ஆகவே, எமது நோக்கத்தை நாம் சரிப்படுத்த வேண்டும், வாழ்க்கை வழியை சரிப்படுத்த வேண்டும், சமயங்கள் தொடக்கத்தில் எதை விரும்பியனவோ அப்படி மீண்டும் வார்த் தெடுக்க வேண்டும். எல்லா சமயங்களும் மனிதாபிமானத்தையே அறிவுறுத்தின. ஆகவே அதை அப்படியே பின்பற்றலாமே? அமைதி எமக்குள்ளே தான் உண்டு. அதே போல அன்பும் எமக்குள்ளே தான் உண்டு. ஏன் ஆண்டவனும் எமக்குள்ளே தான் உண்டு. எனவே கடவுளே அன்பு, அன்பே கடவுள், இதை அறிந்தால், எமக்கு அது உள் அமைதி தரும். ஒரு குழந்தை பிறக்கும் போது அதற்கு அன்பு மட்டுமே தெரியும் , மிச்சதெல்லாம் நாம் கற்பித்ததே. வெறுப்பு, பொறாமை, பேராசை, ஏன் பயங்கரவாதம் கூட நாம் சொல்லிக் கொடுத்ததே. என்னத்தை விதைத்தாயோ அதையே நீ அறுவடை செய்கிறாய். அப்படியென்றால் நீ ஏன் அன்பை விதைக்கக் கூடாது? அன்பை விதைத்தால் அதை விட பெருவாரியான அன்பை அறுவடை செய்யலாமே. அன்பு பலத்தினால் திணிக்க முடியாதது. ஆனால் சமயம் அப்படி அல்ல. இதை நாம் அறிய வேண்டும். ஆகவே நாம் மனித நேயம் தழுவி புது வாழ்க்கை வழியை அமைப்போம்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி:02 தொடரும் Most, if not all of us are force fed the concept of god, religion, and the suspect practices that come with the package from the time we can walk.One must understand that Faith and disbelief, God and atheism, caste and equality are twin born foes[opponents]. When one is born, the other rises to challenge it. As every one knows,Knowledge progresses with questioning.What annoys and probably intrigues me is why all these so called believers take offence when their beliefs are questioned.Our so called Tamil siddhars too did the same thing,They challenged these so called believers with questions.A Siddha is a free thinker and a revolutionary who refuses to allow himself to be carried away by any religion or scripture or rituals. One Tamil Siddhas says: "A Siddha is one who has burnt the sastras". All the sastras, Vedas, Puranas, and the various religious sects turn humanity into conditioned animals.Karai Siddhar draws a distinction between a Siddha and a non-Siddha by saying that a Siddha points to the path of the experience whereas a non-Siddha points to the path of scriptures.While poly-theism was an unquestioned canon of their time siddhars dared to speak of “One Indivisible God”. Siddhars like Siva Vakkiyaar have directly attacked the empty and meaningless rituals practised by the brahmins of their time.He raises a pertinent question: why should we go out to the sacred rivers, temples, mountains, etc.,when the threshold is in us.According to Sivavakkiyar a Siddha does not worship any deity in the temple. As a Baul sings: "the road to the Absolute is blocked by temples, mosques and the teachers and another Baul songs says :"Everyone asks: "Lalan, what's your religion in this world?"Lalan answers: "How does religion look?",I've never laid eyes on it.Some wear malas [Hindu rosaries] around their necks,some tasbis [Muslim rosaries], and so people say they've got different religions.But do you bear the sign of your religion when you come or when you go? " .The Tamil Siddhas do not belong to any religion or samayam. "Samayam" in Tamil means "convention", "rule".Some of their ideologies are considered to have originated during the First Sangam period [700BC to 300AD],And formulating over a five hundred year period,between the 7th and the 11th centuries,but fully flowering only after the 12th century.siddhars[சித்தர்],Who lived outside the pale of society, asked blunt questions: ‘What is this mantra you mumble within your mouth going round and round a planted stone,offering it flowers? Can a planted stone talk when the Lord is within you? Can the pot and the spoon feel the taste of food cooked in them?”-Sivavakkiyar [“நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறி யுமோ! நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கை யில்..”--சிவவாக்கிய சித்தர்.].“Will the rains fall only for a few and exclude others? Will the winds discriminate against a few? Will the earth refuse to bear the weight of a few? And the sun refuse to shine on some?”["மாரி தான் சிலரை வரைந்துபெய்யுமோ?காற்றுஞ்சிலரை நீக்கிவீசுமோ?மானிலஞ்சுமக்க மாட்டே னென்னுமோ?கதிரோன்சிலரைக் காயே னென்னுமோ? ......குலமுமொன்றே குடியுமொன்றே,இறப்புமொன்றே பிறப்புமொன்றே"] asked a latter-day Kapilar in a famous " Akaval" poem [கபிலர் அகவல்] It is a fact,God or Religions today no longer serve the purpose for which they came into existence. The very basic theme of each religion was to teach, how to love each other and bring us closer to ourselves and to truth. Today the opposite is happening, Religions are not uniting but dividing us. Forget the differences from religion to religion, each now has so many divisions. The biggest problem Religions are bringing in is Fundamentalism and in-tolerance, giving birth to Fanatics, who are ready to destroy our freedom, just in the name of religion.It is about time, to rectify our vision, rectify our way of life, and mould them to what the various religions originally desired. Humanity is the religion which all religions preach, so why not follow it as such .Peace is within us, Love is within us, God is within us. That means, God is Love, Love is God, and the understanding of this truth gives us that internal Peace.When a child is born, the only thing he/she knows is love. The rest we teach, hatred, jealousy, greed, even terrorism.As we sow, so shall we reap, this is the age-old saying, So why not sow seeds of Love and reap tons of Love !Love is not something which can be given by force, but Religions as they stand today are given by force, by parents to children. Anything given by force can never have fruitful results and can turn us into completely different people, and take us miles away from truth and Humanity.So let’s embrace Humanity and begin a new way of life! [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] Part:02 Will follow
  10. மகாராஜா Review: விஜய் சேதுபதி வியாபித்த களத்தில் கிட்டிய அனுபவம் எப்படி? சலூன் கடை ஒன்றில் வேலை பார்க்கும் மகாராஜாவின் (விஜய் சேதுபதி) மனைவி விபத்தில் இறந்துவிடுகிறார். மகள் ஜோதி (சச்சனா) ஸ்போர்ட்ஸ் கேம்புக்காக வெளியூர் சென்றுவிட, தனிமையில் இருக்கிறார் மகாராஜா. வேலை முடித்து வீட்டுக்கு வந்த தன்னை தாக்கிவிட்டு, வீட்டிலிருந்து லக்‌ஷ்மியை சிலர் திருடிச் சென்றுவிட்டதாகவும், அதனை மீட்டு கொடுக்குமாறும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். தொடக்கத்தில் இந்தப் புகாரை உதாசினப்படுத்தும் காவல் துறை, ரூ.7 லட்சம் வரை காசு கொடுப்பதாக மகாராஜா சொன்னதும், லக்‌ஷ்மியை தேடிக் கண்டுபிடிக்கும் விசாரணையை தீவிரப்படுத்துகின்றனர். உண்மையில் யார் இந்த லக்‌ஷ்மி? மகராஜாவின் நோக்கம் என்ன? அவருக்கான பின்புல கதை என்ன? - இதுதான் படத்தின் திரைக்கதை. ‘குரங்கு பொம்மை’ படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நிதிலன் சாமிநாதன் இயக்கியிருக்கும் இப்படம் ஒரு முடிச்சை தனக்கத்தே வைத்துக்கொண்டு நகர்ந்து கொண்டேயிருக்கிறது. இடைவேளைக்கு முன்பு வரை அந்த முடிச்சு என்ன என்ற கேள்வியும், ஆர்வத்தையும் பார்வையாளர்களிடையே தக்க வைத்து நகரும் திரைக்கதை எங்கேஜிங்காகவே கடக்கிறது. கிட்டத்தட்ட ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பட வசனம் போல ‘ரீபீட்’ வசனத்தை கொண்டு மெல்லிய நகைச்சுவை உதவியுடன் பெரிய அளவில் எங்கும் அயற்சி கொடுக்காமல் நகர்த்தியிருப்பது பலம். ‘நான் லீனியர்’ பாணியில் காட்சிகளை முன்னுக்குப் பின்னாக களைத்துப் போட்டு விளையாடியிருக்கிறார் இயக்குநர். அந்த விளையாட்டு தொடர்ந்து கவனிக்க வைக்கிறது. அதுவும் இடைவேளைக்குப் பிறகு படம் முடிச்சை அவிழ்க்கும் இடத்தை நோக்கி நகர்வதும், இறுதி 20 நிமிடமும் சுவாரஸ்யம். கவித்துமான ஃப்ரேம் ஒன்றும் ரசிகர்களின் கைதட்டலை பெறுகிறது. அடுத்து என்ன என்ற பார்வையாளர்களின் ஆர்வத்தை இறுதிவரை எடுத்து வந்து சென்சிட்டிவான களத்துக்குள் நுழைந்திருப்பதும், எங்கேஜிங்கான நகர்த்தலும் ஓகே. ஆனால், சென்சிட்டிவான கன்டென்ட்டிலும், அறத்திலும் படம் தடுமாறுகிறது. காவல் துறையினரின் தாக்குதலை காமெடியாக சித்திரித்திருப்பது, முக்கியமான பிரச்சினையை வெறும் பழிவாங்கும் கதையாக சுருக்கியிருப்பது, பாதிக்கப்பட்டவரை கொடூரமாக காட்சிப்படுத்தியிருப்பது, பெண்களுக்கெதிரான குற்றத்தை பேசும் படத்தில் அழுத்தமான பெண் கதாபாத்திரமில்லை என்பது முரண். அத்துடன் படம் முன்வைக்கும் தீர்வும் கூட முழுமை பெறவில்லை. முதல் குற்றவாளியை விஜய் சேதுபதி எப்படி கண்டறிந்தார்? ஏன் அனுராக் காஷ்யப் கொல்லாமல் விட்டார்? - இப்படி லாஜிக்காக கேள்விகளும் எழாமலில்லை. மிகையுணர்ச்சிகளை களைந்து, சோகத்தை சுமந்த முகத்துடன் சாமானிய சலூன் கடைக்காரரின் உணர்வுகளை அழுத்தமாக பதிய வைக்கிறார் விஜய் சேதுபதி. ஆக்‌ஷன் காட்சிகளிலும், ஆக்ரோஷத்தில் கத்தும் இடங்களிலும் கவனிக்க வைக்கிறார். 50 படங்களைக் கடந்த நடிப்பின் முதிர்ச்சி திரையில் தெரிகிறது. அனுராக் காஷ்யப் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தினாலும், கதாபாத்திரத்துடன் அவரை கனெக்ட் செய்ய முடியவில்லை. கூடுதலாக லிப் சிங்கிங் அப்பட்டமாக காட்டிக் கொடுக்கிறது. நட்டி நட்ராஜ் காவல் துறை அதிகாரியாக அதகளம் செய்கிறார். தன்னுடைய கதாபாத்திரம் கோரும் நடிப்புக்கு சிங்கம் புலி நியாயம் சேர்க்கிறார். அபிராமி, வினோத் சாகர், பாய்ஸ் மணிகண்டன், முனீஷ்காந்த் தேவையான பங்களிப்பை செலுத்துகின்றனர். ஜோதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சச்சனா கவனம் பெறுகிறார். மம்தா மோகன்தாஸ், பாரதிராஜா கதாபாத்திரங்கள் ஏன் என புரியவில்லை. தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு கவனம் ஈர்க்கிறது. காட்சிகள் கோரும் உணர்வுக்கு அஜனீஷ் லோக்நாத் பின்னணி இசை பாதி தீனியிடுகிறது. படத்தின் முக்கியமான பலம் ஃபிலோமின் ராஜ். படத்தை நீட்டி இழுக்காமல் கச்சிதமாகவும், நான் லீனியர் முறையில் காட்சிகளை குழப்பாமல் அடுக்கியும் முறைபடுத்தியதற்கு பாராட்டுகள். மொத்தமாக, ஓர் ஆர்வத்தை தூண்டி இறுதி வரை இழுத்துச் செல்லும் திரைக்கதைதான் ‘மகாராஜா’. ஆனால், பொறுப்புடனும், ஆர்வத்தை தவிர்த்த ஆழத்துடனும் எடுத்துக்கொண்ட பிரச்சினையை பேசியிருக்கிறதா என்றால், அது கேள்வியே! மகாராஜா Review: விஜய் சேதுபதி வியாபித்த களத்தில் கிட்டிய அனுபவம் எப்படி? | Vijay Sethupathi starrer maharaja movie review - hindutamil.in
  11. 👍........... சிங்கள மொழி ஒரு செப்பனிடப்பட்ட மொழி. நல்ல அழகான ஓசை, தமிழ் போலவே, அங்கேயும் இருக்கின்றது. வன்மம் வெல்ல, மொழியும் மனிதனும் தோற்றன இலங்கையில். பாண் அருமையான சாப்பாடு. ஆனால் தினமும் எதையும் சாப்பிட முடியாது, அதுவும் சகிக்க முடியாத கூட்டுடன்.......😃. அவர்கள் பாண்கள் தயாரிப்பதில் கைதேர்ந்தவர்கள். வட பகுதியில் அவர்கள் பல பேக்கரிகளில் ஆரம்பத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒரு நல்ல சிறுகதையும் இருக்கின்றது. அந்தக் கதையில் அப்படியான ஒருவர் காணாமல் போகின்றார்.............
  12. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
  13. 🤣............. தற்போதைய கள நிலவரப்படி 27ம் இடத்திற்கு தான் கடும் போட்டி போல.........ஒரு 150 நாடுகளுக்கு மேல அந்த இடத்தில் கூட்டமாக நிற்கினம்......
  14. எண்ணிக்கையில், விகிதத்தில் மிகவும் குறைந்து விட்டோம், விசுகு ஐயா. ஒன்றாக நின்றாலும் முதல் இரண்டு இடங்களிற்குள் எங்களின் வேட்பாளர் வர முடியும் என்று தோன்றவில்லை. மலையக மக்களும், இஸ்லாமியர்களும், நாங்களும் நாடு முழுவதும் ஒன்றாகச் சேர்ந்தால்................ இதை விட பூமி வெடித்து, விண்கல் விழுந்து, இப்படி உலகமே அழிந்து விடுவதற்கு சாத்தியம் கூட..........
  15. எப்படித் திரண்டாலும் தமிழர் ஒருவர் சிறிலங்காவின் ஜனாதிபதியாக வர முடியாது. ஆனால் தமிழர்கள் இதனை தங்களின் சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பாகப் பயன்படுத்தலாம். அதற்கு தமிழரசுக்கட்சியும் தமித்தேசிய முண்ணனியும் பொது வேட்பாளரரை ஆதரிக்க வேண்டும். இங்கே சிக்கல் என்ன டவென்றால் பொது வேட்பாளரை நிநறுத்துவதற்கு ஒப்பந்தம் போட்டிருக்கும் கட்சிகளும் அரசியல் விமர்சகர்களும் இந்திய நலனை முன்னிறுத்துபவர்கள். அவர்கள்13 மேல் எதனையும் கேட்க மாட்டார்கள். அவர்கள் உண்மையிலேயே வெளித்தூண்டல்கள் இன்றி பொது வேட்பாளரை நிறுத்தினால் வரவேற்கலாம். சுமத்திரன் பொது வேட்பாளரைப் புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்து விட்டார். மாவையும் சிறிதரனும் வழமை போல் மதில மேல் பூனையாக இருக்கிறார்கள். கஜேந்திரகுமார் சுகவீனம் காரணமாக நடப்பு அரசியலில் நேரடியாக இல்லை. அதனால் முன்னனி எப்போதும் போல புறக்கணிப்பு நிலைப்பாட்டில் உள்ளது.
  16. அதன் இணைப்பை முடிந்தால் இணைக்கவும். தமிழ்பொதுவேட்பாளரை நிறுத்திற ஆட்கள் ஒரு வாக்கை மட்டும் செலுத்த வலியுறுத்த வேண்டும் இல்யைேல் பேசாமல் இருக்கலாம்.
  17. புலவர், வடிவாய் உற்றுப் பார்த்தும்… முக்கிய தடயத்தை காணவில்லையே. 🤣
  18. மத்திய கிழக்கில் உள்ள தண்டணைகள் சட்டங்களை வரவேற்கின்றேன். அவிட்டு விட்ட எருமை மாடுகள் மாதிரி காணாததை கண்டவர்கள் இன்னும் செய்வார்கள். இதற்கு மேலும் செய்வார்கள். ஜனநாயக நாடுகளுக்கு வந்து உள்ள சுதந்திரங்களை துர்பிரயோகம் செய்யும் கேடு கெட்டவர்கள். 😡
  19. ஆக்கள் ஒண்டுக்கை ஒண்டு கண்டியளோ.இப்ப லெக்சன் சீசன். கிட்டத்தட்ட சீட்டாட்டம் மாதிரி. தெமில,கொட்டியா எண்டு சொல்லிப்பாருங்கோ. இரண்டு பேரும் கட்டிப்பிடிச்சுக்கொண்டு நிப்பினம்.
  20. சிந்து சமவெளியில் வாழ்ந்தவர்கள் பாரசீக வளைகுடாவுடனும் மெசபடோமியாவுடனும் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். குறிப்பாக யானைத் தந்தங்கள் சிந்து சமவெளியிலிருந்துதான் மெசபடோமியாவுக்கு ஏற்றுமதியாயின. இந்த யானைத் தந்தங்களுடன், தந்தங்களைக் குறிப்பதற்கான சொற்களும் பாரசீக மொழிக்கும் மெசபடோமியப் பகுதிகளில் வழங்கப்பட்ட மொழிகளுக்கும் ஏற்றுமதியாயின. ஆகவே, இந்த நாடுகளைச் சேர்ந்த அக்கேடியன், எலமைட், ஹுர்ரியன், பழங்கால பாரசீக மொழிகளில் எழுதப்பட்ட இலக்கியங்கள் மற்றும் எழுத்துகளில் சிந்து சமவெளியிலிருந்து வந்திருக்கக்கூடிய சொற்கள், குறிப்பாக யானைகள், தந்தங்களைக் குறிக்கக்கூடிய சொற்கள் கிடைக்குமா என ஆய்வுசெய்தார் பெங்களூரைச் சேர்ந்த பஹதா அன்சுமாலி முகோபாத்யாய [Bahata Ansumali Mukhopadhyay]. உள்ளூரில் தயாரிக்கப்படாத, கிடைக்காத ஒரு பொருளை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும்போது, அந்தப் பொருளை எந்த வெளிநாட்டிலிருந்து வாங்குகிறோமோ அங்கு வழங்கப்படும் சொல்லாலேயே அழைக்கிறோம். இந்த அடிப்படையை மனதில் கொண்டு தேடியபோது அவருக்கு 'பிரு/பிரி' என்ற சொல்லும் அவற்றின் வேறுவிதமான உச்சரிப்புகளும் கிடைத்ததன. இந்த 'பிரு' என்ற சொல்லுக்கு அக்கேடிய மொழியில் 'யானை' என்றும் பழங்கால பாரசீக மொழியில் 'தந்தம்' என்றும் பொருள் இருந்தது. பழங்கால எகிப்திலும் தந்தங்களைக் குறிக்கும் சொற்கள் இருந்தன என்றாலும் 'அப்', 'அபு' போன்ற ஒலிக் குறிப்புகளாக இருந்தன. ஆகவே, மெசபடோமியாவில் புழங்கிய 'பிரு/பிரி' என்ற சொல் சிந்துச் சமவெளியில் இருந்தே வந்திருக்க வேண்டுமென முடிவுசெய்தார் பஹதா. பல திராவிட மொழிகளில், 'பிலு', 'பெல்லா', 'பல்லா', 'பல்லவா', 'பல்' என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றில் பல யானைகளையும் குறித்தன. ஆனால், 'பிலு' என்பது எப்படி அக்கேடிய மொழியில் 'பிரு' என்றானது என்பதற்கும் விடை தேடியிருக்கிறார் பஹதா. அதாவது, பழங்கால பாரசீக மொழியில் 'ல' என்ற உச்சரிப்பு இல்லை. அதற்குப் பதிலாக 'ர' என்ற உச்சரிப்பே பயன்படுத்தப்படுகிறது. யானையின் தந்தம் என்பது அதன் பல் என்பதால், தந்தத்தைக் குறிக்கும் "பல்", "பல்லு", "பில்லு" என்ற சொற்கள், 'பிரு/பரி என மாறியிருக்கின்றன. அதேபோல, Salvadora persica என்ற மரத்தைப் பற்றியும் குறிப்பிடுகிறார் பஹதா. அரபியிலும் வட இந்தியாவிலும் 'மிஸ்வாக்' என இந்த மரம் குறிப்பிடப்படுகிறது. இந்த மரத்தின் பாகங்கள் பற்களுக்கு நன்மை செய்யக்கூடியவை என நம்பப்படுகிறது. தற்போதும் பற்பசைகள்கூட இந்தப் பெயரில் வெளியாகின்றன. சிந்துச் சமவெளி காலகட்டத்தில் இந்த 'மிஸ்வாக்' மரமும் 'பிலு மரம்' என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. அந்த காலகட்டத்தில் சிந்துச் சமவெளி பிரதேசத்தில் பல்துலக்க இந்த மரத்தின் குச்சிகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருக்க்ககூடும் எனக் கருதுகிறார் பஹதா. தற்போதும் பாகிஸ்தான், ராஜஸ்தான், ஹரியானா போன்ற சிந்துச் சமவெளிப் பிரதேசங்களில் இந்த மரங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. ஆகவே, தந்தம், யானை, பற்களுக்குப் பயன்படக்கூடிய மிஸ்வாக் மரம் ஆகியவை எல்லாமே 'பல்' என்பதைக் குறிக்கக்கூடிய சொல்லில் இருந்தே உருவாகியிருக்கின்றன. இந்த 'பல்' என்ற வேர்ச்சொல், திராவிட மொழிகளில் அனைத்திலும் பொதுவானதாக இருந்தது. 'பிளிரு' என தெலுங்கிலும் 'பல்ல', 'பிலு' என கன்னடத்திலும் யானையைக் குறிக்கும் சொற்கள் இருக்கின்றன. சென்னைப் பல்கலைக்கழகம் 1924ல் வெளியிட்ட தமிழ்ப் பேரகராதி 'பிள்ளுவம்' என்ற சொல் யானையைக் குறிப்பதாகச் சொல்கிறது. ஆகவே, தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் 'யானை', 'ஏனுக', 'ஆன' போன்ற சொற்களால் யானைகள் குறிப்பிடப்பட்டாலும், பல்லை அடிப்படையாக வைத்த சொற்களும் யானையைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பல் என்ற சொல்லில் இருந்து 'பல்லு', 'பல்லவா' போன்ற சொற்கள் உருவாகியிருக்க முடியும். ஆனால், 'பல்' என்ற சொல்லில் இருந்து 'பிள்/பில்", 'பிள்ளுவம்' போன்ற சொற்கள் எப்படி உருவாகியிருக்க முடியும்? இந்தக் கேள்விக்கு ஃப்ராங்க்ளின் சவுத்வொர்த்தின் Linguistic Archaeology of South Asia புத்தகம் விடையளிக்கிறது. அதாவது, 'பல்' என்பதைக் குறிப்பதற்கான வேர்ச்சொல் 'பிள்' என்பதாகக்கூட இருக்கலாம் என்கிறார் இவர். மேலே சொன்ன அடிப்படைகளை வைத்துத்தான் சிந்துச் சமவெளிப் பிரதேசங்களில் தொல் திராவிட மொழிகள் பேசப்பட்டிருக்கலாம் எனக் கருதுகிறார் பஹதா. ஒரு மொழியின் மூலத்தைக் கண்டறிவது போன்ற ஆய்வுகளுக்கு இது மாதிரியான அடிப்படைச் சொற்களே ஆதாரமாக அமைகின்றன. தந்தம், பல்துலக்கும் குச்சி ஆகியவற்றுக்கு ஹரப்பாவில் இந்த சொல்லில் இருந்து பிறந்த சொற்களே பயன்படுத்தப்பட்டிருப்பதால், சிந்து சமவெளியில் இருந்தவர்கள் தொல் திராவிட மொழியைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும்" எனத் தெரிவித்தார். சிந்து சமவெளியில் பேசிய மொழியை ஏன் தொல் திராவிட மொழி எனக் குறிப்பிட வேண்டும்; திராவிட மொழிகளிலேயே பழைய மொழியான தமிழ் என்று அதனைக் குறிப்பிட முடியாதா என பஹதாவிடம் கேட்டபோது, "சிந்துச் சமவெளிப் பகுதியில் பேசியிருக்கக்கூடிய ஒரு மொழியை 'தொல் திராவிட மொழி' என்று குறிப்பிடுகிறோம். தற்போது பேசப்படும் திராவிட மொழிகளில் உள்ள பல தொன்மையான சொற்கள் அந்த மொழியில் இருக்கும். ஆனால், அந்த மொழி, தற்போது பேசப்படும் எந்த ஒரு மொழியாகவும் இருந்திருக்காது. ஆகவேதான் அதனை தொல் திராவிட மொழி என்கிறோம்" என்று விளக்கினார் மரபணு மட்டும் இல்லை, ஆதித்தாய்க்கு ஒரு மொழி கூட இருந்து இருக்க வேண்டும், அந்த மொழியும் இன்றும் எங்கள் எல்லோரின் உள்ளேயும் இருக்கின்றதும் போல. ஆமாம் அது தான் இந்த 'தொல் திராவிட மொழி' ஆகும் அதனால்த்தான் தெலுங்கரும் தமிழரும் தம்மையே அறியாமல் கதைத்தார்கள். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. இது வரலாறு !! புராணம் அல்ல !!
  21. வீரப்பையன், “அம்மே மேக்க அய்த்தி ஒயாட்ட!” எண்டு எழுதியிருக்கு.
  22. ஆதவன் போட்ட படம் என்ற படியால்... நீங்கள் சொன்ன மாதிரியும் இருக்கும். 😂
  23. இந்த கேள்வியே லூசுத்தனமானது. அதிலும் எம்மவரே தண்டனையை அனுபவித்து கொண்டு இருக்கும் எம் இனத்தை பார்த்து கேட்பது இனத்துரோகமானது.
  24. ஒலிம்பிக்கில் மற்றுமொரு சம்பவம் – தேசிய கீதத்தை மாற்றி இசைத்ததால் சர்ச்சை! 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் நடைபெற்று வருகின்றன. கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமான குறித்த போட்டிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளன. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியின்போது இடம்பெற்ற சம்பவம் ஒன்றுக்காக சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கூடைப்பந்து போட்டியொன்றின்போது தென் சூடான் தேசிய கீதத்திற்குப் பதிலாக சூடான் தேசிய கீதத்தை இசைத்தமைக்காகவே சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் மன்னிப்பு கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப விழாவின்போது தென்கொரிய அணியைத் தவறுதலாக வட கொரியா என அழைத்தமை தொடர்பில் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் மன்னிப்பு கோரியிருந்தது. அத்துடன் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவிற்குப் பிறகு நடைபெற்ற விருந்துபசாரத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்று கத்தோலிக்க மதத்தை அவமதிக்கும் வகையில் இருந்ததாக ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன. எனினும் இந்நிகழ்வு கத்தோலிக்க மதத்தை அவமதிக்கும் நோக்கத்தில் செய்யப்படவில்லை எனவும் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் ஒரு செய்தி மாநாட்டில் பாரிஸின் ஒலிம்பிக் செய்தித் தொடர்பாளர் ஆன் டெஸ்காம்ப்ஸ் கூறியிருந்தார். https://thinakkural.lk/article/306983
  25. திருப்பூர் டைலர்கள் சங்கம் · Rejoindre Rajesh Guna · 4 j · 100 கோடி சம்பளம் வாங்கினாலும் 1000.கோடி சொத்து இருந்தாலும் அவனுக்கும் வெளிய சொல்லமுடியாத வருத்தம் இருக்கும்!.......!
  26. இல்லை அண்ணை, இன்னமும் ஒன்றும் எடுக்கவில்லை. நீச்சலில் அப்படி எவரும் இருப்பதாகவும் நான் அறியவும் இல்லை........... 👍........... இரண்டு வழிகளிலும் நிரல் படுத்துவார்கள் என்று நினைக்கின்றேன், ஏராளன். உலகம் ஒரு வழியில் போனால், கண்டிப்பாக அமெரிக்க இன்னொரு வழியில் தான் போகும்..........🤣. நான் ஒரு அமெரிக்க தளத்திலிருந்தே எடுத்துப் போடுகின்றேன், அவர்கள் போடும் அதே வரிசையிலேயே.
  27. பொது கழிப்பறைகள் பொதுவாக கடற்கரை, பூங்காக்களில் உண்டு. அதை தேடி போக வேண்டும். இந்தியர்களுக்கு இது சரிவராது. “ நடு வீட்டில்” என்றொரு பழமொழி தெரியும் தானே அண்ணை.😂
  28. இப்பிடியான ரொய்லட்டுக்கள் தான் சரி
  29. இதுதான் ஐயா எனது பிறந்த இடம். மலிபனுக்கு முன்னால் இருக்கும் St. Paul's ஆஸ்பத்திரியிலேயே, நான் பிறந்த்தேன், 5 ‍- 19 வயது வரை இந்த வாசத்தை முகர்ந்து கொண்டல்லவா முன்னால் இருக்கும் பாடசாலயில் படித்து வந்தேன். எந்த திருவிழா என்றாலும் எங்கள் வீட்டில் மெலிமன் இருக்கும். தவழ்ந்து, ஒடி விளையாடிய தெருவல்லவ இது. மெலிபனும் அதன் சுற்றுவட்டமும் என் வாழ்வின் ஒரு அங்கம். போன மாதம் ஒரு நாள் இங்கு வந்து பனிசை சாப்பிட்டுகொண்டு, குளிர் பானத்தை குடித்தவாறு பழைய நினைவுகளை மீட்டினேன்.
  30. நன்றி அண்ணை உங்கள் ஆக்கத்திற்கு. எனக்குப் பிடித்த வரிகள் தடித்த எழுத்தில். நீங்கள் ஒரு சிறந்த வாசகரும் கூட.
  31. நான் மோட்டார் வண்டி ஓட்டப் பழகியபோது…. ஓட்டப்பழக்கிய ஆசான் சொன்ன முதல் வார்த்தை… நீ வண்டியை எங்குஓட்டி மோதினாலும் எனக்குக் கவலை இல்லை, ஆனால் மல வண்டியுடன் மட்டும் மோதிவிடாதே. நிற்கவும் முடியாது, ஓடவும் முடியாது. நன்றி🙏.
  32. தற்போதைய நிலை Rank Country Gold Silver Bronze Total 1 Japan 4 2 1 7 2 Australia 4 2 0 6 3 United States 3 6 3 12 4 France 3 3 2 8 5 South korea 3 2 1 6
  33. கடந்த 15 ஆண்டுகளாக ஒரு வன்முறையும் புலிகளால் பதிவாகாத நிலையில்.. ஐரோப்பிய ஒன்றிய சாணக்கியவான்கள் இன்னும் தடை போடினம் என்றால்.. ஐரோப்பிய ஒன்றியத்தின் கடைந்தெடுத்த காடைத்தனம் அப்பட்டமாகவே தெரிகிறது. இதில் புலிகளின் சொத்து முடக்கமே முக்கிய குறிக்கோள். அதையும் பறிச்சு உக்ரைனுக்கு படைப்பாங்கள் ஆக்கும். கவனிக்கவும் ரஷ்சியாவில் ரஷ்சிய பிராந்தியங்களில் புலிகளுக்கு தடை இல்லை. புலிகள் தப்பானவர்களை நண்பர்கள் என்று நம்பியதன் விளைவும் தான் 2009 மே பேரழிவு கூட்டு இன அழிப்புக்கு முக்கிய காரணம். ஏலவே தமிழர் புனர்வாழ்வுக்கழகம் என்ற சிவில் தொண்டு அமைப்பு மீதான தடையும் தொடருது. ஆக மொத்தத்தில் ஐரோப்பிய ஒன்றியம்.. ஒரு கொஞ்சம் கூட சனநாயகத்தன்மை அற்று.. தமிழ் மக்கள் மீதான எந்தக் கருசணையும் அன்று தொடர்ந்து செயற்பட்டு வருகிறது. இதில தமிழர்கள் சிலர் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடாவடித்தனமான உக்ரைன் போர் ஆதரவுக்கு ஒத்தூதுதிக்கொண்டு இருக்கிறார்கள். ஹிந்தியாவை அடுத்து ஐரோப்பிய ஒன்றியம்.. எனி அமெரிக்கா.. பிரிட்டனுன்னு தடை தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் இவங்கள் எல்லாம் கள்ள மெளனம் காக்கிறாங்கள். இணைத்தலைமை என்று வந்து புலிகளை உளவு பார்த்தவை எல்லாம் இப்ப கப் சிப்.
  34. சிங்கள இனவாதம் இலங்கையில் இல்லாதிருந்தால் உலகின் சுற்றுலாவிற்கான முதலிடத்தில் இலங்கை இருந்திருக்கும்.
  35. மகளிர் ஆசிய கிண்ணத்தை முதல் தடவையாக சுவீகரித்து வரலாறு படைத்தது இலங்கை Published By: VISHNU 28 JUL, 2024 | 09:05 PM (நெவில் அன்தனி) ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற மகளிர் ரி20 ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவை 8 விக்கெட்களால் வெற்றிகொண்ட இலங்கை முதல் தடவையாக மகளிர் ஆசிய சம்பியனாகி வரலாறு படைத்தது. இரண்டு வகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் 5 தடவைகள் இந்தியாவிடம் தோல்வி அடைந்து இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்கை இம்முறை இந்தியாவை மிக இலகவாக வெற்றிகொண்டு சம்பியன் பட்டத்தை சூடியது. இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 166 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 18.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 167 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி ஆசிய சம்பியனானது. இலங்கையின் இந்த வெற்றியில் சமரி அத்தபத்து, ஹஷினி சமரவிக்ரம, காவிஷா டில்ஹாரி ஆகியோரின் பொறுப்புணர்வுடனான துடுப்பாட்டங்கள் பெரும் பங்காற்றின. இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. சமரி அத்தபத்துவின் கவனக் குறைவால் விஷ்மி குணரட்ன ஒரு ஓட்டத்துடன் ரன் அவுட் ஆனார். என்றாலும் அதற்கு பிராயச்சித்தமாக சமரி அத்தபத்து திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஹர்ஷிதா சமரவிக்ரமவுடன் 2ஆவது விக்கெட்டில் 62 பந்துகளில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார். சமரி அத்தபத்து 43 பந்துகளில் 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களை பெற்றார். தொடர்ந்து ஹர்ஷிதா சமரவிக்ரம, காவிஷா டில்ஹாரி ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 40 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை ஆசிய சம்பியனாவதை உறுதிசெய்தனர். ஹர்ஷிதா சமரவிக்ரம 51 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 69 ஓட்டங்களுடனும் காவிஷா டில்ஹாரி 16 பந்துகளில் 30 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. ஷபாலி வர்மா, ஸ்ம்ரித்தி மந்தனா ஆகிய இருவரும் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஷபாலி வர்மா 16 ஓட்டங்களுடன் வெளியேறிய சொற்ப நேரத்தில் உமா சேத்ரி (9) ஆட்டம் இழந்தார். அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் 11 ஓட்டங்களை மாத்திரம் பெற்று நடையைக் கட்டினார். (87 - 3 விக்.) இந நிலையில் மந்தனாவும் ஜெமிமா ரொட்றிகஸும் ஜோடி சேர்ந்து 4ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர். எவ்வாறாயினும் ரொட்றிகஸ் (29), மந்தனா ஆகிய இருவரும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (133 - 5 விக்.) திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மந்தனா 10 பவுண்டறிகளுடன் 69 ஓட்டங்களைப் பெற்றார். மத்திய வரிசையில் ரிச்சா கோஷ் 14 பந்துகளில் 30 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகி: ஹர்ஷிதா சமரவிக்ரம, தொடர்நாயகி: சமரி அத்தபத்து. https://www.virakesari.lk/article/189633
  36. நான் இந்த‌ ஆசியா கோப்பை தொட‌ங்க‌ முத‌லே சொன்னேன் .இந்தியா இல‌ங்கை தான் பின‌லுக்கு வ‌ரும் அதில் இந்தியா கோப்பையை வெல்லும் என்று ஆனால் இல‌ங்கை ம‌க‌ளிர் அணி 15 வ‌ருக்கு பிற‌க்கு அடிச்ச‌ அடிய‌ பார்த்து விய‌ந்து போனேன் அடிச்ச‌ ப‌ந்துக‌ள் கூட‌ சிக்ஸ்6 ம‌ற்றும் போர்4......................... இள‌ம் பெண்க‌ளின் விளையாட்டு மிக‌ அருமை............................ இல‌ங்கை ம‌க‌ளிர் அணிக்கு கோப்பையை வென்ற‌துக்கு ஒரு ல‌ச்ச‌ம் அமெரிக்க‌ன் டொல‌ர் கொடுத்த‌வை...................இன்றைய‌ ஆட்ட‌ நாய‌கிக்கு 25ஆயிர‌ம் அமெரிக்க‌ன் டொல‌ர்..............................
  37. சரித்திர வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி
  38. சம்பந்தனுக்கு, அஞ்சலி செலுத்தப் போகாதவர்கள்... கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவிற்கு அஞ்சலி செலுத்தி இருக்கின்றார்கள். இதிலிருந்து.... சம்பந்தன் தமிழ் மக்களுக்கு, ஒரு உதவாக்கரை வெத்து வேட்டு என்று தெரிகின்றது.
  39. போனவர்களை போற்றுவது போன்று பாசாங்கு செய்தபடி இருப்பவர்களை நசுக்குவது தான் உங்கள் அரசியல் என்றால் அதற்கு நிச்சயம் நான் கொள்ளி வைப்பேன்.
  40. விளையாட்டுத் திடல் உங்களை அன்புடன் வரவேற்கிறது.... பதக்கப்பட்டியலை ஒவ்வொரு நாளும் தரவேற்றுங்கோ.
  41. பகிர்வுக்கு நன்றி ஈழப்பிரியன் அண்ணா. எனக்கும் மிகவும் பிடித்த பிஸ்கட் மலிபன் பிஸ்கட்டுகள் தான். இங்கு குக்கீஸ் என்ற பெயரில் கனடியன் பிஸ்கட்டுகளை விற்பார்கள். அவற்றின் சுவைக்கு நாக்கு பழக்கப்படவில்லை என்பதால், பிடிப்பதில்லை. மலிபன் மாரி தான் இவற்றில் மிகவும் பிடித்தது. பால் தேத்தண்ணிக்குள் லாவகமாக நனைத்து, அப்படியே சொத சொத என்று வாயுக்குள் போடும் போது, அப்படி ஒரு சுவை. லெமன் பப் (Lemon puff) பில் இருக்கும் கிரீமில் உடலுக்கு ஒவ்வாத விடயங்கள் உள்ளன என ஒரு முறை எங்கோ கேள்விப் பட்டமையால் அதைச் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். க.பொ.த உயர்தரம் படிக்கும் போது, இதனருகில் இருந்த ராஜேஸ்வரி institute எனும் ரியூட்டரியில் தான் ரியூசனுக்கு சென்றேன். மலிபன் கம்பெனியில் இருந்து வரும் வாசனை மூக்கை துளைத்து பசியை உருவாக்கும். மலிபன் கம்பெனியின் இன்றைய சரியான பெயர் Little lion ஆகும். பெயரில் சிங்கம் உள்ளது
  42. ஒரு ஊரில் ஒரு ஆசாமி இருந்தான். அவன் ரொம்பவும் சுத்தம் பார்க்கிற ஆளு. அவனுக்கு எதைக் கண்டாலும் அருவெறுப்பா இருந்தது. ஒரு சமயம் நம்ம ஆளு ஒரு கல்யாண வீட்டுக்கு போயிருந்தான். கல்யாணம் முடிஞ்சு சாப்பாடு பந்தி ஆரம்பமாச்சு. நம்ம ஆளு ஒரு ஓரமா போய் உக்கார்ந்து கிட்டான். சாப்பாடு பிரமாதமா இருந்துச்சு. இவனுக்குப் பக்கத்து இலையில் உக்கார்ந்திருந்த ஆசாமி பால் பாயசத்தை உறிஞ்சி உறிஞ்சி குடிச்சிட்டுருந்தான். அப்போ எச்சில் நம்ம ஆளு மேலே தெறிச்சிட்டுது . நம்ம ஆளு தான் ரொம்பவும் சுத்தம் பார்க்கிற ஆளாச்சே. இந்த கறுமத்தைக் காசியில் போய்த் தான் தொலைக்கணும்னு நினைச்சிகிட்டு மறுநாளே காசிக்குக் கிளம்பிப் போனான். அந்த காலத்தில் இப்போ மாதிரி பஸ், ரயில் வசதி எல்லாம் கிடையாதே. வசதி இருக்கிறவங்க வண்டி கட்டிக்கிட்டு போவாங்க. வசதி இல்லாதவங்க கால் நடையாவே போவாங்க.. போய் சேரவே பல நாள் ஆகும். பகல் முழுக்க நடப்பாங்க, இரவு நேரத்தில் ஏதாவது சத்திரத்திலோ அல்லது யார் வீட்டு திண்ணையிலோ படுத்து தூங்கி விட்டு மறுநாள் பயணத்தைத் தொடங்குவாங்க. இப்படி மத்தவங்க தங்கறதுக்கு வசதியாகவே அந்த காலத்தில் பெரிய திண்ணைகள் வைத்து வீடு கட்டினாங்க. திண்ணையில் வந்து தங்குறவங்களுக்கு சாப்பாடோ, அல்லது நீர் மோரோ அல்லது தங்கள் சக்திக்கு முடிஞ்ச ஏதோ ஒன்றை அவங்களுக்கு சாப்பிடக் கொடுப்பாங்க. நம்ம ஆளு பகல் முழுக்க நடந்து, இரவில் ஒரு வீட்டுத் திண்ணையில் வந்து சுருண்டு படுத்தான். அந்த வீட்டு ஆள் வந்து "ஐயா, உங்களைப் பார்த்தால் ரொம்ப தூரம் நடந்து களைச்சு போனவராத் தெரியுது. வாங்கையா... வந்து சாப்பாடு சாப்பிட்டுட்டு படுங்க" என்றார். நம்ம ஆளுக்கு நல்ல பசி தான். ஆனால் ஆசாரம் தடுத்தது. கடைசியில் வயிறு தான் ஜெயித்தது. நம்ம ஆளு சாப்பிட சம்மதிக்கவும், அந்த ஆளு தன்னோட மனைவியைக் கூப்பிட்டு இவனுக்கு சாப்பாடு போடச் சொன்னார். கை கால் சுத்தம் பண்ணி விட்டு சாப்பிட உட்கார்ந்த நம்ம ஆளு "அம்மா எனக்கு இலையில் சாப்பிட்டுத் தான் பழக்கம். அதனாலே இலையில் பரிமாறணும்"னு சொல்ல, கொஞ்சம் யோசித்த அந்த அம்மா "சரி",ன்னு சொல்லி ஒரு இலையைக் கொண்டு வந்து போட்டு சாப்பாடு பரிமாறினாங்க. சும்மா சொல்லக் கூடாது. சாப்பாடு அருமையா இருந்துச்சு. நம்ம ஆளு நல்லா திருப்தியா சாப்பிட்டான். சாப்பிட்டு முடிச்சு இலை எடுக்கும் போது அந்த அம்மா ஓடி வந்து "ஐயா, நான் எடுக்கிறேன்"னு சொல்லி ரொம்ப பத்திரமா எடுத்துட்டுப் போனாங்க. இதைப் பார்த்த நம்ம ஆளு "தூர வீசி எறியப் போற இலையை என்னத்துக்கு இவ்வளவு பத்திரமா எடுத்துட்டு போறீங்க"ன்னு கேட்க, அந்த அம்மா "இந்த ஊரில் வாழை இலை கிடைக்கிறது குதிரைக் கொம்பு தான். என்னோட மாமனாரும் உங்களைப் போல வாழை இலையில் சாப்பிடற ஆள். அவருக்காக ஒரே ஒரு வாழை இலை வாங்கி வச்சிருக்கோம். அவர் சாப்பிட்டதும் அதை கழுவி பத்திரமா எடுத்து வச்சிருவோம். நீங்க வந்து வாழை இலையில் தான் சாப்பிடுவேன்னு சொன்னதும் இலை இல்லைன்னு சொல்லவும் மனசு வரலே. உங்களைப் பட்டினியாப் போடவும் மனசு வரலே. அதான் என்னோட மாமனார் சாப்பிடுற இலையில் உங்களுக்குச் சாப்பாடு போட்டுட்டு இப்போ பத்திரமா எடுத்து வைக்கிறேன்"னு சொல்லவும் இவனுக்குச் சாப்பிட்ட சாப்பாடெல்லாம் தொண்டையிலே சிக்கிக் கிட்ட மாதிரி ஆகிப் போச்சு. சரி. இந்த கறுமத்தையும் காசியிலே போய் தொலைசிடுவோம்னு நினைச்சிகிட்டு படுத்துத் தூங்கினான். மறுநாள் எழுந்து நடக்க ஆரம்பித்தான். அன்றைக்கு பகலெல்லாம் நடந்து விட்டு ராத்திரி ஒரு வீட்டுத் திண்ணையில் தங்கினான். அந்த வீட்டம்மா இவனைப் பார்த்ததும் "ஐயா சாப்பாடு சூடா இருக்கு. வந்து ஒரு வாய் சாப்பிட்டுட்டு படுங்க " என்றதும் நம்ம ஆள் முன்னெச்சரிக்கையா வாழை இலை வேண்டாம்னு சொல்லிட்டு, "தினமும் புழங்காத மண் பாத்திரம் இருந்தால் அதில் சாப்பாடு போடுங்க" என்றான். அந்த அம்மா ஒரு அறைக்குள் போய் ரொம்ப நேரம் தேடித் துருவி ஒரு மண் பாத்திரத்தைக் கொண்டு வந்து அதில் இவனுக்குச் சாப்பாடு வைத்தாள். திருப்தியா சாப்பிட்ட இவன் மண் பாத்திரத்தை கிணற்றடிக்கு கொண்டு போய் கழுவ ஆரம்பித்தான். கை தவறி கீழே விழுந்து மண் பாத்திரம் உடைஞ்சு போச்சு. இதைப் பார்த்ததும்... அந்த வீட்டில் இருந்த ஒரு கிழவி, குய்யோ முறையோன்னு கத்த ஆரம்பிச்சிட்டுது . "என் புருஷன் சாகக் கிடந்த கடைசி காலத்தில் இந்த பாத்திரத்தில் தான் அவர் கை கழுவி வாய் கொப்பளிப்பார். என்னோட கடைசி காலத்துக்கு இது உதவும்னு பத்திரமா வச்சிருந்தேன். அதை இந்த பாவி இப்படிப் போட்டு உடைச்சிட்டானே"ன்னு அலறுச்சு. நம்ம ஆளுக்கு ஒரு மாதிரி ஆயிட்டுது . இருந்தாலும் இருக்கவே இருக்கு காசி. அங்கே போய் இந்த கறுமத்தையும் தொலைச்சிடுவோம்"ன்னு நினைச்சிகிட்டு படுத்தான். மறுநாள் எழுந்து நடக்க ஆரம்பிச்சான். அன்னிக்கு ராத்திரி ஒரு வீட்டுத் திண்ணையில் தங்கினான். அந்த வீட்டிலிருந்த பாட்டி இவனைச் சாப்பிடச் சொன்னாள். இவன் முன்னெச்சரிக்கையா "இலை, பாத்திரம் எதுவும் வேண்டாம். நான் கையை நீட்டறேன். நீங்க கரண்டியாலே எடுத்து போடுங்க"ன்னு சொன்னதும் அந்த பாட்டியும் அது மாதிரி செய்ய, வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு திண்ணையில் வந்து உட்கார்ந்தான். அங்கிருந்த ஒரு மாடபிறையில் வெத்திலை பாக்கு இருந்தது. பாட்டி நமக்குத் தான் வச்சிருக்கு போலிருக்கு என்று நினைச்சு இவன் பாக்கை எடுத்து வாயில் போட்டுக் கடித்தான். இவன் கடிச்சதும் பாக்கு உடைபடுற சத்தம் வீட்டு உள்ளே இருந்த பாட்டிக்கு கேட்டது. பாட்டி குடுகுடுன்னு ஓடி வந்து "என்ன"ன்னு விசாரித்தாள். "ஒன்னுமில்லே. இங்கிருந்த பாக்கை எடுத்து வாயில் போட்டு கடிச்சேன். அந்த சத்தம் தான்"ன்னு நம்ம ஆளு சொல்ல... "பரவாயில்லை. உங்க பல்லு ரொம்பவும் பலமாத் தான் இருக்கு. நானும் இந்த பாக்கை பத்து நாளா வாயிலே போட்டுக் கடிக்க முடியாமே எடுத்து வச்சிருந்தேன். நீங்க ஒரே கடியிலே கடிச்சு வச்சிங்கன்னா நீங்க பலசாலி தான்"ன்னு பாராட்டுப் பத்திரம் வாசிச்சா. நம்ம ஆளு ரொம்பவும் நொந்து போயிட்டான். "போதும்டா சாமி காசிக்குப் போன லட்சணம்"ன்னு முடிவு பண்ணிட்டு மறுநாள் தன்னோட ஊருக்கு திரும்ப ஆரம்பிச்சிட்டான். இது தான் ஆசாரம் பார்த்தவன் காசிக்குப் போன கதை...! 😂 🤣 பழமையும் புதுமையும்
  43. கையால குழி தோண்டுற இடத்திலை ஏற்கனவே ஒருத்தர் தோண்டி கடன்களை கழிச்சிருந்தால்......

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.