விழிப்புலன்ற்ற ஒருவருக்கு பிறந்த குழந்தை, பாலருந்தும் போது மூச்சு திணறி இறந்து விட்டது, அவருக்கு குழந்தை இறந்த விடயத்தினை உறவினர், உங்கள் குழந்தை பாலருந்தும் போது மூச்சு திணறி இறந்துவிட்டது என கூறினார்கள், அதற்கு அவர் பால் எப்படி இருக்கும் என வினவினார் ( இது ஒரு கதைக்காக மட்டும்), அதற்கு உறவினர்கள் கொக்கு போல் வெள்ளையாக இருக்கும் என்றார்கள், அதற்கு அவர் கொக்கு எப்படி இருக்கும் என்றார், இவர்கள் தமது கையினை வளைத்து கொக்கு போல் செய்து காட்டினார்கள் அதனை தடவி பார்த்துவிட்டு இப்படிப்பட்ட முரட்டுப்பாலை குடித்தால்குழந்தை எப்படி இறக்காது என கேட்டார்.
இலங்கையர்களின் பிரச்சினை இனவாதம், மதவாதம், சாதியம் என பல பிடிவாதங்கள், பாதிக்கப்பட்டவர்களிற்கு மேல் குற்றம் சாட்டி தமது தவறுகளை தொடர்தல், தவறுகளை சுட்டிக்காட்டும் போது அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்குவது.
இதனாலேயே போர் முடிந்த பின்னரும் மொத்த நாடே வங்குரோத்தானது, இது ஒரு தொடர்கதை ஆக தொடரும், இங்கிலாந்திடமிருந்து சுதந்திரம் பெற்றவர்கள் தற்போது அதே சுதந்திரத்தினை இந்தியாவிடம் அடகு வைத்துள்ளார்கள்.
இந்தியாவின் ஆசீர்வாதம் இல்லாமல் தொடர்ந்து ஆட்சியில் கூட தாக்குபிடிக்க முடியாத நிலையில் உள்ளார்கள்.
இவர்களுக்கு இது கடைசி வரை புரியப்போவதில்லை, இலங்கையில் உள்ள பிரச்சினைக்கு சிறுபான்மையினர் காரணம் அல்ல என்பதை புரியாதவர்களால் எப்படி நாட்டை வழிநடத்த முடியும்?
இலங்கை, வல்லரசுகளின் போட்டிக்கு, கோயிலுக்கு நேர்ந்துவிட்ட முட்டாள் ஆடு.