Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87990
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    2954
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    31977
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/08/24 in all areas

  1. கொஞ்சம் யதார்த்தமாக யோசித்துப் பாருங்கள் விசுகு. இலங்கையின் அதியுயர் நிலையில் இருக்கும் ஜனாதிபதி வீடு தேடி வருகிறார். அது மாவைக்கு கிடைத்த மரியாதைதானே.அவரை வரவேற்பதுதானே தமிழர் பண்பு. வந்தவருக்கும் தெரியும் தமிழரசுக் கட்சியின் ஆதரவு தனக்கு இல்லை என்று. ஆனாலும் ஒரு முயற்சி செய்ய அவர் முனைகிறார். இவரும் வரவேற்று கலந்துரையாடி விட்டு, மரியாதை நிமித்தம் அறிக்கை ஒன்றை விடுகிறார். அவ்வளவுதான் இந்த விடயம். இங்கே பெரிது படுத்த வேண்டியது எதுவுமே இல்லை. குறைகள் பிடிப்பது என்றால் எல்லோரிடமும் அது இருப்பதை பார்க்கலாம். நல்லது நடக்க வேண்டும் என்பதே உங்களைப் போன்று எனக்கும் இருக்கும் விருப்பம். தேவைகள் கருதி எங்களிடமும் மாற்றம் வரவேண்டும். அரசியலில் உள்ள நெளிவு சுளிவுகளுக்கு ஏற்ப நாமும் பயணம் செய்ய வேண்டும். உதாரணத்துக்கு இந்திய இராணுவத்தை வெளியே அனுப்புவதற்கு, எவருடன் சண்டையிட்டோமோ அவர்களுடனேயே பேசி நண்பர்களாகி ஆயுதம் பெற்று இந்திய இராணுவத்தை வெளியேற்ற வகை செய்து மீண்டும் யுத்தத்தை மேற்கொண்டோமே அது அரசியல். நீங்கள் நீண்டகாலம் ஒரு அமைப்பில் இருப்பதால், அதன்மேல் உள்ள ஈடுபாட்டால் சிலவற்றை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கலாம். அவர்களுடைய காலம் இனி வரப் போவது இல்லை. இன்றைய தளம் வேறு. இப்பொழுது நடப்பது ஆயுதப் போராட்டமல்ல. அரசியல் போராட்டம்.
  2. குச்சுப்பிடி நடனம்.🤭
  3. முந்தி பெரிய வீடாக 🏡 இருந்தது. இப்ப பலருக்கு “சின்ன வீடாக” ஆகிவிட்டது😂🤣
  4. இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை எழுதியவரே நிலாந்தன் மாஸ்டர் தான்! இங்கு யாழ் இணையத்தில் ஓர் அய்டியில் வந்து எழுதிவிட்டு இன்னோர் அய்டியில் வந்து தமக்குத் தாமே லைக் போடும் பெரியார்கள் செய்யும் வேலையொன்றை நிலாந்தன் மாஸ்டர் செய்திருக்கின்றார். அதாவது தனக்குத் தானே லைக் போட்டிருக்கின்றார்!😂
  5. 07 SEP, 2024 | 04:12 PM (நமது நிருபர்) கனேடிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் முடிசூட்டு பதக்கத்தை இம்முறை கணேசன் சுகுமார் மற்றும் குலா செல்லத்துரை ஆகிய இரு புலம்பெயர் தமிழர்கள் பெற்றுள்ளனர். கனேடிய அரசினால் மொத்தமாக 18 கனேடியர்களுக்கு இந்த உயர் அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன், அவர்களில் மேற்குறிப்பிட்ட இரண்டு புலம்பெயர் தமிழர்களும் உள்ளடங்குகின்றனர். இந்த முடிசூட்டு பதக்கமானது மன்னர் மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழாவைக் குறிக்கும் விதமாக கனேடிய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட உயர் பெருமைக்குரிய பதக்கமாகும். கனடாவின் ஆளுநர் நாயகம் மேரி சிமொனினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அங்கீகாரம், கனடாவின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்களவு பங்களிப்பு வழங்கியவர்களை கௌரவிக்கும் வகையில் அளிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/193085
  6. விசிகு, ஒன்றியத்தின் தலைவராக இருந்து அதன் யாப்புக்குள் கட்டுப்பட்டு செயற்பட்ட உங்களது நேர்மையைப் பாராட்டுகிறேன். 👏 இப்பொழுது தமிழரசுக் கட்சியை எடுத்துக் கொள்ளுங்கள். சிறீதரன், அரியநேத்திரன் ஆகியோர் கட்சியின் யாப்புக்குள் கட்டுப்பட்டு இருக்கிறார்களா? கட்சிக்குள் பேச வேண்டிய விடயங்களை கட்சிக்குள் இருந்து கொண்டே வெளியில் உமிழ்ந்து கொண்டிருக்கிறார்களே நியாயமாகத் தெரிகிறதா? பொது வேட்பாளராகப் போட்டியிட அரியநேத்திரன் தனது கட்சியிடம் கேட்டாரா? கட்சிதான் அனுமதித்ததா? ஒரு கட்சியின் யாப்புக்குள் கட்டுப்படாதவர்கள் எப்படி தமிழினத்தை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவார்கள்?
  7. எப்படி?? சயித்தை ஆதரிப்பதாக கூட்டம் கூடி முடிவெடுத்து அறிக்கை விட்டு விட்டு ரணிலுக்கு பொன்னாடை போத்தி மதிப்பளித்து ரணில் வந்தால் எங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பார் என்பது தானே??
  8. அரியநேத்திரனை, செந்திலோடு ஒப்பிட்டிருந்தால் ஓரளவுக்காவது ஏற்றுக் கொண்டிருக்கலாம். நிலாந்தனுக்கும் நகைச்சுவை நன்றாக வருகிறது
  9. அங்கை சுமந்திரன்... சஜித்துக்கு ஆதரவு கொடுக்க, இங்கை மாவை... ரணிலுக்கு ஆதரவு கொடுக்க, அங்காலை ஸ்ரீதரன் அரியநேத்திரனுக்கு ஆதரவு கொடுக்க ஒரே தமாசு தான்... போங்க. தமிழரசு கட்சியை.. இப்ப யார் வைத்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. பேசாமல் கட்சியை கலைத்து விட்டு, வேலைக்குப் போய் சம்பாதியுங்கள். பாவம்... செல்வநாயகம் ஆரம்பித்த கட்சியை, நாறப் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.
  10. இளம் சொந்த பந்தங்களுக்குள்ளேயே பணம் பேசு பொருளாக இருக்கும் போது...... வயோபத்திலும், வயோதிப மடத்திலும் பண பேரங்கள் இல்லாமல் இருக்குமா?
  11. Kula Sellathurai 1d · Dear Friends and Family, We are deeply honored and humbled to share that we, Ganesan Sugumar and I, have been awarded the His Majesty King Charles III Coronation Medal by the Government of Canada. We received this prestigious recognition among 18 other remarkable individuals. This medal acknowledges our commitment to community service and philanthropy, striving to make our community, country, and world a better place for future generations. We are sincerely grateful to the selection committee and the Government of Canada for this recognition. We also want to extend our heartfelt thanks to each of you—our friends and family—whose unwavering support and encouragement have been our guiding light and strength throughout our journey. Thank you once again for being such integral parts of our lives and for celebrating this achievement with us. reacti
  12. அதிலும் சுமந்திரனின் சின்ன வீடு என்று ஒத்துக் கொண்டவர்கள் மட்டுமே அங்கே செருப்பை கழட்ட முடியும்
  13. 7 செப்டெம்பர் 2024 அமெரிக்காவில் இரவில் காணாமல் போன 3 வயது குழந்தை 100 ஏக்கர் மக்காச்சோள தோட்டத்திற்குள் தன்னந்தனியாக தவித்ததை ட்ரோன் மூலம் கண்டுபிடித்து காவல்துறையினர் மீட்டனர். விஸ்கான்சின் மாகாணத்தின் ஆல்டோ பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு 8:49 மணிக்கு தங்கள் 3 வயது மகனை காணவில்லை என பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். வீட்டின் பின்புறம் இருந்த மக்காச்சோள தோட்டத்திற்குள் குழந்தை சென்றிருக்கலாம் என அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் தெர்மல் இமேஜிங் டிரோன் மூலம் குழந்தையை தேடிய நிலையில், ஒரு மணிநேர தேடுதலுக்குப் பின் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. எந்த காயமும் இன்றி குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். வீட்டில் இருந்து அரை மைல் தொலைவில் குழந்தை இருந்ததாகவும் அவர்கள் கூறினர். https://www.bbc.com/tamil/articles/c07elm8747xo
  14. நிஜமாகவே பாராட்டபட வேண்டும் இன்றைய தொழில்நுட்பத்தை ......... சிறு விலங்குகளால் ஏதும் ஆபத்தின்றி பிள்ளை காப்ப்பாற்றப் பட்டதே பெரிய விடயம் . ........! 👍
  15. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு, நோயாளிகள் பாதுகாப்பு தொடர்பான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்திய வைத்தியசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் இரு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் தானே கர்பிணிபெண்ணை உரியமுறையில் கவனிக்காத தற்கு கண்டணங்கள் தெரிவிக்கப்படடன ...அதற்கிடையில் விருதுவழங்கிக் கெளரவமா ?... பணம் ....பாதாளம் மட்டும் பாயுமாம்.
  16. ஒரு விருதை, சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொடுத்திருக்கலாம். 😂
  17. அண்ணை ஏராளன் அவர்களே! எதற்கும் உங்களின் இந்த நண்பர்களை முன்னுக்கு நின்று எண்ணாமல் பின்னுக்கு நின்று எண்ணிப்பாருங்கள். நாலை விடுங்கள், உங்கள் ஒன்றும் இருந்த இடம்தெரியாமல் பறந்துவிடும்.🧐🤪
  18. இதில் என்ன சந்தேகம் ..... நம்முடைய நண்பர்கள்தான் தம்பி . .......! 😂
  19. வட கிழக்கு மாகாங்கள் இணைந்த தமிழர் தாயகத்தில் சுயாட்சி என்ற கோஷத்தை முன்வைத்து தமிழர் தாயகத்தில் ஒரு பொது வாக்கெடுப்பு என்று கூறி அரசியநேந்திரன் என்ற பொதுவேட்பாளரை இறக்கியவர்கள் இப்போது எம்ஜியார், நம்பியார் கதைகளை சொல்லி வாக்கு கேட்க வேண்டிய பரிதாப நிலை. 😂 அரியம் நீங்க எம்ஜி ஆர் மாதிரியுங்க. 😂 - நிலாந்தன்
  20. அரச ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை 57,500 ரூபாயாக உயர்த்துவோம். - சஜித்.-
  21. மதில்மேல் இருக்கிற இந்தப்பூனை எந்தப்பக்கம் தாவும் என்று தெரியவில்லையே? அனுரா கூறிய கருத்துக்கு இவர் விளக்கம் கொடுக்க எப்படி முடிந்தது? மொத்தத்தில் எல்லா கட்சிகளும் இனவாத பிரச்சனையில் ஒரே கொள்கை, அதில் இவர் பங்குதாரர் அவ்வளவே. ரணில் உறுதியளித்தார் என்கிறார், ரணிலோ அப்படி ஏதும் நடக்கவில்லை என்றவுடன் நாமல் இவர் வீட்டுக் கதவை தட்டினார். அப்புறம் சஜித் என்கிறார், இப்போ அனுராவுக்கு வக்காலத்து? மக்கள் எந்தப்பக்கம் என்று தெரியாமலேயே கொப்புக்கு கொப்பு தாவித்திரியிறார்.
  22. மகாவிஷ்ணு கைது, 5 பிரிவுகளில் வழக்கு - எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கலாம்? பட மூலாதாரம்,PARAMPORUL FOUNDATION/YT படக்குறிப்பு, தமிழாசிரியர் மகாவிஷ்ணு வாக்குவாதம் செய்த காட்சிகள் இணையத்தில் வெளியாயின. கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 7 செப்டெம்பர் 2024 சென்னையில் அரசுப் பள்ளி ஒன்றில் பாவம், புண்ணியம் குறித்து மகாவிஷ்ணு என்பவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிகழ்ச்சியில், பார்வை மாற்றுத் திறனாளி ஆசிரியரை அவமதித்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்பிய மகாவிஷ்ணுவை, சென்னை விமான நிலையத்திலேயே காவல்துறையினர் கைது செய்தனர். அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே மகாவிஷ்ணு விவகாரம் பெரிதாக்கப்படுவதாக, இந்து அமைப்பினர் விமர்சித்துள்ளனர். 'சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் அரசு இதுபோன்று கெடுபிடி காட்டுவதில்லை' என்பது அவர்களது குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டு குறித்து பள்ளிக்கல்வித்துறை என்ன சொல்கிறது? பள்ளிகளில் மதம் சார்ந்த நிகழ்வுகள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை என்ன? சென்னை அசோக் நகரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசுவதற்காக 'பரம்பொருள்' அறக்கட்டளையை நடத்தி வரும் மகாவிஷ்ணு என்பவர் அழைக்கப்பட்டார். அவர் தனது பேச்சில், பாவ புண்ணியம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. பின்னர், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஆண்கள் மாதிரி பள்ளியில் பேச அழைக்கப்பட்டார். அங்கு மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு பார்வை மாற்றுத் திறனாளியும் தமிழாசிரியருமான சங்கர் எதிர்ப்பு தெரிவித்தார். அவருடன் மேடையிலேயே மகாவிஷ்ணு வாக்குவாதம் செய்த காட்சிகள் இணையத்தில் வெளியாயின. மகாவிஷ்ணு மீது குவிந்த புகார்கள் சமூக வலைதளங்களில் இந்த காட்சிகள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இரண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர். மகாவிஷ்ணுவின் பேச்சைக் கண்டித்து மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, சைதாப்பேட்டை காவல்நிலையம் மற்றும் அசோக் நகர் காவல்நிலையத்தில் அவர் மீது புகார்கள் அளிக்கப்பட்டன. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர் வில்சன் அளித்த புகார் மனுவில், 'மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் வன்கொடுமை சட்டம் மற்றும் ஊனமுற்றோர் உரிமைகள் சட்டப்பிரிவு 72(அ) படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, திருப்பூர் குளத்துப்பாளையத்தில் செயல்படும் மகாவிஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் அனிதா ஆனந்த் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவரை, செப்டம்பர் 20-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர் வில்சன் அளித்த புகார் மனு இதுபோன்ற நபர்களுக்கு வரவேற்பு கிடைப்பது ஏன்? "ஆன்மிகத்துக்கு தேவையான முதிர்ச்சி மகாவிஷ்ணுவிடம் இருப்பது போல தெரியவில்லை. இந்து ஆன்மிகம் என்பது அனைத்தையும் துறப்பது தான். பரம்பொருள் என்று சொல்லும் நிலைக்கு அவர் மாறவில்லை. ஓஷோவிடம் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் அதற்கு ஒரு பதில் இருக்கும். இவர்களைப் போன்றவர்களிடம் கேள்வி கேட்டால் கோபப்படுவார்கள்" என்கிறார், எழுத்தாளர் இரா.முருகவேள். "மகாவிஷ்ணு சிறைக்கு சென்று வந்தாலும் அவரை ஆதரிப்பதற்கு ஒரு கூட்டம் தயாராக இருக்கும். மறுபிறவி, பூர்வ ஜென்மம் ஆகிய விஷயங்களில் நம்பிக்கை உள்ள கூட்டம் அவரை ஆதரிக்கவே செய்யும்" என்று அவர் கூறுகிறார். "தன் மீது மக்களுக்கு பயபக்தி, மரியாதை இருக்க வேண்டும் என மகாவிஷ்ணுவை போன்றவர்கள் எதிர்பார்ப்பது வழக்கம். அது கேள்விக்குள்ளாகும் போது கோபப்படுகின்றனர். மாற்றுத்திறனாளி ஆசிரியரை பேசவிடாமல் செய்ய வேண்டும் என்பது தான் அவரின் நோக்கமாக இருந்துள்ளது" என்று குறிப்பிடுகிறார் முருகவேள். பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, மாற்றுத்திறனாளி ஆசிரியரை பேச விடாமல் செய்ய வேண்டும் என்பது தான் மகாவிஷ்ணுவின் நோக்கமாக இருந்ததாக குறிப்பிடுகிறார் எழுத்தாளர் முருகவேள் இந்து அமைப்புகள் குற்றச்சாட்டு ஆனால், பள்ளிக்கல்வித் துறையில் நடக்கும் தவறான விஷயங்களை திசைதிருப்பவே மகாவிஷ்ணு விவகாரம் பெரிதுபடுத்தப்படுவதாக கூறுகிறார், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வழக்கறிஞர் பிரிவான அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் வழக்கறிஞர் ராமமூர்த்தி. "கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி பயிற்சிகளை நடத்தி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது. மற்ற பள்ளிகளிலும் இதுபோல போலி முகாம்கள் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதுபோன்று பள்ளிக்கல்வித்துறை மீது எழுந்த விமர்சனங்களை மறைப்பதற்காக நடத்தப்படும் யுக்தியாகவே இதைப் பார்க்கிறோம்". என்கிறார் ராமமூர்த்தி. தொடர்ந்து பேசிய அவர், "மகாவிஷ்ணு விவகாரத்தை வைத்துக் கொண்டு பள்ளிகளில் என்ன பேச வேண்டும், என்ன பேசக் கூடாது என்பதில் வழிகாட்டுதல்களை கொண்டு வருவதற்கு இதைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதற்கு முன்பு இவ்வாறு மகாவிஷ்ணு பேசியதாக எந்த தகவலும் இல்லை. சொல்லிக் கொடுக்கப்பட்டு பேசப்பட்டதா என்பதை ஆராய வேண்டும். இதை நாடகமாகவே பார்க்கிறோம்" என்றார். “மதத்தையும் அரசையும் தள்ளி வைப்பது என்பது வேறு. இவர்கள் இந்து மதத்தை மட்டும் தள்ளி வைக்கின்றனர். கிறிஸ்துவ, இஸ்லாமிய பள்ளிகளில் நடக்கும் விஷயங்களைக் கண்டு கொள்ள மாட்டார்கள்" என்று அவர் குற்றம்சாட்டுகிறார். பட மூலாதாரம்,@ANBIL_MAHESH படக்குறிப்பு, மகாவிஷ்ணுவிடம் கேள்வியெழுப்பிய தமிழ் ஆசிரியர் சங்கருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித் துறை விளக்கம் வழக்கறிஞர் ராமமூர்த்தியின் குற்றச்சாட்டை பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் மறுத்துள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இந்தப் பிரச்னையில் தலைமை ஆசிரியையின் பங்களிப்பு எதுவும் இல்லை. பள்ளி மேலாண்மைக் கமிட்டியை சேர்ந்த பெண்மணி ஒருவர் தான் மகாவிஷ்ணுவை கூட்டி வந்திருக்கிறார். இவ்வாறு பேசுவார் எனத் தெரிந்திருந்தால் அவரை அனுமதித்திருக்க மாட்டார்கள். அதேநேரம், சைதாப்பேட்டை பள்ளிக்கு, அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியையை தான் கூட்டிச் சென்றுள்ளார். அங்கு தான் பிரச்னை ஏற்பட்டது" என்றார். தொடர்ந்து பேசிய அவர்,"மெட்ராஸ் கல்வி சட்டத்தில், மதம் சார்பான எந்த நிகழ்வுகளையும் பள்ளி வகுப்பு நேரங்களில் நடத்தக் கூடாது என உள்ளது. இது அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும். சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் அவர்களுக்கான சலுகைகள் உள்ளன. ஆனால், வகுப்பறைகளில் நடத்தப்பட வேண்டியதை மட்டுமே அவர்கள் செயல்படுத்த வேண்டும்" என்கிறார் கண்ணப்பன். மகாவிஷ்ணுவுக்கு எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை கிடைக்கும்? மகாவிஷ்ணு மீதான சட்ட நடவடிக்கைகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், "மத ரீதியான உணர்வுகளை புண்படுத்தினால் மட்டுமே வெறுப்பு பேச்சு என்ற பிரிவில் வழக்கு பதிவாகும். இன்னொரு மதத்தை பாதிக்கும் வகையில் மகாவிஷ்ணு எதையும் பேசவில்லை. பார்வை மாற்றுத் திறனாளியிடம், 'முன் ஜென்ம பாவம்' எனக் கூறியது அவர்களை அவமதிக்கும் செயல். அதற்காக அவதூறு வழக்கு மட்டுமே பதிவு செய்ய முடியும்" என்கிறார். "அவதூறு என்பது தனி மனிதர்களை இலக்காக வைத்து பேசினால் வரும். அவர், பார்வை மாற்றுத் திறனாளிகள் அனைவரையும் குறிப்பிடுகிறார். பகுத்தறிவுவாதம் பேசும் பிரிவினரை அவமதிக்கும் வகையில் பேசியதாக அவதூறு வழக்கைப் பதிவு செய்யலாம். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கைது செய்யலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்" என்கிறார் ராதாகிருஷ்ணன். ‘மாணவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படும்’ "தன்னால் அனைத்தையும் சாதிக்க முடியும்; மற்றவர்களுக்கு இல்லாத சக்தி தன்னிடம் இருப்பதாக சிலர் நினைக்கின்றனர். அதுதான் இதுபோன்ற சர்ச்சைகளுக்கு காரணம்" என்கிறார் மூத்த மனநல மருத்துவர் சிவநம்பி. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பள்ளி மாணவர்களிடம் இவ்வாறு பேசும் போது அவர்களுக்கு மனவருத்தமும் மனச் சோர்வும் ஏற்படும். பிற்காலத்தில் இது பாதிப்புகளை ஏற்படுத்தும். பொது இடத்தில் இதுபோன்று பேசும்போது பிரச்னை இல்லை. அதைக் கேட்பவர்கள் கேட்கட்டும். மற்றவர்கள் புறக்கணித்துவிட்டு செல்வார்கள். பள்ளிகளில் இவ்வாறு பேசுவது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்" என்கிறார். அரசின் 4 அறிவுறுத்தல்கள் பட மூலாதாரம்,@ANBIL_MAHESH படக்குறிப்பு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், பள்ளிக் குழந்தைகளுக்கு முற்போக்கான அறிவியல்பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெறும் வகையில் புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிடுவதற்கு தான் ஆணையிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அதற்கேற்ப, வெள்ளிக்கிழமையன்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக பிபிசி தமிழிடம் கண்ணப்பன் தெரிவித்தார். "கூட்டத்தில், எந்த சூழலிலும் தனியார் நிகழ்வுகளை பள்ளிகளில் அனுமதிக்கக் கூடாது; பாடம் தொடர்பானவற்றை மட்டும் பேச அனுமதிக்கலாம்; ஆசிரியர்கள், பேராசிரியர்களைக் கொண்டு தன்னம்பிக்கை வகுப்புகளை எடுக்கலாம். பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன" என்கிறார் கண்ணப்பன். அனைத்துப் பள்ளிகளும் வரும் காலத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வகுக்க, முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், கமிட்டி ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் கண்ணப்பன் குறிப்பிட்டார். தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தகவல் இந்நிலையில், 'மகாவிஷ்ணுவை கண்டித்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் கிறிஸ்துவர்' என்ற தகவல் இணையத்தில் பரவியது. "இது முற்றிலும் தவறான தகவல். சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வரும் 'அந்தோணி பர்ணாந்து' என்ற முகநூல் பக்கம், ஆசிரியர் சங்கருடையது அல்ல" என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு தெரிவித்துள்ளது. - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/czrgz67d001o
  23. இந்திரா காந்தியின் தோழி சிறிமா பண்டாரநாயக்க கூட சீன ஆதரவாளர் தான். எனவே காந்தி தேச வெருட்டல்கள் சிறிலங்காவில் எடுபடாது. சிங்களவர்கள் ஹிந்தி பாட்டு கேட்பதுடன் தமது இந்திய உறவை நிறுத்தி விடுவார்கள்.🤣
  24. இந்தியாவின் அடுத்த ஆக்கிரமிப்பு....பொருளாதார,ஆத்மீக ஆக்கிரமிப்பு அன்று பிரித்தானியா நாடுகளை கைப்பற்றி பாலம் ,துறைமுகம்,ரயில்பாதை,மதம் பரப்பினர் இன்று இந்தியா ,சீனா போன்ற நாடுகள் அதை செய்கின்றனர் ..அபிவிருத்தி என்ற போர்வையில்
  25. விழிப்புலன்ற்ற ஒருவருக்கு பிறந்த குழந்தை, பாலருந்தும் போது மூச்சு திணறி இறந்து விட்டது, அவருக்கு குழந்தை இறந்த விடயத்தினை உறவினர், உங்கள் குழந்தை பாலருந்தும் போது மூச்சு திணறி இறந்துவிட்டது என கூறினார்கள், அதற்கு அவர் பால் எப்படி இருக்கும் என வினவினார் ( இது ஒரு கதைக்காக மட்டும்), அதற்கு உறவினர்கள் கொக்கு போல் வெள்ளையாக இருக்கும் என்றார்கள், அதற்கு அவர் கொக்கு எப்படி இருக்கும் என்றார், இவர்கள் தமது கையினை வளைத்து கொக்கு போல் செய்து காட்டினார்கள் அதனை தடவி பார்த்துவிட்டு இப்படிப்பட்ட முரட்டுப்பாலை குடித்தால்குழந்தை எப்படி இறக்காது என கேட்டார். இலங்கையர்களின் பிரச்சினை இனவாதம், மதவாதம், சாதியம் என பல பிடிவாதங்கள், பாதிக்கப்பட்டவர்களிற்கு மேல் குற்றம் சாட்டி தமது தவறுகளை தொடர்தல், தவறுகளை சுட்டிக்காட்டும் போது அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்குவது. இதனாலேயே போர் முடிந்த பின்னரும் மொத்த நாடே வங்குரோத்தானது, இது ஒரு தொடர்கதை ஆக தொடரும், இங்கிலாந்திடமிருந்து சுதந்திரம் பெற்றவர்கள் தற்போது அதே சுதந்திரத்தினை இந்தியாவிடம் அடகு வைத்துள்ளார்கள். இந்தியாவின் ஆசீர்வாதம் இல்லாமல் தொடர்ந்து ஆட்சியில் கூட தாக்குபிடிக்க முடியாத நிலையில் உள்ளார்கள். இவர்களுக்கு இது கடைசி வரை புரியப்போவதில்லை, இலங்கையில் உள்ள பிரச்சினைக்கு சிறுபான்மையினர் காரணம் அல்ல என்பதை புரியாதவர்களால் எப்படி நாட்டை வழிநடத்த முடியும்? இலங்கை, வல்லரசுகளின் போட்டிக்கு, கோயிலுக்கு நேர்ந்துவிட்ட முட்டாள் ஆடு.
  26. புலரின் தற்காலிக செயற்பாட்டிமாக முதியோர் சங்க கட்டிடத்தை பாவிக்கிறோம் அக்கா. அங்கே மதிய உணவு மட்டும் பொருளாதாரத்தில் பின் தங்கிய முதியோர்களுக்கு கொடுக்கினம். அதற்கு முதியோர்கள் பலர் இணைந்து தனியான நிர்வாகம் செய்கிறார்கள். எனது தந்தையார் தலைவராக இருக்கிறார். வெளிநாட்டு, உள்நாட்டு மக்களின் நன்கொடைகளால் முதியோர் சங்கம் செயற்படுகிறது.
  27. விதி விலக்குகள் உண்டு. என்னுடன் படித்த இருவர், இருவரும் மருத்துவர்கள் முதியோர் காப்பகங்களை கொழும்பில் / தெற்கில் நடாத்தி வருகின்றனர். என் நண்பர்களின் வயதான தந்தைமார்கள் சிலர் அங்கு தான் இருக்கின்றனர். ஊரில் அவர்களது உறவினர்கள், தந்தைமார்களின் சகோதரங்கள் பலர் இருப்பினும், இக் காப்பகங்களில் தான் உள்ளனர். மிகவும் தரமான, சுத்தமான காப்பகங்கள் இவை. வயோதிபர்களை நன்றாக பராமரிக்கின்றனர். இங்குள்ள (கனடா) காப்பங்களை விட நன்றாக உள்ளன. அண்மையில் மாமியார் மருமகள் பிரச்சனைகளால் என் நண்பர் ஒருவரின் அம்மாவை இங்கிருந்து அங்கு தான் கொண்டு போய் விடும் நிலை ஏற்பட்டது. தாயார் பம்பர்ஸ் கட்ட மறுத்து வீடு முழுக்க மலசலம் கழிப்பார். நண்பனும், அவன் மனைவியும் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது அவரின் கழிவுகள் தான் வரவேற்கும். இப்ப அங்கு போய், பம்பர்ஸ் அணிகின்றார்.
  28. அநேகமான காப்பகங்களின் நோக்கம் பணம் மட்டுமே என்பது தெளிவாகிறது. 😭
  29. கோட் : விமர்சனம்! Sep 05, 2024 18:15PM தமிழ் சினிமாவில் மசாலா படங்கள் எனும் ரகம் பரிணாமம் அடைந்து கொண்டே வருகிறது. கத்திச் சண்டை, அம்மா சென்டிமென்ட், தங்கச்சி சென்டிமென்ட், பாட்டாளி வர்க்கத்தின் காவலன் போன்ற விஷயங்களை கொண்டது தான் எம்ஜிஆர் ஃபார்முலா. இதுதான் தமிழ் சினிமாவின் முதல் மசாலா ஃபார்முலா. அதற்கு பிறகு, நாட்டுப்பற்று, அதே சென்டிமென்ட், காதல், பாசம் , இரண்டாம் பாதியில் ஒரு குத்துப் பாட்டு என அந்த ஃபார்முலாவில் அந்தந்த காலத்திற்கு ஏற்ப சிறிதளவு மாற்றங்களுடன் மசாலா படங்கள் வெளியாகின. அதன்படி, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகியுள்ள ‘ மாடர்ன் மசாலா ‘ திரைப்படம் தான் ‘ கோட் ‘ படத்தின் ஒன்லைன் ‘ சாட்ஸ் ‘ எனும் ரா ஏஜென்சியைச் சேர்ந்த விஜய், பிரசாந்த், பிரபு தேவா, மற்றும் அஜ்மல் பல்வேறு ஸ்பை ஆபரேஷன்களை பிசிறின்றி செய்து முடிப்பதில் வல்லவர்கள். இந்த நிலையில், ஒரு ரகசிய ஆபரேஷனுக்காக விஜய் பாங்காக் செல்ல நேர்கிறது. தன் குடும்பத்துடன் பேங்காக் செல்லும் விஜய் சந்திக்கும் பிரச்சனை, அதனால் ஏற்படும் இழப்பு, அந்த இழப்பிற்கு பிறகு அவர் வாழ்க்கையில் நடக்கும் திருப்பம் இதுவே ‘ கோட் ‘ படத்தின் கதை. அனுபவ பகிர்தல் நடிகர் விஜய்க்காகவே எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் தான் ‘கோட் ‘. ஆனால், டான்ஸ், காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் என்று அவரின் டிரேட் மார்க் காட்சிகள் நிறைந்திருந்தது. அது மட்டுமில்லாமல், ஒரு புத்தம் புதிய விஜய்யை பார்த்த அனுபவம் நமக்கு கிடைத்தது. அதற்கு காரணம் மகன் விஜய் கதாபாத்திரத்தில் இருந்த விஜய்யின் நடிப்பு. ஏறத்தாழ எஸ். ஜே.சூர்யா மோடில் இருந்தது. படத்தில் பயன்படுத்தப்பட்ட ‘டிஏஜிங்’ தொழில்நுட்பம் பல்வேறு விமர்சனங்களை ஆரம்பத்தில் சந்தித்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் படக்குழுவினர் அதை மிகச் சிறப்பாக படத்தில் சரி செய்துள்ளனர் . அப்பா – மகன் என இரண்டு கதாபாத்திரங்களையும் வேறு படுத்தி பார்க்க முடிந்தது. 90′ ஸ் ஸ்டார்களான பிரசாந்த், பிரபு தேவா போன்றவர்களை விஜய்யின் நண்பர்களாக பார்ப்பது மிகப் பொருத்தமாக இருந்தது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை சில இடங்களில் இரைச்சலாக தெரிந்தாலும், பல இடங்களில் கொஞ்சம் பழைய யுவனை பார்க்கமுடிந்தது. அடுத்தடுத்து வரும் படத்தின் திருப்பங்கள், சர்ப்ரைஸ்கள் அழுத்தமாக இல்லாவிடினும் நம்மை ஆச்சரியப்படுத்த தவற வில்லை. திரையில் ஆங்காங்கே உதிர்ந்த சில அரசியல் வசனங்கள், விஜய்யின் சொந்த வாழ்க்கை குறித்த வசனங்கள் போன்றவை வெங்கட் பிரபு படங்களின் டிரேட் மார்க். குறிப்பாக விஜய் தன்னுடைய அடுத்த சினிமா வாரிசாக ஒருவரை பூடகமாக நியமிக்கிறார். அந்த காட்சி இன்னும் சில நாட்களுக்கு பேசு பொருள். மொத்தத்தில் ஒரு மாடர்ன் மசாலா திரைப்படம் பார்த்த அனுபவம் வெகு நாட்களுக்கு பிறகு பலருக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு. விரிவான விமர்சனம் தமிழ் சினிமாவில் நமக்கு மிகவும் பழக்கப்பட்ட கதையை கமர்ஷியல் பேக்கேஜிங்கோடு, ஜனரஞ்சக தன்மை மாறாது படைப்பதே வெற்றிகரமான கமர்ஷியல் திரைப்படம் என்று கருதப் படுகிறது. மக்களுக்கு தெரிந்த ஒரு கதையை ஒவ்வொரு முறையும் புதுமையாக அவர்களுக்கு படைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் கமர்ஷியல் படங்களின் சொல்லப்படாத விதி. அந்த வகையில், அதை சரியாகவே செய்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு. அப்பா – மகன் கதாபாத்திரங்களில் விஜய் , அவரை பழிவாங்க துடிக்கும் வில்லன், வில்லனை விஜய் எப்படி வென்றார் என்பதே சாராம்சம். ஆனால், அதற்குள் பல்வேறு மாடர்ன் யுக்திகள் கையாளப்பட்டுள்ளதே ‘ கோட்’ டின் சிறப்பு. ஏனென்றால் , தற்போது சினிமா பார்க்கும் வெகுஜனத்தின் அதிகபட்ச எதிர்பார்ப்பு, ஒரு படம் அவர்களை ஆச்சரியப்படுத்த வேண்டும். தியேட்டரில் ‘வைப் ‘ஆக வேண்டும். அதை ஓரளவு சரியாக செய்தாலே அந்த படத்திற்கு வெற்றி நிச்சயம். ஆனால், அந்த யுக்தியை மட்டுமே முழுதாய் நம்பாமல் , புதிய கதாபாத்திர வடிவமைப்பில் விஜய், டீ ஏஜிங் போன்ற தொழில்நுட்ப முன்னெடுப்பு எனப் பல்வேறு வித்தியாச முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் வெங்கட் பிரபு. தொழில்நுட்ப ரீதியாக விஜய் காந்தின் ஏ.ஐ தோற்றம் கொஞ்சம் ஏமாற்றத்தை அளித்தாலும், அது பயன்படுத்தப்பட்ட விதம் நல்ல ஐடியா. டிஏஜிங்கில் மொத்த செலவை போட்டதாலோ என்னவோ, மற்ற சாதாரண காட்சிகளில் கிராபிக்ஸ் கொஞ்சம் சுமாராக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மாடர்ன் மசாலா படத்திற்கான பிரம்மாண்ட கலர்ஃபுல் ஒளிப்பதிவை செய்துள்ளார் சித்தார்த் நுனி. முதல் பாதியில் இடைவேளை காட்சி வருவது வரை திரைக்கதையில் சிறிய தொய்வு தெரிகிறது . முதல் பாதியின் நீளத்தை நிச்சயம் குறைத்திருக்கலாம். அல்லது, அந்தப் பாதியில் வரும் சென்டிமென்ட் காட்சிகளை இன்னும் அழுத்தமாக அமைத்திருந்தால் நம்மால் அந்த கதாபாத்திரங்களோடு ஒட்டியிருக்க முடியும். படத்தின் முக்கியமான ட்விஸ்டாக இவர்கள் நம்பியிருந்த இடைவேளை காட்சி ட்விஸ்ட் நாம் கணிக்கும் வகையிலே இருந்தது. ஆனால் இரண்டாம் பாதியில் வரும் சில சர்ப்ரைஸ், ட்விஸ்ட் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. கே. வி. ஆனந்த் ஸ்டைலில் முக்கிய கதாபாத்திரங்களின் மறைவிற்கு பின் வரும் ஒரு டூயட் பாடல் பெரிதாக படத்தோடு ஓட்டவில்லை. ஆனால், விசில் போடு , மட்ட போன்ற பாடல் தியேட்டரில் வருகிற இடம் மற்றும் அவைகள் காட்சியமைக்கப்பட்ட விதம் தியேட்டரை அலற வைத்தது. படத்தில் ட்விஸ்ட்கள் எக்கச்சக்கமாக உள்ளது. தியேட்டரில் ரசிகர்கள் ஆர்ப்பரிக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு வசனங்கள், காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவைகளுக்கான காரணம் கதையில் உள்ளதா? அவை அழுத்தமாக சொல்லப்பட்டதா? நம் ரசனையை மேம்படுத்துகிறதா? போன்ற கேள்விகளை நீங்கள் கேட்பீர்கள் என்றால், இது உங்களுக்கான படம் அல்ல. ஆனால் நிச்சயம் சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் நிறைந்த ஒரு தரமான மசாலா படம் பார்த்த அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். விஜய் ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய ட்ரீட். அதிலும் மகன் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்த நடிப்பு அவரின் இத்தனை கால அனுபவத்தை காட்டியது. நிச்சயம் குடும்பத்தோடு தியேட்டரில் காணலாம். வித்தியாசமான பரிணாமத்தில் ஒரு வழக்கமான மசாலா படத்தை பார்த்த அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். https://minnambalam.com/cinema/goat-review-vijay-venkat-prabhu-treat/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.