Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    15
    Points
    15819
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    88812
    Posts
  3. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    35001
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33807
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/07/24 in Posts

  1. முற்றிலுமாக, சுமந்திரன், கஜேந்திரன், டக்கிளஸ், விக்கினேஸ்வரன் உட்பட அனைவரையும் தமிழ் மக்கள் நிராகரிக்கத் தொடங்க வேண்டும். இவர்களால் இந்த 15 வருடங்களில் எந்த நன்மையும் ஏற்படவில்லை, என்பதுடன் இவர்களின் புழுத்துப் போன, வங்குரோத்து அரசியலால் தமிழ் இளைய சமுதாயம், அரசியலை விட்டே தூர விலகி நிற்கின்றது. இவர்களுடன் சேர்ந்து, தாயக அரசியலில் இருந்து புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் செல்வாக்கும் முற்றாகத் களையப்படல் வேண்டும். இன்றிருக்கும் தமிழ் அரசியல்வாதிகளை நிராகரிப்பதன் மூலமே இது சாத்தியமாகும். அனைவரும் நிராகரிக்கப்பட்டு, மீண்டும் பூச்சியத்தில் இருந்து ஆரம்பிப்பதே தமிழ் மக்களுக்கு நன்மை தரும். இயற்கை வெற்றிடங்களை நிரப்பாமல் விடுவதில்லை.
  2. உளுத்துப்போன மரம் எரிக்கவும் உதவாது . .........! இனி ஈஸிசேரில் கிடந்து அண்ணாந்து பார்த்து பல தலைமுறைக்கு சொத்து சேர்த்தாச்சுது, ஆனால் இந்த மக்களுக்கு என்ன நன்மை செய்தேன் என்று நினைக்கும்பொழுது கண்ணோரம் கண்ணீர் உருளும் .........!
  3. நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது....
  4. சீ சீ அவர்கள் உங்கள் பின்னால் ஓடத்தான் நேரம் இருக்கு. அங்கால கச்சையும் உருவப்படப்போவது தெரிய வாய்ப்பில்லை. எனக்கு இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை புலிகள் மற்றும் தேசியத்தை நேசிப்பவர்களுக்கு ஒரு கண்ணாவது போனால் காணும். அவ்வளவு சிறீலங்கா விசுவாசம்.
  5. இங்கே புலம் பெயர் நாடுகளில் சீமானை ஆதரிக்கும் ஒரு கூட்டம் தாம் தான் இலங்கைத் தமிழரை பிரதிநிதித்துவம் செய்யும் ஆட்கள் என்று சொல்வது போல சுமத்திரணை எதிர்க்கும் கூட்டமும் தாம் தான் மொத்த யாழ்பாணத்துக்கே சொந்தம் என்று நினைத்துக்கொண்டு உள்ளது. வெளியே தமது அரசியல் கருத்துக்ககளை பகிர்ந்து கொள்ளாத ( வெறி நாய்க்கடிக்குப் பயந்து ) நன்கு படித்த பண்பான ஒரு சனம் இன்றும் யாழ்ப்பாணத்தில் உள்ளது. அவர்கள் சுமத்திரனைத் தான் ஆதரிப்பார்கள். மேற்படி சனங்கள் வெளியே தாம் சுமந்திரன் ஆதரவாளர்கள் என்று சொல்லிக்கொள்ளததால் பலர் அங்கே சுமத்திரனுக்கு பயங்கர எதிர்ப்பு என்று நம்ப வைக்கப்படுகின்றார்கள்.
  6. விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டு இருந்த வேளை, சசிகலாவின் நெருங்கிய உறவொருவர் தன் முகனூலில் சசிகலா விருப்பு வாக்குகளின் அடிப்படையில் சுமந்திரனுக்கு முன்னுக்கு நிற்கின்றார் என தொடர்ந்து நிலைத்தகவல்கள் போட்டுக் கொண்டு இருந்தார். பின் நிலைமை மாறிய பின் சுமந்திரன் சுத்துமாத்து செய்துதான் சசிகலாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னுக்கு வந்தவர் என்றார். அதற்கு ஆதாரமாக சுமந்திரன் மகேசனை சந்தித்ததை குறிப்பிட்டு இருந்தார். பெரும்பாலான புலம்பெயர் தமிழ் ஊடகங்களும், சமூகவலைத்தள பக்கங்களும் அவரது முகனூலின் நிலைத்தகவலளை அடியொட்டி அதனையே கூறின. நானும் என் பங்குக்கு என் முகனூல் பக்கத்தில் சுமந்திரனை திட்டி ஒரு பதிவு வேறு போட்டிருந்தேன். ஆனால் அடுத்த நாள் மாலையின் பின், சசிகலாவின் உறவு அந்த முகனூல் பதிவுகள் அனைத்தையும் அழித்து விட்டார். சசிகலா தான் வென்றவர், ஆனால் சுமந்திரன் அதை தட்டிப் பறித்து போட்டார் என இலங்கையில் இருந்து வெளிவரும் நம்பிக்கை தரக்கூடிய எந்த ஊடகமும் செய்தியாக கூட போடவில்லை. வீரகேசரி, தினக்குரல், டெய்லி மிரர், தமிழ் மிரர் போன்றவை இவ்வாறான குற்றச்சாட்டை பற்றி பிரசுரிக்கவும் இல்லை. புலம்பெயர் ஊடகங்கள், முக்கியமாக தமிழ்வின், பதிவு போன்ற இணைய பத்திரிகைகள் மட்டுமே தொடர்ந்து இது பற்றி சொல்லிக் கொண்டு இருந்தன. உத்தியோகபூர்வமான முடிவுகளும் அறிவிக்கப்பட்ட பின் சசிகலாவும் எந்த இடத்திலும் இது பற்றி கருத்து தெரிவிக்கவும் இல்லை, நடவடிக்கை எடுக்கவும் இல்லை. அத்துடன் சுமந்திரன் போய் மகேசனிடம் சொன்னவுடன், உடனே மகேசனால் அவ்வாறு பொய்யான முடிவை அறிவிக்க முடியாது. மீள வாக்கு எண்ணிக்கைக்கு நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டால் அவரது பதவி மட்டுமல்ல அவரது மதிப்பே நிலைகுலைந்து போகும் என்பதை அறியாதவர் அல்ல அவர். அத்துடன் அவர் அரசியல்வாதியும் அல்ல, மதிப்புமிக்க ஒரு தமிழ் அதிகாரி அவர். சசிகலா வழக்கு தொடுத்து இருந்தால், அவருக்கு கோத்தாவால் அச்சுறுத்தல் வந்திருக்கும் என்பதலெல்லாம் தவறான அனுமானம். ஏனெனில் இரண்டு தமிழ் அரசியல்வாதிகள் தமக்குள் அடிபடுவதை பார்த்து கோத்தா கொடுப்புக்குள் சிரித்து கொண்டு மேலும் அந்த பிரச்சனையை தீவிரமாக்கி இருப்பார்.
  7. 🤣உங்களுக்கும், விசுகருக்கும் போலிச் செய்திகளை முன்னிறுத்தியாவது ஒரு தரப்பை போட்டுத் தாக்க வேண்டுமென்ற மனப்பாங்கு இருக்கிறது. சில நாட்கள் முன்பு தான், மகேசன் பற்றி நீங்களே "அவர் நேர்மையாளர்" என்று எழுதி, அந்த இடத்தில் நானும் "மகேசன் தான் தேர்தல் பொறுப்பதிகாரி, ஏன் றொமெய்ன் மண்டபத்தினுள் போகலாம், காஷ் கட்டிடத்தினுள் இருந்த எண்ணும் நிலையத்திற்குப் போக முடியாது" என்று விளக்கம் தந்திருந்தேன். அப்ப பேசாமல் போய் விட்டு, இப்ப திரும்பவும் வந்து "பேப்பரில் வந்தது , அதை நம்பினோம்" என்கிறீர்கள். எந்த பேப்பரில் வந்தது? வீர கேசரி, தினக்குரல்? புலத்திலும், உள்ளூரிலும் இருந்த இருந்த ரொய்லெற் ஊடகங்களிலும், யூ ரியூப் குப்பைகளிலும் வந்ததெல்லாம் வைத்துக் கொண்டு இன்னும் போலிச் செய்திகளை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் போன்ற வயது அனுபவம் இருப்போரே இப்படி பொய் எது உண்மை எது என்று தெரியாமல் அப்பாவி கோயிந்தனுகளாக இருந்தால், இங்கே இருக்கும் "பட்டாசு றெஜிமென்ற்" பாடு தான் பரிதாபம்😂! புலிக்காய்ச்சல் இருந்து விட்டுப் போகட்டும், யாருக்குப் பாதிப்பு அதனால்? ஆனால் சீட்டுக்குப் போட்டி போடும் புழுக்கள், ஒட்டுண்ணிகள் போன்றவற்றிற்கு போலிச் செய்திகளை வைத்து முரட்டு முட்டுக் கொடுக்கும் உங்கள் போன்றவர்களால், இப்ப "தமிழ் தேசிய .." என்று எவராவது வாய் திறந்தாலே தாயகத்தில் மக்கள் விலகிப் போய் விடும் நிலை தான் அதிகரித்திருக்கிறது. 2020 இலேயெ அங்கஜனோடு ஆரம்பித்த போக்கு, இந்த முறை அனுர அணியோடு இன்னும் தீவிரமாகும். எல்லாப் புகழும் புலி வால்களுக்கே😂!
  8. பிறவிப் பெருங்கடல் விடிய எழும்ப Google calendar இல வந்த alert ஐப் பாத்து, முதல் வேலையா fb இல தேடி ஒரு photo ஐ எடுத்து what’s app குறூப்பில birthday day wish போட்டிட்டு status இல “ HBD to ……..” எண்டு முழுசாக்கூட எழுதாமல் சுருக்கிப் போட்டிட்டு தன்டை admin வேலையையும் காலைக் கடமையை வடிவாச் செய்திட்டன் என்ற திருப்பதியோட நாளை ஆரம்பித்தார் நம்பி. அவுஸ்திரேலியாவில விடிஞ்சாலும் அல்பேட்டாக்காரன், இரவுக் குளிருக்க ரெண்டு பெக்கைப் போட்டுக்கொண்டிருந்தவன், உடனயே தன்டை பங்குக்கு ஒரு பலூன் படத்தைப் போட்டான். மூத்திரம் போக வேளைக்கு எழும்பி நித்திரை வராமப் போஃனைப் பாத்திட்டு ஆரா இருக்கும் எண்டு யோசிச்சிட்டு , ஏன் பிரச்சினை எதுக்கும் ஒரு வாழ்த்துத் தானே எண்டு தன்டை பங்குக்கு கண்டிக்காரன் வாழ்த்து ஒண்டைப் போட்டான். இரவு 12.00 மணிக்கு பத்துபேர் தடதடவெண்டு வந்து வெட்டின கேக் வாயை கழுவாமலே படுத்தவன், எழும்பின கையோட எந்தெந்த குறூப்பில ஆரார் wish பண்ணினவை எண்டதைப் பாத்திட்டு, wish பண்ணாதவனை ஞாபகாமா வைச்ச படி குளிக்கப் போனான் அம்பி. கொழும்பில விடிகாலை late ஆ எழும்பி கண்ணாடி போடாமலே updated news எல்லாத்தையும் பாத்திட்டு போனகிழமை தன்டை birthdayக்குப் படத்தைப் போடேல்லை இண்டைக்குப் போட்டிருக்கிறார் adminஐத் தூக்கு , எண்டு போர்க்கொடி தூக்கினான் அப்பன். அதுக்குப் பிறகும் வாழ்க்கை வெறுத்து விட்டிட்டுப் போகாமல் அப்பன்டை friend சுப்பனைப் பிடிச்சிச் அப்பனை அடக்கிச் சமாளிச்சுக் கொண்டு குறூப்பை ஓட்டிக்கொண்டிருந்தார் நம்பி. காலமை எழும்பி ஏதாவது நல்ல விசியம் இருக்குமா எண்டு WhatsApp பாக்க ஒரு புது குறூப்பில add பண்ணி இருந்தாங்கள். விசாரிச்சா, “மச்சான் சுசிக்கு birthday வாற மாசம், மனிசி கேட்டது ஒரு video செய்ய வேணுமாம் எண்டு குசும்பர் குறூப்பி்ல நீயும் அவனும் இருக்கிறதைப் பாத்து add பண்ணினான், ஒரு wishing video message அனுப்பி விடு” எண்டான் சிங்கன். கேட்டதை மறந்திருக்க, காசைக் கட்டுங்கோ கெதியா எண்டு ஒரு மாசத்துக்கு முதலே தொடங்கி, ஒவ்வொரு நாளும் தொல்லை தாற insurance காரன் அனுப்பிற reminder இலும் பாக்க reminder கூட வர, கடைசீல சரி எண்டு போட்டு நாலு தரம் எடுத்தும் சரியா வராத வீடியோ message இல என்னை வடிவாத் தெரியிற ஒண்டை upload பண்ணி விட சுசியின்டை குடும்பம் சார்பா சிங்கன் 🙏 போட்டான். முந்தின நாட்களில வீட்டுக்காரர் ஞாபகப் படுத்தினாக்கூட வீண் செலவு எண்டு தெரிஞ்சே மறந்து போன birthday தான் நிறைய, ஆனால் இப்ப அப்பிடியில்லை. எப்ப இந்த birthday கொண்டாட்டம் பெரிசா வந்திச்சுது எண்டே தெரியேல்லை தொற்றுநோய் மாதிரி எல்லாருக்கும் பரவீட்டுது . நல்லதோ கெட்டதோ நடந்தா அதை அறியத்தாறம் எண்ட செய்தியை எங்காயாவது போட்டால் அதை வாசிச்சு அறிஞ்சதோட நிப்பாட்டாமல். வாழ்த்தில இருந்து அஞ்சலி வரை எழுத்தில தொடங்கி, சுருக்கெழுத்தா மாறி கடைசீல கைக்கு நோகும் எண்டு போட்டு Emoji இல வந்து நிக்குது. குறூப்பிலயே இல்லாதவனுக்கும் வாழ்த்துகளும் செத்தவனுக்கு RIP யும் அவங்கள் ஆவியா வந்து பாத்தாலும் எண்டோ தெரியேல்லை நிறையவே கிடைக்கும். அந்தக் காலத்தில கொஞ்சம் வசதியான வீடுகளில மட்டும் பள்ளிக்கூட friends ஐ கூப்பிட்டு பின்னேரம் வீட்டை ஒரு tea party நடக்கும் . ஒருக்கா படிக்கேக்க அப்பிடி ஆக்கள் என்னையும் கூப்பிட போறவீடு பெரிய வீடு, என்னத்தைக் கொண்டுபோற எண்டு தெரியாம முழிச்சன். அவன் “English teacherன்டை favourite student ” எண்டு போட்டு போன மாசம் புத்தகம் விக்க வந்த கப்பலில என்டை அறிவை வளக்க எண்டுஅப்பா மலிவா வாங்கித் தந்த பிரிச்சே பாக்காத பேர் தெரியாத ladybird புத்தகத்தை brown paper bag இல போட்டுக் கொண்டு போய்க்குடுத்தன். ஏனோ தெரியேல்லை அடுத்த முறை என்னை அவன் கூப்பிடவேயில்லை. பொதுவா அந்தக்காலத்தில birthday எண்டால் toffee bag தான் அதுகும் கொஞ்சம் வசதி இருந்தாத்தான். நூறு toffee உள்ள bag வாங்கி வகுப்பில எத்தினை பேர் , ரீச்சர் எத்தினை பேர் எண்டு எண்ணி, ஐஞ்சு மட்டும் கூடப் போட்டு வீட்டில குடுத்து விடுவினம். வாங்கித்தாற delta இல்லாட்டி star toffee bag ஓட பள்ளிக்கூடம் போய் தனக்கு இண்டைக்கு birthday எண்டு வகுப்ப ரீச்சரிட்டை toffee பையை நீட்ட அவ அள்ளி எடுத்திட்டு பிள்ளைகளே birthday பாட்டு பாடீட்டு ஒராள் ஒண்டு தான் எடுக்கோணும் எண்டா. “ happy birthday” வாழ்த்தோட வகுப்பைச் சுத்தி வந்திட்டு பிறகு ஒட்டிக்கொண்டு வாற ஒரு friend ஓட ஒவ்வொரு வகுப்பா ஏறி எல்லா ரீச்சர் மாருக்கும் குடுத்திட்டு வந்திருக்க மிஞ்சிற toffeeஐ பங்கிடிறதுக்கு (பறிக்கிறதுக்கு) இன்டேர்வலில ஒரு குறூப் வரும். இவ்வளவு நாளும் கொம்பாஸால குத்தினவன் இண்டைக்கு திடீர் friend ஆவான். Birthday அண்டு கிடைக்கிற ஒரே ஒரு நன்மை எண்டால் , அண்டைக்கு மாத்திரம் குளப்படி செய்தாலும் அடி விழாது . செய் குழப்படிக்கு வாத்தி பிரம்பைத் தூக்கிக்கொண்டு முன்னால வா எண்டு கூப்பிட , “சேர் இண்டைக்கு இவருக்கு பேத் டே” எண்டு chorus ஆ நாலு பேர் கத்த ,”சரி போய் இரு இண்டைக்கு விடுறன்” எண்டு பதில் வரும். முந்தி birthday எண்டால் கலர்ச்சட்டை போடலாம் எண்டிருந்தது, பிறகு அதுகும் இல்லாமல் போட்டுது. என்டை கஸ்ட காலம் எனக்குப் பிறந்த நாள் பள்ளிக்கூட விடுமுறையில தான் வாறது ஆனபடியால் அந்தக் கொடுப்பனவும் இல்லை. அதோட வருசம் கழிச்சு வாறதால கூடவாச் செய்யிற பயத்தம் பணியாரமும் , முறுக்கும் தான் treat. கொஞ்சம் வளர பெடியளோட போய் ரொட்டியும் கறியும் எண்டு தொடங்கி பிறகு extra ரொட்டி போட்டு ஒரு கொத்து மூண்டு plate எண்டு கேட்டு வாங்கிப் சாப்பிடுறது தான் treat. அதுகும் வீட்டை ஆடு எண்டு சொல்லீட்டு கொண்டு போற காசுக்கு மாடுதான் வாங்கிறது. இப்ப அதுக்கெண்டு தனி budget முதலே ஒதுக்க வேணும். அதோட வெள்ளைக்காரனே வீண் செலவு எண்டு மறந்து போன கனக்கத்தை எங்கடை சனம் மட்டும் தான் பின்பற்றிற மாதிரி இருக்கு. வரியாவரியம் வாற திருவிழாவைத் தவிர double digit ஆம் எண்டு 10, teen தொடங்குதாம் எண்டு 13, adult ஆகீட்டாராம் எண்டு 18, துறப்புக் கொழுவலாமாம் எண்டு 21, golden birthday எண்டு 50, பிறகு60 எண்டு விசேச திருவிழாவும் இருக்கும். கலியாண வீடு மாதிரி hall எடுத்து , invitation card அடிச்சு, Theme colour, 3D cake, cartoon character , photo shooting face painting எண்டு அது birthday பெரிய விழாவா இப்ப வந்திட்டுது. Birthday க்கு cake எப்ப வந்தது எண்டு தெரியாது. முதலில cake இல தொடங்கி, பிறகு சும்மா ஒரு மெழுகுதிரிவந்து, அது பிறகு அது கலராகி, சின்னனாகி, நம்பரா மாறி, பிறகு மத்தாப்பு மாதிரி வந்து, இப்ப birthday song க்கு music போடிற மாதிரி எண்டு கூர்ப்படைஞ்சு வந்து கொண்டிருக்கு. மெழுகுதிரி மாதிரி பத்தாததுக்கு வெட்டிற கத்தியும் மாறிக்கொண்டு போகுது. பாண் வெட்டிற கத்தீல தொடங்கிப் பிறகு butter பூசிற கத்திக்கு ribbon கட்டி இப்ப அதுக்கும் எண்டு special கத்தி கலரில வருது. கலியாணத்தில தாலி கட்டேக்கயே பின்னால ரெண்டு மூண்டு பேர் தான் நிப்பினம் விளக்கோட ஆனால் birthday இல “பொப்” வெடிச்சுப் பூப்போட ரெண்டு பேர், பனிமழை பொழியப்பண்ணக் கொஞ்சப்பேர், chorus பாடக் கொஞ்சப் பேர் எண்டு இளையராஜான்டை stage show மாதிரி ஆக்கள் நிப்பினம். சில நேரத்தில popம் sprayம் கேக் எல்லாத்தையும் மூட சாப்பிட வேற கேக் தேவைப்படும். “அடேய் நாங்கள் அவங்களை மாதிரி இல்லை விளக்கை ஏத்தித்தான் கொண்டாட வேண்டும்” எண்டு நண்பன் நவாஸ் புது வியாக்கியானத்தோட கேக்கை வெட்டி ஆனால் விளக்கை ஏத்திக் கொண்டாடினான். பிறந்த நாள் காரனுக்குத்தான் கேக் தீத்திறது மாறி எங்கயோ படத்தில அரைகுறையாப் பாத்திட்டி இப்ப கேக் வெட்டிறவன் தான் மற்ற எல்லாருக்கும் தீத்த வெளிக்கிட்டான். பழைய காலத்தில நாள் நச்சத்திரம் பாக்கிறது நல்லது கெட்டதுக்கு மட்டுமில்லை பிறந்த நாளுக்கும் தான். பிறந்த நாளண்டு இருந்த நச்சத்த்திரம் பிறகு நாள் மாறி வரும். முந்தின காலத்தில நட்சத்திரதுக்கு கோயிலில ஒரு அருச்சனை தான் பிறந்த நாள் விசேசமா இருந்திச்சுது. இப்ப பிறந்த நாளுக்கு party வைக்கிறது வளரக் கோயிலுக்கு போறது தேய்பிறையாக மாறி நச்சத்திரம் சாத்திரத்துக்கு மட்டும் எண்டு ஆகீட்டுது. அதுகும் ஏதாவது special birthday எண்டால் Scarborough இருக்கிற எல்லாரையும் கூப்பிட்டு கனடாவில தொடங்கி, பிறகு கொஞ்சப்பேரோட போய் கியூபாவில நிண்டு படம் போட்டிட்டு, வாற வழீல லண்டனிலேம் கொண்டாடி பிறகு ஊரில வந்து பெரிசாக் கொண்டாடி எண்டு ஒரு வருசமா அந்தப் படம் ஓடும். படிக்கேக்க இழந்தும், இடம்பெயர்ந்தும், எண்ணிக்கை சுருங்க எல்லாப் பள்ளிக்கூடத்தையும் சேத்து இவ்வளவு தான் எண்டு batchயிலேயே ஒரு இருநூறு பேர் தான் இருந்தம். அப்ப பள்ளிக்கூடம் தாண்டி உறவும் நட்பும் இருந்ததால partyயும் இருக்கிறதைக் கொண்டு பிரிச்சு உறவைப் பெருக்கி நடந்தது. ஆனாலும் பெடியள் மட்டும் தான் அப்பிடியாவது செய்தது எண்டு நெக்குறன். இப்ப ஆம்பிளையும் பொம்பிளையுமா ஆயிரம் பேர் இருக்கிற குறூப்பில ஆளே தெரியாத ஒருத்தனுக்கு birthday wish பண்ணிற காலம். அதோட இப்ப இது ஒரு நாள் திருவிழா இல்லை. முதல்ல தனி்யக் குடும்பமா birthdayகொண்டாடிப் பிறகு, வேலை குறூப், gym group, படிச்ச பள்ளிக்கூடம், ரியூசன் சென்டர், பிறந்த ஊர் எண்டு தொடங்கி சர்வதேச levelல ஒரே வருசத்தில பிறந்தது எண்டு உலகளாவிய birthday கொண்டாட்டத்தை ஊர்ஊராப் போய் வைக்கிறது தான் fashion ஆப் போட்டுது. அதோட இப்ப ஒரு புதுசா surprise party எண்டு வேற ஒண்டு தொடங்கி இருக்கு. எல்லாம் தெரிஞ்சும் எதுகும் தெரியாத மாதிரி party நட(டி)க்கிறது தான் அது. எல்லாக் கொண்டாட்டமும் முடிஞ்சு எல்லாருக்கும் நன்றி உரை சொல்லி முடியமுதலே அடுத்த birthday வந்திடும். பிறவிப் பெருங்கடல் எண்டதை சரியா? விளங்கிக் கடல் தாண்டிக் கொண்டாடிக் கொண்டிருக்கிற நாங்கள் அடுத்தது விண்ணைத் தாண்டி விண்வெளியில் தான் கொண்டாடுவம் எண்டு நெக்கிறன் . Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்
  9. இதே கட்சியில் இது நாள் வரைக்கும் ஒட்டிக் கொண்டு இருந்து விட்டு, சீட்டு கிடைக்கவில்லை என்பதற்காகத்தான் விலகி இன்னொரு கட்சியில் சீட்டுக்காக சேர்ந்து இருக்கின்றார். தேர்தலில் தனக்கு முறைகேடு நடந்தது என புலம்பிய இவர், அதுக்காக ஒரு முறைப்பாடு தானும் செய்யவில்லை என்பதுடன், வழக்கும் நடத்தவில்லை (இலங்கை நீதித் துறையில் தனக்கு நம்பிக்கையில்லை என இவர் சாட்டுச் சொல்ல முடியாது, ஏனெனில் கணவரும் அதே துறையில் தான் இருந்தவர். மகளையும் அதே துறையில் தான் படிப்பித்தவர் என நினைக்கின்றேன்). கடந்த சனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு கேட்டு இருந்தார் - தன்னிச்சையாக
  10. தமிழரசு கட்சிக்கு.... கடைசி ஆணி அடித்து, பெட்டி மூடப் போகிறார்கள். கடைசியாக பார்க்க வேண்டிய ஆட்கள், வந்து... பார்த்திட்டு போங்கோ.
  11. இலங்கை சனாதிபதி தனது பாதுகாப்பில் அதிக அக்கறை காட்ட வேண்டிய நேரம் இது. முன்னாள் ஆயுததாரிகளைக் கொண்டு இந்தியாவோ அல்லது ஈஸ்ரர் குண்டு வெடிப்புக்களுடன் தொடர்புபட்ட தரப்புக்கள் இந்தியாவுடன் சேர்ந்து இவரைக் கொல்ல முயற்சிக்கும் அபாயம் மிகவும் அதிகமாக இருக்கிறது. பழி வழமைபோல விடுதலைப் புலிகளின் மேல் போடப்படும்.
  12. உன்னைக்கண்டு நானாட (மகிழ்ச்சிப் பாடல் ) ........! 😍
  13. 07 OCT, 2024 | 12:57 PM வீரகத்தி தனபாலசிங்கம் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்காக அலைந்த களைப்பு போவதற்கு முன்னதாக அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. குறிப்பாக, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களில் தோல்வியடைந்தவர்களின் கட்சிகள் தோல்வியின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு முன்னதாக மீண்டும் தேசிய தேர்தல் ஒன்றை எதிர்நோக்கவேண்டியிருக்கிறது. புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் பிரசாரங்களின்போது நாட்டு மக்களுக்கு உறுதியளித்ததைப் போன்று பதவியேற்ற மறுநாளே பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்டார். கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நியமனப்பத்திரங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிறைவடைகின்றன. தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவிருக்கிறது. தன்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்த மக்களிடம் திசாநாயக்க தனது ஆட்சியை உறுதியான முறையில் முன்னெடுப்பதற்கு வசதியாக தேசிய மக்கள் சக்தி பலம்பொருந்திய அரசாங்கத்தை அமைப்பதற்கு பாராளுமன்ற தேர்தலில் அமோகமான வெற்றியைத் தருமாறு கேட்பார். ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களித்த முறையின் அடிப்படையில் நோக்கும்போது பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்திக்கு அறுதிப்பெரும்பான்மைப் பலம் கிடைப்பது சாத்தியமில்லை என்று முன்கூட்டியே மதிப்பீடுகளை வெளியிடுகிறவர்களும் இருக்கிறார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மூன்று பிரதான வேட்பாளர்களுக்கு கிடைத்த வாக்குகள் பாராளுமன்ற தேர்தலில் அவர்களின் கட்சிகளுக்கு கிடைக்கப்போவதில்லை. அதனால் அந்த மதிப்பீடுகள் பெருமளவுக்கு பொருத்தமானவை அல்ல. அத்துடன் இரு தேசிய தேர்தல்களிலும் ஒரே மாதிரியான காரணிகள் முழுமையாகச் செல்வாக்கு செலுத்துவதில்லை. ஜனாதிபதி திசாநாயக்க ஐம்பது சதவீதமான வாக்குகளை பெறமுடியவில்லை என்றபோதிலும், மக்கள் மாற்றம் ஒன்றுக்காகவே அவருக்கு வாக்களித்தார்கள். மாற்றத்துக்கான வேட்பாளராக திசாநாயக்கவை அடையாளம் கண்டு வெற்றிபெறவைத்த மக்கள் அவர் உறுதியான அரசாங்கத்தை அமைத்து தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு போதுமான ஆதரவை தேசிய மக்கள் சக்திக்கு வழங்குவார்கள் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுபவரின் கட்சியே அரசாங்கத்தை அமைக்கக்கூடியதாக பாராளுமன்ற தேர்தல்களில் மக்கள் வாக்களிப்பது வழமையாகும். அதுவும் இந்த தடவை பாரம்பரியமான அரசியல் அதிகார வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மீது மக்கள் கடுமையான வெறுப்பைக் கொண்டிருக்கும் பின்புலத்தில் ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு இரு வாரங்களுக்கு முன்னர் கிடைத்த வாக்குகளையும் விடவும் கூடுதலான வாக்குகள் தேசிய மக்கள் சக்திக்கு பாராளுமன்ற தேர்தலில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் தாராளமாக இருக்கின்றன. 2019 ஜனாதிபதி தேர்தலில் 3.16 சதவீதமான வாக்குகளைப் பெற்ற திசாநாயக்க இந்த தடவை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஐம்பது சதவீதமான வாக்குகளைப் பெறுவதற்கு பிரமாண்டமான பாய்ச்சலை செய்வது சாத்தியமில்லை என்றே பரவலாக நம்பப்பட்டது. ஆனால் அரசியல் என்பது கணிதம் அல்ல சமூக விஞ்ஞானம் என்று கூறிய திசாநாயக்க நாட்டில் பரவலாக தேசிய மக்கள் சக்திக்கு அதிகரித்துவந்த பெரும் ஆதரவின் அடிப்படையில் தனது வெற்றியில் திடமான நம்பிக்கை கொண்டவராகவே இருந்தார். இரு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி திசாநாயக்க சாதித்துக் காட்டியதைப் போன்று இலங்கையின் முன்னைய வேறு எந்த அரசியல் தலைவரும் செய்ததில்லை என்று கூறினால் அது மிகையில்லை. முன்னைய ஜனாதிபதி தேர்தலில் தனக்கு கிடைத்த வாக்குகளின் சதவீதத்தை விடவும் 14 மடங்கு பாய்ச்சலை ஒரு ஐந்து வருடங்களுக்குள் செய்து அவர் சாதித்த வெற்றி இலங்கையில் மாத்திரமல்ல, உலகின் வேறு பாகங்களிலும் கூட முன்னென்றும் கண்டிராததாகும் என்றுகூட சில அவதானிகள் வர்ணிக்கிறார்கள். ஐக்கிய முன்னணி என்ற பழைய வாகனம் இல்லாமல் இடதுசாரி கட்சியொன்றினால் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று காட்டிய பெருமையும் ஜனாதிபதி திசாநாயக்கவையே சாரும். கடந்த நூற்றாண்டில் மிகவும் பெரிய கட்சியாக விளங்கிய ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக இடதுசாரி கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சியைப் பிடிக்கக்கூடியதாக இருந்தது. அந்த கட்சி ஒருபோதும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு அதிகாரத்துக்கு வந்ததில்லை. பழைய இடதுசாரி கட்சிகள் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு சுதந்திர கட்சியுடனான கூட்டணியையே நம்பியிருந்தன. அந்த இடதுசாரி கட்சிகள் எல்லாம் வரலாறாகிவிட்ட நிலையில் இன்று தேசிய மக்கள் சக்தி தனியாக நின்று தேர்தலில் வெற்றி பெறக்கூடிய ஒரு சக்தியாக மாறியிருப்பது இலங்கை அரசியலில் ஒரு மைல்கல்லாகும். தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் குறித்து பல்வேறு அபிப்பிராயங்கள் இருக்கலாம். அது வேறு விடயம். ஆனால், இங்கு அதன் தேர்தல் சாதனை மீதே கவனம் செலுத்தப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சியையோ, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையோ அல்லது ராஜபக்சாக்களின ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையோ பிரதான கட்சிகள் என்று இனிமேல் அழைப்பது பொருத்தமில்லை. அவை தற்போதைய சூழ்நிலையில் இலங்கை அரசியலில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்தக் கூடியவையாக இல்லை. கூட்டணி அமைப்பதற்கு இந்த கட்சிகளைத் தேடி மற்றைய கட்சிகள் வந்த காலம்போய் இப்போது மற்றைய கட்சிகளைத் தேடி இவற்றின் தலைவர்கள் ஓடுகிறார்கள். ஆனால் அவர்களுடன் கூட்டணி அமைக்க குறிப்பிடத்தக்க செல்வாக்கு மிக்க வேறு எந்த கட்சியும் முன்வருவதாகவும் இல்லை. ஆளும் கட்சியாக தேசிய மக்கள் சக்தியும் பிரதான எதிர்க்கட்சியாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் வெளிக்கிளம்பியிருக்கும் புதியதொரு அரசியல் கோலத்தையே இன்று காண்கிறோம். பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனடியாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டுச் சேருவதற்கு அழைப்பு விடுத்தது. பிரேமதாசவும் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வாக்குகளை சேர்த்துப்பார்க்கும்போது இரு கட்சிகளும் கூட்டணி சேர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அடுத்த அரசாங்கத்தை அமைக்கலாம் என்ற எதிர்பார்ப்பே அதற்கு காரணமாகும். ஆனால், பிரேமதாச அந்த அழைப்பை நிராகரித்து விட்டார். விக்கிரமசிங்க தலைவர் பதவியில் இருந்து விலகினால் பிரேமதாசவின் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியை தாங்கள் பொறுப்பேற்கத் தயாராயிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சில தலைவர்கள் கூறினார்கள். இனிமேல் தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என்று விக்கிரமசிங்க அறிவித்திருந்தாலும், கட்சியின் தலைமைத்துவத்தை உடனடியாக அவர் கைவிடுவார் என்று எதிர்பார்க்கமுடியாது. ஐக்கிய தேசிய கட்சியுடனான கூட்டணியை தவிர்ப்பதற்காகவே அவர் இணங்கமுடியாத அந்த நிபந்தனையை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் முன்வைத்தனர் போலும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட பல கட்சிகளில் இருந்து வெளியேறிவந்து ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவை ஆதரித்தவர்கள் பாராளுமன்ற தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவிருப்பதாக கூறப்பட்டது ஆனால், மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரான முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் வேறு பலரும் மக்கள் ஐக்கிய சுதந்திர கூட்டணி என்ற பெயரில் வேறு ஒரு பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானத்திருப்பதாக பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இறுதியில் ஐக்கிய தேசிய கட்சியும் வேறு குழுக்களுமே சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் என்று தெரிகிறது. ராஜபக்சாக்களை கைவிட்டு விக்கிரமசிங்கவுடன் சேர்ந்தவர்களினால் ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு கணிசமான அளவு வாக்குகளைப் பெற்றுக்ககொடுக்க முடியவில்லை. ராஜபக்சாக்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்ததைப் போன்றே அவர்களுடன் சேர்ந்தவர்களும் மக்களினால் கடுமையாக வெறுக்கப்படுகிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாக வெளிக்காட்டின. இதனிடையே, முன்னாள் அமைச்சர்கள் சிலர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு முடிவெடுத்திருக்கிறார்கள். ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன, உதவி தலைவர் அகில விராஜ் காரியவாசம் போனறவர்களும் கூட தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. அவர்கள் எல்லோரும் தங்களது அரசியல் எதிர்கால வாய்ப்புக்களுக்காக ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவின் வெற்றியை மாத்திரமே நம்பிக்கொண்டிருந்தார்கள். அவர் தோல்வியடைந்ததும் அவர்களின் எதிர்பார்ப்புகள் சிதறடிக்கப்பட்டுவிட்டன. எதிரணிகளுக்குள் தோன்றியிருக்கும் குழப்பநிலை தேசிய மக்கள் சக்திக்கு முன்னரை விடவும் அனுகூலமான அரசியல் சூழ்நிலையைத் தோற்றுவிக்கின்றன. குறுகிய காலத்துக்குள் பாராளுமன்ற தேர்தலை அறிவித்ததன் மூலம் ஜனாதிபதி திசாநாயக்க எதிரணிக் கட்சிகளை தடுமாற வைத்துவிட்டார் என்றே தோன்றுகிறது. இது இவ்வாறிருக்க, பொதுவாழ்வில் ஒரு தூய்மையைப் பேணவேண்டும் என்றும் மக்களின் நலன்களுக்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்றும் அக்கறை கொண்டவர்களை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்வதற்கு இந்த தடவை மக்களுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இதுவரையில் அதிகாரத்தில் இருந்த சகல கட்சிகளும் ஊழல்தனமான அரசியல்வாதிகளினால் நிறைந்து கிடக்கின்றன. அவர்களில் பெரும்பான்மையானவர்களை தவிர்த்துவிட்டு முற்றிலும் புதியவர்களை வேட்பாளர்களாக நியமிப்பது அந்த கட்சிகளைப் பொறுத்தவரை சாத்தியமில்லை. ஆனால், தேசிய மக்கள் சக்தி அனேகமாக முற்றிலும் புதியவர்களை வேட்பாளர்களாக நியமிக்கக்கூடிய வாய்ப்பு தாராளமாக இருக்கிறது. நல்ல கல்வித்தகைமையும் மக்களின் நலன்களில் அக்கறையும் கொண்ட இளம் வேட்பாளர்களை களமிறக்குவதில் தேசிய மக்கள் சக்தி அக்கறை காட்டும் என்பது நிச்சயம். இதுகாலவரையில் அவர்கள் ஆட்சியதிகாரத்தில் இருக்காத காரணத்தால் அத்தகைய புதிய வேட்பாளர்களை அடையாளம் காண்பதிலும் அவர்களுக்கு சிரமமில்லை. அதனால், மற்றைய கட்சிகளும் புதிய முகங்களை களத்தில் இறக்குவதற்கு நிர்ப்பந்திக்கப்படலாம். ஆனால் அந்த கட்சிகளை விடவும் அது விடயத்தில் தேசிய மக்கள் சக்தி பெருமளவுக்கு அனுகூலமான நிலையில் இருக்கிறது. பொதுவில் அரசியல்வாதிகளை பழிபாவத்துக்கு அஞ்சாத ஒரு கூட்டமாகவே மக்கள் பார்க்கிறார்கள். இரு வருடங்களுக்கு முன்னர் மக்கள் கிளர்ச்சியின்போது ராஜபக்சாக்களும் அவர்களுடன் இருப்பவர்களும் மாத்திரமல்ல, 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வீட்டுக்கு போகவேண்டும் என்று மக்கள் குரலெழுப்பியதை எவரும் மறந்திருக்கமாட்டார்கள். மிகவும் சுலபமாக குறுகிய காலத்திற்குள் பெருமளவு சொத்துக்களை குவிக்கக்கூடிய ஒரு மார்க்கமாக இன்று அரசியல் விளங்குகிறது. அந்த கெடுதியான அரசியல் கலாசாரத்தை மாற்றுவததை நோக்கிய முதற்படியாக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை மக்களினால் நிச்சயமாக பயன்படுத்தமுடியும். இது இவ்வாறிருக்க, வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் ஐக்கியம் பற்றி உரத்துப்பேசிய வண்ணம் தொடர்ந்து பிளவுபட்டுக்கொண்டு போகின்றன. எந்தவொரு கட்சிக்குள்ளும் ஒழுங்கு கட்டுப்பாடு என்பது மருந்துக்கும் கிடையாது. கட்சிகளின் உண்மையான நிலைப்பாட்டை எவர் பேசுகிறார் என்பதை புரிந்துகொள்ள முடியாமல் தமிழ் மக்கள் தடுமாறுகிறார்கள். ஏற்கெனவே சிதறுப்பட்டுக் கிடக்கும் இலங்கை தமிழ் அரசியல் சமுதாயம் ஒன்றுபடுவதற்கான எந்த சாத்தியத்தையும் எதிர்பார்க்க முடியாது. தலைவர்கள் எனப்படுவோரின் அகம்பாவமே தலைதூக்கி நிற்கிறது. இலங்கை தமிழ் மக்களின் இன்றைய நிலைப்பாட்டை தென்னிலங்கைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் கூறுவதற்காக ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்திய தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு என்ற இயக்கத்திற்குள் தேர்தல் முடிந்து இரு வாரங்களுக்குள்ளாகவே பாராளுமன்ற தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் தொடர்பில் முரண்பாடுகள் தோன்றிவிட்டன. இலங்கை தமிழர் அரசியலை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும் என்ற விபரீதமான முனைப்புடன் செயற்படும் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தின் மத்தியில் உள்ள சில குழுக்களும் தனவந்தர்களும் வடக்கு, கிழக்கு அரசியலை ஊழல்தனமானதாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த பாராளுமன்றத்தில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு கட்டுறுதியான ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமல் போகக்கூடிய ஆபத்து இருக்கிறது. காலம் வேண்டி நிற்பதற்கு ஏற்றமுறையில் உருப்படியான எந்த அணுகுமுறையையும் கடைப்பிடிக்காமல் வெறுமனே தீவிர தேசியவாத சுலோகங்களை உச்சரித்துக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் மீது மக்கள் கடுமையாக வெறுப்படைந்திருக்கிறார்கள். தென்னிலங்கையில் மக்கள் பாரம்பரியமான அரசியல் கட்சிகளையும் தலைவர்களையும் நிராகரிக்கத் தொடங்கியிருப்பதைப் போன்று வடக்கு, கிழக்கிலும் ஒரு நிராகரிப்பு காலத்தின் தேவையாகிறது. ஒரு மாற்றமாக பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது குறித்து தமிழ் மக்களில் ஒரு பிரிவினர் சிந்திக்கத் தொடங்கியிருப்பது ஒன்றும் இரகசியம் அல்ல. https://www.virakesari.lk/article/195674
  14. தமிழர் பிரச்சினையை ஜேவிபி தீர்க்காது என்பது உண்மைதான். ஜேவிபி சமஷ்டியை ஒருபோதும் ஏற்காது ஒற்றையாட்சிக்குள்தான் அவர்களது தீர்வு இருக்கும். தமிழர் அரசியல் சாணக்கியம் 2009 இற்கு பின்னர் தோற்றது என்றால் அதற்கு முன்னர் கிடைத்த சில வாய்ப்புக்களை நந்தவனத்து ஆண்டியாக போட்டுடைத்ததே கசப்பான வரலாறு! ஆனால் ஏதேனும் மாற்றம் நடந்து தப்பித் தவறியேனும் தமிழர் பிரச்சினையை ஜேவிபி தீர்த்துவிடக்கூடாது என்பதில் ஒட்டுண்ணிகளும் பட்டாசு கோஷ்டிகளும் ஆய்வாளர்களும் முனைப்பாக இருக்கின்றார்கள். இவற்றினையெல்லாம் கடந்துதான் மக்கள் முடிவெடுப்பார்கள்.
  15. நிழலி தேர்தலில் முறைகேடு நடந்ததாக பத்திரிகை காணொளிகளில் வந்த செய்தியையே எல்லோரும் சொன்னோம். அந்த இடத்துக்கு தேர்தலில் நின்றவர் போகக் கூடாது என்றார்கள். ஆனாலும் சுமந்திரன் போயிருக்கிறார். கோத்தாவின் காலத்தில் நீதி எங்கே இருந்தது. அந்த அம்மா நீதி தேடி சென்றிருந்தால் இன்று உயிரோடு இருந்திருப்பாவோ தெரியாது. இந்த நிலையில் எல்லாம் தெரிந்த நீங்களே ஏன் நீதிதேடி போகவில்லை என்று கேட்கிறீர்கள்? மகேசன் பதவி ஏற்கும் போது வேறு எந்த ஜனாதிபதி கூப்பிட்டிருந்தாலும் இந்த பதவியை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன் என்று கூறியிருந்தாரே ஏன்? ஏதோ அழுத்தங்களுக்கு அவர் ஆளாகியிருக்கலாம் அதனாலேயே அப்படி சொல்லியிருக்லாம். உங்களுக்கும் சரி அரசுக்கும் சரி புலிக் காச்சல் இன்னும் விட்டுப் போகவில்லை.
  16. நாய் செத்தாலென்ன, ஒட்டுண்ணிகளுக்கு வேற நாய், நரி, முதலை இப்படி கிடைக்காமலா போகும்? ஆனால், ஒட்டுண்ணி தலையில் ஒரு சின்ன "விக்கிரகத்தைத்" தூக்கி வைத்தாலே போதும், அது ஒட்டுண்ணியாக இருந்தாலும் "புலி" ஆக்கி விட நீங்களெல்லாம் இருக்கிறீர்கள்😂!
  17. கவியர், இவர்கள் வாழ்வது சமாந்தர பிரபஞ்சத்தில்! அந்தப் பிரபஞ்சத்தில் தரவுகள், ஆதாரங்கள், எண்ணிக்கை எதுவும் கணக்கிலெடுக்கப் படாது! மூளையின் random firing உம் தகரடப்பா ஒலியும் தான் கணக்கு😂!
  18. இவ்வளவு காலமும் பங்கருக்குள் இருந்தவரா? 😂
  19. இந்தச் சட்டம் ஏற்கனவே உள்ளது என்றும் ஆனாலும் எவரும் கண்டுகொள்வதில்லை என்றும் சொல்கிறார்கள். இந்தத் தடவை அமுல்படுத்துவார்களா பார்ப்போம். அமுல்படுத்துவது மாத்திரமல்ல பகிரங்கப்படுத்தவும் வேண்டும்.
  20. "சசிகலா சொன்னது தான் சத்தியவாக்கு, ஆதாரம்" என்று நம்பும் அளவுக்கு , சதிக்கதைகளில் அமிழ்ந்து போய் கிடக்கிறீர்கள்😂! "இந்த ஆதாரத்தை வைத்து அவர் ஏன் அரச அதிபர் மகேசனை நீதிமன்றில் சந்திக்கவில்லை?" யென்று கேட்ட போது பதில் இல்லாமல் இருந்தவர்களையும் தேடுகின்றேன்! இருக்கிறார்களா இங்கே😎? இந்த முறையாவது முகநூல் பதிவை நம்பி பின்னர் ஏமாந்து ஒப்பாரி வைக்காமல், சசிகலா அவர்கள் தேர்தல் பற்றிய அறிவோடு முடிவை எதிர் கொள்ள வேண்டுமென வாழ்த்துகிறோம்!
  21. இந்த முறை தோற்றுப் போகும் போது, என்ன நாடகம் போடப் போகின்றார் என்று பார்க்க ஆவலாக இருக்கு. நவம்பர் 16 வரைக்கும் காத்திருப்போம்.
  22. சிலவேளை இந்தியா....? இந்தியாவின் கண்ணசைவு இல்லாமல் இதுகள் நடக்க சாத்தியம் குறைவு. அத்துடன் பத்திரிகையின் வர்ணம் இந்தியக் கொடியை நினைவூட்டுகின்றது.
  23. இத்தனை சாகசங்கள் காட்டிய இந்திய விமானப்படையால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக ஹெலிஹொப்டரில் எயார் லிப்ட் செய்து அவர்கள் உயிரை காப்பாற்ற முடியவில்லை? ஆக மொத்தத்தில் வேடிக்கை காட்டவே இவர்கள் லாயக்கு? ஒரு அனர்த்தனம் வந்தால் அதிலிருந்து மக்களை காப்பாற்றுவார்களா என்பது சந்தேகமே.
  24. ஒருபெரும் இன அழிப்பைச் சந்தித்து, ஒரு குறிப்பிட்ட இனத்தை அல்லது மக்களைத் துரத்தியடித்து அவர்களது சொத்துகளைக் கைப்பற்றி வாழும் இளைய புத்திசாலி நாடாம். வென்றவனது மட்டுமே அவனுக்கேற்றவாறு சரித்திரமாகும் என்றால் இந்த உலகு இருந்தென்ன, இல்லாதுபோனால் என்ன? எனவே இந்த உலகை அவரவர் தேசங்களுள், அவரவர் பண்பாட்டோடு வாழவிடுவதே உலக அமைதிக்கான வழி. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  25. இனவழிப்பிற்கான மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவு 2004 ஆம் ஆண்டு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு பங்காளிக்கட்சியாகவிருந்த மக்கள் விடுதலை முன்னணி, தமிழரின் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வே சரியானது என்று தொடர்ச்சியாக கோரி வந்தது. சமாதான தீர்விற்கான பேச்சுவார்த்தை முன்னெடுப்புக்களுக்கு விடாப்பிடியாக முட்டுக்கட்டைகளைப் போட்டுவந்த இக்கட்சி ஈற்றில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பிற்கும் தனது பங்களிப்பை வழங்கியிருந்தது. 2003 இல் மக்கள் விடுதலை முன்னணியினால் முன்னெடுக்கப்பட்ட சமாதானத்திற்கெதிரான பேரணியில் அநுரவும் கலந்துகொண்டிருந்தார் சமாதான முயற்சிகளுக்கெதிரான கடுமையான நிலைப்பாடு, யுத்த முஸ்த்தீபுகளுக்கான தொடர்ச்சியான ஆதரவு, தமிழர்களுடன் அதிகாரப் பகிர்விற்கான எதிர்ப்பு, வடக்குக் கிழக்கு இணைப்பை பிரித்தமை, சமஷ்ட்டிக்கு எதிர்ப்பு ஆகிய தீவிர தமிழர் விரோத செயற்பாடுகளால் மக்கள் விடுதலை முன்னணி தென்மாகாணங்களில் கிராமப்புர மக்களிடையே மிகுந்த வரவேற்பினைப் பெறத் தொடங்கியது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் நலன்காக்கும் சதியே என்று தெற்கின் சிங்கள மக்களை நம்பவைத்த ரோகண‌ விஜேவீர, ஈழத்தமிழருக்கெதிராக‌ சாதாரண சிங்கள மக்களை நீண்டகாலப்போக்கில் இனவன்மம் ஏற்றுவதில் வெற்றிகண்டார். இருமுறை அரசாங்கத்திற்கெதிரான ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு பல்லாயிரக் கணக்கான சிங்கள இளைஞர்களின் கொலைகளுக்குக் காரணமாகவிருந்தபோதிலும் கூட மக்கள் விடுதலை முன்னணி ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டம் குறித்து அனுதாபத்தினையோ அல்லது அவர்களின் போராட்டத்திற்கான தார்மீக ஆதரவினையோ ஒருபோதும் கொடுக்க நினைத்ததில்லை. தமிழரின் போராட்டக் காலம் நெடுகிலும் மக்கள் விடுதலை முன்னணி செய்ததெல்லாம் அவர்களின் போராட்டத்தைச் சிறுமைப்படுத்தி, அவர்களுக்கான அதிகாரங்களைத் தொடர்ச்சியாகக் கொடுக்க மறுத்து வந்தமை மட்டும்தான். இக்கட்சியிலிருந்தே இலங்கையின் சரித்திரம் கண்ட பல சிங்கள இனவாதிகள் உருப்பெற்று வந்தார்கள் என்றால் அது மிகையில்லை. 2002 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே யுத்த நிறுத்தம் கைச்சாத்திட்ட‌வேளை பாராளுமன்றத்தில் இதனைக் கடுமையாகச் சாடிய ஒரு சிலரில் அநுரகுமார திசாநாயக்கவும் ஒருவர். "புலிகள் இலங்கையில் தனிநாடு ஒன்றினை நிறுவ அடித்தளம் இட்டுவிட்டார்கள்" என்று அவர் பாராளுமன்றத்தில் கூக்குரலிட்டார். பாராளுமன்றத்திற்கு வெளியேயும், உள்ளேயும் அநுர குமார திசாநாயக்க சமாதான முயற்சிகளுக்கெதிராக கடுமையான எதிர்ப்புணர்வைக் காட்டிவந்தார். மக்கள் விடுதலை முன்னணியினர் ஒழுங்குசெய்த பல பேரணிகளுக்குத் தலைமைதாங்கியதோடு, 2003 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியினர் ஒழுங்குசெய்த சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கெதிராக கண்டி முதல் கொழும்பு வரையான ஐந்துநாள், 116 கிலோமீட்டர்கள் கொண்ட நடைபயண ஆர்ப்பாட்டப் பேரணியை அநுர குமாரவே முன்னின்று நடத்திச் சென்றார். 2004 ஆம் ஆண்டில் யுத்த நிறுத்தத்திற்கெதிராகவும், சமாதான முயற்சிகளுக்கெதிராக அநுரவும் அவரது கட்சியினரும் மேற்கொண்டுவந்த பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணியொன்றினை உருவாக்கும் சூழ்நிலையினை ஏற்படுத்திக் கொடுத்தது. இக்கூட்டணி ஆட்சியில் அநுரவுக்கு விவசாயம், காணி மற்றும் நீர்ப்பாசண அமைச்சுக்கள் வழங்கப்பட்டன. அவ்வருடம் இடம்பெற்ற இந்துசமுத்திர சுனாமி இயற்கை அநர்த்தத்தின்போது இலங்கையில் சுமார் 35,000 மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களுள் மூன்றில் இரு பங்கினர் வடக்குக் கிழக்கில் வாழ்ந்த‌ தமிழர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்க புலிகளுடன் இணைந்து அமைப்பொன்றினை உருவாக்க அரசு எத்தனித்தபோது அநுர குமார திசாநாயக்க அதனைக் கடுமையாக எதிர்த்து நிறுத்தினார். இதனால் வடக்குக் கிழக்கிற்கென்று வெளிநாடுகளில் இருந்து வழங்கப்பட்ட பெருமளவு நிதியும் நிவாரணப் பொருட்களும் கொழும்பிலேயே தங்கிவிட்டன. "நாம் அரச சார்பற்ற அமைப்புக்களை வீதியில்க் கண்டால் அவர்கள் மேல் காறி உமிழவேண்டும். உதவி வழங்கும் நாடுகளும் அவர்களது உதவி அமைப்புக்களும் எமது நாட்டை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றன. அவர்களே இப்போது புலிகளுடன் இணைந்து நிவாரணப் பொறிமுறை ஒன்றை அமைக்கும்படி வற்புருத்துகிறார்கள்" என்று மக்கள் விடுதலை முன்னணியின் அன்றைய பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச 2005 இல் கொழும்பு கூட்டமொன்றில் பேசும்போது முழங்கியிருந்தார். அக்காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கென்று உதவி வழங்கும் நாடுகளால் அனுப்பிவைக்கப்பட்ட நிதி மற்றும் பொருட்களை இலங்கை அரசாங்கம் போரில் ஒரு கருவியாகப் பாவித்து தமிழ் மக்களைத் தண்டிக்கிறது என்று சர்வதேசத்திடமிருந்து கடுமையான விமர்சன‌ங்கள் எழுந்திருந்தன. 2005 மார்கழியில் இலங்கைக்கு விஜயம் செய்த‌ ஐ நா செயலாளர் நாயகம் கொபி அனான் வடக்குக் கிழக்கிற்கும் செல்ல‌ முயன்றபோது மக்கள் விடுதலை முன்னணியினரின் அழுத்ததுடன் இலங்கையரசு அதற்கு அனுமதி தர மறுத்து விட்டது. நடந்துகொண்டிருந்த சமாதானப் பேச்சுக்கள் முடிவிற்குக் கொண்டுவரப்படவில்லை என்கிற காரணத்தைக் காட்டி அநுர குமாரவும் ஏனைய மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருவருடத்தின் பின்னர் அரசாங்கத்திலிருந்து விலகிக்கொண்டனர். பின்னர் யுத்தநிறுத்தத்தை நிறுத்தியே தீருவது, போரை மீளவும் ஆரம்பித்து இராணுவத் தீர்வு நோக்கி நகர்வது என்று மகிந்த ராஜபக்ஷ தனது தேர்தல் பிரச்சாரத்தில் அறிவிக்கத் தொடங்கியபோது அநுரவும் அவரது கட்சியும் இந்த ஒற்றைக் காரணத்திற்காகவே மகிந்தவுக்கு 2005 ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு கொடுக்க முன்வந்தனர். யுத்த நிறுத்தத்தினை முடிவிற்குக் கொண்டுவந்து, இராணுவ ரீதியில் புலிகளைத் தோற்கடிக்கவென்று 2006 இல் மக்கள் விடுதலை முன்னணியினால் "நாட்டைக் காக்கும் இணைந்த முன்னணி" எனும் அமைப்பின் உருவாக்கப்பட்டபோது அநுரவும் அதில் பங்காற்றியிருந்தார். தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கான போருக்கெதிராக மகிந்த ராஜபக்ஷ மிகப்பெரும் அளவில் யுத்தத்தினை ஆரம்பித்தபோது, மக்கள் விடுதலை முன்னணி அரசிற்கு பலத்த ஆதரவினை வழங்கியதோடு, சிங்கள மக்களை போருக்கு ஆதரவாக அணிதிரட்டும் கங்கரியத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியது. சர்வதேச மனிதவுரிமைக் கண்காணிப்பாளர்களை போர் நடக்கும் பகுதிகளுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று சர்வதேசத்தின் கோரிக்கைகளை உதாசீனம் செய்துகொண்டு மகிந்த போரைத் தீவிரமாக நடத்திவருகையில், அவரது அரசாங்கத்திற்கு ஆதரவாக கொழும்பில் அமைந்திருந்த அனைத்து மேற்குநாட்டு தூதரகங்களுக்கும் முன்னால் பாரிய கண்ட ஆர்ப்பாட்டங்களை அநுரவின் மக்கள் விடுதலை முன்னணி தொடர்ச்சியாக நடத்திவந்தது. 2002, 2006 மற்றும் 2007 ஆகிய வருடங்களில் சமாதானத்திற்கெதிராகவும், போரை வலியுறுத்தியும் மக்கள் விடுதலை முன்னணி ஒழுங்குசெய்த ஆர்ப்பாட்டங்களில் சில. இரத்திணபுரியில் இராணுவ அதிகாரிகளுக்கு முன்னிலையில் பேசும்போது மக்கள் விடுதலை முன்னணியின் பிரமுகர் லால்காந்த, "ஜாதிக்க ஹெல உறுமயவின் தீவிரவாத எண்ணம் கொண்ட பெளத்த பிக்குகளும், மக்கள் விடுதலை முன்னணியினராகிய நாமும் இணைந்து நடத்திய செயற்பாடுகளாலேயே பிரிவினைவாதிகளின் பயங்கரவாதத்தை எம்மால் முற்றாக அழிக்க முடிந்தது" என்று கூறினார். "சுதந்திரக் கட்சியோ, ஐக்கிய தேசியக் கட்சியோ, பொதுஜன பெரமுனவோ அல்லது எந்தக் கட்சியோ போரை முடிவிற்குக் கொண்டுவரவில்லை. ஆனால் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய நாமும், ஜாதிக்க ஹெல உறுமயக் கட்சிட்யினரும் இணைந்து எடுத்த தீர்மானமான "நாம் தமிழரின் பிரச்சினையினை போரின் மூலமே தீர்க்கவேண்டு, ஏனென்றால் அதற்கு வேறு தீர்வுகள் கிடையாது என்பதற்கமைய போரில் வெற்றிகொண்டோம்" என்று அவர் மேலும் கூறினார். போர்க்குற்றவாளிகளைப் பாதுகாப்பேன் என்கிற சூளுரை போர்க்குற்றவாளி அருனா ஜயசேகர‌ இலங்கை இராணுவம் ஆடிமுடித்த தமிழினக் கொலையில் 167, 679 தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டனர். போர்வலயத்தில் அகப்பட்டிருந்த மக்களுக்கான உணவையும், அத்தியாவசிய மருந்துப்பொருட்களையும் அரசு தடை செய்தது. வைத்தியசாலைகள் தொடர்ச்சியாக இலங்கை இராணுவத்தால் இலக்குவைக்கப்பட்டன. தமிழ்ப் பெண்களுக்கெதிரான மிகவும் காட்டுமிராண்டித்தனமான பாலியல் வன்புணர்வுகளை பரந்துபட்ட அளவில் போர்காலம் முழுவதும் இலங்கை இராணுவம் நிகழ்த்தியது. சரணடைந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இனக்கொலையில் நடத்தப்பட்ட பாரிய மனிதவுரிமைகள் மற்றும் மனித நாகரீகத்திற்கெதிரான குற்றங்களையடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைச் சபையில் பல தீர்மானங்கள் இலங்கை அரசிற்கெதிராக நிறைவேற்றப்பட்டன. அப்படியான இன்னொரு தீர்மானம் இப்போதும் ஐ நா சபையில் கொண்டுவரப்படவிருக்கிறது. இத்தீர்மானங்களும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும் சர்வதேச விசாரணைப்பொறிமுறை ஒன்றின் ஊடாக நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட்டு, பாரியளவில் குற்றங்களைப் புரிந்த குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாகக் கோரி வந்தன. ஆனால் சர்வதேசத்தினதும் தமிழ் மக்களினதும் இக்கோரிக்கைகளை முற்றாக நிராகரித்திருக்கும் அநுர குமார திசாநாயக்க, "போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்றோ, மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என்றோ எவரையுமே நாங்கள் தண்டிக்க அனுமதிக்கப்போவதில்லை" என்று ஆவணி 2024 இல் தேர்தல் பிரச்சார மேடையொன்றில் வெளிப்படையாகவே கூறியிருந்தார். போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும், அரசியல் இராணுவத் தலைமைகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் தொடர்ச்சியாகக் கோரிவரும் நிலையில் "பாதிக்கப்பட்ட தமிழர்கள் கூட போர்க்குற்றவாளிகளைத் தண்டியுங்கள் என்று கோரவில்லை" என்று சிங்கள மக்களிடையே பொய்யான பிரச்சாரத்தினை அநுர குமார திசாநாயக்க மேற்கொண்டார். அதேவேளை, அவரது கட்சியான மக்கள் விடுதலை முன்னணி, போர்க்குற்றவாளிகள் என்று அறியப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதிகளை தமது பாதுகாப்புக் கொள்கை வகுப்பில் இணைத்து வருகின்றனர். உதாரணத்திற்கு இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற அருன ஜயசேகர என்பவன் தமது பாதுகாப்புக் கொள்கைகளை வகுப்பதில் பிரதானியாக அநுர குமார திசாநாயக்க அமர்த்தியிருக்கிறார். இந்த அருண ஜயசேகர என்பவன் ஹெயிட்டி நாட்டிற்கு அமைதிகாக்கும் சேவையில் ஐ நா வினால் அமர்த்தப்பட்ட இலங்கை இராணுவத்தின் மூன்றாம் படையணிக்குக் கட்டளை அதிகாரியாக இருந்தவன். இவனது படைப்பிரிவே 2004 முதல் 2007 வரையான காலப்பகுதியில் சிறுவயதுச் சிறுமிகளை பாலியல்த் தொழிலுக்காகக் கடத்திவந்ததாகப் பரவலாக விமர்சனங்கள் எழுந்திருந்தன.
  26. யார் இந்த அநுர குமார திசாநாயக்க 20 புரட்டாதி 2024 தேசிய மக்கள் சக்தி எனும் பெயரினுள் மறைந்திருக்கும் மக்கள் விடுதலை முன்னணி எனும் அதே பழைய சிங்கள இனவாத மார்க்ஸிஸ்ட்டுக்களின் தலைவரும், 2000 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் தேசியப் பட்டியல் ஆசனத்தினூடாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் வந்தவரே இந்த அநுர குமார திசாநாயக்க எனும் நபர். ஆரம்பத்தில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்தை ஆதரித்து வந்தபோதிலும், பின்னர் தீவிர சிங்கள பெளத்த இனவாதக் கட்சிகளுடன் தன்னை இணைத்துக்கொண்டு 2002 இல் விடுதலைப் புலிகளுக்கும் ரணில் அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளைக் குழப்பி யுத்தத்திற்குள் நாட்டைத் தள்ளுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயற்பட்ட போலி மார்க்ஸிஸ்ட்டுக்களின் கட்சியின் முக்கிய உறுப்பினர் இவர். யுத்த நிறுத்தத்திற்கெதிராகவும், சமாதானப் பேச்சுக்களிற்கெதிராகவும் சிங்கள மக்களிடையே பிரச்சாரம் செய்து அதனூடாக அரசியலின் முன்னணிக்கு வந்த இவரது கட்சி 2004 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷ எனும் போர்க்குற்றவாளியுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எனும் பொதுச் சிங்கள இனவாத முன்னணியைத் தோற்றுவித்தது. இவர் தலைமை தாங்கும் மக்கள் விடுதலை முன்னணியினர் போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணைகளை ஆரம்பத்திலிருந்தே முற்றாக நிராகரித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிரப்போவதில்லையென்று வெளிப்படையாகவே கூறிவரும் இவர்கள் தமிழ் மக்களுக்கெதிரான இனக்கொலையில் இலங்கை இராணுவத்தின் பின்னால் நின்று பூரண ஆதரவினை வழங்கியவர்கள். 13 ஆவது திருத்தத்திற்கு ஆரம்பமுதல் எதிர்ப்புத் தெரிவித்து வருபவர் அநுர குமார திசாநாயக்க பதவிக்கு வந்தவுடன் பாராளுமன்றத்தை உடனடியாகவே கலைப்பேன் என்று உறுதி வழங்கியிருந்தார். இவ்வருடம் சித்திரையில் வடக்குக் கிழக்கிற்கு தேர்தல்ப் பிரச்சாரங்களுக்காகச் சென்றிருந்தவேளை "நாட்டில் நடக்கும் ஊழலுக்கு எதிராக அரசியல் யாப்பில் மாற்றங்களைச் செய்வேன் என்று உங்களிடம் கூறவே வந்திருக்கிறேன். 13 ஆவது திருத்தத்தை அமுல்ப்படுத்துவேன் என்று உங்களிடம் உறுதியளிப்பதற்காக நான் இங்கு வரவில்லை" என்று மிகத் தெளிவாகவே தமிழ் மக்களுக்கு தனது எண்ணத்தைக் கூறிவிட்டு வந்தவர். "எனக்கு வாக்களியுங்கள் என்று உங்களிடம் கேட்க நான் இங்கு வரவில்லை. 13 ஆவது திருத்தத்தை அமுல்ப்படுத்துவேன், அதற்குப் பிரதியுபகாரமாக எனக்கே வாக்களியுங்கள் என்று உங்களிடம் கேட்கவும் நான் இங்கு வரவில்லை. உங்களிடம் வாக்குக் கேட்பதற்காக சமஷ்ட்டி முறை தீர்வை உங்களுக்குத் தருவேன் என்று கூறுவதற்காகவும் நான் வரவில்லை. நான் வந்திருப்பது இலங்கை இன்றிருக்கும் பொருளாதாரச் சிக்கலில் இருந்து அதனை மீட்டெடுக்க என்ன செய்யலாம் என்று கலந்தாலோசிப்பதற்காகத்தான்" என்று பெரும்பாலான தமிழர்கள் வாழும் இம்மாவட்டங்களுக்கு அவர் வந்தபோது அவர் கூறினார். 13 ஆவது திருத்தச் சட்டத்தை அவர் கடுமையாக எதிர்த்து வந்தபோதிலும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுடன் பேசும்போது 13 ஆவது திருத்தச் சட்டத்தை தனது ஆட்சி நடைமுறைப்படுத்துவது குறித்துச் சிந்திக்கும் என்று கூறியிருந்தார். ஆனால், 13 ஆவது திருத்தத்தினை அது உருவாக்கப்பட்ட நாளில் இருந்தே எதிர்த்தும், வடக்குக் கிழக்கு இணைப்பை எதிர்த்தும், மாகாணசபைகள் அமைப்புக் கலைக்கப்படவேண்டும் என்றும் கூறி வரும் ஒரு கட்சியின் தலைவர் இவ்வாறு கூறுவது அக்கட்சியின் கொள்கைகளுக்கு முரணானது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே கைச்சாத்தான 1987 ஆம் ஆண்டு ஒப்பந்தம் தமிழர்களின் நலனைக் கருத்திற்கொள்ளாது இரு அரசுகளின் நலன்களை மட்டுமே கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்டது. இவ்வொப்பந்தம் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபைகள் அமைப்பின் மூலம் தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட முடியும் என்று கூறப்பட்டது. இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணசபைகள் ஊடாக காணி மற்றும் பொலீஸ் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் அவ்வொப்பந்தம் பரிந்துரை செய்திருந்தது. "பல ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை ஒரு அரசியற் கட்சி என்கிற வகையில் நாம் எதிர்க்கிறோம். எத்தனை உயிர்கள் காவுகொள்ளப்பட்டாலும்கூட இலங்கையின் இறையாண்மையினையும், ஒருமைப்பாட்டையும் எமது கட்சி பாதுகாத்தே தீரும்" என்று அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இவ்வாண்டின் ஆரம்பத்தில் கூறியிருந்தார். "எமது இந்த நிலைப்பாடு இதுவரையிலும் மாறவில்லை, இனிமேலும் மாறப்போவதில்லை" என்றும் அவர் கொழும்பு பத்திரிக்கையாளர் மாநாடொன்றில் நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார். "இந்த நாட்டின் சரித்திரத்தில் அதன் இறையாண்மையினையும், ஒருமைப்பாட்டினையும் பாதுகாக்க தொடர்ச்சியாக உறுதியான நிலைப்பாட்டினை எடுத்து வந்திருக்கிறோம். அதனைக் கட்டிக் காப்பதற்கு நாம் உறுதிபூண்டிருக்கிறோம். இதுகுறித்த எமது நிலைப்பாடு என்றைக்குமே மாறப்போவதில்லை. எமது கொள்கைகளில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை என்பதை இந்த நாட்டு மக்களுக்கு எங்களால் உறுதியாகக் கூறமுடியும்" என்று அவர் கூறினார். மக்கள் விடுதலை முன்னணி இலங்கை அரசாங்கத்திற்கெதிராக இரு ஆயுதக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டது. முதலாவது 1970 களில், இரண்டாவது 1980 களின் இறுதிப்பகுதியில். இதில் இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சி முழுக்க முழுக்க இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாக ஏற்படுத்தப்பட்ட 13 ஆம் சட்டத்தினூடாக வட கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு எதிராக நடத்தப்பட்டது. பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் இந்தக் கிளர்ச்சியின்போது கொல்லப்பட்டார்கள். இந்த தீவிர இடதுசாரி இனவாதிகளின் தலைவரான ரோகண் விஜேவீர 1986 ஆம் ஆண்டு தான் எழுதிய "தமிழ் ஈழப் போராட்டத்திற்கான எனது தீர்வுகள்" எனும் புத்தகத்தில் தமிழர்களின் சுயநிர்ணயக் கோரிக்கையினை அமெரிக்க ஏகதிபத்தியவாதிகளின் நலன்களைப் பேண புனையப்பட்ட சதி என்று குறிப்பிட்டிருந்தார். 2015 ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளராக இருந்த விஜித்த ஹேரத் தி ஐலண்ட் எனும் சிங்கள இனவாதிகளின் ஆங்கில ஊதுகோலுக்கு வழங்கிய செவ்வியில், "மக்கள் விடுதலை முன்னணி சமஷ்ட்டி ஆட்சிக்கு எதிரானது. தமிழ் மக்களின் இன்னல்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும் அதேவேளை, சமஷ்ட்டி முறையினூடாக இப்பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்பதை எமது கட்சி முழுமையாக நிராகரிக்கிறது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி இணைக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களை எமது கட்சியே நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பிரித்தது. இதற்காக மூன்று தனியான வழக்குகளை நாம் தாக்கல் செய்திருந்தோம்" என்று அவர் கூறினார். மக்கள் விடுதலை முன்னணியினர் தாக்கல் செய்த வழக்கினையடுத்து வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என்று கூறிய மூன்று நீதிபதிகளும், அவை உத்தியோகபூர்வமாக பிரிக்கப்படுவதாக தீர்ப்பு வழங்கியிருந்தனர். 2007 ஆம் ஆண்டு தை மாதம் 1 ஆம் திகதியிலிருந்து தமிழர்களின் தாயகமான வட மாகாணமும், கிழக்கு மாகாணமும் நிரந்தரமாகவே பிரிக்கட்டுப் போயின. அநுர திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் "இலங்கை நாட்டின் இறையாண்மையும், ஒருமைப்பாடும் எந்தவிட்டுக்கொடுப்புக்களுக்கும் இடமின்றி எமது கட்சியினால் காக்கப்ப‌டும்" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மக்கள் விடுதலை முன்னணியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவாரான சுனில் ஹந்துநெட்டி பேசும்போது "தற்போதிருக்கும் மாகாணசபை முறையினை தமது கட்சி தொடர்ந்து கடைப்பிடித்தாலும், நீண்டநாட்களுக்கு அதனை தொடரும் எண்ணம் இல்லை" என்று கூறினார். சிங்கள இனவாதிகளுடனும், தேசியத்துடனும் மக்கள் விடுதலை முன்னணி காட்டும் நெருக்கமும் தமிழர்களுக்கெதிரான அக்கட்சியின் நிலைப்பாடும் இவர்கள் குறித்த சந்தேகங்களை தமிழர்களிடையே நீண்டகாலமாகத் தோற்றுவித்து வந்திருக்கின்றன. 2010 ஆம் ஆண்டில் அநுர குமார திசாநாயக்க பேசும்போது, தமது கட்சி "வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க அரசு முற்படுமாயின் தமது கட்சி அதனை எதிர்க்கும்" என்று கூறியிருந்தார்.
  27. மேற்கண்ட தமிழ் கார்டியனின் கட்டுரையை இணைத்த ரஞ்சித், கந்தன் கருணை மேற்கொள்ளப்பட்ட படுகொலையை செய்த அருணாவுக்கு எதிராக அவரது பதவி குறைப்பை தவிர வேறு சட்ட நடவடிக்கைகள் தமிழர் தரப்பால் எடுக்கபாடாமையை கண்டித்து தமிழ் கார்டியன் எழுதிய கட்டுரையையும், 1990 ல் இலங்கை ஜனாதிபதியின் விசேட உத்தரவின் பேரில் ஆயுதமின்றி சரணடைந்த 600 பொலிசாரை சுட்டு படுகொலை செய்த யுத்த குற்றத் தைப் புரிந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கபடாமை குறித்த தமிழ் கார்டியனின் கண்டன பதிவை, அல்லது அதற்கான சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு வலியுறுத்தி எழுதிய கட்டுரையையும் இணைப்பார் என எதிர் பார்ககிறேன். (இவை இரண்டும் சிறிய உதாரணங்கள் மட்டுமே) அவ்வாறு இணைக்கப்பட்டால் தமிழ் கார்டியன் சாதாரண செய்திகளுக்கு உள்நோக்கம் கற்பித்து எழுதி ஒரு தலைப்பட்ட அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடாத நடுநிலை ஏடு என்பதும் அதில் வரும் செய்திகள் ஒருதலை சார்பற்ற வரலாறு என்பதையும் ஏற்றுக்கொள்ளலாம். தாயகத்தில் தமிழ் தேசியம் காக்கவென தமது பிள்ளைகள் முதல் அனைத்தையும் கொடுத்த தமிழ் மக்கள் மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளை பயன்படுத்தி தாயகத்தில் தமது இருப்பை காப்பாறுவதற்கான அரசியலை செய்ய முற்படுகையில் வெளி நாடுகளில் தமது வெற்று கோஷ அரசியலாளர்களால் அதை குழப்பி தாயக அரசியலை மீண்டும் கொதி நிலையில் வைத்திருக்க விரும்புகிறார்கள். அங்குள்ள பல்கலைகழக மாணவர்களை போராட தூண்டும் இவர்கள், தமது பிள்ளைகளை வெளி நாடுகளில் மிக சிறந்த பலகலைக்கழகங்களுக்கு அனுப்பி கல்வி கற்க வைக்கிறார்கள். இவர்களது அரசியல் மூலம் தாயகத்தில் மக்களின் பலம் குறைந்து வருவதையிட்டோ தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருபது குறித்தோ முன்பு 11 உறுப்பினரை கொண்ட யாழ் தேர்தல் மாவட்டம் மக்கள் தொகை இழப்பால் 6 ஆக குறைக்கப்பட்டு இருபது குறித்தோ இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. மக்கள் இல்லாமல் தேசியம் இல்லை என்பது இவர்களுக்கு தெரியாதா? அல்லது நாம் வாழும்வரை எமது தேசிய வியாபாரம் நடந்தால் போதும் அதன் பின்னர் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று இவர்கள் நினைக்கிறார்களா?
  28. உண்மை, ஆனால் இன்று அவர்கள் பின்னால் காவடி தூக்கும் தமிழர்களுக்கு உரிமையோ, நாடோ, நீதியோ, தீர்வோ அல்லது இனம் சார்ந்த எதுவுமோ தேவைப்படுவதாகத் தெரியவில்லை. வரிசையில் நிற்காமல் பெற்றொலும், எரிவாயுவும், பாணும் கிடைத்தாலே போதும் என்கிற நிலையில்த்தான் அவர்கள் இருக்கிறார்கள்.
  29. உறுப்பினராக இருப்பது சரி ....இனியாவது சும்மா இருக்காமல் நீங்கள் இளமைக்காலத்தில் தமிழ்தேசியத்திற்கு செய்த நல்ல விடயங்களை சொல்லி இளைஞர்களை தமிழ்தேசிய அரசியல் மயப்படுத்துங்கள்...பதவி இல்லாமல் செயல் படுவது இலகுவான காரியம்...
  30. 2010 க்கு தமிழ் தேசியபரப்பு செயல்பாட்டாளர்கள் தங்கள் பத‌விகள் நிரந்தரமானது என்ற நினைப்பில் இளைஞ சமுதாயத்தை கண்டு கொள்ளாமல் விட்டதின் விளைவு இன்று அந்த இளைய சமுதாயம் முக்கியமாக பல்கலைகழக இளைய சமுதாயத்தை கண்டுகொள்ளவில்லை...அந்த வெற்றிடத்தை யாழ் பல்கலைகழகத்தில் ஜெ.வி.பி நன்றாக பயன்படுத்தியுள்ளனர்...ஜெ,வி,பி யினர் சித்தாந்த/கொள்கை வகுப்புக்களை எடுத்துள்ளனர் ..இது எமது போராட்ட காலத்தில் 77களில் பின் நடந்த விடயங்கள். 2010 க்கு பின்பு சிங்கள இளைஞர்களின் வரவு அதிகமானது அவர்களுடன் ஜெ.வி,பி கொள்கையும் உள்வர தொடங்கிவிட்டது. எமது போராட்டம் மெளனிக்கப்பட்ட பின் எமது அரசியல் போராட்டத்தை இளைஞர்கள் மத்தியில் எடுத்து செல்லாமல் விட்டது எமது பிழை ..அந்த வெற்றிடத்தை ஜெ.வி.பி நன்றாக பயன்படுத்தியுள்ளனர்... மருத்துவர் அருள் சொல்கின்றார் தான் 2016 யாழ் மருத்துவ பீடத்திற்கு சென்றராம் ,ஜெ.வி.பியினரின் வகுப்புக்களுக்கு சென்று அந்த கொள்கைகள் தனக்கு பிடித்தமையால் முழுநேர அரசியல் செயல் பாட்டில் இறங்கி விட்டாராம்...
  31. நீங்கள் எப்படி குட்டினாலும் எங்களுக்கு வலிக்காது, நாங்கள் குனிந்து வாழத்தயார்!
  32. ஒன்று, நம்மையும் இந்த நாட்டின் சுதந்திர குடிமக்களாக அதிகாரத்தை பகிர்ந்து சமமாக வாழ முன்வரவேண்டும். இல்லையேல், நம்மை பிரிந்து வாழ அனுமதிக்கவேண்டும். ஒரு ராச்சியம் என்றால்; ஏன் மதத்தில், கல்வியில், தொழிலில், நீதி நிலைநாட்டுவதில் பாகுபாடு? அதனாற்தானே பிரச்சனை தோன்றியது. எடுத்தவுடன் யாரும் ஆயுதம் ஏந்தவில்லையே. நீதி கோரி அஹிம்ஸை வழியில் போராடியவர்களின் கோரிக்கைக்கு எப்படி பதில் வழங்கப்பட்டது? தாமுண்டு தம்பாடுண்டு பொருளாதாரத்தில் உயர்ந்து நின்ற நம்மவர்களை எரித்தும் அழித்தும் அடித்தும் உங்கள் பகுதிக்கு செல்லுங்கள் என்று விரட்டியது யார்? பின் எங்கள் பிரதேசத்தில் வந்து, அங்கிருந்தும் அழிவுகளை ஏற்படுத்தி ஏதிலிகளாக்கியது யார்? சரி, போர் முடிந்தது, நம் நிலங்களையும் ஆலயங்களையும் நமது இருப்பையும் பறிப்பது யார்? இவர்களோடு எப்படி சேர்ந்து வாழ முடியும்? எங்களுக்கு வாக்களியுங்கள் என்கிறார்கள், பின் இரண்டாம் பட்ஷமாக நடத்துவது ஏன்? சிங்களத்துக்கு, தமிழர் இந்த மண்ணில் தங்களுக்கு அடிமைகளாக வாழ வேண்டுமென்றே விரும்புகிறார்கள், அதையும் நம்மவர் சிலர் நிஞாயம் என்றே வாதாடுகிறார்கள். ஆளுங்கட்சி ஒரு தீர்வை வைக்கும், எதிர்க்கட்சி அதை எதிர்க்கும், அடுத்த தேர்தலில் தான் வைத்த தீர்வை எதிர்கட்சியாக இருந்து எதிர்க்கும். ஆக மொத்தத்தில் தமிழருக்கு எதுவும் கொடுப்பதில்லை, அவர்களின் வாக்கு மட்டும் வேண்டும். அதனாலேயே நம் நாடு வங்குரோத்து அடைந்திருக்கு. அவர்கள் மாறாவிட்டால் நாடு முன்னேறப்போவதில்லை. நாடு எந்த நிலைக்கு போனாலும் பரவாயில்லை, ஆனால் தமிழருக்கு எதுவும் கொடுக்கக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். அனுராவல்ல, எவர் வந்தாலும் தமிழர் பிரச்சனை தீராமல் நாடு அணுவளவும் முன்னேறாது! உண்மையான புத்திசாலி நாட்டை முன்னேற்ற விரும்பினால் நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுப்பார். அதன் பின், பொருளாதாரம் விரட்டப்பட்ட மக்களால் கட்டியெழுப்பப்படும். இல்லையேல் சர்வதேச கூத்தாடிகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நாட்டின் வளங்களை இழந்து தலையாட்டிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். அதை செய்ய தவறும் பட்ஷத்தில் அனுராவும் விரட்டப்படுவார், ஒருவேளை சர்வாதிகார ஆட்சி வரலாம். சிங்களமக்கள் விழிப்புணர்வுடன் சிந்திக்க தொடங்குவர்.
  33. மாணவர்களின் பசி தீர்க்க உதயமாகும் லைக்கா ஞானத்தின் அல்லிராஜா நிறைவகம்! லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கும் செயற்றிட்டமான அல்லிராஜா நிறைவகம் செயற்றிட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் இணைக்கப்பட்டுள்ளன. லைக்கா ஞானம் அறக்கட்டளையின் நிறுவநர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் வழிகாட்டுதலில் கடந்த பெப்ரவரி மாதம் முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாளாந்தம் மதிய உணவினை வழங்கும் சமுதாய சமையலறை திட்டம் “அல்லிராஜா நிறைவகம்” ஆரம்பிக்கப்பட்டது. குறித்த திட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் நாளாந்தன் பயன்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் யா/ மறவன்பிலவு சகலகலாவல்லி வித்தியாலயம் மற்றும் கிளிநொச்சி இரணைதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைகள் மாணவர்களுக்கான சத்துணவினை வழங்கும் வகையில் அல்லிராஜா நிறைவகம் கடந்த தினங்களில் நிறுவப்பட்டு உணவு வழங்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த செயற்பாடுகள் பாடசாலை நாட்களில் தொடர்சியாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மறவன்பிலவு சகலகலாவல்லி வித்தியாலய மாணவர்களுக்கு நிறை உணவு,பால் மற்றும் முட்டை வழங்கப்படுவதுடன், இரணைதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு மதிய உணவு வழங்கப்பட்டவுள்ளது. குறித்த செயற்பாட்டிற்காக சமயலறை லைக்கா ஞானம் அறக்கட்டளை ஊடாக புனர்நிர்மானம் செய்யப்பட்டு பாடசாலை சமூகத்திம் 02.10.2024 செவ்வாய் அன்று கையளிக்கப்பட்டது. லைக்கா ஞானம் அறக்கட்டளை ஊடாக மேற்கொள்ளப்படும் பணிகளில் அல்லிராஜா நிறைவகம் சிறப்பு மிக்கதொரு தனித்துவமான பணியாகக் கருதப்படுகின்றது, மேலும் பல பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு லைக்கா ஞானம் அறக்கட்டளை ஊடாக “அல்லிராஜா நிறைவகம்” உருவாக்கம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது, லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன் ஆகியோரால் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜாவின் பெயரில் 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது. சமூகப் பொறுப்புணர்வு மற்றும் உதவி வழங்கல் போன்றவற்றில் உள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் உலகளவில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள சமூகங்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதே ஞானம் அறக்கட்டளையின் பிரதான நோக்கமாகும். https://athavannews.com/2024/1402778
  34. எனக்கு மற்ற நாடுகளை பற்றி தேவையில்லை. ஜேர்மனி. இங்கே நான் வந்த காலத்தில் தேங்காயை கடைகளில் காணவே முடியாது. ஆனால் இன்று பெரிய/ சிறிய கடைகளில் தேங்காய் சம்பந்தப்பட்ட பொருட்களை தனி இடம் ஒதுக்கி வைத்து விற்கின்றார்கள். இளநீர் எல்லா கடைகளிலும் விற்கின்றார்கள். சிறிய அளவில் தேங்காய் சொட்டுக்கள் விற்கின்றாகள். தேங்காய் பால் பெட்டிகள் என சொல்லி வேலையில்லை. தேங்காய் எண்ணை கூடாது என சொல்பவர்கள் கேடு கெட்ட சூரியகாந்தி எண்ணையை விமர்சிப்பதில்லை.
  35. நம்ம அணுரா அலையும் கொமேனி அலையும் இருவருமே ஆண்டவனால் அனுப்பிவைக்கபட்வர்கள் எல்லோ. அநுரகுமார திசாநாயகவை இலங்கை தமிழர்களுக்காக அனுப்பினார் கொமேனியை ஈரானிய மக்களுக்காக அனுப்பிவைத்தார்
  36. சுமந்திரன் என்னும் கோடாலி காம்பு….. தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்து, இப்போ… தமிழரசு கட்சியை சல்லி சல்லியாக உடைத்துக் கொண்டு இருக்கிறார்.
  37. அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில், ஒரு சாகச நிகழ்ச்சி வைத்தால்…. அதிக மக்கள் பார்ப்பது சகஜம் தானே. ஆசிய மக்கள் வானத்தில் சும்மா ஒரு பயணிகள் விமானம் பறந்தாலே, செய்த வேலையை விட்டிட்டு ஓடி வந்து வானத்தை அண்ணாந்து பார்க்கும் நாட்டில் சாகச நிகழ்ச்சிக்கு அதிக மக்கள் கூடுவது சர்வ சாதாரணம்.
  38. உலகின் பசியல்ல அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுகளின் இரத்தப்பசி அடங்காதென்பதே பொருந்துமென்று நினைக்கின்றேன்.
  39. அரசியல் கைதிகளை விடுதலை செய்வது அரசியல் கைதிகளுக்கும் தமிழ் மக்களுக்குமான அரசியல் கௌரவமாகும். Digital News Team அரசியல் தீர்மானம் எடுத்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வது அரசியல் கைதிகளுக்கும் தமிழ் மக்களுக்குமான அரசியல் கௌரவமாகும். ஆனால் அதனை செய்ய எள்ளளவும் துணிய மாட்டார்கள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று(05) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் தெற்கு அரசியலில் மாற்றம் என்பது தற்போது கவர்ச்சி அரசியலாகி மக்கள் மயப்படுத்தபட்டு வருகின்றது. இது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் அது மேலும் கவர்ச்சியாகலாம். இந்த அரசியல் கலாச்சாரத்திற்குள் வடகிழக்கின் புத்தி ஜீவிகளாகவும், கல்வியாளர்களாகவும் கருதப்படுவோரும் இழுத்துச் செல்லப்படும் அபாயமும் நிலவுகின்றது. அதேபோல் தாயகத்தில் பாரம்பரிய கட்சிகளாகவும், ஈழப் போராட்டத்தில் முனைப்போடு செயற்பட்டவர்களாகவும் (காட்டிக் கொடுத்தவர்கள்) வீர வசனம் பேசுபவரும் வாக்கு கொள்ளைக்காக கூட்டு திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றனர் .இவர்கள் தமிழர் தேசியத்தை முள் வேலிக்குள் தள்ளி கொலை செய்ய எடுக்கும் முயற்சியை வருடந்தோறும் மாவீரர்களுக்கு சுடர் ஏற்ற ஒழுங்குகள் செய்வோரும், சுடர் ஏற்றுவோரும் தகர்த்தெறிய வேண்டும். தற்போதைய நாட்டின் ஜனாதிபதியான அனுரகுமார திசாநாயக்கா ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை தமதாக்க இறுதியாக யாழ்ப்பாணம் வந்தபோது மாற்றத்தை தேடும் தென்பகுதி மக்களோடு இணைந்து கொள்ளுங்கள் என்றே அழைப்பு விடுத்து வாக்கு கேட்டார். வடகிழக்கு தமிழர்கள் தேசத்தில் அவர்கள் நடத்திய யுத்தம்,அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், காணாமலாக்கப்பட்டோர் மற்றும் இராணுவத்தினர், தொல்லியல் திணைக்கத்தினர், சிங்கள பௌத்த துறவிகள் ஆகியோரால் முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான மக்கள் எதிர்பார்க்கும் நீதி, அரசியல் பிரச்சனைக்கான தீர்வு எதையும் குறிப்பிடவில்லை. ஜனாதிபதி அவர்களின் மாற்றம் என்பது தமிழர்கள் வாழ்வோடு தொடர்பு பட்டதல்ல. அது முழுக்க முழுக்க தனது அரசியல் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான சிங்கள பௌத்த மக்களை திருப்திப்படுத்துவதற்கான அரசியல் என்பதனை நாம் ஆழமாக சிந்திப்போம். இதற்குள் சிக்கிவிட வேண்டாம் என தமிழர் தாயக மக்களை கேட்டுக் கொள்கின்றோம். இடதுசாரி சிந்தனை உடைய மக்கள் விடுதலை முன்னணியினர் வடகிழக்கு மக்கள், மலையக மக்கள் என்போர் அரச அதிகார தரப்பாலும் அரச இயந்திரத்தினராலும் பொருளாதார, சமூக அரசியல் ரீதியாக ஒடுக்கப்படும் போது அவர்களை தங்கள் வர்க்கமாக ஏற்று அவர்களோடு சேர்ந்து பயணிக்கவில்லை. தமது அரசியலின் எதிரியாகவே அவர்களைப் பார்த்தார்கள். ஆட்சியாளர் சேர்ந்து ஒடுக்குமுறைக்கும் இன அழிப்பிற்கும் இனப்படுகொலைக்கும் துணை நின்றது அவர்கள் வரலாறு. இதனால்தான் யாழ்ப்பாணத்தில் அவருடைய மேடையில் தமிழர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக வாய் திறக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் தமிழ் அச்சு ஊடகம் ஒன்று தற்போதைய பிரதமர் வழங்கி உள்ள செவ்வியில்”என்ன பிரச்சனைக்கு ஒரு நிலைக்குள் இருந்து கொண்டு மாத்திரம் தீர்வு காண முடியாது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் புதிய சட்டம் உருவாக்குதல் ஊடாக தீர்வு காணலாம் என்று கருதுகிறார்கள் அதுவல்ல அரசாங்கம் செயற்படும் விதத்தை அடிப்படையாகக் கொண்டு இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்”என்று கூறியவர் “தமிழ், முஸ்லிம் மக்கள் அரசாங்கம் தம்மையும் பிரதிநிதித்துவம்படுகிறது என்பதை உணர வேண்டும். அவ்வாறான வகையில் அரசாங்கம் செயப்பட வேண்டும்” எனக் கூறியிருக்கின்றார். இன்னுமொரு சந்தர்ப்பத்தில் இனப் பிரச்சனைக்கான தீர்வு யாப்பின் ஊடாக மேற்கொள்ளப்படும் அது மக்கள் தீர்ப்புக்கு விடப்படும் என்றும் கூறியுள்ளார்.இதனை சிங்கள பௌத்தர்களிடம் அரசியல் தீர்வினை விட்டு விடுவோம் என்பதாகவே நாம் பொருள் கொள்ளல் வேண்டும். அது மட்டுமல்ல அமைச்சரவை தீர்மானங்களை அமைச்சர் விஜித்த ஹோரத் அவர்கள் அறிவித்த போது “அரசியல் கைதிகள் நாட்டின் சட்டம் மூலம் விடுதலை செய்யப்படுவார்கள்” எனக்கூறினார். இதுவரை காலமும் அவ்வாறே விடுதலை செய்யப்படுகிறார்கள். இவர்களுடைய சட்டம் காரணமாக பலர் 25 வருட காலமாக சிறை கம்பிகளுக்குள் அடைப்பட்டுள்ளனர். இந்த சட்டத்தின் மூலம் தான் தீர்வு காண்போம் என்பதன் மூலம் அரசியல் தீர்மானம் எடுத்து அவர்களை விடுதலை செய்ய மாட்டோம் என்று கூறுவதாகவே உள்ளது. அரசியல் தீர்மானம் எடுத்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வது அரசியல் கைதிகளுக்கும் தமிழ் மக்களுக்குமான அரசியல் கௌரவமாகும். அதற்கு இவர்கள் எள்ளளவும் துணிய மாட்டார்கள் என்பது மட்டும் திண்ணம். இந்நிலையில் ஒரு சில தமிழ் அரசியல் கட்சி தலைமைகள் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தமது ஆதரவு கரத்தை நீட்டுவதாக அடையாளம் காட்டி சந்திப்புகளை செய்துள்ளனர். மேலும் சிலர் தமிழர் தேசியத்தின் முகம் காட்டி ஆட்சி கதிரைகளை தமதாக்கியும் ஆதரவு கொடுக்க முயல்கின்றனர். இன்னும் சிலர் மேற்கூறியர்கள் எல்லாம் தோற்கடித்து நேரடியாகவே பேசிய மக்கள் சக்திக்கு ஆதரவினை கொடுக்க துணிந்துள்ளனர். இன்னும் சிலர் தமிழர்களை சிதைக்க சுயேட்சையாகவும் களமிறங்கவும் ஆயத்தமாய் உள்ளனர். இவர்கள் வீட்டில் பூச்சிகள் மட்டுமல்ல. இவர்கள் இனப்படுகொலையாளர்கள். தனது அரசியல் நலன் கருதி இந்தியாவும் இவர்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது. இவர்களுடைய நோக்கம் தமிழர் தேசியத்தையும் அது தொடர்பாக தெளிவோடு விட்டுக் கொடுக்காது பேசுகின்றவர்களையும் அரசியல் சமூகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே.இதற்கும் இடமளிக்க கூடாது. அரசியல் பன்முகம் கொண்ட இராவண கூட்டம் தமிழர் தேசியத்தை சிதைத்தழிக்க அணிவகுத்து நிற்கையில் விட்டில் பூச்சிகளாக தமிழர்கள் அதில் விழுந்து விடக்கூடாது. தேசிய அரசியல் முகமூடி கொள்ளையர்களிடம் தப்பித்தால் மட்டுமே எமது அரசியல் கௌரவத்தை தற்காத்துக் கொள்ளலாம். இல்லையேல் இனமாக எழ முடியாத சூழல் ஏற்படுவதே பலரது நோக்கம். அதனை தோல்வியுறச் செய்வோம். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னரும் நாம் எழுந்தோம். என்பதையே நினைவில் கொள்வோம். அதுவே எமது சக்தி எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/310314
  40. ஆண்கள் அணி மோசமாக விளையாடியபோது பெண்கள் அணி சிறப்பாக விளையாடியது. இப்போது ஆண்கள் சிறப்பாக விளையாட தொடங்க பெண்கள் அணி சோர்ந்து விட்டது.
  41. தலைப்பை மீண்டும் படிக்கவும். புலிகள் காய்ச்சல் அதிகமானால் அதற்கான திரிகளில் பேசவும். கொண்டையை அதிக காலத்திற்கு மறைப்பது கடினமானது தான்.
  42. அஸ்வீன் சிற‌ந்த‌ வீர‌ர் அஸ்வீனை ஒரு க‌ட்ட‌த்தில் கூப்பில் உக்கார‌ வைச்ச‌வை இங்லாந் தொட‌ரின் போது அந்த‌ க‌ச‌ப்பான‌ ச‌ம்ப‌வ‌ம் அஸ்வினுக்கு ம‌ன‌ உளைச்ச‌ல‌ கொடுத்து இருக்கும் முத்தையா முர‌ளித‌ர‌ன் ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் சொன்னார் த‌ன‌து சாத‌னையை உடைக்க‌ அஸ்வினால் தான் முடியும் என்று ஆனால் ரோகித் ச‌ர்மா க‌ப்ட‌ன் ஏற்ற‌ பிற‌க்கு அஸ்வினுக்கு விளையாடும் சில‌ தொட‌ர்க‌ளில் கிடைக்க‌ வில்லை இன்னும் ஒரு சில‌ வ‌ருட‌த்தில் அஸ்வின‌ வ‌ய‌தை கார‌ண‌ம் காட்டி அணியில் இருந்து நீக்கிடுவின‌ம் 500விக்கேட் எடுத்த‌ இர‌ண்டாவ‌து த‌மிழ‌ன் என்ற‌ பெருமை அஸ்வினுக்கு தான் அதோட‌ 6 செஞ்சேரி அடிச்சு அணிக்கு வ‌லு சேர்த்து இருக்கிறார்......................
  43. இப்பவும் நான் வீட்டில், மற்றவர்களுடன் கதைக்கும் போது, சில சிங்களச் சொற்கள் தானாகவே/ இயல்பாகவே என் வாயிலிருந்து வந்துவிடும். அந்தளவுக்கு நான் சிங்களவர்களுடன் பல வருடங்களாக பழகியிருக்கின்றேன். இன்றும் சிங்கள சினிமாவையும். பாடல்களையும் ரசிக்கின்றேன். பல சிங்கள நண்பர்கள் முக நூலிலும் சரி, அதற்கு வெளியிலும் சரி இன்றும் தொடர்பில் உள்ளனர். கனடாவுக்கு வந்து சில நாட்கள் எம்முடன் தங்கிச் செல்லும் ஒரு சிங்களவர் கூட இருக்கின்றார். நீங்கள் மேலே குறிப்பிட்டவாறு தான் அவர்கள் நடந்து கொள்வர். பழகும் போது, உயிரையே கொடுக்கின்றவர்கள் போல பழகுவார்கள். தமிழர் தாயகம், சக உரிமை என்று கதைக்க வெளிக்கிட்டால், உயிரையே எடுக்கும் அளவுக்கு கோபப்படுவார்கள். சிங்கள இனவாதம் ஒரு போதும் மாறாது, நிறங்களை மட்டும் மாற்றிக் கொள்ளும்.
  44. இது தான் வரலாற்று திணிப்பு. திரிப்பு. அடிமையாக வாழ முடிவெடுத்து விட்டால் இப்படித் தான் முடிக்கணும். 1958, 1977, 1983 என்று அனைத்து சிங்களவர்களின் தாக்குதல்கள் மற்றும் அராஜகங்களுக்கும் தமிழரே காரணம். முற்றும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.