Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    19674
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    3034
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    3127
    Posts
  4. பாலபத்ர ஓணாண்டி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    1838
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/05/24 in Posts

  1. கிளிநொச்சியில் மட்டும் 16 பாராம்.. யாழ் 5.. மற்ற இடங்களில் 2 பார்சிறி பார்சிறி தான். ஒரு நாளைக்கு சங்கு இன்னொரு நாளைக்கு சைக்கிளோட பேச்சுவார்த்தை இன்னொருநாள் பார் லைசென்ஸ் புரோக்கர் மற்ற நாள் வாகன பெர்மிட் விற்பனை கார்த்திகையில தியாக புராணம் போற போக்கில கமலஹாசன மிஞ்சிடுவார். தமிழ்த்தேசிய அரசியலின் தலைசிறந்த போலித் தமிழ் தேசியவாதி நசுக்கிடாக்கள்ளன் பார்சிறி.. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் : ஒரு நாடு இரு தேசம்.. சுமந்திரன் : ஒன்றுபட்ட இலங்கையில் மாண்புமிக்க, சமத்துவமான, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய உடனிருப்பு.. சிறிதரன் : போதையின் பாதையில் தமிழ்த்தேசியம்..
  2. எனது அவதானிப்புகள் 1. அருச்சுனா பேசியதில் எந்த வித பிழையையும் என்னால் காண முடியவில்லை. எழுதிய உரை மிக நேர்த்தியாகவே உள்ளது. 2. அதிகாரப்கிர்வு, மாகாணசபை போன்றவற்றை பேசவில்லை. இனி வரும் காலங்களில் பேச வேண்டும். 3. பேசும் போது ஆங்கில உச்சரிப்பு ரொம்பவே டல்லடிக்கிறது. ஆனால் உரையை அவரே எழுதி இருப்பார் போலவே உள்ளது. எழுதிய உரையில் இலக்கண பிழைகள் இல்லை, பொருத்தமான, கனதியான சொற்களை அவற்றின் பொருள் அறிந்து பொருத்தமான இடங்களில் பாவிக்கிறார். இதை ஏன் சொல்கிறேன் என்றால் - இந்த உரையை இவரே எழுதி இருந்தால் - ஆளிடம் விசயம் இருக்கிறது, presentation இடறுகிறது என்பதை சுட்ட. யாரும் எழுதி கொடுத்து இருந்தால் தக்கவர்களிடம் ஆலோசனை எடுக்கிறார். அதுவும் நல்லதே. 4. தலைவரை பெயர்சொல்லாமலும், விஜயவீரவை பெயர் சொல்லியும் - இருவரையும் நினைவு கூர்ந்தது சிறப்பான சம்பவம். One man’s terrorist is another’s freedom fighter என்பதை மிக தெளிவாக சொல்லி உள்ளார். 5. காணாமல் போனோர் பற்றி கூறும் போது என் தந்தையே காணாமல் போனார் என்பது பர்சனல் டச். அதுவும் இலங்கை பொலிஸான அவர், 83 இல் இருந்து எப்படி காவல்துறை ஆளாகினார் என்பதையும் சொல்லி சென்றார். 6. புலம்பெயர் மக்களை உள்வாங்க வேண்டும், காணிகள் மீள கையளிக்கபட வேண்டும் என அவர் பல உடனடி விடயங்களை பேசினார். 7. வடமாகாண மக்களின் வீழ்ந்துவிடாதன்மையை தன் மருத்துவ பீட வழக்கோடு சேர்த்து - நாம் தோற்றவர்கள் அல்ல என கூறிச்சென்றார். இந்த வழக்கில் சுமந்திரன் உதவியதை நினைவு கூர்ந்தது வழமையான நன்றி மறக்கும் தமிழ் அரசியல்வாதிகளில் இருந்து வேறு பட்டு காட்டியது. 8. 65% கொடுக்கலாம். 9. ஒரு எம்பியாக தூதுவராலயங்கள் பார்ட்டிகள், இதர இடங்களில் இதே செய்தியை எடுத்து செல்ல வேண்டும். குறிப்பாக நான் கட்சி சார்ந்தவன் அல்ல, தனி மனிதன். மக்களின் குரல் என்ற ரீதியில்.
  3. போன மாதம் வரையில் யாழ் திரிகளில் "ஆதாரம்" கேட்பது ஓரிருவர் தான்! இப்ப எல்லாரும் "ஆதார புருஷர்களாக" 😎மாறி விட்டார்கள். மகிழ்ச்சியடைவதா அல்லது "இனி நம் தொழில் என்னவாகிறது?" என்று அச்சமைடைவதா? என்று தெரியவில்லை!😂
  4. இந்த திரியை........பார்...பார் ....என்று பார்த்துக் களைத்துப் போனன்..
  5. ஜனதா விமுக்தி பெரமுனவினது (JVP)மறுவடிவான ஜாதிய ஜன பலவேகயவினது(NPP) அரசியல் நிகழ் நிரலில் அவர்கள் முதலில் கையிலெடுப்பது 13ஆவது நீக்கமாகவே இருக்கும்.(இது ஏலவே கள உறவுகளால் யாழில் குறிப்பிடப்பட்டது) அவர்கள் அதனை ரில்வின் சில்வாவூடாக நூல்விட்டுப்பார்க்க, எங்கள் இந்திய முகவர்களான தமிழ்த்தலைமைகள் உட்படத் தமிழ்த் தேசியத் தலைமைகளும் வாய்விட்டு கொக்கரித்து நிற்கின்றார்கள். 13கிடையாது என்பதை இந்தியப் பயணத்தின் பின்னர் அனுர அரசு உறுதியாகக் கூறும். அதற்குப்பதிலாக நேரடியாக இந்தியாவோடு பொருண்மிய மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றைச் செய்து தமிழரது அரசியலை ஒடுக்கிவிடும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  6. உப்பு தட்டுப்பாடு ஏற்படுவது ஓரளவு ஆர்ரோக்கியம்தான், எவரை பார்த்தாலும் சுகர் பிறசர் எண்டு கொண்டு குளிசையோட திரியுறாங்க. பிளட் பிறசர் எகிறுறதுக்கு உப்பும் பிரதான காரணம், அதை கெளரவமாக சோத்தில் உப்புபோட்டு திண்டால் ரோஷம் வரும் எண்டு உல்டாவா அடிச்சுவிடுவாங்க .ரத்த கொதிப்பு அதிகமாகி கத்தினா அதுக்கு ரோஷம் எண்டு பெயர் வைக்குறது. மூண்டுமாசம் உப்பு தட்டுப்பாடு இருந்தா யாழ்ப்பாணத்தில் வேலி சண்டை காணி சண்டை குறைய வாய்ப்பிருக்கு. தட்டுப்பாட்டில் ஒரு ஆரோக்கியம்.
  7. புலர் அறக்கட்டளையால் 4வது ஆண்டாக நடத்தப்பட்ட சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள் நிகழ்வு 03/12/24 பகுதி2 PULAR TRUST Contact +94777775448 (whatsapp, viber, telegram, signal) தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக நடத்தப்படும் இந்நிகழ்வில் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் இருந்து பலர் கலந்து சிறப்பித்து இருந்தனர். ஒளிப்பதிவு உதவி செல்வன் ப.பிவிசன், திரு கண்ணன், சகோதரி வனஜா.
  8. பிரித்தானியாவில் பிரதமராக வருபவர் ஒக்ஸ்போட் பல்கலைகழகத்தில் PPE - politics, philosophy and economics படித்திருக்க வேண்டும் என்ற எழுதாத விதி இருந்தது. தொழில்முறை அரசியல்வாதிகள் சகல தகுதியுடனும் உருவாக்கப்படுகின்றனர். ஆனால் அருச்சுனா உள்ளே தள்ளப்பட்டார். ஒரு 6 மாதங்கள் கொடுத்துப்பாருங்கள். அதற்கிடையில் யாரும் வழக்குப்போட்டு தகுதி நீக்கமடையாமல் இருந்தால் நல்லதொரு அரசியல்வாதியாகப் புடம் போட்டு வருவார்.
  9. சற்று நேரம் அதிகம் எடுத்து கொண்டதால் உரையை முடித்துக்கொள்ளும்படி கேட்ட்கும் பொது 20 செகண்ட் , 15 செகண்ட் 10 செகண்ட் 5 செகண்ட் என்று அவைத் தலைவருக்கே நேரம் காட்டி உரையை முழுவதுமாக முடித்தது கூட வித்தியாசமாக இருந்தது. திரு ராமலிங்கம் அவர்களின் உரையை முழுமையாக குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் சற்றே தடுமாறினார், பலமுறை அவரின் உரையை முடித்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. பக்கத்தில் அமர்ந்திருந்த பிமல் ரத்னாயக்க சாடையாக ராமலிங்கம் அவர்களின் சட்டையை சற்றே பிடித்து இழுத்து சிக்னல் கொடுத்தார்.
  10. விக்கினேஸ்வரன் ஐயாவின் கன்னியுரையில் தானே 'நாங்கள் தான் இந்த தீவின் ஆதிக்குடிகள். தமிழ் ஆதி மொழி.............' இப்படியான கருத்துகள் இருந்தன. அவர் மூன்று மொழிகளிலும் 'வெளுத்து வாங்குவார்' எனறும் சொன்னார்கள் அன்று. ஸ்திரமற்ற நிலைகளும், சிறுபிள்ளைத்தனமான செய்கைகளுமே அர்ச்சுனாவின் பெரிய பலவீனங்கள். இவைகளிலிருந்து முன்னேறி, பலன் கருதாது உண்மையிலேயே மக்களுக்கு ஏதாவது செய்தார் என்றால் மக்கள் கொடுத்துவைத்தவர்கள்......................
  11. 🤣...................... வெளியால் வந்தால் அரைக் கிலோ கறுப்புச் சாயம் அடித்துக் கொண்டு வருகின்ற மகிந்த, மைத்திரி, துரைமுருகன் அல்லது நாலு விக்குகளை மாற்றி மாற்றிப் போடும் ஸ்டாலின் போன்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துவிட்டேன் போல..............🤣. அதை விட்டால் ஜோ பைடன் அல்லது ட்ரம்ப்.................. நம்ம தோஸ்து பரவாயில்லை தானே................😜. இந்த அரசியல்வாதிகள் தினமும் எவ்வளவு நேரம் ஒப்பனைக்காக செலவிடுகின்றார்கள் என்ற ஒரு கேள்வி எங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளேயும் இருக்கின்றது............. முக்கியமாக ஸ்டாலின் & மகிந்த.............
  12. நினைவு கூரலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுருகிறது தானே. முன்பு மகிந்த கோட்டபாய காலத்தில் இதை கேட்கும. துணிச்சல் கஜேந்திரகுமாருக்கு இருக்கவில்லை. நினைவு கூரலுக்கு அனுமதி அளித்த அரசாங்கம் புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதால் தன் இலட்சனைகளை பாவிப்பது சட்ட மீறல் என்பதையே குறிப்பிட்டனர். ஜேவிபி யை போல புலிகளுக்கும் இரு முறை தடை நீக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி என்ற கட்சியே இலங்கை தேர்தல் திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டது. அது புலிகளாலேயே கலைக்கப்பட்டு விட்டது. அதன் தலைவரும் கொல்லப்பட்டு விட்டார். கஜேந்திரகுமார் வழக்கு பதிவு செய்வதன் மூலம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு காலாவதியான அந்த கட்சியை மீள பதிவு செய்ய அனுமதி பெற்று முன்னாள் போராளிகளில் அறிவுசார் ஆளுமை உள்ளவர்களை கொண்டு அக் கட்சியை இயக்கும்படி செய்யலாம். அவர்கள் காலத்திற்கு ஏற்ப தம்மை தகவமைத்து அரசியல் செய்வது சிறப்பாக இருக்கும். அவர்கள் படிப்படியாக தமது அரசியல் முதிர்சசி மூலம் கட்சியை கட்டியெழுப்பி ஒரு காலத்தில் தமது மடிந்த போராளிகளுக்கு ஜேவிபி போல தமது அடையாளங்களுடன் நினைவு வணக்கம் செய்யும் நிலையை உருவாக்க முடியும். செய்வாரா?
  13. இன மீட்சி என்ற அடிப்படை புரிதலை கைவிட்டவர்களே அண்ணன் சீமானை திட்டிவிட்டு நாம் தமிழரை விட்டு விலகுகிறார்கள்..இனமீட்சி என்பது வரலாற்றை கண்டடைவது கற்பிப்பது ..தேசியத்தலைவனின் வழிநடப்பது..
  14. 2009 க்கு பின்னர் எனது எழுத்துகளை மீண்டும் மீண்டும் உங்கள் சமீபத்திய கருத்துரைகள் ஞாபகப் படுத்துகின்றன. புலி முகம் குத்திய நான் பின்னால் நிற்கிறேன் மற்ற எல்லோரையும் அரவணைத்து ஏதாவது செய்ய எவராவது முன் வருவீர்களா என்று கத்தாத நாளில்லை. வேண்டாத கடவுளில்லை. காலில் விழாத குறை தான் இங்கு. இன்று நீங்கள் அதை செய்கிறீர்கள். பார்க்கலாம்.
  15. மேகமே தூதாக வா அழகின் ஆராதனை . ....... சிவகுமார் & சுமித்திரா ........! 😍
  16. ஓம் அண்ணா நீங்கள் சொல்வதில் மாற்று கருத்து இல்லை. யாழ்கள அனுர படையணி தளபதியின் கருத்தை அறியவே அந்த கேள்வி.
  17. எங்கள் காலத்தில் காலையில் பால்மா கரைத்து சூடாக்கித் தருவார்கள். மதியத்தில் ஒரு பணீஸ் (பண்) தருவார்கள். பாடசாலை முடிந்து போகும் போது, மகிழங்காய், மாங்காய், புளியங்காய் ….. என்று சத்துணவு சாப்பிடுவோம்.
  18. 🤣. நாளைக்கு வந்து கட்டாயம் பச்சை குத்துவேன் ஐயா. வேற லெவல் கார்ட்டூன். மாட்டினால் சந்தோசம். அப்போதும் எம்பிகள் பொய்குற்றசாட்டு, வழக்கு போடுவேன் என சொல்லிவிட்டு கடந்து போய்விடுவார்கள். ஏலவே எம்பி ஒருத்தர் இப்படி ஒரு அறிக்கை விட்டு, அதை யாழிலும் ஒருவர் காவித்திரிகிறார். பணபரிமாற்றம் அல்லது குறுஞ்செய்திகள் என தக்க ஆதாரத்தோடு மாட்டினால்தான் உண்டு. இல்லை என்றால் ஆதாரம் இருக்கா? என பழைய டிவி விளம்பரம் மாதிரி எம்மையே திருப்பி கேட்பார்கள்🤣.
  19. ஆங்கில சொல் salary - லத்தின் சொல்லான salarium த்தில் இருந்து வருகிறது. இந்த லத்தின் சொல்லின் அர்த்தம் மாதாந்த கொடுப்பனவு. Salarium என்பது லத்தின் சொல்லான Sal இல் இருந்து வருகிறது. Sal இன் அர்த்தம் உப்பு. ஒரு காலத்தில் மாதசம்பளமக பணமன்றி உப்பே கொடுக்கப்பட்டதா நம்பபடுகிறது. இதே போல் Sal இற்கு வேலை செய்த வீரகள்தான் Soldiers எனவும் சொல்லப்படுகிறது. உப்பு மனித ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியம். உப்பு அளவாக இல்லாதவிடத்து தசை பிடிப்பு ஏற்படும். இதை பேச்சு வழக்கில் குறண்டல் என்போம், எனக்கு விளையாடும் போது அடிக்கடி வரும். அதே போல் குறை இரத்த அழுத்தம் வந்து ஆளை கவிட்டும் விடும். எல்லாமும் அளவோடு தேவை. உப்பிட்டவரை உள்ளவரை நினை🤣
  20. இதுதான் குற்றச்சாட்டின் சாராம்சம். ரணில் அரசை மகிந்தவின் ஆட்கள் கவிழ்க்க முயன்றாலும், கவிழாதபடி ஏந்தி பிடிக்க என கடந்த பாராளுமன்றத்தில் எதிர் கட்சி வரிசையில் இருந்த எம்பிகளுக்கு ஒரு அட்வான்ஸ் இலஞ்சம் வழங்கப்பட்டதாம். இதற்கு கடிதமோ வேறு எந்த ஆதாரபூர்வ சிபாரிசுமோ தேவை இல்லையாம். குறித்த எம்பிகள் கைகாட்டும் ஆள், வழமை போல் அனுமதியை கோர வேண்டும், அவருக்கு தடங்கல் இன்றி அனுமதி கிடைக்கும். அனுமதிக்கான இலஞ்சத்தை பார் உரிமையாளர் எம்பிக்கு செட்டில் செய்வார். எம்பி ரணிலுக்கு விசுவாசமாக இருப்பார். எங்கோ ஒரு லேப்டப்பில் ஏதோ ஒரு ஸ்பிரெட்ஷீட்டில் யார் யாருக்கு சிபாரிசு செய்தார் என்ற தகவல் இருக்கலாம். ஆனால் அது அனுர அரசின் கையில் கிட்டுமா? கிட்டினாலும் அதுதான் உண்மையான லிஸ்ட் என எப்படி நம்புவது? ஆகவே இதில் எந்த எம்பியையும் கையும் களவுமாக பிடிப்பது கஸ்டம். ஒன்றில் ரணில், அல்லது அவர் சார்பில் சிபாரிகளை டீல் செய்தவர் சொல்ல வேண்டும், அல்லது சிபாரிசு கொடுத்த எம்பிகள் சொல்ல வேண்டும். விக்கி ஒரு சிபாரிசு செய்ததை ஏற்றுகொண்டுள்ளார்.
  21. இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது தமிழர் பகுதிக்கு அதிக தவறணைகள். இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழர் பகுதிக்கு அதிக சலுகைகள் தந்தது இதுவே முதல் தடவை. தமிழர் பகுதிகளுக்கு அதிக அதிகாரங்கள் தரப்படவில்லையென்று சொல்லப்படுவது தவறான பிரச்சாரம். ரணில் தமிழருக்கு அதிக உரிமைகள் தந்த ஒரு தெய்வ திருமகன்.
  22. நம்மவர்கள் உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று உப்பில்லை என்றால் பட்டினி கிடந்து சாவார்களே தவிர... நீங்கள் வேற ???🤣
  23. நான் சும்மா ப‌ண்ணுக்கு எழுதினே குருநாதா உங்க‌ளை செந்தில் க‌வ‌வுண்ட‌ம‌னி கூட‌ ஒப்பிட‌லாமா லொள் ஆம் நீங்க‌ள் சொல்வ‌தும் ச‌ரி ப‌ழைய‌ வீர‌ர்க‌ள் வ‌ய‌துக்கு ஏற்ற‌ தோற்ற‌ம் அதோட‌ அவ‌ர்க‌ள் காய‌ப் ப‌டுவ‌து மிக‌ குறைவு வெஸ்சின்டீஸ் வீர‌ர் அம்புரூஸ் அவ‌ரை நான் இப்ப‌ கூட‌ பார்க்குவில் என்ர‌ த‌லைய‌ உய‌ர்த்தி பார்த்தால் தான் அவ‌ர் என் க‌ண்ணில் தெரிவார்😁😁😁😁.....................ப‌ழைய‌ வீர‌ர்க‌ள் நிலைத்து நின்று விளையாட‌க் கூடிய‌வை இப்ப‌த்த‌ வீர‌ர்க‌ள் டெஸ்ட் விளையாட்டில் ஏனோ தானோ என்று சுத‌ப்பி விளையாடுகின‌ம் ம‌ழை வ‌ந்து விளையாட்டு இர‌ண்டு நாள் த‌டை ப‌ட்டும் இப்ப‌ இருக்கும் வீர‌ர்க‌ளால் விளையாட்டை ச‌ம‌ நிலையில் முடிக்க‌ மாட்டின‌ம்.................................20ஓவ‌ர் கிரிக்கேட் வ‌ருகையோடு வீர‌ர்க‌ள் ப‌ண‌ம் சாம்பாதிப்ப‌தையே விரும்புகின‌ம் அது தான் முன்ன‌னி வீர‌ர்க‌ள் ப‌ல‌ர் டெஸ்ட் விளையாட்டில் இருந்து சீக்கிர‌ம் ஓய்வை அறிவிக்கின‌ம்.....................சில‌ ஜ‌பிஎல் சீச‌னில் விளையாடினால் போதும் முன்ன‌னி வீர‌ர்க‌ள் ப‌ண‌ ம‌ழையில் மித‌ப்பின‌ம்................. இப்ப‌த்த‌ வீர‌ர்க‌ளுக்கு தேசிய‌ அணிய‌ விட‌ ஜ‌பிஎல் தான் முக்கிய‌ம்.............................
  24. பிரச்சினையை தீர்ப்பதற்கு கடைசிவரையும் விடமாட்டார்கள் ...கரீன் போக கக்கீம் வந்துவிட்டார்..இவைக்கு இப்ப பிரச்சினை தமிழரை பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டதுதான்...
  25. குருதியாற்றில் மிதந்தமிழ்ந்துபோய் அவலத்துள் வாடும் தமிழீழத்தவரே இன்னும் தமது அரசியலைச் சரியாகப் புரிந்துகொண்டு கடந்த 15 ஆண்டுகளில் கையிலெடுத்தாளவில்லை. இந்தநிலையில், சுயமாகச் சிந்திக்காது திரைக்கவர்ச்சியில் அள்ளுண்டு வாழும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள தமிழக அரசியலைத் தமிழீழத்தவர் நம்பிப் போராடப் புறப்படவில்லையென்றே நினைக்கின்றேன். தமிழகம் மொழி,கலை மற்றும் பண்பாட்டால் எமது தார்மீகப் பின்தளமாகவும், ஒருகூட்டுணர்வின் அடிப்படையில் தமிழ்த் தேசியத்தின் தூணாகவும் நின்று காக்கவேண்டிய கடமையை நேர்மையோடு எந்தவொரு தமிழக அரசியல் தலைமைகளும் அணுகவில்லை. ஜோ.பெர்னாண்டஸ் போன்றோ, தமிழக முதல்வராயிருந்த ம.கோ.இராமச்சந்திரன் போன்றோ தற்துணிவோடு எவரும் அணுகவில்லை. இன்று இருப்பதைத் தக்கவைக்கவே தமிழினம் போராடவேண்டிய புறநிலையைத் தமிழகத்திலுள்ள, தமிழீழத்தவர்மீது உண்மையான அக்கறையுள்ள தலைவர்கள் தமது கட்சியரசியலைக்கடந்து சிந்திப்பதாகவும் இல்லை. இந்தநிலை தமிழகத்தில் மாறப்போவதில்லை. தமிழீழ ஆதரவு அமைப்பென்று மு.கருணாநிதி தலைமையில் தமது சுயநல அரசியலுக்காக 1985இல் தொடங்கப்பட்ட அமைப்பினது செயற்பாடுகளைத் திரும்பிப்பார்த்தாலே புரிந்தககொள்ளமுடியும். தமிழீழ மக்கள் முதலில் தம்மைத் தாம் நம்பவேண்டும். தற்போதுள்ள சூழலை எப்படி எதிர்கொள்வதென்பதை சிந்திக்க வேண்டும். தாயகக்கட்சிகள் ஒரு பொதுவேலைத்திட்டத்தில் ஒருங்கிணைய (அண்மைய சிறீதரன் மற்றும் கயேந்திரகுமார் சந்திப்பு) தமிழ் உறவுகள் அழுத்தம் கொடுத்து ஒன்றிணைக்க வேண்டும். அதற்கான புறநிலையாக அண்மைய தேர்தலைத் தமிழ்த் தலைமைகள் நோக்குவதோடு, சுயபுராணப் பந்தாக்களைக்களைந்து ஆரோக்கியமான அரசியலை நோக்கிச்செல்ல முனையாவிடின் தமிழர் தாயகத்தில் மாற்றுச் சக்திகள் பலம்பெறுவது தவிர்க்கமுடியாததாகும். தமிழினத்தின் அழிவையும் தடுக்க முடியாது போகும். தமிழின விடுதலைக்கான குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டுள்ள தமிழக அரசியலுள் எம்மால் ஏதாவது செய்ய முடியுமா? இல்லைத்தானே. ஆதரவு தருவோரை அரவணைத்தவாறு நாம் அதனைக் கடந்துசெல்வதே சரியானது. தமிழர் தயாகத்தில் இனி இரத்த ஆறு ஓடாது. ஒரே பிரித்தோதும் சத்தமே கேட்கும் நிலையாகும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  26. இந்திய அரசியல்வாதிகளில் ஆரம்பம்முதல் இறுதிவரை விசுவாசமாக புலிகள் பக்கம் நின்ற அரசியல்வாதிகள் இரண்டுபேர் மட்டுமே ஒன்று எம்ஜிஆர் , மற்றையது திரு.பழநெடுமாறன் அவர்கள் மீதமுள்ள ராமதாஸ் , திருமாவளவன், வைகோ போன்றவரெல்லாம் புலிகளுக்கும் பாடிவிட்டு பின்பு கருணாநிதியுடனும் சேர்ந்து கூத்தடிச்சவர்களே. பாண்டிபஜார் கைதிலிருந்து ,ஆயுதங்கள் தொலைதொடர்பு சாதனங்கள் பறிமுதல், கிட்டண்ணா பயணித்த கப்பல் மீதான இந்திய கடற்படை தாக்குதல், ஜூலை கலவரத்தின்போது தமிழக எழுச்சி, தமிழீழத்திற்கு சிலமுறை உயிரை பணயம் வைத்து பயணம் என்று முள்ளிவாய்க்கால்வரை அவர் காட்டிய புலிகள்மீதான பற்று சந்தேகத்திற்கப்பாற்ப்பட்டது. பின்னாளில் அவர் வயது முதுமை காரணமாக யாரோ அடிச்சுவிட்டதையெல்லாம் நம்பி தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று பேசபோனது அவர் தள்ளாமையின் பிரதிபலிப்பு ஆனாலும் தமிழீழம் உருவாக இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்பது இந்தியாவிடம் பயிற்சிபெற்ற இயக்கங்களுக்கும் தெரியும், இலங்கைக்கும் தெரியும் இலங்கை தமிழருக்கும் தெரியும், இந்திய வெளியுறவு கொள்கை வகுப்பாளர்களுக்கும் தெரியும். இந்திய உதவியுடன் தமிழர்கள் கை ஓங்கியிருந்த அக்காலத்திலேயே தமிழீழத்தை நினைத்தும் பார்க்க அனுமதிக்காத இந்தியா இனிமேல் அது உருவாக அனுமதிக்கும் உதவி செய்யும் என்று ஐயா எதிர்பார்ப்பது இதுவும் அவர் தள்ளாத வயதின் பிரதிபலிப்பே. இந்தியாவின் நோக்கமெல்லாம்அன்றும் இன்றும் இலங்கை தமிழருக்கு நாடு பெற்று தருவதல்ல, சிங்கள அரசை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே என்பது ஐயாவுக்கு நன்றாக தெரியும், ஆனாலும் பேசுகிறார் என்றால் அதுவும் தள்ளாமையின் ஒரு அம்சமே.
  27. அமெரிக்கா எப்படி உக்ரேனுக்கோ அதே போல் தமிழ் மக்களுக்கு கிந்தியா?
  28. சுரேஸ் பிரேமச்சந்திரன் வகையறாக்களை விட நீதி நேர்மையானவர்களாக இருந்திருக்கலாம்……..
  29. அதை தான் கூறுகிறேன். முன்னர் புலிகளால் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட வி. பு. ம.மு கட்சியை மீண்டும் விண்ணப்பபிப்பதன் மூலம் புதுப்பிப்பதற்கான அனுமதியை எடுத்து அக்கட்சியில் அரசியல் போராளிகள் இயங்கும் போது அது சிறப்பாக இருக்குமல்லவா?
  30. அரச எம்பி?? இது சரியான தகவலல்ல என நினைக்கிறேன். நீலன் சந்திரிக்காவின் நண்பர், ஆனால் அவரை தேசியப் பட்டியல் மூலம் தீர்வுத்திட்டத்திற்காகவே உள்ளே கொண்டு வந்தது த.வி.கூ என்று தான் நான் அறிந்திருக்கிறேன். த.வி.கூ வின் உள்ளேயும், வெளியே பல தமிழ் தேசியர்களிடையேயும் வரவேற்பு தன் முயற்சிக்கு இல்லாமையால் தான் அவர் பதவி விலகினார்! தேசியப் பட்டியலை தமிழரசுக் கட்சி/த.வி.கூ இவ்வாறு துறை சார் நிபுணர்களை உள்ளே கொண்டு வரத் தான் பாவித்து வந்திருக்கிறது. அப்படி உள்ளே கொண்டு வரப் பட்டவர் தான் சுமந்திரன். "ரணில் மூலம் திணிக்கப் பட்டார்" என்ற ஆதாரமில்லாத பொய்களைச் சொல்லி தங்களைத் தாங்களே திருப்திப் படுத்திக் கொள்கிறார்கள் சுமந்திரன் லவ்வர்ஸ் சிலர்😂.
  31. 70 / 80 களில் உங்கள் வீட்டில் இப்படி விசேடம் நடந்தது நினைவில் உண்டா..? ரெல் மீ..
  32. சரி ஆசைப்பட்டபடி இப்போ அதே ஜேவிபியிடம் நாடு போய்விட்டது இன்னும் எத்தன வருஷத்தில் இலங்கை சிங்கப்பூராகும் என்று உங்க தீர்க்க தரிசனத்தால் சொல்லிவிடுங்க கம்யூனிச ஆட்சியால் சிங்கப்பூராக மாறிய உலகின் ஒருநாட்டை சொல்லுங்கள் ரதி அறிந்துகொண்டால் அண்டா அளவு மகிழ்ச்சி. அதவிட முக்கியம் சிங்கப்பூரே முதலாளித்துவநாடாச்சே அப்போ கம்யூனிஸ்ட்டுக்களிடம் நாட்டை கொடுத்தால் சிங்கப்பூர்போல முதலாளித்துவ நாடு ஆக்கிடுவார்களா? அப்புறம் எதுக்கு கம்யூனிச கொள்கை அவர்களுக்கு? அப்பப்போ பாட்ஷா ரஜனிமாதிரி வந்து உருட்டிபோட்டு ஓடிறீங்கள் அதுதான் தமிழ் மக்கள் மனசில் உள்ள கவலை. அதாவது இலங்கைக்குள் புலிகள் தனிநாடு உருவாக்க நினைத்தது ஜேவிபியைவிட ஆபத்தான செயலா? அப்போ கொழும்பில் இருந்தவனையெல்லாம் 58/77/83ல் அடிச்சு மட்டக்களப்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் சிங்களவன் விரட்டிவிட்டு அது உங்கள் இடம் ஓடுங்கோடா என்று கலைச்சுவிட்டது உங்கநாடு இதுதான் என்று சிங்களவன் சொன்னது மாதிரி இல்லையா? தனிநாட்டை முதலில் கோடு போட்டு காட்டியது சிங்களவனா தமிழனா?
  33. நான் உங்களையும் செய்யுங்கள் என சொல்லவில்லை அண்ணை. தேத்தண்ணி கடை வாங்கில் எனக்கு பக்கத்தில் இருந்து கதைக்கும் இன்னொரு ஆள்தான் நீங்களும், என்பது எனக்கும் தெரியும். 2009 க்கு முன்பே நான் இப்படித்தான். சொந்த வாழ்விலேயே உலக மகா சோம்பேறியான என்னை நீங்கள் இனத்துக்கு வழி காட்ட சொன்னால் - இது நடக்கிறகாரியமா? என்னால் முடியுமானது - எழுதுவது, ஒற்றுமையாக கூட்டம் போட்டால், போராடினால் அதில் ஒரு தலையாக போய் நிற்பது, தேவை என படின் என்னால் ஆன நிதியை கொடுப்பது. ஆனால் புலம்பெயர் தேசத்தில் பல வினைதிறனான செயல்வீரகள் இருக்கிறார்கள். 2009 உடன் அவர்கள் எல்லாரும் செத்து விடவில்லை. கள்ளர்களினதும், புலனாய்வு ஏஜெண்ட்களினதும், மொக்கர்களினதும் தலைமைதுவ கேடால் - அவர்கள் விலகி போய்விட்டார்கள். இப்படியான செயல்வீரர்களுக்குத்தான் நான் எழுதும் செய்தி. யாழில் எழுதும் என்னை, உங்களை போன்ற விசைப்பலகை வீரருக்கு அல்ல. நாம் அந்த வேலைக்கு சரிவரமாட்டோம் என்பது எனக்கு எப்பவோ தெரியும்🤣.
  34. ஒரு மனிதனுக்கு மரணம் எப்போது என தெரிந்தால் அவனுக்கு தினசரி மரணம் தான். இந்த வகையில் நான் நேசிக்கும் அந்த இயற்கையை ஆகாயம் நோக்கி இரு கரம் கூப்பி வணங்குகின்றேன்.🙏
  35. இதுதான் பொயிட்ன். ரோகண விஜவீரவை சுட்டு கொன்றாலும் குடும்பத்தை திரிகோண மலை நேவி காம்பில் பல பத்து வருடங்களாக பேணினார்கள். ஆனால் பாலச்சந்திரனை? ஏன்? இனவாதம். இந்த இனத்துக்கு ஒரு துரும்பும் கிடைக்க கூடாது. ஜேவிபியை 1987 இல் மீள தடை செய்தார்கள். ஆனால் 1990 இல் இருந்து தடை நீக்கி ஜனநாயக நீரோட்டத்தில் இணைய விட்டார்கள். இதையேதான், நடேசன், புலித்தேவன் மூலம் புலிகள் செய்ய முயன்றார்கள். அதாவது ஆயுத மெளனிப்புக்கு பின், சில காலம் முகாமில் இருந்து விட்டு, பின் வெளியே வந்து, புலிகளை ஜனநாயக நீரோட்டத்தில் இணைக்கும் பணியை மேற்கொள்வது. ஆனால் சோமவன்ச போல, நடேசன் உயிருடன் வாழ அனுமதிக்க படவில்லை. ஏன்? இனவாதம். மறுபடியும் சுயநிர்ணய கோரிக்கை எழும்ப விட கூடாது. 89 க்கு பின் ஜேவிபியை கையாண்டது போல் 2009 க்கு பின்னாக புலிகளை கையாளவில்லை இலங்கை அரசு. ஒரே காரணம் இனவாதம். அப்படி கையாண்டிருந்தால் - புலிகள் இப்போ ஜனநாயக நீரோட்டத்தில் இருப்பார்கள், இலங்கையே தடை செய்யவில்லை எனும் போது உலக நாடுகளும் தடையை விலக்கி இருக்கும். விஜேவீர போல, தலைவர் படத்தை தரவேற்றுவதும் ஒரு குற்றமாக கருதப்பட்டிருக்காது. முழு நாட்டையுமே ஆயுத புரட்சிமூலம் கைபற்ற முயன்று பல அப்பாவி சிங்களாவரை கொலை செய்த ஜேவிபிக்கு 3 வருடத்தில் புனர்வாழ்வு, ஆனால் 15 வருடம் கழிந்தும், நாட்டின் 1/3 பகுதிகை மட்டுமெ கைப்பற்ற முனைந்த புலிகளுக்கு இன்றும் தடை. ஒரு குழு சிங்களவர், மற்றையது தமிழர். இதுதான் இனவாதம்.
  36. கடந்த 300 ஆண்டுகால வரலாற்றில் தற்போது உருவாகியுள்ள பெங்கால் புயல் கணிக்க முடியாத வேகத்திலும் கணிக்க முடியாத திசை நோக்கியும் காணப்பட்டது. வங்களா விரிகுடாவில் தோற்றம் பெறும் சூறாவளிகள் ஒருபோதும் வடகிழக்கு திசை நோக்கி நகர்வது கிடையாது. கடந்த 300 ஆண்டுகால வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட புயலில் தற்போது ஏற்பட்ட புயலே வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்திருக்கின்றது. பொதுவாகவே புயல் கடற்பகுதியில் நிலை கொண்டிருந்தால் அது தன்னை பலப்படுத்தி கொள்வதாக அர்த்தப்படும். இவ்வாறு தெரிவித்தார் யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை தலைவர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா. ஐபிசி தமிழ் அகளங்கம் நிகழ்ச்சிகக்கு இன்று (30) அவர் அளித்த நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்தார். இந்த புயலின் தாக்கம் அனாலேற்பட்டுள்ள பாதிப்பு, எதிர்காலத்தில் இவ்வாறான புயல்கள் ஏற்பட்டால் ஏற்படப்போகும் அழிவுகள் தொடர்பில் அவர் தெரிவித்த விடயங்கள் காணொளியில் https://ibctamil.com/article/the-worst-storm-in-300-years-1732979332
  37. ரெம்ப தன்னம்பிக்கையான மனிதர் . ....... வெற்றிபெற வேண்டும் . ........! 👍
  38. அநுரவின் அரசாங்கம் ஈழத் தமிழருக்கு எதிரியா இல்லையா என்பதை ஈழத்தில் வாழும் மக்கள்தான் சொல்லவேண்டும். அதனை வரலாறு தெளிவாகப் பதியும். சும்மா விசர்க் கதைகதைச்சுக்கொண்டு திரியத்தான் பழ. நெடுமாறன் போன்றோர் லாயக்கு. அநுர அரசில் எல்லை தாண்டிவந்து மீன்கொள்ளையில் ஈடுபடும் இந்தியக் கடற்கொள்ளையருக்கு ஆபத்து என்பதைத்தான் அய்யா சொல்லியிருக்கின்றார் என நினைக்கின்றேன்.
  39. சமூகத்தில் வெளியே தெரியாத பெண் அடிமைத்தனம். இதை ஆணாதிக்க மனப்பான்மை உடையவர்களால் புரிந்து கொள்ள முடியாது. இது மிகச் சிறந்த கணவனாலும் நிகழ்த்தப்படும் மிகப்பெரிய வன்முறை! பார்த்ததில் மனதை வருடிய காணொளி. நானும் தவறு செய்கின்றேன் என உணர்த்திய காணொளி.
  40. எடுத்துக் கொண்ட கதைக்கரு நிஜமாகவே நெகிச்சியானதுதான் . ....... ஆனாலும் புலத்தில் இன்றைய தலைமுறையினர் ஆண்களைப்போலவே பெண்களும் வேலைசெய்வதால் ஒருத்தருக்கு ஒருத்தர் புரிந்துணர்வு சிறப்பாக இருக்கிறது ...... ஒருத்தருக்கு ஒருத்தர் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதற்கும் மேலாக வீட்டில் இருக்கும் வேலைகளை சமையல் உட்பட மற்றவர் வரும்வரை காத்திருக்காமல் செய்து விடுகிறார்கள் ....... அதற்குப் பின்தான் மையல் எல்லாம் .......! 😂
  41. குமாரசாமி, இணைப்புக்கு நன்றி. குறும்படத்தை வெறும் மூன்று பாத்திரங்களை வைத்து அழகாகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராகாவானந்தா. பெண்கள் மேல் வெவ்வேறு வடிவங்களில் அடக்குமுறை இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் எடுத்துக் கொண்ட கதை பழையதுதான். 55 வயதில் விவாகரத்து கேட்பதை வேண்டுமானால் இங்கே புதிது என்று சொல்லலாம். 10 சிறார்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து அந்த வருமானத்தில் தான் வாழ்ந்துவிடுவேன் என்று சொல்லும் ஆளுமையுள்ள ஒரு பெண் விவாகரத்து இல்லாமலேயே தனியாகப் போய் வாழ்ந்து விடலாமே என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. சென்ற நூற்றாண்டில், ஒரு பெண் தன் குடும்பத்துக்காக எப்படித் தன் தூக்கத்தையே தியாகம் செய்தாள்,எவ்வளவு தொல்லைகள் அவளுக்கு இருந்தன என்பதை கண்ணதாசன் 1966இல் ஒரு பாடலில் இப்படிக் குறிப்பிடுகிறார். “….கை நடுங்கிக் கண் மறைந்து காலம் வந்து சேரும் காணாத தூக்கமெல்லாம் தானாகச் சேரும்…”
  42. பெண்ணுக்கு இறப்பின் போதுதான் விடுதலை. இணைப்புக்கு நன்றி குமாரசாமி. ம் வழக்கு எப்படி முடிந்திருக்கும்.
  43. பெண் அடிமைத்தனம். கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி. இணைப்பிற்கு நன்றி குமாரசாமி அண்ணை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.