Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    21
    Points
    87990
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    3061
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19134
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/07/25 in Posts

  1. சில மாதங்களுக்கு முன் எனது உறவினர் ஒருவர் திருமண வைபவம் ஒன்றில் இன்னொரு நண்பரைச் சந்தித்ததை என்னிடம் விபரித்தார். அந்த நண்பர் முன்னர் இருந்ததை விட உடல் நன்றாக இளைத்து உற்சாகமாகக் காணப்பட்டதாகத் தெரிவித்தார். தான் உடல் இளைத்தமைக்கு இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பானம் ஒன்றே காரணம் என்றும் அதை எனது நண்பரையும் பாவிக்கும்படியும் அறிவுரை கூறியுள்ளார். தாங்கள் இவ்வாறான பானங்களைப் பற்றிக் கூட்டம் நடத்துவதாகவும் அதற்கு ஒரு முறை வந்து பார்க்குமாறும் கேட்டுள்ளார். இச் சம்பவத்தை எனக்குக் கூறிய நண்பர் அப் பானத்தின் பெயரை மறந்துவிட்டதால் நானும் பெரிதாகப் பொருட்படுத்தாது விட்டுவிட்டேன். இன்னொரு உறவினரை அண்மையில் சந்தித்தேன். அவரும் உடல் இளைத்து உற்சாகமாக இருந்தார். உடல் இளைப்பதற்காகத் தானும் சிலவகைப் பானங்களைப் பாவிக்க ஆரம்பித்துள்ளதாக அது பற்றி ஏராளமாகக் கூறினார். அதன் பெயர் Herbalife. மிகையான புரத பானம், செரிவான விற்றமின்கள், ஊட்டச் சத்துள்ள பானங்கள் என்று பலவகையான பதார்த்தங்கள் உண்டு. இவர் ஒவ்வொரு மாதமும் 200 முதல் 300 ஈரோ அளவில் இவற்றை வாங்குவதற்காகச் செலவழிக்கிறார். இணையதில் இது பற்றித் தேடிப் பார்த்ததில் இந்த நிறுவனம் பற்றி நான் அறிந்து கொண்டவை: இது அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் பாரிய நிறுவனம். பங்குச் சந்தையிலும் உள்ளது. இந்த நிறுவனத்தில் உற்பத்திகள் சாதாரண மருந்துக் கடைகளில் விற்கப்படுவதில்லை இதன் உற்பத்திப் பொருட்களை ஆர்வமுடன் பாவிப்பவர்களை ஊக்கப்படுத்தி அவர்கள் சுற்றத்தாருக்கு விற்கப்படுகிறது. இதற்காகத்தான் அடிக்கடி பாவனையாளர்களுடன் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அக் கூட்டங்களில் இப் பொருட்களின் ‘நன்மைகள்’ போதிக்கப்படுககின்றன. தொடக்க நிலை விற்பனையாளருக்குப் பொருட்களின் விற்பனையில் 25 வீதம் கிடைக்கிறது. அவர் முன்னேற்றமடைந்தால் 50 வீதம் வரை இலாபம் உண்டு. இந்த சட்டத்துகு உட்படாத விற்பனை யுக்தியால் பல தடவை அமெரிக்கா உட்பட பல மில்லியன் டொலர் குற்றப்பணம் அறவிடப்படுகிறது இப் பொருட்களில் உள்ளடக்கப்பட்டுள்ள வேறு இரசாயனப் பதார்த்தங்கள் பற்றிய சரியான தகவல்கள் குறிப்பிடப்படுவதில்லை. பல நாடுகளில் இதன் தயாரிப்புத் தொழிற்சாலைகள் இருந்தாலும் சீனாவில் தான் பிரதான தொழிற்சாலை உள்ளது. ஒரு நாட்டில் இப் பொருட்களில் தடை செய்யப்பட்ட இரசாயனப் பொருள் பாவிப்பதால் பிரச்சனை ஏற்பட்டால் அந்த நாட்டில் மட்டும் அந்த இரசாயனப் பொருளுக்கு மாற்றீடு சேர்க்கப்படும். அதனால் ஒரே தயாரிப்புப் பொருள் நாடுகளுக்கிடையே வேறுபடும். பக்கவிளைவுகளாலும் சிலர் பாதிப்படைந்தாலும் சாதாரண மருந்துப் பொருள் பாவனைகளால் ஏற்படும் பக்கவிளைவுகளை விட ஒப்பீட்டளவில் குறைவாகத் தெரிகிறது. இத் தயாரிப்புப் பொருட்கள் பற்றிய எனது கருத்து. இப் பதார்த்தங்களில் அதிசயம் ஒன்றும் இல்லை. செரிவான புரதம் கலந்த பானத்தை அருந்தினால் பசி வராது. இதனால் உடல் பருமனை அதிகரிக்க வைக்கும் மாப் பொருட்கள் கொழுப்புகள் சாப்பிடுவது தவிர்க்கப்படுகின்றது. சில பானங்களில் உற்சாகம் தரும் கபேயின் போன்று ஊக்கப் பொருகளும் சேர்க்கப்படுவதாகத் தெரிகிறது. இயற்கையான மூலிகைகள் சேர்க்கப்பட்டு இவை தயாரிக்கப்பட்டாலும் மிகைப்படுத்தப்பட்ட மாற்றங்களுக்கு உட்படுவதால் இயற்கையான உணவு என்ற தரத்துக்குள் வராது. பெரும்பாலும் கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள் ஊக்கமளிப்பதற்காக மேலதிக ஊட்டச்சத்துகள் கொண்ட இப் பானங்களை உட்கொள்கிறார்கள் தொடர்ச்சியாக நீண்ட காலத்துக்கும் இவற்றைப் பாவிப்பது நல்லதல்ல கூட்டங்களில் பதார்த்தங்களின் பாவனையுடன் போதிய நீர் அருந்த வேண்டும், மிதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும் நல்ல நித்திரை வேண்டும் என்பனவும் அறிவுறுத்தப்படுகின்றது. அத்துடன் வெவ்வேறான செரிவான ஊட்டச்சத்துகள் அடங்கிய பானங்கள் குளிசைகள் வற்றல் உனவுகள் வழங்கப்படுகின்றன. மொத்தத்தில் ஒருவர் இயற்கையாகப் போதுமான அளவு புரத உணவுகளையும் குறைவான மாச்சாப்பாடுகளையும் பழங்கள் மரக்கறி வகைகளையும் உண்டு, மிதமான உடற்பயிற்சியுடன் போதுமான அளவு நித்திரையும் செய்பவராக இருந்தால் இவ்வாறான இரசாயன மருந்துகளை நாட வேண்டிய அவசியம் இல்லை. இவற்றையெல்லாம் விளங்கப்படுத்தியும் நண்பர் ஏற்றுக் கொள்வதாக இல்லை. அவர் சொல்லும் காரணங்கள்: மருத்துவர்கள், பிரபலமான விளையாட்டு வீரர்கள் நன்கு படித்தவர்கள் போன்றோர் இவற்றைப் பாவிக்கின்றனர் கூடாத பொருட்கள் என்றால் அவற்றை ஐரோப்பாவில் தடை செய்திருப்பார்களே தனக்கு இவற்றை அறிமுகப் படுத்தியவர் 10 வருடங்களுக்கு மேலாகப் பாவிக்கின்றார். அவருக்கு எதுவும் ஆகவில்லையே இவ்வாறு காரணங்களை அடுக்கிக் கொண்டே போவது மதம் பரப்ப வீடு தேடி வருபவர்களை ஞாபகப்படுத்தியது. இவற்றையெல்லாம் எழுத வேண்டிய காரணம் என்னவென்றால், இப்போது என்னைச் சுற்றியுள்ள தமிழர்கள் மத்தியில் இப் பொருட்களின் பாவனை வேகமாகப் பரவி வருகிறது. 5 வயதுப் பாலகன் முதல் 75 வயது முதியோர் வரை ஊட்டப்படுகிறார்கள். சர்க்கரை வியாதி, கொலஸ்ரறோல், உடற் பருமன், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணி என்று கணிக்கப்பட்டு மேற்குறித்த நோய்கள் உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. இன்னொரு படி மேலாக மூளைச் செயற்பாட்டுக்கும் நல்லதாம். நீங்களும் இவை பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம், உங்கள் அனுபவங்களையும் கூறுங்கள். @Justin உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன். நன்றி.
  2. கட்டாக்காலி நாய்களை ஒழிப்பது பற்றி ஏன் பேசத் தயங்குகிறார்கள் என விளங்கவில்லை. வளர்ப்பு நாய்க்கு தடுப்பூசி போட்டுப் பேணுவது ஓரளவுக்குத் தான் மனிதர்களுக்கு றேபிஸ் தொற்றாமல் கட்டுப் படுத்தும். யாரும் கவனிக்காத கட்டாக்காலி (stray) நாய்கள் அல்லது ஊரே சேர்ந்து உணவு போட்டு வளர்க்கும் சமுதாய (community) நாய்கள் ஆகியவை இருக்கும் வரை இலங்கையில் றேபிசை கட்டுப் படுத்த முடியாது. மனித நடவடிக்கைகளும், சமுதாய நாய்கள் உருவாக ஒரு காரணம். தெருவோரங்களில் குப்பைகள், உணவுகளை வீசுவது முற்றாகத் தடுக்கப் பட வேண்டும். ஒரு சின்ன நாட்டையும், படித்த மில்லியன் கணக்கான மக்களையும் வைத்துக் கொண்டு றேபிசைக் கட்டுப் படுத்த இயலாமல் இருப்பது இலங்கைக்கு வெக்கக் கேடான ஒரு விடயம்!
  3. உதவி செய்யப் போய்…. உபத்திரவத்தை வாங்கியுள்ளார். இனிமேல்… கீழே கிடந்ததை எடுத்து மற்றவர்களிடம் கொடுக்காமல், சம்பந்தப் பட்டவரை கண்டு பிடிக்கும் மட்டும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். அப்படி கண்டு பிடிக்க முடியாத பட்சத்தில்… அனாதை ஆச்சிரமங்களுக்கு வழங்கி விடுங்கள். மூன்றாம் நபரிடமோ, காவல் துறையிடமோ… ஒப்படைப்பது எல்லாம் நம்பிக்கை அற்ற செயல்கள்.
  4. மிக முக்கியமான அறிவுப்புகள். தானும் தின்னான் நாய்க்கும் கொடான் என்பது ஈழத்தமிழரோடு பிறந்த குணம். தாமும் உருப்படியாக எதுவும் செய்யமாட்டார்கள். செய்பவர் மீதும் வசை பாடுவார்கள். இந்த அறிவிப்புகள் மூலம் சிந்துவெளியில் இருந்தது தொல் தமிழர் நாகரிகமே என்பதை குறிப்பாக அந்த எழுத்தை படிக்க முடிந்தால், தென்னிந்திய மொழிகளுக்கு தாய் மட்டும் அல்ல, இந்திய மொழிகளிலும் முந்தையது தொல்தமிழே என்பதை நிறுவ முடியும். ஒரு ஈழத்தமிழனான நன்றியும் வாழ்த்துக்களும் முதல்வர் ஸ்டாலினுக்கு.
  5. சைனாக்காரர்களால் வைரஸை நிற்பாட்ட முடியாது.......... ரஷ்யர்களால் உக்ரேனை நிற்பாட்ட முடியாது............... மத்திய கிழக்கால் இஸ்ரேலை நிற்பாட்ட முடியாது.............. அமெரிக்கர்களால் ட்ரம்பை நிற்பாட்ட முடியாது............ இந்த மனுஷன் முழுச் சந்திரமுகியாகித்தான் முடியும் போல.............
  6. 🤣.................. கந்தையா அண்ணாவின் விருப்பப்படியே அதையே வைத்துக் கொள்ளட்டும், விசுகு ஐயா........... நமக்குத் தேவை தலைக்கு மேல் ஒரு கூரை, அடுப்படியில் சாப்பாடு, அதைவிட்டால் பந்தடிப்பதற்கு ஒரு இடமும், சில ஆட்களும்................... இவைகளை குறைவில்லாமல் தந்துவிட்டு என்ன பெயரையாவது வைத்துக் கொள்ளட்டும்...........🤣.
  7. இணையவன், நீங்கள் / நாங்கள் கரடியாக கத்தினாலும், தலையைக் குத்தி தாளம் போட்டாலும், எங்கள் சனம் திருந்தாது. பலவிதமான ஆய்வுகளுட்பட்டு, பரிசோதனை சுற்றுகளெல்லாம் முடிந்து வெளி வரும் ஒரு மருந்தையோ அல்லது தடுப்பூசியையோ நம்பாமல் சதிக்கதைகள் எல்லாம் சொல்லுவினம், ஆனால் இப்படி ஒரு குடி நீரை அல்லது பானத்தை அப்படியே நம்பி குடிப்பினம். ஆட்டு மந்தைக் குணம். இன்னும் ஒரு முட்டாள் கூட்டம் இருக்கு. அக் கூட்டம் " நீ ஆங்கில மருந்தைத் தான் நம்புவாய், ஆனால் இப்படியான மருந்துகளை நம்ப மாட்டாய்" என்று புளிச்சல் ஏவறைக் கதைகள் கதைப்பினம். இப்படி தவறான பானத்தை நம்பி பருகி நோயில் வீழ்ந்தவர்கள் எனக்குத் தெரிந்து இருவர் உள்ளனர். இருவரும் பல்கலைக்கழகத்தில் படித்து நல்ல தொழில் செய்கின்றவர்கள். கவனித்தீர்கள் என்றால் ஒன்று புரியும். பாமரர்களைக் காட்டிலும் இவற்றை அதிகம் நம்புவது எம் மக்கள் மத்தியில் இருக்கும் படித்தவர் கூட்டம் தான்.
  8. "ஹொலிடே" போறம். 😂 🤣
  9. இப்படி சில விடயங்கள் நடந்திருக்கின்றன. மேலதிக தகவல்கள் ஏதாவது இருந்தால் தந்துதவுங்கள். 1. போட்டது விசர் நாய் தடுப்பூசியா அல்லது வேறெதும் நோய்களுக்கான தடுப்பூசியா? 2. ஊசியை தொடையில் போட்டார்களா அல்லது முதுகில் தோலை உயர்த்திப் போட்டார்களா? 3. மிருக வைத்தியரிடம் சென்று அங்கே இருந்தோர் ஊசி போட்டார்களா அல்லது உள்ளூராட்சி சபை, பிரதேச சபை ஊழியர்கள் வீட்டுக்கு வந்து ஊசி போட்டார்களா? 4. ஊசி போட்ட பின்னர் புத்தகத்தில் பதிந்த ஊசி தயாரிப்புக் கம்பனியின் விபரம் இருக்கிறதா? 5. இறப்பதற்கு முன் நாயின் கண்கள், மூக்கில் இருந்து ஏதாவது சுரப்புகள் வெளிவந்தனவா? அல்லது நாய் நடக்க இயலாமல் அவயவங்கள் செயலிழந்த நிலை இருந்ததா?
  10. "விழிமூடித் துயில்கின்ற வேங்கைகள்" இன்று கார்த்திகைத் திங்கள் இரண்டாம் கிழமை, முல்லைச்செல்வி தனது ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு, தனது வீட்டில் இருந்து வெளியே எட்டிப்பார்த்தாள். வானம் இருண்டுபோய் இருந்தது. குளிர் காற்றுப் பலமாக வீசிக்கொண்டிருந்தது. அவள் வாய் "தீபங்கள் அணையாலாம் தீ அழிவதில்லை தேசத்தை காத்த உயிர் ஓய்ந்து அழிவதில்லை" என்று முணுமுணுத்தபடி, காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை நோக்கிச் சென்றாள். அவள் பேருந்துவால் இறங்கி, நடக்கத் தொடங்கிய போது, அவளுடைய ஊன்றுகோல் சீரற்ற மண் பாதையில் உறுதியாக அழுத்தியது. ஒரு காலத்தில் மாவீரர் விழிமூடித் துயில் கொண்ட அமைதியான அந்த இடம், இப்போது, உடைத்து எறியப்பட்டு ஒரு மூலையில் குவிக்கப்பட்டிருந்தது. அன்று பல உயிர்களைப் பறித்த அதே கைகளால், கல்லறைகள் எல்லாம், மண்ணுடன் மண்ணாக நொறுக்கப்பட்டு இருந்தது. ஆனால் எதுவும் அவளைத் தடுக்க முடியவில்லை. இது தமிழ் பாரம்பரியத்தின் புனிதமான நினைவேந்தல் மாதமான கார்த்திகைத் திங்கள், தெய்வங்கள் மற்றும் மறைந்தவர்கள் ஆகிய இருவரையும் போற்றும் வகையில் விளக்குகள் ஏற்றப்பட்டது. இன்று, அவள் வெறும் விளக்கை மட்டும் சுமக்கவில்லை, ஆனால் கண்ணியம் மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் தங்கள் உயிரைக் கொடுத்த அவளுடைய முகிலன் மற்றும் எண்ணற்ற மக்களின் நினைவுகளின் கனத்தையும் சுமந்து, அவர்கள் எல்லோரையும் நினைவுகூர, கௌரவிக்க அங்கு, மயானத்திற்குள் அடி எடுத்து வைத்தாள். துயிலுமில்ல மைதான நடுவில், பீடத்தில் சற்று உயரமான பெரிய சுடர் நாட்டப்பட்டு இருந்தது. உணர்வுக் கொந்தளிப்போடு, மக்கள் அங்கு குவிந்து, பின்னர் ஒரு ஒழுங்கில் நின்றனர். அவள் அங்கு மூலைமுடுக்கெல்லாம் தேடி, ஒருமுறை தன்னவனின் பெயரைக் கொண்ட, உடைந்த கல் துண்டுகளைப் பொறுக்கி எடுத்து, அதன் முன்னால் அவள் மண்டியிட்டாள். அவளுக்கு அரசன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலின் இறப்பைக் கூறும் புறநானூறு 229 ஞாபகம் வந்தது. இன்று, வலிய யானை தன் தும்பிக்கையை நிலத்தில் வைத்து உறங்கியது. வாரால் பிணிக்கப்பட்ட முரசு கிழிந்து உருண்டது. காவலுக்கு அடையாளமாக இருக்கும் கொற்றக்குடையின் காம்பு ஒடிந்து சிதைந்தது. காற்றைப்போல் விரைந்து செல்லும் குதிரைகள் நிலைகலங்கி நின்றன. இந்நிலையில், பகைவரைக் கொல்லும் வலிமையும், தன்னை நாடி வந்தவர்களுக்கு அளவற்ற பொருட்களை அளித்த கொடைவள்ளலும், நீலநிறமுடைய திருமால் போன்றவனுமாகிய சேரன் விண்ணுலகம் அடைந்தான். தன் மனைவியர்க்கு உறுதுணையாக இருந்தவன் அவர்களை மறந்தனனோ? "மைந்துடை யானை கை வைத்து உறங்கவும் திண் பிணி முரசும் கண் கிழிந்து உருளவும், காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும், கால் இயல் கலி மாக் கதி இன்றி வைகவும், மேலோர் உலகம் எய்தினன்; ஆகலின் ஒண்தொடி மகளிர்க்கு உறு துணை ஆகித் தன் துணை ஆயம் மறந்தனன் கொல்லோ," தன்னை நாடி வந்தவர்களுக்கு அளவற்ற மருத்துவம் அளித்த முகிலனும் இன்று விண்ணுலகம் அடைந்தான். தன் காதலிக்கு உறுதுணையாக இருந்தவன் அவளை மறந்தனனோ? என்று ஒரு தரம் கண்ணீருடன் அவனை நினைத்தவள் மனதில் முன்னைய காலத்தின் நினைவுகள் நிரம்பி வழிந்தன. முல்லைச்செல்வி ஒரு வன்னிக் கிராமத்தில் ஒரு தற்காலிக மருத்துவமனையில் பணிபுரியும் இளம் செவிலியர். அங்கு அரசின் தடைகளாலும் மற்றும் பல காரணிகளாலும் வளங்கள் பற்றாக்குறையாக இருந்தன, ஆனால் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான உறுதிப்பாடு ஏராளமாக இருந்தது. அங்குதான் முகிலன் என்ற கருணையுள்ள இளம் மருத்துவரைச் சந்தித்தாள், அவனுடைய கண்கள் எண்ணற்ற துயரங்களின் பாரத்தைச் சுமந்து கொண்டிருந்தாலும், நல்ல நாளைய நம்பிக்கையில் மின்னியது. அதேவேளை, போர் வன்னி மண்ணை உலுப்பி எடுத்துக் கொண்டிருந்தது. நாலாபுறமிருந்தும் மாறி மாறிப் போர்முனைச் சத்தங்கள் தினமும் கேட்டுக்கொண்டிருந்தன. ஆவேசம் கொண்டு கிளம்பும் படையினரும் அவர்களின் முன்னேற்றத்தை முறியடிக்கும் போராளிகளும் ஊடகங்களில் நாளாந்தச் செய்தியாகினர். தடுப்போம் விடமாட்டோம் என்ற கூக்குரல்களில் களமுனைகள் எரிந்து கருஞ் சாம்பலாகிக் கொண்டிருந்தன. நாலாபுறமும் அனல்பறக்கும் போர்கள் அடிக்கடி நடந்தன. எந்த முறியடிப்புத் தாக்குதலிலும் போராளிகள் மும்மரமாக ஈடுபட்டு தம்மை தாரைவார்த்து தடுத்துநிறுத்தினாலும் அவை, மீண்டும் மீண்டும் ஓயாமல் தொடர்ந்தவண்ணம் இருந்தன. கல்லறை வரிசைகள் வேகமாக நிறையத்தொடங்கின. கல்லறையில் விதைக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் களமுனையில் எதோ ஒருவகையில் மடிந்தவர்கள். அந்தச் சோகமான அழுகுரலுக்கும் மற்றும் குண்டுச் சத்தங்களுக்கும் இடையில், போரின் நடுவே, தரிசு நிலப்பரப்பில் வாழ்வில் ஒட்டிக்கொண்டிருக்கும் மல்லிகைக் கொடியைப் போல அவர்களது காதல் மெல்ல மெல்ல மலர்ந்தது. அவர்கள் குழப்பங்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியின் தருணங்களைக் கண்டனர் - கட்டப்பட்ட காயங்களின் மீது இருவரும் தங்கள் முழுக் கவனத்தையும் செலுத்திய அதே தருணத்தில், அவர்களின் அன்பும் பாசமும் அதனுடன் ஒட்டிய புன்னகையும் பரிமாறிக்கொண்டனர், பல வேளைகளில், நட்சத்திரங்களின் கீழ், குண்டுகளின் வெடிச்ச சத்தங்களுக்கிடையில், அவர்கள் அவசர உணவைப் பகிர்ந்து கொண்டனர், அதேவேளை வன்முறையின் நிழல்களிலிருந்து விடுபடக்கூடிய எதிர்காலத்தைக் கனவு கண்டனர். முகிலன் ஒரு மருத்துவரை விட அதிகமாகத் தன்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் அவன் வலிமையின் ஆதாரமாக இருந்தான். குண்டுவெடிப்புகளின் போது அவனது அமைதியான, நிதானமான நடத்தை, காயமடைந்தவர்களை அவனது மென்மையான தொடுதல், அரவணைப்பு மற்றும் தளராத அர்ப்பணிப்பு அவனை அனைவருக்கும் ஒரு தோழனாக மாற்றியது. முல்லைச்செல்விக்கு கூட இந்த புயலில் அவளது நங்கூரமாக அவன் இருந்தான். அவள், முகிலனின் உடைந்த கல்லறைத்துண்டுகள் முன் தன் கண்களை மூடிக்கொண்டாள், அவள் மனம் அவளது வாழ்க்கையின் இருண்ட நாளை மீண்டும் மறுபரிசீலனை செய்தது. எத்தனைதான் வீரத்தோடு உறுதியோடு மக்கள் நின்றாலும் இலங்கை வான்படையின் குண்டு வீச்சுக்கள் தமிழ் மக்களால் என்றும் மறக்க முடியாதவை. உலக நாடுகளால் கொடுக்கப்பட்ட பலவகைப்பட்ட போர்விமானங்கள் ஆலயங்களையும் குடியிருப்புகளையும் சிதறடித்துச் சென்றன. போர்விமானங்களின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் எண்ணிறைந்த பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். கிபிர்கள், மிக் விமானங்கள் போன்றவை வீசிய பலநூறு குண்டுகளால் கட்டிடங்கள் அழிந்தன. உடல்கள் எரிந்து கருகின. விமானத் தாக்குதல்கள் பற்றிய செய்தி வராத ஒரு நாளும் அன்று இருக்கவில்லை. "களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய் நுதி மழுங்கிய வெண் கோட்டான் உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;" யானைகள் மதிற் கதவுகளை வெகுண்டு மோதியதால் அவற்றின் வெண்ணிறமான தந்தங்கள் மழுங்கின. அந்த யானைகள், மனித உயிர்களை இரக்கம் எதுவுமின்றி கொல்லும் கூற்றுவனைப் போல் காட்சி அளித்தன என்கிறார் இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட புலவன் ஒருவன். ஆனால் இன்று கூற்றுவன், இழுத்துக்கட்டிய கச்சையோடு, கிபிர்கள், மிக் விமானங்களில் அகோரத்தாண்டவம் ஆடத்தொடங்கிவிட்டான். இப்போது அந்த மக்கள் திரள், இலங்கை அரசு, பாதுகாப்பு வலயம் என்று அறிவித்த பகுதியான முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த உடையார்கட்டு, விசுவமடு வள்ளிபுனம், இரணைப்பாலை ஆகிய போன்ற சில பகுதிகளுக்கு நகரத்தொடங்கியது. என்றாலும் கணக்கிலடங்கா எறிகணைகள் குண்டுகள் ஊர்மனைகளுக்குள் விழுந்த வண்ணமே இருந்தன. அங்கே தொட்டிலில் கிடந்த குழந்தைக்கும் உடல் சிதறும். தாயின் முலையில் பாலருந்திக் கொண்டிருக்கும் மழலைக்கும் தலை பறக்கும். சோற்றை அள்ளி வாயில் வைக்க போனவரின் கையும் துண்டாடப்படும். பதுங்கு குழிக்குள் பாயும் சிறுமியின் காலும் அங்கு இருக்காது! சாவு நடக்காத குடும்பம் எதுவும் இருக்கவில்லை. கதறல் ஒலி கேட்காத நேரமென ஒன்றும் இல்லை. எந்த நேரமும் எல்லோருக்கும் அடி விழுந்தது. அனைவரும் வலியால் துடித்தனர். "ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும், பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித் தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும், எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின் கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் எங்கோ, வாழிய குடுமி! தங் கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த, முந்நீர் விழவின், நெடியோன் நன்னீர்ப் ப·றுளி மணலினும் பலவே!" பசுக்களும்,பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும், பெண்களும், நோயுடையவர்களும், இறந்ததன் பின்னர்த் தென்திசையில் வாழ்வோராகிய முன்னோர்களுக்கு விருப்பத்துடன் ஈமச் செயல்களைச் செய்வதற்குரிய பொன்னையொத்த ஆண் மக்களைப் பெறாதவர்களும் ["பிதிர்க்கடன்"/ "இறந்தவர்களுக்கு செய்யும் கடன்" ஆற்றுதற்குரிய புதல்வர்களைப் பெறாதாரையும்] பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்! நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப் போகிறோம்’ என்று இந்த பாடல் கூறுகிறது. அதாவது அரசர்கள் போரில் இப்படி பட்ட அப்பாவிகளைக் கொல்லக்கூடாது. அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவிட்டுத் தான் போரைத் தொடங்க வேண்டும் என்று கூறுகிறது. அதுதான் யுத்த தருமமாகும். பண்டை மன்னர்கள் அவ்வாறுதான் போர்களை நடத்தினார்கள் என்றும் அது தான் அறவழிப்பட்ட போரின் அடையாளமாகும் என்றும் இப்பாடல் இடித்து கூறுகிறது. ஆனால் வன்னியில் நடந்தது என்ன? அப்படியான ஒரு நாளில், அன்று அந்த கொடுமையான போரின் நடுவில், அரசாங்கத்தால் மக்கள் பாதுகாப்பாக ஒதுங்க எனவும், தற்காலிக வைத்தியம் பார்க்கும் இடமாகவும் அறிவிக்கப்பட்ட, துப்பாக்கிச் சூடு இல்லாத பகுதியென வரையறைக்கப் பட்ட பகுதியில் அவள் கடையாற்றிக் கொண்டு இருந்தாள். அங்கு காயமடைந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இடைவிடாத ஷெல் தாக்குதலில் இருந்து தஞ்சம் அடைந்தவர்கள் என பலரும் புகலிடம் நாடிப் அங்கு புகுந்து இருந்தனர். ஆனால் பாதுகாப்பு வாக்குறுதிகள் பொய்யானவை என்பது பின்புதான் தெரியவந்தது. அடுத்தநாள் காலை, குண்டுகளின் வீச்சில் சத்தம் காற்றைத் துளைத்தது, அதைத் தொடர்ந்து காதை துளைக்கும் வெடிப்புச் சத்தங்கள், தற்காலிக பாதுகாப்பான மருத்துவமனையை குழப்பத்தில் மாறியது. வேதனையின் அலறல்களும், உதவிக்கான அழுகைகளும், கண்ணை எரிக்கும் புகையின் கடுமையும் காற்றை நிரப்பியது. அப்பொழுது முகிலன் அவள் பக்கத்தில் இருந்து, சிறு சிறு காயங்களுடன் ஒரு குழந்தைக்கு சிகிச்சை செய்து கொண்டிருந்தான். "நாங்கள் இனி எல்லோரையும் இங்கிருந்து நகர்த்த வேண்டும், அரசாங்கம் மீண்டும் பொய்யே கூறியுள்ளது" என்று அவன் அவசரமாகக் அவளுக்கும் மற்ற உதவியாளருக்கும் கூறினான். ஆனால் அதற்கிடையில், ஒரு ஷெல் மிக அருகில் தரையிறங்கி வெடித்தது. எல்லாம் சின்னாபின்னமாகச் சிதறின. முல்லைச்செல்வி சுயநினைவு திரும்பியதும் தான் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டதை உணர்ந்தாள். அவளது இடது கை மற்றும் கால் குண்டின் தாக்கத்தால், வெடித்துச் சிதறி இருந்தது. வலியின் வேதனையோடும், முகிலன் சுவரில் சாய்ந்து, அவன் கீழே இரத்தம் தேங்கிக் கிடப்பதைக் கண்டாள். அவள் எஞ்சியிருந்த வலிமையுடன் அவனிடம் ஊர்ந்து சென்றாள், அவள் இதயம் விரக்தியால் துடித்தது. “முகிலன்” என்று அவன் தலையை மடியில் வைத்துக்கொண்டு அழுதாள். அவனது மார்பு மேலோட்டமான அவளின் மூச்சுக் காற்றால் கொஞ்சம் துடித்தது, அவனது கண்கள் திறந்தன. "மன்னிக்கவும்," அவன் கிசுகிசுத்தான், அவனது குரல் மிக குறைவாக இருந்ததால் அவளுக்கு கேட்கவில்லை. "நான் விரும்பினேன்... இன்னும் பல உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் ... உனக்கு ஒரு சிறந்த வாழ்வை, உலகத்தைக் கொடுக்க வேண்டும் ..." என்றான். "பேசாதே" என்று கெஞ்சினாள், அவள் முகத்தில் கண்ணீர் வழிந்தது. "நீ நன்றாக இருப்பாய். நான் - நான் இதை சரிசெய்கிறேன். நான் உன்னைக் காப்பாற்றுவேன்." என்றாள். ஆனால் அங்கு எந்த மருந்தோ, கருவிகளோ, இருக்கவில்லை, எல்லாம் சிதைந்து விட்டது, எரிந்து விட்டது. நடுங்கும் கைகளும், பிரார்த்தனைகளும் தவிர அவளிடம் வேறொன்றுமில்லை. அவள் கன்னத்தில் இரத்தம் தோய்ந்த தன் கையை வைத்தான். எனக்கு சத்தியம் செய்” என்று மூச்சுத் திணறினான். "நீங்கள் எங்கள் இருவருக்குமாக வாழ்வீர்கள் என்று சத்தியம் செய்யுங்கள். ." என்றான். அவள் பதில் சொல்வதற்குள் அவன் கை தளர்ந்தது. அவன் கண்கள் மூடின, முகிலன், அவளுடைய காதலன், அவளுடைய தலைவன், மறைந்தான். அப்பொழுது பரந்த வெளியைக்கொண்ட குளக்கரைக்கு அருகில் இருந்த அந்த துயிலுமில்லதில் ஒரு குளிர் காற்று அவளை நிகழ்காலத்திற்குக் கொண்டு வந்தது. முல்லைச்செல்வி கண்ணீரைத் துடைத்துவிட்டு ஒரு சிறிய தீபச் சுடரை ஏற்றி, அதன் சுடரை காற்றிலிருந்து பாதுகாக்க தன் இருகைகளாலும் பொத்தி பொத்தி மறைத்தாள். முகிலனுக்காக மட்டுமல்ல, இரக்கமற்ற போரில் இழந்த அனைத்து உயிர்களுக்காகவும் அவள் ஒரு பிரார்த்தனையை மனதினுள் வேண்டினாள். "மொழியில் ஒரு பற்று கொண்டு விழியில் ஒரு ஏக்கம் கவ்வ வழியில் வந்த தடை உடைத்து சுழியில் மூழ்கிய வீரர்கள் இவர்கள்!" "ஒன்று இரண்டு ஆயிரம் கொலை இன்று நேற்று கண்டு துடித்து வென்று ஒரு முடிவு காண சென்று மாண்ட வீரர்கள் இவர்கள்!" "தாயின் தங்கையின் கற்பு காக்க சேயின் சேர்ந்தோரின் நலம் நாடி நாயின் வாலை நிமித்த எண்ணி பேயில் சிக்கிய வீரர்கள் இவர்கள்!" "உயிரைக் காப்பாற்ற சேவை செய்து குண்டும் சூட்டுக்கு மத்தியில் வாழ்ந்து மருந்தும் சிகிச்சையும் அளித்த இவனும் விண்ணில் வாழும் வீரன் தானே!" "அவர்கள் உன்னை, உன் ஞாபகத்தை அழிக்க முயற்சித்தார்கள், நடுகல்லை உடைத்து எறிந்தார்கள் " அவள் மெதுவாக, உடைந்த கற்களை விரல்களால் தேடித் தட்டிப் பார்த்தாள். "ஆனால் அவர்களால் முடியாது. என் இதயத்திலிருந்து மட்டும் அல்ல, நம் மக்களின் இதயங்களிலிருந்து மட்டும் அல்ல. நான் எடுக்கும் ஒவ்வொரு மூச்சிலும், நான் எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் கூட நீங்கள் வாழ்கிறீர்கள்." என்று முணுமுணுத்தாள். சூரியன் மறையும் போது, இடிபாடுகள் மீது ஒரு ஆரஞ்சு ஒளியை வீச, முல்லைச்செல்வி தன் ஊன்றுகோலுடன் இன்னும் அங்கு நின்றாள், அந்தி வெளிச்சத்திற்கு எதிராக தனது நிழற்படத்தை மண்ணில் வடிவமைத்தாள். அது அந்த உடைந்த முகிலனின் கல்லறைத் துண்டுகளைத் தழுவிக்கொண்டு இருந்தது. அவள் அங்கிருந்து விலகிச் செல்லும்போதும், அவள் ஏற்றிய விளக்கின் சுடர் உறுதியாக ஒளிர்ந்துகொண்டு இருந்தது, விழுந்தவர்களின் ஆவிகள் மாலைக் காற்றோடு மேலே சொர்க்கத்துக்கு எழுந்தது போல் தோன்றியது. அவர்களின் கிசுகிசுக்கள் அவளது வாக்குறுதியை வானத்திற்கு எடுத்துச் சென்றன: "நாங்கள் என்றும் மறக்க மாட்டோம்." அவள் கொஞ்ச தூரம் சென்றாள், பின் திரும்பி பார்த்தால், ஒவ்வொரு நடுகல்லும் எதோ அவளிடம் கேட்பது போல் இருந்தது. காதைக் கூர்மையாக்கி உற்றுக் கேட்டாள், அது அவளின் இதயத்தின் குரல், வன்னி மண்ணின் குரல்: "வாருங்கள், வந்து கை கொடுங்கள்- இமைகள் மூடி பல நாளாச்சு மூடுங்கள், மூடி கண்ணை கட்டுங்கள்- வரிசையாய் வருங்கள் பல சடலங்கள் தாருங்கள் தீர்வை, தந்து கவலை தீருங்கள்- கேள்விகள் கேட்டு என்னை வதைக்கின்றன நாக்கை அறுத்தனன் நாதி யற்றவன்- நங்கை இவள் உண்மை உரைத்ததால் முலையைச் சீவினான் கொடூர படையோன்- வஞ்சி இவள் காமம் சுரக்காததால் கண்களுக்குள் புதையாத இவர்களைத் தருகிறேன்- அப்பாவிகளை ஒன்று ஒன்றாய் புதைக்க வரிசையில் வரிந்து வருகினம் பல்லாயிரம்- இடையில் சின்னஞ் சிறுசு சில ஆயிரம் முழங்கினர், கதறி கண் முன் வந்தனர்- விசாரணை எடு- உண்மையை நிறுத்து கூடுங்கள், ஒன்றாய் உண்மையை உரையுங்கள்- படு கொலையை எதிர்த்த சடலம் கேட்கிறது" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  11. நிச்சயமாக. ஐரோப்பாவில் நிலம் விழுங்கி ரஸ்யா போல் ஆசியாவில் நிலம் விழுங்கி சீனா. இந்தியா ஒரு பேப்பர்-புலி என்பதால் திபெத்தை சீனா லபக்கியது மட்டும் அல்லாமல் வளங்களை உறிஞ்சுகிறது. திபத்தினை சீன மயமாக்கலின் அடுத்த கட்டம் இது. எத்தனை தேசிய இனங்களை விழுங்கிய கட்டமைப்பு சீனா என்பதை இந்த மேப் விளக்கும்.
  12. அந்த சட்டத்தரணியும் கைது செய்யப்படவேண்டும், காரணமில்லாமல் பாதிக்கப்பட்ட நபரை அச்சுறுத்தியதற்காக. மேலும் குறிப்பிடப்பட்ட பொலிஸாரையும் விசாரணை செய்யவேண்டும்.
  13. புதிய இணைப்பு யாழ்ப்பாணம் - கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியான காணொளியை அடிப்படையாக கொண்டு கோப்பாய் காவல்துறையினரால் மூன்று பேரும் யாழ்ப்பாணம் காவல்துறை புலனாய்வு பிரிவினரால் இரண்டு பேரும் என ஜவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
  14. தமிழ் நாட்டில் திமுக மீது எவ்வளவு விமர்சனம் இருப்பினும் இது போன்ற விஷயங்களுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. மேலே இந்த அறிவுப்புக்கு குதர்க்கமாக பதிலளித்து இருந்தவர்கள் தங்கள் தகமையை தாமகவே பறை சாற்றிக் கொண்டார்கள் என்று வைத்துக்கொள்ளலாம் குடும்ப உறவுகள், திருமணம் செய்யும் முறை, உண்ணும் உணவு, தாய்வழி சமூக ஒற்றுமை, உருவ ஒற்றுமை, DNA, ஆகியவற்றை ஒப்பிட்டால் தமிழர் தெலுங்கர் கன்னடர் என நாம் எல்லோரும் ஒரே இனத்தவரே. அவர்கள் தாம் வேறு என்று சொன்னாலும் நாம் அந்த உண்மையை அப்படியே விட்டுவிட முடியாது. ஏனென்றால் தாய் நாம் தான். பிள்ளைகள் தாயை மறுத்தலித்தாலும் தாய் அதை ஏற்று சும்மா வாய் பொத்தி இருக்க முடியாது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி!
  15. மீண்டும், போலீஸ், சட்டத்தரணி. இது என்ன போலீஸ் நிலையமா? நீதிமன்றமா? சட்டத்தரணி நீதிபதியா? அவர் எதற்கு போலீசுக்கு சென்று சமாதானம் பேசுகிறார்? அதுவும் தாக்கப்பட்ட மனிதருக்கு எதிராக? மனித உரிமைகள் ஆணையம் இந்த குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும். நகையை அபகரித்ததுமட்டுமல்ல அவரை தாக்கியது இரண்டு குற்றம். ஏன் சட்டத்தரணி அவரை சமாதானமாக போகச்சொன்னார்? ஏன் அவரை தாக்கினர் என்கிற காரணத்தை சொன்னார்களா? இங்கே யார் யார் திருடர் பாருங்கள். இதுதான், நாம் எமது சமூகத்திலேயே போராட எத்தனையோ உள்ளது. அதிகாரிகள், போலீசார், சமூகவிரோதிகள், சட்டத்தரணிகள் நட்பு. ஏழைமக்கள் வாழமுடியுமா? நீதி கிடைக்குமா?
  16. கொய்யால….உயிரோட இருந்த மனுசனை வெட்டி கொலை செய்யவில்லை எண்டு சந்தோசப்படுப்பா🤣
  17. 🎧 விழிகள் மூடி செவிகள் திறந்தால் தேன் பாயும் புல்லாங்குழல்! காதோடு உறவாடும்,புல்லாங்குழல்! தீக்காயம் பட்ட போதும்,வருந்தவில்லை புல்லாங்குழலை பட்டாபோதும் என்பதில்லை புல்லாங்குழல்! காற்றை இசையாக்கும் வித்தகக் கருவி புல்லாங்குழல்! மௌனமாக இருக்கும் காற்றுத் தீண்டும் வரை புல்லாங்குழல்! உருவில் சிறியது உணர்வில் பெரியது புல்லாங்குழல்! காட்டில் விளைந்து காதோடு உறவாடும் புல்லாங்குழல்! தீயால் துளைத்தபோதும் இசை நல்கும் புல்லாங்குழல்! இதழ் குவித்து விரல் பதித்து காற்றுத் தந்ததும் இசைக்கும் புல்லாங்குழல்! அன்று முதல் இன்று வரை அற்புத இசை புல்லாங்குழல்! எம்மொழியும் சம்மதம் இனிய இசைப் பிறக்கும் புல்லாங்குழல்! கானம் இசைத்து கவலைப் விழிகள் மூடி செவிகள் திறந்தால் தேன் பாயும் புல்லாங்குழல்! 👍🔔
  18. சிந்துவெளியில் மறைந்திருக்கும் புதிரை விடுவிக்க… மூன்று மெகா பரிசை அறிவித்த ஸ்டாலின் christopherJan 05, 2025 14:28PM சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு தொடக்க விழா சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் இன்று (ஜனவரி 5) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கருத்தரங்கை தொடங்கி வைத்து உரையாற்றினார். கட்சியின் அரசல்ல, இனத்தின் அரசு! அவர், “2021-ஆம் ஆண்டு நம்முடைய அரசு அமைந்ததும், ‘திராவிட மாடல் அரசு’ என்று நாங்கள் அதற்கு பெயர் சூட்டினோம். “இது ஒரு கட்சியின் அரசல்ல, இனத்தின் அரசு” என்று குறிப்பிட்டேன். அதற்கு அடையாளமாக இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன வரலாற்றை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு பார்க்கும் முதிர்ச்சியின் அறிவுச்செயல்பாடாக இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவை நாம் இப்போது கொண்டாடி இருக்கிறோம். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், இப்படி ஒரு விழாவை அரசே முன்னின்று நடத்தாது என்று சொல்லத்தக்க வகையில், மாபெரும் பண்பாட்டுப் பெருவிழாவாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் நமக்கான இடத்தை நிலைநிறுத்துவதுதான் நம்முடைய நோக்கம்! அமைச்சருக்கு பாராட்டு! வரலாறும், பண்பாடும், தொல்லியலும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கும் நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், நிதித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொல்லியல் ஆணையர் உதயச்சந்திரனுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுதல்களையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இரண்டு பேரும் தொல்லியல் ஆர்வலர்கள். இப்போது கேட்டாலும், இந்த மேடையில் மணிக்கணக்கில் சிந்துவெளியைப் பற்றி பேசக் கூடியவர்கள். இவர்கள் இந்தத் துறைக்கு கிடைத்திருப்பது இந்தத் துறைக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கே பெருமை கிடைத்திருக்கிறது. ஆரியமும் சமஸ்கிருதமும்தான் மூலம் என்பது கற்பனை! சிந்துவெளி நாகரிகம் முதன்முதலில் 1924-ஆம் ஆண்டு செப்டம்பர் 20-ஆம் நாளன்று உலகுக்கு அறிவிக்கப்பட்டது. ‘தி இல்லஸ்டிரேட்டட் லண்டன் நியூஸ்’ என்ற இதழில் இந்தியத் தொல்லியல் துறை டைரக்டர் ஜெனரல் சர் ஜான் மார்ஷல் அதை அறிவித்தார். இது இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையை உண்டாக்கி நம்முடைய கடந்த காலத்தை பற்றிய புரிதலையே மாற்றி அமைத்தது. ஆரியமும் சமஸ்கிருதமும்தான் இந்தியாவின் மூலம் என்று கற்பனையை வரலாறு என்று அதற்கு முன்னர் பலரும் சொல்லிக்கொண்டு வந்தார்கள். அதை மாற்றியது ஜான் மார்ஷல் அவர்களின் ஆய்வுகள்தான். சிந்துவெளி நாகரிகம் ஆரியத்துக்கு முற்பட்டது. அங்கு பேசப்பட்டது திராவிட மொழியாக இருக்கலாம் என்று அவர் நூறாண்டுகளுக்கு முன்பு சொன்ன குரல் இன்றைக்கு வலுப்பெற்றிருக்கிறது. “என்னதான் அங்கு இல்லை!” என்று கேட்கும் அளவுக்கு நன்கு கட்டமைக்கப்பட்ட வளர்ச்சி பெற்ற ஒரு நாகரிகம் சிந்துவெளியில் இருந்ததை அங்கு கண்டெடுக்கப்பட்ட பல்வேறு அடையாளங்கள் காட்டுகிறது. கீழடி – சிந்துவெளி ஒற்றுமைகள்! சிந்து வெளியில் ‘காளைகள்’தான் இருந்தது. இது திராவிடச் சின்னம்! சிந்துவெளியில் இருந்து, இன்றைய அலங்காநல்லூர் வரை காளைகள் இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களில், ஏறுதழுவுதல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் இருக்கிறது. காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்று வருகிறது. சிந்துவெளி நாகரிகம் சார்ந்த ஒரு முத்திரையில் காளை உருவமும், அதை அடக்க முயலும் வீரரை அந்த காளை தூக்கி வீசுவதும் இருக்கிறது. அப்படியே மற்றொரு பக்கம் பார்த்தோம் என்றால், குதிரை முத்திரை சிந்துவெளியில் இல்லை. வேத இலக்கியங்களில் பெருநகரங்களும் இல்லை, தாய்த்தெய்வ வழிபாடும் இல்லை. ஆனால், இந்த இரண்டும் சிந்துவெளியிலும் இருக்கிறது. கீழடியிலும் இருக்கிறது. இதையெல்லாம் வைத்துதான் சங்ககாலத் தமிழர்களின் மூதாதையர் இருந்த இடம்தான் சிந்துவெளி என்று நிறுவப்பட்டிருக்கிறது. ஜான் மார்ஷலை பாராட்டிய பெரியார், அண்ணா சிந்துவெளி பற்றி ஜான் மார்ஷல் தன்னுடைய கண்டுபிடிப்பை வெளியிட்டதும், தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய விடுதலை நாளிதழில் அதைப் பற்றி கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறார். பேசியும் இருக்கிறார். தந்தை பெரியாரை தொடர்ந்து பேரறிஞர் அண்ணாவும் 1948-ஆம் ஆண்டிலேயே சிந்துவெளி நாகரிகத்தின் அடையாளங்களை வெளிக்கொணர்ந்த சர் ஜான் மார்ஷலின் சாதனைகளை பாராட்டி எழுதியிருக்கிறார். 2010-ஆம் ஆண்டு கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் செம்மொழி மாநாட்டு இலச்சினையில், குமரி வள்ளுவர் சிலை, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறள் வரியுடன் சேர்த்து சிந்துவெளி முத்திரையையும் பதிவிட்டார். அந்த மாநாட்டில் புகழ்பெற்ற அறிஞர்களான அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன், ஆர்.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் சிந்துவெளி பண்பாட்டையும், தமிழ்ப் பண்பாட்டையும் ஒருங்கிணைத்து முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசித்தார்கள். அந்த மரபின் வழி வந்த நம்முடைய திராவிட மாடல் அரசு சார்பில், இப்போது சிந்துவெளி பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நினைவு பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்துகிறோம். சிந்துவெளி வரி வடிவங்களும், தமிழ்நாட்டுக் குறியீடுகளும், வடிவவியல் ஆய்வு என்ற நூலையும் இங்கு ஒரு வெளியிட்டிருக்கிறேன். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, ஜான் மார்ஷலின் சிலைக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். சிந்துவெளிப் பண்பாட்டை கண்டுபிடித்தது மூலமாக, நம்முடைய வரலாற்றையும், பெருமையையும் மீட்டவர் ஜான் மார்ஷல், அவரைச் சிறப்பிப்பது தமிழ்நாடு அரசுக்குப் பெருமை. சிந்துவெளிப் பண்பாடு பேசப்படும் வரைக்கும், ஜான் மார்ஷலுக்கு சிலை வைத்தது திராவிட மாடல் அரசு என்ற பெருமையும் நிலைக்கும். தாமிரபரணி நாகரிகம் 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது! சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி உலக அளவில் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. தமிழ்நாடு தொல்லியல் துறையால், இப்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் ஆதிச்சநல்லூருக்கு அருகே, சிவகளை ஆய்வு மூலம் ‘தண் பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று அறிவியல் வழிப்பட்ட ஆய்வுகள் அடிப்படையில் உறுதி செய்திருக்கிறோம். கீழடி அருங்காட்சியகம் போலவே பொருநையிலும் ஒரு அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டு வருகிறது. எட்டு இடங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு! அறிஞர் பெருமக்கள் நிறைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் தமிழ்ப் பண்பாட்டை பேணிப் பாதுகாப்பதுதான் தமிழ்நாடு அரசின் தலையாய கடமை என்று உலகுக்கு உணர்த்தும் வகையில், மூன்று முக்கியமான அறிவிப்புகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் நான் வெளியிட விரும்புகிறேன். செழித்து வளர்ந்த சிந்துவெளிப் பண்பாட்டின் எழுத்து முறையை இன்னும் நம்மால் தெளிவாக புரிந்துக்கொள்ள முடியவில்லை. நூறு ஆண்டுகளைக் கடந்தும் தீர்க்கப்படாத இந்த சிந்துவெளிப் புதிர் பற்றி உலகெங்கும் உள்ள தொல்லியல் ஆய்வாளர்கள், மொழியியல் தமிழ் அறிஞர்கள் மற்றும் கணினி வல்லுநர்கள் உட்பட பலரும் இன்றளவும் பெரும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். அந்த முயற்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில், சிந்துவெளிப் புதிருக்கான உரிய விடையை கண்டுபிடித்து, சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக புரிந்துக்கொள்ள உதவும் வழிவகையை தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிக்கொணரும் நபர்கள் அல்லது அமைப்புக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என்பது முத்தான முதல் அறிவிப்பு. சிந்துவெளி பண்பாடு குறித்து தொடர் ஆராய்ச்சிகளை, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையுடன் இணைந்து ரோஜா முத்தையா நூலகத்தின் சிந்துவெளி ஆராய்ச்சி மையம் மேற்கொள்ளும் வகையில் தலைசிறந்த தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் பெயரில் ஓர் ஆய்வறிக்கை அமைக்க 2 கோடி ரூபாய் நல்கை வழங்கப்படும் என்பது இரண்டாவது அறிவிப்பு. தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை உலகமே தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஓயாமல் உழைக்கும் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்கள் மட்டுமின்றி. ஆய்வாளர்கள், நாணயவியல் ஊக்கப்படுத்தும் விதமாக, கல்வெட்டியல் வல்லுநர்கள் ஆகியோரையும் ஆண்டுதோறும் இரண்டு அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்பது மூன்றாவது அறிவிப்பு. இந்த மூன்று அறிவிப்புகளும் இந்தத் துறை ஆய்வுகளுக்கு வேகத்தையும், ஊக்கத்தையும் வழங்கும் என்று நான் நம்புகிறேன். சிந்துவெளி முதல் கீழடி வரை தமிழினத்தின் பெருமை நிரம்பி இருக்கிறது. அறிவியல் முறைப்படி சான்றுகள் அடிப்படையில், தமிழ்ச் சமூகத்தின் தொன்மையை அறிவுலகம் இப்போது ஏற்றுக்கொள்ளத் தொடங்கி இருக்கிறது. இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தமிழைத் தவிர்த்துவிட்டு இனி எழுதமுடியாது என்று நாம் உரக்கச் சொல்வோம்! ஜான் மார்ஷலின் கண்டுபிடிப்பின் நூற்றாண்டில் அவருக்கு நாம் நன்றியை உரித்தாக்கி, அவர் விட்டப் பணியை நாம் தொடர்வோம்” என்று ஸ்டாலின் பேசினார். https://minnambalam.com/political-news/the-mystery-hidden-in-the-indus-valley-stalin-announces-three-mega-prizes/
  19. ஐயோ அது ஊழல் ..அதை பிடிக்க யாழ் தோழர் எம்.பி ..மரத்தில் ஏறி நிற்பார்
  20. பால் காவடி புஷ்ப காவடி பன்னீர் காவடி மனமுருகி தூக்குகின்றோம் அனுர காவடி🤣
  21. ஆளுக்கு ஐயாயிரம் படி பொலிசாரின் பொக்கெட்டுக்குள் காசை தவற விட வேண்டும்🤣
  22. அவரவர் தொழில் சார்ந்த பழக்க வழக்கங்கள் இருக்கும் தானே?🤣 WWE
  23. நான் நாலைஞ்சு தரம் எயர் கனடாவிலை போயிருக்கிறன். சாப்பாடும் சரியில்லை. அதிலை வேலை செய்யிற ஆக்களும் வடிவில்லை. கனடா போறதையே வெறுத்துப்போச்சுது.
  24. கிந்தியாவுக்கு சீனா கடுப்பேத்தி அங்கை ஒண்டுமே ஆகப்போறதில்லை.சக்தியும் இல்லை.உபயோகபூர்வமாக அண்டை நாடுகளுடன் பழகியதும் இல்லை.அப்படி பழகினாலும் அது வஞ்சத்துடனேயே இருக்கும். ஆகக்கூடிய பட்சமாக கொப்பி பென்சில்களுடன் தாங்களும் இருக்கின்றோம் என படம் காட்ட வருவார்கள். நான் அறிந்த வரையில் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் மட்டுமல்ல.உலகம் முழுவதும் வியாபித்து விட்டது.
  25. அமெரிக்காவுக்கு கந்தையர்ர லொகேஷன் ஒண்டும் தேவையில்லை. கந்தையரை கூகிள்ல ஒருக்கால் அமெரிக்காவுக்கு ---- போடுவன் எண்டு எழுதச்சொல்லுங்கோ.....மிச்சம் தானியங்கியாக கதவை பிரிச்சுக்கொண்டு வரும். 🤣
  26. சிறி இது எப்படி நடந்ததோ தெரியவில்லை. எனக்கு தெரிந்தவரை பலரும் பலகாலமாக எயர்லங்கா விமான உணவுகளை புகழ்ந்தே சொல்லிவருகிறார்கள். கடந்த வருடம் கூட எனது மச்சான் இதில் பயணித்துவிட்டு நல்ல சாப்பாடு என்றார். கனடாவிலிருந்து எயர் பிரான்ஸ்சில் உதவாத சாப்பாடு என்று பேசினார். இவ்வளவு காலம் பயணம் செய்தும் நான் ஒருநாளும் எயர் லங்காவில் பயணிக்கவில்லை.
  27. 'யெஸ் சார்..............மார்வலஸ் ஐடியா.........' என்று சுற்றி இருப்பவர்கள் தலையாட்டிக் கொண்டு இருப்பார்கள் போல..................🤣.
  28. இலங்கை அரசு இவர்கள் எல்லோரையும் பர்மாவிற்கு திருப்பி அனுப்ப முடிவெடுத்து, பர்மா அரசை தொடர்பு கொண்டது. ஆனால் பர்மா அரசு இவர்களை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இது ஒரு 'கடவுள் இருக்கார், குமார்..........' தருணம். இந்தச் சனங்கள் அந்தக் கொடிய அரசிடம் மீண்டும் போனால் அவர்களுக்கு கொடுமையைத் தவிர வேறு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. இலங்கையிலிருந்து எல்லா இனங்களையும் சேர்ந்த எத்தனை இலட்சம் மக்கள் அகதிகளாக உலகெங்கும் போய் வாழ்கின்றனர். இலங்கை நாடும் உலகத்திற்கு ஏதாவது திருப்பிக் கொடுக்க வேண்டாமா............. இலங்கை அரசு இந்தச் சனங்களை அகதிகளாக அறிவித்து, அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கவேண்டும். சென்னையில் இந்த மக்கள் பலர் அகதிகளாக ஏற்கனவே வாழ்கின்றனர்.
  29. அட.... இது, ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணமாக இருக்கே. 😂 சாமி குற்றம், பொல்லாதது. நேர்த்தி முடிந்தவுடன் சொல்லுங்கள், ஜக்கம்மாவை அனுப்பி வைக்கின்றேன். 🤣
  30. யார்லுங் சாங்போ ஆற்றை மறிப்பதால் தர்மபுத்திராவுக்கு அதிகளவு பாதிப்பு உள்ளதாகத் தெரியவில்லை. இன்று காலை ஏற்பட்ட 6.8 றிச்டர் அளவான பூமிஅதிர்வு இந்தப் பகுதியில்தான் ஏற்பட்டது.
  31. A- Systole ( சலனமற்ற இதயம் ) சில வினாடிகள் மட்டுமே அல்லது சிலருக்கு சில நிமிடம் மட்டுமே இது நடக்கும் SA Node எனப்படும் இதயத்தின் Battery திடீர் என்று நிற்பதால் அல்லது மிக குறைந்த அளவு மின்சாரத்தை வழங்குவந்தால் இதயம் சுருங்கி விரியாமல் இருக்கும். பல நோயாளிகளுக்கு இது சில வினாடிகளுக்கும் சரி ஆகி விடும்.வேகத்தைடை தான் இவர் மீண்டு வந்ததற்கு காரணம் என்று உறுதியாக சொல்ல முடியாது Pacemaker வைத்து விட்டால் சரியாகிவிடும்
  32. சில வருடங்களின் முன் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைக்குள் ஒரு வண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இலங்கைத் தேயிலையை இனிமேல் வாங்க மாட்டோம் என்ற செய்தியும் பரப்பபட்டது. இலங்கைத் தேயிலையை அதிகமாக வாங்கிக் கொண்டிருந்தவர்கள் ரஷ்யர்களும், மத்திய கிழக்கு நாடுகளும் தான். அதற்கு முன்னர் இலங்கை அரசு அஸ்பெஸ்டாஸ் பாவனையை முற்றாக தடைசெய்திருந்தது. அஸ்பெஸ்டாஸ் ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு வந்து கொண்டிருந்தது. வெள்ளை அஸ்பெஸ்டாஸிற்கு பதிலாக நீல அஸ்பெஸ்டாஸ் தகடுகளை இலங்கை அரசு மீண்டும் அனுமதித்தது. பின்னர் ரஷ்யா வழமை போல தேயிலையை இலங்கையிலிருந்து வாங்கிக் கொண்டது. இன்னொரு பக்கமாக, பிடிபட்ட வண்டை ஆராய்ந்து பார்த்தார்கள். அந்த வண்டு இலங்கை வண்டே கிடையாது என்ற உண்மை தெரிந்தது. வண்டு மீண்டும் வரலாம்.................😜.
  33. உங்களின் பேத்தி ஜெயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . ......சீரும் சிறப்பும் பெற்று நீடூழி வாழ்க . .....! 💐
  34. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உங்களின் பேத்திக்கு!
  35. ஹிகாமா (ஜக்கம்மா😎) வை ருசிப்பதில் தவறில்லை! தோலைக் கவனமாக நீக்கிச் சாப்பிட வேண்டிய "இன்னொரு கிழங்கு", அவ்வளவு தான். (தோலை நீக்கா விட்டாலோ அல்லது ஏனைய தாவரப் பகுதிகளை அதிகளவில் உட்கொண்டாலோ, கிட்டத்தட்ட 'சயனைட்" சாப்பிடுவது போல ஒக்சிசன் இல்லாமல் மரணிக்க வேண்டி வரும்) ஆனால்: "இனுலின் இருப்பதால் குடல் பக்ரீரியாக்களுக்கு நல்லது", அல்லது "ஒட்சியேற்ற எதிரிகள் இருப்பதால் பல நோய்களைத் தவிர்க்க உதவும்" - இந்தக் கூற்றுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை. உண்மையில், இனுலின் குடல் பக்ரீரியாக்களை மாற்றுகிறது என்று செய்த ஆய்வுகள் பல போலியான, விஞ்ஞான முறைமையற்ற ஆய்வுகள் என நிரூபித்திருக்கிறார்கள். குடலில் இருக்கும் பக்ரீரியாக்கள் தளைக்க வேண்டுமெனில், எந்த தாவர நார்ச்சத்துடைய உணவையும் எடுத்துக் கொள்ளலாம், "றிஸ்க்" எடுத்து ஜக்கம்மாவைச் சாப்பிட வேண்டுமென்ற அவசியம் இல்லை. Steven Gundry யின் போலி விஞ்ஞானத் தகவல்கள் பற்றியும் வாசகர்கள் அவதானமாக இருக்க வேண்டும். "The Plant Paradox" என்று இவர் எழுதிய புத்தகம் சக்கை போடு போட்டது விற்பனையில். பின்னர் மருத்துவ உலகம் புத்தகத்தில் மேற்கோள் காட்டப் பட்ட ஆய்வுகளைத் தேடிய போது, அப்படி ஒன்றையும் காணவில்லை. அப்படியான ஆய்வுகளே நிகழ்ந்திருக்கவில்லை. ஒப்ரா அறிமுகம் செய்த Dr. Oz போலவே, தனக்குத் தெரியாத விடயங்களை வியாபார நோக்கத்தில் "அற்புத நிவாரணிகளாக" பிரபலப்படுத்தி காசு பார்க்கும் இன்னொரு மருத்துவர் இவர்!
  36. உங்கள் பேத்திக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  37. இந்த ஏஞ்சல் நீர்வீழ்ச்சி... நிலவு உருகி அருவியாக கொட்டுவது போன்ற வியப்பை ஏற்படுத்தும். இது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள யோஸ்மைட் தேசிய பூங்காவில் உள்ளது. 2425 அடி உயரத்திலிருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சியில் ஆண்டின் சில நாட்களில் இத்தகைய அழகோவியத்தை காணலாம்.
  38. ஆம் இந்த சனி லேசுப்பட்ட சாமனல்ல இல்லவா யூரிப்பில் பின்வரும் தலைங்களில் பட்டையை கிள‌ப்புவார். கெத்து காட்டும் சனி வைச்சு செய்யும் சனி கொட்டி கொடுக்கும் சனி சுக்கிரனுடன் சேரும் சனி, 100% நிச்சயமாக திருமணத்திற்கு அப்பால் இன்னொரு உறவுக்கு வழி வகுப்பார். சனியும் குருவும் வக்கிரம் மறுமணம் நிச்சயம் குருவும் சனியும் இணைவு வெளிநாட்டு யோகம் கதவருகில் சனி/செவ்வயும் தோசம், தலைகீழாக நின்றாலும் காலம் பூரவும் கையில்தான் கதை சுக்கிரதசை ஆரம்பம் அந்தப்புரம் போக தயராகும் மிதுனராசியினர் சனி பெயர்சி ஜக்போட் அள்ளப்ப்கும் ராசிகள் வாசகர் அனுபவத்தில் இன்னும் யூரிப் தலையங்கள் வரவேற்கப்டுகின்றது
  39. ஆண்டவனால் நிச்சயிக்கப்பட்ட இத் திருமணத்தில் . ...........! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.