Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்16Points87990Posts -
Justin
கருத்துக்கள உறவுகள்10Points7050Posts -
alvayan
கருத்துக்கள உறவுகள்8Points5417Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்7Points19122Posts
Popular Content
Showing content with the highest reputation on 01/09/25 in Posts
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
"படம் பார்" ரீமின் தில்லாலங்கடி வேலைகளுக்கு இலகுவாக "காதைக் கொடுத்து பூ வாங்கும்" ஆள் என்று இன்னொரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்😂. கீழே இதை தகவல் சரிபார்க்கும் ஒரு இணையத்தளம் சரி பார்த்த விபரம் இருக்கிறது! கண்டு களிப்படையுங்கள்! https://tamil.factcrescendo.com/factcheck-periyar-not-commented-sexually-in-11th-may-1953-edition-of-viduthalai/ NB: விடுதலை ஏடு இதழில் 1953 இல் இப்படியொரு வாக்கியத் தொடர் அச்சாகி இருக்காது என்பதற்கான இன்னொரு ஆதாரமும் வாக்கியத் தொடரின் ஒரு சொல்லில் இருக்கிறது. தமிழ், தமிழன் என்று புலம்பும் "பச்சைத்" தமிழர்களின் 😎 தமிழறிவை சோதிக்க நல்ல சந்தர்ப்பம்!4 points
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
விசாரித்தமைக்கு நன்றி! நான் கிழக்குக் கரையில் (எங்களுக்கு வேற பிரச்சினை, கடுங்குளிர், கூதல் காற்று, ஆனால், பழகிய காலநிலை தான்). மருதர், தியா, நிகே ஆகியோரும் ஆபத்தில்லாத "பனிவனத்தில்" ! யூட் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை, ஆனால் நலமாக இருப்பாரென நம்புகிறேன். பகிடி என்னவென்றால், தாயகத்தில் இருக்கும் என் சொந்தக் குடும்ப உறவுகளுக்கு நான் அமெரிக்காவில் எங்கே வசிக்கிறேன் என திக்குத் திசை தெரியாது. ஆனாலும் இன்னும் ஒருவரும் ஒரு கோல் எடுத்து "நீ ஓகேயா?" எனக் கேட்கவில்லை. யாழ் மூலம் பழக்கமான ஏராளன் மட்டும் தான் பனிப்புயல் வந்த போனவாரமே "அண்ணை நீங்கள் ஓகேயா?" என்று செய்தி அனுப்பியிருந்தார். "சட்டை கிழிஞ்சாலும்" யாழில நிண்டு அடிபடுறது இதுக்காகத் தான்😂!4 points
-
இங்கிவனை யான் பெறவே
3 pointsஇங்கிவனை யான் பெறவே ஆர் வி சுப்பிரமணியன் கர்ணனின் உடல் ஆறு நாழிகையாகக் காத்துக் கொண்டிருந்தது. துச்சாதனனுக்கு கொள்ளி வைத்துவிட்டு அதற்குப் பிறகுதான் துரியோதனன் கர்ணனின் சிதைக்கு வந்திருந்தான். சிதைக்கருகே வந்ததும் அவன் சரிந்து தரையில் உட்கார்ந்தான். அவன் நோக்கு எங்கேயோ வெற்றிடத்தில் நிலைத்திருந்தது. 17 நாட்களில் எத்தனையோ உடல்கள் எரிக்கப்பட்டதில் எலும்புகளின் சாம்பல் வெண்பூச்சாக தரை மேல் படிந்திருந்தது. இன்றைய சிதைகள் அணைந்து கொண்டிருந்தன. மெல்லிய சிவப்பொளியில் இடுகாடு வினோதக் காட்சியாகத்தான் இருந்தது. துரியோதனன் அணிந்திருந்த கறுப்பு உடை அந்த வெண்பூச்சு தரைக்கு பெரிய மாற்றாகத் தெரிந்தது. அவன் தலைமுடியில் அங்கங்கே கரி படிந்திருந்தாலும் அங்கங்கே மட்டும் நரைத்திருந்த அவன் தலை முடியில் அது தெரியவே இல்லை. கருநிற ஆடை சில இடங்களில் பொசுங்கிப் போய் அவன் வெண்ணிற உடல் சிதைகளின் ஒளியில் பளிச்சிட்டது. அறிவிப்பு எதுவும் இல்லாவிட்டாலும் துரியோதனன்தான் சிதைக்கு தீ மூட்டப் போகிறான், விருஷகேது அஸ்தினாபுரத்திலிருந்து வரப் போவதில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்திருந்தது. ஆனால் எல்லா ஏற்பாடுகளும் முடிந்த பின்னும் துரியோதனன் தீ வைக்க எழவில்லை. இரண்டு நாழிகை காத்திருந்த பின்னர் சகுனி அருகில் சென்று துரியோதனனின் தோளில் கை வைத்து ஏதோ சொல்ல முற்பட்டார். துரியோதனன் கீழ் ஸ்தாயியில் உறுமினான். சகுனி கைகளை விலக்கிக் கொண்டு பின்வாங்கிவிட்டார். போருக்கு முன்னரே இடுகாட்டில் சேகரிக்கப்பட்டிருந்த சந்தனக் கட்டைகள் எப்போதோ தீர்ந்துவிட்டிருந்தன. அரச குடும்பத்தினருக்கு மட்டுமே சந்தனக் கட்டைகள் என்று விதி வகுத்தும் தேவையான சந்தனக் கட்டைகள் இல்லை. இரண்டு நாளாக நெய்யும் தீர்ந்துவிட்டிருந்தது. இன்று இடுகாட்டில் உடைந்த தேர்த்தட்டுகளும், சக்கரங்களும்தான் விறகாகப் பயன்படுத்தப்பட்டிருந்தன. விழுந்திருந்த யானை, குதிரைகளின் உடல் கொழுப்புதான் நெய்யாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதனால் துர்நாற்றம் ஏற்பட்டிருந்தது, ஆனால் சில நிமிஷங்களில் பழகிவிட்டதால் அதை யாரும் உணரக் கூட இல்லை. நேரம் சென்று கொண்டே இருந்தது. சுபாகு சகுனியிடம் “நீங்கள் இன்னொரு தடவை சொல்லிப் பாருங்கள்” என்று மெதுவாகச் சொன்னான். சகுனி பெருமூச்செறிந்தார். “இல்லை, அவனை அவன் போக்கில் விட்டுவிடுவோம். துச்சாதனனின் இறப்பைக் கூட ஏற்றுக் கொண்டுவிட்டான், ஆனால் அவனால் கர்ணன் இனி இல்லை என்பதை ஏற்க முடியவில்லை. எப்போது அவன் மனதில் அது பதிகிறதோ அப்போது தீ வைக்கட்டும். அவனைத் தனிமையில் விடுவோம், நாம் கிளம்புவோம்” என்று சொன்னார். மரத்தின் மீது சாய்ந்து கொண்டிருந்த அஸ்வத்தாமன் கிருபரை லேசாக உலுக்கினான். நின்ற நிலையிலேயே கண்ணயர்ந்துவிட்ட கிருபர் சிறு அதிர்ச்சியோடு விழித்துக் கொண்டார். “அரசரை அவர் போக்கில் விட்டுவிடுவோம், பாசறைக்குச் செல்வோம் என்கிறார் காந்தாரர்” என்று அவன் முணுமுணுப்பான குரலில் சொன்னதும் கிருபர் தலை அசைத்தார். அனைவரும் சத்தம் வராமல் பின்வாங்கி பாசறை பக்கம் நடந்தனர். துரியோதனனின் மனம் வெறுமையில் ஆழ்ந்திருந்தது. சுற்றிலும் இருந்தவர்கள் சென்றது அவனுக்குத் தெரியவும் தெரிந்தது, அதே நேரத்தில் தெரியவும் இல்லை. அவன் மனதின் ஒரு சரடு உடன் பிறந்தவனும், தனது நிழலானவனுமான துச்சாதனன் மறைவு கூட தனக்கு இத்தனை பெரிய காயத்தை ஏற்படுத்தவில்லை என்பதை உணர்ந்து வியந்தது. திடீரென்று அவன் கண்களில் கண்ணீர் வடிய ஆரம்பித்தது. இரண்டு நிமிஷம் கழித்து பெரிய குரலெடுத்து அழுதான். அழ ஆரம்பித்ததும் சுற்றுமுற்றும் ஒரு முறை பார்த்தான். யாரும் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டதும் இன்னும் பெரிய குரலெடுத்து விம்மினான். “துச்சா! “ என்று அலறினான். நெஞ்சில் அடித்துக் கொண்டான். தாவி எழுந்தான். கர்ணனின் சிதை அருகே சென்று கர்ணனின் கைகளை எடுத்து தன் கண்ணோடு ஒற்றிக் கொண்டு அழுதான். “சுயோதனா!” என்று துயர் ததும்பிய ஒரு பெண் குரல் கேட்டது. தீயை மிதித்தது போல துரியோதனன் அதிர்ந்து திரும்பினான். புதர் மறைவிலிருந்து குந்தியும் யுதிஷ்டிரனும் வெளிப்பட்டனர். துரியோதனன் இன்னும் பெருங்குரலெடுத்து அழுதான். “அன்னையே!” என்று அலறியபடியே குந்தியை அணைத்துக் கொண்டான். அடிபட்ட காட்டு மிருகம் போல கதறினான். குந்தி அவன் மார்பளவுதான் உயரம், அவன் அணைப்பில் மூச்சுத் திணறினாள். யுதிஷ்டிரன் அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தான். “தருமா!” என்று அழுதபடியே திரும்பி அவனையும் தழுவிக் கொண்டான். “யுதிஷ்டிரா, ஏன் வஞ்சமும் போட்டி மனப்பான்மையும் ஆணவமும் அகங்காரமும் உள்ள க்ஷத்ரியராகப் பிறந்தோம்? வேடனாக, மீனவனாக, இடையனாக, குதிரைச் சூதனாக பிறந்திருந்தால் நூற்றைவரும் எத்தனை மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கலாம்? அடுத்த ஜன்மம் என்று ஒன்று இருந்தால்…” என்று துரியோதனன் விம்மினான். தருமன் ஒன்றும் பேசவில்லை. வெறுமனே துரியோதனன் கைகளைப் பிடித்துக் கொண்டான். குந்தி துரியோதனன் முதுகை நீவிக் கொடுத்தாள். “குதிரைச் சூதனாகப் பிறந்த இவனையும் நான் நிம்மதியாக வாழவிடவில்லை, அவனையும் அரசனாக்கி இந்த க்ஷத்ரிய நரகத்தில் ஆழ்த்திவிட்டேன்!” என்று துரியோதனன் விசும்பினான். மெதுமெதுவாக துரியோதனனின் மார்பு குலுங்குவது அடங்கியது. மீண்டும் தரையில் சரிந்து உட்கார்ந்தான். யுதிஷ்டிரனின் கைகளைப் பிடித்துக் கொண்டான். தழுதழுத்த குரலில் “உனக்கு ஆயிரம் கொடுமை இழைத்த எனக்கு ஆறுதல் சொல்ல வந்திருக்கிறாய், உன் பெருந்தன்மை யாருக்கு வரும்! துஷ்யந்தனும் பரதனும் யயாதியும் ஹஸ்தியும் குருவும் அல்ல, நீயே குரு வம்சத்து அரசர்களில் அறச்செல்வன்!” என்று துரியோதனன் மேலும் அழுதான். “நான் அத்தனை உத்தமன் அல்லன்” என்று யுதிஷ்டிரன் முனகினான். குந்தி பேச வாயெடுத்தாள்.அவளுக்கு வார்த்தை திக்கியது. மீண்டும் மீண்டும் அவள் தொண்டை ஏறி இறங்கியது. இப்படியே சில நிமிஷங்கள் போனதும் அவள் யுதிஷ்டிரன் பக்கம் பார்வையைத் திருப்பினாள். யுதிஷ்டிரன் இரண்டு கட்டை விரலும் ஒன்றாக சேர்த்து கட்டப்பட்டிருந்த கர்ணனின் பாதங்களையே நோக்கிக் கொண்டிருந்தான். அவனுக்கு அவை குந்தியின் பாதங்கள் போலவே தோற்றம் அளித்தன. அவன் பார்த்த வரையில் கர்ணன், குந்தி இருவருக்கும்தான் பாதத்தின் இரண்டாவது, மூன்றாவது விரல்கள் கட்டை விரலை விட நீண்டவை. திடீரென்று குந்தி தெளிவான, உறுதியான குரலில் “கர்ணன் என் மைந்தன், அவனே நூற்றைவருக்கும் மூத்தவன், அஸ்தினபுரி அரியணை அவனுடையது” என்றாள். களைப்பால் மூடி இருந்த துரியோதனன் விழிகள் சட்டென்று திறந்தன. குதித்து எழுந்தவன் கால் தடுமாறி கீழே விழப் போனான். தருமன் அவனைப் பிடித்துக் கொண்டான். “உன் சிறிய தந்தையை மணம் புரிவதற்கு முன்பே அவனைப் பெற்றேன். பழி அச்சத்தால் அவனை கைவிட்டேன். அவனை என் மகன், அஸ்தினபுரியின் வாரிசு என்று சொல்ல எனக்கு வாய்ப்புகள் இருந்தன, ஆனால் என் தயக்கங்களால் நான் அவற்றை நான் கை தவறவிட்டேன். இந்தப் போருக்கு முன் அவனிடம் உண்மையைச் சொன்னேன், மூத்த பாண்டவனாக அரியணை ஏறும்படி கேட்டேன். கொடை வள்ளல் இரவலனை மறுத்த ஒரே தருணம் அதுதான், துரியோதனனுக்காக மட்டுமே போரிடுவேன் என்று என்னை மறுத்துவிட்டான்” என்று குந்தி தொடர்ந்தாள். துரியோதனனின் மார்பு விம்மி விரிந்தது. “எனக்காக குருதி உறவையும் துறந்தானா?” என்று மெல்லிய குரலில் முனகினான். குந்தியின் குரல் தாழ்ந்தது. “அவனும் என்னிடம் ஒரு வரம் கேட்டான். அவன் இறந்தால் அவன் என் மகன் என்பதை ஊரறியச் சொல்ல வேண்டும், யுதிஷ்டிரன் அவனுக்கு நீர்க்கடன் செய்ய வேண்டும்” என்றாள். துரியோதனனின் மனம் குந்தியின் முந்தைய சொற்களிலேயே சுழன்றுகொண்டிருந்தது. “ஒரு தாய் மக்கள் என்று அறிந்திருந்தும் என் பக்கமே நிலை மாறாது நின்றானா? அட என் சொந்தச் சகோதரன் யுயுத்ஸு கூட எனக்கு எதிராக போரிடுகிறானே!” என்றான் “விசுவாசத்துக்கு, நட்புக்கு இலக்கணம் இவன்தான்! வரலாறு என்னைப் பற்றி நல்லபடியாக ஏதாவது சொல்லும் என்றால் அது நான் கர்ணனின் நண்பன் என்பது மட்டும்தான்” என்று துரியோதனன் சிரித்தான். சில நிமிஷங்கள் முன் வரை துக்கத்தில் முழுகி இருந்த துரியோதனனா இவன் என்று யுதிஷ்டிரன் வியந்துகொண்டான். “நாங்கள் இருவரும் தனியாக இருக்கும்போது அவனை கிண்டல் செய்வேன், உனக்கு அர்ஜுனனின் மூக்கு, யார் கண்டது அர்ஜுனனின் தந்தைதான் உனக்கும் குருதித் தந்தையோ என்னவோ, உன் தாய் உன்னை ஆற்றிலே விட்டுவிட்டாள், அர்ஜுனனின் தாய் அவனை முழுமையாக ஏற்றிருக்கிறாள் என்பேன். அவன் எனக்கு அர்ஜுனன் மூக்கு அல்ல, அர்ஜுனனுக்குத்தான் என் மூக்கு என்று சொல்லிச் சிரிப்பான். ஒரே தந்தை அல்ல, ஒரே தாய்!” குந்தி விம்மினாள். “நான் பீஷ்மரையும் துரோணரையும் என்றும் அஞ்சியதில்லை. அவர்கள் என் மைந்தரை வெல்லலாம், ஆனால் ஒரு நாளும் அவர்கள் கையால் என் மைந்தருக்கு இறப்பில்லை. நான் எப்போதும் அஞ்சியது கர்ணன் ஒருவனைத்தான். உண்மை தெரிந்தால் அவனையும் அஞ்ச வேண்டி இருக்காது என்று நினைத்தேன், ஆனால் உங்களுக்கு ஆறு மைந்தர் எப்போதுமில்லை, ஐந்து மட்டும்தான் என்பதுதான் உங்கள் ஊழ் என்று சொல்லிவிட்டான்” துரியோதனன் திரும்பினான். “இன்னும் என்ன ஒளிவு மறைவு? வாருங்கள்” என்று அழைத்தான். பீமனின் பேருருவம் முதலில் வெளிப்பட்டது. சீரான காலடிகளோடு அவன் முன்னால் வர, மற்ற மூவரும் தயக்கத்துடன் அவனைப் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் பின்னால் வந்த திரௌபதியின் கூந்தலில் அங்கங்கே சிவப்பு நிறம் திட்டுதிட்டாகத் தெரிந்தது. கடைசியாக சிறிதும் மாசில்லாத உடையுடனும் மயில் பீலியுடனும் கிருஷ்ணனும் வந்தான். பீமனின் கண்களில் கேள்வி தெரிந்தது. துரியோதனன் தன் மூக்கின் அடியில் விரல்களை சுழற்றிக் கொண்டான். “உண்மை, நீ காட்டு விலங்குதான், உன் ஓங்கிய உடலையும் உன்னால் புலி மறைந்திருப்பது போல மறைத்துக் கொள்ள முடியும்தான். ஆனால் இடுகாட்டிலும் உன் உடலிலிருந்து வரும் நிண நாற்றம் தனியாக தெரிகிறது பீமா!“ என்று துரியோதனன் சொன்னான். பீமன் புன்னகைத்தான். “என்னடா இது வெறும் தசை மலையான உன்னிடம் விற்போரில் எப்படி பதினான்காம் நாள் தோற்றான் என்று வியந்து கொண்டிருந்தேன், இன்றுதான் புரிகிறது, அவனுக்கும் தானாடாவிட்டாலும் தன் சதை ஆடிவிட்டது” என்று துரியோதனன் சிரித்தான். பீமன் புன்னகைப்பதை நிறுத்தவில்லை, ஆனால் அவன் கண்ணோரம் ஈரம் தெரிந்தது. “தம்பியர் உயிர் அவன் கொடுத்த கொடை! உன் உயிர் கூடத்தான் பார்த்தா!” என்றான். அர்ஜுனன் தன் தலை முடியை சிலுப்பிக் கொண்டான். கண்ணன் அவன் காதருகே ஏதோ முணுமுணுத்தான். “ஆம் எனக்கு இப்போதுதான் எல்லாம் புரிகிறது. என் தோழனின் வள்ளன்மையைப் பற்றி உனக்கு ஏதாவது ஐயம் இருந்தால் உன் தோழனிடம் கேட்டுக் கொள்! அவன் நினைத்திருந்தால் போருக்கு வந்த முதல் நாளே உன்னைத் தேடி வந்து போரிட்டிருக்கலாம், சக்தி ஆயுதம் உன்னைக் கொன்றிருக்கும். ஒரு வேளை உன் சாரதி அன்று நீங்கள் நேருக்கு நேர் போரிடுவதைத் திறமையாகத் தவிர்த்திருந்தாலும், அடுத்த இரண்டு நாட்களில் அவன் சம்சப்தகனாக உன்னை எதிர்த்திருக்கலாம், இந்த மாயவனாலும் ஒன்றும் செய்திருக்க முடியாது. ஜயத்ரதனை நீ தேடி வந்தபோது உன் தமையன் உன்னைக் கொன்றிருக்கக் கூட வேண்டாம், உன்னோடு நேரடியாகப் போரிட்டிருந்தாலே போதும், உன்னால் அவனை மீறி ஜயத்ரதனை அணுகி இருக்க முடியாது, நீயே தீக்குளித்து இறந்திருப்பாய், உன் உயிர் அவன் போட்ட பிச்சை!” துரியோதனன் குரல் ஓங்கி ஒலித்து அடங்கியது. அவனுக்கு மூச்சிரைத்தது. பாண்டவர்களும் திரௌபதியும் குந்தியும் குனிந்த தலை நிமிரவில்லை. கண்ணன் மட்டுமே புன்னகை மாறாத முகத்தோடு துரியோதனை நேருக்கு நேர் பார்த்தான். துரியோதனனின் முகம் பிரகாசித்தது. அவனது நெஞ்சுக் கூடு மேலும் விம்மி விரிந்தது. அவனது ஒரு மயிர்க்காலிலும் மகிழ்ச்சியும் பெருமிதமும் சுடர் விட்டன. “இவனும் பீஷ்மரும் துரோணரும் இருந்தும் தோற்கிறோமே என்று என் மனதில் இருந்த உறுத்தல் இப்போதுதான் தீர்ந்தது. என் தோழன் போட்ட பிச்சைதானா உங்கள் வெற்றி! இனி நீங்கள் வென்றால்தான் என்ன?!” என்று சிரித்துக் கொண்டான். நாலடி எடுத்து குந்தியின் அருகே சென்றான். குந்தியின் மோவாயில் கையைக் கொடுத்து அவள் முகத்தை நிமிர்த்தினான். “அது எப்படி அன்னையே? பிறந்ததும் அவனை ஆற்றில் விட்டீர்கள். அவனிடம் ஒரு வார்த்தை கருணையுடன் பேசியதில்லை. குதிரைச் சாணத்தின் நாற்றம் வீசுகிறது என்று இந்த பீமன் இழித்துரைக்கும்போது தமையன் என்று சொல்ல உங்கள் ஆசைகள் உங்களைத் தடுத்தன, சரி. ஆனால் இது முறைமை அல்ல, அவனை இழிவாகப் பேசாதே என்று பட்டும் படாமலும் அறிவுரைக்கக் கூட உங்களுக்கு மனம் வரவில்லையே! போர் உறுதியான பிறகு மட்டுமே புத்திரபாசம்! நீ மூத்தவன், அரியணை உனக்குத்தான் என்று ஆசை வேறு காட்டி இருக்கிறீர்கள்! இதோ இந்த பாஞ்சாலி உனக்கும் துணைவி ஆவாள் என்று கூட சொல்லி இருப்பீர்கள்! இதெல்லாம் இந்தக் மாயக்கண்ணனின் ஆலோசனையாகத்தான் இருக்கும், இருந்தாலும் உங்கள் நா கூசவில்லையா அன்னையே!” என்று மெல்லிய குரலில் கேட்டான். பீமன் மடிந்து தரையில் அமர்ந்தான். “என் தமையன்! அவனை, அவன் ஆற்றலை என்றும் பழித்திருக்கிறேன். பதிலுக்கு பதிலாகக் கூட உன் மேல் அடுப்புக்கரி வாசம் என்று அவன் சொன்னதில்லை” என்று அழுதான். குந்தியின் கண்ணிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது. துரியோதனன் புன்னகைத்தான். “அவன் கேட்டிருக்க மாட்டான், அவனுக்காக நான்தான் கேட்க வேண்டும். நீ என் மகன், உன் சகோதரர்களோடு போரிடாதே என்று அவனிடம் சொன்னீர்களே, ஏன் இந்தப் பார்த்தனிடம் கர்ணன் உங்கள் தமையன், அவனோடு போரிடாதே என்று சொல்லவில்லை? கர்ணன் தன் தம்பிகளுடன் போரிடுகிறான் என்பதை உணர வேண்டும், தம்பி ஆயிற்றே என்று அவன் வில் ஒரு கணமாவது தயங்கும், பார்த்தனுக்கு அப்படி எந்தத் தயக்கமும் இருக்கக் கூடாது, அவன் கர்ணனை இரக்கமில்லாமல் கொல்ல வேண்டும் என்பதுதானே உங்கள் திட்டம்?” குந்தியின் வாய் சிறிய வட்ட வடிவில் திறந்தது. அவள் அப்படியே ஸ்தம்பித்து நின்றாள். அவள் கண்ணீர் கூட நின்றுவிட்டது. துரியோதனன் சுற்றுமுற்றும் பார்த்தான். பீமனின் அருகே சென்று முழந்தாளிட்டான். “நீயும் நானும் அவனும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்கள். பீமன் கௌரவனாக இருந்திருக்க வேண்டும் என்று அவன் அடிக்கடி சொல்லுவான், அவன் – நானும் – நெருக்கமாக உணர்ந்த எதிரி நீயே, என்றாவது நீ வீர சுவர்க்கம் போனால் உன்னை மெய் தழுவி வரவேற்கப் போகும் முதல் வீரன் அவனாகத்தான் இருப்பான். நாம் நம் வஞ்சங்களுக்கு அடிமையானோம், ஆனாலும் அவன் ஆசி – என் ஆசியும் – உனக்கு எப்போதும் உண்டு” என்று அவன் தலையைத் தொட்டான். பீமன் அவன் கையைப் பிடித்துக் கொண்டு விசும்பினான். துரியோதனன் எழுந்தான். கர்ணனின் உடலருகே சென்று அவன் வலது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான்.“செத்தும் கொடுக்கிறாய் கர்ணா! நானும் உன் பின்னால் தொடரத்தான் போகிறேன், ஆனால் உன் நண்பன் என்ற பெருமிதத்தோடு இறப்பேன். அற்பர்களால் உன்னை நேர்மையான போரில் வெல்ல முடியுமா என்ன?” என்று தழுதழுத்தான். பிறகு யுதிஷ்டிரன் பக்கம் திரும்பினான். “யுதிஷ்டிரா, அவனைத் திட்டமிட்டு கொன்ற உன் அன்னை இன்று வந்து கண்ணீர் வடிப்பது நீலித்தனம். நீங்களே அவனைக் கொன்றுவிட்டு கொள்ளியும் வைப்பீர்களா? அவனே வரமாகக் கேட்டிருந்தாலும் சரி, உனக்கு இவன் சிதைக்கு தீயூட்டும் தார்மீக உரிமை இல்லை. நீங்கள் போகலாம்” என்று திட்டவட்டமாக அறிவித்தான். பிறகு மீண்டும் திரும்பி கர்ணனின் உடலை நோக்கினான். இரண்டு நிமிஷத்தில் அவன் தோளில் ஒரு கை படிந்தது. நீளமான அழகிய கருமை நிற விரல்கள். எதுவுமே நடக்காத மாதிரி துரியோதனன் காட்டிக் கொள்ள விரும்பினாலும் அவன் உடல் இறுகியது. அவன் உதடுகள் அழுந்தின. “இல்லை கண்ணா, என் உறுதி மாறாது” என்றான். “கர்ணனின் உடலுக்கு யார் தீயூட்டுவது என்பது உன் முடிவு மட்டுமே. நானோ, அத்தையோ, யுதிஷ்டிரனோ அதைத் தீர்மானிக்க முடியாது. கர்ணனே தருமன்தான் தன் உடலுக்கு தீயூட்ட வேண்டும் என்று அத்தையிடம் வரம் கேட்டிருந்தாலும் அதையும் மாற்றும் உரிமை உனக்குண்டு” என்று மிருதுவான குரலில் துரியோதனனின் தோளை அழுத்திக் கொண்டே கண்ணன் சொன்னான். துரியோதனன் திரும்பி கண்ணனை கண்ணீருடன் பார்த்தான். “அவன் அபூர்வமாக இன்னொருவரிடம் ஒன்றைக் கேட்டிருக்கிறான், அதையும் அவனுக்கு மறுக்கிறேனே” என்றான். “வீர சொர்க்கத்திலிருந்து அவன் உன் முடிவை நிச்சயம் ஏற்றுக் கொள்வான், உனக்கு எந்த யோசனையும் வேண்டாம்” என்று கண்ணன் புன்னகையோடு சொன்னான். “இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்!” என்று துரியோதனன் மிருதுவான குரலில் புலம்பினான். கண்ணன் அவனை அணைத்துக் கொண்டான். யுதிஷ்டிரனுக்கு கண் காட்டினான். அவர்கள் மெதுவாக இடுகாட்டை விட்டு விலகத் தொடங்கினர். கண்ணனும் தன்னை விடுவித்துக் கொண்டு அவர்களைத் தொடர்ந்தான். அவனுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த நகுலனிடம் “இது பெரும் துக்கம். ஒரே நாளில் துச்சாதனனும் இவனும் இறந்திருக்கக் கூடாது” என்று சொன்னான். துச்சாதனனின் பேரைக் கேட்டதும் துரியோதனனின் முகம் இறுகியது. அவன் தாவி கண்ணனின் வலது கையைப் பிடித்தான். கண்ணன் திரும்பி தன் கண்களாலேயே என்ன என்று வினவினான். துரியோதனன் பதில் எதுவும் சொல்லவில்லை. அவன் மனதில் ஏதோ தீவிர சிந்தனைகள் ஓடுவது தெளிவாகத் தெரிந்தது. பாண்டவர்கள் காத்து நின்றனர். ஒரு நிமிஷம் கூட சென்றிராது, ஆனால் அது ஒரு யுகமாகத் தெரிந்தது. துரியோதனன் “அடப்பாவி” என்று முனகினான். மீண்டும் மௌனமானான். கண்ணனைத் தவிர்த்த மற்றவர்கள் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றனர். மேலும் இரண்டு நிமிஷம் கழித்து வலுத்த குரலில் “துரோகி!” என்று உறுமினான். அருகே இருந்த நெய்ப்பந்தத்தை எடுத்து யுதிஷ்டிரனை நோக்கி எறிந்தான். பீமன் பாய்ந்து அது தருமன் மீது படாமல் பிடித்துக் கொண்டான். “அவன் என் தோழன் அல்லன், உங்கள் தமையன் மட்டுமே!” என்று கத்தியபடியே தன் நெஞ்சில் மாறி மாறி அறைந்து கொண்டான். “தன் தம்பியரின் உயிரைக் காக்க என் தம்பியரை, ஏன் என்னையே பலி கொடுத்துவிட்டான்!” சிங்கத்தைப் போல உறுமிக் கொண்டே அருகில் இருந்த அடிமரத்தை உதைத்தான். மரம் ஆடி மீண்டும் நிலை கொண்டது. “நான் இவனைத்தான் முழு மனதாக நம்பினேன், பீஷ்மரையும் துரோணரையும் நம்பி போர் தொடுக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் தன்னை நிராகரித்த அன்னை ஒரு வார்த்தை சொன்னதும் மற்ற நால்வரையும் கொல்லேன் – அதுவும் என்னைக் கொல்லப் போவதாக சூளுரைத்திருக்கும் இந்த பீமனையும் கொல்லேன் – என்று வாக்களித்திருக்கிறான். அர்ஜுனனைக் கொல்லக் கிடைத்த வாய்ப்புகளையும் அவன் வேண்டுமென்றேதான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அன்னை என்று தெரிந்த அன்றே பாண்டவர் வெல்ல வேண்டும், நான் தோற்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறான், தன் மேல் பழி வரக்கூடாது என்பதற்காக தன் உயிரைக் கொடுத்திருக்கிறான். பீமனிடமிருந்து இவனைக் காக்க எத்தனை தம்பியர் அன்று ஒரே நாளில் உயிர் இழந்தனர்? அடப்பாவி! இதுதானா உன் செஞ்சோற்றுக்கடன்? குதிரைச் சாணம் பொறுக்க வேண்டிய உன்னை அரசனாக்கி தோழன் என்று மார்போடு அணைத்து கொண்ட எனக்கு நீ காட்டிய விசுவாசம் இதுதானா? சுப்ரியையை சேடியாக அல்ல, சகோதரியாகவே கருதினாளே பானு! உங்கள இருவருக்கும் எத்தனை விமரிசையாக திருமணம் செய்து வைத்தாள்? அவளுக்கும் துரோகமா? உன்னை நம்பி மோசம் போனேனே! துச்சா! துச்சா!” என்று அலறினான். “அய்யோ! அய்யோ!” என்று தலையில் அடித்துக் கொண்டான். ஓநாய் போல ஊளையிட்டான். சகதேவன் தவிர்த்த மற்ற பாண்டவர்களும் குந்தியும் திகைத்து நின்றனர். யாருக்கும் வார்த்தையே எழவில்லை. கிருஷ்ணன் தனது வழக்கமான புன்னகையோடு நின்றிருந்தான். சகதேவன் மட்டும் முன்னகர்ந்து துரியோதனனை அணைத்துக் கொண்டான். துரியோதனன் சகதேவன் தோளில் சாய்ந்து அழுதான். சகதேவன் துரியோதனனின் தலை முடியைக் கோதினான். “உங்கள் துக்கம் எங்களுக்கும் உண்டு அண்ணா! என்ன செய்வது, இவை அனைத்தும் சூதாட்டத்தின்போதே முடிவாகிவிட்டது. ஆனால் இரண்டு பக்கத்திலும் அடி மனதில் இன்னும் பாசம் வற்றவில்லை. இரண்டாமவரின் ரத்தத்தை தலையில் பூசிக் கொண்டபோது பாஞ்சாலியும் கண்ணீர் உகுத்தாள் என்பது உங்களுக்கு வியப்பளிக்கலாம், ஆனால் உண்மை” என்றான். துரியோதனன் நிமிர்ந்து திரௌபதியைப் பார்த்தான். பெருங்குரலெடுத்து அழுதான். “உயிர் நண்பன் என்று நம்பியவன் துரோகம் செய்துவிட்டான். நான் இழிவுபடுத்திய எதிரிகள் என் மீது பாசம் காட்டுகிறீர்கள்” என்று விக்கிக் கொண்டே சொன்னான். தருமன் தன் கச்சையிலிருந்து ஒரு மதுக் குப்பியை எடுத்து நீட்டினான். துரியோதனன் விம்மிக் கொண்டே இரண்டு மிடறு மதுவை அருந்தினான். மது அவன் வாயோரம் கொஞ்சம் வழிந்தது. பீமன் திடீரென்று கடகடவென்று நகைத்தான். “அவன் உடலுக்கு தீயூட்டும் தார்மீக உரிமை எங்களுக்கு இல்லைதான். ஆனால் உனக்கும்தான் இல்லை. இறந்த பிறகும் அவனுக்கு விடிவுகாலம் இல்லை. அவன் உடலை நாயும் நரியும் தின்னத்தான் விடப் போகிறோம்! உன் விதி அதிசயமானதுதான் அண்… அண்… அண்ணா!” அதே மூச்சில் அவன் நகைப்பு அழுகையாக மாறியது. துரியோதனன் புரியாமல் தலையை உயர்த்தினான். “மூடா, எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது, விருப்பம்தான் இல்லை. அவன் வாழ்வே நான் போட்ட பிச்சை” என்றான். “பிச்சை போட்டிருக்கிறாய். அதாவது, நீ புரவலன், அவன் இரவலன். நீ எஜமானன், அவன் பணியாள். சமமான தோழர்கள் இல்லை” என்று பீமன் முகத்தை சுளித்தான். துரியோதனன் அடிபட்டது போல தள்ளாடினான். “இல்லை…” என்று வாயெடுத்தான், உடனே மௌனமானான். “அவனை அரசனாக்கினேன், க்ஷத்ரியன் என்று ஏற்றுக் கொண்டேன் என்று பெருமை பேசுகிறாயே, நீ ஏன் துச்சளையை அவனுக்கு மணம் செய்து வைக்கவில்லை? அவன் வீரமும் கவசமும் குண்டலமும் கொடையும் குணமும் அப்போது உன் கண்ணில் படவில்லையா?” “இல்லை… அதாவது… வந்து… தந்தையும் அன்னையும் மறுத்திருப்பார்கள்” “ஓ! தந்தை சொல்லை மீறமாட்டாய்! அப்புறம் எப்படி கண்ணன் தூதை மறுத்தாய்?” “கர்ணன் துச்சளைக்கு சகோதரன் முறை, அவனுக்கு எப்படி துச்சளையை…” “அது இப்போதுதானே உனக்குத் தெரியும்!” துரியோதனன் மௌனமானான். ஆனால் பீமன் நிறுத்தவில்லை. “சரி ஏதோ உள்ளுணர்வால் உறவு முறையைப் புரிந்து கொண்டிருந்தாய் என்றே வைத்துக் கொள்வோம். நூற்றுவரின் மனைவியர் எவருக்கு தங்கைகள் இல்லையா? நீ அழுத்தம் கொடுத்திருந்தால் மறுக்க முடிந்திருக்குமா என்ன? அது என்ன சூதப் பெண்ணும் சேடிப் பெண்ணும்தான் அவனுக்கு மனைவியரா? உன் பட்டமகிஷியின் சேடியை அவனுக்கு மனைவி ஆக்கி இருக்கிறாய்! நாய் மீது மிகுந்த அன்பு செலுத்துகிறோம்தான், ஆனால் அதற்காக நாயை நம் இலையிலிருந்தே சாப்பிடவிடுவதில்லை. அவனை நீ நாயாகத்தானே பார்த்திருக்கிறாய்?” துரியோதனன் தலையைக் குனிந்து கொண்டு நிலத்தை நோக்கினான். “உண்மையைச் சொல், அவன் ஏறக்குறைய அர்ஜுனனுக்கு சமமான வீரனாக இல்லாவிட்டால் உன் தோழன் என்று சொல்லிக் கொண்டிருப்பாயா?” துரியோதனன் குனிந்த தலை நிமிரவில்லை. பீமன் தொடர்ந்தான். “அவன் வாழ்நாள் முழுவதும் தேடியது அங்கீகாரம். உனக்கு அவன் தோழன் அல்ல, வெறும் தொண்டு செய்யும் அடிமை. அவனை ஒரு க்ஷத்ரியனாக நீயும் முழு மனதாக ஏற்கவில்லை. எங்கள் கதையோ, என்னத்தைச் சொல்ல! பிதாமகர் அவனை நல்ல வீரனாக அங்கீகரிக்கவில்லை. துரோணர் அவனை நல்ல மாணவனாக அங்கீகரிக்கவில்லை. பரசுராமரைப் பற்றி சொல்லவே வேண்டாம். உன்னிடம் கிடைத்த குறைந்த பட்ச அங்கீகாரத்துக்காக, வெறும் சோற்றுக் கடனிற்காக உயிரைக் கொடுத்திருக்கிறான். என் தாய் தானம் கேட்டபோது அவனால் வாழ்க்கையில் முதல் முறையாக சூதன் என்ற இடித்துரைப்புகளிலிருந்து விடுபட முடிந்திருக்கிறது. அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் தர அவன் தயாராக இருந்திருக்கிறான்” என்று கசப்போடு நகைத்தான். கண்ணனே பீமனை வியந்து நோக்கினான். பீமனின் முகம் இறுகிக் கிடந்தது. “அவனை இத்தனை தூரம் புரிந்து கொண்டிருப்பது எனக்கே அதிசயமாகத்தான் இருக்கிறது, கண்ணா! ஆனால் இந்த நால்வரையும் எத்தனை தூரம் அறிவேனோ அதே போலத்தான் இப்போது இவனையும் அறிந்திருக்கிறேன். மூத்த பாண்டவன்! கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!” என்று பீமன் விரக்தியோடு நகைத்தான். சிறிது நேரம் யாரும் எதுவும் பேசவில்லை. பிறகு துரியோதனன் அங்கிருந்த பந்தத்தை எடுத்தான். பீமனின் உடல் தன்னிச்சையாகத் துள்ளியது. ஆனால் துரியோதனன் சிதை பக்கம் போகவில்லை, பந்தத்தை யுதிஷ்டிரனிடம் கொடுத்தான். யுதிஷ்டிரனின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவன் திருப்பி பந்தத்தை துரியோதனனின் கையிலேயே திணித்தான். துரியோதனன் யுதிஷ்டிரனின் கையோடு சேர்த்து பந்தத்தைப் பிடித்துக் கொண்டான். இருவரும் முன்னகர்ந்து ஒன்றாக சிதைக்கு தீயூட்டினர். குந்தி பெருங்குரலெடுத்து ஓலமிட்டாள். https://solvanam.com/2024/10/13/இங்கிவனை-யான்-பெறவே/3 points
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
சுமந்திரனின் அந்த வேதனையை… வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அமைச்சர் கனவில் இருந்தவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்தால், தாங்க முடியாதுதானே. 😂 எல்லாம் அவரே தனது தலையில் அள்ளிப் போட்டுக் கொண்ட மண். 👍🏽 🤣 சுமந்திரன் இல்லாத படம்… வேறை லெவல். 😁 😂 🤣 💪3 points
-
கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
சிங்கப்பூர் ஏர்லைன்சில் போவாரே பெரியார் அஃதிலார் சீர்கெட்டு சிங்கியடிப்பார். கட்டாரை கற்றாரே காமுறுவர். எத்திக்கு போனாலும் கத்தே பசிபிக்கில் போ. ஏர்இந்தியா, சிறிலங்கன், பிஐஏ, பீமன் நான்கும் இழுக்கா இயன்றது நற்பயணம். குவைத் எர்வேஸ், சவுதியா “குடி” நாசம். பெயரை நம்பி, சுவிஸ் ஏர்வேசில் ஏறாதே. எதையும் நம்பி பிரிட்டிஸ் ஏர்வேசில் ஏறாதே. குவாண்டசில் போனால் குபேரனும் குசேலனாவான். #நம்முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை🤣3 points
-
குளிர் போட்டு வாட்டுதப்பா-பா.உதயன்
2 points2 points
- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
அதை நீங்கள் அப்போது கடற்புலி சூசையிடம் கேட்டிடுக்க வேண்டும்.2 points- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
ஆத்தை படுற பாடு இதுக்குள்ள குத்தியன் என்னத்துக்கோ அழுவுறான்.2 points- தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
'நாங்கள் இங்கே மிஷனரி பணிகளுக்காக வரவில்லை.................' என்று Henry Kissinger சொன்னதை உலகில் உள்ள பல நாடுகளின் பாராளுமன்றங்களில் ஒட்டிவைக்க வேண்டும். அவர்களின் தேவைகளும், காரியங்களும் முடிந்தவுடன் கழன்றுவிடுவார்கள் அமெரிக்காவும், எந்த வல்லரசும். வெளியில் இருந்து வந்து எவரும் தீர்வு எதுவும் தரப்போவதில்லை. நாங்களே ஒரு தீர்வை எட்டினால் தான் உண்டு. இல்லாவிட்டால் முக்குளித்து முக்குளித்து மரியான அகழி வரை நாடு போகும்.2 points- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
டக்கென்று ஞாபகத்தில் வந்தது உங்கள் இருவரையும் தான், அத்துடன் இருவரின் வட்சப் இருந்தபடியால் படுத்திருந்து கொண்டே செய்திகளை அனுப்பினேன். யாழிணையம் முகந்தெரியாத பல புதிய உறவுகளை வழங்கி இருக்கிறது. யாழுக்கும் அதை உருவாக்கிய மோகன் அண்ணாவுக்கும் நன்றிகள்.2 points- தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாக அங்கீகரிக்க முடியுமா என்று கேட்டால் என்ன?2 points- கந்த சஷ்டி கவசத்தை ஒலிப்பதிவு செய்ய... சூலமங்கலம் சகோதரிகள் பட்ட சிரமங்கள்.
இசையில் ஆர்வம் கொண்ட ஒரு இளம் பெண்... தன் சகோதரியோடு இணைந்து ஒரு பாடலை பாடி வெளியிட நினைத்து .. பல கிராமபோன் ரிகார்டு [இசைத்தட்டு ] கம்பெனிகளை கேட்டுப் பார்த்தாராம்.. ஆனால் இசைத்தட்டு கம்பெனிகள் இதற்கு மறுத்து விட்டார்களாம்.. அவர்கள் சொன்ன ஒரே காரணம் ‘‘ஓதுவார்கள் பலர் பாடியும் அது மக்களைச் சரியாக சென்றடையவில்லை. வேண்டாம் இந்த வீண்வேலை, விட்டு விடுங்கள்..’’ விடவில்லை அந்த சகோதரிகள்.. இசைத்தட்டு சுழல்வது போல் இசைத்தட்டு கம்பெனிகளை சுற்றி சுழன்று வந்து முயற்சித்தும்... கீறல் விழுந்த இசைத்தட்டாக “முடியாது “ என்ற பதிலே திரும்ப திரும்ப வந்ததாம்... ஆனாலும் மனம் தளராத அந்த சகோதரிகள் அந்தப் பாடலை பல ராகங்களில் டியூன் போட்டுப் பாடிப் பார்த்தார்களாம்... முதலில் ‘ஆபேரி’ அடுத்து ‘சுப பந்துவராளி’. அதனைத் தொடர்ந்து ‘கல்யாணி’. இறுதியாக ‘தோடி’.. இப்படி நான்கு ராகத்தில் பாடினார்கள் இந்தப் பாடலை... ஒருவழியாக 1970 - ல் வெறும் 500 ரிகார்டுகள் மட்டுமே வெளியிட்டார்களாம். ஆனால் அந்த ரிக்கார்ட் பல ரிக்கார்டுகளை முறியடித்து வரலாற்று சாதனை படைத்தது... இப்படி அந்தக் காலத்தில் படாத பாடுபட்டு பாடி இந்த இசைத்தட்டை வெளியிட்ட சகோதரிகள் சூலமங்கலம் சகோதரிகள்.. அந்தப் பாடல்... கந்த சஷ்டி கவசம்... சஷ்டியை நோக்கச் சரவண பவனார்.. சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்.. கந்தசஷ்டி கவசத்தை வேறு சிலரும் பாடியிருந்தாலும், சூலமங்கலம் சகோதரிகள் அளவுக்கு வேறு எதுவும் நம்மைக் கவரவில்லை... சரணம் சரணம் சண்முகா சரணம்.. சரணம் .. Paranji Sankar1 point- மின்கலம் திருடனை தேடி 4 கிலோ மீற்றர் பயணித்த ஜோனி என்ற மோப்ப நாய்
Published By: DIGITAL DESK 3 09 JAN, 2025 | 05:07 PM வாரியப்பொல பகுதியில் ஜோனி என்ற மோப்ப நாய் 4 கிலோ மீற்றர் பயணித்து மின்கலம் திருடனை தேடிப்பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வாரியப்பொல மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குச் சான்றுப் பொருட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் மின்கலங்களை திருடி சென்றுள்ளனர். மின்கலங்கள் திருடப்பட்ட இடத்தில் சொகுசு பஸ் உட்பட பல வாகனங்கள் வாரியபொல நீதவான் நீதிமன்றினால் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. திருட்டு சம்பவம் தொடர்பில் தடயங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் குருணாகலில் உள்ள பொலிஸ் கெனல் பிரிவிலுள்ள பயிற்சி பெற்ற மோப்ப நாயான ஜோனியை பொலிஸார் வரவழைத்துள்ளனர். ஜோனியை அழைத்து வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ரணசிங்க (90426) தேடுதல் நடவடிக்கைகாக மின்கலத்துடன் பொருத்தப்பட்டிருந்த முனையத்தை நாய்க்கு வழங்கினார். நாய் அதனை மோப்பம் பிடித்து வாரியபொல ஊடாக கிட்டத்தட்ட நான்கு கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த விளக்கடுபொத்த பகுதியில் வீடொன்றுக்கு சென்றுள்ளது. அங்கு ஐந்து மின்கலங்களுடன் கையும் களவுமாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/2034121 point- உச்சம் தொட்டது பச்சை மிளகாயின் விலை!
1 point- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
🤣 லைம் லைட்டில் இருக்க வேண்டும் என்பதற்க்காக போராடலாம்.. ரெட் லைட் கதையள் ஏன் கதைப்பான்🤣. பிகு ஆம் அது செரினாவேதான்.1 point- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
பெரியார் மணியம்மையை திருமணம் செய்தது வரலாறு…. எல்லாரும் அறிந்த விடயம். இதை தெரிந்து கொண்டே அவரை தலைவர் என ஏற்று, மேடை மேடையாக “தந்தை” பெரியார், நான் அவரின் பேரன் என கூறியவர்தான் இந்த சைமன் செபஸ்டியன். அப்போ 15 வருடத்துக்கு முன் வளர்ப்பு மகளை திருமணம் செய்வதை ஏற்று கொள்ளும் நிலைப்பாட்டில் சீமான் இருந்தார்? இதற்கு கீழே, தந்தை பெரியார் என்பதை அழித்து விட்டு… மொந்தை குமாரசாமி என எழுத எத்தனை செக்கண்ட் எடுக்கும் 🤣. இந்த ஏஐ யுகத்தில் இதை எல்லாம் நம்பி கொண்டு.1 point- பாகிஸ்தானில் 6 சகோதரர்கள் 6 சகோதரிகளை திருமணம் செய்த அதிசயம்
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சகோதரர்கள் இன்னொரு குடும்பத்தில் உள்ள 6 சகோதரிகளை ஒரேநேரத்தில் திருமணம் செய்துள்ளனர். வரதட்சணை வாங்காமல் மிக எளிமையான முறையில் இந்த திருமணங்கள் நடைபெற்றது. தங்களது கடைசி தம்பிக்கு 18 வயது ஆகும் வரை காத்திருந்து 6 சகோதரர்களும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணத்தில் 100க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். இந்த திருமணம் தொடர்பாக மூத்த சகோதரர், “இஸ்லாம் மதத்தில் திருமண வாழ்வு அடக்கத்தையும் எளிமையையும் எடுத்துரைக்கிறது. அதன்படி, நாங்கள் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க விரும்பினோம். பல சமயங்களில், திருமணச் செலவுகளுக்காக மக்கள் தங்கள் நிலத்தை விற்கிறார்கள். திருமணங்கள் எளிமையாகவும் தேவையற்ற செலவுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதே எங்கள் குறிக்கோளாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார். அவர்களுடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவதுடன் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த திருமணம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகின்றனர். https://thinakkural.lk/article/3144751 point- பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்!
மகத்தான திரையிசை பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்! திரையிசை பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் | கோப்புப் படம் திருச்சூர்: தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 16,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய மகத்தான திரையிசை பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார். அவருக்கு வயது 80. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவரது உயிர் பிரிந்தது. கடந்த 1944, மார்ச் 3-ம் தேதி எர்ணாகுளத்தில் அவர் பிறந்தார். அவரது தந்தையை பின்பற்றி இசை பயின்று, அதில் தேர்ச்சி பெற்றார். விலங்கியலில் இளங்கலை பட்டம் பெற்ற அவர், சென்னையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடியதன் மூலம் திரைப்படத்துக்கு பாடும் வாய்ப்பை பெற்றார். ADVERTISEMENT தமிழில் கடந்த 1973 முதல் திரைப்படங்களுக்கு பாடல் பாடி உள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, எஸ்.ஏ.ராஜ்குமார், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், பரணி, ஸ்ரீகாந்த் தேவா, ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்ட இசை அமைப்பாளர்களுடன் தமிழில் பணியாற்றி உள்ளார். ‘மூன்று முடிச்சு’ படத்தில் ‘வசந்த கால நதிகளிலே’, ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ‘வாழ்க்கையே வேஷம்’, அந்த 7 நாட்களில் ‘கவிதை அரங்கேறும் நேரம்’, நானே ராஜா நானே மந்திரி படத்தில் ‘மயங்கினேன் சொல்ல தயங்கினேன்’, வைதேகி காத்திருந்தாள் படத்தில் ‘ராசாத்தி உன்ன’, கிழக்கு சீமையிலே படத்தில் ‘கத்தாழங் காட்டு வழி’, மே மாதம் படத்தில் ‘என் மேல் விழுந்த’, பூவே உனக்காக படத்தில் ‘சொல்லாமலே யார் பார்த்தது’, கிரீடம் படத்தில் ‘கனவெல்லாம்’ உள்ளிட்ட பாடல்களை அவர் தமிழில் பாடி உள்ளார். சுமார் 60 ஆண்டுகள் இசை உலகை ஆட்சி செய்த அவர் தற்போது விடைபெற்றுள்ளார். மண்ணுலகை விட்டு அவர் விடைபெற்றாலும் அவரது குரல் என்றும் காற்றில் ஒலித்துக் கொண்டே இருக்கும். பி.ஜெயச்சந்திரனின் திரைப் பயணம்: (2020-ல் பி.ஜி.எஸ்.மணியன் எழுதிய கட்டுரையில் இருந்து...) எழுபதுகளின் தொடக்கத்தில் தமிழ்த் திரை இசையில் சத்தமே இல்லாமல் ஒரு மாறுதல் நிகழ ஆரம்பித்தது. அறுபதுகளின் இறுதிவரை கனமான குரல் வளம் கொண்ட பாடகர்களை முன்னிலைப்படுத்தி இயங்கி வந்த திரையிசை, எழுபதுகளில் புதிய தலைமுறை நடிகர்களான கமல், ரஜினி போன்றவர்களின் வருகையால் மென்மையான குரல்வளம் நிறைந்த பாடகர்களின் வசம் வந்தது. இளைய தலைமுறையின் துள்ளல், துடிப்பு, உற்சாகத்தைப் பிரதிபலிக்க ஒரு எஸ்.பி.பி. கிடைத்தார். அமைதியான நதியோட்டமாக மனத்தை வருட ஒரு ஜேசுதாஸ் கண்டெடுக்கப்பட்டார். இந்த இருவரின் ஆளுமை திரையிசையை வசப்படுத்திக்கொண்ட நேரத்தில், மலையாளத் தேசத்திலிருந்து மற்றுமொரு மயக்கும் குரலால் தமிழ் ரசிகர்களைக் கட்டிப்போட வந்தவர்தான் பளியத்து ஜெயச்சந்திரக்குட்டன் என்ற பி. ஜெயச்சந்திரன். 1944-ம் வருடம் மார்ச் மாதம் மூன்றாம் தேதி எர்ணாகுளத்தில் உள்ள ரவிபுரம் பகுதியில் பத்ராலயம் என்ற சிற்றூரில் ரவிவர்மா கொச்சனியன் தம்புரான் - பளியத்து சுபத்ரா குஞ்சம்மாள் தம்பதிக்கு இவர் மூன்றாம் மகனாகப் பிறந்தார். குடும்பம் இரிஞ்ஞாலக்குடாவுக்குக் குடிபெயர்ந்ததால் மாணவப் பருவம் இரிஞ்ஞாலக்குடாவிலேயே கழிந்தது. 1958-இல் மாநில இளைஞர் திருவிழாவில் பதினான்கு வயது ஜெயச்சந்திரன் சிறந்த இளம் மிருதங்கக் கலைஞராகச் சிறப்பிக்கப்பட்டார். அதே மேடையில் சிறந்த இளம் கர்நாடக இசைக் கலைஞர் விருது பெற்றவர் பதினெட்டு வயது வாலிபரான கே.ஜே.ஜேசுதாஸ். முதல் பாடல்: பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் பாடிய ஜெயச்சந்திரனுக்குக் கிடைத்த பாராட்டுகளும் பரிசுகளும் அவருடைய இசை ஆர்வத்தை அதிகரிக்கச் செய்தன. முதல் வாய்ப்பு இருபத்து மூன்றாம் வயதில் ‘உத்யோகஸ்தா’ என்ற மலையாளப் படத்தில் எம்.எஸ்.பாபுராஜ் இசையில் ‘அநுராக கானம் போலே’ என்ற பாடல். இவருடைய திறமையை மேலும் புடம்போட்டுத் தங்கமாக ஒளிரவைத்த பெருமை இசையமைப்பாளர் தேவராஜனையே சேரும். வசீகரக் குரலால் சேட்டன்களைக் கட்டிப்போட்ட ஜெயச்சந்திரனுக்கு மெல்லிசை மன்னர் இசை அமைத்த ‘பணி தீராத வீடு’ படத்தில் பாடிய ‘சுப்ரபாதம்’ பாடல், கேரள மாநில அரசின் சிறந்த பாடகருக்கான விருதைப் பெற்றுத் தந்தது. 1973-இல் சத்யா மூவிஸின் ‘மணிப்பயல்’ படத்தில் ‘தங்கச்சிமிழ் போல் இதழே’ பாடலின் மூலம் ஜெயச்சந்திரனின் குரலைத் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார் எம்.எஸ். விஸ்வநாதன். “அந்த இணையற்ற கலைஞர் என் கிட்டே இருந்த திறமையை அழகா வெளியே கொண்டு வந்தார். சொல்லப்போனால் எனக்கு முதல் முதலாகக் கிடைச்ச அவார்டே ‘பணி தீராத வீடு’ படத்துலே அவர் இசையில் பாடிய ‘சுப்ரபாதம்’ பாட்டுக்குத்தான்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுவார் ஜெயச்சந்திரன். 1976-ல் வெளிவந்த பாலசந்தரின் ‘மூன்று முடிச்சு’ படத்தில் ஜெயச்சந்திரன் வாணி ஜெயராமுடன் பாடிய ‘ஆடி வெள்ளி தேடி வந்த’, ‘வசந்த கால நதிகளிலே’ ஆகிய பாடல்கள் பெரிய வெற்றியைப் பெற்றன. மாஞ்சோலைக் கிளிதானோ... - புதுமை இயக்குநர் ஸ்ரீதரின் ‘அலைகள்’ படத்தில் ஜெயச்சந்திரன் மெல்லிசை மன்னரின் இசையில் பாடிய கவியரசரின் ‘பொன்னென்ன பூவென்ன கண்ணே’ பாடலில் ஜெயச்சந்திரனின் குரலில் தென்படும் வசீகரம் மனத்தை வருடி சாந்தப்படுத்தும். 1975-ல் ‘பெண்படா’ என்ற மலையாளப்படம். ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே. சேகர் இசையமைப்பாளர். இந்தப் படத்தில் ‘வெள்ளித் தேன்கிண்ணம் போல்’ என்ற பாடலை ஜெயச்சந்திரன் பாடினார். இளையராஜாவின் இசையில் முதல்முதலாக ‘காற்றினிலே வரும் கீதம்’ படத்தில் பாடிய ‘சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்’ பாடலும், ‘கிழக்கே போகும் ரயி’லின் ‘மாஞ்சோலைக் கிளிதானோ’ பாடலும் பெரு வெற்றிபெற்று முன்னணிப் பாடகர் வரிசையில் ஜெயச்சந்திரனைச் சேர்த்தன. ‘ஒருதலை ராகம்’ படத்தில் ‘கடவுள் வாழும் கோவிலிலே,’ ‘இரயில் பயணங்களில்’ படத்தில் ‘வசந்த காலங்கள்’ ஆகிய பாடல்கள் டி.ராஜேந்தரின் இசையில் ஜெயச்சந்திரன் தொடுத்த வெற்றிக்கோலங்கள். கே. பாக்யராஜின் சிறந்த திரைக்கதை அமைப்புக்கான படங்களில் முதலிடத்தில் இருக்கும் ‘அந்த ஏழு நாட்கள்’ படத்தில் ‘கவிதை அரங்கேறும் நேரம்’ பாடலை எஸ். ஜானகியுடன் இணைந்து வெகு அற்புதமாகப் பாடி அசத்தி இருப்பார் ஜெயச்சந்திரன். ‘ராஜ’ கீதங்கள் - ‘கடல் மீன்கள்’ படத்தில் ‘தாலாட்டுதே வானம்’ என்று எஸ். ஜானகியுடன் சேர்ந்து இசையலைகளை மனத்தில் பாயவைத்தார் ஜெயச்சந்திரன். பாடல்களுக்காவே பெரிய வெற்றிபெற்ற ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் கதாநாயகன் பாடுவதாக அமைந்த மூன்று பாடல்களையுமே ஜெயச்சந்திரனைத்தான் பாடவைத்தார் இளையராஜா. ‘ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு’ , ‘இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே’, ‘காத்திருந்து காத்திருந்து’ மூன்றுமே வெற்றிக்கனியை ஜெயச்சந்திரனின் மடியில் போட்ட முத்தான பாடல்கள். ‘அம்மன் கோவில் கிழக்காலே’ படத்தில் ‘பூவை எடுத்து’, ‘கொடியிலே மல்லியப்பூ’ (கடலோரக் கவிதைகள்) ஆகியவை ஜெயச்சந்திரனின் குரல் தனித்தன்மையோடு வெளிப்பட்ட பாடல்கள். ரஜினிகாந்த்தின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றான ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ படத்தில் ‘வாழ்க்கையே வேஷம்’ பாடலில் சொந்தபந்தங்களால் ஒதுக்கப்பட்ட ஒரு மனிதனின் மனநிலையைத் தனது குரலால் அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பார் ஜெயச்சந்திரன். இதே போல் ‘ரிஷி மூலம்’ படத்தில் குற்ற உணர்வு நீங்கி பாரம் அகன்ற மனிதனின் உணர்வை ‘நெஞ்சில் உள்ள காயம் ஒன்று’ பாடலில் வெளிப்படுத்தி இருப்பார் ஜெயச்சந்திரன். எம்.ஜி.ஆரின் கடைசிப் படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் வாணிஜெயராமுடன் பாடிய ‘அமுதத் தமிழில் எழுதும் கவிதை’ என்ற துவிஜாவந்தி ராகப் பாடல் இனிய தேனமுது. என்றாலும் இளையாராஜாவின் இசையில் இவர் பாடிய அனைத்தும் ‘ராஜ’கீதங்கள் எனலாம். துல்லியமான உச்சரிப்பு, பொருளுணர்ந்து பாவநயத்தோடு குரலால் மெருகூட்டுவது ஆகியவற்றில் தனித்தன்மையோடு பிரகாசித்தார் ஜெயச்சந்திரன். பி. சுசீலாவுடன் பாடிய ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’ (‘நானே ராஜா நானே மந்திரி’) பாடலுக்கு மயங்காதவர் யாருமே இல்லை. மனோஜ் கியான் இசையில் ‘இணைந்த கைகள்’ படத்தில் ‘அந்திநேரத் தென்றல் காற்’றை எஸ்.பி.பி.யுடன் சேர்ந்து வரவழைத்தார். விக்ரமனின் ‘பூவே உனக்காக’ படத்தில் எஸ்.ஏ. ராஜ்குமாரின் இசையில் சுஜாதாவுடன் பாடிய ‘சொல்லாமலே யார் பார்த்தது’ பாடலில் ஜெய் சேட்டனின் குரல் வசீகரம் சொல்லாமலே புரியும். ‘ஸ்ரீமன் நாராயண குரு’ மலையாளப் படத்தில் ‘சிவசங்கர சர்வ சரண்ய விபோ’ பாடலுக்காக 1975-ம் ஆண்டு சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்றார் ஜெயச்சந்திரன். ஜேசுதாஸ் சம்பந்தப்பட்ட மறக்க முடியாத நிகழ்வும் இவர் வாழ்வில் உண்டு. தனது பதினான்காவது வயதில் முதல்முதலாக எந்த ஜேசுதாஸ் சிறந்த இசைக் கலைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேடையில் சிறந்த மிருதங்க இசைக் கலைஞராக ஜெயச்சந்திரன் கௌரவிக்கப்பட்டாரோ அதே ஜேசுதாஸின் பெயரால் ஆண்டுதோறும் இசைத்துறையில் சாதனை புரிந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் ‘ஸ்வரலயா கைரளி யேசுதாஸ் விரு’தை முதல்முதலாக - இரண்டாயிரமாண்டில் - ஜேசுதாஸின் கையாலேயே பெற்றுக்கொண்டார் ஜெயச்சந்திரன். மகத்தான திரையிசை பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்! | legendary singer p jayachandran passed away - hindutamil.in1 point- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
நீர்வேலியான், ஈழப்பிரியன் அண்ணாவின் மகள், நான் ஆகிய மூவரும், எனக்குத் தெரிந்த வரையில், லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் இருக்கின்றோம். இங்கு தான் சில இடங்களில் நெருப்பு. வெளியில் இருந்து பார்க்கும் போது உங்களில் பலருக்கு ஒரு பயங்கரம் போன்று இது தோன்றலாம். ஆனால் இது ஒரு நிகழ்வு மட்டுமே இங்கிருப்பவர்களுக்கு. இரண்டு நாட்களாக விளையாடவில்லை. யார் யார் இன்று விளையாட வருகின்றீர்கள் என்று ஒரு கேள்வியை ஒரு வாட்ஸ்அப் குழுமத்தில் போட்டுவிட்டு காத்துக் கொண்டிருக்கின்றேன். இன்றும் Bad air quality என்று சொல்லி தப்பிக்கப் பார்ப்பார்கள். விடக்கூடாது, வீடுகளுக்கு போய் ஆட்களைச் சேர்க்க வேண்டும்.............🤣.1 point- வவுனியாவில் கிராம சேவகர் ஒருவர் பதவியில் இருந்து இடைநிறுத்தம்
என்ன சொல்லுறியள். எங்களுக்கு அக்குவேறு ஆணிவேறாக ஆரய்ந்து தான் வேலை தந்தார்கள்1 point- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
என்னையும் கேட்டிருந்தார். மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.1 point- ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறை!
அத்துடன்... முஸ்லீம்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காத கவலையையும் மறந்து விடுவார்கள். 😂 வரும் உள்ளூராட்சி தேர்தலிலும்... முஸ்லீம்களின் வாக்கை, அனுர... கொத்தாக அள்ளுகின்றார். 🤣1 point- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
மருதங்கேணி. இவர்கள் வேறு மாநிலங்களில் வாழ்கிறார்கள்.1 point- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
🤣 பிற்போக்குத்தனத்தை கண்டதும் உனக்கு ஜிவ்வென்று ஏறுகிறதா? நீயும் என் நண்பனே🤣 - தோழர் மஸ்கு - ——— எனக்கு அண்ணாமலை திமுக சிலீப்பர் செல் அல்ல சுவிசைட் ஸ்குவாட் என்ற சந்தேகம் உள்ளது. எப்ப சீமான் வாயை திறந்தாலும்…. அண்ணாமலை பின்னாலயே வந்து “நானும்தான், எனக்கும்தான்” என கூறி…சீமான் ஆர் எஸ் எஸ் கூலி என்பதை போட்டுடைக்கிறார்🤣.1 point- தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்திக்குதான்.. சுமந்திரன், சிக்னல் கொடுக்கிறார். ஏற்கெனவே மகிந்த, கோத்தா, மைத்திரி, ரணில் எல்லாரையும் பின்கதவாலை போய் சந்தித்தவருக்கு, இப்ப பாராளுமன்ற பதவி இல்லாததாலை, அனுரவை சந்திக்க ஒரு சாட்டும் இல்லை. அதுதான்... சிவப்பு சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டார். "கிளீன் ஸ்ரீலங்கா"விலை இவரையும் தூக்கி, குப்பை வாளிக்குள் போட்டு விட வேண்டும். 🤣1 point- தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
சிவப்பு சேர்ட்டு போட்டு ஆருக்கோ சிக்னல் குடுக்கிறார்..😎1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
மருதங்கேணியரை சொல்லுறியளோ? கள உறவுகள் எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்.1 point- வடக்கில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள்!
என்ன விதம் விதமான கலியாணமண்டபம் கட்டி விடுவினம்....மாப்பிள்ளை ..பொம்பிள்ளைகு திரும்பவும் வெளிநாட்டில் இருந்துதான் ஆள் போகவேணும்..1 point- தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
அவரே, யூலி சங்கோடு தனியாய் சந்திக்க முடியலையே என்றாலும் இந்த படத்தில தலையை கூட காட்ட முடியலையே என்கிற கடுப்பிலும் வருத்தத்திலும் இருக்கிறார். நீங்கள் வேற.1 point- தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
நானும் பார்த்திட்டன்...அந்த கசங்கிய சிவப்புகலர் சேர்ட்தானே1 point- தமிழ்த் தேசிய கட்சிகளுக்கிடையே சந்திப்பொன்றை நடத்துவது தொடர்பில் அவதானம்!
1 point- கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
குசா Air Lanka காலத்தை குறிப்பிடுகிறார் என்றே நினைக்கிறேன்.1 point- தமிழ்த் தேசிய கட்சிகளுக்கிடையே சந்திப்பொன்றை நடத்துவது தொடர்பில் அவதானம்!
வாத்தியும் சும்மா லேசுப்பட்ட ஆளில்லை.. முதலமைச்சர் ஆசை காட்டியும் பார்த்தாச்சு ஆள் அசையுதில்லை. பேத்தை குட்டிக்கும் சனம் வாக்கு போட்டுதுகள்.1 point- வடக்கில் உள்ள ஆலயங்கள் தொடர்பில் ஆளுநர் நா.வேதநாயகன் வேதனை!
இதுவென்றால் உண்மைதான்...வடபகுதியில் உள்ள கோவில் கணக்கு வழக்குகளை ஆராய்ந்து ஊழல்காசை கண்டுபிடித்தாலே ...இரணைமடுக்குளம்போல ஒரு குளத்தை முள்ளியில் கட்டி தண்ணீர்ப் பிரச்சினையை தீர்த்துவிடலாம்1 point- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
ஏதாவது சுவாரசியமான தகவல்களை அறியலாம் என்பதற்காக கேட்டேன்😁. இன்னுமொரு கேள்வி அன்னபூரணி அமெரிக்கா போனதா அல்லது கோதுமை மா முதலில் இலங்கைக்கு வந்ததா? எது முதலில் இடம்பெற்றது?1 point- நாடாளுமன்றத்தில் அர்ச்சுனாவிற்கு பாரிய அநீதி : எழுந்துள்ள புதிய சர்ச்சை
செடில் காட்டுற ஒரு ஆளுக்கு செடில் காட்டுற மற்ற ஆளை பிடிக்காது தானே.1 point- கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
நானும் எதிகாட்தான் .பாவித்தேன்...நம்ம நிறமென்ன..இசு ..இந்திதான் ...ஒரே அட்டகாசம்..சாப்பாடும் அவர்களுக்கு ஓகே..பொதி நிறைக்கு..சரி...2- 50ம் 1 - 17 ம் .. கமரா .லப்டொப்பு நாரி தூக்கு பையிலை ..சந்தோசம்1 point- போர் உலா - நண்பர்களை உருவாக்குவதற்கான போர்…
மலரவனின் 'போர் உலா'வை முன்னிட்டு சில நினைவுகள்.. ********** 1. மலரவன் எழுதிய 'போர் உலா'வை மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றேன். இதை எனது பதின்மத்தின் தொடக்கத்தில் தமிழில் வந்தபோது வாசித்திருக்கின்றேன். அப்போது யாழ்ப்பாணம் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. 'போர் உலா'வை சுன்னாகம் பேருந்து நிலையத்துக்கருகில் இருந்த புத்தகசாலையில் வாங்கி வாசித்திருக்கின்றேன். 13/14 வயதுகளில் கையில் காசு புழங்குவதே அரிதென்பதால், புதுப் புத்தகங்களை வாங்கி வாசிப்பதென்பது பெரும் சாதனை போல அன்று இருக்கும். அப்படி காசு கொடுத்து புதிதாய் வாங்கிய இன்னொரு புத்தகம் புதுவை இரத்தினதுரையின் ' பூவரம் வேலியும், புலுனிக் குஞ்சுகளும்' என்ற கவிதைகளின் பெருந்தொகுப்பு. இப்போது 'எழுநா'வில் எழுதுவதற்காக ஆங்கிலத்தில் வந்த 'போர் உலா'வை மீண்டும் வாசிக்கின்றேன், இந்த நூலை தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மாலதியை நான் வன்னியில் நேரில் சந்தித்திருக்கின்றேன். முப்பது வருடங்களுக்கு மேல் நியூசிலாந்தில் வசித்துவிட்டு மீண்டும் தாய்நிலம் அவர் அப்போது திரும்பியிருந்தார். மனிதவுரிமைகள் சம்பந்தமாக செஞ்சோலைக்கு வந்து அடிக்கடி பேசிக் கொண்டிருந்தார். மாலதி, செஞ்சோலைக்குப் பொறுப்பான ஜனனி அக்காவிடம், 'இப்படி அநாதரவராக இருக்கும் பெண்பிள்ளைகளை, இயக்கப் போராளிகளான நீங்கள் வளர்ப்பதால் அவர்களும் இயக்கத்தில் இயல்பாக சேர்ந்து விடுவார்களே, இது சரியில்லை அல்லவா?' எனக் கேட்டபோது நானும் சாட்சியாக இருந்திருக்கின்றேன். அதனால்தான் அவர்களை இப்போது உள்ளே வைத்து படிப்பிக்காமல், மற்றவர்களும் போகும் சாதாரண பாடசாலைகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றோம் என்று பல உதாரணங்களை ஜனனி அக்கா சொல்லிக் கொண்டிருந்தார். நானும், பின்னர் அங்கிருந்த செஞ்சோலைக்குப் பொறுப்பான பெண் போராளிகளிடம், இங்கே வளரும் பிள்ளைகள் இயக்கத்தில் போய்ச் சேர்வதில்லையா எனக் கேட்டேன். அவர்கள் அப்படிச் சேர நாங்கள் இயக்கத்தில் விடுவதில்லை. என்றாலும் சில பேர் அப்படி இங்கிருந்து தப்பியோடி வேறு பெயரில் இயக்கத்தில் இணைந்திருக்கின்றார்கள் என்றும், அவர்களை மீண்டும் இங்கே மீட்டுக் கொண்டு வந்திருக்கின்றோம் என்றும் சொன்னார்கள். அப்படி ஓடிப்போய் இயக்கத்தில் சேர்ந்து திரும்பி வந்த சிலரை செஞ்சோலைக்குள் சந்தித்திருக்கின்றேன். இவற்றையெல்லாம் ஏன் சொல்கின்றேன் என்றால் இயக்கத்தை விளங்கிக் கொள்வதென்பது மிகச் சிக்கலான விடயம். அதுவும் 30 வருடங்களுக்கு மேலாக இயங்கிய, தம்மை மீறி எவரையும் இயங்க விடாத ஒரு இயக்கத்தை ஒற்றைப்படையாக வைத்து எதையும் எளிதில் விளங்கிவிடவும் முடியாது. எனவேதான் இப்போது புலிகளை ஆதரித்தோ, எதிர்த்தோ மிகைப்படுத்தி வரும் படைப்புக்களை மெல்லிய புன்முறுவலோடு விமர்சிக்கக்கூட விருப்பில்லாது கடந்து போய்விட முடிகின்றது. மனிதவுரிமைகள் சம்பந்தமாக பேசிக்கொண்டிருந்த இதே மாலதி வன்னிக்குள் இறுதியுத்தம் முடியும்வரை புலிகளின் சமாதானக் காரியாலயத்தில் இயங்கியிருக்கின்றார் என்பதைப் பின்னர் அறிந்துகொண்டேன். யுத்தம் மிக மோசமாக நடந்த காலங்களிலே, வேறு எதுவும் செய்வதற்கு வழியற்றபோது, மாலதி இந்தநூலை வன்னிக்குள் இருந்தபடி தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றார் என்ற குறிப்பு இந்த ஆங்கில நூலில் இருக்கின்றது. இறுதி யுத்தம் அவரை அதிஷ்டவசமாக உயிர் தப்ப விட்டிருக்கின்றது. அதனால் மலரவனின் 'போர் உலா'வை நாங்கள் ஆங்கிலத்திலும் இப்போது வாசிக்க முடிகின்றது. ஆங்கிலப் பதிப்பை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்றது. 2. ஈழப் போராட்ட வரலாற்றிலே 'போர் உலா' மிக முக்கியமான பிரதி. மாங்குளம் இலங்கை இராணுவம் முகாமை அழிக்க, மணலாற்றில் இருந்து (இப்போது சிங்களக்குடியேற்றம் நிகழ்ந்து வெலிஓயா என அழைக்கப்படுகிறது), மாங்குளம் செல்லும் பயணத்தையும், அம்முகாம் மீட்கப்பட்டதையும் மலரவன் இதில் லியோ என்கின்ற கதாபாத்திரத்தினூடாக எழுதுகின்றார். மணலாற்று காட்டிலிருந்து தொடங்கும் பயணம் இறுதியில் மாங்குளம் இராணுவ தகர்ப்புடன் முடிவடைகின்றது. ஆனால் அந்தப் பயணத்தில் லியோ என்கின்ற பாத்திரம் சந்திக்கும் மக்கள், வறுமை/சாதியப் பெருமிதங்கள், இராணுவத்தால் கொல்லப்பட்ட மனிதர்களின் உறவுகள் என்று பலவற்றை அவர் தொட்டுச் செல்கின்றார். ஒருவகையில் இது அந்தக்காலத்தைய வன்னி மக்களின் வாழ்க்கையை சொல்லும் ஓர் முக்கிய ஆவணமாகவும் ஆகின்றது. மேலும் அவர் மக்களை/போராட்டத்தை/யுத்தத்தை மட்டுமில்லாது மிக நிதானமாக இயற்கையை விவரித்துச் செல்வது அவ்வளவு அருமையாக இருக்கின்றது. இதைவிட வியப்பாக இருப்பது, மலரவன் போர் உலா'வை எழுதும்போது அவருக்கு 18 வயதேதான். இத்தகைய ஓர் நடந்த சம்பவங்களை புனைவிற்குரிய மொழியில் ஒருவர் தனது பதின்மத்திலேயே எழுதிவிட்டார் என்கின்றபோது ஒரு வியப்பு வருகின்றது. மலரவன் பின்னர் அவரது 20 வயதில் பலாலியில் நடந்த முக்கிய தாக்குதலில் இதன் பிறகு இரண்டு வருடங்களில் இறந்துவிடுகின்றார். அந்தப் பலாலி தாக்குதல் என் நினைவில் நன்கு இருக்கின்றது. ஏனெனில் எங்கள் கிராமங்களை அச்சுறுத்தும் முக்கிய இராணுவ/விமானத் தளமாக பலாலி கூட்டுப்படைத்தளம் அன்று இருந்தது. அந்தத் தாக்குதலில் இயக்கத்தின் முக்கியமானவராக செல்வராஜா மாஸ்டர் என்பவர் உள்ளிட்ட 50இற்கும் மேற்பட்ட போராளிகள் இறந்திருந்தனர். எனினும் 'போர் உலா' எழுதிய மலரவனும் இறந்தார் என்பதை அப்போது அறிந்தேனில்லை. இந்தப் பிரதி மலரவன் இறந்தபின்னே அவரது உடமைகளோடு கண்டுபிடிக்கப்பட்டு இயக்கத்தால் வெளியிடப்படுகின்றது. இருபது வயதுக்குள் உக்கிரமான சமர்க்களத்தில் களமாடியபடி மலரவன் தனியே 'போர் உலா' மட்டும் எழுதவில்லை. 'புயல் பறவை' என்ற நாவலையும், வேறு பல கவிதைகளையும், கட்டுரைகளையும், சிறுகதைகளையும் எழுதியிருக்கின்றார். அவரின் ஒன்றிரண்டு புனைவு நூல்கள் கிடைக்காமலே அழிந்து போயிருக்கின்றன எனச் சொல்லப்படுகின்றது. 'போர் உலா' முடியும்போது அவர் அடுத்து பங்குபற்றிய சிலாவத்துறை இராணுவ முகாம் தாக்குதல் பற்றியும் எழுத இருப்பதான குறிப்பையும் பார்க்கின்றோம். அதை எழுத முன்னர் மலரவன் காலமாகிவிட்டார் என்பது துயரமானது. அந்தச் சிலாவத்துறை சமரிலே மலரவன் படுகாயமுற்று தனது சிறுநீரகம் ஒன்றையும் இழக்கின்றார். 'புயல் பறவை' நூல், பின்னர் மலரவனின் தாயால் வெளியிடப்பட்டிருக்கின்றது. 'புயல் பறவை' யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து இயக்கத்தில் போகின்றவர்களையும், இயக்கத்தில் பெண்களைச் சேர்ப்பது குறித்த உரையாடல்களும் இருக்கின்றன என அறிகின்றேன். (இந்நூல்களைத் தேடுபவர்க்கு, 'போர் உலா', 'புயல் பறவை' இரண்டையும் 'விடியல்' பதிப்பகம் இப்போது வெளியிட்டிருக்கின்றது). மலரவன் சிலாவத்துறை சமரில் (சிறுநீரகம் ஒன்றை இழந்து) காயங்களை ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தபோது அவரின் தாயாரோடு இந்தப் பிரதிகளைப் பற்றிப் பேசியும், திருத்தங்களையும் செய்திருக்கின்றார் என்று அவரது தாயான எழுத்தாளரான மலரன்னை ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். மலரவன் இயக்கத்தில் இருந்தபோது அப்போது முக்கிய ஒரு படைத்துறையாக வளர்ந்து கொண்டிருந்த பசீலன் -2000 பீரங்கிப்படையில் முன்னணிப் படைவீரராக இருந்தவர். இது இயக்கத்தின் உள்ளூர்த் தயாரிப்பு மோட்டார்களைக் கொண்டிருந்தது. யாழ் கோட்டையை அன்று இயக்கம் கைப்பற்றியதில் இந்தப் படையணியின் பங்கும் அளப்பரியது என்பதை அன்றையகாலத்தில் யாழில் இருந்தவர்க்கு தெரியும். பசீலன் என்பவர் வன்னி மாவட்டத் தளபதியாக இருந்து இந்திய இராணுவ காலத்தில் கொல்லப்பட்டவர். அவர் நினைவாக இந்தப் படையணி தொடங்கப்பட்டது. போர் உலாவிலும் மலரவன் இந்தப் படையணியின் ஒருவராகவே தாக்குதலுக்கு வருகின்றார். மணலாற்றில் இருந்து பீரங்கிகளையும் நகர்த்த வேண்டும். அதேசமயம் இலங்கை இராணுவத்தின் விமானங்களின் கண்களுக்கும் தெரியக் கூடாது. இதை நகர்த்தும்போது சாதாரண மக்களும் காணக்கூடாது. இல்லாவிட்டால் ஒரு தாக்குதல் நடக்கப்போகின்றது என்ற செய்தி பரவி, முழுத்தாக்குதலுமே தோல்வியில் முடியும் ஆபத்தும் இருக்கின்றது. 3. மலரவன், மாங்குளம் முகாம் உள்ளிட்ட சில தாக்குதல்களின் பங்குபற்றியபின், அவருக்கு இருந்த எழுத்துத் திறமையால் புலிகள் அவரை ஒவ்வொரு சண்டையின்போதும் நடப்பவற்றையும், அதை ஆராய்ந்து எழுதுவதற்குமென நியமித்திருக்கின்றனர் (பசீலன் -2000 அணியையும் பின்னர் இயக்கம் கலைத்து விட்டிருந்தது). மலரவன் எழுதிய முக்கிய இன்னொரு சண்டை அனுபவம், அவரின் பொறுப்பாளரான அப்போது இருந்த தமிழ்ச்செல்வனால் பாராட்டப்பட்டபோதும், நிறைய இராணுவ இரகசியங்கள் அதில் இருந்ததால் அது பிரசுரிக்காமலே போய்விட்டது. அதுவும் வெளிவந்திருந்தால் இன்னொரு 'போர் உலா' போல முக்கியமான படைப்பாக ஆகியிருக்கும். மாங்குள முகாம் தகர்ப்பு பெரும் செய்தியாக எங்களின் காலத்தில் பேசப்பட்டது. அதில்தான் புலிகளின் முக்கியமான ஒருவராக இருந்த லெப்.கேணல் போர்க் தற்கொலைப்போராளியாக சென்று முகாம் தகர்ப்பைத் தொடக்கி வைத்தவர். எங்கள் காலத்தில் ஒருவருக்கு லெப்.கேணல் என்ற பதவி கொடுக்கப்பட்டால், பின்னரான காலத்தில் கேணல்/பிரிகேடியர் போன்ற பெரும் தளபதிகளுக்கு நிகர்த்தது அது. புலிகளின் மாவட்டப் பொறுப்பாளர்களாக இருந்த தளபதிகளான ராதா, விக்டர் போன்ற மிகச் சிலருக்கே இந்த லெப்.கேணல் பதவி அப்போது கொடுக்கப்பட்டிருந்தது ( எங்களின் காலத்தில் முதலாவது கேணல் பட்டம் பின்னர் கிட்டுவோடு தொடங்கியிருக்க வேண்டும்). போர்க்கின் புகைபடத்தோடு வந்த மாங்குளம் முகாம் தகர்ப்பை அவ்வளவு பதைபதைப்புடன் அன்று வாசித்ததும் நினைவில் இருக்கின்றது. இந்த வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது. அதுபோல இன்னொரு சுவாரசியமான (அப்படிச் சொல்லலாமோ தெரியாது) விடயமும் நினைவுக்கு வருகின்றது. வன்னியில் இருந்த சமயம், எனக்கு பால்ராஜோடு பேசும் ஒரு சந்தர்ப்பம் நண்பர்களோடு வாய்த்தது. அப்போது பிரிகேடியர் தரத்தில் இருந்த பால்ராஜ், தற்செயலாக மாங்குளம் முகாம் தகர்ப்புப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். மலரவன் எழுதிய போர் உலாவில் வந்த தாக்குதலை முன்னின்று நடத்திய அன்றைய வன்னித் தளபதியாக பால்ராஜே இருந்தவர். பால்ராஜ் அங்கே நடந்த தாக்குதலையோ, அவருக்கு நெருக்கமாக இருந்த போர்க் தற்கொலைப்போராளியாகப் போனது பற்றியோ எதுவும் பேசவில்லை. அவர் எங்களுக்கு அந்த சமரில் களமாடிய வீரமிக்க இலங்கை இராணுவ மேஜர் ஒருவரைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார் அந்த மேஜர்தான் அந்த இராணுவ முகாமிற்குப் பொறுப்பாக இருந்தவர்களில் ஒருவர். புலிகள் கிட்டத்தட்ட முகாமைத் தகர்த்து வெல்லும் நிலை வந்துவிட்டது. அந்த இராணுவ மேஜர் உயிரோடு இருந்த மற்றவர்களையெல்லாம் தப்பிப் போகச் சொல்லிவிட்டு, அந்த முகாமைவிட்டு வெளியேறாமல் இறுதிவரை சண்டையிட்டு உயிர் நீத்தவர் என்று சொல்லிக் கொஞ்சம் இடைவெளி விட்டு, 'அவன் ஒரு மரியாதைக்குரிய வீரன்' என்றார். அப்போது நான் அவரில் பார்த்தது எதிர்த்தரப்பின் வீரத்தை மதிக்கும் ஓர் உயரிய தளபதியின் ஆளுமையை. 4. மலரவனின் படைப்பும், வீரமும் நின்று இயங்கிய ஓர்மத்தை, தமிழ்ச்செல்வன் இந்த நூலின் பிற்பகுதியில் எழுதிய அஞ்சலிக் குறிப்பில் குறிப்பிடுகின்றார். சிலாவத்துறை இராணுவ முகாம் தாக்குதலில், பசீலன் -2000 அணி கடும் இழப்பைச் சந்திக்கின்றது. இந்த அணியில் மலரவனோடு பல சண்டைகளில் சேர்ந்து நின்ற அவரது நண்பன் (மேஜர்) லம்பா இறந்துவிடுகின்றார். அவ்வளவு வேதனையோடும், கோபத்தோடும் இருக்கும் மலரவனை விட்டால் அவனும் உணர்ச்சி நிமித்தம் இராணுவ எல்லைக்குள் புகுந்து இறந்துவிடுவான் என்று தமிழ்ச்செல்வன் அஞ்சுகின்றார். அந்தக் கோபத்தை, அந்த உக்கிர சண்டையின் நடுவிலும் எங்கோ ஒரு மூலையில் ரோர்ச் லைட்டின் உதவியுடன், லம்பா பற்றிய நினைவுக்குறிப்பை எழுதிவிட்டு அதை பத்திரிகைக்கு அனுப்பிவிடுங்கள் என்று மலரவன் கொன்டு வந்து தந்தான் என்று தமிழ்ச்செல்வன் குறிப்பிடுகின்றார். அதேபோன்று சிலாவத்துறை தாக்குதலில் இறுதிநாள்களில் பீரங்கியை இராணுவத்துக்கு அருகில் நகர்த்தி அவ்வளவு உக்கிரமானமாக சண்டை செய்தான் என்றும், இவன் இனி தப்பியே வரமாட்டான் என்று நம்பியவளவுக்கு அவனது மூர்க்கம் அப்படி இருந்தது என்றும் தமிழ்ச்செல்வன் பதிவு செய்கின்றார். இச்சமரிலே மலரவன் காயமடைந்து அவரது சிறுநீரகமொன்றையும் இழந்திருக்கின்றார். மலரவன் போல அன்றைய காலங்களில் பல போராளிகள், படைப்பாளிகளாகவும் பரிணமித்தார்கள். மேஜர் பாரதி, கப்டன் கஸ்தூரி, 2ம். லெப்.வானதி, பின்னர் மலைமகள் என பெண்களிடையேயும் வீரியமிக்க பல படைப்பாளிகள் தோன்றினார்கள். அவர்களின் பெரும்பாலான படைப்புக்கள் அன்றைய காலங்களில் தொகுப்புக்களாகியபோதும் இப்போதைய தலைமுறைக்குக் கிடைப்பதில்லை. இந்தப் பெண்களின் சிலர் இயக்கம் படுமோசமாக முதலில் தோற்ற ஆனையிறவு முகாம் ('ஆகாய கடல் வெளி சமர்') தகர்ப்பில் இறந்துபோனவர்கள். இன்று சிலர், தாம் ஒன்றிரண்டு வருடங்கள் இயக்கங்களில் இருந்து தம்மைத் தொடர்ந்து முன்னாள் போராளிகளாக முன்வைக்கும்போது, மேலே குறிப்பிட்டப்பட்டவர்கள் போராளிகளாகவும் படைப்பாளிகளாகவும் இருந்து மரணித்தவர்கள் என்பதை நாம் நினைவில் இருத்தவேண்டும். அவர்களே மிகுதி அனைவரையும் விட போராளிப் படைப்பாளிகளாக முன்னிலைப்படுத்தப்பட வேண்டியவர்கள். ஒருவர் தன்னை கடந்தகாலத்தில் போராளியாகவோ அல்லது ஆதரவாளராகவோ முன்வைத்து பொதுவெளியில் பேசினால், அவர்கள் எந்தக்காலத்தில், எப்போது அப்படி இருந்தார்கள் என்பதை தமது நூல்களில் தம்மைப் பற்றிய அறிமுகத்தில் முன்வைக்க வேண்டியது குறைந்தபட்ச அறமாகும். ஏனெனில் அதுவே தமது முழு வாழ்க்கையையே களத்தில் காவுகொடுத்த மலரவன், பாரதி, கஸ்தூரி, வானதி, மலைமகள் என்கின்ற எண்ணற்ற போராளிப் படைப்பாளிகளுக்கு நாம் கொடுக்கக்கூடிய குறைந்தபட்ச மரியாதையாக இருக்கும். ***************** இளங்கோ டிசே - முகநூலில்1 point- கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
திருமண நிகழ்வுகள் போன்றவற்றில் அங்கங்கே குறைகள் இருந்தாலும் சாப்பாடு பிரமாதமாக இருந்தால் சகல குறைகளும் அதற்குள் மறைந்துவிடும்.1 point- இலங்கையில், இஸ்ரேலிய மத ஸ்தலங்கள் நிர்மாணம் தொடர்பான அரசாங்கத்தின் பதில்!
ரோகிங்கியா அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம்...இது எலா முசுலிம் எம்பிகளின் கோரிக்கை...இசுரெலிய மதஸ்தலம் கட்ட எதிர்ப்பு....இவையின் இந்த டிசைன்...என்ன பிளானில் இருக்கு1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள்
1 pointபண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 03 "ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே! கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!" [நவாலியூர் சோமசுந்தரப்புலவர்] தை மாதம் அறுவடைக்குப் பின்பான காலம். இம் மாதம் கல்யாண மாதம் எனவும் கருதப்படுகிறது. கல்யாணம் செய்ய ஏங்கும் மணமாகா ஆடவர் , விடலை இருவரும் திருப்ப திருப்ப சொல்லும் கூற்று "தை பிறந்தால் வழி பிறக்கும்" ஆகும். அதேவேளை ஆடி மாதம் கல்யாணம் தடை செயப்பட்ட மாதமாக கருதப்படுகிறது. தமிழ் இந்துக்களால் ஆடி மாதம் அமங்கலமான [an inauspicious month] மாதமாக கொள்ளப்படுகிறது. ஆனால் சக்தி வழிபாட்டிற்கு இது மங்கலமான ஒன்றும் ஆகும். ஆடி பிறப்பு என்பது ஆடி மாத பிறப்பை குறிக்கும் ஒரு பண்டிகை. சுற்றத்தாருடனும் நண்பர்களுடனும் கொழுக்கட்டையும், ஆடிக் கூழும் பகிர்ந்து கொண்டாடப்படுகிறது. மணமாகா இளம் பெண்கள், குறிப்பாக ஆடி செவ்வாய் தோறும் அம்மனை / சக்தியை விரதம் இருந்து வழிபட்டு தமக்கு நல்ல கணவர் / வாழ்க்கைத் துணைவர் அமைய அம்மனின் திருவருள் / பாக்கியம் வேண்டுகிறார்கள். 'சுப காரியங்கள் நடத்தக் கூடாது', 'புதுமணத் தம்பதிகள் சேர்ந்திருக்கக் கூடாது', என 'கூடாது' களின் கூடாரமாக இருக்கும் இம்மாதத்தின் கொடுமையான இன்னொரு 'கூடாது' 'ஆடியில் குழந்தை பிறக்கக் கூடாது. அது குடும்பத்தையே ஆட்டி வைத்துவிடும்.' என்ற நம்பிக்கை! 'ஆடிப் பிள்ளை தாய்மாமனை ஆட்டிப் படைக்கும்' என்றும், 'ஆடியில பிறந்த ஆம்பளைப் பிள்ளை ஆருக்கும் அடங்காது' என்றும் வேறு பழ மொழிகள் கூட சொல்லி வைத்துள்ளார்கள். ஆடியில் கர்ப்பமானால் சித்திரையில் பிள்ளை பிறக்கும். அது வீட்டுக்கு ஆகாது என்பது தமிழ் மக்களின் நம்பிக்கை. அதேபோல ஆடியில் எதைச் செய்தாலும் அது ஆடிப் போகும் என்பதும் இன்னொரு அசைக்க முடியாத நம்பிக்கை. ஆடியில் குடி போக மாட்டார்கள், எந்த நல்ல காரியத்தையும் நம் மக்கள் செய்ய மாட்டார்கள். ஆகவே தான் இந்த மாதத்தில் சமயம் சம்பந்தமான பல பல விழாக்கள் ஆலயத்தில் நடைபெறுகின்றன [ஆடி பிறப்பு, ஆடி அமாவாசை, ஆடி பவுர்ணமி, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், .. என விசேஷ வைபவங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கும். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். ]. மற்றும் ஆடி மாதம் குறிப்பாக விவசாயிகளுக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த மாதத்தில்தான் விதை விதைப்பார்கள். அதாவது "ஆடிப் பட்டம் தேடி விதை" என்று முன்னோர்கள் கூறியதற்கேற்ப கிராமப்புறங்களில் பயிரிடும் வேலைகள் படு மும்முரமாக நடைபெறும். இதனால்த்தான் மறைமுகமாக கல்யாணம் போன்ற விழாக்கள் நடைபெறுவதை தவிர்க்கிறது [ஆன்மிகத்திலும் இறை வழிபாட்டிலும் ஈடுபட வேண்டி இருப்பதால் அதற்கு இடையூறாக மற்ற சுபவிசேஷங்கள் இருந்துவிடக் கூடாது. அப்படி இப்படின்னு சொல்லி வச்சாங்க போலும்!] . இதன் மூலம் அதி உச்சி கோடை மாதங்களான சித்திரை, வைகாசி ஆனி மாதங்களில் பிள்ளை பிறப்புகளை நிறுத்துகிறது / குறைக்கிறது . இது ஏன் என்றால் ஆடியில் கர்ப்பமானால் சித்திரையில் பிள்ளை பிறக்கும். கடும் வெயில் காலத்தில் பிள்ளை பிறந்தால் அது குழந்தைக்கும், தாய்க்கும் பல சுகவீனங்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கைதான் காரணம். அதோடு அம்மை போன்ற நோய்கள் பரவும் காலமும் கூட. கோடை வெயிலை சமாளிப்பது பெரியவர்களுக்கே சிரமமாக இருக்கும் போது பச்சிளம் குழந்தை தாங்குமா? அதனால்தான் அக்காலத்தில் ஆடிமாதத்தை தவிர்க்க சொன்னனார்கள் போலும் . மற்றும்படி ஒன்றும் இல்லை. மற்றும்படி சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் பிரச்சினை குடும்பத்துக்கு ஆகாது என்பதெல்லாம் மூடநம்பிக்கை தான். நல்லதை சொன்னால் நாம கேட்க மாட்டோமே. அதனால்த்தான் குடும்பத்துக்கு ஆகாது அப்படி இப்படின்னு சொல்லி வச்சாங்க போலும்! . அது மட்டும் அல்ல நம் கலாச்சாரத்தின் அடிப்படையே நல்ல கருத்துக்களைச் சொன்னால் புரிந்து கொள்ளமாட்டான். அதையே தெய்வ நம்பிக்கையுடன் சேர்த்துக் கூறினால் தவறாது கடைபிடிப்பான் என்பது தான் இதற்கு காரணம். இது பொதுவான மத நம்பிக்கை. மற்றபடி ஆடியில் கர்ப்பம் தரித்தால், சித்திரையில் பிள்ளை பிறக்கும், அதனால் கெட்டது நடக்கும் என்பதெல்லாம் மூட நம்பிக்கை. இதற்கும், அறிவியலுக்கும் தொடர்பே இல்லை. வெயில் காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அசவுகரியமாக இருக்கும் என்பதால் இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அந்த காலத்தில் மருத்துவ வசதிகள் மிக மிக குறைவு என்பதையும் வெப்பத்தை தணிக்கும் குளிரூட்டிகள் போன்ற வசதிகள் இல்லை என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். ஆடி மாதம் என்பது ஒரு இரண்டும் கெட்டான் மாதம். வெயில், காற்று இரண்டுமே அதிகம் இருக்கும். மழையும் நினைத்த நேரங்களில் எல்லாம் பெய்யும். சீதோஷ்ண நிலை மாறி மாறி வருவதால் பரவும் நோய்களுக்கும் குறைவே இல்லை. மேலும் யாருக்கும் வியாதிகள் பரவக் கூடாது என்பதற்காகத் தான் ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவார்கள். கூழ் உடம்பிற்கு குளிர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலங்களில் உடல்நலம் கருதி பல்வேறு பிரிவு மக்களும் இவ்வுணவை உண்ணத் துவங்கியுள்ளனர். யாழ்ப்பாணம், இலங்கையில் கூழ் தயாரிப்பிற்கு பெயர் போன இடமாகும். இந்த மாதத்தினோடு தொடர்புள்ள பழமொழிகள்: ஆடிப்பட்டம் தேடிவிதை [உழவர்கள் பட்டம் பார்த்து விதை விதைப்பார்கலாம்.. காலம் அறிந்து பயிர்செய்ய. இப்பொழுது வைத்தால் தானே தை மாதம் அறுவடை செய்ய முடியும்!] ஆடிக்காற்றில் அம்மி(மை)யும் பறக்கும் பொருள்: வழக்கத்தில் உள்ளது - ஆடி மாதம் காற்று பலமாக வீசும். கடினமான பொருளான அம்மியும் பறந்து விடும். உண்மையான விளக்கம் - சித்திரை மாதம், வைகாசி மாதம் வெயில் காலம். அக்னி நட்சத்திரம். வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். அதனால் பலருக்கும் அம்மை நோய் ஏற்படும். அது ஒரு நோய்த்தொற்று. எனவே வீட்டில் ஒருவருக்கு வந்தால் கூட, பலருக்கும் வரும் அபாயம் உண்டு. ஆனி, ஆடி மாதத்தில் தட்பவெப்பநிலை மாறிவிடும். அம்மை நோயும் ஏற்படாது. தொற்றும் இருக்காது என்பதால் ஆடிக் காற்றில் அம்மை பறந்து போய்விடும் என்று கூறி, நாளடைவில் திரிந்து இருக்கலாம்? அந்த காலத்தில், ஆடி மாதத்தில் திருமணம் செய்தால் , குழந்தை சித்திரை மாதத்தில் பிறக்க வாய்ப்புள்ளது என்றும், சித்திரை கோடை காலம் என்பதாலும், குழந்தைக்கு பல தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் பெரியவர்கள் சொன்னார்கள். அது அன்று ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றுதான். ஆனால் இந்த காலத்தில் அப்படி இல்லை . நம்மை எந்த அளவு வெப்ப நிலையில் வைத்து கொள்ள வேண்டும் என்பது நமக்குத் தெரியும் , அந்த அளவுக்கு வசதி வாய்ப்புகளும் இன்று உள்ளது. ஆனால் இன்றும் இதைக் காரணமாக கூறிக் கொண்டு திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே படுகிறது. திருமணம் பற்றிய கருத்து இப்படி என்றால், இன்னும் ஒரு படி நம்முடைய ஆள்கள் அதிகமாக சென்று நல்ல காரியம் எதுவும் செய்வதில்லை. ஆடி மாதத்தில். உதாரணமாக , புது வீடு செல்லக் கூடாது. பழைய வீட்டிலிருந்து காலி பண்ணக் கூடாது போன்றெல்லாம் சொல்லிக் கொண்டு இன்னும் நடை முறை படுத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள். வீட்டிற்கு குடி புகுவதற்கும், ஆடிக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று தெரியவில்லை எனக்கு, தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லவும். அறியாமை என்ற ஒரு வார்த்தையை நம்முடைய அகராதியிலிருந்து அகற்று முடியாது என்பது ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அதே சமயத்தில் அந்த நம்பிக்கைகள் எதனால் கடைபிடிக்க பட்டன என்பதன் ஆணி வேரை புரிந்து கொள்ளவும் வேண்டும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி / Part - 04:"தும்மல் / விக்கல் / கண் வெட்டசைவு / உள்ளங்கை அரித்தல் " தொடரும்1 point- விசர்நாய் கடிக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகம் என்கிறார் வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ
20 வருடங்கள் முன்பு வவுனியாவில் நடந்த சம்பவம், இது தான் உங்கள் விடயத்திலும் நடந்திருக்கிறது என நினைக்கிறேன். உள்ளூராட்சி சபையினர் மூலம் இலவச றேபிஸ் தடுப்பூசியை வீடுவீடாகக் சென்று நாய்களுக்குப் போட்டார்கள். சில நாட்களில், ஊசி போட்ட நாய்களில் றேபீஸ் போன்ற குணங்குறிகள் தோன்றி பல நாய்கள் இறந்தன. ஆனால், வந்தது றேபிஸ் அல்ல, சில குணங்களில் றேபிஸ் போலவே தென்படும் இன்னொரு வைரஸ் நோயான Distemper என்ற நோய். ஒரு தடவை பாவிக்க வேண்டிய (single use) ஊசியை, ஊழல்/அறிவின்மை காரணமாக, பல தடவைகள் பல நாய்களில் றேபிஸ் தடுப்பூசி போடப் பாவித்திருக்கிறார்கள். Distemper வைரஸ் ஊசி மூலம் தொற்றி நாய்களைக் கொன்று விட்டது. சிறிலங்காவில் றேபிஸ் தடுப்பூசிகளை நாடுவோர் பின்வரும் விடயங்களைக் கவனியுங்கள்: 1. றேபிஸ் தடுப்பூசி குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்கப் பட்டுப் பயன்படுத்தப் பட வேண்டும். சும்மா யாராவது வெளியே இருந்து எடுத்துத் தந்தால் கேட்டு உறுதிப் படுத்துங்கள். 2. ஊசியை நாயின் தொடையிலோ, முதுகில் இருக்கும் தோலிலோ போட வேண்டும். 3. ஊசி புதிதாக இருக்க வேண்டும். உங்கள் கண்கள் முன்னாலேயே புதிய ஊசியை பக்கெற்றில் இருந்து எடுக்கிறார்களா என்று கவனியுங்கள். பாவித்த பின் ஊசியை வீசுகிறார்களா என்றும் கவனியுங்கள். இவை தெளிவில்லா விட்டால், கேட்டு உறுதி செய்யுங்கள். 4. வசதி இருந்தால், மிருக வைத்திய அலுவலகத்திலேயே ஊசியைப் போட்டுக் கொள்ளுங்கள். அங்கே இருப்போர், அனேகமாக உள்ளூராட்சி சபை ஊழியர்களை விட நாயின் ஆரோக்கியத்தில் அக்கறையாக இருப்பர். 5. ஊசி போட்ட பின்னர் 2 நாட்களுக்கு நாயை அவதானியுங்கள். ஏதாவது வித்தியாசம் தெரிந்தால், மிருக வைத்தியரிடம் எடுத்துச் செல்லுங்கள்.1 point- தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை விடுவிக்குமாறு கோரி கையெழுத்து போராட்டம்
இராணுவம் விடுவிக்க காணியின் உரிமையாளன் வெளிநாட்டில் இருந்து வந்து எல்லைப் போடாவிட்டால் சரி.1 point- ரஷ்ய இராணுவத்தில் 500 சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள்! வெளியாகும் பகீர் தகவல்கள்
சில வருடங்களின் முன் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைக்குள் ஒரு வண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இலங்கைத் தேயிலையை இனிமேல் வாங்க மாட்டோம் என்ற செய்தியும் பரப்பபட்டது. இலங்கைத் தேயிலையை அதிகமாக வாங்கிக் கொண்டிருந்தவர்கள் ரஷ்யர்களும், மத்திய கிழக்கு நாடுகளும் தான். அதற்கு முன்னர் இலங்கை அரசு அஸ்பெஸ்டாஸ் பாவனையை முற்றாக தடைசெய்திருந்தது. அஸ்பெஸ்டாஸ் ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு வந்து கொண்டிருந்தது. வெள்ளை அஸ்பெஸ்டாஸிற்கு பதிலாக நீல அஸ்பெஸ்டாஸ் தகடுகளை இலங்கை அரசு மீண்டும் அனுமதித்தது. பின்னர் ரஷ்யா வழமை போல தேயிலையை இலங்கையிலிருந்து வாங்கிக் கொண்டது. இன்னொரு பக்கமாக, பிடிபட்ட வண்டை ஆராய்ந்து பார்த்தார்கள். அந்த வண்டு இலங்கை வண்டே கிடையாது என்ற உண்மை தெரிந்தது. வண்டு மீண்டும் வரலாம்.................😜.1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.