Leaderboard
-
goshan_che
கருத்துக்கள உறவுகள்19Points19134Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்17Points87990Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்9Points33600Posts -
செவ்வியன்
கருத்துக்கள உறவுகள்7Points138Posts
Popular Content
Showing content with the highest reputation on 02/03/25 in Posts
-
இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
நான்... முதல் வெடி விழ முதல் வெளிக்கிட்ட ஆள். 😎 இன்னும்... என் காதால், ஒரு துப்பாக்கி சூட்டுச் சத்தத்தையும் "லைவ்" ஆக நேரில் கேட்கவில்லை. எனக்குத் தெரிந்த தொழில் அதிபர் எல்லாம்... மில்க் வைற் சோப்.... அமரர் கனகராஜா, அண்ணா கோப்பி முதலாளி, யானை மார்க் சோடா முதலாளி, மலிபன் பிஸ்கட் முதலாளி, கன்டோஸ் சொக்லேட் முதலாளி மட்டுமே. 😂 பிற் குறிப்பு: இதில் கூறப்பட்டுள்ள தரவுகளை இந்தத் திரியுடன் மறந்து விட வேண்டும். பூனை... குட்டியை காவின மாதிரி, எல்லா திரிகளுக்கும் காவிக் கொண்டு திரியுறேல்லை. படித்தவுடன் கிழித்து விடவும். ஓகே.... 🤣6 points
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
நான் அமெரிக்கப் படைத்தளம் ஒன்றில் வேலைபார்த்த நேரத்தில் ஈராக் சடாம்உசைனை அடிபணியவைக்க தன் படையில் ஒருபகுதியை அமெரிக்கா ஈராக்கிற்கு அனுப்பியது. என்னுடன் ஒரு நண்பனைப்போல் பழகிவந்த, என்னுடன் வேலைபார்த்த படைவீரர் ஒருவருக்கும் அங்கு போகும்படி கட்டளை வந்தது. அதனால் கலக்கமடைந்த அவரிடம், அவரது கைரேகையைக் காட்டச்சொல்லி, அதில் அவரது ஆயுள்ரேகை துலக்கமாக நீண்டு இருப்பதுகண்டு, நான் அறிந்த அரைகுறை ரேகைசாஸ்திர அறிவுடன், “கவலைப்படாதே நீ திரும்பவந்து எனக்குக் கைலாகு கொடுப்பாய்” என்று ஆறுதல் கூறினேன். சில நாட்களில் திரும்பப் பாதிப்புகள் ஏதுமின்றி ஆயுளோடு வந்த அவர், என்னை ஒரு கைரேகை சாஸ்த்திர நிபுணர் என்று நம்பிவிட்டார். நம்பியதோடு மட்டுமல்ல, நம்பித் தனது சக நண்பர்களை ரேகைபார்க்க என்னிடம் அழைத்தும் வந்துவிட்டார். நான்….??😳4 points
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
சம்பந்தருக்கு சற்றும் சளைக்காத கள்ளந்தான் மாவை. தன் மகனுக்கு சீட் கேட்டு கட்சியை சீரழிச்சதும், மாவிட்டபுரத்தில் மாட மாளிகை கட்டியதும், மட்டும் அல்லாது சாகும் வயசிலும் பதவி ஆசையில் நொடிக்கு ஒரு கதை, நொடிக்கு ஒரு பக்கம் தாவி, தமிழரசு கட்சியை நாசம் பண்ணியதில் மாவையின் பங்கு மிக பெரியது. மாவை இந்தியாவில் பல சொத்துக்களை உடையவர் அதனால் இந்தியா கிழித்த கோட்டை தாண்டதவர் என்பதும் உண்மையே. இங்கே சுமந்திரனை (பார் சிறி சார்பாக) தாக்குவதற்காக பார் சிறி அடிபொடிகள் மாவையை ஏதோ மாமனிதர் ரேஞ்சுக்கு உயத்தினம்🤣. இதே ஆட்கள் இதே யாழில் மாவையை பற்றி எழுதினதை தூக்கி போட்டால் - ஊர் சிரிக்கும். பிகு அடிப்படை மாண்பு கருதி மாவையின் சாவு வீட்டின் பின்பே அவர் பற்றிய விமர்சனம் எழுதப்படுகிறது. சம்பந்தன் சாவு பற்றிய திரியிலேயே வந்து கிரியை செய்த சவகிரிகை குருக்கள்கள்மார் எவரும் எனக்கு அட்வைஸ் பண்ண நினைக்க வேண்டாம் 🙏.4 points
-
இதற்காக மட்டுமே நாம் தமிழரை கழுவி ஊத்துவதில் கலந்துகொள்வதில்லை.
இதிலிருந்து நான் புரிந்துகொள்வது, நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எவ்வளவு கேவலமாகவும் பேசலாம் ஆனால் புலி கொடியை மட்டும் வைத்திருந்தால் உன் சொல்லும் செயலும் மதிக்கப்படும். இயக்கத்தின் செயல்பாடுகளையும், நோக்கத்தையும் இதைவிட தாழ்த்துவதற்கு என்ன இருக்கிறது?3 points
-
சுயலாபத்திற்காக தேசிய தலைவரை அணுகும் சீமான் : எழுந்துள்ள கண்டனம்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு (Seeman), நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடபில் அமெரிக்காவின் (United States) நியூயார்க்கில் (New York) இயங்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமரன் (Visvanathan Rudrakumaran) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். தமிழீழ மக்கள் இது தொடர்பாக விசுவநாதன் ருத்ரகுமரன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தந்தை பெரியாரையும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனையும் எதிர்த்துருவங்களாக முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானால் கட்டியமைக்கபடும் பொய்விம்பத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. இத்தகைய அணுகுமுறை தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு தமிழ்நாடு மக்கள் வழங்கும் ஆதரவுக்கு கேடு விளைவிக்கக் கூடியது என்பதனையும் நாம் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். தேசியத் தலைவர் தமிழ்நாட்டின் உள்நாட்டு அரசியற் சூழலைக் கடந்து, ஒட்டு மொத்தத் தமிழ்நாடு மக்களும் அரசியற் கட்சிகளும் ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர். விடுதலை இயக்கம் நமது விடுதலை இயக்கத்துக்கு கடினமான நேரங்களில் உறுதுணையாக நின்றவர்களுக்கு என்றும் மரியாதையுடன் மதிப்பளித்து வந்தவர். தமிழ் உணர்வுடனும் தமிழீழ விடுதலைப் பற்றுடனும் திராவிட இயக்க வழிவந்த தோழர்கள் போராட்டத்தின் ஆரம்ப காலம் முதல் போராட்டத்துக்கு ஆற்றிய பங்களிப்பும் பணியும் என்றும் தேசியத் தலைவரதும் தமிழீழ மக்களதும் மனங்களை நெகிழச் செய்தவை. இத்தகைய நமது சொந்தங்களுக்கு எதிரான தளத்தில் நமது தேசியத் தலைவரை நிறுத்தும் முயற்சியினை சீமான் கைவிட வேண்டும் எனவும் நாம் அவரைக் கோருகிறோம். தேசியத் தலைவரால் தனது மாவீரர் நாள் உரைகளிலும் அறிக்கைகளிலும் கடிதங்களிலும் செவ்விகளிலும் அவரால் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட கருத்துகள் மட்டுமே அவரது கருத்துகளாகக் கருதப்படும். இவற்றை விட அவர் சார்பில் கருத்துரைக்கவோ அல்லது அவரது கருத்துகளை தமது அரசியற் தேவைக்கேற்ப வளைத்துத் திரித்துப் பயன்படுத்தவோ எவரும் முனையின் அது அரசியல் அறம் அற்ற ஒரு போக்காகும். தேசியத் தலைவர் இத்தகைய அணுகுமுறை தேசியத் தலைவர் கடைப்பிடித்த அறநெறிக்கு முரணானது ஆகும். தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினையும் தமிழ்நாட்டு மக்களின் தேசியப்பிரச்சினையும் வேறுபட்டவை, தனித்துவமானவை. தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தமிழீழ மக்களே தலைமை தாங்க முடியும் தலைமை தாங்க வேண்டும். சிங்களத்தின் தமிழின அழிப்பில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள தமிழ்நாட்டில் இருந்து கட்சி வேறுபாடு கடந்து பரந்து பட்ட ஆதரவைத் தமிழீழ மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இத்தகைய சூழலில் தமிழ்நாட்டின் உள்நாட்டு அரசியல் முரண்பாடுகளுக்குள் தமிழீழத் தேசியத் தலைவரையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் இழுத்து விடும் முயற்சிகளை சீமான் உட்பட எந்த அரசியற்கட்சித் தலைவர்களும் மேற்கொள்ளக்கூடாது என்பதே நமது வேண்டுதல்” என அவர் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/gov-of-tamil-eelam-based-abroad-condemns-seeman-17385839112 points
-
தமிழ் - ஜப்பானிய மொழிகள் இடையே இவ்வளவு ஒற்றுமையா? விளக்கும் மொழியியல் வல்லுநர்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 2 பிப்ரவரி 2025, 08:01 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ் மொழியையும் ஜப்பானிய மொழியையும் புதிதாகக் கேட்கும் ஒருவருக்கு அவை முற்றிலும் வேறுபட்டதாகத் தோன்றலாம். ஆனால், இரு மொழிகளுக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருப்பதாக, அதுகுறித்து ஆய்வு செய்து வரும் மொழி அறிஞர்கள் கூறுகின்றனர். கடந்த 1970களில் இரு மொழிகளுக்கான ஒலி ஒற்றுமை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பிறகு தமிழ் அறிஞர்களும், ஜப்பானிய அறிஞர்களும் இரு மொழிகளின் ஒப்பீட்டு ஆய்வுகளை அவ்வப்போது செய்து வந்துள்ளனர். எனினும் பெருமளவில் ஆய்வுகள் நடத்தப்படவில்லை. தற்போது இரு மொழிகளுக்கும் இடையிலான இலக்கண ஒற்றுமையை ஆராய்ந்து வருகிறார் ஜப்பானில் வசிக்கும் தமிழர் கமலகண்ணன் சண்முகம். "தமிழ் மொழிக்கும் கொரிய மொழிக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமைகள் குறித்து நிறைய ஒப்பீட்டு ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஜப்பானிய மொழியுடன் ஒப்பிடும் ஆய்வுகள் நிறைய இல்லை. மூன்று மொழிகளையும் தெரிந்த அறிஞர்கள் இருந்தால், மேலும் சுவாரஸ்யமான ஒப்புமைகள் கிடைக்கும்," என்கிறார் கமலகணணன். நிலவின் பரப்பில் உள்ள மண், பாறை மூலமே அங்கு ஆக்ஸிஜன் உருவாக்க முடியுமா? டீப்சீக்: செயற்கை நுண்ணறிவு உலகில் அமெரிக்க ஆதிக்கத்திற்கு 'செக்' வைத்த சீன செயலி கே.எம்.செரியன்: இஸ்லாமிய பெண்ணுக்கு இந்துவின் இதயத்தை பொருத்திய கிறிஸ்தவர் கபடியால் மாறிய வாழ்க்கை - ஒரு கிராமத்துப் பெண்களின் நெகிழ்ச்சி கதை தமிழ்நாட்டில் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த அவர், ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மொழியின் மீது கொண்ட ஆர்வத்தால் ஜப்பான் மொழியைக் கற்றுக்கொண்டு, பெரியாரின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட தமிழ் நூல்களை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்துள்ளார். ஆறாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையிலான ஜப்பானின் அரசர்கள் எழுதிய 100 செய்யுள்களை தமிழில் மொழிபெயர்த்து 'பழங்குறுநூறு' என்ற நூலாக வெளியிட்டுள்ளார். தமிழக அரசின் புலம்பெயர் தமிழர்களுக்கான விருதையும் அவர் சமீபத்தில் பெற்றுள்ளார். ஜப்பானிய மற்றும் தமிழ் மொழிகளைப் படிக்கும் போதே அவற்றின் ஒற்றுமை தெரியும் என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய கமலகண்ணன். "தமிழ் மற்றும் ஜப்பானிய மொழிகளுக்கான இலக்கணம் 90% ஒரே மாதிரியாக இருக்கும். இரு மொழிகளையும் படிக்கும்போதே நாம் அதை உணர முடியும். இரு மொழிகளின் வாக்கிய அமைப்பு ஒரே மாதிரியானதாக இருக்கும்" என்கிறார் அவர். வருமான வரி: பட்ஜெட்டில் அறிவித்த மாற்றங்கள் மூலம் யார் பயனடைவார்கள்?7 மணி நேரங்களுக்கு முன்னர் மகாராஷ்டிரா: பெண்ணின் கருவில் இருந்த குழந்தை வயிற்றில் ஒரு கரு உருவானது எப்படி?1 பிப்ரவரி 2025 தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்குமான இலக்கண ஒற்றுமை தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்குமான இலக்கணத் தொடர்புகளில் முக்கியமான சிலவற்றைப் பற்றி கமலகண்ணன் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES வாக்கிய அமைப்பு வாக்கிய அமைப்பு இரு மொழிகளிலும் ஒரே மாதிரியானதாக இருக்கும், வாக்கியங்கள் வினைச் சொற்களில் முடியும். ஆங்கிலத்தில் I am eating an apple என்ற வாக்கியத்தை அதே வரிசையில் தமிழில் மொழிபெயர்த்தால், "நான் சாப்பிடுகிறேன் ஆப்பிள்" என்று எழுத வேண்டும். ஆனால், தமிழில் இந்த வாக்கியத்தை "நான் ஆப்பிளை சாப்பிடுகிறேன்" என்ற எழுதுவதே சரியாகும். இந்த வாக்கியம் "சாப்பிடுகிறேன்" என்ற வினைச் சொல்லுடன் முடிகிறது. ஜப்பானிய மொழியில் இந்த வாக்கியத்தை "வத்தாஷி வா ரிங்கோ ஒ தபேத்தே இமாசு (Watashi wa ringo o tabete imasu)" என்று மொழிபெயர்க்கலாம். இந்த வாக்கியத்தைப் பகுத்து பார்த்தால், தமிழை போன்று இருப்பதைக் காணலாம். நான் – watashi wa ஆப்பிள் - ringo ஐ - o சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் – tabete imasu மனித முகங்களைக் காண முடியாததால் சோகத்தில் வாடிய சூரிய மீன் - மீண்டும் புத்துணர்வு பெற வைத்த விநோத யோசனை24 ஜனவரி 2025 ஜப்பான்: 56 ஆண்டு கால போராட்டம்; தம்பியை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றிய 91 வயது அக்கா16 ஜனவரி 2025 வார்த்தைக் கட்டமைப்பு படக்குறிப்பு, கமலகண்ணன் சண்முகம் தமிழில் 'செலுத்தப்படாததா' என்ற வார்த்தையைப் பிரித்து பார்த்தால், அது வினை, பிறவினை, செயபாட்டு வினை, எதிர்மறை, வினாவெழுத்து ஆகிய ஐந்து இலக்கணக் கூறுகளைக் கொண்டிருக்கும். ஜப்பானிய மொழியிலும் இதே கூறுகள் கொண்டதாக இந்த வார்த்தை உள்ளது. இது, இந்த வார்த்தைக்கு மட்டுமானது அல்ல. இரு மொழிகளின் வார்த்தைக் கட்டமைப்பில் உள்ள ஒற்றுமையைக் குறிக்கிறது. செல்(தமிழில்) – வினை – இகு(ஜப்பானிய மொழி) செலுத்த(தமிழில்) - பிறவினை (அதாவது விஷயம் அல்லது ஒருவரை வேறொரு விஷயம் அல்லது ஒருவர் செய்யச் செய்தல் என்று பொருள்) – இக சே(ஜப்பானிய மொழி) செலுத்தப்பட(தமிழில்) - செயபாட்டு வினை – இக சே ராரே(ஜப்பானிய மொழி) செலுத்தப்படாத(தமிழில்) – எதிர்மறை – இக சே ராரே நய்(ஜப்பானிய மொழி) செலுத்தப்படாததா?(தமிழில்) – வினாவெழுத்து- இக சே ராரே நய் கா(ஜப்பானிய மொழி) தமிழில் கேள்வியைக் குறிக்கும் வினா எழுத்து கடைசியில் வருவது போலவே ஜப்பானிய மொழியிலும் கடைசியில் வருகிறது. யாரை பழிவாங்க இவர்கள் இரவு 2 மணி வரை கண் விழிக்கிறார்கள்? ஆண், பெண்ணில் என்ன மாற்றம் நிகழும்?15 ஜனவரி 2025 நீரிழிவு நோயாளிகள் 6 மாதங்களுக்கு ஒரு முறை இந்த பரிசோதனை செய்வது அவசியம் ஏன்?12 ஜனவரி 2025 பயன்பாட்டு ஒற்றுமை பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு வார்த்தையை நாம் தமிழில் எப்படிப் பயன்படுத்துகிறோமோ அதே போல ஜப்பானிய மொழியிலும் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். உதாரணமாக 'பார்' என்ற வார்த்தை எந்தெந்த பொருள்களில் தமிழில் பயன்படுத்தப்படுகிறதோ அதே போலவே 'மிரு' என்ற சொல் ஜப்பானிய மொழியில் பயன்படுத்தப்படுகிறது. 'கேள்' என்ற சொல்லுக்கு தமிழில் கேள்வி கேட்பது, பாடல் கேட்பது, ஒருவரின் வார்த்தைகளின்படி நடப்பது எனப் பல்வேறு பயன்பாடுகள் உள்ளன. இவற்றுக்கு ஆங்கிலத்தில் ask , listen, hear என வெவ்வேறு வார்த்தைகள் உள்ளன. ஆனால் ஜப்பானிய மொழியில் தமிழ் போலவே 'கிகு' என்ற ஒரே சொல் பயன்படுத்தப்படுகிறது. கேள்வி கேள்(தமிழில்) – ask – கிகு(ஜப்பானிய மொழி) உரையைக் கேள்(தமிழில்) –listen – கிகு(ஜப்பானிய மொழி) ஒலியைக் கேள்(தமிழில்)-hear- கிகு(ஜப்பானிய மொழி) அதே போன்று 'பார்' என்ற தமிழ் சொல்லுக்கு இணையாக 'மிரு' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. பூவைப் பார்(தமிழில்) – see – மிரு(ஜப்பானிய மொழி) படத்தைப் பார்(தமிழில்) - watch – மிரு(ஜப்பானிய மொழி) உயிர்காக்கும் மருந்துகளை உருவாக்க விஷமுள்ள கம்பளிப் புழுக்கள் எப்படி உதவ முடியும்?30 ஜனவரி 2025 சென்னை போல 4 மடங்கு பெரிய பிரமாண்ட பனிப்பாறை ஒரு தீவின் மீது மோதும் அபாயம் - என்ன நடக்கும்?27 ஜனவரி 2025 எண்களைக் குறிப்பதிலும் ஒற்றுமை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சென்னையில் ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்து வருவதாக மொழியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர் தமிழிலும் ஜப்பானிய மொழியிலும் எண்களைக் குறிக்கும் விதத்திலும் ஒற்றுமைகள் உள்ளன. உதாரணமாக பதினொன்று என்பது பத்து + ஒன்று ஆகும். அதேபோல ஜப்பானிய மொழியில் ஜூ (பத்து) + இச்சி (ஒன்று) எனப்படும். அதே மாதிரி பன்னிரண்டு – பத்து + இரண்டு என்று எழுதுவது போல, ஜப்பானிய மொழியில் ஜூ (பத்து) + நி (இரண்டு) எனப்படும். இதே ஆங்கிலத்திலும் வட மொழியிலும் வெவ்வேறாக இருக்கும். வேற்றுமை உருபுகளைப் பொறுத்தவரையிலும்கூட, தமிழில் இருக்கும் ஐ, ஆல், கு, இன், அது, கண் ஆகியவற்றுக்கு இணையாக ஜப்பானிய மொழியில் வேற்றுமை உருபுகள் உள்ளன. தமிழ் மூலம் ஜப்பானிய மொழியை அறியலாம் "தமிழில் ஒரு வாக்கியத்தை எப்படி எழுதுகிறோமா, அதே மாதிரி ஜப்பானிய மொழியிலும் எழுதிவிடலாம். உதாரணமாக 'கண்ணன் கடைக்குச் சென்றான்' என்ற வாக்கியத்தை ஜப்பானிய மொழியில் உள்ள 'க்கு' இணையான வேற்றுமை உருபைப் பயன்படுத்தி அதேபோல எழுதிவிடலாம். எனவே தமிழர்களுக்கு ஜப்பானிய மொழி கற்றுக் கொள்வது எளிதாக இருக்கிறது" என்கிறார் தமிழ் மொழியை ஜப்பானிய மொழி மூலமும், ஜப்பானிய மொழியை தமிழ் மொழி மூலமும் 25 ஆண்டுகளாக கற்றுக் கொடுத்து வரும் சென்னையில் வசிக்கும் டாக்டர் வி.கணேசன். "நான் கடைக்குப் போகிறேன்' என்ற வாக்கியத்தில் அப்படியே ஜப்பானிய சொற்களைக் கொண்டு மாற்றி எழுதினாலே அது சரியாக இருக்கும். இதுவே ஆங்கிலத்தில் அப்படி எழுத முடியாது" என்கிறார் அவர். "பல வார்த்தைகள் தமிழிலும் ஜப்பானிய மொழியிலும் ஒரே மாதிரியானதாக இருக்கின்றன. தமிழ் தெரிந்தவர்களுக்கு ஜப்பானிய மொழி கற்றுக் கொள்வது மிகவும் எளிதாக இருக்கும். உதாரணத்துக்கு தமிழில் 'காரம்' என்பதற்கு ஜப்பானிய மொழியில் 'கராய்' என்று சொல்லப்படுகிறது. அதே போன்று 'அண்ணன்' என்பதற்கு 'அனி' என்று சொல்லப்படுகிறது. இது போன்று நூற்றுக்கணக்கான வார்த்தைகள் உள்ளன," என்று விளக்கும் கணேசன், ஜப்பானிய மொழியைப் பொறுத்தவரை அதன் எழுத்துகளைக் கற்றுக் கொள்வதே கடினமாக இருக்கும் என்கிறார். 'உலகிலேயே முதன் முதலில் தமிழ்நாட்டில்தான் இரும்பு பயன்பாடு தொடங்கியது' - இரும்புக் காலம் ஏன் முக்கியம்?25 ஜனவரி 2025 ஈர்ப்பு விசை விதிகளை மீறும் கல் சிற்பக் கலையில் அசத்தும் மகாராஷ்டிரா இளைஞர்24 ஜனவரி 2025 படக்குறிப்பு, டாக்டர் வி கணேசகணேசன் "ஜப்பானிய மொழியில் மூன்று விதமான எழுத்துகள் இருப்பதால், அதன் எழுத்துகளை அறிந்துகொள்வது சற்று கடினமாக இருக்கலாம். ஜப்பானிய மொழி வேற்று மொழிகளில் இருந்து பெறப்பட்ட வார்த்தைகளை எழுதத் தனியாக எழுத்துகளைக் கொண்டுள்ளது." என்கிறார். ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகளை தமிழில் மொழிபெயர்த்துள்ள அவர், தமிழின் கதைகளிலும் ஜப்பானிய கதைகளிலும் கருப்பொருள்கள் ஒன்று போலவே இருப்பதாகக் கூறுகிறார். "தமிழ்நாடு, ஜப்பான் இடையே கலாசார ஒற்றுமைகளும் காணப்படுகின்றன. நாட்டுப்புறக் கதைகள் மக்களின் வாழ்க்கை முறை, நீதி ஆகியவற்றைச் சொல்லும் கதைகளாக இருக்கின்றன. காஞ்சிபுரத்தை மிகவும் முக்கியமான ஆன்மீக தலமாகக் கருதும் ஜப்பானியர்கள் உள்ளனர்." ஜப்பான் மொழி கற்றுக் கொள்வதற்கான ஆர்வம் தமிழர்களிடம் அதிகமாக இருப்பதாக டாக்டர் கணேசன் தெரிவிக்கிறார். "ஜப்பானில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உருவாகி வருகின்றன. சென்னையைச் சுற்றி 450 ஜப்பானிய நிறுவனங்கள் உள்ளன. ஏனெனில், ஜப்பான் நாட்டவர் சென்னையில் வந்து வசிக்கும்போது அவர்களுக்கும் தமிழ் மொழி கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது" என்கிறார். தமிழ்-ஜப்பானிய மொழிகளின் ஒப்பீடு குறித்த ஆய்வுகள் 'தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்குமான ஒலி ஒற்றுமை (Sound correspondences between Tamil and Japanese)' என்ற நூலை டாக்டர் சுசுமு ஒஹ்னோ எழுதியுள்ளார். கடந்த 1979ஆம் ஆண்டு ஜப்பானில் வெளிவந்த இந்த நூலை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மறுபதிப்பு செய்திருந்தது. ஜப்பானிய மொழி அறிஞரான அவர், சென்னை பல்கலைகழகத்தில் 1979ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டு வரை தமிழ் மொழி, அதன் மொழியியல், திராவிட மொழியியல் ஆகியவற்றைப் பயின்றார். அவரது ஆய்வுகளில், தமிழ் - ஜப்பானிய மொழி ஒப்புமையில் முக்கிய ஆய்வாகக் கருதப்படுகிறது. சென்னை பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் பொன்.கோதண்டராமன் இரு மொழிகளின் ஒப்பீட்டு ஆய்வை வெளியிட்டுள்ளார். இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக இருந்த மனோன்மணி சண்முகதாஸ் இரு மொழிகளுக்கும் இடையிலான இலக்கணத் தொடர்புகள் குறித்து ஆய்வு செய்துள்ளார். 'நம்புவது கடினம்': 6 வயதிலேயே பருவமடையும் பெண்கள் - என்ன காரணம்?24 ஜனவரி 2025 வயதாக ஆக ஆரோக்கியம் கூடும் அதிசய மீனுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து என்ன?23 ஜனவரி 2025 தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்குமான தொடர்புகளுக்கு காரணம் என்ன? புத்த மத பரவல் தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்குமான தொடர்புகளுக்குக் காரணமாக இருப்பதாகக் கூறுகிறார் கமலகண்ணன். "தமிழ்நாட்டில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியிலும் ஜப்பானில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழியிலும் உள்ள பொருட்கள் ஒரே மாதிரியானவையாக இருந்தன. டம்ளர், ஈமச் சடங்குப் பொருட்கள் போன்றவை இரண்டிலும் கிடைத்தன. பேராசிரியர் சுசுமு ஒஹ்னோ தமிழின் சங்க இலக்கியங்களுக்கும் அதே காலகட்டத்தில் ஜப்பானிய மொழியில் வெளிவந்த இலக்கியங்களுக்கும் ஒற்றுமை இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்" என்கிறார் அவர். ஜப்பானிய மொழி, சீன மொழியைப் போல சித்திரங்களைக் கொண்டு எழுதப்பட்டாலும் இரண்டு மொழிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல என்று இரு மொழிகளுக்கும் இடையிலான ஒப்பீட்டு ஆய்வைச் செய்துள்ள, சென்னைப் பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் பொன். கோதண்டராமன் கூறுகிறார். அவர் எழுதிய நூலில், "சீன மொழியும் ஜப்பானிய மொழியும் ஒரே மூலத்தைக் கொண்டவை அல்ல. ஜப்பானிய மொழி வகைப்படுத்தப்படாத மொழியாகக் கருதப்பட்டது. ஜப்பானிய மொழியில் ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆவணங்கள் உள்ளன. ஜப்பானிய மொழியில் உள்ள 'மான்யோஷு' என்ற தொன்மையான பாடல் தொகுப்பு, தமிழில் உள்ள சங்க இலக்கியத்துடன் நெருங்கிய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்குமான ஒப்பீட்டு ஆய்வின் மூலம், திராவிட மொழிகளும் ஜப்பானிய மொழியும் ஒரே மூலத்தில் இருந்து வந்தவை என்று கூற முடியும். இரு மொழிகளுக்கும் இடையிலான தொடர்பு என்பது, ஒரு மொழி பிற மொழியிலிருந்து பெற்றுக்கொண்ட அம்சங்கள் எனக் கருத முடியாது. அதேபோன்று, அவை தற்செயலானவை என்றும் கருதிவிட முடியாது. அதற்குக் காரணம் இரு மொழிகளும் ஒரே மூலத்தில் இருந்து பிறந்தவை என்ப்தே" என்றும் குறிப்பிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce854x9gggno2 points
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
நானும் மாவையை விமர்சித்திருக்கிறேன்.அது சம்பந்தர்>சுமத்திரனின் ஆட்டத்திற்கு தலையாட்டிய காரணத்தால் மட்டுமே. மேலும் மாவை எல்லோரையும் அனுசரித்துப் போகக் கூடிய தலைவராக இருந்தார். 70 களில் தமிழர் விடுதலை சம்பந்தமாக பல பேராட்டங்களில் கலந்து கொண்டவர். இன்றைய அரசியல் தலைவர்களில் அதிக காலம் சிறையில் இருந்தவர் அவர் மட்டுமே. விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவருடைய பங்களிப்பு இருந்தது.சம்பந்தரைப்போல் எடுத்த எடுப்பிலேயே எம்பியாகவில்லை. அல்லது சுமத்திரன் போல் பேராட்டம் முடிவுக்குப் வந்தபின்னர் பின்கதவால் அரசியலுக்குள் நுழைந்தவருமல்ல. தமிழர் விடுதலைக்கூட்டணியின் உருவாக்கத்தின் பின் செயலற்ற நிலையில் இருந்த தமிழருச்கட்சியின் பதிவைத் தொடந்து பேணிவந்தவர் அதனால்தான் சமபந்தர் உதயசூரியன் சின்னத்தை முடக்கிய பொழுது புதிய சின்னத்திற்கு கால அவகாசம் கிடைக்காத நிலையில் தமிழரசுக்கட்சியை தூசுதட்டி எடுத்து தமித்தேசியக் கூட்டமைப்பின் சின்னமாகப் பயன்படுத்தினார்கள்.அப்படித் தமிழரசுக்கட்சியை கட்சியை கட்டிக்காத்த மாவையை தூக்கி எறிந்து விட்டு கட்சியைும் வழக்கில் மாட்டிவிட்ட சுமத்திரனின் துரோகத்தை தமிழர்கள் இலகுவில் மறக்க மாட்டார்கள். தமிழ்மக்கள் அமைதியாக எல்லாவற்றையும்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் யார்யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை அவர்கள் செயலில் காட்டுவார்கள். சம்பந்தர் மாவை இருவரினதும் இறுதிச்சடங்கை அவதானித்தாலே எல்லாம் புரியும்.2 points
-
2010 இல் கருணாநிதியை புகழ்ந்து மேடை நாடகம் போட்ட சீமான்
அண்மையில் தம்பி இராமையா ஒரு பேட்டியில் கூறி இருந்தார், 27/02/2010 அன்று நடந்த பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற கருணாநிதிக்கான பாராட்டு விழாவில், கருணாநிதியை ஆகோ, ஓகோ, வாழும் பெரியார் என புகழும் இந்த மேடை நாடகத்தை எழுதியவர் சீமான் என்று. முள்ளிவாய்க்கால் நடந்து கிட்டதட்ட ஓராண்டுக்கு பின் சீமான் கருணாநிதியை, அண்ணாவை, பெரியாரை எப்படி பாராட்டியுள்ளார் என பார்க்கவும். இதே சீமான் சொல்கிறார்ர் - 2008 முதல்தான் திராவிட எதிர்ப்பாம்.2 points
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
👆இப்படி சங்கி-தம்பிகள் சொல்லுவது பொய். ஏன் என்றால் சங்கி-மானே 2009 க்கு பின் கருணாநிதியை, அண்ணாவை, பெரியாரை புகழ்ந்து மேடை நாடகம் எழுதியுள்ளார். (தம்பி இராமையா பேட்டியில் கடைசி 5 நிமிடங்களை பார்க்கவும்) நாடகம் இந்த திரியில். நிகழ்சியின் பெயர் பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா 🤣🤣🤣. இதெல்லாம் மே 2009 க்கு பின்…. 2011 இல் சுப முத்துகுமார் ரோவினால் படுகொலை செய்யப்பட்டு…. சங்கிமான் ரோவின் பிடிக்குள் போவதற்கான இடைபட்ட காலத்தில் நடந்த கூத்துகள்.2 points
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
2 points
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
மகனும்... தந்தையும். அலுக்காமல் பார்க்கக் கூடிய... அழகிய படம்.2 points
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
இந்த கேள்விக்கு பதில். இலங்கை சட்டப்படி (இந்தியாவிலும் என நம்புகிறேன்) தமிழர் மரபுவழி திருமணம் (கோவிலில் வைத்து தாலி கட்டுவது) பதிவு திருமணத்துக்கு நிகராக ஏற்று கொள்ளப்படுவது. ஆகவே ஒரு தமிழர் பதிவு திருமணம் செய்ய முடியாதவிடத்து இந்த முறையில் திருமணம் செய்தாலும் அது சட்டபடி செல்லும். போரும் சமாதானமும் புத்தகம் இந்த திருமண சூழலை விபரிக்கிறது. மேலே கேணல் கிட்டுவிடம் கூட தலைவரின் மத நம்பிக்கை பற்றி கேட்கப்படுகிறது. ஜெகத் கஸ்பரிடம் கூட தலைவர் அவரே என்ன சொன்னார் என்பது நமக்கு தெரியும். எத்தனையோ சந்தர்பங்கள் இருந்தும் - அவர் ஒரு போதும் தன்னை இந்து/சைவர் என அடையாளப்படுத்தியதோ, ஒரு நாள் தன்னும் கோவிலுக்கு போய் அதை படம் பிடித்து வெளியிட்டதோ இல்லை. இது அவரின் தனிப்பட்ட மதம் சம்பந்தமான நிலைப்பாடு. ஆனால் அமைப்பாக இதைவிட சமயம் சாரா நிலையில்தான் புலிகள் இருந்தார்கள். மீண்டும் கேணல் கிட்டு சொல்வதை கேளுங்கள் - எனக்கு நம்பிக்கை குறைந்து கொண்டு போகிறது, ஆனால் நான் இப்போதும் சாமி கும்பிடுகிறேன், புலிகளில் உறுப்பினருக்கு தனி மனித மத சுதந்திரம் உள்ளது. ஆனால் ஒரு அமைப்பாக, எமக்கு கிறிஸ்தவமும், இந்து/சைவமும் அடக்குமுறையாளர் புகுத்திய மதங்கள். சுதந்திர தமிழீழத்தில் தனி மனித மதசுதந்திரம் மதிக்கப்படும் ஆனால் பிரச்சாரம் மூலம் அறிவூட்டல் நிகழ்த்தப்படும். இதுதான் ஒரு அமைப்பாக மதம் பற்றிய புலிகளின் நிலைப்பாடு. எப்போதும். பிகு இந்த பதில் உங்களுக்கும். தான் வாழ்நாள் பூராக ஆதரித்த இயக்கத்தின் அடிப்படை கொள்கை ஒன்றை பற்றிய தெளிவு இல்லாத நன்றி குறியிட்ட அண்ணைக்கும்.2 points
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
சம்பந்தர் மற்றவர்கள் போல் நெருக்கடியான கால கட்டத்தில் இறக்கவில்லை . அதை முதலில் புரிந்து கொள்ளுங்க இயல்பான நாளில் இறந்த ஒரு அரசியல் தலைவரை மக்களே இல்லாமல் அநாதை பிணம் போல் தகனம் செய்தார்கள் அதுதான் அவருக்கு கொடுக்கப்பட்ட தமிழ் மக்களின் இறுதி மரியாதையும் பழி வாங்கலும் . ஆனால் அதே கட்சி தான் மாவையருக்கு தமிழ் மக்கள் கொடுத்த இறுதி மரியாதை பார்த்தீர்கள் தானே ? ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்றதை அவனின் இழவு வீடு சொல்லிவிடும் .2 points
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
ஆரியர்களையும் அதன் பார்ப்பனர்களையும் எதிர்ப்பவன் நான். ஐயர்களையும் அவர் தம் சமஸ்கிருதத்தையும் எதிர்ப்பவன் நான். திராவிடத்தை எதிர்க்க முக்கிய காரணம் அதன் தவறுகள். எனவே நான் தமிழனாகவே இருக்க விரும்புகின்றேன். அதிலும் சைவத்தமிழனாக பெருமிதம் அடைகின்றேன். ஆரியமோ திராவிடமோ எம் அழிவுகளை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. முயற்சிக்கவும் இல்லை.மகிந்தவுடன் தட்டு மாற்றிக்கொண்டதை தவிர வேறேதுமில்லை.2 points
-
இதற்காக மட்டுமே நாம் தமிழரை கழுவி ஊத்துவதில் கலந்துகொள்வதில்லை.
புலிக்கொடியை பெரியார் - பிரபாகரன் என்று தமிழக மக்களைப் பிளவுபடுத்தி தங்கள் சுயநல உள்ளூர் அரசியலுக்கு சீமானின் நாம் தமிழர் கட்சி பாவிப்பதை தடுக்கமுடியாமல் அதற்கு ஒரு முட்டுக்கொடுப்பு வேறு. புலிகளின் அடையாளங்களை வைத்து பிழைப்பு நடாத்துவோரிடம் இருந்து வேறு எதனை எதிர்பார்க்கமுடியும்?😡 புலிகளின் தத்துவத்தை அடுத்த சந்ததிகளுக்கு கடத்த ஈழத்தமிழருக்கும், புலம்பெயர் ஈழத் தமிழருக்கும் இயலவில்லையா? தூய்மையான இனம் என்று வெறுப்பரசியல் செய்யும் சீமானிடம் புலிக்கொடியை குத்தகைக்குக் கொடுத்துவிட்டதால் சீமானைக் கழுவி ஊத்தமுடியாதுதான்.2 points
-
அறிவித்தல்: யாழ் இணையம் 27 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2025 அன்று யாழ் இணையம் 26 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 27 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும், தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களையும் தாண்டி, சமூக ஊடகங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாக இருக்கின்றது. யாழ் இணையம் 27 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள்(பயணங்கள் உட்பட), மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். சுய ஆக்கங்கள் உறுப்பினர்கள் விரும்பும் எத்தகைய கருப்பொருள்களிலும் அமையலாம். இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி, துணுக்குகள் போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 27 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது. எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் அனைத்து கள உறவுகளும் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம். யாழ் களம் 27 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் வெகுவிரைவில் தயாராகும். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு சில வாரங்களே இருக்கின்றன. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள். விதிமுறைகள்: யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும். கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம். ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும். ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்1 point
-
14ஆவது வருடாந்த 'இந்துக்களின் சமர்' யாழ். இந்து கல்லூரி மைதானத்தில் இம் மாதம் நடைபெறவுள்ளது
இந்துக்களின் சமருக்கு 3ஆவது வருடமாக ஜனசக்தி நிறுவனம் பிரதான அனுசரணை 03 FEB, 2025 | 03:05 PM (நெவில் அன்தனி) யாழ். இந்து கல்லூரிக்கும் பம்பலப்பிட்டி (கொழும்பு) இந்து கல்லூரிக்கும் இடையிலான 14ஆவது வருடாந்த 'இந்துக்களின் சமர்' யாழ். இந்து கல்லூரி மைதானத்தில் இம் மாதம் 7ஆம், 8ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இளைஞரையும் விளையாட்டுத்துறையையும் ஊக்குவிக்கும் நன்னோக்குடன் இந்துக்களின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டிக்கு ஜனசக்தி குழுமம் (JXG) தொடர்ச்சியான மூன்றாவது வருடமாக பிரதான அனுசரணை வழங்குகிறது. இந்த வருட அத்தியாயம் கொழும்பில் நடைபெறுவதாக இருந்த போதிலும் பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வருடப் போட்டியை நடத்த யாழ். இந்து கல்லூரி முன்வந்தமை பாராட்டுக்குரியதாகும். பம்பலப்பிட்டி கல்லூரி அடுத்த வருடம் தனது பவள விழா கொண்டாட்டங்களை மிகவும் பிரமாண்டமான முறையில் ஆரம்பிக்கவுள்ளதால் இந்துக்களின் சமரையும் அந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப் போட்டி தொடர்பான ஊடக சந்திப்பும், அனுசரணை வழங்கும் நிகழ்வும் தமிழ் யூனியன் அண்ட் அத்லெட்டிக் க்ளப் (TU & AU) கேட்போர்கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்த வைபவத்தில் பேசிய ஜனசக்தி நிறுவனத்தின் ஸ்தாபகரும் அதிபருமான சந்த்ரா ஷாவ்டர், 'வடக்கிலுள்ள இந்து கல்லூரிக்கும் தெற்கிலுள்ள இந்து கல்லூரிக்கும் இடையிலான இந்தப் போட்டி மிகவும் சிறப்வுவாய்ந்ததாகும். இந்த மாபெரும் கிரிக்கெட் சமருக்கு அனுசரணை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம்' என்றார். இதேவேளை, இந்துக்களின் சமர்' ஒரு மறக்க முடியாத மாபெரும் கிரிக்கெட் போட்டியாகும் என ஜனசக்தி குழுமத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி கமிக்க டி சில்வா தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், 'சமூகங்களையும் குழுக்களையும் ஒன்றிணைக்கும் ஒரு கருவி விளையாட்டுத்துறை யாகும். 400 கிலோ மீற்றர் வித்தியாச தொலைவில் இருக்கும் இந்த இரண்டு பாடசாலைகளும் விளையாட்டுத்துறை மூலம் சகோதரத்துவத்தை கட்டி எழுப்ப முடியும் என்பதையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை உருவாக்கமுடியும் என்பதையும் வெளிப்படுத்திவருகின்றன' என்றார். இப் போட்டிக்கான அனுசரணை உதவுத் தொகைக்குரிய மாதிரி ஆவணத்தை ஜனசக்தி குழுமத்தின் ஸ்தாபகரும் அதிபருமான சந்த்ரா ஷாவ்டரிமிருந்து யாழ். இந்து கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்பு கிளைத் தலைவர் ஜீ. வசந்தன் பெற்றுக்கொண்டார். https://www.virakesari.lk/article/2056891 point
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
இப்பேட்டியில் தமிழர்கள் திராவிடர்கள் என்று கிட்டு கூறியுள்ளதுடன் பெரியாரையும் பாராட்டியுள்ளார்.1 point
-
இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
ஒரு விலைமதிப்பு அற்ற. தரமான காட்டாயம் செல்ல வேண்டிய ஆலோசனைகள். 🤣🤣1 point
-
இலக்கில்லா சிறுகுருவி
1 pointஓம் நான் அந்தப் பருந்துகளைப் பற்றி யோசிச்சனான், ஆனால் குருவிகளே மனம் முழுதும் ஆக்கிரமித்து விட்டன. நாம இலக்கில்லாமல் இருந்திட்டுப் போவம் 🤣.1 point
-
இலக்கில்லா சிறுகுருவி
1 pointநேரம் போவது தெரியாமல் உப்பிடி குருவி பார்க்க எனக்கு நல்ல விருப்பம். மனிசி விட்டாத்தானே 🤣. கடைக்குப் போகோணுமெல்லோ, பெடியளை வகுப்பிலை விடோணுமெல்லோ, முத்தத்திலை புல்லு வெட்டோணுமெல்லோ, அப்பிடிப் பார்த்தால்நானும் இறகில்லா சிறு குருவியெல்லோ 🤣1 point
-
இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
உங்கள் பொறுப்பு-துறப்பை ஏற்று கொள்கிறேன்🤣. மில்க்வைற்/அண்ணா கோப்பி ரெண்டும் அமரர் கனகராஜாவினது என நினைக்கிறேன். பெற்றார் யாழ்பாணம் இவர் கொழும்பு. றோயல் கல்லூரி பழைய மாணவர். அது சரி கொழும்பில் பாதி மேட்டுகுடி எல்லாம் உங்கட மானிப்பாய் பீப்பிள்தானே🤣1 point
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
புலிகள் பகுத்தறிவாளர்கள் என யாரும் எப்போதும் கூறவில்லை. அவர்கள் மதசார்பின்மையாளர்கள். Rationalism வேறு secularism வேறு. இது மீண்டும் நான் என்ன ஆயுத்தை எடுப்பது என்பதை என் எதிரி தீர்மானிக்கிறான் என்ற தலைவரின் விருப்பமான மேற்கோளின் படி அமைகிறது. பெரியாரின் எதிரி - பிராமணியம் அது மதத்தை, வேதத்தை தன் ஆயுதமாக்கியது. அதை எதிர்க்க பெரியார் கடவுள் மறுப்பை கையில் எடுத்தார். தலைவரின் எதிரி - பெளத்த-சிங்கள பேரினவாதம் - அதன் ஆயுதம் சமயம்சேர்-இன அடையாளம் - எனவே அதன் எதிர் ஆயுதமாக தலைவர் சமயம் சாரா தமிழ் இன அடையாளத்தை நிறுத்தினார். பிகு கடவுள் விடயத்தில் என்னை விபரிக்க ஓரளவு தோதான வார்த்தை agnostic . நிச்சயமாக நான் கடவுள் மறுப்பாளனோ, பகுத்தறிவுவாதியோ அல்ல. இந்த நிலைப்பாடு கூட பெரியாரை அல்லது தலைவரை பார்த்து வந்தது அல்ல. அது தானாக வந்தது.1 point
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
தலைவர் கோவிலுக்கு போனார் என்ற ஊக கதைகளுக்கு அப்பால் (அவரிடம் நேரடியாக கஸ்பர் கேட்ட போது அவர்தான் ஒரு இயற்கைவாதி என்பதை மட்டுமே கூறினார் / நான் தாந்தோறி ஈஸ்வரனின் பக்தன் என கூறவில்லை) புலிகள் இயக்கத்துள் தனி மனித மத வழிபாட்டு சுதந்திரம் இருந்தது. ஆனால் அமைப்புக்குள் மதம் இருந்ததில்லை. பல சண்டை கொப்பிகள் பார்த்திருபீர்கள் - எந்த சண்டைக்கும் முன் உறுதிமொழி எடுத்தல், தாக்குதல் திட்ட விளக்கம் தளபதிகள் பேச்சு மட்டுமே இருக்கும். கோவிலில் போய் அர்ச்சனை செய்வதும் இல்லை ஐயர் வந்து நூல் கட்டுவதும் இல்லை. ஆனால் இலங்கை படைகள் பிக்குவை கூப்பிட்டு பிரித் ஓதுவார்கள். தளபதிகள் கையில் ஒரு நூல் கடையையே சுத்தி கொள்வார்கள்.1 point
-
அறிவித்தல்: யாழ் இணையம் 27 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
❤️.................... மிக்க நன்றி. ஆயத்தமாகி விடுகின்றோம்.................👍.1 point
-
யாழில். 575 ஏக்கர் தனியார் காணியில் இராணுவத்தினரின் முதலீட்டு நடவடிக்கைகள்!
1 point
- டிரம்பின் வரிவிதிப்பினால் கனடாவில் சீற்றம் - அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டவேளை கூச்சல்
03 Feb, 2025 | 02:58 PM அமெரிக்காவின் தேசிய கீதமிசைக்கப்பட்டவேளை உரத்து கூச்சலிட்டுள்ள கனடாவின் ஹொக்கி இரசிகர்கள் தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை கொள்வனவு செய்யப்போவதாக உறுதிமொழியெடுத்துள்ளனர். ஒட்டாவாவில் அமெரிக்க கனடா ஹொக்கி அணிகளிற்கு இடையிலான போட்டியின் போது அமெரிக்க தேசியகீதம் இசைக்கப்பட்டவேளை கனடா ரசிகர்கள் உரத்த குரலில் கூச்சலிட்டுள்ளனர். கனடாவிற்கு எதிராக டிரம்ப் வரிகளை அறிவித்து ஒரு சில மணித்தியாலங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரு நாடுகளினதும் அணிகளிற்கும்இடையில் இடம்பெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியின் போதும் கனடா ரசிகர்கள் அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டவேளை கூச்சலிட்டுள்ளனர். வழமையாக அமைதியான முறையில் நடந்துகொள்ளும் கனடா ரசிகர்கள் கூச்சலிட்டு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளமை,டிரம்பின் வரிகள் குறித்து அவர்கள் அதிருப்தியடைந்துள்ளதை வெளிப்படுத்துகின்றது என பிபிசி தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு கனடா ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்களிற்கும் டிரம்ப் விதித்துள்ள ஏற்றுமதி செவ்வாய்கிழமை முதல் நடைமுறைக்கு வருகின்றது. வலுச்சக்தி பொருட்களிற்கு டிரம்ப் பத்துவீத வரியை விதித்துள்ளார். இந்த வரிகள் அமெரிக்காவில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் எச்சரித்துள்ள பொருளாதார நிபுணர்கள் இந்த வரிகள் பல மாதங்களிற்கு தொடர்ந்தால் அமெரிக்கா பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ளவேண்டிவரும் என தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியின் இந்த வரிகள் குறித்த சீற்றம் கனடாவில் அதிகரித்து வருகின்றது அதேவேளை அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து போராடவேண்டும் என்ற மனோநிலையும் காணப்படுகின்றது. கனடா பிரதமர் இந்த மனோநிலையை வெளிப்படுத்தியுள்ளார். எங்களில் பலர் இந்த புதிய வரிகளால் பாதிக்கப்படுவோம்,சில கடினமான காலங்களை நாங்கள் எதிர்கொள்வோம்,ஏனையவர்கள் குறித்து அக்கறை கொண்டு செயற்படுங்கள் என நான் உங்களை கேட்டுக்கொள்கின்றேன் என ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார் தற்போது கனடாவை தெரிவு செய்யும் தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கியப்படுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை கனடாவின் சிலர் ஏற்கனவே செவிமடுத்துள்ளனர். கனடாவின் சமூக ஊடகங்களில் அமெரிக்க பொருட்களை எவ்வாறு தவிர்ப்பது என்ற வழிகாட்டுதல்கள் வெளியாகியுள்ளன. சிலர் அமெரிக்காவிற்கான பயணங்களை இரத்து செய்யப்போவதாக தெரிவித்துள்ளனர். டிரம்பின் வரிவிதிப்பினால் கனடாவில் சீற்றம் - அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டவேளை கூச்சல் | Virakesari.lk1 point- மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
@Nathamuni யின் இனத்தூய்மை ஆராய்ச்சி கூடத்தில் ரைட் நவ்….. நாதம்ஸ்: கிருஸ்ண தேவராயர் தெலுங்கர்…. கேணல் கிட்டுவின் பெயர் கிருஸ்ணகுமார் சதாசிவம்….. யுரேக்கா! யுரேக்கா!1 point- "இளைய மகளுக்கு அகவை திருநாள் வாழ்த்துக்கள்!" / "Happy Birthday to our youngest daughter!" [02/02/ 2025]
"இளைய மகளுக்கு அகவை திருநாள் வாழ்த்துக்கள்!" / "Happy Birthday to our youngest daughter!" [02/02/ 2025] "பெப்ரவரி இரண்டாம்நாளில் நீலவானத்தின் கீழ்பிறந்தவளே அதிசயமாக வந்தவளே இன்று கொண்டாடுகிறோம்! பெருமைக்குரிய இளையமகளே கலங்கரை விளக்கே அம்மாவின் வாழ்த்து விண்ணில் ஒலிக்கிறேதே!!" "அன்னை வளர்ப்பில் அறிவோடு வளர்ந்து இன்பம் துன்பம் இரண்டையும் அனுபவித்து உன்னை அறிந்து பிறரை உணர்ந்து இன்று கொண்டாடுகிறாய் அகவை நாளை!" "உறுதியான கைகளுடனும் அன்பான இதயத்துடனும், மகிழ்வான புன்னகை ஆறுதல் தருகிறதே! கணவரும் மூன்று மழலைகளும் வாழ்த்த அன்பிலும் சிரிப்பிலும் நீங்கள் செழிப்பீர்களே!!" "பிறந்த நாள் இன்று உனக்காம் பிரகாசமாய் வாழ்வு ஜொலிக்க என பிரபஞ்சம் எல்லாம் அதிரும் ஒலியில் பிரியம் உடன் வாழ்த்து கூறுகிறோம்!" "எங்கள் இளைய மகளுக்கு அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "On this second of February, under the sky so blue, We celebrate the wonder that is you! Our youngest, our pride, a beacon so bright, Mum's greetings are ringing in the sky!" "With steady hands and a heart so kind, Healing smiles, bringing comfort to all! Three little ones and a husband you cherish, In their laughter and love, you truly flourish!" "Wishing our daughter a wonderful birthday filled with love and joy!" [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]1 point- மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
1 point- தையிட்டி விகாரையை அகற்ற திட்டம்!
1 pointகடந்த வெள்ளிக்கிழமை (31) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம் பெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடலில்... தமிழரசு கட்சியை சேர்ந்த சிறிதரன், சி.வி.கே.சிவஞானம் போன்றோரும் கலந்து கொண்டார்கள். அவர்கள் எதிர்த்து குரல் கொடுக்காததால்... தையிட்டி விகாரையை தமிழரசு கட்சி வரவேற்கின்றதா? இவ்வளவு தூரம் கட்டிய விகாரையை, இடிக்க மாட்டார்கள் என்று குழந்தைப் பிள்ளைக்கும் தெரியும். ஆனால் கஜேந்திரமாருக்கு தமது தார்மீக ஆதரவை வழங்கி, தமது எதிர்ப்பை ஜனாதிபதிக்கு முன் பதிவு செய்யாமல் விட்டது மாபெரும் தவறு. தமிழனின் பொது விடயத்தில் ஒன்றாக நிற்க முடியாத தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழனின் சாபக்கேடுகள்.1 point- களைத்த மனசு களிப்புற ......!
1 point1 point- மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
இவர்களின் நிலைப்பாடு எப்படியென்றால் சங்கி சைமனின் அயோக்கியதனங்களுக்கு தமிழ் தேசியத்தை வெறுத்தால் எவ்வளவு முரணானதோ அப்படியிருக்கு. 2008ல் புலிகளின் தலைமை பெரியாரையும் திராவிடத்தையும் குறை கூறினாராம், இது உண்மை என்றால் 2011ல் கருணாநிதியை பாராட்டி நாடகம் எழுதியதேன்? 2023 வரைக்கும் பெரியார் எங்கள் வழிகாட்டி என்று சொல்லி திரிந்ததேன்? புலிகளுக்கும் உண்மையாக இல்லை, தமிழ் தேசியத்திற்கும் உண்மையாக இல்லை, தன் கட்சிகாரனுக்கும் உண்மையாக இல்லை. கண்ணதாசனின் வனவாசம் படித்துக்கொண்டிருக்கிறேன், அதில் எப்படி திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் உண்மையோடு இருக்கிறார்கள் ஆனால் ஏமாற்றப்படுகிறார்கள் என்று எழுதியிருப்பார்,அது அப்படியே இந்ந நாதகவிற்கு பொருந்தும். அதையும் மீறி திமுக வளர்ந்ததற்கு காரணம் அண்ணாவை தாண்டி அடையாளம் காட்டக்கூடிய இரண்டாம் கட்ட தலைவர்கள் இருந்தனர். ஆனால் நாதகவில் யாராவது முன்னுக்கு வந்தால் பிசிறு என்று வெட்டப்படுடகிறது, இல்லை சங்கி சைமனே தேவலாம் என்கிற அளவுக்கு அவர்களது நடவடிக்கை இருக்கிறது. அவர்களுக்கு வரப்போகும் ஒரே நற்செய்தி ஈரோட்டில் வாங்கப் போகும் கட்டுத்தொகையே!!!1 point- "காதலர்தின", சிரிப்புகள். (14.02.)
1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 point- கருத்து படங்கள்
1 point1 point- ட்ரம்பின் வரி விதிப்பு போர்; ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு
தற்போதய தாராள மய பொருளாதார கொள்கைக்கு வழி வகுத்த பிரட்டன் வூட் தீர்மானத்திற்கு முன்னர் இவ்வாறு ஏட்டிக்கு போட்டியாக நிகழ்த்திய வர்த்தக போர் 1930 இதுவரை காலமும் சந்திராத பொருளாதார பேரிடரினை உருவாக்கியது. அப்பொது உலக வர்த்தகத்தில் முதன்மை பங்காளியான அமெரிக்கா இருந்தது (20% களில் இருந்ததாக நினைவுள்ளது 27%?) தற்போதய நிலை முற்றிலும் மாற்பட்டுள்ளது. அமெரிக்கா அப்போது ஏற்றுமதி இறக்குமதி இரண்டிலும் அதிகளவில் ஈடுபட்ட நாடு தற்போது ஏற்றுமதியில் சீனா முன்னிலை வகிக்க அமெரிக்க தனது உற்பத்தியில் பெரும் பகுதியினை தானே பயன்படுத்துவதனால் அமெரிகாவிற்கு ஏற்றுமதி செய்பவர்களுக்குத்தான் நட்டம் அதிகம் இந்த ட்ரம்பின் வரி விதிப்பினால், ஆனால் அந்த நாடுகளும் பதிலுக்கு இறக்குமதி வரி விதித்தால்? தற்போதய பொருளாதாரம் வலய மயப்படுத்தப்பட்ட பொருளாதாரமாக மாற்றம் பெற்றுவிட்டது அதனால் ஐரோப்பிய ஒன்றியம் மத்திய கிழக்கு எரிபொருள் வழங்கள் மையங்கள் என, ஆனால் இந்த மையங்களினுடனும் அமெரிக்க அதிபர் போர் தொடுப்பதாக கூறுகின்றார். உக்கிரேன் இரஸ்சிய போரில் பொருளாதாரத்தினை ஆயுதமாக பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் இழுத்து விட்ட சனி தீர முன்னர் இன்னொரு உலக பொருளாதார பேரிடரை வரலாற்றில் இரண்டாவது தடவையாக உருவாக்க அமெரிக்கா முனைகிறது. இது மூழ்கிறவன் தன்னுடன் மற்றவனை இழுத்துக்கொண்டு மூழ்கும் திட்டம், இதனை உணர்ந்து நாடுகள் அமெரிக்க தவிர்த்த பொருளாதார நடைமுறை ஒன்றினை உருவாக்க மேலும் வலயமயப்படுத்தப்பட்ட பொருளாதார உலக கட்டமைப்பை உருவாக்க வேண்டும், வலய கட்டமைப்பு பொருளாதாரம், பொருளாதார வளர்ச்சிக்கு நெருக்கடியான ஒன்றாக இருந்தாலும் இவ்வாறான சட்டாம்பிள்ளைகளின் கையில் உலக பொருளாதாரம் சிக்கி சீரழிவதனை தடுக்கலாம்.1 point- இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
மிகப் பெரிய தொழில் அதிபர் என்றுபத்திரிகையில் உள்ளது. பெயரைப் பார்க்க, தமிழாராகவும் இருக்குது. ஆனால்… இவரின் பெயரை முன்பு கேள்விப் பட்டதே இல்லை. அனுதாபங்கள்.1 point- இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
பாரதியார் மரணமடைந்த பொழுது சாவு வீட்டில் இருந்தவர்கள் எத்தனை? பிரபாகரன் இறந்த பொழுது அவரின் மரண நிகழ்வு எப்படி நிகழ்ந்தது? மரண வீட்டுக்கு எத்தனை பேர் வந்தார்கள் என்றெல்லாம் கணக்கு எழுதி வரலாறு ஆட்களை ஞாபகம் வைப்பதில்லை1 point- மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
சைவம், மதம் தொடர்பான புலிகளின் உத்தியோக பூர்வ நிலைப்பாடு இது இல்லை. இங்கு ஈ வே ராமசாமிக்கு முட்டு குடுப்பதற்காக விடுதலைப் புலிகள் சைவத்திற்கு எதிரானவர்கள் என்று கிட்டுவின் காணொளியை கொண்டு திரிபவர்கள் தலைவரின் திருமணம் எங்கு நடந்தது என்று கூறுங்கள் பார்கலாம் 😀(இது யாருக்கோ.எவ்வளவோ சப்பைக்கட்டு கட்டி போட்டம் இதுக்கு கட்டமாட்டமா?)😀1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 point- சத்தம் இல்லாத தனிமை வேண்டாம்…..- T. கோபிசங்கர், யாழ்ப்பாணம்
சத்தம் இல்லாத தனிமை வேண்டாம்….. அப்ப எங்களுக்கெல்லாம் நேரம் பாக்க மணிக்கூடு தேவையில்லை. காது இருந்தாச் சரி அதிலேம் பாம்புக் காதெண்டா விசேசம். பாம்புக்கு காதில்லாமல் எப்பிடி அதிர்வுகள், உணர்வுகள் மூலம் கேக்குதோ அப்பிடித் தான் எங்கடை சனத்துக்கும் சத்தம் இல்லாமலே எல்லாம் கேக்கும். “சின்னவா ஆறு மணி ஆகீட்டு”எண்டு அம்மா கூப்பிட்டா அது அரை மைலுக்க எங்க இருந்தாலும் கேக்கும், இல்லாட்டியும் கேக்கிறமாதிரி இருக்கும். கேட்ட உடனயே அடுத்து வரி “சாமி கும்பிடோணும் விளையாடினது காணும்” எண்டு சொல்லேக்க கிணத்தடீல நிப்பம். விடிய நாலரை, ஐஞ்சு எண்டு நேரம் மாறமல் அடிக்கிற கோயில் மணி அவையவையின்டை தேவைக்கு ஏத்த மாதிரி எழுப்பி விடும். காலமைக் கோயில்களின்டை மணியடிக்கிற ஐயர் என்னெண்டு தான் ஆரும் எழுப்பாமல் மணிக்கூடும் இல்லாமல் விடிய எழும்பிறாரோ எண்டு யோசிக்க வைக்கும். ஊரில இருந்து கொஞ்சந் தள்ளி ஏதோ ஒரு கோயில் “விநாயகனைக் கூப்பிட்டு வெவ்வினையை வேரோட அறுக்கிற” சீர்காழீன்டை பாட்டு அறைக்குள்ள இறுக்கி மூடிக்கொண்டு படுத்தாலும் இதமா எழுப்பிவிடும். இந்த இடைவெளீக்க பக்கத்து வீட்டை கரப்பைக்கால கலைச்சு விடகொக்கரிக்கிற அடைக்கோழீன்டை சத்தம், பாலுக்கு அவிட்டு விடாம தானே முழுப் பாலையும் கறக்கிற வேலுச்சாமியோட சண்டைக்குப் போற கண்டுக்குட்டி கத்திற சத்தம், வேப்பம் பழம் சாப்பிட்டு தொண்டை கட்டிக் கீச்சிடிற கிளீன்டை சத்தம், தண்ணி தெளிக்காம முத்தத்தைக் கூட்டேக்க புழுதி மணத்தோட வாற சத்தம், எண்ணை விடாத கப்பீல மாசிலாமணியார் தண்ணி இழுத்துக் குளிக்கிற சத்தம் எல்லாம் snooze பண்ணின alarm மாதிரித் தொடந்து எழுப்பிக் கொண்டே இருக்கும். இதையெல்லாம் கேக்காமல் படுத்தாலும் அம்மாவின்டை குரல் எப்பிடியும் எழுப்பி விட்டிடும். விடிஞ்சு கொஞ்சம் வெளிக்கத் தொடங்கப் பக்கத்து ஒழுங்கேக்க “டிங் டிங்”எண்டு சைக்கிள் மணி அடிக்கிற பால்க்காரனுக்கு இங்க செம்பு கழுவி ரெடியாகி, அந்த இடைவெளீக்க குப்பைக் காரனின்டை டிரக்டர் சத்தத்துக்கு குப்பை வாளியை ஒழுங்கை முடக்கில வைச்சிட்டு , அவன் குப்பையை மட்டும் தான் எடுத்துக் கொண்டு போறான் எண்டதைக் confirm பண்ணீட்டு இருக்க ஐஞ்சு மணிக்கு வந்திருக்க வேண்டிய வாற மெயில் ரெயின் பிந்தி அரசடி ரோட்டை தாண்டிப் போறது கேக்கும். கொஞ்சம் கொஞ்சமாப் பள்ளிக்கூடக் கெடுபிடிச் சத்தமெல்லாம் எட்டு மணிக்கு அடங்க ஒவ்வொரு மீன்காரனா horn அடிக்க எங்கடை மீன்காரன் அடிக்கிறது பிறிம்பாக் கேக்கும். எத்தினை சைக்கிள் போனாலும் தபால்க்காரன்டை சைக்கிள் மணி தனியாத் தெரியும், அதுகும் அம்மம்மாவுக்கு பென்சன் வாற நாளில இன்னும் பிலத்தாக் கேக்கும். அப்பப்ப புளியும், ராசவள்ளிக்கிழங்கும், சின்ன வெங்காயமும் கொண்டந்து ரோட்டில கூவி விக்கிற சித்திரம், வருசத்துக்கு ரெண்டு தரம் மூண்டு தரம் எண்டு சுத்தித் திரியிற கூட்டத்தில கத்தி சாணை, அம்மி பொழியிறவன், பழைய போத்தில், பேப்பர் வாங்கிறவன், எப்பாவது சீவப் போகாமல் தேங்காய் புடுங்க, ஓலை வெட்டிறதுக்கு வாறவன் எண்டு கத்திக்கொண்டு எவன் ஒழுங்கையால போனாலும் வீட்டுக்குள்ள எங்க இருந்தாலும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். மத்தியானம் வேலை முடிஞ்சு அம்மா அயர்ந்திருக்க முன்வீட்டில பக்கத்துப் பள்ளிக்கூடம் முடிஞ்சு வாறவை படலை துறக்க வாற சத்தம் கேட்டு அம்மா எழும்பி வாற எங்களுக்கு முட்டை பொரிப்பா ஒரு நேரக்கணிப்போட. எல்லாம் முடிச்சுச் சாப்பிட்டிட்டு திருப்பிப் படுக்க காத்துக்கு கூரையில மாங்கொப்பு முட்டிற சத்தம் கேட்டா அடுத்த நாள் குருவிச்சையும் கொப்பும் வெட்ட ஆளைக் கூப்பிட்டிட்டுவா. கொஞ்சம் அயரேக்க வெத்திலைக்கு சுண்ணாம்பு, இண்டையான் பேப்பர், இந்தக் கதைப்புத்தகம் இருக்கா, விளயாட வாறியா எண்டு கேட்டு அரட்டைக்கு வந்து படலைக்க நிண்டு கூப்பிடறவின்டை சத்தம், மற்றாக்களின்டை நித்திரையைக் குழப்பாமல் தேவையான ஆளை மட்டும் எழுப்பும். அக்கம் பக்கம் நடக்கிற சண்டை அப்பப்ப காத்தோட கேக்கும். ஒரு வீட்டுச் சண்டை மற்ற வீட்டை தெளிவாக் கேக்காட்டியும் சண்டை பிடிச்ச ஆக்கள், நடந்த நேரம், அப்பப்ப காத்தில வந்து போன அவளின்டை, அவன்டை பேருகளை வைச்சும், போனமுறை வந்த சண்டையை வைச்சும் என்ன பிரச்சினையாம் எண்டு வெத்திலை வாங்க வந்த gapஇல அலசிப் பிடிச்சிடுவினம். கலாஜோதி கலையரங்கத்தில நடக்கிற பட்டிமன்றத்தையும், அரசியல் நிகழ்வுகளையும் வீட்டை இருந்தே கேட்டு தீர்ப்புச் சொல்லிறாக்களும் இருந்தவை . அதே போல கோயில்த் திருவிழாக் காலத்தில எல்லாரும் ஒண்டா அந்தரப்பட்டுப் போகத் தேவேல்லை. ஆய்த்த மணி கேட்டு அம்மம்மா போக, அபிசேக மணிக்கு அம்மாவும் தம்பியும் போக, கொடி மரப் பூசை மணிக்கு நாங்கள் வெளிக்கிட்டு சரி இனி வசந்தமண்டபப் பூசை சாமி தூக்கச் சரியா இருக்கும் எண்டு கணிச்சுப் போறனாங்கள். இரவில தூரத்தில வாற ஐஷ்கிறீம் வானின்டை பாட்டும், மணத்தோட வாற கரம் சுண்டல் வண்டிலின்டை மணியும் main road ஆல போகும். சத்தத்தை வைச்சு தூர நேரம் பாத்து சரியா ஒழுங்கை முடக்குக்குப் போவம் நாங்கள். இரவு படுத்தாப் பிறகு முகட்டில தலைகீழா நிண்ட படி திண்ட பூச்சி சமிக்காம பல்லி உச்சுக்கொட்ட , கதவில மூண்டு தரம் தட்டீட்டு அப்ப தான் நெச்சதுக்கு தடையில்லை, நாளைக்கு போட்டு வரலாம் எண்டிற மாமா, உழுந்து மணம் மணக்குது பாம்புக் கொட்டாவியா இருக்கும் பாத்துப் பின்பக்கம் போ கண்டு பிடிச்சு சொல்லிற ஆச்சி, படுத்தாப் பிறகு நித்திரையில இரவில குசினீக்க வந்தது ஆர் வீட்டுப் பூனை, நேற்றை முழுக்க குலைச்சது எந்த வீட்டு நாய், ரோட்டில குலைக்கிற நாய் பழக்கமான ஆளுக்கு குலைக்குதா இல்லாட்டி ஆமிக்கோ குலைக்குதா, கிறீச் கிறீச் எண்டு இரவு late ஆ ஓடிற சைக்கிள் ஆர்டை, சாமத்தில வேலிக்கு வேலி தட்டித் தடவிப் பாட்டோட போனது அமரசிங்கமா, தளையசிங்கமா எண்டு துப்பறிஞ்சு சொல்லிற அம்மம்மா எண்டு எல்லாருக்கும் ஐம்புலனிலும் செவிப்புலன் அதிகமா வேலை செய்யும். எண்பதுகளின் நடுப்பகுதி, இரவில திரியிறது கள்ளனா குள்ளனா எண்டு சனம் பயந்திருந்த காலம் அப்ப. “ஐயோ கள்ளன்” எண்டு தூர எங்கயாவது கேட்டா தகரம் தட்டி, தடி எடுத்து, கோயில் மணி அடிச்சு, ஊரே கள்ளனைத் தேடி, ஓடிறான் எண்டு பின்னால ஓடிப் பிடிக்கப் போய் களைச்சு வாறவைக்குப் பிளேன்ரீ குடுத்து போன கள்ளன் திருப்பி வாறானா எண்டு விடியவிடியப் படுக்ககாமலே பாத்திட்டு அப்பிடியே பள்ளிக்கூடம் போறனாங்கள். இதுக்கு எல்லாம் மேலால என்டை மனிசி புலுமைச் சிலந்தி expert , “ இங்கயப்பா சிலந்தி சத்தம் போடுது” எண்டு என்னை அடிக்கடி எழுப்பிறது பயத்திலயா இல்லை அது உண்மையா சத்தம் போடிறது கேக்கிறதா எண்டு தெரியாது. எங்கடை சனம் இதில expert ஆகித் தான் பிறகு கோட்டைக்க செல் குத்திக் கேக்கிற சத்தத்தில alert ஆகி சைரன் போட்டுச் சனத்தைக் காப்பாத்தினவை . பொம்மர் சுத்த வாற சத்தத்துக்கு எந்தக் campக்கு அடி விழும் எண்டு தெரியும் , அதுகும் இந்தா குத்திறான், இந்தா போட்டிட்டான் எண்டு கண்டுபிடிச்சு வெடிக்கமுதலே பங்கருக்க போய் safeஆ இருந்து , சரியா நேரம் பாத்து அவன் போகவிட்டு எழும்பி வாறனாங்கள். அம்மாமார், எத்தினைமணிக்கு எவ்வளவு தூரத்திலேம் துவக்குச் சூடு கேட்டால் ரெண்டாவது சூட்டுக்கே எழும்பி இருந்துடுவினம். இப்பிடி கதைக்கிறதைக் கேட்டு, குண்டுச் சத்தத்தைக் கேட்டு , வாகனச் சத்தத்தைக் கேட்டு , பிள்ளை பிடிக்கவாறவனோட சத்தம் போட்டு சண்டை பிடிச்சு எண்டு சண்டைக்கால தப்பினது சத்தத்தால தான். சத்தத்துக்குள்ள சத்தமா வாழ்ந்திட்டு இப்ப என்னெண்டா வீட்டுக்குள்ளயே கூப்பிடிற சத்தம் கேக்காம, calling bell அடிக்கிறது உணராம, மழை பெய்யிறது தெரியாம, இருட்டினதும் விடிஞ்சதும் அறியாம சத்தமே இல்லாமல் இருக்கிறம். அக்கம் பக்கத்தில வீட்டிலயோ இல்லாட்டி ரோட்டிலயோ ஏதாவது சத்தம் கேட்டா இங்க light off பண்ணிப் போட்டுப் படுத்திடுறம். அது பயமா இல்லை சுய நலமா எண்டு தெரியேல்லை. இந்தச் சத்தம் இல்லாத தனிமை நெச்சும் பாக்கேலாத கொடுமை. Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்1 point- "இளைய மகளுக்கு அகவை திருநாள் வாழ்த்துக்கள்!" / "Happy Birthday to our youngest daughter!" [02/02/ 2025]
உங்கள் இளைய மகளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!!1 point- பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள்
1 pointநல்ல வேளை தாயின் உயிர்க்கு பாதகம் இல்லாமல் சோழ நாயனார் பிறந்துள்ளார். அந்த இருநாட்களில் பெரும் வலி வேதனையை அடைந்திருப்பார்1 point- "இளைய மகளுக்கு அகவை திருநாள் வாழ்த்துக்கள்!" / "Happy Birthday to our youngest daughter!" [02/02/ 2025]
மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- "இளைய மகளுக்கு அகவை திருநாள் வாழ்த்துக்கள்!" / "Happy Birthday to our youngest daughter!" [02/02/ 2025]
தில்லை அண்ணா….உங்களின் இளைய மகளுக்கு, உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். 🙏1 point- புகலிடக்கோரிக்கையாளர்களை அவர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக கூடிய நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடியாது – ரோகிங்யா அகதிகள் விவகாரம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
இவர்கள் தங்கள் பதவியை விட்டு விலகும்போது, மக்கள் சொல்ல வேண்டும். அப்படி இவர்கள் சொர்க்க தங்கமாய் இருந்தால்; இலங்கையில் வேறொரு அரசாங்கம் இனிமேல் பதவியேற்கவேண்டிய தேவையில்லை என்கிறீர்கள்? எனது எதிர்பார்ப்பும் அதுதான். ஆனால் நம்மடையள் சிலதுகள் அதை தடுக்குதுகள் போலிருக்கே தமது பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காக.1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அதை நானும் கொஞ்சம் முன்புதான் பார்த்தேன் . ....... நன்றி பிரியன் . .......!1 point- பாட்டுக் கதைகள்
1 pointஉங்களின் பார்வையில் தவறு இல்லை, வசீ, அது இன்னொரு வகையானது என்று தான் சொல்லப்பட அல்லது வகைப்படுத்தப்பட வேண்டும். 'இப்படி எழுதும் அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தது...........' என்று ராஜாஜி புதுமைப்பித்தனின் எழுத்துகள் குறித்து கேள்வி எழுப்பியதாகச் சொல்லப்படுகின்றது. 'சாபவிமோசனம்' கதையைப் படித்த பின்னர், அவருக்கு அப்படி தோன்றியது போல. ஆற்றில், நீரில் மிதந்து வரும் மனிதக் கழிவுகளுக்கு ஒப்பானது என்று சாருவின் எழுத்தை சொன்ன இலக்கியவாதிகளும் உண்டு. இன்றைய ஈழத்து படைப்பாளிகளில், முத்துலிங்கத்தை ஷோபா சக்தி ஏற்றுக்கொள்வதில்லை. இப்படியான பல உதாரணங்கள் உண்டு. எந்த நவீன படைப்புகளையுமே, படைப்பாளிகளையும் உலகம் ஒற்றுமையாக ஏற்றுக் கொள்ளாது போல. தமிழில் மொழிபெயர்ப்பில் இருக்கும் சிக்கல்கள் என்றுமே அப்படியே இருக்கின்றது. பெரும்பாலும், இரண்டு மொழிகளும் தெரிந்த, ஆனால் இலக்கியத்தில் பயிற்சி இல்லாதவர்களே மொழிபெயர்ப்பாளர்களாக இருப்பதே அதற்குக் காரணம். கோவிட் காலத்தில் 'அன்னா கரேனினா' இன் ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு வாட்ஸ்அப் குழுமங்களில் வந்தது. அதைக் கொடுமை என்று சாதாரணமாக சொல்லிவிட்டுப் போக முடியாது, அது ஒரு பெரிய அவமதிப்பு என்றும் சொல்லவேண்டும். இந்த மொழிபெயர்ப்பாளார்கள் மூலப் பிரதியை உள்வாங்காமலேயே ஏதோ ஒன்றைச் செய்கின்றார்கள். நாளைய உலகை உருவாக்குபவர்கள் இன்று வாழ்பவர்களில் மிகமிகச் சிறிய ஒரு பகுதியினரே. இலக்கியவாதிகள், இலட்சியவாதிகளும் அதற்குள் வருகின்றனர் என்று நீங்கள் சொல்லியிருப்பது மிகச்சரியே.1 point - டிரம்பின் வரிவிதிப்பினால் கனடாவில் சீற்றம் - அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டவேளை கூச்சல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.