Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    88827
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19670
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    3127
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46979
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/09/25 in Posts

  1. சீமான் எடுத்த மொத்த வாக்குகளை விட இப்படியான திரிகளில் கோசன் மற்றும் தோழர்கள் எழுதிய எதிர்கருத்துக்களின் விழுக்காடு கூடுதலாய் இருக்கும் போல இருக்கே. 😉☺️
  2. கர்ண பரம்பரையின் கனவு ----------------------------------------- பொழுது சாய்ந்து விட்டது போதும் விளையாடியது உள்ளே வா............. என்று இழுத்து வைத்துக் கொள்ளும் அம்மா ஏன் தான் இது எப்படி தான் இது ஒவ்வொரு நாளும் சாய்கின்றது என்று நான் விடாமல் நச்சரிக்க அதுவும் தூங்கத்தானே வேண்டும் விடிய எழும்பி வரும் வா........... என்றார் எங்கே அதன் வீடு என்றேன் அந்தப் பக்கம் என்று காலுக்கு கீழே சுட்டினார் அம்மா ஒரு நாள் நிலத்துக்கு கீழே தூங்கப் போன சூரியனை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தேன் அம்மா எழுப்பும் போது அது மீண்டும் அடி வானத்தில் இருந்து வந்து கொண்டிருந்தது.
  3. டூ லேட் ப்ரோ…டு லேட்… இந்த அறிவுரையை சீமான் தலைவரை அங்கே இழுத்து போன போது…. அல்லது பிரபாகரன் vs கருணாநிதி என ஆரம்பித்த போது…. குறைந்த பட்சம் பிரபாகரன் vs பெரியார் என இறங்கிய போதாவது சீமானை நிறுத்த சொல்லி சொல்லி இருக்க வேண்டும். (நீங்கள் இதை போன் போட்டு சீமானிடம் சொல்லி இருந்தால் - போனை வைடா புதிய மகனே என்றுதான் அவர் சொல்லி இருப்பார்). இந்த ஒப்பீட்டை செய்வது நான் அல்ல. தமிழ் நாட்டில் உள்ள ஈழ ஆதரவு சக்திகள். சீமானின் நச்சு கருத்தை ஒழிக்க அவர்கள் பெரியாரும் பிரபாகரனும் சமாந்திர சக்திகளே என்பதை மக்களிடம் எடுத்து போகிறார்கள். சபேசன் பேட்டி பார்திருப்பீர்கள். இது உண்மை. ஆகவே இதை நான் வரவேற்கிறேன். ஓம்…அதனால்தான் ரோவினால் இயக்கப்படும் சீமானுக்கு இத்தனை எதிர்ப்பு காட்ட வேண்டி உள்ளது. எனில் முட்டுகொடுக்காமல் இருக்கலாம். நான் உங்கள் நிலைப்பாடு என்றால் அப்படித்தான் செய்வேன். ஓம்… ஒரு உத்தரவாதமும் தருகிறேன். 2026 இல் தனித்து நின்று சீமான் 16% அல்லது கூட எடுப்பின், இன்றை உங்கள் கணிப்பு சரி என்பதை அப்போ ஏற்பேன்.
  4. பெரியாரை எதிர்ததபடி இத்தனை ஆயிரம் வாக்குகளாம்…… இதை கூற வெட்கமாய் இல்லை. இதன்படி பார்ததால் பெரியாரின் கைத்தடியா, பிரபாகரனின் வெடிகுண்டா என்று அயோக்கியதனமாக பேசி அரசியல் செய்த சீமான் கும்பலின் கணிப்பின்படி 114000 வாக்குகள் பெரியாருக்கும், 24000 வாக்குள் மட்டுமே பிரபாகரனுக்கு என்று எடுக்கலாமா? இதை தானே ஈழ அரசியல் உதாரணத்துடன் கோசான் @goshan_che தெளிவாக விளக்கி இருந்தார். இங்கு தெளிவான செய்தி பெரியாரோ பிரபாவோ இல்லை. சீமான் கும்பலின் நச்சு விதைகளை தூவும் அயோக்கிய அரசியலை தமிழ் நாட்டு மக்கள் என்றுமே ஏற்று கொள்ள போவதில்லை என்பதே செய்தி. சீமான் கும்பல் (விசிலடிச்சான் குஞ்சுகள்) திருந்தாவிட்டால் இப்படியே சீமான் தான் சாகும்வரை தனது தற்குறி தம்பிகளை ஏமாற்றி பணவேட்டை நடத்தி பலன் பெறுவது தான் சீமான் என்ற அரசியல்வாதியின் வாழ்ககை. அந்த கும்பலின் அரசியல் ஒரு சிறு கூட்டத்தோடு அடங்கி விடும். தமிழ் தேசிய அரசியல் என்ற போர்வையில் இனவாத நச்சு விதைகளை தமிழர்களிடையே விதைக்கும் சீமான் கும்பலுக்கு நடு மண்டையில் போட்ட ஈரோடு வாக்காளர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள்.
  5. நீங்கள் இருவரும் சொல்வது ஒரு விதத்தில் சரியாக இருக்கலாம். ஆனால் கட்டிய விகாரையை இடிப்போம் வீராவேச வசனங்கள்,மேடைப்பேச்சுக்கள் முக்கிய அரசியல்வாதிகளுக்கு சரியானதல்ல. இது இன்னும் பகையுணர்ச்சிகளை தமிழ்- சிங்கள மக்களிடையே உருவாக்கும். கடைசியில் தமிழர்களின் பிரச்சனையே இதுதான் என முடித்து விடக்கூடும்.அனுர ஆட்சியில் மக்கள் அபிவிருத்தி முக்கிய விருத்தி எனும் பெயரில் நாடகம் ஆடுவது போல்....... தமிழ் அரசியல்வாதிகள் போராட்ட அரசியலை /பேச்சுவார்த்தை அரசியலை செய்யலாமே ஒழிய வெட்டுவோம்,புடுங்குவோம்,இடிப்போம்,உடைப்போம் என்ற அரசியல் சர்வதேசமே ஒத்துக்கொள்ளாது. அனுபவங்கள்.
  6. இந்த செய்தி யாழில் வருமா? மேற்கு உலகுக்கு முட்டுக்கொடுத்த ஜீவராசிகள் இதுக்கு எப்படி முட்டு கொடுப்பார்கள் என்று எனக்குள் யோசித்தேன்...... இந்த திரியில் இருக்கும் கருத்துக்களை வாசிக்கும்போது புரண்டு புரண்டு சிரிக்க தோண்றுகிறது மிக முக்கியமாக இது எதோ ட்ரம்பின் திடடம்போல சிலர் கை கூசாது எழுதுவதுதான். காசாவை குண்டுபோட்டு சுடுகாடு ஆகியதே பைடனின் அரசுதான். குண்டு பட்டு காயம் ஆனவர்கள் காயமே இன்னமும் மாறவில்லை ....... இவர்கள் தலைகீழாக மாறி நிற்கிறார்கள்
  7. இப்படி ஒரு கீழ்த்தரமான முறையில் நாமல் தந்தைக்கு நன்றிக்கடன் செலுத்தி போர்க்குற்றத்திற்கு உடந்தையாகின்றார். மகிந்த மனம் வருந்தியிருந்தால் ஒரு விசாரணை நடாத்தி உண்மையைக் கண்டறிந்திருக்கலாம். உலகுக்குச் சொல்லியிருக்கலாம்.
  8. காற்றாடி - அத்தியாயம் மூன்று ----------------------------------------------- இரண்டு வேலைகளை அவன் செய்து கொண்டிருந்தான். பகல் நேரங்களில் அயலவர் ஒருவருடன் சேர்ந்து வயரிங் வேலை என்று சொல்லப்படும் வீடுகளுக்குள் செய்யும் மின்சார அமைப்பு வேலையையும், பின்னேரம் மற்றும் இரவு நேரங்களில் ஊரில் இருக்கும் தியேட்டரில் ஒரு வேலையையும் செய்ய ஆரம்பித்திருந்தான். வயரிங் வேலை செய்வதற்கு அவன் வீட்டில் உடன்பட்டார்கள். ஆனால் தியேட்டரில் வேலை செய்வதற்கு ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பை காட்டியிருந்தனர். அவன் வயரிங் வேலைக்கு போவதற்கு காரணமே, அதன் காரணமாக தியேட்டரில் அவன் வேலைக்குப் போவதற்கு வீட்டில் ஒத்துக் கொள்வார்கள் என்ற ஒரே ஒன்றுக்காக மட்டுமே. மற்றபடி வயரிங் வேலையில் அவனுக்கு எந்த நாட்டமும் இல்லை. அதுவும் அந்தக் காங்கிரீட் சுவர்களுக்குள்ளால் வயர்களை கொண்டு செல்வதற்காக, அந்த சுவற்றை வெட்டுவது போன்ற ஒரு வேலையில் எவருக்குத் தான் நாட்டம் வரும். ஆனால், அவனை வேலையில் துணையாக கூட்டிப் போகும் அயலவர் சில வயதுகள் கூடியவர் என்றாலும், நல்ல ஒரு நண்பர் போன்றே பழகினார். வேலை முடிந்தவுடன் அன்றன்றே அவனுக்கான சம்பளத்தையும் கொடுத்துவிடுவார். அதில் ஒரு பகுதியை அவன் அம்மாவிடம் கொடுத்து விடுவான். பல நாட்களிலும் வேலையும் இருக்கும். சினிமாவும் தியேட்டரும் அவனுக்கு ஒரு கனவு போல. அவன் பிறந்ததே சினிமாவிற்கு என்று அவனுக்குள் ஒரு உறுதியான எண்ணம் இருந்தது. பொதுவாக சமூகத்தில் எல்லோருக்கும் இருக்கும் அளவில்லாத நாயக நாயகிகள் மீதான கவர்ச்சி அவனிடம் மிகக்குறைவாகவே இருந்தது. சினிமா என்பது வெறும் ஒரு பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி, அதில் வரும் விடயங்களும், அங்கே வரும் கதாபாத்திரங்களும், அவற்றை திரையில் கொண்டு வரும் நடிகர்களும் உண்மை என்றே பலரும் எண்ணி, அவர்களைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் அவர்களால் முடியாத, ஆனால் அவர்கள் செய்ய விரும்பும் சில நாயகத்தனங்களை திரையில் கண்டு, அதுவேதான் தாங்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றார்கள் போல. இந்த சமூகத்தில் சினிமா நடிகர்கள் மேல் இருக்கும் தீராத கவர்ச்சிக்கு இந்த மனப்பன்மையும் ஒரு அடிப்படைக் காரணம். அவனுக்கு ஒரு திரைப்படம் எப்படி உருவாக்கப்படுகின்றது, பின்னர் அது எவ்வாறு திரையில் ஓடுகின்றது என்பதிலேயே ஆர்வம் இருந்தது. அம்புலிமாமா புத்தகத்தில் இருக்கும் படங்களை ஒரே அளவுகளில் வெட்டி, அவற்றை நீட்டாக ஒட்டி, ஒரு சுருளாகச் சுற்றி , நடுவே ஒரு ஈர்க்கை வைத்து, அதைச் சுற்றிப் பார்த்து, இப்படித்தான் சினிமா உருவாகின்றது என்று அவனாகவே பரீட்சித்துப் பார்த்திருக்கின்றான். பின்னர் சிந்தனையில் இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு படம் அளவு இடைவெளியில் இரண்டு ஈர்க்குகளை வைத்து, ஒன்றிலிருந்து ஒன்றுக்கு அவனின் படச்சுருளை சுற்றிப் பார்த்தான். இது தான் சரியான தொழில்நுட்பம் என்று, அதையே இன்னும் முன்னேற்றி, பலருக்கும் அம்புலிமாமா படங்கள் காட்டியும் இருக்கின்றான். தியேட்டரில் வேலைக்கு போனவுடன், தினமும், தியேட்டரின் உள்பக்கத்தை கூட்ட வேண்டும். ஒவ்வொரு வரிசையாக கூட்ட வேண்டும் என்றில்லை. முன்பக்கம், முகாமையாளர் அறை மற்றும் தியேட்டரின் உள்ளே இருக்கும் நடைபாதைகளை கூட்டவேண்டும். அத்துடன் படம் பார்த்து விட்டுப் போனவர்கள் போட்டுவிட்டுப் போகும் கஞ்சல், குப்பை, கழிவுகளையும் அள்ளி எடுத்து, வெளியில் தியேட்டரின் பின்னால் இருக்கும் குப்பையில் கொண்டு போய் கொட்டவேண்டும். அதை விட்டுவிட்டுப் போனோம், இதை விட்டுவிட்டுப் போனோம் என்று பின்னர் ஓடி வருபவர்களும் உண்டு. அவன் நேராக பின்னால் இருக்கும் அந்த சின்ன குப்பை மலையைக் காட்டுவான். அநேகமானவர்கள் அங்கே தங்கள் பொருட்களை தேடி எடுக்காமலேயே போய்விடுவார்கள். சிலர் அவனையும் சேர்ந்து தேடச் சொல்லியிருக்கின்றனர்.சிலருக்கு அந்த இடத்தை பார்த்தவுடன் பொல்லாத கோபம் வந்து, சீறி விழுந்தும் இருக்கின்றனர். தங்களின் கதாநாயகர்களின் பின்னால், அவர்கள் உலவும் இடத்தின் பின்னால், இப்படி ஒரு குப்பை மலை இருப்பதை அவர்கள் இதற்கு முன்னர் அறிந்திருக்கவில்லை. படம் ஆரம்பிப்பதற்கான முதல் மணி அடித்தவுடன், கலரிப் பகுதியில் உள்ள கதவில் அவன் போய் நிற்கவேண்டும். அங்கே வருபவர்களின் அனுமதிச்சீட்டுகளை கிழித்து, அவர்களை உள்ளே விடவேண்டும். கலரிப் பகுதியில் நீண்ட வாங்குகள் மட்டுமே போடப்படிருந்தது. தனிதனியான இருக்கைகள் கிடையாது. ஆண்கள், பெண்கள் என்ற இரு பக்கங்களும் கிடையாது. அதனால் தான் அது மிகக்குறைந்த விலையில் இருக்கும் பகுதியாக இருக்கின்றது. திரைக்கு அருகில் இந்தப் பகுதி இருக்கும். கழுத்தை நிமிர்த்தியே படம் பார்க்கவேண்டும். இந்தப் பகுதியின் பின்னால் இரண்டாம் வகுப்பு, முதலாம் வகுப்பு, ரிசர்வ் என்று மூன்று பகுதிகள் அந்த தியேட்டரில் இருந்தன. மேலே பால்கனி என்று இன்னொரு பிரிவும் இருந்தது. அதற்கான அனுமதி எல்லாவற்றையும் விட மிக அதிகம். பால்கனிக்கு அருகிலேயே, ஒரு தனி அறையில், படம் ஓடும் இயந்திரங்கள் இருந்தன. ஒரு நாள் கலரியிலிருந்து அந்த அறைக்கு முன்னேறுவதே அவனின் இலட்சியமாக இருந்தது. (தொடரும்...................)
  9. பிக் ப்ரோ, நான் உங்களை விளங்கி கொண்டே நடிக்கிறீர்கள் என எண்ணியது தவறோ என யோசிக்கவைக்கிறீர்கள்.
  10. இத்தனை ஆயிரம் வாக்குகளை பெரியாரை எதிர்த்தபடி அவரது மண்ணில் எடுத்திருப்பதால் யார் குழம்பி நின்று மனதிடம் குழம்பித்தடுமாறுகிறார்கள் என்று இங்கே எழுதும் எல்லோருக்கும் புரியும். மக்கள் தீர்ப்புக்களை கொஞ்சமேனும் கவனத்தில் எடுத்துக் கொண்டு கருத்து வையுங்கள். நன்றி.
  11. புலவர், நடந்தது தேர்தலே அல்ல. மேற்கு நாடுகளை நினைத்து களம் தெரியாமல் அவலை மென்றுகொண்டு இருப்பார்கள். உண்மை வேறு.
  12. பிறர் காணியை சுவீகரித்து நிலம் அளந்து புத்த விகாரை கட்டும் மட்டும் என்ன கோமாவிலா இருந்தீர்கள்? கட்டிய விகாரையை யாரும் இடிக்க மாட்டார்கள். கட்டிய விகாரையை இடிக்க நேர்ந்தால் சிங்கள மக்களிடம் இன்னும் விரோதங்களையே உருவாக்கும். இனியும் மக்களை ஏமாற்றம் செய்யும் அரசியல் செய்யாமல் நீதியான/ வெளிப்படையான அரசியலை இதயபூர்வமாக செய்யுங்கள்.
  13. Acuity Partners நிறுவனத்தின் உரிமையாளரானது HNB வங்கி! இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB Acuity Partners நிறுவனத்தின் உரிமையை வெற்றிகரமாகக் கையகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கையகப்படுத்தலுடன், நிறுவனம் HNB Investment Bank (Pvt) Ltd என மறுபெயரிடப்பட்டுள்ளது, இலங்கையின் முதலீட்டு வங்கி துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக அதன் பங்கை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமையப்பெற்றுள்ளது. Acuity Partners முன்பு HNB மற்றும் வங்கியின் இணைந்த கூட்டு முயற்சியால் நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும், அக்யூட்டி ஸ்டொக் ப்ரோக்கர்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனமானது கொழும்பு பங்குச் சந்தையின் உறுப்பினராகவும், முன்னணி பங்கு தரகர் நிறுவனமாகவும் உள்ளது. இந்த நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் நிபுணத்துவத்தை வழங்குவதன் மூலமும், மதிப்பை உருவாக்குவதன் மூலமும் இலங்கையின் நிதி சேவைத் துறையை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளன. இந்த மாற்றத்துடன், HNB Investment Bank இணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்கள், கடன் மற்றும் பங்குச் சந்தை சேவைகள் மற்றும் நிதி ஆலோசனை தீர்வுகள் உள்ளிட்ட பரந்த அளவிலான சேவைகளை வழங்கும். இந்த கையகப்படுத்தல், HNB Investment Bank இன் செயல்பாடுகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச நிதி சேவைத் துறையில் அதன் இருப்பை விரிவுபடுத்தவும் HNB எடுத்துள்ள மூலோபாய நடவடிக்கையாகும் இலங்கையின் நிதித் துறையை ஒரு புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்வதற்கு இது உதவியாகும் என HNB இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அபேவர்தன தெரிவித்துள்ளார் https://athavannews.com/2025/1420413 @goshan_che, @vasee, @Kadancha
  14. காற்றாடி - அத்தியாயம் இரண்டு ------------------------------------------------ சில்லென்று குளிர்ந்த இடத்தை விரல்களால் தொட, விரல்கள் அதைவிடக் குளிராக இருந்தது தெரிந்தது. உரசி சூடாக்கிக் கொண்டே, தான் இன்று பரீட்சைக்கு போகப் போவதில்லை என்பதை எப்படி பக்குவமாகச் சொல்லலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான். அம்மா அழக்கூடும், ஊரையும் கூட்டக் கூடும், ஆனால் இந்த மழையில் ஊர் இங்கே வராது. அப்பா குதிக்கத்தான் போகின்றார். வளர்ந்த பிள்ளை என்று இப்பொழுது ஒரு வருடமாக அடிகள் எதுவும் விழவில்லை. இன்று அது மாறக்கூடும். சித்தப்பா அவர் வாங்கித் தந்த முழுக்காற்சட்டை பற்றி கவலைப்படக்கூடும். அம்மா ஏற்கனவே எழும்பி விட்டிருந்தார். அடுப்படியில் அரவம் கேட்டது. இப்ப, இந்த மழையில் எந்த விறகு ஈரமில்லாமல் இருக்குமோ தெரியவில்லை. ஆனாலும் எங்கள் எல்லோருக்குமாக அவர் அந்த இரண்டு அடுப்புகளையும் தினமும் விடாமல் ஊதிக் கொண்டேயிருக்கின்றார். தேத்தண்ணியை போட்டு விட்டு, எல்லோருக்கும் காலையில் ஏதாவது உணவு செய்யும் நாட்களில், நாங்கள் எல்லோரும் பாடசாலைகளுக்கு கிளம்பிப் போகும் வரை அவர் அடுப்புக்குள் முன்னால் ஒரு காலை முழுவதும் மடக்கி, மறு காலை முழங்கால் வரை மடித்தும் இருப்பார். 'ஏன் இப்படி இருக்கிறீங்கள், அம்மா...............' என்று கேட்டால் சிரிப்பொன்றே பதிலாக வந்து கொண்டிருந்தது. பெண்கள் எதையுமே வெளியில் சொல்லமாட்டார்களாமே. இன்று பரீட்சைக்கு போகாவிட்டால், இன்றுடன் படிப்பு நின்றுவிடும். அடுத்ததாக என்ன செய்வது............... ஆரம்ப ஆரவாரங்களின் பின், என்ன செய்யப் போகின்றாய் என்று கேட்கவும் போகின்றார்கள். என்ன செய்வது என்று பல திட்டங்கள் இருக்கின்றன. அதில் எதையாவது ஏற்றுக் கொள்வார்களா என்று தான் தெரியவில்லை. தங்கைகளும், தம்பிகளும் என்ன நினைப்பார்களோ. ஒரு தம்பியை நினைத்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கின்றது. எங்கு படித்தாலும், அவன் தான் வகுப்பில் முதலாவதாக வந்து கொண்டிருக்கின்றான். அவன் மட்டும் இப்படி எப்படி பிறந்தானோ தெரியவில்லை. வயிற்றில் பிள்ளைகள் இருக்கும் போது, தாய்மார்களின் உணவுப் பழக்கம் கூட பிள்ளைகளின் மூளைத் திறனை வளர்க்கும் என்று சொல்லுகின்றார்கள். இந்த முற்றத்தில் நிற்கும் புளி வைரக்கண்டி மாங்காயைத் தான் அம்மா எப்போதும் கடித்துக் கொண்டிருந்திருப்பார். தம்பி வயிற்றில் இருக்கும் போது, அந்த வருடம் அந்த மரம் காய்க்கவில்லையோ என்னவோ. மழை தற்காலிகமாக விட்டிருந்தது. மீண்டும் அது ஆரம்பிக்க முன், முகத்தை கழுவி விட என்று கிணற்றடிக்கு போனான். பெரிய வட்டக் கிணறு. ஆனால் மூன்றாக பிரிக்கப்பட்டு இருந்தது. மூன்று வீடுகளுக்கு அது தான் கிணறு. கிணற்றின் மேலேயே தகர வேலிகளால் அது பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு வீட்டுக்காரருக்கு இன்னொரு வீட்டுக்காரை பார்க்க முடியாத வகையில் அமைக்கப்பட்டிருந்த உயர்ந்த வேலிகள். அவை தார் தகரங்கள். எம் எஸ் விஸ்வநாதன், கே வி மாகாதேவன் போன்ற பழையவர்களின் ரசிகரான அப்பா, இந்த தார் தகர வேலியை தினமும் பார்ப்பதால் தான், புதிதாக வந்த இளையராஜாவின் பாடல்கள் தார் தகரத்தில் கம்பால் அடிப்பது போல கொடூரமாக இருக்கின்றது என்று அடிக்கடி சொல்லுவார். அவர் சிவாஜியின் ரசிகரும் கூட. பொதுவாகவே அப்பாமார்களும், மூத்த மகன்களும் எதிரும் புதிருமாகவே வளர்வார்கள் போல. அள்ளிய வாளித் தண்ணீருக்குள் ஒரு சின்ன ஜப்பான் மீன் குஞ்சும் வந்திருந்தது. மழை பார்க்க மேலே வந்து ஆவென்று நின்றிருக்கின்றார் போல. அப்படியே வாளிக்குள் வந்தும் விட்டார். இரண்டு கைகளாலும் அதை தண்ணீருடன் அள்ளி எடுத்து கிணற்றுக்குள் கொட்டிவிட்டான். கிணற்று நீர் சூடாக இருந்தது. வெளியே குளிராக இருக்கும் போது இப்படித்தான், கிணற்று நீர், கடல் நீர் கூட, சூடாக இருப்பது போல தெரியும். இன்னும் சில நாட்கள் மழை பெய்தால், கிணற்றில் தண்ணீர் எட்டித் தொடும் அளவிற்கு வந்துவிடும். எங்களின் பக்க கிணற்றில் உயரமான தடுப்புக் கட்டுகள் எதுவும் இல்லை. ஆனாலும் இதுவரை எவரும் இந்தக் கிணற்றுக்குள் தெரிந்தோ அல்லது விபத்தாகவோ விழுந்திருக்கவில்லை. அம்மா தேத்தண்ணி போட்டு வைத்திருந்தார். அது எல்லோருக்கும் சேர்த்து ஒரு பெரிய சட்டியில் இருக்கும். 'எத்தனை மணிக்கு சோதனை...............' என்று கேட்டார் அம்மா. பதில் எதுவும் சொல்லாமல் குடித்துக் கொண்டே இருப்பதைப் பார்த்த அம்மா மீண்டும் அதையே கேட்டார். 'நான் போகவில்லை, அம்மா......................' என்றான் அவன். அப்படியே சில கணங்கள் இருந்த அம்மா, மீண்டும் நினைவு வந்தவராக, 'போகாமல் என்ன செய்யப் போகின்றாய்................' என்றார். ஒரு வேலைக்குப் போகலாம் என்றிருக்கின்றேன் என்றான் அவன். 'அப்பாவிடம் இதை யார், எப்படிச் சொல்வது..................' என்று அம்மா அடுத்த கட்டத்தை நோக்கி விரைவாக போய்க் கொண்டிருந்தார். ஆச்சரியமாக இருந்தது. நான் எப்படியும் படிக்கப் போவதில்லை என்று அம்மாவிற்கு முன்னமே தெரிந்திருந்தது போல. தாய்க்கு தெரியாத பிள்ளைகளா........... 'டில்லிக்கு ராஜாவானாலும்........................' என்று ஒரு பழமொழியை அம்மா அடிக்கடி சொல்லுவார். எந்தப் பிள்ளை டில்லிக்கு ராஜாவாக வரும் என்றும், எது டில்லியையே வாழ்நாளில் பார்க்காது என்றும் அவர்களுக்கு தெரியும் போல. அப்பா எப்போதும் அப்படியே படுக்கையில் இருந்தபடியே அன்றைய நாளின் முதலாவது தேத்தண்ணியைக் குடிப்பார். பின்னர் ஒரு பத்து அல்லது பதினைந்து குடிப்பார். ஆனால், வீட்டில் எல்லோரும் பல் துலக்கி, முகம் கழுவி விட்ட பின்னேயே, எதை என்றாலும் குடிப்போம் அல்லது சாப்பிடுவோம் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கும் பதில்களை பாடசாலையில் சொல்லியிருக்கின்றேன். முதலாவது தேத்தண்ணியின் பின் கொஞ்ச நேரம் கண்மூடிப் படுத்திருப்பார். அது அவரின் சிந்திக்கும் நேரம் போல. அம்மா அப்பாவின் சிந்தனையைக் கலைக்காமல், பொறுமையாகவே விசயத்தை உடைத்தார். எதிர்பார்த்த எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. 'சரி, இனி என்ன செய்யப் போகின்றாராம்............' என்ற ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டே, அப்பா எழுந்து இருந்தார். அம்மா அடுத்த தேத்தண்ணியை சுடவைக்கப் போனார். பெரும் எடுப்போடும், பரபரப்போடும் வாழ்க்கையின் ஒரு தருணத்திற்கு காத்திருக்கும் போது, சில வேளைகளில் அந்த தருணம் ஒரு பூனையின் நடை போல எந்த சத்தமும் எழுப்பாமல் எங்களைக் கடந்து போய்விடுகின்றது. (தொடரும்........................)
  15. காற்றாடி - அத்தியாயம் ஒன்று ---------------------------------------------- மழை இன்னும் விட்டுவிடவில்லை, ஆனால் முன்பிருந்ததை விட நன்றாகக் குறைந்து விட்டது போன்று தோன்றியது. மழையின் சத்தம் கொஞ்சம் ஓய்ந்திருந்தது. கூரையில் இருக்கும் ஓட்டைகளினூடாக வீட்டுக்குள் விழுந்து ஓடும் மழை நீர் முற்று முழுதாக அவனைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது. அவன் படுத்திருக்கும் இடத்திற்கு சரி மேலாக கூரையில் எந்த ஓட்டைகளும் இல்லாதபடியால், மழைநீர் அவன் மேல் இன்றும் விழுந்திருக்கவில்லை. வீட்டிலிருந்த ஒரு அகலமான மா பலகையை தரையின் மேல் போட்டு அதன் நடுவிலேயே அவன் படுத்திருந்தான். தரையில் விழுந்து தெறிக்கும் சில மழை ஒழுக்குகள் தன்னில் விழுவதை தவிர்க்க, ஒரு பக்கமாக சாய்ந்து படுத்தபடி, இரண்டு கைகளையும் இரண்டு கால்களுக்கும் இடையில் வைத்து, கால்களை வயிறு நோக்கி இழுத்து, முழு உடலையுமே குறுக்கி வைத்திருந்தான். சில மழைக் காலங்களை இதே வீட்டில் இப்படியே கடந்து வந்து விட்டபடியால், ஒழுகும் மழையை ஏமாற்றி எப்படி இரவில் தூங்குவது என்று அவன் நன்றாகவே கற்றுக் கொண்டிருந்தான். இப்படி ஏராளமான விசயங்களில் அவனுக்கு சமயோசிதமும், அறிவும் இருந்தாலும், அவனுக்கு கழுத்தில் கத்தி வைத்தாலும் வரவே வராது என்று சில விசயங்களும் இருக்கின்றன. எல்லோருக்கும் எல்லாம் வந்து விடுமா என்ன, எந்த மனிதருக்கும் சிலது வரும், சிலது வராது, சிலது வரவே வராது. அவனுக்கு வரவே வராது என்ற வரிசையில் முதலாவதாக வராமல் இருப்பது கணிதபாடம். சாதாரணமான இரண்டு தெரியாக் கணியங்களும், இரண்டு சமன்பாடுகளும் இருக்கும் கணிதம் கூட அவனுக்கு தலைச்சுற்றலைக் கொடுக்கும். அவன் போன வருடம் சாதாரணதரப் பரீட்சை எழுதியிருந்தான். எட்டுப் பாடங்களில் ஏழு பாடங்களில் சித்தி பெற்றிருந்தான். கணிதத்தில் படுதோல்வி. விஞ்ஞானத்தில் சிறப்புச் சித்தி பெற்றிருந்தான். ஆங்கிலத்தில் சாதாரண சித்தி, ஆனால் கணிதத்தில் எஃப் வந்திருந்தது. கணிதமோ அல்லது எந்தப் பாடங்களுமோ என்றுமே அவன் வீட்டில் படித்ததேயில்லை. ஊரில் இருக்கும் பாடசாலைக்கு போவான், பின்னர் வீட்டுக்கு வருவான், அவ்வளவு தான் அவனுடைய கல்வியின் எல்லையும் தேடலும். வீட்டில் எதையும் படிப்பதோ அல்லது தனியார் கல்வி நிலையங்களுக்கு போவதோ கிடையாது. மற்ற நேரங்களில் ஊர் விதானையார் போல ஊரை சுற்றிக்கொண்டு திரிவான். அவன் ஏழு பாடங்களில் நல்ல சித்திகள் பெற்றிருந்தபடியால், அவன் வீட்டில் அவனை அடுத்ததாக இன்னும் மேலே படிக்கச் சொன்னார்கள். இதுவரை அவர்களின் குடும்பங்களில், அவனின் அம்மா மற்றும் அப்பாவின் குடும்பங்கள், முதலாவதாக உயர்தர வகுப்புகளுக்கு போகும் ஆள் என்ற பெருமை எவருக்கும் கொடுக்கப்படாமல் அவனுக்காகவே காத்துக்கொண்டு கிடந்தது. கணித பாடத்தில் தவறி இருந்தபடியால், பாடசாலையில் கலை அல்லது வர்த்தகப் பிரிவுக்கு அவனைப் போகச் சொன்னார்கள். அதுவும் கூட அடுத்து நடக்கும் சாதாரண பரீட்சையில் கணித பாடத்தில் சாதாரண சித்தியையாவது அவன் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையுடன். அரைக்காற்சட்டையில் இருந்து அப்போது தான் முழுக்காற்சட்டைக்கு மாறியிருந்தான். வெள்ளை நிற முழுக்காற்சட்டை. அதை தைக்கும் தையல் கடைக்காரர் அவனின் அப்பாவிற்கு மிகவும் தெரிந்தவரே. பாடசாலைக்கு தேவையானது போலவும் இல்லாமல், அன்றைய நாயகர்களின் அகன்ற கால்கள் உடையது போலவும் இல்லாமல், இரண்டுக்கும் மத்தியில் ஒன்றை தைத்துக் கொடுத்திருந்தார் அந்த தையல்காரர். அவனின் ஆலோசனை தான் அது. அந்த முழுக்காற்சட்டையுடன் முதன்முதலாக பாடசாலை போயிருந்த போது, அப்பொழுது தான் கணிதபாடத்தில் சித்தி அடையவே வேண்டும் என்று பாடசாலை அதிபர் சொன்னதற்கு, உடனேயே தலையை ஆட்டியிருந்தான். உயர்தர வகுப்பில் படிக்கின்றோம் என்பதே அவனுக்கு ஒரு நிமிர்வைக் கொடுத்திருந்தது. ஒன்று அல்லது இரண்டு அப்பியாசக் கொப்பிகள் மட்டும், அதையும் சைக்கிளின் பின் பக்கத்தில் வைத்துக் கொண்டு, ஏதோ சில மணிநேரங்கள் பாடசாலைக்கு போய் வருவது நல்ல ஒரு அனுபவமாகவே அவனுக்கு இருந்தது. அப்படியே அருகிலேயே இருக்கும் தனியார் கல்வி நிலையத்திலும் சேர்ந்திருந்தான். பாடசாலை விட்டு வந்தவுடன் தனியார் கல்வி நிலையத்திற்கு போய்விடுவான். அங்கே போய் அதை நடத்திக் கொண்டிருப்பவருக்கு ஒத்தாசையாகவும் நின்றுகொள்வான். தனியார் கல்வி நிலையத்திற்கு என்று வெள்ளையில் இல்லாத இன்னொரு முழுக்காற்சட்டை, 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் கமல் போட்டு வருவதைப் போன்ற ஒன்று, வைத்திருந்தான். அவனுடைய சித்தப்பா ஒருவர் பெறாமகன் பெரிய படிப்புகள் படிக்கின்றானே, தான் எதையாவது செய்தே ஆகவேண்டும் என்று, இந்த இரண்டாவது முழுக்காற்சட்டைக்கான செலவைப் பொறுப்பேற்றிருந்தார். அதுவே சித்தப்பா முறை என்றபடியால் அவன் வீட்டில் ஒத்துக் கொண்டிருந்தார்கள். இதையே ஒரு மாமன் முறை உள்ளவர் செய்யக் கேட்டிருந்தால், அவன் வீட்டில் ஒத்துக் கொண்டிருக்கவேமாட்டார்கள். இதுவே ஒரு கடமையாகி, அது எங்கே போய் முடியுமோ என்ற பலமான ஒரு காரணம் இதன் பின்னால் இருந்தது. அவனுக்கு சொந்தத்தில் ஏழு எட்டு மச்சாள்மார்கள் இருந்தனர். இன்று இப்பொழுது விடியப் போகும் காலையில் சாதாரணதர கணிதபாட பரீட்சை. மழை தொடர்ந்து மூன்று நாட்களாக பெய்து கொண்டிருந்தது. போன தடவை அவன் கணிதபாட பரீட்சை எடுத்ததிற்கும், இன்றைக்கும் ஏதாவது வித்தியாசங்கள் இருக்கின்றதா என்ற யோசனை அவன் மனதில் ஓடியது. போன தடவை மழை பெய்யவில்லை என்பதைத் தவிர வேறு எதுவும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. இந்த காலப்பகுதியில் அவன் ஒரு நாள் கூட கணிதம் படித்திருக்கவில்லை. போன தடவை வந்த அதே பரீட்சை முடிவு தான் இந்த தடவையும் வரப் போகின்றது என்பது தெளிவாகவே அவனுக்கு தெரிந்தது. இப்பொழுது என்ன செய்யலாம் என்று நினைத்தபடியே நிமிர்ந்துபடுத்தான். நிலத்தில் விழுந்த மழை ஒழுக்கு ஒன்று தெறித்து அவன் முகத்தில் வந்து விழுந்தது. அது விழுந்த இடம் சில்லென்று குளிர்ந்தது. (தொடரும்....................)
  16. பெரியார் விவகாரம்.. சீமான் கொஞ்சம் ஓவராக பேசிவிட்டார்.. தேர்தலுக்கு பின் ஒரே போடாக போட்ட அண்ணாமலை! Yogeshwaran MoorthiUpdated: Saturday, February 8, 2025, 14:47 [IST] ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமாரின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் 63,984 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 13,945 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஏற்கனவே சுமார் 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் திமுக முன்னிலை பெற்றுள்ளது. Also Read இதனால் திமுக தொண்டர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவின் இந்த வெற்றி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஏராளமானோர் வாக்கு செலுத்தவில்லை. வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது. அதேபோல் நோட்டாவுக்கான வாக்குகள் அதிகரிக்கும். நிச்சயம் ஈரோடு பகுதியில் நோட்டாவுக்கு கிடைத்துள்ள வாக்குகள் அதிகம்தான். இந்த இடைத்தேர்தல் மக்களிடையே எழுச்சி இல்லாத, உற்சாகமில்லாத தேர்தல். என்னை பொறுத்தவரை வாக்கு வங்கி இங்கு போனதா, அங்கு போனதா என்று சொல்வதை விடவும் மக்களே உற்சாகமாக பங்கேற்காத தேர்தலாக பார்க்கிறோம். ஏற்கனவே திமுகவின் வெற்றி எழுதப்பட்ட ஒன்று தான். தொடக்கம் முதலே இந்த இடைத்தேர்தலுக்கு திமுகவும் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. முதலமைச்சர் உள்ளிட்ட யாரும் பிரச்சாரம் செய்யவில்லை. எங்களை பொறுத்தவரை பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்ததால் தான், மக்களை பட்டியில் அடைத்து வைத்த கொடூரம் நிகழவில்லை. Recommended For You இந்த தேர்தல் களத்தில் நான் ஏற்கனவே பார்த்துள்ளோம். அதேபோல் பெரியாரை யாரும் புகழ்ந்து பேசினால் ஓட்டு கிடைக்குமா? அல்லது பெரியாரை தாக்கி பேசினால் வாக்குகள் மாற்றமடைந்து அதிகரிக்குமா என்று நிச்சயம் கிடையாது. அந்த காலம் மாறிவிட்டது. பெரியாரை பிடித்தவர்கள் இருக்கிறார்கள். பெரியாரை பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள். அதற்காக வாக்கினை மாற்றி போடும் அளவிற்கு சக்தி இருக்கா என்று கேட்டால், நிச்சயம் இல்லை. சீமான் உள்ளிட்டோர் ஒரு வாதத்தை முன் வைத்தார்கள். பெரியார் தொடர்புடைய வாதம் கொஞ்சம் கூடுதலாக சென்றுவிட்டதோ என்ற எண்ணம் இருக்கிறது. அதனால் பெரியாரை பற்றிய கருத்துகளுக்கு வாக்கினை மாற்றி போட வைக்கும் சக்தி கிடையாது. அதனைதான் ஈரோடு உணர்த்தி இருக்கிறது. பெரியாரை கடந்து தமிழ்நாடு பயணித்துவிட்டது. ஒருவேளை பெரியாரால் தான் நாம் தமிழர் தோல்வியடைந்துவிட்டது என்று திமுகவினர் நினைத்தால், அவர்களுக்கு அரசியல் தெரியவில்லை என்றுதான் சொல்வேன். யாரும் இல்லாத இடத்தில் நாதக மட்டுமே இருந்துள்ளது. அதனால் திமுகவிற்கு கிடைத்துள்ள வாக்கு சதவிகிதம், பெரியாரை எதிர்த்து பேசியதால் வாக்குகள் கிடைத்தது போன்ற வாதத்தை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/seeman-has-spoken-a-bit-too-much-against-periyars-thoughts-says-bjp-state-president-annamalai-after-678343.html?ref_source=OI-TA&ref_medium=Article-Page&ref_campaign=More-Articles-DMP&ref_content=678465-p8 டிஸ்கி தட் “வாங்கின காசுக்கு மேலாலயே கூவீட்டாண்டா கொய்யால” மொமெண்ட்
  17. மிகவும் தேவையானதும் துணிச்சலுமான பேச்சு. பங்குபற்றிய சகல மாணவர்களுக்கும் பாராட்டுக்கள்.
  18. இவர்களைதான் @பகிடி முள்ளம்பண்டி தலையனுகள் என்றார்🤣. ஆனா எல்லாருக்கு மேல வெளிச்சிட்டு, தாடியில்தான் உரோமம் இருக்குது….. முழுவதும் கஞ்சா கூட்டம். எத்தனை சிங்கள இனபடுகொலையாளிகள் தமிழர் வாழும் பிரதேசத்திலே வந்து நடந்து திரிகிறார்கள். இந்த பேடிகளில் ஒருவர் கூட அவர்களை ஒரு வார்த்தை கேட்பாரா? யாரோ ஒரு பெண்ணுடனும், வயசான இருவரிடமும் வீரத்தை காட்டும் பேடிகள். இந்திய தமிழில் சொன்னால் - பொ***ட பசங்க 🤣.
  19. இந்த ஈரோடு தேர்தல் செய்தி பார்த்த போது தான் தெரிந்தது இந்தியாவில் டெல்லியிலும் சட்டசபை தேர்தல் நடந்துள்ளதுஅங்கே முன்பு வெற்றிபெற்றிருந்த ஆளும்கட்சி தோல்வி அடைந்து பாஜக வெற்றி பெற்றுள்ளது தோல்வி அடைந்த கட்சி நாங்கள் மக்கள் தீர்ப்பை ஏற்று கொள்கின்றோம் என்று சொல்லி பாஜகவுக்கு வாழ்த்தும் சொல்லியுள்ளது.இங்கே வெளிநாட்டு ஈழதமிழர்கள் சீமான் கட்சி படுதோல்வி அடைந்து கட்டுபணத்தை இழக்கும் போது எல்லாம் சீமான் கட்சி வெற்றி பெறுகின்றது மக்கள் ஆதரவு அதிகரிக்கின்றது என்று ஆரவாரம் செய்கின்றனர். சீமான் ஆதராளர்கள் சோர்வடைந்து விடுவார்களோ என்ற கவலையில் யாழ்கள உறவு ஒருவர் அவர்களை உற்சாகபடுத்துவது அழகாக உள்ளது 😂
  20. யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கும், கொழும்பு இந்துக் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே நடந்த விவாதம் அது. விவாதத்தின் தலைப்பு: “ஈழமணித்திருநாட்டிலே தமிழ் மக்கள் எதிர் நோக்கும் அன்றாட இடர்களுக்கு பெரிதும் காரணமாக இருப்பவர்கள் அரச ஊழியர்களா அல்லது அரசியல்வாதிகளா?” என்பதாகும் யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள்…. அரச ஊழியர்கள் என்றும், கொழும்பு இந்துக் கல்லூரி மாணவர்கள்…. அரசியல்வாதிகள் என்றும் வாதாடினார்கள். ஆக… அரச ஊழியர்களையும், தமிழ் அரசியல்வாதிகளையும் மாணவர்கள் கிழித்து தொங்க விட்டுள்ளார்கள். 😂 இணைப்பிற்கு நன்றி, @ஈழப்பிரியன் 👍🏽
  21. திமுக கூட்டனிக்கட்சியில் உள்ள எந்த ஓரு கட்சிக்கும் தங்களுடைய வாக்கு வீதம் சரியாகத் தெரியாது . அப்படித் தெரிந்து கொள்ள அவர்கள் விரும்புவதும் இல்லை.தெரிந்து கொள்ள வேண்டுமானால் தனித்து தேர்தலில் நிற்க வேண்டும்.. அப்படி ஒரு விசப் பரீட்சைக்கு அவர்கள் தயாரில்லை.இன்றைய நிலையில் சீமானை; கூட்டணிக்குப் போனால்இந்த உதிரிகள் காணமல் போவார்கள். அவர்களைக் கழட்டி விட திமுக தயங்காது.திமுக கூட்டணி என்று வரும் போது தன்னைத் திட்டியவர்கள் என்று கணக்கில் எடுக்காது. வைகோ திட்டாத திட்டா?அவர்களுக்குப் பதவியும் அதனால் வரும் ஊழல்பணமுமே பிரதானம்.இன்யைற திமுக வின்9 அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து வந்தவர்கள்தான். தன்ளைன நிருபிக்க சீமான் தொடர்ந்து தனித்து நிற்கிறார். மாற்றம் ஒன்றே மாறாதது . இலங்கையில் எத்தனை தடவைகள் தோற்றும் ஜேவிபி தொடர்ந்தும் தேர்தல்களில் ங்கு பற்றி வந்தது. இன்று ஆட்சியைப் பிடித்துள்ளது.ஆகையால் தொடர்து தேர்தல்களில் பங்குபற்றுவது அந்தக்கட்சிக்கு வளர்சிதான். தேர்தலுக்கு தேர்தல் அவர்கள் வாக்குகக்கு பணம் கொடுக்காமல் வளர்ச்சியைக் காட்டிக் கொண்டே யிருக்கிறார்கள். இந்த சங்கி றோவின் ஏஜன்ட் என்பதெல்லாம் ஆதாரமில்லாத கற்பனாவதாக் கருத்துகள்.அப்படி றோவின் ஏஜன்ட. முகவராக இருந்தால் உண்மை ஒருநாள் வெளிபட்டே தீரும். அப்போது அதனைப் பார்த்துக் கொள்ளலாம். எங்களுக்குத் தேவை தமிழ்த்தேசியத்தின் இருப்பு அதனைச் சீமான் உறுதியாக வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறார். இல்லாத திராவிட மாயை உடைக்கப்படும் போது தமிழ்த் தேசியத்தின் எழுச்சி பேரெழுச்சியாக இருக்கும்.
  22. நீண்ட கால நோக்கில் பார்த்தால் - தமிழ் கிறிஸ்தவம், தமிழ்-இந்துவை விட தொன்மையானது தமிழ்-பெளத்தம். இந்துவோ, பெளத்தமோ, கிறிஸ்தவமோ எம் அடையாளங்கள் இல்லை. தமிழ் மொழியும், எம் மொழி சார்-இனப் பண்பாடுமே நாம் தொலைக்க கூடாதன. எப்படியோ விகாரை இடிக்கப்படாது. ஆகவே நாம்…. 1. அதை பெளத்த சிங்கள விகாரையாக இருக்க சம்மதிக்கிறோமா 2. அல்லது இதில் உள்ளூர் மக்கள் பங்கு வேணும், உள்ளூர் மொழியில் பிரார்தனை வேணும் என கூறி - விகாரையை தமிழ் படுத்த முயல்வோமா? இதை சிங்கள் ஒத்துகொள்ளுமா தெரியாது ஆனால் தெற்கில் இது நியாயமான கோரிக்கை போல பலருக்கு தெரியலாம். மிச்ச ஆறு நாளும் லுலு லு லா…🤣 மாற்று கருத்தில்லை. இவர்கள் நிச்சயம் எதிர்பார்கள். ஆனால் ஈரச்சாக்கு அனுரவால் இந்த கோரிக்கையை இலகுவில் புறம்தள்ள முடியாது. எதிராளி ஈரச்சாக்கோடு வந்தால் - நாம் அதை விட ஈரமான சாக்கை எடுக்க வேண்டும்.
  23. இதைத் தான் வைத்தியரும் சொல்லிக் கொண்டு இருக்கிறார் தாத்தா;.நான் வைத்தியருக்காக எழுதவில்லை.எனக்கு அது தேவையும் இல்லை..ஆனால் ஒன்றை உருவாக்கும் போது அதில் விருப்பம் இல்லை என்றால் உடனயே தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருக்கலாம்.அப்போது இந்த மக்கள், எம்பி மார் எங்கே போயிருந்தார்கள்.விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளருக்கு அதற்குரிய பெறுமதியை குடுத்து விட்டு விகாரையை அப்படியே விட்டால், மற்ற ஆலயங்களுக்கு போய் வருவது போல் விகாரைக்கும் போய் வருவோம் என்றெல்லாம் ஊரில் உள்ள சிலர் எழுதுகிறார்கள்..
  24. தேர்தலே இல்லாத தேர்தலில்தான் இத்தனை வருசமா, இத்தனை தேர்தல்களாக முக்கி முக்கி நாதக போட்டியிட்டு கட்டுகாசை இழக்கிறதா? Doing the same thing again and again and expecting a different result is the definition of insanity. தாம் வெல்லவே முடியாத தேர்தல்…இது தேர்தலே அல்ல என தெரிந்தும்…அத்தனை தொகுதியிலும் அத்தனை தேர்தலிலும் ஏன் போட்டி? சீமானுக்கு insanity யா?
  25. அந்த வீடியோவை நீங்கள் பார்தீர்களா? நான் பார்த்தேன். தமிழ் நாட்டி உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு என்ன நடந்தது, ஏன் இது விசாரணையாகவில்லை என கேட்டறிந்தேன். இதன் அடிப்படையில்தான் இந்த கருத்து அமைந்தது. அந்த வீடியோ இப்போதும் டிவிட்டரில் இருக்கலாம் தேடிப்பாருங்கள். வீடியோ எடுக்கப்படும் கோணம், அந்த சிறுமி அந்த நாதக காமுகனுக்கு எதிராக போராடுவது அது நிச்சயமாக சிறுமிக்கு தெரிந்து எடுக்கப்ப்ட்ட வீடியோ இல்லை என்பதை உணர்த்தும். உங்களிடம் ஒரு கேள்வி…. இதுவரைகாலமும் மெளனவிரதம் இருந்த உங்களுக்கு இந்த செய்தியில் அந்த பகுதியை மேற்கோள் காட்டி முட்டு கொடுக்க மெளனவிரத்தை உடைக்கவேண்டி வந்ததே. அதை கவனித்த நீங்கள் கீழ்கண்ட மேற்கோளை கவனிக்கவில்லையா? அல்லது நா த க உறுப்பினர் என்பதால் ஒரு சிறுமியை விருப்பம் இல்லாமல் பாலியல் தொந்தரவு செய்தாலும் அது உங்களுக்கு ஏற்புடையதா? உங்களுக்கு லைக் போட்ட யாழில் இப்போ அதிகம் எழுதாத மற்றொருவரும் கேள்விக்கு பதில் கூறலாம்.
  26. இது 90 s kids சோட காலண்டர் . .........! 😂
  27. தொடருங்கள் ரசோதரன்…! இன்று தான் கதையைக் கண்டேன்! எனது இளமையை மீண்டும் தரிசிக்க முடிந்த்து! கனவு காணும் காலங்களில் நினைவுகள் தானே வாழ்வை வளமாகுகின்றன…!
  28. பாக்கு நீரிணைக்கு ஒருபுறம் ஒராள் பாக்கு நீரிணைக்கு மறுபுறம் ஒராள் என ஒரு சமநிலை பேணப்படுகிறது.😁
  29. தலைப்பை பார்த்ததும், இதையே கமெண்டாக போட வந்தேன், நீங்களே போட்டு விட்டீர்கள்😃 அண்ணாமாலை தன் சக சங்கி சைமனுக்கு ஆதரவாக ஆதாரமெல்லாம் வெளியிடுகிறேன் என்றார், ஆனால் வழக்கம் போல் அவரும் வாய்ச்சொல் வீரராகவே இருக்கிறார்.
  30. ஒரு கதை . ஒரு பெரிய மலையின் அடிவாரத்தில் நிறைய விலங்குகள் வாழ்ந்து வந்தன. அதில் சுமத்திரன் என்ற நரி ஒன்று இருந்தது. ஒரு நாள் அந்த நரி இரை தேடி அலைந்து கொண்டிருந்தபோது இறந்து கிடந்த ஒரு யானையின் உடலை பார்த்தது. அதைப் பார்த்ததும் சுமத்திரன் என்ற நரி தலைகால் புரியவில்லை இன்று வசமாக நமக்கு தீனி கிடைத்து விட்டது என்று அந்த யானையை சுற்றி சுற்றி வந்தது. ஆனால் அந்த சுமத்திரன் என்ற நரிக்கு யானையின் தோலை எப்படி உரிப்பது என்று தெரிய வில்லை அதன் கைகளிலும் கால்களிலும் அந்த அளவிற்கு நகங்கள் இல்லை என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தது. யாராவது இந்த வழியில் வந்தால் தந்திரமாக பேசி அவர்களை உதவிக்கு அழைக்கலாம் என்று நினைத்தது. அப்போது அந்த வழியில் ஒரு சிங்கம் வந்தது. சிங்கத்தைப் பார்த்ததும் அந்த சுமத்திரன் என்ற நரிக்கு ஒரு பயம். யானையை சிங்கம் தின்று விடுமோ என்று நினைத்தது. சிங்கம் அருகில் வந்ததும் சுமத்திரன் நரி அந்த சிங்கத்திடம் வாங்கண்ணே எந்த பக்கம் வந்து இருக்கிறீர்கள் என்ற சொல்லி ஒரு வணக்கத்தை வைத்தது. அந்த சிங்கத்திற்கு ஒன்றும் புரியவில்லை எதற்காக இது நமக்கு வணக்கம் வைக்கிறது நீ யார் என்று கேட்டது. அதற்கு அந்த நரி அண்ணே நீங்கள் தானே இந்த யானையை வேட்டையாடி இங்கு வைத் திருக்கிறீர்கள் அதை நான் பாதுகாத்துக் கொண்டு இருக்கிறேன் என்று சொன்னது. அதற்கு அந்த சிங்கம் இதை நான் அடித்துக் கொல்லவில்லை அதுவாய் இறந்திருக்கலாம் அல்லது வேற யாராவது கொன்றிருக்கலாம். இப்போதைக்கு எனக்கு இதன் இறைச்சி வேண்டாம் என்று அது புறப்பட்டது. நல்ல வேலை சிங்கம் போய்விட்டது என்று நரி பெரும் மூச்சுவிட்டுக் கொண் டிருந்தத வேலையில் அந்தப் பக்கம் ஒரு புலி வந்தது. அந்த புலி சுமத்திர நரியை பார்த்து ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறாய் என்று கேட்டது. அதற்கு அந்த நரி சிங்கம் இந்த யானையை வேட்டையாடி இங்கு வைத்துள்ளது. என்னை காவலுக்கு இருக்க சொல்லிவிட்டு போய் இருக்கிறது என்று பொய் சொன்னது. இதைக் கேட்ட தும் புலி நமக்கு எதற்கு வம்பு நாம் செ ன்று விடுவோம் என்று திரும்பிச் சென்றது. அதன் பின் அந்த வழியாக ஒரு குரங்கு வந்தது. அந்தக் குரங்கு நண்பா ஏன் இங்கே நிற்கிறாய் என்று கேட்டது. நரிக்கு ஒரு யோசனை வந்தது குரங்கு சைவம் தானே அசைவம் சாப்பிடாதல்லவா அதனால் இதனிடம் உதவி கேட்கலாம் என்று நினைத்தது. குரங்கைப் பார்த்து நண்பா உன்னை பார்க்கவே முடியவில்லை என்று கேட்டது. அதற்கு குரங்கு இப்போது என்னை பார்த்து விட்டாய் அல்லவா என்னவென்று சொல் என்றது. சுமத்திர நரி குரங்கிடம் ஒரு சிங்கம் இந்த யானையை வேட்டையாடி என்னை பாதுகாப்பிற்காக இங்கு இருக்கச் சொல்லிவிட்டு போயிருக்கிறது அது வருவதற்குள் நானும் இந்த யானையின் இறைச்சியை ருசி பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்னால் இதன் தோலை உரிப்பதற்கு என் கை கால்களில் வலு கிடையாது என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கிறேன் நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் உன் கை கால்களில் நகம் நன்றாக உள்ளது எனவே இந்த யானையின் தோலை உரித்து தருவாயா என்று கேட்டது. குரங்கும் சரி என்று செ ால்லி யானையின் தோல்களை நன்றாக உரித்து இதை நீ சாப்பிடு நான் சென்று வருகிறேன் என்று குரங்கு புறப்பட்டது. உடனே இந்த சுமத்திர நரி சந்தோசத்தில் யானையின் இறைச்சியை உண்ண ஆரம்பித்தது. அந்த நரி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சற்று தூரத் தில் நரியின் இனங்கள் எல்லாம் வந்து கொண்டிருந்தது அதைப் பார்த்ததும் இந்த சுமத்திர நரிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் குடுகுடுவென்று அந்த நரிகளை பார்த்து ஓடியது. இந்த நரி ஓடி வருவதை பார்த்து அங்கு வந்து கொண்டிருந்த நரிகள் எல்லாம் அப்படியே நின்று விட்டது. ஏன் இப்படி ஓடி வருகிறாய் என்று கேட்டது. அதற்கு இந்த சுமத்திர நரிஅங்கு செல்ல வேண்டாம் அங்கு நிறைய சிங்கங்கள் ஒரு யானையை அடித்து சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது நாம் அங்கு சென்றால் நம்மளையும் கொன்று விடும் நானே தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்து விட்டேன் வாருங்கள் ஓடிவிடலாம் என்று மற்ற நரிகளை எல்லாம் திருப்பி அனுப்பி விட்டது. சிறிது தூரம் இந்த சுமத்திர நரியும் ஓடுவது போல் ஓடி பாதியிலேயே ஒரு புதருக்குள் ஒளிந்து கொண்டது. எல்லா நரியும் சென்ற பிறகு இந்த சுமத்திர நரி மட்டும் அந்த யானையின் அருகில் வந்து அதன் இறைச்சியை அளவுக்கு மீறி தின்றது. தின்று முடித்தவுடன் நரியால் கொஞ்சம் கூட அங்கும் இங்கும் நகர முடியவில்லை. அதற்கு தலை சுற்றியது மயக்கம் வருவது போல் இருந்தது உதவிக்கு கூட அருகில் யாரும் இல்லை என்ன செய்வதென்று தெரியாமல் அங்கேயே மயங்கி விழுந்தது. அப்போதுதான் உணர்ந்தது நம் இனம் நம்மோடு இருந்திருந்தால் இப்போது நமக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது நம்மளை காப்பாற்றி இருப்பார்கள் தவறு செய்து விட்டோம் என்று வருந்தியது. வருந்தி என்ன பலன் சிங்களவர்களுடன் வாழ்வதே தனது சந்தோசம் என்றதே அந்த சுமத்திரன் நரி .
  31. உங்கள் கதை மழையில் தொடர்ந்தும் நனைகின்றோம்…! தொடருங்கள்…
  32. வெளிநாடு வந்த ஆரம்பத்தில் ஒரு வழி பாதையில் தவறுதலாக காரினை திருப்பி விட்டேன் அந்த பாதையில் எவருமில்லாத நிலையில் வெறும் 50 மீட்டர் தூரத்தில் பிரதான வீதியிருந்தது, அதில் போய் திரும்பிவிடலம் என இருந்தேன் அது குறுகலான பாதை என்பதால் 3 முனை திருப்பமும் கடினமாக இருக்கும் என்பதால், பாதி தூரம் போகுமுன்னர் எனது எதிரில் கார் வந்துவிட்டது. தெரியாமல் படித்தவர்களின் திரிக்குள் நுழைந்துவிட்டேன்.😁
  33. கதை அமைப்பு நன்றாக இருக்கிறது,
  34. உதிக்கும் போதும் மறையும் போதும் தனி அழகு.
  35. உண்மை தான் . 😀 எனக்கும் இது தெரிந்து கொள்ள ஆசை நானும் தமிழடியான் காணெளிகளை இப்போது பார்ப்பது இல்லை யாரும் அனுப்புவது இல்லை.முன்பு அவர் அநுரகுமார திசாநாயக்கவையும் புகழ்வார் அருச்சுனாவையும் புகழ்வார்.
  36. தம் ஆரசியல் இலாபத்திற்காக ஏதோ ஒரு வழிகளில் தம் போர்வெற்றியை ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.
  37. சுகமான கற்பனை , சுவையாக உள்ளது . .......! 😇
  38. பாரீஸ் நகரில்...ரயில் நிலையம் அருகில் ஒருமுறை ஒரு பயங்கர வெடிகுண்டு சம்பவம் நடந்த்து..... தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரும் தப்பித்தனர்.... ஆனால் அவர்களுடன்....இந்த செயலுக்கு மிகவும் உறுதுணையாக இருந்த ஒரு பயிற்சி...நாய் மட்டும் போலீசார் வசம் சிக்கி கொண்டது... ஆனால் அந்த நாயை வைத்துக்கொண்டு போலீசாரால் துப்புத்துலக்க முடியவில்லை.... காரணம் அது எந்த முறையில்....எந்த மொழியில் பயிற்சி கொடுக்கப்பட்டது என்ற விபரம் அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.....! (உதாரணத்திற்க்கு..... தமிழ் வீட்டில் வளரும் நாய் உட்கார் என்றால் உட்கார்ந்து கொள்ளுமாம்....இதைப்போல...) எப்படியாவது இந்த நாயை வைத்தே குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டறிந்து...அவர்களை கைது செய்ய முடிவெடுத்தனர் எல்லாரும் முயற்சி செய்து ஒரு வழியாக...ஒரு பன்மொழி கலைஞரை அழைத்தனர்.....அவருக்கு...60மொழிகள் வரை அத்துப்படி...... அவர் ஒரு புரஃபெஸரும் கூட... . அவரும் வந்து.... வித விதமான மொழிகளை பேசி முயற்சி செய்தும் பயன் இல்லை...அந்த நாயிக்கும் ஒன்றும் புரியவே இல்லை.... கடைசியில்.... பழம்பெரும் மொழிகளில் ஒன்றான ஹிப்ரு என்ற மொழியில்...அவர் பயிற்சியை துவக்கியதும் ...நாய்க்கு புரிய ஆரம்பித்தது.....உடன் அதை வைத்து குற்றவாளிகளின் இருப்பிடம் கண்டு....உடன் கைது செய்தது பாரீஸ் போலீஸ்...... அந்த புரஃபெஸருக்கு பாராட்டுக்கள் குவிந்தது..... அவருக்கு பாரீஸ் அரசாங்கம் ஏகப்பட்ட விருதுகளை அள்ளித்தர முடிவு செய்தது... பெரிய விருந்து ஒன்றையும் ஏற்பாடு செய்தது விருந்தில் அவரிடம் கேட்க்கப்பட்டது உங்களால் பாரீஸ் பெருமை அடைந்தது... ... உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள் வழங்கபடும் என்றனர்.... பணம் வேண்டுமா.....? விலை கூடிய கார்கள் வேண்டுமா..? மாளிகை வேண்டுமா....? அரசாங்க பணிகள் வேண்டுமா...? என்று... அவர் மறுத்துவிட்டார்... எனக்கு உதவியாக இருந்த அந்த...நாயை மட்டும் தயவு செய்து எனக்கு வழங்கிவிடுங்கள்...என்றார்... அதை கேட்டு அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சர்யம்.... சிலர் இவருக்கு பைத்தியம் என்றனர்.... ஒரு அதிகாரி கேட்டார்..... ஏன் அந்த நாயை வைத்து நீங்கள் என்ன செய்ய முடியும்..... என்று ஆச்சரியத்துடன் கேட்டார். ... அதற்க்கு அவர்...சொன்னார்.... இந்த நாயை என் வீட்டிற்க்கு கொண்டு போய்....என் மனைவி முன் நிறுத்தவேண்டும்..... ஏன் என்றால் நான் கஷ்டப்பட்டு இந்த பல மொழிகள் படிக்க முயலும்போதெல்லாம்.... அவள் சொல்வாள்... . ""எந்த நாய் கேட்க்க போகுதுன்னு... இதையெல்லாம் படிக்கிறீங்கன்னு..".".. அதுக்காக தான் இதை கொண்டுபோகணும்னுசொன்னவுடன் அரங்கம் சிரிப்பொலியில் நிறைந்தது..
  39. மகாவம்சத்தையே.... பலமுறை திருத்தி எழுதும் இனத்திடம், உண்மை சொல்வார்கள் என... எதிர் பார்ப்பதும் வீண் வேலை தான். 🙂
  40. இது என்ன... புது புரளியாய் இருக்கு. மேற்குலக நாடுகள்தானே... ஸ்ரீலங்காவிற்கு ஆயுதங்களும், போர்ப் பயிற்சிகளும், ஏன் பலமுறை நேரடியாகவே களத்தில் நின்று இராணுவத்திற்கு உதவி புரிந்தன. மகிந்தவால்... இந்திய, மேற்குலக நாடுகளின் உதவி இல்லாவிடில், புலிகளை வெற்றி கொண்டிருக்க முடியுமா? அரசியல்வாதிகள் எப்போதும் பொய், பிரட்டுக்களை அவிழ்த்து விட்டு, சுய இன்பம் காண்பதில் கில்லாடிகள்.
  41. இன்று யூ டியுப்பர்கள் பலர் பல்கிப் பெருகி இருந்தாலும் ஒரு சிலரின் நல்லதோ, கெட்டதோ வார்த்தைகளைத் தெளிவாகக் கேட்க முடிகிறது. அதில் தமிழ் அடியானும் ஒருவர். அதற்காக எனக்குச் செவிடன் என்று பட்டம் சூட்ட எவரும் முயலவேண்டாம். அதை என் மனைவி எனக்கு ஏற்கெனவே தந்துவிட்டார்.😁
  42. பாட்டல் ராதா: விமர்சனம்! Jan 26, 2025 மதுப்பிரியர்களின் மனதை அசைத்தால் நன்று! ’இருபது வருஷத்துக்கு முன்னால இவ்வளவு பேர் குடிச்சாங்களான்னு தெரியலை’, ‘முப்பது வருஷத்துக்கு முன்னால இவ்ளோ கடைகள் கிடையாது தெரியுமா’, ‘நாப்பது வருஷத்துக்கு முன்னால எல்லாம் குடிக்கறவனை கேவலமாதான் நினைப்பாங்க’, ‘பொடி போடுறது, போயிலை போடுறதையே மோசமான பழக்கங்களா நினைச்ச காலம் ஒண்ணு உண்டு’. கடந்த நூற்றாண்டின் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் இப்படிப் போதை குறித்த கருத்துகள் மாறி வந்திருப்பதைக் காண முடியும். Bottle Radha Movie Review ‘மது குடிக்காதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம்’ என்கிற நிலையை இன்று அது அடைந்திருக்கிறது. இந்தச் சூழலில், குடியின் தீமைகளை விளக்குவதாகத் திரைப்படமொன்றை உருவாக்கினால் எடுபடுமா? இந்தக் கேள்விக்கு, ‘அது எத்தனை பேரைச் சென்றடையும் என்பதை விட, எத்தனை பேருக்கு அது தேவை என்பதே முக்கியமானது’ என்று பதிலளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது ‘பாட்டல் ராதா’ திரைப்படம். பா.ரஞ்சித் தயாரிப்பில், தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கிற இப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், லொள்ளு சபா மாறன், ஆண்டனி, பாரி இளவழகன், கருண பிரசாத், மாலதி அசோக் நவீன், சுஹாசினி சஞ்சீவ், சேகர் நாராயணன் உட்படப் பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இதற்கு இசையமைத்திருக்கிறார். சரி, இப்படம் சுவாரஸ்யமான கதை சொல்லலைக் கொண்டிருக்கிறதா? பாட்டலும் கையுமாய்..! ’மதுவில் ஊறிய வாழ்க்கை’ எனும்படியாக, ஒரு நாளின் பெரும்பொழுதுகளைப் போதையின் துணையோடு கடக்கிற மனிதன் ராதாமணி (குரு சோமசுந்தரம்). சென்னை ஆவடி அருகேயுள்ள ஒரு சிற்றூரில் வாழ்கிறார். மனைவி அஞ்சலம் (சஞ்சனா நடராஜன்), ஒரு மகன், ஒரு மகள் என்று மூன்று பேர் அவரை நம்பி வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அது பற்றிய நினைவுகளை மறக்கிற அளவுக்குத் தினமும் மதுவில் திளைக்கிறார் ராதா. சுருக்கமாகச் சொன்னால் எந்நேரமும் ‘பாட்டலும் கையுமாய்’ திரிகிறார். ‘பாட்டல்’ என்று அக்கம்பக்கத்தினரால் அழைக்கப்படும் அளவுக்கு அவரது நிலை மாறுகிறது. அதனால், உடன் பிறந்த சகோதரரின் (ஆண்டனி) மேற்பார்வையில் நடந்துவரும் கட்டடப் பணியில் அவரால் ஒழுங்காகப் பங்கேற்க முடிவதில்லை. இத்தனைக்கும் ’டைல்ஸ் பதிப்பதில் ராதாவைப் போல் யாருமில்லை’ என்ற பெயர் அந்த வட்டாரத்தில் அவருக்குண்டு. வேலையில் ஒழுங்காக ஈடுபடுவதில்லை. மேஸ்திரியாக இருக்கும் சகோதரனின் மச்சான் உடன் ‘ஈகோ’ மோதல். பணி நடக்குமிடத்தில் இருக்கும் பொருட்களைத் திருடி விற்றுக் குடிக்கிற அளவுக்குப் போதை மீதான ஈர்ப்பு. இப்படிப் பல குற்றச்சாட்டுகளைக் குடும்பத்தினரிடம் மட்டுமல்லாமல் தெருவில் வசிப்பவர்கள், சுற்றத்தினரிடமும் பெற்று, பல அனாவசியச் சண்டைகளுக்குக் காரணமாகிறார் ராதா. ஒருநாள் காவல்நிலையம் வரை பிரச்சனை செல்ல, ’ஸ்டோர் ரூம்மை க்ளீன் பண்ணச் சொல்லுங்க’ என்கிறார் இன்ஸ்பெக்டர். அப்போது, சோதனையில் கைப்பற்றப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பிரித்துக் குடித்துவிடுகிறார் ராதா. அப்புறமென்ன, அடுத்த சில மணி நேரத்தில் அங்கிருப்பவர்களின் அனைத்து அர்ச்சனைகளையும் ஏந்திக் கொள்கிறார் அஞ்சலம். ’இந்த மனுஷன் குடியை நிறுத்த மாட்டாரா’ எனும் பல்லாண்டு கால விருப்பம் ஆதங்கமாகி ஆத்திரமாக மாறும் நிலையை எட்டுகிறது. அது, பாட்டல் ராதாவை ஒரு போதை மறுவாழ்வு மையத்திற்குக் கொண்டுபோய்விடும் அளவுக்குச் செல்கிறது. புத்தா போதை மறுவாழ்வு மையத்தை நடத்தி வரும் அசோகன் (ஜான் விஜய்), அங்கு வரும் ஒவ்வொருவரையும் மது நோயாளியாக நடத்துகிறார். அவர்கள் மனம் மாறி, மது போதையை நாடாமல் குடும்பத்தோடு நல்வாழ்வு வாழ வேண்டுமென்று சில காரியங்களைச் செய்கிறார். ஆனால், அந்த இடமே பாட்டல் ராதாவுக்கு நரகமாகத் தெரிகிறது. அதன்பிறகு அவர் என்ன செய்தார்? மது போதையைக் கைவிடத் துணிந்தாரா? தனது குடும்பத்தோடு மகிழ்ச்சிகரமாக வாழ்ந்தாரா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி. இந்த திரைப்படத்தைக் காண மேற்சொன்ன விளக்கமே போதுமானது. பின்வரும் கருத்துகள் ‘ஸ்பாய்லர் ரகம்’ என்பதால், ‘அது தேவையில்லையே’ என்பவர்கள் இதோடு நிறுத்திக் கொள்ளலாம். தேவையான கருத்து! மதுவே கதி என்றிருக்கும்போதும், அதன் வாசனை கூட இல்லாமல் போதை மறுவாழ்வு மையத்தில் அடைக்கப்பட்டிருக்கும்போதும், மது குறித்த நினைவுகளைக் கைவிட முடியாமல் தன்னைத்தானே நொந்துகொள்ளும்போதும், மீண்டும் மதுவை நாடிச் செல்லும்போதும், தனது உடல்மொழியில் நாயகன் குரு சோமசுந்தரம் காட்டுகிற வேறுபாடுகள் ‘அடிபொலி’ ரகம். ’ஃபேஜ் 3’யில் வரும் அளவிலான பார்ட்டி கொண்டாட்ட வாழ்க்கைமுறையைத் திரையில் பிரதிபலிக்கிறவராய் வந்த சஞ்சனா, இதில் சமூகத்தின் அடித்தட்டில் வாழ்கிற ஒரு பெண்ணாகத் தோன்றியிருக்கிறார். படம் முழுக்க வெளிப்படுத்தியிருக்கிற பாவனைகளின் ஒரு துளியாக, இதன் கிளைமேக்ஸ் ஷாட்டில் அமைந்திருக்கிறது அவரது நடிப்பு. பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் மட்டுமல்லாமல் அவர் தயாரிக்கும் படங்களிலும் நல்ல பாத்திரங்களை ஏற்று வருகிறார் ஜான் விஜய். இதிலும் அவருக்கு ஒரு வித்தியாசமான பாத்திரம். குரு சோமசுந்தரத்தின் சகோதரராக வரும் ஆண்டனி, சகோதரியாக வரும் சுஹாசினி சஞ்சீவ், போதை மறுவாழ்வு மையத்தில் காட்டப்படும் லொள்ளுசபா மாறன், அபி ராமையா, மாலதி அசோக் நவீன், கருணபிரசாத், சேகர் நாராயணன் என்று இப்படத்தில் ஒவ்வொருவரும் பல கலைஞர்கள் நம்மை வசீகரிக்கின்றனர். பாகுபலி எனும் பாத்திரத்தில் வருபவரையும் இப்பட்டியலில் சேர்த்தாக வேண்டும். ‘ஜமா’ படத்தின் நாயகனும் இயக்குனருமான பாரி இளவழகன், இப்படத்தில் நாயகனின் மது போதை நண்பர்களில் ஒருவராக வருகிறார். இது போன்று இப்படத்தில் பாராட்டுக்குரிய விஷயங்கள் பல இருக்கின்றன. இப்படத்தின் ‘காஸ்ட்டிங்க்’கை கவனமாகத் தேர்ந்தெடுத்து ஆக்கியது போன்று இதர தொழில்நுட்பங்களிலும் பெருங்கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. ’தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்’ எனும் ‘சிந்துபைரவி’ பாடல் பின்னணியில் ஒலிக்க, ஆவடி பகுதியைப் பறவைப் பார்வையில் காண்பிக்கும் ஷாட்டில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது. அது, ’பெரும்பாலான சமூகம் மதுவில் ஆழ்ந்திருப்பதாகச் சொல்கிறதோ’ என்று எண்ண வைக்கிறது. ஒளிப்பதிவைப் பொறுத்தவரை, ரூபேஷ் ஷாஜியின் கேமிரா சந்துபொந்துகளிலெல்லாம் பயணித்திருக்கிறது. ‘கேமிரா வைக்கிற அளவுக்கு க்ளீனா இல்லையே’ என்று தயங்குகிற இடங்களிலும் படம்பிடித்திருப்பது, திரைக்கதையோடு பார்வையாளரை ஒன்ற வைக்கிற உத்திகளில் ஒன்று. ராஜராஜின் கலை வடிவமைப்புக்கு அதில் பெரிய பங்குண்டு. ட்ரெய்லரில் அவரது பெயர் ஏன் குறிப்பிடப்படவில்லை என்பது படக்குழுவினருக்கே வெளிச்சம். சங்கத்தமிழனின் படத்தொகுப்பானது, தரையில் சிந்திய மது மண்ணில் ஊறித் தனது எல்லையை விரிப்பது போன்று திரையில் கதை சொல்ல உதவியிருக்கிறது. காட்சி எந்த இடத்தில் முடிகிறது, தொடங்குகிறது என்று உணர்வதற்கு வழி இல்லாமல் செய்திருக்கிறது. இப்படியொரு படத்தில் ஒலி வடிவமைப்புக்குப் பெரும் பங்கு இருக்க வேண்டும். சுரேன் – அழகியகூத்தன் கூட்டணியானது வசனம், இசை, பின்னணி ஒலிகள் இடம்பெறுகிற விகிதத்தைச் செம்மையாக அமைத்திருக்கிறது. இது போக ஒப்பனை, ஆடை வடிவமைப்பு உட்படச் சில நுட்பங்கள் சிலாகிக்கிற அளவில் இருக்கின்றன. இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், இப்படத்தில் தனது பங்கு என்ன என்று உணர்ந்து செயலாற்றி இருக்கிறார். ’என் வானம் நீ’ எளிதாக மனதோடு ஒட்டிக்கொள்ளும் மெலடி; ஆனால், அது ‘கபாலி’யில் வரும் ‘மாயநதி’யை நினைவூட்டுகிறது. ’யோவ் பாட்டிலு’ பாடல் ஒரு அக்மார்க் ‘டாஸ்மாக் பார்’ பாடல். ’நா குடிகாரன் நானா குடிகாரன்’, ‘தண்ணியில கிறுக்கு’, ’கண்களின் ஈரம்’ பாடல்களும் சட்டென்று ஈர்க்கும் ரகத்தில் இருக்கின்றன. வாழ்வில் தீராத சோகத்தைக் காட்டுவதிலும், ‘விடியல் வராதா’ என்ற ஏக்கத்தைச் சொல்வதிலும், நடித்தவர்களின் பங்களிப்பை அடிக்கோடிட்டிருக்கிறது ஷான் ரோல்டனின் பின்னணி இசை. ஒரு திரைப்படமாக இக்கதையை ஆக்க, பலரது உழைப்பை ஒருங்கிணைக்க, இயக்குனர் தினகரன் சிவலிங்கம் கடுமையான உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டிருப்பார். அனைத்தும் நிறைவுற்றபிறகும் கூட அவர் இதன் வெளியீட்டிற்காகக் காத்திருந்திருக்கிறார். இப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதியே தணிக்கைச் சான்றிதழ் பெற்றிருப்பது அதனை உணர்த்துகிறது. ‘மதுபானக்கூடம்’ உட்படச் சில படங்கள் மதுவின் தீமையை உணர்த்துகிற வகையில் தமிழில் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன. ஏன், அறுபதுகளில் கூட சிவாஜி அத்தகைய மதுப்பிரியராகத் திரையில் தோன்றி ‘மது மனிதனுக்குத் தேவையில்லை’ என்று உணர்த்தியிருக்கிறார். எம்ஜிஆரின் எத்தனையோ படங்கள் அதனை நீதியாகப் புகட்டியிருக்கின்றன. அந்த வரிசையில் இதனைச் சேர்க்கலாமா என்றால் ‘வேண்டாம்’ என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், ’தினமும் மதுவில் திளைக்கிற ஒருவர் இப்படத்தைப் பார்த்தால் மனம் திருந்திவிட மாட்டார்களா’ என்கிற ஆதங்கத்தை முன்வைக்கிறது ‘பாட்டல் ராதா’. அது நிகழுமா என்றால் ‘வாய்ப்பிருக்கிறது’ என்றே சொல்லத் தோன்றுகிறது. மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் ‘தீவண்டி’ என்றொரு படம் வந்தது. சிகரெட் பிடிப்பதைக் கைவிட முடியாமல் தவிக்கும் இளைஞனின் தகிப்பை அப்படம் சொன்னது. அதனைப் பார்க்கும் ஒருவர் சிகரெட் தனது கையைச் சுடுவதாக உணர்வார். அது போலவே, ‘மதுப்பிரியர்களின் மனதை அசைத்தால் நன்று’ என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டிருக்கிற இப்படம் மதுப்பிரியர்களால் வாடும் அவர்களது குடும்பத்தினர், சுற்றத்தினர், சமூகத்தின் ஏக்கக்குரலாக அமைந்துள்ளது. இந்தப் படம் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் தயாரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது விக்கிபீடியா. Bottle Radha Movie Review ’அதற்குப் பதிலாக மலையாளத்தில் தயாரித்து தமிழில் டப் செய்திருந்தால் அதிக வரவேற்பு கிடைத்திருக்கும்’ என்று சொல்கிற நிலை ஏற்படாத அளவுக்கு நல்லதொரு வெற்றியை ’பாட்டல் ராதா’ திரைப்படம் பெற வேண்டும். அதற்கேற்ற உள்ளடக்கம் இதில் உள்ளது என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். அதனால், இதில் இருக்கிற குறைகளைப் பிற்பாடு பேசிக் கொள்ளலாம்! https://minnambalam.com/cinema/bottle-radha-movie-review-in-tamil/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.