Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    19122
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    3054
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    38756
    Posts
  4. alvayan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    5417
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/22/25 in Posts

  1. ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம் என் ஆடுகளை வேலியால் எட்டிப்பார்த்த என்னருமைத் தோழனே…. எட்டிப்பார்க்கும் அவசரத்தில் நீ பலதை உன்னிப்பாக கவனிக்கவில்லை. கவனித்தாயா? அந்த ஆடுகளுக்கு குறி சுடப்படவில்லை. இந்த பட்டியில் இதற்கு முன் நின்ற அத்தனை ஆடுகளும் பல குறிகளை தாங்கித்தான் நின்றன - அந்த தாடிக்கார மேய்பனின் புத்தகத்தை படித்த பின் தான், குறிகள் ஏதும் என் ஆடுகளுக்கு இடப்படவே இல்லை. பார்த்தாயா? ஈசான மூலையில் கறுப்பும் பழுப்புமாய் நின்ற குட்டி ஆடு உன் காமாலை கண்ணுக்கு தெரியவில்லையா? அதன் அம்மா அப்பாவை நாந்தான் சேர்த்துவைத்தேன். எங்கள் ஆட்டு மந்தையில் அது ஒரு வரலாறு. பல சம்பவங்களின் பின் நடந்தேறியது. அங்கேயும் பட்டியின் பழைய கதவுகளை நெட்டித்திறக்க எனக்கு உதவியது அந்த கெட்டிக்கார கிழவனின், வளைந்த கைத்தடிதான். ஒ..தோழனே… அந்த மூலையில் ஒரு மறிக்குட்டி, கிடாய்கள் பலதை மேச்சல் தரை நோக்கி கூட்டி போனதை ஏன் நீ கண்ணுறவில்லை? உனக்குத்தெரியுமா தோழா? என் மறிக்குட்டிகள், உன்னை போல் ஓராயிரம் கிடாய்களே ஒரு நேர்கோட்டில், ஒத்தை ரோட்டில் கூட்டிச்செல்லவல்லன. இந்த ரோட்டும், நான் ஆரம்பித்ததில்லை நண்பா - ஈரோட்டில் ஆரம்பித்தது. என் காணியின் மூலையில் இருக்கும் வேலாயுத மேடை உன் கண்ணை உறுத்தியது என நினைக்கிறேன். புரிந்துகொள் நண்பா… யார் என்ன சொன்னாலும், நானே சொன்னாலும்… உன் புத்திக்கு சரி எனப்படுவதை மட்டுமே ஏற்று கொள் என்பதுதான் எங்கள் அரிவரிப்பாடம். நாங்கள் தனிமனிதனை தொழுபவர்கள் அல்ல தோழா, எவர் சொல்லுக்கும் நாம் கட்டுப்பட்டவர்களும் அல்ல. எம் புத்திக்கு புலப்படுவதையே செய்கிறோம்… நான் மட்டும் அல்ல, என் ஆடுகளும். பட்டியில் இருந்தாலும்….பட்டி நீங்கி பயணம் போனாலும். -கோஷான் சே-
  2. எட்டெடுத்து எட்டாத உயரத்தில் நிற்கின்றேன் ராசா... எட்டாக் கனி ஆகியிருந்ததை -இன்று எட்டிப் பிடித்திருக்கின்றேன்...இன்று ராசா நானே எல்லையில்லா மகிழ்ச்சியில் இந்த ராசா எனி எப்படிப் போனாலும் பரவாயில்லை எப்பவோ ஒருநாள் வைப்பேன் விருந்து.. எல்லோரும் ரெடியாகுங்கள் என்ன சாப்பாடு..மரக்கறிப் புரியாணிதான் ஏனெனில் நான் கனடியன்..
  3. நான்காவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி பென் டக்கெற்றின் 165 ஓட்டங்களுடன் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 351 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் ஜொஷ் இங்லிஸின் அதிரடியான 120 ஓட்டங்களின் உதவியுடன் 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழப்பிற்கு 356 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: அவுஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  4. பனி பொழிவதென்றால் இப்ப பொழிய ஆரம்பிக்க வேணும். ஆரம்பித்து விட்டதா? மகன் ஹோம்வேர்க் செய்யவில்லை என மனைவி டீவியை நூத்து போட்டா 😭.
  5. நடந்து கொண்டிருக்கும் விடயங்களை ஒவ்வொருவரும் அவரவர் பார்வையிலேயே ஊகித்துக் கொள்கின்றனர். என் பார்வை அவர்களுக்கு எதிர்காலம் கிடையாது என்று சொல்கின்றது ஏனென்றால் அதுவே தான் எனக்கு பிடித்த தெரிவு. நீங்கள் சொல்வது சரியாகவும் இருக்கலாம். 2026ம் ஆண்டில் எந்த வெற்றிடமும் இல்லை, எந்த அலையும் இல்லை, அந்த தேர்தல் ஒரு சரியான நிலவரத்தை காட்டும் என்று நினைக்கின்றேன். அதுவரை இப்படியே போய்க் கொண்டிருப்போம்..........👍.
  6. ஓயும் ஊசல் ------------------- என்னைக் கண்டவுடன் அது இப்ப எச்சரிக்கையாவதில்லை மெதுவாக தலையை உயர்த்தி நேராக என் கண்களை பார்க்கின்றது கனிவும் அமைதியும் அதன் கண்களில் காலம் கொடுத்து விட்டிருக்கின்றது தெருப்பூனை ஒன்றின் ஆயுளைத் தாண்டி இன்னும் அது தெருவில் வாழ்கின்றது மெதுவாக வந்து கொஞ்சமாக சாப்பிடுகின்றது 'நீ சாப்பிட்டாயா........... எல்லோரும் நலமா........' என்று உள்ளே மெதுவாக ஒரு தடவை எட்டிப் பார்க்கின்றது ஒரே எட்டில் முருங்கையில் ஏறி கூரைக்கு அது இப்போது பாய்ந்து போவதில்லை முருங்கையையும் கூரையையும் பார்த்து விட்டு நிலத்தில் நடந்து போகின்றது அது இப்ப எந்தப் பறவையையும் பிடிக்க பதுங்குவதும் இல்லை எங்கோ போய் ஓய்ந்து அன்றைய நாளை முடிக்கின்றது நாளை மீண்டும் வரும் அந்த ஒரு நேர பூனை உணவிற்கு பின்னர் ஒரு நாளில் இருந்து அது வரவே போவதில்லை அதன் இரண்டு விழிகளும் என்னை விட்டும் போகப் போவதில்லை என் நினைவு ஓயும் வரை.
  7. தாயே சாமுண்டேஸ்வரி நல்ல புத்திய கொடும்மா..
  8. ஒரு காலத்தில் எமது முன்னோர்கள் வயல்வெளிகளின் அருகாமையில் கோவில் கட்டி அதற்காக‌,குளங்களை வெட்டினார்கள்,கேணிகளை உருவாக்கினார்கள்..மன்னர்கள் ஆட்சியில் அல்லது வேளான்மை சமுகம் உருவான காலத்தில் இது ஒர் சமுக கட்டமைப்பு ..சகல கிராமங்களிலும் உள்ள பழைய கோவில்களில் இந்த டெம்பிளெட்டை அவதானிக்கலாம்.. இதற்கு பணம் எங்கிருந்து வந்திருக்கும்? ஊர்மக்கள் அல்லது மன்னர்கள் கொடுத்திருப்பார்கள் அநேகமாக பொதுமக்கள் பொதுநோக்குடன் கொடுத்த பணமாக த்தான் இருக்க வேண்டும் ...அந்த பணம் மக்களின் நலன் கருதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை . எமது கண் முன்னே குளங்கள்,கேணிகள்(மருதடி கேணி..காக்கா சுயா),கிணறுகள் இன்றும் சாட்சியாக இருக்கின்றது... இன்று புலம் பெயர் நாடுகளிலிருந்து கிடைக்கு பணம் போன்று அன்றைய காலத்தில் நிச்சயம் பணம் கிடைத்திருக்காது.இருந்தும் உள்ளூர் மக்கள் சொந்த வருமானத்தில் இப்படியான செயல்களை செய்து உள்ளனர் யாழ் மாவட்டம் ஆறுகள்,கங்கைகள்,அருவிகள் நிறைந்த மாவட்டம் அல்ல.... விவசாயத்திற்கு மழை நீரை பெரிதும் நம்பிருந்தார்கள்.மழையும் வருடத்தில் ஒர் குறிப்பிட்ட காலத்தில் தான் பெய்யும்..மழையும் சில நாட்களில் அடித்து பெய்யும் அந்த நீர் வீணாக கடலுக்கு சென்று கலந்து விடும்.இந்த நீரை சேமித்து விவசாயம் செய்யத்தான் குளங்கள்,கேணிகள்,கிணறுகள் கட்டினார்கள். இவை யாவும் பொது நோக்குடன் பொது இடத்தில் பொதுமக்களினால் பொது நன்மைக்கு ...பொது மக்கள் சேர்த்த பணத்தில் ...என நான் நினைக்கிறேன் ...நிச்சயமாக மருதடியான் தனிமனிதனாக இவற்றை(கேணி கட்டுதல்,கிணறு வெட்டுதல்,குளம் அமைத்தல்) செய்திருக்கமுடியாது....அவர் ஓரு சக்தியாக செயல் பட்டிருக்கலாம்...(ஏன் வீணாக் மருதடியானை எங்கன்ட அலட்டலுக்குள்ள பிறகு மனுசன் என்னோட கோபித்து கொண்டால்) ஊர் மக்கள் பணம் கொடுத்து,அந்த பணத்தில் ஊர்மக்கள் பயன் அடையும் வகையில் நல்ல திட்டங்களை அமுல் படுத்தியுள்ளார்கள்.அதற்கு பொதுக்கட்டமைப்பு (கோவில் சபை அல்லது கிராம சபை) துணை புரிந்திருக்கின்றது.. குளம் ... மழை நீர் சேர்ந்து நிற்கும் .நீண்ட நாட்களின் நீரோட்டத்தின் விளைவாக‌ ஊரில் உள்ள மண்,கல்,சகதி மற்றும் கழிவுகள்(வாழைமரம்கள்,தடிகள்,மரங்கள்) யாவும் நீரோடு சென்று அடியில் படிந்து குளத்தின் ஆழத்தை குறைத்து விடும்..நீர் வற்றிய பின்பு, கழிவுகள்,மண் போன்றவற்றை அன்று வாழ்ந்த மக்கள் சிரமதான முறையில் துப்பரவு செய்தார்கள் ...தூர் வாருதல் என சொல்வார்கள் ...பொது நோக்குடன் (கிளீன் சிறிலங்கா 30 நாட்கள்.கிளீன் அப் அவுஸ்ரேலியா நாள் 30 வருடங்கள்)எங்கன்ட சன‌த்தின்ட கிளீன் அப் குளம் எப்பவோ தொடங்கிட்டுது ...(கிளீன் அப் செய்யும்பொழுது கள்,தேனீர்,வடை,மோதகம்..போன்றவற்றை ஊர்மக்கள் செய்து கொடுப்பார்கள் ஊர்மக்கள் கூடி சேர்த்த பணம்) கிளீன் அப் அவுஸ்ரேலியா செய்யும் பொழுதும் நாலு பேர் சேர்ந்து காசு போட்டு பியர் அடிக்கிறனாங்கள் ..,அதற்காக அவுஸ்ரேலியா அரசு எங்கள் மீது குற்றம் சாட்ட முடியாது , "அரசாங்க காசில பியர் குடிக்கிற எண்டு" இந்த குளங்கள் விவசாயத்துக்கு மட்டுமல்ல கால் நடைகளின் தாகத்தையும் தீர்க்க உதவியிருக்கு,இருக்கின்றது . கேணிகள் இவற்றில் அநேகமானவற்றுக்கு மூன்று பக்கமும் சுவர் கட்டியிருப்பார்கள் ஒரு பக்கம் திறந்த வாறு இருக்கும் படிகள் கட்டியிருக்கும் ,மழை நீர் ஒடிவந்தாலுமொரு பக்கத்தினால் மட்டுமே அடி தளத்துக்கு செல்ல முடியும் ஊர் கழிவுகள் குறைவாக அடித்தளத்திற்கு செல்லும் இதனால் நீண்ட நாட்களுக்கு தூர் வார வேண்டிய அவசியமில்லை ... இன்று கேணிகளை மூடிவிடுகிறார்கள் ,அல்லது தீர்த்தமாடுவதற்காக கேணிக்குள் சிறிய கட்டித்தை கட்டிவிடுகிறார்கள் ...இதை செய்வது ஊரில் உள்ள மேதாவிகள் .. கிணறு. முக்கியமாக தோட்ட கிணறுகள் அதிலும் யாழ் மாவட்ட கிணறுகள் மழை நீர் ஓடுவதற்கு ஏற்ற வகையில் ஒர் பாதை விட்டு கட்டியிருப்பார்கள் .தற்பொழுது இந்த கிணறுகள் முற்றாக மூடி கட்டப்பட்டிருக்கின்றது அதுபோக யாரும் கிணறு வெட்டுவதில்லை ,பணம் அதிகம் வேண்டும் வெட்டுவதற்கு. கேணிகளுக்கு பக்கத்தில் கிணறு வெட்டியிருப்பார்கள் ,முட்டாள்கள் தண்ணீர் கேணியில் இருக்கின்றது வீணாக கிணற்றையும் வெட்டி யிருக்கிறாங்கள் பழசுகள் என திட்டியும் இருக்கின்றேன் .ஆனால் அதன் முக்கியத்துவம் பின்பு தான் அறிந்து கொண்டேன்.கோயில்களுக்கு சற்று தொலைவில் இருக்கும் வீட்டு கிணற்று தண்ணீர் உவர் தன்மையுடன் இருக்கும் ஆனால் கோயில் கிணற்று தண்ணீர் நன்னீராக இருக்கும் .கேணிகளில் சேரும் மழைநீர் கிணற்றுக்கு உள்ளே மண்,சிறுகட்கள் ஊடாக வடிகட்டப்பட்டு ஊற்றாக உட்செல்வதனால் தான் என நினைக்கிறேன். மேலும் தோட்டங்கள் ,வயல்களுக்கு மத்தியில் கிணறுகள் வெட்டியிருப்பார்கள் அங்கும் நன்னீர் தான். குழாய் கிணறு பாவனைக்கு வந்துவிட்டது.அதிக இடம் தேவையில்லை .. மொத்தத்தில் மழை நீரை நிலத்தடியில் சேமித்து வைக்கும் சகல பொறிமுறைகளும் இல்லாமல் போகின்றது. அன்றைய ஊர்மக்கள்,மன்னர்களுக்கு (ஆட்சியாளர்களுக்கு) இருந்த அறிவு ,தற்பொழுது நூறு வீதம் கல்வியறிவு கொண்ட ஊர்மக்களுக்கும் இல்லை ,அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் இல்லை ,கோவில் நிர்வாக சபைக்கு போட்டி போட்டு கொண்டு வரும் தலைவர்கள்,உறுப்பினர்களுக்கும் இல்லை..... கோயில்கள்,பாடசாலைகள் எல்லாம் உருவாக்கப்பட்டதன் நோக்கம், தேவைகளை இப்பொழுது வாழும் மக்கள் மறந்துவிட்டனர் போல உள்ளது .
  9. சமூகச் சிந்தனையாளர் பெரியார் பற்றிப் பிரலாபம் செய்பவர்கள் யாராகினும், அவரின் வழியொற்றி நீங்கள் வாழாதிருப்பின் உங்களுக்கு ஒன்று சொல்வேன் உங்களது வேலிக்குள் உங்களது ஆட்டைக் கட்டிவைத்துவிட்டு எல்லா ஆடுகளுக்கும் சுதந்திரம் வேண்டி நீங்கள் ஆர்ப்பரிப்பதன் வஞ்சகம் எதுவென்பதை நானறிவேன். அவிழ்த்து விட்டேன் என் ஆட்டை அதுதான் அடைந்து கிடக்கிறது நான் என் செய்வேன் என்பவர்க்கு நானின்றொன்று சொல்வேன் உன் சொந்தப்பட்டியில் அடைபட்டுக் கிடக்கும் உன் ஆட்டுக்கு விடுதலை பற்றிய உபதேசம் நீ செய்யவில்லையெனில் வேறெந்த ஆட்டுக்கும் நீ விடுதலை உபதேசம் செய்யாதே. விடுதலை பெற எண்ணும் ஆடுகளை வேட்டையாடும் நோக்கம் மட்டுமே உன்னுடையது என்பதை எவரும் கண்டு கொள்வார்கள். . முதலில் உன்பட்டியின் ஆட்டை, ஆடுகளை விடுதலை செய். 20.02.2025 வாசு
  10. இது சகல நாடுகளிலும் நடக்கின்ற ஒன்று ...இங்கு அவுஸ்ரேலியாவிலும் சிலர் இருக்கின்றனர் .இந்த நாட்டிலயே அண்மையில் வந்த (10 வருடங்களுக்குள்) நம்ம நாட்டு இளைஞர்கள் (சிலர் மட்டுமே)வீதியில் போதையில் இருப்பதை கண்டுள்ளேன் அது மட்டுமல்ல சில சமயம் வீதியில் செல்பவ்ர்களுக்கு நக்கல் அடிப்பதும் உண்டு ... வெளிநாடுகளில் வாழும் வெள்ளை இனத்தவ்ர்களில் சிலர், எவ்வளவு வசதிகள் வாய்ப்புக்கள் இருந்தாலும் வீடு அற்றோர் போல வாழ வேணும் என்று பஸ் ஸ்டான்ட் ,மற்றும் பூங்காவில் வாழ்கின்றனர் ... அது போல இந்த புலம் பெயர் காவாலிகளும் ஒரு காலகட்டத்தில் அப்படி வாழ்க்கைக்கு செல்வார்கள் ...
  11. பிரித்தானிய நேரப்படி நாளை ஞாயிறு (23 பெப்) 09:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK எதிர் IND 05 பேர் மாத்திரம் பாகிஸ்தான் அணி வெல்லும் எனவும் ஏனைய 19 பேரும் இந்திய அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பாகிஸ்தான் ரசோதரன் நுணாவிலான் வசீ நந்தன் கிருபன் இந்தியா ஈழப்பிரியன் ஏராளன் வீரப் பையன்26 சுவி அல்வாயன் தமிழ் சிறி நிலாமதி வாத்தியார் செம்பாட்டான் குமாரசாமி நியாயம் வாதவூரான் சுவைப்பிரியன் எப்போதும் தமிழன் புலவர் கோஷான் சே நீர்வேலியான் கந்தப்பு பிரபா இந்தப் போட்டியில் புள்ளிகளை யாருக்குப் புள்ளிகள் கிட்டும்?
  12. கனடா??? பெரும்பாலும் கனடாவில் இருந்து வருபவர்கள் ஊரிலும் சரி, அரசியலிலும் சரி அதிகமாக சிக்கலை தோற்றுவிப்பவர்கள். ஊரில் நடக்கும் அடாவடிகளையும், சொல்லும் தெனாவட்டான கதைகளையும் வைத்துச் சொல்கிறேன். போலீசார் இவர்களின் கைக்கூலிகள். நாங்கள் செய்வதை செய்துவிட்டு கனடாவிற்கு போய் விடுவோம், எங்களை யாரும் ஒன்றும் பண்ண முடியாதென சவால் வேறு விடுகிறார்கள். கனடா அரசாங்கம் இவர்கள் மேல் விழிப்பாக இருக்க வேண்டும். இவர்கள் அங்கே என்ன செய்கிறார்கள், ஏன் அடிக்கடி செல்கிறார்கள், தாங்கள் கொடுக்கும் பணத்திற்கு என்ன ஆகிறது என்பதை கவனிக்க வேண்டும். இது மனித உரிமை மீறல் என்று சொல்லலாம். ஆனால் இவர்கள் நாட்டுக்கு வந்து, ஏழைகளுக்கு மனஉளைச்சலையும் அலைச்சலையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறார்கள். இவர்கள் அங்கே கஸ்ரப்பட்டு உழைப்பவர்களாக தெரியவில்லை.
  13. என்னுடைய அனுபவம்...ஊர் போனேன்....அங்கு சொந்த பந்தங்களின் விட்டுக்கு போனவுடன் கேட்பது ..தண்ணீர்தான்...குடித்துவிட்டு தண்ணீர் எங்காலான் நல்லாயிருக்கே என்றவுடன் உண்மைவரும்...1. வாங்கும் தண்ணீர், 2 ..எங்கள் கிணற்றுநீர்..... .விடை கிணற்று நீராக இருந்தால் மட்டுமே 2ம் 3ம் கிளாஸ் வங்கிகுடிப்பேன்...இலஐயெனில் என் தாகத்தை அடக்கிவிடுவேன்.....நமது 45 அடி ஆழ வெட்டுக்கிணறுகள்.. எல்லாமே நன்னீர் கிணறுகள்... பாழடையவிட்டு கம்பிவலையால்மூடப்பட்டுள்ளன..வீட்டுகு ஒவ்வொரு குழாய் கிணறு....அவை அடிகப்பட்ட ஆழம் 150 அடிவரை...நன்னீரோட்டம் 45 அடிதான் ...150 அடியில் என்னென்று நன்னீர் கிடைக்கும்...இதற்குத் தீர்வுதான் காசுத் தண்ணீர்...வாழ்க்கைசெலவின் கஸ்டத்தின் மத்தியில் தண்ணீருக்கு மேலதிக செலவு...செலவைக் கட்டுப்படுத்த தண்ணீர் குடிப்பதையே கட்டுப்படுத்துகிறார்கள்.. இதனால் வருத்தங்களும் கூடுகின்றது....இந்த வாழ்க்கைமுறை எதனால் வந்தது.....இப்படிப் பல
  14. சில வேளைகளில் இப்படியான ஒரு மனநிலை ஒரு முழுப் பைத்தியக்காரத்தனமோ என்றும் தோன்றும்............... ஆனால் ஒரே தெருவிலேயே, ஒரே வீட்டிலேயே 25 வருடங்களுக்கும் மேலாக இருக்கும் நான், இந்த தெருவில் இருக்கும் பலர் முடிந்து போனதை பார்த்திருக்கின்றேன். ஒவ்வொருவரின் கடைசி வருடங்களிலும் அவர்கள் எதிர்பார்த்தது சக மனிதர்களின் ஆதரவையும், அன்பையும் அன்றி வேறெதுவுமே இல்லை..........
  15. அண்ணாமார், நொண்ணாமார் எல்லாருக்கும் நான் ஒரு வாபஸ் அறிக்கை கொடுக்க விரும்புகிறேன். உங்களை புட்டின் காதலர்கள், மேற்கு வெறுப்பாளர்கள் என நான் எழுதியது தவறு…தவறு…தவறுதான். நீங்கள் புட்டின் காதலர்கள் எண்டால் - இப்போ டிரம்ப் செய்வதை வரவேற்பீர்கள். நீங்கள் மேற்கின் ஏகாதிபத்தியத்தினை எதிர்பவர்கள் என்றால் செலன்ஸ்கி தன் நாட்டை “எழுதி கொடுக்கும்படி” டிரம்ப் கேட்பதை எதிர்ப்பதை ஆதரிப்பீர்கள். நீங்கள் இது இரெண்டுமே அல்ல. நீங்கள் செலன்ஸ்கி/உக்ரேனிய வெறுப்பாளர்கள். செலென்ஸ்கியை அமெரிக்கா ஆதரித்தாலும், எதிர்கிறீர்கள். செலென்ஸ்கி அமெரிக்காவை எதிர்த்தாலும் எதிர்கிறீர்கள். ஏன்…இப்படி என யோசித்துப்பார்த்தால் - ஒரே ஒரு காரணம் மட்டுமே எனக்கு புலப்படுகிறது. பொறாமை…. நாம் செய்ய முடியாததை, உக்ரேனியர்கள் செய்துவிடுவார்களோ என்ற அழுக்காறு, நமக்கு உதவாத மேற்கு அவர்களுக்கு உதவுகிறதே என்ற கறுவியம். அடுத்து சொல்ல போவதற்கு கடும் எதிர்வினை வரும் என தெரியும். ஆனாலும் சொல்கிறேன். தலைவர் பிரபாகரனால் செய்ய முடியாததை, எங்கே செலன்ஸ்கி செய்து விடுவாரோ எண்டு அங்கலாய்ப்பு. ஊரில் சில காதல் தோல்வி தாடி கேசுகள் இருக்கும். இவர்களையும் அண்ணா என்றே அழைப்பார்கள். இந்த அன்ணாக்கள் தமக்கு ஆப்பு அடிபட்டு விட்டது என்பதால் - ஊரில் இருக்கும் ஏனைய பெடியளையும் கூட்டி வச்சு கொண்டு “பொம்பிளைய நம்பாத தம்பி” என அவர்கள் வாழக்கையையும் சீரழிப்பார்கள். எவனாவது ஒருவன் ஒரு பிகரை செட் பண்ண முயற்சித்தால் - அதை கெடுக்க தம்மால் ஆனசகலதையும் செய்வார்கள் இந்த அண்ணாமார். எதுவும் முடியாவிட்டால் வம்பளப்பார்கள். இதுதான் நீங்கள். தோல்வியை வெற்றியின் படிகட்டு ஆக்கலாம். அல்லது அதே படிக்கட்டில் இருந்து மேலே ஏறும் ஏனையரை கால்தடம் போட்டு விழுத்தலாம். இப்படி கால்தடம் போடும் பரிதாப ஜீவன்கள் நீங்கள். அடுத்து செலன்ஸ்கி பற்றி - நீங்களும், டிரம்ப்பும் செலன்ஸ்கியை கோமாளி எனலாம். ஆனால் புட்டினை எதிர்த்த அதே தீரத்துடனும், நேர்மையுடனும் டிரம்பையும் எதிர்க்கிறார் செலன்ஸ்கி. ஏன்? தன் நாட்டின், இனத்தின் நலன். மிக சுலபமாக டிரம்ப்கேட்பதை ஒத்து கொண்டு, அதில் தானும் சில பத்து பில்லியன்களை லபக்கி கொண்டு செட்டில் ஆகி இருக்கலாம். ஆனால் இன்றும் துருக்கிக்கு போகிறார், ஈயூவை உந்த முயல்கிறார், எப்படியாவது தன் இனத்தை தன் நாட்டின் வளங்களை காக்க முயல்கிறார். எனக்கு, இது இலங்கை பேரினவாதம், இந்திய வல்லாதிக்கத்தின் இடையே தன் சின்னம் சிறிய இனத்தை காக்க முனைந்த என் தலைவரையே நினைவுபடுத்துகிறது. காக்கைகள் கரைந்து பொழுது விடிவதில்லை. சொந்த இனத்தின் வரலாற்று போரை தவிர்த்து வெளிநாடு ஓடி வந்த நாம் செலன்ஸ்கிக்கு கொடுக்க போகும் பட்டங்கள் நிலைக்கப்போவதில்லை. வரலாறு அதை பார்த்து கொள்ளும். பேடிகள் கோமாளி பட்டம் கொடுக்க தகுதியற்றவர்கள். செலன்ஸ்கி தோற்கலாம், வெல்லலாம், கொல்லப்படலாம், ஆனால் அவர் மேற்கின் பொம்மை அல்ல என்பதை அவரின் டிரம்ப் எதிர்ப்பு நிறுவியுள்ளது. இங்கே என்னையும் ஏனையோரையும் நாம் உக்ரேனை ஆதரிப்பது மேற்கின் மீது கொண்ட மோகத்தாலே என்றோரின் கதையும் புஸ்வாணமாக போய் விட்டது. நாம் எப்படி புட்டினை அவரின் உக்ரேன் மீதான கொள்ளையை எதிர்தோமோ, அப்படியே டிரம்பினையும் அவரின் உக்ரேன் மீதான கொள்ளையையும் எதிர்கிறோம். செய்வது ரஸ்யாவா, மேற்கா என்பல்ல எம் கருதுபொருள். செயல் அறமானதா இல்லையா என்பதே கருது பொருள். நான் அப்பவே சொன்னேன், எங்க அண்ணா அப்பவே சொன்னார் எண்டு அரிவரி பிள்ளை கணக்கா எழுதும் வளர்ந்த குழந்தைக்கு - டிரம்ப் வந்தால் இது நடக்கும் என நாம் எல்லோரும் எழுதினோம். அது மட்டும் அல்ல - 2025 இல் டிரம்ப் வெல்ல கூடும் என்பதால் - 2022 இல் புட்டின் ஆக்கிரமிப்பதை செலன்ஸ்கி சும்மா பார்த்து கொண்டிருக்க முடியாது. அப்போ அமெரிக்கா உதவியது பெற்றார். இப்போ துருக்கி கூப்பிடுகிறது போய் பேசுகிறார். நோக்கம் எப்போதும் தன் நாட்டின் இறையாண்மையை பேணுவதே.
  16. பையன் சார், வழமையாக எழுதுவதை போலல்லாமல் நிதானமாக எழுதியிருக்கின்றீர்கள்...........👍. பொதுவாகவே பல இடங்களிலும் விவாதங்கள் ஒரு நாயக வழிபாடு அல்லதோ கொள்கை பரப்புச் செயலாளரின் அறிக்கை போன்று இருக்கும், முற்று முழுதாக ஒரு பக்கம் மட்டுமே சாய்ந்திருக்கும், கருத்துகளால் நிறைந்திருக்கின்றன. என் தலைவர், என் கட்சி தப்பே செய்ய மாட்டார்கள் என்ற நிலைப்பாடு தான் எல்லாவற்றையும் முந்தைய நிலைப்பாடாக பல இடங்களிலும் இருக்கின்றது. என்ன சாட்சி என்ற கேள்விக்கு ஆதாரம் காட்டினால் கூட, அது பொய் ஊடகம், இது உண்மையான ஊடகம் என்றும், நீங்கள் அதை நம்புவது போல நாங்கள் இதை நம்புகின்றோம் என்றும் போய்க் கொண்டேயிருப்பார்கள். நீங்கள் இன்று அங்கேயும் தப்பு இருக்கின்றது என்று சொன்னது மிக நல்லதொரு ஆரம்பம், ஆரோக்கியமான ஒரு விவாதத்திற்கு. இவர்கள் எவரும் பிரிந்து போவது நாதகவிற்கு குறுகிய காலத்தில் இழப்பே இல்லை. இது எம்ஜிஆர் திமுகவிலிருந்து பிரிந்து போனது போலவோ அல்லது மஹிந்த சுதந்திரக்கட்சியிலிருந்து போனது போலவோ அல்ல. ஆனால், எந்தப் பதவியிலும் இல்லாத அல்லது மிகவும் குறைவாகவே வெளியில் தெரிந்த இளைஞர்கள் நாதகவை விட்டுப் போவதும், அதற்கான காரணம் அவர்கள் எதிர்பார்த்து வந்த நாதக இதுவல்ல என்பதும் நீண்ட காலத்தில் பெரும் சேதத்தை விளைவிக்கும். இன்னொன்று, இது மிக முக்கியமான ஒன்று, ஆனால் இங்கு களத்தில் பலரும் அதை ஏற்றுக் கொள்வதில்லை: நாகரீகமற்ற பொதுவெளிச் பேச்சுகள் நடுநிலையான மக்களை இன்னும் தூரப்படுத்தும். சுற்றிவர நிற்பவர்கள் கைதட்டி ரசித்து சிரிக்கலாம். ஆனால் இந்த ரசிகர்களின் ஒவ்வொரு கைதட்டலிலும் இன்னும் நாலு பொதுமக்கள் தூரத்தே போய்விடுவார்கள். இந்த முதிர்ச்சி இல்லாமல், சீமானாலும், அர்ச்சுனாவாலும் எதையும் அடையமுடியாது.
  17. இது உண்மையான தகவலா? நான் ஒரு கிணறு அடிக்கவேண்டும் ... பல இடங்களில் தண்ணீர் குடிக்கும்போது ஒரு சேற்று மணம் வருகிறது முன்பு அப்படி இருந்ததில்லை. ஏன் என்று கேட்க்கும்போது குழாய் ஆழமாக இறக்கப்படவில்லை 75 அடிக்கு இறக்கினால்தான் சேற்று மணம் இருக்காது என்று சொன்னார்கள். நானும் ஓகே அப்போ 75 அடியில் அடிக்கலாம் என்று இருந்தேன் ... நீங்கள் இப்போ இப்படி சொல்கிறீர்கள். கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது
  18. சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் திமுக்காவின‌றால் இவாவின் உயிருக்கே ஆவ‌த்து வ‌ர‌ பார்த்த‌து காளிய‌ம்மாள் மேடையில் பேசி கொண்டு இருக்கும் போது ம‌து போத்திலால் இவாக்கு எறிஞ்ச‌வ‌ங்க‌ள் , ச‌ரியா ம‌ண்டையில் ப‌ட்டு இருந்தால் அந்த‌ இட‌த்தில் ர‌த்த‌ம் கொட்டி ப‌டாத‌ இட‌ங்க‌ளில் ப‌ட்டு இருந்தால் க‌ண் பார்வையே போய் இருக்கும் திமுக்காவுக்கு போவ‌தும் ந‌ர‌க‌த்துக்கு போவ‌துக்கு ச‌ம‌ம் என்று காளிய‌ம்மாளுக்கு ந‌ல்லாவே தெரியும் அவாவே ப‌ல‌ வாட்டி சொல்லி இருக்கிறா மாவீர‌ர்க‌ள் மீது உறுதி மொழி எடுத்து விட்டு எம் இன‌த்தை அழிக்க‌ துணை போன‌ திமுக்கா கூட‌ எப்ப‌டி நான் சேர்வேன்................... க‌ட்சி வேட்பாள‌ர் ச‌கோத‌ரி காளிய‌ம்மாள‌ தொட‌ர்வு கொண்டு கேட்ட‌ போது த‌ன‌து பெய‌ரை அவ‌ர்க‌ளாக‌த் தான் போட்ட‌து என்று சொல்லி இருக்கிறா அக்கா காளிய‌ம்மாள் வெளிப்ப‌டையாய் சொல்லும் வ‌ரை மெள‌வுன‌த்தை க‌டை பிடிப்ப‌து ந‌ல்ல‌ம் ஏற்க்க‌ன‌வே திமுக்கா கார‌ங்க‌ள் க‌ளிய‌ம்மாள‌ க‌ருவாட்டுக்காரி என்று எல்லாம் விம‌ர்ச‌ன‌ம் வைச்ச‌வை திமுக்காவுக்கு போகாம‌ காளிய‌ம்மாள் எங்கை போனாலும் அக்காவுக்கான‌ என‌து ஆத‌ர‌வும் அன்பும் எப்ப‌வும் இருக்கும்🙏👍🥰😍❤️...................... ஈழ‌த்தில் என‌து பார்வையில் ஒரு க‌ருணா ஆனால் த‌மிழ் நாட்டில் ஒவ்வொரு க‌ட்சிக்குள்ளும் ப‌ல‌ க‌ருணாக்க‌ள் அப்ப‌டி ப‌ட்ட‌ க‌ருணாக்க‌ள் தான் காளிய‌ம்மாளை சீமானிட‌ம் போட்டு கொடுத்து விட்டு இப்போது திமுக்கா , கூட்ட‌னியில் இருக்கும் வேல் முருக‌னுட‌ன் ச‌ர‌ன் அடைந்து விட்டின‌ம்................வேல் முருக‌னுக்கு எப்ப‌ ஊந்த‌ கூட்ட‌ம் பின்னால் குத்த‌ போகுதோ தெரியாது😡👎.................... சில‌ர் மேல‌ எழுதின‌தை சும்மா உத‌ர்ச‌ன‌ப் ப‌டுத்த‌க் கூடாது...............க‌ட்சிக்குள் இப்ப‌ ப‌ல‌ புது முக‌ங்க‌ள் வ‌ந்து விட்ட‌ன‌....................க‌ட்ட‌மைப்பு எல்லாம் புது வ‌டிவில் செய்யின‌ம் அத‌னால் அதில் உட‌ன் பாடு இல்லாத‌ ப‌ழைய‌ உற‌வுக‌ள் ஒரு சில‌ர் வெளிய‌ போகின‌ம்.................. அக்கா காளிய‌ம்மாள‌ சீமான் பிசிறு என்று சொன்ன‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை................இத‌னால் க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் ச‌ண்டையும் பிடிச்ச‌ நான்..................ச‌த்திய‌மாய் பிசுறுவின் சொல் நான் முன்ன‌ பின்ன‌ கேள்வி ப‌ட்ட‌து கிடையாது பிற‌க்கு தான் தெரியும் சீமானுக்கு சில‌ ச‌மைய‌ம் நாக்கில் ச‌னி.................திற‌மையான‌ க‌ட்சி பிள்ளைக‌ளை இன்னும் ஊக்க‌ம் கொடுத்து வைச்சு இருப்ப‌தை விட‌ அதுக‌ளை பிசிறு ம‌சிறு என்று சொன்னால் க‌ட்சி த‌லைவ‌ருக்கு அது அழ‌கில்ல‌ நீங்க‌ள் நினைக்க‌லாம் பைய‌ன் சீமான் எது செய்தாலும் த‌லை ஆட்டுவான் என்று 2013ம் ஆண்டு க‌த்தி ப‌ட‌ பிர‌ச்ச‌னையின் போது சீமான் அத‌ற்க்குல் தேவை இல்லாம‌ மூக்கை நுழைச்ச‌துக்காக‌ ஒரு வ‌ருச‌த்துக்கு மேல் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் செய‌ல் பாட்டை எட்டியும் பார்க்காம‌ விட்ட‌ நான் பிற‌க்கு 2014க‌ளில் ம‌ன‌ம் மாறி மீண்டும் சீமானை ஆத‌ரிக்க‌ தொட‌ங்கி நான் காளிய‌ம்மாள் 2019ம் ஆண்டு தான் க‌ட்சியில் இணைஞ்ச‌வா 2019 முத‌ல் பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 55ஆயிர‌ம் வாக்குக்கு மேல் நாம் த‌மிழ‌ர் வேட்பாள‌றாக‌ நின்று கிடைச்ச‌ ஓட்டு வ‌ட‌ சென்னையில் ................... என‌து அனுப‌வ‌த்தில் சொல்லுகிறேன் அக்கா காளிய‌ம்மாள் தேர்த‌ல் நேர‌ம் பிர‌ச்சார‌ம் செய்ய‌ அவாவின் உட‌ல் நிலை பெரிசா ஒத்துக் கொள்ளாது...............பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌ல் 6தொகுதிய‌ உள் அட‌க்கிய‌து ஒவ்வொரு தொகுதிக்கும் போய் பிர‌ச்சார‌ம் செய்ய‌ சிர‌ம‌ ப‌ட்ட‌வா............... தான் ஒரு க‌ட்சிக்கும் போக‌ மாட்டேன் தொட‌ர்ந்து ப‌ழைய‌ ப‌டி ச‌ம்முக‌ சேவை செய்ய‌ போகிறேன் என்றால் ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் மேல் இன்னும் ம‌திப்பு கூடும் க‌ளிய‌ம்மாளின் அம்மாவுக்கு க‌ளிய‌ம்மாள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிய‌ விட்டு பிரிவ‌து தாய்க்கு விருப்ப‌ம் இல்லை..................காளிய‌ம்மாளின் க‌ண‌வ‌ர் அவாவின் வாழ்கையில் அதிக‌ம் த‌லையிடுகிறார் போல் தெரிகிற‌து..........................
  19. இன்றைய முதல்வர் @alvayan க்கு வாழ்த்துக்கள்.
  20. அதுதானே சொல்லிவிட்டேன் கிருபன்சார்.. எட்டிப் பிடித்திருக்கின்றேன்...இன்று ராசா நானே எல்லையில்லா மகிழ்ச்சியில் இந்த ராசா எனி எப்படிப் போனாலும் பரவாயில்லை பிரபாகரன் கொள்கையாளன்...இன்று நான் .நாளை வசீ...நாளை மறுதினம்..... வாழ்த்துக்கள் வசீ...நாளை முதல்வராவதற்கு...கிருபன் உங்களுக்கும்தான்
  21. உங்க‌ளுக்கு வாழ்த்துக்க‌ள் குருநாத‌ர் முத‌ல் அவுஸ்ச‌ தெரிவு செய்து விட்டு பிற‌க்கு இங்லாந்தை தெரிவு செய்த‌தால் 2புள்ளி இழ‌ப்பு அவுஸ் முன்ன‌னி வீர‌ர்க‌ள் விளையாடி இருந்தால் இங்லாந்தை தெரிவு செய்து இருக்க‌ மாட்டேன்.........................
  22. இங்கிலாந்து காரர் எலாம் வாங்கோ மொட்டாக்கு போட.
  23. பிரித்தானிய ஈயுவை விட மோசம். அமெரிக்கா குதி என்றால்… எங்கே என்பது மட்டுமே இவர்கள் கேட்கும் கேள்வி.
  24. எல்லாரும் வெள்ளிக்கிழமை பார்ட்டி போல 🤣
  25. "உன்னோடு வாழ்வது உவப்பானதே" & "புது விடியல்" "உன்னோடு வாழ்வது உவப்பானதே" "உன்னோடு வாழ்வது உவப்பானதே என்றாலும் உயிரோடு போராடும் நோயாளி இவனால் உரிமையோடு இன்பம் சுவைத்திட முடியுமா? உண்மையோடு வாழா வாழ்வும் வாழ்வா?" "மண்ணோடு மண்ணாய் போகும் உடலுக்கு பெண்ணோடு இணையும் ஆசை எதற்கு? பண்போடு சொல்கிறேன் விலகிச் செல்லாயோ? விண்ணோடு பறக்க நேரம் குறித்தாச்சே!" "என்னோடு நீயும் காலத்தை வீணாக்காமல் துன்பத்தின் சுமையை தோளில் சுமக்காமல் அன்புடன் வாழ்த்துகிறேன் விடையும் தருகிறேன்! இன்பத்தின் சுவையை அனுபவித்து மகிழ்வாயே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .................................................................. "புது விடியல்" "புது விடியல் இன்று பிறந்தது புலரும் புத்தாண்டே மகிழ்வாக வாராயோ! இழிவூட்டும் இன்னல்களை நேற்றோடு அகற்றி இதயத்தோடு நிம்மதியை எல்லோருக்கும் கொடுப்பாயோ!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  26. எனக்கு இங்கிலாந்து வென்றால் மகிழ்ச்சி.இங்கிலாந்து இப்பொழுது நன்றாக விளையாடிக்கொண்ருக்கிறது. பந்துவீச்சில் சொதப்பாமல் இருந்தால்சரி.
  27. "வாழ்வில் வசந்தம்" & "தைமாசக் காத்துல தாழம்பூ வாசத்துல" "வாழ்வில் வசந்தம்" "வாழ்வில் வசந்தம் கட்டாயம் வரும் தாழ்வில் ஒரு உயர்வு வந்தால்! தோல்வியில் வெற்றி மனதுக்கு அமைதி சொல்லில் அடங்கா மகிழ்ச்சி அது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................. "தைமாசக் காத்துல தாழம்பூ வாசத்துல" "தைமாசக் காத்துல தாழம்பூ வாசத்துல தையல் அருகிலே தாளாத காதலுல தைத்த வண்ணத்துல தாமரை அழகில தைவரல் சுகத்துல தாலாட்டி மகிழ்ந்ததேனோ?" "கற்றாழை முள்ளு குத்தியதோ பாதத்தில் கண்கள் இரண்டும் கலங்கியதோ வேதனையில் கஞ்சி குடிக்கையிலே கதறல் கேட்டுதே கலைமகளே உன்னை நடக்க விடுவேனோ?" "வேகாத வெயிலுக்குள்ளே ஆலமர நிழலிலே போகாத ஆசைக்குள்ளே ஆயிரம் எண்ணத்திலே தீராத காதலுக்குள்ளே ஆடிமாத தடையிலே சேராத உறவென்று இனிமேலும் வேண்டாம்?" "மஞ்சள் புடவைக்காரி மச்சனின் ஆசைக்காரி நெஞ்சில் அன்பை நெருப்பாய் தந்தவளே வஞ்சம் இல்லா வட்ட முகத்தாளே மஞ்சம் காத்திருக்கு மயக்கம் தந்தாலென்ன?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  28. மஞ்சம் காத்திருக்கு என்று மயக்கத்துக்கு காத்திருக்கும் ஆணின் புலம்பல் நன்று ஐயா ........! 😁
  29. எந்த ஒரு உயிரினத்துக்கும் தன்னுடைய உடலில் தளர்வுகள் உணரும்போது உறங்கு நிலையில் இருந்த ஞானம் கொஞ்சம் கொஞ்சமாய் விழித்தெழும் ......... மனிதர்களும் இதற்கு விதிவிலக்கல்ல .......... இங்கு பலர் பூனை வளர்ப்பார்கள் ........ பின் அவர்கள் இருக்கும்போதோ, வேறிடத்துக்கு மாறும்போதோ அவற்றை அனாதரவாய் விட்டு விட்டு போய்விடுவார்கள் ......... பிறகென்ன அதுகள் அக்கம் பக்கம் வீடுகளுக்கு உணவுக்காக அலைந்து திரியும் . .......! 😁 நன்றி ரசோ ..........!
  30. அவர்களை விட அவர்களது பணம் பேசுகிறது. அரச கருவிகளும் அவர்கள் பக்கம். வித்தியா வழக்கிலும் போலீசாரே குற்றவாளிகளுக்கு உதவினர். இவர்களின் துணிவிலே இவர்கள் எதை வேண்டுமானாலும் செய்கிறார்கள், அதிலும் கொலை மிரட்டல் விடுகிறார்கள். தாங்கள் தங்கள் பணத்தினால் தப்பி விடுவோம் என்று சவால் வேறு விடுகிறார்கள். பாப்போம் எங்கே போய் முடிகிறது என்று? எப்படியும் ஒருநாள் சிக்கத்தான் போகிறார்கள்!
  31. அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி ஆப்கானிஸ்தானை 107 ஓட்டங்களால் வென்றது தென் ஆபிரிக்கா Published By: VISHNU 22 FEB, 2025 | 02:17 AM (நெவில் அன்தனி) கராச்சிய தேசிய விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற பி குழுவுக்கான முதலாவது சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா சகல துறைகளிலும் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்தி 107 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது. ரெயான் ரிக்ல்டன் குவித்த சதம், டெம்பா பவுமா, ரெசி வென் டேர் டுசென், ஏய்டன் மார்க்ராம் ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள் என்பன தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு வித்திட்டன. தென் ஆபிரிக்காவின் களத் தடுப்பும் மிக அற்புதமாக இருந்தது. அப் போட்டியில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்த தென் ஆபிரிக்கா 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 315 ஓட்டங்களைக் குவித்தது. மொத்த எண்ணிக்கை 28 ஓட்டங்களாக இருந்தபோது டோனி டி ஸோர்ஸி (11) ஆட்டம் இழந்தார். ஆனால், ரெயான் ரிக்ல்டன், அணித் தலைவர் டெம்பா பவுமா ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இரண்டாவது விக்கெட்டில் 129 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உரமூட்டினர். நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய டெம்பா பவுமா 58 ஓட்டங்களைப் பெற்றார். ரெசி வென் டேர் டுசெனுடன் 3ஆவது விக்கெட்டில் மேலும் 44 ஓட்டங்களைப் பகிர்ந்த ரெயான் ரிக்ல்டன் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். அவர் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 103 ஓட்டங்களைப் பெற்று இந்த சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சதம் குவித்த 5ஆவது வீரரானார். நியூஸிலாந்தின் வில் யங், டொம் லெதம், பங்களாதேஷின் தௌஹித் ரிதோய், இந்தியாவின் ஷுப்மான் கில் ஆகியோர் சதம் குவித்த முதல் நான்கு வீரர்களாவர். ரெசி வென் டேர் டுசென் 52 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அடுத்து டெவிட் மில்லர் 14 ஓட்டங்களை மாத்திரம் பெற்றபோதிலும் 5ஆவது விக்கெட்டில் ஏய்டன் மார்க்ராமுடன் சரியாக 50 ஓட்டங்களைப் பகிர்ந்தார். ஏய்டன் மார்க்ராம் 36 பந்துகளில் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 52 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் மொஹமத் நபி 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 316 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 43.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ரஹ்மத் ஷாவைத் தவிர வேறு எவரும் 20 ஓட்டங்களைக் கடக்கவில்லை. ஆறு வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்ற போதிலும் அவர்களால் பெரிய எண்ணிக்கைகளை நோக்கி செல்ல முடியவில்லை. தனி ஒருவராகப் போராடிய ரஹ்மத் ஷா 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 92 ஓட்டங்களைப் பெற்று கடைசியாக ஆட்டம் இழந்தார். பந்துவீச்சில் கெகிசோ ரபாடா 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வியான் முல்டர் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லுங்கி எங்கிடி 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ரெயான் ரிக்ல்டன். https://www.virakesari.lk/article/207332
  32. ஒரே நாளில் 1 இல் இருந்து 15 ஆம் இடத்திற்கு...
  33. அவசியமான பதிவு putthan. 👏 என் நண்பன் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் வேலை செய்கிறான். யாழ்நிலத்தடிநீர் நிலைமைகளைப் பற்றி அவன் கதைக்கத் துவங்கினால் மிகவும் மனவருத்தமாக இருக்கும். சில்லறை அரசியல் ஆதாயங்களுக்காகவும் தொலைநோக்கில்லாத சுயநலநோக்கங்களுக்காகவும் எம்மில் பலர் தெரிந்தோ தெரியாமலோ தவறான செயற்பாடுகளில் ஈடுபடுவதால் எமது வருங்கால சமுதாயம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இப்போதெல்லாம் குடிநீர் எல்லாருக்கும் உரிய வளமாக இல்லாது வியாபாரப் பொருளாகி விட்டுது.
  34. ஒரு விதத்தில் காலம் கடந்த ஞானம் தான். இங்கு இருக்கும் அயலவர்கள் பெரிதாகப் பழக மாட்டார்கள், கடைசிக் காலம் என்று வந்த பிறகு தான் வாங்க பழகலாம் என்ற மாதிரி பேசுவார்கள். நமக்கு அதுக்கிடையில் மனம் விட்டுப் போய் விடும். எப்பிடி இருந்தாலும் நம் முதிர்ச்சி நம் கையில்: அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!
  35. ஓம் @suvy அண்ணை, இதுவும் ஒரு கதை தான். ஆனால் நான் சொல்ல வந்த நோக்கம் பிறிதொன்று. ஒரு கண்ணகியின் கதையைக் காப்பியமாய் வடித்த இளங்கோவடிகள் ஆயிரம் பேரை நரபலி கொடுத்த சம்பவத்தை ஓரடியில் கடந்து போனதை, இன்னொரு கோணத்தில் வரலாற்றில் மறைக்கப்பட்டவர்களின் குரலாய்ச் சொல்ல முயன்றிருக்கிறேன். மற்றபடி இது வசனகவிதையா கதையா உரைநடையா என்பதை வாசிப்பவர் பார்வைக்கே விட்டு விடுகிறேன் 😁. நன்றி 🙏.
  36. திகிலுடன் எதிர்வினை ஆற்றுகின்றார்களா? @வாலி இன் செத்தகிளி சிறகடித்து பறக்கின்றது. சரி பார்ப்போம்.
  37. நீதிமன்றத்தில் கொலை செய்யிறாங்கள் அதை தடுத்து நிறுத்தவில்லை வந்திட்டாங்கள் பாடசாலை அலங்காரத்தில் ...யிர் புடுங்க...அபிவிருத்திக்கு என காசு கொடுத்தா வாங்கியிருப்பாங்கள்....
  38. இன்றைய முதல்வரை நாளைக்கு கவிழ்த்து, அல்வாயனை புது முதல்வர் ஆக்குகின்றோம்.......
  39. மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி ரியான் ரிக்கெல்ரனின் சதத்துடன் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 315 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, இறுதியில் 43.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் 208 ஓட்டங்களுக்குப் பறிகொடுத்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 107 ஓட்டங்களால் வெற்றியீட்டியது தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ஆப்கானிஸ்தான் வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  40. 👍......... மேலும் மேலும் அதிகமாக வாசிப்பதும், எங்களை நாங்களே கேள்விக்குள்ளாக்குவதும், இப்படியான ஒரு புரிதலை, வாழ்வை அடையவே. எவ்வளவு தூரம் இந்தப் பாதையில் போக இயலும் என்று தெரியவில்லை, ஆனால் ஆரம்பித்ததில் இருந்து பார்த்தால், ஏராளமான தூரத்தை கடந்து வந்து விட்டது தெரிகின்றது. சுற்றி வர எதுவும் மாறாவிட்டாலும் கூட, அப்படியே தேங்கிய குட்டையாக அது நின்றாலும் கூட, அதிலிருந்து எங்களால் ஓரளவாவது வெளியேற முடிந்தது என்பதே ஒரு வாழ்நாள் சாதனை..............
  41. 🤣............... அந்த இருவரும் யாராகவும் இருந்து விட்டுப் போகட்டும். நீங்கள் விரும்பினால் இதற்கும் இன்னொரு -1 போடலாம்...................😜.
  42. கொழும்பு தபால் கந்தோரில் வேலைசெய்யும் ஒரு ஊழியர் தபால்களைப் பிரித்து அனுப்பும் போது கனமாக உள்ளவற்றைக் கிலிக்கிப் பார்த்து உள்ளே காசு பணம் பெறுமதியான பொருட்கள் இருந்தால் ஆட்டையைப் போடுவது வழக்கமாம். ஒருமுறை கனதியான சரை ஒன்று இந்தியாவுக்கு அனுப்பும் தபாலில் இருக்க ஆவலோடு பிரித்துப் பார்க்க, அது வீபூதி நிறைந்த சரையாக இருந்தது கண்டு சிவ சிவா என்று அள்ளி நெற்றியிலிட்டு, வாயிலும் போட்டுப் பின்பு அத்துடன் இருந்த கடிதம் ஒன்றையும் பிரித்துப் பார்த்தாராம். “அன்புள்ள மாமா அறிவது! இத்துடன் இருக்கும் எங்கள் தாத்தாவின் அஸ்தியை கங்கையில் கரைத்து அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கொள்ளவும்”.😂🥵
  43. அமெரிக்காவும், ஐரோப்பாவும்….. உக்ரைனுக்கு ஆயுதத்தையும், பணத்தையும் கொடுத்து ரஷ்யாவுடன் தொடர்ந்து சண்டை பிடி என்று… கொம்பு சீவி விட்டு விட்டு, இப்ப ஒரேயடியடியாக உக்ரைனை மாட்டி விடுகின்றார்கள். சொந்தப் பலத்தை நம்பாமல், மற்றவனின் ஏவல் பேச்சைக் கேட்டு… போரில் குதித்த உக்ரைன் தனது நாட்டை… கற்குவியலாக மாற்றியதும் அல்லாமல், நாட்டின் பெரும் பகுதியை ரஷ்யாவிடம் இழந்து நடுத்தெருவில் நிற்கின்றது. செலன்ஸ்கியின் கோமாளித்தனத்துக்கு கிடைத்த விலை இதுதான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.