Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. putthan

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    14676
    Posts
  2. alvayan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    5417
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87990
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    38770
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/29/25 in Posts

  1. ஐபிஎல் 2025 இன் 09வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி சாய் சுதர்சனின் அரைச் சதத்துடனுன் சுப்மன் கில், ஜொஸ் பட்லரின் அதிரடியான ஆட்டங்களாலும் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் சூரியகுமார் யாதவைத் தவிர பிறர் ஆட்டத்தில் சோபிக்காததால் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 36 ஓட்டங்களால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஏழு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  2. காலையில் எழுந்ததும் மைதிலி பர பர ப்பானாள். பிள்ளைகளை பள்ளிக்கு பஸ் வண்டியில் ஏற்றி விட்டு, அவசர அவசரமாக சமையலை முடித்து விட்டு அந்த தொடர் மாடிக் கட்டிடத்தின் நாலாம் மாடிக்கு செல்ல கையில் சொக்கலேருக்கள் அடங்கிய சிறு பையுடன் மின் தூக்கி முன் காத்திருந்தாள் . இரவு கணவரிடம் தனது இரண்டாவது அண்ணா இத்தாலியில் இருந்து வந்திருப்பதாகவும் (அண்ணாவின் மனைவி அண்ணி இவளது வகுப்பு த்தோழி ) அவரைப் பார்க்க செல்வதாகவும் கூறி இருந்தாள். மின் தூக்கி வரும் வரை காத்திருந்தாள் , மனமெல்லாம் பத்து வருடங்கள் பின்னாடி சென்றது. இரவிரவாக தலையணை நனைய உறக்கமற்று இருந்தவள், இன்று வாழ்க்கையின் ஒரு பெரும் திருப்பம் அந்த கட்டிட தொகுதியில் வாழும் அண்ணாவின் வகுப்பு தோழன் சென்ற வாரம் செய்தி சொல்லி இருந்தா. .நண்பன் விடுமுறைக்காக வரப்போவதாக , அவள் செய்த ஒரு பிழை இவ்வளவு பிரச்சனை வரும் என்று எண்ணவில்லை. அவள் பள்ளிக்கால காதல னை அந்தஸ்து வேறுபாட்டினால் வீட்டிற்கு தெரியாமல், பதிவு திருமணம் செய்து விட்டாள். விஷயம் ஊரில் தெரியவரவே வீட்டுப்பக்கம் வரக் கூடாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டனர். அவளும் அதே ஊரில் வெளிநாட்டில் வந்த காதலனை முறைப்படி கோவிலில் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி பின்னும், அவளது பெற்றோர்களும் இப்படி செய்து விட்டால் எனும் கோபத்தில் , காலப் போக்கில் நாட்டு பிரச்சனையும் வரவே அண்ணா வேறு நாட்டுக்கு சென்றுவிட்டார். ஊர் எள்ளிநகையாடும் என எண்ணி இவளது உறவை பெற்றோர் தவிர்த்தாலும் இவள் அம்மா வீட்டுக்குபோய் வருவாள். தாயார் பேசுவார். பிறந்தநாளில் குழந்தைகளைக் கொண்டு போய்க் காட்டுவாள். ஊரில் மிகவும் பெரிய ராணுவ ஆக்கிரமிப்பால் ஊர் விட்டு ஊர் மாறிச் சென்ற போது கடைசியாக பெற்றோரைப் பார்த்து குழந்தைகளை காண்பித்து தாயருடன் கண்ணீரோடு விடை பெற்றுக் கொண்டாள். சில சமயம் அவசரப்பட்டு பதிவு திருமணம் செய்து விட்டோமோ என்று எண்ணியதுண்டு. மறுபக்கம் அவன் வெளிநாடு போக வேண்டிய நிர்பந்தம் அவளை அந்த முடிவு எடுக்க தூண்டியது . பின்னர் பெண்கள் விடுதியில் தங்கி ஆசிரியையாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். மின்தூக்கி வரவே நாலாம் மாடியை அடைந்து , அண்ணி வரவேற்றார். நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்த அவர் கைகளைப் பற்றினாள் . . பொலபொலவென கண்கள் தாரையாக கொட்டியது. அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். எழு வயது ஐந்து வயது.சின்னவன் சொக்கலேற் பையை வாங்கி கொண்டு அத்தை மடியில் உட்கார்ந்து கொண்டான். எங்கிருந்து அவனுக்கு அந்த பாச உணர்வு வந்தது ?....சிலமணி நேரம் பேசிய பின் , அவர்களையும் வீட்டுகார அண்ணா குடும்பத்தினரையும் சனிக்கிழமை இரவு தன் வீட்டுக்கு வர அழைத்து விட்டு தன் இருப்பிடம் சென்றார் . மறுநாள் அவர்கள் வந்தது கணவனையும் தன் குழந்தைகளையும் பேச விட்டு விருந்துண்டு திங்கட்கிழமை அவர்கள் உறவுக்கார மூதாட்டியை பார்க்க நேசிங் ஹாம் க்கு செல்ல திட்டம் போட்டார்கள் . மைதிலியின் கணவனுக்கு உடனே லீவு எடுக்க முடியாது. குழந்தைகளும் பள்ளிக்கு செல்ல வேண்டும். அவர்கள் பள்ளிக்கு அனுப்பிவிட்டு இவளும் அவர்களுடன் இணைந்து. அது ஒரு முப்பது நிமிட பஸ் பயணம். பஸ் தரிப்பு அருகே உள்ள தமிழ்க்கடையில் கிறீம் கிரக்கர் பிஸ்கட்டும் நெஸ்டமோல்ட் டின் உம் அண்ணா வாங்கினார். நான் ஏதும் வாங்க என்று அவள் மணிபர்சை திறக்க " நாங்க வேறு நீ வேறா " என்றார் அண்ணா . பளீர் என முகத்தில் அறைந்தது வார்த்தைகள். பஸ் உம் வரவே முண்டியடித்து ஏறிக்கொண்டார்கள். சின்னவர் மீண்டும் அத்தை மடிக்கு வந்து உட்கார்ந்தான் சில நிமிடங்களில் இறங்கி அவ்விடத்தை அடைந்து மூதாட்டியைப் பார்த்தும் அவர் மிகவும் சந்தோஷப் பட டார். என்னிடம் திரும்ப திரும்ப உனக்கு எத்தனை பிள்ளைகள் என கேட்டுக் கொண்டிருந்தார். பேசிக்கொண்டு இருக்கும் போது அங்குள்ள ஒருவர் கா தில் கையை வைத்துக் கொண்டு " கலோ" "கலோ " என அழைத்துக் கொண்டிருந்தார். இன்னொருவர் "என்னை வீட்டுக்கு போக விடு" என தமிழில் ஆங்கில உதவியாளரிடம் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார்.வயோதிபத்தில் வாழ்க்கை இப்படித்தான் போலும். தமிழ் தெரிந்த உதவி ஆல் சிறார்களை இங்கு கூடிக் கொண்டு வருவது நல்லதல்ல என்றார். அதற்கு அண்ணா சாகும் முன்னர் அவரை பார்த்துவிடவேண்டும். இவர்களை விட்டு விட்டு வர முடியாது ,எனவும் விடுமுறையில் வந்ததாகவும் சொல்லிக் கொண்டார். மீளவும் பஸ் பயணம். வரும் வழியெங்கும் " நான் வேறு நீ வேறா ? என ஒலித்து கொண்டே இருந்தது. மறுபடி வீட்டை அடைந்ததும் அன்று முழுவதும் என்ன இருந்தாலும் அண்ணாவின்" ரத்தபாசம் "மனம் முழுவதும் நிறைந்து கொண்டது. அண்ணவுடன் சொந்தம் கொண்டாடி ஆயிற்று. "நீரடித்து நீர் விலகுமா ? " இனி என் பெற்றோர் ஆன்மா மகிழ்வோடு நீள் துயில் கொள்ளும். Blood is thicker than Water
  3. “காலம் எல்லாம் உனக்காகக் காத்திருப்பேன்” நன்முல்லை, ஒரு கடற்கரையோரம் இருந்த, பழமையான மரத்தடியில் அமர்ந்திருந்தாள். மெல்லிய குளிர் காற்றில் அவளின் சேலை அசைந்தது. அவள் கூந்தலில் சூடிய மல்லிகைப் பூக்களின் நறுமணம் உப்புக் காற்றில் கலந்திருந்தது. பழைய மகிழ்வான நினைவுகளால் நிரம்பிய அவளது கண்கள், தனக்கு நன்றாகத் தெரிந்த, ஆனால் பல ஆண்டுகளாகப் பார்த்திராத, ஒரு உருவத்தைத் தேடுவது போல, அடிவானத்தை நோக்கியது. அவளுடைய மகிழ்ச்சியான மற்றும் சோகமான தருணங்களைக் கண்ட கடல், அவள் இதயத்தில் உள்ள வலியை மறந்து, தனது நித்திய தாளத்தைத் தொடர்ந்தது. பனிமலை போல் பரந்திருக்கும் வெண்மணலின் முடிவில், பாரிய கடல் ஆர்ப்பரித்து அலை மேலெழுந்து, அவள் காலை முத்தமிட்டது. அந்த அழகே தனிதான்! ஆனால் அவள் அதை விரும்பி பார்க்கும் நிலையில் இல்லை. அவள் மலரவனைப் பார்த்துப் பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த மரத்தடியில் சோக கண்ணீருடன் விடைபெற்று இன்று பத்து ஆண்டுகள். அப்போது அவள் இளமையாகவும் கனவுகள் நிறைந்தவளாகவும் இருந்தாள். அவன், தனது புத்திசாலித்தனமான மனதுடன், அவர்களின் சிறிய கிராமப் பள்ளியில், எப்போதும் தனித்து நின்றான். நன்முல்லை, கல்வியில் அவ்வளவு திறமை இல்லாவிட்டாலும், அவனது இதய நட்சத்திரமாக ஒளிர்ந்துகொண்டு இருந்தாள். அவர்கள் இருவரும் மிக நெருக்கமாக, அன்பாக ஒன்றாக வளர்ந்தார்கள். அவர்களின் பந்தம் குறுகிய தூசி நிறைந்த பாதைகள் மற்றும் அவர்களின் கிராமத்தின் அமைதியான வயல்களுக்கு மத்தியில் வளர்ந்தது. கடற்கரை ஓரத்தில் துள்ளி விளையாடியது. பழைய ஒற்றை மரத்தடியின் கீழ் முழுமைபெற்றது. மலரவன் கொழும்பு மருத்துவ பீடத்திற்குத் தெரிவான செய்தி கிடைத்ததும், அந்தக் கிராமத்தின் பெருமைக்கு எல்லையே இல்லை. அவர்களின் பள்ளியில் இருந்து, இப்படி ஒரு சாதனையை நிகழ்த்திய முதல் மாணவன், அவனே ஆகும். ஆனால், கொண்டாட்டங்களுக்கு மத்தியில் நன்முல்லையின் இதயம் கனத்தது. அது ஏன் என்று அப்பொழுது அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் இப்ப கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கினாள். அவன் அங்கிருந்து வெளியேற எல்லாம் மாறும் என்று. அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த கடைசி மாலையில், மலரவன் அவளை, அதே கடலோர ஒற்றை மரத்தடியில் சந்திக்கச் சொன்னான். கதிரவன் மறைந்து கொண்டிருந்தது, தண்ணீரின் மேல் ஒரு தங்க நிறத்தை அது வீசியது. அவன், அவளின் இரு கைகளையும் இறுக்கமாகப் பிடித்திருந்தான். அவன் கண்கள் உணர்ச்சியால் நிரம்பி வழிந்தது. “நன்முல்லை” என்று அவன் குரல் கொஞ்சம் நடுங்கியது, “எதுவாக இருந்தாலும் சரி, நான் மருத்தவனானவுடன் உனக்காக இங்கு கட்டாயம் திரும்ப வருவேன்" என்று உறுதியளிதான். "நீ என் உயிர், என் எல்லாம் நீயே. எனக்காக காத்திருங்கள், தயவு செய்து." என்று கெஞ்சினான். அவள் தலையசைத்தாள், அவள் முகத்தில் கண்ணீர் வழிந்தோடியது. அவள் நெற்றியிலும் கன்னங்களிலும் மென்மையான முத்தங்களைப் பதித்து அவளை இறுக அணைத்தான். அந்தக் கணம், அவள் உள்ளத்தில் மகிழ்ச்சியான நினைவாகப் பதிந்தது. அவள் என்றென்றும் சுமந்து செல்லும், ஒரு இன்பமான நினைவாக அது இருந்தது. ஆனால் அது ஒரு முடிவாகும் என்று அவள் அன்று நினைக்கவே இல்லை. முதலில் கொடுத்த வாக்கை அவன், கொழும்புப் பல்கலைக்கழகம் போன புதிதில் காப்பாற்றினான். கொழும்பிலிருந்து மின் கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் வந்தன, அவனது படிப்புகள், அவனது வாழ்க்கைப் போராட்டங்கள் மற்றும் அவர்களின் எதிர்காலத்திற்கான அவனது கனவுகள் நிறைந்த கதைகள். ஆனால் திங்கள்கள், ஆண்டுகளாக மாற, தொடர்புகள் அடிக்கடி வருவதில்லை. "நான் எனது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்" என்று அவன் தனது கடைசித் தொடர்பு ஒன்றில் கூறினான். பிறகு, மௌனம் தான் பதிலாக இருந்தது. விரைவில் மீண்டும் தொடர்புகொள்வான் என்று, தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு, நன்முல்லை காத்திருந்தாள். ஆனால், நாளாக நாளாக, அவள் ஆழ்மனதில் ஒரு பயம் வளர ஆரம்பித்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவன், தனது இறுதித் தேர்வில் முதலிடம் பெற்றதாகவும், இலண்டனில் படிக்க மதிப்புமிக்க தகுதிசார் கல்வி உதவித்தொகை பெற்றதாகவும், செய்தி அவளை எட்டியது. அவள் இதயம் பெருமிதத்தால் வீங்கியது, ஆனால் அவன் மேலும் விலகிச் செல்கிறான் என்பதை உணர்ந்து, அதுவும் வலித்தது. என்றாலும் அவள் காத்திருந்தாள். அவன், தன் கனவுகளை அடைய தன்னைத் துரத்திக் கொண்டிருப்பதாகவும், அவன் உறுதியளித்தபடியே தனக்காகத் திரும்பி வருவான் என்றும், அவள் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டாள். மலரவன் இறுதியாகத் தன் மேற்படிப்பை இலண்டனில் முடித்துக் கொண்டு, கிராமத்திற்குத் திரும்பியதும், எண்ணற்ற முறை நன்முல்லை நினைத்திருந்த மகிழ்ச்சியான சந்திப்பு, அங்கு நடைபெறவில்லை. அவன் அங்கு, அந்த இலண்டன் பல்கலைக்கழகத்தில் கண்டு பழகிக், காதலித்த தனது காதலியுடனும் அவளின் பெற்றோருடனும், பெற்றோருக்கு நேரடியாக அறிமுகப்படுத்தவும், தனது திருமணத்தைப் பெற்றோரின் வாழ்த்துடன் உறுதிப்படுத்தவும் திரும்பி வந்ததாக மற்றவர்களிடமிருந்து அவள் கேள்விப்பட்டாள். நன்முல்லையின் இதயம் நொறுங்கியது, ஆனால் அதைத் தனது, தன் கண்களால் பார்க்கும் வரை நம்ப மறுத்தாள். ஒரு நாள் மாலை, அவள் அந்தப் பழைய ஒற்றை மரத்தடியில் நின்றபோது, அவன், தன் வருங்கால மனைவியுடன் கடற்கரையோரம் நடந்து செல்வதைப் பார்த்தாள். அவனைப் பார்த்ததும் அவள் உள்ளம் துடித்தது. ஆனால், அவன் முன்போல் இருக்கவில்லை. அந்த முன்னைய கிராம மண்வாசனை அங்கு இருக்கவில்லை. அதிக மெருகூட்டப் பட்டவனாகவும், அதிக நம்பிக்கையுடையவனாகவும், மற்றும் ஒரு நகர்ப்புற மண் வாசனைதான் அவனில் தெரிந்தது. ஆனால், அவளைப் பொறுத்தவரையில், அவன் இன்னும் அவள் நேசித்த மலரவன்தான். தன் தைரியத்தை எல்லாம் வரவழைத்துக் கொண்டு, அவன் தன்னைக் கவனிக்கும் வரை காத்திருந்தாள். அவர்களின் கண்கள் சிறிது நேரம் சந்தித்தன, ஆனால் அவனது பார்வையில் எந்த உடன்பாடும் இல்லை. அவள் யார் என்று அவனது காதலி கேட்டபோது, அவன் தனக்குத் தெரியாது என்று நிராகரித்தான். "ஓ, சில பைத்தியக்கார கிராமத்து பெண் போலும், " என்று அவன் சாதாரணமாக, ஆனால் கொஞ்சம் உரத்த சத்தத்துடன் கூறினான். "அவள் தன் கணவனை இழந்திருக்கலாம் அல்லது எதையாவது இழந்திருக்கலாம்." என்றான். நன்முல்லையின் உலகம் சிதைந்தது. அவள் கத்த விரும்பினாள், அவனுடைய வாக்குறுதிகளை, அவர்கள் பகிர்ந்து கொண்ட அன்பை அவனுக்கு நினைவூட்ட. ஆனால் அவள் அமைதியாக இருந்தாள். அவளுடைய கண்ணியம் அவளைக்அந்த இடத்திலேயே வேரூன்ற வைத்தது. அவன் விலகிச் செல்வதைக் கண்டு அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. அவன் காதலியுடன் பேசும் போது, அவனது சிரிப்பு காற்றில் அவளுக்கு எதிரொலித்தது. அன்று முதல், நன்முல்லை வாழ்வு, கடலோர மரத்தடியில் நிலைத்தது. கிராமவாசிகள் அவளை அங்கு அடிக்கடி பார்ப்பார்கள். ஒரு புரியாத வெளிப்பாட்டுடன் அவள் அடிவானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பாள். சிலர் அவளைப் பரிதாபமாகப் பார்த்தனர். மற்றவர்கள், அவளை கிராமத்தின் பைத்தியக்காரப் பெண் என்று கேலி செய்தனர். ஆனால் நன்முல்லை அவை எதையும் பொருட்படுத்தவில்லை. அவள் இதயத்தில், மலரவனின் நினைவுகளில், அவன் கொடுத்த வாக்குறுதியில், இன்னும் ஒட்டிக்கொண்டாள். அவள் தொடர்ந்து காத்திருந்தாள், அவன் திரும்புவதற்காக அல்ல, ஆனால் அவள் அறிந்த காதலுக்காக, தன் வாழ்க்கையை வரையறுத்த காதலுக்காக மட்டுமே! மலரவன் எண்ணம் இதயத்தில் எரிய அங்கு இருந்தாள்; கல் மருங்கு எழுந்து, என்றும் ஓர் துளிவரக் காணா நல்மருந்து போல், நலன் அற உணங்கிய நங்கை மென் மருங்குல்போல் வேறுள அங்கமும் மெலிந்தாள். - அசோகா வனத்தில் சீதையின் நிலை / சுந்தர காண்டத்தில் இருந்து இறுதி மூன்று வரியும் எடுக்கப்பட்டது - (மருங்கு – பக்கத்திலே; உணங்கிய – வாடிய) மலரவனின் எண்ணம் அவளை எரித்து துன்புறுத்த, நன்முல்லை, [சீதை அசோக வனத்தில் இருந்தது போல்] கற்பாறைக்குப் பக்கத்திலே [ பழைய ஒற்றை மரத்தின் கீழ் இருந்த] தோன்றி வளர்ந்து, எக்காலத்திலும் ஒரு நீர்த்துளி கூட வருவதை அறியாத உயர்ந்த மூலிகையைப் போல, உடலும் உள்ளமும் அற்றுப்போக வாடிய அவள், மெல்லிய இடையைப் போல, மற்றைய அங்கங்களும் இளைத்து விடும்படி துயருற்று இருந்தாள். ஆண்டுகள் கடந்தன, நன்முல்லையின் தலைமுடி நரைத்தது. ஆனால் அந்த கடலோரத்தில் இருந்த ஒற்றை மரம் வலுவாக நின்றது. அதன் கிளைகள் காற்றில் அசைந்தன. அவளுடைய தளராத காதலுக்கு மௌன சாட்சியாக. ஒரு நாள், கதிரவன் மறைந்து வானம் கருஞ்சிவப்பு நிறமாக மாறியபோது, நன்முல்லை கண்களை மூடிக்கொண்டாள். அவள் உதடுகளில் மெல்லிய புன்னகை இன்னும் தெரிந்தது. அவளுடைய காத்திருப்பு, இந்த மண்ணில் கடைசியாக முடிந்தது. இந்த பிறவியிலோ அல்லது மறுமையிலோ, மீண்டும் தன் மலரவனைக் கண்டுபிடிப்பேன் என்று அவள் நம்பினாள். அதுவரை கடல் அவளின் கிசுகிசுக்களை சுமந்துகொண்டே இருக்கும், மரம் அவள் நினைவுகளைக் காத்துக்கொண்டிருக்கும் - காலம் தாண்டிய காதலுக்குச் சான்றாக! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்
  4. வளர்க்கின்ற நாய்க்கும்... விடுப்பு பார்க்கின்ற ஆசை இருக்கும்தானே... 🤣
  5. என்னுடைய அட்ரஸே செம்பாடுதான்! 😁
  6. உஷ் ,உஷ் கிடுகு வேலிக்குள்ள இருக்கிற எங்கன்ட கலாச்சார,பண்பாடுகளை...வெளியில சொல்லாதையுங்கோ ...
  7. யோசிச்சு பிடிக்க 2 மணித்தியாலம் எடுத்திட்டுது.....சிறுவர் முன் பள்ளி...சரிதானோ... ( சின்ன முதல்) ஐயா..அவரை தெரியாமல் ...ஆழமறியாமல் காலை விட்டுவிட்டேன்...காப்பாத்துங்கையா...🤣
  8. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 26ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2025) 27ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்த யாழ் இணையம், உலகத் தமிழர்களின் எண்ணங்களையும், உள்ளங்களையும் இணைக்கும் தருணங்களை உருவாக்கி வருகிறது. பல கருத்தாளர்கள், படைப்பாளிகள், தொழில்நுட்பவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து தமிழ் மொழியின் வளத்தையும், கருத்துச்சுதந்திரத்தையும் பறைசாற்றும் தளமாக இது திகழ்கிறது. இவ்வாண்டும், முன்னைய ஆண்டுகள்போலவே யாழ் இணைய உறவுகள் தங்கள் தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்து, தனிப்பட்ட ஆக்கங்களை பகிர்ந்து, விவாதங்களைப் பகிர்ந்ததற்காக அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றோம். தகவல் பரிமாற்றத்தில் விழிப்புணர்வு: ஈழத்திலும் உலகத்திலும் பரவி வரும் தவறான தகவல்கள் மற்றும் சதி முனைப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நம்பகமான தகவல்களை பகிர வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம். கருத்துக்கள் விவாதிக்கப்பட வேண்டும், ஆனால் அவை உண்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும். தமிழ் நலனுக்காக ஒருமைப்பாடு: தாயக மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடரும் நிலையில், உலகத் தமிழர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் உதவிக் கரங்களை நீட்டியதை இங்கு நினைவுப்படுத்த வேண்டியுள்ளது. சமூக நீதி, சமவுரிமை மற்றும் தமிழ்த் தேசிய சிந்தனையை வலுப்படுத்தும் முயற்சிகள் தொடர வேண்டும். புதிய உறுப்பினர்கள் – புதிய தொடக்கம்: இப்புதிய ஆண்டில், மேலும் புதிய உறுப்பினர்களை யாழில் இணைக்கும் ஒரு முயற்சியை மேற்கொள்ள விரும்புகின்றோம். நீங்கள் இதுவரை இணைந்திராவிடில் இணைந்து உங்கள் கருத்துக்களைப் பதிவிடும்படி வேண்டுகின்றோம். அத்துடன் உறுப்பினர்கள் உங்கள் சுற்றத்திலுள்ளவர்களுக்கு யாழ் இணையத்தை அறிமுகப்படுத்தி, கருத்துக்களத்தில் அவர்களையும் இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். யாழ் செழிப்புற வேண்டும் என பல்வேறு வகையில் ஆலோசனைகளைத் தந்து கொண்டு இருப்பவர்களுக்கும் மற்றும் காலநேரம் பாராது பல்வேறு சுமைகளுக்கு மத்தியிலும் களத்தினை வழிநடத்தும் மட்டுறுத்துனர்களுக்கும் யாழ் செழிப்புற வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கும் பாவனையாளர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்ந்தும் உங்கள் ஆலோசனைகளை எமக்கு தெரியப்படுத்துங்கள். இணைவோம் – வளர்வோம்: கடந்த காலங்களில் கூறியது போன்று, எமது மண்ணோடும், மக்களோடும் நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாக, துணையாக, ஒற்றுமையாய் பயணிப்போம். “நாமார்க்கும் குடியல்லோம்” நன்றி, யாழ் இணைய நிர்வாகம் திகதி: 30 மார்ச் 2025
  9. முதல்வர் செம்பாட்டானின் கதிரையைக் கைப்பற்ற சுவி மகா பாண்டிய குலோத்துங்கன் தலைமையில் ஒரு குழு புறப்பட்டிருக்கின்றது இரண்டு நாட்களாக அவர்களின் படையணி முதல்வர் செம்பாட்டானின் அரண்மனையை சூழ்ந்து நோட்டம் விடுகின்றது 😂 ஆ பத்து ஆ பத்து ஆ பத்து ஆ பத்து 😅
  10. 🙏சீ சீ இதுக்கு எல்லாம் மன்னிப்பு என்று ...நான் சும்மா பகிடிக்கு எழுதினேன் ...நம்ம முன்னாள் சபாநாயகர் ஞாபகம் வந்தது அது தான் வேறு ஒன்றுமில்லை...சிரிப்பு குறி போட்டுள்ளேன் 🙏
  11. யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறைக்கு வருமானம் புலம் பெயர்ந்த உறவுகளின் வருகை,சிங்கள மக்களின் வருகை மற்றும் தற்பொழுது இந்திய மக்களின் வருகையூடாக கிடைக்கின்றது ... இன்னும் 10 வருடங்களின் பின்பு புலம் பெயர் மக்களின் வருகை குறைந்து விடும்... இந்திய மக்களின் வருகை நிரந்தர மற்றது ...சிங்கள அரசியல்வாதிகள்,மற்றும் காலநிலையுடன் சம்பந்தப்பட்டது... ஆனால் சிங்கள மக்களின் வருகை நிரந்தரமானது...விகாரைகளை கட்டி அதை புனிதப்படுத்தி சிங்கள மக்களை வரப்பண்ணுவதில் அரசாங்கத்துக்கு பெரும் பங்கு உண்டு.. நயினா தீவு எம் கண் முன்னே சாட்சியாக இருக்கின்றது ..74 ஆம் ஆண்டு இருந்த நயினாதீவும் 2024 ஆண்டு இருக்கும் நயீனாதிவுக்கும் வித்தியாசம் உண்டு..
  12. தொடர்ந்தும் தனது பதவியத் தக்க வைத்துக் கொண்ட முதல்வர் செம்பாட்டானுக்கும் அவருடைய புதிய துணை முதல்வர் alvayan அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
  13. தம்பி இன்னும் ஒருபடி ஏறணும்பா.
  14. இது வந்து ..மாவீரர் துயிலுமில்லங்களை இல்லாதொழிப்பதற்கு ..எடுக்கப்படும் ..முதல் நடவடீகஐ ..சுடலையை வாங்கி கோட்டல் கட்டுவதற்கும் நம்மினம் இருக்குது....கடைசியில் பூமி அதிர்வுடன் அழிந்து ..இறந்த ஆன்மாக்களின்நெஞ்சை குளிரவைக்கும்
  15. நீங்கள் என்னை நேர்சரி குழந்தை என சொல்லவில்லை தானே ..🤣 நான் யாழ்களத்தில் அரசியல் விஞ்ஞான துறையில் பி.ஹெச்.டி எடுத்த ஆள் ...சர்டிவிகேட் தேவை என்றால் நிர்வாகத்திடம் கேளுங்கள் ..அவர்களிடம் இல்லை என்றால் நான் மீண்டும் தீசிஸ் எழுதி எடுத்து காட்டுவேன்.. ...🤣 ஒரு நாட்டின் முன்னாள் சபாநாகர் போன்று
  16. என்ன சார் ....எனக்கு வாழ்த்தில்லையா....
  17. இது நேர்சரி குழந்தைக்கும் தெரியும் ... கண்ணை மூடிகொண்டு நாடகம் ஆடுகினம்
  18. அது சரி ,,வீண் விரயம் செய்கின்றனர் என ஏனைய கட்சிகளை திட்டி கூவி கூவி பிரச்சாரம் செய்த இவர்கள் ..இப்பொழுது சும்மா அதிருதில்ல ரஜனி ஸ்டைலில் மாலைகள் சகிதம் வலம் வருகின்றனர்...நட்சத்திர தொப்பி எங்கே ? சிவப்பு சேர்ட் எங்கே? ஆனயிறவு உப்பு என பெயர் மாற்றத்துடன் விறபனைக்கு வந்தால மட்டுமே உப்பு சாப்பிடுவேன் அதுவரை உப்பு போட்டு சாப்பிட மாட்டேன் ...வைத்திய ஆலோசனைப்படி😅
  19. வடமராட்சியில் செம்பாட்டு மண் இருக்கு. புகையிலை, மிளகாய் எல்லாம் விளையிற இடம்.. இப்போது கல்யாண முருங்கையால் நிறைந்திருக்கு!
  20. ராஜா உப்பு . அடுத்தது ராணி உப்பு.🤣
  21. வணக்கம் வாத்தியார் . .........! பெண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல் மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே நாலப் போல் ரெண்ட போல் நாளும் பொழுதுப் போல் நானும் அங்கு நின்றிருப்பேனே பெண் : பதில் கேளு அடி கண்ணம்மா ஆஆ நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா என்னம்மா கண்ணம்மா ஹோய் பெண் : எம்மனசு மாமனுக்கு பத்திரமா கொண்டு செல்லு இன்னும் என்ன வேணுமுன்னு உத்தரவு போடச் சொல்லு ஆண் : கொத்து மஞ்சள் தான் அரைச்சி நித்தமும் நீராடச் சொல்லு மீனாட்சிக் குங்குமத்த.நெத்தியில சூடச் சொல்லு பெண் : சொன்னத நானும் கேக்குறேன் சொர்ணமே அங்க போய் கூறிடு ஆண் : அஞ்சல மாலை போடுறேன் அன்னத்தின் காதுல ஓதிடு பெண் : மாமன் நெனப்புத்தான் மாசக்கணக்கிலே பாடா படுத்துதென்னையே புது பூவா வெடிச்ச பெண்ணையே ஆண் : வேலங்குச்சி நான் வளைச்சு வில்லு வண்டி செஞ்சி தாரேன் வண்டியில வஞ்சி வந்தா வளைச்சி கட்டி கொஞ்ச வாரேன் பெண் : ஆலங்குச்சி நான் வளைச்சு பல்லக்கொன்னு செஞ்சு தாரேன் பல்லக்குல மாமன் வந்தா பகல் முடிஞ்சு கொஞ்ச வாரேன் ஆண் : வட்டமாய் காயும் வெண்ணிலா கொல்லுதே கொல்லுதே ராத்திரி பெண் : கட்டிலில் போடும் பாயும் தான் குத்துதே குத்துஊசி மாதிரி ஆண் : ஊரும் உறங்கட்டும் ஓசை அடங்கட்டும் காத்தா பறந்து வருவேன் புதுபாட்டா படிச்சி தருவேன் ........! --- ஆலப்போல் வேலப் போல் ---
  22. உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி ........! 😘
  23. 1983 க‌ருப்பு யூலை ப‌ற்றி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன் , ம‌ற்ற‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் நீங்க‌ள் எழுதி தான் தெரிந்து கொண்டேன் க‌ந்த‌ப்பு அண்ண‌.................................
  24. "எங்கே எனது ஒளி" & "காளையை அடக்கு கன்னியை மடக்கு " "எங்கே எனது ஒளி" எங்கே எனது ஒளி சொல்வாயோ அங்கே எனக்கு இடம் வேண்டும் மங்காத ஒளியாய் வெண் பிரம்பு ஏங்கும் இதயத்துக்கு ஒரு வழிகாட்டி சங்கு ஊதி வழிகாட்டுவது போல தங்கக் கோல் குருடனின் வெளிச்சம்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .................................................................. "காளையை அடக்கு கன்னியை மடக்கு " காளையை அடக்கு கன்னியை மடக்கு மாலையை அணிந்து தாலியைக் கட்டு மேளத்தைத் தட்டி ஊர்வலம் செல்லு கோலத்தைப் போட்டு பொங்கலைப் பொங்கு! சிவப்புத் துணியை கையில் ஏந்து மஞ்சள் நிலாவில் மார்பில் சாய கருத்த எருதின் திமிலைப் பிடி வெள்ளை நெற்றியில் திலகம் இட! இடுப்புச் சிறுத்தவளை பரிகாசம் செய்தவளை இறுமாப்பு கொண்ட மண்டை பெருத்தவளை ஏறுதழுவி வெற்றி கண்டு மடக்கு வீறாப்பு விட்டு வந்திடுவாள் உன்னுடன்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  25. இருக்கலாம்😂ஆனால் போய் இருக்கும்போது பாலுக்காகவும் இயற்கை உரத்துக்காகவும் இரண்டு ஆடுகள் வளர்ப்பதாகத்தான் எண்ணம். மாட்டு எருதான் இன்னும் சிறப்பு. ஆனால் மாட்டுக்கு பெரிய மேய்சல் நிலம் தேவை. வேலையும் கூட 🤣
  26. அப்பிடிச் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. விளையாட்டில் எல்லாரும் வீரர்களே. அவர்களின் திறமையால்த்தான் அவர்கள் அணியில் இருக்கிறார்கள். ஏலத்தில் எடுக்கும்போது அவர்களின் திறமை மற்றும் பெறுமதியை வைத்து, அவர்கள் எப்படி அணியில் பொருந்திப் போவார்கள் என்றுதான் பார்ப்பார்கள். வடக்கன் என்ற சொற்பதம் என்னைப் பொறுத்தவரை மிகவும் தவறானது. இவ்வாறு சொல்வதிலும், இவ்வாறு சொல்லப்படும் இடத்தில் இருப்பதற்கும், எனக்கு உடன்பாடில்லை.
  27. குருட்டு சாத்திரி மாதிரிதான். எட்டுப் போட்டிகள்தான் முடிஞ்சிருக்கு. இன்னும் 62 போட்டி இருக்கு. இந்த குருட்டு சாத்திரம் எவ்வளவு காலத்துக்குப் போகும் என்று பார்ப்பம். இந்தக் களத்தினாற்தான், நானும் இப்போது ஆர்வமாக ஜபில் பார்க்கிறேன். உங்களுக்கு இல்லாததா வசி. எடுத்துக்கங்க. எல்லாம் நமதே. அதுதான் உண்மையாக நாம் பார்த்தது. சென்னை எப்போதும் தளக்கடுப்பிலும் பந்தை ஏந்துவதிலும் சிறப்பாகச் செயல்படுவர். நேற்று அதில் கோட்டைவிட்டதால் RCB அதிக ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். தனிப்பட்ட வீரர்களைக் குறை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.
  28. சிஎஸ்கே வரலாற்றுத் தோல்வி: சிக்ஸர்களை விளாசியும் தோனியை ரசிகர்கள் விமர்சிப்பது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் 17 ஆண்டுகளுக்குப் பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்தது. சிஎஸ்கே அணி 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன் மட்டுமே எடுத்து 50 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சென்னை அணியின் இந்த வரலாற்றுத் தோல்விக்கு காரணம் என்ன? நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் தோனி சிக்ஸர், பவுண்டரிகளை விளாசியும் கூட சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை விமர்சிப்பது ஏன்? சால்ட், படிக்கலின் அதிரடி சிஎஸ்கே அணி கலீல் அகமதுவை வைத்து ஆட்டத்தை தொடங்கிய நிலையில் மற்றொருபுறம் அஸ்வினை பந்துவீசச் செய்தது. அவரின் முதல் ஓவரிலேயே பில் சால்ட் சிக்ஸர், பவுண்டரி என 16 ரன்களை விளாசினார். இதனால் வேறு வழியின்றி நூர் முகமதுவை பந்துவீச அழைத்தனர். சால்ட் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நூர் முகமது பந்துவீச்சில் தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் சிறிய கேமியோ ஆடிக்கொடுத்தார். பவர்ப்ளேயில் ஆர்சிபி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் சேர்த்தது. 10.3 ஓவர்களில் ஆர்சிபி அணி 100 ரன்களை எட்டியது. ஜடேஜாவின் முதல் ஓவரை கட்டம் கட்டிய படிக்கல் சிக்ஸர், பவுண்டரி என 15 ரன்களை விளாசினார். படிக்கல் 27 ரன்கள் சேர்த்தபோது, அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஆர்சிபி அணி 2 விக்கெட்டுகளை இழந்த போதும் விராட் கோலி நிதானமாக பேட் செய்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES கோலி பேட்டிங்கில் தடுமாற்றம் சிஎஸ்கே அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் கோலி அவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பேட் செய்ய முடியவில்லை. நினைத்த ஷாட்களை அடிக்க முடியவில்லை. தொடக்க ஆட்டக்காரராக வந்துள்ளதால் சிக்ஸர், பவுண்டரிக்கு பலமுறை கோலி முயற்சித்தார். பெரிதாக ஷாட்கள் அமையவில்லை. இதனால் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து விளையாடினார். பதிராணா வீசிய ஓவரில் கோலியின் ஹெல்மெட்டில் பந்துதாக்கியது. முதலுதவிக்குப்பின், ஒரு சிக்ஸர், பவுண்டரியை கோலி அடித்தார். இருப்பினும் சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் கோலியின் (31) பேட்டிங் எதிர்பார்ப்புக்குரிய வகையில் இல்லை. முதல் ஆட்டத்தில் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்த கோலி நேற்று 100 ஸ்ட்ரைக் ரேட்டிலும் ஒரு சிஸ்கர், 2 பவுண்டரி மட்டுமே அடித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் களத்துக்கு வந்த பின் அவ்வப்போது பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறந்தன. பட்டிதாருக்கு மட்டும் நேற்று 3 கேட்சுகளை சிஎஸ்கே வீரர்கள் கோட்டை விட்டனர். கை மேல் கிடைத்த கேட்சை தீபக் ஹூடாவும், கலீல் அகமதுவும், ராகுல் திரிபாதியும் கோட்டைவிட்டனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திய பட்டிதார், சுழற்பந்துவீச்சையும், வேகப்பந்துவீச்சையும் துவம்சம் செய்தார். விராட் கோலி ஆட்டமிழந்தபின் பட்டிதாருக்கு, சரியான பார்ட்னர்ஷிப் அமையவில்லை. லிவிங்ஸ்டோன் (10), ஜிதேஷ் ஷர்மா(12) என நூர் அகமது பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். ஆனால் மனம் தளராமல் ஆடிய பட்டிதார் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். 15.6 ஓவர்களில் ஆர்சிபி 150 ரன்களை எட்டியது. டெத் ஓவர்களில் ஆர்சிபி அணி சற்று தடுமாறியது. பதிராணா ஓவரை சமாளிக்க முடியாமல் பட்டிதார் விக்கெட்டையும், குர்னல் பாண்டியா விக்கெட்டையும் இழந்தது. ஆனால் சாம் கரன் வீசிய கடைசி ஓவரில் டிம் டேவிட் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி அணியை பெரிய ஸ்கோருக்கு எடுத்துச் சென்றார். மியான்மரில் 7.7 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழப்பு50 நிமிடங்களுக்கு முன்னர் மியான்மரை புரட்டுப்போட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்- புகைப்படத்தொகுப்பு40 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஹேசல்வுட், புவனேஷ் மிரட்டல் ஆடுகளத்தில் சிறிய அளவு ஒத்துழைப்பு கிடைத்தாலும் பந்துவீச்சை எவ்வாறு மாற்ற முடியும் என்பதை புவனேஷ்வர் குமாரும், ஹேசல்வுட்டும் நேற்று செய்து காண்பித்தனர். புவனேஷ் 6-8 மீட்டர் லென்த்தில் பந்துவீசி சிஎஸ்கே பேட்டர்களை ஒருபுறம் திணறடிக்க, ஹேசல்வுட் 8-10 மீட்டர் லென்த்தில் பவுன்ஸரையும், சீமிங்கையும் அளித்து திக்குமுக்காடச் செய்தனர். தரமான வேகப்பந்துவீச்சுக்கு முன் சிஎஸ்கே பேட்டர்களின் திறமை என்ன என்பது நேற்று வெளிப்பட்டுவிட்டது. காயத்திலிருந்து மீண்டு வந்திருந்த புவனேஷ்வரின் அவுட்ஸ்விங் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சிஎஸ்கே பேட்டர்கள் திணறினர். அதிலும் டெஸ்ட் பந்துவீச்சு போன்று ஹேசல்வுட் வீசியதை சிஎஸ்கே பேட்டர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை தொடக்கத்திலேயே ஹேசல்வுட் எடுத்து அதிர்ச்சியளித்தார். புவனேஷ்வர் தனது பவர்ப்ளே ஓவரில் 73-வது விக்கெட்டாக தீபக் ஹீடாவின் விக்கெட்டை வீழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES பவர்ப்ளே முடிவதற்குள் சிஎஸ்கே அணி 3 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சாம்கரனும் பெரிதாக ஸ்கோர் செய்யாமல் 8 ரன்னில் லிவிங்ஸ்டோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே ஓரளவு பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் யாஷ் தயால் பந்துவீச்சில் இருவரின் விக்கெட்டும் வீழ்ந்தது. யாஷ் தயால் வீசிய 13-வது ஓவரில் ரவீந்திரா 41 ரன்னில் இன்சைட் எட்ஜில் போல்டாகினார். அதே ஓவரில் ஷிவம் துபேயும் 19 ரன்னில் இன்சைட் எட்ஜ் எடுத்து போல்டாகினார். இருவரும் ஆட்டமிழந்தபோதே சிஎஸ்கே அணியின் தோல்வி ஏறக்குறைய உறுதியானது. வெற்றிக்கு தேவைப்படும் ரன்கள் அதிகம் இருந்தது. விக்கெட்டுகள் கைவசம் இல்லை. ஆடுகளம் ஆர்சிபி பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகி இருக்கிறது. ஸ்கோர் செய்வதும் கடினமாக இருக்கிறது என்பதை சிஎஸ்கே பேட்டர்கள் உணர்ந்தனர். அஸ்வின் 11 ரன்களில் லிவிங்ஸ்டோன் பந்துவீச்சிலும் , ஜடேஜா 25 ரன்களில் ஹேசல்வுட் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ரசிகர்களுக்கு விருந்தளிக்க 9-வது இடத்தில் களமிறங்கிய தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 30 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சிஎஸ்கேயின் தோல்வியை விரும்பாத ரசிகர்களுக்கு, தோனியின் பேட்டிங் ஆறுதலாக அமைந்தது. சொந்தமண்ணில் மோசமான தோல்வியை தவிர்க்கும் வகையில் தோனியும் அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்தார். 'நெஞ்சை நோக்கி நேராக சுடுவது போல' பூமியை நோக்கி கதிர்களை வீசும் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு - முக்கியத்துவம் என்ன?28 மார்ச் 2025 பாங்காக்: சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த 30 மாடி கட்டடம்28 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES கோலி கொண்டாட்டம் ஆர்சிபி அணி தொடக்கத்திலிருந்து எடுத்த ஒவ்வொரு விக்கெட்டையும் கோலி ரசித்து கொண்டாடினார். தீபக் ஹூடா பேட்டில் பந்து உரசிச் சென்றது பந்துவீச்சாளர் புவனேஷுக்கு கூட தெரியவில்லை. ஆனால், கோலி விரலை உயர்த்திக்கொண்டே அவுட் என குரலை உயர்த்தி ஓடிவந்தார். அது மட்டுமல்லாமல் டிஆர்எஸ் எடுங்கள் என்று சைகையால், பட்டிதாரையும் வலியுறுத்தினார். மூன்றாவது நடுவர் கணிப்பில் பேட்டில் பந்து உரசியது தெரிந்தது. ஹூடா விக்கெட்டை வீழ்த்தியதில் பெரும்பங்கு கோலிக்கு உரியது. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமே மோசமான பீல்டிங்கும், இன்னும் வயதான வீரர்களை நம்பி இருப்பதும்தான். குறிப்பாக நேற்றைய ஆட்டத்தில் மட்டும் பட்டிதாருக்கு 3 கேட்சுகளை தீபக் ஹூடா,கலீல் அகமது, திரிபாதி ஆகியோர் கோட்டைவிட்டனர். தோனி ஒரு விக்கெட் கீப்பிங் கேட்சை கோட்டைவிட்டார். அடுத்தார்போல் ஜடேஜா, அஸ்வின், தோனி, சாம் கரன், ஷிவம் துபே என கடந்த பல சீசன்களாக ஆடிய வீரர்களை இன்னும் பயன்படுத்தும்போது, அவர்களுக்கு எவ்வாறு பந்துவீசுவது என எதிரணி எளிதாக ஹோம்ஓர்க் செய்துவரும். சிஎஸ்கே அணியில் இளம் வீரர்கள் பலர் இருந்தும் ஒருவருக்கு கூட பரிசோதனை அடிப்படையில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் மற்ற அணிகளில் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஏதேனும் புதிய வீரரை களமிறக்கி பரிசோதிக்கிறார்கள். சிலநேரம் அது வெற்றிக்கான வாய்ப்பாக மாறிவிடுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே பந்துவீச்சு நேற்று படுமோசமாக இருந்தது. குறிப்பாக அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சு சராசரிக்கும் குறைவாக இருந்தது. நூர் அகமது மட்டும் தப்பினார். வேகப் பந்துவீச்சில் பதிராணா, கலீல் அகமது பந்துவீச்சில் வேகம் இருக்கிறதே தவிர துல்லியமான லென்த், பவுன்ஸ், ஸ்விங் இல்லை. ஹேசல்வுட், புவனேஷ்வர் பந்துவீச்சில் ஈட்டிபோல் இறங்கிய துல்லியம், லென்த் சிஎஸ்கே பந்துவீச்சாளர்களிடம் இல்லை. அடுத்ததாக 196 ரன்கள் எனும் பெரிய ஸ்கோர் மனரீதியாகவே வீரர்களுக்கு பதற்றத்தையும், ரன் சேர்க்கவேண்டி நெருக்கடியையும் ஏற்படுத்திவிட்டது. இதனால் விக்கெட் வீழ்ந்தவுடன் அழுத்தம் காரணமாக பெரிய ஷாட்டுக்கு முயன்று விக்கெட்டை இழந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES தோனியை ரசிகர்கள் விமர்சிப்பது ஏன்? தோனி 16 பந்துகளில் 2 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 30 ரன் சேர்த்தாலும் கூட, பேட்டிங் வரிசையில் 9-வதாக அவர் களம் இறங்கியது விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது. 13 வது ஓவரில் ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே ஆகிய இருவரின் விக்கெட்டையும் யாஷ் தயால் வீழ்த்தினார். சிஎஸ்கே வெற்றி பெற ஓவருக்கு 16 ரன்கள் சராசரியாக தேவைப்பட்ட அந்த நேரத்தில் தோனி களமிறங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு மாறாக சிஎஸ்கே அணி ரவிச்சந்திரன் அஸ்வினை களமிறக்கியது. ஆட்டத்தின் 16-வது ஓவரில்தான் தோனி களமிறங்கினார். அந்த நேரத்தில், ஆட்டம் கிட்டத்தட்ட சிஎஸ்கே கையைவிட்டு போய்விட்டிருந்தது. இனி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்கிற கட்டத்தில், ஆட்டத்தின் கடைசி ஓவரில் 2 சிக்சர்களை விளாசி தனது ரசிகர்களை தோனி பரவசப்படுத்தினார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் சிஎஸ்கே அணி தோல்வியடைந்துள்ளது. ரசிகர்கள் பலரும், சேஸிங்கில் தோனி மிகவும் பின்வரிசையில் இறங்கியதை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். பட மூலாதாரம்,X சேஸிங்கில் அனுபவம் கொண்ட, பதற்றம் கொள்ளாமல் ரன் ரேட்டை பராமரிக்கும் திறன் கொண்ட தோனி அணிக்குத் தேவையான, இக்கட்டான நேரத்தில் களமிறங்காதது ஏன்? என்பது அவர்களின் கேள்வி. சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர், 5 கோப்பைகளை பெற்றுக் கொடுத்த அனுபவமான வீரர், இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் தாமாக முன்னெடுத்து நடுவரிசையில் களமிறங்கி ஆட்டத்தை தங்கள் பக்கம் இழுத்து வந்திருக்க வேண்டும். ஆனால், டெய்லெண்டர்கள் போல் கடைசியில் 9-வது இடத்தில் களமிறங்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர். தோனியின் சிக்சர்களாலும் தடுக்க முடியாத சிஎஸ்கேயின் வரலாற்றுத் தோல்வி SRH-ஐ சிதைத்த ஷர்துலின் விஸ்வரூபம் - லக்னௌவின் ஆணிவேராக அமைந்த பூரன், மார்ஷ் ஜோடி 'என் மகனிடம் தோனி சொன்னது இதுதான்' - சிஎஸ்கே அணியை மிரட்டிய விக்னேஷ் புத்தூரின் தந்தை நெகிழ்ச்சி ஐபிஎல் வந்தாலே அதிகம் பேசப்படும் காவ்யா மாறன் யார்? இவரது பின்னணி என்ன? ஆட்ட நாயகன் பட்டிதார் ஆர்சிபி அணி வெற்றியுடன் ஐபிஎல் தொடரை 3-வது முறையாகத் தொடங்கியுள்ளது. 2014-வது சீசனில் அடுத்தடுத்து வெற்றிகளுடனும், 2021 ஐபிஎல் சீசனில் தொடர்ந்து 4 வெற்றிகளுடனும் ஐபிஎல் சீசனை ஆர்சிபி தொடங்கியது. ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் வேகப் பந்துவீச்சாளர்களும், கேப்டன் பட்டிதார், சக வீரர்களான பில்சால்ட், கோலி, படிக்கல், டிம்டேவிட் ஆகியோரின் கூட்டு உழைப்புதான். 32 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து நடுப்பகுதியில் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்த கேப்டன் ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஆர்சிபி எப்படி சிஎஸ்கே அணியின் 12 ஓவர்கள் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளப்போகிறது என்று எதிர்பார்ப்பே ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் ஆர்சிபியின் ஹேசல்வுட், புவனேஷ்வரின் தரமான ஸ்விங், ஸீமிங்,எஸ்ட்ரா பவுன்ஸ் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தோற்றது சிஎஸ்கே. புவனேஷ்வர் குமார், ஹேசல்வுட் இருவரும் 7 ஓவர்கள் வீசி 41 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைச் சாய்த்தனர். சிஎஸ்கே அணியின் வலிமையே சுழற்பந்துவீச்சுதான் என்று கூறப்பட்டது. ஆனால், நேற்று அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சை பில்சால்ட், படிக்கல், கோலி வெளுத்து வாங்கினர். இதனால் அஸ்வினுக்கும், ஜடேஜாவுக்கும் 5 ஓவர்களே வழங்கப்பட்டது. இருவரும் 5 ஓவர்கள் வீசி 59 ரன்களை வாரி வழங்கினர். சுழற்பந்து வீச்சாளர்கள் 9 ஓவர்கள் வீசிய நிலையில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 95 ரன்களை வாரி வழங்கினர். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆட்டத்தை மாற்றிய 6 ஓவர்கள் மாபெரும் வெற்றிக்குப் பின் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் பேசுகையில் " இந்த ஆடுகளத்தில் இது நல்ல ஸ்கோர். பந்து சிலநேரம் நின்று வந்தது, பேட்டிங் செய்வது எளிதாக இல்லை. பவுண்டரி, சிக்ஸர் அடிப்பதும் கடினமாக இருந்தது. சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை வீழ்த்துவது சிறப்பானது. ரசிகர்கள் சிஎஸ்கேவுக்கு ஆதரவாக இருக்கும்போது அதை மீறி சிஎஸ்கே அணியை வென்றோம். என்னுடைய பேட்டிங் முக்கியமானது. 200 ரன்கள் வரை எதிர்பார்த்தோம். களத்தில் நிலைத்து நின்றுவிட்டால் பெரிய ஸ்கோருக்கு இட்டுச் செல்ல திட்டமிட்டேன். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சற்று ஒத்துழைத்ததால் எங்களின் பந்துவீச்சாளர்களும் நன்கு பந்துவீசினர். குறிப்பாக லிவிங்ஸ்டோன் சிறப்பாகப் பந்துவீசினார். ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் இருவரும் சேர்ந்து முதல் 6 ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிவிட்டனர். கடினமான லென்த்தில் பந்துவீசி, பேட்டர்களை திணறவிட்டனர்" எனத் தெரிவித்தார். வங்கதேசத்தில் ரோஹிஞ்சா அகதிகள் வாழும் உலகின் மிகப்பெரிய முகாம் மோசமான நிலையில் இருப்பது ஏன்?28 மார்ச் 2025 படலந்த சித்ரவதை முகாமுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் என்ன தொடர்பு? ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை கூறும் தகவல்கள்25 மார்ச் 2025 3-வது முறை தோல்வி 50 ரன்களில் தோற்றது என்பது சிஎஸ்கே அணியைப் பொருத்தவரை மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் கிடைத்த தோல்வியாகும். இதற்கு முன் 50 ரன்கள் வித்தியாசத்துக்கு மேல் 2 முறை மட்டுமே சிஎஸ்கே தோற்றுள்ளது. மும்பைக்கு எதிராக 2013ல் 60 ரன்கள் வித்தியாசத்திலும், 2022ல் பஞ்சாப் அணிக்கு எதிராக 54 ரன்கள் வித்தியாசத்திலும் சிஎஸ்கே தோற்றது. அதன்பின் இப்போது 50 ரன்களில் சிஎஸ்கே தோல்வி அடைந்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1mnm72eg17o
  29. என்ன சொல்கிறீர்கள் 1957, 1977,1981, 1983 கறுப்பு யூலை என இன அழிப்பு செய்யவில்லையா?. 35 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சத்துருக்கொண்டான் இனப்படுகொலை கேட்டாலே உடல் நடுங்கும். செம்மணி புதைகுழி மறந்து விட்டீர்களா?
  30. யாழ்பாணத்திலோ கவரிமான் பரம்பரை என்று வீர வசனம் வெளிநாட்டில் தக்கன பிழைக்கும் என்று scientific theory யை தான் பவ்வியமாக தங்களுக்கு கடைபிடிப்பார்கள்
  31. எங்கள் தலைவர் தங்கத் தலைவர் தானைத் தலைவர் 😂 யாழ் களத்தின் முடி சூடா மன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கன் ❤️ சில காலம் துணை முதல்வர் பதவியை தானே கேட்டு வாங்கியுள்ளார். இன்றைய முதல்வர் செம்பாட்டான் மக்களின் நலன்களுக்கு மதிப்பளிக்கின்றாரா என ஒட்டுப் பார்க்கும் வேலையில் இறங்கியுள்ளார் 😅 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
  32. ஆயுதம் ஏந்தி போராடியது தவறு என்றுணர்ந்து ஜனநாயகத்துக்கு திரும்பியவர் பேசுற பேச்சா அல்லது பம்மாத்து வேலையா இது? தேர்தலுக்கு முன் ஒரு வீரப்பேச்சு, பின் வேறொரு அதிகாரப்பேச்சு. அது சரி, எல்லா கட்சிகளும் ஏதோ ஒரு கட்சிகளுடன் இணைகின்றன, இவர்களை இணைத்துக்கொள்வதற்கு யாரும் முன்வரவில்லை. வேறென்ன, அழுக்குகள் அழுக்குகளுடன் இணைய வேண்டும். இந்தப்பேச்சை யார் எழுதிக்கொடுத்தாரென தெரியவில்லை? ம்.... பெரும் பதவி முதலமைச்சர் பதவியிலிருந்து ஒரு பியோனைக்கூட பதவிக்கமர்த்த தன்னால் முடியவில்லை என்று புலம்பியவர், கிழக்கு மக்களின் தலைவிதியை மாற்றப்போகிறாராம். தாங்க முடியவில்லை இவரின் பகிடியை. அந்தபுலம்பலின் இணைப்பை யாராவது இணைத்துவிடுங்கள் முடிந்தால்.
  33. நான் தெரிவு செய்த‌ அணியின் இர‌ண்டு மூன்று தோல்விக்கு அணிக‌ளின் க‌ப்ட‌ன் மார் விட்ட‌ பிழை , ல‌க்னோ விளையாடின‌ முத‌லாவ‌து விளையாட்டில் ல‌க்னோ க‌ப்ட‌ன் 10வ‌து விக்கேட்ட‌ வ‌டிவாய் அவுட் ஆக்கி இருந்தால் 5ர‌ன்ஸ்சில் ல‌க்னோ வென்று இருக்கும் இன்று சென்னை விளையாட்டில் க‌ப்டன் தொட்டு தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் வ‌ரை ச‌ரியாக‌ விளையாட‌ வில்லை நியுசிலாந் வீர‌ர் ம‌ற்றும் அப்கானிஸ்தான் சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் த‌ங்க‌ட‌ க‌ட‌மையை சரியா செய்த‌வை..............ம‌ற்ற‌வை ப‌டு சுத‌ப்ப‌ல் அண்ணா.............. என‌க்கு இந்த‌ ஜ‌பிஎல் தொட‌க்க‌ம் ந‌ல்ல‌ மாதிரி அமைய‌ வில்லை பாப்போம் போட்டி முடிவில் எத்த‌னையாவ‌து இட‌த்துக்கு வ‌ருகிறேன் என்று.........................
  34. இது உண்மை தான் இன்று இந்த இரண்டு அணிகளையும் விட அதிர்ஷம் உள்ளவர் எங்கள் முதல்வர் செம்பாட்டான் தான்😅 முதல்வர் செம்பாட்டானுக்கு வாழ்த்துக்கள் 😂
  35. அந்த ஆறு பேரின் பின்பக்கத்தையும் காட்டுங்க. மச்சம் எங்கே இருக்கிறதென்று பார்க்கணும். ஒருத்தர் விதிவிலக்கு! மாறி உள்ளே அகப்பட்டுவிட்டார்! அவர் தானாகவே பொல்லைத் தந்துவிட்டு இருக்கிறார்.
  36. செம்பாட்டு சாத்திரியார் நல்லாத்தானே சொல்லுகின்றார்.............🤣. எந்த அணி வெல்லும், எந்த அணி தோற்கும், எதுவுமே எவரின் கைகளிலும் இல்லை போல......... அதுவாக நடக்குது............ நடப்பதை நாங்கள் பார்க்கின்றோம்............🤣. ஒவ்வொரு போட்டியும் ஒரு சுரண்டும் அதிர்ஷ்டலாபச் சீட்டு போல...........😜.
  37. மாணவர்களின் மண்டைக்குள் எத்தனை கிலோ அறிவு இருக்க வேணும் என பாருங்கோ அதை விடுத்து புத்தக பையின் நிறையை பார்க்காமல்
  38. செத்த கிளிக்கு ஏன்டா கூடு...என்ற வடிவேலின் தத்துவத்துக்கு ஏற்ற வகையில் இதை ஏன் பார்ப்பான் ஏன் அவதிப்படுவான் இத்திரைப்படம் பற்றி மாற்று கருத்துடன் ஒர் விமர்சனம் பார்த்தேன்...
  39. செம்பாட்டான் முதல்வர் ...கருணாநிதிபோல் அசையாமல் இருக்கிறார்...அவருக்கும் சுவி சார்.பிரதிமுதல்வர்...ரணில்போல் அதிர்ஸ்டத்தில் வந்தவர் (கோபம் வேண்டாமே ) அவருக்கும் எனது வாழ்த்துக்கள்
  40. பெரிசு என்று போட்டிருக்கிறபடியால் நாம ஏன்? இந்தத் திரி நமக்கில்லை என்று விட்டுவிட்டேன். படத்தை இணைத்தால்த் தானே எழுத முடியும்.
  41. தமிழ் மக்கள் தன்னை நிராகரித்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிக்கை விட்டவங்கள் இப்ப அரசியல் அறிக்கை தினமும் விட வேண்டிய நிலை .இப்படியொரு பிழைப்புக்கு பதிலா யாழ்ப்பான பஸ் ஸ்ராண்டில் பிச்சை எடுத்து பிழைக்கலாம் .
  42. அரசாங்க தரப்பு இதை நீதிமன்றம் ஒன்றில் கூறினால் ஏற்பார்களா? இந்த வாதம் எடுபடுமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.