Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46798
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87991
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    38771
    Posts
  4. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    8
    Points
    15791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/31/25 in Posts

  1. எவ்வளவோ சவால்களுக்கு மத்தியில் படித்து, பல்கலைக்கழக அனுமதி பெற்று படிக்க வரும் சக மாணவர்களை பகிடிவதை எனும் பெயரில் சித்திரவதை செய்யும் இந்த காட்டுமிராண்டிகள் தான் நாளைக்கு மருத்துவர்களாகவோ, வழக்கறிஞர்களாகவோ, ஆசிரியர்களாகவோ சமூகத்தில் வலம்வரப் போகின்றனர். அல்லது, அரச வேலை தா என்று அரசிடம் பிச்சை எடுக்க போகின்றனர். எத்தனை அரசுகள், கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் திருந்தாத காட்டுமிராண்டிக் கூட்டங்களைத் தான் இலங்கை கல்வி அமைப்பு உற்பத்தி செய்து அனுப்புகின்றது.
  2. ஐபிஎல் 2025 இன் 12வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 16.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களுடன் சுருண்டது. அஷ்வானி குமார் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி ரியான் ரிக்கெல்ரனின் அதிரடியான ஆட்டமிழக்காது எடுத்த 62 ஓட்டங்களுடன் 12.5 ஓவர்களிலேயே இரு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 121 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  3. இல்லை! இத்தகைய "பகிடிவதைகள்" என்ற பெயரில் நிகழும் வக்கிரங்களுக்கு போதை அவசியமில்லை. புதிய மாணவர்களை பகிடியாகக் கலாய்த்து வரவேற்று அவர்களை சமூகத்தினுள் உள்வாங்க என்று மேற்கு நாடுகளில் உருவான முறைகளை, எங்களுடைய ஆசியத் தரத்திற்கு மாற்றி உள்வாங்கியிருக்கிறார்கள். இந்த இடத்தில் பேச்சு வாங்கினாலும் பரவாயில்லையென்று ஒன்று சொல்ல வேண்டும்: நான் அவதானித்த வரையில், சிங்களப் பகுதிகளில் சிங்கள மாணவர்கள் செய்யும் பகிடிவதையை விட தமிழ் மாணவர்கள் செய்யும் பகிடி வதைகள் மிகக் கேவலமானவையாக இருக்கும். இப்படியான ஒரு வன்முறை கலந்த பகிடிவதையின் போது தான் வரப்பிரகாஷ் என்ற பேராதனை மாணவன் சிறு நீரகம் செயலிழந்து இறந்தான். அந்தப் பகிடி வதை செய்த பிரதான நபர், வரப்பிரகாஷின் நிலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மோசமாகிறது என்று தெரிந்த காலையிலேயே சிங்கப்பூர் சென்று அங்கிருந்து பின்னர் கனடா குடிபெயர்ந்து இப்போது அங்கே பெரிய முதலாளியாக இருக்கிறார். பக்கத்தில் வேடிக்கை பார்த்து நின்ற சிலர் (இவர்கள் தடுத்திருக்க வேண்டும், எனவே கூட்டுப் பொறுப்பாளிகள் தான்!), வரப்பிரகாஷ் கொலைக்காக சிறை சென்று வந்தனர். இந்த வன்முறையாளர்களை பல்கலையை விட்டு நீக்கி விடுவது தான் ஏனையோர் இத்தகைய வன்முறைகளை நினைத்தும் பார்க்க இயலாமல் செய்யும் ஒரே வழி!
  4. இதுவுமா...............................🙂. உங்களுக்கு தற்பொழுது இருக்கும் அதிர்ஷ்டத்திற்கு தவிட்டை தொட்டால் அது கூட தங்கம் ஆகும் போல................🤣. பையன் சார், நீங்கள் இன்றைக்கு அந்த நாலிலிருந்து மேலே போகப் போகின்றீர்கள்.............👍.
  5. நீங்கள் என்னையே பாத்துக்கொண்டிருங்க. சுவியின் பாய்ச்சலை நீங்கள் கவனிக்கவில்லை. சத்தமில்லாமல் முதல்வர் ஆகப்போறார். ஆமாம் அன்று நான் அதை கவனித்தேன். Wobble seam வந்தது தெரியவில்லை. விக்கெட் தகர்ந்தது. சிராஜ் இப்போதெல்லாம் நல்ல கட்டுப்பாட்டுடன் பந்து வீசுகின்றார்.
  6. ஒரு கொடியில் பல மலர்கள் பூத்து குலுங்குகின்றன.....😂
  7. இங்கு யாழ் களத்தில் பஞ்சாப் அணியின் பக்கம் நிற்பவர்களைப் பார்த்தால், நாளைக்கு லக்னோ அணி படுத்திருந்து கொண்டே வென்று விடுவார்கள் என்று தான் தெரிகின்றது.............. 🤣.
  8. ஆறு நாம் லண்டன் வந்து ஒரு வாரம் வரையில் அவர்கள் வீட்டில் இருக்க வரவில்லை. அவர்களைக் கூட்டிவந்தவரிடம் கேட்டால் அவர்கள் சுண்ணாகத்தில் சகோதரி வீட்டில் இருந்தார்களாம். அடுத்த கிழமை வருவார்கள் என்கிறார். வீட்டில் ஆட்கள் இருக்கவேண்டும் என்றுதானே வாடகைக்குக் குடுத்தது. இதென்னடா இவர்கள் என்கிறேன். எல்லாத்துக்கும் நுணுக்கம் பாக்காதை. அவர்கள் வருவார்கள்தானே என்று மனிசன் வக்காலத்து வாங்குகிறார். இரண்டு வாரங்கள் செல்ல எல்லோரும் பொருட்களையும் லாண்ட் மாஸ்டரில் கொண்டுவந்து வந்து இறங்குகிறார்கள். ஒரு ஓட்டோவும் நிற்க உங்கள் கணவர் ஓட்டோ ஓடுபவரோ என்று அந்தப் பெண்ணிடம் கேட்க, இல்லை. எமது தேவைக்காக வைத்திருக்கிறோம் என்கிறார். அதன்பின் ஒரு மாதம் எந்தப் பிரச்சனையும் இன்றிப் போகிறது. அதன்பின் ஒருவாரம் மீண்டும் ஒருவரையும் காணவில்லை. தொலைபேசியில் மகளை அழைத்தால் வெப்பம் காரணமாக விடுமுறையில் கண்டி, நுவரெலியா சென்றிருக்கிறார்களாம். நீ வாடகைக்குக் கொடுத்தால் அவர்கள் ஒரு இடமும் போகக் கூடாதா என்கிறார் கணவர். தாய் சுண்ணாகத்தில் ஒரு கடையில் வேலை செய்வதாகவும் மகளும் கணவனும் இல்லாதபடியால் இங்கு தனிய இருக்கப் பயந்து மீண்டும் தமக்கை வீட்டில் போய் இருக்கிறாராம். மகளும் கணவனும் வந்தபின் மீண்டும் என் வீட்டில் வந்து இருப்பார் என்கிறார் அவர்களை அழைத்து வந்தவர். மீண்டும் இரு வாரங்களில் வீட்டில் நடமாட்டம் தெரிகிறது. பின் ஒரு மாதத்தின் பின்னர் தாயும் மகனும் மட்டும் இருக்க மகளையும் கணவரையும் ஓட்டோவையும் காணவில்லை. மக்களுக்குப் போன் செய்தால் போன் போகவில்லை. அவர் என் இலக்கத்தை புளொக் செய்துவிட்டாரோ என எண்ணி அவரின் தொலைபேசி இலக்கத்தை மச்சாளிடம் கொடுத்து போன் செய்து பார்க்கும்படி சொல்கிறேன். அவர்கள் சிம்மை மாற்றிவிட்டார்கள் என்று நினைக்கிறேன் என்கிறார் மச்சாள். அவர்களைக் கூட்டி வந்தவருக்கு போன் செய்து தாயின் தொலைபேசி இலக்கத்தை வாங்கித் தரும்படி கேட்க அவவுக்கு தொலைபேசி இல்லையாம் என்கிறார். இரண்டு வாரங்களில் தாயையும் சின்ன மகனையும் கூடக் காணவில்லை. மீண்டும் கூட்டி வந்தவருக்கே போன் செய்து என்ன பிரச்சனை என்கிறேன். மருமகன் மகளுக்கு அடித்ததில் மாமியார் ஏசிவிட்டாராம். மருமகன் கோபித்துக்கொண்டு மனைவியைக் கூட்டிக்கொண்டு வேறு வீடு சென்றுவிட்டாராம் என்று கூற, என்னடா தலைவலி மீண்டும் என்று யோசனை அதிகரிக்கிறது. கடைசி வீடும் வளவும் மிச்சம் இருக்கும்தானே. கவலைப்படாதை என்று சிரிக்கிறார் மனிசன். ஊரிலிருந்து வந்து இப்ப நான்கு மாதங்கள்தான். உடனே திரும்ப போவது செலவு. நடப்பது நடக்கட்டும். கமராவைப் பார்க்காமல் இரு என்று கணவர் சொல்ல பல்லைக் கடித்துக்கொண்டு இரு வாரங்கள் இருக்கிறேன். சரி இன்று ஒருக்காப் பார்ப்போம் என்று போனில் கமராவைப் பார்த்தால் வீட்டின் முற்றத்தில் ஆறேழுபேர் நிற்கின்றனர். ஒரு ஓட்டோ, ஒரு சயிக்கிள், இரு ஸ்கூட்டிகள் என்பன நிற்கின்றன. என்னடா இது என்று கணவருக்கு போன் செய்தால் தான் பிசி. இப்ப கமராவைப் பார்க்க முடியாது என்கிறார். வீட்டின் கதவுகள் எல்லாம் திறந்திருக்கு. ஒரு ஓட்டோவும் நிக்குது. இருவர் ஆறேழு பலாப் பழங்களைக் கொண்டுவந்து ஓட்டோவில் வைக்கிறார். இன்னொருவர் இரண்டு உரைப் பைகளில் உரித்த தேங்காய்களைக் கொண்டுவந்து ஏற்றுகிறார். இருந்தாற்போல் தொலைபேசி அழைப்புக் கேட்க, வந்தவர்கள் யாரினதோ போன் என நான் நினைக்க, அம்மா உங்களுக்கு போன் என்று கத்தியபடி பொடியன் தாயிடம் போனைக் கொண்டுவந்து கொடுக்கிறார். கொஞ்சம் வயசானவர் போலிருந்த ஒருவர் “இந்த நல்ல வீட்டில இருக்க உங்களுக்கு வருத்துது” என்று கூறுகிறார். நல்ல கறிவேப்பிலை என்று மரத்தை மேலால் முறித்துக்கொண்டு ஒருவர் வர மற்றவர் ஒரு கட்டு வேப்பிலையை வெட்டிக்கொண்டு வந்து தன் மோட்டார் சயிக்கிளில் வைத்துக்கட்ட வீட்டின் மற்றப் பக்கத்தில் ஒரு ஐம்பது தேங்காய்களாவது உரித்த தென்னம் பொச்சுகள் குவிக்கப்பட்டிருக்கு. உடனே நான் வீடு எடுத்துத் தந்தவருக்கு போன் செய்து நடந்தவற்றைக் கூறி அவர்களை இனி இருக்கவிட முடியாது. அவர்கள் பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்லச் சொல்லுங்கள் என்கிறேன். ஒரு வாரத்தில் அவர்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு செல்ல, கொஞ்சம் தள்ளி இருக்கும் ரதி அக்கா என்று சொன்னேன் தானே. அவர் போன் செய்கிறார். “என்ன நிவேதா உங்கள் வீட்டில் இருப்பவர்கள் எழும்பிவிட்டார்கள் போலிருக்கே” “எப்பிடித் தெரியும் அக்கா” “நான் உங்கள் வீட்டடியால் போகேக்குள்ள லாண்ட் மாஸ்டரில் சாமான்கள் ஏத்தினபடி போச்சினம்” “ஓமக்கா அது பெரிய பிரச்சனை. வீட்டில இருக்காமல் தேங்காய் பிலாக்காய் மட்டும் ஆய்ந்தால் .......... “அப்ப இனி ஆரை இருத்தப்போறியள்” “அதுதான் அக்கா என்ன செய்யிறது எண்டு தெரியேல்லை. இரண்டு பேரிட்டைச் சொல்லியிருக்கிறன். நீங்களும் ஆரன் இருந்தால் சொல்லுங்கோ” “நான் ஆரையன் கேட்டுப் பாக்கிறன். திறப்பு இப்ப ஆரிட்டை இருக்கு? “அந்தச் சனத்தைக் கூட்டிவந்த எங்கடை ஊர் பெடியன் தான் மச்சாளிட்டைக் குடுத்துவிட்டிருக்கு” “நீங்கள் எப்ப வாறியள்? “இப்ப உடனே வேலையில லீவு சொல்லிவிட்டு வரமுடியாதக்கா. ஐந்து மாதத்துக்கு முன்னம்தானே வந்தது” “ஒரு இரண்டு மாதம் வேணுமென்டால் நான் அப்பப்ப எட்டிப் பாக்கிறன்.அதுக்குள்ள நீங்கள் வரப்பாருக்கோ. ஆரன் நல்லவை அம்பிட்டால் உங்களுக்குச் சொல்லுறன்” “மிக்க நன்றி அக்கா. அப்ப அந்தத் தம்பியை திறப்பைக் கொண்டுவந்து உங்களிடம் கொடுக்கச் சொல்லுறன்” எனக்கோ மனம் கொள்ளா மகிழ்ச்சி. தானே உதவுவதாகக் கூறுகிறார் என்கிறேன் மனிசனிடம். ஆரும் சும்மா வந்து மற்றவைக்கு உதவ முன்வரமாட்டினம். அதுவும் சிலோனில. ஏதோ திட்டத்தோடதான் ரதி அக்கா தான் பாக்கிறன் எண்டு சொல்லுறா என்கிறார் மனிசன். உங்களுக்கு எப்பவும் சந்தேகம்தான். யேர்மனியில இருக்கிற அவவின் சொந்தக்காரர் எல்லாம் நல்ல சனங்கள் தானே. அவ என்ன காணியைத் தன்ர பெயரில மாத்தி எழுதவா போறா? சும்மா எல்லாத்துக்கும் தடை சொல்லிக்கொண்டு. எங்களுக்கு வேறை வழி இல்லை இப்ப. பேசாமல் இருங்கோ என்கிறேன். ஏதோ நீயும் அவையும் பட்டபாடு என்று சொன்னதோடு அவர் எதுவும் கதைக்கவில்லை. அந்த எலெக்ரீசியன் தம்பியை திறப்பை மச்சாளிடம் வாங்கிவந்து கொடுக்கமுடியுமா என்று கேட்க, சம்மதிக்கிறார். மச்சாளிடம் ஒரு வெளிக் கதவுச் சாவியும் பட அறைச் சாவியையும் மட்டும் கொடுக்கும்படி கூறுகிறேன். அதன்பின் கமராவில் அப்பப்ப பார்ப்பதும் அக்காவுடன் வைபரில் கதைப்பதுவுமாகப் போகிறது. ஒருநாள் அக்காவின் கணவர் சென்று பார்த்துவிட்டு எல்லாக் கன்றுகளுக்கும் தண்ணீர் போகவில்லை என்கிறார். அடுத்த நாளே சொட்டுநீர் பாசனம் செய்தவருக்கு போன் செய்ய, தான் நாளை சென்று பார்க்கிறன் என்கிறார். அவர் வந்து பார்த்துவிட்டு என்னக்கா இது சில லைனை கழற்றி வீட்டிருக்கு. சிலதை பூட்டி வீட்டிருக்கு. ஆரும் சின்னப் பெடியள் வீட்டில இருந்தவையோ என்று கேட்கிறார். நான் ஓம் என்கிறேன். அவர்தான் கழட்டிப் பூட்டி விளையாடியிருக்கிறார். மீண்டும் அவர் இரண்டு மணிநேரம் நின்று எல்லாவற்றையும் சரி செய்கிறார். ஒரு வாரம் செல்ல ரதி அக்கா போன் செய்கிறார். “நிவேதா ஒரு எனக்குத் தெரிந்த பெடியன் இருக்கிறார். அவரைக் கேட்டனான். அவர் வீடு வந்து பாக்கிறன் எண்டவர்” “தனிப் பெடியன் எண்டா பிரச்சனை அக்கா. அந்தப் பெடியன் வேலைக்குப் போறவரோ” “ஓம் ஒரு பால் கொம்பனியில வேலை செய்யிறவர்” “அவருக்கு வீடு வாசல் இல்லையோ” “சிறிய தாயோடைதான் இருக்கிறார், மற்றச் சகோதரங்களோட பிரச்சனை. அதுதான் உங்கட வீட்டை இருக்க ஓம் என்டிறார். நீங்கள் பயப்பிடாதைங்கோ. நான் பாத்துக்கொள்ளுறன். ஆள் முதல் வந்து இருக்கட்டும். நீங்கள் வந்து பார்த்து உங்களுக்கு ஓகே எண்டால் தொடர்ந்து இருக்கட்டும்” “அவரின் போன் நம்பரை போட்டுவிடுங்கோ அக்கா” “அவருக்கு ஸ்மாட் போன் இல்லை. மற்ற போன் தான் இருக்கு” இந்தக் காலத்தில ஸ்மாட் போன் இல்லாத பெடியனா? நம்பவே முடியேல்லை அக்கா” “நீங்கள் வரேக்கை ஒண்டைக் கொண்டுவந்து குடுங்கோவன்” “உதெல்லாம் சரிவராதக்கா” நானே ஐந்து ஆண்டுகளா ஒரு போனை வச்சிருக்கிறன்” “சரி நீங்கள் முதல் வாங்கோவன்” சரி அக்கா என்கிறன். இரண்டு வாரங்கள் அந்தப் பெடி ஸ்கூட்டியில் வருவதும் போவதுமாக இருக்க, ஒருநாள் பார்த்தால் நான் வாங்கி வைத்த 25 மீட்டர் கோஸ் பைப்பை எடுத்து வீட்டு கேற்றடியில் கன்றுகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டிருக்க, அவரின் இலக்கத்துக்கு போன் செய்தால் போன் றிங் போனாலும் அவர் எடுக்கவில்லை. பின்னர் ரதி அக்காவுக்கு போன் செய்து சொட்டுநீர் பாசனம் செய்திருக்கு. பிறகு எதுக்கு உந்தப் பெடியன் பைப்பைப் பிடித்துத் தண்ணீர் விடுகிறார் என்று கேட்க, தான் அவனுக்குச் சொல்லுறன் என்கிறா அக்கா. இனிமேல் பைப் எதிலும் கை வைக்க வேண்டாம் என்று சொல்லுங்கோ என்கிறேன். அடுத்த வாரம் பார்த்தால் எம் வளவில் இரண்டு மாடுகள் மேய்ந்துகொண்டிருக்க, பார்த்த எனக்குப் பகீர் என்கிறது. உடனே ரதி அக்காவுக்குப் போன் செய்ய, அவர் இரண்டு மாடுகள் வளர்க்கிறார். அதுதான் கொண்டுவந்து கட்டியிருக்கிறார் என்கிறா. அக்கா என்னைக் கேட்காமல் எதுக்கு வளவிலை மாடுகளைக் காட்டச் சொன்னீர்கள்? எனக்கு கன்றுகள் முக்கியம். பார்த்துப் பார்த்துக் கன்றுகளை நட்டிருக்கிறன். உடனடியா மாடுகளை வெளியேற்றச் சொல்லுங்கோ என்கிறேன். நீங்கள் கவலைப்படாதேங்கோ மாடுகளை எங்கள் வளவில கொண்டுவந்து கட்டச் சொல்லுறன் என்கிறா. அடுத்த நாளில் இருந்து மாடுகளைக் காணவில்லை ஆயினும் உவர் என் வளவுக்கு ஏற்ற ஆள் இல்லை என்று மனம் அடித்துக் கூற, வேறு வழியில்லை. நாம் ஊருக்குப் போகத்தான் வேண்டும் என்ற எண்ணம் வலுக்கிறது. அதன்பின் அந்தப் பெடியன் வீட்டில் வந்து தங்கி இருக்க ஆரம்பிக்கிறார். இரவில் ஒன்பது மணிவரை லைட் எரிகிறது. சிலவேளைகளில் இன்னொரு பெடியும் வந்திருந்து கதைத்துவிட்டு போகிறது. நீ கமறாவைப் பார்க்காமல் இரு என்கிறார் கணவர். வேலை செய்யும் இடத்திலும் எனக்குப் பதிலாக வேலை செய்ய ஒருவரும் இல்லை என்று முதலாளி மறுக்க வேறு வழியின்றி யோசனையுடன் இரண்டு மாதங்கள் ஓடிப்போக, இனி நீர் விடுமுறையில் செல்வதனால் செல்லலாம் என்கிறார் முதலாளி.
  9. GMT நேரப்படி நாளை செவ்வாய் 01 ஏப்ரல் பிற்பகல் 2:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 13) செவ்வாய் 01 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் LSG எதிர் PBKS 13 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் 10 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் சுவி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் கந்தப்பு ஏராளன் நுணாவிலான் கிருபன் எப்போதும் தமிழன் அகஸ்தியன் பஞ்சாப் கிங்ஸ் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி வாதவூரான் ரசோதரன் தமிழ் சிறி குமாரசாமி நந்தன் புலவர் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்?
  10. ஈரப்பதன் ஆடுகளத்தில் புல் பச்சை பசேலென இருக்கும், மென்மையான ஆடுகளம் கடினமான ஆடுகளம் (சீமெந்து தரை போல) இரண்டிற்குமிடையே பந்து தரையில் பட்டு மேலெழும்போது வேகமும் பந்தின் கட்டினால் ஏற்படும் தாக்கமும் மாறுபடும். சிகப்பு, கறுப்பு மண் கலப்பு ஆடுகளத்தின் நிறத்தில் தெரியும் அதனடிப்படையில் எதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என ஓரளவிற்கு ஊகிக்க முடியும் என கருதுகிறேன். ஆடுகளத்தின் தன்மையினை அறிவது முக்கியம் அதனடிப்படையில் அணியினை தேர்வு செய்யலாம், மேலும் போட்டியினை ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப கட்டமைக்கலாம் என கருதுகிறேன். உதாரணமாக இன்றைய போட்டி கடினமான சிகப்பு ஆடுகளத்தில் நடைபெற்றது, இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும், பந்து தரையில் பட்டு உயர்ந்து வரும் அத்துடன் வேகமாக வரும், அதே நேரம் பந்தின் கட்டினால் பந்து மட்டைக்கு உள்நோக்கியும் வெளிநோக்கியும் திரும்பும் ஆரம்ப ஓவர்களில். அதனால் ஆரம்ப ஓவர்களில் வேகமாக அடித்தாட முற்பட்டு வேகமாக விக்கெட்டுக்களை இழந்தால் அணி சின்ன ஸ்கோரில் முடங்கி விடும். பவர் பிளேயில் அதிக பட்சம் ஒரு விக்கெட்டுடன் 40 ஓட்டங்கள், அடுத்த 4 ஓவரில் 30 ஓட்டங்கள் என சென்று இறுதி 10 ஓவர்களில் மிகுதி 130 ஓட்டங்களை எடுக்க முயற்சிக்கலாம், குறிப்பாக இந்த மைதானம் குறுகிய எல்லை கொண்ட மைதானம் என்பதால் கடைசி 5 ஓவர்களில் அதிக ஓட்டங்களை எடுக்கலாம் என கருதுகிறேன். ஓட்ட விகிதத்தினை மேம்படுத்த வேகமாக ஓட்டங்களை பெறுவார்கள் என எதிர்பார்த்தேன், ஆனாலும் 13 ஒவரில் முடித்து விட்டார்கள்.
  11. உதெண்டால் நூறுவீதம் உண்மைதான்... இஞ்சை இந்த பனிக்குளிருக்கை போர்த்து மூடிக்கொண்டு திரியிறதை விட அங்கை ஊரிலை அரைக்கோவணத்தோட நிண்டு அறுவது ஏக்கர் மிளகாய் தோட்டம் செய்யிற சந்தோசம் வேற ஒண்டிலையும் வராது கண்டியளோ 🤣 எண்டாலும்....😎 பேர்லின் அலெக்ஸாண்ட்ரா சம்பவங்கள் ரஜினி மிளகாய் தோட்டத்திலும் நடக்க சாத்தியங்கள் வந்தாலும் வரலாம்.யார் கண்டார்? எல்லாம் மேல இருக்கிறவன் செயல் 😅 ஒரு வயதுக்கு பிறகு.....50,60. உந்த கவுண்மேந்து ஆக்களோட கனக்க கதைக்க கூடாது. 50 வீத கைப் பாஷை கன இடங்களில கை குடுக்கும். பஞ்சப்பரதேசியாய் காட்சியளிக்கோணும். பாங்கில எப்பவும் மைனஸ் ல இருக்கோணும்.உவங்கடை கந்தோர்களுக்கை போறதெண்டால் சாடையாய் நொண்டி நொண்டிக்கொண்டு போக வேணும்.ஒரு கிழமைக்கு குளிக்கக்கூடாது.உள்ளி அந்தமாதிரி தொடர்ந்து சாப்பிட வேணும் 🤣 இரத்தக்கண்ணீர் எம் ஆர் ராதா மாதிரி கிழிஞ்ச சட்டை தாடி மீசையோட காட்சியளிக்கணும். லூசு மாதிரி அப்பப்ப கதைக்கணும்.ஓட்டை உடைசல் மாதிரி நடிக்கணும்..😂 பென்சன் ரெடி 🙃
  12. ஐந்து நான் மீண்டும் வந்து வேலைவெட்டி என்று ஆரம்பித்தாலும் காணியைப் பற்றிய சிந்தனையே எந்நாளும் இருந்துகொண்டிருந்தது. அவர்கள் அந்தக் கன்றுக்கு நீர் விட்டார்களா? இல்லையா என்னும் யோசனையே எப்போதும் குடைந்துகொண்டிருக்க, வாரம் ஒருதடவை அந்தப் பெண்ணுக்கு போன் செய்து கன்றுகள் பற்றி விசாரிப்பது தொடர்ந்தது. மூன்று மாதங்கள் செல்ல புற்கள் எல்லாம் மீண்டும் முளைக்கத் தொடங்கிவிட்டன என்கிறார். நான் என் மச்சாளிடம் இதுபற்றிக் கேட்க இரண்டு மூன்று மாதங்கள் நல்ல வெயில். மழையும் பெய்யவில்லை. யூலை ஓகஸ்ட் தான் இனி மழை. அதன்பின் தான் வேகமாக வளரும். இப்ப புல்லுப் பிடுங்கத் தேவை இல்லை என்கிறார். அதனால் நான் இன்னும் கொஞ்ச நாட்கள் செல்லட்டும் பிடுங்கலாம் என்கிறேன். அடுத்து ஒருமாதம் செல்ல வளவில் புற்களைப் புடுங்கவேண்டும். பாம்பு வந்துவிடும். சின்னப் பிள்ளையை வைத்திருக்கிறேன் என்று அந்தப் பெண் சொன்னதும் சரி ஆட்களை ஒழுங்கு செய்யுங்கோ என்றுவிட்டுப் பணம் அனுப்புகிறேன். நான்கு நாட்கள் இருவர் வந்து முழுப் புல்லையும் பிடுங்குவதற்கு 16000 ரூபாய் முடிய மனிசன் புறுபுறுக்க ஆரம்பிக்கிறார். அவைக்குக் கரண்ட் காசும் கட்டி வாடகையும் வாங்காமல் இப்ப வளவும் நீற்றாக்கிக் குடு என்கிறார். கண்டறியாத கண்டுகாலி. நாங்கள் போய் இருந்துகொண்டு உதுகளைச் செய்யலாம். சொல்லச் சொல்லக் கேட்காமல் நட்டுப்போட்டு வந்திருக்கிறாய் என்கிறார். இப்ப நட்டால்த்தானே நாங்கள் போய் இருக்கேக்குள்ள வளர்ந்திருக்கும் என்றுவிட்டு என் அலுவலைப் பார்க்கிறேன். அக்கா நீங்கள் கன்றுகளுக்குக் கட்டிய பாத்திகள் தண்ணீர் விட நீண்ட நேரம் எடுக்குது. நான் வேறை மாதிரிக் கட்டி விடட்டோ என்கிறா. நீங்கள் பாத்தி கட்டுவீங்களோ என்றதற்கு, தன் மாமியின் மகன் கட்டிவிடுவார் இரண்டு நாள் கூலி குடுக்கிரியளோ என்றதற்கு சரி என்கிறேன். எனக்கோ கன்றுகளுக்கு நீர் போனால் சரி என்ற நிலை. இன்னும் ஒரு மாதம் செல்ல, “உங்கள் கன்றுகளுக்கு நீர் இறைக்க மூன்று மணிநேரம் செல்கிறது” “நானும் ஒருமாதம் இறைத்தேன் தானே. ஒருமணித்தியாலம்தானே முடிந்தது. என்ன புதுக்கதை சொல்கிறீர்கள்? “எனக்கு பிள்ளையுடன் சரியான கரைச்சலாக கிடக்கு” “அப்ப ஒரே நாளில இறைக்காமல் பகுதி பகுதியாப் பிரிச்சு தண்ணியை விடுங்கோ” “நீங்கள் எப்ப வருவியள் அக்கா” “ஒவ்வொரு ஆண்டும் வர சரியான செலவு தங்கச்சி, ஏன் கேட்கிறீர்கள்? “இது பெரிய வளவாக் கிடக்கு அக்கா. எங்களுக்கு இதைப் பாராமரிக்கக் கஷ்டமா இருக்கு” “வளவில என்னத்தைப் பாராமரிக்கக் கிடக்கு? “மாமரக் குப்பையே கூட்டி அள்ள ஏலாமல் கிடக்கு” “அப்ப வளவு கூட்டவும் ஓராளைப் பிடிச்சுவிடட்டோ? பெரிய வளவு என்று தெரிந்துதானே வந்தீர்கள்? உங்களுக்கு ஒரு ஆண்டு வாடகை ஒப்பந்தம் செய்திருக்கிறன். அதுவரையும் நீங்கள் இருக்கத்தான் வேணும்” “சரி அக்கா. எவ்வளவு கெதியா வர ஏலுமோ வாங்கோ” சரியாக அவர்களுக்கு வாடகை ஒப்பந்தம் முடிய ஒருவாரத்துக்கு முன்னர் நானும் கணவரும் ஊருக்குச் செல்கிறோம். செல்லும்போது இங்கிருந்து ஒரு ஆப்பிள், பியேஸ், ஒலிவ் மூன்றின் கன்றுகளை யும் லகேச்சுக்குள் வைத்துக் கொண்டுபோகிறேன். இணுவிலில் போய் இறங்கி தங்கையின் வீட்டில் பயணப் பொதிகளை வைத்துவிட்டு எமது வீட்டுக்குச் சொல்கிறோம். கேற்றைத் திறந்து கமுகின் அழகைக் காண எண்ணினால் முன்பக்க வேலியோரம் நட்ட கமுகுகளில் அரைவாசித்தான் செழிப்பாக வளர்ந்திருக்க மிகுதி ஏனோதானோ என்று நிற்க ஐந்தாறு கமுகுகள் பட்டுப்போயும் இருக்க எனக்கு அழுகை வராத குறை. தண்ணீர் விட்டோம். தண்ணீர் விட்டோம் என்றார்கள். ஒழுங்காகத் தண்ணீர் வீட்டிருந்தால் ஏன் வாடுது என்று கணவனுக்குக் கூற, இது ஒன்றும் அவர்கள் காணி இல்லை. அவர்களுக்கு வீடு தேவை வந்து இருந்தார்கள். உன் கண்டுகாலிகளையும் கவனிக்க அவர்களுக்கு என்ன விசரா என்கிறார் மனிசன். அந்தப் பெண்ணிடம் கேட்க, நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இறைத்தது. இதுக்கு மிஞ்சி நாங்கள் ஒன்றும் செய்ய ஏலாது என்று சொல்கிறார். இனிக் கதைத்துப் பயன் இல்லை என்று அறிந்தபின் நானும் கணவரும் வளவைச் சுற்றிப் பார்க்கிறோம். தேக்குகள் மட்டும் செழிப்பாக வளர்ந்திருக்க எனது பூங்கன்றுகளும் சில பட்டுப்போய் நிற்கின்றன. புற்கள் எல்லாம் வளர்ந்து, தென்னை மரங்களின் கீழே தேங்காய்கள் விழுந்து பார்க்கவே கோபம் வருகிறது. என்ன தங்கச்சி தேங்காய் விக்கிற விலையில பொறுக்காமல் விட்டிருக்கிறியள் என்கிறேன். பிள்ளையோட கஸ்டம் அக்கா எனக்கு. இவரும் விடியப் போனால் பின்னேரம்தான் வருவார் என்கிறார். “எப்ப தங்கச்சி எழும்புறியள்” “வார கிழமை திறப்புத் தாறம்” “வாறகிழமை சரி. என்ன நாள் என்று சொல்லுங்கோ” என்கிறேன். அவர் சொன்ன நாளுக்கு முன்னராக அங்கு சென்று முதல் நாள் தங்குகிறோம். பஞ்சி பிடித்தவர்களே தவிர சொன்னதுபோல் அடுத்தநாள் வீட்டை விட்டுக் கிளம்ப, வீட்டைக் கழுவிச் சுத்தப்படுத்தி அங்கேயே தொடர்ந்து இருவாரம் தங்க, அளவிலா மகிழ்ச்சி ஏற்படுகிறது. காலையில் எழும்போதே அழகான குருவிகளின் ஓசை மனதை மயங்க வைக்கிறது. பக்கத்து வீட்டுக்காரர்களின் கோழிகள் சிலது வந்து போகின்றன. காலை எழுந்தவுடன் தேநீர் அருந்தாமல் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் வெட்டிப்போட்டு உடன் துருவிய தேங்காய்ப் பாலும் விட்டு பழஞ்சோற்றுக் கஞ்சி அமிர்தமாக இருக்கிறது. அதைக் குடித்தவுடன் அடிக்கடி பசிக்கும் எனக்கே நீண்டநேரம் பசியே எடுக்கவில்லை. காலையிலேயே புலுனி கூட்டம் முற்றத்தில் வந்து இரை பொறுக்க நாமும் தானியங்கள் போடுகிறேன். மாமரத்தில் அணில்கள் ஓடி விளையாட, அட இத்தனை காலம் இவற்றையெல்லாம் இழந்து நான்கு சுவருக்குள் அடைபட்டு குளிரிலும் விறைத்துப் போனோமே என்று எண்ணம் எழுகிறது. வீட்டின் வெளியே மாமர நிழலில் மூன்று கற்களை வைத்து எண்ணைச் சட்டியில் சந்தையில் வாங்கிவந்த மீன்களைப் பொரித்துத் தருகிறார் மனிசன். சுடச்சுட அதை உண்டு முட்களை வெளியே எறிந்துகொண்டிருக்க ............... சோறு கறி சமைக்கவேண்டிய தேவை குறைந்துபோக நெஞ்சு நிறைந்துபோகிறது. ஒருவரைக் கூப்பிட்டு செவ்விளநீர் இறக்கி வைத்து ஒரு நாளைக்கு இவ்விரண்டு குடிக்கிறோம். கன்றுகளுக்கு சொட்டுநீர் பாசனம் செய்வோம் என்று கூற, உனக்கு ஏதும் சிலவளிக்காட்டில் நித்திரை வராது என்கிறார் மனிசன். கன்றுகள் முக்கியம். ஒருக்காச் செய்துவிட்டால் பிறகு தண்ணி விடும் பிரச்சனை இல்லை என்று மனிசனைச் சம்மதிக்கச் செய்து சிலரிடம் விசாரித்தால் ஒருவரின் தொலைபேசி இலக்கம் தருகின்றனர். வந்து வளவைச் சுற்றிப் பார்த்துவிட்டு, நீங்கள் ஏற்கனவே பெரிய பைப் தாட்டிருக்கிறபடியால் ஒன்றரை இலட்சத்துள் செய்து தரலாம் என்கிறார். ஏற்கனவே நாம் 2 குதிரை வலுக்கொண்ட மோட்டரையே போட்டிருந்தோம். அதன் வேகம் கூட என்று இன்னொரு மோட்டரைப் போட்டு அதில் இணைப்போம் என்கிறார். சரி என்று இரண்டாவது மோட்டரை 1.5 வழுவுள்ளதாக வாங்கி இணைத்து சொட்டுநீர்ப் பாசனம் ஒழுங்காக இயங்க வைக்கிறார். இரண்டு மோட்டார்கள் இருப்பதனால் சரியான பாதுகாப்பு வேண்டும் என்று பெலப்பான சுவருடன் ஒரு அறையைக் கட்டி அதனுள் இரு மோட்டார்களையும் வைத்து விசேட பூட்டு முறையையும் வடிவமைக்கிறார் கணவர். பின்னர் காணிக்குள் கமரா பூட்டுவோம் என்று மனிசன் தொடங்கி அதற்கு 8 கமரா பூட்ட 136000. அதன்பின் சிறிது நிம்மதி ஏற்பட இருவாரம் இந்தியா சென்று வருகிறோம். வளவில் இருந்த கற்களை அடுக்கி மனிசன் பார்பிக்கியூ கிறில் செய்து இங்கிருந்து கொண்டுசென்ற துருப்பிடிக்காத கம்பிகளையும் வைத்து அப்பப்ப உண்டு மகிழ்கிறோம். அதன் பின் மீண்டும் ஆட்களைத் தேடும் படலம் ஆரம்பிக்க வீட்டுக்குள் டாய்லெட் உள்ள அறைகள் வேண்டும் என்கின்றனர் சிலர். எமக்காகக் கட்டியதை மற்றவர்களுக்குக் கொடுக்க முடியாது என்கிறேன். வெளியேயும் நவீன களிப்பறையும் உண்டு என்பதால் அதற்கு ஏற்றவர்களைத் தேட, யாரும் கிடைக்காமல் நாம் கிளம்புவதற்கு ஒரு வாரம் முன்னதாக ஒரு குடும்பம் வந்து பார்க்கின்றனர். தாய், மகள், மகளின் கணவர், பெண்ணின் தம்பி மற்றும் மகளின் பிள்ளை ஐந்துபேர். தந்தை இறந்துவிட்டதாகச் சொல்கின்றனர். என்று கமராவில் நாங்கள் கதைப்பது எல்லாம் கேட்குமோ என்கிறார் அவர்களுடன் வந்த ஒரு 12 வயதுப் பெடி. சத்தம் எமக்குக் கேட்காது என்கிறேன் நான். இவர்களைக்கூட்டி வந்தவர் எமக்கு எலெக்றிக் வேலை செய்து தந்தவர் தான். அதனால் அவர்களுக்கு மாதம் 3000 வாடகையில் வீட்டைக் கொடுத்து மின் கட்டணத்தையும் கட்டும்படி சொல்கிறோம். அவர்களின் அடையாள அட்டையையும் படம் எடுத்து லோயரிடமும் கொடுத்து ஒப்பந்தம் கைச்சாத்தாகிறது.
  13. பிழை என்பது என்ன? குற்றம் என்பது என்ன ? தவறு என்று தெரியாமல் செய்வது பிழை தெரிந்தே செய்வது குற்றம் பிழை மன்னிக்கப்படலாம் தவறு தண்டிக்கப்படும் பிழை வேறு குற்றம் வேறு
  14. ஒரே ஒரு இழையில் தொங்கியபடி ஒரு சிலந்தி இருந்தது. எங்கிருந்தோ யாரோ சொன்னார்கள், சிலந்தி இருப்பது கூட்டுக்கு நடுவில் அல்லவா? சிலந்தியும் ஊடுபாவாக கூடு கட்டத் துவங்கிற்று. போதாக்குறைக்கு உலக வலைப்பின்னலிலும். ... இப்போதெல்லாம் அது கட்டிவிட்ட கூட்டிலிருந்து தப்பிவிடத் தான் எத்தனிக்கிறது ஆனால் சிக்கலுக்கு மேல் சிக்கலாகி இழைகளே அதை நெரிக்கின்றன அதன் கூக்குரலோ வலைப்பின்னல்களில் எதிரொலித்தாலும் யாருக்கும் கேட்பதாயில்லை. சுற்றும் முற்றும் பார்த்தால் தன்னைப் போலவே பல சிலந்திகள்... சிலதோ ஏதோ ஒரு உத்வேகத்தோடு, கழுத்தை நெரித்தாலும் - மேலும் மேலும் வலைகளைப் பின்னுவதும் தெரிகிறது. இப்போது சிலந்திக்குச் சிரிப்பும் வருகிறது வலையைப் பின்னப்போய் வாழ்க்கையை இழந்து விட்டேனே.
  15. இப்படி சக மாணவனை சித்திரவதை செய்து என்ஜோய் பண்ணுகின்ற காட்டுமிராண்டிகள் படிக்கின்ற நாட்டில் நல்ல பொலிஸ் இராணுவத்தை மட்டும் எப்படி எதிர்பார்க்க முடியும்.
  16. நாங்கள் பத்துப் பேர் தான் இருக்கிறோம் ஒரு ஆள் குறைவு தான் இருந்தாலும் சொட்டிச் சொட்டி ஓட்டம் எடுப்போம் 😂 பூரானையும் பந்தையும் தூக்கிட்டா காணும் ஆயுஷ்😅 முடிந்திடும் பிறகு எங்கடை அய்யர் வந்து எல்லாம் சரியாகச் செய்வார் 😂
  17. எனக்கு அவர்கள் என் வளவையும் வீட்டையும் கன்றுகளையும் கவனமாகப் பார்த்தால் சரி என்ற நினைப்பு. 10000 வரை வாடகை வாங்கலாம். எனக்கு அப்படி வாங்க மனம் வரவில்லை. எனக்காக இரண்டு அறைகளைப் பிடித்துக்கொண்டுதானே கொடுத்தது. அதனால் ஓகே. உண்மையில் சிரித்துவிட்டேன். தண்ணீர் அவர்கள் விடத் தேவை இல்லை. எல்லாம் தானியங்கி. பல வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் சும்மா வீட்டை மட்டும் பாராமரிக்கவே 30000, 60000 என்று கொடுக்கிறார்கள் என்று கேள்வி.
  18. அமெரிக்கா விளையாட்டுக்க‌ள் பெரிய‌ தொட‌ர் குரு..................30 அணிக‌ளும் 82 த‌ர‌ம் விளையாட‌னும் அத‌ற்க்கு பிற‌க்கு தானே பிலேஒவ்..................... NFL இதை த‌விர்த்து ம‌ற்ற‌ விளையாட்டுக்க‌ள் எல்லாம் நீண்ட‌ தொட‌ர்..................NBA NHL , MLB , இது 6கிழ‌மையில் முடிக்க‌ வேண்டிய‌ ஜ‌பிஎல்ல‌ இழுத்த‌டிச்சு 2மாத‌ம் வ‌ரை ந‌ட‌த்துகின‌ம்😁............................
  19. எனக்கே இப்போது பயம் வர ஆரம்பித்து விட்டது. எல்லாம் ஓரிடத்திலே வந்து வேறு எங்கே போய் அடிக்கப் போகின்றதோ என்று தெரியவில்லை. நீங்கள்வேற தவிடு தங்கம் என்று ஏதோ பூச்சாண்டி காட்டுறீங்கள்.
  20. ஒம் குரு தொட‌ர்ந்து 4ல‌ பார்க்க‌ விச‌ர் பிடிக்கும் , ஜ‌பிஎல்ல‌ கிரிக்கேட் ஜாம்பவாங்க‌ளால் கூட‌ க‌ணிக்க‌ முடியாது அதோட‌ ஜ‌பிஎல்ல‌ சில‌ குள‌று ப‌டிக‌ள் ந‌ட‌ப்ப‌து ந‌ம‌க்கு தெரியாது சூதாட்டத்தில் சிக்கின‌ அணிக‌ள் மீண்டும் விளையாடும் போது ச‌ந்தேக‌ம் வ‌ர‌த் தான் செய்யும் ஹா ஹா...........................................
  21. ஏழும் வந்தால்… அவரின் ரீ சேர்ட்டில் ஒரு பிட்சாவும் இராது. ரீ சேர்ட்… டிசைன் இல்லாமல் போய் விடும். 😂
  22. ஒருவேளை அறுவை அறுக்கிறதுக்கு x - ray எடுத்ததை தப்பாகப் புரிந்து விட்டார்களோ ...........! 😂
  23. 43 வயதில்… ஒரு லட்சம் படங்களை எடுத்துள்ளார். இவர் வைத்தியருக்கு படித்த நேரம் புகைப்பட பிடிப்பாளராக வந்திருக்கலாம்.
  24. நீதி என்பது அவர்களுக்குக் களிமண், எங்களுக்கு கருங்கல்.
  25. தற்போது இது தமிழ் கட்சிகளுக்கு சமர்ப்பணம்.
  26. அதென்னவோ உண்மைதான் அண்ணா. எம் நாட்டில் அடக்குமுறையும் போரும் இல்லாமல் இருந்திருந்தால் நாம் ஏன் இங்கு வரபோகிறோம் . சரி அங்கு போய் இருக்கவேண்டிய தேவை இன்றியும் நான் ஏன் அங்கு போக வேண்டும்?
  27. சிஎஸ்கே மீண்டும் தோல்வி: பேட்டிங்கில் தோனி எப்போதும் தாமதமாக களமிறங்குவது ஏன்? பயிற்சியாளர் பிளமிங் விளக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் சிஎஸ்கே அணி விளையாடும் போட்டியென்றாலே கடைசி ஓவர், கடைசிப்பந்துவரை ரசிகர்களை அமரவைப்பது, ரசிகர்களின் ரத்தக்கொதிப்பை எகிறவைப்பது, எளிய இலக்கை துரத்தக்கூட அதிக ஓவர்கள் எடுத்துக்கொள்வது போன்றவை இந்த சீசனிலும் தொடர்கிறது. குவஹாட்டியில் நேற்று (மார்ச் 30) நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியின் 11-வது ஆட்டமும் இதுபோன்றுதான் இருந்தது. கடைசிஓவர், கடைசிப் பந்து வரை ரசிகர்களின் பொறுமையையும், ரத்திக்கொதிப்பையும் எகிறவைத்தனர். குவஹாட்டியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் சேர்த்தது. 183 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்து 6 ரன்னில் தோல்வி அடைந்தது. பேட்டிங்கின் போது சிஎஸ்கே அணி இக்கட்டான நேரத்தில் இருக்கும் போது களமிறங்காமல், மிகவும் தாமதமாக தோனி களமிறங்குவது ஏன் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வரும் கேள்விகளுக்கு பயிற்சியாளர் பிளமிங் பதிலளித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ராணா 36 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்தார். ராணாவின் அதிரடி ஆட்டம் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்கார்ரான ஜெய்ஸ்வால் 3வது போட்டியாக ஏமாற்றி முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். நிதிஷ் ராணா, சஞ்சு சாம்ஸன் கூட்டணி ஆட்டத்தை கையில் எடுத்து ஸ்கோரை படுவேகமாக உயர்த்தினர். சாம்ஸன் நிதானமாக ஆட, நிதிஷ் ராணா சிஎஸ்கே பந்துவீச்சை சிக்ஸர், பவுண்டரி என தெறிக்கவிட்டார். ராணாவின் அதிரடியைக் கட்டுப்படுத்த பல பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் முடியவில்லை. அஸ்வின் வீசிய முதல் ஓவரிலேயே 2 சிக்ஸர்கள் பவுண்டரி பறந்தது. வழக்காக 3வது வீரராக ரியான் பராக் களமிறங்குவார், ஆனால், ராணாவை களமிறக்கியதற்கு நல்ல பலன் கிடைத்தது. பவர்ப்ளேயில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் சேர்த்தது. சாம்ஸன் 20 ரன்னில் நூர் முகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 82 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த கேப்டன் ரியான் பராக், ராணாவுடன் சேர்ந்தார். அதிரடியாக ஆடிய ராணா 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதுவரை ஐபிஎல் தொடர்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழக்காத ராணா, 36 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் முதல்முறையாக தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். ராணா கணக்கில் 5 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் அடங்கும். ரமலான் நோன்பு காலத்தில் உணவு சமைக்கும் போது சலனம் வருமா? முஸ்லிம் சமையல் கலைஞரின் அனுபவம்5 மணி நேரங்களுக்கு முன்னர் வேலைக்கு விண்ணப்பிக்க சரியான 'ரெஸ்யூம்' தயார் செய்வது எப்படி?5 மணி நேரங்களுக்கு முன்னர் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் அதன்பின் ஆட்டத்தை சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் கையில் எடுத்தனர். ராணா இருக்கும் வரை ஸ்கோர் எப்படியும் 200 ரன்களைக் கடந்துவிடும் என்று கருதப்பட்டது. ஆனால், துருவ் ஜூரெல் 3 ரன்னில் நூர் முகமது பந்துவீச்சிலும், ஹசரங்கா 4 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் கீழ்வரிசை பேட்டர்கள் ஹெட்மெயர்(19 ரன்கள்), ஆர்ச்சர்(0 ரன்), ரியான் பராக்(37 ரன்கள்) என வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர். 182 ரன்களை மட்டுமே ராஜஸ்தான் அணியால் சேர்க்க முடிந்தது, ராஜஸ்தான் பேட்டிங் வரிசைக்கு கூடுதலாக இன்னும் 20 ரன்கள் சேர்த்திருக்கலாம். ஆனால், நடுவரிசை பேட்டர்கள் ஏமாற்றினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிதிஷ் ராணா சிஎஸ்கே பந்துவீச்சை சிக்ஸர், பவுண்டரி என தெறிக்கவிட்டார். வீணடிக்கப்படும் ஹெட்மெயர் 7-வது வீரராக ஹெட்மெயரை களமிறக்கி ராஜஸ்தான் அவரின் திறமையை குறைக்கிறது, ஹெட்மெயரை 4வது வீரராக நடுவரிசையில் களமிறக்கியிருந்தால் அவர் ஆங்கர் ரோல் எடுத்து சிறப்பாக பேட் செய்திருப்பார். ஆனால் அவரை சரியாக பயன்படுத்தாமல் வீணடிக்கிறது ராஜஸ்தான் அணி. 124 ரன்கள் வரை 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ராஜஸ்தான் அணி அடுத்த 52 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. சிஎஸ்கே தரப்பில் நூர் அகமது, பதிராணா, கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பல மாதங்கள் காய்ந்து கிடக்கும் 'ஜாம்பி' தாவரம் சில மணி நேரத்தில் உயிர்த்தெழுவது எப்படி?30 மார்ச் 2025 குழந்தைகள் கையில் செல்போன்: பிகார் கும்பலிடம் ரூ.24 லட்சத்தை இழந்த தேனி வியாபாரி - என்ன நடந்தது?30 மார்ச் 2025 படம் காண்பித்த ஆர்ச்சர் 183 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது. ஆர்ச்சர் வீசிய மின்னல் வேக பவர்ப்ளே ஓவரில் தொடக்கத்திலேயே ரச்சின் ரவீந்திரா ரன் சேர்க்காமல் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயில் சிஎஸ்கே அணியை ஆர்ச்சர் தண்ணி குடிக்கவைத்தார். ஆர்ச்சரின் ஒவ்வொரு பந்தும் 145 கி.மீ வேகத்தில் கத்தி போல களத்தில் இறங்கியது. வேகப்பந்துவீச்சில் ஹார்டு லென்த்தில் பந்துவீசி, டெஸ்ட் பந்துவீச்சை சிஎஸ்கே பேட்டர்களுக்கு ஆர்ச்சர் காண்பித்தார். உண்மையாகவே இதுதான் ஆர்ச்சரின் தனித்தன்மையான பந்துவீச்சு இதுதான். ஆர்ச்சரின் பந்துவீச்சை சிஎஸ்கே பேட்டர்களால் தொடக்கூட முடியவில்லை. மறுபுறம் தேஷ்பாண்டே தனது பவுன்ஸரால் கெய்க்வாட்டின் முழங்கையில் காயத்தை ஏற்படுத்தினார். சிஎஸ்கே அணி பவர்ப்ளேயில் ஒட்டுமொத்தமாக கோட்டைவிட்டது. சந்தீப் சர்மா வீசிய 6-வது ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் அடித்ததால் 42 ரன்களை பவர்ப்ளேயில் சேர்த்தது. முதல்3 ஓவர்களில் சிஎஸ்கே அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 5 ரன்கள் மட்டுமே சேர்த்து விழிபிதுங்கி இருந்தது. காமெடியாக மாறிய திரிபாதி திரிபாதி பேட் செய்யும்போது தோள்பட்டையை குலுக்கி, குலுக்கி பேட் செய்யும் காட்சியையும், ஆர்ச்சரின் பந்துவீச்சில் பலமுறை "பீட்டன்" ஆனதையும் பார்த்த வர்ணனையாளர்கள் கிண்டல் செய்தனர், சமூக வலைத்தளங்களிலும் திரிபாதியின் தோள் குலுக்கல் ஸ்டைல் உடனடியாக மீம்ஸாக மாறியது. 2 போட்டிகளிலும் சொதப்பிய திரிபாதி 23 ரன்களில் ஹசரங்கா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES திருப்புமுனை விக்கெட் அடுத்துவந்த ஷிவம் துபே, வந்தவேகத்தில் சிக்ஸர்களை விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார். ஆனால் துபே நீண்டநேரம் நிலைக்கவில்லை, ஹசரங்கா பந்துவீச்சில் அடித்த ஷாட்டை ரியான் பராக் அற்புதமாக கேட்ச் பிடிக்கவே 18 ரன்னில் ஆட்டமிழந்தார். இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது, சிஎஸ்கேயின் நம்பிக்கை பேட்டரை வெளியேற்றியது ராஜஸ்தானுக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. அடுத்துவந்த தமிழக வீரர் விஜய் சங்கர் ஒரு சிக்ஸர் உட்பட 9 ரன்களுடன் ஹசரங்காவின் கூக்ளி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். நிதானமாக ஆடிய கெய்க்வாட் 37 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஜடேஜா, கெய்க்வாட் கூட்டணி மெல்ல அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர். ஆனால், ஹசரங்கா பந்துவீச்சில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து கெய்க்வாட் 63 ரன்னில் ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழந்தாலும் தோனி இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு ரசிகர்கள் இருந்தனர். கடந்த போட்டியில் 9-வது வீரராக தோனி களமிறங்கியது கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் இந்த போட்டியில் அவர் 7-வது வீரராக் களமிறங்கினார். அக்வாபோனிக்ஸ்: மீன்களின் கழிவுகள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்களை விளைவிக்கும் தம்பதி29 மார்ச் 2025 சிறுநீரை உரமாக மாற்றும் அமெரிக்க விவசாயிகள்29 மார்ச் 2025 பரபரப்பை ஏற்படுத்திய தோனி கெய்க்வாட் ஆட்டமிழந்த போது சிஎஸ்கே வெற்றிக்கு 25 பந்துகளில் 54 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், தோனி, ஜடேஜா கூட்டணி அதை 12 பந்துகளில் 39 ரன்களாகக் குறைத்தனர். 18-வது ஓவரை வீசிய தீக்ஷனா பவுண்டரி இல்லாமல் பந்துவீசி சிஎஸ்கேவுக்கு சிக்கலை ஏற்படுத்தினார் ஆனால், தேஷ்பாண்டே வீசிய 19வது ஓவரில் தோனி 2 சிக்ஸர் பவுண்டரி என 19 ரன்கள் சேர்த்து ஆட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தினார். கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா கடந்த சீசனில் சிஎஸ்கே அணியை டிபெண்ட் செய்ததால் அவரே இந்தமுறையும் பந்துவீசினார். அது மட்டுமல்லாமல் வேகப்பந்துவீச்சை தோனி எளிதாக ஆடிவிடுவார் என்பதால் சந்தீப் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. சந்தீப் வீசிய 2வது பந்தில் தோனி அடித்த ஷாட்டை ஹெட்மெயர் கேட்ச் பிடிக்கவே 16 ரன்கள் எடுத்து அவர் வெளியேறினார். அடுத்துவந்த ஓவர்டன் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்கவே, அதன்பின் அடிக்க முடியாமல் சிஎஸ்கே 6 ரன்னில் தோல்வி அடைந்தது. ஜடேஜா 32 ரன்களிலும், ஜேமி ஓவர்டன் 11 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES முதல் வெற்றிக்காக காத்திருந்தோம் வெற்றிக்குப்பின் ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் கூறுகையில் " இந்த வெற்றிக்காக நீண்டநேரம் காத்திருந்தோம். 20 ரன்கள் குறைவாகவே சேர்த்தோம். நடுப்பகுதியில் விரைவாக விக்கெட்டை இழந்ததுதான் இதற்கு காரணம். ஆனால் பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டோம்,. கடந்த 2 ஆட்டங்களும் எங்களுக்கு கடுமையானதாக இருந்தது, ஆனால்,அந்தத் தோல்விகளை மறந்துவிட்டு, புத்துணர்ச்சியுடன் இந்த ஆட்டத்தை எதிர்கொண்டோம், அனைவரின் கூட்டுழைப்பால் வெற்றி கிடைத்தது. சூழலுக்கு ஏற்ப பந்துவீச்சை மாற்றினோம், ஆர்ச்சர் சிறப்பாக பந்துவீசினார், பீல்டிங்கும் எங்களிடம் இன்று சிறப்பாக இருந்தது, எங்களின் பீல்டிங் பயிற்சியாலர் திஷாந்துடன் நீண்ட பயிற்சி எடுத்ததற்கு பலன் கிடைத்தது" எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒவ்வொரு விக்கெட் வீழ்த்தும்போது, "புஷ்பா" படபாணியில் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி ஹசரங்கா ரசிகர்களை குஷிப்படுத்தினார். இதுதான் உண்மையான ஆர்ச்சர் இந்த சீசன் தொடங்கியதிலிருந்து அதிகமாக ரன் கொடுக்கப்பட்டு பந்துவீச்சில் வறுத்தெடுக்கப்பட்டவர் ஜோப்ரா ஆர்ச்சர். ஒருகாலத்தில் தனது மின்னல்வேகப்பந்துவீச்சால் உலக அணிகள அலறவிட்ட ஆர்ச்சரை இந்த சீசன் தொடக்கத்தில் அவரை கண்ணீர்விட வைத்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் தன்னுடைய பந்துவீச்சு தரம் என்ன என்பதையும், கிளாசிக் ஆர்ச்சர் யார் என்பதையும் வெளிப்படுத்தினார். ஆர்ச்சர் வீசிய 3 ஓவர்களும் அவரின் பந்துவீச்சு வேகம் சராசரியாக மணிக்கு 145கி.மீக்கு குறையவில்லை. ஆர்ச்சரின் டெஸ்ட் பந்துவீச்சு துல்லியம், ஹார்டு லென்த்தை சமாளிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், திரிபாதி இருவருமே திணறினர். ஆர்ச்சர் பந்துவீசியது மட்டும்தான் தெரிந்தது, ஆனால், பேட்டில் படாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றுவிடும், சிஎஸ்கே பேட்டர்கள் இருவரும் வேடிக்கை பார்க்க வேண்டும் அல்லது டிபெண்ட் செய்ய வேண்டிய நிலைதான் இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா தரமான வேகப்பந்துவீச்சுக்கு இணைகொடுக்காமல் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயில் ஆர்ச்சரின் பந்துவீச்சு சிஎஸ்கே பேட்டர்களுக்கு வேடிக்கை காட்டியது. ஆனால், ஆர்ச்சருக்கு நேற்று முழுமையாக ஓவர்களும் கொடுக்காமல் 3 ஓவர்கள் மட்டுமே வழங்கப்பட்டது, 3 ஓவர்கள் வீசிய ஆர்ச்சர் ஒரு மெய்டன் 13 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். கோடையில் எந்தெந்த பாம்புகள் வீடுகளை நோக்கிப் படையெடுக்கும்? எப்படி தவிர்க்கலாம்?29 மார்ச் 2025 தினமும் நிம்மதியாக மலம் கழிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன?28 மார்ச் 2025 சிஎஸ்கே தோல்விக்கான காரணங்கள் சிஎஸ்கே அணியின் நேற்றைய தோல்விக்கு முக்கியமான காரணம் அணியின் தேர்வுதான். குறிப்பாக திரிபாதிக்குப் பதிலாக டேவான் கான்வேயை தொடக்க வீரராக களமிறக்கி இருக்கலாம். வேகப்பந்துவீச்சில் எதிரணியை மிரட்டும் அளவுக்கு நல்ல தரமான வேகப்பந்துவீச்சாளர்களை சேர்க்க வேண்டும். அன்சுல் கம்போஜ் உள்நாட்டில் சிறப்பாக பந்துவீசியவர் அவருக்கு இன்னும் வாய்ப்பளிக்கவில்லை. ராஜஸ்தான் அணியில் நேற்று இருந்த பீல்டிங் தரம் சிஎஸ்கேயிடம் இல்லை. இதைத்தான் கேப்டன் ருதுராஜும் பேட்டியில் குறிப்பிட்டார். நடுப் பகுதியில் ஷிவம் துபே என்னும் ஒற்றை பேட்டரை மட்டுமே பெரிய ஷாட்களுக்கு சிஎஸ்கே நம்பி இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணியில் அனிகேத், அன்சாரி என இரு முத்துகளை கண்டெடுத்துள்ளது. அதுபோல் சிஎஸ்க அணியும் இளம் வீரர்களை கண்டுபிடிக்க வாய்ப்பளிக்கலாம். சிஎஸ்கே அணி தொடர்ந்து அஸ்வின், ஜடேஜா, ஷிவம் துபே, பதிராணா, என்று ஒரு மாதிரியான வீரர்களையே களமிறக்குவது எதிரணியின் வெற்றியை மிகவும் எளிதாக்கிவிடும். இந்த பேட்டர்களுக்கு எவ்வாறு பந்துவீசி விக்கெட் வீழ்த்தலாம் என்பதும், இவர்களின் பந்துவீச்சை எவ்வாறு விளையாடலாம் என்றும ஹோம்ஓர் செய்வது எதிரணிக்கு எளிது. எதிரணி ஊகிக்க முடியாத வகையில் பேட்டிங் வரிசையையும், பந்துவீச்சாளர்களையும் பயன்படுத்த வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES 2018 முதல் 180 ரன்னுக்கு மேல் சிஎஸ்கே சேஸ் செய்ததில்லை கடந்த 2018 ஆம் ஆண்டுக்குப்பின் சிஎஸ்கே அணி சேஸிங்கில் 180 ரன்களுக்கு மேல் சேஸ் செய்ததில்லை என்பது நேற்று உறுதியானது. 180 ரன்களுக்கு மேல் உள்ள இலக்குகளை சேஸிங் செய்த கடைசி 9 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி தோற்றுள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் சந்தித்கும் 2வது தோல்வி, புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்துக்குச் சரிந்துள்ளது. ராஜஸ்தான் அணி இந்த சீசனில் பெறும் முதல் வெற்றியாகும், இருப்பினும் 8வது இடத்தில் இருக்கிறது. தங்க நகைகளை பயன்படுத்தாமல் வைத்திருந்தால் துருப் பிடிக்குமா?27 மார்ச் 2025 இந்திரா - ஃபெரோஸ் காந்தி திருமணத்தை நேரு எதிர்த்தது ஏன்? ஆதரித்த காந்தி அதில் கலந்து கொள்ளாதது ஏன்?30 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES தோனி தாமதமாக களமிறங்குவது ஏன்? இந்த ஐபிஎல் சீசனில் தொடக்கம் முதலே, பேட்டிங்கில் தோனி மிகவும் தாமதமாக களமிறங்குவது விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. ஆர்சிபிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 13-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்த போது, ரவிச்சந்திரன் அஸ்வினை களமிறக்கிவிட்டு தோனி 9வது வீரராக களமிறங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்றைய ஆட்டத்திலும் கூட, 12-வது ஓவரில் விஜய்சங்கர் 4-வது விக்கெட்டுக்கு ஆட்டமிழந்த போது தோனி களமிறங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ரவீந்திர ஜடேஜா களமிறங்கி கேப்டன் ருதுராஜூடன் ஜோடி சேர்ந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த ஃபினிஷர், மேட்ச் வின்னர் என்று பெயரெடுத்த தோனி, சிஎஸ்கே அணிக்குத் தேவையான நேரத்தில் களமிறங்காமல் கடைசி நேரத்தில் களம் காண்பது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. இதற்கு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய தோல்விக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் விடை கிடைத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங், தோனி தாமதமாக களமிறங்குவது குறித்து விளக்கம் அளித்தார். அவர் பேசுகையில், "அவரது உடலும் முழங்கால்களும் முன்பு போல் இல்லை. அவரால் நன்றாக நகர முடிகிறது. ஆனால், அவரால் தொடர்ந்து 10 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்ய முடியாது. எனவே அவர் நமக்கு என்ன கொடுக்க முடியும் என்பதை அன்றைய தினம் மதிப்பிடுவார். ஆட்டம் சமநிலையில் இருந்தால், அவர் சற்று முன்னதாகவே செல்வார். மற்ற சமயங்களில் அவர் மற்ற வீரர்களுக்கு ஆதரவாக இருப்பார்." என்றார். அதற்காக, 43 வயதான தோனியை அணியில் தொடர்ந்து தக்க வைப்பதற்கான வழிகளை சிஎஸ்கே நிர்வாகம் கண்டுபிடித்து வருகிறது என்று அர்த்தமல்ல என்றார் ஃப்ளெமிங். "கடந்த ஆண்டும் நான் சொன்னேன், அவர் எங்களுக்கு மிகவும் மதிப்பு மிக்க ஒரு வீரர். தலைமைத்துவம் மற்றும் விக்கெட் கீப்பிங் திறன் கொண்ட அவர் சிறப்பானவர். 10 ஓவர்கள் களத்தில் பேட்டிங் செய்வது என்பதை அவர் ஒருபோதும் செய்ததில்லை. சுமார் 13-14 ஓவர்களில் ஆட்டத்தின் நிலைமையைப் பொருத்து அவர் களமிறங்க விரும்புகிறார்" என்று பிளமிங் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cwyn3kxz3nzo
  28. CSK VS RR கொஞ்சம் முன்னமே 3,4 இல் இறங்கியாவது அவுற் ஆகி தொலையண்டா.. * * தோனி
  29. படம்: ஒருவிரல் (1965) பாடியோர் : டி எம் எஸ் & பி சுசீலா இசை: வேதா
  30. கூகிளியினை கணிப்பது மிக இலகுவானது, பந்து வீசும் போது துடுப்பாட்டக்காரருக்கு பின் கை மிக தெளிவாக தெரியும். சில பந்து வீச்சு கணிப்பது மிக கடினம் ரோகித்திற்கு சிராஜ் போட்ட wobble seam பந்து கணிப்பது கடினம், சாதாரண seam up பந்து வீச்சு போல ஆனால் கொஞ்சம் கட்டர் போடுவது போல விரலை வைத்து வீசியிருந்தார் இது வழமையான wobble seam முறை அல்ல. மெதுவான ஆடுகளங்களில் இந்த wobble seam நல்ல உத்தி.
  31. பத்திரம் பத்திரம். எத்தினை பூட்டுப் போடுறீங்களோ தெரியா, கவனமாப் பாத்துக்கங்க. கருமேகங்கள் சூழும் நேரம் இது.
  32. நீங்கள் நினைப்பது போலில்லாமல்......புலம்பெயர் தமிழர்களை விட அங்குள்ளவர்கள் வசதியாகவும் சந்தோசமாகவும் வாழ்கின்றார்கள்.
  33. உங்களின் இந்த எண்ணம் யாழ்ப்பாணத்தில். தொடர்ந்து வாழும் மக்களுக்கு இருக்க ?? இல்லை அவர்கள் லண்டனில் வாழ விரும்புவர்கள் சரிய?? இல்லை பிழையா ?? நீங்கள் அல்லது யாராவது வெளிநாடு வரமால். இலங்கையில் தொடர்ந்து இருந்து இருந்தால் இப்படி சிந்திக்க போவதில்லை
  34. தொடர்ந்தும் முதல்வராக இருக்கும் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள். கிருபனின் கணனியை கெக் பண்ணுறம். செம்பாட்டானின் பதிவுகளை மாத்திறம்.
  35. தொடர்ந்தும் முதல்வராக தன்னை நிலைநிறுத்திய செம்பாட்டானுக்கும் துணை முதல்வர் பதவியை மீண்டும் ஏற்றுக் கொண்ட எங்கள் மன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் 😇
  36. பவர்பிளேயில் நன்றாக விளையாடியிருந்தால் நிச்சயம் வென்றிருப்பார்கள்.
  37. பூட்டினே வெடிக்க வைத்தாரோ தெரியாது. போர் நிறுத்தத்துக்கு ஒத்துழைக்கிறார் இல்லை என்று ரம் வேறு பம்முகிறார். Trump criticizes Putin and threatens adversaries with new tariffs as he barrels toward April 2 deadline
  38. நான் நினைக்கின்றேன் இதன் காரணம் மொழிவரட்சி. மொழி ஆளுமை குறைபாடு. ஆங்கிலம் பேசும்போது பலர் யூ நோ யூ நோ என்று கூறுவார்கள். வசனத்தை முடிக்கும்போது யூ நோ என்று முடிப்பார்கள். இதுவும் ஒருவித மொழி ஆளுமை குறைபாடே. குறிப்பிட்ட மொழிகளில் நிறைய தரமான புத்தகங்கள் வாசித்தால் மொழி ஆளுமையை விருத்தி செய்யலாம் என்று கூறுவார்கள்.
  39. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 26ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2025) 27ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்த யாழ் இணையம், உலகத் தமிழர்களின் எண்ணங்களையும், உள்ளங்களையும் இணைக்கும் தருணங்களை உருவாக்கி வருகிறது. பல கருத்தாளர்கள், படைப்பாளிகள், தொழில்நுட்பவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து தமிழ் மொழியின் வளத்தையும், கருத்துச்சுதந்திரத்தையும் பறைசாற்றும் தளமாக இது திகழ்கிறது. இவ்வாண்டும், முன்னைய ஆண்டுகள்போலவே யாழ் இணைய உறவுகள் தங்கள் தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்து, தனிப்பட்ட ஆக்கங்களை பகிர்ந்து, விவாதங்களைப் பகிர்ந்ததற்காக அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றோம். தகவல் பரிமாற்றத்தில் விழிப்புணர்வு: ஈழத்திலும் உலகத்திலும் பரவி வரும் தவறான தகவல்கள் மற்றும் சதி முனைப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நம்பகமான தகவல்களை பகிர வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம். கருத்துக்கள் விவாதிக்கப்பட வேண்டும், ஆனால் அவை உண்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும். தமிழ் நலனுக்காக ஒருமைப்பாடு: தாயக மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடரும் நிலையில், உலகத் தமிழர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் உதவிக் கரங்களை நீட்டியதை இங்கு நினைவுப்படுத்த வேண்டியுள்ளது. சமூக நீதி, சமவுரிமை மற்றும் தமிழ்த் தேசிய சிந்தனையை வலுப்படுத்தும் முயற்சிகள் தொடர வேண்டும். புதிய உறுப்பினர்கள் – புதிய தொடக்கம்: இப்புதிய ஆண்டில், மேலும் புதிய உறுப்பினர்களை யாழில் இணைக்கும் ஒரு முயற்சியை மேற்கொள்ள விரும்புகின்றோம். நீங்கள் இதுவரை இணைந்திராவிடில் இணைந்து உங்கள் கருத்துக்களைப் பதிவிடும்படி வேண்டுகின்றோம். அத்துடன் உறுப்பினர்கள் உங்கள் சுற்றத்திலுள்ளவர்களுக்கு யாழ் இணையத்தை அறிமுகப்படுத்தி, கருத்துக்களத்தில் அவர்களையும் இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். யாழ் செழிப்புற வேண்டும் என பல்வேறு வகையில் ஆலோசனைகளைத் தந்து கொண்டு இருப்பவர்களுக்கும் மற்றும் காலநேரம் பாராது பல்வேறு சுமைகளுக்கு மத்தியிலும் களத்தினை வழிநடத்தும் மட்டுறுத்துனர்களுக்கும் யாழ் செழிப்புற வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கும் பாவனையாளர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்ந்தும் உங்கள் ஆலோசனைகளை எமக்கு தெரியப்படுத்துங்கள். இணைவோம் – வளர்வோம்: கடந்த காலங்களில் கூறியது போன்று, எமது மண்ணோடும், மக்களோடும் நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாக, துணையாக, ஒற்றுமையாய் பயணிப்போம். “நாமார்க்கும் குடியல்லோம்” நன்றி, யாழ் இணைய நிர்வாகம் திகதி: 30 மார்ச் 2025
  40. உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி ........! 😘
  41. ஏற்கனவே வீட்டிலை ஒரே திட்டு.....பிறகு இஞ்சை வந்து திட்டு எண்டால் மனது தாங்காது தானே.🤣 அதுசரி இப்ப உங்கட குக்கிங் பேய்க்காட்டுகள் ஒண்டையும் காணேல்ல. கை விட்டாச்சா? 😎
  42. அவ ஒண்டும் இல்லாததை பொல்லாததை பில்டப்பண்ணி எழுதேல்லையே......உள்ளதை திருப்பி எழுதியிருக்கிறார் அவ்வளவுதான்....😂 பணிச்சுமைகளுக்கு மத்தியில் எழுதுவதை பாராட்டணும்.🙂
  43. தோட்டம் செய்யிற புரோக்கிறாம் கேன்சல் பண்ணியாச்சு...
  44. இவங்களை நம்பேலாது கண்டியளோ. நேரத்துக்கு நேரம் சட்டங்களை மாத்துவாங்கள்.😂 பென்சன் எடுக்கிற நேரம் வர கடிதம் போடுவாங்கள் தானே எண்டு பாத்துக்கொண்டிருக்கிறன்.எண்டாலும் எனக்கு முழங்கால் பிரச்சனை இருக்கிறபடியால முதலே பென்சன் எடுக்க வாய்ப்பிருக்கு......😎 கெதியாய் ஊருக்கு போறன்.....6 ஏக்கர் தோட்டக்காணிய துப்பவராக்கிறன்....ரஜினி மிளகாய்க்கண்டு வைக்கிறன். கோடி கோடியாய் சம்பாதிக்கிறன்.😁
  45. கனக்க நினைச்சு துள்ளிக்குதிக்க வேண்டாம்.🤸 நான் பிறந்து நாலு வருசத்துக்கு பிறகுதான் பதிஞ்சதாம்
  46. பணம் விளையாடி இருக்கிறது.பறவா இல்லை.இனிமேலாவது திருந்தி வாளட்டும்.ஆனாலும் இவர்கள் திருந்த இடமில்லை.அனைத்து யூருப்பர்களுக்கும் சேர்த்தே சொல்கிறேன்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.