Leaderboard
-
கிருபன்
கருத்துக்கள உறவுகள்13Points38756Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்8Points87990Posts -
செம்பாட்டான்
கருத்துக்கள உறவுகள்7Points1223Posts -
alvayan
கருத்துக்கள உறவுகள்7Points5417Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/05/25 in Posts
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வாங்கோ எல்லோரும் வரிசையில் வாங்கோ. முட்டை வேணுமா முட்டை பிரியாணி வேணுமா. எல்லாம் கிடைக்கும். பெரும் சதி எல்லாவற்றையும் முறியடித்து, எல்லோரின் ஏகோபித்த ஆதரவுடன். மீண்டும் ஞான் செம்பாட்டான்.4 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேஎல் ராஹுலின் அதிரடியான 77 ஓட்டங்களின் துணையுடன் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் விஜய் சங்கரைத் தவிர பிறர் நிலைத்து ஆடாததால் விஜய் சங்கரின் ஆட்டமிழக்காது எடுத்த 69 ஓட்டங்களுடன் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 158 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 25 ஓட்டங்களால் வெற்றியீட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிரடியான 67 ஓட்டங்களுடனும் பிற வீரர்களின் வேகமான துடுப்பாட்டங்களாலும் 4 விக்கெட் இழப்பிற்கு203 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்கள் பலர் விரைவாக விக்கெட்டுகளை இழந்ததால், நெஹால் வதேராவின் 62 ஓட்டங்களுடன் 9 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 155 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 09 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @suvy ஐயா சத்தமில்லாமல் முதல்வராக வந்துள்ளார். எனினும் @செம்பாட்டான் உம், @நந்தன் உன் சமமான புள்ளிகளில் முதல்வர் பதவியைக் குறிவைத்து நிற்கின்றனர்! @alvayan நாலாம் இடத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளார். இதில் சதிவேலை எதுவும் கிடையாது என்பதை புள்ளிவிபரத்துறை அறியத் தந்துள்ளது.😁3 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் சுவி ஐயாவுக்கு வாழ்த்துகள்.விடாது புள்ளிகளிளைப் பெற்றுக்கொண்டிருக்கும் செம்பாட்டானுக்கும் நந்தனுக்கும் வாழ்த்துகள். ஈயடிச்சான் கொப்பி அடிக்கக்கூடாது இடைக்கிடை சில மாற்றங்களையும் செய்ய வேண்டும்.கோஷானும்தான் கொப்பியடிச்சவர். அவருடைய நிலமையைப்பாருங்கள் . அவர் பழைய போட்டியைப் பார்த்துக் கொப்படிச்சிருப்பாரோ??2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வீர தீர சூரனைக் கொப்பியடித்ததாக ஒப்புக்கொண்ட @புலவர் ஐயா ஐந்தாம் இடத்தில் இருக்கின்றார். வீர தீர சூரனும் அவருடன் கோரஸ் பாடுபவர்களும் 17 ஆம் இடத்திலிருந்து தவிக்கின்றார்கள். அதற்குள் புள்ளிவிபரங்களைக் கரைத்துக் குடித்த @கந்தப்பு வும் நானும் எப்படி மாட்டுப்பட்டோம் என்று தெரியவில்லை!2 points
-
இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
முதலில் நட்பை ஏற்படுத்திக் கொள் அந்த நட்பே உன்னைப் பாதுகாக்கும் இது மோடியின் ஒரு வகையான திட்டமிட்ட இலங்கைக்கான எச்சரிக்கை2 points
-
இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
விருது கொடுப்பதில் டோழர் மார் நன்றாக செயல் படுகின்றனர் ஆனால் மோடியின் நண்பரின் சூரிய கதிர் மின் உற்பத்திக்கு தடையை போடுயினம் ... ஒரு காலத்தில் இந்த டோழர் கோஸ்டியினர் அப்பட்ட எப்பா மசால தோசை ,வட என அரச சொத்துக்களையும் ,தமிழ் மக்களின் உயிர்களையும் ,சொத்துக்களையும் நாசமாக்கிய கோஸ்டிகள் இன்று இந்தியா பிரதமருக்கு ராஜ மரியாதை....2 points
-
இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
ஆனால் மோடி ஜீ தமிழில் நன்றி தெரிவித்துள்ளார் டுவிட்டரில் ...அந்த வகையில் மோடி ஜீ அச்சா ஜீ.. மோடி ஜீ அச்சா ஜீ..2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
செம்பாட்டானை கோடு கச்சேரி என்று ஏறி இறங்க வைக்கிற நோக்கமோ? எனக்கு சீனி கம்மியாக போட்டு 2 முட்டைக் கோப்பி பிளீஸ்.2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அல்வாயன் கதிரையை விட்டு இறங்க விரும்பாததால் புள்ளிகள் கொடுக்கத் தாமதமாகும்.. 😉2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025 இன் 16வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான மிச்சல் மார்ஷினனதும் எய்டன் மார்கத்தினதும் அதிரடியான அரைச் சதங்களுடன் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்களை எடுத்திருந்தது. ஹார்டிக் பாண்டியா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் 17 ஓட்டங்களில் விக்கெட்டுகளை இழந்து வெளியேற பின்னர் வந்த சூரியகுமார் யாதவின் அதிரடியான 67 ஓட்டங்களுடன் வெற்றியை நோக்கி நகர்ந்தாலும் திலக் வர்மா மெதுவாகவே ஓட்டங்களை எடுத்து பந்துகளை வீணாக்கியதாலும் இறுதி ஓவர்களின் ஓட்டங்களை எடுக்கத் திணறியதாலும் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 191 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 12 ஓட்டங்களால் வெற்றியீட்டியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: முதல்வர் பதவியை @alvayan ஓரடி முன்னகர்ந்து கைப்பற்ற @செம்பாட்டான் பின்னே கால்வைத்து அடுத்த நிலையில் தற்காப்பு வேலியைப் போட்டுள்ளார்! கூடவே மூக்குச் சாத்திரம் பார்த்த @நந்தன் உம் நிற்கின்றார்.2 points
-
ஈழத்து நாட்டார் தெய்வங்கள் - தி. செல்வமனோகரன்
பறையிசைக்கும் மக்களின் குலதெய்வம் வல்லியக்கன் தி. செல்வமனோகரன் 18 நிமிட வாசிப்பு March 8, 2024 | Ezhuna பின்காலனியச் சூழலில் ஈழத்துப்புலம் தனக்கான தனித்த அடையாளங்களை, அவற்றைப் பேணுதலுக்கான அக்கறையை கொண்டமைந்ததாக இல்லை. பொருளாதாரம், சமயம், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்கத்தை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய பின்னணியில் தன்னடையாளப் பேணுகை குறித்த பிரக்ஞையை ஏற்படுத்துதலின் ஒரு பகுதியாகவே ‘ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமையப்பெறுகிறது. இதில் ஈழத்தில் மட்டும் சிறப்புற்றிருக்கும் தெய்வங்கள், ஈழத்தில் தனக்கான தனித்துவத்தைப் பெற்றிருக்கும் தெய்வங்கள் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இத்தொடரானது தெய்வங்களை அடையாளப்படுத்துவதோடு அவற்றின் வரலாறு, சமூகப் பெறுமானம், சடங்கு, சம்பிரதாயங்கள், தனித்துவம், இன்றைய நிலை, சமூகத்துக்கும் அதற்குமான இடைவினைகள் முதலான பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக அமைகிறது. கள ஆய்வின் வழி நிகழ்த்தப்படும் இவ்வாய்வு விவரணம், வரலாறு எனும் ஆய்வு முறைகளின்படி எழுதப்படுகிறது. இவ்வாய்வுக்கான தரவுகள் நூல்களின் வழியும் நேர்காணல், உரையாடல், செய்திகள் என்பவற்றின் வழியும் பெறப்பட்டு சமூக விஞ்ஞானப் பார்வையினூடாக ஆக்கப்படுகின்றது. கருவிக்கையாட்சி, மொழிப்பயன்பாடு என்பவற்றின் வழி மனிதனின் பகுத்தறிவுச் சிந்தனை தொழிற்படத் தொடங்கியது. அப்போதே இயற்கையின் அதீத ஆற்றல் மனிதனுக்கு அதன் மீது பயத்தையும், பக்தியையும் உருவாக்கியது. தன்னை மீறிய மேம்பட்ட சக்தி உண்டு என்ற பிரக்ஞையும் நம்பிக்கைகயும் மேலோங்கத் தொடங்கின. இயற்கை மீதான பயபக்தி இயற்கை வழிபாடாகவும் பின் இயற்கைத் தெய்வ வழிபாடாகவும் பரிணாமமுற்றது. நிலத்தெய்வங்கள், குலதெய்வங்கள், அச்சத்தால் உருவாக்கப்பட்ட பல தெய்வங்கள் எனப் பல்வகைத் தெய்வங்கள் உருவாக்கம் பெற்றன. காலதேச வர்த்தமானத்திற்கேற்ப தெய்வங்களின் முதன்மையும் மாறத்தொடங்கியது. அவ்வாறு மாறாத, மக்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்த மரபார்ந்த தெய்வங்கள், நாட்டார்தெய்வங்கள், கிராமியத் தெய்வங்கள் எனப்பட்டன. காலனித்துவத்தின் வழி ஈழத்துப்புலத்தில் உருவான நவீனத்துவம், ஆங்கிலமயப்பட்ட, மேலைத்தேய கருத்தாக்கங்களையும், வாழ்வியலையும், கலாசார பண்பாடுகளையும் வியப்புடன் நோக்கி அவையே மேலானவை எனும் மனப்பதிவைத் தந்தன. அரச உத்தியோகம், மத்தியதர வர்க்கத்தைப் பெருகச் செய்தது. சுதேச கலை, கலாசாரம், பண்பாடு, பொருளாதாரம், தத்துவம், சமய மரபுகள் போன்றவற்றை கீழ்மையானவையாக எண்ணவும் புறமொதுக்கவும் செய்தன. பின்காலனிய உலகமயமாதல் சூழல், ஒற்றைப் பண்பாட்டை அவாவி நிற்கிறது. இது சிறுசிறு இனக்குழுக்களினது தனித்த அடையாளங்கள் சிதைவதற்கும், வரலாறற்றுப் போதலுக்கும் இருப்புச் சார்ந்த கேள்விகளுக்கும் உட்படுத்தலை அவதானிக்கச் செய்தன. இதன் வழி ‘மாற்றுச்சிந்தனை’ முதன்மையுறத் தொடங்கியது. பண்பாட்டுப் பன்மைத்துவத்தின் முக்கியத்துவம், சுதேச அறிவியல், சமயம், தத்துவம், கலாசார மரபுகளின் வழி வரலாறு பற்றிய பிரக்ஞை என்பன மீளக் கட்டமைக்கப்படத் தொடங்கின. மனிதனுக்கு உள்ளார்ந்த சிந்தனை (abstract thinking) தோன்றிய காலத்திலிருந்து இயற்கை சார் உணர்வு ஏற்பட்டது. அதன்வழி இயற்கை, வழிபாட்டுப் பொருளானது. இயற்கைப் பொருட்கள் அனைத்தும் கடவுளர் ஆயின. இவ்வியற்கையின் சக்தியே இயக்கன்; இதனை சமூக மானிடவியலாளர்கள் ‘அனிமிசன்’ என்கின்றார்கள். இயற்கையின் கடவுளர் தன்மை இயக்கன் – இயக்கியாயின், இயக்கனும் இயக்கியும் கொடூரமும், அழகும், அன்பும் நிறைந்தவையாக எடுத்தாளப்படுகின்றன. இந்தியாவின் பிரதான சமயங்களான இந்து சமயம், பௌத்தம், சமணம் போன்றன இயக்கன் – இயக்கியை உள்வாங்கின. குறிப்பாக ஒரு கடவுளை முதன்மைப்படுத்தும் போது அது இயக்கர்களின் தலைவனாக – இயக்கிகளின் தலைவியாகக் காட்டப்பட்டது. சிவன் பூதநாதரானார். இலங்கையின் வரலாற்று நூல்களில் சிங்கதேசக் குடிமகனான விஜயன் இயக்கியாகிய குவேனியைத் திருமணம் செய்தமையும் தலைவனானமையும் இவ்வாறாகவே இருக்கலாம். தமிழர் மரபிலும் ஏனையோர் மரபிலும் இயக்கி பெற்ற இடத்தை இயக்கன் பெறவில்லை. அதேபோல இலங்கை வரலாற்றில் நாகர்கள் பெற்ற வரலாற்றுத்தடத்தை இயக்கர்கள் பெறவில்லை. விஜயனால் குவேனி கைவிடப்பட்ட பின் அவர்களின் குழந்தைகள் வளர்ந்து தகாப்புணர்ச்சி வழி குடும்பங்கள் உருவானதாகவும் அவர்களே வேடுவர்கள் எனப்படுவதாகவும் கூறப்படுகின்றது. இலங்கையின் ஆதிவேடர்களின் தெய்வம் ‘யக்கு’ என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் வாழ்வில் நிலமானியமுறையும் அதன்வழி கெடித்திருந்த சாதியமும் சமூகவியல் தளத்தில் முக்கியமானவை. தொழில்ரீதியான அடுக்குமுறை பேதத்தைத் இது தந்தது; கலை, பண்பாடு, பொருளாதாரம், சமயம் என எல்லாத் தளங்களிலும் செல்வாக்குச் செலுத்தியது. இதன் வழி சாதியத் தெய்வங்களும், சாதியக் கோயில்களும் உருவாகின. பறையிசைக்கும் குடிகளின் தெய்வமே வல்லியக்கன். வல்லியக்கன் இயற்கை – இயக்க – இயக்கன் – இயக்கி வழிபாட்டின் வழி உருவான வழிபாடாக இதனை இனங்காண்பதோடு ‘யக்’ வழிபாட்டோடும் இணைத்து இத்தெய்வம் பற்றிய முதன்மை ஆய்வினைச் செய்த பேராசிரியர் இரகுபதி கருத்துரைக்கின்றார். இயற்கை வழிபாடு உலகப் பொதுமைக்குமானது. இயற்கை எனும் தமிழ்ச் சொல் இயற்கை வழிபாட்டைக் குறித்து, அது பின் இயக்க வழிபாடாக இயக்கன் – இயக்கி எனும் ஆண், பெண் வழிபாடாக வளர்நிலை பெற்றிருக்க வேண்டும். அதனை ‘யக்’ வழிபாட்டோடு இணைத்தல் அவசியமற்றது. ‘வல்லியக்கன்’ எனும் பெயர் பற்றி பல்வகை அனுமானங்கள் உண்டு. வல்லி – இயக்கன் – வல்லி எனும் பறையிசைக்கும் மக்களின் மூதாதையால் வழிபடப்பட்ட தெய்வம், வல்லியக்கன் எனக் கூறப்பெற்றிருக்கலாம். ஏனெனில் வல்லி, வல்லியப்பன் எனும் பெயர்கள் இன்றும் பறையிசைக்கும் மக்களிடம் செல்வாக்குடன் காணப்படுகிறது. வல்லியின் வழித்தோன்றல்கள் வல்லியக்கனை வழிபடுகின்றனர். வலிமை பொருந்திய இயக்கன் என்ற நம்பிக்கையின் வழி உருவான பெயராக இருக்கலாம். வள்ளிபுனம் – வள்ளி புலம் – வல்லி புரம் வள்ளி – வல்லி எனும் அடிப்படையில் வல்லியின் தலைவன் முருகனைக் குறிப்பதாக எழுந்து பின்பு அது தனித்தெய்வமாக உருப்பெற்றிருக்கலாம். வள்ளி வேடுவர் பெண் என்பதும் இலங்கை வரலாற்றில் இயக்கர் வேடுவர்களாக சித்தரிக்கப்படுவதும் கவனிக்கத்தக்கது. ஈழத்தின் வல்லியக்கன் வழிபாட்டிடங்கள் ஈழத்தில் பறையிசைக்கும் மக்கள் வாழுமிடங்கள் எங்கும் வல்லியக்கன் வழிபாடு இருந்திருக்க வேண்டும் எனக் கூறப்பட்டாலும் அதற்குப் போதிய சான்றுகள் இல்லை. “கன்னாபுரம் நின்று அந்நாள் நடந்து அறிதரிய ஏழாலை அதில் மீதுறைந்து புன்னாலைக்கட்டுவன் அச்செழுகோப்பாய் புத்தூர் நீர்வேலி வறுத்தலைவிளான் பளையிரண்டு மன்னார் சுழிபுரம் சங்கானை தோலவரம் மற்றுமுள்ள தேசமெல்லாங் கடந்து சுன்னாகம் வாழவரு வல்லியக்கராசனை தொழுவார்க்கு வல்வினைநோய் தொலைந்து போகும்” இப்பாடலை கிறிஸ்தவப் பாதிரியார் சுவாமி ஞானப்பிரகாசர் தன் கட்டுரையில் எடுத்தாண்டுள்ளார். ஏழாலை வல்லியக்கன் கோயில் பூசாரி வல்லியக்கன் ‘பத்தாசியாக’ கோயில் நிகழ்வுத் துண்டுப் பிரசுரத்தில் அச்சடித்து வெளியிட்டுள்ளார். இது வாய்மொழிப் பாடலாக இருந்திருக்க வேண்டும். இப்பாடல் ஈழநிலத்தின் வடபுலத்தில் வல்லியக்கன் கோயில் இருந்த இடங்களைப் பட்டியற்படுத்துகின்றது. கன்னாபுரம், ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், அச்செழு, கோப்பாய், புத்தூர், வறுத்தலைவிளான், பளை இரண்டும், மன்னார், சுழிபுரம், சங்கானை, தொல்புரம், சுன்னாகம் என்பன அவையாகும். இவற்றுள் தெல்லிப்பழையில் ஆலயமுண்டு. கிளிநொச்சி மாவட்ட பளை, விடத்தற்பளை மற்றும் இயக்கச்சி பிரதேசங்களில் வல்லியக்கனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சங்கானை கோயில் அழிக்கப்பட்டுவிட்டது. அது போலவே தொல்புரம், சுழிபுரம், சுன்னாகம், மன்னார் கோயில்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. குடிசனப் பரவலாக்கத்தின் வழி உருவான வேலணை சின்னமடு, நவாலி, சண்டிலிப்பாய், இருபாலை, அச்செழுவின் புதியகோயில் போன்றன கள ஆய்வினூடாகப் புதிதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. வல்லியக்கன் கோயில்கள் தனிக்காணிகளிலும் வீட்டு வளவுகளினுள்ளும் அமைந்துள்ளமை இது ஒரு குலதெய்வ வழிபாடு என்பதை உறுதிப்படுத்துகின்றது. கோயிலாக இல்லாமல் ஆலமரம், நாவல்மரம், மஞ்சவுண்ணா, பூவரசு போன்ற மரங்களின் கீழ் வல்லியக்கன் அமர்ந்திருந்தார். கல் – மயோசியன் கல் (வெள்ளைக்கல்) சூலம் போன்ற பருப்பொருட்களின் ரூபத்தில் அவர் வழிபடப்பட்டார். மரங்களின் கீழ் திறந்த வெளியிலும் சீமெந்துக் கட்டடங்களிலும் இக்கோயில்கள் அமைந்துள்ளன. இத்தெய்வத்தின் இணைத்தெய்வமாக முடி மன்னர் (கோண்டாவில், அச்செழு, ஏழாலை) காணப்படுகிறார். இதனை விட தற்காலத்தில் இணைத்தெய்வங்களாக காளி (நவாலி), விறுமர், ஐயனார் (கரவெட்டி) என்பன காணப்படுகின்றன. வழிபாட்டு முறைகள் வல்லியக்கனை வழிபடும் முறைகள் பிரதேச வழக்காறுகளுக்கேற்ப சிற்சில மாறுபாடுகளுடன் காணப்படுகின்றன. சில இடங்களில் நித்தம் ‘விளக்கு வைக்கும்’ வழக்கம் உண்டு. ஆனால் பல ஆலயங்களில் வெள்ளிக்கிழமை, விஷேட நாட்கள் போன்ற குறித்த நாட்களில் மட்டும் இவ்வழக்கம் காணப்படுகின்றது. எல்லாக் கோயில்களிலும் ‘வைகாசி விசாகம்’ மிகச்சிறப்பாகப் பொங்கல் வைத்துப் பூசித்து வழிபடப்படும் நாளாகக் காணப்படுகிறது. நாட்டார் தெய்வங்களுக்குப் பொதுவில் வைகாசி விசாகதினம் குளித்தியாக, பொங்கல் நாளாக, மடை நாளாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதன்னின்றும் மாறுபட்டு ஏழாலை வல்லியக்கனுக்கு சித்திரை மாத நான்காவது புதன்கிழமை விஷேடநாளாகக் கருதப்பட்டு மடைப்பண்டம் எடுக்கப்பட்டு பொங்கி வழிபடப்படுகின்றது. கரவெட்டி கோயிலில் பங்குனி கடைசிப்புதன் விஷேடநாளாகும். மடைப்பண்டம் எடுக்கும் மரபு எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. மடைப்பண்டம் எடுக்கும் முதல்நாள் ஆலயச்சூழல் தூய்மைப்படுத்தப்படும். ‘விளக்கு வைத்தல்’ நிகழும். விளக்கு வைப்பவர், பூசை செய்பவர் பறையிசைக்கும் மக்களில் ஒருவராக இருப்பார். இந்நிகழ்வின் பூசாரியாக அவர் திகழ்வார். ஆனைக்கோட்டை போன்ற சில கோயில்களில் வாய்கட்டிப் பூசை செய்யும் முறைமையும் உண்டு. இது கப்புறாளை (கதிர்காமம்), கப்பூகர் (மண்டூர்க்திர்காமம், செல்வச்சந்நிதி) எனும் வாய்கட்டி பூசை செய்யும் முறையின் செல்வாக்கால் வந்திருக்கக் கூடும். பொங்கலுக்கு உரிய பண்டங்கள், பாத்திரங்கள் இணைத் தெய்வங்களின் ஆலயங்களில் வைத்துப் பூசை செய்யப்பட்டு புனிதப்படுத்தப்பட்டு வல்லியக்கன் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும். மடைப்பண்டம் கொண்டுசெல்லப்படும் போது மடைப்பறை இசைக்கப்படும். ஆலயங்களின் நிகழ்வுகளுக்கு இசைக்கவெனத் தனிப்பறையும் தனியான ‘இசைப்பு’ முறையும் கலைஞர்களும் இருந்ததாக அறியமுடிகிறது. இது மங்கல இசையாக, பறை சாற்றுதலாகக் கூறப்படுகிறது. பலியிடும் வழக்கம் இருக்கவில்லை என எல்லா ஆலயக்காரர்களும் உறுதிபட உரைக்கின்றனர். கரவெட்டி கோயிலில் மட்டும் ஆலயத்துக்கு அப்பால் உள்ள சந்தியில் வைத்து மடைப்பண்டம் எடுப்பதாகவும் மடைப்பண்டம் எடுக்கும் போது ‘கோழியறுத்தல்’ எனும் பலி நிகழ்த்தப்படுவதாகவும் நேர்காணல் (சி.அருணகிரிநாதன், வயது 61) மூலம் அறிய முடிந்தது. வல்லியக்கனை வழிபடுதலினூடாக சந்ததி பெருக்கம், நோய் நொடியில் இருந்து விடுபடுதல் போன்ற நம்பிக்கைகள் காணப்படுகின்றன. தமது நேர்த்தி நிறைவுறும் போது நேர்த்திக்கடன் செலுத்தும் முறை காணப்படுகிறது. இது ‘தெய்வக்கடன்’ என்றே கூறப்படுகிறது. பொங்குதல், மடைபரவுதல் போன்றன அவற்றுட்சில. மட்சம், மாமிசம் படைப்பதில்லை. தற்போது காவடியெடுத்தல் போன்றனவும் நிகழ்த்தப்படுகின்றன. இவ்வாலய விஷேடதினங்களில் கலையாடி, குறிசொல்லல், திருநீறு போடுதல் போன்றனவும் நிகழ்த்தப்படுகின்றன. சமகாலப் பயில்வுகள் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி மிகவும் நசுக்கப்பட்ட நிலையில் தமது பொருளாதாரத்துக்கு மூலமாக இருந்த பறையை 1950 – 1970 இடையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வின் வழி உடைத்தும் எரித்தும் ‘இனி பறை இசைப்பதில்லை’ எனச் சபதம் செய்து ஈழத்தின் வடக்குப் பிரதேசத்தில் பல பிராந்தியங்களில் பறையிசைக்கும் தொழில் கைவிடப்பட்டது. பெருந்தெய்வவுருவாக்கம் – பெருங்கோயிற் பண்பாடு, சமஸ்கிருதமயமாக்கம் எனும் பிராமணர்க்குக் தம் கோயிலைக் கையளிக்கும் செயற்பாட்டின் வழி ஆலயங்களில் பறை வாத்தியம் வெளியேற்றப்பட்டு தவில் மங்கல வாத்தியமாக்கப்பட்டது. கிழக்கிலும் மலையகத்திலும் இன்றும் ஆலயங்களில் பறை ஓரளவேனும் இசைக்கப்படுகிறது. வடக்கில் செல்வச்சந்நிதி போன்ற ஒருசில ஆலயங்களில் பறையிசைக்கும் மக்களின் குலமல்லாத இறையடியவர் பறை ‘அறை’கிறார். இவ்வாறான செயற்பாடுகளும் இலங்கையின் யாவருக்குமான இலவசக்கல்வி, இலவச உணவு, இலவச உடை, இலவச வைத்தியசாலை போன்ற செயற்றிட்டங்களும் எல்லாச் சமூகங்களையும் வலுப்படுத்தியது. அரசாங்க உத்தியோகத்தர்களை, நிலையான மாதச்சம்பளம், ஓய்வூதியம் பெறுகின்றவர்களை உருவாக்கியது. இவ்வாறு உருவான புதிய வர்க்கம் , உயர்சாதியல்லாத மக்களிடம் ‘சாதிய நீக்கம்’ – உறவு நீக்கம், அடையாள நீக்கம் எனும் உணர்வுகளை செயல்நிலைப்படுத்தத் தூண்டியது. இதற்கு பறையிசைக்கும் மக்களின் படித்தவர்க்கமும் தப்பவில்லை. தம் குலமக்கள் இருந்த இடங்களை விட்டு நகரங்களையும் வேறு நிலங்களையும் நோக்கிப் பெயர்ந்தனர். குல தெய்வங்களைக் கைவிட்டனர். இதன்வழி வல்லியக்கன், ‘சைவம் அகலக்காலூன்றி நின்ற நிலத்தில்’ வல்லிபுரத்தாழ்வார் ஆயினார். தாமே பூசைசெய்து வழிபட்ட வல்லியக்கனை பெருங்கோயில் வழி கட்டமைக்க முற்பட்டு சீதாராமசாஸ்திரிகளை நாடிய போது ‘வல்லி’ எனும் சொல்லை அடிப்படையாகக் கொண்டு கோண்டாவில் வல்லியக்கனை வல்லிபுர ஆழ்வாராக மாற்றினார். அக்கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ந்து பிராமணர் கோயிலாக்கப்பட்டது (பறையிசைக்கும் மக்கள் கருவறைக்குள் செல்லுதல் தடைப்பட்டது). இதன் வழி, தாம் மேற்சாதியானதாக அம்மக்கள் நம்புகின்றனர். இவ்வழி, வேலணை சின்னமடு வல்லியக்கன், நாராயணர் – கிருஷ்ணனாக மாற்றப்பட்டுள்ளார். இதனை அடிப்படையாகக் கொண்டு இரகுபதி, யாழ்ப்பாண சைவ உயர் சாதியினருக்கு எதிரான வைணவராக வல்லியக்கன் வழி பறையிசைமக்கள் மாறுவதாகவும், இதில் அம்பேத்கார் சிந்தனையின் சாயல் இருக்கக்கூடும் என்றும் கூறுகிறார் (இரகுபதி, பொ., 2006, பக்22 – 23). ஆனால் அச்செழுவிலுள்ள வல்லியக்கன் கடந்த 2021 ஆம் ஆண்டில் சிவபெருமானாக மாற்றப்பட்டுள்ளமை இக்கருத்துக்கு மாறானதாக, அம்பேத்கார் வழி சிந்திக்காது ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்க வழி நின்றதையே காட்டுகின்றது. இவ்வாறான மேனிலையாக்கங்கள் பிராமணரை முதன்மைப்படுத்துகிறது. மக்களை வெளித்தள்ளுகிறது. மடைப்பண்டம் எடுத்தல், மடைப் பறையிசைத்தல் முதலான பாரம்பரிய முறைகள், கலைகள், நம்பிக்கைகள் புறந்தள்ளப்பட்டு இல்லாதொழிக்கப்படுகிறது. சீமெந்துக் கற்களால் கட்டப்படட் வல்லியக்கன் கோயில்களில் விஷ்ணுவின் சங்குசக்கரம் (ஆனைக்கோட்டை) பிள்ளையார், முருகன் (சண்டிலிப்பாய்), விறுமர், ஐயனார் (கரவெட்டி) போன்ற சின்னங்கள், தெய்வங்கள் இடம்பிடித்து வருதலையும் சமஸ்கிருதமயமாதலுக்கான வெளி அண்மிப்பதையும் அவதானிக்க முடிகிறது. பறையிசை என்பது இருமரபுக் கோயில்களிலும் இல்லை என்பதும் கோயிற்பறை இல்லாது ஒழிந்து போனதையும் சாவுப்பறை வாசிப்பவர் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக இருத்தலையும் அதுவும் தன் கலைப்பெறுமானத்தை இழந்து வருதலையும் சாவுப்பறையின் இடத்தை ‘பாண்ட்’ (Band) வாத்தியம் ஆக்கிரமித்து வருதலையும் அவதானிக்க முடிகிறது. பெரும்பாலான பறையிசைக்கும் மக்கள் சாதிய – தன்னடையாள நீக்கத்திற்காகவும் வேறுசில நம்பிக்கைகள், தேவைகள் என்பனவற்றுக்காகவும் கிறிஸ்தவத்திற்கு (குறிப்பாக புரட்டஸத்தாந்தம்) மாறிவருகின்றனர். ஆதிதிராவிடர்களுக்கான அடையாளங்கள், தெய்வங்கள், வழிபாட்டுமுறைகள், கலைகள் கைவிடப்படுகின்றன. சமாந்தரமாக, தமிழர் வரலாறு சிதைவுறுதலும் நிகழ்கிறது. நிறைவுரை பறையிசை இசைக்கும் கலைஞர்கள் சாதிய ஒடுக்குமுறையினின்றும் தாழ்வு மனப்பாங்கில் இருந்தும் விடுதலை பெற அவாவிநிற்றலின் வழி தன்னடையாளத்தைத் துறத்தல் நிகழ்கிறது. அதன் ஒரு அங்கமாக, ஈழத்தமிழர்களில் ஒரு பிரிவினரான ஆதித் தமிழர்களாக அடையாளப்படுத்தப்படும் பறையிசைக்கும் மக்கள், தம் குலதெய்வமான வல்லியக்கனை நாராயணனாகவும் சிவனாகவும் மாற்றி பெருந்தெய்வவழிபாட்டினுள்ளும் சமஸ்கிருதமயமாதலினுள்ளும் கலக்கச்செய்து மேனிலையாக்கம் பெற முயற்சிக்கின்றனர். வல்லியக்கனைக் கைவிடுகின்றனர். தம் சமயம் துறந்து கிறிஸ்தவத்திற்கு மாறி புது அடையாளத்தை உருவாக்குகின்றனர். உலகமயமாதலுள் ஒன்ற முற்படுகின்றனர். வரலாற்றாசிரியர்கள் ஈழத்தில் தமிழர், நாகர் வழி வந்தவர்கள் எனக் கூறுகின்றனர். இயக்கர் வரலாறு குவேனி வழி வேடுவருள் தொலைக்கப்பட்டது. இயக்கரை – வல்லியக்கரை வழிபடும் வழிபாட்டின் வழி தமிழர் வரலாற்றைச் சீரமைக்க வாய்ப்புள்ளது. அத்தோடு ஈழத்தில் மட்டுமே வல்லியக்கன் வழிபாடு நிலவி வருதலும் கவனத்திற்குரியதாகும். தொடரும். ஒலிவடிவில் கேட்க 14352 பார்வைகள் About the Author யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடத்தின் சைவசித்தாந்த துறையின் முதுநிலை விரிவுரையாளராக தி. செல்வமனோகரன் திகழ்கிறார் . இந்திய மெய்யியல் கற்கை புலத்தில் கலாநிதிப் பட்டத்தை பெற்றுள்ளார். இந்துக்கற்கை புலம் சார்ந்து காஷ்மீர சைவமும் சைவ சித்தாந்தமும், இலங்கையில் சைவத்தமிழ் பண்பாட்டு வளர்ச்சியில் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, நாயன்மார் பாடல்கள், தமிழில் மெய்யியல் எனும் நூல்களை எழுதியுள்ளார். பெறுதற்கரிதான இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை மீள்பதிப்புச் செய்துள்ளார். 'சொற்களால் அமையுலகு' என்னும் இவரது நூல் கலை, இலக்கியம் சார்ந்த விமர்சன நூலாகும். https://www.ezhunaonline.com/valliyakkan-the-god-of-the-people-who-play-parai/1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
GMT நேரப்படி நாளை ஞாயிறு 06 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 19) ஞாயிறு 06 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் குஜராத் டைட்டன்ஸ் SRH எதிர் GT 17 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் 06 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் கந்தப்பு வாதவூரான் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் குஜராத் டைட்டன்ஸ் வசீ சுவி ஏராளன் ரசோதரன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?1 point
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இயற்கையை நீ அழித்தால் இயற்கை உன்னை அழிக்கும் இது தான் இன்றைய உலக நிகழ்வுகள்.1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாம நம்ம தலைவிதியே.. என்று சத்தம் போடாம இருக்கம்.... முதல்வரய்யா...பதவி மீண்டும் கிடைத்திட்டுதுதானே...இனி அனுரமாதிரி...இருக்கணும்..😁1 point
-
இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
நான் நினைக்கிறேன் இனி நாங்கள் உந்த சும் கோஸ்டிகள்,அர்ஜுனா கோஸ்டிகள்,என்.பி.பி தவ்வல்களின் அரசியல் சுத்துமாத்துக்களை கதைப்பதில் பிரயோசனமில்லை எண்டு....எமது அரசியல் ,சிங்களவர்களின் அரசியல் எல்லாம் கை நழுவி போய் சிறிலங்காவின் அரசியல் என்ற நிலைக்கு வந்துவிட்டது.சிறிலங்கா தேசியத்தை ஆட்டிப்படைக்க ஏனைய நாடுகள் முன்வந்து விட்டன ... . ..சிங்கள அரசியல் வாதிகள் தமிழர் பகுதிகளில் விகாரைகளை கட்டுவார்கள் , அதை ஏதிர்ப்பது மட்டுமே உள்நாட்டு அரசியல் ...அபிவிருத்தி என விளம்பர படுத்துவார்கள் ஆனால் .பணம் இருக்காது ...1 point
-
இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
புத்தரே ..தமிழ்தான் அவரின் உயிர் என்று காட்டிவிட்டார்...13 கதக்காவிட்டாலும் ..அவரு மைன்ட்ல இருக்கு...😆 இதுகாணும் நம்ம சும் கோஸ்டிக்கு...குப்பை அள்ளுற ..லையிட்டுபூட்டுற..தேர்தலில் வோட்டுக் கேட்கிறதுக்கு1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தெய்வமே நான் மேல எழுதினதை வடிவாய் வாசிக்க வில்லையா சென்னையின் அணியின் விளையாட்டை மேல் கொள் காட்டி எழுதினேன் ஊத்தை விளையாட்டு என்று....................1 point
-
நடு வீதியில் குப்பைகளை கொட்டும் யாழ். மாநகர சபை!
கந்தையா அண்ணை டென்ஷன் வேண்டாம் அவர் மாநகர சபை என்பதைத் தான் குப்பை கொட்டும் இடம் என்று நக்கலாக கூறினார் .😇1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மன்னர் மாமன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கன் பராக் பராக் பராக்😃1 point
-
இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
1 point
-
இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னையில் நடக்கும் மேட்சில் அஸ்வினும் ஜடேஜாவும் நாலு ஓவர்கள் போட முடியாமல் போவது மிகவும் கவலைக்குரியது. ரூடராஜுக்கும் கேப்டன்சிக்கும் வெகுதூரம்! தலைவர் செம்பாட்டானுக்கு வாழ்த்துக்கள்!1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தலை முடிவு பண்ணிட்டார். இவங்கள நம்பிப் பயனில்லை என்று, தானே மட்டையைத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டார். இனிப் பாருங்க விளையாட்ட. சாய்ந்திருந்து ரசிக்கலாம்1 point- பொது வாக்கெடுப்பு நடத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்-விஜய்!
இந்தியன் இந்தியன் தான். இதில் அவன் இவன் உவன் எவன் என்ற பேதமே இல்லை!1 point- கருத்து படங்கள்
1 point1 point- இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
கொழும்பில் மோடிக்காக திரையிடப்பட்ட சுந்தரகாண்ட நாடகம். இலங்கைக்கு வருகைத்தந்துள்ள இந்தியப் பிரதமருக்கு, ராமாயண இலக்கியத்தின் சுந்தர காண்டத்தில் உள்ள சில பகுதிகளை எடுத்துக்காட்டும் ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சி நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் தான் கருத்து வெளியிட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ‘சுந்தர காண்டத்தின் சில பகுதிகளை எடுத்துக்காட்டும் ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சியின் காட்சிகளை கண்டுகளித்தேன். இதனை ஏற்பாடு செய்த பொம்மலாட்ட சங்கத்தினருக்கும், அவர்களின் ஆர்வத்திற்கும் வீரியத்திற்கும் எனது பாராட்டுகள். அத்தோடு கொழும்பில் தன்னை வரவேற்ற இந்திய சமூகத்தினரின் அற்புதமான வரவேற்புக்கு மழை எந்தத் தடையாகவும் இருக்கவில்லை.அவர்களின் அரவணைப்பு மற்றும் உற்சாகத்தால் நான் மிகவும் நெகிழ்ச்சியடைந்தேன் அவர்களுக்கும் நன்றி” என கூறியிருந்தார். பிரதமர் நரேந்திர நரேந்திர மோடி தனது இலங்கை பயணத்தின் போது கொழும்பில் உள்ள ஹோட்டலில் தங்கியிருக்கும் நிலையில், அங்கு வந்தடைந்த இந்திய புலம்பெயர்ந்தோர் மற்றும் இந்திய சமூகத்தினரிடமிருந்து அவருக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை இந்திய புலம்பெயர்ந்தோர் வரவேற்றனர். பிரதமர் மோடியின் இலங்கை வருகை குறித்து இந்தியக் கொடிகளை ஏந்திய மக்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அவர் ஹோட்டலில் இந்திய புலம்பெயர்ந்த உறுப்பினர்களுடன் கைகுலுக்கி உரையாடுவதைக் காண முடிந்தது. https://athavannews.com/2025/14275591 point- தையிட்டி விவகார தீர்வு கலந்துரையாடல் – இடைநடுவே வெளியேறிய அமைச்சர்கள்
ஆமா ...எல்லோருடைய (ஏன்.பி.பி)வேட்பாளார் விளாம்பரத்தைப் பார்த்தால் தெரியுது..கூடுதலாக பால்குடியள்தான் ..அதைவிட அவையிண்ட எண்ணம் வந்து..யூ டியூப்பு செய்யிற வேலைமாதிரித்தான்..என்ற நினைப்பு...ஒரு போன் இருந்தால் காணும் 9 கோடி உழைச்சுப் போடலாம்😁1 point- இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
இந்தமுறையோடை ஏதும் வெளிக்கும் என நினைக்கின்றேன் ..பட்டாளத்தோடை பட்டாளமாக வந்திருக்கினம்... இந்த்முறை ஒருவரும் தனிதனிய அப்பம் சாப்பிடப்போகேலாது1 point- பகிடிவதைக்குள்ளான யாழ்.பல்கலையின் விஞ்ஞான பீட மாணவன் : காது கேட்கும் திறனும் இழப்பு
பல்கலை கழகத்து பகிடிவதை ஒரு தொற்று வியாதி. பகிடிவதைக்கு உள்ளாகுபவர்களே பகிடிவதையை தொடர்கின்றார்கள். இந்த தொற்று வியாதிக்கு ஒரே ஒரு மருந்துதான் உள்ளது. பகிடிவதை செய்யும் மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதன் மூலமே பகிடிவதைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். பகிடிவதை செய்யும் மாணவர்களை பல்கலை கழகத்தை விட்டு நீக்கும் அதிகாரம் பல்கலை நிருவாகத்திற்கு வேண்டும்.1 point- இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
கச்சதீவை சிறிலங்காவுக்கு கொடுத்த திட்டத்தின் வெற்றிகளை இந்தியா மெல்ல மெல்ல அனுபவிக்கின்றது1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மெயில் ரெயினாகவும் இருக்கலாம்.... என்ன பிரியன் ....ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருக்கிறியள்....1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒரு மேல்முறையீடு. நான் இரண்டாவது ஆளாக என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேனே. அதைக் கணக்கில எடுத்தால்...... இடையில் ஏற்பட்ட சில தடங்கல்களினால், மனக்குளப்பத்தினால் எனது பதில்கள் தாமதமாக வந்தன. (சும்மா பகிடிக்குத்தான் இந்த எதிர்வினை. ஒன்றுமே எதிர்பார்க்கவில்லை)1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- நானும் ஆனந்தபுரமும்..... 04/04/2009.
நானும் ஆனந்தபுரமும்..... 04/04/2009. அப்போது அந்த வைத்தியர் யார் என்று எனக்கு தெரியாது அவருக்கு உதவியாக அவருடைய மாமா அங்கு இருந்தார் அவருடைய குடும்பமும் அதே வைத்தியசாலையில் இருந்தது என்று தெரியும். ஆனந்தபுர கோர தாண்டவத்தின் இறுதி நாள் வித்துடல்கள் கிடந்த கிடங்கிற்குள் மயக்க நிலையில் நான் இருந்தது தெரியாமல் வீரச்சாவு என்று நினைத்து என்னையும் போட்டு விட்டு சென்று விட்டனர். மயக்கம் தெளிந்து நான் அலம்பிக்கொண்டு கிடந்தேன் ஒருவர் எனது கைகளை பிடிக்க மற்றையவர் எனது இரு கால்களையும் பிடித்து தூக்கி கொண்டு வாகனத்தில் போட்டார்கள். பின் வைத்தியசாலையில் நான் பெரிய சத்தமாக கத்தினேன் நான் சாக போறன் சாகப்போறன் என கத்தினேன் அதற்கு முதல் தேசிக்காய் தண்ணி தாங்க என்று கத்த அங்கு இருந்த வைத்தியர் தம்பி நீ சாக மாட்டாடா கத்தாத என்றார். இல்லை நான் செத்திடுவன் எனக்கு தேசிக்கா தண்ணி கொடுங்க என மீண்டும் மீண்டும் கத்தினேன். முதல் 3 நாட்கள் உணவும் தண்ணியும் இல்லை கடும் தாகம் எனக்கு தேசிக்காய் தண்ணி குடிக்கனும் என்று கத்தினன். வைத்தியர் சொன்னார் தம்பி உடல் முழுவதும் காயம் நீ தண்ணீர் கூட குடிக்க கூடாது என்றார். வேதனை தாங்க முடியாது கடும் கெட்ட வார்த்தையால் வைத்தியரை திட்டினேன் வைத்தியரின் மாமா அங்கு இருந்தார் வைத்தியரின் மனைவியையும் கெட்ட வார்த்தைகளால் திட்டினேன். அப்போது அவரின் மாமா தம்பி நீ தண்ணி குடிச்சா செத்திடுவா என்றார் நான் செத்தாலும் பரவாயில்லை தண்ணீர் தாருங்கள் என்று கதறினேன் பின் ஏதோ ஒரு துளி ஆ என்று சொல்லி அடி தொண்டைக்குள் விட்டார்கள். ஆனால் என்னால் தாங்க முடியவில்லை எவ்வளவு தூசனம் பேசியும் யாரும் என்னை கண்டிக்கவில்லை. சேலேன் ஏற்றப்பட்டது கொஞ்சம் அமைதியாக இருந்தேன் நன்றாக இருட்டி விட்டது சேலேனை கடித்து மட மட என குடித்துவிட்டேன் சிறிது நேரத்தில் எனக்கு பக்கத்தில் இருந்தவர் இறந்து விட்டார் என தூக்கி சென்றார்கள். பின் வைத்தியர் என்னை வந்து செக் பன்னினார் இவ்வளவு வேகமாக சேலேன் முடிந்துவிட்டதை பார்த்தவுடன் சேலேன் குழாயை செக் பன்னினார் நான் அதை கடித்து குடித்தது அவருக்கு தெரிந்து விட்டது. இரண்டு கைகளும் கால்களும் கட்டப்பட்டது ஆனால் அவர்கள் என்னை அடிக்கவில்லை, பின் மயக்கம் தெளிந்து பார்த்தவுடன் வைத்தியசாலையாக இயங்கி கொண்டு இருந்த ஒரு பாடசாலை காயப்பட்டவர்களுடன் படுத்திருந்தேன், பக்கத்தில் ஒருவன் பெரிய சத்தமாக கதிறி அழுதுகொண்டு இருந்தான் அண்ணேக்கு கையில காயம் எல்லாமே போய்ற்று எனி எதுவும் செய்ய முடியாது என இடை விடாமல் கத்தினார். எனக்கு எதுவும் புரியவில்லை பிறகு ஆறுதலாக கேட்டேன் அதன் பிறகு ஆனந்தபுரத்தில் நடந்தது பற்றி தெளிவாக கூறி கூறி அழுதார், அவர் ஓர் பொருப்பாளராக இருந்திருப்பார் ஆனால் அழுகையை நிறுத்தவில்லை. உண்மையிலேயே நான் போராட்டத்திற்கு புதுசு ஆனந்த புரத்தில் சிக்குண்டு கிடந்த நேரம் எனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை, எங்களுக்கு அது பற்றி விளக்கமும் இல்லை, என் போன்ற பலர் அங்கு இருந்தார்கள் கோபித் அண்ணா வீரச்சாவு அடையும் வரை நாங்கள் அமைதியாகதான் இருந்தோம். வைத்தியசாலையில் என்னால் எழுந்து நிற்க முடியாது உடல் முழுவதும் 8 இடங்களில் காயம் கட்டிலில் கிடக்கும் க,எனக்கு ஒட்டு துனியும் இருக்காது அந்தரங்கம் ஒரு துண்டு துனியால் மூடப்பட்டு இருக்கும் சலம் மலம் எல்லாம் அப்படியே போகும். ஒரு ஐயாவும் ஒரு சின்ன தம்பியும் என்னை சுத்தம் செய்வார்கள். இப்படி சில நாள் சென்றவுடன் தம்பி எனி நீ நடக்க பழக வேண்டும் என்றார்கள். நானும் கட்டிலில் இருந்து எழுந்து கீழ் கால் வைக்கும்போது விழுந்து விட்டேன் அப்படி பலமுறை நடந்தது. எனியும் நடக்காமல் இருந்தால் சரி வராது என்று தடியை ஊண்டிக்கொண்டு டொய்லெட் போய் அங்கு விழுந்து எழும்ப முடியாமல் பல மணிநேரம் அதற்குள்ளே கிடந்தது என்னும் கண்களுக்குள் நிற்கிறது. இந்த படத்தில் கிடப்பது நானா என்பது எனக்கு தெரியாது ஆனால் கையில் சிவப்பு நூல் வெடிபட்ட இடம் அந்த வைத்தியர் அவர் பக்கத்தில் ஒரு ஐயா இது எல்லாம் என் கண்களுக்குள் வந்து போகிறது. தாயக விடுதலை போராட்டத்தில் எப்போதுமே நடக்காத பாரிய இழப்பு ஆனந்த புரத்தில் நடந்தேறியது. தேசிய தலைவர் கூறிய போன்று பலமுறை நூல் இழையில் உயிர் தப்பியது காலம் என்னும் ஏதோ ஒரு விடையத்தை செய்து முடிப்பதற்காக என்னை தயார் படுத்துகிறது என உணர்கிறேன் ... இது நான் இல்லை 2009 முன் வாழ்ந்த போராளி கார்மேகனின் நினைவுகளில் இருந்து... Malaravan Uthayaseelan1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உண்மைதான். சிறப்பாக சென்று கொண்டிருந்தது. Scoreboard pressureதான் மும்மபையை வீழ்த்தியது. 200க்குள்ள அமத்தியிருந்தால், கொஞ்சம் இலகுவாக இருந்திருக்கும். எவ்வளவுதான் திட்டமிட்டாலும், மனித மனம் ஒன்று இருக்கே.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- சிரிக்க மட்டும் வாங்க
1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 point1 point- பகிடிவதைக்குள்ளான யாழ்.பல்கலையின் விஞ்ஞான பீட மாணவன் : காது கேட்கும் திறனும் இழப்பு
நானும் இந்த பகிடிவதைக்குள் அகப்பட்டு பல பழிவாங்கல்கள் ஓரங்கட்டல்கள் (இரண்டாம் ஆண்டு மாணவர்கள், மற்றும் ஒரு மூன்றாம் ஆண்டு மாணவன்) எல்லாவற்றையும் எதிர்கொண்டேன் (இது வரப்பிரகாஸுக்கு பிந்திய காலம்). எனக்கு பகிடி வதை செய்தவர்கள் எந்த வகையிலும் எனக்கு பிற்காலத்தில் உதவவில்லை (அதுக்குப்பிறகு என்னோடு கதைப்பது கூட இல்லை). பகிடிவதை செய்யும் போது தாங்கள் எங்களுடன்நெருங்கிப் பழகுவதற்காகவே இதைச்செய்வதாக சொன்னார்கள். ஒரேஒரு ஆறுதல் எங்கள் சக மாணவர்களும் மிகுதி மூன்றாம் வருட மாணவர்களும் எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்தார்கள். என்னைப் பொறுத்தவரை சிங்கள மாணவர்களும் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் இல்லை (இதில் தமிழ் சிங்கள வேறுபாடு என்று இல்லை). மட்டக்களப்பு மாணவர்கள் தான் கூட அனுபவித்தது தமிழ் மாணவர்களைப்பொறுத்தவரையில். வரப்பிரகாசுக்கு பின்னர் சிறிது குறைந்தகாலத்தில் அகப்பட்டதால் பல்கலைக்கழகத்திலும் சிறிது இறுக்கம் கூட (இது பொறியியல் பீடத்தில் மற்றப்பீடங்களில் சிறிது வித்தியாசமாக இருக்க்டலாம்)1 point- தையிட்டி விவகார தீர்வு கலந்துரையாடல் – இடைநடுவே வெளியேறிய அமைச்சர்கள்
பேச்சுவார்த்தைக்கு வந்த பின்புதான் உள்ளூராட்சிசபை தேர்தல் பற்றிய ஞாபகமே வந்தது. கொழும்பில் இருந்து புறப்படும் போது எவனுமே சொல்லல்லையாடா?1 point- இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
https://scontent-fra5-2.xx.fbcdn.net/v/t39.30808-6/488540425_1079003887597916_4582371838532950754_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=833d8c&_nc_ohc=fZEDcLJVXGwQ7kNvwElzNRj&_nc_oc=AdnjKej2bE_6YMX-U5iQjI8bIOwOPZjCUQyb509DmQRU5IDGj13KxQjvuWBqFrXpvvY&_nc_zt=23&_nc_ht=scontent-fra5-2.xx&_nc_gid=P2Iuo4Hp-HGn6le7H9HTnQ&oh=00_AYHOYL81ogb3GVZRRpIFWlHf7gcFBEo5Citkjsb-OCN39A&oe=67F583A01 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 point- ராஜேந்திர சோழன் தனது சிற்றன்னை நினைவாகக் கட்டிய 1000 ஆண்டுகள் பழமையான கோவிலில் வெளிப்பட்ட பாதாள அறை
1 pointநீங்கள் உங்கள் பிள்ளைகள் அமெரிக்காவிலா வசிக்கின்றீர்கள்? உங்களுக்கா அவர் மருத்துவம் பார்க்கின்றார்? இராத்திரியில் குடிச்சு போட்டு கருத்தெழுதும் குரங்குக்கு அவர் கொடுக்கும் மருந்து என்ன? கடுக்காய் குளிசையா?1 point- நானும் ஊர்க் காணியும்
1 pointஇஞ்சை வெளிநாடுகளில இருந்து கொண்டு ஊரிலை வீடு கட்டி,வீடு வைச்சிருக்கிற ஆக்களுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும். இதுக்குள்ள வீட்டுக்குள்ள நடக்கிறத சூம் பண்ணி பாக்கினமாம்.🤣 நானும் ஊரில வீடு வைச்சிருக்கிறன்.ஆனால் சிஷ்டம் வேற 😎1 point- நானும் ஊர்க் காணியும்
1 pointஏழு கணவரை வரும்படி கேட்டால் மனிசன் கணக்குப் பார்த்திட்டு நீ மட்டும் போட்டுவா. நான் நெடுக லீவு எடுக்கேலாது என்றுவிட, எனக்கு மட்டும் ஏர் லங்காவில் டிக்கற் போடுகிறேன். நேரம் அதிகம் என்றாலும் 40 கிலோ கொண்டு போகலாம். அங்கு வருவதாக மச்சாளுக்கும் அன்ரிக்கும் மட்டும் சொல்கிறேன். ரதி அக்காவுக்கோ வீட்டில் இருக்கும் பெடிக்கோ எதுவும் சொல்லவில்லை. விடியக் காலை ஐந்து மணிக்கு இணுவிலில் போய் இறங்கி குளித்து மச்சாள் வீட்டில் சென்று உணவருந்திவிட்டு ஓட்டோவில் மச்சாளிடம் திறப்புகளை வாங்கிக்கொண்டு என் வீட்டுக்குச் செல்கிறேன். கேற் பூட்டாமல் சாத்தியிருக்க திறந்துகொண்டு ஓட்டோக்காரரையும் உள்ளே வரும்படி கூறிவிட்டு செல்கிறேன். வீட்டுத்திண்ணையில் இருவர் கதைத்துக்கொண்டு இருக்கின்றனர். இதில் எவர் வீட்டில் இருப்பவர்? அனேகமா இவராகத்தான் இருக்கும் என்று எண்ண, அக்கா நீங்கள் வீட்டுக்காற அக்காவா வாங்கோ என்று மற்றவர் என்னை எழுந்து வரவேற்கிறார். இவர் என் நண்பர் அஜந்தன் என்று அறிமுகம் செய்தும் வைக்கிறார். “இவர் வேலைவெட்டிக்குப் போறதில்லையோ” “நான் வேலைக்குப் போறதில்லை அக்கா. எட்டு மாடுகள் வளர்க்கிறன். அதோடையே நேரம் போயிடும்” “ஓ அப்பிடியே” ரஜிதன் – அவர்தான் என் வீட்டில் இருப்பவர், கதிரை ஒன்றைக் கொண்டுவந்து போட நான் ஓட்டோக்காரருக்கும் ஒரு கதிரை கொண்டு வாங்கோ என்கிறேன். ஒரு கதிரை தானக்கா இருக்கு என்கிறார். ஏன் நான் இரண்டு கதிரைகளை வெளியே வைத்துவிட்டுத்தானே சென்றேன் என்கிறேன். நான் இதிலேயே இருக்கிறேன் என்று திண்ணையில் அமர்கிறார் ஓட்டோக்காரர். அவர் எம்மூரவர். அவரின் ஓட்டோவில் தான் நாம் எப்போதும் திரிவது. கொஞ்சநேரம் வீட்டைப் பார்த்துவிட்டு அவருடனேயே திரும்பிப் போவதாக எண்ணம். ரஜிதன் தேநீர் போட்டுக்கொண்டு வருவதாகக் கூற வேண்டாம் என்கிறேன். பரவாயில்லை அக்கா குடியுங்கோ என்று என்வீட்டிலேயே என்னை உபசரிக்க, நான் சுற்றிவரப் பார்க்கிறேன். முன்பக்க வளவு சுத்தமாக இருக்க நான் என் பூங்கன்றுகள் மற்றும் வளவைச் சுற்றிப் பார்க்கிறேன். மீண்டும் வரத் தேனீரைக் கொண்டுவந்து எல்லோருக்கும் தருகிறார். நீங்கள் வந்தது ரதி அன்ரிக்குத் தெரியுமோ என்கிறார். இன்னும் சொல்லவில்லை. போகும்போது அவவிடம் போய்விட்டுத்தான் போவேன் என்கிறேன். அவர் ஊற்றிய தேநீர் நன்றாக இருக்கிறது. ஓட்டோவை அனுப்பிவிடுங்கோவன் அக்கா என்கிறார். நான் ரதி அக்காவோட கதைச்சிட்டுப் போகபோறன். நாளை வாறன் என்கிறேன். நான் காலை ஆறரைக்கு வேலைக்குப் போய் 11 மணிக்கு வருவன். பிறகு 3 மணிக்குத் திரும்ப வேலை. 2.30 இக்கு போயிடுவன் என்கிறார். நீங்கள் உங்கள் அலுவலைப் பாருங்கோ. என்னட்டைத் திறப்பு இருக்கு. நான் என்பாட்டில வருவன் என்கிறேன். தனிய நிக்கப் பயம் இல்லையோ என்கிறார். என் வீட்டில் நிக்க என்ன பயம் என்றுவிட்டு தேநீர் கோப்பைக் கழுவ சமையலறைக்குச் செல்ல, என்னட்டைத் தாங்கோ அக்கா என்கிறார். நான் குடித்த கப்பை நானே கழுவிகொள்கிறேன் என்றபடி குசினுக்குள் செல்கிறேன். குசினி சுத்தமாக இருக்க மனம் நிம்மதியாகிறது. அதன் பின்னர் ரதி அக்காவிடம் சென்று அவருடன் பேசிவிட்டு நாளை வருவதாகக் கூற, பெடியன் என்ன மாதிரி என்கிறா. ஒரு அரை மணித்தியாலம் பாத்து முடிவு செய்ய ஏலாது தானே அக்கா என்றுவிட்டுக் கிளம்புகிறேன். நாம் லண்டன் வரும்போது மனிசன் ஸ்கூட்டியின் பற்றியைக் கழற்றிவிட்டு வந்தார். முன் வீட்டில் இரண்டு ஆண்கள் இருக்கின்றனர். அவர்களை பற்றியைப் பூட்டித் தரும்படி கேட்க, தமக்குத் தெரியாது என்கின்றனர். தாயார் முன்னால் வந்து ஓடுற வாகனம். அரைகுறையாய்ப் பூட்டி ஏதும் நடந்தாலும் வீண்பழி. எதுக்கும் மெக்கானிக் ஆரையன் கூப்பிட்டுப் பூட்டுங்கோ என்கிறா. எனது ஸ்கூட்டியின் மெக்கானிக் சுண்ணாகத்தில் இருக்கிறார். அவருக்குப் போன் செய்ய, தான் எலெக்சன் வேலையில் மும்மரமாக இருப்பதாகக் கூற, எந்தப் பார்ட்டிக்கு ஆதரவாக வேலை செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு “நான் சுயேட்சையா நிக்கிறன் அக்கா. அதனால வேறு யாரையும் கூப்பிடுங்கோ” என்கிறார். அடுத்தநாள் மீண்டும் ஓட்டோவை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் செல்கிறேன். போகும் வழியில் மருதனார் மடத்தில் உள்ள கடையில் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு செல்கிறேன். ஓட்டோவை மீண்டும் மாலை 5 மணிக்குவரும்படி கூறிவிட்டு கேற்றைத் திறந்து மீண்டும் பூட்டால் பூட்டிக்கொண்டு வீட்டையும் திறந்து உள்ளே செல்கிறேன். சுவாமி அறை, மற்ற அறை எல்லாம் சுத்தமாகவே இருக்கு. எங்கள் அறையைத் திறக்கிறேன். அது பூட்டி இருந்தபடியால் கொஞ்சம் காற்றோட்டம் இன்றி இருக்க யன்னல்களைத் திறந்துவிட்டு கூட்டுகிறேன். கட்டில் விரிப்பை அலம்பி வெளியே காயவிடச் சென்றால் நாம் கட்டியிருந்த கயிற்றைக் காணவில்லை. ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துவிட்டு 11.00 இக்கு பெடிப்பிள்ளை வருவார் தானே கேட்போம் என்றுவிட்டு அலுவல்களைப் பார்க்கிறேன். எமது இரண்டாவது அறையையும் திறந்து யன்னல்கள் எல்லாம் திறந்துவிட்டு மேலோட்டமாகப் பார்க்க எல்லாம் வைத்தது வைத்தபடி இருக்கிறது. மீண்டும் கதவைப் பூட்டிவிட்டு வெளியே சென்று கன்றுகளைப் பார்க்க இரண்டு தென்னங்கன்றுகளை மாடு கடித்து மொட்டையாக்கிவிட்டிருக்கு. இரண்டு வாழைகள் குலையுடன் முறிந்துகிடக்கின்றன. பின்பக்கம் முழுதும் புற்கள் காடாய் வளர்ந்துபோய் கிடக்கின்றன. 11.30 மணி போல் பெடியன் வருகிறார். அக்கா என்ன சாப்பிடுறியள்? நானே சமைக்கிறன் என்கிறார். நான் வரும்போதே இடியப்பம் உமக்கும் சேர்த்து வாங்கி வந்தனான் என்கிறேன். நான் மத்தியானம் சோறுதான் சாப்பிடுறனான் என்கிறார். சரி நீர் உமக்கு மட்டும் சமையும். எனக்கு வேண்டாம் என்கிறேன். ”நாளைக்கு கட்டாயம் என்ர கையாலதான் நீங்கள் சாப்பிடவேணும்” “எனக்கு நான் சமைத்து சாப்பிடுவதுதான் விருப்பம்” “அக்கா நான் லீவு எடுத்துவிட்டு உங்களை எங்க வேணுமெண்டாலும் என்ர ஸ்கூட்டியில கூட்டிக்கொண்டு போறன்” “அதுக்கு அவசியமே இல்லை. என்னட்டையும் ஸ்கூட்டி இருக்கு” “அப்ப உங்கட ஸ்கூட்டியிலேயே போவம்” நான் மனிசனைத் தவிர வேறை யாருக்கும் ஸ்கூட்டியைக் குடுக்கமாட்டன். அதோடை எனக்கு ஒரிடமும் போகத் தெரியாது எண்டு நீர் எனக்கு ஊர் சுத்திக்காட்டப் போறீரோ? என்னைப் பற்றி உமக்குத் தெரியேல்லை” “இல்லை அக்கா நீங்கள் வெளிநாட்டிலை இருந்து வந்திருக்கிறியள்.. அதுதான்” “அதுசரி பிலாமரத்துக்கும் மாமரத்துக்கும் இடையில கட்டியிருந்த கொடியைக் காணேல்லை. நான் பெட்சீற்றை அலம்பிப்போட்டுப் பார்த்தால் ஒண்டும் இல்லை” “எனக்கு அதைப்பற்றித் தெரியாது அக்கா. நான் அந்தக் கறாச்சுக்குள்ளதான் கொடி கட்டி காயப் போடுறன்” நான் கறாச்சுக்குள் போய் பார்க்கிறேன். இரு பக்கத் தூண்களிலும் வயர் கட்டியபடி இருக்கு. இந்த வயரை எங்கிருந்து எடுத்தீர் என்று கேட்க உதில் கொழுவி இருந்தது என்கிறார். என்னை ஒருக்காக கேட்டிருக்கலாமே. உது கமராவுக்குப் போடுற வயர். உதின்ர விலை தெரியுமே உமக்கு. அருமந்ததை வீணாக்கிப்போட்டீர். அப்பவும் உள்ளே கொண்டுபோய் வையுங்கோ எண்டு இந்த மனிசனுக்குச் சொன்னனான் என்கிறேன் கடுப்புடன். அவர் எதுவும் பேசாமல் அப்பால் செல்ல நான் சீற்றைக் காயவிட்டுவிட்டு உள்ளே வருகிறேன். வரும்போது பார்த்தால் மாமரத்தில் ஊஞ்சலையும் காணவில்லை. ஊஞ்சல் எங்கே என்று கேட்கத் தனக்குத் தெரியாது என்கிறார். முன்பு இருந்த சனங்கள் அதையும் அறுத்துக்கொண்டு போய்விட்டார்கள் போல என்று சொல்ல, இருக்கும் அக்கா என்கிறார். சரி தம்பி நீர் உம்மடை சமையல் அலுவலைப் பாரும் நான் ரதி அக்காவிடம் போட்டு வாறன் என்று சொல்லிவிட்டுக் கிளம்ப, அவருக்கு ஒரு போன் வருகிறது. “அக்கா வந்து நிக்கிறபடியால் நான் இண்டைக்கு வரேலாது. இப்ப நான் சமைக்கப்போறன் என்று அவர் சொல்வது எனக்குக் கேட்கிறது.1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 pointவெளிநாடு வந்த போது அவன் முதன் முதலாக வெளிநாடு வந்த போது (துபாய்) அங்கிருந்த ஊரவர் கேடடார் . துபாய் எப்படி இருக்கு? என்று ....இவன் சொன்னான் "பெரிய பெரிய கட்டிடங்களுக்கு முன்னும் , வேறு ஒருவரின் காருக்கு முன்னும் நின்று படங்கள் எடுத்து போட்டிராவிடால் என்னைபோன்றவர்கள் இங்கு வந்திருக்க மாடடார்கள். நீங்கள் தங்கியிருக்கும் இடத்தையும் அடிப்படை வசதிகளையும் படம் பிடித்து இருந்தால் பலரின் சிந்தனையை அது மாற்றி இருக்கும். ஒரு சமுதாயத்தையே " படங்காட்டி " வெளிநாட்டு வாழ்க்கை என குட்டிச்சுவராய் ஆக்கி இருக்கிறீர்கள்.1 point- நானும் ஊர்க் காணியும்
1 pointஇது ஒருவகையில் உரிமை மீறல். வாடகைக்குக் கொடுத்துவிட்டு அவர்களின் செயல்களை கமராவில் கண்காணிப்பது ஏற்புடையதில்லை. யேர்மனியில் வீட்டை ஒருவருக்கு வாடகைக்குக் கொடுத்தால் , வாடகைக்கு இருப்பவர் அனுமதித்தால் மட்டுமே வீட்டின் உரிமையாளர் வீட்டுக்குள்ளே போக முடியும். நாங்கள் எங்கள் உரிமைக்காகப் போராடும் இனம் என்பதால் எங்களிடம் கூடுதல் தகுதி இருக்கிறதோ என்னவோ?1 point- கேட்டு ரசித்தவை
1 pointகேட்டு ரசித்தவை ஒரு பெண் கைக் குழந்தையுடனும் கணவனுடனும் டாக்ட்டரிடம் வருகிறார். அவர் டாக்ட்டரிடம் : சார் இவர்க்கு சரியான மறதி அதுவும் சின்ன சின்ன விடயங்களில் என்றார். உடனே குறுகிடட கணவர் என் திருமண திகதி 14/0/1989 என் முதல் வேலை 5/6/1969..... என் அப்பா பெயர் சுந்தரம் என் தாய் பெயர் செல்லம்மாள் ...இவளுக்கு தான் சரியானமறதி தலையில் எங்காவது அடிபட்டிருக்கும் செக் பண்ணுங்க சார் என்றார். டாக்ட்டரும் சரி நீங்கள் சற்று வெளியே அமருங்கள் . என்றுசொல்லி அவரை அனுப்பினால், கதிரையிலிருந்து எழுந்த போது அவர் நீளக் காற் சட்டை (பாண்ட் )போடமறந்து விட்டார் 😃 வெறும் உள்ளாடை (underwear ) உடன் டாக்ட்டரிடம் வந்துள்ளார். டாகடர் திரு திரு என் முழித்தார். இப்போ விளங்கியது யாருக்கு மறதி என்று.1 point- நானும் ஊர்க் காணியும்
1 pointமுழங்கால் வருதத்தை..வலு அழகாக சொன்னமாதிரி இருக்கு ..நான் நினைத்தது சரியா1 point- ஈழத்து நாட்டார் தெய்வங்கள் - தி. செல்வமனோகரன்
மக்கள் மயப்பட்ட வைரவர் வழிபாடு தி. செல்வமனோகரன் April 14, 2024 | Ezhuna அறிமுகம் இந்திய மண்ணில் தோற்றம் பெற்ற தொன்மைச் சமயங்களில் ஒன்றான சைவத்தின் தொன்மைப் பிரிவுகளில் ஒன்று வைரவம். இது வடநாட்டில் தோற்றம் பெற்றதாகவே பெரிதும் நம்பப்படுகிறது. காவல் தெய்வமாகச் சித்தரிக்கப்படும் வைரவரை சிவனின் அம்சமாகவும் மகனாகவும் புராணங்கள் கூறுகின்றன. இவர் பிரமனின் தலையைக் கொய்தவராகவும், வானவரிடம் கபாலத்தில் இரத்தத்தைப் பெற்றவராகவும், அந்தகாசுரனை வதைத்தவராகவும் சிறுதொண்டர் நாயனாரிடத்துப் பிள்ளைக்கறி பெற்றவராகவும் கூறப்படுகிறார். உக்கிரப் போர்த் தெய்வமாகச் சுட்டப்படுகின்ற இவருக்கு சோதிட நூல்களால் கலக நாளாகக் குறிப்பிடப்படும் செவ்வாய்க்கிழமையே, குறிப்பாகத் தைமாத செவ்வாய்க்கிழமை, உகந்த நாளாகவும் சிவந்த செவ்வரத்தம்பூ உகந்த மலராகவும் பரணி நட்சத்திரம் (போருடன் தொடர்புடையது) உரிய நட்சத்திரமாகவும் கூறப்படுகிறது. புராணங்கள், இவரை “மஹா வைரவர், கால வைரவர், உக்கிர வைரவர், வடுகநாதர், சட்டைநாதர்” எனப் பலவாறு சித்தரிக்கின்றன. சிவ பராக்கியம் எனும் நூல் அஷ்ட வைரவர்களைக் குறிப்பிடுகிறது. இவ் வைரவரின் தோற்றப் பொலிவு பற்றிப் பல விடயங்கள் கூறப்படினும் பொதுவில் கைகளில் கபாலம், தண்டம், தமருகம், சூலம் என்பவற்றை ஏந்தியரவாகக் கூறப்படுகிறார். உக்கிரப் பார்வை, கோரப் பற்கள், சிலம்பு, சிங்கினி மாலை, பாம்பு போன்றவைகளுடன் கூர்மையான வாள், திரிசூலம், பாசம், அங்குசம், வச்சரம், அக்கினி, கதை, வில், அம்பு, தண்டம், கபாலம், சங்கு, சக்கரம், உலக்கை போன்றவற்றுடன் விளங்குபவராகவும் கூறப்படுகிறார். நாய் வாகனத்தை (தெய்வஞாளி, சுவனம்) உடையவராகச் சித்தரிக்கப்படுகிறார். சாதாரணமாக ஒரு மரத்தின் கீழ் திரிசூல வடிவில் இருப்பது முதல் சகல ஆலயங்களிலும் பரிவார தெய்வமாகவும், வைரவர் கோயிலில் கர்ப்பக் கிரக மூர்த்தியாகவும், வீடுகளிலே காவல் தெய்வமாகவும், குல தெய்வமாகவும், எல்லைத் தெய்வமாகவும் வைரவர் வழிபாடு இடம்பெற்று வருகின்றது. இங்கு வைரவர் வழிபாடானது பண்டைய ஐதீகம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் வழிபடப்பட்டு வருகின்றது. ஈழத்தில் வைரவர் வழிபாடு ஈழத்து நாட்டாரியல் வழிபாட்டில் முக்கிய காவல் தெய்வமாக வைரவர் காணப்படுகின்றார். முத்தலை சூலத்தை வழிபட்ட மக்கள் அதனை காலனித்துவ காலத்தில் அந்நியரின் மேல் உள்ள பயத்தின் நிமித்தம் தேவை ஏற்படும் பொழுது கிறிஸ்தவ சிலுவையாகவும் (இரு தலைகளையும் மடித்து) பாவித்தனர். இச்சூலத்தை திறந்த வெளிகளில் உள்ள வேம்பு, அரசு, நாவல், ஆல், புளி, மருது போன்ற மரங்களில் கீழ் குத்தி வைத்து வழிபட்டனர். இவையே பின்னர் வைரவராக மாறி உருவ வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்துள்ளது. ஈழத்தில் வைரவர் வழிபாடு வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பெரும்பான்மையாக நாட்டாரியல் தெய்வமாகவும், பெருந்தெய்வமாகவும் வழிபடப்படுகின்றது. ஆகமம் சாராத வைரவர் வழிபாட்டிலே வீடுகளில், கோயில்களில், பயிர்ச்செய்கை நிலங்களில், மயானங்களில் இடம்பெறும் வைரவர் வழிபாடுகள் முக்கியம் பெற்றுக் காணப்படுகின்றன. இத் தெய்வத்திற்கு மடை பரவுதல் – வடை மாலை சாத்துதல், பொங்கல், மிருகபலி போன்றன செய்து வழிபடும் மரபு இற்றைவரை காணப்படுகிறது. அத்தோடு வைரவருக்கு பிரதேசப் பண்பாட்டுக் கூறுகளுக்கு இணங்கவும் வழிபாடியற்றப்படுகிறது. காவல் தெய்வங்களை காணிக்குள் வைத்து வழிபடும் முறை பொதுவாக எல்லாப் பிரதேசங்களிலும் காணப்படுகின்றது. ஆனால் ‘வைரவன் பந்தல்’ அமைத்து வழிபடும் முறை மட்டக்களப்பு பிரதேசத்தவரின் தனித்துவமான முறையாகும். வைரவர் வழிபாட்டின் போது ஒவ்வொரு ஊருக்கும் ஏற்ற வகையில் வீட்டின் புறம்பாக, எதிர்ப்பக்கம் நோக்கிய வகையில் ‘வைரவர் பந்தல்கள்’ அமைக்கப்பட்டிருக்கும். நிரந்தரமாக அமைக்கும் பந்தலினைப் பலமான மரங்களினாலும், கற்களினாலும் வடிவமைப்பார்கள். தற்காலிக பந்தலினை வேம்பு மற்றும் பூவரசம் கம்பினை கொண்டு தட்டுப்பந்தல் வடிவில் அமைத்து தென்னம் ஓலைகளால் வேய்ந்து தென்னங் குருத்துக்களால் சுற்றி வளைத்து அலங்கரிப்பர். வீட்டில் உள்ள வைரவன் பந்தல்களிலே வருடாவருடம் குறித்த பரம்பரையினரை சேர்ந்தவர்களால் வைரவர் சடங்கானது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது “வைரவருக்குச் செய்தல்‟ எனப்படும். வீடுகளில் தீய சக்திகளின் பார்வையினால் தமது குடும்பத்திற்கு எந்தவித கெடுதலும் இடம்பெறாமல் இருப்பதற்காகவும், தமது வீட்டையும் குடும்ப உறுப்பினர்களையும் வைரவர் காப்பார் எனும் நம்பிக்கையிலும், நோய் நீக்கம், நீண்ட ஆயுள், சந்ததி விருத்தி, தனம், தானியம், செல்வ விருத்தி ஏற்படுவதற்காகவும் பாரம்பரியமாக வைரவர் வழிபாடு இடம் பெறுகின்றது. வழிபாட்டு முறைகள் இங்கு பெரும்பாலும் ஆதி வைரவரை அழைத்தே சடங்கு நடாத்தப்படுகின்றது. சில இடங்களில், வீடுகளில் கல்யாண வைரவர், கொங்கை வைரவர், திரிசூல வைரவர், கபால வைரவர், நரசிங்க வைரவர் போன்றோரை அழைத்தும் சடங்கு நடாத்தப்படும். சடங்கு இடம்பெறுவதற்கு முன்னர் தீட்டுக்கள் இன்றி புனிதத் தன்மையைப் பேணும் பொருட்டும், தீய சக்திகளின் பார்வை விலகும் பொருட்டும், மஞ்சள் நீர் தெளித்து வீட்டைக் கழுவி சுத்தம் செய்து சமுத்திர நீர் போன்ற புனித தீர்த்த நீரைத் தெளித்து, வீடு வளவுகளை காவல் செய்து வீட்டினுள் சாம்பிராணி, குங்கிலியம் போன்றவற்றினால் புகையிட்டு வீட்டு முன் வாசலில் வேப்பமிலைப் பத்திரத்தினாலான தோரணம் கட்டுவர். வைரவர் உக்கிரமான தெய்வம் ஆகையால் இரவு வேளைகளிலே இச் சடங்கானது இப்பிரதேசங்களில் நடாத்தப்படுகின்றது. சில இடங்களில் இச் சடங்கு இடம்பெறும் நாள் அன்று “அம்மனுக்குச் செய்தல்” எனும் “சர்க்கரை அமுது படைத்தல்” படையல் சடங்கானது பகல் வேளையும், இரவு வேளைகளில் “பேச்சியம்மனுக்கு” “பள்ளயச்சடங்கும்” நடைபெறும் வழக்காறு உண்டு. இவ் வழக்காற்று முறைகளின் போது உற்றார் உறவினர்கள், அயலவர்கள் குறித்த குடும்பத்தினருடன் இணைந்து சடங்கிற்கான பங்களிப்பினை மேற்கொள்வார்கள். இவ் வேளை சமூகத்தினர் இடையே பரஸ்பர தொடர்பு, ஒற்றுமை முதலான விழுமியப் பண்புகள் விருத்தியடைகின்றன. வீடுகளில் வைரவருக்குச் சிலை அமைத்து வழிபடும் மரபு காணப்படுவதில்லை. திரிசூலம் அல்லது இரட்டைத் திரிசூலம், கல், தென்னம்பாளை, கமுகம் பாளை, செவ்விளநீர், கருங்காலிப் பொல்லு (தண்டம்) என்பன வைரவர் குறியீடாக வைக்கப்பட்டு “மடை வைத்தல்” சிறப்பாக இடம் பெறுகின்றது. வீடுகளில் பூசை வழிபாடானது குறித்த பரம்பரையைச் சேர்ந்த ஒருவரினாலோ அல்லது பூசகரை அழைத்தோ இடம்பெறும். மட்டக்களப்பு தெய்வ வழிபாட்டு முறையில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் விசேடமான மடைப் பொருட்கள் காணப்படுகின்றன. அரிசிமா ரொட்டி, தவிட்டு ரொட்டி, கஞ்சா ரொட்டி போன்ற ரொட்டி வகைகளும், செவ்விளநீர், கரும்பு, கதலி வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம் போன்ற நார்ப்பழ வகைகளும் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், பஞ்சாமிர்தம், பாணக்கம், துள்ளுமா, உளுந்து வடை, பூக்கள், வெற்றிலை, பாக்கு, வில்வம் பத்திரம், வேப்பம் பத்திரம் என்பனவும் சிறப்பாக சிவப்பு நிற மலர்கள், கள்ளு, சாராயம் போன்றவையும் வைக்கப்பட்டு மடை அலங்கரிக்கப்படும். ஆதி வைரவரை அழைத்து சடங்கு செய்யும் சில வீடுகளில் கஞ்சா ரொட்டி, கள்ளு, சாராயம் போன்றவற்றை வழிபாட்டின் போது சேர்த்துக் கொள்வது குறைவு. ஆனால் ஏனைய சில வைரவ மூர்த்தங்களை அழைத்து வழிபாடு செய்கின்ற இல்லங்களில் மதுப் பொருட்கள் வைத்து வழிபடப்படும் மரபு காணப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் வைரவருக்கு தேன் வைத்து வழிபடப்பட்டிருந்த முறையே பிற்காலத்தில் மதுப்பொருட்களாக மாற்றமடைந்து இருக்கலாம். ரொட்டி செய்யப்படும் போது சில இடங்களில் தேங்காய்ப்பூ, உப்பு என்பன கலந்தும் சில இடங்களில் தனி மாவினாலும் செய்வர். மணி ஒலி எழுப்புதல், தீபம் காட்டுதல், உடுக்கை ஒலித்தல், வைரவ தோத்திரங்கள், காவியங்கள் பாடுதல் என்பவற்றோடு சில இல்லங்களில் வைரவர் உருக்கொண்டு வந்து கலையாடுதல், வாக்குச் சொல்லுதல் என்பனவும் இடம்பெறும். சடங்கு வழிபாடு நிறைவு பெற்றதும் தண்ணீர் தெளித்து மடை பிரிக்கப்பட்டு பிரசாதங்கள் பகிர்ந்து அளித்தலுடன் வீட்டுச் சடங்கு நிறைவுபெறும். வைரவர் சடங்கு வழிபாடுகளில் பொதுவாக மண்டபம் அமைத்தல், மண்டபம் காவல் பண்ணுதல், கும்பம் வைத்து மடைகள் வைத்தல், கலையாடுதல், தேவாதிகளை கட்டுக்கு வைத்து ஆட்டத்தை ஊக்குவித்தல், தேவாதிகளை யாரும் கட்டினால் வெட்டி ஆடுதல், காவியம் பாடுதல், பள்ளயம் அல்லது பலி கொடுத்தல், வழிபடுதல் முதலிய சடங்கு நிகழ்ச்சிகள் இடம்பெறும். வைரவர் சடங்கின் போது தெய்வம் ஆடுதலில் உடுக்கை, தவில், சிலம்பு, அம்மானைக் காய், சாட்டை போன்ற கருவிகள் பயன்படுத்தப்படும். இவ்வேளை வாக்குச் சொல்லுதல், தீய சக்திகளை விலக்குதல், கழிப்புச் சடங்கு, பலியிடுதல் போன்றவை இடம்பெறும். இங்கு பலியிடலுக்காக ஆடு, கோழி போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இன்று பலியிடலின் மாற்றீடாக நீத்துப் பூசணிக்காய் பயன்படுத்தப்படுகின்றது. இங்கு வைரவருக்குரிய சிறப்பு வாய்ந்த தோத்திரம், காவியம், அகவல், தாலாட்டு என்பன பாடப்படுகின்ற வழக்கம் காணப்படுகின்றது. சுடலைக்கு அண்டிய பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் குழுவினர் சுடலை வைரவர் வழிபாட்டினை மேற்கொள்வர். இவ் வழிபாட்டின் போது பனை ஓலைகளினால் இழைத்த பெட்டி ஒன்றினுள் கள்ளு, சாராயம், கஞ்சா ரொட்டி, மொந்தன் வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வைக்கப்பட்டு மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு குறித்த ஒரு இடத்தில் மடை வைக்கப்பட்டு தேங்காய் உடைத்து, கற்பூர தீபம் ஏற்றி குறித்த குடும்பத்தினைச் சேர்ந்த நபரின் மண்டாட்ட வேண்டுதலுடன் சுய வழிபாட்டு முறையில் வைரவர் வழிபாடு இடம்பெறும். வைரவர், ஆகமக் கோயில்களில் பரிவார மூர்த்திகளில் ஒருவராகவும் காவல் தெய்வமாகவும் கூறப்படுகிறார். மகோற்சவ ஆரம்பத்தில் கிராம சாந்தியில் வைரவ வழிபாடு இடம்பெறுகின்றது. ஆலய உற்சவ காலங்களின் போது இக் கிரியையானது குறித்த ஆலயத்தில் உள்ள கிராமத்திற்கு எந்தவித இடையூறும் நேர்ந்திடா வண்ணம் மேற்கொள்ளப்படும். உற்சவம் முடிவடைந்ததும் வைரவர்க்குரிய விசேட அபிடேக ஆராதனையுடன் பூசை இடம்பெறும். வைரவர் கோயிலை காவல் செய்யும் தெய்வம் மாத்திரமல்ல, அவர் சுற்றாடலையும் காக்கின்றார். மகோற்சவ காலங்களில் வைரவரைக் கட்டுதல், வைரவர் சாந்தி செய்தல் முதலானவை நடைபெறுவதையும் அவதானிக்கலாம். ஈழத்தில் சிறு தெய்வமாக, பெருந்தெய்வமாக வைரவ வழிபாடு பெருஞ்செல்வாக்குற்றுக் காணப்படுகிறது. இதற்குப் பின்வரும் காரணங்களைச் சுட்டலாம். கந்தபுராணச் செல்வாக்கு. ஈழத்தில் ஆதிக்க மதமான சைவம் (இந்து சமயத்துள்) இருத்தலும், வைரவர் சிவனின் அம்சமாக எடுத்துரைக்கப்படுதலும். ஒல்லாந்தர் கால சமய அடக்குமுறை அல்லது ஆதிக்க சக்திகளுக்கு எதிரான குரல். சூல வழிபாட்டு முறை – எளிய வழிபாட்டு முறை சைவ மேனிலையாக்கம் அல்லது சமஸ்கிருத மயமாதல் “யாழ்ப்பாணக் கலாசாரம், கந்தபுராணக் கலாசாரம்” என்பார் பண்டிதமணி. கந்தபுராணம் முன்னிறுத்தும் சிவகுமாரர்களுள் வைரவர் ஒருவர் என்பதும் அவர் உக்கிர அம்சமாக சுட்டப்படுவதும் இங்கு உற்று நோக்கத்தக்கது. வைரவ வழிபாடு எப்போது ஈழத்திற்கு வந்தது என்பது தெளிவாக உரைக்க முடியாத ஒன்றாகவே உள்ளது. காலனித்துவ ஆட்சிக்குட்பட்டிருந்த ஈழத்தில் சுதேச சமயமான சைவ சமயத்தை நிலைநாட்ட அக்கால மக்கள் பயன்படுத்திய உபாயமாகவும் முக்கிய செயற்பாடாகவும் அமைந்தது திரிசூல வழிபாடாகும். இத் திரிசூல வழிபாடு என்பது பெரிதும் வைரவர் வழிபாடாகவே அமைந்திருந்தது. சுதேச சமய நடைமுறைகளைப் பின்பற்றுதல் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்ட அச்சூழலில் மரங்கள், நீர்நிலைகள், விவசாய உற்பத்தி நிலங்கள், சில மறைவிடங்கள் என்பவற்றில் இவ் வைரவ வழிபாடு நிகழ்த்தப் பெற்றுள்ளது. ஒல்லாந்த அரசின் அடக்குமுறைக்கெதிரான மௌனக் குரலாகவும் குறியாகவும் சூலத்தைக் குறிப்பிடலாம். அதேவேளை பரமனை மதித்திடாத பங்கையாசனனுக்கு நிகழ்ந்ததே ஒல்லாந்தருக்கும் நிகழும் என்பதைக் குறியீடாக சைவ வழிபாட்டினூடு உணர்த்தியிருக்கக் கூடும். வானவர் தலையைக் கொய்ததன் குறியீடான மண்டையோட்டு மாலையைக் குறிப்பதாக அமைந்த உழுந்துவடை மாலையும் குருதி பெற்ற கதையினடையாளமாக சிவப்புநிற செவ்வரத்தம் பூ தரித்தலும் ஒல்லாந்தருக்கான எச்சரிக்கையாகவும் அல்லது சுதேச சமயத்தை ஒடுக்கும் அதிகாரத்திற்கு எதிராக மக்களைக் கொதி நிலையில், உணர்ச்சிப் பிரவாகத்தில் வைத்திருக்கும் செயற்பாடாகவும் வைரவ வழிபாடு முன்னிறுத்தப்பட்டிருக்கலாம். தாம் தாம் விரும்பிய நிலையிலும் வகையிலும் மிருகபலி, மடை பரவுதல் தொட்டு ஆகமப் பண்பாடு வரை வைரவ வழிபாடு அகலக் காலூன்றி நிலைத்து நின்றது. ஆகமப் பண்பாட்டை முன்னிறுத்தி சைவ மீட்டுருவாக்கத்தைச் செய்த ஆறுமுகநாவலர் சிவபெருமானின் மகன்களில் ஒருவராக வைரவரைச் சுட்டி அவ் வழிபாட்டை உள்ளீர்த்தமை யாழ்ப்பாணத்தில் அவ் வழிபாட்டுக்கான மேனிலையாக்கத்தையும் ஸ்திர நிலையையும் வழங்கியது. யாழ்ப்பாணத்தின் அவ்வவ் சமூகத்தின் நோக்கிற்கேற்ப வைரவர் காலவைரவர், வடுகவைரவர், ஆதிவைரவர், கபாலவைரவர், நரசிம்மவைரவர், கிங்கிலியவைரவர் எனப் பலவாறு வழிபடப்பட்டு வருகின்றார். அதேபோல ஆலயம் அல்லது சூலம் அமைந்திருக்கும் இடத்தை வைத்துக் கொண்டு இத்தியடி வைரவர், சுடலை வைரவர், ஆலடி வைரவர் எனப் பலவாறு சுட்டப்படுகிறார். ஆகமக் கோயில்களில் வடுகநாதராகவும், ஷேத்திர பாலகராகவும் காளியின் தலைவராகவும் சுட்டப்படுகிறார். இணுவில், தெல்லிப்பளை, உரும்பிராய், சிறுப்பிட்டி, வடமராட்சி உள்ளிட்ட பல இடங்களில் ஆகம மயப்பட்ட, ஆகம மயப்படாத மிருகபலியோடு கூடிய நாட்டாரியல் பண்புகள் நிறைந்ததான வைரவர் வழிபாட்டு மரபுகள் இன்றுவரை காணப்படுகின்றன. சமகாலப் பயில்வுகள் காலனித்துவ அதிகாரத்திற்கெதிரான, ஒலி வெளிப்படாத, ஆழ ஊடுருவித்தாக்கும் கலகக் குரலாகவே போர்த் தெய்வமான வைரவரும் ஆயுதமான திரிசூலமும் கட்டமைக்கப்பட்டன. ஜனநாயகமான, பேதமற்ற – சாதியக் கட்டுமானம் தாண்டிய மக்கட் தெய்வமாக வைரவர் விளங்குகின்றார். நாவலர் வைரவரை சிவனினம்சமான மகனாக எடுத்துரைத்து மேனிலைத் தெய்வமாக்கினார். இதன்வழி நாட்டாரியல் வழிபாடு, ஆகம வழிபாடு எனும் இருதள மரபிற்குரியதாக, சிறுமரபு – பெருமரபு என வைரவ வழிபாடு மாற்றமுற்றது. பின் இருபதாம் நூற்றாண்டின் அறுபது எழுபதுகளில் ஏற்பட்ட சிந்தனை மாற்றம், இலவசக் கல்வி, போன்றனவும் நகரமயமாதலும் வைரவ வழிபாட்டை பெருமரபாக்கின. இன விடுதலைப் போராட்டத்தின் எழுச்சி, பேரினவாதத்தின் ஒடுக்குமுறை, போர் என்பன வைரவ வழிபாட்டை மீள் முக்கியத்துவம் பெறச் செய்தன. 1995 இல் ஏற்பட்ட இடப்பெயர்வின் பின்னான மீள் வருகை புதிய அசைவியக்கங்களை யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்தியது. இராணுவக் கட்டுப்பாடு, மின்சாரம், தொழில்நுட்பத் தொடர்பாடல் வசதிகள், பொருளாதாரத் தடைநீக்கம், திறந்த பொருளாதாரம், சடுதியான வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் (சட்ட ரீதியாவும், களவாகவும்), பொருளாதார ஏற்றம், கல்வி என்பன அவற்றுள் சில. இதன் வழி வாழ்க்கைத் தரம் உயர்கிறது. யுத்தத்தின் நேரடித் தாக்கம் ஓரளவு குறைந்ததனால், மக்கள் தெய்வமாக யுத்தத்தின் அடையாளமாக இருந்த வைரவரை மக்கள் தம் மனங்கட்கேற்ப, சாந்த சொரூபியாக ‘ஞான வைரவராக’ மாற்றி விடுகின்றனர். ஆகம மரபுவழி ஆலயங்கள் புனருத்தாரணம் செய்யப்படுகின்றன. பிராமணர்கள் பூசை செய்ய நியமிக்கப்பட்டு அலங்கார உற்சவங்கள் நடைபெறுவனவாக வைரவர் கோயில்கள் மாறின. சில ஆலயங்களில் இரதோற்சவங்களும் நடைபெறுகின்றன. ஆயினும் சமகாலத்தில் வைரவர் வழிபாட்டில் சுதேச பாரம்பரியங்களில் கலப்புகள் ஏற்படுத்தப்படுகின்றது. இதனால் கலப்புறு பண்பாடு தோற்றம் பெறுகிறது. ஆகம விதிமுறைகளுக்கு உட்பட்ட அம்சங்களும், ஆகம விதிமுறைகளுக்கு உட்படாத அம்சங்களும் இணையும் போது இங்கு புதிய கலப்புறு பண்பாட்டம்சங்கள் தோன்றி இரண்டு முறையான வழிபாடுகளையும் ஒரே தளத்தில் இடம்பெறச் செய்கின்றன. வைரவருக்கு உயிர்ப்பலி அதிகமாக கொடுக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது ஒரு சில இடங்களிலேயே உயிர்ப் பலி மேற்கொள்ளப்படுகின்றது. நகரமயமாதல், உலகமயமாதல், மேனிலையாக்கம் எனும் தளக்கூறுகளின் வழி ஏற்பட்ட சமூக அசைவியக்கமாகவே நாட்டார் பண்பாட்டின் அடையாளமாகக் கருதப்பட்ட யாழ்ப்பாண வைரவர் வழிபாடு, பெருமரபாக சமஸ்கிருத மயமாதலுக்குள்ளான பெருந் தெய்வமாகி சமூக, சாதி அந்தஸ்தை நிலைநாட்டுவதற்கான சமூகக் குறியீடாக சூலக் குறியீட்டைப் புறந்தள்ளி, கருங்கற் தெய்வமாக எழுச்சி பெற்று நிற்பதை இன்று அவதானிக்க முடிகிறது. இம் மேனிலையாக்கம் இன்று வடக்கு, கிழக்கு மட்டுமின்றி இலங்கை முழுவதும் மிகவும் வேகமாக நிகழ்ந்து வருவதைக் காணமுடிகிறது. நிறைவுரை சமஸ்கிருத மயமாதலுக்கும் சாதி, வர்க்கப் படிநிலைக்கும் இடையேயான இயங்கு நிலை அவதானத்திற்கு உரிய ஒன்றாகும். அதிகாரமிகு சாதியத்திற்கும் சமஸ்கிருத மயமாதலுக்கும் இடையிலுள்ள உறவுநிலை கெட்டித்த தன்மையுடையதாகும். அதனாலேயே கீழ்நிலையிலிருந்து மேலெழ விரும்பும் குறித்த மனிதர், குறித்த சாதி, குறித்த வர்க்கம் அதிகார மனிதர்களின் சாதிக்கோ வர்க்கத்திற்கோ சமமாகத் தன் அந்தஸ்தை ஆக்கிக் கொள்ள முயற்சிக்கிறது. இம் முயற்சிக்கு அனுசரணை செய்வன பொருளாதாரம், அதிகாரம், சடங்கு எனும் தகுதிப்பாடுகளாகும். இவற்றில் பெரும்பான்மையைத் தனதாக்கிக் கொள்வதன் மூலம் தன்னதிகாரத்தை – சமூக அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ள முடிகிறது. இதன் வெளிப்பாடே சுடலை வைரவரும் கிணற்றடி வைரவரும் முச்சந்தி வைரவரும் ‘ஞான வைரவரான’ வரலாறு. ஆகவே இதில் சாதிய, வர்க்க அமைதி கிடைக்கின்றதே அன்றி உண்மையான ஆன்மீக அமைதி சாத்தியமற்றுப் போகின்றது. தொடரும். https://www.ezhunaonline.com/folk-god-vairavar-in-sri-lanka/1 point - யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.