Leaderboard
-
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்9Points3052Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்8Points38754Posts -
செம்பாட்டான்
கருத்துக்கள உறவுகள்7Points1223Posts -
வீரப் பையன்26
கருத்துக்கள உறவுகள்5Points16477Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/14/25 in all areas
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 30வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் நிலைத்து ஆடமுடியாமல் விக்கெட்டுகளை இழந்ததனால் ரிஷப் பந்தின் 63 ஓட்டங்களுடன் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களும் நிலைத்து ஆடாமல் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் வெல்லும் வாய்ப்பு குறைந்திருந்தது. எனினும் ஷிவம் டுபேயின் நிதானமான 43 ஓட்டங்களுடனும் இறுதியில் வாணவேடிக்கை காட்டிய தோனியின் 26 ஓட்டங்களுடனும் 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது. முடிவு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த நால்வருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:3 points
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
நீங்கள் சொல்வது சரி ஆனால் ஒரு அல்லது பல. தமிழர்கள் ஐரோப்பாவில் கனடாவில் அவுஸ்திரேலியாவில்,....... ..இது போன்ற நாடுகளில் தேர்தலில் நின்று அந்தந்த நாட்டு மக்களின் வாக்குகளை பெற்று வெல்லும் போது ரொம்பவும் மகிழ்ச்சியாக வாழ்த்துக்கள்… தெரிவிக்கிறீர்கள். ....அவர்கள் தமிழ் மொழி பேசலாமா?? மேலும் எவராகவிருந்தாலும். என்ன மொழி பேசினாலும் மக்களுக்கு சிறந்த சேவை. ஆற்றினால். அவர்களை மக்கள் தெரிவு செய்வார்கள்3 points
-
இன்றைய அதிசயம்
2 pointsஇன்றைய அதிசயம் ------------------------------ பிள்ளையார் இயேசு பெருமான் புத்த பெருமான் இப்படி பல தெய்வங்களில் இருந்து நீர் பால் இரத்தம் கூட உலகில் அங்கங்கே வடிந்து கொண்டிருக்கின்றது இது அதிசயம் ஒரு துளி ஈரமும் வருடங்களாக காணாமல் வறண்டு வெடித்து ஒரு இடம் அங்கே ஒரு வெள்ளைக் கொக்கு ஓடின ஓணாணை பிடித்து அப்படியே முழுங்கியது இதுவும் அதிசயம் கடுங்குளிர் காலத்திலும் நெருப்பாக வெயில் எரிய அனல் காற்றும் சேர அந்த இடமே பற்றி எரிந்தது இது அவலமான அதிசயம் இன்று மொட்டை மரம் ஒன்றில் கண்களை மூடியிருந்த குருவிகள் 'இது என்ன அதிசயம் தண்ணீர் மேலே இருந்தும் விழுமா............' என்று என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே உறைந்து நிற்கின்றன வானம் பிளந்து கொட்டும் மழையில் இங்கு இன்றைய அதிசயம் இதுதான்.2 points
-
ஒரு காரின் கடைசி வாக்குமூலம்
2 pointsஒரு காரின் கடைசி வாக்குமூலம் ---------------------------------------------------- 'இதோ உங்களின் பேபி................' என்று சொல்லியே புத்தம் புதிதாக என்னை வாங்கியவரிடம் கொடுத்தார்கள் வாங்கியவருடன் ஒரு பெரிய பேபியும், இரண்டு சின்ன பேபிகளும் வந்திருந்தனர் நல்லதொரு குடும்பம் என்று நானும் சந்தோசப்பட்டேன் சின்னப் பெண் ஒரு வருடத்திற்கு இருக்கைக்கு மேல் ஒரு இருக்கை போட்டு இருந்தார் பெரிய பையன் தெனாவெட்டாக பின்னுக்கு போய் மூன்றாவது வரிசையில் தனியே இருப்பான் சில மாத கவனிப்புகளின் பின் ஆரம்பித்தார்கள் அவர்களின் வேலைகளை அவர்கள் சாப்பிடுவதில் கொஞ்சம் கொட்டி அப்படியே விட்டார்கள் ஏதோ நானும் சாப்பிடுவது போல அது நாறி நான் மூச்செடுக்க முடியாமல் தவித்தேன் சீப்பு பவுடர் பேனை பென்சில் இன்னும் என்ன என்னவோ எல்லாம் நாலு கதவுகளுக்குள்ளும் வைத்தார்கள் எதை வைத்தாலும் எடுக்க மாட்டார்கள் இன்னும் புதிதாகவும் கொண்டு வந்து வைப்பார்கள் பின்னர் தேடி சண்டை போடுவார்கள் அவர்கள் ஒழுங்காக குளித்தார்கள் எனக்கு எதுவும் கிடையாது மழையும் இல்லாத ஊர் இது காடு மலை வனாந்தரம் எல்லாம் ஓடினேன் நூறாயிரம் மைல்கள் கடந்தேன் அப்பப்ப ஓயில் மட்டும் மாற்றினார்கள் மற்றது எதுவும் செய்யவில்லை நான் உள்ளுக்குள் உருகி ஒரு நோயாளியாகி கொண்டிருந்தேன் யாரு சாமி இந்த இளையராசா................. தினமும் அவர் இசை தான் இதுக்கு மேலும் முடியாது என்று மக்கர் பண்ண ஆரம்பித்தேன் என்னைத் திருந்தாமல் இன்னொரு புதுசைக் கொண்டு வந்தார்கள் நான் இப்ப அடிமாடாக ஆகினேன் இந்தப் பயல் ஒரு விளையாட்டுப் பைத்தியம் விளையாடுவது விளையாடதது என்று எல்லாக் குப்பைகளாலும் என்னை நிறைத்தார்கள் இப்ப இந்தப் பயலைத் தவிர வேறு எவரும் எனக்குள் வருவதேயில்லை எஞ்சின் லைட்டை எரித்துக் காட்டினேன் அவனில் ஒரு அசைவும் இல்லை உறுமிப் பார்த்தேன் பாட்டுச் சத்தத்தை பலமாக்கி கேட்கின்றான் இப்ப இந்தக் கணத்தில் இந்த நடுரோட்டில் என் மூச்சை நிறுத்தப் போகின்றேன் என்னில் எந்த தப்புமே கிடையாது எல்லாமே இந்தப் பயலின் கவலையீனம் தான்.2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
GMT நேரப்படி நாளை செவ்வாய் 15 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 31) செவ்வாய் 15 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் PBKS எதிர் KKR இருவர் மாத்திரம் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 21 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் ஈழப்பிரியன் செம்பாட்டான் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?2 points
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
கருணாநிதி தெலுங்கர் என்பதே வெறும் பொய்யர்களின் பரப்புரை. கருணாநிதி மட்டுமல்ல எம்ஜிஆர், ஜெயலலிதா, அனைவருமே தமிழர்களே. தமிழ்நாட்டு மக்களால் பல முறை முதலமைச்சராகவும் தொடர்சசியாக தோல்வியை தழுவாத சட்டசபை உறுப்பினராகவும் தமிழ் நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். அவரின் அரசியலை விமர்சிக்கலாம் தவறில்லை. ஆனால் ஒருமுறை கூட கட்டுப்பணம் பெற முடியாத, ஒரு சிறிய கிராமசபை உறுப்பினராக கூட வெற்றி பெற வக்கற்ற கட்சிகள் தமக்கு ஒவ்வாதவர் மீது இனவெறி தாக்குதல் செய்வது ஏற்றுகொள்ள தக்கதல்ல. அதை விட தாமே இனவாதத்தால் பாதிக்கப்பட்டோம் என்று கூறும் ஈழத்தமிழர்கள் அடுத்தவன் நாட்டுக்குள் இனவாதம் பேசுவது சிங்கள இனவாதத்தை விட மோசமானது. அதிகாரம் கிடைக்காமலே இப்படி என்றால் அதிகாரம் கிடைத்திருந்தால்…. சொல்லி வேலை இல்லை.2 points
-
ஜெர்மனியில் தமிழர்களை பார்த்து நடுங்கும் சிங்கள மாணவர்கள்
பிள்ளைகளை தனியே அனுப்பும் போது அவர்கள் மீது உள்ள அதீத பாசத்தின் காரணமாக மிகைப்படுத்தப்பட்ட பயத்தை ஏற்படுத்துவது பொதுவாக எமது நாடுகளில் பெற்றாரின் பொதுவான இயல்பு. இது தமிழருக்கும் பொதுவான ஒன்றே. சிங்கள இனவாத அரசியல்வாதிகள் தமிழர் மீது அளவுக்கு அதிகமான பயம் ஏற்படும் விதமாக அப்பாவி சிங்கள மக்களை நம்ப வைக்க பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அதுவும் ஒரு காரணம். பொதுவாகவே இனவெறியர்களின் தந்திரம் இவ்வாறாக அடுத்த இனத்தின் மீது பயத்தை ஏற்படுத்துவதே. சிங்களவரில் சரத்விஜசேகரா, விமல் வீரவம்ச போன்றோரும் தமிழ் நாட்டில் சீமான் போன்ற இனவெறியர்களும் இதே போன்ற பரப்புரையையே மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான பரப்புரைகளே மிகைப்படுத்தப்பட்ட பயத்தை பெற்றோருக்கு ஏற்படுத்துகிறது.2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
2 points
- சஜித்தை டெல்லிக்கு அழைத்த மோடி
2 pointsஉனக்கு என்ன வேண்டுமென்றாலும் தருகிறேன். சிவப்பு சட்டையை காலி பண்ணு என்று கேட்டிருப்பார் போல. சிம்போலிக்காக கொடுக்கிறாராம்.🙂2 points- சஜித்தை டெல்லிக்கு அழைத்த மோடி
2 pointsசின்ன சிவத்த தொப்பிகாரனின் ஆட்சியை கவிழ்க்க உதவி செய்ய முடியுமா என கேட்டிருப்பார்...🤣2 points- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனக்கு போட்டியைப் பார்க்க நேரமில்லாமல் போய்விட்டது. எண்ணிக்கையைப் பார்த்த போது கலை வந்தவன் மாதிரி தாண்வமாடியிருக்கிறார் என்று மாத்திரம் தெரிந்தது. தொடர்ந்தும் முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொண்டிருக்கும் @suvy க்கு வாழ்த்துக்கள்.2 points- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யஷஸ்வி ஜெஸ்வாலின் அதிரடியான 75 ஓட்டங்களுடன் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஃபில் சால்ட்டின் சிக்ஸர்ஸ், பவுண்டரிகளுடனான 65 ஓட்டங்கள் மழையெனப் பொழிந்ததாலும், விராட் கோலியின் நிதானமான ஆட்டமிழக்காமல் பெற்ற 62 ஓட்டங்களுடனும் 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 175 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 12 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் அதிகமான ஓட்டங்களைக் குவிக்கும் நோக்குடன் வேகமாக அடித்தாடும் உத்தியுடன் விளையாடியதால் திலக் வர்மாவின் 59 ஓட்டங்களின் உதவியுடன் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சவாலான வெற்றி இலக்கை அடையும் நோக்கோடு ஆரம்பத்தில் இருந்தே வேகமாக அடித்தாடி விளையாடினர். குறிப்பாக கருண் நாயர் 89 ஓட்டங்களை மின்னல் வேக அடியின் உதவியுடன் எடுத்திருந்தார். எனினும் கேஎல் ராகுலின் விக்கெட் விழுந்ததோடு வெற்றிபெறும் வாய்ப்பை இழந்து இறுதி மூன்று பந்துகளின் மூன்று பேர் ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்ததால் 19 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 193 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 12 ஓட்டங்களால் வெற்றியீட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @சுவைப்பிரியன் உம், @Eppothum Thamizhan உம் @goshan_che க்கு உதவியாக அருகணைந்து இறுதிப் படிகளில் நிற்கின்றனர்!2 points- கருத்து படங்கள்
2 points2 points- சும்மா ஒர் பதிவு
1 pointஒரு காலத்தில் எமது முன்னோர்கள் வயல்வெளிகளின் அருகாமையில் கோவில் கட்டி அதற்காக,குளங்களை வெட்டினார்கள்,கேணிகளை உருவாக்கினார்கள்..மன்னர்கள் ஆட்சியில் அல்லது வேளான்மை சமுகம் உருவான காலத்தில் இது ஒர் சமுக கட்டமைப்பு ..சகல கிராமங்களிலும் உள்ள பழைய கோவில்களில் இந்த டெம்பிளெட்டை அவதானிக்கலாம்.. இதற்கு பணம் எங்கிருந்து வந்திருக்கும்? ஊர்மக்கள் அல்லது மன்னர்கள் கொடுத்திருப்பார்கள் அநேகமாக பொதுமக்கள் பொதுநோக்குடன் கொடுத்த பணமாக த்தான் இருக்க வேண்டும் ...அந்த பணம் மக்களின் நலன் கருதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை . எமது கண் முன்னே குளங்கள்,கேணிகள்(மருதடி கேணி..காக்கா சுயா),கிணறுகள் இன்றும் சாட்சியாக இருக்கின்றது... இன்று புலம் பெயர் நாடுகளிலிருந்து கிடைக்கு பணம் போன்று அன்றைய காலத்தில் நிச்சயம் பணம் கிடைத்திருக்காது.இருந்தும் உள்ளூர் மக்கள் சொந்த வருமானத்தில் இப்படியான செயல்களை செய்து உள்ளனர் யாழ் மாவட்டம் ஆறுகள்,கங்கைகள்,அருவிகள் நிறைந்த மாவட்டம் அல்ல.... விவசாயத்திற்கு மழை நீரை பெரிதும் நம்பிருந்தார்கள்.மழையும் வருடத்தில் ஒர் குறிப்பிட்ட காலத்தில் தான் பெய்யும்..மழையும் சில நாட்களில் அடித்து பெய்யும் அந்த நீர் வீணாக கடலுக்கு சென்று கலந்து விடும்.இந்த நீரை சேமித்து விவசாயம் செய்யத்தான் குளங்கள்,கேணிகள்,கிணறுகள் கட்டினார்கள். இவை யாவும் பொது நோக்குடன் பொது இடத்தில் பொதுமக்களினால் பொது நன்மைக்கு ...பொது மக்கள் சேர்த்த பணத்தில் ...என நான் நினைக்கிறேன் ...நிச்சயமாக மருதடியான் தனிமனிதனாக இவற்றை(கேணி கட்டுதல்,கிணறு வெட்டுதல்,குளம் அமைத்தல்) செய்திருக்கமுடியாது....அவர் ஓரு சக்தியாக செயல் பட்டிருக்கலாம்...(ஏன் வீணாக் மருதடியானை எங்கன்ட அலட்டலுக்குள்ள பிறகு மனுசன் என்னோட கோபித்து கொண்டால்) ஊர் மக்கள் பணம் கொடுத்து,அந்த பணத்தில் ஊர்மக்கள் பயன் அடையும் வகையில் நல்ல திட்டங்களை அமுல் படுத்தியுள்ளார்கள்.அதற்கு பொதுக்கட்டமைப்பு (கோவில் சபை அல்லது கிராம சபை) துணை புரிந்திருக்கின்றது.. குளம் ... மழை நீர் சேர்ந்து நிற்கும் .நீண்ட நாட்களின் நீரோட்டத்தின் விளைவாக ஊரில் உள்ள மண்,கல்,சகதி மற்றும் கழிவுகள்(வாழைமரம்கள்,தடிகள்,மரங்கள்) யாவும் நீரோடு சென்று அடியில் படிந்து குளத்தின் ஆழத்தை குறைத்து விடும்..நீர் வற்றிய பின்பு, கழிவுகள்,மண் போன்றவற்றை அன்று வாழ்ந்த மக்கள் சிரமதான முறையில் துப்பரவு செய்தார்கள் ...தூர் வாருதல் என சொல்வார்கள் ...பொது நோக்குடன் (கிளீன் சிறிலங்கா 30 நாட்கள்.கிளீன் அப் அவுஸ்ரேலியா நாள் 30 வருடங்கள்)எங்கன்ட சனத்தின்ட கிளீன் அப் குளம் எப்பவோ தொடங்கிட்டுது ...(கிளீன் அப் செய்யும்பொழுது கள்,தேனீர்,வடை,மோதகம்..போன்றவற்றை ஊர்மக்கள் செய்து கொடுப்பார்கள் ஊர்மக்கள் கூடி சேர்த்த பணம்) கிளீன் அப் அவுஸ்ரேலியா செய்யும் பொழுதும் நாலு பேர் சேர்ந்து காசு போட்டு பியர் அடிக்கிறனாங்கள் ..,அதற்காக அவுஸ்ரேலியா அரசு எங்கள் மீது குற்றம் சாட்ட முடியாது , "அரசாங்க காசில பியர் குடிக்கிற எண்டு" இந்த குளங்கள் விவசாயத்துக்கு மட்டுமல்ல கால் நடைகளின் தாகத்தையும் தீர்க்க உதவியிருக்கு,இருக்கின்றது . கேணிகள் இவற்றில் அநேகமானவற்றுக்கு மூன்று பக்கமும் சுவர் கட்டியிருப்பார்கள் ஒரு பக்கம் திறந்த வாறு இருக்கும் படிகள் கட்டியிருக்கும் ,மழை நீர் ஒடிவந்தாலுமொரு பக்கத்தினால் மட்டுமே அடி தளத்துக்கு செல்ல முடியும் ஊர் கழிவுகள் குறைவாக அடித்தளத்திற்கு செல்லும் இதனால் நீண்ட நாட்களுக்கு தூர் வார வேண்டிய அவசியமில்லை ... இன்று கேணிகளை மூடிவிடுகிறார்கள் ,அல்லது தீர்த்தமாடுவதற்காக கேணிக்குள் சிறிய கட்டித்தை கட்டிவிடுகிறார்கள் ...இதை செய்வது ஊரில் உள்ள மேதாவிகள் .. கிணறு. முக்கியமாக தோட்ட கிணறுகள் அதிலும் யாழ் மாவட்ட கிணறுகள் மழை நீர் ஓடுவதற்கு ஏற்ற வகையில் ஒர் பாதை விட்டு கட்டியிருப்பார்கள் .தற்பொழுது இந்த கிணறுகள் முற்றாக மூடி கட்டப்பட்டிருக்கின்றது அதுபோக யாரும் கிணறு வெட்டுவதில்லை ,பணம் அதிகம் வேண்டும் வெட்டுவதற்கு. கேணிகளுக்கு பக்கத்தில் கிணறு வெட்டியிருப்பார்கள் ,முட்டாள்கள் தண்ணீர் கேணியில் இருக்கின்றது வீணாக கிணற்றையும் வெட்டி யிருக்கிறாங்கள் பழசுகள் என திட்டியும் இருக்கின்றேன் .ஆனால் அதன் முக்கியத்துவம் பின்பு தான் அறிந்து கொண்டேன்.கோயில்களுக்கு சற்று தொலைவில் இருக்கும் வீட்டு கிணற்று தண்ணீர் உவர் தன்மையுடன் இருக்கும் ஆனால் கோயில் கிணற்று தண்ணீர் நன்னீராக இருக்கும் .கேணிகளில் சேரும் மழைநீர் கிணற்றுக்கு உள்ளே மண்,சிறுகட்கள் ஊடாக வடிகட்டப்பட்டு ஊற்றாக உட்செல்வதனால் தான் என நினைக்கிறேன். மேலும் தோட்டங்கள் ,வயல்களுக்கு மத்தியில் கிணறுகள் வெட்டியிருப்பார்கள் அங்கும் நன்னீர் தான். குழாய் கிணறு பாவனைக்கு வந்துவிட்டது.அதிக இடம் தேவையில்லை .. மொத்தத்தில் மழை நீரை நிலத்தடியில் சேமித்து வைக்கும் சகல பொறிமுறைகளும் இல்லாமல் போகின்றது. அன்றைய ஊர்மக்கள்,மன்னர்களுக்கு (ஆட்சியாளர்களுக்கு) இருந்த அறிவு ,தற்பொழுது நூறு வீதம் கல்வியறிவு கொண்ட ஊர்மக்களுக்கும் இல்லை ,அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் இல்லை ,கோவில் நிர்வாக சபைக்கு போட்டி போட்டு கொண்டு வரும் தலைவர்கள்,உறுப்பினர்களுக்கும் இல்லை..... கோயில்கள்,பாடசாலைகள் எல்லாம் உருவாக்கப்பட்டதன் நோக்கம், தேவைகளை இப்பொழுது வாழும் மக்கள் மறந்துவிட்டனர் போல உள்ளது .1 point- ஜெர்மனியில் தமிழர்களை பார்த்து நடுங்கும் சிங்கள மாணவர்கள்
💥ஜெர்மனியில் தமிழர்களை பார்த்து நடுங்கும் சிங்கள மாணவர்கள் | நீங்கள் புலியா? | Thusanth vlogs சிங்களவர்கள் இன்னும் இந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை.1 point- இறை குறைபடுமோ ? - சுப.சோமசுந்தரம்
இறை குறைபடுமோ ? - சுப.சோமசுந்தரம் இறை நம்பிக்கை என்பதே இளம் பிராயத்தில் இருந்து செய்யப்பட்ட மூளைச்சலவை என்பதும், அதனால் அதுவும் ஒரு குருட்டு நம்பிக்கை என்பதுமே பெரும்பான்மை இறை மறுப்பாளர்களின் கருத்தாக இருப்பினும் அவர்கள் அக்கருத்தை அத்துணை ஆணித்தரமாக சமூகத்தில் வெளிப்படுத்துவதில்லை. எந்த சமூகத்திலும் பெரும்பான்மையோர் இறை நம்பிக்கையுடையவராய் இருப்பதும், அம்மக்கட் பணியே தம் பணி எனக் கொண்டதும் அதற்குக் காரணமாய் இருக்கலாம். ஆனால் இறை நம்பிக்கை எல்லை கடந்து மூடநம்பிக்கையாய் உருவெடுக்கும்போது இறை மறுப்பாளர் மட்டுமல்லாமல் இறை நம்பிக்கை கொண்டோரிலும் பகுத்தறிவாளர் தமது எதிர்க் குரலை ஆங்காங்கே பதிவு செய்வது உண்டு. மூடநம்பிக்கைகள் அங்கிங்கெனாதபடி எங்கும், எந்த மதத்திலும் ஊடுருவி இருக்கக் காணலாம். தற்காலத்தில் கூட எங்காவது நடைபெற்றுச் செய்தியாகி விடுகிற நரபலியும், பெற்ற குழந்தையை நொடிப்பொழுதேனும் மண்ணில் புதைத்து எடுக்கிற கோரமும், மொட்டைத் தலையில் தேங்காய் உடைத்து ரத்தம் வடிவதும் நாம் மண் சார்ந்ததாய்க் கொண்டாடும் நாட்டார் தெய்வங்களின் மீது ஏற்றப்பட்ட வன்முறை. தொன்மையான தமிழ் நாகரிகம் மற்றும் கிரேக்க நாகரிகக் காலந் தொட்டு இவை நிலவி வந்திருக்க வேண்டும். சங்க இலக்கியங்களில் இதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லையாயினும், குறுந்தொகை போன்ற அக இலக்கியங்களில் தோன்றும் கட்டுவிச்சிகளும் (குறிஞ்சி நிலத்தைச் சார்ந்த குறி சொல்பவள்) கணியன்களும் நம்பிக்கைகளுக்கான மெல்லிய ஆதாரங்கள். அவையனைத்தும் இறை நம்பிக்கை சார்ந்தே தோன்றின என்று சொல்வதற்கில்லை. உதாரணமாக, குறுந்தொகை 23 இல் " அகவன் மகளே! அகவன் மகளே! மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல் அகவன் மகளே! பாடுக பாட்டே; இன்னும் பாடுக பாட்டே! அவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!" (குறுந்தொகை 23) என்று தலைவியின் தோழி குறி சொல்லும் கட்டுவிச்சியிடம் இப்பாடல் மூலமாகச் சொல்லும் செய்தியிலும், அது தரும் இலக்கிய இன்பத்திலும் மூழ்கித் திளைத்துப் பாடல் தெரிவிக்கும் மூடநம்பிக்கையை நாம் எளிதில் கடந்து விடுவதுண்டு. இங்கு ஒரு மண் சார்ந்த மூடநம்பிக்கையாக வெளிப்படுகிறதே தவிர இறை சார்ந்ததாய் வெளிப்படவில்லை. மேலும், இது இன்றளவும் தொடரும் நம்பிக்கையே ! இருப்பினும் இயற்கை குறித்தும் வாழ்வு குறித்தும் மரணம் குறித்தும் தோன்றிய பயத்தில் பிறந்த இறை நம்பிக்கை பெரும்பாலும் மூடநம்பிக்கையின்பால் இட்டுச்செல்லும் என்பது சமயம், காலம், தேசம் எனும் எல்லைகள் தாண்டியது. தலைவனின் பிரிவாற்றாமையினால் வாடி உடல் மெலிந்திரங்கும் தலைவியின் நிலை பற்றிக் கேட்க வேலன் வெறியாட்டில் குறி கேட்கச் செல்லும் தாயினைப் பற்றி குறுந்தொகை 111 இல் காணலாம். வேலனாக வெறியாடும் குறி சொல்லும் கலைஞன் தலைவியின் வருத்தம் சேயோன் ஆகிய முருகனின் செயல் என்று அளந்து விடுவதும், அதனைத் தாயானவள் நம்புவதும் "பெரும் வேடிக்கை" என்று கூறித் தோழியானவள், "அவ்வேடிக்கை காணத் தலைவன் வருவானாக !" என்று தலைவியிடம் கூறுகிறாள். அன்று சமூகத்தில் நிலவிய அந்தக் குருட்டு நம்பிக்கையைப் புலவர் தீன்மதி நாகனார், போகிற போக்கில், வேடிக்கை (பெருநகை) என்றது நமக்கான ஆறுதல். "மென்தோள் நெகிழ்த்த செல்லல் வேலன் வென்றி நெடுவேள் என்னும் அன்னையும் அதுவென உணரும் ஆயின் ஆயிடைக் கூழை இரும்பிடிக் கைகரந் தன்ன கேழிருந் துறுகற் கெழுமலை நாடன் வல்லே வருக தோழிநம் இல்லோர் பெருநகை காணிய சிறிதே". (குறுந்தொகை 111) பேய் பூதங்கள் பற்றிய பயமும் நம்பிக்கையும் கல் தோன்றி மண் தோன்றாக் காலந் தொட்டே வழங்கி வருவது போலும் ! சங்கப் புலவர்களில் பேயனார், பேய்மகள் இளவெயினி, பக்தி இலக்கியங்களில் பேயாழ்வார், பூதத்தாழ்வார் என்று சான்றோர் தம் பெயர்களே வழங்கி வந்தமை இதற்கான சான்று. "......................வானத்து வயங்குபன் மீனினும் வாழியர் பலஎன உருகெழு பேய்மகள்" (புறநானூறு 371) என்ற பாடலைப் பாடிய கல்லாடனார், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை வாழ்த்திப் பேய் மகளிர் குரவைக் கூத்தாடுவதாகப் பதிவு செய்கிறார். இத்தனை மூட நம்பிக்கைகள் நிலவிய போதும் நரபலி போன்ற கொடூரமான பதிவுகள் சங்க இலக்கியங்களில் அநேகமாகக் காணப்படவில்லை எனலாம். எனவே அவை அறிவார்ந்த மக்களால் தமிழ்ச் சமூகத்தில் அப்பொழுதும் ஏற்கப்படவில்லை என்றே கொள்ளலாம். பண்டைய கிரேக்க நாகரிகத்தின் வழக்கத்துடன் இது குறித்து நோக்கத்தக்கது. அங்கே அவர்களது கடவுள்களை அமைதிப்படுத்த கொடூரக் கொலைகள் நிகழ்த்துவது அவர்களது இலக்கியங்களில் காணக் கிடைப்பது. எடுத்துக்காட்டாக, கி.மு. 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கணிக்கப்படும் ஹோமரின் 'தி இலியட்' எனும் கிரேக்கக் காவியம் கி.மு. 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ட்ரோஜான் போர் பற்றியது; அதில் வரும் அகமேம்னன் (Agamemnon) எனும் மைசீனிய (Mycenae) நாட்டு அரசன் ஆர்டிமிசு (Artemis) எனும் தேவதையை அமைதிப்படுத்தத் தன் மகள் இஃபிஜீனியாவைத் (Iphigeneia) தன் கையாலையே பலி கொடுக்கும் கொடுமை அரங்கேறுகிறது. ட்ரோஜான் போருக்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைப்பதால், அப்போரினை அடிப்படையாய்க் கொண்ட கதையாகவே இருப்பினும் அத்தகைய வழக்கங்கள் அச்சமூகத்தில் நிலவியது சுட்டப் பெறுகிறது எனலாம். அதுபோலவே இப்ராஹீம் நபிகள் தமது மைந்தரான இஸ்மாயிலை இறைவனுக்குப் பலியிடத் துணிந்தபோது இறைவனால் தடுத்து ஆட்கொள்ளப்பட்டு, "ஆட்டினைப் பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றுக" எனப் பணிக்கப்பட்டார்; இந்நிகழ்வே பக்ரீத் விழாவாகக் கொண்டாடப்படுகிறது என்பதை அறிவோம். இந்நிகழ்வு விவிலியத்திலும் (பழைய ஏற்பாடு) பேசப்படுகிறது - சிறிய மாற்றத்துடன்; ஆபிரகாம் ஆகிய இப்ராஹிம் பலியிடத் துணிந்தது தமது மற்றொரு மகனாகிய ஈசாக்கை எனும் மாற்றத்துடன். அவலம் என்னவோ மாறவில்லை. இத்தகைய கொடிய கூத்துகளில் தமிழ்ச் சமூகம் தாமதமான போதிலும் சோடை போகவில்லை என்பதை ஏறக்குறைய கிபி 12ம் நூற்றாண்டைச் சார்ந்த பெரியபுராணம் பெருமிதத்துடன் (!!!) பதிவிடுகிறது. இதனைச் சற்று விரிவாகச் சொல்லுவதில் இக்கட்டுரை (வெட்கமின்றி) முழுமை பெறும் என்று நம்புகிறேன். நாம் பெரிய புராணத்தில் முதலில் கையிலெடுப்பது சிவனடியார் பரஞ்சோதியார் எனும் சிறுத்தொண்டர் நாயனார் புராணம். சிவனடியார் தொண்டே சிவத்தொண்டு என வாழும் சிறுத்தொண்டரின் பக்தித்திறம் சோதித்திட இறைவனே கயிலாயத்தினின்றும் இறங்கி சிவனடியார் வேடத்தில் 'வைரவர்' எனும் பெயருடன் சிறுத்தொண்டரின் ஊரான திருச்செங்காட்டங்குடியில் எழுந்தருளுகின்றார். அன்று அமுது செய்விக்க (விருந்தளிக்க) சிவனடியார் எவரையும் காணாமல் வாடி நின்ற சிறுத்தொண்டர், சிவனடியாரான வைரவர் வரவறிந்து இறும்பூதெய்து கணபதீச்சரத்தில் திருவத்தியின் (அத்தி மரத்தின்) கீழ் அமர்ந்திருந்த வைரவரை அமுது செய்யத் தம் இல்லத்திற்கு அழைக்கின்றார். அப்போது தமது நிபந்தனைகளுக்கு உட்பட்டு சிறுத்தொண்டரால் தமக்கு அமுது படைக்க முடியுமா எனும் ஐயப்பாட்டை வெளிப்படுத்துகிறார் வைரவர். எந்த நிபந்தனையையும் தம்மால் நிறைவேற்ற முடியும் என்று உறுதியளித்துக் கேட்கிறார் சிறுத்தொண்டர். அந்த நிபந்தனைகளை எண்ணிப் பார்க்கவே நமது உடலும் உள்ளமும் பதறும்போது, அவற்றை மொழிவது மட்டுமின்றி அது நிறைவேற்றப்படும் காட்சியை வெகு சாதாரணமாக ரசனையுடன் சேக்கிழார் பாடிச் செல்வது பேரதிர்ச்சி, பேரவலம் ! அதனைக் கேட்டுச் சிறிதும் மனச்சலனமின்றி மகிழ்வோடு ஏற்று, தம் மனைவியிடம் பகிர்கின்றார் சிறுத்தொண்டர் : "வள்ளலாரும் மனையாரை நோக்கி வந்த மாதவர்தாம் உள்ளம் மகிழ அமுதுசெய இசைத்தார் குடிக்கு ஓர்சிறுவனும்ஆய்க் கொள்ளும் பிராயம் ஐந்து உள்ளால் உறுப்பில் குறைபாடு இன்றித்தாய் பிள்ளைபிடிக்க உவந்து பிதா அரிந்து சமைக்கப்பெறின் என்றார்" (சிறுத்தொண்டர் நாயனார் புராணம்; பாடல் 54) பொருள் : வள்ளலார் ஆகிய சிறுத்தொண்டர் தம் மனையாளாகிய திருவெண்காட்டு நங்கையை நோக்கி, "(தாய் தந்தைக்கு) ஒரே மகனாய்ப் பிறந்து எவ்வித உறுப்புக் குறைபாடுமின்றி உள்ள ஐந்து வயது சிறுவனைத் தாய் பிடித்துக் கொள்ள மகிழ்வோடு தந்தை அரிந்து (வெட்டி) சமைக்கப் பெற்றால் உள்ளம் மகிழ்ந்து திருவமுது செய்ய மாதவராகிய வைரவர் இசைந்தார்" என்றார். அடுத்து அக்கொடுமை அரங்கேறுகிறது. எந்த ஒரு உணர்ச்சியும் மிதமிஞ்சிப் போகும்போது மூளைச்சலவை முழுமை பெற்றது என்றே பொருள். கம்பனுக்கு நிகரான கவித்துவம் பெற்ற சேக்கிழார் முதல் சாமானிய இறைப்பற்றாளன் வரை யாரும் இதற்கு விதிவிலக்கில்லை : "இனிய மழலைக் கிண்கிண்கால் இரண்டும் மடியின் புடைஇடுக்கிக் கனிவாய் மைந்தன் கையிரண்டும் கையால் பிடிக்கக் காதலனும் நனிநீடு உவகை உறுகின்றார் என்று மகிழ்ந்து நகைசெய்யத் தனி மாமகனைத் தாதையார் கருவி கொடுதலை அரிவார்" (சிறுத்தொண்டர் நாயனார் புராணம்; பாடல் 63) பொருள் : இனிய மழலையை இசைக்கும் கிண்கிணியை அணிந்த கால்கள் இரண்டினையும் தாயானவள் (!) தன் மடியின் இடையே இடுக்கி, இனிமையான கனி போன்ற வாயுடைய மைந்தனின் கைகள் இரண்டையும் தன் கையால் பிடித்துக் கொள்ள காதற் கணவனும் (சிறுவனின் தந்தை) பெரிதும் உவகை கொண்டார் என ஒப்பற்ற அந்த மகனும் மகிழ்ந்து சிரிக்க, தந்தையானவர் கருவி கொண்டு மகனின் தலையை அரிகின்றார். அக்குரூரத்தை மேலும் வருணிக்கும் அளவு பக்தி முத்திப்போயிற்று : "அறுத்த தலையின் இறைச்சி திரு அமுதுக்கு ஆகாது எனக்கழித்து மன்றத்து நீக்கச் சந்தனத்தார் கையில் கொடுத்து மற்றை உறுப்பு இறைச்சி எல்லாம் கொத்தி அறுத்து எலும்பு முளை திறத்திட்டுக் கறிக்கு வேண்டும் பலகாயம் அரைத்துக் கூட்டிக்கடிது அமைப்பார்" (சிறுத்தொண்டர் நாயனார் புராணம்; பாடல் 65) பொருள் : அறுத்த தலையின் இறைச்சி சிவனடியார்க்குப் படைக்கும் திரு அமுதுக்கு ஆகாது எனக் கழித்து அதனை ஒதுக்கும் பொருட்டு சந்தனத்தாரது (சிறுத்தொண்டரது) கையில் கொடுத்து மற்ற உடல் உறுப்புகளின் இறைச்சியைக் கொத்தி அறுத்து எலும்பினைச் சுற்றியுள்ள தசையினைத் திறந்து கறிக்காக இட்டு அக்கறிக்கு வேண்டிய பொருட்களை அரைத்துக் கூட்டி (அத்தாயானவள் !!!) விரைவாக உணவைத் தயாரிக்கிறாள். இறுதியில் இறைவன் சிறுத்தொண்டரையும் அவரது இல்லாள் திருவெண்காட்டு நங்கையையும் ஆட்கொண்டு அவர்களது மகவான சீராளனை மீண்டும் அருளினார் என்ற கதையெல்லாம் ஒரு புறம். சிவனடியார்களிடம், அதன் மூலமாக சிவபெருமானிடம், சிறுத்தொண்டர் கொண்ட நேயம் மற்றும் அர்ப்பணிப்புக்கான சோதனையில் அவர் வென்றிருக்கலாம். ஆனால் இத்தகைய எல்லை தாண்டிய உணர்வு கொண்டாடப்படும்போது, சமூகம் எல்லை தாண்டுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகும். மூடநம்பிக்கையினால் நரபலிகள் நியாயப்படுத்தப்படும். சங்க இலக்கியங்களில் இவை குறிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் நமக்குத் தெரிந்த அல்லது கேள்விப்பட்ட பழங்காலத்தில் போருக்குச் செல்லும் முன் போர்த் தெய்வங்களுக்கு (War Deities) நரபலி தரும் வழக்கம், பலியாகும் வீரன் அதனை வீரத்தின் அடையாளமாக மனமுவந்து ஏற்றுக் கொண்ட கொடூரம் பற்றிய நாட்டுப்புறக் கதைகள் நம் காதுகளில் ஈயமாகக் காய்ச்சி விடப்பட்டிருக்கின்றனவே ! இவை கல்லாத சாமானியரின் வழக்கங்கள் என்று ஒதுக்குவதற்கு இல்லை. பெரிய புராணத்தில் சுட்டப்பெறும் அடியார்களும், அவர்களைக் கொண்டாடும் சேக்கிழார் பெருமானாரும், இப்ராஹிம் அல்லது ஆபிரகாம் வரலாறு சொன்னவர்களும் அந்தந்தக் காலத்தின் சான்றோர் பெருமக்கள்தாமே ! இவர்களால் வழிநடத்தப்படும் சாமானியர் எப்படி சான்றோராய் வளர முடியும் ? மதம் எப்படியெல்லாம் மதி மயங்கச் செய்யும் என்பதற்கு மேலும் ஒரு சான்று பெரிய புராணத்தின் இயற்பகை நாயனார் புராணத்தில் காணக் கிடைக்கிறது. மீண்டும் பெரிய புராணந்தானா ? கம்பனில் சம்பூக வதம் போன்ற பிற்போக்குத்தனங்கள் உண்டே ! அது வடக்கில் இருந்து வந்த கதை என்று புறந்தள்ளப் படலாம். பெரிய புராணத்தைப் புறந் தள்ளுவதற்கில்லையே ! உலகின் இயற்கையைப் (நடைமுறையை) பகையாக்கிக் கொண்டமையால் இயற்பகை நாயனார் என்று வழங்கப்படுகிறார். பூம்புகார் நகரத்தின் வணிகர் குலத்தில் பெருஞ்செல்வந்தராய் வாழ்ந்தவர். தம்மை நாடி வந்த சிவனடியார் வேண்டியவை எவையாயினும் இல்லையெனக் கூறா இயல்புடையார். அவரது பக்தியின் திறன் உலகிற்குக் காட்டும் பொருட்டு திருச்சிற்றம்பலத்தில் ஆடும் சிவனார், அடியார் வேடம் பூண்டு நாயனார்தம் இல்லத்திற்கு வருகிறார். "முந்தை எம்பெருந் தவத்தினால் முனிவர் இங்கு எழுந்தருளியது" (இயற்கை நாயனார் புராணம்; பாடல் 5) "என்று கூறிய இயற்பகையார் முன் எய்தி நின்றஅக் கைதவ மறையோர் கொன்றைவார் சடையர் அடியார்கள் குறித்து வேண்டிய குணம் எனக்கொண்ட ஒன்றும்நீர் எதிர்மாறாது உவந்து அளிக்கும் உண்மை கேட்டுநும்பால் ஒன்று வேண்டி இன்றுநான் இங்கு வந்தனன் அதனுக்கு இசையல் ஆம்எனில் இயம்பல் ஆம்என்றான்" (இயற்பகை நாயனார் புராணம்; பாடல் 6) பொருள் : முற்பிறவியில் யான் செய்த பெருந்தவத்தினால் முனிவர் தாம் இங்கு எழுந்தருளினீர்கள் என்று கூறிய இயற்பகையார் முன் கீழ்மைத்தன்மை உடைய மறையோராய் வேடமேற்று வந்த கொன்றை மலர் சூடிய சடையரான சிவபெருமான், "அடியார்கள் தாங்கள் உம்மிடம் வேண்டியவற்றை நீவிர் நற்குணம் பொருந்தியவை என ஏற்று (அவை நற்குணம் பொருந்தாமல் இருப்பினும்), மறுக்காமல் மகிழ்ந்து அளிக்கும் உண்மையினைக் கேட்டு உம்மிடம் ஒன்று வேண்டி இங்கு யான் வந்தேன். அதற்கு நீவிர் இசைவீர் எனில் யான் இயம்புவேன்" என்று கூறுகிறார். இங்கு முனிவர் பாதகம் ஏதோ இயற்ற வந்தார் என்பதைத் தற்குறிப்பாகச் சொல்ல நினைத்த சேக்கிழார் அவரைக் 'கைதவ மறையோர்' (கீழ்மைத் தன்மை கொண்ட மறையோர்) எனக் குறித்தமை தெளிவு. நடைபெறப் போகும் குற்றத்தைக் கொண்டாடுவதில் சேக்கிழார்க்குப் பங்கில்லை என்பது நமக்கான ஆறுதல். "என்ன அவ்வுரைகேட்டு இயற்பகையார் யாதும் ஒன்றும்என் பக்கல் உண்டாகில் அன்னது எம்பிரான் அடியவர் உடைமை ஐயமில்லை நீர்அருள் செயும் என்ன மன்னு காதல்உன் மனைவியை வேண்டி வந்தது இங்குஎன அந்தணர் எதிரே சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து தூய தொண்டனார் தொழுது உரைசெய்வார்" (இயற்பகை நாயனார் புராணம்; பாடல் 7) பொருள் : முனிவர்தம் உரையைக் கேட்டு இயற்பகையார், "அஃது என்னிடத்தில் இருக்குமானால், அது எம்பிரான் (சிவனார்) அடியவர்க்கு உரிமையானது. எவ்வித ஐயமுமின்றி தயங்காது கேட்டு அருள் செய்க" என்கிறார். அதற்கு அம்மறையோர், "நின்பால் நிலை பெற்ற காதல் கொண்ட நும் மனைவியை எனக்கு வேண்டிப் பெற வந்தேன்" என்று சொல்ல, அதைக் கேட்டு முன்னைவிட மகிழ்ந்து இயற்பகை நாயனார் சொல்ல ஆரம்பித்தார். "இது எனக்குமுன்பு உள்ளதே வேண்டி எம்பிரான் செய்த பேறுஎனக்கு" (இயற்பகை நாயனார் புராணம்; பாடல் எட்டு) பொருள் : "என்னிடம் முன்பே உள்ள பொருளைத் தாங்கள் கேட்டது எனக்கான பேறு" என்கிறார் நாயனார். இந்தக் கருமத்தை எங்கே போய்ச் சொல்ல ? அது மகாபாரத யுகம் போல பெண் பலதார மணமுறை (polyandry) நிலவும் சமூகமல்ல. கற்பின் திறம் பேசும் சமூகத்தில் இத்தகைய வெட்கக்கேடு நிகழ்வது பக்தி முற்றி மனம் பேதலித்தமை அன்றி வேறென்ன ? மேலும் அவர்தம் இல்லாளும் கணவனின் இறைப்பணியில் தன் பங்கு ஈதென்று மாறுபாடின்றி ஏற்றுக் கொள்கிறாள். இக்கேவலம் இத்தோடு நிற்கவில்லை. இருவழி சுற்றத்தாரும் (கணவன், மனைவி தரப்பினர்) இந்த மதியீனத்திற்கு எதிராகக் கிளர்ந்து எழுகின்றனர். இயற்பகை நாயனார் அவர்களுடன் போரிட்டு அவர்களை வெட்டிச் சாய்ப்பதாய்க் கதை தொடர்கிறது. "சென்று அவர் தடுத்தபோதில் இயற்பகையார் முன் சீறி வன்துணை வாளே ஆகச் சாரிகை மாறி வந்து துன்றினர் தோளும் தாளும் தலைகளும் துணித்து வீழ்த்து வென்றுஅடு புலிஏறு என்ன அமர் விளையாட்டில் மிக்கார்" (இயற்பகை நாயனார் புராணம்; பாடல் 21) பொருள் : சுற்றத்தார் வந்து தடுக்கையில் இயற்பகையார் சினமுற்று முன்வந்து வாளையே பெருந்துணையாகக் கொண்டு சுற்றத்தினரை மாறி மாறிச் சுற்றி வந்து அவர்களது தோள்களையும் கால்களையும் தலைகளையும் வெட்டிச்சாய்த்து, எதனையும் கொல்லும் திறன் கொண்ட ஆண் புலியைப் போல் அப்போர் ஆட்டத்தில் ஈடுபட்டார். இறுதியில் இறையனார் இயற்பகையாருக்குக் காட்சி தந்து அவர்தம் துணையொடு வாழ்வாங்கு வாழவைத்து, அவர்தம் சுற்றத்தாரையும் உய்வித்த கதையெல்லாம் 'சுபம்' எனும் நிறைவுத் திரைக்கானது. நமது கட்டுரைக்கான நிறைவுத் திரையை இப்படி அமைப்போமா ? - எந்த மதமானாலும் நிறைவான வாழ்க்கைக்கு வழிகோலுவதாகத்தானே அமைய முடியும் ! குறைபட்ட இறையமைப்பு வாழ்வில் நிறை தருமா ?1 point- ஒரு முட்டை ஆயிரம் டாலர்
1 pointஒரு முட்டை ஆயிரம் டாலர் ------------------------------------------ இப்ப இங்கே பல கடைகளில் முட்டை இல்லை சில கடைகளில் இருக்கின்றது ஆனால் எண்ணி எண்ணித்தான் வாங்கலாம் பலத்த கட்டுப்பாடு தட்டுப்பாட்டால் விலையும் பல மடங்காகிவிட்டது கோழிகளுக்கு காய்ச்சல் வந்தது என்று சும்மா சுகமாக நின்றவைகளையும் அழித்துப் போட்டார்கள் இப்ப புதுதாகக் குஞ்சுகளும் வேண்டாம் என்று அங்கே குடும்பக் கட்டுப்பாடு திட்டமும் வந்துள்ளது இது என்ன கலிகாலம் அமெரிக்காவில் முட்டைப் பொரியல் கூடக் கிடையாதா...... ஊரில் வீட்டில் கோழிகள் இருந்தன அப்பா முதன் முதல் ஒரு கோழி வாங்கித் தந்தார் ஒரு விதமான மஞ்சள் கலரில் வெள்ளைப் புள்ளிகள் போட்ட கோழி அது அது வீட்டுக்கு வரும் போது அதன் வயது நாலு மாதங்கள் இருக்கும் ஒரு நாள் முழுக்க கிளிசரியா மரத்தடியில் கட்டி வைத்து விட்டு அடுத்த நாள் அவிழ்த்துவிட்டேன் அப்படியே வீட்டை சுற்றிச் சுற்றியே நின்றது அடுத்த அடுத்த மாதம் முட்டை போட ஆரம்பித்தது முதல் முட்டை போடு முன் பெரிய எடுப்புகள் எல்லாம் எடுத்தது ஒரு அதிகாலையிலேயே தலைமாட்டில் வந்து பதுங்கியது அது கேரிக்கொண்டு திரியும் போதே முட்டை போடப் போகின்றது என்று ஆச்சி சொன்னார் அதைப் பிடித்து கடகத்தால் கவிழ்த்து வைக்க முட்டை போட்டது சுற்றி இருந்த மூன்று வீட்டுக்கும் அது முட்டை போட்ட விசயம் தெரிந்தது அப்படி ஒரு விடாத கொக்கரிப்பு பன்னிரண்டு முட்டை போட்டு விட்டு அது அடை என்று ஒரு மூலையில் குணுகிக்கொண்டு படுத்துவிட்டது பின்னர் அயலூரில் முட்டை வாங்கி அடை வைத்து குஞ்சுகள் வந்து வந்து அதன் குடும்பம் பெருகியது பின்னர் முட்டை நாங்கள் கடையில் வாங்கவே இல்லை சரி இங்கும் கோழி வளர்ப்போம் என்று விசாரித்தேன் அக்கம்பக்கத்தவர்கள் சம்மதம் சொல்லவேண்டும் முதலில் பின்னர் ஒரு பெரிய கூடு வேண்டும் கோழிகளுக்கு தீனி வாங்க வேண்டும் கடையில் மருத்துவரும் வந்து போவார் அப்பப்ப அந்த செலவும் இருக்கின்றது கோழிக் குஞ்சுகளும் வாங்க வேண்டும் அதை மறந்துவிட்டேன் எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால் முதல் முட்டை கிடைக்கும் போது செலவு ஆயிரம் டாலர்கள் ஆகி விடும் என்று கணக்கு காட்டுகின்றது கலிகாலம் தான்!1 point- நியாயத்தின் சாம்பல்
1 pointபோந்தைக் கண்ணிப் பொறைய! கேட்டருள் கொற்கையி லிருந்த வெற்றிவேற் செழியன் பொற்றொழிற் கொல்லர் ஈரைஞ் ஞாற்றுவர் ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு ஒருபக லெல்லை யுயிர்ப்பலி யூட்டி - நீர்ப்படைக் காதை 130 ஞாயிற்றுக்கிழமை. நெருப்பு எரிந்து முடிந்தாலும் பூமியும் பாதாளமும் கனன்று கொண்டிருந்த மதுரையில், சுருங்கியிருந்த வைகையின் சலசலப்பு, முணுமுணுப்பாக மாறிப் புகையில் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது. கண்ணகியின் கோபம், புயல் போல், பாண்டிய அரசுகட்டிலைக் கரியாக மாற்றியது. ஆனால் நெருப்பாறு கூடப் பாண்டிய மன்னர்களின் பாவங்களைக் கழுவ முடியவில்லை. திரும்பும் இடமெங்கும் வறட்சியும் ஏக்கமும். பஞ்சம் நகருக்குள் எட்டிப்பார்க்கத் துவங்கி, இப்போது குசலம் விசாரிக்கும் அளவுக்கு வந்து விட்டது . வான் பொய்த்து, வைகை ஆற்றின் நீரும் பொய்த்தது. நெடுஞ்செழியன் செத்துப்போன போது அவன் குற்ற உணர்வுடன் இறந்தான் என்று சொன்னார்கள். அவன் இதயம் அழுகிய பழம் போல் வெடித்தது. கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் அடுத்த அரசனானான். ஆனால் மக்கள் அவனைப் பொம்மை அரசன் என அழைத்தார்கள். பழைய பயங்களால் பீடிக்கப்பட்ட வெற்று மனிதன். பாண்டிய சிம்மாசனத்தின் வெம்மை அவனைத் தகித்தது, அல்லும் பகலும் ஊணுறக்கமின்றித் தவித்தான். பூசாரிகள் குறி சொல்லினர். தெய்வங்கள் இன்னும் கேட்கின்றன, "மதுரையின் அவமானத்தைக் கழுவ ஆயிரம் பொற்கொல்லர்களின் இரத்தம் தேவை". "மதுரையில் ஏது ஆயிரம் பொற்கொல்லர்?" கேட்டான் அரசன் "சில நூறு குடும்பங்கள் தானே உள்ளன?" "ஆயிரவர் கணக்கை நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம் அரசே" கூறினர் அணுக்கர். இரவோடிரவாக இரகசியம் யாருக்கும் தெரியாமல் நீருக்குள் பரவும் வேர்கள் போல் ஊருக்குள் பரவியது. பொற்கொல்லர் தெருவுக்கு அச்சங்கதி வர அதை எவராலும் நம்ப முடியவில்லை. வீட்டுக்குள் புகுந்து விட்ட விஷப் பாம்பு போல அச்செய்தி எல்லோரையும் வெடவெடக்கச் செய்தது. தெருவிலிருந்து யாரும் வெளியேற முடியாதபடி சிப்பாய்கள் சுற்றி வளைத்து விட்டதாகத் தெரிய வந்த போது எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது. பக்கத்திலிருக்கும் சங்கு வினைஞர்களின் தெருவும் வெண்கல வினைஞர்களின் தெருவும் கூட முற்றுகையிடப்பட்டுள்ளதாம். நாங்கள் ஏற்கனவே ஒரு செத்த நகரத்தில் பேய்களாக இருந்தோம். இப்போது, பலியாகப் போகிறோம். அம்மா தன் வெண்கல விளக்கின் கீழ் தூணைக் கெட்டியாக பிடித்தபடி உட்கார்ந்திருந்தாள், அதன் சன்னமான ஒளி அவள் ஒடுங்கிய கன்னங்களில் நிழல்களைச் செதுக்கியது. அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர்த்துளிகள் வைரங்களாக மாறி என் நெஞ்சைக் கிழித்தன. "ஒரு பொற்கொல்லனின் கூற்றால் நெடுஞ்செழியன் கண்ணகிக்கு தவறு செய்தான்," அவள் கூறினாள், "ஆனால் நாம் அவன் குற்றத்திற்கு பிராயச்சித்தம் செய்யவேண்டுமா? தெய்வத்தின் நியாயம் எங்கே?" நியாயம் நிரபராதிகளுக்கு முன்னமே செத்துவிடுகிறது. திங்கட்கிழமை விடியல் வந்ததும் வெற்றிவேற் செழியனின் சிப்பாய்கள் வெறிகொண்டு வந்தனர். துணியால் முகங்களை மூடியவர்கள். முகங்களின் சுயத்தை மறைப்பதற்கோ இல்லை புகையைத் தடுப்பதற்கோ தெரியவில்லை. எங்கள் வீதி, ஒரு காலத்தில் உருக்கிய தங்கத்தின் நறுமணம், இப்போது விரக்தியின் துர்நாற்றம். அவர்கள் பாதி எரிந்த வீடுகளில் இருந்து குடும்பங்களை வெளியே இழுத்தனர். வளையல்கள் விற்ற விதவை, பத்தினிக்குப் பாடல் பாடிய குருட்டுக் கிழவன், பால் மணம் மாறாத பிஞ்சுகளைக் கூட விட்டு வைக்கவில்லை.... வீதியெங்கும் அழுகுரல் உயிருக்குத் தத்தளிக்கும் விலங்குகளின் ஓலமாக ஈரற்குலையை அந்தரிக்க வைத்தது. எம் வாசலில் சிப்பாய்களின் அரவம் கேட்டது. படலையை உதைத்து உடைத்து விழுத்தினர். அப்பா கைகள் நடுங்க, என்னை நிலவறைக்குள் மறைத்தார். "மௌனமாய் இரு, மகனே," அவர் கிசுகிசுத்தார். "புதிய அரசன் தனக்கு கட்டுப்படாதவற்றைப் பயப்படுகிறான்." அப்பா போராடவில்லை. அம்மாவின் நெற்றியில் முத்தமிட்டு, என்னை நோக்கி கரகரத்த குரலில். "நீ என் மகன். எமது வம்சத்தின் நெருப்பாக நீ இருக்க வேண்டும்" என்று கூறிவிட்டு வெளிநடந்தார். அவருடனேயே அம்மாவும் நடந்தாள். அவள் கூறுவதற்கு எதுவும் இருக்கவில்லை. அவர்கள் சென்ற பிறகு சிப்பாய்கள் தடதடவென உட்புகுந்து வேறு யாரும் இருக்கிறார்களா என்று தேடும் சத்தம் கேட்ட போது நான் இரகசியமாக ஊர்ந்து வெளியேறினேன். உறுதி செய்வதற்காக சிப்பாய்கள் அனைத்து வீடுகளுக்கும் தீ மூட்டினர். வேறு யாரும் ஒளித்திருந்தாலும் தப்பியிருக்க முடியாது என்று தெரிந்தது. கோவில் முன்றில் கருகிய தூண்களின் சுடுகாடு. பூசாரிகள் பத்தினியின் உருவச்சிலைக்கு கடும் சிவப்பு வண்ண மலர்களால் அலங்கரித்து, மன்னனுக்கு சைகை காட்டினர். நான் ஒருவாறாக ஒளித்திருந்து அனைத்தையும் பார்த்தேன். வெற்றிவேற் செழியன் தன் உயிரற்ற குரல் நடுங்க, உத்தரவை வாசித்தான். "குற்றவாளிகளின் இரத்தத்தால், மதுரை மீண்டும் எழும்!" ஆனால் நாங்கள் குற்றவாளிகள் அல்ல. அம்மா பேய் பிடித்தவள் போல் சிரித்தாள். செழியன் தன் தலையை நிமிர்த்தி அவளைக் கோபத்துடன் பார்த்தான். அவள் குரலை உயர்த்தி "ஒரு பெண்ணின் கோபத்தைப் பார்த்துப் பயப்படுகிறாய், அதனால் எங்களைப் பலியிடுகிறாயா? கண்ணகியின் தீ நியாயம்! இது… இது கோழைத்தனம்!" என்று கூவினாள். "ஒரு பத்தினியின் சாபம் மதுரையை எரித்தது, இங்கிருக்கும் பத்தினிகள் சாபம் யாரை எரிக்கும் என்று யோசித்தாயா?" சிப்பாய்கள் முதலில் அவள் மீது பாய்ந்தனர். அம்மாவின் குங்குமத்தைக் கரைத்துக் கொண்டு இரத்தம் அலை அலையாய் வழிந்தது, அப்பா அவளைக் காக்கப் பாய்ந்தார். எல்லாமே நேரம் கடந்து போனது போல் உலகமே விக்கித்து நின்றது. பல நூறு வாட்கள் கொலை வெறி கொண்ட மிருகத்தின் பற்கள் போல மேலும் கீழும் பாய்ந்தன. கருஞ்சிவப்பு இரத்தம் குளமாகி கற்களின் வெடிப்புகளில் வடிந்து தேங்கியது. சிறு பெண்டிரின் கூச்சல் காற்றைக் கிழித்தது. பின்னர் மரண அமைதி. காகங்கள் வந்தபோது, நான் பிணங்களுக்கூடாக ஊர்ந்தேன், என் கைகள் பிணங்களின் உள்ளுறுப்புகளில் வழுக்கின. அப்பாவின் உடலின் கீழ், அவரது சுத்தியல் கிடைத்தது, கைப்பிடி இரத்தக் கறைபடிந்து கிடந்தது. அதைக் கெட்டியாகப் பிடித்தபடி, எரிந்த நகரத்திலிருந்து தப்பினேன். கொலை சாதனை செய்த பாண்டியனும் புலவர் பலர் புகழ் பாட அரியணை ஏறினான். பலி நாளன்று அவன் கண்களில் ஏறிய இருளை அவனால் அகற்ற முடியவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு, மதுரைக்கு இரகசியங்கள் நிறைந்த கொல்லனாகத் திரும்பினேன். நான் பணக்காரருக்கு நகைகள் செய்வதில்லை, அரச குடும்பங்களுக்குப் பதக்கங்கள் செய்வதில்லை. மாறாக, சிறு குழந்தைகளின் காவல் நகைகளை, ஏழைகளின் தாலிகளை, மறக்கப்பட்டவர்களுக்கான தாயத்துகளை. ஒவ்வொரு வேலையிலும் இறந்த காலத்தின் ஒரு துணுக்கை மறைக்கிறேன். ஒரு எரிந்த ஓலை, ஒரு எலும்புத் துண்டு, அம்மாவின் பாடலின் ஒரு சத்தம். கிராமத்தாருக்கு என் பெயர் தெரியாது. ஆனால் தாய்மார்கள் இரவில் குழந்தைகளைத் தூங்க வைக்கும் போது, வெற்றிவேற் செழியனின் கொலைத்தாண்டவத்திலிருந்து தப்பிய ஒரு சிறுவனின் கதையைச் சொல்கிறார்கள். ஆயிரம் ஆன்மாக்களின் கடைசித் தீப்பொறியை தன் உலையில் வளர்க்கிறான் என்று.1 point- நியாயத்தின் சாம்பல்
1 pointஅருமை ! இவ்வாறான பல சம்பவங்கள் வரலாற்றில் புலவர்களின் பக்கச்சார்பான பாடல்களால் மறைக்கப்பட்டுள்ளது. புலவர் இலகுவாகக் கடந்து போன சம்பவத்தை ஆழமாகக் கற்பனை செய்து உணர்ச்சிபூர்வமாக எழுதியுள்ளீர்கள்.1 point- இன்றைய அதிசயம்
1 pointஉலகத்தில் இன்று நடப்பவைகள் எல்லாமே ஏற்கனவே நடந்த பழைய விடயங்களே என்று சொல்லப்படுவதும் உண்டு. இங்கு எதுவும் புதுமையில்லை, எதுவும் அதிசயமே இல்லை என்றும் அதற்கு ஒரு பொருள் வரும் போல....... இந்த வார விடுமுறையில் ஒரு நண்பர் வீட்டுக்கு போயிருந்தேன். அங்கிருந்து கிளம்பும் போது செக்கலாகிவிட்டது. இங்கு ஏற்கனவே கோடை காலம் வந்துவிட்டது. எங்கும் குருவிகளின் ஆட்சி தான். நண்பரின் வீட்டின் முன் ஒரு அடர்த்தியான, பெரிய மரம். அதன் உள்ளிருந்து கீச், கீச் என்று ஒரே அணுங்கல் சத்தங்கள். சிறு குருவிகள் நித்திரையாகும் முன் சில ஏற்பாடுகளை செய்துகொள்ளும். அப்போது இந்த அணுங்கல்கள் வரும். 'ஒரே குருவிகள் போல............' என்று நான் அண்ணாந்து பார்த்தபடியே நின்றேன். 'ம்............ இந்த மரத்தை வெட்டவேண்டும். இது பெரிசா வளர்ந்திட்டுது................' என்றார் நண்பர். அப்பொழுது தான் அந்த மரத்தை வடிவாகப் பார்த்தேன். குருவிகளின் அணுங்கல்கள் மட்டும் இல்லை, இருளும் வெளிச்சமும் கலந்த அந்தப் பொழுதில் அந்த மரமும் மிக அழகாக இருந்தது. அந்த மரத்தை ஏன் வெட்ட வேண்டும்................. அதிசயமாகவே இருந்தது. ஆனால் நான் ஏன் என்று கேட்கவில்லை....................🤣.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உண்மைதான். அவர் வந்து துரத்தலில் ஸ்திர நிலையைக் கொண்டு வந்துவிட்டார். அவர் ஆட்டமிழந்திருந்தால், எல்லாம் மாறியிருக்கும். லக்னோவும் ஒரு பிடிய விட்டினம் (பிடிச்சிருந்தாலும், பெரிய பாதிப்பு இருந்திருக்காது என்று நினைக்கிறன். அவர்கள் ஏலவே கிட்ட வந்திட்டினம்).1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஜடேயா மற்றும் ரகுல் திர்பதி இவர்கள் இந்த ஜபிஎல் தொடங்கினதில் இருந்து என்னத்த சாதிச்சவை என்று சத்தியமாய் தெரியாது....................... அஸ்வின் ஜடேயா எல்லாம் அனுபவ வீரர்கள் , இவர்களால் அணிக்கு பாதகம்.................. அப்கானிஸ்தான் சுழல் பந்து வீச்சாளர் தான் திறமைய வெளிக் காட்டினார் மற்ற 10 வீரர்களும் பெரிய அளவில் திறமைய வெளிக்காட்டல................இந்த மைச்சும் சென்னை தோத்தா சென்னை வெளிய..............................அறிமுக இளம் வீரர்அருமையா 27 ரன்ஸ் அடிச்சார்.................அந்த சின்னப் பெடியனுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..........................1 point- 10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
இவ்வளவு தரவுகளை ஒற்றைப் பதிவில் தந்திருக்கிறீர்களே? நீங்கள் "வேலை வெட்டி" இல்லாமல் இருக்கிறீர்களா? 😎1 point- கோல்ப் 2025 Masters ஒரு வீரனின் நீண்ட போராட்டம்
2025 Masters வெற்றியாளர் ரோரி மெக்கல்ரோய் Rory McIlroy இந்த வருட மாஸ்டேர்ஸ் சற்றுமுன் நடந்து முடிந்தது. இப்போட்டியில் ரோரி மெக்கல்ரொய் வெற்றியீட்டி பச்சை மேல்சட்டையைத், Green Jacket, தனதாக்கிக் கொண்டார். 35 வயதான ரோரி இதற்காக 14 வருடங்களாகப் போராடிக் கொண்டிருந்தார். 2011 ஆம் வருடப் போட்டி அவரின் வாழ்க்கையில் ஏறபடுத்திய வலியிலிருந்து அவரால் மீளவே முடியவில்லை. நான்கு புள்ளிகள் முன்னணியில் இருந்து. கடைசி நாளில் காலடி எடுத்து வைத்தவர், கடைசியில் மிக மோசமாகத் தோற்றார். Meltdown என்று சொல்வார்கள். அவனால் ஒரு பந்தையும் fairwayல் அடிக்கவே முடியவில்லை. திரும்பத் திரும்ப மரங்களுக்கும், வெளியாலும் அடித்து, 8 புள்ளிகளால் பின்தங்கினார். மூன்றாம் நாள் முடிவில் முதலாவதாக இருந்தவர் கடைசி நாளில 15வது ஆளாக வந்தார். அன்றிலிருந்து, ஒவ்வொரு வருடமும் அவரின் முயற்சிகள் கைகூடவேயில்லை. கோல்பில் நான்கு முக்கிய போட்டிகள் உள்ளன. எல்லாவற்றையும் வென்றவர்கள் வெகு சிலரே. கடைசியாக வென்றவர் டைகர் வூட்ஸ், Tiger Woods. ரோரி 2014ஆம் ஆண்டு மூன்றாவது போட்டியை வென்றார். மாஸ்டர் போட்டியை வென்றால் நான்கு பெரும் போட்டிகளையும் வென்றவர் என்று போற்றப்படுவார், Grandslam Champion. அந்த 2011 meltdown லிருந்து அவரால் வெளிவரவே முடியவில்லை. ஒவ்வொரு வருடப் போட்டிகளிலும் அவரின் மேலான எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே இருந்தது. இறுதியில் 2025 அவரின் ஆண்டாக அமைந்தது. அவர் இப்போ Grandslam Champion. நான்கு முக்கிய போட்டி வெற்றியாளர். அவரின் மேல் இருந்த அழுத்தம், மனச் சோர்வு, படபடப்பு எல்லாம் பறந்தன. ஒரு வீரனால் எவ்வளவுதான் தாங்க முடியும். எல்லாவற்றையும் தாங்கினார். இவ்வருடமும் அவ்வளவு இலகுவான வெற்றியாக அமையவில்லை. இன்றும் நான்கு புள்ளிகள் முன்னிலையில், போட்டியை ஆரம்பித்தவர், எல்லா விதமான தவறுகளையும் செய்தார். 2011 மீண்டுமா என்று படபடப்புடன் உலமே பார்த்துக் கொண்டிருந்தது. கடைசியில் இருவர் ஒரே புள்ளிகளைப் பெற, போட்டி playoff நோக்கிச் சென்றது. அவர் யோசித்திருப்பார், என்னடா நடக்குது. ஏன் இந்தப் போட்டி மட்டும் எனக்கு இந்த ஆட்டம் காட்டுது என்று. அப்படியான நாள் இன்று. இறுதியில், playoffல் ஒரு புள்ளியைப் பெற்று, போட்டியைத் தனதாக்கிக் கொண்டார். இப்படம் எல்லாக் கதையையும் சொல்லும்.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
CSK, அவரை 3 வருசமா அணியில வைத்திருக்கினம். போன ஏலத்திலே திரும்பவும் வாங்கி இருக்கினம். 2022ல் நடந்த U19 உலகக்கிண்ண வெற்றியாளர்.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சுவை அண்ண புள்ளி பட்டியலில் கீழ மேல போய் வருவது வழக்கம் தானே...............நான் 4புள்ளியோட கிட்ட தட்ட ஒரு கிழமை நின்று இருப்பேன் இதெல்லாம் மேட்டரே கிடையாது இன்னும் 44 போட்டி இருக்கு அதில் சிலது உங்களுக்கு யோகம் அடிக்கலாம்..........................1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை வெல்லுதோ இல்லையோ. விசில் போடும் கூட்டத்துக்கு இது காணும். தோனி எடுத்த review. பூரானை அனுப்பி வைத்தது. தோனி எறிந்த பந்து ஓட்டமிழப்பைச் செய்து சமத்தை அனுப்பி வைத்தது. தோனி பிடித்த பிடி, மிக மிக உயரே சென்ற பந்தை பிடித்த பிடி, பாந்தை அனுப்பி வைத்தது. இதுவே காணும் இன்றைக்கு. அதோட இப்போட்டியை வென்றுவிட்டால்.... ஜயகோ. இப்பவே கண்ணக் கட்டுதே.1 point- நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
🤣 அடிக்கடி கோசான் யாழில் எழுதும் போது ஆங்கில பழமொழியை, பெரியோர் மொழியை, சொலவாடையை எடுத்தாளவார். ஆகவே கோஷான் ஆங்கிலேயன் 🤣 ஆதாரம் இருக்கா?1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கடந்த 3-4 போட்டிகள் சென்னை வெல்லும் என்று பதிந்தேன் தோற்றது. இன்று தோற்கும் என்று பதிந்துள்ளேன். எனவே வெல்லும். இன்றும் சென்னை தோற்றால் எப்போதும் தமிழனுக்கு பைத்தியம் பிடித்துவிடும்.1 point- ஜெர்மனியில் தமிழர்களை பார்த்து நடுங்கும் சிங்கள மாணவர்கள்
இந்த அனுபவம் உண்மையாக இருக்கலாம், ஆனால் ஜேர்மனியுட்பட வெளிநாடுகளுக்கு வரும் பெரும்பாலான சிங்களவர்களின் அனுபவம்/பயம் இதுவாக இருக்காதெனக் கருதுகிறேன். என்னுடைய அனுபவத்தில், அமெரிக்காவில் இருக்கும் சிங்களவர்கள் பலர் தமிழர்களின் நண்பர்களாக இருக்கிறார்கள். ஒரு சிலர் யுத்தம் நடந்த காலத்தில், தமிழர்களின் ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் என்பவற்றை பொலிசிடம் போட்டுக் கொடுக்கும் வேலையைச் செய்திருக்கிறார்கள், அதுவும் இப்போது குறைந்து இல்லாமல் போய் விட்டது. மாவீரர் தினம் உட்பட்ட பல நிகழ்வுகளை வெளிப்படையாகவே அனுசரித்து விட்டுப் போகிறோம். இனி ஜேவிபி அரசு ஏதாவது இதை மாற்ற முயற்சிக்குமோ தெரியாது. இலங்கையில் கூட நிலைமை மாறியிருக்கிறது என அறிகிறேன். 90 களில் வடக்கு, கிழக்கில் இருந்து தெற்கிற்கு, கல்வி, வேலை என்பவற்றிற்காக சென்ற தமிழ் இளையோரை அவர்களது பெற்றோர் சிங்களவர்களைப் பற்றி எச்சரித்து அனுப்பிய நிலை இருந்தது - அதற்கு நியாயமான காரணங்களும் இருந்தன. இப்போது, வடக்கு கிழக்கு தமிழ் மாணவர்கள், சிங்கள இராணுவம் தியத்தலாவ வளாகத்தில் நடத்தும் தலைமைத்துவப் பயிற்சி முகாமுக்கு, தாமாக விரும்பிச் சென்று வருகிறார்கள். குழுவாக சிங்களப் பகுதிகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார்கள்.1 point- "கும்மிருட்டில் நடனம்"
1 point"கும்மிருட்டில் நடனம்" முள்ளிவாய்க்காலில் இரவு கனமாக இருந்தது, சொல்லொணாத் துயரம் கிசுகிசுக்கும் அமைதியற்ற அமைதியில் மறைந்திருந்தது. இந்த மண்ணில் நடந்த கொடுமைகளை வானமே புலம்பியது போல, மேலே உள்ள நட்சத்திரங்கள் மங்களாகி கும்மிருட்டாய் ஆகியது. இலங்கையின் நீண்ட மற்றும் கொடூரமான உள்நாட்டுப் போரின் இறுதிப் போர்க்களமான முள்ளிவாய்க்கால், கேட்கப்படாத ஒரு ஆயிரம் ஆயிரம் அழுகையின் கனத்தைத் தாங்கியது. இந்த மண்ணிலிருந்து திருடிய அல்லது அழித்த எல்லா உயிர்களும், அந்த மோதலின் நிழலில் சிக்கிக்கொண்டு, அதன் எரிந்த பூமிக்கு அடியில் இருந்து, அவர்களின் குரல்கள் இன்னும் நீடித்துக்கொண்டே இருந்தது. "உடைதலையும் மூளையும் ஊன்தடியும் என்பும் குடருங் கொழுங்குருதி யீர்ப்ப – மிடைபேய் பெருநடஞ்செய் பெற்றித்தே" "ஓகை உயர்மாடத் துள்ளிருந்து – கூகை படுபேய்க்குப் பாட்டயரும் பண்பிற்றே" இரத்த வெள்ளத்தில் நிணமும், தசையும் எலும்பும் மிதந்துவரும் போர்க்களத்தில் பேய்க் கூட்டங்கள் மகிழ்ச்சியினால் கூத்தாடும். போரில் அழிக்கப்பட்ட மாடத்தின் உச்சியிலிருந்து கூகை தாலாட்டு பாட அழிந்த நகரத்தில் பேய்கள் உறங்கும், இப்படி முத்தொள்ளாயிரம் கூறுகிறது. ஆனால் இங்கு முள்ளிவாய்க்காலில் வலுக்கட்டாயமாக, நீதிக்குப் புறம்பாக கொல்லப்பட்ட ஒவ்வொரு உயிரும் பேயாக மண்ணில் இருந்து எழுந்து நியாயம் கேட்கிறது! மே 18, 2009 அன்றுதான், பல தசாப்தங்களாக உரிமைக்காகப் ஆயுதம் ஏந்தி போராடிய தமிழ் இயக்கத்தை அழித்துவிட்டோம் என்று இலங்கை இராணுவம் வெற்றியை அறிவித்தது. ஆனால் அந்த வெற்றி ஒரு வேதனையான, நீதிக்கு அப்பாற்பட்ட இராணுவ தாக்கங்களில் இருந்து வந்தவை - இறுதி மாதங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தப்பிப்பிழைத்தவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர், முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் அல்லது "விசாரணைகளின்" பின் காணாமல் போனார்கள். அவர்களின் கனவுகள், அவர்களின் கதைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை இந்த மண்ணின் இருண்ட, இரத்தம் தோய்ந்த வரலாற்றின் ஒரு பகுதியாக மாறியது. அதை இன்னும், ஆண்டுகள் போனாலும், முள்ளிவாய்க்காலின் இரத்தம் தோய்ந்த மண்ணால் மறக்கமுடியவில்லை. கடிகாரம் நள்ளிரவைத் தாண்டியதும், அங்கு காற்று அமைதியாக, அமைதியாக்கப்பட்ட, மண்ணுக்குள் புதைக்கப்பட்ட, ஒவ்வொருவரின் ஆத்மாவினதும் புலம்பல்களை, சுமந்துக்கொண்டு காற்று வீசியது. அந்தக் காற்றின் துக்கம், தன் நினைவுக்கு வருவது போல், இருளும் அடர்ந்த கருமையாக மாறியது. இடிபாடுகள், சாம்பல் மற்றும் நிழல்களில் இருந்து ஒவ்வொரு உருவங்களும் வெளிவரத் தொடங்கின. அவை புலன்கடந்த, நுண்பொருளான, கட்புலனாகாத, காற்று போன்ற ஒன்றாக ஒளிஊடுருவக்கூடியதாக இருந்தது. ஆனால் அவைகள் ஒவ்வொன்றும் தங்கள் தங்கள் துன்பத்தின் அடையாளங்களைச் சுமந்தனர்: எறிகணை துண்டுகளால் ஏற்பட்ட தழும்புகள், உடைந்த கைகால்கள் மற்றும் ஒருமுறை பயத்தில் மூழ்கிய கண்கள். இவை வெறும் தோற்றங்கள் அல்ல; அவர்கள் அநீதியின் கொடூரங்ககளால் மண்ணில் மூழ்கிய ஆன்மாக்கள். "வாருங்கள், வந்து கை கொடுங்கள் இமைகள் மூடி பல நாளாச்சு ... சொல்லுங்கள், எங்கள் வேதனைகளை வட்டமாய் நின்று கும்மி அடித்தன -- தாருங்கள், நீதியை வஞ்சகம் இல்லாமல் கேள்விகள் கேட்டு துணங்கை ஆடின ..." "நாக்கை அறுத்தனன் நாதி யற்றவன் நங்கை நான் உண்மை உரைத்ததாள் ... முலையை சீவினான் கொடூர படையோன் பேதை நான் காமம் சுரக்காததாள் ... வரிசையில் நின்று கூத்து ஆடின இடையில் சின்னஞ் சிறுசு சிலஆயிரம் ... " "முழங்கினர், கதறினர் குரவை ஆடினர் விசாரணை எடு -உண்மையை நிறுத்து ... கூடுங்கள், ஒன்றாய் உண்மையை உரையுங்கள் கூடிநின்று 'கும்மிருட்டில் நடனம்' ஆடின ... " அங்கே பல பல மகாகாளியின் வேண்டுதல் மற்றும் முறையிடுதல் காற்றை நிரப்பியது, வலி மற்றும் துயரத்தில் பிறந்த பாடல் அது. இது அன்று நடந்த அட்டூழியங்களின் புலம்பலாக இருந்தது - பெண்கள் மீது மீறப்பட்ட கதைகள், குழந்தைகள் தங்கள் தாயிடமிருந்து பிரிந்த கதைகள் மற்றும் ஆண்கள் விசாரணையின்றி காணாமல் ஆக்கப்பட்ட கதைகள். ஒவ்வொரு ஆத்மாவும் பேய்களாக 'கும்மிருட்டில் நடனம்' ஆடின, அவற்றின் அசைவுகள் வேதனையையும் கண்ணீரையும் தந்தன, ஆனாலும் உறுதியானவை. அவர்கள் அசைந்து சுழன்று கூத்தாடினார், ஒவ்வொரு முத்திரையும் அடிகளும் தங்கள் தங்கள் கதைகளை, உண்மையாக நடந்தவற்றை விவரித்து கேள்விகேட்டன. ஒரு தாய் கண்ணுக்குத் தெரியாத குழந்தையைத் தொட்டிலிட்டு நடனமாடினாள், அவளுடைய பாடல் தனது குழந்தையின் திருடப்பட்ட எதிர்காலத்திற்கான வேண்டுகோள். ஒரு இளைஞன் தடுமாறி முன்னோக்கிச் சென்றான், அவனது உடல் தன்னைத் துளைத்த தோட்டாக்களை இன்னும் உணர்வது போல் நெளிந்தது நெளிந்து வேதனைப்பட்டது. இந்த பேய்களின் கூட்டத்தின் ஒரு மூலையில், ஒரு மூத்த ஆவி, தமிழ் மக்களின் பெருமையைக் கொண்டாடிய, சங்கப் புலவர்களில் ஒருவரான ஈழத்து புலவர், ஈழத்துப் பூதன்தேவனாரின் பாடல்களை பாடத் தொடங்கியது. "அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ் வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் திருந்திழை அல்குல், பெருந்தோள் குறுமகள் மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇக், கூதிர் முல்லைக் குறுங்கால் அலரி மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த" அவள் தன் அல்குல் பகுதியில் திருந்திய மணி கோத்த ஆடை அணிந்திருப்பாள். அது பாம்பு உரித்த தோல் போல் மென்மையான ஆடை. அதன் ஊடே அவள் அல்குல், கண் இமைப்பது போல் அவ்வப்போது தெரியும். அவள் அகன்ற மார்பகத் தோள் கொண்ட சின்னப் பெண் (குறுமகள்). தூசு இல்லாமல் நூய்மையாகக் கழுவி, கருநீல மணி போல் அழகொழுகத் தோன்றும் கூந்தலை உடையவள். குளிர் காலத்தில் பூக்கும் குறுகிய காம்பை உடைய முல்லை மலரை அந்தக் கூந்தலில் சூடிக்கொண்டிருப்பாள். அதில் வண்டுகள் மொய்க்கும். அப்படித்தான் நானும் இருந்தேன். ஆனால் இன்று, அது கண்ணீருடன் அந்தப்பாடலை திருப்ப திருப்ப பாடிக்கொண்டு இருந்துது. அதன் அருகில், மகாவம்சத்தைத்தில் கூறிய, நாட்டைவிட்டு துரத்திவிடப்பட்ட இளவரசர் விஜயனின் வருகையை, மற்றொரு ஆவி விவரித்தது. "அவர்கள் அதை வரலாறு என்று அழைக்கிறார்கள், ஆனால் இது மத குருவால், " பௌத்தர்களது [பௌத்த பக்தர்களது] மனக் கிளர்ச்சிக்கும் ஆனந்தத்திற்கும் ஆக தொகுக்கப்பட்டது" [“serene joy of the pious”], என்ற அறைகூவலை திருப்ப திருப்ப பதித்து எழுதப்பட்ட கதை," என்று அது கூறிக்கொண்டு இருந்தது. “ விஜயன் இந்த மண்ணில் காலடி வைப்பதற்கு முன்பே நம் முன்னோர்கள் இந்த மண்ணை உழுது அரசுகளை உருவாக்கினார்கள். நாங்கள் புதியவர்கள் அல்ல; நாங்கள் இலங்கையின் மூத்த குடிமக்களில் ஒருவன் . 2,500 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் திராவிடர்களின் இருப்புக்கு சாட்சியாக இருந்த தொல்பொருள் சான்றுகள் - பொம்பரிப்புவில் உள்ள பெருங்கற்கால புதைகுழிகள், தமிழ் பிராமி எழுத்துக்களில் உள்ள கல்வெட்டுகள் பற்றி இன்னும் ஒன்று பேசிக்கொண்டு இருந்தது. கும்மிருட்டு முடியும் மட்டும் நடனம் தொடர்ந்து, உரையாடலின் ஒவ்வொரு துணுக்குககளும் காற்றில் பறந்தன. மற்றொன்று யாழ்ப்பாணத்தில் உள்ள நூலகம் எரிக்கப்பட்டபோது தங்கள் புனித நூல்களை இழந்துவிட்டதாக புலம்பியது . "அவர்கள் எங்களை அழிக்க முற்பட்டனர்," இன்னும் ஒரு பெண் கிசுகிசுத்தது, அவள் குரல் எனோ நடுங்கியது. "ஆனால் வரலாறு என்பது எங்கள் இதயங்களிலும் கற்களிலும் எழுதப்பட்டுள்ளது." என்று பெரும் அறைகூவலுடன் நடனம் ஆடியது. அவர்கள் ஒன்றாக மரணம் வேதனையின் பயங்கரமான ஓலத்தை எழுப்பினர். “வாழ்க்கையில் நாங்கள் அமைதியாகிவிட்டோம்; மரணத்தில் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். எங்கள் கதைகள் எதிரொலிக்கும், எங்கள் வலி பேசும். முள்ளிவாய்க்காலின் சாம்பலில் இருந்து நீதி எழும்” என்று விடியும் வரை கூக்குரலிட்டனர். ஆவிகளின் புலம்பல் பயங்கரங்களை விவரிப்பதோடு நிற்கவில்லை. அவர்கள் தங்கள் கைகளை நீட்டி, உயிருள்ளவர்களை அழைத்தனர்: "எங்களை மறந்துவிடாதே, இருள் உண்மையை விழுங்க விடாதே. ஒன்றாக நில், ஒன்றாக எழு, நீதி எங்கள் ஒளியாக இருக்கட்டும்." பேய்களின் "கும்மிருட்டில் நடனம்" ஒரு சடங்காக மாறியது, இறந்தவர்களுக்கு நீதி கேட்டு அவர்களைக் கௌரவிக்கும் கூட்டுப் பொறுப்பை நினைவூட்டியது. ஒவ்வொரு ஆண்டும், போர் முடிவடைந்த ஆண்டு நிறைவில், ஆன்மாக்களின் இருப்பு வலுவடைந்தது. முள்ளிவாய்க்கால் புனித பூமியாக மாறியது, வென்றவர்களுக்காக அல்ல, ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, அழிந்தவர்களுக்காக, நினைவுகூரப்பட வேண்டும் என்று கோருபவர்களுக்காக! உயிருள்ளவர்களிடையே கிசுகிசுக்கள் செயல் உருவம் பெற்றது. தப்பிப்பிழைத்தவர்கள் திரளத் தொடங்கினர். அவர்களின் மெழுகுவர்த்திகள் கும்மிருட்க்கு எதிராக மின்னியது. இறந்தவர்கள், காணாமல் போனவர்கள், அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டவர்களின் பெயர்களை கோஷமிட்டனர். இன்று முள்ளிவாய்க்காலின் கும்மிருட்டு நடனம் மற்றும் முள்ளிவாய்க்காலின் முழக்கங்கள் உலகிற்கு ஒரு பேரணியாக மாறியது: "இனி ஒருபோதும் இது வேண்டாம்" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "கும்மிருட்டில் நடனம்" [சுருக்கிய கதை] முள்ளிவாய்க்காலில் இரவு கனமாக இருந்தது, இந்த மண்ணில் நடந்த கொடுமைகளை வானமே புலம்பியது போல, மேலே உள்ள நட்சத்திரங்கள் மங்களாகி கும்மிருட்டாய் ஆகியது. இந்த மண்ணிலிருந்து திருடிய அல்லது அழித்த எல்லா உயிர்களும், அந்த மோதலின் நிழலில் சிக்கிக்கொண்டு, அதன் எரிந்த பூமிக்கு அடியில் இருந்து, அவர்களின் குரல்கள் இன்னும் நீடித்துக்கொண்டே இருந்தது. "உடைதலையும் மூளையும் ஊன்தடியும் என்பும் குடருங் கொழுங்குருதி யீர்ப்ப – மிடைபேய் பெருநடஞ்செய் பெற்றித்தே" இரத்த வெள்ளத்தில் நிணமும், தசையும் எலும்பும் மிதந்துவரும் போர்க்களத்தில் பேய்க் கூட்டங்கள் மகிழ்ச்சியினால் கூத்தாடும். ஆனால் இங்கு முள்ளிவாய்க்காலில் வலுக்கட்டாயமாக, நீதிக்குப் புறம்பாக கொல்லப்பட்ட ஒவ்வொரு உயிரும் பேயாக மண்ணில் இருந்து எழுந்து நியாயம் கேட்கிறது! இறுதி போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தப்பிப்பிழைத்தவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர், முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் அல்லது "விசாரணைகளின்" பின் காணாமல் போனார்கள். அவர்களின் கனவுகள், அவர்களின் கதைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை இந்த மண்ணின் இருண்ட, இரத்தம் தோய்ந்த வரலாற்றின் ஒரு பகுதியாக மாறியது. அதை இன்னும், ஆண்டுகள் போனாலும், முள்ளிவாய்க்காலின் இரத்தம் தோய்ந்த மண்ணால் மறக்கமுடியவில்லை. கடிகாரம் நள்ளிரவைத் தாண்டியதும், அங்கு காற்று அமைதியாக, இடிபாடுகள், சாம்பல் மற்றும் நிழல்களில் இருந்து ஒவ்வொரு உருவங்களும் வெளிவரத் தொடங்கின. அவைகள் ஒவ்வொன்றும் தங்கள் தங்கள் துன்பத்தின் அடையாளங்களைச் சுமந்தனர்: எறிகணை துண்டுகளால் ஏற்பட்ட தழும்புகள், உடைந்த கைகால்கள் மற்றும் ஒருமுறை பயத்தில் மூழ்கிய கண்கள். இவை வெறும் தோற்றங்கள் அல்ல; அவர்கள் அநீதியின் கொடூரங்ககளால் மண்ணில் மூழ்கிய ஆன்மாக்கள். ஒவ்வொரு ஆத்மாவும் பேய்களாக 'கும்மிருட்டில் நடனம்' ஆடின. அவற்றின் அசைவுகள் வேதனையையும் கண்ணீரையும் தந்தன. ஒவ்வொரு முத்திரையும் அடிகளும் தங்கள் தங்கள் கதைகளை, உண்மையாக நடந்தவற்றை விவரித்து கேள்விகேட்டன. ஒரு தாய் கண்ணுக்குத் தெரியாத குழந்தையைத் தொட்டிலிட்டு நடனமாடினாள், அவளுடைய பாடல் தனது குழந்தையின் திருடப்பட்ட எதிர்காலத்திற்கான வேண்டுகோள். ஒரு இளைஞன் தடுமாறி முன்னோக்கிச் சென்றான், அவனது உடல் தன்னைத் துளைத்த தோட்டாக்களை இன்னும் உணர்வது போல் நெளிந்தது நெளிந்து வேதனைப்பட்டது. இந்த பேய்களின் கூட்டத்தின் ஒரு மூலையில், ஒரு மூத்த ஆவி, தமிழ் மக்களின் பெருமையைக் கொண்டாடிய, சங்கப் புலவர்களில் ஒருவரான ஈழத்துப் பூதன்தேவனாரின் பாடல்களை பாடி ஆடியது . அதன் அருகில், விஜயனின் வருகையை, மற்றொரு ஆவி விவரித்தது. "அவர்கள் அதை வரலாறு என்று அழைக்கிறார்கள், ஆனால் இது மத குருவால், " பௌத்தர்களது மனக் கிளர்ச்சிக்கும் ஆனந்தத்திற்கும் ஆக தொகுக்கப்பட்ட கதை," என்று அது கூறிக்கொண்டு இருந்தது.“ விஜயன் இந்த மண்ணில் காலடி வைப்பதற்கு முன்பே நம் முன்னோர்கள் இந்த மண்ணை உழுது அரசுகளை உருவாக்கினார்கள். நாங்கள் புதியவர்கள் அல்ல; நாங்கள் இலங்கையின் மூத்த குடிமக்களில் ஒருவன் என்று இன்னும் ஒன்று நடனம் ஆடிக்கொண்டு இருந்தது. 'கும்மிருட்டு நடனம்' விடியும் மட்டும் தொடர்ந்து, அவர்கள் ஒன்றாக மரணம் வேதனையின் பயங்கரமான ஓலத்தை எழுப்பினர். “வாழ்க்கையில் நாங்கள் அமைதியாகிவிட்டோம்; மரணத்தில் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். முள்ளிவாய்க்காலின் சாம்பலில் இருந்து நீதி எழும்” [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- இறை குறைபடுமோ ? - சுப.சோமசுந்தரம்
ஐரோப்பிய நாட்டில் குடியேறியும் தொட்டதற்கெல்லாம் தெய்வக் குற்றம் காண்பவர்கள் உள்ள சமுதாயத்தில் வாழ்கிறோம். உலகில் அரங்கேறும் அநீதிகளையெல்லாம் கண்டுகொள்ளாத இறைவன் மீது குறை ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ளாது என்ற அதீத நம்பிக்கையை விட, இதன் மூலம் கடவுளைத் தாம் எந்தத் தராரதத்தில் வைத்துள்ளோம் என்று கூடச் சிந்திக்க முடியாதவர்களாக உள்ளனர். உங்களைப் போன்றோரின் எழுத்துக்கள் இச் சமுதாயத்திற்கு அவசியமானவை. நன்றி.1 point- சிறுமியின் ஆசை
1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
விளையாட்டு நல்ல விறுவிறுப்பாய் போனது ஈழப்பிரியன் அண்ணா.................அவுஸ்ரேலியா வீரர்கள் தங்களுக்குள் தாங்கள் சண்டை பிடிச்சினம் Travis Head அடிச்சு ஆட , பஞ்சாப் அவுஸ்ரேலியா வீரர் Glenn Maxwell , Marcus Stoinis இவர்கள் இருவரும் Travis Head உடன் வாய் சண்டை பிடிச்சினம் 😁 அபிஷேக் ஷர்மாவுக்கு அந்த அன்று அதிஷ்டம் என்று தான் சொல்லனும் ஒரு முறை கைச்ச விட்டவை , இன்னொரு முறை அபிஷேக் ஷர்மா அவுட் பிறக்கு அது no ball அப்படி இரண்டு முறை தப்பி தான் 141ரன்ஸ் அபிஷேக் ஷர்மா அடிச்சவர்............................. அபிஷேக் ஷர்மா இனி வரும் போட்டிகளில் பவர் பிலே ஓவருக்கை கவனமாக விளையாடனும் , 5மைச்சில் பவர் பிலே ஓவருக்கை அவுட்................... 10ஓவர் வரை நின்று பிடிச்சால் பிறக்கு பெரிய ஸ்கோர் அடிப்பார்...........................1 point- கருத்து படங்கள்
1 point1 point- நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
ஸ்ராலின் ஒரு தமிழர். அத்துடன் இதுவரை தமிழ் நாட்டை ஆண்ட அனைவருமே தமிழர்களே. ஒரு அயோக்கிய அரசியல்வாதி தனது சுய லாபத்துக்காக கட்டி விட்ட கதைகளை நிர்வாக பொறுப்பில் இருக்கும் நீங்கள் பரப்பலாமா?1 point- கோல்ப் 2025 Masters ஒரு வீரனின் நீண்ட போராட்டம்
ஆமாம். சில நாட்களின் முன், காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். இவர் 2000 ஆம் ஆண்டு மாஸ்டர்ஸ் வெற்றியாளர். சாகித் தீகலா, Sahith Theegala, என்னும் இந்திய வம்சாவளி வீரர் விளையாடியிருந்தார். இவர் இந்தியப் பெற்றோருக்கு கலிபோரினியாவில் பிறந்தவர். இப்போட்டியில் 29வது இடத்தைப் பிடித்தார். இவர் மிகத் திறமையானவர். இவ்வாறான major போட்டியொன்றை வெல்லக்கூடிய வீரர் என்று வகைப்படுத்தப் பட்டவர். நான்கு நாட்கள் எப்படி விளையாடுவினம் என்பதுதான் இங்கே கணக்கே. டெஸ்ட் போட்டிகள் மாதிரித்தான். பல தடைகளைக் கடந்து வரவேணும். முக்கியமாக மனத்தடையும் அழுத்தமும். கோல்பில் நீயே ராஜா, நீயே வில்லன். மற்றவர்கள் ஒரு காரணியே இல்லை. இன்னொருவர், அக்ஸய் பாத்தியா, Aksay Bhatia. இவரும் கலிபோர்னியாவில் பிறந்தவர். நான்கு நாட்களும் விளையாடி, 42வது இடத்தைப் பிடித்தார்.1 point- ஜெர்மனியில் தமிழர்களை பார்த்து நடுங்கும் சிங்கள மாணவர்கள்
1 point- புலம்பெயர்ந்த முதலீட்டாளர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு
முதலீட்டு ஊக்குவிப்புடன் தனியே நின்றுவிடாது அரசியல் தீர்வையும் சமாந்தரமாக கொண்டு போக வேண்டும்.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சொல்லமாட்டாங்க. சொல்லவே மாட்டாங்க. நாமதான் அடிச்சுப் பிடிக்க வேணும். அங்கால CSK யும் ஏதாவது மாஜாயாலம் நடக்குமா என்று முயற்ஙி செய்யினம். அவையின் பயிற்றுவிப்பாளர் ஸ்டீபன், தோனியிடம் மந்திரக்கோல் இல்லை என்று வேற சொல்லியிருக்கிறார்.1 point- நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
அண்ணை - சீமானே தான் சந்தித்ததாக ஒத்துகொள்ளவில்லை. அந்தளவுக்கு இது அரசியலில் மாறான விடயம். இங்கே யாருக்கும் சீமான் மீது கோவம் இல்லை. திருமா மகிந்தவை சந்திப்பார், சீமான் நிம்மியை சந்திப்பார். தமக்கு சுயநலமாக அனுகூலமெனில் இந்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் யமனையே சந்திப்பார்கள்.1 point- ஜெர்மனியில் தமிழர்களை பார்த்து நடுங்கும் சிங்கள மாணவர்கள்
ஈழ தமிழர்கள் இனக்கலவரங்களை உருவாக்கியதாக சரித்திரங்கள் இல்லை. இதை சிங்கள சமுதாயங்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கட்டாயம் ஈழத்தமிழர்களின் அத்தியாவசிய நடவடிக்கையாக இருக்க வேண்டும். இதுதான் எம்மால் ஆன அடுத்த கட்ட நடவடிக்கை.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐஸ்வர்யாராஜின் வீட்டுக்காரர் பெயர் அபிஷேக்பச்சன் என்று தெரியும். எதுக்கும் தேவைப்படாத அந்த அபிஷேக்கை விட இந்த கிரிக்கெட் அபிஷேக்கை தெரிந்து வைத்திருக்கலாம்........😜. எனக்கு தெரிந்த கோலியையும், ரோகித்தையும் தெரிவு செய்து வைத்திருக்கின்றேன்.......... வைக்கப் போகின்றார்கள் இருவரும் ஆப்பு எனக்கு......🤣.1 point- சும்மா ஒர் பதிவு
1 pointஅவசியமான பதிவு putthan. 👏 என் நண்பன் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் வேலை செய்கிறான். யாழ்நிலத்தடிநீர் நிலைமைகளைப் பற்றி அவன் கதைக்கத் துவங்கினால் மிகவும் மனவருத்தமாக இருக்கும். சில்லறை அரசியல் ஆதாயங்களுக்காகவும் தொலைநோக்கில்லாத சுயநலநோக்கங்களுக்காகவும் எம்மில் பலர் தெரிந்தோ தெரியாமலோ தவறான செயற்பாடுகளில் ஈடுபடுவதால் எமது வருங்கால சமுதாயம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இப்போதெல்லாம் குடிநீர் எல்லாருக்கும் உரிய வளமாக இல்லாது வியாபாரப் பொருளாகி விட்டுது.1 point- கைவிலங்குகள்
1 pointஉலகில் அடக்குமுறைகளுக்கு எதிராக, சுரண்டல்களுக்கு எதிராக விடுதலை வேண்டி போராடும் மக்களுக்கு எந்த ஆதிக்கவாதிகளிடமிருந்து உண்மையான ஆதரவு கிடைப்பதில்லை. போராடும் மக்களிடமிருந்தே எதையாவது பறித்து எடுக்கலாம் என்ற சுயநலன்களே ஆதரவு என்று வரும் ஆதிக்கவாதிகளின் உள்நோக்கமாக இருக்கும். கைகள் விலங்குகளால் கட்டப்பட்டிருப்பவர்கள் மட்டுமே ஒருவருக்கு ஒருவர் இதயசுத்தியுடன் கூடிய ஆதரவைக் காட்டமுடியும். என்னுடையது போராட்டம், உன்னுடையது கோமாளித்தனம் என்று அவர்களில் ஒருவர் இன்னொருவரை ஏளனம் செய்தால், ஏளனம் செய்யும் அந்த ஒருவரின் போராட்டமே போலியாகி, அர்த்தம் இழந்து விடுகின்றதல்லவா. ***************************************** கைவிலங்குகள் ------------------------- என் மண்ணிற்காக என் விலங்கை உடைக்க என் காற்றை சுவாசிக்க எந்த மன்னனுக்கும் எதிராக என் வாளை நான் உயர்த்துகின்றேன் புனிதம் கலந்தது என் யுத்தம் வீரம் செறிந்தது என் வரலாறு பெருமை கொண்டது என் இனம் நீ எதற்காக நிமிர்ந்து நிற்கின்றாய் உன் வாள்கள் ஏன் உயருகின்றன உன்னை அடக்க வருபவர்களுடன் உன்னால் சேர்ந்து வாழ முடியாதா அவர்கள் கேட்பதைக் கொடுத்து அவர்கள் கொடுப்பதை அடங்கி ஏற்று அந்த ஆட்சியின் கீழ் இருக்க முடியாதா நீ ஒரு கோமாளி உன் குரல் ஒரு ஈனஸ்வரம் உன் நியாயங்கள் எனக்கு சிரிப்புகள் உன் மக்களுக்கு ஏன் வேண்டும் உரிமைகளும் தெரிவுகளும் இப்படிக் கேட்பவர்கள் அவர்கள் எதற்காக யாரை எதிர்த்து போராடினார்கள்?1 point- இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே
இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே கிறுக்கனாக்கி என்னைக் கிறுங்கச் செய்தவளே சறுக்கியே விழுந்தேனே சண்டாளி உன்நினைப்பில் பொறுக்கியாகி உன்மீது பித்தனாகிப் போனேண்டி! வண்டுகள் மொய்க்கின்ற வண்ண மலரடிநீ வான்மீது மிளிர்கின்ற விண்மீனின் ஒளியடிநீ பல்லவன் வடித்தநல் பருவமங்கைச் சிற்பம்நீ பாவையெந்தன் மனதிற்குள் பாட்டிசைக்கும் சுரங்கள்நீ! தோகை மயிலெனத் தோன்றுதடி உன்னுருவம் வாலைக் குமரியெந்தன் வழித்தடத்தில் நகருகின்றாய் சேலைக்கு அழகான சித்திரப் பெண்ணழகே தூயஎன் காதலாலே துடிக்கின்றேன் உன்னாலே! நெற்றிப் பிறையினிலே நீள்புருவம் கொண்டவளே வேல்விழியால் கணைதொடுத்து வித்தைகள் காட்டுகிறாய் கொவ்வை இதலழகி குண்டுமல்லிச் சிரிப்பழகி ஒளவை மொழியினிலே அருள்வாக்குத் தாவேண்டி! கன்னக் குழியழகும் கலைமமான் விழியழகும் சின்ன இடையழகும் செவ்வந்தி நிறத்தழகும் காதோரம் கதைபேசும் கருங்கூந்தல் குழலழகும் நீயருகே வருகையிலே நெஞ்சை இழுக்குதடி! பெண்ணினத்தின் பெருமைகளைப் பேணுகின்ற பெட்டகமே பண்ணிசைத்துப் பாடவல்ல பாக்களின் கவிவடிவே எண்ணங்கள் பரிமாற ஏங்கித் தவிக்கின்றேன் தண்ணீரில் தாமைரையிலையெனத் தவிக்கவெனை விடலாமோ1 point- இறை குறைபடுமோ ? - சுப.சோமசுந்தரம்
"அறிவின் வடிவாகவே இருக்கும் வாலறிவன் இறைவனைக் குறித்து அறிய முனையும் குறைவுற்ற இறையமைப்பு குறித்த நெடிய அற்புதமான பதிவு பேராசிரியர் சோமசுந்தரனார் இட்ட பதிவு. "மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு" என்பார் அறிவர் தந்தை பெரியார். இறைவனைஇ வாலறிவன்இ முற்றறிவன் என்று அறிவின் வடிவமாக வணங்கிய மரபு தமிழர் பக்தி மரபு. மூன்றாம் நூற்றாண்டின் இறைப்பெருமாட்டி காரைக்கால் அம்மையார் இறைவனை இவ்வாறு காண்கிறார். அறிபவனும்இ அறிவிப்பவனும்இ அறிவாய் இருந்து அறிகின்றவனும்இ அறிகின்ற மெய்ப்பொருளும் அவனே. அவனே ஐம்பூதங்களாகவும் விளங்குகின்றான் என்கின்றார். அறிவானும் தானே அறிவிப்பான் தானே அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற மெய்ப்பொருளும் தானே விரிசுடர்பார் ஆகாயம் அப்பொருளும் தானே அவன் (அற்புதத் திருவந்தாதி 20) சிவபெருமான்இ யார் எந்தக் கோலத்தில்இ எந்த உருவில் வணங்கினாலும்இ எத்தகைய தவத்தில் ஈடுபட்டாலும்இ அவர்அவர்க்கும் அவரவர் விரும்பிய கோலத்தில் வந்து அருள் புரிவார் என்கின்றார். எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும் அக்கோலத்து அவ்வுருவே ஆம் (33) மனிதம் போற்றும் அன்பு வடிவே இறைவன் வடிவும் வழிபாடும் என்பதுவும் நம் மரபுதான். பக்தி இயக்க இலக்கிய காலங்கள்இ "காதலால் காண்பார்க்குச் சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமேஇ தொல்லுலகுக்கு ஆதியாய் நின்ற அரன்"இ என்ற காரைக்கால் அம்மையார்இ 'அன்பே சிவம்' என்ற திருமூலர்இ 'யாவராயினும் அன்பர் அன்றி அறியொணா மலர்ச் சோதியான்' என்ற மாணிக்கவாசகர்இ "(பூங்)காவினை இட்டும் குளம் பல தொட்டும் கனி(ந்த) மனத்தால்" மக்கள் தொண்டு செய்து இறைவனை உணர்க என்று பாடிய திருஞானசம்பந்தர்இ "(உயிரினங்களைஇ இறைவன் வாழும்)பாத்திரம் சிவம் என்று பணிதீராகில் மாத்திரைக்குள்(நொடிப் பொழுதில்) அருள்வார் (திரு)மாற் பேரரே" என்று அருளிய திருநாவுக்கரசர் என்று கிபி ஏழாம் நூற்றாண்டுவரைஇ குறைவற்ற இறையமைப்புடனேயே பெரும்பாலும் திகழ்ந்தது எனலாம். எட்டாம் நூற்றாண்டில்இ வன்தொண்டர் ஆரூரர் என்னும் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டர்தொகையில்தான் சிறுத்தொண்டர் மற்றும் இயற்பகை போன்ற இயற்கைக்கு முரணான அடாத செய்கைகளைப் பக்தியின் பெயரால் போற்றுவதும்இ துதிப்பதுமான போக்குகளுக்கு துவக்கம் எனலாம்.1 point- நூல் அறிமுகம் - சுப.சோமசுந்தரம்
1 pointநூல் அறிமுகம் : கி.இளம்பிறை அவர்களின் 'வழித்துணை நினைவுகள்' - சுப.சோமசுந்தரம் 03-11-2024 அன்று எழுத்தாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் பாசத்திற்குரிய திருமதி கி.இளம்பிறை என்ற பிரபா அவர்கள் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா நெல்லை தியாகராஜநகரில் அமைந்திருக்கும் மின் ஊழியர் சிஐடியு சங்கக் கட்டிடத்தில் இனிதே நடைபெற்றது. 'வழித்துணை நினைவுகள்' மற்றும் 'திருவாசகம் - ஒரு தேடல்' என்பன அந்நூல்கள். இவற்றுள் 'வழித்துணை நினைவுகள்' எனும் கவிதை நூல் மீது பேசுமாறு இளம்பிறை அம்மா அவர்கள் முன்னரே எனக்கு அன்புக் கட்டளையிட்டிருந்தார்கள். புத்தகத்தை மின்னஞ்சலில் எனக்கு அனுப்பியும் தந்திருந்தார்கள். நான் பேசியது நன்றாக அமைந்ததாக விழாவிற்கு வருகை தந்த நண்பர்கள் பாராட்டியதோடு, வர இயலாத நண்பர் ஒருவர் முகநூலில் எழுதிடுமாறு கூறினார். அவர் முகநூல் நண்பர் மட்டுமல்லாது எனது முகநூல் பதிவுகளைத் தவறாமல் வாசித்துப் பின்னூட்டம் அளிப்பவர்; அன்ன மாட்சியர்தாமே முகநூலில் நம்மை உயிரோட்டமாய் வைத்திருப்போர் ! உடனே எழுதினால்தான் நான் மனதளவில் தயாரிப்புடன் பேசியவை கோர்வையாய் வந்து விழும் எனும் முனைப்புடன் இறங்கினேன். ஒரு கவிதை நூலை அறிமுகம் செய்வதில் எனது முதல் அனுபவம் என்பதாலும் உடனே பதிவிட விழைந்தேன். பேச நினைத்து அங்கே பேசாமல் விட்டதையும் இங்கு எழுத்தில் சேர்க்கும் உரிமை எனக்கானது. எனவே நூலுக்கு எழுத்து வடிவில் ஓர் அறிமுகமாய் இதனைக் கொள்ளலாம். இதனை எழுதும் எனக்கு மரபிலக்கியங்களின் (Classic literature) மீது தனித்த ஈர்ப்பு உண்டு. எனவே எந்தவொரு புதுக்கவிதையினை வாசிக்கும் போதும் எனக்குத் தெரிந்த மரபுவழிப் பாடல்களின் தாக்கம் ஏதும் தென்படுமானால் அதனை மகிழ்வோடு குறிக்கத் தவறுவதில்லை. அது அப்புதுக்கவிதையினை இயற்றிய கவிஞரின் முன்னோர் மொழி பொன்னே போல் போற்றும் திறமாக இருக்கலாம்; அல்லது கவிஞரே கவனிக்கத் தவறிய உவப்பான தற்செயல் நிகழ்வாக இருக்கலாம். மரபு வழிப் பாடல்களில் எத்துணையோ சிறப்புகள் இருப்பினும் அவற்றிற்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு புதுக்கவிதையில் உண்டு. வாசகர் ஒவ்வொருவரும் தமக்கே உரிய கண்ணோட்டத்துடன் விளக்கம் தரலாம் - ஒரு புத்தியல் ஓவியத்திற்கு (Modern art) ஒவ்வொருவரும் ஒரு விளக்கம் தருவதைப் போல. அப்புதுக்கவிதை எனும் வானூர்தியில் ஏறி கவிஞரே காணாத உலகையும் வாசகன் காணலாம். மரபு இலக்கியம் நமது காலத்தைச் சாராததால், அக்காலகட்டத்தில் தோன்றிய சான்றோர் தந்த விளக்கங்களே அறிவுலகத்தில் ஏற்கப்படும், ஏற்கப்பட வேண்டும் - சிறு விலகல்களைத் தவிர. அச்சிறு விலகல்களைத் தீர்மானிப்பதற்கும் அத்துறை சார்ந்த சான்றாண்மை இன்றியமையாததாகிறது. 'வழித்துணை நினைவுகள்' எனும் தலைப்பைப் பார்த்ததும் இளம்பிறை அம்மா அவர்கள் தமது வழித் துணையின் (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த வாழ்க்கைத் துணைவரின்) நினைவுகளில் மூழ்கி எடுத்த முத்துகளைப் பதிவிட்டு இருப்பார் எனும் எண்ணம் மேலோங்கியது. வாசிக்க ஆரம்பித்ததும் தெரிந்தது - வாழ்க்கைத் துணைவரின் மறைவுக்குப் பின்னர், நினைவுகளை வழித்துணையாகக் கொண்டதன் பதிவு என்று. வாசிப்பதற்கு முன் என்னுள் தோன்றிய ஊகத்திற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இலக்கியக் கூட்டமானாலும் போராட்டக் களமானாலும் எழுத்தாளர் இளம்பிறை அவர்களும் அவரது இணையரான உயர்திரு இரா.கிருஷ்ணன் அவர்களும் இணைந்து பங்கெடுத்து 'இணையர்' என்னும் சொல்லுக்கு இலக்கணம் வகுப்பர். இறப்புக்குப் பின் தம் பூத உடல்களை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரிக்கு எழுதி வைத்த முற்போக்காளர்கள் என்பது கூடுதல் செய்தி. திரு. கிருஷ்ணன் அவர்கள் மறைந்த போது மதச் சடங்குகளின்றி அதனை நிறைவேற்றியவர் திருமதி கி.இளம்பிறை. இவை கட்டுரையில் இருந்து சற்றே விலகிய செய்திகளாகத் தோன்றலாம். சொல்லும் செயலும் ஒன்றாய்க் கொண்ட ஒருவரின் எழுத்தைப் (நூலை) பேச வருகிறேன் என்பதை முன்மொழியவே இச்செய்திகள். மேலும் நூல் அறிமுகத்தில் நூலாக்கியோர் அறிமுகமும் மரபுதானே ! இக்கவிதை நூலில் என்னைக் கவர்ந்த இரண்டு பொருள்களைக் கையிலெடுத்துப் பேசுவது எனது வாசிப்புக்குப் பொருத்தமாய் அமைவது. ஒன்று, கவிஞர் அறம் பாடுவது; மற்றொன்று, என் மனதிற்கு நெருக்கமான மரபிலக்கியங்களுக்கு என்னை இழுத்துச் செல்வது. இந்த இரண்டில் ஒவ்வொரு பொருளுக்கும் சில மேற்கோள்களைக் காட்ட எண்ணம். அறம் சொல்ல வந்தவர், "தூவுவது அன்பாக இருப்பின் விலகுவது வம்பாக இருக்கும்" என்று (பக்கம் 18) நச்செனக் குறிப்பது நினைவில் கொள்ளத்தக்கது. "எவரும் புத்தன் இல்லை ஏனெனில் புத்தன் என்று ஒருவன் இல்லவே இல்லை" என்று (பக்கம் 20) குறிப்பது உடனே கடந்து செல்ல விடாத ஒன்று. அகவைக்கு ஏற்ப உணர்வுகள் இருக்கும் எனும் உலகியல் நடைமுறை சொல்ல வந்தவர், "புத்தன் என்று ஒருவன் இல்லவே இல்லை" என்றது கூட "எவரும் புத்தன் இல்லை" என்பதை மீண்டும் வலியுறுத்தவே எனப் புரிய சற்று நேரமும் பக்குவமும் அவசியமாகிறது. "பிறந்தது ஆண் குழந்தை எனில் அன்று மட்டும் மகிழ்ச்சி பிறந்தது பெண் குழந்தை எனில் வாழும் வரை மகிழ்ச்சி" என்று (பக்கம் 50) பெண்ணியம் பேசுமிடத்துச் சற்று சிந்திக்க வைக்கிறார். "அன்று மட்டும் மகிழ்ச்சி", "வாழும் வரை மகிழ்ச்சி" எனச் சொல்வதெல்லாம் ஓசை நயம் கருதி ஒரு கவிஞருக்கான உரிமம் என்பதும், பாடலின் மெய்ப்பொருள் "ஆண் என்றால் மகிழ்ச்சி, பெண் என்றால் பெரு மகிழ்ச்சி" என்பதும் கவிஞர் சொல்லாமல் சொல்லி நிற்பது. "ஆணென்ன பெண்ணென்ன ?" எனும் சமநோக்கு எத்துணை அவசியமோ, ஆணாதிக்கச் சமூகமாய் இருக்கும் வரை பெண் என்பது உயரிய நிலைதான் என முழங்குவதும் அவசியமாகிறது. இது தொடர்பில், "ஆண் மகவு பெற்றோர் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டோர்; பெண்ணைப் பெற்றோர் அந்த இறைவனையே பெற்றோர்" என்று எங்கோ வாசித்த நினைவு. இனி என்னைக் கவர்ந்த பகுதிகளில் இரண்டாவதுக்கு வருவோம். சில இடங்களில் நமக்குத் தோன்றும் பண்டைய இலக்கியங்களின் தாக்கம் இயற்கையானதே என்பதற்குக் கவிஞர் இளம்பிறை அவர்களே சான்று தருகிறார். எடுத்துக்காட்டாக, "எத்தனை எத்தனை முறை படித்தாலும் புதுப்புது சிந்தனை தோன்றும்" என்று (பக்கம் 31) அவர்கள் சொல்லுமிடத்து, "படிக்கப் படிக்கப் புதுமை" என்பதும், அதற்கு இணையாக "அறிதோறும் அறியாமை" எனும் குறளொலியும் நம் செவிப்புலனில் கேட்கின்றன. அவ்வொலி இயற்கையான ஒன்றே என்று அறிவிப்பது போல் பாடலின் அடுத்த வரியிலேயே "அறிதோறு அறியாமை கண்டற்றால்" எனும் குறளை இணைக்கிறார் கவிஞர். திருக்குறள் பிரபா என்று நட்பு வட்டத்தில் அறியப்படும் கி.இளம்பிறை அவர்கள் மேலும் சில இடங்களில் திருக்குறளை எடுத்தாள்கிறார். உதாரணமாக பக்கம் 11 ல் ஊடலில் தோற்றவர் வெல்லும் மாண்பு குறிக்கப்படுகிறது; பக்கம் 20 ல் தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறலும் சுட்டப் பெறுகின்றன. ஏற்கெனவே குறிப்பிட்டது போல் பழந்தமிழ் இலக்கியங்களின் தாக்கத்தைக் குறிக்க நமக்குக் கவிஞரே வழங்கிய உரிமத்தின் படி ஒன்றிரண்டு இடங்களைக் காணலாமே ! "என்னைத் தேடினால் நான் இல்லை ஒன்றாகவும் பலவாகும் எனை ஏற்ற தோழர்கள் ஊடே ஊடுறுவி விட்டேன்" என்று பக்கம் 28 ல் நட்பில் கரைந்து போகிறார். "என்னைத் தேடாதே உன்னுள் நான் வாழ்கிறேன்" என்று பக்கம் 36 ல் தலைவனும் தலைவியும் ஒருவர் மற்றவரிடம் தொலைந்து போதலைப் பேசுகிறார். இவ்விரண்டு இடங்களும், "வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்" "ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந் தானே" எனும் திருமந்திர வரிகளை மனக்கண்ணில் நிறுத்துதல் இயல்பான ஒன்று. பக்கம் 31 ல் அன்புடையார் அனைவரும் தம் நெஞ்சகத்தில் குடி கொண்டதால் தம் நெஞ்சம் கனப்பதைப் பாங்குடன் சொல்லிச் செல்கிறார் கவிஞர் இளம்பிறை. உணர்வுபூர்வமான பொருளான நெஞ்சம் இலக்கிய நயத்துடன் ஒரு உடற்கூறாக ஆளப்படுவது இலக்கிய உலகில் அரிதன்று. நம் நினைவுக்கு உடனே வரும் குறள் "நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து" (குறள் 1128; அதிகாரம்: காதற் சிறப்புரைத்தல்). அஃதாவது, காதலர் தன் நெஞ்சத்தில் உறைவதால் அவருக்குச் சுடுமே என அஞ்சி வெம்மையான பொருளைத் தான் உண்பதில்லை என்று தலைவியின் கூற்றாகக் குறளில் வருகிறது. இது தொடர்பில், "கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து" (குறள் 1127; அதிகாரம்: காதற் சிறப்புரைத்தல்) எனும் குறள் நினைவுக்கு வருவது தவிர்க்க இயலாத ஒன்று. இவ்வாறு சங்கிலித் தொடராக நினைவலைகளை எழுப்பும் 'வழித்துணை நினைவுகள்' காற்றினிலே வரும் கீதம் என்பது மிகையில்லை. பக்கம் 52 ல் "பற்றியது பற்றிய பின் பற்றைத் தவிர வேறு எதுவும் இல்லை .................................................... ..................................................... ஈவது தாளாண்மை என்று பின் சென்றாள் அப்பேதை" எனும் பாடலைக் கொள்ளலாம். முதல் இரண்டு வரிகள் மனக்கண்ணில் நிறுத்துவது, "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" (குறள் 350; அதிகாரம்: துறவு) என்ற பொய்யாமொழியை. குறளில் இறைப்பற்று வலியுறுத்தப்படுவது போல இங்கு மானிடப்பற்றை வலியுறுத்துவது கவிஞரின் பகுத்தறிவு. இவர் வலியுறுத்துவது மானிடப்பற்றே என்பது பாடலின் கடைசி வரிகளில் தெளிவு. அங்கு "பின் சென்றாள் அப்பேதை" என்று உடன்போக்கு மேற்கொண்டு தலைவன் பின் செல்லும் தலைவியைக் குறிக்கிறார். உடன்போக்கு என்னும் துறை தழுவிய எத்தனையோ அகப்பாடல்கள் இருப்பினும், இளம்பிறை அம்மாவின் சொல்லாட்சியானது நாவுக்கரசரின் திருத்தாண்டகத்தில் "முன்னம் அவனது நாமங் கேட்டாள்" எனத் தொடங்கும் பாடலை நம்முன் இழுத்து வந்து நிறுத்துகிறது. நாவுக்கரசர் பாடலில் 'பிச்சி' ("பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்") என்பது நமது கவிஞரின் பாடலில் 'பேதை' என்றானது; "தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே" என்று திருத்தாண்டகத்தில் ஒலித்தது, "பின் சென்றாள்" என்று வழித்துணை நினைவானது. இதுகாறும் குறித்த இரண்டு பொருள்கள் தவிர ஒன்றிரண்டு குறிப்புகளும் உண்டு. மானிடக் காதல் சிற்றின்பம் என்றும், இறைப்பற்று பேரின்பம் என்றும் வகைப்படுத்தல் உலகியலில் உண்டு. இரண்டும் பேரின்பமே என்பது எனது தனிப்பட்ட கருத்து. எனது கருத்துக்கான அடிப்படை என்னவெனில், தன்னை இழத்தல் பேரின்பம்; அது இரண்டிலும் உண்டு - அவ்வளவே ! திருநாவுக்கரசரின் திருத்தாண்டகமும் மாணிக்கவாசகரின் திருக்கோவையாரும் நமக்கு உணர்த்தும் பொருள் இதுவே. இரண்டும் அகம் சார்ந்த பக்தி இலக்கியங்கள். இரண்டிலும் இறைவன் தலைவனாகவும் பக்தன் தலைவியாகவும் உருவகிக்கப்படுகின்றனர். பக்தனாகிய தலைவி இறைவனாகிய தலைவனை அடைவது பாடல் பெற்றது. இப்போது நாம் கையில் எடுத்துள்ள கவிதை நூலிலும் கவிஞர் இக்கருத்தைச் சிறிய மாறுதலுடன், "சிற்றின்பம் தவிர்த்து எவரும் பேரின்பம் அனுபவிக்க இயலாது" என்று பக்கம் 42 ல் பதிவிடுகிறார். பக்கம் 33 ல் "உணவில் கலப்பு உயிர்க் குற்றம்; மொழியில் கலப்பு கொலைக் குற்றம்" என்ற கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது. நூலுக்கான அணிந்துரை அளித்த பேரா. வ.ஹரிஹரன் அவர்கள் இக்கருத்தில் மாறுபட்டுள்ளது அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய நியாயம்தான். என்னைப் பொறுத்தமட்டில், எனக்குக் கவிஞரின் கருத்தில் முழு உடன்பாடு இல்லை; முழுமையான மாறுபாடும் இல்லை எனச் சொல்லியே ஆக வேண்டும். மொழிக் கலப்பினால் மொழி வளரும் என்பது வளரும் மொழிக்குச் சரிதான்; தமிழ் போன்ற வளர்ந்த மொழிக்கு எங்ஙனம் பொருந்தும் எனும் எண்ணம் தோன்றுவதால் கவிஞரின் கருத்தில் உடன்பாடு. பேருந்தில் இருந்து இறங்கியதும் ஆட்டோ ஓட்டுநரிடம், "சந்தைக்குத் தானி வருமா ?" என்பது செயற்கையாகவும், "சந்தைக்கு ஆட்டோ வருமா ?" என்பது இயற்கையாகவும் தோன்றுகிறது; ஆட்டோ வெளியிலிருந்து இந்நிலத்திற்கு வந்த பொருள்தானே எனும் எண்ணம் முன்வர கவிஞரின் கருத்தில் எனக்கு மாறுபாடு. இவை போல் இன்னும் எத்தனையோ ! அத்தனையும் பேச முனைந்தால், நூலைப்போல் இரு மடங்காவது நான் எழுத வேண்டி வரும். எனவே இவ்விடத்தில் இக்கட்டுரைக்கு நிறைவுத் திரையிடல் பொருந்தி வரும். எழுத்தாளர் இளம்பிறை அவர்களின் கவிதைப் பெட்டகத்தில் உறையும் மேலும் பலவற்றை வெளிக் கொணர்வது வாசகர்தம் வாசிப்பில் கை கூடுவது. நூலாசிரியர் மற்றும் பதிப்பக விவரங்கள் பின் வரும் முகநூல் இணைப்பில் உள்ள புத்தக அட்டையில் : https://www.facebook.com/share/p/17dPe1MQr4/1 point - சஜித்தை டெல்லிக்கு அழைத்த மோடி
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.