Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    25
    Points
    19134
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    22
    Points
    87990
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    38770
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/05/25 in Posts

  1. இன்று நடந்த 51வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலாவது பந்தில் கருண் நாயரின் விக்கெட்டைப் பறிகொடுத்து மிக மோசமாக ஆட்டத்தைத் தொடங்கியது. தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 12.1 ஓவர்களில் 62 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்திருந்தது. எனினும் ட்ரிஸ்ரன் ஸ்ரப்ஸும் அஷுதோஷ் ஷர்மாவும் தலா 41 ஓட்டங்களுடன் இணைப்பாட்டத்தைக் கொடுத்து, இறுதியில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் இலகுவாக வெல்லலாம் என்று நினைத்திருக்க வருணபகவான் எதிர்நிலை எடுத்ததால் மழை பொழிந்து தள்ளி ஆட்டம் கைவிடப்பட்டது. முடிவு: முடிவில்லை! இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கொடுக்கப்பட்டது. யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவரும் “முடிவில்லை” என்று கணிக்காததால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. நிலைகளில் மாற்றம் எதுவும் இல்லை!
  2. அமிர்தலிங்கத்தையும், நீலனையும் "பதவிக்காக அரசியல் செய்தோர்" என்ற ஒரே பட்டியலில் போட முடியுமென நான் கருதவில்லை. தீர்வு விடயத்தில் உதவுவதற்காக தமிழரசு தேசியப் பட்டியலில் நீலனைக் கொண்டு வந்தார்கள். பின்னர் நீலனே இது பயனில்லாத பா.உ பதவி என்று விலகிக் கொண்டார். இந்த வரலாறு தெரியாத கந்தையர் "நீலன் பா.உவாக வரத் துடித்த ஒரு அரசியல்வாதி" என்ற அர்த்தத்தில் மேலே ஒரு கருத்து எழுதியிருக்கிறார். நீங்களும் இதை மறுக்காமல் நீலனைத் தேர்தல், பதவி அரசியல் செய்த ஒருவராக சித்திரிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நீலன், புலிகளின் தலைமைக்கு ஈடாக அல்லது அதை விட மேலாக மானசீகமாக, தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேட முயன்ற ஒருவர் என்பதே என் புரிதல். இதற்கான சில சான்றுகளை ஐலண்ட் முன்னைய திரியில் பகிர்ந்திருக்கிறார் என நம்புகிறேன். நீலன் கொலை விடயத்தில் நான் சொல்ல வேண்டிய எல்லாவற்றையும் நன்னி குறிப்பிட்ட முன்னைய திரியிலேயே எழுதி முடித்தாகி விட்டது. அந்த திரியிலேயே எழுதிய நன்னி, விசுகர் உட்பட்டவர்களின் கருத்தின் படி நீலன் கொலைக்கு ஒரேயொரு காரணம் தான்: "புலிகள் கொன்றார்கள், எனவே அவர் கொல்லப் பட வேண்டியவர் தான். இதைக் கண்டிப்பது, கேள்வி கேட்பது புலிவாந்தி" அம்புட்டு தான்😂. அதை விட, அந்த முன்னைய திரியை அடித்து நூக்க ஒரு பெரிய பொய்யையும் தூக்கிப் போட்டிருந்தார்கள், "நீலன் கொலைக்கு புலிகள் பின்னர் மன்னிப்புக் கேட்டார்கள்" என்று. அப்படியெதுவும் நடக்கவில்லை என்பதை யாரும் அங்கே சுட்டிக் காட்டவில்லை. மொத்தத்தில், நீலன் கொலையை நியாயம் செய்யும் குத்தி முறிதல் என்பது நாம் அடுத்த 100 ஆண்டுகளில் கூட ஒரு உரோமத்தையும் எங்கள் இனப் பிரச்சினையில் பிடுங்கிப் போடப் போவதில்லை எனச் சுட்டும் ஒரு நோய்க்குணங்குறியாகவே (symptom) எனக்குப் படுகிறது.
  3. இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்... சீன எல்லையில், சூனியம் வைத்த மாதிரி... பாகிஸ்தான் எல்லையில் சூனியம் வைக்க முடியாதா...? 😂
  4. ஹாய் நந்தன் ......... எங்களுடைய பிளான் "A " நன்றாக வேலை செய்யுது . ........ எதிரிகள் எல்லாம் கண்ணீர் விட்டு கதறாத குறை ......... நீங்கள் அப்படியே தொடர்ந்து முன்னேறவும் . ........ நான் பிளான் "B " பிரகாரம் தனுஸ்கோடியை எப்படியும் கைப்பற்றி விடுவேன் . ........ யோசிக்க வேண்டாம் சுவைப்பிரியனும் நம்முடைய ரகசிய ஏஜெண்ட்தான் ........ ! 😂
  5. என்ன அண்ணை..என்ன நடந்தது? நீங்களும் செம்பாவும் பதறுவதை பார்த்தா நான் முதல்வரே ஆகிவிட்டேனோ என நானே ஒரு கணம் ஜெர்க் ஆகிவிட்டேன். ஆனாலும் 16 டு 15 போறதுக்கெல்லாம் இந்த ரியாக்ஸன் ஓவர் சொல்லி போட்டன்🤣.
  6. அமிருக்கும் நீலனுக்கும் இடையான உங்கள் வித்தியாசப்படுத்தலை நான் ஏற்கிறேன். அமிர் போல் பொய் வாக்குறுதிகளை தந்து, உசுப்பேத்தி, இளைஞர்களை போருக்கு அனுப்பி விட்டு பின் அவர்களையே எதிர்த்து நீலன் அரசியல் செய்யவில்லை. அதே போல் அமிர் இந்திய படைகளின் அராஜகத்தை காபாந்து பண்ணியது போல், அல்லது புலிகளை கடுமையாக உலக அரங்கில் சாடியது போல் நீலன் செய்யவில்லை என்பதே என் நினைவு. ஆகவே நீலன் ஒரு பதவி மோகம் கொண்ட அரசியல்வாதி என நான் ஆமோதித்தது பிழைதான். ஆனால் அவர் 1996-99 தமிழ் மக்களுக்கு நேர்ந்த அநீதிகள் பலதை கண்டிக்காமல் - அதை செய்தவர்களோடு தனிப்பட்டும், அரசியலிலும் நட்பு பாராட்டினார். குறிப்பாக, கிரிசாந்தி, செம்மணி படுகொலைகள், என அப்போ அரங்கேறிய பலதை அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால் அவரும் ஒரு சராசரி அரசியல்வாதியே என நான் கருதுகிறேன். புலிகள் அளவுக்கு அல்லது அதை விட மேலாக எமக்கான ஒரு கெளரவமான தீர்வை நீலன் விரும்பினாரா? என்றால் உண்மையில் என் பதில் எனக்கு தெரியாது என்பதே. இந்த விடயத்தில் நான் ஆம் என அறுதியிட்டு கூற கூடியது புலிகளை மட்டுமே. நீலன் ஒரு அமைதியான backroom operator போலவே எனக்கு அப்போ தென்பட்டார். கொல்லும் போது அவரின் திட்டங்கள் கூட நமுத்து போய் அதை சீண்டுவாரில்லாத நிலை வந்து விட்டது. அப்படி இருக்க ஏன் கொன்றார்கள் என்பதுதான் விளங்கவில்லை. இதற்கான ஒரு பதில் இருந்தாலும் - அதை இங்கே கொலையை நியாயப்படுத்தி எழுதும் எவரும் தெரிந்திருப்பார்கள் என நான் நம்பவில்லை.
  7. தந்தை செல்வா காலம் தொடக்கம் ஈழத்தமிழரின் பிரச்சனையை தீர்க்க யாருமே தயாரில்லை என்பது நிரூபண உண்மை. தந்தை செல்வாவும் அமிர்தலிங்கமும் பெரியார்,எம்ஜிஆர்,நேரு என பலரை சந்தித்து உதவி/உரிமை கோரினர். எதுவுமே நடக்கவில்லை. எல்லாமே ஏமாற்ற கதைகளாகவே இருந்திருக்கின்றது. அரசியல் போராட்டங்கள் தோல்வியில் போக ஆயுத போரட்டம் உதித்தது. ஆயுத போராட்டத்தை தொடங்கியவர்களில் விடுதலைப்புலிகள் செவ்வனே அதை செய்தனர். ஆயுத போராட்டத்தில் தோற்றுப்போன அரசியலை தேடியவர்களுக்காக விடுதலைப்புலிகள் அரசியலையும் சேர்த்து செய்தனர்.அதிலும் புலி எதிர்ப்பாளர்க்கு திருப்தியில்லை. குறை சொல்ல ஆயிரம் காரணங்களை சொல்லலாம் அப்படி சொல்பவர்கள் நிறை சொல்ல காரணங்களை தேட காரணங்களை தேடமாட்டார்கள். குற்ற பத்திரிகையாக நீலன்,சந்திரிக்கா,கதிர்காமர்,ராஜீவ் என பல கதைகளை சொல்லிக்கொண்டே போகின்றனர். சரி யுத்தங்கள் முடிந்து இவ்வளவு காலங்கள் போய் விட்டதே ஏதாவது முன்னேற்றமா என கேட்டால் புலிகள் குற்றங்கள் செய்து விட்டார்கள் என மட்டுமே கூறுகின்றார்கள். ஆனால் சிங்களம் ஏன் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க மறுக்கின்றது என்பதை மட்டும் பேச மறுக்கின்றார்கள். புலிகளுக்கான நிதி/தங்கம் சேகரிப்பில் உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல மோசடிகள் உண்டு. இதை தலைவர் நேரடியாக நின்று செய்யவில்லை. இதை செய்தவர்கள் அங்கத்தவர்களும் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களும். ஊரில் போராளிகள் ஈடுபட்டாலும் போராட்டம் என வந்து விட்டால்......இன்ப துன்பம் பரிவுகள் இருக்காது என நினைக்கின்றேன்.
  8. GMT நேரப்படி நாளை செவ்வாய் 06 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 56) செவ்வாய் 06 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் MI எதிர் GT 20 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் மூன்று பேர் மாத்திரம் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் வசீ சுவைப்பிரியன் ஏராளன் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  9. இரண்டு வாட்டி காவ்யா மேடம் கட்டிப் புடிப்பாங்க🤪
  10. கரைகள் ஓய்வை விரும்பினாலும், அலைகள் விடுவதில்லை🤣. அவர்கள் ஆய்வுக்கு ஓய்வு விட்டா…அவர்கள் வீட்டில் அடுப்படியில் பூனை படுத்து வாய்வு விடும் நிலமை ஆகிவிடும். ஆகவே அவித்து கொட்டி கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போ தமிழா, தமிழா பாண்டியன், டாக்டர் காந்தராஜ் என சமையல்காரர்களும் எண்ணிக்கையில் கூடி விட்டார்கள்.
  11. மனைவி சமைக்கும் பிரியாணி சரியில்லை என்றால்... கணவன் பிரியாணியை... தனக்கு ருசியாய் சமைக்க வேண்டியதுதானே. 41 வயது கணவனுக்கு 27 வயது மனைவி. இதுவே... போதும் என்று சந்தோசப் படுடா... மூ*வி.
  12. இப்ப கொஞ்நநாளா ஜெட்டியா ஜட்டியா சரி என்று ஒரே குழப்பமாக இருக்கிறது யுவர் ஆனர். அமைச்சர் ஒருவர் என்னைக் குழப்பி விட்டுட்டார்.
  13. பாவம் ஆரோ ஒருத்தர் தன்ர சுய அனுபவம் = சமூகத்தின் அனுபவம் என நினைத்து எழுத அதை ஜி யும் பகிர்ந்துள்ளார் 🤣. நானறிய யூகேயில் 90-2000 இடையே வந்து அதே வேலையில் எவருமே இல்லை. படித்தவர்கள் அந்த வழியிலும், படியாதவர்கள் முதலாளிகளாயும், குறைந்த பட்சம் சுய சம்பாத்திய தரும் ஊபர் ஓட்டிகளாயாவது ஆகி விட்டார்கள். அதுவும் வீடு - பலர் இருந்த நல்ல கவுன்சில் வீட்டையே அதீத விலை கழிவுடன் வாங்கி விட்டார்கள். இலண்டனில் இப்படி 90 களில் வந்து, இப்போ சராசரி தொழிலில் இருக்கும் பலருக்கு இருக்கும் வீடுகளை, இப்போ படித்து வெளி வரும் ஒரு மருத்துவரால் வாங்க முடியாது. சந்தை விலை அப்படி.
  14. ஒரு படத்தில் விவேக் புதியவகை இசையில் பாடல் ஒன்றை இசைக்க… வீட்டு பெருசுதான் போய்ட்டு…ஒப்பாரி வைக்கிறார்கள் என நினைத்து மயில்சாமி வாசலில் வந்து நிண்டு சாவு கூத்து ஆடுவார். பெருசு சாகவில்லை என தெரிந்ததும்…விவேக்கிடம்…. “சார் வெட்டியான் வேற சாரயத்தை கடனுக்கு வாங்கி குடிச்சுட்டான், அந்த பணத்தையாவது கொடு சார்” என்பார் மயில்சாமி🤣. அந்த வெட்டியான் போல நானும் இரெண்டு வாரமா காத்து கிடக்கிறேன்😆. சட்டு புட்டுன்னு அடி பட்டு…யார் பெரிய ரவுடி எண்டு காட்ட வேணாமா🤣. 36 மணிநேரத்தில் தாக்குதல் என செய்தி வந்தே நாலு நாள் ஆகி விட்டது😂. ஒரு வேளை ஐபிஎல் முடியட்டும் என வெயிடிங்கோ🤣. # கரப்பொத்தான் vs கொக்கிரோச்
  15. நீலன் செத்து சுண்ணாம்பாகிவிட்டார். யாரும் அவருக்கு கரிசனை காட்டி எந்த பயனுமில்லை. இங்கே எழுதுபவர்கள் நோக்கமும் அது அல்ல. அரசியல் படுகொலைகளால் நாம் ஒரு இனமாக 5% நன்மை அடைந்தால். 95 சதவீதம் அடைந்தது தீமை. அதிலும் ரஜீவ், அமிர்தலிங்கம், கதிர்காமர், நீலன் இந்த கொலைகள் எமது இனத்துக்கு தந்த பிரதி கூல பின் விழைவுகள், மிக மோசமானவை. எனவே அதை பற்றிய திரியில் அதை சிலாகிக்கிறோம். கேள்விகளுக்கு பதில் சொன்னால் உண்மையை ஒத்து கொள்ள வேண்டி வரும் என்பதால் கூட சிலர் மெளனமாக இருக்கலாம்.
  16. நன்னிக்கு நன்றி. உங்கள் கருத்தும் நியாயப்படுத்தலும் ஏற்றுகொள்ளவே முடியாதது. ஆனால் பல தரவுகளை தந்துள்ளீர்கள். அதற்குதான் நன்றி. இந்த தரவுகளின் அடிப்படையில்: பாலா அண்ணை “ஏற்புடையது” என கூறிய தீர்வைத்தான் நீலன் தயாரிக்க உதவினார். அதை சந்திரிக்கா நீர்த்து போகவைத்தார் எனில் அதற்கு நீலன் பொறுப்பாக முடியுமா? நியாயமான தீர்வை அவர்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை எனிலும், அதை முன் வைக்கவாவது தன் உழைப்பை கொடுக்கலாம், புலிகளின் பலத்தை ஒரு காரணியாக வைத்து ஒரு நியாயமான தீர்வை பெறலாம் என முயற்சிப்பது, எமக்கு விருப்பம் இல்லாத நகர்வாய் இருக்கலாம் - ஆனால் அது மரண தண்டைக்குரிய குற்றம் அல்ல. குறிப்பாக இன்னொரு மாவீரரை பலி கொடுத்து. இந்த ஆரம்ப வரைபு கொடுத்த தீர்வை ஒத்த ஒரு தீர்வைதான் புலிகள் ஆஸ்லோ பிரகடனம் மூலம் கோரி நின்றனர். நீலனோடு அதே நிலைப்பாட்டில் 1995 இருந்த சிவசிதம்பரம், சம்பந்தர், மாவை இதர ஆட்களை நீலன் கொல்லப்பட்டு இரு வருடங்களுக்குள் புலிகள் அரவணைத்தனர். இதே காலகட்டாதில் புலிகளை எதிர்த்து யாழ் மேயர் ஆகி, கடும் விமர்சனங்களை வைத்த ரவிராஜை பின்னாளில் மாமனிதர் ஆக்கினர். நீலன் மீது கட்டுரையாளர் கூட “இலங்கையின் அரசுக்கு மறைமுகமாக உதவினார்” என்பதை தவிர வேறு எந்த தமிழர்/புலிகள் விரோத நடவடிக்கை குற்றசாட்டையும் வைக்க முடியவில்லை. நீலன் அமெரிக்காவில் அதிகாரத்தில் உள்ள பலரின் உற்ற நண்பர். அனைவருக்கும் தெரிந்த உண்மை, புலிகளுக்கும் தெரிந்திருந்தது. நீலன் சி ஐ ஏ என பரவலாக சந்தேகிக்கப்பட்டது. நிச்சயம் இதுவும் புலிகளுக்கு தெரியும். அவர் இலங்கை வந்து இப்படி பட்ட அரசியலில் ஈடுபட்டதும் இதற்கே எனவும் பலர் சந்தேகித்தனர். இப்படி பட்ட அமெரிக்காவின் இலங்கை நண்பரை கொல்லுவது, கிட்டதட்ட அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவரை கொல்லுவது போன்றது. இது புலிகளால் அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவால் என்றே கருதப்பட்டிருக்கும். இவ்வளவு நடந்த பின்னும், நமக்கு ஏன் அமெரிக்கா நம்மை தடை நீக்கவில்லை, உதவி வழங்கும் மாநாட்டுக்கு அழைக்கவில்லை, முள்ளிவாய்க்காலை தடுக்கவில்லை என்பது புரியவில்லை என்பது ஒரு துன்பியல்.
  17. ஆயுத வழியின்றி அரசியல் வழியில் தன்னால் முடிந்த அளவுக்கு தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற முனைந்த ஒரு தமிழர் இன்னொரு தமிழ் தாய் பெற்ற ஒருவரால் தற்கொலைத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட அவலமும் விடுதலையின் பேரால் நிகழ்த்தப்பட்டது. நீலன் பங்களித்த தீர்வு மீது கடுமையான விமர்சனங்களும் அந்த தீர்வில் பல குறைபாடுகளும் இருப்பினும், அதை ஆரோக்கியமான விவாதங்களு உட்படுத்தப்படாமல், அதை தயாரிக்க துணை புரிந்தார் என்பதற்காகவே கொல்லப்பட்டார். இவரது கொலையால் தமிழ் மக்களுக்கு ஒரு சதம் கூட பிரயோசனம் ஏற்படவில்லை. ஆனால் சிங்களம் இதனை தனக்கு சார்பாக பயன்படுத்தி ராஜதந்திர ரீதியில் பயனடைந்தது. இவ்வாறு நிகழ்ந்தது முதல் தடவையும் அல்ல, இறுதித் தடவையும் அல்ல. இன்றும் இந்த படுகொலைகளை நியாயப்படுத்தும் அரசியலும் குரல்களும் எம்மிடம் இருந்து நீங்கவில்லை.
  18. உலக சாதனை படைத்த மாலைதீவு ஜனாதிபதி! மாலைதீவுகளின் ஜனாதிபதி முகமது முயிஸு( Mohamed Muizzu) 15 மணிநேரம் ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தி உலக சாதனை படைத்துள்ளார். இதனை அவரது அவரின் அலுவலகம் நேற்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு தொடர்சியாக 14 மணிநேரம் 54 நிமிடங்கள் இடம்பெற்றதாகவும், நடுநடுவே தொழுகைக்காக சிறிது நேரம் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவமானது ஓர் ஜனாதிபதி நிகழ்த்திய உலகச் சாதனையாகப் பார்க்கப்படுகின்றது. முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டில் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, 14 மணிநேரம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி உலக சாதனை படைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1430540
  19. போறபோக்குல பார்த்தால் கார்பன் கார்ணி அவர்கள் இரண்டாவது முறையாகவும் பிரதமராக வருவார் போல் உள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பியர் பொய்லிவ்ரே ஒன்டாரியோவில் படு தோல்வி அடைந்து . இப்போது அவர் அல்பேர்டாவிற்கு சென்று, தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரை பதவி விலக்கி, பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட முயற்சி செய்து கொண்டிருக்கிறார், அவர் ஒரு வெட்கம் அற்ற மனிதர் ஆவார். கன்சர்வேட்டிவ் கட்சியில் பியர் பொய்லிவ்ரே போன்ற அதி தீவிர வலதுசாரி தலைவர் இருக்கும் வரை அவர்கள் ஒருபோதும் ஆட்சிக்கு வரப்போவதில்லை, பெரும்பாலான கனேடியர்கள் மிதவாதிகளாகவே (center left or center right) இருக்கிறார்கள். அல்பேர்டாவில் இருப்பவர்ககளில் மிக குறைந்த அளவான மக்களே (25 %) தனி நாடாக போவதற்கு ஆதரவு அளிக்கின்றார், விருப்பம் என்றால் பியர் பொய்லிவ்ரேரும் அவருடைய தீவிர ஆதரவாளர்களும் Trumpland க்கு குடிபெயரலாம்.
  20. ஆமால்ல. இனி அதையும் வைத்து உருட்டலாம். இஞ்ச, பிறகு குந்தவை எங்கே என்று வரக்கூடாது. சரியா. பிறகு திரிஷாவத்தான் பிடிச்சு இறக்கவேணும்.
  21. உனக்கு 47 மனைவிக்கு 27 வயது மனைவி வழக்குப்போட்டால் உன் மானமே போயிடுமே. ஐரோப்பாவில் இருந்து கொண்டு புரியாணி தேடுதா புரியாணி சரியில்லை என்றால் கடையில் வாங்கி எதையாவது சாப்பிடு.
  22. இல்லை ஒருபோதும் இல்லை இந்தியா இல்லை என்றால் தமிழ் ஈழம் ஐரோப்பாவில் இருந்திருந்தால் புலிகள் வெற்றி பெற்றுருப்பார்கள். உங்களுக்கு ஒரு எண்ணம் உண்டு” நான் படித்தவன் என்பது அதை நானும் எற்கிறேன். ஆனால் நீலன். வரைபு எழுதியது 100 %. பிழையாகும். சேர். புக்குகள். இருக்கும் போது பாராளுமன்றம் இருக்கும் போது உப்பு சப்பற்ற அதிகாரம் கொண் இந்தியா மாநிலங்கள் இருக்கும் போது. இலங்கையில் யார் வரைவு எழுதினாலும் நடைமுறையில் வாராது வரும் என்று நிறுவுங்கள. முடியுமா?? இல்லை முடியாது சேர.
  23. வாங்க கோசான். எல்லாம் உங்கள உள்ள கொண்டுவரத்தான். அதோட, இது சும்மா ஒரு இடம் மேல போற விசயமில்லை. ஈழப்பிரியனுக்கு மேல போற இடம். அதுதான் இங்கே கணக்கே. அவரோட சேர்ந்தா என்ன நடக்கும். என்னையக் கேழுங்க. செம்பா என்று விழித்தது நல்லாருக்கு. சிம்பாவைத் தெரியும் தானே. Lion King
  24. கந்தையர், தொடர்ந்து உங்களுடன் விவாதிக்க நீங்கள் முதலில் அர்த்தமுள்ள வகையில் பேச வேண்டும். பூனைக்கு சிகையலங்காரம் செய்வது மாதிரியான திரிகளில் எனக்கு ஆர்வமில்லை. உங்கள் லொஜிக்கின் படி புலிகளின் 2002 முயற்சி, ஒஸ்லோ பிரகடனம் (அப்படியொன்று இல்லை என்போரும் உள்ளனர்), 2005 இல் மகிந்த தேர்தலில் வெல்ல மறைமுகமாக உதவியது -இவையெல்லாமே "தண்டனைக்குரிய பிழைகள்". அந்தப் பிழைகளுக்காகத் தான் புலிகள் அமைப்பு தாமாக தற்கொலை செய்து கொண்டார்கள் என்று நீங்கள் எழுதுவீர்கள் என நினைக்கிறேன்.
  25. தம்பி சந்தோசமாக இருக்கிறாப்போல. யாராவது டெல்லி குறைந்த ஓட்டங்கள் எடுக்கும் என்று பதிந்துள்ளீர்களா?
  26. நான் பேசினதுல கம்மின்சுக்கு ரோஷம் வந்திட்டிதுபோல! மூன்று விக்கெட், ஒரு அற்புதமான கேட்ச்! கலக்குகிறார்!
  27. இவங்கள் சூனியம் வைப்பாங்கள் என்றுதான்.... சீனாக்காரன் வேலியை உயர்த்தி போட்டிருக்கின்றான் போலுள்ளது. அப்ப ... இவை மினைக்கெட்டு வைத்த சூனியத்துக்கு பவர் இல்லாட்டிலும் காரியமில்லை, ரிட்டர்ன் ஆகி விட்டது என்றால் ஆபத்து அல்லவா. இதைப் பார்த்துத்தான்... "சொந்த செலவில் சூனியம் வைக்கிறது" என்ற பழமொழி தமிழில் வந்தது என நினைக்கின்றேன். ஆய்வாளர் மணி, ரவீந்திரன் துரைசாமி, மாரிமுத்து, சவுக்கு சங்கர் எல்லாரும் இப்ப எங்கே. அவர்களின் காணொளிகளை பார்த்து வருடக் கணக்காகி விட்டது. இன்னும் அவித்துக் கொட்டிக் கொண்டு இருக்கின்றார்களா அல்லது சாயம் வெளுத்து.. ஓய்விற்கு போய் விட்டார்களா. 😂🤣
  28. சென்னை அணியின் வான்ஸ் பேடி பயிற்சியின் போது காயப்பட்டதினால் ஊர்வில் படேலினை (wicket keeper) வழங்கியுள்ளார்கள். இவர் T20 போட்டிகளில் குறைந்த பந்தில் 100 ஓட்டங்கள் பெற்றவர் வரிசையில் 2 ம் இடத்தில் இருக்கிறார். 28 பந்தில் 100 ஓட்டங்கள் பெற்றவர். சென்னை அடுத்த வருட ஐபிஎல்லுக்கு இப்பவே தயார் படுத்தி வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன்பே வாங்கிய 17 வயது ஆயுஷ் ம்ஹாத்ரே சென்ற சனிக்கிழமை நடந்த போட்டியில் 48 பந்துகளில் 94 ஓட்டங்கள் பெற்றார். பேபி டிவிலரசும் 6 ஓட்டங்கள் அடிக்ககூடியவர் . ஜடேஜா முன்பு 6,7 இடங்களில் விளையாடவந்து பெரிதாக சாதிப்பதில்லை . ஆனால் கடந்த சில போட்டிகளில் 4 ம் இடத்தில் வந்து 53 , 77 ஒட்டங்களை குறைந்த பந்துகளில் பெற்றார்.
  29. ஆனால் அதை மீள மீள நாம் உலகிற்கு நியாபக படுத்தி, நடை முறையில் உதாரணங்கள் மூலம் காட்டி கொண்டும் இருக்க வேண்டும். அப்போதுதான் - இவர்களுக்கும் வேறு வழியில்லை என அரசுகள் இல்லாவிடினும், ஏனைய நாடுகளில் உள்ள பொது நோக்கர்களாவது சிந்திப்பார்கள். இல்லாமல் தீர்வை எழுத உதவினார் என்பதால் நாம் ஒரு தமிழரையே போட்டோம்- பழி முழுக்க எம்மீது. எல்லோரும் பிக்குகளை மறந்தே போனார்கள். இது மிகவும் உண்மை. அமிருக்கும் நீலனுக்கும் இது அவர்களின் பதவி, அதிகாரம் சம்பந்தபட்ட விடயம். ஆனால் புலிகளுக்கு இது ஒரு இறுதி இலக்கு சம்பந்தபட்ட விடயம். புலிகள் இந்த இனத்தின் நீடித்த சுதந்திர வாழ்வின் மீது சொந்த பிள்ளைகள் மீது பெற்றார் கொள்வது போல கரிசனை கொண்டிருந்தார்கள். அமிர், நீலனுக்கு இது வெறும் பதவி அரசியலுக்கான பாதை. ஆனால்…. அவர்களை அரசியலின் மூலம்தான் டீல் பண்ணி இருக்க வேண்டும் கை வைதால் ஆபத்து என்பதை உணர்ந்திருக்கவும் வேண்டும்
  30. தமது இராணுவ தகவல்களை எதிரிக்கு வழங்கும் ஒற்றர்களுக்கு, துணை, ஒட்டு படைகளுக்கு மரண தண்டனை வழங்குவதும்…. ஒரு குறித்த பிரச்சனைக்கு தம்மை விட வேறுபட்ட அணுகுமுறையை எடுக்கும், ஆயுதம் தரிக்காத, நன்குஅறியப்பட்ட அரசியல் தலைவர்களை கொல்லுவதும் ஒன்றல்ல. தமிழ் ஈழம் வேண்டும் என்பது எப்படி ஒரு நிலைப்பாடோ…அதே போல் தமிழ் ஈழத்துக்கு மாற்றாக பிரியாத இலங்கையுள் ஒரு தீர்வை பெற நாம் தயார் என்பதும் இன்னொரு நிலைப்பாடே. இதில் ஒரு பகுதியை இன்னொரு பகுதி போட்டுதள்ளியது எந்த வகையிலும் நியாயம் இல்லாதது. ஒரு தீர்வு திட்டத்தை தயாரிக்க உதவியது எப்படி விடுதலை போருக்கு எதிரான செயலாகும்? இதற்கான பதில் மேலே சொல்லப்பட்டுள்து. எதிரியோடு அடிபட சிலர் வேண்டும். எதிரியோடு நட்பாக இருந்து (முஸ்லிம் அமைச்சர்கள் போல்) காரியம் சாதிக்க சிலர் வேண்டும். இதில் நீலன் இரெண்டாம் வகை.
  31. இதில் மறுக்க ஏதும் இல்லை. ஆகவேதான் நான் ஒரே தராசில் நிறுக்கவில்லை என ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன். நான் சொன்னது இதைத்தான் 👇 அந்த வெள்ளமாளிகை சந்திப்பும், தலைவரின் அசோக்கா ஹோட்டல் சந்திப்பும் ஒன்றே என. சந்திப்பின் போதும், பின்னும் இந்த இரு தலைவர்களும் எடுத்த முடிவுகள், அணுகுமுறைகள், அவர்கள் தலைமைதாங்கும் தேசிய இனங்களின் எதிர்காலத்தை தீர்மானித்தன, தீர்மானிக்கும். ரஜிவின் (அநியாய) இந்தியா மீது தலைவர் எடுத்த அணுகுமுறையை ஒத்த அணுகுமுறையை டிரம்பின் (அநியாய) அமெரிக்கா மீது கோமாளி செலன்ஸ்கி எடுத்தால் - உக்ரேனியர்களுக்கு முள்ளிவாய்க்கால் நிச்சயம்.
  32. என் பி பி ஈரச்சாக்கை நல்லா ஊறப்போட்டு எடுத்து கொண்டு வாறாங்கள்… இனி ஒரே அமுக்குத்தான்… தலைவர் படத்தை, பெயரை வைத்து என்ன மாதிரி ஏமாற்றலாம்…அதற்கு எப்படி மந்தைகள் போல் சனம் எடுபடும் என்பதை ராமலிங்கம், தமிழக செய்திகளை பார்த்து புரிந்து கொண்டு, இந்த திட்டத்தை வகுத்திருக்க கூடும்🤣. யேசு பிரான் ரோமர்களின் அராஜகத்தை எதிர்த்து அவர்களால் சிலுவையில் அறையப்பட்டவர். ஆனால் அவரின் மறைவுக்கு சில காலம் பின், ரோமர்களே அவரின் போதனைகளை நிறுவன பட்ட மதமாக்கி, ரோமன் கத்தோலிக்க மதத்தின் தலைமையக்கதை ரோமிற்குள் அமைத்தும் கொண்டனர். ஈழத்தமிழருக்கு காணி, பொலிஸ், சமஸ்டி அதிகாரம் கொடுப்பதை தடுக்கும் என்றால் - எஹலபொல, கெப்பிட்டிபொலாவ போல் பிரபாகரனும் இலங்கையின் தேசிய வீரர்களில் ஒருவர் என அனுரா அறிவித்தாலும் ஆச்சரியமில்லை.
  33. என்ன அண்ணை மேடை ஏறி பேசும் அரசியல்வாதி போல்.. யுத்தம் முடிந்த பின் என்ன செய்தீர்கள்… குறை சொல்லும் வாய்கள் நிறை சொல்லுமா.. என இறங்கி விட்டீர்கள்? இங்கே ஒரு கட்டுரை நீலன் செய்த “பாதகங்கள்” குறித்து வெளியாகி உள்ளது… அதை பற்றி அலசி கொண்டிருக்கிறோம். புலிகள் போனதுடன் எல்லாமும் போச்சு. இது நம் ல்லோருக்கும் தெரிந்ததுதானே. நீங்களே கூட இந்தியா புலிகள் விடயத்தில் செய்தது அவர்கள் பார்வையில் சரிதான் என எழுதவில்லையா? ஆகவே - புலிகள் செய்த அரசியல் படுகொலைகள், குறிப்பாக இந்தியா, அமேரிக்காவை நேரடியாக சவாலுக்கு உட்படுத்திய கொலைகளை செய்தது சரிதான் என 2025 இல் கூட எழுதும் போது - அதை கேள்விக்கு உள்ளாக்குவது தப்பில்லையே. உதாரணமாக புளொட் மோகனை, ரசாக்கை, இப்படி பலரை போட்டதையா கேள்வி கேட்கிறோம்? இவர்கள் இராணுவ இலக்குகள். பதமநாபா கூட்டாளிகள் கூட இதே லிஸ்டில் சேரலாம். யாழ் மேயர் சரோஜினியை, செஞசோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜாவை போட்டது கூட, ஈழதமிழரை தாண்டி வெளியே தாக்கம் ஏற்படுத்தாதவை. ஆனால் அமிர், ரஜீவ், நீலன், கதிர்காமர் கொலைகள் அப்படியா?
  34. தியாகம் -ஆம். கட்டமைப்பு - ஆம். பலம் - நிச்சயமாக இல்லை. போரில் வேறு ஒரு நாடு புலிகளுக்கு பலமாக பின்னுக்கு வராத வரை - அவர்களுக்கு அவர்கள் உரிமை கோரிய நிலத்தை முழுகையாக கைப்பற்றி, பாதுகாக்கும் பலம் இருக்கவில்லை என்பதே கள யதார்த்தம். மேற்கு நாடுகள் அதிகம் தலையிடாத 2000 க்கு முந்திய காலத்தில், புலிகள் இராணுவ சமநிலைக்கு அருகான ஒரு நிலையை எட்டி இருந்த போது கூட வவுனியா, மன்னார், அம்பாறை, மட்டகளப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் என மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் சகலதும் அரச கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அதுவும் கூட தலைவர் இருக்கும் வரை மட்டும்தான். உண்மையில் இலங்கை இறுதி போரை இவ்வளவு கடன்பட்டு நடத்தி இருக்கவே தேவையில்லை. இன்னும் ஒரு 15 வருடம் இவ்வாறு கடத்தி இருந்தால் தலைவருக்கு பின் எல்லாமும் விரைவாக உடைந்து போயிருக்கும். எமது இராணுவ பலம் என்பது முழுக்க முழுக்க ஒரு மனிதனின் ஆயுட்கால உழைப்பு. ஆனால் அவர் இல்லாமல் போனதும் அந்த பலத்துக்கு என்ன நடந்திருக்கும் என்பதை 2009 பின்னான நிக்ழவுகள் காட்டுகிறன. ஆனால் அதே ஆணியைத்தான் அவர்கள் நீலனை சுட்டு மூன்று வருடங்களில் ஒஸ்லோவில் கேட்டார்கள். நீலன் தனக்கு முடிந்த வரையில் முயலட்டும், நாம் எமகு வழியில் உறுதியாக இருப்போம், முயல்வோம் - நாம் வென்றால் தமிழருக்கு பெரு வெற்றி, நீலன் வென்றால் தமிழருக்கு சிறு வெற்றி என்ற அணுகுமுறையை ஏன் எடுக்கவில்லை?
  35. முதல்வர் சேர்த்து வைத்திருக்கும் சொத்து இந்தப் போட்டி முடியும் வரை அவரைக் காக்கும் . அவருடை சொத்துக்கள் இன்னும் பல மடங்காகும் வாய்ப்புக்களும் இருக்கின்றன.😂 எதற்கும் முதல்வருக்கு ஒரு வாழ்த்தைப் போட்டு வைப்போம் 😅 முதல்வர் நந்தனாருக்கு வாழ்த்துக்கள்😇
  36. டெல்லிக்கு இது கட்டாயம் வெல்லவேண்டிய போட்டி. அதுவும் தோற்றுக்கொண்டிருக்கும் அணியோடு. நான் நினைக்கிறேன் 17 புள்ளிகளுக்கு மேலே பெறும் அணிகள்தான் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகும். டெல்லி வென்றால் 3 அணிகள் 14 புள்ளிகளோடு நிற்கும். டெல்லிக்கு அடுத்த 3 போட்டிகளும் அவர்களுக்கு முன்னே நிற்கும் மூவரோடும். அம்மூவரும் டெல்லியை வெல்லத்தான் முயற்சிப்பினம். ஏனென்றால் அவர்களின் விதியும் அதில் தங்கியுள்ளது. டெல்லி விளையாடும் அடுத்த நான்கு போட்டிகளும், புள்ளிப்பட்டியலை தலைகீழாக மாற்றும். Playoff சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.
  37. படங்களுடனான பகிர்வுக்கு நன்றி ஏராளன் ......... ! 😁
  38. நானும் உங்களைப் போலவே தமிழ் ஈழம் கிடைக்கும் என்று பேதை த்தனமாக ஆரம்பத்தில் நம்பினேன். சற்று maturity வந்த பின்னர் உலக நாடுகளை அரசியல் ராஜதந்திர ரீதியில் வெல்லாமல் அது சாத்தியமல்ல என்பதை புரிந்து கொண்டாலும் எம்மவர்கள் இராணுவபலத்தை துரும்பு சீட்டாக வைத்து உலகளவில் அரசியல் பலத்தை அபைத்துலக நல்லுறவையும் தமிழர் சார்பில் உருவாக்குவார்கள் என நம்ப தொடங்கினேன். உலக சூழல் இந்த விடயத்தில் எமக்கு சாதகமாக இல்லை என்பது இயல்பாக புரிய ஆரம்பித்தது. நாம் இருவரும் சாதாரண குடிமக்களாதலால் அப்படி நம்பியதில் தவறே இல்லை.
  39. யாரும் இந்த கேள்வியை நீலனிடம் கேட்டதாகவோ அவர் பதில் சொன்னதாகவோ நான் அறியவில்லை. ஆனால் இரெண்டு விடயங்கள் சாத்தியம். 1994/95 இல் சந்திரிகா ஒரு நேர்மையான தீர்வை தர முயல்வார் என சகல வகையான தமிழ் மக்களும் நம்பினார்கள். சந்திரிகா அனுப்பிய பாலபட்டபெந்தி தலைமையிலான சமாதான குழுவுக்கு யாழில் ஹெலிகொப்டர் இறங்கிய பல்கலைகழக வளாகத்திலேயே மக்கள் கூடி ஆரவார வரவேற்பு கொடுத்தனர். புலிகளின் ஆளுகைக்கு வெளியே இருந்த தமிழர்களும் ஏகோபித்து சந்திரிகாவை வாக்கு போட்டு ஆதரித்தனர். இப்படி பலர் தனிப்பட்டும் நம்பினர். பிபிசி சிங்கள சேவை சந்தேசியவின் பணிப்பாளர் வசந்தராஜ இலங்கை திரும்பி ரூபவாகினியை பொறுப்பேற்றார். ஆனால் சில காலம் போக, வெறுத்து போய் இலண்டன் திரும்பி தமிழ் கார்டியனில் எழுத தொடங்கினார். இப்படி ஒரு நம்பிக்கை. அல்லது அமெரிக்கா மூலம் சந்திரிக்காவை பணிய வைக்கலாம் என நீலம் நம்பி இருக்கலாம். சாகும் போது நீலனும், சந்திரிகா இனவாதிகள் குறிப்பாக ரத்வத்தை, பீடாபதிகள், கொட்டகதேனிய போன்றோரின் பேச்சுக்கு ஆடுவதால் நீலன் வெறுப்படைந்து இருந்தார் என்போரும் உளர். முழுக்க முழுக்க பொய்யான நாடகம் ஒன்றை சந்திரிகாவுடன் சேர்ந்து ஆடி இருக்கலாம். அப்படி இருப்பினும் கூட, அரசியல் கொலைகள் சரியா பிழையா என்பதற்கு அப்பால், நீலன் யாரின் ஆள் என தெரிந்தே அவரில் கைவைத்தது அறிவார்ந்த செயலா?
  40. இறுதி யுத்தத்த வெற்றிக்காக என று கூறி மக்களிடம் இருந்து புலம் பெயர் தேசியவாதிகள் என்று அழைப்பவர்களால் 2008/2009 காலப்பகுதியில் திரட்டப்பட்ட மில்லியன் கணக்கான ஈரோ பணமும் இப்படி பொட்டலம் கட்டி வைத்திருந்தால் பிடிபட்டிருக்கும். 😂 😂 மக்களுக்கு சிறு பகுதியேனும் திரும்ப கிடைத்திருக்கலாம். ஆனால் கெட்டிக்காரர்கள் என்றதால் பினாமிகள் பெயரில் பல் வேறு இடங்களை கைமாற்றப்பட்டு அத்தனை பணமும் பணத்தை சேர்ததவர்களாலே ஆட்டையை போடப்பட்டது. பணத்தை சேர்தத நோக்கம் நிறைவேறாமல் விட்டாலும் கிடைத்த பணத்தை அப்படியே அமுக்கியதில் வெற்றி பெற்று விட்டார்கள்.
  41. இன்னும் கொஞ்ச நாளில் உங்களுக்கு பல மில்லியன் வாரிசில்லா சொத்து கிடைத்துள்ளது, வங்கி கணக்கு விபரம் அனுப்புங்கள் என்று நைஜீரியாவில் இருந்து வரும் இமெயில் போல் உகண்டாவில் இருந்து வந்தால் உடனே டிலீட் பண்ண கூடாது. உண்மையாகவும் இருக்கலாம்😂.
  42. குறைகள் இல்லாத ஆட்சி இல்லை. ஆனால், டிரம்ப் ஐயா வந்த பின்னர்தான் பலருக்கு சுயபுத்தி வேலை செய்கின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.