Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87988
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19119
    Posts
  3. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    2951
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/08/25 in all areas

  1. நடையா இது நடையா ....... ! 😍
  2. பெருமாள், ‘குறை நினைக்க வேண்டாம்’ என்பதை நீங்கள் தவிர்த்திருக்கலாம். தேவையில்லாதது. எம்ஜிஆர் ஆட்சியில் அவரது பக்தன். கருணாநிதியை விட்டு வைகோ வெளியேற வைகோவின் நண்பன்.( காவல்நிலையத்தில் ஒருவர் தன் பெயர் கோபாலசாமி என்று சொல்லும்போது அன்போடு மகிழ்ச்சியாக அமாவாசை தழுவிக் கொள்ளும் காட்சி ஒன்று புரட்டுத் தமிழன் படத்தில் இருக்கிறது). அம்மா ஆட்சிக்கு வந்தால் அன்பான பிள்ளை. தன் பிள்ளையை அம்மாவின் விழாவில் ஆடவிட்ட நாகராஐசோழன். கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் அவருக்கு ஐயா. இப்போ ஸ்ராலின் ஆட்சி. இங்கே சத்தியராஜாவை நிறையத் தடவைகள் மேடைகளிலும் பார்த்தாயிற்று. தமிழ் படங்களில் மட்டும்தான் நடிப்பேன். எனக்கு தமிழ் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது என்பார். ஆங்கிலம் சுட்டுப் போட்டாலும் வராது என்பார். ஆனால் மேடையில் ஆங்கித்தில் பேசுவார். தெலுங்கிலும் வீரவசனம் பேசி, “தாயே உங்கள் உத்தரவு” என கட்டப்பாவாக மண்டியிட்டுக் கொள்வார். டைரக்டர் ஜோன் மகேந்திரன் தமிழீழத்தில் இயக்கிய ஆணிவேர் திரைப்படத்தில் நடிக்க அழைத்த போது ஓடி ஒதுங்கி புரட்சி செய்த தமிழன். இப்படி பல இவரிடம் நான் அவதானித்திருக்கிறேன். சரி இவற்றை எல்லாம், அவர் ஒரு நடிகன் அப்பிடி இப்படி அனுசரித்துத்தான் போகவேண்டும் என்று யாராவது சொன்னால், அவரது புரட்சி எங்கே? தமிழ் எங்கே? செம்மணி விடயத்தில் யாரும் குரல்தரலாம். ஆதரவு தந்து கூட்டம் கூடலாம். கொடி பிடித்து படங்களைக் காட்டி ஊர்வலம் போகலாம். அந்த விடயம் அரசியலுக்கு அப்பால் பட்டது. அந்த அவலத்தை வைத்து அரசியல் செய்வதும், தங்கள் இருப்பைக் காட்டுவதும், வியாபாரப் படுத்துவதும் கேவலமான செயல். ஆனாலும் ஒன்று உருத்துகிறதே? "எல்லை தாண்டி மீன்பிடிக்காதீர்கள். ஈழத்தமிழரின் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள். கடல்வளத்தை காக்க வேண்டும்" என்று கூறவே இந்த அமாவாசை சத்தியராஜாவால் முடியவில்லை. ஆனால் செம்மணி சம்பவத்தில் மட்டும் நீதி கேட்கிறார். இது எப்படி நியாயம்? சத்தியராஜ் நடிகராகவே இருக்கட்டும். அவருக்கு புரட்சி, தமிழ், ஈழம் போன்றவை எப்போதுமே அவரது சினிமா முகத்துக்கான அரிதாரங்கள். சுருக்கமாகச் சொல்வதாயின், ஒருவரை "புரட்சித்தமிழன்" என்றும், "பச்சைத் தமிழன்" என்றும் புகழ்வதற்கும் ஒரு வரம்பு இருக்கவேண்டும். உண்மையிலேயே தமிழுக்காக நிற்பவர்கள் யாரென்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். பிம்பங்களுக்குப் பின்னால் உள்ள இயல்பையும் பார்க்க வேண்டும். தமிழன் என்பதால் யாரேனும் ஏதாவது சொன்னால் அப்படியே ஏற்றுக்கொள்கிறோமா? ஒருவனை துரோகி, இன்னொருவனை ஏமாற்றுக்காரன், மற்றவனைக் காட்டிக்கொடுப்பவன், இன்னுமொருவனை சந்தேகத்திற்குரியவன் என்றெல்லாம் அடையாளமிட்டு கொள்கிறோம். நாமே நம்மை பல ரீதியாகப் பிரித்துப் பார்க்கிறோம். நாற்பது வருடங்களுக்கு மேலாக சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராகப் படம் கீறுகிறேன் ஏதாவது ஒரு படமாவது இந்தப் பெருமாள்சாமிக்குத் தட்டுப்படவில்லையே “நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன... மனுஷன் என்ன? ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும்” -அமாவாசை
  3. மிகவும் அரிதாக, எமக்கு ஆதரவாக எழும் ஒரு குரலை - அதுவும் இந்தியாவில் இருந்து எழும் குரலை, அவரின் முன்னாள் தடுமாற்றங்களை வைத்து நாமே வாயடைக்கிறோம் 🤦‍♂️. அதுவும் ஆதரவு எங்கே இருந்து வந்தாலும் அதை வரவேற்று, ஒருங்கிணைக்க வேண்டிய செம்மணி போன்ற ஒரு விடயத்தில். இதற்கு ஒரே காரணம் சத்யராஜ் மகள் இப்போ திமுக என்பதும், அவரின் தற்போதைய திமுக ஆதரவு நிலைப்பாடும் மட்டுமே. இங்கே பலருக்கு ஈழத்தமிழரின் உரிமையை வெல்வதை விட, திமுகவை, அது சார்பானவர்களை எதிர்த்து அதன் மூலம் இறந்து போன கருணாநிதியை வன்மம் தீர்ப்பது மட்டுமே பிரதானமானது. முன்பே சொல்லி உள்ளேன் - சிங்களவர் கூர்ப்பில் முன்னேறிய இனம், ஈழ தமிழர் கூர்ப்ப்பில் பிந்தங்கிய இனம். அந்த கருதுகோளுக்கு இது இன்னொரு உதாரணம்.
  4. விருப்பமில்லாத வரவுசெலவு திட்டம் நிறைவேறியது போல நோபல் பரிசும் விருப்பமில்லா விட்டாலும் கொடுக்க வேண்டி வரலாம்.
  5. புதைகுழி அகழ்வுகள் இந்த அளவில் முன்னெடுக்கப்பட்டு வருவதே பெரிய விடயம். மக்களின் சக்தி இங்குதான் வெளிப்பட வேண்டும். சர்வதேச மேற்பார்வையுடன் முழுமையான விரைவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என யாழ் பொதுமக்கள் அரசியல் மயப்படுத்தப் படாத மாபெரும் பேரணி ஒன்றைச் செய்ய வேண்டும்.
  6. ஈழத்திற்கு ஆதரவாக இருந்த/இருக்கும் தமிழக உறவுகளை,பிரபல்யங்களை விமர்சிக்கலாம் ஆனால் எதிர்க்கக்கூடாது என்பது என் நிலைப்பாடு.
  7. இந்தச் செய்தி இன்னும் @goshan_che கண்ணில் படவில்லை என்பது பெரிய நிம்மதி. 😂
  8. உங்கள் விளக்கத்திற்கு நன்றி இப்படி பார்த்தால் நாம் யாருமே சுத்தமில்லை. தமிழகத்தில் இருந்து சுத்தத்தை எதிர்பார்க்கும் நாம் , நாம் வாழும் நாட்டில் பத்தாய் நூறாய் ....?
  9. இதில் என்ன அதிசயம் .......... இங்கும் வீடு , பணம் , நகை , கார் எல்லாம் குடுத்து சிங்கங்களை கட்டி வைத்திருப்பது உங்களின் கவனத்துக்கு வரவில்லைப் போலும் ....... ! 😂
  10. ஒரு ஊரில் பெரிய ரவுடி ஒருவர் இருந்தால் அவருக்கு கீழ் சில ரவுடிகள் இருப்பார்கள், அந்த ரவுடிகளினை தெரிந்தவர்கள் அவர்களை தெரிந்தவர்க்ளெல்லாம் சும்மா இருப்பவர்களிடம் நான் யார் தெரியுமா? எங்கள் அண்ணன் யார் தெரியுமா என பயமுறுத்தி வம்பிழுப்பார்கள். இவர்களும் பெரிய ரவுடியுடன் எதற்கு வம்பு என இந்த ஏப்பை சாப்பைகளை சகித்து கொண்டிருப்பார்கள், ஆனாலும் அவர்கள் விடமாட்டார்கள் அவர்களை தொடர்ந்தும் வம்பிழுப்பார்கள் ஒரு கட்டத்தில் அது முற்றி சாது மிரண்டால் காடு கொள்ளாது நிலை ஆகிவிடும். மத்திய கிழக்கு நிலையும் கிழக்காசிய நிலையும் வேறு வேறல்ல, இரண்டிடத்திலும் பலவீனமானவர்களை அல்லக்கைகள் வம்பிழுக்கின்றன (பலவீனமானவர்கள் இருக்கும் வரைதான் ரவுடிக்கு வேலை நடக்கும்). மரங்கொத்தி பறவைக்கு தனது ஆற்றலில் மிகையான நம்பிக்கை இருக்கும், பார்க்கும் மரமெல்லாவற்றினையும் கொத்தும் ஆனால் வாழைமரத்தில் அலகு இறுகி மாட்டுப்பட்டுவிடும். நேட்டோ இரஸ்சியாவினை தொடர்ச்சியாக அழுத்தி ஒரு போரினை ஆரம்பிக்க விரும்பியது, ஏற்கனவே பொருளாதார தடையில் இருக்கும் இரஸ்சியாவினை ஒரு போரின் மூலம் இலகுவாக உடைக்கலாம் என நம்பியது. இரஸ்சியாவின் பலத்தினை தொடர் அழுத்தம் மூலம் அழிக்கலாம் என எதிர்பார்த்தது அதற்கு இரஸ்சியாவின் பாதுகாப்பு, பொருளாதாரத்தின் மீதான மீள்தகவு நெகிழ்தன்மையினை (Elastic resistance) தொடர் அழுத்தம் மூலம் உடைக்கலாம் (Break point) என நம்பியது. அது நிகழவேண்டுமாயின் இரஸ்சியாவின் பொருளாதாரம் உடைய வேண்டும் ஆனால் அது நிகழவில்லை. இரஸ்சியா 2014 பின்னர் தனது பொருளாதாரத்தில் பல மாற்றங்கள் மூலம் ஒரு உறுதியான பொருளாதாரமாக மாறியிருந்தது. முக்கியமாக தற்போதய உலகில் காணப்படும் பலவீனமான நிழல் வங்கி முறையினை மாற்றியமைத்தது (Shadow banking system), இன்று பெரிய முக்கிய பொருளாதார சக்தியாக திகழும் அமெரிக்கா, சீனா உள்ளடங்கலாக நாடுகளில் உள்ள இந்த பலவீனமான அமைப்பை மாற்றி அமைத்தது, இதன் மூலம் பொருளாதார பேரிடர் ஏற்படாமல் தவிர்க்கலாம் (2008 அமெரிக்க பொருளாதார பேரிடர் போன்றதோர்). அத்துடன் இந்த நிழல் வங்கி முறைமையில் மிக மிக குறைந்தளவிலான வெளித்தொடர்பினை பேணுதல் மற்றும் முழுக்க முழுக்க நாடு சார்ந்த வங்கி அமைப்பு, இறுக்கமான நாணய கொளகை, தனியான வர்த்தக பரிமாற்று சேவை என பல விடயங்களை மாற்றி அமைத்தார்கள். தற்போது எப்படி ஒரு எலாஸ்ரிக் பாண்டினை அதன் முழு சக்திக்கு அப்பால் இழுத்தால் அறுந்து விடுமோ அதே போல அந்த அழுத்தத்தினை பாதியில் விட்டால் அது தெறித்து இன்னொரு வகையான சேதத்தினை ஏற்படுத்துமோ அந்த நிலையில் உலகை தள்ளி விட்டுள்ளார்கள் (இதில் பலியாக போவது அல்லக்கைகள், ரவுடி ஏற்கனவே கழண்டுவிட்டார்), எதிராளி பற்றிய சரியான புரிதல் இல்லாமல் குடைச்சல் கொடுத்ததன் விளைவாக நிலமை தலைகீழாகி அதே பிரச்சினை திரும்பியுள்ளது. இரஸ்சியாவினை அழிக்கவேண்டுமாயின் (போரில் தோற்கடிக்க) அவர்களின் பொருளாதாரத்தினை முதலில் அழிக்க வேண்டும், ஆனால் இந்த பொருளாதார தடைகளால் அதனை நிறைவேற்ற முடியாது. எதிர்காலத்தில் பல போர் அழிவுகள், பொருளாதார பேரழிவுகள் ஏற்படலாம் அதனை தவிர்க்க சமாதானமே சரியான வழி.
  11. இஸ்ரேலுக்கு ஆதரவாக எழுதிய யாரும் இஸ்ரேலின் படுகொலைகளை ஆதரித்ததாக அல்லது நியாயப்படுத்தியதாக நான் அறியவில்லை. ஆக்கிரமிப்புக்கு உள்ளான தமிழினத்தவர்கள் 10 இலட்சத்திற்கும் அதிகமானவர்களைப் பலிகொண்டு தொடரும் ரஸ்ய ஆக்கிரமிப்பிற்கு ஆதரவளிக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
  12. “செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே!” செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே துயிலாத சடலங்களே கண்மணி மழலைகளும் கதறாத மௌனங்களே செம்மண்ணும் அவர்களைத் தழுவ மறுக்குதே காடையர்கூட்டம் அதன்மேல் கும்மாளம் அடிக்குதே! பாடசாலை சிறுமி சிதறிக் கிடக்கிறாளே பக்கத்தில் இன்னும் அவளின் புத்தகப்பையே புத்தர் போதித்தது மண்ணோடு மண்ணாகிற்றே அப்பாவி உடல்கள்மேல் வழிபாடு நடக்குதே! விலங்குக்கும் சில பண்பாடு உண்டே விபரம் அறிந்தால் நன்மை கிடைக்குமே விளக்கம் இல்லாத மதபோதனை எனோ களங்கப் படுத்துதே புண்ணியப் பூமியை! வரிசையில் எலும்புகள் அவலத்தைச் சொல்லுதே இடையில் சின்னஞ்சிறுசுகள் பாதகத்தைக் காட்டுதே பாவத்தை அழிக்கத் தோன்றிய கௌதமபுத்தனே சிலைசிலையாய் மண்ணைக் கவர்வது எதற்க்கோ! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  13. இந்தப் பதில் உங்கள் ஒற்றைப் பரிமாணப் பார்வையாகத் தான் தெரிகிறது. 33 பில்லியன் ரூமேனியா செலவழித்து ஒன்றியத்தில் இணைந்தால் உடனே 100 பில்லியன் வருமானம் அடுத்த 5 ஆண்டுகளில் கிடைத்து விடும் என்று ரூமேனியார்களே நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால், தங்கள் வாழ்க்கைத் தரம் ஐரோப்பிய தரத்திற்கு உயரும் என்று நம்பியதால் இணைவை ஆதரித்திருப்பார்கள். முதலில், அந்த 33 பில்லியன்களை ரூமேனிய செலவழிக்கக் காரணம், ரூமேனியாவில் (அருகில் இருக்கும் பல்கேரியாவிலும் கூட) இருக்கும் ஊழல், சட்ட ஆட்சி சீர்குலைவு என்பன தான் காரணமாக இருந்திருக்கும் என நம்புகிறேன். மன்னர்கள் ஆட்சியில் இருந்த ரூமேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய தேசங்கள், சோவியத் ரஷ்யாவினால் பலவந்தமாக இணைக்கப் பட்ட பின்னர் அங்கே செல்வம் கொழிக்கவில்லை. மாறாக தனியார் உடைமைகள் பறிக்கப் பட்டு, மக்களும் ஊக்கம், உழைப்புக் குறைந்து பொருளாதாரம் தேங்கிய நிலை தான் உருவானது. அந்தப் பின்னணியில் தான் ரூமேனியர்களும், பல்கேரியர்களும் ஊழல், இலவசங்களை எதிர்பார்க்கும் மனப் பாங்கு என்பவற்றைப் பெற்றுக் கொண்டார்கள். சீரழித்ததே ரஷ்யாவின் முன்னோடி தேசமான சோவியத் ஒன்றியமாக இருக்கும் போது, மேற்கையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் குற்றம் சொல்வதற்கு காரணங்கள் இல்லை!
  14. இப்படி தடுப்பது மத்திய பாஜக அரசு. அதனோடு கூட்டணியில் இருக்கும் எடப்பாடி, அவரோடு சித்தப்பா முறை கொண்டாடும் சீமானை நோக்கி எழுப்ப பட வேண்டிய கேள்வி இது.
  15. ஆமா... ஆமா... அமெரிக்க சுமந்திரன்தான் ட்றம்பு. 😂 சுத்துமாத்திலை...இரண்டும் ஒன்றை ஒன்று வெண்டதுகள். 🤣
  16. சாதரண மக்களின் வாழ்க்கையை விட நடிகர் நடிகைகளின் வாழ்க்கை மிகவும் துன்பமானது . எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாமல் ஏமாந்து போவார்கள். சொத்து ஏமாற்றி பறிக்கப்படும் நடிகர்கள் குடி போதையில் தள்ளாடுவார்கள் வேறு கெடடவை எல்லாம் தொற்றிக் கொள்ளும். இறுதிக் காலம் மிக கஷ்ட்டப்பட்டு போவார்கள். எல்லாருக்கும் ஒரு சீசனுக்கு தான் வருமானம். புத்தியாக முதலிட தப்பிக்க கொள்ள லாம் காலத்தால் அழியாத இன்னிசைப்பாடலகளில். இதுவும் ஒன்று ! என்ன வரிகள், என்ன குரல் இனிமை. இப்படிப்பட்ட பாடல்களை கேட்டு விட்டு , இன்று எதையோ இழந்து நிற்பது போல் உணர்வு.
  17. உண்மையில் உங்கள் கருத்தில் உங்களுக்கே தெளிவின்மை தெரிகிறது. ஈழவிடுதலை போராட்டம் சார்ந்து சத்யராஜ் எப்பொழுதுமே தெளிவாக இருப்பவர். அவரது கடவுள் மறுப்பு கொள்கையால் திராவிடத்தை பிடித்து தொங்க வேண்டிவருவதால் அவர் திராவிட கட்சிகளை ஆதரிப்பது தெளிவு. அது எமக்கு தேவையில்லை என்பது என் நிலைப்பாடு. இவ்வாறு ஒவ்வொருவராக தீக்குளித்து நிரூபிக்க தொடங்கினால் நாம் கூட...?
  18. தம்பி இப்போ சர்வதேச விசாரணைக் குழுவில் உள்ளார். ஆனபடியால் கருத்துக்களை தெரிவிக்க மாட்டார்.
  19. கனடாவுக்குப் போன அத்தானை தேடுது. 😂
  20. தேவிகாவின் நடையைப் பார்த்தீர்களா Suvy? இடை இருக்கிறதா? அல்லது இல்லையா? “பிரமீளா என்ற தேவிகா எவ்வளவு துன்பங்களை அனுபவித்திருக்கின்றார் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்” என்று ஒரு தடவை கண்ணதாசன் பொது வெளியில் சொல்லப் போக, ஒரு கிசுகிசு அப்பொழுது ஓட ஆரம்பித்திருந்தது.
  21. மெய்ப்புப் பார்த்தல் சரிபார்ப்பு மெய்ப்பு நோக்குதல் https://ta.wiktionary.org/wiki/proofreading
  22. தொழிலாளர் கட்சியும் பழமைவாத கட்சியும் வெறும் டுபுக்கு நாம் தமிழர் கட்சியை பிரிதானியா மக்கள் உறுதியாக தேடுவார்கள் - 💪 🔥 NTK political force of மேற்குலகம் 💪 🔥
  23. யார் வரவை தேடுது ?
  24. இல்லை. ஒரு விடயத்துக்காக நினைவு வைத்துள்ளோம். ஐயாவுக்கு கொடுத்த அந்த கொழும்பு 7 வீட்டை மகள் திருப்பி அரசுக்கு கொடுத்து விட்டாவா?
  25. இதெற்கெல்லாம் முன்பே, “திரள்நிதியில் கொழுப்பேன், டெபாசிட்டை கொடுப்பேன்” என்ற மகுடவாக்கியத்தோடு அண்ணன் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார். ஈரோடு கிழக்கு இடத்தேர்தலின் பின் தமிழ்நாட்டின் 2வது பெரிய கட்சியாகிவிட்ட நாதகவை, பிபிசி வேணும் என்றே இந்த கட்டுரையில் புறக்கணித்துள்ளது. புலம்பெயர் தமிழர் ஆதரவுடன் பிரிதானியாவில் நாதக ஆட்சியை கைபற்றி விடல்கூடாது எனும் பயமே இதற்கு காரணம்.
  26. பாரபட்சத்தை பராபட்சம் என பதாகையில் எழுதி உள்ளார். சரி அது ஒரு புறம் கிடக்கட்டும். ஆசிரியர் வட்டாரம் கூறுவது என்ன என்றால் இந்த மாணவன் முன்பும் ஏதோ பிரச்சனைப்பட்டு மருந்து குடித்து வைத்தியசாலை வரை சென்றாராம். ஆள் கொஞ்சம் குழப்படித்தனம் என்றமையால் சுற்றுலாவுக்கு கூட்டிச்செல்வது என்றால் இவர் தனது பெற்றோரையும் அழைத்து வரவேண்டும் என இவரிடம் கூறப்பட்டது. இவரது குழப்படித்தனம் காரணமாக பெற்றோர் இல்லாமல் சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல ஆசிரியர்கள் இணங்கவில்லை. ஆசிரியர்களையும் குறை கூறமுடியாது. சுற்றுலாவில் இவரது குழப்படித்தனம் காரணமாக ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றால் எப்படி பொறுப்பு கூறுவது?
  27. எத்தனையோ “பெருங்கவி”களைப் பார்த்திருக்கிறேன் பழகியிருக்கிறேன். ஆனா முதற்தடவையா இப்புடி ஒரு “கொடுங்கவி” யை இப்பதான் பார்க்கிறேன். Rj Prasath Santhulaki
  28. கேட்கிறன் என்று குறை நினைக்கவேண்டாம் ஒரு தமிழனாய் அவர் சொன்ன வார்த்தைகளில் என்ன பிழை உள்ளது ? இதே சிங்கள அரசியலவாதிகள் தமிழருக்கு எதிராக இனவாதம் கக்கும் போது உங்கள் a1 கார்டூன்கள் பெரிதாக வரவில்லையே என்ன காரணம் ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.