Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்12Points87988Posts -
ரஞ்சித்
கருத்துக்கள உறவுகள்10Points8907Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்5Points33600Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்5Points19109Posts
Popular Content
Showing content with the highest reputation on 07/14/25 in all areas
-
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
மிக சரியான பதில். இப்போ…. இப்படி ஒரு பதிலை சுமந்திரன் அல்லது சாணக்கியன் சொல்லி இருப்பின் எதிர்வினை எப்படி இருக்கும் என கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். கஜனோ, விக்கியோ, லுச்சா டொக்டரோ, மாம்பழமோ இப்படி சொல்லமாட்டார்கள். சொன்னால் என்ன நடக்கும் என அவர்களுக்கு தெரியும். 16 வருடமாக ஏன் ஒரே இடத்தில் நின்று சுத்துகிறோம் என்பதற்கான விடை இதுவே.5 points
-
எதிர்நீச்சல் போட்டு அல்காரஸை வெற்றிகொண்டு சின்னர் முதல் தடவையாக விம்பிள்டன் பட்டத்தை சுவீகரித்தார்
2 pointsPublished By: DIGITAL DESK 2 14 JUL, 2025 | 12:46 PM (நெவில் அன்தனி) விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சீமான்களுக்கான (Gentlemen) ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் யனிக் சின்னர் முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை சூடினார். இதன் மூலம் இந்த வருட விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சீமான்கள் மற்றும் சீமாட்டிகளுக்கான ஒற்றையர் பிரிவுகளில் புதிய இருவருர் சம்பியன்களாகி இருப்பது விசேட அம்சமாகும். சனிக்கிழமை (12) நடைபெற்ற சீமாட்டிகளுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் 2 நேர் செட்களில் வெற்றிகொண்டு சம்பியனானார். சீமான்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் ஸ்பானிய வீரர் கார்லோஸ் அல்காரஸிடம் கடும் சவாலை எதிர்கொண்ட ஸ்பானிய வீரர் யனிக் சின்னர் எதிர்நீச்சல் போட்டு 3 - 1 என்ற செட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பினானார். ஒரு மாத்திற்கு முன்னர் நடைபெற்ற பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் இறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்காரஸிடம் அடைந்த தோல்வியை விம்பிள்டனில் ஈட்டிய வெற்றி மூலம் யனிக் சின்னர் நிவர்த்தி செய்துகொண்டார். லண்டனில் அமைந்துள்ள ஆல் இங்லண்ட் டென்னிஸ் கழக புற்தரையில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற இறுதிப் போட்டியின் முதலாவது செட்டில் 6 - 4 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் கார்லோஸ் அல்காரஸ் வெற்றிபெற்றார். இதன் காரணமாக அல்காரஸ் அடுத்தடுத்து இரண்டு க்ராண்ட் ஸ்லாம் சம்பியன்களை வென்றெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால், அடுத்த மூன்று செட்களிலும் 6 - 4, 6 - 4, 6 - 4 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற யனிக் சின்னர் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார். https://www.virakesari.lk/article/2199492 points
-
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் கிழக்கு மாகாணத்தில் நடந்தன என்பது உண்மைதானே. அவற்றினை அப்போது புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த கருணாவே செய்வித்திருந்தாலும், அவர் அப்போது புலிகளுடந்தான் இருந்தார். நிச்சயமாகத் தலைமைக்குத் தெரிந்தே இவை நடந்திருந்தன. ஒருமுறை என்றால் பரவாயில்லை, பலமுறை முஸ்லீம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டனவே? ஆகவே அதனைச் செய்தது கிழக்கு மாகாணத்திலிருந்த புலிகள் என்றாலும், அதனைச் செய்தது புலிகள்தான். ஆகவே செம்மணியை நாம் விசாரிக்கக் கோரும்போது முஸ்லீம்கள் தாமாகவோ அல்லது சிங்கள அரசுகளால் ஊக்குவிக்கப்பட்டோ தமது கொலைகளுக்கான விசாரணைகளைக் கோருவது தவிர்க்க முடியாதது. இதனை எதிர்கொள்வதற்கு எமக்கிருக்கும் ஒரே வழி அவ்விசாரணைகளை நாமும் ஏற்றுக்கொள்வதுதான். செம்மணியையும் விசாரியுங்கள், குருக்கள் மடத்தையும் விசாரியுங்கள். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நீதியின் தண்டனையினைப் பெற்றுக்கொடுங்கள் என்பதே நாம் முன்வைக்க வேண்டிய கோரிக்கை. ஏனென்றால், முஸ்லீம்கள் குருக்கள்மடக் கொலைகளை விசாரிக்கக் கோருகிறார்கள் என்பதற்காக செம்மணிக்கான விசாரணைகளை நாம் கைவிடமுடியாது அல்லவா?2 points
-
உன்னால் முடியும் தம்பி
2 pointsயாரோ அப்பாவி சின்னப்பையன், பெற்றோரோடு அமர ஆசைப்படுகிறார் என்று நினைத்திருப்பார். அது சரி, தங்களின் பயணக்கட்டுரை எப்போ வெளிவருகுதாம்? படிக்க ஆவல்! கொண்டுவந்த பொட்டலங்கள் பகிர்ந்தளிச்சாச்சா உரியவர்களுக்கு, அன்பானவர்களுக்கு, வேண்டப்பட்டவர்களுக்கு?2 points
-
உன்னால் முடியும் தம்பி
1 pointஉன்னால் முடியும் தம்பி -------------------------------------- இவ்வளவு மலிவாக விமானச்சீட்டை வாங்கி விட்டோமே என்ற சந்தோசம் அமெரிக்காவிலிருந்து கனடா வந்த விமானப் பயணத்திலேயே தொலைந்து போயிருந்தது. அது இன்னொரு கதை. இது அதே மலிவு விலையில் கனடாவிலிருந்து திரும்பி அமெரிக்கா போகும் கதை. எங்கள் நான்கு பேர்களுக்கும் விமானத்தின் நாலு இடங்களில் நடு இருக்கைகளை கொடுத்திருந்தார்கள். கனடா விமான நிறுவனத்தின் இணையதளத்தில் இருக்கைகளை மாற்ற முற்படும் போது, ஒவ்வொரு புது இருக்கைக்கும் பயணச்சீட்டுக்கு கொடுத்திருந்த அளவில் கட்டணம் மீண்டும் கேட்டார்கள். சரி, விமானநிலையத்தில் போய் இலவசமாகக் கேட்டுப் பார்ப்போம் என்று விமான நிலையம் போய்ச் சேர்ந்தோம். கீழே நின்றவர்கள் பெட்டிகளை மட்டும் வாங்கிக் கொண்டார்கள். இருக்கைகள் அவர்களின் பொறுப்பில் வருவதில்லை என்றும், புறப்படும் கதவில் போய் கேளுங்கள் என்றும் சொன்னார்கள். கதவில் நின்ற அழகான, பணிவான பெண்ணிடம் அவரை விட பணிவாக நான் கேட்டேன். சிறிது நேரம் கணினியில் அவர் சுற்றிப் பார்த்தார். பின்னர் இருப்பதெல்லாம் நடு இருக்கைகள் மட்டுமே, அவை கூட முன்னுக்கு பின்னாகவும் இல்லை என்றார். விமானம் விழுந்தால், கடைசிக் கணத்தில் நால்வரும் தனித்தனியாக விழப் போகின்றோமே என்ற கவலையும், அக்கம் பக்கம் சரிந்து அடுத்தவர்கள் தோள்களில் விழாமல் தூங்கி வழியவேண்டுமே என்ற யோசனையுடனும் என்னுடைய நடு இருக்கையில் அமர்ந்தேன். வலக்கை பக்கம் ஒரு பெரிய பெண் வந்து இருந்தார். இடைக்கை பக்கம் ஒரு பெரிய ஆண் வந்து இருந்தார். என்னுடைய கைகளை இன்னும் கொஞ்சம் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டேன். சமீபத்தில் ஒரு இந்தியர் விமானப் பயணத்தின் போது அருகில் இருந்த பெண்ணுடன் ஏதோ செய்து கைது செய்யப்பட்டிருந்தார். கைபடாமல் இருக்க வேண்டும். அந்தப் பெண் ஏதோ எடுத்துக் கொண்டு என் பக்கம் திரும்பினார். அவரின் பெரிய கை என் விலாவில் நேராக இறங்கியது. 'மன்னிக்கவும், மன்னிக்கவும்............' என்று பதறினார். இடைக்கை பக்கம் அமர்ந்திருந்தவர் மடியில் ஒரு புத்தகம் வைத்திருந்தார், 'The Road To Character' என்று புத்தகத்தின் தலைப்பு இருந்தது. இந்த புத்தகத்தை பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை. அதில் இருந்த எழுத்தாளர் பெயரும் கொஞ்சம் கூட பரிச்சயமற்றது. அருகில் இருந்த பெண்ணின் முன்னால் இருந்த சிறிய திரை அப்படியே உறைந்து போய் நின்று கொண்டிருந்தது. அவர் அந்த திரையில் ஒவ்வொரு புள்ளியையும் தனது விரல்களால் அமத்தினார். திரை அசையவே இல்லை. ஒரு விமான பணிப்பெண்ணைக் கூப்பிட்டார். விமானத்தின் இந்தப் பகுதியில் நடுவில் இருந்து வலப்பக்க முடிவு வரை உள்ள எவருக்கும் திரை வேலை செய்யவில்லை என்றார் பணிப்பெண். அங்கே பாருங்கள், இவருடையை திரை கூட வேலை செய்யவில்லை என்று என் முன்னால் இருந்த திரையைக் காட்டினார். நான் பணிப்பெண்ணைப் பார்த்தேன். பணிப்பெண் என்னுடைய திரையைப் பார்த்தார். அருகில் இருந்த பெண் திரையையும் என்னையும் பார்த்தார். நான் அந்த திரையை ஒரு தடவை கூட தொட்டிருக்கவில்லை. அது அப்படியே இருட்டாகவே இருந்தது. சரிசெய்துவிடுகின்றோம் என்றபடியே பணிப்பெண் அங்கிருந்து மெதுவாக நகர்ந்தார். எனக்கு இரண்டு பக்கமும் இருந்தவர்கள் பெரும் குடும்பங்களாக வந்திருந்தார்கள். குழந்தைகள், சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என்று இரு பக்கங்களும் கூட்டங்களாக இருந்தார்கள். அமெரிக்காவை சுற்றிப் பார்க்கப் போகின்றார்கள் என்று அவர்களின் உரையாடல்களில் இருந்து தெரியவந்தது. கொஞ்சம் துணிந்தவர்கள் போல. அதிபர் ட்ரம்பையும் மீறி இவர்கள் கனடாவிலிருந்து அமெரிக்கா வந்து கொண்டிருக்கின்றார்கள். இடக்கை பக்கம் இருந்தவரின் இரண்டு வயதான குழந்தை ஒன்று மிகவும் சந்தோசத்துடன் முன்னுக்கு இருந்த இருக்கையை கால்களால் உதைத்துக் கொண்டேயிருந்தது. சிறிது நேரம் போக, உதை வாங்கிக் கொண்டிருந்தவர், அவர் ஒரு இந்திய பெண்மணி, எழும்பி வந்தார். குனிந்து மெதுவாக அவர்களிடம் ஏதோ சொன்னார். சிரித்துக் கொண்டே உதைக்கும் இரண்டு வயது குழந்தை இப்பொழுது இடம் மாற்றப்பட்டது. தந்தையின் மடியில் அந்தப் புத்தகத்தின் மேல் அமர வைக்கப்பட்டார். எனக்கும் பின்னால் இருந்து இன்னொரு குழந்தையிடம் இருந்து உதைகள் விழுந்து கொண்டேயிருந்தது. பரவாயில்லை, குழந்தைகள் அழாமல், அடம்பிடிக்காமல் வருவதே பெரிய விடயம் என்று பேசாமல் இருந்துகொண்டேன். தந்தையின் மடியில் இருந்து மிகவும் சிநேகபூர்வமாக என்னைப் பார்த்து சிரித்தார். சுருட்டை முடியும், பளிங்குக் கண்களும் கொண்ட ஒரு அழகான பொம்மை போல அந்தக் குழந்தை இருந்தது. திடீரென இரு விரல்களை மடக்கிக் கொண்டு மூன்று விரல்களை காட்டியது. இது இரண்டு விரல்களால் காட்டப்படும் சமாதானத்திற்கும் மேலே. பக்கென்று சிரிப்பு வந்தது. என்னை விட அதிகமாக சிரித்தது குழந்தை. மூன்று விரல்களும், சிரிப்பும், சில கதைகளுமாக பயணம் பறந்து கொண்டிருந்தது. அந்த இந்தியப் பெண் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார். விமானம் நின்றதும் ஒவ்வொருவராக வரிசையில் இறங்கினர். எனக்கு வலது பக்கம் இருந்த பெண் அவரது தலைக்கு மேலே இருந்த அவரது பொருட்களை எடுத்துக் கொண்டு அவரது குடும்பத்துடன் இறங்கினார். என்னுடைய பொருட்கள் இடது பக்கம் மேலே இருந்தது. ஆனால் இடது பக்க குடும்பம் இறங்கவில்லை. எதையோ தேடிக் கொண்டேயிருந்தார்கள். இவர்களுக்கு நடுவில் புகுந்து என்னுடைய பொருட்களை எப்படி எடுப்பது என்றபடியே எழும்பி நின்று கொண்டிருந்தேன். 'ஓ.............. மன்னிக்கவும், உங்களின் பொதி இங்கே மேலேயா இருக்கின்றது................' என்று கேட்டார் அந்தக் குழந்தையின் தாய். ஆமாம் என்றேன். அவரே அதை எடுத்துக் கொடுக்க முன்வந்தார். 'நீங்கள் ஏன் எடுத்துக் கொடுக்க வேண்டும். அவரே எடுத்துக் கொள்வார் தானே............' என்று இழுத்தார் அவரின் கணவர். அந்தப் பெண் அதை காதில் வாங்கிக் கொள்ளாமலேயே என்னுடைய பொதியை எடுத்துக் கொடுத்தார். குட்டிக் குழந்தை மீண்டும் மூன்று விரல்களைக் காட்டி சிரித்தது. அப்படியே வலப்பக்கத்தால் நான் வெளியே வந்தேன். 'The Road To Character' என்ற அந்தப் புத்தகம் அந்த இருக்கையிலேயே அப்படியே திறக்கப்படாமல் கிடந்தது. அது வெறுமனே பயணம் போய் வருகின்றது போல.1 point
-
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
ஏன் சுமந்திரன், சாணக்கியனுக்குப் போவான்? இதை ஜஸ்ரினோ, ஐலண்டோ, கோசானோ சொல்லி விட்டு திட்டு வாங்காமல் போய் விட முடியுமா😂? அது தான் நிலைமை! இத்தனைக்கும் திட்டுவோர் பெரும்பான்மை கூடக் கிடையாது! A disproportionately loud minority!1 point
-
தமிழ் அரசியல் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் கொலை
இதில் பொலிசார் திறமையாக செயற்பட்டு மூன்று கொலையாளிகளும் தப்பி செல்ல விடாது அவர்களை சுட்டு கொலை செய்யப்பட்டது நல்ல விடயம். வீட்டுக்கு விருந்தினர்களாக வந்து அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகிய இருவரின் மனைவிமார் கையால் பிஸ்கட் தேனீரும் வாங்கி குடித்துவிட்டு அவர்களின் கணவரை படுகொலை செய்த நம்பிக்கை துரோகிகளான அயோக்கியர்களை சுட்ட நிசாங்க பாராட்டுக்குரியவர்1 point
-
காசாவில் குடிநீர் விநியோகம் இடம்பெறும் பகுதியில் காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்-சிறுவர்கள் உட்பட பலர் பலி
இன்று காசாவில் பலஸ்த்தீனர்களைக் கொல்வதால் யூத இனம் மீது திட்டமிட்ட இனவழிப்பை நடத்தி 8 மில்லியன் யூதர்களைக் கொன்று ஹிட்லர் செய்தது சரியென்று நீங்கள் கூறுவீர்களாகவிருந்தால், இன்று உக்ரேனில் ரஸ்ஸியா நடத்தும் படுகொலைகளைப் பார்க்கும்போது அதே இரண்டாம் உலக யுத்தத்தில் ஹிட்லரினால் 27 மில்லியன் ரஸ்ஸியர்கள் கொல்லப்பட்டதும் சரியென்று ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று ஆகிறது. காசாவில் இஸ்ரேல் செய்வதை எப்படி நியாயப்படுத்த முடியாதோ அவ்வாறே உக்ரேனில் ரஸ்ஸியா செய்வதையும் நியாயப்படுத்த முடியாது. 8 மில்லியன் யூதர்களை கொன்றது சரியென்றால், 27 மில்லியன் ரஸ்ஸியர்களைக் கொன்றதும் சரியே! (8 மில்லியன் யூதரை ஹிட்லர் கொன்றான் என்று அகமகிழும் குமாரசாமியண்ணை, அதே ஹிட்லர் நீங்கள் ஆதரிக்கும் ரஸ்ஸியர்களில் 27 மில்லியனைக் கொன்றான் என்று அறிந்திருக்கமாட்டீர்கள். அதிலும் 10 மில்லியன் ரஸ்ஸியர்களை இனவழிப்பு எனும் நோக்கத்திலேயே கொன்றான் என்று கூறப்பட்டிருக்கிறது.)1 point
-
தமிழ் அரசியல் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் கொலை
இந்தக் கதையில் வரும் ஒரு பாத்திரமான சேனாதி அண்ணன் வலுசுழியன் பாருங்கோ! கதிரைக்காக கடைசிவரை வாய்திறக்கவே இல்லை!1 point
-
சாட்ஜிபிடி ஒவ்வொரு பதிலுக்கும் இவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்துகிறதா?
பட மூலாதாரம்,@GOOGLE படக்குறிப்பு, அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள கூகுள் போன்ற பல நிறுவனங்களின் தரவு மையங்கள், குளிரூட்டும் அமைப்புகளில் இருந்து தண்ணீரை ஆவியாக்குகின்றன. கட்டுரை தகவல் சாரா இப்ராஹிம் பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) பயன்பாடு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தத் தொழில்நுட்பத்துக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. குளிரூட்டுவதற்கும், அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும் தண்ணீர் அவசியமாகிறது. உலகில் பாதி மக்கள் ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். பருவநிலை மாற்றமும், வளர்ந்து வரும் தேவையும் இந்தப் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. இந்நிலையில், ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்தால், தண்ணீர் பற்றாக்குறை இன்னும் அதிகரிக்குமா? ஏஐ எவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்துகிறது? சாட்ஜிபிடியிடம் கேட்கப்படும் ஒரு கேள்விக்கு ஒரு டீஸ்பூன் தண்ணீரில் 15-ல் ஒரு பகுதி பயன்படுகிறது என்கிறார் ஓபன்ஏஐயின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன். ஆனால், கலிஃபோர்னியா மற்றும் டெக்சாஸைச் சேர்ந்த அமெரிக்க கல்வியாளர்களின் ஆய்வு, வேறு கருத்தைக் முன்வைக்கிறது. GPT-3 மாதிரியில் 10 முதல் 50 பதில்களுக்கு அரை லிட்டர் தண்ணீர் (அதாவது, ஒரு பதிலுக்கு 2 முதல் 10 டீஸ்பூன் தண்ணீர்) பயன்படுவதாக அவர்கள் கண்டறிந்தனர். கேள்வியின் வகை, பதிலின் நீளம், பதில் செயலாக்கப்படும் இடம் மற்றும் கணக்கீட்டில் கருத்தில் கொள்ளப்படும் காரணிகளைப் பொறுத்து தண்ணீர் பயன்பாட்டின் அளவு மாறுபடுகிறது. 10-50 கேள்விகளுக்கு 500 மில்லி தண்ணீர் தேவைப்படுவதாக அமெரிக்க கல்வியாளர்களின் மதிப்பீடு செய்துள்ளனர். இது நிலக்கரி, எரிவாயு அல்லது அணுமின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்காகப் பயன்படும் தண்ணீரையும் உள்ளடக்கியது. ஆனால், சாம் ஆல்ட்மேனின் கணக்கு இதை உள்ளடக்காமல் இருக்கலாம். பிபிசி கேட்டபோது, ஓபன்ஏஐ தனது கணக்கீடுகளின் விவரங்களை அளிக்கவில்லை. இருப்பினும் தண்ணீர் பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு பில்லியன் (100 கோடி) கேள்விகளுக்கு சாட்ஜிபிடி பதிலளிக்கிறது. இது பல ஏஐ (செயற்கை நுண்ணறிவு) புரோகிராம்களில் ஒன்று மட்டுமே எனக் கூறுகிறது ஓபன்ஏஐ. 2027 ஆம் ஆண்டுக்குள், ஏஐ தொழில்துறை ஒவ்வொரு ஆண்டும் டென்மார்க் முழுவதும் பயன்படுத்தும் தண்ணீரை விட 4 முதல் 6 மடங்கு அதிக தண்ணீரை பயன்படுத்தும் என்று அமெரிக்க ஆய்வு ஒன்று மதிப்பிடுகிறது. "நாம் எவ்வளவு அதிகமாக ஏஐ உபயோகிக்கிறோமோ , அவ்வளவு தண்ணீரை நாம் பயன்படுத்துகிறோம்," என்று அந்த ஆய்வு ஆசிரியர்களில் ஒருவரான கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஷோலி ரென் கூறுகிறார். ஏஐ தண்ணீரை எவ்வாறு பயன்படுத்துகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஏஐ (செயற்கை நுண்ணறிவு) பயன்பாடு, குறிப்பாக படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவது, மின்சாரம் மற்றும் தண்ணீருக்கான தேவையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்னஞ்சல் எழுதுவது, கட்டுரைகள் எழுதுதல் அல்லது டீப்ஃபேக் வீடியோக்கள் உருவாக்குதல் போன்ற ஆன்லைன் செயல்பாடுகள், தரவு மையங்கள் எனப்படும் பெரிய கட்டடங்களில் உள்ள கணினி சேவையகங்களால் செயலாக்கப்படுகின்றன. இந்த தரவு மையங்கள் சில நேரங்களில் பல கால்பந்து மைதானங்களைப் போன்று, பெரிய அளவில் கட்டப்படுகின்றன. கணினிகள் வழியாக மின்சாரம் பாய்வதால் இந்த அமைப்புகள் சூடாகின்றன. இவற்றை குளிர்விக்க, பொதுவாக சுத்தமான நன்னீர் பயன்படுத்தப்படுகிறது. குளிரூட்டல் முறைகள் வேறுபடுகின்றன, ஆனால் சில முறைகள் பயன்படுத்தும் தண்ணீரில் 80% வரை வளிமண்டலத்தில் ஆவியாகிவிடுகிறது. ஷாப்பிங் அல்லது இணையத்தில் தேடுதல் போன்ற வழக்கமான ஆன்லைன் செயல்பாடுகளை விட, ஏஐ பணிகளுக்கு, குறிப்பாக படங்கள் அல்லது வீடியோக்களை உருவாக்குவது போன்ற சிக்கலான செயல்பாடுகளுக்கு, அதிக கணினி சக்தி தேவை. எனவே, இவை மிக அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. சர்வதேச எரிசக்தி ஏஜென்சி (IEA) மதிப்பீட்டின்படி, சாட்ஜிபிடியிடம் கேட்கப்படும் ஒரு கேள்விக்கு, கூகுளிடம் கேட்கப்படும் கேள்வியை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த வித்தியாசத்தை துல்லியமாக அளவிடுவது கடினம். அதிக மின்சார பயன்பாடு அதிக வெப்பத்தை உருவாக்குகிறது. இதனால், கணினிகளை குளிர்விக்க அதிக அளவு குளிர்ச்சி தேவைப்படுகிறது. ஏஐ க்கான நீர் பயன்பாடு எவ்வளவு வேகமாக அதிகரித்து வருகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தரவு மையங்களில் ஆன்லைன் செயல்பாட்டைச் செயல்படுத்தப் பயன்படுத்தப்படும் கணினி சேவையகங்களின் நீண்ட அடுக்குகள் உள்ளன. பெரிய ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஏஐ செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவை தனியாக வெளியிடவில்லை. ஆனால், அவற்றின் மொத்த தண்ணீர் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கூகுள், மெட்டா, மற்றும் மைக்ரோசாப்ட் (ஓபன் ஏஐயில் முக்கிய முதலீட்டாளர்) ஆகியவற்றின் சுற்றுச்சூழல் அறிக்கைகளின்படி, 2020 முதல் அவற்றின் தண்ணீர் பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கூகுளின் தண்ணீர் பயன்பாடு இந்த காலத்தில் கிட்டத்தட்ட இரு மடங்காகிவிட்டது. அமேசான் வெப் சர்வீஸ் (AWS) இதுவரை தண்ணீர் பயன்பாட்டு புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை. ஏஐக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், 2030 ஆம் ஆண்டளவில் தரவு மையங்களின் நீர் பயன்பாடு கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என்று சர்வதேச எரிசக்தி ஏஜென்சி (IEA) கணித்துள்ளது. இதில் மின்சார உற்பத்திக்கும், கணினி சிப்கள் தயாரிப்பதற்கும் பயன்படும் தண்ணீரும் அடங்கும். 2024 இல் அதன் தரவு மையங்கள் 37 பில்லியன் லிட்டர் தண்ணீரை நீர் ஆதாரங்களில் இருந்து எடுத்தன. இதில் 29 பில்லியன் லிட்டர் தண்ணீர் "நுகரப்பட்டது", அதாவது பெரும்பாலும் ஆவியாகிவிட்டது என கூகுள் கூறுகிறது. இந்த அதிகமான அளவா என்றால்? அது எதனோடு ஒப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தது. இந்த அளவு தண்ணீரால், ஐ.நா. பரிந்துரைப்படி, 1.6 மில்லியன் மக்களுக்கு ஒரு நாளைக்கு 50 லிட்டர் என்ற குறைந்தபட்ச தேவையை ஒரு வருடத்திற்கு வழங்க முடியும். அல்லது, கூகுள் கூறுவதன்படி, தென்மேற்கு அமெரிக்காவில் 51 கோல்ஃப் மைதானங்களுக்கு ஒரு வருடத்திற்கு நீர்ப்பாசனம் செய்யலாம். வறண்ட பகுதிகளில் தரவு மையங்களை ஏன் உருவாக்க வேண்டும்? சமீப ஆண்டுகளில், ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, மற்றும் அமெரிக்காவின் அரிசோனா போன்ற வறட்சி பாதிப்பு உள்ள பகுதிகளில் தரவு மையங்களுக்கு எதிரான உள்ளூர் எதிர்ப்பு, தலைப்பு செய்தியாகியுள்ளது. ஸ்பெயினில், தரவு மையங்களின் விரிவாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்காக, 'யுவர் கிளவுட் இஸ் ட்ரையிங் அப் மை ரிவர்' என்ற சுற்றுச்சூழல் குழு உருவாக்கப்பட்டது. சிலி மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு, தண்ணீர் பயன்பாடு குறித்த பொதுமக்களின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, கூகுள் தனது தரவு மையத் திட்டங்களை இடைநிறுத்தியோ அல்லது மாற்றியோ உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிலியில், கூகுளின் புதிய தரவு மையம் அதிக தண்ணீரைப் பயன்படுத்தும் என்று அஞ்சி, சுற்றுச்சூழல் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்தன. என்டிடி டேட்டா நிறுவனம், உலகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட தரவு மையங்களை இயக்குகிறது. வெப்பமான, வறண்ட பகுதிகளில் தரவு மையங்களை அமைப்பதற்கு "ஆர்வம் அதிகரித்து வருவதாக" அதன் தலைமை நிர்வாகி அபிஜித் துபே கூறுகிறார். நிலம் கிடைப்பது, மின் உள்கட்டமைப்பு, சூரிய மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மற்றும் சாதகமான விதிமுறைகள் ஆகியவை இந்தப் பகுதிகளை ஈர்க்கக்கூடியதாக மாற்றுகின்றன என்று அவர் விளக்குகிறார். ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது, அரிப்பு (கொரோஷன்) ஏற்படுகிறது. மேலும், கட்டடங்களை குளிர்விக்க அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. இதனால், வறண்ட பகுதிகள் தரவு மையங்களுக்கு சிறந்த இடங்களாகக் கருதப்படுகின்றன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். கூகுள், மைக்ரோசாப்ட், மற்றும் மெட்டா ஆகியவை தங்கள் சுற்றுச்சூழல் அறிக்கைகளில், வறண்ட பகுதிகளில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றன. அந்த நிறுவனங்களின் சமீபத்திய சுற்றுச்சூழல் அறிக்கைகளின்படி, கூகுள் பயன்படுத்தும் தண்ணீரில் 14%, "அதிக" தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளிலிருந்தும், மற்றொரு 14% "நடுத்தர" பற்றாக்குறை உள்ள பகுதிகளிலிருந்தும் எடுக்கப்படுகிறது. மைக்ரோசாப்டின் 46% தண்ணீர், "தண்ணீர் அழுத்தம் உள்ள பகுதிகளிலிருந்து" எடுக்கப்படுகிறது. மெட்டாவின் 26% தண்ணீர் "அதிக" அல்லது "மிக அதிக தண்ணீர் அழுத்தம்" உள்ள பகுதிகளிலிருந்து எடுக்கப்படுகிறது என்றும் அந்த நிறுவனங்கள் வெளியிட அறிக்கைகளின் படி அறியமுடிகிறது. அமேசான் வெப் சர்வீஸ் (AWS) தண்ணீர் பயன்பாடு குறித்து எந்த புள்ளிவிவரமும் வெளியிடவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2024-ல் ஸ்பெயினில் ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக, பார்சிலோனாவிற்கு அருகிலுள்ள ஒரு நீர்த்தேக்கம் கிட்டத்தட்ட காலியாகிவிட்டது. இதனால், நீர் பயன்பாடு குறித்து மக்கள் மத்தியில் அதிக கவலை உருவாகியுள்ளது. குளிரூட்டக்குவதற்கு வேறு வழிகள் உள்ளதா? உலர் அல்லது காற்றால் குளிரூட்டும் முறைகளைப் பயன்படுத்த முடியும், ஆனால் இவை நீர் குளிரூட்டல் முறைகளை விட அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன என பேராசிரியர் ரென் கூறுகிறார். மைக்ரோசாப்ட், மெட்டா, மற்றும் அமேசான் ஆகியவை closed loop குளிரூட்டல் அமைப்புகளை உருவாக்கி வருவதாகக் கூறுகின்றன. இவற்றில், நீர் அல்லது வேறு திரவம் ஆவியாகவோ அல்லது மாற்றப்படவோ தேவையில்லாமல், கணினி உள்ளேயே சுழற்சி செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் வறண்ட பகுதிகளில் இத்தகைய மூடிய வளைய அமைப்புகள் பரவலாகத் தேவைப்படும் என்று துபே கருதுகிறார். ஆனால், இந்தத் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு தேவைப்படும் அந்த தொழில்துறை "இன்னும் ஆரம்ப கட்டத்தில்" தான் உள்ளது என்றும் அவர் கூறுகிறார். ஜெர்மனி, பின்லாந்து, மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில், தரவு மையங்களில் இருந்து வெப்பத்தை மீட்டெடுத்து உள்ளூர் வீடுகளுக்கு பயன்படுத்தும் திட்டங்கள் இயங்குகின்றன அல்லது திட்டமிடப்பட்டுள்ளன. தரவு மையங்களை குளிர்விக்க, நிறுவனங்கள் பொதுவாக சுத்தமான நன்னீரை (குடிநீர் போன்றவை) பயன்படுத்த விரும்புகின்றன. இது பாக்டீரியா வளர்ச்சி, குழாய் அடைப்பு, மற்றும் அரிப்பு ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், சில நிறுவனங்கள் கடல் நீர் அல்லது தொழிற்சாலை கழிவுநீர் போன்ற குடிநீருக்கு தகுதியற்ற நீர் ஆதாரங்களையும் அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்குமா ? ஏஐ தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உதவவும் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, சக்திவாய்ந்த கிரீன்ஹவுஸ் வாயுவான மீத்தேன் கசிவைக் கண்டறிய ஏஐ உதவுகிறது. எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில் போக்குவரத்தை மறுவழிப்படுத்தவும் ஏஐ பயன்படுகிறது. ஏஐயால் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு கல்வி, சுகாதாரம், மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றில் "அளப்பரிய மாற்றத்தை" ஏற்படுத்த முடியும் என்று யுனிசெஃப் (ஐநா குழந்தைகள் நிறுவனம்) புத்தாக்க அலுவலகத்தின் உலகளாவிய இயக்குநர் தாமஸ் டேவின் கூறுகிறார். பட மூலாதாரம்,META படக்குறிப்பு, சில தரவு மையங்கள் வறண்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன, ஆனால் நிறுவனங்கள் தண்ணீரை திறம்பட பயன்படுத்தவும், விநியோகங்களை நிரப்ப உதவுவதாகவும் கூறுகின்றன. ஏஐ (செயற்கை நுண்ணறிவு) நிறுவனங்கள் "மிகவும் சக்திவாய்ந்த மாதிரிகளை உருவாக்குவதற்கு பதிலாக", "திறமையான மற்றும் வெளிப்படையான" முறைகளை நோக்கி போட்டியிட வேண்டும் என தாமஸ் டேவின் கூறுகிறார். தொடர்ந்து பேசிய அவர், நிறுவனங்கள் தங்கள் ஏஐ மாதிரிகளை ஓப்பன் சோர்ஸ் ஆக்க வேண்டும். அதாவது, அனைவரும் இந்த மாதிரிகளை பயன்படுத்தவும், மாற்றியமைக்கவும் முடியும் வகையில் உருவாக்க வேண்டும் என்றும் கூறுகிறார். இது பயிற்சி செயல்முறையில் பயன்படும் அதிக மின்சாரம் மற்றும் தண்ணீரின் தேவையைக் குறைக்கும் என்கிறார் டேவின். இந்த செயல்முறையில், பெரிய அளவு தரவு உள்ளீடு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் பதில்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், லோரெனா ஜாமே-பலாசி எனும் ஒரு சுயாதீன ஆய்வாளர் மற்றும் எத்திக்கல் டெக் சொசைட்டியின் நிறுவனர், வேறொரு கருத்தை முன்வைக்கிறார். பல ஐரோப்பிய அரசுகள், ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் ஐநா அமைப்புகளுக்கு ஆலோசனை வழங்கிய அவர், ஏஐயின் அதிக வளர்ச்சியை சுற்றுச்சூழலுக்கு நிலையானதாக (sustainable) ஆக்குவதற்கு "எந்த வழியும் இல்லை" என்று கூறுகிறார். "நாம் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தை திறமையாக செய்ய முடியும். ஆனால், அதை மிகவும் திறமையாக்குவது, அதிக பயன்பாட்டை உருவாக்கும்." "நீண்ட காலத்தில், பெரிய மற்றும் வேகமான ஏஐ அமைப்புகளை உருவாக்கும் இந்த போட்டியைத் தொடர, நம்மிடம் போதுமான மூலப்பொருட்கள் இல்லை" என்றும் அவர் கூறுகிறார். தொழில்நுட்ப நிறுவனங்கள் என்ன சொல்கின்றன? கூகுள், மைக்ரோசாப்ட், ஏடபிள்யூஎஸ் (Amazon Web Services), மற்றும் மெட்டா ஆகியவை, உள்ளூர் நிலைமைகளைப் பொறுத்து குளிரூட்டல் தொழில்நுட்பங்களை கவனமாகத் தேர்ந்தெடுப்பதாகக் கூறுகின்றன. இந்நிறுவனங்கள் அனைத்தும் 2030-க்குள் "வாட்டர் பாசிட்டிவ்" (water positive) ஆக இருக்க இலக்குகளை நிர்ணயித்துள்ளன. அதாவது இதன் பொருள் என்னவென்றால் , தங்கள் செயல்பாடுகளில், எடுக்கும் தண்ணீரை விட அதிக தண்ணீரை சுற்றுச்சூழலுக்கு திருப்பி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இதற்காக, அவர்கள், காடுகள் மற்றும் ஈரநிலங்களை மீட்டெடுக்கும் திட்டங்களுக்கு நிதியளிக்கின்றனர். நீர் கசிவுகளைக் கண்டறிய உதவுகின்றனர். நீர்ப்பாசனத்தை மேம்படுத்தும் திட்டங்களை ஆதரிக்கின்றனர். ஏடபிள்யூஎஸ் , தனது இலக்கை 41% அடைந்துள்ளதாகக் கூறுகிறது. மைக்ரோசாப்ட் இந்த இலக்கை "நோக்கி முன்னேறி வருவதாகக்" கூறுகிறது. கூகுள் மற்றும் மெட்டாவின் புள்ளிவிவரங்கள், அவர்கள் திருப்பி நிரப்பும் தண்ணீரின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளதைக் காட்டுகின்றன. ஆனால், யுனிசெஃப்பைச் சேர்ந்த தாமஸ் டேவின், இந்த இலக்குகளை அடைய இன்னும் "நீண்ட தூரம் செல்லவேண்டும் " எனக் கூறுகிறார். நீர் மற்றும் ஆற்றல் திறனை மேம்படுத்த "கடினமாக உழைப்பதாக" ஓபன் ஏஐ கூறுகிறது. மேலும், "கணினி ஆற்றலை சிறப்பாகப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம்" என்று வலியுறுத்துகிறது. ஆனால், தண்ணீர் பயன்பாடு குறித்து ஒரே மாதிரியான, தரப்படுத்தப்பட்ட அறிக்கைகள் தேவை. "நாம் அதனை அளவிட முடியாவிட்டால், நிர்வகிக்க முடியாது."என்கிறார் பேராசிரியர் ஷோலி ரென் . - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdjxpg7x22lo1 point
-
இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point
- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- களைத்த மனசு களிப்புற ......!
1 point1 point- சிஸ்ட்டர் அன்ரா
1 pointஒரு கன்னியாஸ்திரி கரவெட்டியை சேர்ந்தவர். அவரும் அந்நேரம் மக்களோடு மக்களாக மக்களுக்காக சேவை செய்தவர். இன்னொருவர் சிவந்தமேனி அழகான முகத்தோற்றமுடையவர் பெயரை மறந்துவிட்டேன் இவர்கள் இருவரும் எனக்கு அநேகமாக தெரிந்தவர்கள் இதிலொருவர் அல்லது அவர்கள் ஒருவருமே இல்லாமல் வேறொருவராக இருக்கலாம் உங்கள் அன்ரா. அவர் யாராக இருந்தாலும், இறைவனில் ஆறுதலடைவாராக!1 point- கருத்து படங்கள்
1 point1 point- சிஸ்ட்டர் அன்ரா
1 pointவாசிக்க கடினமான பதிவு. சில தகப்பன்மாரின் கடுமையான போக்குகளால் பிள்ளைகளின், குறிப்பாக மகன் மாரின் வாழ்க்கைகள் அழிந்து போகின்றன. எனது நெருங்கிய நண்பன்/ வகுப்புத் தோழன். அவனது அப்பா நீதிமன்றத்தில் வேலை செய்பவர், கொஞ்சம் கடுமையான போக்குடையவர். அவனது அண்ணா உயர்தரம் படிக்கும் போது ஒரு பிள்ளையை காதலிக்க தொடங்கினார். அந்த அண்ணா படிப்பிலே மிகவும் திறமைசாலி. மருத்துவம் போகக்கூடியளவு கெட்டிக்காரன். ஒருநாள் தந்தை இந்தக் காதல் விவகாரத்தால் அவருக்கு அடித்து விட்டார். அந்த அண்ணாவும் கோவத்தில் இயக்கத்திற்கு போய்விட்டார். இறுதியாக அவர் வீரச்சாவு. எனது நண்பனும் கெட்டிக்காரன், ஆனால் உயர்தரத்தில் பல்கலை போக முடியவில்லை. இறுதியாக வெளிநாடு போய்விட்டான். அந்த தகப்பனின் நடவடிக்கையால் இறுதியில் கிடைத்த பலன் ஒன்றுமில்லை. காதல், குழப்படி, குடி, புகை தாண்டிதான் அனைவரும் வளரவேண்டும். எனக்கு கிடைத்த அப்பா ஒரு வரம். நாங்கள் மூன்று ஆண் பிள்ளைகள். எங்களை அவர் டேய் என்று கூட ஒருநாளும் கூப்பிட்டது கிடையாது. அடித்திருக்கிறார், ஆனால் அது காரணத்தோடான அடி. இண்டைக்கும் எனக்கு ஏதாவது ஆலோசனை தேவை என்றால் முதலில் கேட்பது அப்பாவைத்தான். இன்னும் இருபது வருடங்களின் பின்னர் அவர் போய்விடுவார். அந்த வெற்றிடத்தை நினைக்கக் கூட முடியவில்லை. உங்கள் அன்ராவின் இறுதி நிகழ்வுக்கு நீங்கள் கண்டிப்பாக போயிருக்க வேண்டும். உங்கள் வாழ்விற்கு ஒளியேற்றி வைத்த அந்த தெய்வத்திற்கு நீங்கள் கொடுத்திருக்கக் கூடிய இறுதி மரியாதை அது. அது உங்களுக்கும் ஒரு முடிவினை, ஆத்ம திருப்தியினை கொடுத்திருக்கும்.1 point- 2025 ஜூன் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர் பணவனுப்பல் 600 மில்லியன் டொலரை கடந்துள்ளது!
இதில் நாங்கள் ஊருக்கு அவ்வப்போது அனுப்புகின்ற நிதியும் அடங்குகின்றதோ? வெளிநாடுகளுக்கு செல்லும் இலன்கையர்கள் தாய்நாட்டுக்கு நிதி அனுப்புகின்றார்கள். ஆனால், பலரின் வாழ்க்கைத்தரம் மோசமான நிலையில் உள்ளது. அதிகளவு குடும்ப உறவு விரிசல்கள் என தொடங்கி கொலைகள் வரை பிரச்சனைகள் செல்கின்றன. இவை பற்றி அவ்வப்போது செய்திகளில் அறிகின்றோம்.1 point- எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !
தவறுதலாக சக்தியினை நிறுத்த முடியாதவாறு வடிவமைத்துள்ளார்கள் என கூறுகிறார்கள் ஆழி (சுவிட்ச்) பக்கவாட்டில் இரண்டு தடுப்புக்கள் தற்செயலாக ஆழியின் மீது கை படுவதனை தவிர்ப்பதற்கு வைத்துள்ளார், மற்றது ஆழியின் இயங்கு நிலையில் இருந்து இயக்கமற்ற நிலைக்கு மாற்றுவதற்கு முதலில் ஆழியினை மேல் நோக்கி இழுத்து பின்னர் இயக்கமற்ற நிலைக்கு மாற்றவேண்டும் அதனால் தற்செயலாக கை படுவதன் மூலம் இயங்காநிலைக்கு மாறாது என கூறுகிறார்கள். ஆனால் இவற்றின் செயற்பாட்டுத்தன்மை (பாதுகாப்பு பொறிமுறை) சரியான நிலையில் இயங்கு நிலையில் இருந்ததா என முழு அறிக்கையில் தெரியவரும், விமான பயணத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட பரிசோதனையில் விமானம் இயங்கு நிலையில் உள்ளதாக கூறுகிறார்கள் அந்த அறிக்கை முழுமையான பரிசோதனை அறிக்கையாக இருந்திருக்குமா என்பது முழுமையான விசாரணையின் பின்னர் வெளிவரும். விமானிகள் ஆரோக்கியமான நிலையில் உள்ளார்கள் என கூறியுள்ளார்கள், இந்த நிலையில் முழுமையான அறிக்கை வெளிவரும் வரை மக்கள் பொறுபுணர்வுடன் செயற்படவேண்டும்.1 point- உன்னால் முடியும் தம்பி
1 point- 2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!
இதை எவ்வளவு பேர் ஆமோதிக்கிறீர்கள் என்று எனக்கு சொல்லத் தெரியாது...ஆனால் இது தான் உண்மை என்பதையாவது புரிந்து கொள்ளுங்கள்...கடந்த பல ஆண்டுகளாக வடக்கு மாகாணம் ஓப்பீட்டு அளவில் ஒரு ஐந்துகுள்ளயாவது வந்தது..இந்த தடவை கடசி நிலைக்கு சென்றிருப்பது புலம் பெயர் மக்களால் என்ற ஒரு குற்றச் சாட்டையும் சில இடங்களில் ஊரிலிருப்வர்கள் எழுதியிருப்பதை காணக் கூடியதாக இருக்கிறது..எல்லாவற்றுக்கும் புலம் பெயர் சமுகம் தான் காரணம் என்றால் ஊரிலிருக்கும் பெற்றோர் என்ன தான் செய்கிறார்கள்...? எமது பெற்றோர் காலம் அதற்கு முந்தைய காலத்தில் உள்ளவர்களின் வீடுகளில் பார்க்கப் போனால் எங்காவது ஒரு வீட்டில் தான் பல்கலைக்கழகம் போனவர்களோ அல்லது அரச உத்தியோகம் பார்த்தவர்களோ இருந்திருக்கிறார்கள்..வளம் குறைந்த காலத்தில் கூட படிக்க வேணும் என்ற ஒரு கோட்பாடோடு இருந்திருக்கிறார்கள் அந்த மக்கள்...அப்படி இல்லாது விட்டாலும் பெற்றோர் அவர்களை கல்வி என்ற ஒன்றுக்கு போக வைக்க வேணும் என்பற்காகவது 'டேய் படிக்காட்டி பிற்காலத்தில் ஆடு மாடு தான் மேய்ப்பாய் என்று பேசியாவது படிக்க வைத்த பெற்றோரும் உண்டு. இப்போ படிக்க முடியாதவர்கள் என்று ஊரில் இருப்பவர்களை சொல்ல இயலாது....காரணம்.அனேகமான வீடுகளில் பல்கலைகழகம் போனவர்களோ அல்லது அரச வேலை செய்வோரோ தாரளாக இருக்கிறார்கள்.அப்படி இருக்கையில் ஏன் கல்வி நிலையில் பின் தங்கிப் போகிறார்கள்...உண்மையாக படிக்க வேணும் எங்கள் தேவைகளை நாங்களே பூர்த்தி செய்ய வேணும் என்ற நிலை அனேகருக்கு இல்லை..வெளியிலிருப்பவர்களை வெருட்டி,உருட்டியாவது பணத்திலிருந்து தேவைப்பட்ட எல்லாவற்றையும் பெற்று கொள்கிறார்கள்..18, 20 வயதுக்குள்ளயே தேவை அற்ற விடையங்களுக்கு அடிமையாகும் இளையவர்கள்..எல்லாவகையான மதுப்பாவனையும் கடந்த கிழமை கூட செய்திகளில் வந்த செய்தி மது அருந்தி விட்டு வாகன விபத்தில் இறந்த முவர்.... இந்த புலம் பெயர்ந்தவர்களும் இல்லாது விட்டால் உங்களுக்கு கேட்டதும் பணம், ஆடம்பர பொருட்கள் என்று வந்து சேராது..சிலருக்கு அலட்டல் எழுத்தாக கூட இருக்கலாம்.வெளி நாடுகளிலிருந்து பகிரப்படும் ஆலயங்களின் நேரடி அஞ்சல் பகுதிகளில் கூட ஊருலிருக்கும் சிலர் வந்து யாராவது எங்களை கூப்பிட்டு விட மாட்டீர்களா...?.ஐ போண் வேணும் வாங்கி அனுப்பி விட மாட்டீர்களா.....?இப்படி கூட தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறார்கள்.. இந்த ஆண்டு வடக்கு மாகாணம் 69-70.அடுத்து வரும் ஆண்டுகளில் எழுதக் கூடடியமாதிரியிருந்தால் ... எழுதுகிறேன்.நன்றி.✍🙏1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அமெரிக்காவில மைக்கல் சாக்சன் கூப்பிடாக ..யப்பானில் சாக்கி சான் கூப்பிட்டாக..1 point- இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதராக எரிக் மேயர்!
1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- களைத்த மனசு களிப்புற ......!
1 point1 point- முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
ட்ரம்பிலிருக்கும், புட்டினிலிருக்கும், மோடியிலிருக்கும், ஸ்டாலினிலிருக்கும், சுமந்திரனிலிருக்கும், சிறிதரனிலிருக்கும் அதே கரிசனை தான் சீமான் மீதும் எங்களுக்கு இருக்கின்றது. இவர்களைச் சார்ந்த மக்களுக்கும், பொதுவாக மற்றவர்களுக்கும் இவர்களால் பயன் உண்டா அல்லது ஏமாற்றப்படுகின்றார்களா என்ற அதே பார்வையைத் தான் நாங்கள் இங்கே முன்வைக்கின்றோம். பல வருடங்களின் முன், முல்லைப் பெரியாறு அணைக்கான போராட்டத்தில் சீமான் பங்குபற்றவில்லை.அப்பொழுது தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நண்பன் கேட்டான், 'நாங்கள் ஏன் சீமானுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்................'. சீமான் பேசும் விடயங்களும், விடுதலைப் புலிகளின் தலைவர் கூட தங்களுக்கு எந்தளவு முக்கியம் என்றும் அவன் கேட்டான். தமிழ்நாட்டு பொதுசனங்களுடன் சீமானுக்கு இருக்கும் பெரிய இடைவெளிகளில் இதுவும் ஒன்று. முதன் முதலில் நீட் பரீட்சையால் தற்கொலை செய்து இறந்து போன அனித்தாவிற்கான போராட்டத்தில் சீமான் பங்குபற்றவில்லை. இதை இயக்குனர் ரஞ்சித் நேரடியாகவே மேடையில் கேட்டார். இன்றும் கூட பங்குபற்றமாட்டார். அதற்கான காரணமும் எங்களுக்கு தெரியும். சீமான் தொல் திருமாவுடன் ஒரு மேடையில் ஏறப் போவதும் இல்லை. பின்னர் இவர் எப்படி ஒரு சமூகப் போராளி ஆகின்றார்................. இவர்கள் பேசும் தமிழ்த்தேசியத்தை தொல் திருமாவோ அல்லது ரஞ்சித்தோ அல்லது அவர்களில் எவரோ ஏற்காததன் பின்னணியும் இதுவே. இங்கு ஒன்றுபட்ட ஒரு தேசியமே இல்லை. ஒரு சிறு வட்டம் மட்டுமே உள்ளது. ராமதாஸும் இவரைப் போன்ற ஒரு சமூகப் போராளியே. ஆணவக் கொலைகளையும், நாடகக் காதல் என்ற சொற்பதத்தையும் தமிழர்கள் மத்தியில் விதைத்து வளர்த்து வைத்திருப்பவர்கள் பாமகவினரே. வாழும் காலத்தில் காடுவெட்டி குரு ஒரு தாதாவாகவே வாழ்ந்து முடித்தார். இவர்கள் சமூகப் போராளிகளா........... இவர்களால் ஒரு பட்டியலின மக்களின் குடிசைக்குள் இன்றும் போக முடியுமா........... 'ஜெய்பீம்' என்ற ஒரு படத்தில் நடித்ததற்காக, அதில் வரும் ஒரு குறியீட்டுக்காக, நடிகர் சூர்யா படும் பாட்டைப் பாருங்கள். இது தான் பாமகவும், ராமதாஸும் சொல்லும் சமூக நீதியா.......... ஒரு சாதி பற்றி மட்டுமே இவர்கள் பேசுகின்றனர். சமூகம் பற்றி அல்ல. பிற சாதியினரை அடக்கி ஒடுக்குகின்றனர். பின்னர் இருவரும் சமூக நீதி, சமூகப் போராளிகள் என்கின்றனர். எம்ஜிஆரின் கட்சி எடப்பாடியாரின் கையால் முடிய வேண்டும் என்று இருக்கின்றது போல....................🫣.1 point- சிரிக்கலாம் வாங்க
1 pointhttps://www.facebook.com/reel/1068324721492941 சடடென யாழ் கள நண்பர் ஒருவர் நினைவு வந்தார்.. யாராக இருக்கும் ? ஈழத்தின் மீது பிரியமானவராக இருக்குமோ? 😃1 point- சிரிக்கலாம் வாங்க
1 pointசிறி நாங்களும் எத்தனை நாள் மனதால் மதில்கட்டி வாழ்ந்துள்ளோம். என்ன ஒரு விசேசம். மதில் உடையும் நாள் முதலிரவை ஞாபகப்படுத்தும்.1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 point1 point- முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவரின் மறைவின் பின், விஜய்காந்தும் முற்றிலும் உடல், உணர்வுகள் தளர்ந்து போக, தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றார்கள். ஆனால் அவ்வாறான ஒரு வெற்றிடம் உருவாகவில்லை. ஸ்டாலின் திமுகவை கட்டுக்குள் வைத்துக்கொண்டார். ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸூம் இணைத்தலைமை என்று அதிமுகவை கொண்டு சென்றார்கள். அதனால் சீமான், கமல் போன்றோரின் நிலையில் எந்த பெரிய மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால், இன்று மீண்டும் ஒரு வெற்றிடம் இருப்பது போல தெரிகின்றது. அதிமுக இருந்த இடம் தெரியாமல் போகப் போகின்றது என்ற ஒரு ஊகம் பரவலாக இருக்கின்றது. அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்திருப்பதே அவர்களின் வீழ்ச்சியை துரிதப்படுத்தக்கூடும். விஜய்யின் தவெக திமுகவிற்கு ஒரு மாற்றாக, இரண்டாவது பெரிய கட்சியாக வரக்கூடும். அந்த நிலையில் தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சியையும் இன்று காண முடியாதுள்ளது. சீமான் இது போன்ற சிறுபிள்ளைத்தனமான போராட்டங்களை கைவிட்டு விட்டு, பெரிய நீரோட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும். இது அவருக்கு கிடைத்திருக்கும் மிக நல்லதொரு சந்தர்ப்பம். இவ்வாறான போராட்டங்கள் - கள் இறக்குதல், ஆடு மாடுகளுக்கான மாநாடு, அடுத்தது என்ன........ கடற்கரையில் வலை பின்னுதலா........? - சிறுபிள்ளைத்தனமான போராட்டங்களே. இந்த வகைப் போராட்டங்களை பாரம்பரியமாகவே சிறு கட்சிகளாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட செய்வதில்லை. இவை இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் பரபரப்பான செய்திகளாக ஓரிரு நாட்களாக வருமேயன்றி வாக்குகளாக மாறப்போவதில்லை. திமுகவோ அல்லது அதிமுகவோ அல்லது தங்களை ஒரு பெரும் கட்சியாக எண்ணும் அவரும் இப்படியான ஒரு போராட்டத்தை நடத்துவதுமில்லை. இவை ஒரு விதத்தில் அசட்டுத்தனமான செயல்களே. நாதக இப்போது செய்ய வேண்டியது திமுக அரசு மற்றும் அதிமுக கட்சி மீது தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை அறிந்து, அதை மூலதனமாக்கி, 2026ம் ஆண்டில் தேர்தலை எதிர்கொள்வதே. தவெக அந்த வழியிலேயே பயணிக்கின்றது. இல்லாவிட்டால், கமல் ஒரு இடத்தில் தேங்கி நின்று இல்லாமல் போனது போலவே நாதகவின் நிலையும் ஆகும்.1 point- 2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!
வரலாற்றில் முதல் 9A *************************** கிளிநொச்சியின் மேற்கு பகுதியில் நகரிலிருந்து சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கிராமம் அது. பெரிதாக எவரும் கண்டுகொள்ளாத ஊர் அது. முக்கியமாக கல்வித்துறையில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சை என்றால் என்ன? க.பொ.த சாதாரன தரப் பரீட்சை பெறுபேறுகள் என்றால் என்ன அந்த பாடசாலையின் பெறுபேறு என்ன என்று எவரும் கேட்டுக்கொள்வதில்லை. வலயக் கல்வி அலுவலகம் மாத்திரம் தனது புள்ளிவிபர பதிவுக்காக பெறுபேறுகளை கேட்டுகொள்வார்கள். அவ்வளவுதான். பாடசாலை ஆரம்பித்த 1993 என நினைக்கின்றேன். அன்று இன்று வரை வளப்பற்றாக்குறை இன்றி இயங்கிய நாட்கள் இல்லை என்றே கூற வேண்டும். 1996 கிளிநொச்சி இடப்பெயர்வுக்கு முன் அந்த பாடசாலையினை தமிழ்த்தினப் போட்டியில் சிறுவர் நாடகத்திலும், கிளித்தட்டு போட்டியிலும் அந்தப் பாடசாலையினை மாவட்ட மட்டத்தில் பலரும் திரும்பி பார்த்தனர். அப்போதே இப்படியொரு பாடசாலை இருக்கிறது என்பது ஏனைய பல பாடசாலைகளுக்கு தெரியவந்தது. அதற்காக உழைத்தவர் அப்போது அந்த பாடசாலையில் தொண்டர் ஆசிரியராக கடமையாற்றி உருத்திரபுரத்தைச் சேர்ந்த சிங்கராசா ஆசிரியர். அவர் அந்த ஊர் மக்களும், மாணவர்களும் சிங்கா சேர் என்று அழைப்பர். இதன் பின்னர் மறுபடியும் அப்பாடசாலையினை எவரும் கண்டுகொள்வதில்லை. இப்படி பல வருடங்கள் கடந்தோடிய நிலையில் தற்போது அப்பாடசாலையினை ஒரு மாணவன் திரும்பி பார்க்க வைத்திருக்கின்றான். சக்திவேல் குயிலன் என்ற அந்த மாணவன் தற்போது வெளியாகியுள்ள க.பொ.த சாதாரன தரப் பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் 9 ஏ பெறுபேறுகளை பெற்றதன் மூலம் அப்பாடசாலையின் வரலாற்றில் முதற் தடவையாக 9ஏ பெற்ற வரலாற்று சாதனையினை ஏற்படுத்தியதன் மூலமே குயிலன் பாடசாலையினையும், ஊரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறான். இந்த ஒரு மாணவன் பெற்ற 9 ஏ ஏன் சாதனை என்றால், வளப்பற்றாக்குறையுடன் இயங்கும் பாடசாலை கல்வியினை பிரதானமாகவும், அந்த ஊரில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் மேலதிக கல்வியையும் மட்டுமே பெற்றிருக்கிறான் குயிலன். வறுமையான குடும்பம், பெற்றோர்கள் கூலித்தொழிலை செய்கின்றவர்கள். தினமும் வேலை கிடைக்காது வரையறுக்கப்பட்ட சொற்ப வருமானம், வசதிவாய்ப்புக்கள் குறைவு, இந்த வயதில் கல்வியை குழப்பும் வகையில் கவனக் கலைப்பான்கள் அதிகம், நகர்புற பிள்ளைகள் போன்று பெற்றோர்களால் மேலதிக வகுப்பு, பிரத்தியோக வகுப்பு, அந்த பயிற்சி புத்தகம், இந்த பயிற்சி புத்தகம் என எதுவும் இல்லை, தம்பி படிச்சனீயா? என்ன படிச்சனீ? இந்த முறை எத்தனை மாக்ஸ்? என கேள்வி கேட்காத பெற்றோர்கள் என அவனை சுற்றி காணப்பட்ட அந்த சூழலுக்குள் இருந்து படித்து அனைத்து பாடங்களிலும் ஏ சித்தி பெறுவது என்பது சாதனைதானே?! இந்த சாதனைக்கு அவனது பாடசாலையும், அந்த கவ்வி நிலையமும், படிப்பதற்கு தடை போடாத அந்த ஏழை பெற்றோரும், அவனது முயற்சியும், உழைப்பும்தான் காரணம். இதன் மூலமே அவன் சாதித்திருக்கிறான். அவனது இந்த சாதனையால்தான் இன்று ஊற்றுப்புலம் என்ற அந்த கிராமத்து பாடசாலையினை பலரும் திரும்பி பார்க்கின்றனர். ஊரும், பெருமைகொள்கிறது. தனது வரலாற்றில் முதல் தடவையாக ஒருவன் 9ஏ பெறுபேறுகளை பெற்றது அவர்களை பெருமை கொள்ள வைக்கிறது. Murukaiya Thamilselvan1 point- வடக்கில் காணி விடுவிப்பு: பொன்சேகா எச்சரிக்கை
உன்னைப்போல ஒரு புண்ணாக்கு புழுத்திக்கும் வாக்கு போடச்சொல்லி தமிழ் அரசியல் செய்த கூட்டம் ஒன்றும் இருக்கு!!!1 point- சிஸ்ட்டர் அன்ரா
1 pointகடந்த 10 ஆம் திகதி காலை. ஆறு மணியிருக்கலாம், கொழும்பிலிருந்து அக்கா தொலைபேசியில் எனக்குக் குறுந்தகவல் அனுப்பியிருந்தாள். சிஸ்ட்டர் அன்ரா இறைவனடி சேர்ந்துவிட்டார் என்பதே அச்செய்தி. மனதில் "அடக் கடவுளே" என்று ஒரு கவலை, சோகம். எப்பொழுதும் எங்களுடன் இருப்பார்கள் என்று நாம் சிலரை நம்பியிருப்போம். அவ்வாறானவர்களில் இழப்பு என்பது உடனடியாக எமக்கு எந்த உணர்வையும் தந்துவிடாதவை. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவர்களின் இழப்பின் பாரிய தாக்கம் எம்மை வருத்தத் தொடங்கும், அவர்கள் இல்லாத வெளியினை உணரத் தொடங்குவோம். அப்படித்தான் சிஸ்ட்டர் அன்ராவும் எனக்கு. அவரது மரணச் செய்தி கேட்டவுடன் யாழ்ப்பாணம் செல்வதா, இல்லையா என்று மனம் சிந்திக்கத் தொடங்க, மாமா தொலைபேசியில் வந்தார்."ரஞ்சித், நானும் மாமியும் போறம், உன்னால வர ஏலாது எண்டு நெய்க்கிறன், நீ இருந்துகொள், நாங்கள் போட்டு வாறம்" என்று கூறினார். அப்போதாவது நான் போயிருக்கலாம், ஆனால் முயலவில்லை, அதற்கும் காரணங்கள் இருந்தன. 2023 இல் அன்ரா உயிருடன் இருந்தபோது அவருடன் பேசிவிட்டு வந்துவிட்டேன், அவரை மகிழ்வுடன் சந்தித்துவிட்டேன், இனிமேல் அவர் இறந்தபின்னர் சென்று என்னத்தைச் செய்ய? என்று எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டு இருந்துவிட்டேன். அவரது இறுதிச் சடங்குகளில் பங்குகொண்டவர்களின் பேச்சினை ஒளிப்படம் மூலம் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. எத்தனையோ பேருக்கு அவர் உதவியிருக்கிறார். வன்னியில் அவருடன் மனநல சேவையில் பணியாற்றிய பெண்மணி தனது பேச்சின்போது கண்கள் கலங்கப் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது மனம் கரைந்துபோனது. எத்தனையோ பேரின் வாழ்வை நல்வழிப்படுத்தி, ஒளியேற்றி, உருவகம் கொடுத்து வழிநடத்தி, தனது கல்வியறிவையும், திறமைகளையும் தனது சமூகத்திற்குக் கொடுத்து, இறுதிவரை தொண்டாற்றிய ஒரு ஆளுமை அமைதியாகிப் போனது. எனது வாழ்நாளில் பல ஆளுமைகளைக் கண்டிருக்கிறேன். இவர்களால் எனது வாழ்வு மாற்றப்பட்டு, வழிநடத்தப்பட்டு வந்திருக்கிறது. இந்த ஆளுமைகளில் முதன்மையானவர் எனது சிஸ்ட்டர் அன்ரா. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்!1 point- சிஸ்ட்டர் அன்ரா
1 pointகத்தோலிக்கப் பாடசாலைகள் கையை விரித்துவிட, மீதமாயிருந்த ஒரே ஆண்கள் தமிழ்ப் பாடசாலை பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி மட்டும்தான். ஆனால் அங்கோ வடக்குக் கிழக்கில் இருந்து யுத்தத்தால் இடம்பெயர்ந்த பல தமிழ் மாணவர்கள் அண்மையில் இணைந்திருந்தமையினால், அங்கும் அனுமதி கிடைப்பது கடிணம் என்றே எமக்குத் தோன்றியது. ஆனாலும் மனம் தளராத அன்ரா, இன்னொரு காலைப்பொழுதில் என்னை அழைத்துக்கொண்டு அங்கு சென்றார். அங்கு அதிபராக இருந்தவர் மட்டக்களப்பைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்று நினைவு. அக்காலை வேளையில் மிகவும் சுருசுருப்பாக பாடசாலைப் பணிகள் நடந்துகொண்டிருக்க, அதிபர் தனது அறைக்கு வரும்வரை அமைதியாகக் காத்திருந்தோம். சிறிது நேரத்தின் பின்னர் அறைக்கு வந்த அதிபரை நாம் சந்தித்தோம். முதலில் என்னைப்பற்றி வினவிய அதிபர், கல்லூரியில் இணைவதற்கு எனக்குத் தகமை இருக்கின்றதா என்று பரிசோதித்தார். சாதாரணதரப் பெறுபேறுகள் முதற்கொண்டு பல விடயங்கள் குறித்துக் கேட்டார். இறுதியில், "சிஸ்ட்டர், எனது வகுப்புக்களில் மாணவர்கள் நிரம்பி வழிகிறார்கள். அவர்களைப் பராமரிப்பதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கிறோம், அப்படியிருக்க உங்கள் பெறாமகனை எப்படி நாம் ஏற்றுக்கொள்வது?" என்று உண்மையான வருத்தத்துடன் வினவினார். "அவனுக்கொரு மூலையில் இருக்கவிட்டாலும், இருப்பான், வாங்கு மேசை கூட வேண்டாம், அவன் சமாளிப்பான்" என்று கூறவும், "சரி, உங்கள் விருப்பம்" என்று ஒரு வகுப்பில் இணைத்துவிட்டார். ஆனாலும் நாமும் பணம் கட்டவேண்டி இருந்தது. ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்கள் என்று நினைவு. பீட்டர்ஸ் கல்லூரியில் கேட்ட 15,000 ரூபாய்களுடன் ஒப்பிடும்பொழுது மிகக்குறைவான பணம். சிஸ்ட்டர் அன்ரா கட்டினார், எங்கிருந்து பணம் வந்திருக்குமோ? எனக்குத் தெரியாது. சரி, பாடசாலை கிடைத்துவிட்டது. இனிமேல் என்னைத் தங்கவைக்க இடம் தேடவேண்டும். அதற்கும் பணம் வேண்டும். யார் தருவார்? இப்படி பல சிந்தனைகள் அன்ராவின் மனதில். அவுஸ்த்திரேலியாவில் வாழ்ந்துவந்த எனது மாமாக்கள் (அன்ராவின் இளைய சகோதரர்கள்) இருவரிடமும் உதவி கேட்டார். ஒருவர் உதவ முன்வந்தார். மற்றையவர் உதவும் நிலையில் இல்லை என்று கூறப்பட்டது.1 point- சிஸ்ட்டர் அன்ரா
1 pointகொழும்பை வந்தடைந்ததும் பம்பலப்பிட்டி, லொறிஸ் வீதியில் அமைந்திருக்கும் கன்னியாஸ்த்திரிகள் மடத்தில் சில நாட்கள் சிஸ்ட்டர் அன்ராவுடன் தங்கியிருந்தோம்.எங்களை எப்படியாவது நல்ல பாடசாலைகளில் சேர்த்துவிடவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். நான் 11 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும்போதே மட்டக்களப்பில் போர் ஆரம்பித்திருந்தது. அக்கா உயர்தரப் பரீட்சைக்காக ஆயத்தமாகிக்கொண்டிருந்தாள். கன்னியாஸ்த்திரிகள் மடம் அமைந்திருந்த பகுதியில் உள்ள தமிழ் மொழிப் பாடசாலையான புனித மரியாள் மகாவித்தியாலயத்தில் அக்காவைச் சேர்த்துவிட்டார். எனக்குப் பாடசாலை கிடைப்பது கடிணமாகவிருந்தது. 1979 ஆம் ஆண்டில் இருந்து 1982 ஆம் ஆண்டுவரை நான் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரியில் எனது சிறுபராயத்தைக் கழித்திருந்தேன். ஆகவே அங்கு சென்று, பழைய மாணவனான எனக்கு அனுமதி தருகிறார்களா என்று பார்க்கலாம் என்று ஒரு காலைப்பொழுதில் என்னையும் அழைத்துக்கொண்டு அக்கல்லூரிக்குச் சென்றார் சிஸ்ட்டர் அன்ரா. நான் படித்த காலத்தில் இருந்ததைக் காட்டிலும் கல்லூரி மிகவும் மாறிப்போயிருந்தது. விசாலமானதாகவும், நவீனமானதாகவும் காணப்பட்டதாக ஒரு பிரமை. கல்லூரி அதிபராகவிருந்த பாதிரியார் ஒருவருடன் என்னை கல்லூரியில் இணைக்க முடியுமா என்று இரைஞ்சுவது போலக் கேட்டுக்கொண்டு நின்றார் அன்ரா. ஆனால் அதிபருக்கோ அதில் சிறிது விருப்பமும் இருக்கவில்லை. கத்தோலிக்கப் பாடசாலையான அக்கல்லூரிக்கு இணையும் மாணவர்கள் பெரும்பாலும் வசதி படைத்தவர்கள். ஆகவே இணையும்போது பாடசாலை வளர்ச்சி நிதிக்கென்று பாடசாலை நிர்வாகம் கேட்கும் பணத்திற்கு அதிகமாகக் கொடுத்து இணைந்துகொள்பவர்கள். அப்படியிருக்கும்போது கன்னியாஸ்த்திரி ஒருவர் கூட்டிவந்திருக்கும் ஏழ்மையான மாணவனை கல்லூரியில் ஏற்றுக்கொள்ள அவருக்கு மனம் வரவில்லை. "மன்னிக்க வேண்டும் சிஸ்ட்டர், தமிழ் மொழி வகுப்புக்களில் இடமில்லை, எல்லா வகுப்புக்களும் நிரம்பி வழிகின்றன, நீங்கள் வேறு பாடசாலை பாருங்கள்" என்று கூறினார். "பாதர், அவனுக்குத் தேவையான மேசையையும், கதிரையினையும் நானே வாங்கித் தருகிறேன், ஏதோ ஒரு மூலையில் அவனையும் இருக்க விடுங்கள்" என்று வேண்டத் தொடங்கினார். எனக்கு முன்னாலேயே எனது அன்ரா அப்பாதிரியாரிடம் இரைஞ்சிக் கேட்பதைப் பார்த்தபோது மிகுந்த கவலையாக இருந்தது. ஆனால் அந்தப் பாதிரியாரோ விடாப்பிடியாகவே மறுத்துவிட்டார். "உங்களுக்கென்று தனியான தமிழ்ப் பாடசாலைகள் இருக்கின்றனவே, அங்கு சென்று கேட்டுப்பாருங்கள்" என்று கையை விரிக்க மிகுந்த ஏமாற்றத்துடன் அன்ராவின் மடம் நோக்கி நடக்கத் தொடங்கினோம். சரி, இனி என்ன செய்யலாம்? கல்கிஸ்ஸையில் இருக்கும் தோமஸ் கல்லூரியில் கேட்டுப்பார்க்கலாம் அல்லது ஜோசப் கல்லூரியில் கேட்டுப்பார்க்கலாம் என்று தனக்குத் தெரிந்த கன்னியாஸ்த்திரிகள், பாதிரிகள் ஊடாக அவர் முயன்று பார்த்தார். இவை எல்லாமே பெருந்தொகைப் பணத்தை பெற்றுக்கொண்டே அனுமதியளிப்பார்கள், பணமின்றி எவருமே உள்ளே வர முடியாது, உங்களின் பெறாமகன் எவ்வளவுதான் கெட்டிக்காரனாக இருந்தாலும் அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதே அனைவரினதும் பதிலாக இருந்தது.1 point- சிஸ்ட்டர் அன்ரா
1 point1990, பேச்சுக்கள் முறிவடைந்து புலிகளுடன் பிரேமதாசா யுத்தத்தினை ஆரம்பித்திருந்த காலம். மட்டக்களப்பின் பலவிடங்களிலும் படுகொலைகள். என்னுடன் கூடப்படித்த பல மாணவர்கள் கொல்லப்பட்டார்கள், அல்லது காணாமலாக்கப்பட்டார்கள். அடிக்கடி நடந்த சுற்றிவளைப்புக்கள், தலையாட்டிகளுக்கு முன்னால் நடந்த அணிவகுப்புக்கள் என்று நகரே அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருந்த கொடிய ஊழிக்காலம் அது. இரவுகளில் கேட்கும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள், மரண ஓலங்கள் என்று தூக்கமின்றி விடுதியில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, பொழுதுகள் கழித்த இரவுகள். எமது விடுதியை இராணுவம் சுற்றிவளைத்தபோது, பாதிரியர்களாக இருந்த விடுதி பராமரிப்பாளர்களுடன் பேசிக்கொண்டே மாணவர்களை நோட்டம் விட்ட சிங்கள இராணுவக் கப்டன். உயர்தரம் படித்துக்கொண்டிருந்த விடுதி மாணவர்களை அழைத்துச் செல்லப்போகிறேன் என்று அவன் அடம்பிடிக்க, பாதிரியார்களோ அவனிடம் கெஞ்சி மன்றாடி அம்மாணவர்களை விடுவித்துக்கொண்ட பொழுதுகள் என்று உயிர் வாழ்தலுக்கான நிச்சயம் இன்றி கடந்துபோன நாட்கள். சில மாதங்களாக மட்டக்களப்பு நகரிலிருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு செல்லும் வீதிகள் முற்றாக மூடப்பட்டு, அகோரமான படுகொலைகள் அரங்கேற்றப்பட்டு வந்தன. மரணங்களை நாள்தோறும் கண்முன்னே கொண்டுவந்து காட்டிய மூன்று, நீண்ட, கொடிய மாதங்கள். ஒருவாறு மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கான புகையிரதச் சேவை வாழைச்சேனையிலிருந்து நடைபெறத் தொடங்கியது. ஆனால், வாழைச்சேனைவரை பஸ்ஸில்த்தான் பயணிக்கவேண்டும். மட்டக்களப்பிற்கும் வாழைச்சேனைக்கும் இடையிலான வீதியின் பகுதியில் அமைந்திருக்கும் முஸ்லீம் பிரதேசங்களில் பஸ்ஸை மறித்து, ஆண்களை இறக்கி வெட்டத் தொடங்கியிருந்தார்கள் முஸ்லீம் ஊர்காவற்படையினர். என்னையும் அக்காவையும் எப்படியாவது பாதுகாப்பாக மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்குக் கூட்டிவந்துவிட வேண்டும் என்று சிஸ்ட்டர் அன்ரா உறுதி பூண்டார். இதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்று, அங்கிருந்து மட்டக்களப்பிற்கு அவர் வந்தார். அக்காவிற்கும் சிஸ்ட்டர் அன்ராவிற்கும் இருக்கக் கிடைத்த ஆசனத்தில், அவர்களின் கால்களுக்குக் கீழே நாள் ஒளிந்துகொள்ள , எங்களைப்போலவே இன்னும் பலரை ஏற்றிக்கொண்டு அந்தப் பஸ் தனது பயணத்தை ஆரம்பித்தது. முஸ்லீம்களால் நடத்தப்படும் படுகொலைகளில் இருந்து பயணிகளைக் காக்கவென செஞ்சிலுவைச் சங்கமோ அல்லது அதுபோன்றதொரு அமைப்போ பஸ்ஸின் முன்னால்ச் செல்ல, மெதுமெதுவாக பஸ் பின்னால் தொடர்ந்து சென்றது. சிலவிடங்கள் பஸ்ஸை மறித்து உள்ளே வர முயன்ற காடையர்களை முன்னால்ச் சென்ற வாகனத்தில் இருந்த அதிகாரிகள் தடுத்துவிட்டனர். வாழைச்சேனையில் புகையிரதத்தில் ஏறும்வரை பஸ்ஸில் இருந்த அனைவரும் உயிர் பிழைப்போம் என்கிற நம்பிக்கையில் இருக்கவில்லை என்றே கூறலாம்.1 point- சிஸ்ட்டர் அன்ரா
1 pointபாடசாலையில் கணிதபாடம் எனக்குப் புரியவில்லை. சின்னையா டீச்சர் சொல்லித் தந்த கணிதம் எனது மூளைக்குள் இறங்கவில்லை. மிகவும் கடிணப்பட்டேன். ஒரு வார விடுமுறை நாளில் என்னைப் பார்க்க விடுதிக்கு வந்த சிஸ்ட்டர் அன்ராவிடம் இதுகுறித்துக் கூறினேன். சிசிலியா பெண்கள் பாடசாலையில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்த அவர், எனக்கு உதவ முன்வந்தார். தாண்டவன்வெளியில் இருந்த அவரது மடத்திற்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் என்னை வரச்சொன்னார். தனது வேலைப்பழுவிற்கு நடுவிலும் எனக்குக் கணிதம் சொல்லித் தந்தார். காலையில் 8 மணிக்கு அங்கு சென்றுவிடும் எனக்கு காலையுணவு, மதிய உணவு என்றெல்லாம் தந்து கணிதம் படிப்பித்தார். எனக்கும் கணிதம் சிறிது சிறிதாகப் பிடிக்கத் தொடங்கியது. அவரிடம் கணிதம் கற்ற சில மாதங்களிலேயே பாடசால்யில் என்னால் ஓரளவிற்கு கணிதம் செய்ய முடிந்தது. கூடவே பேரின்பராஜா சேரும் வந்து சேர்ந்துவிட, கணித பாடம் பிடித்துப் போயிற்று. நான் மட்டக்களப்பில் வசிக்கத் தொடங்கிய முதலாவது வருடத்தில் சிஸ்ட்டர் அன்ரா யாழ்ப்பாணத்திற்கு மாற்றாலாகிச் சென்றார். கவலை என்னை முழுமையாக ஆட்கொள்ள, அவரை வழியனுப்பி வைத்தேன். அக்கா அப்போதும் மட்டக்களப்பிலேயே படித்துவந்தாள். ஆனாலும் சிஸ்ட்டர் அன்ரா போனது மனதை வெகுவாக வாட்டியிருந்தது. சில நாட்கள் அழுதேன், ஆனாலும் வேறு வழியில்லை. வந்தாயிற்று, படித்தே ஆகவேண்டும்.1 point- சிஸ்ட்டர் அன்ரா
1 pointமட்டக்களப்பில் ஒரு சில நாட்கள் சிஸ்ட்டர் அன்ராவின் மடத்தில் தங்கவைக்கப்பட்டேன். அதன்பிறகு புளியந்தீவில் இயங்கிவந்த சிறுவர்களுக்கான விடுதியில் சேர்க்கப்பட்டேன். நோர்வேயில் இருந்து யாரோ ஒருவர் அநாதைகளுக்கென்று அனுப்பிய பணம் எனக்குபடிக்கவும், உயிர்வாழவும் உதவியது. மாதத்திற்கு 450 ரூபாய்கள். சிஸ்ட்டர் அன்ராவே வந்து விடுதியில் கட்டிச் சென்றார். அப்படி ஒவ்வொருமுறையும் வரும்போதும் தன்னைப் பார்க்க வருவோர் கொண்டுவரும் பழங்கள், இனிப்புக்கள் என்று கொண்டுவந்து தருவார். அவரைக் காண்பதற்காகவே நாட்கணக்கில் காத்திருக்கத் தொடங்கினேன். எனக்கான பணத்தினை விடுதிப் பராமரிப்பாளரிடம் கட்டிவிட்டு, வெளியே விருந்தினர்க்காகப் போடப்பட்டிருக்கும் வாங்கில் என்னுடன் இருந்து சிறிது நேரம் பேசிவிட்டு, தான் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அவர் தாண்டவன்வெளி நோக்கிச் செல்வார். அவர் சென்றபின்னரும் அவர் போன வழியே கண்ணிமைக்காது பார்த்துக்கொண்டிருப்பேன். அங்கு எனக்கிருந்த உறவு அவர் மட்டும்தான். எனது அன்னையே என்னைப் பிரிந்துபோவது போன்று துக்கம் கழுத்தினுள் இறுககிக் கிழிக்க, வேறு வழியின்றி விடுதிக்குள் நுழைந்து, தொலைந்துபோவேன். இப்படியே மாதம் ஒருமுறை வருவார், சில நிமிடங்களாவது பேசுவார், அம்மாவின் குரல் அவரிடமும் அவ்வப்போது எட்டிப் பார்க்கும், அம்மாவுடன் பேசுவதுபோன்ற பிரமை ஏற்படும். அன்றிலிருந்து எனக்கு அம்மா அவர்தான் என்று நினைக்கத் தொடங்கினேன். கொடுமையான தகப்பனாரிடமிருந்து என்னை விடுவித்து, தனது சொந்த முயற்சியில், கன்னியாஸ்த்திரியாக இருந்தபோதிலும் என்னை மட்டக்களப்பிற்குக் கூட்டிவந்து, விடுதியில் இடம் எடுத்து, எனக்கான செலவுகளைச் செய்து, பாடசாலையிலும் தனக்குத் தெரிந்தவர்கள் ஊடாக படிக்க உதவிய அவர் அன்னையன்றி வேறு யாராக இருக்க முடியும்?1 point- சிஸ்ட்டர் அன்ரா
1 pointமட்டக்களப்பில் இருந்து விடுமுறைக்காக அக்கா வந்து தங்கியது வெறும் 2 வாரங்கள்தான். அவ்விரு வாரங்களிலும் அக்காவும், எனது சித்தியும் (கன்னியாஸ்த்திரி) எனது தகப்பனாரிடம் மன்றாடாத நாளில்லை. "அவனை என்னுடன் விடுங்கள், நான் படிப்பிக்கிறேன், பாவம், அவனது படிப்பைக் குலைக்கவேண்டாம்" என்றெல்லாம் அவர் மன்றாடிப்பார்த்தார். தகப்பனாரோ சிறிதும் இளகவில்லை. "அவன் போனால் ஆர் வீட்டில வேலையெல்லாம் பாக்கிறது? தென்னை மரங்களுக்கும், பூக்கண்டுகளுக்கும் ஆர் கிணற்றிலை இருந்து தண்ணி அள்ளி இறைக்கிறது? ஆர் புல்லுப் பிடுங்கிறது? ஆர் கடைக்குப் போறது? அவன் இங்கேயே இருக்கட்டும், ஒரு இடமும் விடமாட்டன்" என்று பிடிவாதம் பிடிக்கத் தொடங்கினார். ஆனால் அக்காவும், சித்தியும் தொடர்ச்சியாகக் கெஞ்சவே, "ஒரு சதமும் தரமாட்டன், கூட்டிக்கொண்டு போறதெண்டால், கூட்டிக்கொண்டு போங்கோ" என்று இறுதியாகச் சம்மதித்தார். சிஸ்ட்டர் அன்ரா எனக்காகச் செய்த முதலாவது நண்மை, தகப்பனாரின் கொடுங்கரங்களில் இருந்து , தழைகளில் இருந்து என்னை விடுவித்தது. தினமும் கொடுமைகளையே சந்தித்து, பழக்கப்பட்ட இருண்ட வாழ்வினுள் இருந்து எனக்குக் கிடைத்த முதலாவது விடுதலை. எதற்காக அடிவாங்குகிறேன், எதற்காகத் திட்டப்படுகிறேன் என்கிற தெளிவே இல்லாது தினமும் வாழ்வில் சித்திரவதைகளை அனுபவித்த எனக்குக் கிடைத்த விடுதலை. ஆகவே மகிழ்ந்துபோனேன். அக்காவுடனும், சிஸ்ட்டர் அன்ராவுடனும் மட்டக்களப்பிற்குச் சென்று வாழப்போகிறேன் என்கிற உணர்வே என்னை மகிழ்விக்க, புறப்படும் நாளிற்காகத் தவமிருக்கத் தொடங்கினேன். ஆனால் மனதினுள் இனம்புரியாத அச்சம் ஒன்று தொடர்ச்சியாக இருந்துவந்தது. அதாவது, தகப்பனார் என்னை விடுதலை செய்யச் சம்மதித்திருந்தத்போதும் , கடைசி நாளில்க் கூட அவர் அதனைத் தடுத்து நிறுத்திவிடலாம். தனக்கும் தனது புதிய மனைவிக்கும் சேவை செய்ய என்னை வீட்டிலேயே மறித்துவிடலாம். தெய்வாதீனமாக அது நடக்கவில்லை, இடையிடையே "நீ அங்கை போனால் வீட்டில ஆர் வேலை பார்க்கிறது? ரஞ்சன வேலை செய்யச் சொல்லி ஏவ ஏலாது, அவனுக்கு இன்னும் 10 வயசுதான்..." என்று இடையிடையே சுருதி மாற்றிப் பேசியபோதும் என்னை அவர் மறிக்கவில்லை. போக அனுமதித்துவிட்டார். முதலாவது வெற்றி. எனக்கு, சிஸ்ட்டர் அன்ராவிற்கு, அக்காவுக்கு!1 point- காசாவில் குடிநீர் விநியோகம் இடம்பெறும் பகுதியில் காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்-சிறுவர்கள் உட்பட பலர் பலி
தொழில் நுட்ப கோளாறான விமானம் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தியது? நெதன்யாகு பாவம், அவர் யாரையும் கொலை செய்ய நினைக்கவில்லை. நேற்று சத்துணவுக்கு வரிசையில் நின்ற குழந்தைகளை இலக்கு, இன்று தண்ணீருக்கு நின்ற குழந்தைகள் இலக்கு. ஆனால் அது தொழில் நுட்ப கோளாறா, நெதன்யாகுவின் மூளைக்கோளாறா? போர் முடியுமுன்னோ பின்னோ நெதன்யாகு அரசியலில் இருந்து துரத்தப்படுவார்.0 points- 2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!
நேற்று யாழில் 9A எடுத்த மகள். இன்று தந்தை விபத்தில் பலி! பிள்ளைகளுக்கு உணவு வாங்கி சென்றவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை காப்பாளரான , நயினாதீவை சேர்ந்த பாலேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி, பலாலி வீதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்தில் உணவருந்திய பின்னர் பிள்ளைகளுக்கும் உணவு வாங்கிக்கொண்டு பலாலி வீதியில் துவிச்சக்கர வண்டியில் ஏற முற்பட்டவேளை, வீதியில் மிக வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனம் மோதியுள்ளது. அதில் படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது இரு பிள்ளைகள் பேராதனை மற்றும் ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் நிலையில், இளைய மகள் நேற்று வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A பெறுபேறுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. Selvakumar Natkunasingam0 pointsImportant Information
By using this site, you agree to our Terms of Use.
- இரசித்த.... புகைப்படங்கள்.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.