Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    87988
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    19109
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20010
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    7044
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/15/25 in all areas

  1. விசாரித்தமைக்கு நன்றி! வெள்ளம் வரமுதலே இடர் வானிலை பற்றிய எச்சரிக்கைகள் தொலைபேசியில் சில தடவைகள் வந்ததால், எல்லோரும் வீட்டுக்குப் போய் ஒதுங்கிக் கொண்டோம், அதன் பிறகு தான் ஒரு சீசனில் பெய்ய வேண்டிய மழை இரு மணி நேரங்களில் கொட்டித் தள்ளியது. வீதிகள், கார் தரிப்பிடங்களில் வாகனங்கள் சில இடங்களில் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டிருக்கின்றன. அதிர்ஷ்டவசமாக உயிர் இழப்புகள் இல்லை. ரெஸ்லா போன்ற மின்சாரக் கார்கள் மட்டும் தான் தண்ணீர் மேவிச் சென்றாலும் ஓடக்கூடிய அளவுக்குத் தப்பியிருக்கின்றன. Exhaust pipe இல்லாதது தான் காரணம் என்கிறார்கள்.
  2. இப்படியான திரிகளில் அறுவை ஜோக்குகளை தவிர்க்கலாமே?
  3. அவர் நெருப்புடன் விளையாட மாட்டார். ஆனால் நெருப்பு வந்தால் பூனைக்குட்டிகள் என்ன பாடுபடும் என நினைத்து கவலைப்பட தொடங்கி விடுவார்.
  4. நானும் எப்போதும் ஜோக் அடிக்கும் பேர்வழிதான் அல்வாயான். ஆனால் இந்த திரி ஒரு சிறுமி மீதான பாலியல் அத்துமீறல் பற்றியது. இடம், பொருள், ஏவல்.
  5. அவருக்கு நெருப்பு தண்ணி பூனைக்குட்டி எல்லாமே ஒன்று தான். பிரச்சனை என்றால் நேய் நேய் என்று குரல் கொடுத்தால் காப்பாற்ற ஆள்வரும்.
  6. நாலைந்து புத்தகங்களை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு சாரக்கட்டுடன் ஒருவர் வெள்ளத்தில் நடந்து செல்லும் காணொளி ஒன்று பார்த்தேன்.
  7. சீமானை ஆதரிக்கின்றார்கள் எதிர்க்கின்றார்கள் என்பது ஒரு பக்கம் இருக்க..... சீமானை எதிர்ப்பவர்கள் ஈழத்தமிழர் அழிவுக்கும் ஆதரவற்ற நிலைமைக்கும் உள்ளாக்கியவர்களை ஆதரிப்பது போல் தெரிகின்றது??????? கருணாநிதி அரசியலுக்கு வாய் மூடிய மௌனத்துடன் பாஜக தமிழ்நாட்டிற்குள் புகுந்து விடும் என்ற அச்சம் அவர்களுக்கு.... இவர்கள் சீமானை எதிர்ப்பதன் மூலம் யாரை ஆதரிக்கின்றார்கள் என்ற குழப்பம் உலகளாவிய குழப்பம் கண்டியளோ..😁
  8. 👍.......................... இது ஒரு மோசமான ஏமாற்று வேலை என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். எந்தப் புள்ளியிலும் எல்லாத் திசைகளும் இருக்கின்றது தானே.................... இலங்கையின் தென் கிழக்கே போய்த்தான் அங்கிருந்து தென்கிழக்கை பார்க்க வேண்டுமா............... அப்படியே உட்கார்ந்தாலும் வந்து விடும் படிப்பு................🫣.
  9. எரோபிளேன் எல்லாம் ஓட்டத்தெரியும், ஆனால் கூகிள் மேப் பார்க்க தெரியாதோ🤣
  10. நன்றி ரம் இப்படி ஒன்றே இல்லை என்கிறார்.
  11. இருவரும் நலம் என்பதில் ஆறுதல். ஏனையவர்களும் நலமாய் இருக்கட்டும். புவி வெப்பமயமாதலை கேள்விக்கு உள்ளாக்கும் நாட்டில் இப்படி அடிக்கடி சேதம் வருவது துன்பியல்-நகைச்சுவை (tragic-comedy).
  12. இனி நெருப்புடன் விளையாடாதீங்க ரசோ சார்..🤣
  13. நான் மஹ்தியின் குடும்பத்தில் ஒருவராக இருப்பின், இறுதிவரைக்கும் இவரை மன்னிக்க மாட்டேன். கொன்று, துண்டு துண்டாக வெட்டி உடலை அப்புறப்படுத்த முயன்ற ஒருவர் இவர். காரணம், தனது பாஸ்போர்ட்டினை மஹ்தி வாங்கி வைத்து கொண்டு தன்னை துன்புறுத்தினார் (பாலியல் துன்புறுத்தல் அல்ல) என கூறுகின்றார்.
  14. ஈழப்பிரியரே உங்கள் பிரசன்னம் மனதிற்கு ஆறுதல் தருகிறது.
  15. வெக்கை கூடப்பாருங்கோ....கைகால் சும்மா இருக்காது...அதுசரி இப்ப 1 ..2 மாதம்...இரண்டுபேர்...ஊருக்கு போய் வந்ததவையே....அப்ப ஒரு செய்தியும் வரவில்லையே..🤣
  16. மன்னிக்கவும் அல்வாயன். நான்தான் தவறான தகவலை வழங்கி விட்டேன். மேலே நீங்களும், நிழலியும் கூறியதே சரியான தகவல்.
  17. அங்க துட்டு கூடவோ? ஐயா புறம் ஜேர்மனி?கனடா? சுவிஸ்? வெளிநாடுகளில் இருந்து போகிறவர்கள் தங்கள் மிகவும் கூடிய சொந்தங்களிலேயே கையை காலைப் போடுகிறார்கள். வெளிநாட்டு சாமான்களைக் கொடுத்தே ஒரு கவற'சியை உண்டு பண்ணுகிறார்கள் போல தெரிகிறது. சுலபமாக தப்பாமல் கடும் தண்டனை கொடுக்க வேண்டும்.
  18. பிரியன் சார் ...பாதுகாப்பு முக்கியம் சாரே.....கவனமாக இருங்க...என்ன சாரே போற இடமெல்லாம் தண்ணியும் ..காற்றும் ...நெருப்புமாக இருக்கே... கவனம் கவனம்
  19. சிறுமியின் வாக்குமூலத்தில் தான் அவர் தப்பமுடியுமா இல்லை களி தின்னுவாரா என்பது தெரியும் அண்ணை.
  20. ம். நன்றாகவே தெரியும். பெயரை நான் சொல்லாமல் விட்டதற்கு காரணம் ஒருவேளை அவராக இல்லாமல் இருந்திருந்தால் என்பதற்காகவே. அவர் யாழ்ப்பாண பெண்கள் பாடசாலையில் அதிபராக இருந்திருப்பார் என நினைக்கிறன். அவர்களை இரணைமடுவுக்கு சுற்றுலா கூட்டிச்சென்றபோது தவறுதலாக இரு பெண்கள் குளத்தில் விழுந்து இறந்து விட்டார்கள். இதனால் மிகவும் மனமுடைந்து கஸ்ரப்பட்டார்கள்.
  21. நான் பணி புரியும் பாடசாலையில் 53 A 23 A, B Toatal 177
  22. இங்கு 14 வயது சிறுமியில் கை வைத்தால்.... அங்கிள், ஆயுள் முழுக்க... களி தின்ன வேண்டி வரும். அதுதான்... அங்கிள் ஊருக்கு வந்தவுடன், தனது குரங்கு சேட்டையை ஆரம்பிக்கின்றார்.
  23. இது என்ன ஈழப்பிரியன், காட்டு வெள்ளம் மாதிரி... வெள்ளம் ஓடுகின்றது. நீங்கள் இப்போ நியூயோர்க்கிலா நிற்கிறீர்கள். பாதுகாப்பாக இருக்கவும்.
  24. பொம்பிளைப்பிள்ளைகளை பெடியள் இனி படிப்பிலை அடிக்க ஏலாது போல சிறியர். வீடுகளில் கிச்சின் டிப்பார்ட்மெண்ட் இன்னும் ஒரு 20 வருசத்தில் ஆண்களிடம் முழுதாய் வந்துவிடுமோ?
  25. இதை எவ்வளவு பேர் ஆமோதிக்கிறீர்கள் என்று எனக்கு சொல்லத் தெரியாது...ஆனால் இது தான் உண்மை என்பதையாவது புரிந்து கொள்ளுங்கள்...கடந்த பல ஆண்டுகளாக வடக்கு மாகாணம் ஓப்பீட்டு அளவில் ஒரு ஐந்துகுள்ளயாவது வந்தது..இந்த தடவை கடசி நிலைக்கு சென்றிருப்பது புலம் பெயர் மக்களால் என்ற ஒரு குற்றச் சாட்டையும் சில இடங்களில் ஊரிலிருப்வர்கள் எழுதியிருப்பதை காணக் கூடியதாக இருக்கிறது..எல்லாவற்றுக்கும் புலம் பெயர் சமுகம் தான் காரணம் என்றால் ஊரிலிருக்கும் பெற்றோர் என்ன தான் செய்கிறார்கள்...? எமது பெற்றோர் காலம் அதற்கு முந்தைய காலத்தில் உள்ளவர்களின் வீடுகளில் பார்க்கப் போனால் எங்காவது ஒரு வீட்டில் தான் பல்கலைக்கழகம் போனவர்களோ அல்லது அரச உத்தியோகம் பார்த்தவர்களோ இருந்திருக்கிறார்கள்..வளம் குறைந்த காலத்தில் கூட படிக்க வேணும் என்ற ஒரு கோட்பாடோடு இருந்திருக்கிறார்கள் அந்த மக்கள்...அப்படி இல்லாது விட்டாலும் பெற்றோர் அவர்களை கல்வி என்ற ஒன்றுக்கு போக வைக்க வேணும் என்பற்காகவது 'டேய் படிக்காட்டி பிற்காலத்தில் ஆடு மாடு தான் மேய்ப்பாய் என்று பேசியாவது படிக்க வைத்த பெற்றோரும் உண்டு. இப்போ படிக்க முடியாதவர்கள் என்று ஊரில் இருப்பவர்களை சொல்ல இயலாது....காரணம்.அனேகமான வீடுகளில் பல்கலைகழகம் போனவர்களோ அல்லது அரச வேலை செய்வோரோ தாரளாக இருக்கிறார்கள்.அப்படி இருக்கையில் ஏன் கல்வி நிலையில் பின் தங்கிப் போகிறார்கள்...உண்மையாக படிக்க வேணும் எங்கள் தேவைகளை நாங்களே பூர்த்தி செய்ய வேணும் என்ற நிலை அனேகருக்கு இல்லை..வெளியிலிருப்பவர்களை வெருட்டி,உருட்டியாவது பணத்திலிருந்து தேவைப்பட்ட எல்லாவற்றையும் பெற்று கொள்கிறார்கள்..18, 20 வயதுக்குள்ளயே தேவை அற்ற விடையங்களுக்கு அடிமையாகும் இளையவர்கள்..எல்லாவகையான மதுப்பாவனையும் கடந்த கிழமை கூட செய்திகளில் வந்த செய்தி மது அருந்தி விட்டு வாகன விபத்தில் இறந்த முவர்.... இந்த புலம் பெயர்ந்தவர்களும் இல்லாது விட்டால் உங்களுக்கு கேட்டதும் பணம், ஆடம்பர பொருட்கள் என்று வந்து சேராது..சிலருக்கு அலட்டல் எழுத்தாக கூட இருக்கலாம்.வெளி நாடுகளிலிருந்து பகிரப்படும் ஆலயங்களின் நேரடி அஞ்சல் பகுதிகளில் கூட ஊருலிருக்கும் சிலர் வந்து யாராவது எங்களை கூப்பிட்டு விட மாட்டீர்களா...?.ஐ போண் வேணும் வாங்கி அனுப்பி விட மாட்டீர்களா.....?இப்படி கூட தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறார்கள்.. இந்த ஆண்டு வடக்கு மாகாணம் 69-70.அடுத்து வரும் ஆண்டுகளில் எழுதக் கூடடியமாதிரியிருந்தால் ... எழுதுகிறேன்.நன்றி.✍🙏
  26. யாரையோ பிரிக்க அனுப்பப் போகிறார்கள்.
  27. முற்றுப்புள்ளியா? விமான ஓட்டிகளில் ஒருவர்தான் திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தினார் என ஒரு கருத்து பரவுகின்றது. இன்னும் சரியான காரணம் அறியப்படவில்லை.
  28. இதுதான் ஊடக விபச்சாரம் என்பது.அங்கே சொல்லப்பட் ட கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் ஊடக அறம். மக்கள் நல்லது கெட்துகளை அலசிப்பார்த்து முடிவெடு;பார்கள். ஆனால் இந்த ஊடகம் மக்களை சிந்திக்கத் தெரியாத ஆடுமாடுகள் போல சிததரித்து தமது கருத்துத் திணிப்பைச் செயகிறார்கள். எதிரிக்கு எரிகிறது என்றால் நீ வளர்கிறாய் என்று அர்த்தம்.இதுதான் ஊடக விபச்சாரம் என்பது.அங்கே சொல்லப்பட் ட கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் ஊடக அறம். மக்கள் நல்லது கெட்துகளை அலசிப்பார்த்து முடிவெடு;பார்கள். ஆனால் இந்த ஊடகம் மக்களை சிந்திக்கத் தெரியாத ஆடுமாடுகள் போல சிததரித்து தமது கருத்துத் திணிப்பைச் செயகிறார்கள். எதிரிக்கு எரிகிறது என்றால் நீ வளர்கிறாய் என்று அர்த்தம்.சீமான் எதிர்பாளர்கள் பார்த்து சுய இன்பம் காணுவதற்காக இந்த வீடியோ
  29. வோயஜர் 1 விண்கலம் – ஓர் அற்புதமான விண்வெளிப் பயணம். (Voyager 1 Spacecraft – A Journey Beyond the Stars) நாசாவின் Voyager 1 விண்கலம், 48 ஆண்டுகள் பயணித்து ஒரு ஒளிநாளை மட்டுமே அடைந்துள்ளது. ஒரு ஒளியாண்டு எவ்வளவு பெரியது என்று கற்பனை செய்து பாருங்கள். 🔭 வரலாற்றுப் பின்னணி: வோயஜர் 1 (Voyager 1) என்பது நாசாவின் மிக முக்கியமான விண்வெளிக் கவனிப்புத் திட்டங்களில் ஒன்றாகும். இது 1977 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் முதற்கண் நோக்கம் – கிரகங்களை (Jupiter, Saturn) நேரடியாக ஆய்வு செய்வது. ஆனால் இந்த செயற்கைக்கோள் தனது வேலை முடிந்த பிறகு கூட நம்முடைய சூரியக் குடும்பத்தை விட்டு வெளியே பயணித்து, இப்போது மனிதனால் உருவாக்கப்பட்ட மிக அதிக தூரம் சென்ற சாதனமாக மாறியுள்ளது. 🌌 வோயஜர் 1 இப்போது எங்கே? இது சூரிய மண்டல எல்லையை (heliopause) கடந்த முதல் மனித உருவாக்கம். 2025-இல், வோயஜர் 1 விண்கலம் புவியிலிருந்து சுமார் 162 ஏயு (AU) தூரத்தில் உள்ளது. (1 AU = 1 Astronomical Unit = புவி முதல் சூரியன் வரை உள்ள தூரம் = சுமார் 15 கோடி கி.மீ.) எனவே: 162 AU \times 150 மில்லியன் கி.மீ = சுமார் 24.3 பில்லியன் கி.மீ. 🚀 எவ்வளவு ஆண்டுகள் பயணித்தது? 1977 முதல் 2025 வரை = 48 ஆண்டுகள்! இந்த 48 ஆண்டுகளில், வோயஜர் 1 இடைவிடாது சூரிய மண்டலத்திலிருந்து வெளியே சென்றுகொண்டே இருக்கிறது. ✨ ஒளி ஆண்டுகளில் வோயஜர் 1 எவ்வளவு தூரம் சென்றுள்ளது? ஒளி ஆண்டு = ஒளி ஒரு ஆண்டில் பயணிக்கும் தூரம் = சுமார் 9.46 டிரில்லியன் கி.மீ. வோயஜர் 1-இன் தூரம் = சுமார் 24.3 பில்லியன் கி.மீ. \frac{24.3 \text{ பில்லியன் கி.மீ.}}{9.46 \text{ டிரில்லியன் கி.மீ.}} = \approx 0.0026 \text{ ஒளி ஆண்டு} > 👉 அதாவது வோயஜர் 1 விண்கலம் சுமார் 0.0026 ஒளி ஆண்டுகள் தூரம் சென்றிருக்கிறது. 🛰️ வோயஜர் 1 – முக்கிய தகவல்கள்: விவரம் மதிப்பு ஏவப்பட்ட ஆண்டு 1977 பயணித்த ஆண்டுகள் 48 ஆண்டுகள் சூரிய மண்டல எல்லை கடந்த ஆண்டு 2012 புவியிலிருந்து தூரம் சுமார் 24.3 பில்லியன் கி.மீ. ஒளி ஆண்டுகளில் சுமார் 0.0026 light years தற்போதைய வேகம் சுமார் 61,000 கி.மீ/மணிநேரம் 🌍 அது எதைக் நோக்கி பயணிக்கிறது? வோயஜர் 1, சூரிய மண்டலத்தை விட்டு வெளியே சென்று "interstellar space" எனப்படும் நட்சத்திரங்களுக்கு இடையிலான வெளிக்கோளத்தில் பயணிக்கிறது. அது ஒரு சிறிய நட்சத்திரமாகிய AC +79 3888 (எண்) என்ற திசையில் பயணிக்கிறது. ஆனால் அந்த நட்சத்திரத்தை அடைய 40,000 ஆண்டுகள் ஆகும். 📻 இன்னும் தொடர்பு உள்ளதா? ஆம்! வோயஜர் 1 இப்போது மிகவும் மெல்லிய சிக்னல்களை NASA-வின் Deep Space Network மூலம் அனுப்பி வருகிறது. ஆனால் 2025க்கு பிறகு அதன் சக்தி முழுமையாக முடிவடையும், அதன்பின் தொடர்பு முடங்கும். 📦 வல்லரசுகளுக்கான "கோல்டன் ரெகார்ட்": வோயஜர் 1-இல் ஒரு தங்க பதிவுத் தட்டு (Golden Record) உள்ளது – இதில் பூமியைப் பற்றி ஒலிக்கோப்புகள், மொழிகள், இசை, மனிதன் மற்றும் இயற்கையின் படங்கள் உள்ளன. இது வெளிநாடிகளுக்கு ஒரு அறிவிப்பாகும் – “நாம் இங்கே இருக்கிறோம்!” என்று. 🔚 முடிவுரை: வோயஜர் 1 என்பது ஒரு சாதாரண விண்கலமாக அல்ல, அது மனித அறிவு மற்றும் ஆர்வத்தின் ஒரு சிலை. 48 ஆண்டுகளாக பயணித்து இன்னும் தொடர்கிறது – புவியின் சிறிய உலகத்திலிருந்து பிரபஞ்சத்தின் நெடுந்தூரங்களை நோக்கி. இது நமக்கெல்லாம் நினைவூட்டுவது: > "அறிவும் கனவுகளும் இணைந்தால், நட்சத்திரங்களை தொட முடியும்!" குறிப்பு : தற்போதைய வேகம்: 17 கி.மீ/விநாடி (அதாவது ஒரு விநாடிக்கு 17 கிலோமீட்டர் பயணம்!) 48 ஆண்டுகள் பயணித்துக் கொண்டிருக்கிறது எனில் நம்முடைய சூரிய மண்டலமே எவ்வளவு பிரம்மாண்டம்.. இப்படி இருக்க பிரபஞ்சத்தை யாரால் கணிக்க முடியவில்லை.. ஆனால் அதற்குள் தான் நாம் இருக்கிறோம் அது நமக்குள் இருக்கிறது.. நாம் அதை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கின்றோம் என்பது மிகவும் சுவாரசியம். R Ahilesh
  30. தகவலுக்கு நன்றி கோசான். இதைப்பற்றி @தனிக்காட்டு ராஜா இன்னும் விபரமாக தெரிந்திருக்கலாம்.
  31. உயர்விலும் உயர்வுநவிற்சி - சுப.சோமசுந்தரம் பொதுவாக உயர்வுநவிற்சி என்பது இலக்கிய இன்பத்திற்கான ஒரு மரபு; இலக்கியச் சுவை கூட்டும் முயற்சி. எடுத்துக்காட்டாக, பிரிவாற்றாமையில் வாடும் தலைவிக்குத் தோலில் ஏற்படும் ஒரு மாற்றம் அல்லது தாக்கம் பசலை எனப்படுவது. அச்சூழலில் உள்ளத்தின் பிரதிபலிப்பாய் உடல் இயங்கும் இயற்கை நிகழ்வாகப் பசலை இருக்கலாம். அவ்வாறெனில் அதனை உயர்வுநவிற்சி எனச் சொல்வதற்கில்லை. இயற்கை நிகழ்வெனில் இக்காலத்திலும் அது பிரிவாற்றாமையின் வெளிப்பாடாக அமைதல் வேண்டும். அவ்வாறான வெளிப்பாடு இன்றைய அறிவியல் உலகில் பதிவு செய்யப்படவில்லை. எனவே பசலையை ஒரு இலக்கிய மரபாகவே கொண்டு அதனை உயர்வுநவிற்சியாய் வகைப்படுத்துதல் நம் பகுத்தறிவுக்கு எட்டுகின்ற பொருளாய் இப்போதைக்குத் தோன்றுகிறது. இது தொடர்பாகப் பொதுவான புரிதல் என்னவென்றால் தலைவியை சொல்லிக் கொள்ளும் அளவு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி தலைவன் பிரியும்போது தலைவிக்குப் பசலை நோய் தோன்றிப் பிறரறிய அவளது வாட்டத்தை அறிவிக்கும் என்பதாம். ஆனால் வள்ளுவனோ ஒரு படி மேற்சென்று, அணைத்தலின் நெகிழ்வில் ஏற்படும் பிரிவைக் கூடத் தாங்கவொண்ணாத தலைவியின் கண்களில் பசலை படர்ந்ததாய்க் கூறி நம்மை நெகிழ வைக்கிறான். அஃது உயர்விலும் உயர்வுநவிற்சி. "முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண்" (குறள் 1239; உறுப்பு நலன் அழிதல்) குறளின் பொருள் : அணைத்தலுக்கிடையே (முயக்கிடை) குளிர்ந்த காற்று அவர்களை ஊடறுத்துச் செல்ல (தண்வளி போழ), அப்பேதையின் குளிர்ந்த பெரிய கண்களைச் (பெருமழைக் கண்) சுற்றிப் பசலை படர்ந்ததாம். அடுத்து நாம் கையிலெடுக்க எண்ணுவது 'இடை'யில் வந்த உயர்வுநவிற்சி. மங்கையவள் மெல்லிய இடையினள் எனச் சொல்ல, அவள்தன் எடையைத் தாங்க இயலாத இடை பற்றிப் பேசும் பரவலான உயர்வுநவிற்சி. "தழையணி அல்குல் தாங்கல் செல்லா நுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக அம்மெல் ஆக நிறைய வீங்கிக் கொம்மை வரிமுலை செப்புடன் எதிரின" (குறுந்தொகை பாடல் 159 ன் வரிகள்) என்று தோழி கூற்றாக வரும் குறுந்தொகைப் பாடல் வரிகள் நினைவில் கொள்ளத்தக்கன. பாடல் வரிகளின் பொருள் : தழை ஆடையையே (தழையணி) தாங்கவொண்ணாத (தாங்கல் செல்லா), அடிவயிற்றின் (அல்குல்) மீது அமைந்த இடைக்குத் (நுசுப்பிற்கு) துன்பம் அளிப்பதாக (எவ்வமாக) அழகிய (அம்) மெல்லிய (மெல்) மார்பில் (ஆகம்) நிறைவாகப் (நிறைய) பெருத்துத் (வீங்கி) திரட்சியுடன் தேமல் போன்ற நுண்ணிய வரிகளுடன் திகழும் முலையானது (வரி முலை) குங்குமச் சிமிழை (செப்புடன்) ஒத்து இருந்தது (எதிரின). அவளது திரண்ட மார்பகத்தின் எடை தாங்காத இடை பேசப்பட்டுள்ளது. அடுத்து, "உபய தனம் அசையில் ஒடியும் இடைநடையை ஒழியும் ஒழியுமென ஒண்சிலம்பு அபயம் அபயமென அலற நடைபயிலும் அரிவை மீர்" (கலிங்கத்துப் பரணி; பாடல் 58) என்று கலிங்கத்துப் பரணியிலும் ஒடியும் இடை காணலாம். பாடற் பொருள் : முலையிரண்டும் (உபய தனம்) அசைகையில் இடை ஒடியுமாதலால் நடையை விட்டொழியும் என்று கூறும் ஒளி பொருந்திய காற்சிலம்பு (ஒண் சிலம்பு), 'அபயம் அபயம்' என்று அலறும் அளவு நடை பயிலும் அரிவையரே !(பெண்ணின் ஏழு பருவ நிலைகளில் ஒன்று; 20-25 வயதினர்). பக்திப் பாடலும் இடையை விட்ட பாடில்லை. இதோ தாயுமானவர் பாடல் : "மின்போலும் இடை ஒடியும் ஒடியும் என மொழிதல் போல் மென்சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப வீங்கிப் புடைத்து விழ சுமை அன்ன கொங்கை மட மின்னார்கள்" (தாயுமானவர் பாடல்கள் - 12 120/1). பாடற் பொருள் : அழகிய மடந்தையரின் (மடமின்னார்கள்) வீங்கிப் புடைத்து விழும் முலைகளின் (கொங்கை) சுமையினால் மின்னல் போன்ற இடை ஒடியும் ஒடியும் என்று அறிவிப்பது போல் அவர்களின் மென்மையான காற் சிலம்புகள் ஒலிக்கின்றன (ஒலிகள் ஆர்ப்ப). இதுகாறும் நாம் கண்ட உயர்வுநவிற்சி உடல் எடையைத் தாங்காத இடை பற்றியது. வழக்கம்போல் வள்ளுவன் ஒரு படி மேற்சென்று மலர்க் காம்பின் எடை கூடத் தாங்காத இடையைக் குறிப்பது உயர்விலும் உயர்வுநவிற்சி. "அனிச்சப்பூ கால்களையாள் பெய்தாள் நுசிப்பிற்கு நல்ல படாஅ பறை" (குறள் 1115; நலம் புனைந்துரைத்தல்) மலர்களில் மென்மையானது அனிச்சம். அந்த அனிச்சப் பூவின் காம்பினைக் (கால்) களையாமல் சூடிக் கொண்டாள் (பெய்தாள்). மென்மை மலருக்கு மட்டுந்தானே ! காம்பிற்கு இல்லையே ! எனவே அக்காம்பின் கனத்தைக் கூடத் தாங்க இயலாத அவளது இடை வருத்தத்திற்கு (நுசிப்பிற்கு) – இடை ஒடிந்ததற்கு – நல்ல பறை படவில்லை (ஒலிக்கவில்லை). அஃதாவது சாப்பறை (இழவு கொட்டு) ஒலித்தது. எங்கள் இல்லத்தின் முற்றத்தில் ஒரு ஓரமாக முடங்கிக் கிடந்த உரலை (ஒரு காலத்தில் உயிரோட்டமாய் இருந்து, கிரைண்டர் யுகத்தில் தான் முடக்கப்பட்டதால் நம்மையும் முடங்க வைத்த பொருள்) நகர்த்த வேண்டியிருந்தது. தனியாளாய் நான் முயல, அந்நேரத்தில் வந்த என் ஆருயிர்த்தோழன், “எலேய் ! தனியாவா தூக்குத ? ஒம் முதுகெலும்பு ஒடிஞ்சி இன்னிக்கு எழவுக் கொட்டு அடிக்கணும்ல !” என்றான். இந்த மிகைப்படுத்தலை வள்ளுவன் மேற்கண்ட குறளில் மக்களிடமிருந்து எடுத்தாளக் காண்கிறோம். பாமரன் கோடு போட்டால் பாவலன் ‘ரோடு’ போட வேண்டாமா ? அதுதானே இலக்கிய இன்பம் ! பின் குறிப்பு : 'அனிச்சப் பூ கால் களையாள்' குறள் எனது கட்டுரைகளில் இதற்கு முன் எடுத்தாண்டதுதான். கட்டுரையிலுள்ள குறுந்தொகை, கலிங்கத்துப் பரணி பாடல்கள் முகநூல் அன்பர் கார்த்திக் அவர்களால் கவனம் பெற்றேன். எனவே எனது இக்கட்டுரையை அவருக்கே அன்புடன், நன்றியுடன் காணிக்கை ஆக்குகிறேன்.
  32. பட மூலாதாரம்,ANI ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார். வயோதீகம் காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைபாட்டால் அவதிப்பட்ட கோட்டா சீனிவாச ராவ், ஹைதராபாத்தில் உள்ள அவருடைய வீட்டில் இன்று (ஜூலை 13) அதிகாலை காலமானார். வில்லன், குணச்சித்திர நடிகர் என எத்தகைய கதாபாத்திரத்தையும் ஏற்று அதற்கு தக்க வகையில் நடிக்கும் திறமை உடையவர் என்று திரையுலக பிரபலங்கள் தங்களின் அஞ்சலி குறிப்பில் தெரிவித்துள்ளனர். கோட்டா சீனிவாச ராவ் நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்டவர். நாற்பதாண்டு கால திரையுலக வாழ்வில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் 750-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். தமிழில் பெயர் வாங்கிக் கொடுத்த 'பெருமாள் பிச்சை' கடந்த 2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'சாமி'. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் 'பெருமாள் பிச்சை' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தனது தனித்துவ நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். அவருக்கு தமிழில் இதுதான் முதல் படம். தொடர்ந்து அவர் தமிழில், 'குத்து', 'ஜோர்', 'ஏய்', 'திருப்பாச்சி', 'பரமசிவன்', 'சத்யம்', 'கோ', 'சாமி 2', 'காத்தாடி' என பல படங்களில் நடித்து தனது வில்லத்தனத்தால் பாராட்டப்பட்டவர் கோட்டா சீனிவாச ராவ். கார்த்தி - சந்தானத்துடன் இணைந்து 'அழகுராஜா' என்ற திரைப்படத்தில் நகைச்சுவையிலும் அவர் கலக்கியிருப்பார். வில்லன் கதாபாத்திரங்களில் அசத்திய சீனிவாச ராவ் இளம் வயதில் அவருக்கு மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்தது. பின்னாட்களில், நாடக கலையால் ஈர்க்கப்பட்ட அவர் திரையுலகிற்கு வந்தார். குணசித்திர வேடங்களில் மட்டுமில்லாமல் வில்லன் கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தவர் அவர். கிராமப் புறத்தில் வாழும் நபர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திய அவர், நவ நாகரிக கதாபாத்திரத்திற்கு ஏற்றபடியும் நடிப்பில் அசத்தினார். தெலுங்கில் கிருஷ்ணா, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், நாகர்ஜுனா போன்ற பிரபலங்களில் அவர் நடித்துள்ளார். தமிழில் விக்ரம், விஜய், சிலம்பரசன் ஆகியோரின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கன்னடம், மலையாளம், இந்தி மொழித் திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். 'ஆஹா! நா பெல்லண்டா' என்ற படத்தில் பிசினாரி என்ற கதாபாத்திரத்தில் அவரின் நடிப்பு பல பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. வெங்கடேஷ் நடிப்பில் வெளியான கணேஷ் திரைப்படத்தில் அரசியல் தலைவராக நடித்திருக்கும் அவர் தெலுங்கானாவுக்கே உரித்தான தெலுங்கு பேச்சுவழக்கில் மிரட்டியிருப்பார். நகைச்சுவை உணர்வுக்காக நன்கு அறியப்பட்டவர் அவர். பட மூலாதாரம்,UGC அரசியல்வாதியாகவும் சீனிவாச ராவ் நடிப்பில் மட்டுமின்றி அவர் அரசியலிலும் ஆர்வம் செலுத்தினார். விஜயவாடா கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1999-ஆம் ஆண்டு அவர் பாஜக சார்பில் அந்த தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்புத் திறமைக்காக பல விருதுகளையும் அவர் வென்றுள்ளார். நந்தி, சைமா உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற அவருக்கு 2015-ஆம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது வழங்கி கௌரவித்தது இந்திய அரசு. திரையுலகினர் இரங்கல் கோட்டா சீனிவாச ராவின் திறமையான நடிப்பு குறித்து பல நேரங்களில் நடிகர்களும் இயக்குநர்களும் புகழ்வது உண்டு. மூன்று நாட்களுக்கு முன்பு ஜூலை 10 அன்று, கோட்டா சீனிவாச ராவின் பிறந்த நாளை ஒட்டி இயக்குநர் திரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் "நடிகர்கள் உங்களை சிரிக்க வைக்கலாம். சிலர் உங்களை அழ வைக்கலாம். ஆனால் கோட்டாவால் மட்டுமே உங்களை சிரிக்க வைக்கவும், அழ வைக்கவும், அச்சப்படுத்தவும் முடியும்," என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். கோட்டா சீனிவாச ராவ் மறைவுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjrl90q802zo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.