Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    87988
    Posts
  2. Justin

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    7044
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    8907
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    3049
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/23/25 in all areas

  1. வவுணதீவு இரட்டைக் கொலை: பொலிஸ் புலனாய்வு அதிகாரி கைது – உண்மை வெளிச்சத்திற்கு! பயங்கரவாதி ஷாகறான். கொழும்பு, ஜூலை 22, 2025: 2018 ஆம் ஆண்டு மட்டக்களப்பு, வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பிழையான தகவல்களை வழங்கியதாகக் கூறப்படும் அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியும், தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவருமான ஒரு பொலிஸ் பரிசோதகர் நேற்று (திங்கட்கிழமை, ஜூலை 21) கொழும்பில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். வவுணதீவு சம்பவத்தின் பின்னணி (2018): 2018 ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி இரவு, மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவுப் பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள்களான கணேஸ் தினேஸ் (28, கல்முனை) மற்றும் வல்பிட்ட கமகே நிரோசன் இந்திக்க பிரசன்ன (35, காலி) ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர். அவர்களது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கிகளும் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது, விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மீது இந்தக் கொலைகள் சுமத்தப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். தமிழ் அரசியல் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். உண்மை வெளிச்சத்திற்கு வந்த வழி: உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளின் போதுதான், வவுணதீவு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும், சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான பயங்கரவாதக் குழுவிற்கும் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இந்தத் தாக்குதல்களைத் திசைதிருப்பி, முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது பழிசுமத்துவதற்காகப் போலியான ஆதாரங்கள் உருவாக்கப்பட்டதாகவும், இதில் அரச புலனாய்வுச் சேவை மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சில அதிகாரிகள் முன்னின்று செயற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, ஒரு மோட்டார் சைக்கிள் ஜக்கெட் சம்பவ இடத்திற்கு அருகே மறைத்து வைக்கப்பட்டு, அது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தவறான தகவல் அளிக்கப்பட்டதும் விசாரணைகளில் தெரியவந்தது. தற்போதைய கைது மற்றும் விசாரணைகள்: படுகொலைச் சம்பவத்தின் உண்மைத் தன்மையை மூடிமறைத்து, விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி மீது குற்றத்தைச் சுமத்தப்பட்டதை பொலிஸார் கண்டறிந்தனர். இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பாக அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றியவரும், தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவருமான பொலிஸ் பரிசோதகர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்புக்கு விசாரணைக்கு அழைத்து, விசாரணையின் பின்னர் கைது செய்துள்ளதாகப் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தக் கைது, வவுணதீவு இரட்டைக் கொலை வழக்கு விசாரணைகளில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. Liked Tamil AB Amam ######### @satan, @alvayan, @goshan_che, @ஈழப்பிரியன், @கிருபன் , @Paanch , @ஏராளன் , @விசுகு, @குமாரசாமி, @ரசோதரன், @பெருமாள், @புலவர் , @ரஞ்சித் , @நன்னிச் சோழன் , @Sasi_varnam , @நியாயம் , @suvy , @நிழலி, @இணையவன் , @vasee, @அக்னியஷ்த்ரா , @உடையார் , @தனிக்காட்டு ராஜா
  2. நான் இருக்கும் தென் கலிஃபோர்னியாவில் கடந்த பத்து வருடங்களில் நடந்த எம்மவர்களின் திருமணங்களில் மணமக்கள் இருவரும் தமிழர்களாக இருந்த ஒரு திருமணம் கூட நடக்கவில்லை என்று சமீபத்தில் ஒரு நண்பர் சொல்லியிருந்தார். உண்மை பொய் தெரியவில்லை, ஆனால் எனக்கு தெரிந்த சில திருமணங்கள் மாற்று வழிகளிலேயே நடந்திருக்கின்றன. தாயகத்தில் இன்று இப்படி நடக்கின்றது என்றவுடன் எங்களில் பலர் அங்கலாய்க்கின்றார்கள் போல. உண்மையில் தாயகத்தில் இப்படி அதிகமாக நடக்கின்றது என்பதற்கு தரவுகள் ஏதாவது இருக்கின்றதா தெரியவில்லை. ஒருவரின் அபிப்பிராயமாகக் கூட இருக்கலாம். 'திருமதி. பெரேரா' என்னும் அருமையான சிறுகதை ஒன்று உள்ளது. இஸுரு சாமர சோமவீர எழுதியது. தமிழ் மொழிபெயர்ப்பு அகழ் இதழில் வந்தது. @satan எழுதியிருந்த 'இக்கரைக்கு அக்கரை பச்சை' என்பதை அங்கே பார்க்கலாம். ஆனால் இந்த சிறுகதை சொல்ல வந்த விடயம் அதுவல்ல................... https://akazhonline.com/?p=2817
  3. வவுண‌தீவில் கொல்லப்பட்ட இரு பொலீஸாரும் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களைக் கொல்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட டி 56 ரகத் துப்பாக்கி 1990 ஆம் ஆண்டு ஏறாவூர் பொலீஸ் நிலையத்திலிருந்து முஸ்லீம் ஊர்காவற்படையினன் ஒருவனால் அன்று எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. அத்துப்பாக்கியே 28 வருடங்களுக்குப் பின்னர் வவுணதீவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அப்பாவியான கிளிநொச்சியைச் சேர்ந்த 48 வயதுடைய ராசநாயகம் சர்வானந்தமே இக்கொலைகளைச் செய்ததாக பொலீஸாரால் குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டதுடன் கடுமையான சித்திரவதைகளுக்கும் உள்ளாகியிருந்தார். சஹ்ரான் குழுவினரே இத்தாக்குதலைச் செய்தார்கள் என்று நன்கு தெரிந்திருந்தும் அப்பாவியான தமிழர்மீது கொலைப்பழியைச் சுமத்தி, விசாரணைகளைத் திசைதிருப்பிய வவுணதீவு ஒ ஐ சி யே இன்று கந்தளாயிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இதில் வேதனை என்னவென்றால், சஹ்ரான் குழுவினருடன் தொடர்பில் இருந்துகொண்டு, இக்கொலைகளை அவர்களே செய்தார்கள் என்பதை அறிந்திருந்த கிழக்கின் மீட்பரான முரளிதரன் கூட இத்தாக்குதலை "புலிகளின் மீள் எழுச்சி" என்று வர்ணித்ததுதான். 2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவையில் இடம்பெற்ற பயணிகள் பேரூந்து மீதான கிளைமோர் தாக்குதல் மற்றும், வெலிக்கந்தை சிங்கள விவசாயிகள் மீதான தாக்குதல்கள், நுகேகொடை பஸ் மீதான தாக்குதல் என்று அனைத்தையும் புலிகள் மீது மகிந்தவின் அரசு போட்டிருந்தது. நான் இதுபற்றி இங்கு எழுதியபோது சிலர் வந்து புலிகளுக்கு நான் வெள்ளையடிக்கிறேன் என்று எள்ளி ந‌கையாடினார்கள். ஆனால் இன்று அவை வெளிச்சத்திற்கு வருகின்றன. இதுகுறித்து ஒரு திரியை ஆரம்பிக்க விருப்பம். நேரமிருந்தால் பார்க்கலாம்.
  4. 2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் ‍- ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு 2006 ஆம் ஆண்டு நாட்டின் பல பகுதிகளிலும் அடுத்தடுத்து பொதுமக்களை இலக்குவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கெப்பிட்டிக்கொல்லாவையில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து மீது நடத்தப்பட்ட இரு கிளேமோர்த் தாக்குதல்களில் 64 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு இன்னும் நாற்பது பேர்வரையில் காயமடைந்தனர். இத்தாக்குதல் நடத்தப்பட்டு 30 நிமிடங்களிலேயே இப்பகுதிக்கு விஜயம் செய்த மகிந்த ராஜபக்ஷெ, பொதுமக்களுடன் பேசியதோடு இத்தாக்குதல்களுக்குக் காரணமான புலிகளை முற்றாக அழிப்பேன் என்றும் சபத‌மிட்டிருந்தார். ஆரம்பத்தில் இத்தாக்குதலை புலிகள் செய்திருக்க வாய்ப்பில்லை என்று கூறிய யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு இரு நாட்களின் பின்னர் தனது சுருதியை மாற்றி புலிகள் செய்திருக்கலாம் என்று கூறியிருந்தது. புலிகளோ இத்தாக்குதலுக்கும் தமக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்று கூறியிருந்தனர். இலங்கை காவல்த்துறை உடனடியாகவே இத்தாக்குதலை புலிகள் மீது சுமத்தியிருந்ததுடன் சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் இச்செய்தி மிகப்பிரபலமாக சித்தரிக்கப்பட்டிருந்தது. சமாதானப் பேச்சுக்களில் அதிகாரம் அற்ற அதிகாரிகளுடன் தாம் இனிமேல் பேசப்போவதில்லை என்று புலிகள் அறிவித்த மறுநாள் இத்தாக்குதல் நடத்தப்பட்டமையினால் புலிகளுக்கெதிரான மேற்குலகின் நிலைப்பாட்டினை இத்தாக்குதல் மேலும் உறுதிப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத் தக்கது. இத்தாக்குதல் நடத்தப்பட்டபோது கொழும்பிலிருந்து கெப்பிட்டிக்கொல்லாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ உலங்குவானூர்தியில் மகிந்த இருந்திருக்கின்றார். அதாவது தாக்குதல் நடத்தப்பட்டவேளை மகிந்தவின் வானூர்தி கெப்பிட்டிக்கொல்லாவை நோக்கிப் பறந்துகொண்டிருக்கிறது. அதாவது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து மகிந்த அறிந்திருக்கிறார். ஆகவேதான் தாக்குதல் நடந்த பகுதிக்கு அருகிலிருந்த இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் வருகை தந்த நேரத்தில் மகிந்தவும் அப்பகுதிக்கு வந்திருக்கிறார். தாக்குதல் நடந்தவிடத்தில் உடனடியாகவே மகிந்த பிரசன்னமாகியிருந்தமை அன்றைய இராணுவ மற்றும் காவல்த்துறை அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தபோதிலும் எவரும் அதுகுறித்தும் பேசும் திராணியைக் கொண்டிருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இனி இத்தாக்குதல் குறித்து தற்போதைய அரசின் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் செயலாளர் என்ன கூறுகிறார் என்பதைப் பார்க்கலாம்.
  5. இனக்கலவரம் யூலை 1983 - ஒரு சாட்சி ஆமர்வீதிச்சந்தியில் கீழே அண்ணரின் உணவகம் மேலே நாலாம் மாடியில் எனது வசிப்பிடம். யூலை 23 இல் தெற்கின் பல பாகங்களிலும் கலவரம் உச்சமடைந்த போதிலும் இதன் முன்னர் பல இனக் கலவரங்கள் வந்தபோதிலும் எமது உணவகமோ எமது கட்டிடமோ தாக்கப் பட்டிருக்கவில்லை என்ற அதீதமான நம்பிக்கை கைகொடுக்க யூலை 24 அதிகாலை வரை நாம் இருப்பிடத்தில் இருந்து நடப்பவைகளை அவதானித்தபடி.... யூலை 24 அதிகாலையில் மொட்டை மாடியில் நின்றபடி பார்த்தபோது தெமட்டகொட பக்கமாக இருந்து சில குழுக்கள் (அநேகமான பதின்ம வயதினர்) வீதியில் இருந்த தமிழ் கடைகளை உடைத்தும் நெருப்பு வைத்தபடியும் ஆமர்வீதி சந்தி நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஆனாலும் எமக்கு எந்த பயமோ பதட்டமோ ஏற்படவில்லை. காரணம் எமக்கு கீழே ஆமர்வீதி சந்தியில் இருந்து பொலிஸ் நிலையம் வரை வீதியின் நடுவில் 30க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் காவலில் இருந்தனர். அத்தனை பேரும் தெரிந்தவர்கள் அனைவரும் எமது உணவக இலவச வாடிக்கையாளர்கள். ஆமர்வீதிச்சந்தியில் இருந்து ஒரு நூறு மீட்டர் தூரத்தில் குழுக்கள் வந்து கொண்டிருந்த போது அவர்கள் எம்மை நோக்கி வர வழி விடும்படியாக காவலுக்கு நின்ற காவல் துறையினர் திரும்பி செல்ல திரும்பி காவல் நிலையம் நோக்கி நகரத் தொடங்கிய போது தான் நெஞ்சு சுவாசம் ஓங்கி அடிக்க தொடங்கியது. தப்பி ஓடக்கூட நேரம் சுருங்கி விட்டிருந்தது. நாலாம் மாடியில் இருந்து கீழே இறங்கி வருகிறோம் கீழே இரும்பு கதவை உடைத்து தோற்ற கூட்டம் முதலாம் மாடிக்கு பெற்றோல் குண்டுகளை வீசிக் கொண்டிருக்கு அங்கே தீப்பிடிக்க ஆரம்பிக்கிறது.. முதலாம் மாடியின் பின் புறத்திற்கு ஓடி வருகிறோம் அருகில் இருந்த மரக்கடை எரியத் தொடங்கி இருந்தது. உடுத்தியிருந்த சறம் மற்றும் சேட்டை சிங்களவன் அணிவது போல் மாற்றி கட்டியபடி எங்கள் முதலாம் மாடியில் இருந்து பக்கத்து வீட்டு கூரைகளின் நடந்து பின்னால் இருந்த சிங்கள பாடசாலைக்குள் குதித்து அதே குழுக்களுடன் கலந்து வெளியேறி இன்று உயர் வாழ்கிறேன். ஆனாலும் எப்படி தப்பினேன் என்பது இன்றும் அதிசயமாகவே...... அன்று தெரிந்து கொண்டவை. இது எனது நாடல்ல இது எனது அரசல்ல இது எனது காவல்படை அல்ல. சிங்களவர்கள் எமது சகோதரர்கள் அல்ல.
  6. நானும் பார் சிறியைப் பிடிச்சு ஒரு பார் லைசன்ஸ் எடுக்கப்போறன். என்னை வாழ்த்துவீங்களா பிரண்ட்ஸ்?!😎
  7. 👍........... அந்தச் செய்தியுடன் ரவிகரன் என்னும் பெயரும் ஞாபகத்தில் இருக்கின்றது, ஏராளன். நீங்கள் சொல்வது சரியாகவே இருக்கவேண்டும்.................... இதைப் போன்ற செய்திகளும், விளம்பரங்களும் உண்டாக்கும் உணர்வு நீங்கள் சொல்லியிருப்பதே.........👍.
  8. எம்மதமும் சம்மதம் என இருப்பவருகளுக்கு பிரச்சனையில்லை, திருமணம் செய்ய நீ என் மதத்திற்கு மாறவேண்டும் என நினைப்பதாலயே இப்பிரச்சனை.
  9. சுமந்திரன் தவறானனவர் என்று…. ஊரிலும், புலம்பெயர் தேசத்திலும், யாழ் களத்திலும் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும் போது… “ரியூப் லைற்” சாணக்கியனுக்கு இப்பவாவது தெரிந்தது பெரிய விடயம். இல்லாட்டி…. சாணக்கியனுக்கும், சுமந்திரன் சுத்துமாத்து வேலையை காட்டியிருக்கும். தலை தப்பினது தம்பிரான் புண்ணியம். சி.வி. சிவஞானத்துக்கும்… சுமந்திரனின் சுயரூபம் புரிய கனநாள் எடுக்காது.
  10. நல்ல வேளையாக இந்தியாவின் வல்லபாய் பட்டேல் வாழ்ந்த போது எம்.ஆர்.ஐ இருக்கவில்லை!
  11. https://youtu.be/7g505MXqnec?si=5qVCOqusRuu7It7M நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே நீவந்த வாழ்வைக்கண்டதனாலே மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும் மார்தங்கு தாரைத்தந்தருள்வாயே ..
  12. அவர் மன்னார் ஆள் உயர உயர உயரத்திற்கு சென்றுவிட்டார் நீங்கள் தரையில் என்ற பொறாமை தான் உங்களுக்கு 🤣
  13. சம்பூர் கடற்கரையோர பகுதியில் மனித எச்சங்கள் கண்டு பிடிப்பு. அல்வாயனுக்கு ஒரு பதிவிட்டிருந்தேன். "எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது." நான் யாரையும் பிடிக்கவில்லை என்று சிலவற்றை சுட்டிக்காட்டி ஒரு சொல்லில் எழுதினால், ஆதாரம் இருக்கா? வெறும் காழ்ப்புணர்ச்சி என்று சொல்வார்கள். ஆதாரங்களை சேர்த்து எழுதினால், அதற்கு மறுத்து ஆதாரம் வைக்க தெரியாவிட்டால், முடியாவிட்டால் பந்தி எழுதுகிறேன் என ஒரு குற்றச்சாட்டு என்மேல் உண்டு. அதனாலேயே ஒரு சில வரிகளுடன் விட்டேன். வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதும் நன்று என்று இன்று தெரிகிறது. கிழக்கில் இத்தனை கொடூரங்களும் யாரால், ஏன் நிறைவேற்றப்பட்டது என்பதும் மெல்ல மெல்ல திரை விலகுகிறது. அன்று, தாம் பதவியை கைப்பற்ற முஸ்லிம்களை வைத்து தாக்குதலை நடத்தினர். இன்று புலிகளை சாட்டி ஒரு கலவரத்தை ஏற்படுத்த முற்படுகின்றனர். துப்பாக்கியையும் கொடுத்து, போலீசாருக்கும் அறிவித்து, நான் நினைக்கிறன் பயத்தில் தடுமாறுகிறார்கள் என்று. அன்று அனுரா சிறிய பையன். இவர்களின் திரிப்புகளை உண்மையென நம்பியிருக்கலாம், இப்போ வெளிவருபவை உண்மைகளை வெளியே கொண்டுவருகின்றன. அன்று பூட்டிய அறைகளுக்குள் காதோடு காதாக பேசியவை, ரகசியமாக செய்தவை இன்று பகிரங்கப்படுத்தப்படுகின்றன. இனிமேலும் பித்தலாட்டம் ஆட வெளிக்கிட்டால்தாங்களாகவே பொறியில் சிக்குவார்கள். கிழக்கில் முஸ்லிம்களை பலிகொடுத்து, தமிழரை பலி எடுத்து ஆடிய ஊழியாட்டம் வெளியில் வர இருக்கிறது. எத்தனை பலம், படை இருந்து, தமிழரின் நிலங்களை, உயிர்களை, கோயில்களை பறிக்க அதிகாரம் இருந்ததென்றால்; அந்த முஸ்லிம்களை காக்க முடியவில்லையா? அப்போ எந்த அதிகாரத்தினால் இதை சாதித்தேன் என்று சவால் விட்டார் ஹிஸ்புல்லா? முஸ்லீம் அரபு நாடுகளிடம் முதலில் உதவி கேட்டு சென்றபோது முஸ்லிம்களுக்கு அங்கு ஒரு ஆபத்துமில்லை ஆகவே உதவி செய்ய தயங்கிய அந்த நாடுகளிடம், புலிகள் முஸ்லிம்களை சுத்திகரிப்பு செய்கிறார்கள் ஆகவே உதவி செய்யுங்கள் என்று மீண்டும் போனால்; அங்கு என்ன நடந்திருக்கு என்று சொல்லாமலே புரியும். எந்த நாடும் இந்த நாட்டில் முதலிடலாம், வியாபார, கல்வி, சமய கருமங்களை ஆற்றலாம். ஆனால் தமிழருக்கு இடமில்லை, அவர்களை அழிக்க உதவுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்கள் என்றால்; இவர்களின் தந்திரோபாயத்தை என்னவென்று சொல்லலாம்? எத்தனையோ சாட்சிகளை கொலை செய்திருக்கிறார்கள், இன்னும் சிலருக்கு அதிகாரிகள் வற்புறுத்தி பொய் சாட்சி சொல்ல வைத்தார்கள் என்று கதை எழுதினார்கள். ஒன்றை மறைக்க பல கொலைகளை அஞ்சாமல் செய்து காரியத்தை சாதித்தார்கள். இப்போ அதற்கான விலை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. சாட்சிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும், விசாரணை அதிகாரிகள், நீதிபதிகள், ஜனாதிபதி போன்றவர்களும் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். அரசியல்வாதிகளின் பாதுகாப்பை குறைத்து இவர்களுக்கு அளிக்கப்படவேண்டும். இந்த குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓட முடியாது, பழைய கொலைகலாச்சாரத்தை அரங்கேற்றுவார்கள். காலம் எப்படி சுற்றி வளைத்திருக்கிறது பாருங்கள்!
  14. என் செய்வேன்… நான் எடுத்தது சி டி பி பஸ். உண்மையில் விமானி ஆவது டாக்டர் எஞ்சினியர் ஆவதை விட மிக இலகு. சாதாரண தரத்தில் மிக சாதாரண சித்தி இருந்தால் போதும். செலவாகும் பணம் கூட ஒரு டாக்டரோடு ஒப்பிடும் போது குறைவுதான். இங்கே பிரிடிஷ் ஏர்வேஸ், ரோயல் ஏந்ர் போசில் பயிற்றுனராக சேர்ந்து காசு கட்டாமல் ஐந்து வருடத்தில் விமானியாகலாம், சம்பளமும் தருவார்கள். இந்தியாவில் படிப்பது இன்னும் இலகு. ஆனால் பெரும்பாலும் ஒரு விமானியாக பல மணி நேர பயிற்ற்சி பறப்பை பெற்ற ஒருவர் எடுக்கும் சம்பளத்தை விட இலண்டன் underground tube ஓட்டுனர், ஒரு வருட பயிற்சியின் பின் எடுக்கும் சம்பளம் அதிகம். ரிஸ்கும் குறைவு. வீட்டை விட்டு போய் வேலை செய்ய தேவையில்லை, ஒரு மூடிய பெட்டிக்குள் 18 மணத்தியாலம் வரை இருக்க தேவையும் இல்லை. இப்படி விமானி தொழிலில் பல பிரதிகூலங்கள் இருப்பதாலே மக்கள் அதை நாடுவதில்லை. இங்கே வழங்கல் அல்ல பிரச்சனை, விமானி தொழிலுக்கு எம் மக்களிடம் கேள்வி இல்லை என்பதே உண்மை. உண்மையில் இலண்டனில் bin collection செய்யும் வேலைக்கு ஓரளவு நல்ல சம்பளம். ஆனால் நம்மவர் எவரும் செய்வதில்லை. அதனால் தமிழர் ஒருவர் rubbish truck ஓட்டும் உரிமம் எடுத்தால் அதை ஆதவனில் செய்தியாகவா போடுவார்கள். இதெல்லாம் ஒரு செய்தியா என்பதே கேள்வி - தவிர இதில் பொறாமை பட என்ன இருக்கிறது? அத்தோடு இந்த இலகு ரக பறப்பு உரிமம், அவுஸ் அமேரிக்கா போன்ற நாடுகளில் எல்லாம் சாதாரண பூச்சி மருந்து அடிக்கும் தொழிலாளர்களே வைத்திருப்பது.
  15. வருசாவருசம் பொங்கலுக்கு தீர்வு தீபாவளிக்கு தீர்வு என்று ஓடிய தீர்வு படத்தை விட இந்த படம் கடும் படமாகவல்லவோ இருக்கு, மூண்டு வருசத்திற்கொரு தரம் ஓடுது
  16. தற்போதைய வன்னி பா.உ துரைராசா இரவிகரன் அவருடைய மகன் என நினைக்கிறேன் அண்ணை. வேட்டி கட்டி படம் போட்டிருந்ததாகவும் நினைவுள்ளது.
  17. எங்கட யாழ்கள கலைஞனும் இப்ப விமானி ஆகியிருப்பார் என்று நினைக்கிறேன்.கனடா உறவுகளுக்கு சில வேளை தெரிந்திருக்கலாம்.
  18. இந்த தம்பியின் செய்தி தமிழ்வின். ஐபிசி ஆகியவற்றிலும் வந்தது. தமிழ் சமூகத்தை பொறுத்தவரை இது முக்கிய செய்திதான். வைத்தியர், பொறியியலாளர், சட்டத்தரணி ஆகியோரின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது எமது சமூகத்தில் எத்தனை விமானிகள் உள்ளனர் என்று பார்த்தால்.. அங்கை ஒருவர் எனக்கு தெரியும். ஆனால் எனக்கு அறிமுகம் இல்லை.. இந்த அளவில்தான் விமானிகளின் பிரசன்னம் உள்ளது. அதிகம்பேர் விமானத்துறையில் கால்பதிக்க வேண்டும். வழங்கல் குறைவான இடத்தில் பொருளுக்கு மவுசு அதிகம் காணப்படும். அதற்காக இந்த தம்பி மீது பொறாமைப்படக்கூடாது. எயார் பஸ் என்றால் இனியும் போடலாம்.
  19. தமிழர்கள் சர்வதேசத்தையும் இந்தியாவையும் நம்பிப்பயணில்லை என்ற தலைப்பார்த்தாவுடன் நான் நினைத்தேன், வேற்றுகிரகவாசிகள் யாராவது உதவிசெய்யிரதாக உத்தரவாதம் அளித்துவிட்டார்களா என்று 🤔 அப்ப இந்தியா சர்வேசம் இல்லையா? 😃
  20. தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே .......... ! 😍
  21. இது இந்த மருத்துவ சேவை நிலையத்தின் ஒரு பாரதூரமான குறைபாடாக தெரிகிறது. எக்ஸ் கதிர்கள் பயன்படும் அறை, காந்தப் புலம் பயன்படும் எம்.ஆர்.ஐ அறை என்பன பயன்பாட்டில் இருக்கும் போது உள்ளே யாரும் நுழைய முடியாதபடி கதவு பூட்டப் பட்டிருக்க வேண்டும். அனேகமாக தொழில் நுட்பவியலாளரின் வேலை பறி போகும்.
  22. GDP படி பார்த்தால் இந்தப் பட்டியல் சரி. நான்காவது நிரலில் இருக்கும் GDP per capita படி பார்த்தால், சுவிஸ் முதலாமிடம், நோர்வே மூன்றாமிடம் (அமெரிக்காவிற்கு அடுத்து). கடஞ்சா சொல்வது போல இது ஒரு பரிமாணத்தை மட்டும் காட்டும் ஒரு அளவீடு. ஒரு தேசத்தின் பல பரிமாணங்களைக் கருதி எடுக்கப் படும் அளவீடு மனித அபிவிருத்திச் சுட்டெண் (HDI) எனப்படுகிறது. HDI படி பார்த்தால், முதலிடம் ஐஸ்லாந்து, அமெரிக்காவிற்குப் 17 வது இடம். இந்தியா 130 வது இடம், இலங்கையின் 89 வது இடத்திலும் கீழே தான் இந்தியா😂! https://hdr.undp.org/data-center/country-insights#/ranks
  23. ஓ.... உத்தரவின்றி, திறந்த வீட்டிற்குள் நுழைந்து இருக்கின்றார். மனைவி ஏதாவது சதி செய்து... ஆளை, மேல்லோகம் அனுப்பினாரோ என்ற கோணத்திலும் விசாரிக்கப் பட வேண்டும்.
  24. யாரந்த தவறான செய்தி தந்த உறவினர்? 😃அமெரிக்காவில் 90 வீதமான வீடுகள் குளிரூட்டப்பட்டவை... இன்னும் சில வீதமான வீடுகள் தேவைக்கேற்ப குளிரூட்டக்கூடிய வசதியுடையன.
  25. 9 கிலோ சங்கிலியை போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு போகின்ற ஆள் என்றால்... மண்டை பழுதான ஆளாக இருக்க வேண்டும். 🤣 அதுசரி... இவர் போட்டிருந்த துலா கயிறு போன்ற அந்த யானை கட்டுகின்ற சங்கிலியை... அங்கிருந்த ஊழியர்கள் ஒருவரும் கவனிக்காமாலா எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்ய உள்ளே அனுப்பியவர்கள். @ஈழப்பிரியன் இது உங்க ஏரியா. 😂 இதை... ட்ரம்ப் ஐயா கேள்விப்பட்டால், ரொம்ப கடுப்பாகப் போகின்றார். 😜

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.