Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87988
    Posts
  2. Justin

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    7044
    Posts
  3. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    4
    Points
    15789
    Posts
  4. சுப.சோமசுந்தரம்

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    488
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/29/25 in all areas

  1. Offensive ? So What ? - சோம.அழகு நீங்கள் எந்த வயதினராகவும் இருக்கலாம். ஏற்கெனவே உங்களுள் ஊறிப் போன கற்பிதங்களையும் நம்பிக்கைகளையும் தாண்டி ஏரணம் மிகுந்த நியாயமான கேள்விகளுக்கு உங்கள் மனதில் இடமளிக்கும் அளவிற்குப் பக்குவம் பெற்றவராயின் தொடரலாம். அறிவைத் தக்கனூண்டு அளவில் பயன்படுத்தினாலே உள்ளம் துக்கப்பட்டு துயரப்பட்டு காயப்பட்டு புண்பட்டு உழல்வோராயின் இப்புள்ளியிலேயே விடை பெற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உணவு, உறைவிடம் ஆகியவற்றைத் தேடிக் கொள்வதும் நமது பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொள்வதும் உள்ளுணர்வாக இருக்கையில் இறை என்பது இயற்கையான உள்ளுணர்வாக ஏன் இல்லை? அல்லது இறைவன் ஏன் அதை உள்ளுணர்வாக இயற்றவில்லை? இறை போதிக்கப்படாவிட்டால் திணிக்கப்படாவிட்டால் முற்றிலும் மறைந்து விடும் தன்மையானதாக ஏன் இருக்கிறது? ஒரு குழந்தை ஐரோப்பா/இந்தியா/இஸ்ரேல்/ சவுதி அரேபியாவில் பிறக்குமாயின் அது பெரும்பாலும் கிறித்தவ/இந்து/யூத/இசுலாம் மதத்தைச் சார்ந்ததாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். எனில் மதம் என்பது முற்றிலும் புவியியல் சார்ந்தது. எனவே இறை நம்பிக்கை என்பது தானாகக் கிட்டும் தெய்வீக அனுபவமோ ஒரு நிலையான உண்மையோ அல்ல. எனவே ஒரு குறிப்பிட்ட தலைமுறையில், அனைத்து குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களான பின் சுமாராக இருபது வயதிற்குப் பின்னர் தான் அவர்களுக்கு மதமும் கடவுள் நம்பிக்கையும் சொல்லித்தரப் பட வேண்டும் என உலகம் முழுக்க ஒரு தீர்மானம் கொண்டு வரப் பட்டால் அத்தலைமுறையோடு அனைத்து மதங்களும் அழிந்துவிடும். ‘ஓர் ஆசுவாசத்தைத் தருகிறது’, ‘மன அமைதியைக் கொடுக்கிறது’… என பிறருக்குத் தொல்லை தராத வரை ஒரு தனிநபரது கடவுள் நம்பிக்கையில் எப்பிரச்சனையும் இல்லை. ஆனால் உடன்பாடு இல்லாத பிறர்மீதும் அர்த்தமற்ற சடங்குகளைத் திணிக்கும் போதும் பெரும்பாலான பக்திப் பரவச உரையாடல்களில் “அப்டிங்களா… ரொம்ப சந்தோசம்… நன்றி” என்று வெறுமனே கடந்து செல்ல முனையும் என்னைக் கிட்டத்தட்ட ‘சண்டைக்கு வா’ என அழைப்பு விடுக்கும் போதும் அவர்களின் மடமையை நான் பரிகசிப்பதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்கள். அதிலும் சிலர் வம்படியாக வந்து என்னுள் கடவுள் நம்பிக்கையை விதைக்கும் நற்பொறுப்பை ஏற்று அதை ஏதோ தாம் இறைவனுக்கு ஆற்றும் தொண்டாகக் கருதி அதில் முழு முயற்சியுடன் ஈடுபட்டு, பின்னர் மலங்க மலங்க முழித்தவாறே திரும்பிச் சென்ற சுவாரஸ்யமான தருணங்கள் சில உண்டு. அவ்வப்போது வாசிக்கக் கிடைத்த பெரும் ஆளுமைகள் பதிலுரைக்கும் போது மிகச் சரியாக வந்து கை கொடுத்திருக்கிறார்கள்! “நம்மை மீறிய அற்புத சக்தி ஒன்று நிச்சயம் இருக்கிறது. நம்பு, நம்பிக்கைதானே எல்லாம்” “சரி. நிரூபியுங்கள்” “உனக்குத்தானே சந்தேகம்? நீ இல்லைன்னு நிரூபி, பார்ப்போம்” “ஓ! நீங்க அப்பிடி வர்றீங்களா? அப்ப சரி. நான்தான் அந்த அற்புத சக்தி” “அது எப்படி?” “உங்கள் தர்க்க படி, உங்களுக்கு சந்தேகம்னா இப்போ நீங்கதான் நிரூபிக்கணும், நான் அற்புத சக்தி இல்லனு!” “கடவுள் சர்வ வல்லமை படைத்தவர்” “நானும்தான்” “உன்னால கடவுள் செய்யுறத எல்லாம் செய்ய முடியுமா?” “நடக்குறதெல்லாம் பாத்துட்டு கம்முன்னு கல்லாட்டம் இருக்கணும்தான? கொஞ்சம் கஷ்டம்தான்” “பகுத்தறிவாளர்கள் ஏன் கடவுளைப் பற்றிப் பேசுகிறீர்கள்?” “மருத்துவர்கள் ஏன் நோய்களைப் பற்றிப் பேசுகிறார்கள்?” “இறையின் இடத்தை எதைக் கொண்டு சமன் செய்வாய்?” “புற்றுநோய்க் கட்டியை அகற்றிய பின் அவ்விடத்தை எதைக் கொண்டும் நிரப்ப வேண்டியதில்லை” “கடவுள் நம்பிக்கையே இல்லாவிட்டால் வாழ்வின் அர்த்தம்தான் என்ன?” “ ‘எஜமானர்களே இல்லாவிட்டால் நான் யாருக்கு அடிமையாக இருப்பது?’ என கவலைப்படுகிறீர்களா?” (உபயம் : Dan Barker) “பொதுவுடைமை, பகுத்தறிவாதம்லாம் கேட்க நல்லாருக்கும்; நடைமுறைக்கு சரி வராது” “முதலாளித்துவம், மதம்லாம் கேட்கவே நல்லா இல்லையே” “ ‘ஒரு’ கடவுளின் மீது கூடவா நம்பிக்கை இல்லை?” “மடமை எவ்வுருவில் எப்பெயரில் வந்தால் என்ன?” “என்ன நடந்தால் நம்புவாய்?” “பெரியார் சொன்னதைப் போல் நேரில் வந்தால் நம்பி விடுவேன்” “நம்பிக்கையற்ற உனக்கு ஏன் தரிசனம் தர வேண்டும்?” “என்னை நம்ப வைக்க!” “அதீத பக்தியுடன் இருக்கும் எங்களுக்கே தரிசனம் கிட்டியதில்லை” “Exactly. அப்புறம் எதுக்கு நம்பிகிட்டு?” “புனித நூல்களைக் கொஞ்சம் வாசி. அப்போதாவது உன்னில் மனமாற்றம் வருகிறதா, பார்க்கலாம்” “பேசும் பாம்புகள், ஏழு தலை உயிரினங்கள், சூரியனை விழுங்கும் குட்டி குரங்கு, எலியின் மீது அமர்ந்து வலம் வரும் யானை, மலையைச் சுமக்கும் பறக்கும் குரங்கு…. – இவை இடம் பெற்றிருப்பவற்றை புனித நூல்கள் என்பதை விட ‘புனைவுகள்’ என்று கூறினால் சாலப் பொருத்தமாயிருக்கும். அவற்றைக் கொஞ்சம் வாசித்த பிறகுதான் கடவுள் இருப்பு குறித்த சந்தேகங்கள் முற்றிலும் அகன்று, ‘கருப்பு’ மனதிற்கு நெருக்கமாகிப் போனது” “ப்ச்… எவ்வளவு நன்னெறி ஒழுக்கங்கள் மதிப்பீடுகள் கற்றுக்கொள்ளலாம் தெரியுமா?” “அதற்கெல்லாம் உங்களுக்கு ஒரு புத்தகம் தேவைப்படுகிறதா? சரி எது தவறு எது என்று பிரித்தறியக் கூடவா தெரியாது?” “இவ்வளவு பெரிய அண்டம் இத்தனை அற்புதங்களுடன் தானாக உருவாகியிருக்கவே இயலாது. அனைத்து உயிரினங்களும் தாமாக உருவாகியிருக்க வாய்ப்பே இல்லை” “ஹ்ம்ம்… பூமியை உருவாக்கி பரிணாம வளர்ச்சிக்கான ஆதாரத்தையும் அதிலேயே விட்டு அதை கண்டறியும் அறிவையும் நமக்குத் தருவானேன்? நாம் சந்தேகம் கொண்டு இறையின் இருப்பைக் கேள்வி கேட்டு நரகத்திற்குச் செல்ல வேண்டியா? நமக்குச் சிந்திக்கும் ஆற்றலைத் தந்து அதைப் பயன்படுத்துவதற்குத் தடையும் விதித்து வினோதமான வழிமுறைகளுடன் இயங்குகிறார் கடவுள்” “கடவுள் அன்பே உருவானவர். நீ ஏன் அவரை வெறுக்கிறாய்?” “முதலாவதாக நீங்கள் இந்த உருவகத்தின் மூலம் அன்பைக் கொச்சைப்படுத்துகிறீர்கள். இரண்டாவதாக, இல்லாத ஒன்றை எப்படி நான் வெறுக்க இயலும்? கடவுள் என்னும் பெயரில் உலவும் கருத்தாக்கத்தைத்தான்(concept) வெறுக்கிறேன்” “நீ அவரது அன்பை உணர மறுக்கிறாய்” “ஆமாமா! இஸ்ரேலியர்கள் மனிதத் தன்மையுள்ளவர்கள்; இந்திய ஒன்றிய அரசு இஸ்லாமியர்களை நேசிக்கிறது; பார்ப்பனர்கள் சனாதனத்தை அடியோடு வெறுப்பவர்கள்;…. கடவுளும் அன்பானவர்தான். உணர்ந்துட்டேன்” “சரி! உன்னைப் பொறுத்த வரை கடவுள்னா என்ன?” “பசியில் வாடும் குழந்தைகளின் முனகல்கள், புற்றுநோயுடன் போராடும் குழந்தைகளின் வலி மிகுந்த அழுகைகள், வன்புணர்வு செய்யப்படும் குழந்தைகளின் ஓலங்கள், காஸாவில் தனது ஏழு வயது மகனின் தலை மட்டும் தனியாகக் கிடைக்க அதைக் கையில் ஏந்தியபடி வெளிப்பட்ட ஒரு தந்தையின் கேவல்கள், பிரசவித்த மறுநொடியே தன் குட்டியைச் சிங்கக் கூட்டத்திடம் இருந்து காப்பாற்ற முயன்று போராடி இறுதியில் இயலாமல், தாயும் (நிற்கப் பழகுவதற்குக் கூட நேரம் கிட்டாத) மான்குட்டியும் இரையாகிப் போகும் போது காடு அதிர கேட்கும் வெற்றி கர்ஜனை - இவை அனைத்தும் விண்ணை முட்டி வெளியை (space) அடையும் போது இவற்றிற்குப் பதிலாகக் கிடைக்கும் காதைக் கிழிக்கும் குரூரமான அமைதியின் பெயர்தான் ‘கடவுள்’!” இவற்றுக்கெல்லாம் உச்சகட்டமாக எரிச்சலூட்டும் ஒரு வாதம் உண்டு. “நானும் ஒரு காலத்தில் உன்னை மாதிரிதான் இருந்தேன்” - “மொதல்ல தெளிவாதான் இருந்தேன்; அப்புறம்தான் மண்ட கோளாறு வந்துச்சு” என்பதில் என்ன பெருமை? இப்படிச் சொல்வதன் மூலம் தமது மடமையை இன்னும் அதிகப்படுத்திக் கொள்கிறார்களே அன்றி வேறென்ன? ஏதோ இப்போது உலகம் புரிந்துவிட்டதாகவும் தான் ஞானி ஆகி விட்டதாகவும் நம்மை நம்ப வைக்கும் பரிதாப முயற்சிகள் எதற்கு? கொள்கை பிடிப்புள்ள பகுத்தறிவாளர் யாரும் எந்தக் கட்டத்திலும் மனமாற்றம் அடைந்து இறையைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். எனவே இவ்வாறு பேசுபவர்களுள் துவக்கத்திலிருந்தே ஆத்திகமும் ஒருபிடி அடிப்படைவாதமும் உறைந்தே இருந்திருக்கிறது என்றுதான் பொருள். “நானும் (சிறுவயதில்) உங்களைப் போல்தான் இருந்தேன். நீங்கள் பொய்களை நம்பத் தொடங்கிய காலத்தில் நான் அதைக் கைவிடத் துவங்கியிருந்தேன்” என பதிலுக்குச் சொல்லச் சொல்லி அரித்தெடுக்கும் மனதைப் பல முறை அமைதிபடுத்தியிருக்கிறேன். எல்லாரும் நாத்திகர்களாகத்தான் பிறக்கிறார்கள், வளர்கிறார்கள் - பயமும் மதமும் விதைக்கப்படும் வரை. “வளர வளர புரியும்” என்கிறார்கள். வளர வளர என்னிடம் கேள்விகள்தாம் பெருகிக் கொண்டே இருக்கின்றன. அடுத்ததாக இன்னும் ஒரு படி மேலே சென்று சிலர் “கடைசி காலத்தில் இறையை உணருவாய்” என்று சாபம் விடும் தொனியில் கூறும் போதுதான் சிரிப்பை அடக்க இயலாது எனக்கு. என் மரணப் படுக்கையில் இல்லாத கடவுளைப் பற்றி ஏன் எண்ணிக் கொண்டிருக்கப் போகிறேன்? அப்பாவிடம் இன்னும் ஒரு ரசனையான சங்கப் பாடலைச் சொல்லச் சொல்லிக் கேட்டிருக்கலாம்; அம்மாவின் கையால் இன்னும் ஒரு நெய் தோசை சாப்பிட்டிருக்கலாம்; என் மகளை இன்னும் ஒரு முறை இறுக அணைத்து அன்பைப் பொழிந்திருக்கலாம்; என்னவனுடன் இன்னும் ஒரு பயணம் சென்றிருக்கலாம்; இன்னும் ஒரு புத்தகம், ஒரு நல்ல சினிமா, இசைக்கோர்வை என ரசித்திருக்கலாம்… இப்படித்தான் நீளும் என் சிந்தனைகள். மேலும், ஒருவேளை உண்மையாக இருந்தாலும் கூட (வாய்ப்பில்லை! சும்மா ஒரு பேச்சுக்கு) அத்தருணத்தில் இறையை உணார்ந்துதான் என்ன ஆகப் போகிறது? You have the right to believe in what you want; I have the right to believe it’s ridiculous – Ricky Gervais ஒரு முறை வீட்டில் நான் தலை சீவிக் கொண்டிருக்கையில் சாமி கும்பிட வரச் சொல்லி அழைப்பு விடுக்கப்பட்டது. உடனே என்ன தோன்றியதோ? விளையாட்டாக இவ்வாறாக பதில் கூறினேன் – “இச்சீப்பின் வழியாக ஆண்டவனாகிய கடவுளிடம் எல்லாம் வல்ல இறைவனிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்”. “பைத்தியம்! சீக்கிரம் வா” என்று சிரித்தவாறே சென்றுவிட்டார் அழைக்க வந்தவர். அவ்வாக்கியத்தில் ‘சீப்பு’ என்ற சொல் ஒன்றுதான் பிரச்சனையாகப் பட்டிருக்கிறது, பாருங்களேன்! மற்றபடி அடுத்த அறைக்கு சென்று சில வண்ண வண்ணப் படங்களைப் பார்த்துப் பேசுவது, கல்லைப் பார்த்துப் பேசுவது, உத்திரத்தை நோக்கிப் பேசுவது, சுவற்றுடன் பேசுவது, நெடுஞ்சாண் கிடையாகவோ மண்டியிட்டோ விழுந்து தரையுடன் பேசுவது – இவையெல்லாம் நல்ல மனநிலையில் உள்ளவர் செய்வதற்கு ஏற்றவைதானாம். “நீங்கள் மனமுருகி பிரார்த்தனை செய்து வேண்டிக்கொள்ளுங்கள்; நான் அவ்வாறு செய்வதாக நடிக்கிறேன்” – இரண்டிற்குமான பலன்களில் என்ன வித்தியாசம் என்று காண விருப்பம். கோவில் வாசலில் இரப்பவனின் தட்டில், உள்ளே செல்லும் சாமானியன் இடும் அதே அலட்சியமும் மௌனமும் கருவறையில் வீற்றிருக்கும் கல்லிடம் இருந்து அச்சு பிசகாமல் அப்படியே சாமானியனுக்கும் கிட்டுவதுதான் இயற்கையின் சமநிலை! “எனது நம்பிக்கையால் நான் இதைச் செய்கிறேன்/செய்ய மாட்டேன்” என்ற அளவில் இருப்பது “எனது நம்பிக்கையால் நீ இதையெல்லாம் செய்/செய்யாதே” என்றாகும் போதுதான் பிரச்சனையே! ஒரு கட்டத்தில் ‘சரி! செய்துவிட்டுத்தான் போவோமே! இச்செய்கைகள் என்னில் என்ன பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்து விடப் போகின்றன?’ என பிறரது நம்பிக்கைகளை மதிக்கும் பொருட்டு விளக்கேற்றி பூஜை செய்தாலும் ‘கடமைக்குன்னு செய்றதுக்கு எதுக்கு செய்யணும்?’ என்ற அஸ்திரம் வரும். பகுத்தறிவாத நங்கைகளிடம் “உன் நம்பிக்கையில் நான் தலையிட மாட்டேன்” என்று கூறும் ஆத்திகர்களை ஓரளவு முற்போக்குவாதிகளாக நான் அனுமானித்து வைத்திருந்த காலம் மலையேறிவிட்டது. அதாகப்பட்டது ஓர் இறை மறுப்பாளரின் நம்பிக்கையைத் தவறென்று நேரடியாகப் பழித்துரைக்காது இச்சமூகம். சடங்குகள், வழிபாட்டு முறைகள் என எல்லாவற்றையும் அவர் ஒழுங்காகப் பின்பற்றிவிட வேண்டும் என்று மட்டுமே எதிர்ப்பார்க்கப்படும். (என்னே உங்கள் சனநாயகம்!) அப்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் எனது பிம்பம் கண்ணாடியில் எதிரொளிக்கும் போது எனக்கு ஊன்றுகோலாயிருக்கும் பகுத்தறிவுப் பகலவனின் கைத்தடியும் என் பார்வையை விசாலமாக்கித் தெளிவுபடுத்தித் தரும் அன்னாரது கண்ணாடியும் கொஞ்சம் கொஞ்சமாக என்னில் இருந்து தூரமாக விலக ஆரம்பித்தது போல் இருந்தது. மீண்டும் மீண்டும் அவற்றை இறுகப் பற்றிக் கொள்வதில்தான் புதைந்திருக்கிறது என் ஆளுமை! ஒரு தனிமனிதனின் மதிப்பீடுகள் வாழ்வியல் நெறிமுறைகள் ஒழுக்கங்கள் ஆகியவற்றை இறை நம்பிக்கையோடு சிக்கலான முடிச்சு போட்டே பார்த்துப் பழகிய சமூகத்திற்குப் புரியாத புதிராக விளங்கும் ஒன்று – இறை மறுப்பாளர்களால் எவ்வித கண்காணிப்பு சாதனமும் இன்றி தாமாகவே நல்லவர்களாகவும் கற்பனையான உந்துதலின்றி தன்னம்பிக்கையாளர்களாகவும் இயங்க இயலும் என்பதே! எவ்வித ஆதாரங்களும் இன்றி நம்பப்படுவது எனில் மதத்திற்கும் நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட பொய்களால் ஆன ஒரு ஸ்தாபனத்திற்கும் உள்ள வேறுபாடுதான் என்ன? மதம் என்பது மனிதத்திற்கும் மனித குலத்தின் மதிநுட்பத்திற்கும் இழைக்கப்பட்ட துரோகம், மாபெரும் அவமதிப்பு. அறிவுக்கு நேர்மையாக நடந்து கொள்வதன் இயற்கை விளைவாகிய பகுத்தறிவாதம் என்பது உண்மையும் நம்பிக்கையும் ஒரே புள்ளியாகி ஒன்றாக சங்கமிக்கும் இடம். நாம் முன்வைக்கும் ஒரு வாதத்திற்கு ஏரணத்திற்குட்பட்ட ஒரு சரியான எதிர்வாதம் இல்லாதவர்களின் கடைசி புகலிடம் - ‘It’s offensive’. இதன் பின்னால் ஒளிந்து கொண்டால் தாம்தான் சரியென்றும் ஒரு படி மேலே சென்றுவிட்டதாகவும் இவர்களுக்கு யார் சொல்லித் தந்தது? ‘That’s offensive’ is not an argument – Christopher Hitchens இனி ‘offensive’ஐ தூக்கிக் கொண்டு வருபவர்களுக்கு எனது பதில், “So What?” "One day Atheism will disappear as a concept. Instead there will be normal people and some weirdo believers" – Frank Zappa நன்றி - 'கீற்று' இணைய இதழ். https://www.facebook.com/share/r/1AaTbmWWi1/
  2. எதுக்கும் பழைய புளொட் இயக்க ஆட்களை விசாரிக்க வேண்டும். நாமலுடன் போய், மாலைதீவை பிடிக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆராயச் சென்றவர்களா என அறிய.😁
  3. எல்லாக் கருத்துக்களும் நன்றாக இருக்கின்றன, ஆனால் இது அடிக்கடி எனக்கும் எழும் ஒரு கருத்து: "சாமி கண்ணைக் குத்தும்" என்ற பயம் காரணமாக அறத்துடன் நடப்பது கடிவாளம் போட்ட குதிரை போன்ற நிலை. அறத்திற்காக அறம் என்ற நிலை இருந்தால், "சாமி இருந்தாலும்" எங்கள் கண்ணைக் குத்தாது! ஆனால்...அறம் செய்தால் நமக்கு நன்மையே பதிலாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் பொய்யானது. நல்ல விடயங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கே பல்லும் நகமுமாய் தொடர்ந்து போராட வேண்டிய உலகச் சூழலில், கடவுள் நம்பிக்கை எனக்கும் இப்போது ஈடாடி வருகிறது. குறிப்பாக காசாவின் குழந்தைகளைக் காக்காத தெய்வம், எந்த கிளைமாக்ஸை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது இன்னும்😂?
  4. சுமையுடன் நின்றாலும் சுகமாய் நிக்கிறேன் .......... ! 😀
  5. யாரை நம்பி நான் எழுத பின்னூடம் ஒன்று?.🤥 இப்படிக்கு ஏமாந்த ஓருறவு.😭
  6. இங்கே தான் கிடக்கிறார்கள். ஆனால் உங்களுக்கு பதில் வராது
  7. கள்ளடிக்கிறத நியாப்படுத்த என்ன என்ன கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்ல வேண்டி கிடக்கு🤣
  8. இதற்கு உச்ச நீதிமன்றம்போல் இறுதியான தீர்ப்பு வழங்கும் ஈழப்பிரியரை இன்னும் இங்கு காணவில்லையே, வெள்ளத்திற்கு ஓடியவர் இன்னும் திரும்பவில்லையா?🤔
  9. இலங்கை ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடாவிட்டாலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முடியும்; இனத்துக்காக தமிழரசு ஒன்றுபட வேண்டும்; ஜெனிவாவில் தமிழ் மக்களின் ஆணை பெற்றவர்களை பயன்படுத்தி இலங்கை தப்பித்துள்ளது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 28 JUL, 2025 | 01:20 PM இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (உரோம்) உடன்படிக்கையில் கையெழுத்திடா விட்டாலும் இலங்கையில் இடம் பெற்ற மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போர்க்குற்றங்கள் இன அழிப்பு ஆகியவற்றுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான வழிகள் இருப்பதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (YMCA) மண்டபத்தில் சரேஷ்ட சட்டத்தரணி ஸ்ரீ காந்தா தலைமையில் இடம்பெற்ற 1983 கறுப்பு ஜூலை படுகொலை வாரத்தின் நேற்று, இன்று, நாளை மக்கள் கருத்தாய்வு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் நாங்கள் 1983 கறை படிந்த கறுப்பு ஜூலை வாரத்தை நினைவு கூருவதுடன் மட்டும் நின்றுவிடாமல் வெலிக்கடை சிறைச்சாலையில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளின் கோரிக்கைகளுக்கு வலுச் சேர்ப்பவர்களாக இருக்கிறோமா என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். தமது உயிர் பறிக்கப்படப் போகிறது எனத் தெரிந்தும் எமது இனத்தின் கொள்கைக்காக எந்தவித விட்டுக்கொடுப்புக்களையும் காட்டிக் கொடுப்புகளையும் செய்யாது தமது உயிர்களை தியாகம் செய்தவர்கள். தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதம் ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் தமிழ் மக்களை அழித்த வரலாறுகளே அதிகம். தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஐநா மனித உரிமைகள் பேரவையில் சுமார் 12 வருடங்களாக கிடப்பில் கிடக்கின்றது. தொடர்ந்தும் தீர்மானங்களை எடுத்து அடுத்த கட்டத்திற்கு நகர விடாமல் ஐநா மனித உரிமைகள் பேரவையிலே தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை மட்டுப்படுத்தி வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு நகருவதற்காக அண்மையில் தமிழ் தேசியப் பரப்பில் பயணித்துக் கொண்டிருக்கின்ற அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்ததோடு சிவில் சமூகத்தையும் அழைத்தோம் துரதிஷ்ம் தமிழரசு கட்சி மட்டும் கலந்து கொள்ளவில்லை. ஐநா மனித உரிமைகள் பேரவையிலிருந்து தமிழ் மக்களுடைய விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கான இரண்டு வழிகள் இருக்கிறது . இலங்கை விவகாரத்தை பாதுகாப்புச் சபையிடம் பாரப்படுத்துவது அல்லது உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்ட நாடுகளில் விசாரணைகளை ஆரம்பிப்பது. இலங்கை ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடாவிட்டாலும் குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கான உதாரணமாக மியன்மாரில் இடம் ரோஹிந்திய முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிபு விவகாரத்தை கூறலாம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை இலங்கை போன்று மியான்மாரும் ஏற்காத நிலையில் ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட அங்கத்துவ நாடு ஒன்றினால் விசாரணை கோரப்படடது. அதேபோன்று ரோம் உடன்படிக்கையில் அமெரிக்கா கைச்சாத்துடாவிட்டாலும் ஆப்கானிஸ்தானில் சென்று அமெரிக்கா இராணுவம் இழைத்த மனித உரிமைகள் மீறல் தொடர்பில் விசாரிப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஆப்கானிஸ்தான் ரோம் உடன்படிக்கையை ஏற்றுள்ள நிலையில் உடன்படிக்கையை ஏற்ற நாடு ஒன்றில் இன்னொரு நாடு சென்று இழைத்த மனித உரிமைகள் மீறல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இருக்கின்றது. அதுமட்டுமல்லாது ஐநாவுக்கு வெளியில் இலங்கையில் போர் குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இன அழிப்பில் ஈடுபட்டவர்கள் ஐநா உறுப்பு நாடுகளுக்கு நுழையும் போது தமது நாடுகளில் போர் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள முடியும். இவ்வாறு பல வழிகள் இருக்கின்ற நிலையில் 2012 இல் இருந்து தமிழ் மக்களுடைய தீர்மானங்கள் தமிழ் மக்களின் ஆணை பெற்றவர்களினால் கிடப்பில் போடுவதற்கு காரணமாக இருந்துள்ளனர். இந்த நிலையை மாற்றி எல்லோரும் ஒரணியாக புதிய தீர்மானத்தை கொண்டு வருவதற்காக ஒன்றுபட்டு வாருங்கள் என அழைப்பு விடுத்தும் தமிழரசு கட்சி வரவில்லை. அவர்கள் வரவில்லை என்றாலும் எமது புதிய தீர்மானம் அனுப்பும் வரைவை தமிழரசின் தலைவர் மற்றும் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளோம் வராவிட்டாலும் திருத்தங்களை கூறினால் திருத்துவதற்கும் தயாராக இருக்கிறோம். ஆகவே தமிழ் மக்களுக்காக பல உயிர் தியாகங்கள் இந்த மண்ணில் இடம் பெற்றுள்ளதை நினைவில் வைத்து வர இருக்கும் ஜெனிவா அமர்வுகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான ஒத்துழைப்புக்களை அனைவரும் வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/221154
  10. "2012 இல் இருந்து இந்த விசாரணையை தாமதித்திருக்கிறார்கள் தமிழ் பிரதிநிதிகள்". 2020 இல் இருந்து பொன்னம்பலம் பிரதிநிதியாக இருக்கிறார். 2019 இல், றோகிங்கியாக்கள் பிரச்சினையை பிரிட்டனில் இருக்கும் ஒரு அமைப்பு ICC இடம் கொண்டு சென்றது. அதே நேரம், ஐ.நாவின் ICJ இடம் கம்பியா (Gambia) றோஹிங்கியாக்கள் பிரச்சினையைக் கொண்டு சென்றது. 2024 இல் மியன்மாரின் முக்கிய தலைவரைச் சந்தேக நபராக அறிவித்து ICC பிடிவிறாந்து பிறப்பித்திருக்கிறது👇. https://www.icc-cpi.int/victims/bangladesh-myanmar என் கேள்வி: இப்படி ICC இற்கு தமிழர் பிரச்சினையைக் கொண்டு செல்ல ஏன் தமிழரசுக் கட்சி தேவை? இங்கிலாந்தில் பரிஸ்ரரான பொன்னம்பலம் பா.உ 2020 இலேயே அங்கேயிருக்கும் அமைப்பு ஒன்றின் மூலம் முயன்றிருக்கலாமே? இப்போது கூட முயல என்ன தடை? என் ஊகம்: இவர்களுக்கும் இந்த விசாரணைகளில் அக்கறையில்லை. செயல்படும் ஊக்கமும் இல்லை, அல்லது எப்படிச் செய்வதென்றும் தெரியாது. தேர்தலில் வெல்வதற்கு காரணங்கள் தேவை, அதில் ஒன்று "அவையள் வரவில்லை, அதனால் சர்வதேச விசாரணை தடைப்படுகிறது". அடுத்த தேர்தலில் இருக்கும் ஒரு ஆசனமும் NPP இடம் பறி போகுமென நினைக்கிறேன்.
  11. ஒரு தவறை சுட்டிக்காட்ட ஒரு பண்பு இருக்கிறது. அது உங்கள் சுட்டிக்காட்டலில் அறவே இல்லை. தவறை சுட்டிக்காட்டுவதை விட அதை வைத்து ஒருவரை கோபப்படுத்துவது அல்லது குத்திக் குத்திக் காட்டுவது அல்லது சறுக்கி விட்டார் என்பதை வைத்து அவரது தேசியம் சார்ந்த பக்கத்தை பந்தாடுவது மட்டுமே இங்கே நான் காண்பது. யாழ் களத்தை அறிவூட்டுகிறோம் அல்லது தவறை சுட்டிக்காட்டி நேர்வழிப்படுத்துகிறோம் என்றபடி யாழில் தற்போது படித்தவர்கள் என்ற ஒரு சிலரது கம்பு சுத்துதல் மட்டுமே என்னால் காணக்கிடைக்கிறது. அதனால் தான் நானே யாழை விட்டு தள்ளிச்சென்று கொண்டிருக்கிறேன். இது தொடர்வதை காண்கிறேன். என் கண்முன்னே இது நடப்பதால் ஒரு அளவுக்கு மேல் கடந்து செல்ல முடியவில்லை
  12. ஒரு கதைக்கு கைது செய்யப்பட்ட பெடியன் பதின்நான்கு வயதில் இயக்கத்தில் இருந்தான் என வைத்தாலும், பதின் நான்கு வயதில் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு கொடுக்கப்பட்டான் என எடுத்து கொண்டாலும், 2025ம் ஆண்டு, 16 வருடங்களின் பின், இயக்கமே இல்லாத நிலையில், ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு 16 ஆண்டுகளின் பின் கைது செய்யப்பட்ட உந்த பெடியன் முன்னாள் விடுதலை புலி உறுப்பினர் என இனம் காணப்படுவது மூலம் இங்கே நிறுவப்படுவது என்ன? உந்த பெடியன் நாசமாய் போனதற்கு புனர் வாழ்வு கொடுத்தவர்களின் பங்கு இல்லையா? 16 வருடங்களின் உந்த பெடியன் யார் யாருடன் கூட்டு வைத்தான், இவனை தவறாக வழி நடாத்தியவர்கள் யார் என ஒரு தகவலும் இல்லையே. இந்த செய்தியை வழங்கிய அரச அதிகாரியிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும்.
  13. நான் யாழ்ப்பாணத்தில், நிற்கும் போது இறந்தால்.... காணொளியில் உள்ள மாதிரி.... பறை மேளம் அடித்து, பிரேத ஊர்வலம் வைக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்துளேன். 🙂 😜
  14. காதலுடன் கூடிய முத்தங்கள் எப்போதும் அழகானது . ........ ! ❤️
  15. என்னய்யா இலங்கை முன்னாள் கடற்படை தளபதி கைது என ஒரு செய்தி உள்ளது. இதுபற்றி ஒரு ஆராய்ச்சியும் இல்லையா?
  16. தனித்து நின்றாலும்- தனித்துவமாய் நில்.
  17. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 27 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் ராஜேந்திர சோழன் தனது புதிய தலைநகரமான கங்கை கொண்ட சோழபுரத்திற்கு குடிநீர் ஆதாரமாக ஒரு பிரமாண்டமான ஏரியை உருவாக்கினார். திருவாலங்காடு செப்பேடுகளில்கூட குறிக்கப்படும் அந்த ஏரியின் நிலை என்ன? அரசர்கள் புதிதாக ஒரு நகரத்தை உருவாக்கும் போது, அந்நகரம் ஆற்றங்கரையில் அமைக்கப்படும் அல்லது நகரம் அமைக்கும் போதே வேறு வகையில் குடிநீர் ஆதாரம் இருப்பது உறுதி செய்யப்படும். ராஜேந்திர சோழன் நீர்வளமிக்க தஞ்சாவூரை விட்டுவிட்டு, அங்கிருந்து சுமார் 50 கி.மீ. தூரத்தில் ஒரு வறண்ட பகுதியில் தனக்கான புதிய தலைநகரத்தை உருவாக்கினார். அப்போது, தனது புதிய தலைநகருக்கு நீராதாரமாக இருக்க வேண்டுமென அவரால் உருவாக்கப்பட்டதுதான் சோழ கங்கம் என்ற ஏரி. கி.பி. 1014ஆம் ஆண்டில் சோழப் பேரரசின் மன்னராக முடிசூட்டிக் கொண்ட ராஜேந்திர சோழன், தான் ஆட்சிக்கு வந்து சுமார் பத்து-பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகு சோழர் தலைநகரை தஞ்சாவூரில் இருந்து மாற்ற விரும்பினார். அதன்படி, தஞ்சாவூரில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் தனது தலைநகரத்தை உருவாக்க முடிவு செய்தார். அந்தத் தலைநகரம், கங்கை கொண்டபுரம், கங்காபுரம் உள்ளிட்ட பல பெயர்களால் அழைக்கப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம். இந்த இடம் தற்போது அரியலூர் மாவட்டத்தில் இருக்கிறது. இந்தப் புதிய தலைநகரத்தில், ஒரு மிகப்பெரிய அரண்மனை கட்டப்பட்டது. தஞ்சை பெரிய கோவிலைப் போலவே கங்கை கொண்ட சோழீச்சரம் என்ற பெயரில் மிகப்பெரிய கோவில் ஒன்று உருவாக்கப்பட்டது. அகழி, கோட்டைச் சுவருடன் கூடிய இந்த நகரம் 1,900 மீட்டர் நீளமும் 1,350 மீட்டர் அகலமும் உடையதாக இருந்தது. ஆனால், இந்தப் பகுதி தஞ்சையைப் போன்ற நீர்வளத்துடன் இருக்கவில்லை. ஆகவே, இந்த நகருக்கென ஒரு மிகப்பெரிய ஏரியை உருவாக்கினார் ராஜேந்திர சோழன். இந்த ஏரி, கங்கை கொண்ட சோழீச்சரம் கோவிலில் இருந்து சில கி.மீ. தூரத்தில் வெட்டப்பட்டது. இந்த ஏரிக்கு சோழ கங்கம் என்று பெயரிடப்பட்டது. தற்போது இந்த ஏரி பொன்னேரி எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த ஏரி கட்டப்பட்ட காலத்தில் இதன் கரைகள் தெற்கு - வடக்காக 14 முதல் 16 மைல் நீளத்திற்கும் அகலம் சுமார் 4 மைல் நீளத்திற்கும் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். படக்குறிப்பு, ராஜேந்திர சோழன் உருவாக்கிய சோழ கங்கம் ஏரி இன்று... இவ்வளவு பெரிய ஏரிக்கான நீரைக் கொண்டு வர, கொள்ளிடத்தில் இருந்து ஒரு கால்வாயும் வெள்ளாற்றில் இருந்து ஒரு கால்வாயும் வெட்டப்பட்டதாகத் தனது 'ராஜேந்திர சோழன்' நூலில் மா. ராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார். இந்த சோழ கங்கம் ஏரியின் வடிகாலாகத்தான் தற்போதும் மிகப்பெரிய ஏரியாக விளங்கும் வீராணம் ஏரியே இருந்ததாக தனது 'பிற்காலச் சோழர்கள்' நூலில் குறிப்பிடுகிறார் தி.வை. சதாசிவ பண்டாரத்தார். கங்கைச் சமவெளி மீதான தனது வெற்றிகளைக் குறிக்கும் விதமாக இந்த ஏரிக்கு சோழ கங்கம் என்ற பெயரை ராஜேந்திர சோழன் சூட்டியிருக்கலாம். திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் உள்ள சமஸ்கிருத குறிப்புகள், இதை 'கங்கா - ஜலமயம் ஜெயஸ்தம்பம்', அதாவது 'நீர்மயமான வெற்றித் தூண்' எனக் குறிப்பிடுகின்றன. திருவாலங்காட்டு செப்பேடுகளில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட 124வது வரியில் "சோளங் கங்கமிதி க்யாத்யா பிரதீதந் நிஜமண்டலே/ கங்கா ஜலமயந் தேவோ ஜயஸ்தம்பம் வியதத்த ஸ:" எனக் குறிப்பிடப்படுகிறது. அதாவது, "தனது மண்டலத்தில் சோழ கங்கம் என்ற பெயருடையதும் கங்கா நீரால் ஆனதுமான ஜயஸ்தம்பத்தை ராஜேந்திரன் நிறுவினான்" என்கிறது இந்தப் பாடல். ஷார்ட் வீடியோ Play video, "சிங்க வடிவிலான சோழர் கால கிணறு - சிறப்பம்சம் என்ன?", கால அளவு 1,07 01:07 காணொளிக் குறிப்பு, கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் 'சோழர்கள்' நூல், இந்த ஏரி குறித்து விரிவான தகவல்களைத் தருகிறது. 1855ஆம் ஆண்டில் வெளியான 'ஸ்தல சஞ்சிகை' ஒன்றை மேற்கோள் காட்டி அந்தத் தகவல்களை அவர் அளித்துள்ளார். "உடையார்பாளையம் தாலுகாவில் வடக்கு-தெற்காக 16 மைல் நீளத்திற்கு ஒரு கரை இருக்கிறது. இதில் வலிமை வாய்ந்த பெரிய கலிங்குகள் இருக்கின்றன. இது முற்காலத்தில் இந்தியாவிலேயே பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். இந்தப் பெரிய குளம் அல்லது ஏரிக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து ஒரு கால்வாய் வழியாகத் தண்ணீர் வந்தது. 60 மைல் நீளமுள்ள இந்தக் கால்வாய், அதனுடைய தென் கோடியில் இந்த ஏரிக்குள் நுழைகிறது. இதுவே இந்த ஏரிக்கு முக்கியமான நீர்வரத்து வழி" என்று அந்த நூலில் கூறப்பட்டுள்ளது. அதோடு, "ஏரியின் வட பகுதியில் நுழையும் ஒரு சிறு கால்வாய் வெள்ளாற்றின் நீரையும் இங்கே கொண்டு வருகிறது. இந்த இரண்டு கால்வாய்களின் அடிச்சுவடுகள் இன்றும் உள்ளன. இந்த ஏரி தூர்ந்துவிட்டதால் பல ஆண்டுகளாக அது எவ்விடத்திலும் பயன்படவில்லை. அந்த ஏரியின் நடுப்பகுதி முழுவதும் உயர்ந்த அடர்த்தியான புதர்களும் குறுங்காடுகளும் நிறைந்து பாழாகிவிட்டது. இந்த ஏரி படையெடுத்து வந்த ஒரு படையினர் வேண்டுமென்றே செய்த ஒரு கொடுஞ்செயலால் அழிந்துவிட்டதாக தலைமுறைதலைமுறையாகச் சொல்லப்படுகிறது" என்றும் நீலகண்ட சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார். சோழர்கள் நூலின்படி, ஏரியின் தென் கோடியில் காடு சூழ்ந்த ஒரு கிராமம், கங்கை கொண்டபுரம் என்ற பெயரால் இருந்து வருகிறது. அதன் சுற்றுப்புறத்தில் மிகப்பெரிய அளவினதும் அரிய வேலைப்பாடு உடையதுமாகிய ஒரு கோவில் இருக்கிறது. "அதற்கு அருகே காடு சூழப்பட்ட ஒரு பகுதியில் பழைய கட்டடங்களின் எஞ்சிய பகுதிகள் உள்ளன. மலைமேடுகள் போலவும் குவியல்கள் போலவும் உள்ள இவை பழங்காலத்து பாபிலோனை நினைவுபடுத்துகின்றன. மிகப் பரந்த பகுதியில் அழகிய அரண்மனை ஒன்று இருந்தது எனவும் அதன் பல்வேறு பகுதிகள்தான் இடிபாடுகளாகக் காட்சியளிக்கின்றன எனவும் கிராமத்தில் உள்ள முதியோர் கூறுகிறார்கள். இந்த அரண்மனை இருந்த காலத்தில் கங்கை கொண்டபுரம், முடியுடைய மன்னர் ஒருவரின் செல்வமும் செழிப்பும் நிறைந்த தலைநகராக விளங்கியது.." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கங்கை கொண்ட சோழீஸ்வரம் கோவில் இப்போது ஒற்றையடிப் பாதைகூட இல்லாத காடாக காட்சி தரும் பகுதியில் மைல்கணக்கான பெரும்பரப்புக்கு இந்த ஏரி பெரும் வளத்தை வாரி வழங்கியதாக நீலகண்ட சாஸ்திரி எழுதியுள்ளார். இந்த மாபெரும் ஏரியை மீண்டும் நிர்மாணிக்க வேண்டும் என அடிக்கடி பேசப்பட்டு வந்துள்ளது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். "எதிர்காலத்தில் எப்போதாவது இது நிறைவேற்றப்படும். ஆனால், அதுவரை இந்தப் பகுதி காடாகத்தான் இருக்கும். இங்கே இருக்கிற ஒரு சில கிராமவாசிகள் அந்த ஏரியின் பழங்காலக் கரையை முன்காலத்துப் பேரரசர்களின் மிகப்பெரிய முயற்சியின் சின்னமாகச் சுட்டிக்காட்டுவார்கள்" என்கிறது அந்த நூல். மேலே உள்ள குறிப்புகள் எழுதப்பட்டு சுமார் 170 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தபோதும் இந்த ஏரி, இன்னமும் தூர்ந்துபோன நிலையிலேயே இருக்கிறது. ஷார்ட் வீடியோ Play video, "ராஜேந்திர சோழன் கட்டிய சோழ கங்கம் ஏரி", கால அளவு 1,20 01:20 காணொளிக் குறிப்பு, "இந்த ஏரிக்கான நீர் வரத்துக் கால்வாய் 60 மைல் தூரத்திற்கு அந்தக் காலத்திலேயே வெட்டப்பட்டுள்ளது" என்கிறார் கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் நிறுவன அறங்காவலரான ஆர்.கோமகன். ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்தக் கால்வாயை இப்போதும் புதுப்பிக்க முடியும் எனக் கூறும் அவர், அதன் மூலம் கொள்ளிடத்தின் நீரை மீண்டும் இங்கே நிரப்ப முடியும் என்று வலியுறுத்துகிறார். இந்த ஏரி ஒரு பொறியியல் அற்புதம் என்கிறார் கோமகன். "இந்த ஏரியில் இருந்து நீர் வெளியேறும் பகுதிகளில் வண்டலை தக்க வைக்கும் ஓர் அமைப்பு இருந்தது. இதில் சேரும் வண்டல் பிறகு சேறோடும் துளை வழியாகவும், பிறகு நீரோடும் துளை வழியாகவும் செல்லும். இந்த வண்டல் கலந்து வரும் நீர் வயல்களில் படிந்து வயல்களை வளமாக்கும்." ஆனால், "இப்போது ஏரியின் பெரும்பகுதி இல்லாமல் போய்விட்டது என்று 1855ஆம் ஆண்டு வெளிவந்த கெஸட்டியர்களிலேயே இந்த ஏரி கைவிடப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. அதனால், அதற்கு முன்பே இந்த ஏரி அழிந்திருக்க வேண்டும்" என்கிறார் ஆர். கோமகன். இப்போது இந்த ஏரியைப் புதுப்பிக்கப் போவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தற்போது 700 ஏக்கர் பரப்பளவுடன் இருக்கும் இந்த ஏரியின் கரைகளைப் பலப்படுத்துவதோடு, 15 கிலோமீட்டர் நீளமுள்ள உபரிநீர் வழிக் கால்வாய்களை புனரமைப்பது, 38 கிலோமீட்டர் நீளமுள்ள வரத்து வாய்க்கால்களைத் தூர்வாருவது ஆகிய பணிகளை மேற்கொள்ளப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஏரியைச் சுற்றியுள்ள 1,374 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறும் என்கிறது தமிழ்நாடு அரசு. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3wn6404xe4o
  18. உணர்வுபூர்வமான அருமையான பதிவு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 'எனது மரணச் சடங்கு' என்று தலைப்பிட்டதால் நான் எழுதியதைப் போல அல்லது என் மகள் எழுதியதைப் போல அமைந்திருக்குமோ என்று நினைத்தேன் - மற்றவர்கள் உலகை நமது கண்ணாடி அணிந்து பார்ப்பது வேடிக்கையானது என்று தெரிந்தும் கூட. இருப்பினும் எங்கள் எழுத்துகளையும் கீழே இணைத்துள்ளேன் : https://www.facebook.com/share/p/16mRbucbQJ/
  19. காசாவில் இஸ்ரேலின் தொடர் குண்டுதாக்குதலால் முற்றிலும் அழிக்கப்பட்ட அல்லது தற்காலிகமாக செயலிழந்திருக்கும் வைத்தியசாலைகளை மீண்டும் புனரமைத்து அல்லது அதற்குப்பதிலாக தற்காலிக வைத்திய முகாம்களை நிறுவி அதன் மூலம் காசாவில் உள்ள சிறுவர்களுக்கு வேண்டிய உடனடி வைத்திய சேவைகளை மேலை நாடுகள் வழங்க வேண்டும். அதை விடுத்து அங்குள்ள குழந்தைகளையும் சிறுவர்களையும் தங்கள் தங்கள் நாடுகளுக்கு அழைத்து சென்று மருத்துவ உதவி வழங்க முன்வருவது காசாவில் இருந்து பலஸ்தீனியர்களை முற்றாக வெளியேற்றவேண்டும் என்ற இஸ்ரேலினதும் அமெரிக்காவினதும் நோக்கத்தை விரைந்து செயல்படுத்தும் திட்டத்துக்கு மறைமுகமாக முண்டு கொடுப்பதாகும். இப்படி பார்த்தால் காசாவில் உள்ள அனைத்து குழந்தைகளையும் தான் பிரிட்டனுக்கு கொண்டுசெல்லவேண்டிவரும். சிகிச்சை முடிந்தவுடன் அந்த குழந்தைகளை எங்கே கொண்டு சென்று விடுவார்கள். பிரிட்டனின் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இன்னும் சில மாதங்களில் காசா பிரதேசம் சன நடமாட்டம் அற்ற ஒரு நிலமாக மாறப்போவது உறுதி. குழந்தைகளை வெளியேற்றும்போது அவர்களுடன் அவர்களது தாய்மார்கள் அல்லது முழு குடும்பமோ கூட வெழியேறுவது தடுக்கமுடியாது. பாலஸ்தீன மக்களை கொன்றுகுவித்து அவர்களுக்கு அன்றாட வாழ்க்கையை சீரழிக்கும் போர் நடவடிக்கைகளை இருதரப்பும் முதலில் கைவிட வேண்டும். அதற்கு சர்வதேச நாடுகள் ஒற்றுமையுடன் முன்வந்து ஒரு தீர்வினை முன்வைத்து செயலாற்றவேண்டும்.
  20. எங்கெல்லாம் சண்டை உருவாகிறதோ அங்கு அதன் பின்னால் ஒரு கரம் இருக்கும் இதுதான் தற்போதய உலக நிலை.
  21. கள் உட்பட எதையும் அருந்தாமல் விட்டாலும் ஒரு வாரத்தில் அது மாறி விடும் என்பது தான் உண்மை!
  22. இது ஒருவகையில் முற்போக்கு சிந்தனை வடிவம் தான். இளவயது மகப்பேறு, பாலியல் துஸ்பிரயோக விளைவு போன்ற இக்கட்டான நிலையை சந்திக்கும் பெண்ணுக்கு இது அனுகூலமாக கூட அமையலாம். குழந்தையின் வளர்ச்சியில், பராமரிப்பில் நேரத்தை, செலவுகளை பகிர்ந்து கொள்ளாத ஒரு ஆண்வெறும் பத்திரத்தில் மட்டும் தன்னுடைய பெயரை போட்டு "ஆண்மையை" காட்டுவதில் என்ன பலன். இது ஒருவகையில் முற்போக்கு சிந்தனை வடிவம் தான். இளவயது மகப்பேறு, பாலியல் துஸ்பிரயோக விளைவு போன்ற இக்கட்டான நிலையை சந்திக்கும் பெண்ணுக்கு இது அனுகூலமாக கூட அமையலாம். குழந்தையின் வளர்ச்சியில், பராமரிப்பில் நேரத்தை, செலவுகளை பகிர்ந்து கொள்ளாத ஒரு ஆண்வெறும் பத்திரத்தில் மட்டும் தன்னுடைய பெயரை போட்டு "ஆண்மையை" காட்டுவதில் என்ன பலன். சமூகம் எல்லாவற்றிட்கும் எதோ ஒரு பெயர் வைத்து அழகு பார்க்கும்... அது அவர்கள் மனப் பிறழ்வு. இது என்னுடைய தாழ்மையான கருத்து.
  23. "என் இனமே என் சனமே” (செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழிகளில் புதைந்த வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஒரு கற்பனைச் சிறுகதை) மேல் வானம் தாழ்வாகத் தொங்கியது, அதுவும் துக்கம் அனுசரிப்பது போல. சிவப்பு பூமியின் அடியில், நீண்ட நேரம் அலறல்கள், பிரார்த்தனைகள் மற்றும் கனவுகளுடன் மங்கின. முப்பத்தி மூன்றாவது மண்டை ஓடு மெதுவாகத் தோண்டி எடுக்கப்பட்டதால், இந்த வாரம் அமைதி மீண்டும் உடைந்தது. அதன் அருகில் - ஒரு சிறு குழந்தையின் பள்ளிப் பை, காலத்தால் மங்கிப்போனது, ஆனால் அதன் இருப்பு பல கதைகளைச் சொல்லப்போகுது. மறக்கப்பட்ட ஒரு தாலாட்டை உச்சரிப்பது போல, தமிழ் எழுத்துக்கள் அதன் குறுக்கே நடனமாடின. அந்தக் செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் அருகே, கூடியிருந்த பார்வையாளர்களிடையே, ஐம்பது அகவை மதிக்கத்தக்க அனந்தி என்ற பெண், 1996 ஆம் ஆண்டு ஒரு சோதனைச் சாவடியில் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் காணாமல் போன தனது தம்பி சிவகுமாரின் புகைப்படத்தை கையில் ஏந்தி நின்றாள். "கண்ணா, நீ அழுதாயா? உன்னைப் பேச அனுமதித்தார்களா? நீ இறந்தபோது நீ தனியாக இருந்தாயா?" இப்படியான அவளின் மனஉளைச்சலுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை, அவள் பதில்களை எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால் இன்று, ஏதோ மாற்றம் ஏற்பட்டது. குழந்தையின் எலும்புகளுக்கு அருகில் ஒரு சிறிய கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டது. அவளுடைய இதயம் பதைபதைத்தது. அவள் கண்கள் கலங்கின. ஒருகாலத்தில் தம்பி அந்தக் கண்ணாடியை, பக்கத்து வீட்டுக்காரரின் குழந்தைக்கு வாங்க உதவியிருந்தார் என்பது, அவளுக்குத் திடீரென நினைவில் வந்தது. 1948-இல் சுதந்திரம் வந்தபின் தொடங்கியது – ‘சிங்களமொழி மட்டும்’, கல்வித் தரப்படுத்தல், நில ஆக்கிரமிப்பு, மற்றும் சிறைகள் இல்லாத கொலைகள்! அதன் உச்சியில் – 1996: கிருஷாந்தி குமாரசுவாமி. ஒரு பள்ளிச்சிறுமி. செம்மணி இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது. தாயார், சகோதரர், உறவினரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது வரை முறையான விசாரணை அல்லது அதற்கு ஏற்ற நீதி இல்லை. எதோ ஆரம்பித்தார்கள். தீர்ப்பளித்தார்கள். கிடங்கில் போட்டார்கள். புண்ணிய புத்த பூமியில் புத்தரின் முறையான போதனையைக் கேட்க ஒருவரும் இல்லை. அங்கொன்று இங்கொன்றாக பலர் பரந்து இருக்கிறார்கள். ஆனால், மௌனமாக? ஏன் புத்த சிலைகள் கூட ஆக்கிரமிப்பில் தான் ஈடுபடுகிறது! அவர்களின் உடல்கள் செம்மணியில்த் தான் புதைக்கப்பட்டன. அவள் எண்ணங்கள் பின்னோக்கி நகர்ந்தன. இன்று, தடயவியல் நிபுணர் எச்சங்களின் மீது மண்டியிட்டு எதோ தேடுகிறார். அவருடன், கூட இருந்த தொல்பொருள் பேராசிரியர் மண் வடிவங்களை ஆய்வு செய்கிறார். மேலும் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் அறிவியலைப் பயன்படுத்தி திகிலை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அவ்வளவு மட்டும் தான். அது மட்டும் தான் அவர்களால் முடியும் ! இவை சாதாரண மரணங்கள் அல்ல. இவை போரில் உயிரிழந்தவை அல்ல. இவர்கள் பொதுமக்கள் - பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், கடைக்காரர்கள் - கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்கள். மீட்கப்பட்ட எலும்புகள், பழிவாங்கலைப் பற்றி கிசுகிசுக்கவில்லை ஆனால் அவை சாட்சியைக் கோருகின்றன. அவை நீதியைக் கேட்கின்றன. ஆனந்திக்கு அவை தன்னிடம் கேட்பது போலவே இருந்தது! அவள் செம்மணியில் கூடியது துக்கம் பின்பற்ற மட்டுமல்ல, உண்மை அறிந்து நினைவு கூருவதற்காகவும். மண்ணில் உள்ள எலும்புகள் வெறும் அட்டூழியத்தின் சான்றுகள் மட்டுமல்ல - அவை தமிழ் தேசத்தின் ஆன்மாவின் துண்டுகள் என்பதை எடுத்துக் காட்டவுமே! அவள் அந்தக் கண்ணாடியைப் பற்றி சொல்ல நினைத்தாள், ஆனால் கேட்கத்தான் அதிகாரிகள் இல்லை. அங்கு இருந்த படை வீரர்களும் அரச அதிகாரிகளும் அவளை, அகழாய்வு செய்பவர்களிடமோ, அதை மேற்பார்வையிடம் நீதிபதியிடமோ செல்ல அனுமதிக்கவில்லை. ஆனால், அவளை காவல் நிலையத்தில் வந்து சொல்லும்படி கட்டளையிட்டனர். காவல் நிலையத்தில் எத்தனை முறைப்பாடுகள், சான்றுகள் தூங்கிக் கிடக்கின்றன என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும். அது அவளின் அனுபவம் கூட. அவள் அன்று இரவே மக்களுக்கு தன் இணையத் தளத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்தாள். என் இனமே என் சனமே … நம்மை அழிக்க முயன்றவர்கள், நம்மை மறக்கச் சொல்லுகிறார்கள். ஆனால், இந்தக் குழந்தைகளின் எலும்புகள் பேசுகின்றன. கண்ணாடியும் பாடசாலைப் பையும் சத்தமில்லா சாட்சிகள்! சம தருமம் இல்லா நீதியின் முகத்தை, நீதி மன்றமில்லாத இராணுவ கெடுபிடியை, இன அழிப்பின் பிசாசை, இந்த செம்மண் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது! நாம் அழக்கூடாது. நாம் பேச வேண்டும். நாம் பதிவு செய்ய வேண்டும். செம்மண் நாம் உறங்கும் இடமல்ல — நம் சத்தியத்துக்கான மன்றம்! அங்கு புதைந்துள்ள ஒவ்வொரு எலும்பும், “நீதி” என்றொரு குரல்! நீதி ஒரு நாள் பிறக்கும். அந்த நாளுக்காக — நாம் மறவாமலிருப்பதே நாம் செய்யும் பெரிய போராட்டம்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.