Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    87988
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    20010
    Posts
  3. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    10207
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/06/25 in all areas

  1. தமிழர்கள் முடிந்தால் தெலுங்கரை கெட்டவர்களாக சித்தரிக்கும் ஒரு படத்தை எடுத்துக் காட்டட்டும் . தெலுங்கானாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் கூட ஓடவிட மாட்டார்கள். தெலுங்குப் படத்தை ஓடவிடாமல் தடுத்தால் தமிழ்ப் படங்களை ஓடவிடாமல் தடுத்து விடுவார்கள் என்ற வியாபார புத்தியினால்த் தான் தமிழர்கள் குப்புற படுத்து விட்டார்கள்.
  2. காசாவிற்கான் விடிவு காலம் அண்மிப்பதாகவே தெரிகிறது. ஹமாசின் பயங்கவரவாதத் தாக்குதலைச் சாட்டாக வைத்து, அதற்குப் பதிலடி வழங்குகிறேன், பணையக் கைதிகளை மீட்கப்போகிறேன் என்கிற போர்வையில் இஸ்ரேல் நடத்திவரும் இனவழிப்பு சர்வதேசத்தில் கடுமையான எதிர்ப்பினைச் சந்தித்து வருகிறது. முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு ஒரு நாளுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் அளவு 600 பாரவூர்திகள் என்று கணக்கிடப்பட்டிருக்கையில் வெறும் 80 பாரவூர்திகளையே இஸ்ரேலிய அரசு அனுமதித்து வருகிறது. அத்துடன் இவ்வாறு அனுப்பப்படும் பாரவூர்திகளை சட்டவிரோத யூதக் குடியேற்றக்காரர்களும் அவ்வபோது மறித்து வருகிறார்கள். ஆக, மிகவும் திட்டமிட்ட வகையில் பட்டிணிச்சாவொன்று இஸ்ரேலினால் அங்கு அரங்கேற்றப்பட்டு வருகிறது. நாள் ஒன்றிற்கு பத்திற்கும் மேலான பலஸ்த்தீனர்கள், குறிப்பாகக் குழந்தைகள் பட்டினியினால் கொல்லப்பட்டு வருகிறார்கள். இந்த அவலங்களே சர்வதேசத்தின் கண்களைத் திறந்திருக்கின்றன. இதன் ஒரு அங்கமே பலஸ்த்தீனத் தேசத்தினை அங்கீகரிப்பது எனும் முடிவு. இன்று பலஸ்த்தீனத்தில் நடக்கும் அழிவுகளுக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் அவலங்கள் 2009 இல் முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றப்பட்டன. சர்வதேச அங்கீகாரமோ அல்லது யுத்த நிறுத்தமோ இல்லாது எமது மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். சர்வதேசத்திலிருந்து வந்த உதவிகளும், போர்நிறுத்தத்திற்கான கோரிக்கைகளும், நிவாரணப் பொருட்களும் இந்தியாவின் தலைமையில் தடுத்து நிறுத்தப்பட்டு லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படுவது உறுதிசெய்யப்பட்டது. பலஸ்த்தீனத்திற்கான விடிவென்பது எமக்கான விடிவையும் தேடித்தரலாம். ஆகவே பலஸ்த்தீனத்திற்கான விடிவிற்காய் நாம் ஆதரவு கொடுப்பது எமக்கு நாமே உதவுவதாக அமையும் என்பது எனது எண்ணம்.
  3. மலையக மக்களின் அடையாளமான காமன் கூத்தும் கிழக்கில் காமண்டியும் – கிரிஜா மானுஶ்ரீ. written by admin August 2, 2025 மனிதனின் ஆர்வம், எதிர்பார்ப்பு எத்தகையது என்பது உலகறிந்த விடயமே. விடுக்கப்பட்ட அழைப்பிற்கிணங்க கிழக்கில் காமண்டி எவ்வாறு இருக்கப் போகின்றது என்ற ஆர்வத்துடன் அனைவரும் ஒன்றுத்திரண்டு சென்றோம். தப்பிசை ஒலி முழங்க வண்ணமயமான ஒளி அமைப்புகளுடன் வரவேற்றது காமண்டி. மலையகத்தில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் அமாவாசை மூன்றாம் நாள் காமன் கூத்து நிகழ்த்தப்படுகின்றது. பிரித்தானியரால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தமிழக மக்களின் 200வது ஆண்டினை நினைவு கூறுவதாகவே காமன் கூத்து சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் மாணவர்களால் கிழக்கில் காமண்டி என்ற பெயரில் நிகழ்த்தப்பட்டது. கடந்த வருடம்(2024) இந்த வருடமும்(2025) மலையக மக்களின் கூத்து வடிவங்களில் முக்கியமானதாக விளங்கும் காமன் கூத்து ஆற்றுகை செய்யப்பட்டது. இவ்வருடம் 2025ம் ஆண்டு 5ம் மாதம் 23ஆம் திகதி மாலை 6.30 மணி தொடக்கம் 11.00 மணி வரை நீடித்தது. என்னுடைய அனுபவமாக ஆறு வயதில் மஸ்கெலியாவில் கிலண்டில் தோட்டத்தில் மலையக மக்களின் நம்பிக்கை சார்ந்த ஆற்றுகை வடிவமான காமன் கூத்தினை சுமாராக 18 வருடங்களுக்கு பின்னர் கிழக்கில் காமண்டி என்ற பெயரில் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு பக்கத்தில் நெருப்பில் தப்பு பறைகள் சூடேற்றப்பட்டன. மறுபக்கம் நடன நாடகத்துறை மாணவர்களால் காமன் கூத்துக்கான ஆயத்த வேலைப்பாடுகள் பரபரப்பாக செய்யப்பட்டன. காமன் கூத்தில் தப்பு பறை முக்கியமான இசைவாத்தியமாக விளங்குகின்றது இது காமன் கூத்தை பார்த்து ரசிக்க புத்துணர்ச்சி கொடுத்தது. இதற்கு வாத்தியம் வாசித்த மாணவர்களை பாராட்ட வேண்டும். காமன் கூத்து பாடல்கள் தெளிவாகவும் விளக்கமாகவும் கதையை அழகாக எடுத்துக் கூறுவதாக அமைந்திருந்தது. கூத்தில் பக்கப்பாட்டுக்காரர்களே பாடல்களை கூத்து ஆரம்பத்தில் இருந்து நிறைவுறும் வரை பாடினார்கள். மங்கள விளக்கேற்றலுடனும், உரைகளுடனும் தொடங்கிய காமண்டி பார்வையாளர்களை ஆராவாரப்படுத்தியது. ஒரு மாணவரால் ரத்தின சுருக்கமாக காமன் கூத்தினுடைய கதை கூறப்பட்டது. கூத்தில் பங்கு பெற்ற அனைவரும் கம்பம் பாலித்து காப்புகளை கட்டி தயார் நிலையில் இருந்தார்கள். இந்த சுவாரஸ்யத்துடன் நாம் காமன் கூத்து தொடர்பான சில விளக்கங்களுடன் நிகழ்வுக்குள் செல்வோம். ஒவ்வொரு நிகழ்விற்கும் பின்னால் ஒரு வரலாறு இருக்கும் அல்லவா? ஆம் அதுபோல காமன் கூத்து நிகழ்த்தப்படுவதற்கும் காரணம் உண்டு. இதற்கு ஒரு புராண கதையும் உள்ளது. இது கந்தபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதனை பார்க்கலாம். அதாவது தேவர்களை அசுரர்கள் இன்னல்படுத்தினார்கள். சூரன் தலைமையில் தேவலோகம் கைப்பற்றப்பட்டது. இதனை தேவர்கள் சிவனிடம் முறையிட சிவன் தனக்கும் சக்திக்கும் மகன் பிறப்பான் அவனே அசுரர்களை அழித்து தேவர்களை மீட்பான் என்று கூறினார். பின்னர் நீண்ட ஆண்டுகள் தவத்தில் ஆழ்ந்திருந்த சிவன் தேவர்களின் முறையீடுகளை நிவர்த்தி செய்யவில்லை. ஆகையால் பிரம்மனிடம் தேவர்கள் முறையிட மன்மதனை சிவனுடைய தவத்தை அளிக்குமாறு பிரம்மதேவன் கூறினார். ரதி தடுத்தபோதும் கேட்காத மன்மதன் காமக்கணைகளை தொடுத்ததால் நெற்றிக்கண் திறந்த சிவன் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார். இதனை அறிந்த ரதி புலம்பி அழுதாள். இக்காரணத்தினால் சிவன் எவருடைய கண்களுக்கும் தென்படாது ரதிக்கு மாத்திரம் மன்மதனின் உருவம் புலப்படும் வகையில் மன்மதனை உயிர்பித்தார் இதுவே கந்தபுராணம் கூறும் கதையாகும். இது மலையகத்தில் ஆடப்படும் காமன் கூத்தில் சற்று வேறுபட்டது. சிவனிடம் தக்கன் சக்தியானவள் என்னுடைய மகளாகவும் சிவன் மருமகனாகவும் இருக்க வேண்டும் என்று கேட்க சிவன் வரமளித்தார். பின்னர் சிவனை தரிசிக்க சென்ற தக்கனை சிவன் தியானத்தில் இருந்ததால் பார்க்கவில்லை. தன்னை பார்க்கவில்லை என்ற கர்வம், கோபம் கொண்டு சிவனை நோக்கி தக்கன் யாகம் செய்கின்றான். தக்கனின் தவத்தை அழித்த சிவன் கோபத்தோடு தவம் இருக்கின்றார். சிவனுடைய கோபத்தின் அனலால் அவதியுறும் தேவர்கள் இந்திரனின் உதவியுடன் சிவனின் தவத்தை அழிக்குமாறு மன்மதனுக்கு தூதோலை அனுப்பினார்கள். கட்டளைக்கிணங்க சென்ற மன்மதன் சிவனின் நெற்றிக்கண் திறக்க காரணமாகி எரிந்து மடிகின்றான். பின்னர் சிவனிடம் ரதி அழுது புலம்பி முறையிடவே மன்மதனை உயிர்ப்பித்தார். இந்த கதையை அடிப்படையாகக் கொண்டே கிழக்கில் காமண்டியும் ஆற்றுகை செய்யப்பட்டது. காமன் கூத்து நிகழ்த்தப்படும் இடத்தையும் விளங்கிக் கொள்வது அவசியம். காமன் கூத்து நிகழ்த்தப்படுகின்ற களத்தினை “காமன் பொட்டல்” என்று கூறுவார்கள். அது அனைவரும் ஒன்று கூடும் பொது இடமாக இருக்கும். இதில் “காமன் பாலித்தல்” என்பது முக்கியமானது காமன் பொட்டலின் நடுவே கம்பம் பாலிக்கப்படும். அதாவது காமன் குழியில் பொன், வெள்ளி, காசு இட்டு காமன் கம்பத்தை (வாழைமரம்) ஊன்றி புனித தன்மையுடன் பூஜை செய்வார்கள். காமன் கம்பத்தை சுற்றி மூங்கில், தடி, மாவிலை என்பவற்றை வைத்து நான்கு மூலையிலும் நட்டு அதற்கு அலங்கார வேலைகளை செய்வார்கள். இதில்தான் காப்பு கட்டுதல், பூஜை செய்தல் போன்ற செயல்பாடுகளை செய்வார்கள். அந்த வகையில் நம்பிக்கைக்கும் ஆற்றுகைக்கும் இடையில் வேறுபாடு உண்டு. இருப்பினும் இதை நம்பிக்கை கலந்த ஆற்றுகையாக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனத்தில் கற்கும் நடன நாடகத்துறை மாணவர்கள் மிகவும் நேர்த்தியாக செய்திருந்தார்கள். இவ்வாறு நிகழ்விற்குள் அடியெடுத்து வைப்போம். முதல் நிகழ்வாக தப்பிசை முழங்க மன்மதன், ரதி, சிவன், பார்வதி, தேவசபை ஆகியோர் வெள்ளை துணையால் மறைத்து காமன் பொட்டலுக்கு பாட்டுக்காரர்களால் வரவு பாட வருகை தந்தார்கள். பழங்கள், பூக்கள் கொண்ட தட்டுகளை தோழியர்கள் கொண்டு வர காமன் கம்பத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு தேவர் சபை முன்னிலையில் சிவனும் பார்வதியும் தாலி எடுத்துக் கொடுக்க தேவலோக ஆசீர்வாதத்துடன் மன்மதன் ரதியினுடைய திருமணம் நிகழ்ந்தது. மணமக்கள் காமன் கம்பத்தை சுற்றி வந்து திருமணத்தை இனிதே நிறைவு செய்கின்றார்கள். ரதியும் மன்மதனும் தங்களுடைய திருமண நிகழ்வை (உரையாடல் பாங்கில் பக்கப்பாட்டுக்காரர்கள் பாட) தோழர்களுக்கு கூறி ஆடினார்கள். இதில் அகட விகட பாத்திரமான கோமாளி மன்மதன், ரதிக்கு நடுவே இருந்து ஆட்டத்தாலும், உடல், முக பாவனையாலும் பார்வையாளர்களை ஈர்க்கச் செய்தது. தேவர்கள் தேவ சபைக்கும், சிவன் சக்தி யாகசாலைக்கும் செல்ல ரதி, மன்மதன் காமன் பொட்டலை விட்டு சென்றதன் பின்னர் இடைநிலை பாத்திரமாக “குதிரையும் நோனாவும்” மிகவும் ஆரவாரத்துடன் காமன் பொட்டலை நோக்கி ஆடி வந்தனர். காமன் பொட்டலை சுற்றி சுற்றி ஆடி பார்வையாளர்களை சந்தோஷ மழையில் மூழ்கச் செய்தனர். அத்துடன் குறவன், குறத்தி ஆட்டம் பார்வையாளர்களை சுவாரசியமாக்கியது. இரண்டு ஜோடிகளாக வந்து காமன் பொட்டலில் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர். இது சற்று நேரம் நீடித்தது. அத்துடன் குறத்தி ரதியின் கையை பார்த்து சிவன் நெற்றிக்கண் திறக்க மன்மதன் எரிந்து மடிவான் என்பதனை கூறி செல்கின்றாள். தக்கன் சிவனிடம் வரத்தை பெற்ற பின்னர் சிவனும் பார்வதியும் இருக்கும் இடத்திற்கு சென்று சிவனை பார்த்தப்போது சிவன் தக்கனை பார்க்காததால் கோபம் கொண்ட தக்கன் சிவனுக்கு எதிராக தவம் இருத்தல் நிகழ்வு இடம்பெற்றது. தவத்தின் அக்கினி அனலை தாங்க முடியாததால் தேவர்கள் சிவனிடம் முறையிடுகின்றார்கள். தக்கனுடைய தவத்தை அழிக்குமாறு சிவன் முருகபெருமானை அனுப்புகிறார் ஆனால் முருகனோ கன்னிப்பெண்களை பார்த்து ஏமாந்து விடுகின்றார். பின்னர் கணபதியை அனுப்பிய போது தொந்தி கணபதியோ பழங்களைக் கண்டு ஏமாந்து விடுகின்றார். இதனை அறிந்து கோபம் கொண்ட சிவன் தனது வியர்வையை சிந்தும் போது அதிலிருந்து வீரபத்திரர் உருவாக்குகின்றார். வீரபத்திரரும் காளியும் தக்கனுடைய தவத்தை அழித்து விடுகின்றார்கள். ஆக்ரோஷமாக தீபந்தங்களுடன் வீரபத்திரவரும் காளியும் வரும் காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. சிவன் தபசுக்கு செல்கின்றார். சிவனுடைய தவத்தின் அனலால் இந்திரலோகம் அவதியுற்றதால் இந்திரனால் மன்மதனுக்கு சிவனுடைய தபசை அழிக்குமாறு ஓலை தூதனால் கொடுக்கப்படுகின்றது. இங்கு தூதனும் தீபந்தங்களுடன் காமன் பொட்டலை நோக்கி ஆடி வருகின்றான். தூதன் மன்மதனுக்கு ஓலையை கொடுக்க சிவன் தபசை அழிக்கும் தகவலினை அறிந்த மன்மதன் இவ்வாறு சிவனுடைய தபசையை அளித்தால் சிவனின் நெற்றிக்கண் திறக்க தான் எரிந்து சாம்பலாகி விடுவேன் என்பதையும் அறிந்து கொள்கின்றார். இதனைத் தொடர்ந்து ரதி மன்மதன் இருவருக்கும் இடையிலான தர்க்கம் இடம்பெறுகின்றது. அதாவது குறத்தி கூறியதை போலவே அனைத்தும் நிகழ்வதை உணர்ந்த ரதி மன்மதனை சிவனின் தபசை அழிக்க செல்வதனை மறுக்கிறாள். மன்மதன் : நான் அலரி மலர் கணைதொடுப்பனடி – என் ரதியே மானே ரதியே தேனே சிவன் தவசை நான் அழிப்பனடி. ரதி : அலரி மலர் கணை தொடுத்து மன்னா மன்னா சிவன் தபசை நீயழிக்க வேணா வேணா.. ரதி எவ்வளவு தடுத்தும் கேட்காத மன்மதன் இறுதியில் ரதியை மயங்க செய்துவிட்டு சிவனுடைய தபசை அழிப்பதற்கு செல்கிறார். பின்னர் ஆவேசமாக அம்மன் காமன் கம்பத்தை சுற்றி சுற்றி ஆடுகிறாள். இது அசம்பாவிதம் நடக்கப்போவதை கூறும் விதமாக இருந்தாலும் இது ஒரு இடைநிலை பாத்திரமே ஆகும். இறுதியாக நந்தி தேவர் வருகை இடம்பெறுகிறது. சிவனுடைய தபசை அழிக்க செல்ல வேண்டாம் என்பதனை மன்மதனுக்கு கூற மன்மதனோ அதனை கேட்கவில்லை. சிவனுடைய தபசை மன்மதன் அழிப்பதற்கு செல்ல எமதர்மர் எமதூதர்களுடன் காமன் பொட்டலை நோக்கி ஆடி வருகின்றார்கள். கறுத்த நிற தோற்றத்துடனும் கம்பீரமான ஆட்டத்துடனும் சுற்றி வந்து ஆடி செல்கின்றார்கள். மன்மதனோ சிவனுடைய தபசை அழித்து விடுகின்றான். சிவனுக்கு அம்பு தொடுக்க சிவன் நெற்றிக்கண் திறந்து மன்மதனை எரிக்கும் காட்சி இடம் பெறுகின்றது. சிவன் இருக்கும் யாகசாலையிலிருந்து காமன் பொட்டலுக்கு காமன் கம்பத்தை நோக்கி தீப்பொறி வர மன்மதன் எரிந்து சாம்பலாகுகின்றான். (காமன் கம்பமே மன்மதனாக சித்தரிக்கப்படுகிறது) மன்மதன் இறந்த செய்தி அறிந்த ரதி தலையில் முக்காடு போட்டு கொண்ட நிலையில் எரிந்து கொண்டிருக்கும் மன்மதனை சுற்றி சுற்றி அழுது புலம்புகின்றாள் . இதனைத் தொடர்ந்து மன்மதன் எரியும் காமன் பொட்டலில் மனக்குறைகளை நினைத்து உப்பு போட்டு வேண்டினால் நிவர்த்தியாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவரும் உப்பு போட்டு வேண்டுதல்களை கேட்கின்ற நிகழ்வுடன் காமன் கூத்து இனிதே நிறைவடைந்தது. பரிபூரணமாக அன்று இரவு கிழக்கில் காமண்டி கோலாகலமாக நிகழ்த்தப்பட்டது காமண்டியில் கதாபாத்திரங்களுக்கான தோற்றம் நடை, உடை, பாவனை, பாத்திர அமைப்பு எல்லாம் அந்த பாத்திரமாகவே அவர்களை மாற்றியது. களத்திற்கு வருகை தந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் உணர்வு பூர்வமானதாக அமைந்தது. தேவர்கள் மன்மதன், ரதி, சிவன், பார்வதி, வீரபத்திரர், காளி, குறவன், குறத்தி, எமதர்மர், எமதூதர்கள், தக்கன், தூதன், இடைநிலை பாத்திரங்களான மாரியம்மன், கோமாளி, குதிரையும் நோனாவும் இவ்வாறு பல பாத்திரங்களை உள்ளடக்கியிருந்தது. அவர்களது ஒவ்வொரு பாத்திர அமைப்பும் பார்வையாளர்களை தங்களது கவனத்திற்கு கொண்டு வந்தது. கிழக்கில் காமண்டி கூத்தில் வந்த அகட விகட பாத்திரங்கள் அனைத்து பார்வையாளர்களையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருந்தது. கோமாளி இடைநிலை பத்திரமாக இருந்தாலும் கூத்தினுடைய அங்கமாக இருந்து அனைவரையும் மகிழ்வித்தது. மன்மதனுக்கும் ரதிக்கும் திருமணம் முடிந்த பின்னர் தோழியிடம் ரதி அருந்ததி பார்த்து திருமணம் ஆன செய்தியை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துவதாக ஆட்டமும், பாடலுடன் கூடிய தப்பிசையின் முழக்கமும் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் இனிமையானதாக இருந்தது. இது ஒரு திருமணமான பெண்ணின் பூரிப்பினை வெளிப்படுத்தியது. அதில் மன்மதன் ரதிக்கு இடையிலான உரையாடல் ஒரு பக்கம் கோமாளி பாத்திரம் பார்வையாளர் மத்தியில் மனதில் பதிய வைத்தது. இதனைப் போலவே குறவன் குறத்தி மற்றும் குதிரையும் நோனாவும் அகட விகட பாத்திரங்களாக பார்வையாளர்களை சிரிப்பு மழையில் ஆழ்த்தியது. ஒரு மனிதன் தன் கவலைகளை மறந்து சிரித்து களிப்புற காரணமாக அமைவது இவ்வாறான அகட விகட பாத்திரங்களே ஆகும். குறவன் குறத்தி இரண்டு ஜோடிகளாக வந்து காமன் பொட்டலை ஒரு கணம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நிறைந்த களமாக மாற்றியதாக இருந்தாலும் சிவனின் தபசை அளிக்க சென்றால் மன்மதன் இறந்து விடுவான் என்பதனை குறிச்சொல்லை செல்வதாக அமைந்தது இவ்வாறு ஒரு பாத்திரம் கூறி குறியீட்டு முறையாகவோ நேரடியாகவோ ஒவ்வொரு செய்தியை கையளித்து செல்வதாக அமைந்தது. காலனித்துவ ஆட்சி காலங்களில் துறைமார்கள் குதிரையில் வருவது வழக்கம். அவருடைய மனைவியை நோனா என்று கூறுவார்கள் இப்பத்திரங்களே கிழக்கில் காமண்டி கூத்தில் அமைகின்றது என்பதனை உணர்கின்றேன். இன்றும் நோனா என்று கூறும் வழக்கம் உண்டு. தாதியர்கள், கங்காணிமார்களது மனைவிமார், கூலி வேலை செய்யும் இடங்களில் உயர் நிலையில் இருக்கும் பெண்களை மலையக மக்கள் நோனா என்றே பெரும்பாலும் அழைக்கின்றனர். கிழக்கில் காமண்டியில் நோனா கையில் குலையுடன் செல்ல அதனைத் தொடர்ந்து குதிரையும் செல்கிறது. குதிரையில் வாள் எடுத்துக்கொண்டு நோனாவை குதிரை ஓட்டுபவர் துரத்துவதாகவும் அமைந்தது. இவ்வாறு சித்தரிக்கப்பட்ட குதிரையும் நோனாவும் என்ற பாத்திரம் பல்வேறான வழிகளில் சிந்திப்பதற்கு கூடியதாக இருந்தது. ஆறு வயதில் நான் ஹட்டன் மஸ்கெலியாவில் பார்த்த காமன் கூத்து ஆற்றுகையை நினைவுக்கூறுவதாகவும் அந்த நிகழ்த்துகைக்கும் கிழக்கில் காமண்டி கூத்துக்கும் இடையிலான வேறுபாடு என்பவற்றையும் ஒப்பிட்டு பார்க்க கூடியதாகவும் அமைந்தது. கடந்த பதினெட்டு வருடங்களில் கூத்து வடிவங்களில் எவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பதனை அறிய முடிகின்றது. இந்த வகையில் குதிரையும் நோனாவும் என்ற பாத்திரம் சிறுப்பராயத்தில் பார்த்த காமன் கூத்தில் இடம்பெறவில்லை. காமன் கூத்து மலையகத்தில் ஆண்களால் மட்டுமே ஆடப்படுகின்றது. பெண்களின் பாத்திரங்களையும் ஆண்கள் ஏற்று ஆடுவார்கள். கிழக்கில் காமண்டி கூத்தில் பெண்கள் பாத்திரங்களை பெண்கள் ஏற்று ஆடினார்கள். அதுபோல ஆண் பாத்திரங்களையும் மாணவிகள் ஏற்று ஆடியிருந்தார்கள். பிரம்மன், தக்கன், கோமாளி போன்ற இவ்வாறான பாத்திரங்களை பெண்களை ஏற்று ஆடியிருந்தார்கள். இது பெண்களுக்கு சமூகத்தில் முக்கியத்துவம் கொடுப்பதுடன் முன்னுரிமை கொடுப்பதனையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. கிழக்கில் காமண்டி கூத்தியில் வீரபத்திரராக வந்த கதாபாத்திரத்தை செய்தவர் களுத்துறை பிரதேசத்தில் காமன் கூத்தில் ஆடும் கலைஞராவார் தீபந்தம் ஏந்தி உருவேறி ஆடினார். அவர் மட்டுமல்லாமல் காளி, ஏமதூதர்கள், மன்மதன், ரதி, மாரியம்மன் போன்ற பாத்திரங்களும் உருவேறியது போன்று சம்பாஷனை செய்து இருந்தார்கள். அது உண்மையில் உருவேறி ஆடுவதைப் போலவே இருந்தது. காளி அம்மன் பாத்திரங்கள் தப்பு மற்றும் உடுக்கு இசைக்கு உண்மையில் உருவேறி ஆடினார்கள் இது காமன் கூத்தை நடிப்பு சார்ந்து இல்லாமல் உணர்வு சார்ந்த வகையில் பார்க்கக் கூடியதாக அமைந்தது. இவ்வாறு காமன் கூத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது சிறந்ததோர் அனுபவமாக அமைந்தது. அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஆடல், பாடல்கள் எல்லாம் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்தது. மலையகத்தில் இன்று பல இடங்களில் காமன் கூத்து வருடாந்தம் நிகழ்த்தப்படுவதும் இல்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களில் இதுபோன்ற ஆற்றுகை வடிவங்களினை நிகழ்த்துவது என்பது அடுத்த தலைமுறைக்கு இதனை கொண்டு செல்லக்கூடியதாக அமையும். புதிய தலைமுறையை சேர்ந்தவர்கள் இக்கலை வடிவத்தை சிறந்த முறையில் ஒருமித்து செயற்படுவதும், ஒருங்கிணைந்து நிகழ்த்துவதும், அடுத்த சந்ததியினருக்கு ஆர்வத்தை தூண்டுவதாகவும், கலை சார்ந்த பற்றும் ஏற்படும். கலை என்றும் அழவுக்குட்படுத்தக் கூடாது. ஆரம்ப காலத்தில் இருந்த கலை வடிவம் இன்று மாற்றங்கள் எதுவும் நிகழாமல் உள்ளது என்று கூற முடியாது. கால ஓட்டத்திற்கு ஏற்ப கலப்பு தன்மையும், இயங்கியல் அம்சங்களும் நிறைந்து இருக்கும். இருப்பினும் மாற்றங்கள் மூலம் கலை வடிவத்தை அழியவிடாது பாதுகாத்தல் வேண்டும். இது கிழக்கில் காமண்டி என்ற மலையக காமன் கூத்தினை பார்த்து விளங்கிக் கொண்டதுடன் சிறந்ததொரு அனுபவமாக பார்க்கின்றேன். கலைகளின் நிலைப்பு தன்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக மலையகத்தில் செய்யக்கூடிய காமன் கூத்தினை மலையகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிழக்கில் காமண்டி என்ற பெயரில் சுவாமி விபலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனத்தில் மிகவும் அழகாக நிகழ்த்தியுள்ளனர். இது வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும். கிரிஜா மானுஶ்ரீ கிழக்கு பல்கலைக்கழகம் இலங்கை Global Tamil Newsமலையக மக்களின் அடையாளமான காமன் கூத்தும் கிழக்கில் காமண்டி...மனிதனின் ஆர்வம், எதிர்பார்ப்பு எத்தகையது என்பது உலகறிந்த விடயமே. விடுக்கப்பட்ட அழைப்பிற்கிணங்க கிழக்கில் காமண்டி எவ்வாறு இருக்கப்…
  4. Published By: NANTHINI 06 AUG, 2025 | 07:44 PM வரலாற்றில் இன்று : ஒரு நாளேடு உதயமான கதை! (மா.உஷாநந்தினி) வரலாற்றில் இன்று, அதிசிறப்பான ஒரு நாள். ஒரு தமிழ்ப் பத்திரிகைப் பரம்பரையின் முதல் தலைமுறை, முதல் முறையாகக் கண்டு, கைகளில் தாங்கி, முகர்ந்து, அறிவாலும் உணர்வுகளாலும் அனுபவித்துக் கொண்டாடிய, ஒரு நாளேட்டின் உதயம், இதே புதன்கிழமையில், இதே திகதியில், 95 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. “இலங்கைவாழ் தமிழ் மக்கள் பேராவலோடு எதிர்நோக்கியிருந்த சீரிய, தேசீய, செந்தமிழ்த் தேன்பிலிற்றும், தினசரி ‘வீரகேசரி’ என்ற இன்னுரைக் களஞ்சியம் வெளிவந்துவிட்டது!” என்ற பேரறிவிப்போடு, 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி நிகழ்ந்த, அந்த அற்புதமான, அதி உன்னதமான தொடக்கத்தையும், இன்றைய தினம், 95ஆவது அகவையை நிறைவு செய்து, 96ஆவது அகவையில் தடம் பதித்திருக்கும் ‘வீரகேசரி’யையும், சிரேஷ்ட மற்றும் புதிய தலைமுறை ஊழியர்கள், வாசகர்கள் என அனைவரும் ஆத்மார்த்தமாக மகிழ்ந்து வரவேற்கின்றனர் என்பதை இக்கணம் உணர முடிகிறது. துணிவும் கம்பீரமும் அறிவொளியும் நடுநிலையும் பொருந்திய ‘வீரகேசரி’யானது மிக விரைவில், நூற்றாண்டு பயணச் சாதனையை அடையப்போகும் நன்னாளுக்காக நம்பிக்கையோடு காத்திருக்கும், இத்தமிழ் ஊடகத்தை அடையாளமாகக் கொண்டு இயங்கி வரும் ஸ்தாபனமான எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் ஊழியர்களின் உழைப்பும் நலன் விரும்பிகளின் ஆலோசனைகளும் ஆதரவும் வாசகப் பெருமக்கள் அளிக்கும் வரவேற்பும் அன்பும் அளவிட முடியாதது. இப்பத்திரிகையின் மீது வாசகர்கள் சில விமர்சனங்கள், மாற்றுக் கருத்துக்களைக் கொண்டுள்ள போதிலும், “வாசிக்க ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை வீரகேசரியுடன் இருக்கிறேன்...” என்று சொல்பவர்களையும் பார்த்திருக்கிறேன்... “காலையில் முதல் வேலையாக, வீரகேசரியை வாங்கி முழுதாய் வாசித்துவிட்டுத்தான் மறுவேலை!” என்று உரிமை பாராட்டுபவர்களையும் சந்தித்திருக்கிறேன். பேருந்தின் ஜன்னலோரம் உட்கார்ந்து, ஒரு முதியவர், வீரகேசரியை விரித்து, பின்பு, தான் வாசிக்கவேண்டிய ஒரு சிறு பகுதியை மட்டுமே, காகிதமும் கசங்காமல், கைக்கும் நோகாமல் நேர்த்தியாக, இரண்டு மூன்று மடிப்பாக மடித்து, வாசிக்கின்ற அழகையும் பார்த்திருக்கிறேன். நாளேடுகளை ஓர் எளிய வாசகன் கையாளும் விதம் அத்தனை அழகு! ஒரு பத்திரிகையின் ஆணிவேரும் வாசகன்தான். அதன் இருப்பைத் தீர்மானிப்பவனும் வாசகன்தான். அந்த வகையில், வாசகர்களின் உற்சாகமும் ஒத்துழைப்பும் அவர்களது அறிவுத் தேடலுமே, ‘வீரகேசரி’ என்ற நாமம் தரித்த இந்தப் பாரம்பரிய ஊடகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குகிறது என்றால் அது மிகையல்ல. 'தரமான வழியில் தெளிவான தகவல்’ என்ற மகுட வாசகத்துக்கு இணங்க, தரமான உள்ளடக்கங்களும், தெளிவான அறிக்கையிடலும் அறம் பிறழாத அணுகுமுறைகளும் விசாலமான கருத்துச் செறிவும் அறிவார்ந்த கருத்தாடல்களும் ஆச்சரியமூட்டும் கருத்துக்கணிப்புகளும் வீரகேசரிக்கு தனித்துப் பெருமை சேர்க்கின்றன. உள்ளூர், உள்நாட்டு விவகாரங்களில் மட்டுமல்ல, சர்வதேசமெங்கும் தொலைநோக்குப் பார்வையை செலுத்தி, உலகில், எங்கோ ஒரு புள்ளியில் நிகழும் சிறு சம்பவமாயினும், உலகளாவிய பிரச்சினைகளாயினும் பாரதூரமான விவகாரங்களாயினும், அவற்றையும் பொதுவெளிக்குக் கொண்டு வருகிறது. பல்வேறு சமூகத்தினர் இணைந்து வாழும் இந்நாட்டில், அந்தந்த சமூகத்தவர்களின் வளமான வாழ்க்கைக்காகவும், பொருளாதார எழுச்சிக்காகவும் மக்களது வாழ்வியல் மேம்பாட்டுக்காகவும் சமூக அபிவிருத்தி நலன்களுக்காகவும் கொண்டுவரப்பட்ட சில திட்டங்கள் கூட, ஒரு தமிழ்ப் பத்திரிகை என்ற வகையில், வீரகேசரி தலையிட்டு வெற்றிகரமாக செயற்படுத்த துணை புரிந்ததற்கு, கடந்த கால வரலாறுகள் சான்றுகளாகின்றன. அத்தோடல்லாமல், வீதி அபிவிருத்தி என்ற பெயரில் இடம்பெறும் மோசடிகள், பின்தங்கிய கிராமங்களில் காணப்படும் பிரச்சினைகள், சரிவர பராமரிக்கப்படாத பாடசாலைகளின் நிலைமைகள், கல்வியில் பின்நிற்கும் மாணவர்களின் எதிர்காலம் குறித்த கரிசனை, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், பால்புதுமையினருக்கு எதிரான கடும்போக்குத்தனம், இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களின் அவல நிலை, போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட சமுதாய சீர்கேட்டுத்தனங்களை சுட்டிக்காட்டியும், கண்டித்தும் கரிசனையோடு குரல் கொடுத்து வருகிறது. பத்திரிகைத்தர்மம் காப்பதில் காலங்காலமாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில், இடையூறுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் வீரகேசரி முகங்கொடுத்து வருகிறபோதிலும், நேர்மையான செய்தியிடலின் ஊடாக துணிவோடு நீதியை சுட்டிக்காட்டவோ, பொதுமக்களின் பிரச்சினைகளையும் அவலங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டவோ, அவற்றுக்கான தீர்வுகளை நாடவோ வீரகேசரி பின்நிற்பதில்லை. உள்நாட்டு யுத்த சூழ்நிலைகள், இனக் கலவரங்கள், வன்செயல்கள், சமூக சீர்கேடுகள், கல்வி மற்றும் கலாசார முரண்பாடுகள், பாதாள உலகக் கும்பல்களின் அராஜகங்கள், அரசியல் குழப்பங்கள், சில அரசியல்வாதிகளின் இடையூறுகள், ஊடக அடக்குமுறைகளையும் தொடர்ந்து வீரகேசரி சந்தித்திருக்கிறது. அதைவிடவும் நாட்டில் அதிகப்படியாக தலைவிரித்தாடிய இனக் கலவரங்களால் தமிழர்கள் சந்தித்த இடப்பெயர்வுகள், போராட்டங்கள், பத்திரிகை நிறுவன ஊழியர் பற்றாக்குறை, உற்பத்திக்கான வசதி வளம் குன்றியமை, சுனாமி ஆழிப் பேரலை அனர்த்தம், கொரோனோ நோய்த்தொற்றுப் பரவல், பொருளாதார நெருக்கடி, அரசியல் குளறுபடிகள், போராட்ட நிலைமைகள், உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறைகள், அனைத்துக்கும் மேலாக, அச்சுப் பணியை கொண்டுசெல்வதில் பெருந்தடையாய் உருவெடுத்த காகிதப் பற்றாக்குறை, ஊழியர்களின் பணி இடைநிறுத்தம் முதலான பாரிய வீழ்ச்சிகளையும் மேடு பள்ளங்களையும் கையறு நிலையையும் இப்பத்திரிகை நிறுவனம் கடுமையாக எதிர்த்துப் போராடியிருக்கிறது. எனினும், எத்தனைத் தடைகள் வந்துபோனபோதிலும், ஊழியர்களது தளராத உழைப்பும், வாசகர்கள் இப்பத்திரிகையின் மீது கொண்ட நம்பிக்கையுமே வீரகேசரியை மீண்டும் மீண்டும் தூக்கி நிறுத்தியிருக்கிறது என்றே சொல்லவேண்டும். வீரகேசரி உருவான கதை ‘வீரகேசரி’யின் வெற்றிப் பயணத்தை இன்று நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த நாளேடு ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, இன்று வரை, இந்த ஒன்பது தசாப்தங்களுக்கும் மேலான பயணம், அத்தனை எளிதானதல்ல. தமிழ்ப் பேசும் மக்களுக்காக, ஒரு தமிழ் தேசிய நாளேடு தோன்றிய காலமும் பொற்காலமன்று, அது, 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலம். இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முந்தைய அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த தமிழ் மக்களைப் பற்றி நாம் சற்றே சிந்தித்தாக வேண்டும். அன்றைய தமிழ் மக்களின் மனநிலையும் வாழ்க்கை முறையும் பெரிதும் வேறு. அவர்கள் வெகுளித்தனமானவர்கள். வெளியுலகம் அறியாதவர்கள். நாட்டு நடப்போ உலக நிலைவரமோ தெரியாதவர்களாகத்தான் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். காரணம், நாட்டிலும் உலகிலும் நடக்கும் விடயங்களை அன்றைய தமிழ் மக்களுக்கு அறியத்தர, ஒரு தமிழ் ஊடகம் அப்போது நம் நாட்டில் இருக்கவில்லை. அந்த காலகட்டத்தில் ‘கொழும்பு ஜேர்னல்’ என்றொரு ஆங்கிலப் பத்திரிகையும், ‘லங்கா லோக்கய’ என்ற சிங்கள பத்திரிகையும் ‘உதய தாரகை’ என்றொரு தமிழ்ப் பத்திரிகையும் வெளிவந்துகொண்டிருந்தன. இவற்றில் ‘கொழும்பு ஜேர்னல்’, 1832இல் வெளியான முதல் ஆங்கிலப் பத்திரிகையாகவும், ‘லங்கா லோக்கய’, 1860இல் காலியில் வெளியான முதல் சிங்கள பத்திரிகையாகவும், ‘உதய தாரகை’, 1841இல் யாழ்ப்பாணத்தில் வெளியான முதல் தமிழ்ப் பத்திரிகையாகவும் அறிமுகமாயின. அப்போது ‘உதய தாரகை’ தமிழ்ப் பத்திரிகை வெளிவந்தபோதும், அது, யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுமே விற்பனையாகி வந்தது. இதனால், யாழ்ப்பாண மாவட்ட தமிழ் மக்களைத் தவிர, வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மக்களால் அந்தப் பத்திரிகையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை இருந்தது. அவ்வாறான ஒரு சூழ்நிலையில், இலங்கைவாழ் இந்தியத் தமிழரான திரு. பெ.பெரி. சுப்பிரமணியம் செட்டியார் அவர்கள், நாடெங்கும் உள்ள அனைத்து தமிழ்ப் பேசும் மக்களும் வாசித்து, உலக நடப்புகளை அறிந்து, பயன் பெறும் வகையில், ஒரு தமிழ்ப் பத்திரிகையை தேசிய அளவில் உருவாக்க வேண்டும் எனக் கருதினார். அது மட்டுமன்றி, அக்காலகட்டத்தில், நாட்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைக் கூட தமிழ் மக்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. 1927ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து மகாத்மா காந்தி இலங்கைக்கு வருகை தந்தபோது, அவரது இலங்கை விஜயம் பற்றியோ அதன் நோக்கம் பற்றியோ, மக்களுக்காக காந்தி ஆற்றிய உரையோ கருத்துக்களோ எதுவுமே தமிழ் மக்களை போய்ச் சேரவில்லை. இதுபோன்ற முக்கியமான வரலாற்று நிகழ்வுகள், சம்பவங்கள், நாட்டு நிலவரம் குறித்து தமிழ் மக்களுக்கு அறியத்தருவதற்கென ஒரு தமிழ்ப் பத்திரிகை இல்லையே என்ற தவிப்பும் ஏக்கமும் சுப்பிரமணியம் செட்டியார் அவர்களுக்கு நிச்சயம் ஏற்பட்டிருக்கும். தவிர, மலையக மக்கள் மீதும் கரிசனை கொண்ட சுப்பிரமணியம் செட்டியார் அவர்கள், அந்த மக்களின் பிரச்சினைகளும் தேவைகளும் வெளியுலகுக்குத் தெரியவரவேண்டும் எனில், அதற்காகவேனும் ஒரு தமிழ்ப் பத்திரிகை கட்டாயம் தேவை என்று சிந்தித்தார். காலச் சூழ்நிலைகளையும் தேவைகளையும் கருத்திற்கொண்டு, தமிழ்ப் பேசும் மக்களின் குரலாக ‘வீரகேசரி’ என்கிற ஒரு தேசிய தமிழ்ப் பத்திரிகையை உருவாக்கினார். கேசரி என்றால் சிங்கம். சுப்பிரமணியம் செட்டியாரின் துணிவு மிகு பிரவேசமாக ‘வீரகேசரி’ வெளியாவதை எடுத்துக்காட்டும் விதமாக, பெயருக்குத் தகுந்தாற்போல் வாளேந்திய இரண்டு சிங்கங்களின் உருவங்கள் வீரகேசரி இலச்சினையில் வரையப்பட்டன. 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி புதன்கிழமை வீரகேசரியின் முதல் நாளிதழ் 8 பக்கங்களை உள்ளடக்கி வெளியானது. அந்த முதல் நாளேட்டின் விலை வெறும் 5 சதமே என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அன்றைய வீரகேசரி காரியாலயம் கொழும்பு - மருதானையில் அமைந்திருந்தது. அதன் பின்னர், கொட்டாஞ்சேனைக்கு மாற்றப்பட்டு, சிறிது காலத்தின் பின், தற்போதைய அமைவிடமான கொழும்பு - கிராண்ட்பாஸ் பிரதேசத்துக்கு மாற்றப்பட்டு, இன்று வரை நிலைபெற்றிருக்கிறது. ‘வீரகேசரி’ ஆசிரியர்களும் முகாமைத்துவப் பணிப்பாளர்களும் வீரகேசரியின் ஸ்தாபகரும் அதன் ஆசிரியருமான திரு. பெ.பெரி.சுப்பிரமணியம் செட்டியாரைத் தொடர்ந்து, திரு. எச். நெல்லையா, திரு. வ.ராமசாமி, திரு. கே.பி.ஹரன், திரு. கே.வி.எஸ்.வாஸ், திரு. கே.சிவப்பிரகாசம், திரு. ஆ.சிவனேசச்செல்வன், திரு. எஸ்.நடராசா, திரு. ஆர்.பிரபாகன் ஆகியோர் ஆசிரியர்களாக பணிபுரிந்துள்ளனர். இவர்களின் வரிசையில், தற்போது திரு. எஸ்.ஸ்ரீகஜன் பிரதம ஆசிரியராகக் கடமையாற்றி வருகிறார். வீரகேசரி ஸ்தாபனமானது, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட்) லிமிட்டெட் என மாற்றப்பட்ட பின்னர், இந்த ஸ்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்களாக திரு.டி.பி.கேசவன் கடமையாற்றினார். அவரையடுத்து, திரு. ஹரோல்ட் பீரிஸ், திரு. ஆர்.ஏ.நடேசன், திரு. எஸ்.கிருஷ்ணமூர்த்தி, திரு. ஏ.வை.எஸ்.ஞானம், திரு. எம்.ஜி.வென்சஸ்லாஸ் ஆகியோர் பதவி வகித்தனர். அவர்களை அடுத்து, தற்போது, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட்) லிமிட்டெட் ஸ்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக திரு. குமார் நடேசன் வழிநடத்தி வருகிறார். நாளேட்டுக்கு நிகரான சஞ்சிகைகள் வீரகேசரி இதழுக்கு நிகராக, ஆரம்ப காலங்களில் நாளேட்டுடன் இணைந்து வெளியான சஞ்சிகைகளும் விசேட பக்கங்களும் கூட பெரிதளவில் வாசகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றன. அந்த வகையில், 1960களில் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் ‘தோட்ட மஞ்சரி’, ‘குறிஞ்சி மலர்’ போன்றன பெரிதளவில் பேசப்பட்டன. அத்துடன் அதே ஆண்டில் வெளியான ‘மித்திரன்’ மாலை தினசரி, ‘ஜோதி’ குடும்ப வார சஞ்சிகை, பின் ‘மித்திரன் வாரமலர்’ ஆகியவை வாசகர்களை அதிகமாக ஈர்த்தன. அதன் பின், மெட்ரோ நியூஸ், விடிவெள்ளி, சுகவாழ்வு, கலைக்கேசரி, ஜோதிட கேசரி, ஜீனியஸ், தமிழ் டைம்ஸ், சூரியகாந்தி, நாணயம், சுட்டி கேசரி, ஜூனியர் கேசரி, மாலை எக்ஸ்பிரஸ், Weekend Express என மேலும் சில வெளியீடுகள் வரத் தொடங்கின. எனினும், 2020ஆம் ஆண்டு கொரோனோ நோய்த்தொற்றுப் பரவலின் தாக்கம் காரணமாக நாடு முடக்கப்பட்டமை, பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஆகிய காரணங்களால் அனேகமான இணை வெளியீடுகள் நிறுத்தப்பட்டன. தற்போது ‘வீரகேசரி நாளிதழ்’, ‘வீரகேசரி வாரஇதழ்’ மற்றும் ‘விடிவெள்ளி’ ஆகிய பத்திரிகைகள் மட்டுமே வெளிவருவதோடு, இம்மூன்று பத்திரிகைகளுடன் சேர்ந்து மித்திரன் வாரமலரும் மின்னிதழாக (E-Paper) வெளியாகின்றமை குறிப்பிடத்தக்கது. சில முக்கிய வரலாற்றுப் பதிவுகள் வீரகேசரி உருவான நாள் முதல் இன்று வரை, உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் இடம்பெற்றுள்ள பல்வேறு முக்கிய வரலாற்று நிகழ்வுகளை பத்திரிகைகளில் செய்திகளாக, ஆசிரியர் தலையங்கங்களாக, கட்டுரைகளாக, ஆக்கங்களாக, பத்திகளாக பதிவு செய்துள்ளன. அவற்றில் சில நிகழ்வுகளை நோக்குவோமாயின், 'சங்கநாதத்துடன் இலங்கை சுதந்தரோதயம்' (1948.2.4) 'இந்தியா பூரண சுதந்திர குடியரசாகிறது' (1950.1.26) 'நீச்சல் வீரர் நவரத்தினசாமி வல்வெட்டித்துறையில் இருந்து பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து தமிழகம் கோடிக்கரையை அடைந்து சாதனை' (1954) போன்றவற்றை குறிப்பிடலாம். இவற்றோடு, தனிச்சிங்கள சட்டம் (1956), பண்டா - செல்வா ஒப்பந்தம் (1957), இன வன்முறை சம்பவங்கள் (1958), ஸ்ரீ குழப்பம், முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்க படுகொலை - வழக்கு (1959), தமிழரசுக் கட்சியின் வடக்கு கிழக்கு சத்தியாக்கிரகம் (1961), சீன கம்யூனிஸ்ட் கட்சி யாழ். மே தின ஊர்வலம் மீது பொலிஸார் தாக்குதல், அமெரிக்க தூதுவர் மீது முட்டை வீச்சு (1965), ஜே.வி.பி. ஆயுதப் போராட்டம், யாழ். நூலக எரிப்பு (1981) முதலானவற்றை பதிவிட்டுள்ளன. மேலும், பரிசுத்த பாப்பரசர் சின்னப்பர் மறைவு, தந்தை செல்வா மறைவு, சீன மக்கள் குடியரசு தலைவர் மாவோ சே துங் மறைவு, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான விடயம், இந்திய அரசியல் தலைவர் காமராஜர் மறைவு, கிழக்கு பாகிஸ்தானை பங்களாதேஷ் என இந்தியா அங்கீகரித்தமை, மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் இலங்கை விஜயம் போன்றனவும் அடங்குகின்றன. பின்வந்த நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இன ரீதியான போராட்டம் முடிவுற்றமை, அரசியல் கட்சிகளிடையே முறுகல் நிலை, குருந்தூர் மலை விவகாரம், கொரோனா பெருந்தொற்றுப் பரவல் - நாடு முடக்கப்பட்டமை, அரசியல் கட்சிகளிடையே மோதல், பொருளாதார நெருக்கடி, அரகலய மக்கள் போராட்டம், பாப்பரசர் பிரான்ஸிஸின் மறைவு, 2024 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவாகி பதவியேற்றமை, ஜே.வி.பி. ஆட்சியில் புதிய அரசாங்கம், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்.... போன்ற காத்திரமான செய்திகளாயினும், அவற்றை மிகைப்படுத்தல் இன்றி, நடுநிலையுடன் அறிக்கையிடுவதிலும் பிரசுரிப்பதிலும் வீரகேசரி அவதானமாக செயற்படுகிறது. இணைய, டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி அன்று, எழுத்துக்கள் காகிதங்களில் அச்சேற்றப்பட்டு, அச்சு ஊடகமாக உருப்பெற்ற வீரகேசரி, இன்று, இணையமேறி, டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளின் ஊடாக, பல்வேறு நவீனங்களைத் தாங்கி, பரிணாமம் அடைந்து, உரு மாறி, இன்றைய காலச் சூழ்நிலைக்கு ஏற்ப, பொதுமக்களை எளிய முறையில் அணுகும் இலத்திரனியல் ஊடகமாகவும் மிளிர்கிறது. அவ்வாறே செய்திகள், கட்டுரைகள், நேர்காணல்கள், விளம்பரங்கள், ஏனைய அறிவித்தல்களை தாங்கியவாறு வீரகேசரி நாளிதழ் மற்றும் வார இதழ் வெளிவருவதோடு, நாளேட்டின் உள்ளடக்கங்கள் இணையத்தில் கட்டமைக்கப்பட்டு, வீரகேசரி இணையத்தள செய்திச் சேவையும் தனித்துவமாக இயங்கி வருகிறது. 2002ஆம் ஆண்டு இலங்கையில் முதல் தமிழ் செய்தி இணையத்தளமாக virakesari.lk உருவாக்கப்பட்டது. இதழியலை இலத்திரனியலோடு இணைக்கும் அடுத்தகட்ட முயற்சியாக 2005இல் வீரகேசரி மின்னிதழாக (E-paper) பதிவாகத் தொடங்கியது. வீரகேசரி வெறுமனே பத்திரிகைகளாக மாத்திரம் கைகளில் தவழ்ந்த காலம் போய், இன்று எண்ணும சஞ்சிகைகளாகவும் இணையத்தில் உலா வருவதைக் காண்கிறபோது, நாளுக்கு நாள் வீரகேசரி அதன் இருப்பை புதுப்பித்துக்கொள்கிற விதம் ஆச்சரியம்தான். அவ்வாறே, இணையத்தின் மூலம் பத்திரிகையை பல தளங்களிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு எடுத்துச் சென்ற வீரகேசரி இணையத்தளமானது, 2010ஆம் ஆண்டில் “இலங்கையின் அபிமான தமிழ் இணையத்தளமாக” bestweb.lkஆல் தெரிவுசெய்யப்பட்டது. அத்துடன், நமது செய்திகள், நேர்காணல்கள், அரசியல் மற்றும் சமூகம் சார் கருத்துக்கணிப்புகள், பொருளாதார நிலவரம், குற்றச் சம்பவங்கள், வரலாற்று ஆவணப் பதிவுகள், விளையாட்டு, சினிமா சுவாரஸ்யங்கள், கலை, கலாசார நிகழ்வுகள், சமையல் குறிப்புகள், மருத்துவம், மங்கையருக்கான அம்சங்கள் போன்றவை ஒளிஃ ஒலி வடிவ இணைப்புப் பெற்று, காணொளிகளாக உருவாக்கப்பட்டு, வீரகேசரி என்ற ஒற்றைக் குடையின் கீழ் இணையவெளியில் பதிவிடப்பட்டு, அவை யூடியூப், முகநூல், எக்ஸ் தளம், வட்ஸ்அப் முதலிய சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு, வாசகர்களின் காட்சிக்கெளியனாகவும் தோன்றுவது, வீரகேசரியின் மற்றுமொரு வளர்ச்சி. ‘வீரகேசரி’ பற்றி திரு. பெ.பெரி. சுப்பிரமணியம் செட்டியார் அவர்களின் நினைவுப் பதிவு ‘வீரகேசரி’யின் முதலாவது நாளிதழில், அதன் ஆசிரியரான திரு. பெ.பெரி. சுப்பிரமணியம் செட்டியார் அவர்கள், தனது ஆசிரியத் தலையங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “தன்னால் இயன்ற அளவு பொது ஜனங்களுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்ற அவாவினால் தூண்டப்பட்டே வீரகேசரி தோன்றுகிறான். அசாதாரண காரியங்களைச் செய்து முடிக்கும் திறன் பெற்றவனென அவன் வீறு பேசுத் தயாராயில்லை. நியாய வரம்பை எட்டுணையும் மீறாமல், நடுநிலைமையிலிருந்து, உலகத்தின் முன்னேற்றத்திற்கான இயக்கங்களையும் பிரச்சினைகளையும் பரிவுடன் ஆராய்ந்து, பொதுஜன அபிப்பிராயத்தை நல்ல முறையில் உருவகப்படுத்த வேண்டியதையே வீரகேசரி தன்னுடைய முதற்கடனாகக் கொண்டுள்ளான். இராஜீய, சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளை வீரகேசரி அவ்வப்போது ஆராய்வதிலிருந்து இவ்வுண்மையை நண்பர்கள் அறிந்துகொள்ளட்டும். தாராள சிந்தனையும், பரந்த நோக்கும், சமரஸ உணர்ச்சியும் பெற்ற வீரகேசரி, சமயச் சண்டைகளில், சாதிச் சமர்களில், வீண்கிளர்ச்சிகளில், கலந்துகொள்ள மாட்டான். நியாயமே அவன் வீற்றிருக்கும் பீடம், அவனது அபிப்பிராயங்கள் நீதியையே அடிப்படையாகப் பெற்றிருக்கும். பொதுஜனங்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கும் விஷயத்தில் தளராத ஊக்கமும், சலியாத உழைப்பும் அசைக்க முடியாத உறுதியும் காட்டி நமது கேசரி திகழ்வான்........................................................ மிகப் பெரிய பொறுப்பைத் தாங்கிக்கொண்டு, உயர்ந்த நோக்கங்களுடன் வெளிவரும் வீரகேசரி, தமிழ் மக்களின் ஆதரவையும், அன்பையும் நாடுகிறான்.” வீரகேசரி பத்திரிகையை ஆரம்பித்ததன் பின்னணியில் உள்ள தனது நோக்கத்தை இவ்வாறு அவர் வெளிப்படுத்தியிருந்தார். பத்து வருடங்களுக்குப் பின்... 1940 ‘வீரகேசரி’யில் சுப்பிரமணியம் செட்டியார்... அதன் பிறகு, பத்து ஆண்டுகள் கழித்து, வீரகேசரியின் பத்தாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி வெளியான வீரகேசரி நாளிதழின் 6ஆம் பக்கத்தில், சுப்பிரமணியம் செட்டியார் எழுதிய “வீரகேசரியின் வளர்ச்சி வரலாறு” என்கிற கட்டுரைத் தொடர்ச்சியைக் காணக் கிடைத்தது. அதில் அவர், “பத்து வருடங்களுக்கு முன்னர் விளையாட்டாக நான் இந்த 'வீரகேசரி’யை ஆரம்பித்தேன். அது இன்று மிகப் பெரிய அமைப்பாகவும், மதிக்கமுடியாத மாணிக்கமாகவும், ஒப்புயர்வற்ற தொண்டனாகவும் ஓங்கி வளர்ந்துவிட்டது. மனித வாழ்க்கை நிலையில்லாதது. இன்னும் சில வருடங்களோ, பல வருடங்களோ நான் இந்த ‘வீரகேசரி’யை நடத்திக்கொண்டு போகமுடியும். அதற்குப் பின்னர் ‘வீரகேசரி’யின் நிலை என்ன? ‘வீரகேசரி’யின் தொண்டும், ‘வீரகேசரி’யும் இலங்கையில் சாசுவதமாக இருக்க வேண்டும்” என்று கேசரி மீதான தனது அபிலாசையினை வெளிப்படுத்தியிருந்தார். அன்று, அவர் எண்ணியது, விரும்பியது, எதிர்பார்த்தது இன்று பல மடங்கு நிறைவேறியிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டாக முன்னகர்ந்து, 96ஆவது அகவையை எட்டியுள்ள ‘வீரகேசரி’ விரைவில் நூறு ஆண்டுகளைத் தொட்டு, இலங்கையின் தமிழ் நாளேடுகளில் நூற்றாண்டு நாயகனாக சாதனை படைக்கும் நாளை நோக்கி நாமும் கம்பீரமாக, சந்தோஷமாக பயணிப்போம்....! வீரகேசரியின் நெஞ்சார்ந்த நன்றிகள் அனைவருக்கும் உரித்தாகட்டும்! https://www.virakesari.lk/article/221915
  5. “அக்குட்டியும் பிச்சுமணியும்” காணொளிகள்… தமிழர் மத்தியில் நிகழும் முக்கிய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு நகைச்சுவை வடிவில் தயாரித்து வழங்குவார்கள். மிக நன்றாக இருக்கும். அண்மையில்…. சாவகச்சேரி காதலி, தனது காதலனுக்கு 19 பவுண் நகை களவெடுத்து விற்று, 12 லட்சம் ரூபாய்க்கு புது மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒரு காணொளி தயாரித்து இருந்தார்கள். பயங்கர பகிடியாக இருந்தது. அவர்களின்…. முக பாவனையும், காணொளியின் தரமும் சிறப்பாக இருக்கும்.
  6. "யார்" காத்திருக்கிறார்கள்? உங்களைப் போன்ற கண் முன்னே இருக்கும் ஒரு ஆதாரத்தை, மனத்தில் இருக்கும் கற்பனையால் மறைப்போர் காத்திருக்கிறார்கள். "எவரும்" நம்பவில்லை என்கிறீர்கள். உங்கள் உலகம் இந்த விடயத்தில் மிகவும் சிறியது என்று காட்டும் வாக்கியம் இது! "புறப்பட்டுப் போங்கள், நான் வரவில்லை" என்ற கணக்காக அவரே ஆட்களை அனுப்பி விட்டுத் தனியே மரணத்தை நோக்கிப் போயிருக்கிறார் என்பதாகத் தான் வன்னியில் இருந்து வந்த மக்கள் சொல்லியிருக்கிறார்கள். நடேசன், பாலகுமார் போன்றோரும் கூட, வெள்ளைக் கொடிப் படுகொலை நிகழ்வதற்கு சில நாட்கள் முன்னரே , மக்களோடு வந்து முள்ளிவாய்க்கால் கடற்கரையில் சாதாரணமாக நின்றிருக்கிறார்கள் என்பதையும் அங்கே நின்ற மக்கள் கண்ட சாட்சிகளாக இருக்கிறார்கள். இதில் இருந்தெல்லாம் எதையும் உய்த்தறிய முயலாமல், "இருக்கிறாரா, இல்லையா" என்று உங்கள் போன்றோர் குழம்ப, ஒரு கும்பல் அதை வைத்துப் பிழைப்பு நடத்துகிறது. இதை விட என்ன பெரிய அவமதிப்பை பிரபாகரனின் வரலாற்றுக்கு எவரும் செய்து விட முடியுமென நினைக்கிறீர்கள்?
  7. நெட்டன்யாகு இன வெறிபிடித்து ஆடுகின்றார். இது அவரது அழிவுக்கே வழிகோலலம். தற்கேது பெரும்பாலான இஸ்ரேலியப் பொதுமக்கள் யுத்தத்தை விரும்பவில்லை. அதனையே முப்படைகளின் பிரதானி வெளிப்படுத்தியுள்ளார்.கலகம் பிறந்தால் ஞாயம் பிறக்கும்.காசாவில் பலியாகும் அப்பாவிக்குழந்தைகளின்ட பாவம் இஸ்ரேலுக்கு சாபமாகட்டும்.
  8. முற்றான இனவழிப்பிற்குள்ளாக்கப்பட்டு, தமக்கான நீதிகோரி, கைகளில் இறந்த தமது உறவுகளின் உருவப்படங்களை ஏந்தி கண்ணீருடன் வீதிகளில் அலைந்து திரியும் ஒரு இனம், மற்றையவர்ளைக் கடத்திச் சென்று கொன்றுதள்ளும் கொடூரமான மனோநிலையினைக் கொண்டவர்கள் என்று எவ்வாறு இந்தியர்களால் படமாக்க முடிகிறது? இதனை தமிழர்களே ஆகா ஓகோ என்று கொண்டாடி மகிழ்வது எப்படி? இக்குப்பைக்கும், பமிலி மேன்‍-2, மட்ராஸ் கபே ஆகிய அபத்தங்களுக்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்கிறது? தயவுசெய்து இக்குப்பைகளைக் கொண்டாடுவதைத் தவிருங்கள்.
  9. மாற்றுத்திறனாளிகளின் கலைத் திறமைக்கு தேசிய மேடை! மாற்றுத்திறனாளி சிறுவர்களின் அழகியல் திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக சமூக சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சித் ரூ – 2025’ கலை நிகழ்ச்சி கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. ‘ஒன்றாக – கைவிடாத’ எனும் அரசாங்கத்தின் தேசிய கொள்கையின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாத்து, சமூகமயப்படுத்தல், வலுப்படுத்தல் மற்றும் நாட்டின் பொருளாதார செயற்பாட்டில் அவர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்தும் முயற்சியாக இந்நிகழ்ச்சி நடை பெற்றது. ஆறு வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்காக சமூக சேவைகள் திணைக்களத்துக்கு இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் ரூ.632 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மாகாண மட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் வழிகாட்டல் மையங்கள், சிறுவர் பராமரிப்பு மையங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் பிள்ளைகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு பரிசுகள் மற்றும் விருதுகளை வழங்கி கௌரவித்திருந்தார். அத்துடன் பிள்ளைகளுடன் நேரில் உரையாடியும், குழு புகைப்படங்கள் எடுத்தும் தனது அன்பை பகிர்ந்துகொண்டார். இதன்போது , மாணவியொருவரால் வரையப்பட்ட ஜனாதிபதியின் ஓவியமும், ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. நிகழ்வில் அமைச்சர் உபாலி பன்னிலகே, பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். https://athavannews.com/2025/1442018
  10. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற ரஷ்யா முடிவு! அமெரிக்கா ரஷ்யாவுக்கு இடையில் கடந்த 1987 இல் கையெழுத்தான இடைநிலை அணுசக்தி (INF) ஒப்பந்தத்திற்கு இனி கட்டுப்படப் போவதில்லை என ரஷ்யா அறிவித்துள்ளது. மேற்கு நாடுகளின் செயல்கள் தங்கள் பாதுகாப்புக்கு “நேரடி அச்சுறுத்தலை” உருவாக்கியதாக கூறியுள்ள ரஷ்யா இந்த முடிவை எடுத்துள்ளது. ரஷ்யாவின் இந்த முடிவு அணு ஆயுத வல்லமை கொண்ட இருநாடுகளுக்கும் இடையே ஆயுத போட்டியை அதிகரிக்க கூடும் என்ற கவலையை சர்வதேச அளவில் எழுப்பியுள்ளது. இணக்கத்திற்கு வராமல் ரஷ்யா – உக்ரைன் மோதல் தொடர்ந்து நீடித்து வருவதால், அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப், ரஷ்யாவை கடுமையாக விமர்சித்து வருகிறார். உலகின் பல்வேறு நாடுகளிலும் நடக்கும் மோதலை நானே நிறுத்தினேன் என கூறிவரும் ட்ரம்பின் பேச்சை ஏற்க ரஷ்யா மறுத்து வருவதால் ரஷ்ய ஜனாதிபதி மீது அமெரிக்க ஜனாதிபதி கடும் கோபத்தில் உள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்றால் ஒரே நாளில் உக்ரைன் ரஷ்யா போரை நிறுத்துவேன் என கடந்த ஆண்டு டொனால் ட்ரம்ப் கூறியிருந்தார். ஆனால், ஜனாதிபதியாக பதவியேற்று சுமார் 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் ரஷ்யா- உக்ரைன் போரை ட்ரம்பால் நிறுத்த முடியவில்லை. ட்ரம்ப்அவ்வப்போது ரஷ்யாவை எச்சரிக்கும் விதமாக பேசினாலும், நாங்கள் ஒன்றும் ஈரான், ஈராக் இல்லை என்று ரஷ்யா பதிலடி கொடுத்து வருகிறது. சிறப்பு தூதர்களை கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியும் ரஷ்ய ஜனாதிபதி இறங்கி வரவில்லை. இதனால், கடும் கோபம் அடைந்த ட்ரம்ப், ரஷ்யாவை பொருளாதார ரீதியாக முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில்,ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிறுத்த வேண்டும் என்று ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். மேலும், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீதான வரியை மேலும் உயர்த்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு மத்தியில் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி திமித்ரியின் மெத்வதேவ் பேச்சால் கோபமடைந்த ட்ரம்ப், இரண்டு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்யா பகுதிகளுக்கு அனுப்ப தான் உத்தரவிட்டிருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை கூறினார். இவ்வாறான நிலையில், உலகின் சக்தி வாய்ந்த நாடுகளாக கருதப்படும் ரஷ்யா- அமெரிக்கா இடையே வலுத்து வரும் மோதல் சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த நிலையில்தான், அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தங்களில் இருந்து வெளியேற போவதாக ரஷ்யா அறிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ரஷ்யா தரப்பு கூறும் போது, “மேற்கு நாடுகளின் செயல்பாடுகள் தங்கள் நாட்டிற்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், எனவே, அணு ஒப்பந்தத்தை பராமரிப்பதற்கான சூழல் மறைந்துவிட்டதால், ரஷ்யா இனியும் முந்தைய சுயக்கட்டுப்பாடுகளை பின்பற்றாது” என தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கா ரஷ்யா இடையிலான உறவில் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த 1987 ஆம் ஆண்டு இடைநிலை-தூர அணுசக்தி ஃபோர்ஸ் (INF) ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441905
  11. நாலைந்து வருடங்களுக்கு முதல் எமது வீதியால் ஒர் பெண் காலை மாலை என வோக்கிங் போவார் ..அவர் ஒரு நாள் மாரடைப்பு காரணமாக் இறந்துவிட்டார் 50 வயசு தான் இருக்கும்...சிலர் சும்மா இருப்பினம் 80 வயசுக்கு மேல் வாழ்வினம் எல்லாம் அவன்.....செயல் என சொல்லி நிம்மதியடைய வேணும்..
  12. வேலையில் இருக்கும் பொழுது ஒரு பொஸ் ,ஆனால் இளைப்பாறினால் பக்கத்து வீட்டுக்காரியும் பொஸ்...சும்மா தானே நிற்பியள் எங்கன்ட நாய்குட்டியை வோக்கிங் கூட்டிக் கொண்டு போறீயளே என்று கேட்கினம்....நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் இதுவும் கடந்து போகும் என தெய்வீக பாசையில் கூறி நிம்மதி அடையலாம் வேற வழி...எடுபிடி வேலை செய்வது எவ்வளவு கஸ்டம் என இப்ப தான் தெரியுது வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்
  13. நீங்கள் சீனியர் என்று சொல்லுறீயல்...நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் ..🤚 பயப்பட வேண்டிய அவசியம் இல்லை இரண்டு நாள் போக நாங்களே விரும்பி செய்வோம் ...நேரம் போக வேணுமல்லோ ..வருகைஇக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி உண்மை .....😂பிறகு யாரும் உத்தரவு போடமுதல் நாங்களே செய்து போடுவோம் ...எள் என சொல்லும் முன் எண்ணையாக நிற்போம்... நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்
  14. முற்றத்து மல்லிகை "அக்குட்டியும் - பிச்சுமணியும்"--- தமிழ்நாட்டை விட எமது கலைஞர்களுக்கு முதலிடம் கொடுங்கள் *பேச்சு வழக்கில் வெளிப்படும் சிலேடைச் சொற்கள். --- ----- ----- ------ நகைச்சுவை தமிழுக்கே உரிய சிறப்பு. அக்குட்டி - பிச்சுமணி என்று அழைக்கப்படும் “Valvai Sulax” -“கஜன் தாஸ்” என்ற இருவரும் தொடர்ச்சியாக, தமது நகைச்சுவை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி வரும் கதாபாத்திரங்கள் யதார்த்தத்தை உணர்த்தி நிற்கிறது. “இடுக்கண் வருங்கால் நகுக" என்பது திருவள்ளுவர் வாக்கு. இதன் பொருள், "துன்பம் வரும்போது மனம் தளராமல் சிரிக்க வேண்டும் என்பதாகும். ஆகவே, துன்பத்தை வெல்ல மகிழ்ச்சியைவிட சிறந்த வழி வேறில்லை என்ற பொருளில் நகைச்சுவையின் மேன்மை அமைந்துள்ளது. மனதளவில் மகிழ்ச்சியாக இருந்தால், எந்த துன்பத்தையும் எளிதாக கடந்து விடலாம் என்று வள்ளுவர் அன்றே கூறிவிட்டார். ஆகவே, வள்ளுவர் வாக்கை மையப்படுத்தி துன்பத்தை வெல்ல “மகிழ்ச்சி” ஓர் ஆயுதம் என்பதை அக்குட்டி - பிச்சுமணி என்ற இரு கலைஞர்களும் நிறுவியுள்ளனர். ஈழத் தமிழர்களை மையப்படுத்திய கதாபாத்திரங்களில், சிலேடைச் சொற்கள் சில, தூய தமிழில் - சாதாரண பேச்சு மொழியில் இவர்களின் வார்த்தைகளில் இருந்து இவர்களை அறியாமலேயே வெளிப்படுகின்றன. அதுவும் ஆங்கில கலப்பில்லாத பேச்சு மொழி. அந்த சிலேடைச் சொற்கள் பல கற்பிதங்களை உணர்த்துகிறது. முகபாவங்கள் கூட வாழ்வியல் அர்த்தங்கள் பலதை தருகின்றன. அதாவது, ஒரு குடும்பத்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் - சமூகத்தில் நடக்கும் சம்பவங்கள், இந்த இரு கலைஞர்களின் முகபாவங்களில் இருந்து வெளிப்படுகின்றன. இருவரும் வெளிப்படுத்தும் முகபாவங்கள் இயல்பான நகைச்சுவை தன்மை கொண்டது. வாழ்வியல் உண்மைகளும் புடம்போட்டு காண்பிக்கின்றன. ஆகவே, சமுதாய வாழ்வியல் சீர்திருத்தங்கள் எளிய முறையில் நகைச்சுவை உணர்வுடன் கையாளப்பட்ட வேண்டும் என்பதற்கு அக்குட்டியும் - பிச்சுமணியும் என்ற பாத்திரங்கள் சிறந்த வகிபாகத்தை கொடுத்துள்ளன. அதுவும் தாயகத்தில் இருந்து ... யூரியுப் போன்ற சமூக வலைத்தளங்களை பலர் தவறாகப் பயன்படுத்தி பிழையான கருத்தியல்களை சமூகத்தில் விதைத்து வரும் சூழலில், அக்குட்டி - பிச்சுமணி என்ற இரு கலைஞர்களும் சமூக யதார்த்தங்களை நகைச்சுவையாக வெளிப்படுத்தி சீர்திருத்தங்களுக்கு வழி வகுப்பது சிறப்பு. சம்மந்தப்பட்டவர்களை உணர வைத்து திருந்த வழி வகுக்கும் ஏற்பாடு என்று கூடச் சொல்ல முடியும். இந்தியக் கலைஞர்கள் குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து வரும் கலைஞர்கள், பாடகர்கள் போன்றோரை விடவும் உள்ளூர் கலைஞர்கள் என்று பெருமைப்படக்கூடிய அக்குட்டி - பிச்சுமணி மற்றும் உள்ளூரில் உள்ள ஏனைய நகைச்சுவை கலைஞர்கள், பாடகர்கள் போன்றோரை ஈழத்தமிழர்கள் முதலில் வரவேற்க வேண்டும். உற்சாகப்படுத்த வேண்டும். எமது வீட்டு முற்றத்து மல்லிகையின் வாசத்தை நுகர பழக வேண்டும். அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid0KJ3F44wkhyAUbiSbFhAYSNHP8UnKW9H9PxhKi8pUHf7HBQXX7bBsjc6crbUXMFBVl/? நானும் இவர்களின் காணொளிகளைக் கண்டு கொள்வதில்லை. இனிமேல் தொடர்ந்து பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும்.
  15. இது எங்கே இறங்கும்? கட்டுநாயக்காவிலா? அறுகம்பேயிலா?
  16. அனேகமாக பிச்சுமணி, அக்குட்டியிடம் அடி வாங்கும் காட்சிதானே..இனிமேல் ஒழுங்காக பார்க்கிறோம்.நாமள் யாழில் அவர்கள் ஊரில் அவ்வளவு தான்.🤭
  17. 06 AUG, 2025 | 03:14 PM இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியிவில் வீதியில் உள்ள கழிவுகள் மற்றும் மண் என்பன வாவியினுள் உட்புகுவதை தடுத்து மண்ணரிப்பு ஏற்படாமல் வாவியை பாதுகாக்கும் நடவடிக்கைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கமைய மட்டக்களப்பு வாவியோரம் சுமார் ஒன்றரை மீட்டர் மற்றும் இரண்டு மீட்டர் வரையான அளவிலான உயரமான தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மட்டக்களப்பு லேடி மெனிங் டிரைவ் வாவியோரத்தில் இத்திட்டத்தின் முதற்கட்டம் நடைமுறைப்படுத்துகிறது. இதற்கென 58 மீட்டர் நீளமான தடுப்புச் சுவர் சுமார் 4 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் தெரிவித்தார். ஆரம்பத்தில் இத்திட்டம் நாலு மில்லியன் செலவில் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் தொடர்ந்தும் மட்டக்களப்பு வாவியோரத்தில் இவ்வாறான தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/221956
  18. வீரகேசரி ....... எவ்வளவோ இன்னல்களையும் கடந்து தாக்குப் பிடித்து இவ்வளவு வந்ததே பெரிய விடயம் . ...... இன்னும் பலநூறு வருடங்கள் காண வேண்டும் என வாழ்த்துக்கள் .......... ! 🙏
  19. தலைவர் இறந்து விட்டார் என்பதை இந்தியா ஸ்ரீலங்கா போன்ற நாடுகள் அடுத்த நூறு ஆண்டுகளுக்கு அல்லது எப்போதுமே தெளிவுபடுத்த போவதில்லை. அப்படி தெளிவுபடுத்துவதாக இருந்தால் அவர்கள் மே 2009 செய்திருக்க முடியும். அவர்களை பொறுத்த வரை தமிழர்களுக்கு இந்த குழப்பம் இன்னும் ஒன்று அல்லது இரண்டு தலைமுறைகள் அழியும் வரை இருக்க வேண்டும். இதை வைத்தே தமிழர்கள் தங்களுக்குள்ள குழுக்களாக மோதி நேரத்தை செலவிடுவது அவர்களுக்கு சாதகமானது. நாமும் 16 ஆண்டுகளாக வெற்றிகரமாக அந்த நிகழ்ச்சி நிரலை செய்துகொண்டு இருக்கிறோம். 02.08. சுவிசில் அஞ்சலிக்கூட்டம் நடத்தியவர்கள் அடுத்து வரும் ஆண்டுகளில் தலைவருக்கும் மாவீரர் தினத்தில் தான் அஞ்சலி செலுத்தப்படும் என்று கூறியிருக்கிறார்கள். அடுத்த மாவீரர் தினம் இரண்டாக நடந்தாலும் நடப்பதற்கு வாய்ப்புள்ளது. மே 18 என்பது தலைவருக்கான அஞ்சலி நாளாக அமையாது. அது தமிழின அழிப்பு நாள் என்றே தொடர்ந்து இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
  20. முஸ்லீம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். தமிழர்களை கொலை செய்த முஸ்லீம் பயங்கரவாதிகளை... நடு ரோட்டில் வைத்து வெட்டிக் கொல்ல வேண்டும்.
  21. சத்துருக்கொண்டான் படுகொலை நடைபெற்ற இராணுவமுகாமில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு தலைவர் வைரமுத்து குழந்தைவடிவேல் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில்.1990.09.09 அன்று சத்துருக்கொண்டான் பனிச்சையடி கொக்குவில் பிள்ளையாரடி ஆகிய கிராமங்களில் 184 பேர் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இலங்கை ராணுவத்தினராலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் இந்த படுகொலை செய்யப்பட்டது. இந்த படுகொலைக்கு நேரடியாக சாட்சியங்களும் இருக்கின்ற
  22. வேரால் உறிஞ்சும் நீர் போதாதென்று தலைதாழ்த்தி இலையால் தாகம் தணிக்கும் தரு ....... ! 😀
  23. இதற்கும் சுவிஸ்ஸில் இந்த நிகழ்வை நடத்தியவர்களுக்கும் என்ன சம்பந்தம்? மாவீரர் நாள் நவம்பர் 27 தான். அந்த மாவீரனின் வீர வணக்க நிகழ்வும் அதேநாளில் நடப்பதே நாம் அவருக்கு செய்யும் மரியாதையாகும்.
  24. (முன்னாள்) பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் 177 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 👇 சோமரத்ன ராஜபக்ச சம்பந்தமாக... தொடர்புடைய செய்தி கீழே உள்ளது. 👇
  25. பதவியிலிருந்து நீக்கப்பட்டார் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ! பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அவரது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் பிரிவு 17 இன் கீழ், பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த நிலையில் விவாதத்தின் இறுதியில் பதவி நீக்கம் தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதன்படி தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை 177 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு ஆதரவாக 177 வாக்குகளும் எதிராக எந்தவோரு வாக்குகளும் அழிக்கப்படாத நிலையில் வாக்களிப்பில் இருந்து ஒரு உறுப்பினர் விலகியிருந்துள்ளார். இதன்படி,பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னகோன் சற்றுமுன்னர் நீக்கப்பட்டுள்ளார். இதேவேளை, தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணைக்கு பொதுஜன பெரமுணவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். குறித்த பிரேரணை மீதான வாக்களிப்பிலிருந்து பொதுஜன பெரமுண விலகி இருக்குமென என்று நாமல் நாடாளுமன்றத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441970
  26. இந்தியாவில் உள்ள அழுக்குகளை இந்தியர்களால் கழுவி முடிக்க இயலாது. தமது உடம்பில் உள்ள அழுக்கு கடிப்பதற்கு அயல் நாட்டு மக்களின் உடம்பில் போய் தேய்ப்பது பரிகாரம் என நினைக்கின்றார்கள். தமிழர்களை சுரண்டிப்பார்க்கும் படத்திற்கு அனிருத் இசை அமைத்தால் உவரை புறக்கணிப்பு செய்யலாமே. அனிருத் ஒரு தமிழர் தானே. படத்தின் கதை அறியாமல் இசை அமைத்து கொடுத்தாரா?
  27. ஓவல் டெஸ்டில் ரசிகர்கள் கண்ணிமைக்க மறந்த கடைசி 57 நிமிடங்கள் பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் ஸ்டீபன் ஷெமில்ட் தலைமை கிரிக்கெட் நிருபர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஓவல் மைதானத்தில் உள்ள ஜேஎம் ஃபின் ஸ்டாண்டின் உள்ளே, பெவிலியனுக்கு எதிரே, டெஸ்ட் போட்டி சிறப்பு கமெண்ட்ரி அறைக்கு செல்லும் ஒரு படிக்கட்டு உள்ளது. இது ஊடகங்கள் மற்றும் பார்வையாளர்கள் என அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையிலான பரபரப்பான ஐந்தாவது டெஸ்ட் போட்டி முடிந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, மைதானம் காலியாகிக் கொண்டிருந்தது. அப்போது, அந்த படிக்கட்டில் ஒரு இடது கால் ஷூ, உள்ளாடை, வலது கால் ஷூ ஒன்றும் இருந்தன. அவற்றின் அளவை வைத்து பார்க்கும்போது அவை ஒரு ஆணுடையதாக இருக்கலாம் எனத் தெரிகிறது. தங்கள் உடைமைகளை அவர் எவ்வாறு தவறவிட்டார், அவற்றை இழந்ததை எப்போது உணர்ந்தார் என்பது தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், யாரோ ஒருவர் இந்த புகழ்பெற்ற மைதானத்தில் இருந்து செல்லும்போது, காலணிகள் மற்றும் உள்ளாடைகள் இல்லாமல் சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது. இது, திங்கட்கிழமை காலை ஏற்கனவே நிகழ்ந்த உற்சாகமான களேபரத்துடன் முற்றிலும் பொருந்தியிருக்கும். அங்கு, நீங்கள் பார்க்க விரும்பும் மிக தீவிரமான, பரபரப்பான உணர்ச்சிகரமான விளையாட்டு 57 நிமிடங்கள் அரங்கேறியிருந்தது. இருபத்தைந்து நாட்கள் தொடர்ந்த பரபரப்பான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இறுதி நாளன்று, ஒரு ஒற்றைக் கை மனிதன் தெற்கு லண்டனின் 22 யார்டு புல்வெளியில் வலியுடன் ஓடுவதை பார்க்க முடிந்தது. வாரத்தின் முதல் பணிநாளில் இங்கிலாந்தின் உற்பத்தித்திறன் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கும், அல்லது மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூருவில் எத்தனை அலுவலகங்கள் முன்கூட்டியே மூடப்பட்டன என நினைத்துப் பார்க்க தோன்றுகிறது. ஆனால் நான்காம் நாள் ஆட்டத்தின் மாலையில் ஆட்டம் ஒரு முக்கியமான தருணத்தில் இருக்கும்போது, நிலைமை வித்தியாசமாக இருந்தது. மழை மற்றும் மங்கலான வெளிச்சம் காரணமாக வீரர்கள் டிரெசிங் ரூமிற்கு சென்றனர். பின்னர், மங்கலான மாலைப் பொழுது பளிச்சென மாறியபோதும், போட்டி மீண்டும் தொடரவில்லை. ஞாயிறு மாலை நிகழ்வுகள் ஏற்படுத்திய எரிச்சல், திங்கள்கிழமை என்ன நடக்கும் என்ற ஆவலாக உருமாறியது. முப்பத்தைந்து ரன்கள் அல்லது நான்கு விக்கெட்டுகள். ஓவல் மைதானத்தின் டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்திருந்தது, ஆனால் போட்டியை காண வருவதற்கு யாரேனும் அக்கறை காட்டுவார்களா? என்ற சந்தேகமும் இருந்தது. ஆனால் ரசிகர்கள் வந்தார்கள், வந்து வரலாற்று சிறப்புமிக்க மைதானத்தை தொடர்ந்து சத்தத்தாலும், பரபரப்பான உற்சாகத்தாலும் நிரப்பினார்கள். 2005 ஆஷஸ் கிளாசிக் போட்டியில் இரண்டே பந்துகளுக்காக எட்ஜ்பாஸ்டன் மைதானம் நிரம்பியிருந்ததை இது நினைவூட்டியது. பட மூலாதாரம், GETTY IMAGES அன்று போலவே, இங்கு வந்தவர்களுக்கும் அற்புதமான விருந்து காத்திருந்தது. 20 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவை இரண்டு ரன்களில் இங்கிலாந்து வீழ்த்தியதற்குப் பிறகு, இந்தியாவின் இந்த ஆறு ரன்கள் வெற்றிதான் இந்த நாட்டில் இவ்வளவு நெருக்கமான வெற்றியாகும். போட்டித்தொடரின் இறுதி நாளன்று ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் இந்திய அணி விளையாடத் தொடங்கியது, அங்கு, பாதுகாவலர்கள், சமையல்காரர், பேருந்து ஓட்டுநர் உட்பட அனைவருமே அந்தக் கூட்டத்தில் இருந்ததாகத் தோன்றியது. பொருத்தமாக, இது சர்ரே அணிக்கு எதிராக எதிராக இங்கிலாந்து விளையாடுவது போல இருந்தது. ஜேமி ஓவர்டன் முதல் இரண்டு பந்துகளிலும் நான்கு ரன்கள் எடுத்தபோது, இங்கிலாந்துக்கு தேவையான ரன்களில் கால் பகுதியை கிட்டத்தட்ட எட்டியது. அதுதான் அன்று அவர்களுக்கு கிடைத்த சிறந்த தருணம். தனது முதல் ஐந்து டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பராக இருந்த ஜேமி ஸ்மித், சற்று சோர்வாக தெரிந்தார். அவர் இரண்டு பந்துகளை வீணாக்கினார், மூன்றாவது பந்து பேட்டின் விளிம்பில் பட்டு ஆட்டமிழந்தார். பாரத் ஆர்மியின் மேளம் "வி வில் ராக் யூ" இசையின் தாளத்தை அடித்து, அதிர வைத்தது. ஓவர்டன் காலில் பந்து பட்டபோது, நடுவர் குமார் தர்மசேனா, 2005-ல் ரூடி கோர்ட்ஸனின் மெதுவான விரல் அசைவை நினைவூட்டும் வகையில் தனது முடிவை அறிவித்தார். ஞாயிறு மாலை, வோக்ஸ் தனது முறிந்த தோள்பட்டையை கிரிக்கெட் வெள்ளை உடைகளுக்குள் திணித்துக்கொண்டு அரங்கிற்குள் வந்தார், இது நினைப்பதற்கே வலியைத் தருகிறது. டங்கின் ஸ்டம்புகள் பிரசித் கிருஷ்ணாவால் சிதறடிக்கப்பட்டபோது, பாதுகாப்பு பணியாளர்கள் ஆட்டம் முடிந்துவிட்டதாக நினைத்து மைதானத்திற்கு விரைந்தனர். ஆனால், கிரிக்கெட்டில் மிகவும் நல்ல மனிதரான வோக்ஸ்தான் மிகவும் தைரியமானவர் என்பது அவர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்வெட்டருக்குள் வோக்ஸின் காயமடைந்த இடது கை கட்டப்பட்டிருந்தது வோக்ஸ் தனது இடது கையில், கடந்த ஆண்டு காலமான தனது தந்தை ரோஜரின் நினைவாக பச்சை குத்தியிருந்தார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஸ்வெட்டருக்குள் வோக்ஸின் காயமடைந்த இடது கை கட்டப்பட்டிருந்தது. கிரிக்கெட்டின் இரண்டு வடிவங்களிலும் உலகக் கோப்பை வென்றவராகவும், ஆஷஸ் கோப்பையை வென்றவராகவும், இங்கிலாந்தின் மைதானங்களில் சிறந்த 'சீமர்'களில் ஒருவர் என்றும் கிரிக்கெட் சரித்திரத்தில் வோக்ஸ்க்கு சிறப்பான இடம் உண்டு. அதிலும், தோள்பட்டை காயத்தால், ஒரு கையில் கட்டுப்போட்டிருந்த நிலையில், தனது அணியை காப்பாற்ற ஒற்றைக் கையால் பேட்டிங் செய்ய களமிறங்கிய மந்திரவாதி என்று கிரிக்கெட்டர் கிறிஸ் வோக்ஸ் போற்றப்படுவார். அடிபட்ட கையுடன் விக்கெட்டுகளுக்கு இடையில் நான்கு முறை ஓடுவது வோக்ஸுக்கு மிகவும் வேதனையாக இருந்திருக்கும் என்பதை அவர் ஓடும்போது, எடுத்துவைத்த ஒவ்வொரு அடியிலும் அவர் தோள்பட்டை நடுங்கியதை வைத்து உணரமுடிகிறது. நல்லவேளையாக, ஒற்றை கையுடன் பந்துவீச்சை எதிர்கொள்ளும் நிலைமை அவருக்கு வரவில்லை. ஸ்கோரை சமன் செய்து தொடரை வெல்லக்கூடிய சிக்ஸரை அடிக்க முயன்ற அட்கின்சன் லெக் சைடில் பெரிய ஷாட் ஒன்றை விளையாட முற்பட்டார். அந்த முயற்சி தோல்வியடைந்து, ஆஃப் ஸ்டம்பை பந்து பதம்பார்த்துவிட்டது. பட மூலாதாரம், GETTY IMAGES இளம் இந்திய அணியில் தளராத மனம் கொண்ட முகமது சிராஜ், உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விராட் கோலி ஓய்வு பெற்றுவிட்டாலும், அவரது உத்வேகமான போர் குணத்தை எடுத்துச் செல்லும் திறன் சிராஜுக்கு இருந்தது. இந்த டெஸ்டில் சிராஜ் பந்து வீசாமல் பெவிலியனில் இருந்த சந்தர்ப்பமே இருக்கவில்லை. ஜஸ்பிரித் பும்ராவின் நிழலில் விளையாடாதபோது, பொறுப்பை உணர்ந்து சிறப்பாகச் செயல்படும் சிராஜின் சராசரி மற்றும் ஸ்ட்ரைக்-ரேட் இரண்டும் சிறப்பாக இருக்கும். இந்தத் தொடரில் இந்தியாவிற்கு கிடைத்த இரு வெற்றிகளும் பும்ரா விளையாடாத போட்டிகளில் இருந்தே வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது டெஸ்டில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது வருத்தத்தை அளித்தாலும், தொடர் 2-2 என சமநிலையில் முடிவடைந்தது நியாயமான முடிவாகும். அந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவையோ அல்லது இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர்கள் அடித்த சிக்ஸர்களில் ஏதேனும் ஒன்றையோ இங்கிலாந்து அணியினர் கேட்ச் செய்திருந்தால், நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கும். ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தனது தொலைக்காட்சி தயாரிப்பு குழுவினரை பாடல் மூலம் வழிநடத்திய காட்சி, எந்த அணி இந்த முடிவில் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை வெளிப்படையாகச் சொன்னது. 374 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி, வெற்றிக்கு மிக நெருக்கமாக சென்றது மிகவும் பாராட்டத்தக்கது. இருந்தபோதிலும் ஒரு கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை இங்கிலாந்து அணி தவறவிட்டது துரதிருஷ்டவசமானது. தற்போதைய இங்கிலாந்து அணிக்கு இது இறுதி உள்நாட்டு டெஸ்ட் போட்டியாக இருக்கும் வாய்ப்புகளும் தென்படுகிறது. பட மூலாதாரம், GETTY IMAGES மோசமான ஆஷஸ், கேப்டன் ஸ்டோக்ஸ் அல்லது பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் அணியில் இருந்து விலகிச் செல்ல வழிவகுக்கலாம். வோக்ஸின் வீரம் அனைவராலும் பாராட்டப்பட்டாலும், இது, அவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடிய கடைசி போட்டியாக இருக்கலாம். மார்க் வுட்டுக்கு ஜனவரியில் 36 வயது. இங்கிலாந்தின் அடுத்த உள்நாட்டு டெஸ்ட் ஜூன் மாதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டெஸ்ட் போட்டியின்போது சனிக்கிழமை காலை, இங்கிலாந்து பீல்டிங் செய்து, DRS மதிப்பாய்வைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த தருணமும் இருந்தது. உரையாடலில் ஸ்மித், அட்கின்சன், சாக் கிராலி, ஜேக்கப் பெத்தேல், ஓலி போப் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் இருந்தனர். அடுத்த முறை இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யும்போது இங்கிலாந்தின் மூத்த வீரர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கான ஒரு காட்சியாக இதைப் பார்க்கலாம். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgkrgjl4754o
  28. அவர்கள் பக்கம் இருக்கும் தீவிர முல்லாக்களுக்கும் உங்களுக்கும் வேறுபாடு இனம் மட்டும் தான், குணம் இரு இடங்களிலும் ஒன்று தான்😂! பந்தி பந்தியாக எழுதுகிறீர்கள், ஆனால் உணர்ச்சிவயப் பட்ட உளறலாக அல்லவா இருக்கிறது? ஒரு தகவலும் இல்லை. 2020 இல் ஒரு ஏமாற்றுக் கார முஸ்லிம் ஒளித்திருந்தார் என்பதற்காக 90 களில் முஸ்லிம்கள் கொல்லப் பட்டதும் பொய் என்று ஆகாது. இவை நடந்திருக்கின்றன. இயக்கத்தில் இருந்தவர்களே இதை மறுப்பதில்லை, நீங்கள் வெளி நாட்டில் இருந்து சின்னத்திரையில் பார்த்து விட்டு சும்மா அலட்டிக் கொண்டிருக்கிறீர்கள்😂.
  29. தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகின் பல பகுதிகளில் இதுதான் நடக்கின்றது.
  30. இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஒரு டொகுமென்ரரியாக எதிர்காலத்தில் காட்டுவார்கள். பத்து வருடங்களுக்குப் பிறகு பார்த்தாலும் சுவாரசியம் குன்றாது. நேற்று வேலைக்குப் போவதா, ஓவல் மைதானத்திற்குப் போவதா என்று குழம்பி கடைசியில் வேலைக்கே போயிருந்தேன். ஆனால் 11 இலிருந்து 12 வரை கிரிக்கெட்டைப் பார்த்துக்கொண்டிருந்தோம்😁
  31. நவ.27 அந்த மேதகு பிரபாகரன் என்ற மாபெரும் தலைவனைப் போற்றுவதற்குரிய உலகின் சிறந்த புனிதமான நாட்களில் ஒன்று. இதுதான் என்வரையிலும் ஏற்புடையது. இதைத்தவிர வேறு எந்தநாளைத் தெரிவு செய்தாலும் அது சிலராலோ அன்றிப் பலராலோ தூற்றப்படும் நாளாகவே அமையும்.
  32. வணக்கம் வாத்தியார் . ........... ! ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத் திசை பார்த்திருந்து ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணல ஆண் : மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும் சோறு தண்ணி வேணுமுன்னு தோணல ஆண் : என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடி வந்து தூதாக போக வேணும் அக்கரையில ஆண் : நான் உண்டான ஆசைகள உள்ளார பூட்டி வச்சி ஒத்தையில வாடுறேனே இக்கரையில பெண் : { நான் மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல பெண் : அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடி போன பின்னும் வீடு போயி சேர்ந்திடத்தான் தோணல } (2) ஆண் : தூரக் கிழக்கு கரை ஓரம் தான் தாழப் பறந்து வரும் மேகம் தான் ஆண் : உன்கிட்ட சேராதோ என் பாட்ட கூறாதோ ஒண்ணாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ பெண் : உன் கூட நானும் சேர ஒத்த காலில் நின்னேனே செந்நாரை கூட்டத்தோடு சேதி ஒண்ணு சொன்னேனே ஆண் : கண்ணாலம் காட்சி எப்போது எந்நாளும் என் நேசம் தப்பாது பெண் : மாமன் நெனப்பில் சின்னத் தாயிதான் மாசக் கணக்கில் கொண்ட நோயிதான் மச்சான் கை பட்டாக்கா மூச்சூடும் தீராதோ அக்காளின் பொண்ணுக்கோர் பொற்காலம் வாராதோ ஆண் : கையேந்தும் ஆட்டு குட்டி கன்னிப் பெண்ணாய் மாறாதோ மையேந்தும் கண்ணை காட்டி மையல் தீர பேசாதோ பெண் : உன்னாலே தூக்கம் போயாச்சு உள்ளார ஏதேதோ ஆயாச்சு ....... ! --- நான் ஏரிக்கரை மேலிருந்து ---
  33. இதில நான் என்னத்த சொல்ல? அந்த டிப்பிக்கள் சிறிலங்கனுக்கு கலிகாலம் தொடங்கீட்டுது. வெள்ளைக்காரன் பெஞ்சன் எடுத்தால் வேற லெவல். ஆனால் சிறிலங்கன் பெஞ்சன் எடுத்தால் வோசிங் மிசின்,நேசறி அது இது எண்டு அலைய வேண்டி இருக்கும். நீங்கள் சும்மாதானே இருக்கிறியளப்பா எண்ட பீலிங் மனிசி பிள்ளையளுக்கு வாறது இயல்பு கண்டியளோ.. காய் புத்தர் புதுக்கதையோட மீண்டும் கண்டதில் சந்தோசம். 🟢
  34. புத்தர் நீங்கள் ஏழு கடல் , ஏழு மலை தாண்டி மரப்பொந்துக்குள் போய் ஒழிந்தாலும் தொல்லை உங்களைத் தொடர்ந்து வரும் . ....... இதுதானே ஆரம்பம் . ....... தனித்திருக்கையில் ஏண்டா வயசுக்கு வந்தோம், வயசுக்கு வராமலே இருந்திருக்கலாம் என்று நினைப்பீர்கள் ...... இனித்தான் வேலைகள் எடுபிடியாகத்தான் இருக்கும் ஆனால் ஏராளமாய் இருக்கும் ........நாங்களும் உங்களின் பணிச்சுமை நீங்க அப்பப்ப நாலு ஆறுதல் வார்த்தைகள் கூறலாம் ........ வேறு என்ன தெரிவு என்று எனக்கும் தெரியவில்லை . ......! 🥲
  35. ஒளிவு மறைவு இல்லாமல் உண்மையை சொன்ன கதைக்கு பாராட்டுக்கள். 🙂
  36. ஆரம்பம் கொஞ்சம் கஸ்டம் தான். போகப்போக பழகிவிடும்.
  37. லங்கனுக்கு ..எதிகாலம் இப்படித்தான் ஆகுமோ......☹️
  38. புத்தா நானும் இளைப்பாறி 5 வருடமாகுது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.