Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    38754
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87988
    Posts
  3. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    12678
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    20010
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/13/25 in all areas

  1. அந்நியரிடமிருந்து ஒன்று சேர்ந்து பெற்ற சுதந்திரத்தை, தன்னகப்படுத்தி அந்த இனத்தை அந்நியப்படுத்திய துரோகிகள் நாட்டை, மக்களை, மதத்தை, மொழியை பிரித்து நாட்டை கொள்ளையடித்தவர்கள் தியாகிகளாம். இவர்களின் இந்த வாய் வீர உணர்ச்சி வசப்பேச்சுகளை நம்பி மக்கள் ஏமாறுவதாலேயே இவர்கள் மீண்டும் மீண்டும் அரசியல் செய்ய முடிகிறது. ஏமாறுவோர் உள்ளவரை ஏமாற்றுவோரும் குறைவுபடார். சட்டத்திற்கு தலை வணங்குபவர், நீதிபதியை வீட்டுக்கு அனுப்பி பழிவாங்கியது ஏன்? நீதிமன்றத்திற்கு போக அஞ்சி மக்களை திரட்டுவது ஏன்? விமர்சிப்பது ஏன்? நோய் வருவது ஏன்? விழுந்து எழும்புவதும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதுமேன்? தாங்களே நாட்டை ஆளவேண்டுமென்று சட்டங்களை மாற்றி இயற்றியது மனதில் வரவில்லையோ இவருக்கு இதை சொல்லும்போது? அது சரி, மக்களை ஊடகங்களை அழைத்து புலம்புவது ஏன்? வீடற்றவர் போல் ஒப்பாரி வைத்ததுமேன்? மக்கள் பணத்தில் சொகுசாக வாழ்ந்தவர் கோடி சொத்துக்களை முறையற்ற விதத்தில் சேர்த்தவர், இளைப்பாறிய பின்னும் மக்கள் பணத்தில் வாழ நினைப்பது பேராசை. தன் வேலையை தானே செய்ய முடியாமல் வேலையாட்களை கேட்பவர், தன்னை பாதுகாக்க பாதுகாப்பு கேட்பவர், தனக்கென வீடு இல்லாமல் மக்களின் வீடுகளில் வாழ நினைப்பவர்கள் மக்களுக்கு, நாட்டுக்கு எப்படி சேவை செய்யப்போகிறார்கள்? பயங்கரவாதத்தை அறிமுகப்படுத்தியவர்கள், அது தங்களுக்கு எதிராக பாயும் போது அதை தாங்க முடியவில்லை, குறை கூறுகிறார்கள். என்ன செய்வது? வேலிக்கு வைத்த முள் வைத்தவரின் காலை குற்றத்தான் செய்யும். சுதந்திரம்! அது இந்த நாட்டில் இருக்கிறதா? அதை சிதைத்தவர் தொலைத்தவரே இவர்தான்! இந்த இராணுவத்தை சர்வதேசத்தில் குற்றவாளிகளாக்கி, தங்களுக்குள் தியாகிகளாக காட்டி தம்மை பாதுகாத்து கொள்கிறார்கள். தமது திட்டத்தை நிறைவேற்றவும், தம்மை பாதுகாக்கவும் இராணுவத்தை பலி கொடுக்கிறார்கள். அந்த இராணுவமே இவர்களை கைவிட்டதை மறந்து விட்டார் போலும். ஒரு தலைவன், தன் பிள்ளைகளை, குடும்பத்தை பாதுகாத்துக்கொண்டு, சொகுசு அனுபவித்துக்கொண்டு, ஏழைப்பிள்ளைகளை பலி கொடுத்து, தான் வீரம் பேசுவது, தானே சுதந்திரத்தை கொண்டுவந்தேன் என்று கொண்டாடுவதும், உயிர் இழந்த இராணுவத்தினரின் உடல்களை உறவுகளுக்கு அளிக்காமல் உண்மைகளை மறைத்ததும் சரியா? யார் போர் புரிந்தவர்கள்? இவரா அல்லது இவர் குடும்பத்தை சேர்ந்தவர்களா? றக்பி வீரரின் கொலையில் இவர் பிள்ளைகளின் தனிப்பட்ட ஒழுக்கம் நாடு அறிந்தது. ஊடகவியலார்களின் கொலையில் இவரது குடும்ப ஒழுக்கம் வெளிப்பட்டது. பாதாள, போதைக்கும்பலில் இவர்களின் அரசியல் ஒழுக்கம் வெளிப்படுகிறது. எல்லோருக்கும் சட்டம் சமன். இவர்கள் மட்டும் ஏன் அஞ்சுகிறார்கள், வைத்தியசாலையில் படுக்கிறார்கள், விமர்ச்சிக்கிறார்கள், புலம்புகிறார்கள், வெதும்புகிறார்கள்? அதன் பலனை அவர்களே முதலில் அனுபவித்தார்கள். அவர்கள் மேல் வைத்த குற்றச்சாட்டை, அரசியலுக்கு வந்த உடனேயே உங்களாக மாற்றி காட்டிய பெருமை உங்களை சாரும். நீங்கள் அரசியல் செய்ய, செய்த ஊழலை மறைக்க, அவர்கள் குடும்ப அரசியல் செய்கிறார்கள் என மக்களின் மனதை மாற்றி அரசியல் வெற்றி பெற்றவர், பின்னாளில் குடும்ப அரசியல் செய்ததை மக்கள் மறந்ததே உங்கள் வெற்றி. தமிழர் ஓரங்கட்டப்படுவதற்கு தனது தந்தையே முக்கிய காரணம் என்பதை காலம் கடந்து அவரது மகளே ஒத்துக்கொண்டுள்ளார். இவர் புதுக்கதை சொல்லி தன்னை கதாநாயகன் என்கிறார். அதே மஹிந்த ராஜபக்சவும் அவரது குடும்பத்தினருமே ஒரு இனத்தை அழித்து காணாமல் ஆக்கி துவம்சம் செய்து விட்டு, அது நடக்கவேயில்லை என வாதாடுகிறார், விசாரணை என்றால் அஞ்சுகிறார், இராணுவத்தை சாட்டி ஒழிய பார்க்கிறார். இவற்றில் ஈடுபட்டவர்கள் கடத்தப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டதும் கொலை செய்யப்பட்டதும் சித்திரவதை செய்யப்பட்டதும் உங்கள் ஆட்சிக்காலத்தில். இப்போ உங்களுக்கென்றவுடன் உபதேசம் செய்ய முடிகிறது இந்த ரவுடிக்கும்பலால். தாங்கள் செய்தது தங்களுக்கு நேர்ந்து விடுமோவென அஞ்சுகிறார்கள், மக்களை கெஞ்சுகிறார்கள். முதலில் உங்களுக்கெதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஓடி ஒழியாமல், விழுந்து முறிந்து படுக்கையில் விழாமல், மக்களை திரட்டாமல், ஆரவாரம் செய்யாமல், இராணுவத்துக்கு பின்னால் ஒழியாமல் சட்டத்திற்கு கீழ்ப்பணிந்து தனித்து நின்று உங்களை நிஞாயவாதியாக நிரூபியுங்கள். அதன் பின் மற்றவைகளை யோசிக்கலாம். இப்படி ஒரு நிலைமை வராது என்றும் நீங்களே எப்போதும் நாட்டை ஆளுவீர்கள் என்றும் கனவு கண்டது உங்களது அறியாமை. அரசியலில் மட்டுமல்ல கொலை, ஏமாற்று, ஊழல் எல்லாவற்றிலுமே பலமாக இருந்துள்ளார். அதனாலேயே அவரும் விசாரணைகளை எதிர்நோக்கியுள்ளார். குடும்பமே ஏமாற்று குடும்பம். இதற்கு அரசியல் ஒரு கேடு. சட்டம் சகலருக்கும் சமம். சரத் பொன்சேகாவை போர் முடிந்தவுடன் யாவரும் புகழ்ந்தனர், அதை பொறுத்துக்கொள்ளாத கோத்தா, அவரை ஒதுக்க ஆரம்பித்தார். இதனால் சீற்றமடைந்த பொன்சேகா அரசியலில் குதித்தார். இவரோடு சேர்ந்தால் தமக்கு வாக்கு அதிகமாகும் என எண்ணிய எதிர்கட்சிகள் பொன்சேகாவுடன் கரங்கோத்தனர். இதனால் அச்சம்கொண்ட ராஜபக்ஸக்கள், தேர்தல் குளறுபடி செய்து ஆட்சியை கைப்பற்றிய கையோடு அவரை ஒரு மிருகதைப்போல் அடித்து இழுத்து சென்று சிறையில் போட்டனர். அவரோடு சேர்ந்திருந்த அரசியல் வாதிகள் திகைத்து அவரை கைவிட்டு மறைந்தனர், அவரை சிறையில் சென்று சந்திக்கவேயில்லை. அன்று விழுந்த பொன்சேகாவால் இன்றுவரை எழுந்திருக்க முடியவில்லை. மக்களும் பேச அஞ்சினர். தேர்தல் ஆணையாளர் தேர்தல் முறைகேடுகள் நடக்கிறது என கூப்பாடு போட்டார். இவர்கள் ஆட்சியைப்பிடித்தவுடன் அப்படியேதும் நடக்கவில்லையென பல்டி அடித்து விட்டார். அப்படியொரு காலாச்சாரத்தை ஏற்படுத்த ராஜபக்ஸக்களாலேயே முடியும். அதனாலேயே ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலை துணிந்து நடத்தினர். ஊழல், கொலை, கொள்ளை, போதை கலாச்சாரத்தை வளர்த்தனர். அவர்களது காட்டாட்சியே இன்றைய துர்பாக்கிய நிலைமைக்கு காரணம். தங்களை நிஞாயப்படுத்த தமிழரை பலி கொடுத்து தம்மை மேன்மைப்படுத்திக்கொண்டனர். "செய்த அதர்மம் தக்க சமயத்தில் கழுத்தறுக்கும்."
  2. 1) மகளிர் உலக கிண்ணப்போட்டியில் போட்டியிடும் அணிகளில் எந்த அணிக்கு உங்களது ஆதரவு ? ( இக்கேள்விக்கு போட்டியிடும் அணிகளில் ஒன்றினை தெரிவு செய்தால் 1 புள்ளி வழங்கப்படும்) ஆரம்ப சுற்று போட்டிகளான வினா 2 இல் இருந்து 31 வரையிலான கேள்விக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். நீங்கள் எந்த அணி வெற்றிபெறும் என குறிப்பிட வேண்டும் 2)இலங்கை - இந்தியா 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து 4)பாகிஸ்தான் - வங்காளதேசம் 5)இங்கிலாந்து - தென்னாபிரிக்கா 6)அவுஸ்திரேலியா - இலங்கை 7)இந்தியா - பாகிஸ்தான் 8)நியூசிலாந்து - தென்னாபிரிக்கா 9)இங்கிலாந்து - வங்காளதேசம் 10)அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் 11)இந்தியா - தென்னாபிரிக்கா 12)நியூசிலாந்து - வங்காளதேசம் 13)இலங்கை - இங்கிலாந்து 14)அவுஸ்திரேலியா - இந்தியா 15)தென்னாபிரிக்கா - வங்காளதேசம் 16)இலங்கை - நியூசிலாந்து 17)பாகிஸ்தான் - இங்கிலாந்து 18)அவுஸ்திரேலியா - வங்காளதேசம் 19)இலங்கை - தென்னாபிரிக்கா 20)நியூசிலாந்து - பாகிஸ்தான் 21)இங்கிலாந்து - இந்தியா 22)இலங்கை - வங்களாதேசம் 23)பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா 24)அவுஸ்திரேலியா - இங்கிலாந்து 25)இந்தியா - நியூசிலாந்து 26)இலங்கை - பாகிஸ்தான் 27)அவுஸ்திரேலியா - தென்னாபிரிக்கா 28)இங்கிலாந்து - நியூசிலாந்து 29)இந்தியா - வங்காளதேசம் 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது? 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? ( சரியாக பதில் அளிக்கும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். மொத்த புள்ளிகள் 4 ) 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? ( சரியான விடைகளுக்கு தலா 3 புள்ளிகள், மொத்த புள்ளிகள் 6) 34)இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? ( 5 புள்ளிகள்) 41 , 42 கேள்விகளை தவிர இனி வரும் எல்லா கேள்விகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். 41,42 வது கேள்விகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டிகள் கொழும்பு, மும்பை( Mumbai), இந்தோர்( Indore), விசாகப்பட்டினம், கௌகாத்தி( Guwahati) ஆகிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்? 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்? 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? 38)இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா? 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? 46)இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? 47)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? போட்டி விதிகள் 1)சிட்னி நேரம் செப்டம்பர் 30ம் திகதி மதியம் 12 மணிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார் 5) ஆரம்ப சுற்று போட்டிகளில் மழை காரணமாக போட்டிகள் நடைபெறாவிட்டால் அப்போட்டிகளுக்கான புள்ளிகள் எல்லோருக்கும் வழங்கப்படும் 6) அதிக ஒட்டங்கள், குறைந்த ஓட்டங்கள் பெறும் அணிகள், வீராங்கனை தொடர்பான கேள்விகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அணிகள், வீராங்கனைகள் சமமான ஓட்டங்கள் பெற்று இருந்தால் அவ்வணிகள், வீராங்கனைகளில் எதாவது சரியான பதிலை எழுதியவருக்கு புள்ளிகள் வழங்கப்படும். ( ஓட்ட விகிதப்படி புள்ளிகள் வழங்கப் படவில்லை). இதே போல பந்து வீச்சாளர்கள் பற்றிய கேள்விகளுக்கும் புள்ளிகள் வழங்கப்படும். உ+ம் பாகிஸ்தான் வீராங்கனை ஒரு போட்டியில் 28 ஓட்டங்கள் வழங்கி 5 விக்கேற்றுகளை பெற்றார். அவுஸ்திரேலியா வீராங்கனை 30 ஒட்டங்களை வழங்கி 5 விக்கேற்றுக்களை பெற்றார். ஏதாவது ஒரு போட்டியில் வீராங்கனை ஒருவர் பெற்ற அதிக விக்கேற்றுக்கள் 5 எனில் 45 வது கேள்விக்கு பாகிஸ்தான் அல்லது அவுஸ்திரேலியா அணியை தெரிவு செய்தவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும்
  3. கடந்த வருடம் வந்த போன் பிள்ளைகள் வாங்கித் தந்தார்கள். அதற்கு சிம் இல்லை. நமக்கு இதுபற்றி தெரியாது. போன் கடையில் போய் சிம் மாற்றம் செய்ய போகும்போது சுற்றிசுற்றி பார்த்துவிட்டு சிம் எப்படி போடுவது? எந்த மொடல் போன்? என்று கடைசியில் இதற்கு சிம் இல்லை என்று கடைக்காரர் சொல்லியே எனக்கு தெரியும். இலங்கை போனபோது.
  4. யாழ் இணைய கடவுட் சீட்டினை ஒருவருடமாக மறந்து போய் விட்டேன். இதனால் கணனியின் ஊடாக யாழில் கருத்து எழுத முடியவில்லை. கைத்தொலை பேசி ஊடாகவே எழுதுகிறேன். இலங்கை நாடாளுமன்ற தேர்தல் போட்டியில் புள்ளிகள் வழங்க மிகவும் கஷ்டப்பட்டு விட்டேன். முதலாவது கேள்விக்கு போட்டியிடும் நாடுகளில் ஒன்றினை தெரிவு செய்பவர்கள் எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்கும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்
  5. ஏன் இரண்டு கிழமைகளுக்கு மட்டும்? பரீட்சார்த்த முயற்சியோ? நிரந்தரமாக அணிய வைத்தால் கையூட்டல் தவிர வேறு பல குற்றங்களில் ஈடுபடுபவர்களையும் கண்டுபிடிக்கலாம். விமான நிலையத்தில் குடிவரவு துறையில் பணிபுரிபவர்கள் நெஞ்சிலும் கமெரா மாட்டுவிக்க வேண்டும்.
  6. தமிழ் திரையுலகில் பல துப்பறியும் படங்களில் நடித்ததும் அவராகவே இருக்கும். மோடேன் தியோட்டஸ் எடுத்த படங்களில் அருமையாக நடித்திருப்பார். மோடேன் தியேட்டேஸ் படங்களில் எழுத்தோட்டமே ஒரு திறில். இறந்தவனைச் சுமந்தவனும் இறந்திட்டான்-அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்
  7. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -1 கார்த்திக் டிசம்பர் 22, 2024 மூலம் : யமுனா ஹர்ஷவர்த்தனா தமிழாக்கம் : கார்த்திக் திருமதி. யமுனா ஹர்ஷவர்த்தனா அவர்கள் எழுதி கிரி ட்ரேடிங் நிறுவனம் வெளியிட்ட ” Once upon a Time Thousands of years ago “ என்ற ஆங்கில புத்தகத்தின் மொழிபெயர்ப்பு இது. மஹாபாரத கதைகளின் தொகுப்பே இந்த நூல். ஆனை முகத்தோனுடன் ஓர் ஒப்பந்தம் உலகின் தலைச்சிறந்த காவியத்தை எழுதுவதற்கான நேரம் அது , வரலாற்றை சந்ததியருக்காக ஆவணப்படுத்தப்பட வேண்டிய நேரம். மீனவப் பெண்ணான சத்யவதிக்கும், பராசர முனிவருக்கும் பிறந்த கரிய நிறத்தை கொண்ட ரிஷி கிருஷ்ண த்வைபாயனா அந்தப் பொறுப்பை தனதாக்கிக் கொண்டார். பரந்த வேதங்களை படிப்பதற்கும் அடுத்த தலைமுறைகளுக்கு தொகுத்து வழங்கவும் வசதியாக தொகுத்து மூன்றாக வகைப்படுத்தியதால் வேத வியாசர் என்றழைக்கப்படும் கிருஷ்ண த்வைபாயனா இந்த மிகப் பெரிய வேலையை எப்படி செய்து முடிப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்தார். வரலாறு மிக நீண்டதாக ஐந்து தலைமுறைகளை உள்ளடக்கியதாக இருந்தது;விவரிப்பு மிக கடினமானதாக நூற்றுக்கணக்கான நபர்கள் மிக முக்கிய பாத்திரங்களில் கொண்டதாகவும் இருந்தது. கதாபாத்திரங்களின் உளவியல், சூழ்நிலைகளின் உளவியல் ; விவரிப்பின் மூலம் சொல்லப்படவேண்டிய சூழ்நிலைகள் என அவர் முன் இருந்த பணி கடினமாய் இருந்தது. கதை விவரிப்பு சுருக்கமாய் கச்சிதமாய் இருக்க வேண்டும். அதே நேரத்தில் எதையும் விட்டுவிடக்கூடாது. ஏனெனில், இந்த காவியம் , மனிதர்களை என்றும் வழிநடத்தக் கூடியது , இந்தக் காவியத்தில் இருக்கும் எண்ணற்ற பாத்திரங்களின் மூலம் ஒவ்வொருவரும் தன்னை மீட்டெடுப்பர், இந்த கதை, ஒருவரின் வாழ்வின் பாதையையே மாற்றக் கூடிய ஒன்றாகும். முன்னிருந்த வேலை கடினமானது. மீண்டும் நினைவுப்படுத்தி, நியாயப்படுத்தி தொகுத்து அதை எழுதுவது என்பது மனிதனால் ஆகக் கூடிய விஷயமில்லை என்பது வியாசருக்கு தெரியும். எனவே தெய்வத்தின் உதவியை நாட முடிவு செய்து ஆனைமுகனை பிரார்த்தித்தார். ” கணேசா ! பிரணவ வடிவானவனே ! என்னுடைய தாழ்மையான வணக்கங்களை ஏற்றுக்கொள். மனிதகுலத்தின் நன்மைக்காக , மஹாபாரதம் எழுதப்பட்டு காப்பற்றப்படவேண்டியது நம்மின் கடமையாகும். இதற்காய் , உன் உதவி வேண்டி வந்துள்ளேன். கருணை வடிவானவனே ! மஹாபாரதம் எழுத ஒப்புக் கொண்டு என்னை சிறப்பிப்பாயாக…” “வ்யாஸா ! நீ என்னிடம் இந்த உதவி கேட்டதற்கு நான் மிகவும் மகிழ்கிறேன். ஆனால்,எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும், உன் குடும்பக் கதையை உன்னருகில் உட்கார்ந்து நீ சொல்வதாய் என்னால் காத்திருக்க இயலாது, எனக்கு அவ்வளவு நேரமும் இல்லை ” என்றார் கணேசர். சிறிதும் இடைவெளி இன்றி கதையை சொல்லி செல்ல இயலாது. ஏனெனில் வரிகளை யோசிக்க அவருக்கு நேரம் வேண்டும் என வியாசர் அறிவார். விக்னேஸ்வரன்* மிகக் கடினமான நிறைவேற்றுவதற்கு கடினமான நிபந்தனையை விதிக்கிறார் என்பதையும் வியாசர் அறிவார். ஆனால் பல வருட தவத்தின் பயனாக கிடைத்த இந்த வாய்ப்பை வீணடிக்க அவர் விரும்பவில்லை. எனவே அவர் விநாயகரிடம் வேண்டினார், ஞான ஸ்வரூபனே நீ இல்லாமல் உலகில் ஞானம் என்பது இல்லாமல் போய்விடும். உங்கள் ஞானத்தின் உதவியால் நான் வரிகளை தொகுத்து சொல்கிறேன். இந்த எளியவன் சொல்வதை நீங்கள் புரிந்து கொண்டு எழுதும் வரையில் நான் இடையில் நிறுத்த மாட்டேன் என உறுதி அளிக்கிறேன். கஜானனர் இதற்கு ஒத்துக்கொண்டார். வியாசர் சொல்ல சொல்ல, அவர் தந்தத்தை ஒடித்து அதை எழுதுகோலாகக் கொண்டு பனை ஓலைச் சுவடிகளில் எழுதத் துவங்கினார். இடையில் வியாசர் கொஞ்சம் கடினமான வரிகளைக் கோர்த்து தர அதை புரிந்து கொண்டு விநாயகர் எழுத ஆகும் இடைவெளியில் அடுத்த அடுத்த வரிகளை அமைத்துக் கொள்ள வியாசருக்கு உதவியது. இதைப் புரிந்து கொண்ட விநாயகரும் சிரித்துக் கொண்டே எழுதினார். நாம் இன்று படித்து, கேட்டு கற்று மகிழும் மஹாபாரதம் இந்த விதமாகத்தான் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வியாசர் மூஷிக வாகனனுக்கு சொல்லி எழுதப்பட்டது. ஞானத்தின் அதிபதி மற்றும் வேதத்தை தொகுத்த ரிஷியின் இந்த கூட்டணி நமக்குள் ஒத்துழைப்பு மற்றும் இரக்கத்தின் விதைகளை தூவட்டும். மிக சரியான மனிதர் அக்காலத்தில் முனிவர்கள் எல்லோரும் கடுமையான தவங்கள் மூலம் மிக பெரிய பேறு அடைய விரும்பி தவம் இருந்தனர். ஆனால் ஒருவர் மட்டும் பிறக்கும் பொழுதே எல்லாவகையிலும் சிறந்தவராக பிறந்தார் , சுகர், வியாசரின் மகனான இவர் பிறப்பிலேயே பிரம்மத்தை பற்றிய ரகசியத்தை அறிந்திருந்ததால் சுக ப்ரம்ம ரிஷி என அழைக்கப்பட்டார். ஒருநாள் , உலகத்தின் அறிவு பொக்கிஷத்தை காப்பாற்ற தனக்கொரு மகன் வேண்டுமென உணர்ந்த வியாஸர் சிவனை நோக்கி தவமிருக்கத் துவங்கினார். அதே சமயத்தில் விண்ணுலகத்தில் இருந்து ஓர் கிளி அங்கே பறக்க அதை அவர் பார்த்தார். அதன் மூலம் அக்கிளி , மிக அழகான அதே சமயம் தெய்வீக களைப் பொருந்திய ஒரு குழந்தையை தந்தது. அந்தக் குழந்தை சுக தேவர், கிளிகளின் கடவுள் என அழைக்கப்பட்டது. சுகருக்கு , வியாஸர் வேதங்களையும் மற்ற விஷயங்களையும் கற்றுத் தர துவங்கினார். மிகக் குறுகிய காலத்திலேயே அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார் சுகர். மகனை, தந்தையே பரிட்சித்து சான்று அளிக்க முடியாத காரணத்தால், மிதிலையின் அரசராக இருந்த ஜனகரிடம் 1 அவரை அனுப்பி வைத்தார் வியாசர் . சுகர் வரப்போவதை முன்பே தனது ஞான திருஷ்டியால் அறிந்த ஜனகர், தனது கோட்டை காவலாளிகளை அழைத்து, அவர் சொல்லும் வரை சுகரை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என கட்டளையிட்டார். அதேபோல், கோட்டை வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்ட சுக ப்ரம்ம ரிஷியும், மூன்று நாட்கள், உணவையோ, சொட்டு நீரோ மற்றும் துறக்கமோ இன்றி காத்திருந்தார். நான்காம் நாள், ஜனகரே கோட்டை வாயிலுக்கு வந்து பிரம்மாண்ட ஊர்வலமாய் அவரை அழைத்து சென்றார். உள்ளே அழைத்து வரப்பட்ட சுக பிரம்மத்தை சிறந்த அழகிகள் குளிப்பாட்டி அவருக்கு அறுசுவை விருந்தும் அளித்தனர். இவை எதையும் சிந்தையில் கொள்ளாத இளம் ரிஷி தனக்களிக்கப்பட்ட விருந்தை ஏற்றுக்கொண்டார். இதை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த ஜனகர் ” மகனே ! இப்பொழுது என்னுடன்அரசவைக்கு வருவாயாக ! ” என அழைத்தார். ஜனகரின் அரசவை வளர்ந்து வரும் நாட்டின் வளர்ச்சியை பிரதிபலிப்பது போல் இருந்தது. மிக அழகான நாட்டியப் பெண்மணிகள் நாட்டியமாடிக் கொண்டும் அருமையான பாடல்களைப் பாடிக்கொண்டும் இருந்தனர். அரசர் , சுகர் கையில் ஒரு கிண்ணத்தைக் கொடுத்து அதன் விளிம்பு வரை எண்ணையை ஊற்றி , அரசவையை சுற்றி வந்து அங்கிருந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய சொன்னார். அமைதியாக , அந்த கிண்ணத்தை கையில் ஏந்தி ஒரு சொட்டு எண்ணையும் சிந்தாமல் சென்று அங்கிருந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார். அதைக் கண்டு மகிழ்ந்த ஜனகர் , சுகரை கட்டியணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ” என்னருமை மகனே ! இனி நீ கற்பதற்கு என்ன உள்ளது ? கஷ்டங்களோ , அரண்மனையின் செல்வச்செழிப்போ இல்லை உணர்வுகளை தூண்டு விஷயங்களோ உன்னை தீண்டவில்லை. நீ ஏற்கனவே ஒரு ப்ரம்மஞானி2 ” எனக் கூறினார். சுகர் எப்பொழுதும் இந்த உலக பிரஞை அற்று இருந்ததால் அவரை வியாசர் மிக கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டி இருந்தது. ஒருமுறை சுகர் ஆற்றங்கரையோரம் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். வியாசரும் அவரை பின்பற்றி சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது அங்கு சில இளம் பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர். சுகர் சென்றபொழுது அவர்கள் நாணம் அடையவில்லை. மாறாக அவர்கள் தங்கள் குளியலை தொடர்ந்தனர். ஆனால், அவரை தொடர்ந்து வியாசர் வந்தபொழுது , அவர்கள் உடனடியாக குளத்தில் மூழ்கி தங்களை மறைத்துக் கொண்டனர். இதைக் கண்ட ரிஷி ஆச்சர்யம் அடைந்து ”அழகான இளம் வாலிபன் நிர்வாணமாக நடந்தது உங்கள் உணர்வுகளை சீண்டவில்லை. ஆனால் முழுவதும் உடையணிந்த வயோதிகனான நான் வரும்பொழுது , வெட்கம் கொண்டு உங்களை மறைத்துக் கொண்டீர்களே.. இதற்கு விளக்கம் அளிக்க இயலுமா ” என வினவினார். அதற்கு அவர்கள் ” தவ ஸ்ரேஷ்டரே ! அவர் முழு ஞானம் அடைந்தவர் . ஆண் பெண் பாலின பேதத்தை கடந்து விட்டார். ஆனால் தாங்கள் அப்படி இல்லையே ! நாங்கள் எவ்வாறு வெட்கம் கொள்ளாமல் இருக்க இயலும் ” என பதில் உரைத்தனர். சுகர்தான், பின்பு மஹாபாரத்தையும் , ஸ்ரீமத் பாகவதத்தையும் உலகிற்கு பரப்பினார். இவ்வுலகிற்கு தேவையான ஞானத்தை காத்து மற்றவர்களுக்கு அளித்தார். ஜனகர் : சீதையின் தந்தை அல்ல. அவ்வம்சத்தில் வந்த அனைவருக்கும் இந்த பட்டம் உண்டு. எனவே இவர் அவ்வம்சத்தில் வந்த மற்றொரு அரசர் ப்ரம்மஞானி : பிரம்மத்தை கற்றறிந்தவர். சஞ்சீவனி – உயிர் தரும் மந்திரம் இது பாண்டவ / கௌரவர்களின் காலத்திற்கு மிக முன்னால் நடைபெற்ற ஒரு சம்பவம் ஆகும். தேவர்களும் அசுரர்களும் எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டே இருந்தனர். அப்போரில் அசுரர்கள் தொடர்ந்து வெற்றிப் பெற்றுக் கொண்டே வந்தனர். காரணம், அவர்களுடைய குரு சுக்ராச்சாரியாருக்கு இறந்த உயிர்களை மீட்டுத் தரும் சஞ்சீவனி மந்திரம் தெரிந்திருந்தது. அந்த மந்திரம் அறிந்தாலொழிய இப்போரில் வெற்றி பெறுவது என்பது இயலாது என்பதை அறிந்த தேவர்கள் பலத்த ஆலோசனைக்குப் பிறகு அவர்கள் குரு பிரகஸ்பதியின் மகன் கசன் என்பவனை சுக்ராச்சாரியாரிடம் அனுப்பி இம்மந்திரத்தை கற்று வரக் கூறினர். கசன், சுக்ராச்சாரியாரை அணுகி தன்னை சீடனாக ஏற்றுக் கொள்ள கேட்டுக் கொண்டான். பிரகஸ்பதியின் மேல் இருந்த மரியாதை மற்றும் கசனின் பணிவான நடவடிக்கையின் காரணமாய் அவனைத் தன் சீடனாக ஏற்றுக் கொண்டார் சுக்ராச்சாரியார். ஒரு சீடனாய் தன் கடமைகளை சுக்ராச்சாரியாரின் விருப்பத்திற்கேற்ப செய்து வந்தான். நாளடைவில் அவரது மகள் தேவயானிக்கும் மிக நெருக்கமாகிவிட்டான் கசன். வஞ்சக எண்ணம் கொண்ட அசுரர்கள் கசனின் நோக்கத்தை சந்தேகிக்க துவங்கினர். அதனால் சுக்ராச்சாரியார் அறியாமல் அவனை கொல்லவும் முடிவெடுத்தனர். ஒருநாள், அவனை கடத்தி சென்று கடலில் மூழ்கடித்து அவனது பிணத்தை சுக்ராச்சாரியார் முன் கொண்டுவந்து கிடத்தினர். அவர் கேட்டபொழுது எதோ ஒரு காரணம் சொல்லப்பட்டது. ஆனாலும் அவர்களது கெட்ட எண்ணத்தை அறிந்து கொண்ட சுக்ராச்சாரியார், சஞ்சீவனி மந்திரம் ஜெபித்து அவனை உயிர்ப்பித்தார். அடுத்த முறை அவனை கொன்று அவனது உடலை நாய்க்கு உணவாக இட்டனர் அசுரர்கள். இதை அறிந்த தேவயானி, சுக்ராச்சாரியாரிடம் முறையிட, மீண்டும் அவர் சஞ்சீவனி மந்திரம் ஜெபித்தார். இம்முறை நாயின் வயிற்றை கிழித்துக் கொண்டு வெளிவந்தான் கசன். மூன்றாம் முறை அசுரர் அவனை மரத்தில் கட்டி வைத்து உயிருடன் எரித்தனர். பின்பு அந்த சாம்பலை, மதுவில் கலந்து சுக்ராச்சாரியாருக்கு அளித்தனர். அதை குடித்தப்பின் தான், நடந்ததை உணர்ந்தார். இப்பொழுது அவருக்கு தேவர்களின் தந்திரமும் புரிந்தது. சாம்பலாய் மதுவில் கலந்து அவரது வயிற்றில் இருந்த கசனுக்கு அவர் சஞ்சீவனி மந்திரத்தை போதித்தார்.பின் கீழே படுத்து அவர் அம்மந்திரத்தை ஜபிக்க , அவரது வயிற்றை கிழித்துக் கொண்டு உயிர் பெற்று வந்தான் கசன். அவனது குணத்திற்கு , அவனை உயிர் பெற்றவுடன் முதல் காரியமாய், அவனை உயிர்ப்பித்த குருவை சஞ்சீவனி மாத்திரம் ஜபித்து உயிர்பித்தான். பின்பு தேவர்களிடம் சென்று சேர்ந்தான். இதன் பின், சுக்ராச்சரியாரின் சாபத்தால் மது அருந்துபவர்கள் அவர் பட்ட கஷ்டம் போலவே அனுபவிப்பார்கள். சுக்ராச்சாரியாரின் உதிரத்தில் உயிர்பித்ததால், கசன் தேவயானிக்கு சகோதரன் முறை ஆகிவிட்டான். எனவே அவனை விடுத்து யயாதி என்ற மன்னனை மணமுடித்தாள் தேவயானி. இந்த யயாதியே பாண்டவர் / கௌவரவர்களுக்கு முன்னோடி ஆவான். https://solvanam.com/2024/12/22/பல்லாயிரம்-ஆண்டுகளுக்கு/
  8. உண்மை ஏராளன் அமெரிக்கன் தாத்தா முன்னாள் MPக்களுக்கு எதற்காக ஓய்வு ஊதியம் கொடுக்க வேண்டும் அவர்களும் சாகும் வரை காலாட்டிக் கொண்டு இருந்து மக்களை மேலும் மேலும் ஏமாற்றவா ? அவர்கள் செய்த தொழில் சார்ந்த ஒய்வு ஊதியம் கிடைப்பதே அவர்களுக்கு ஒரு வரம்.
  9. இந்த தொந்தரவு வேணாம் என்றுதான் அநேகர்லண்டனில் இருந்து சென்னை போய் காலையில் இறங்கி அப்படியே பலாலி 1 மணி நேரத்தில் யாழில் மதியம் சாப்பட்டுக்கு வீட்டில் நிக்கினம் என்ன 2௦ கிலோ நிறைக்கு மேல் கொண்டு போக முடியாது அவசர பிரியர்களுக்கு இந்த ரூட் மிகவும் வசதியானது . அல்லது சென்னையில் இறங்கி ஆசுவாசமாய் சொப்பிங் பண்ணி 9௦கிலோ வுக்கு நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு கப்பல் போய் வருகிறது நாலு மணி நேர பயணமே ஒரு வழி பாதை நேரத்துக்கு ஆகுது . a9 ல் இரவிரவாய் 8௦மைல் வேகத்தில் மாவா போதை பாக்கு போட்டு ஓடும் சாகச வாகன ஓட்டிகளின் தொல்லை வேண்டாம் .
  10. யாருக்கும் தொண்டர்களா அல்லது ரசிகர்களா என்ற குழப்பம் வராமல் இருந்தால் சந்தோசமுங்கோ 😜
  11. ஜீவனின் கமரா பாலுமகேந்திராவை நினைவூட்டும்…..! September 11, 2025 — அழகு குணசீலன் — புலம்பெயர்ந்த தேசங்களில் பலர் இயற்கை மரணத்தை தழுவியிருக்கிறார்கள். ஆனால் ஒரு பல்துறை ஆர்வலனாக ஜீவனின் மரணம் பெற்றிருக்கின்ற ஈர்ப்பு அதிகமானது. அதிசயிக்கத்தக்கது. புலம்பெயர்ந்த தேசங்களையும் கடந்து, இலங்கை, இந்தியா, சிங்கப்பூரிலும் ஜீவன் தனது கலைப்பயணத்தின் ஊடாகப் பேசப்படுகிறார். இதற்கு என்ன காரணம்? ஜீவன் ஒரு முன்னாள் ஈழப்போராளி. ஒரு ஊடகவியலாளர். ஒலி, ஒளி பரப்பாளர், படப்பிடிப்பாளர். நாடக, குறுந்திரை தயாரிப்பாளர். சிறந்த தொடர்பாளர். கட்டுரையாளர், பேச்சாளர், விமர்சகர். சினிமாவிலும் தேர்ச்சி பெற்ற பல்துறை ஆற்றல் கொண்டவர். இவற்றின் பிரதிபலிப்பாக மரணித்தும், மறக்காத நினைவுகளோடு பலரும் அவருடனான நினைவுகளை இரைமீட்கின்றனர். எனக்கும் ஜீவனுக்குமான முதல் சந்திப்பு எப்போது, எங்கு ஏற்பட்டது என்பதை என்னால் உறுதியாக சொல்லமுடியவில்லை. எனது நினைவு சரியென்றால் 1990 நடுப்பகுதியில் சூரிச்சில் இடம்பெற்ற இரு கவிதை நூல்களின் விமர்சன நிகழ்வு என்று நினைக்கிறேன். சுவிஸ் ரவியின் “செட்டை கழற்றிய நாங்கள்”, மற்றும் காத்தான்குடி என்.ஆத்மாவின் “அதிகாலை நீல இருள்” கவிதை நூல்கள் அவை. அந்த நிகழ்வுதான் சுவிஸில் நான் கலந்து கொண்ட முதலாவது கலை, இலக்கிய நிகழ்வு. ஜீவனின், போராட்ட பின்னணி, கலை, இலக்கிய ஆர்வம், அப்போது மாற்றுக்கருத்தாளர்கள் ஒன்று கூடுவதற்கான சந்தர்ப்பம் என்பனவற்றின் அடிப்படையில் இதனை குறிப்பிடுகிறேன். அதற்கு பின்னர் பல்வேறு கலை இலக்கிய நிகழ்வுகள், அரசியல் கலந்துரையாடல்களில் இந்த உறவு தொடர்ந்தது. எங்களை ஜீவனுடன் நெருக்கமாக பிணைத்த சில விடயங்களை குறிப்பிட்டால், அவற்றினூடாக அவரின் பங்களிப்பை அறிந்து கொள்ள முடியும். தமிழ் ஏடு பத்திரிகை, லண்டன் ரி.பி.சி.வானொலி, பாரிஸ் ரி.ஆர்.ரி வானொலி, தொலைக்காட்சி என்பன அவற்றுள் சில. மேலும் “FLUCHT” அமைப்பினால் நடாத்தப்பட்ட சிறார்களுக்கான ஓவியப்போட்டி, ஜீவனின் குறும்படங்கள் போன்ற வற்றையும் குறிப்பிடலாம். (FLUCHT: ஜேர்மன் மொழியில் அகதியாதல், தப்பித்த்தல் என்ற அர்த்தத்தைக் கொண்டது) ஓவியப்போட்டிக்கு பிரதான நடுவராக ஈரான் நாட்டைச் சேர்ந்த ஓவியர் ஒருவரை அழைத்திருந்தோம். மற்றைய இரு நடுவர்களுள் ஓவியக்கலை அழகியலில் ஈடுபாடு கொண்ட ஜீவனும் ஒருவர் என்று நினைக்கிறேன். எனினும் எனக்கு நிச்சயமாக குறிப்பிட முடியாதுள்ளது. அன்றைய சூழலில் மாற்று சினிமா, மாற்று மொழி சினிமா குறித்த சிறந்த விமர்சகர்களாக ஐரோப்பாவில் இருந்த சில தமிழர்களுள் ஜீவனும் ஒருவர். அச்சுறுத்தல்களுக்கும், ஜனநாயகத்திற்கு முரணான கருத்துச்சுதந்திர தடைகளுக்கும் மத்தியிலும் ‘பரம்’ என்று அறியப்பட்ட பாலசுப்பிரமணியத்தை ஆசிரியராகக் கொண்ட ‘தமிழ்ஏடு’ பத்திரிகையில் சினிமா விமர்சனம், அறிமுக கட்டுரைகளை ஜீவன் தொடர்ந்து எழுதினார். அப்போது தமிழ் ஏட்டில் என்னால் அரசியல் விமர்சனக்கட்டுரைகள் எழுதப்பட்டன. பண்டமாற்று போன்று இருவரும் ஒருவருக்கொருவர் எங்களுக்குள் விமர்சனங்களைச் செய்து கொள்வோம். நான் எழுதி, ஜெயந்தி மாலாவின் குரலில், ராம் ராஜ்ஜின் ரி.பி.சி. வானொலியில் ஒலிபரப்பப்பட்ட “பூகோளம்” நிகழ்ச்சி நிறைவுறும் போது எங்கள் வீட்டு தொலைபேசி அலறும். அந்த அழைப்பில் வருபவர்களுள் ஜீவன் முதன்மையானவர். அவர் நிகழ்சி குறித்த கருத்துக்களை சூடு ஆறுமுன் சொல்லுவார். ஜீவன் மூன்று குறும்படங்களையும் போட்டிக்கு தயாரித்தார். ‘எச்சில் போர்வை’, ‘நிழல் யுத்தம்’ என்பன இவற்றில் குறிப்பிடத்தக்கவை. இவை பரிசுகளையும் பெற்றுக்கொண்டன. ஜீவனை ஒரு அழகியல் கலைஞன் என்றும் குறிப்பிடலாம். காட்சிகளை அவர் படமாக்கும் விதம் அற்புதமானது. அவை வெறும், காட்சிகளோ, படங்களோ அல்ல. மனித எண்ணங்களை பிரதிபலிக்கின்ற – பார்வையாளர்களோடு நேரடியாக பேசுகின்ற கைவண்ணங்கள். அதனால்தான் ஜீவனின் கமரா மொழி பாலுமகேந்திரா பாணி என்று குறிப்பிட்டேன். ஜீவன் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய தலைசிறந்த கமராக்கலைஞன். இந்தப் பண்புகளை சிங்கப்பூரில் அவரே குறிப்பிடுகின்ற கோபாலு அண்ணர் முதல் பாலச்சந்தர் -பாலுமகேந்திராவின் அனுபவங்கள் வரை பெற்று தன்னை புடம்போட்டுக்கொண்டு சிறந்த கமராக்கலைஞனாக உயர்ந்தவர். பாரிஸ் ரி.ஆர்.ரி. தொலைக்காட்சியில் பிலிப் தேவா தயாரித்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றிலும் ஜயந்தியும், நானும் பங்களிப்பு செய்தோம். எங்கள் கதைக்கும், குரலுக்குமான காட்சியை படமாக்குவதில் ஜீவனின் கமரா மிகவும் அற்புமாக பேசியது. சுமார் 25- 30 ஆண்டுகளுக்கு முன்னரான ஒப்பீட்டளவில் இன்றையதை விடவும் தொழில்நுட்ப வசதிகள் குறைந்த அந்த காலத்தில் ஜீவனின் கைவரிசை குறைத்து மதிப்பிட முடியாத ஒன்று. தமிழ், ஆங்கிலம், சிங்களம் பின்னர் டொச் மொழியிலும் புலமை பெற்றிருந்த ஜீவன் தனது உறவுகளை தமிழ்பரப்புக்கும் அப்பால் விரிவுபடுத்தியது வியப்புக்குரியதல்ல. அவர் எண்ணற்ற நண்பர்களை கொண்டிருந்தார். அவரது சிங்கள மொழியாற்றல், செய்தித்தொகுப்பு, ஊடக நுணுக்கங்கள் ஊடாக தமிழ்மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அமைப்பினரால் 1980 களில் நடாத்தப்பட்ட “தமிழ் ஈழத்தின் குரல்” வானொலியில் செய்தி தொகுப்பாளராகவும், வாசிப்பவராகவும் இருந்தார். சிங்கள மக்கள் மத்தியில் ஈழப்போராட்டத்தை முன்கொண்டு செல்வதற்கும், முற்போக்கு சக்திகளை ஒன்றிணைப்பதற்கும் இந்த பணி உதவியது. இலங்கையின் இருதயம் என்று கருதப்படுகின்ற குருநாகல் மாவட்டத்தில் “புளொட்” அமைப்பு நடாத்திய நிக்கவரெட்டிய வங்கிக்கொள்ளையிலும் ஜீவன் பங்கேற்றார் என்று கூறப்படுகிறது. ஆனால் இன்று இயக்கத்திற்கு போனதால் தான் தனது வாழ்வு தொலைந்தது என்று கவலைப்படும், எல்லா இயக்கங்களினதும் ஆயிரக்கணக்கான அன்றைய இளைஞர்களுள் ஜீவனும் ஒருவர். இறுதியாக என்னால் ஏற்பாடு செய்யப்பட்ட “உதயம்” கிழக்கின் வருடாந்த ஒன்று கூடலுக்கான நடன நிகழ்வொன்றை அவரே ஏற்பாடு செய்தும் தந்திருந்தார். நாங்கள் அறிந்த வகையில் வீரகீர்த்தி தமிழ்ச்செல்வம் என்ற பிரசாத்/ ஜீவன்/ அஜீவன் இன, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். அந்த வகையில் எந்த மத நம்பிக்கையின் அடிப்படையிலான வார்த்தைகளையும் பயன்படுத்தி ஜீவனை மதங்களோடு கட்டிப்போட விரும்பவில்லை. அஞ்சலிகள் ஜீவன். https://arangamnews.com/?p=12315
  12. பாஸ்வேர்ட்டை மாத்தலாம் அல்லது கைத்தொலைபேசியில் (ஐபோன் ஆக இருந்தால் Passwords App) சேமிக்கப்பட்ட பாஸ்வேர்ட்டை பார்த்துக்கொள்ளலாம்😀
  13. நெருங்கிய ரெத்த உறவு ஊரில் தான் தனது கட்டை வேகனும் என்று ஊரில் அவரின் விருப்ப படி அமைதியாகி விட்டார் தவிர்க்க முடியாமல் ஊர் செல்ல வேண்டி வந்தது சாரமும் சைக்கிளுமாய் திரிய ஊரில் காண்பவர்களுக்கு குழப்பம் மற்றும் படி தமிழ்வின் எனக்கு பிடிக்காத செய்தி தளம் ஆரம்பத்தில் யாழில் தடை செய்யப்பட்ட செய்தி தளம் . சாரமும் சைக்கிளும் நிறைய அனுபவங்களை பெற்று தந்தது முக்கியமாய் ஒரு கரண்டி சீனி போட்டு பிளேன் டி கேட்டால் கட்டாயம் 7 கரண்டி சீனி யுடன் கறுப்பு தேநீர் வரும் அது பல இடங்களில் எழுதபடாத விதியாக கடை பிடித்தார்கள் . அங்கு செல்லும் கொடுப்பினை இம்முறை கிடைக்க வில்லை .
  14. பெருமாள் அவர்கள் நல்லூர்த் திருவிழாவுக்கு போய் இப்பதான் வந்திருக்கின்றார். 😂
  15. இன்னும் 7 மாசம்தான்…🤣 #பந்தயம் அதே நீதிதுறையைத்தான் டெல்லியில் பாஜக முதன்மை வக்கீலை வைத்து வளைத்து, தனது செல்வாக்கால் - பாலியல் வன்முறை, கட்டயா கருக்கலைப்பு வழக்கை, வெறும் மன்னிப்போடு முடித்து வைத்துள்ளார் சீமான். ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் கணவர். இன்றைய திமுகவின் அதிகார மையங்களில் ஒருவர், திரைமறைவு நகர்வுகளில் முதன்மை வகிபாகம் உள்ளவர். 👆சீமான் கேட்ட தொகையை கொடுக்க இயலாத அதிமுக, ஆனால் அதே தொகையை கொடுத்து ஆளை வாங்கி போட்ட திமுக. #வாடகை வாய்
  16. The HinduWomen’s World Cup 2025: Bengaluru venue dropped after sta...ICC announced revised Women’s World Cup 2025 schedule, with Navi Mumbai replacing Bengaluru’s Chinnaswamy after the stampede incident.ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டால் அங்கு போட்டிகளை நடத்த கர்நாடக மாநில அரசு அனுமதி மறுப்பு தெரிவித்தது. இதனால் பெங்களுரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற இருந்த மகளிர் உலக கோப்பை போட்டிகள் நவி மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டள்ளது. https://www.maalaimalar.com/news/sports/cricket/womens-world-cup-matches-moved-out-of-bengalurus-chinnaswamy-stadium-navi-mumbai-to-host-semi-final-final-785233
  17. பழிவாங்கும் தீ – அம்பை அஷ்ட வசுக்கள் அஷ்ட வசுக்கள் அவரவர் மனைவியுடன் மலைப்பிரதேசத்தில் மகிழ்வாக நேரம் கழித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது மகரிஷி வசிஷ்டரின் ஆசிரமத்தை கண்டனர். அந்த சமயத்தில் ரிஷி அங்கில்லை. ஆசிரமத்தின் அருகே தெய்வ பசு நந்தினி மேய்ந்து கொண்டிருந்ததைக் கண்டனர். அஷ்ட வசுக்களில் ஒருவர் அந்த பசுவின் தெய்வீக வடிவை கண்டு மயங்கி அதை புகழ்ந்து பேச துவங்கினார். அவரது மனைவியும் கருணை வடிவாய் இருந்த அந்த சாதுவான பசுவை பார்த்து மயங்கி அந்த பசுவை தங்களுடன் எடுத்த செல்ல விரும்பினார். ஆனால் மற்ற வசுக்கள் இதை எதிர்த்தனர். மனைவி விரும்பி கேட்டதால் அந்த ஒரு வசு மற்றவர்களை இதற்கு சம்மதிக்க வைத்து, நந்தினியை அங்கிருந்து கவர்ந்து சென்றனர். வசிஷ்டர், ஆசிரமத்துக்கு திரும்பிய பிறகு நந்தினியை இவர்கள் கடத்தி சென்றது அறிந்து கோபம் கொண்டார். வசுக்களை வரவழைத்து அவர்களை சபித்தார். “ நீங்கள் உங்கள் நிலைக்கு தகுதி இல்லாத செயலை செய்தீர்கள் ! எனவே நீங்கள் மனிதனாக பிறக்கவேண்டும் “ அவரது சாபம் கேட்டவுடன் அனைத்து வசுக்களும் பயந்து, நந்தினியை திரும்ப ஒப்படைத்து சாபத்தில் இருந்து விடுவிக்க கோரினர். ஒருமுறை சபித்தால் அதை மீண்டும் பெற இயலாது. இருந்தும், நந்தினி மீண்டும் வந்ததால் கோபம் தணிந்த வசிஷ்டர் ” அந்த ஒரு வசு மட்டுமே நந்தினியை திருட எண்ணியதால் , அவன் மட்டுமே மனிதனாக பிறந்து முழு வாழ்வும் வாழ்ந்து பின் இறப்பை சந்திக்க நேரிடும். மற்ற அனைவரும் பிறந்ததுமே சாபத்தில் இருந்து விடுபட்டு மீண்டும் வசுக்கள் ஆவீர்கள் ” என சாபத்தை மாற்றினார். இதன் பின், வசுக்கள் கங்கையை சென்று சந்தித்து, தங்களின் சாபத்தை பற்றிய விவரத்தைக் கூறி பூலோகத்தில், தங்களது தாயாக இருக்க வேண்டினார்கள். அவர்கள் மேல் கருணை கொண்ட கங்கையும் அதற்கு சம்மதித்தாள் . பூலோகத்திற்கு வந்து, சந்தனு ராஜாவை சந்தித்து அவரை மணந்துக் கொண்டாள். ஆனால் அதற்கு முன் , தான் செய்யும் எந்த செயலைப் பற்றியும் எந்த கேள்வியும் கேட்கக்கூடாது என்ற நிபந்தனை விதித்து அதற்கு அரசன் சம்மதத்தைப் பெற்றாள். முதல் ஏழு வசுக்கள் பிறந்த பொழுதும், பிறந்தவுடனேயே அவர்களை கங்கை நதியில் வீசி அவர்களுக்கு சாப விமோசனம் அளித்தாள் . ஏழு குழந்தைகளை அவள் கங்கையில் வீசிய பொழுதும் எதுவும் கேட்காத சந்தனு, அவள் எட்டாவது குழந்தையை வீச முயன்றபொழுது, அவளை தடுத்து அவளது செய்கைகளுக்குக் காரணம் கேட்டார். சந்தனுவிடம் தன் உண்மை தோற்றத்தை காட்டிய கங்கை, தனது செய்கைகளுக்கு உண்டான காரணத்தையும் விளக்கி கூறினாள். பின், ” நீ எனக்கு அளித்த சத்தியத்தை மீறியதால், இனி என்னால் உன்னுடன் வாழ இயலாது. இப்பொழுது இக்குழந்தையை என்னுடன் அழைத்து செல்கிறேன். உரிய காலம் வரும் நேரத்தில் அவன் உன்னிடம் வந்து சேர்வான் ” எனக் கூறி அக்குழந்தையுடன் அங்கிருந்து சென்றாள். அதன் பின், பதினாறு வருடங்கள் கழித்து அனைத்தும் கற்ற இளம் வாலிபனாய் அரசனிடம் திரும்பி வந்தது அக்குழந்தை. தேவவிரதன் என அழைக்கப்பட்ட அந்த இளைஞன், அனைவராலும் மதிக்கப்பட்டு, பயத்துடன் பார்க்கப்பட்டான் . அவன் அனைவருக்கும் கவலைப்பட்டு அனைவரையும் பார்த்துக் கொண்டாலும், மகிழ்ச்சி என்பதே வாழ்வு முழுவதும் அறியாமல் இருந்தான். பழிவாங்கும் தீ – அம்பை சத்யவதியின் மகன் விசித்திரவீர்யனுக்கு திருமண வயது வந்ததும் அவனுக்கு உரிய மணமகளை தேடும் வேலையை துவங்கினார் பீஷ்மர். அந்த சமயத்தில் , காசி ராஜனின் மகள்களான அம்பை, அம்பிகா மற்றும் அம்பாலிகாவிற்கு சுயம்வரம் நடைபெற்றது. குணவதிகளும் அழகிகளுமான அவர்களை விசித்திரவீர்யனுக்கு திருமணம் செய்ய முடிவுசெய்தார் பீஷ்மர். சுயம்வரத்திற்கு சென்ற இவரை, இவரது நோக்கம் தெரியாமல் அங்கு வந்திருந்த மற்ற இளவரசர்கள் கிண்டல் செய்தனர். ஏற்கனவே பிரம்மச்சரிய விரதம் பூண்டவர் சுயம்வரத்திற்கு வந்ததால் இந்த கேலி நிகழ்ந்தது. இதனால் கோபம் அடைந்த பீஷ்மர் அவர்கள் அனைவரையும் சண்டைக்கு அழைத்தார். மிக எளிதாக எந்தவித கஷ்டமும் இன்றி அந்த இளவரசர்கள் அனைவரையும் தோற்கடித்து, மூன்று இளவரசிகளையும் அங்கிருந்து அழைத்து சென்றார். அம்பை, ஸுபால ராஜன் சால்வனை விரும்பியதையும், சுயம்வரத்தில் அவனுக்கு மாலையிட விரும்பியதையும் பீஷ்மர் அறியவில்லை. அஸ்தினாபுரம் திரும்பும் வழியில் , சால்வன் இவரை வழிமறித்து போருக்கு அழைத்து தோல்வியடைந்தான். அஸ்தினாபுரம் வந்தபின்பே, அம்பை , தனது மனதில் இருப்பதை பீஷ்மரிடம் கூறினார். தான் தவறு செய்ததை உணர்ந்த பீஷ்மர், தக்க பாதுகாப்புடன் அவளை சால்வன் இருக்குமிடத்திற்கு அனுப்பி வைத்தார். ஆனால் சால்வனோ, பலர் பார்க்க பீஷ்மர் என்னை தோற்கடித்தார். எனவே என்னால் உன்னை திருமணம் செய்ய இயலாது என கூறினான். இதனால் மனம் உடைந்த அம்பை, கோபத்துடன் மீண்டும் பீஷ்மரிடம் திரும்பி வந்து, நடந்ததை கூற, அவர் விசித்திரவீரியனிடம் அம்பையை திருமணம் செய்யக் கூறினார். அவனோ, மனதில் வேறொரு ஆணை நேசிக்கும் பெண்ணை தான் திருமணம் செய்ய இயலாது எனக் கூறி மறுத்துவிட்டான். மீண்டும் சிலகாலம் கழித்து சால்வன் மனம் மாறியிருப்பான் என எண்ணி , அம்பையை அங்கே அனுப்ப, அவன் மீண்டும் மறுத்துவிட்டான். இதனால் கடுங்கோபம் கொண்ட அம்பை, நீங்கள்தான் இந்த நிலைக்கு காரணம் எனவே நீங்களே என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என பீஷ்மரிடம் சண்டையிட்டாள். ஆனால், ஏற்கனவே பிரம்மச்சரிய விரதம் பூண்டதால் பீஷ்மர் அவளைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். தனது வலிக்கும் வாழ்வின் பிரச்சனைக்கும் பீஷ்மர் மட்டுமே காரணம் என எண்ணிய அம்பை அவரை அழிக்க சபதம் பூண்டாள். சுப்ரமணியரை நோக்கி தவம் இருந்து, என்றும் வாடாத தாமரை மாலையை வரமாகப் பெற்றாள். அந்த மாலையை அணிந்தவர் பீஷ்மரை அழிக்க இயலும் என்பதே வரமாகும். அந்த மாலையுடன் வலிமை மிகுந்த பல அரசர்களிடம் சென்று பீஷ்மரை தோற்கடிக்க உதவிக் கோரினாள். ஆனால் பீஷ்மரை பகைத்துக் கொள்ள எவரும் விரும்பாததால் அனைவரும் மறுத்துவிட, அம்பை துருபதனிடம் சென்றாள். துருபதனும் மறுத்துவிட, அவனின் அரண்மனை வாசலில் தாமரை மாலையை தொங்கவிட்டு காட்டுக்கு சென்றாள் அம்பை. அங்கே இருந்த சில முனிவர்கள் அவளை பரசுராமரை அணுகுமாறு கூற, பரசுராமரிடம் சென்றாள். முதலில் சால்வனிடம் பேசி அவளை திருமணம் செய்துகொள்வதாய் அவர் கூற, இனி தன் வாழ்வில் இல்லறத்திற்கு இடம் இல்லையென்றும், பழி வாங்குவது மட்டுமே தன் லட்சியம் என அவள் மறுத்துவிட , பீஷ்மரை போருக்கு அழைத்தார் பரசுராமர். நீண்ட நாட்கள் இருவருக்கும் வெற்றி தோல்வி இன்றி சண்டை நீடிக்க, இறுதியில் தன் தோல்வியை ஒத்துக்கொண்டு அங்கிருந்து விலகினார் பரசுராமர். இதனால், மனம் உடைந்த அம்பை மீண்டும் சிவனை நோக்கி கடுமையான தவமிருக்க துவங்கினாள். இறுதியில் அவள் தவத்தை மெச்சி காட்சியளித்த சிவன், அடுத்த பிறவியில் அவள் பீஷ்மரை கொல்ல முடியும் என வரமளித்தார். இதனை கேட்டவுடன், தீ மூட்டி, அதில் இறங்கினாள் அம்பை. அடுத்த பிறவியில் துருபதனின் மகளாக பிறந்தாள் . சிறு வயதிலேயே அம்பை முன்பு வாயிலில் தொங்க விட்டு சென்ற தாமரை மாலையை எடுத்து அணிந்து கொண்டாள் . இதை அறிந்த துருபதன், பீஷ்மரின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்க, அவளை காட்டிற்கு அனுப்பி வைத்தார். காட்டில் போர்கலைகளை கற்றவள், அங்கிருந்த யட்சனின் உதவியுடன் ஆணாக சிகண்டியாக மாறினாள். மகாபாரத யுத்தத்தில் சிகண்டி பெண்ணாக பிறந்தவள் என அறிந்திருந்த பீஷ்மர் அவளை தாக்கவில்லை. பத்தாம் நாள், யுத்தத்தில், அர்ஜுனனுக்கு சாரதியாக கிருஷ்ணரின் இடத்தில் சிகண்டி இருக்க, அர்ஜுனன், சிகண்டி இருவருமே அவர் மேல் கணைகளை தொடுத்தனர். பிதாமகர், அர்ஜுனனின் அம்புகள் வலிமையாகவும் துன்புறுத்துவதாகவும் இருந்ததாகக் கூறினார். அவருடைய நீண்ட துன்பகரமான வாழ்வு அங்கு முடிவுக்கு வந்தது. பதிலுக்கு பதில்… துரோணரும், துருபதனும் அவர்களின் இளம் வயதில் ரிஷி பாரத்வாஜரின் குருகுலத்தில் பயின்றுவந்தனர். அப்பொழுது இருவரும் மிக நெருங்கிய தோழர்களாய் இருந்தனர். அந்த நேரத்தில், துருபதன் துரோணருக்கு ஒரு வாக்கு அளித்தார். அவர் நாட்டின் அரசராக ஆகும் பொழுது, அவரது சாம்ராஜ்யத்தின் பாதியை துரோணருக்கு அளிப்பதாக கூறினார். குருகுலம் முடிந்து இருவரும் பிரிந்தனர். துருபதன் நாளடைவில் பாஞ்சால நாட்டின் அரசன் ஆனான். துரோணர், கிருபரின் சகோதரி கிருபையை மணந்து அஸ்வத்தாமன் என்ற மகனை பெற்றார். உலகிலேயே சிறந்த வில்லாளி ஆக வேண்டும் என்ற ஆசையில் பரசுராமரிடம் மேலும் பயின்றார். வித்தையில் சிறந்தவராக இருந்தாலும், போதுமான வருமானம் இல்லாததால் மிக வறுமையில் சிக்கி தவித்தார் துரோணர். ஒருமுறை, அஸ்வத்தாமன் அவனது அம்மாவிடம், ” அம்மா என் நண்பன் பால் பருகியதாகக் கூறினான். பால் என்றால் என்ன ? ” என கேக்கும் அளவிற்கு அவர்கள் வறுமையில் இருந்தனர். இதனால் வேதனையுற்ற கிருபை துருபதனின் வாக்கை துரோணருக்கு நினைவூட்டி அவரிடம் சென்று உதவி கேக்க சொன்னாள். இளம்பிராயத்து நினைவுகளும் துருபதனுடன் கழித்த இன்பமான நினைவுகளும் மனதில் தோன்ற பாஞ்சாலத்திற்கு சென்றார் துரோணர். அங்கே அரசவையில் துருபதனை நண்பனாய் நினைத்து பேச, அதிகாரத்தில் இருப்பதால் அகந்தையில் துருபதன் துரோணரை பிச்சைகாரன் என்றும் அரசரை நேரடியாக சந்தித்து பேச அருகதை இல்லை என்றும் அவமதித்தான். இதனால் கோபம் கொண்ட துரோணர், இதற்கு பழி வாங்க உறுதி பூண்டார். சில காலம் கழித்து , துரோணர் குரு வம்சத்து ஆச்சாரியாராக ஆனார். குரு வம்ச இளவரசர்களின் குருகுல காலம் முடிந்ததும், அவர்களிடம் குரு தட்சணையாக துருபதனை பிடித்து வர சொன்னார். இளவரசர்கள் அவர்களின் முதல் போரை எண்ணி சந்தோசத்துடன் சென்றனர். முதலில் போருக்கு சென்ற கௌரவர்களை எளிதாக தோற்கடித்தான் துருபதன். அதன்பின், யுதிஷ்டிரன் இல்லாமல் சென்ற பாண்டவர்கள், துருபதனை எளிதில் வீழ்த்தினர். அர்ஜுனன் அப்பொழுதே தீர செயல்கள் செய்து தான் சிறந்த போர் வீரன் என நிரூபித்தான். எதற்காக இந்த யுத்தம் என புரியாமலே அவர்களிடம் கைதியானான் துருபதன். தன் மாணவர்களின் சாமர்த்தியத்தை கண்டும், தன் சபதம் நிறைவேறியதை கண்டும் துரோணர் மகிழ்ந்தார். பின் துருபதனை நோக்கி ” நீ என்னை பிச்சைக்காரன் என்று அழைத்தாயே நினைவிருக்கிறதா ? இன்று உனது ராஜ்ஜியம் என்னிடம். இப்பொழுது, உன் உயிரை காப்பாற்றக் கூடியது என்று எதுவும் உன்னிடம் இல்லை. இப்பொழுது மற்ற பிச்சைக்காரர்கள் போன்றுதான் நீயும். உன்னை இப்பொழுதே கொன்றுவிட்டு உன் ராஜ்யத்தை நான் எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், எனக்கு உன் நட்பே மீண்டும் வேண்டும். அதனால், பாதி ராஜ்யத்தை திருப்பி அளிக்கிறேன் ” என்றார். தன் சபதம் நிறைவேறியதும் துரோணரின் கோபமும் தணிந்தது. ஆனால் அந்த சம்பவம் அப்படி நல்லபடியாக முடியவில்லை. துருபதனின் உள்ளிருந்த கோபம் வெளிப்படாமல் உள்ளுக்குள்ளே நீறு பூத்த நெருப்பாய் இருந்தது. அது பழி வாங்கத் துடிக்கும் , சண்டையிடவும் கொல்லவும் பிறந்த ஷத்ரிய வம்சத்தின் கோபம் அது. பிராமணரை கொல்லும் ஒரு மகனும், அர்ஜுனன் போன்ற ஒரு வீரனை மணக்கக் கூடிய மகளும் வேண்டும் என்று அப்பொழுதே மனதில் உறுதி கொண்டார். தன்னை கைது செய்து கொண்டுவந்தாலும் அர்ஜுனனின் வீரத்தை பாராட்டாமல் இருக்க இயலவில்லை அவரால். திருஷ்த்துட்யும்னன் , ஆச்சாரியார் துரோணரை கொன்றான், திரௌபதி அர்ஜுனனை மணந்து அதன் மூலம், பஞ்சபாண்டவர்களுக்கும் மனைவியானாள். https://solvanam.com/2025/01/26/பல்லாயிரம்-ஆண்டுகளுக்க-3/
  18. சிற்றின்பம் மற்றும் உணர்திறன் ஆங்கில மூலம் : யமுனா ஹர்ஷவர்தன் தமிழாக்கம் : கார்த்திக் அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி , அசுரர்களின் அரசனான வ்ரிஷபர்வாவின் மகளான சர்மிஷ்டையின் தோழி ஆவாள். ஒருநாள், அவர்கள் தோழியருடன் வனத்தில் இருந்த குளத்தில் விளையாடிக்கொண்டிருந்த பொழுது அடித்த காற்றில் அவர்களின் ஆடைகள் கலந்து விட்டன. தவறுதலாக , இளவரசி சர்மிஷ்டை , தேவயானியின் உடைகளை அணிந்துகொண்டாள். இதை கண்ட தேவயானி ஒரு சீடனின் மகள் எவ்வாறு குருவின் மகளின் ஆடைகளை அணியலாம் என விளையாட்டாக கேட்டாள். இதனால் கோபம் அடைந்த சர்மிஷ்டை , ” என் தந்தை அளிக்கும் பிச்சையில் வாழ்பவரின்மகள் தானே நீ ? “ என அவளை அவமானப்படுத்தினாள். தான் விளையாட்டாக சொன்னது வினையானதை எண்ணி அவளை சமாதானப்படுத்த தேவயானி செய்த முயற்சிகள் வீணாகின. மேலும் மேலும் கோபம் அடைந்த சர்மிஷ்டை ,தேவயானியை அறைந்து அங்கிருந்த நீரற்ற கிணற்றினுள் தள்ளி , அங்கிருந்து தனது மற்ற தோழியருடன் சென்று விட்டாள். சிறிது நேரம் கழித்து அப்பக்கம் வந்த யயாதி என்னும் மன்னன், தேவயானியின் குரல் கேட்டு அவளை கிணற்றிலிருந்து காப்பாற்றினான். ப்ராமண பெண், ஷத்ரிய வம்சத்தை சேர்ந்த ஒரு ஆணை மணப்பது என்பது வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இருந்தாலும், தனது வலது கரத்தை பிடித்து காப்பற்றியதால், தன்னை அவன் மணக்க வேண்டும் என தேவயானி வற்புறுத்த அவனும் அதற்கு இசைந்தான். தன் தந்தையிடம் பேசி திருமணத்திற்கு ஒப்புதலும் வாங்கினாள். அது மட்டுமில்லாது , சர்மிஷ்டை அவரை பிச்சைக்காரர் என கூறியது தவறு என்று கூறி அதை சரி செய்ய சர்மிஷ்டை , அவளது தோழியாக தன்னுடன் அனுப்பப்படவேண்டும் எனவும் வாதாடினாள். சுக்ராச்சாரியாரும், தனது சீடனும் அரசனும் ஆன வ்ரிஷபர்வாவிடம் இந்த கோரிக்கையை வைத்தார். என்ன நடந்தது என அறியாத அரசனும், குருவின் வார்த்தையை மீற முடியாத காரணத்தினால் இதற்கு இசைந்தான். நாட்கள் செல்ல செல்ல, சர்மிஷ்டையும், யயாதியும் நெருங்கி பழகத் துவங்கினர். தேவயானிக்கு தெரியாமல் ரகசியத் திருமணமும் செய்துகொண்டனர். ஒருநாள், அவர்களின் திருமணம் பற்றி தெரியவர, தேவயானி தன் தந்தையிடம் சென்று முறையிட்டாள். கோபம் கொண்ட சுக்ராச்சாரியாரும், அரசன் தனது இளமையை இழந்து உடனடியாய் முதுமை அடைவான் என சாபமிட்டார். இதனால், பயம் கொண்ட யயாதி, சாபத்தை திரும்பப் பெறுமாறு அவரிடம் கெஞ்சினான். என்ன இருந்தாலும் மருமகன் என்பதால், ” அரசனே ! சாபத்தை திரும்பப் பெற இயலாது என்றாலும் , உனது முதுமையை யாராவது பெற்றுக் கொள்ள சம்மதித்தால் , நீ அவர்களின் இளமையை அடையலாம்” என ஒரு விமோசனம் கூறினார். விரைவிலேயே முதுமை அடைந்த யயாதி, தொடர்ந்து ஆட்சி செய்தான், இருந்தாலும் அவனது உணர்வுகளை அவனால் கட்டுப்படுத்த இயலவில்லை. எனவே அவனது ஐந்து மகன்களை அழைத்து ஒவ்வொருவரிடமும் தனது முதுமையை பெற்றுக் கொள்ள கூறினான். மேலும் அதற்கு ஈடாக அவன் முதுமையை ஏற்போரை அரசனாக்குவதாகக் கூறினான். அனைவரும் அதற்கு மறுத்துவிட, அவனின் இளைய மகன் புரு , தந்தையின் முதுமையை ஏற்றுக் கொள்வதாகக் கூறினான். அதன் பின் , முதுமையை ஏற்ற புரு அரசனாக ஆட்சி புரிய, இளமையை அடைந்த யயாதி அனைத்து இன்பங்களையும் அனுபவித்தான். அது போதாதென்று குபேரபுரி சென்று அங்கும் இன்பம் அனுபவித்தான். இவ்வாறு பல வருடங்கள் சென்றபின் எத்தனை வருடம் எத்தனை விதமாய் இன்பம் அனுபவித்தாலும் இச்சைகளை திருப்தி செய்ய இயலாது என்பதை உணர்ந்தான். அதன் பின், தன் நாட்டிற்கு திரும்பியவன், புருவிற்கு இளமையை திரும்பி அளித்துவிட்டு , முதுமையை ஏற்று அரசாட்சி புரியத் துவங்கினான். அவனுக்குப் பின், புரு அரசபீடத்தை அடைந்தான். அவனின் வம்சத்தவர்களே மகாபாரதத்தின் முக்கிய பாத்திரங்கள் ஆவர். சாபக்காலத்தில் கிடைத்த வரம் அரசனாக பதவியேற்றப் பின் பாண்டு, பல்வேறு நாடுகளுக்கு திக்விஜயம் செய்து அந்நாடுகளை வென்று தன் சாம்ராஜ்யத்துடன் இணைத்துக் கொண்டார். பாண்டுவின் இந்த செயல், பீஷ்மரின் பொறுப்பை குறைத்ததுடன், பாரதவர்ஷம்* முழுவதும் குரு வம்சத்தின் வலிமையை பரப்பியது. தன் திக்விஜயம் முடிந்தபின் தன்னிரு மனைவிகளான குந்தி மற்றும் மாத்ரியுடன் வனப்பகுதிக்கு சென்று இனிமையாக பொழுதுபோக்கினான் பாண்டு. அளவற்ற சந்தோஷத்துடனும் மகிழ்ச்சியுடனும் தங்கள் நேரத்தை அங்கே செலவழித்தனர். ரிஷியின் சாபம் அதே காட்டில் ரிஷி ஒருவர் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். அவர் பெற்ற வரத்தின் காரணமாய் அவர் விரும்பிய வடிவு எடுக்கும் வல்லமை பெற்றவர். ஒருநாள் அவரும் அவர் மனைவியும் மானாக மாறி இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அப்பக்கம் வந்த பாண்டு மானைக் கண்டு அம்பெய்தினான். அவரது அம்பு பட்டு அந்த ரிஷி மரண காயம் அடைந்தார். அவர் அடிபட்டவுடன் அவரது மனைவியும் அவரும் மனித உருவை அடைந்தனர். பாண்டுவின் மேல் கோபம் கொண்ட ரிஷி ” பாண்டுவும், அவன் மனைவியுடன் சேரும் சமயத்தில் அவன் இறக்க நேரிடும்” என சாபம் அளித்தப் பின் இறந்து விட, சோகத்தால் தாக்கப்பட்ட அவரது மனைவியும் அங்கேயே இறந்துவிட்டார். இரண்டு அப்பாவிகளை கொன்றது அவன் மனதை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கியது. உடனே தன் மனைவிகளுடன் தங்கியிருந்த இடத்திற்கு வந்தவன், இருவரிடமும் நடந்ததை விவரித்தான். அதனால் அவன் பெற்ற சாபத்தை பற்றியும் கூறினான். இந்த சம்பவத்தால், ஆசைகள் நீங்கியவன் அதற்கு மேல் தொடர்ந்து ஆட்சி செய்ய விரும்பவில்லை. தூதுவனை அழைத்து நடந்ததை பீஷ்மருக்கும் நாட்டு மக்களுக்கும் விளக்குமாறு கூறியவன் , அவனுடன் தனது பரிவாரங்கள் மற்றும் அவனிடம் இருந்த நகைகள் முழுவதையும் குடுத்து அனுப்பினான். மாத்ரி மற்றும் குந்தியும் அவர்களிடம் இருந்த அரச உடைகளை கொடுத்தனுப்பி விட்டு சாதாரண உடைகளை அணிந்தனர். குந்தியின் வரம் அதன் பின் மூவரும் காட்டினுள் சாதாரண வாழ்க்கை வாழத் துவங்கினர். சிறிது காலத்திற்கு பின் , தனக்கு வாரிசு உண்டாக்க முடியாமல் போனது குறித்து பாண்டுவிற்கு வருத்தம் உண்டாகியது. இதை பற்றி அறிந்த குந்தி, அவள் கன்னிப் பெண்ணாக இருந்த பொழுது , மகரிஷி துர்வாசர் அவளுக்கு கூறிய புனித மந்திரங்களை பற்றி பாண்டுவிற்கு கூறினாள். எந்த கடவுளை நினைத்து சொல்கிறோமோ, அந்தக் கடவுளின் குணங்களுடன் கூடிய குழந்தையை அளிக்க வல்லது அம்மந்திரம். இதைக் கேட்டு மகிழ்ந்த பாண்டு, அந்த மந்திரங்கள் மூலம் குழந்தை பெற சம்மதம் கூறினான். முதலில் தர்ம தேவதையை வேண்டி, யுதிஷ்டிரரையும் , பின் வாயு தேவனை வேண்டி பீமனையும் பின் மழைக் கடவுளான இந்திரனை வேண்டி அர்ஜுனனையும் பெற்றாள். குந்தியிடம் இருந்து மந்திரங்களை கற்றுக் கொண்ட மாத்ரி மருத்துவக் கடவுளான அஸ்வினி தேவர்களை வேண்டி நகுல சகாதேவர்களை பெற்றெடுத்தாள். காட்டினுள் முனிவர்களின் கண்காணிப்பில் இளவரசர்கள் நன்கு வளர்ந்து வந்தனர். இளவரசர்களுக்குண்டான வாழ்வில்லை என்ற போதும் அங்கே மகிழ்ச்சிக்கு குறைவில்லை. ஆனால் அத்தகைய மகிழ்வான வாழ்வு எப்பொழுதும் நீடித்து இருப்பதில்லையே.. ஒரு நாள் மாத்ரியுடன் இருந்தபொழுது , அங்கிருந்த சுற்றுப்புறங்களும் காலமும் பாண்டுவை தூண்ட அவன் மாத்ரியை அணுகினான். சாபத்தின் விளைவாய் தன் உயிரையும் விட்டான். குந்தி வந்தவுடன், மாத்ரி நடந்ததை அவளுக்கு விளக்கி விட்டு, பாண்டுவின் இறப்பிற்கு தானும் ஒரு காரணம் என்று கூறி , அவனுடன் உடன்கட்டை ஏறிவிட்டாள். இளவரசர்கள் ஐவரையும் வளர்க்கும் பொறுப்பு குந்தியின் மேல் விழுந்தது. நீதிபதிக்கு வழங்கப்பட்ட நீதி ஒருமுறை , அரசரின் காவலர்கள் ஒரு திருட்டுக் குழுவை துரத்தி கொண்டு சென்றனர். அந்த திருடர்கள் காட்டிற்குள் புகுந்தனர். அங்கே மரத்தின் கீழே ஒரு முனிவர் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்ததை கண்டு அங்கே இருந்த அவரது ஆசிரமத்தில் தாங்கள் கொள்ளையடித்த பொருட்களை பாத்துக்க வைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். அவர்கள் சென்ற பின் அங்கே வந்த காவலர்கள், ரிஷியிடம் அந்த கொள்ளையர்களை பற்றி விசாரித்தனர். அப்பொழுதுதான் தியானத்தில் இருந்து எழுப்பப்பட்ட ரிஷிக்கு அங்கே நடந்த எந்த விஷயமும் தெரியவில்லை எனவே அவர்களின் கேள்விக்கு அவர் எந்த பதிலும் தரவில்லை. அதற்குள் அவர் ஆசிரமத்தை சோதனையிட்ட காவலர்கள் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் அங்கே பதுக்கி வைத்திருப்பதைக் கண்டு, கொள்ளைக் கூட்ட தலைவன்தான் ரிஷி வேடம் போட்டிருப்பதாக எண்ணி அவரை கைது செய்து அழைத்து சென்றனர். அரசனின் முன் விசாரணைக்கு இது வந்தபொழுது, அரசன் அந்த ரிஷியை கழுவில் ஏற்ற உத்தரவிட்டான். அதைத் தொடர்ந்து ரிஷி மாண்டவ்யர் கழுவில் ஏற்றப்பட்டார். ஆனாலும் அவரது தவ வலிமையால் உயிர் இழக்கவில்லை . இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மற்ற ரிஷிகள் அங்கு கூடத் துவங்கினர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மன்னனும் அங்கே விரைந்தான். அங்கே சென்ற பின் விஷயத்தை முழுவதும் அறிந்த மன்னன், தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு ரிஷியை கழுவில் இருந்து விடுவித்து மீண்டும் மன்னிப்புக் கேட்டான். மன்னன் மேல் எந்த கோபம் இல்லாத ரிஷியும் அவரை மன்னித்தார். ஏனெனில் மன்னனாக அவன் தன் கடமையை செய்ததாக அவர் கருதினார். ரிஷி, தனக்கு ஏன் இந்த நிலை வந்தது என அறிய விரும்பினார் , அதற்காக அவர் தர்மராஜனை காண சென்றார். ” நான் இது வரை எந்த உயிரினத்தையும் துன்புறுத்தியதில்லை. அப்படி இருக்க , இத்தகையதுன்பத்தை நான் அனுபவிக்க என்ன காரணம் ” ? என தர்மராஜனிடம் அவர் வினவினார். ” ரிஷிகளில் சிறந்தவரே ! நீங்கள் சிறுவனாக இருந்த பொழுது நிறைய பூச்சிகளையும் , புழுக்களையும் கொன்று மகிழ்ந்துள்ளீர்கள். அதன் விளைவே, நீங்கள் இந்த துன்பத்தை அனுபவிக்க நேர்ந்தது ! “ இதைக் கேட்டவுடன் மிக கோபம் கொண்ட ரிஷி ” ஓ தர்மராஜா ! அறியா வயதில் தெரியாமல் செய்த தவறுகளுக்கு இத்தகைய கொடிய தண்டனையா ? தர்மராஜனே , நீ தர்மத்தை அறிவாயோ ? நீ மீண்டும் பூமியில் பிறக்கவேண்டியவன் . எனவே மனித பிறவி எடு” என தர்மராஜனுக்கு சாபம் இட்டார். மேலும், அப்பொழுதில் இருந்து சிறு வயதில் சிறுவர்கள் அறியாமல் செய்யும் தவறுகள் கர்மப் பலனில் சேராது என்றும் கூறினார். ரிஷி மாண்டவ்யரின் சாபத்தின் விளைவாய், தர்மராஜா , வேத வ்யாஸருக்கும் அம்பாலிக்காவின் வேலைக்காரிக்கும் மகனாக பிறந்து ” விதுரன் ” என அறியப்பட்டார். திருதராஷ்டிரனின் அமைச்சராக இருந்த விதுரன், எல்லா காலத்திலும் தர்மத்தின் பக்கமே இருந்தார். பாஞ்சாலி அரசவையில்அவமானப்படுத்தும் பொழுது அதன் பின்விளைவுகளை அறிந்த விதுரர் , இளவரசர்களை கட்டுப்படுத்த திருதராஷ்டிரனிடம் கெஞ்சியும் பலனின்றி போனது !!! https://solvanam.com/2025/01/12/பல்லாயிரம்-ஆண்டுகளுக்க-2/
  19. எதிர்த்துப் போராடினாலே வாழ்வு எனகளமுனைக்கு வந்த சிவம் அண்ணர்! Vhg ஆகஸ்ட் 13, 2025 (-பசீர் காக்கா -) "ஒரு செய்தி நூறு வீதம் உண்மையானது என நீங்கள் நம்பும் வரையில் அதனை ஊடகங்களுக்குச் செய்தியாகவோ கிசுகிசுப்பாகவோ தேவையற்ற சந்தேகங்களை உருவாக்கும் வகையிலோ வெளியிடக் கூடாது." இது தமிழ் ஊடகத்துறையில் ஜாம்பவானாகத் திகழ்ந்த எனது வழிகாட்டி கோபு ஐயா(எஸ் .எம் கோபாலரெத்தினம்) எனக்கு கற்பித்த பால பாடம். இதனைச் சொன்னால் பரபரப்புச் செய்தி அரசியல்தான் வடக்கில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரையே உருவாக்கி விட்டது.இதனையே நாமும் செய்வதில் என்ன தவறு? என இன்றைய youtube காரர்கள் கேட்கக்கூடும். இன்று வரை சிங்களவர்களுக்கு நிகராக இல்லாவிட்டாலும் வட கிழக்கில் தமிழர்கள் தமது உழைப்புக்கு கேற்றவகையில் பெறும் கூலி, காணி உரிமை,பாதுகாப்பு போன்ற விடயங்களில் இருந்து எட்டிய தூரத்திலேயே மலையகத் தமிழர்கள் இருக்கின்றார்கள். இவற்றைக் கருத்திற் கொண்டு சிவம் அண்ணரின் போராட்டப் பங்களிப்புக் குறித்து அவரது இறுதிச் சடங்கு முடியும் வரை அமைதி காப்பதே எமது கடமை என முடிவெடுத்தேன். பொதுவாக 1990 க்குப் பின் பங்களித்தவர்கள் தங்களது ஊகங்கள், சந்தேகங்களை உண்மையானவை என நிறுவ முயன்று வரலாற்றைத் திசைதிருப்ப முயல்கிறார்கள். அவர்களாவது பங்களித்தவர்கள் என்ற வகையில் விடலாமென்றால் போராடத் துணிச்சல் அற்று களத்திலிறங்கத் தயாரில்லாமல் தேவலோக வாழ்க்கை தேடித் திரிந்தவர்களும் சிவமண்ணரின் வரலாற்றில் குழப்பத்தை உருவாக்க முயல்கின்றார்கள். அதனால்தான் 78 ல் இயக்கத்தில் இணைந்து (76 அல்ல ) பின்னர் விலகிய பின் தனிப்பட்ட தகராறில் வெட்டிக் கொல்லப்பட்ட (சாவகச்சேரி பகுதியில் ) சிவம் என்பவரின் வரலாற்றுப் பெட்டியை சிவம் அண்ணர் என்ற போராட்ட இயந்திரத்தில் கொழுவ முனைகிறார்கள். அதேபோல சிவத்தான் என்ற பெயரில் மட்டக்களப்பு அணியிலிருந்து வடக்கில் கணிசமான பங்களிப்பை செய்த பின் கருணா அம்மானுடன் போனவரின் வரலாற்றை இதே இயந்திரத்தில் கொழுவ முனைகிறார்கள் 1990 பின் பங்களித்தவர்கள். தமிழரின் ஆயுதப் போராட்ட வரலாற்றில் தங்களது பங்களிப்பை செய்ய முனைந்தவர்களை அவதானித்தால் அவர்கள் பொதுவாக 17 வயது முடிந்த பின் போராட வேண்டுமென முடிவெடுத்திருப்பார்கள். தாம் எதிர்பார்த்த வகையில் எல்லாம் நடக்கவில்லை என்பதாலோ, வேறு பல்வேறு காரணங்களாலோ 33- 34 வயதில் போரா ட்டத்திலிருந்து விலகி விடுவார்கள். பின்னர் அவர்கள் சொந்த வாழ்க்கையில் கூடிய கவனமெடுப்பர். எங்கள் சிவமண்ணாவோ அந்த 34 வயதில் போராளியானவர். 1983 ல் இந்தியா வழங்கிய இரண்டாவது முகாமில் பயிற்சி பெற்றவர். 1977 ஆம் ஆண்டு இனக்கலவரத்தைக் தொடர்ந்து தமிழர் தாயகமே தமிழர்களுக்குப் பாதுகாப்பு என எண்ணி மலையகம் – பசறையிலிருந்து வடகிழக்குக்கு இடம் பெயர்ந்தோர்களில் இவரும் ஒருவர். இவர் குடியேறிய இடம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான புல்லுமலை. எப்போதுமே நாம் ஓடிக்கொண்டிருக்கமால் எதிர்த்து நின்று போராட வேண்டும் என்ற தீர்மானத்தை செயற்படுத்த அவர் தேர்ந்தெடுத்த இயக்கம் தான் தமிழீழ விடுதலைப்புலிகள். சிறையிலிருந்து தப்பிப்பது என்பது வேறு சிறையை உடைத்து அங்கிருந்து கைதியை விடுவிப்பது என்பது வேறு. வெலிக்கடைப் படுகொலையைத் தொடர்ந்து மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிர்மலாவை மீட்டெடுத்ததையே சிறையுடைப்பு என்று சொல்லலாம். 1.துவிச்சக்கர வண்டியில் சென்று மேற்கொள்ளப்பட்ட சிறையுடைப்பு என்ற நடவடிக்கை என்று உலகில் வேறுறெதனையையும் சுட்டிகாட்ட இயலாது. 2. இரண்டே இரண்டு கைத்துப்பாக்கிகளுடன் சென்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது. 3.மீட்கப்பட்டவரை துவிச்சக்கர வண்டியிலேயே கொண்டு சென்றமை என்ற வரலாறு இந்த நடவடிக்கைக்கு உண்டு. மட்டக்களப்பு சிறைக்குள் சென்ற நாலு போராளிகளில் ஒருவரான சிவமண்ணார் தனது பலத்தை திரட்டி காலாலேயே உதைத்து இக் கதவை உடைத்து நிர்மலா வெளியில் வர உதவினார். நிர்மலா எந்த அறையில் இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த போது தன்னை அடையாளம் காட்டும் வகையிலான நடவடிக்கையை நிர்மலா மேற்கொண்டார். இந் நடவடிக்கைக்காகத் திட்டமிடும்போது சிறைக்காவலருக்கான சீருடை அணிவதற்குப் பொருத்தமான உடற்கட்டுடையவராகவும், சிங்களம் தெரிந்தவராகவும் இருந்ததனால் இவரையே முதன்மையானவராக கொண்டு திட்டமிடப்பட்டது சிறைக் கதவைத் திறக்க முன்னர் அதிலுள்ள சிறு ஓட்டைவழியாக உள்ளிருந்து வெளியே பார்ப்பார்கள்.அவ்வேளை வேறு சிறையிலிருந்து கைதிகளைக் கொண்டு வருபவர் போல ஒருவர் தோற்றமளிக்க வேண்டும். தனக்கான பணியை இவர் மிடுக்குடன் மேற்கொண்டார். கதவு திறக்கும் வேளையில்தான் நிலைமையின் விபரீதத்தை புரிந்துகொண்டு கதவைமூட முயன்றனர் சிறைக்காவலர்கள்.எனினும் அந்த போராட்டத்திலும் சிவமண்ணன் தனது பங்கை காத்திரமாக வெளிப்படுத்தினார். இவ் வேளையில் தான் சிறையிலிருக்கும் நிர்மலாவை மீட்க்கத்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதை உணர்ந்த கடமையிலிருந்த பொறுப்பதிகாரி நிர்மலாவின் அறைக்கதவின் திறப்பை எடுத்துக்கொண்டு ஓடி ஒளிந்து கொண்டார். சிவமண்ணர் உட்பட உள்ளே சென்ற நால்வரும் உடனடியாக செயலில் இறங்கினர்.பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் அறிவிக்க எடுத்த முயற்சி முடியடிக்கப்பட்டது. தொடர்ந்து சிவமண்ணரின் உதையின் வேகம் ,பலம் என்பன வெளிப்பட காரியம் கை கூடியது. தொடர்ந்து பின்னாளில் நடைபெற்ற களுவாஞ்சிக்குடி மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலையத் தாக்குதல்களிலும் தனது காத்திரமான பங்களிப்பை வெளிப்படுத்தினார் சிவம் அண்ணர். மட்டக்களப்பு - அம்பாறைமாவட்டப் போராளிகள் இவர் மீது மிகவும் மதிப்பு வைத்திருந்தனர். தன்னை விட மிகக் குறைந்த வயதினையும் அனுபவத்தையும் உடைய போராளிகளையும் மதித்தே நடந்து கொண்டார். பல்வேறு துறை நடவடிக்கைகளிலும் இவர் பங்களித்தார் . வாழ்வில் எல்லோருக்கும் ஏற்றம் இறக்கம் உண்டுதானே. எக்காலத்திலும் திமிராகவோ, துவண்டுபோகாமலோ பணியாற்றியவர் என்றால் இவரையே உதாரணம் காட்டலாம் . பிற்காலத்தில் கோப்பாவெளி கிராமத்தில் வாழ்ந்த போது கிராம அபிவிருத்திச் சங்கம், ஆலய நிர்வாகம் போன்றவற்றில் தலைவராக விளங்கினார் என்றால் இவரது கடந்த கால வரலாறு பற்றி மக்கள் இவர் மீது கொண்ட பெரும் மதிப்புதான் காரணமாகும். தனது போராட்ட வரலாறு பற்றி இவர் வெளியில் சொல்லிக்கொள்வதில்லை. ஆனால் அவரின் பங்களிப்பு பல்வேறு துறைகளிலும் இருந்தது. என்பதை நாம் சுட்டிக் காட்ட வேண்டுமல்லவா? பெறுமதியான எடுத்துக் காட்டான வாழ்வல்லவா அவருடைய வரலாறு. https://www.battinatham.com/2025/08/blog-post_76.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.