Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33600
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    87986
    Posts
  3. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    11530
    Posts
  4. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    10206
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/26/25 in all areas

  1. கண்ணனும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணம்போல் வந்து நின்றாடுதே
  2. இந்தப் பாடலுக்காக ஒரு மாதத்துக்கு மேலாக பத்மினியும், வையேந்திமாலாவும் நடனப் பயிற்சி எடுத்துக் கொண்டதாக செய்தி இருக்கிறது. பாடலும், ஆடலும் நன்றாக அமைந்து ரசிகர்களை திரையரங்குக்கு இழுத்து வந்தாலும், இன்றுவரை பிரபலமாக இருப்பது, அந்த நடனத்துக்கு இடையில் பி.எஸ். வீரப்பாவின் குரலில் ஒலித்த, “சபாஸ் சரியான போட்டி” என்ற வசனம்தான்
  3. சிறுகதை சிறுகதை: வேம்பின் நிழல்போல... - ஶ்ரீரஞ்சனி - - ஶ்ரீரஞ்சனி - சிறுகதை 25 செப்டம்பர் 2025 * ஓவியம் - AI கூட்டங்கூட்டமாகநின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். ‘என்னையே இப்பிடி உலுக்கியிருக்கெண்டால் லக்கியாவின்ர குடும்பத்துக்கு எப்பிடியிருக்கும்?’ உள்ளங்கை வியர்த்துக்கொட்டுகிறது. பாடசாலைக்குள் காலடி எடுத்துவைத்தபோது, என் சப்பாத்துக்கள் போட்ட சத்தத்தைவிட என் இதயம் அதிக சத்தத்தில் அலறுகின்றது. யார், யார் என்னவெல்லாம் செய்வார்களோ என்ற பீதி கடந்துசெல்வோரை நிமிர்ந்து பார்க்கவிடாமல் என்னைத் தடுக்கிறது. “Instagram, twitter எண்டு எல்லாத்திலும் படம்போடுற, கருத்திடுற வேலை எல்லாத்தையும் நிப்பாட்டிப்போடு! ஆர் என்ன சொன்னாலும் சொல்லிப்போட்டுப் போகட்டும். பள்ளிக்கூடம் போறனா, வாறனா எண்டிருக்கவேணும். படிப்பைத்தவிர வேறையொண்டும் உன்ரை வேலையில்லை, விளங்கிச்சுத்தானே?” விடிந்ததிலிருந்து குறைந்தது ஐஞ்சு தடவையாவது அம்மா சொல்லியிருப்பா. ‘பீற்றரைப் பாத்தால், கொலைசெய்வான், அதுவும் துடிக்கத்துடிக்கக் கத்தியாலை வெட்டிக்கொலைசெய்வான் எண்டு சொல்லேலுமே?’ மீளமீள எனக்கு அதே நினைப்பாகவிருக்கிறது. இலக்கியாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகக் கூடியிருக்கிறோம். அவளின் படம் மேடையின் கரையில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பப் பாடசாலை graduation உடுப்பில், தடித்த உதடுகள் மெல்லப் பிரிந்த புன்சிரிப்பும், இரு தோள்களிலும் படர்ந்திருந்த சுருட்டைத் தலைமயிருமாக இலக்கியா மிக அழகாக இருக்கிறாள். “நேற்றுவரை எங்களோடை இருந்த லக்கியா இண்டைக்கு உயிரோடை இல்லை எண்ட செய்தி எங்கள் எல்லாரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கு. உங்கடை சக மாணவி ஒருத்தி கொடூரமாய்க் கொலைசெய்யப்பட்டிருக்கிறா. கோரமான இந்தச் செய்தி தரக்கூடிய மன அழுத்தத்தையும் சோகத்தையும் சமாளிக்கிறது லேசான விஷயமில்லை. இதைக் கடந்துசெல்கிறதுக்கு ஏதாவது உதவி தேவைப்படுறவை தயவுசெய்து எங்கட கவுன்சிலர் மிசிஸ். ஜோனோடை கதையுங்கோ. லக்கியான்ரையும் பீற்றரின்ரையும் குடும்பங்களுக்கு எங்கடை ஆழ்ந்த அனுதாபங்களைச் சொல்லுறதைத்தவிர வேறை என்னத்தைச் செய்யலாமெண்டு எங்களுக்கும் தெரியேல்லை. இப்பிடியான கோரச் செயல்களின் விளைவுகள் எங்கட முழுச் சமூகத்தையும் பாதிக்குது… உங்கட வெறுப்பை, கோபத்தை, ஏமாற்றத்தை எல்லாம் எப்பிடி ஆரோக்கியமான முறையில வெளிப்படுத்தலாமெண்டு நீங்க எல்லாரும் அறிஞ்சிருக்கிறது அவசியம்,” தாழ்ந்த குரலில் சொற்களிடையே இடைவெளி விட்டுவிட்டுப் பிரின்சிப்பல் பேசுகின்றார். அவரின் கண்களும் கலங்கியிருக்கின்றன. “லக்கியாவுக்கு நிகழ்ந்த சோகம் தங்களுக்கும் நிகழலாமோ எண்டு அஞ்சுறவை, அப்பிடி நிகழாமலிருக்கிறதுக்கு என்னெல்லாம் செய்யலாமெண்டு சொல்ற சில கையேடுகளை அலுவலகத்தின்ர முன்பக்கத்தில வைச்சிருக்கிறம். அப்படிப் பயப்படுகிறவையும் தயவுசெய்து என்னை வந்து சந்தியுங்கள்.” பிரின்சிப்பலுக்குப் பக்கத்தில் நின்றிருந்த மிசிஸ். ஜோன் தொடர்கிறார். அஞ்சலி முடிந்து வகுப்புக்கு அமைதியாய்போன எங்களைப் பார்த்து, “படிக்கிற மனநிலை இண்டைக்கு ஒருத்தருக்கும் இருக்காது. உங்கட கரிசனைகளைப் பற்றிக் கதைக்கிறதுக்கு ஆராவது விரும்பினா, என்னோடை கதைக்கலாம். அல்லது நாங்க லைபிரரிக்கும் போவம்,” என்கிறார் சயன்ஸ் ரீச்சர் மிஸ்ரர் ரைலர் ஆதரவானதொரு குரலில். இங்கிலிஸ் ரீச்சர் மிசிஸ் நிமாலும் லைபிரரிக்கே வருகிறா. பிறகு ஜிம்மிலை விளையாட்டுப்பாடத்தை முடித்துக்கொண்டு லஞ்சுக்குப் போகிறோம். “AIஇன்ர உதவியோடை எங்கட படங்களையும் உடுப்பில்லாமல் பண்ணித் தங்களுக்கை பகிர்ந்துகொள்ளுவினமோ எண்டு எனக்குப் பயமாய்க்கிடக்கு! இவங்க எவ்வளவு அருவருப்பான விஷயங்களைச் செய்யிறாங்க.” பக்கத்திலிருந்த கிரிஸ்ரினா குசுகுசுக்கிறாள். அவளின் தொண்டை கட்டிப்போயிருக்கிறது. “பீற்றருக்கு லக்கியாவிலை சரியான விருப்பமிருந்தது, அதாலை அவளுக்கு அவனைப் பிடிக்கேல்லை எண்டதை அவனாலை ஏற்றுக்கொள்ள முடியேல்லை. அதுதான் இத்தனை பிரச்சினை,” தலையைக் குனிந்தபடி சொல்கிறான் ஈதன். “அவை விரும்பினா, நாங்க சம்மதிக்கோணும், எங்களுக்கெண்டு விருப்பு வெறுப்பு ஒண்டுமில்லையெண்டு அவை நினைக்கினம்.” பெருமூச்செறிகிறாள் அக்சயா. “ஓம், ஆம்பிளையளுக்கு வாயிருக்கு, பொம்பிளையளுக்குக் காதுமட்டும்தானிருக்கு. என்னைத்தை அவை சொன்னாலும் நாங்க கேட்டுக்கொள்ள வேண்டியதுதான், திருப்பிக் கதைக்கக்கூடாது. கதைச்சால் எல்லாவகையாலும் எங்களைத் துன்புறுத்துவினம், பிறகு கொலையும்செய்வினம்” பல்லை நெருமுகிறாள் ஆர்த்தி. “வகுப்பிலை பீற்றர் இருக்கிறதே தெரியாது. இந்தப் பூனையும் பால்குடிக்குமோ எண்டமாதிரி அத்தனை அமைதியாய் இருந்தான்.” தலையை வலமும் இடமுமாக ஆட்டுகிறாள் திரேசா. “இனி அம்மா பார்க்கிலை விளையாடப்போறதுக்கும் விடமாட்டா.” கவினின் முகம் வாடிப்போயிருக்கிறது. “கேட்டவுடனை லக்கியாவின்ர அம்மா மயங்கிப்போனாவாம். பாவம் லக்கியா. பெரிய சிங்கரா வரவேணுமெண்டு கனவுகண்டவள். எனக்கிப்ப பீற்றரைக் கொல்லோணும் போலையிருக்கு!” மேசையில் முஷ்டியால் அடிக்கிறாள் மரியா. அவளின் கண்களிலிருந்து வடிந்தோடிய கண்ணீர் அவள் கன்னங்களை முழுமையாக நனைக்கிறது. “பீற்றரின்ர தாயும் தகப்பனும் ஆள் மாறிவந்திட்டியள், அவன் அப்பிடியான ஆள் இல்லையெண்டு பொலிஸ் காருக்குப் பின்னாலை ஓடினவையாம், பாவம் அதுகள், அதுகளுக்கு மகனைப் பற்றித் தெரியேல்லை,” அலெக்ஸ் சொல்ல, “ஓமோம், அவன் எங்கே செய்தவன், பிழையாய்த்தான் கைதுசெய்து போட்டினம்!” கோவமாக எள்ளல் செய்கிறாள் லீசா. எனக்கு என்னத்தைச் சொல்வதென்று தெரியவில்லை. பீற்றரின் அம்மாவும் அப்பாவும் தங்கைச்சியும் எனக்கு முன்னால் அழுதுகொண்டு நின்றிருப்பதுபோலவும், இலக்கியாவின் அம்மா தற்கொலை செய்வதற்கு முயற்சிப்பதுபோலவும் எனக்குப் பிரமையாக இருக்கிறது. கண்களைக் கண்ணீர் மறைக்கிறது. சாப்பாடு வயிற்றுக்குள் இறங்கமறுக்கிறது. லஞ்சுக்குப் பின் வகுப்புக்குப் போகிறோம், கவுன்சிலர் மிசிஸ். ஜோன் எங்களுக்காக அங்கு காத்திருக்கின்றா. “என்னோடை கதைக்க விரும்புறவை என்ர அலுவலகத்துக்கு வரலாமெண்டது உங்களுக்குத் தெரியும். இப்ப நான் சிலதைப் பொதுவாய்க் கதைக்கவிரும்புறன்,” குரலைச் செருமிக்கொண்ட அவ ஆரம்பிக்கின்றா. “உங்கட வகுப்பிலை இருந்த ஒரு மாணவி கோரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறாள், ஒரு மாணவன் அதற்காகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறான், இது ஜீரணிக்கமுடியாத பெரிய சோகம்... உங்களுக்குள்ளை பலவிதமான உணர்ச்சிகள் அலைமோதிக் கொண்டிருக்கும். அவை எதுவுமே தப்பானதில்லை. எங்களைக் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுறதுக்காக நாங்க எல்லோருமாய்ச் சேர்ந்து ஒரு மூச்சுப்பயிற்சி செய்துபாப்பமா? பாதங்களை நிலத்தில வைச்சிருந்தபடி, கதிரையில பின்னுக்குச் சாய்ந்து செளகரியமாக இருங்கோ. முதலில 1 2, 3, 4 என மனசுக்குள்ளை எண்ணினபடி ஆழமா மூச்செடுங்கோ. பிறகு 1 2, 3, 4 என மெதுவாக எண்ணிமுடிக்கும்வரைக்கும் மூச்சைப் பிடிச்சிருங்கோ. அதுக்குப் பிறகு 1 2, 3, 4 என மனசுக்குள்ளை சொல்லிக்கொண்டு மூச்சை மெதுவா வெளியேற்றுங்கோ. பிறகு 4 செக்கன் காத்திருந்திட்டுத் திரும்பவும் இப்பிடி மூன்று முறை செய்வம், சரியா?” மிசிஸ். ஜோனுடன் சேர்ந்து அப்படிச் செய்தபோது இதயம் படபடப்பது சற்றுக் குறைந்திருப்பதுபோல எனக்குத் தோன்றியது. “கொஞ்சம் ரிலாக்ஸாவிருக்கா? மன அழுத்தத்தை எப்போதாவது உணரும்போது இப்படிச் செய்துபாருங்கோ. 13 வயசு - கொஞ்சம் கஷ்டமான காலகட்டம்தான். தங்கியிருத்தலிலிருந்து விலகிச் சுயாதீனமா இருக்க முயற்சிக்கிற இந்தக் கட்டத்தில நிறையக் குழப்பங்கள் இருக்கும். அதோடை பருவமடைகிற காலம் இது, உங்கட உடம்பிலை சுரக்கிற ஓமோன்களின்ர தாக்கத்தையும் நீங்க சமாளிக்க வேண்டியிருக்கும். ஆரம்பப் பாடசாலை ஒன்றிலையிலிருந்து இந்த இடைநிலைப் பாடசாலைக்கு வந்திருக்கிறீங்க. உங்களில் சிலருக்கு நெருக்கமான ஒரு நட்பு இன்னும் கிடைக்காமலிருக்கலாம். தனிமையை, வெறுமையை நீங்க உணரக்கூடும். பாடங்கள் சிரமமானதாக இருக்கலாம். வீட்டில உங்களிட்டை எதிர்பாக்கிறதுகளை உங்களால செய்யமுடியாம இருக்கலாம். இந்த அழுத்தங்கள் எல்லாத்தையும் தாங்கிற சக்தி உங்களுக்கு இல்லாமலிருக்கலாம்... தயவுசெய்து உங்கட உணர்ச்சிகளைப் பற்றிப் பெற்றோரோடையோ, ஆசிரியர்களோடையோ அல்லது உங்களுக்கு நம்பிக்கையானவர்களோடையோ மனம்விட்டுக் கதையுங்கோ. என்ர கதவு உங்களுக்காக எப்பவும் திறந்திருக்கும். வார விடுமுறை கழிஞ்சு பாடசாலைக்குத் திரும்பிவரேக்கை எல்லாருக்கும் கொஞ்சமாவது அமைதி கிடைக்குமெண்டு எதிர்பாப்போம்.” மிசிஸ் ஜோன் போனதும், மீளவும் லைபிரரிக்குப் போகிறோம். பள்ளிக்கூடம் முடிந்ததும், பீற்றரின் வீட்டருகில் என்ன நிகழ்கின்றதென அறியும் ஆர்வத்தில் வழமையில் வீட்டுக்குப் போவதுபோல எங்களின் தெருவில் திரும்பாமல், அதற்கு முன்பாகவிருந்த தெருவில் திரும்புகிறேன். பின் அங்கிருந்து எங்களின் தெருவை நோக்கி நடக்கிறேன். எங்களின் தெருவின் தெற்குப் பக்கத்தில்தான் பீற்றரின் வீடிருந்தது. அவனின் வீட்டுக்கு அண்மையில் செல்லச்செல்ல என் உடல் நடுங்குகிறது, நெஞ்சடைக்கிறது. ஆனால், அவனின் வீட்டுக்கு வெளியில் எந்தச் சஞ்சாரமும் இருக்கவில்லை. அவனின் வீட்டைக் கடந்து எங்கள் வீட்டுக்கு எப்படிப் போனேன் என்றே தெரியவில்லை, கால்கள் தடுமாறுகின்றன. எங்களின் வீடு வழமைவிட அதிக நிசப்தமாக இருப்பதுபோலிருந்தது. எதைச் செய்யவும் எனக்குப் பிடிக்கவில்லை. சோபாவில் படுத்துக்கொள்கிறேன். மனம் எங்கெல்லாமோ அலைபாய்ந்துகொண்டிருக்கிறது. நேரம்போகப்போக மேலும் துக்கமாகவும், களைப்பாகவும், பசியாகவும் இருக்கிறது. குளிரூட்டியில் இருந்த பீசாவை மைக்கிரோவில் சூடாக்கியபடி instagramஐப் பார்ப்போமா என நினைத்தாலும், அதைப் பார்க்கப் பயமாகவும் இருக்கிறது. இந்தக் கொலையைப் பற்றி அதிலை என்னவெல்லாம் பேசிக்கொள்வார்களோ என்ற என் நினைவைத் தொலைபேசியின் ஒலி குழப்புகிறது. FB messangerஇல் லீசாதான் அழைக்கிறாள். “ஹாய் லீசா” மறுமுனையில் விசும்பல் ஒலி. “ஏய் லீசா, என்ன நடந்தது?” எனக்குள் ஆயிரம் கேள்விகள். “என்ர போனைப் பறிச்சுப்போட்டினம், சுவேதா. கொம்பியூட்டரும் இனி லிவ்ங் ரூமிலைதான் இருக்குமாம். லக்கியா பீற்றருக்குப் போட்ட கொமன்ற்ஸ் பற்றி எனக்குத் தெரியுமோ? அதைப் பற்றி நானும் ஏதேனும் எழுதினேனா? ஏன் அதுகளைப் பற்றி ரீச்சர்மாரிட்டை சொல்லேல்லை எண்டு ஒரே அறுவை.” “ஓ, சொறி லீசா. பீற்றர் ஒரு incel, அவனாலை கேர்ள்ஸ் ஐக் கவரமுடியாதெண்டு லக்கியா அவனை bully பண்ணேக்கை, நீரும் அதைப்பற்றி ஏதாவது எழுதினீரா?” “இல்லை, நான் ஒண்டும் எழுதேல்லே, ஆனா லக்கியான்ர கொமன்ற்றுக்கும், மற்றவை சொன்னதுகளுக்கும் லைக் போட்டனான். அதுதான் வீட்டிலை பெரிய பிரச்சினை” “இங்கையும் என்ன நடக்கப்போகுதோ தெரியாது. பீற்றரின்ர வீட்டுக்காரரைத் தெரியுமெண்டதாலை, நான் அதுக்கொரு கொமன்றும் எழுதேல்லை. ஆனா வேறை ஆக்களுக்கு என்னெல்லாம் எழுதியிருக்கிறன், எதையெல்லாம் லைக் பண்ணியிருக்கிறன் எண்டு பாக்கோணும். அம்மா வாறதுக்கிடையிலை எல்லாத்தையும் அழிச்சுப்போடோணும். சொறி, லீசா, உமக்கு அதுக்கெல்லாம் நேரமிருக்கேல்லை.” “இது பொலிஸ் கேஸ் எண்டதாலை என்ன பிரச்சினையெல்லாம் வருமோ தெரியாது எண்டு அப்பா பயப்படுத்துறார். என்ர Instagram எக்கவுண்டையும் அழிச்சுப்போட்டார். அத்தையோடை கதைக்கிறதுக்காண்டி FBஐ விட்டிருக்கினம். போன் இல்லாமல் எனக்கு ஒரே விசராயிருந்துது. ஆரோடையாவது கதைக்கோணும் போலையிருந்து... கடைக்குப் போனவை வருகினம்போலை இருக்கு, பிறகு கதைக்கிறன்.” ஒரு மணித்தியாலத்துக்குள் அப்பாவும் அம்மாவும் வந்திடுவார்கள். எனக்குப் பதற்றமாகவிருக்கிறது. ‘கையும் ஓடேல்லை, காலும் ஓடேல்லை’ என்று இந்த நிலையைத்தான் சொல்கிறவைபோலும். “சுவேதா, இதென்ன லஞ்சுக்குக் கொண்டுபோன சாப்பாடு அப்படியேயிருக்கு, Microwaveக்குள்ள பீசா கிடக்குது. நீ ஒண்டுமே சாப்பிடேல்லையே? கீழை வா!” வந்ததும் வராததுமாக அம்மா சத்தமாகக் கூப்பிடுகிறா. அப்பா மேலே வந்து என் அறைக்கு முன்னால் நிற்கிறார். “சுவேதா, என்ன செய்யிறாய்?" “ஒண்டுமில்ல, எனக்குத் தலையிடிக்குது" “சாப்பிடாட்டிலும் தலையிடிக்கும், வா, வந்து முதலிலை சாப்பிடு" போய்ப் பீசாவை எடுத்துக்கடிக்க ஆரம்பித்தபோது, “கொத்துரொட்டி வாங்கிக் கொண்டுவந்தனான். உதை வைச்சிட்டு அதைச் சாப்பிடு,” என்று அம்மா சொல்ல, அப்பா அதை எடுத்துக்கொண்டுவந்து தருகிறார். எனக்குப் பிடித்த சிக்கன் கொத்து. ஆனால் ரசித்துச் சாப்பிட முடியவில்லை. “சாப்பிட்டு முடி, உன்னோடை ஆறுதலாய்க் கதைக்கோணும்,” அம்மா சொல்ல என் மனம் குறுகுறுக்கத் தொடங்குகிறது. “சும்மா பீடிகை போடாம நேரடியாய்க் கேளும்,” என்ற அப்பா, அவரே ஆரம்பிக்கிறார். “வகுப்பிலை எல்லாருக்கும் பெரிய அதிர்ச்சியாயிருந்திருக்கும். பாவம் அந்தப் பிள்ளை லக்கியா! என்ன பாடுபட்டிருக்கும். நினைச்சுப்பாக்கவே முடியேல்லை. மனசுக்குப் பெரும் கஷ்டமாயிருக்கு. சமூக ஊடகமெண்டு ஒண்டு வந்ததும் வந்தது, அந்தக் காலத்திலை எங்களுக்கிருக்காத பிரச்சினைகளெல்லாம் உங்களுக்கு வந்திட்டுது.” சொல்லிமுடித்துவிட்டு என்னையே உற்றுப்பார்க்கிறார், அவர். “13 வயசிலை மூளை முழுசா வளர்றதில்லை. அதாலை சிந்திச்சுச் செயலாற்றுறது கஷ்டம்தான்... உனக்கு என்ன பிரச்சினை வந்தாலும் நாங்க இருக்கிறம் எண்டது உனக்குத் தெரியோணும், எங்களோடை நீ என்னத்தையும் கதைக்கலாம், என்ன?” என்கிறா அம்மா, உறுதிதரும் குரலில். ‘ம்ம், திட்டம்போட்டு நல்லாய்த்தான் கதைக்கினம். இப்பிடிக் கதைச்சால் நான் விட்ட பிழையெல்லாம் சொல்லுவன் எண்டு நினைக்கினம்போல, ஆனா சொன்னா என்ன நடக்குமெண்டு தெரியும்தானே,’ என்ர மூளை என்னை எச்சரிக்க, நான் எதுவுமே பேசாமலிருக்கிறேன். “இண்டைக்குக் கதைக்கிறது உனக்குக் கஷ்டமாயிருகெண்டா நாளைக்கு ஆறுதலாய்க் கதைப்பம்,” என்ற அம்மாவைத் தொடரவிடாமல், “லக்கியாவோடை எனக்குப் பழக்கமில்லை. பீற்றரோடையும் ஒரு நாளும் கதைச்சதில்லை. நடந்ததுகளைப் பற்றிக் கதைக்கோணுமெண்டால் கவுன்சிலரோடை கதைக்கலாமெண்டு பள்ளிக்கூடத்தில சொன்னவை,” இந்தக் கதை மீளவும் தொடராமல் இருப்பதற்காக அவசரப்படுகிறேன் நான். “எங்களோடை கதைக்கேலாதெண்டால். கவுன்சிலரோடையாவது கதை, என்ன? கதைப்பியோ?” என்ற அம்மாவைப் பார்த்து தலையை மேலும் கீழும் ஆட்டுகிறேன். பின்னர் என்னுடைய அறைக்குப் போன நான் படுக்கையில் விழுந்து குப்புறப் படுத்துக்கொள்கிறேன். அடக்கமுடியாமல் அழுகை அழுகையாக வருகிறது. கொஞ்ச நேரத்தில் அப்பாவும் அம்மாவும் பேசிக்கொள்வது கேட்கிறது. “நாங்களும் வேலையாலை பிந்தித்தான் வாறம். வீட்டிலை அவள் கதைக்கிறதுக்கும் ஒருத்தருமில்லை. சின்னப்பிள்ளையிலை நீந்துறதுக்கு, சொக்கர் விளையாடுறதுக்கு அதுக்கு இதுக்கெண்டு கூட்டிக்கொண்டுபோனமாதிரி கூட்டிக்கொண்டு போறதுக்கும் எங்களுக்கு இப்ப நேரமில்லை.” “தனியப் போய்வாற வயசு அவளுக்கு இப்ப வந்திட்டுத்தானே. அவளை பிஸியாக்கோணும், விருப்பமான புரோகிராம்களிலை சேத்துவிடோணும். அல்லது Instagram, twitter எண்டு நேரத்தைச் செலவழித்து வீண்பிரச்சினைகளைத்தான் விலைக்கு வாங்கினதாயிருக்கும்.” “ம்ம், வேலையாலை வந்து நீர் சமைக்காட்டிலும் பரவாயில்லை, அவளோடை மனம்விட்டுப் பேசப்பாரும். ஒன்றாய் நேரத்தைக் கழிக்கப்பாரும். தேவைப்பட்டால் சாப்பாட்டைக் கடையிலை வாங்குவம். சமூக வேலை அது இதெண்டு ஓடித்திரியிறதை நானும் குறைக்கிறன்.” “ஓமப்பா, நாங்க வேலையாலை வந்த களைப்பிலை, ‘வா சாப்பிடு’, ‘சாப்பாடு காணுமோ’, ‘homework செய்துபோட்டியோ’, ‘நேரமாகுது படு', எண்டு சும்மா பேருக்குக் கதைச்சால் என்ணெண்டு பிள்ளையள் மனம்விட்டுக் கதைக்கிறது. ஆறுதலாயிருந்து கதைச்சாத்தானே அதுகளும் கதைக்கலாம்.” “அவள் சின்னப்பிள்ளையாயிருக்கேக்கை நீர் அப்பிடிக் கதைச்சனீர்தானே. அப்ப அவள் உமக்கெல்லாம் சொல்லுறவள்தானே. திரும்பவும் அப்பிடியொரு ஐக்கியத்தை உருவாக்கப் பாருமப்பா. இந்த வயசிலை பிள்ளைகளுக்கு வாற உணர்ச்சிகளையும் ஆசைகளையும் நாங்க விளங்கிக்கொள்ள முயற்சிக்கோணும். மனம்விட்டுக் கதைக்கோணும். அப்பிடியில்லாம நெடுகப் பிழைகண்டுகொண்டிருந்தம் எண்டால் எங்களுக்கு ஒண்டும் தெரியவராது.” “ஓம், இதை நாங்க ஒரு wakeup call மாதிரி நினைக்கோணும், பிள்ளை வழிமாறினா, என்னத்தைச் சம்பாதிச்சும் பயனில்லை. இண்டைக்கு முழுக்க வேலையிலை எனக்கு இதே நினைப்பாய்த்தானிருந்துது? லக்கியாவின்ர பெற்றோரின்ர நிலையிலைருந்து யோசிச்சுப்பாருங்கோ, எப்பிடியிருக்கும்?” “ம்ம், பீற்றரின்ர குடும்பமும் பாவம்தான். அவையும் பிசியாக இருந்திட்டினம். இப்ப அவைக்கும் பெருங்கஷ்டமாயிருக்கும்.” “அவனுக்குச் சுயமதிப்பு இருக்கேல்லை. ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தத் தெரியேல்லை. போதாதற்கு எப்பிடிப் பழிவாங்குறது எண்டதைத்தானே ரீவி புரோகிறாம்களும் சினிமாவும் பிள்ளையளுக்குச் சொல்லிக்குடுக்குது. நாங்களும் பிஸியாயிருந்தால் யார் அதுகளுக்கு வழிகாட்டுறது?” அம்மா விசும்புவது கேட்கிறது. “பிள்ளையள் பாதுகாப்பாய் இருக்கோணுமெண்டு போனை வாங்கிக்குடுத்தால், இப்ப அதாலை வேறை பிரச்சினையாய்க்கிடக்கு… அந்தப் பிள்ளை எங்கை போய்வாறள் எண்டதையெல்லாம் கண்காணிச்சுத் திட்டமிட்டுக் கொலைசெய்யிறளவுக்கு மனசிலை அவன் வன்மத்தை வளத்திருக்கிறானே…” அப்பாவின் குரல் உடைகிறது. “சூழலின்ர பாதிப்பிலிருந்து எவ்வளவு தூரம் எங்களாலை பாதுகாக்க முடியுமெண்டு எனக்குத் தெரியேல்லை, எண்டாலும் எங்களாலை ஏலுமானதை நாங்க செய்யோணும்!” அம்மா நா தழுதழுக்கச் சொல்கின்றா. அம்மாவின் விசும்பலும் அப்பாவின் கரிசனையும் என்னையும் விம்மச்செய்கின்றது. படுக்கையில் புரண்டுபுரண்டு படுக்கிறேன். நித்திரைவருவது மாதிரித் தெரியவில்லை. இருந்தாலும், வருமென்ற நம்பிக்கையுடன் கண்களை மூடிக்கொள்கிறேன். :sri.vije@gmail.com https://www.geotamil.com/index.php/2021-02-11-18-01-46/9358-2025-09-25-03-40-32?fbclid=IwY2xjawNCrTBleHRuA2FlbQIxMABicmlkETE4bUZFQVBUZjFXZFpMQ2MxAR7ZjRHT7zB7w9ybArj_7I4QgNL7IuNIQlnO6X--cdmYJnMwQGdsYFwE1HgxNw_aem_vZ3_mns0u6NAPvg-Efbvnw
  4. பார்திபன் கனவு எங்கள் பார்திபனுக்கும் ஒரு கனவிருந்தது, அவன் மனதில் அனல் குடி இருந்தது. உறையூரான் கனவு சோழத்தை ஒட்டியது, எங்கள் ஊரெழுவான் கனவு ஈழத்தை பற்றியது. சோழப் பார்தீபன் கனவு வளர்த்தது வம்சத்தை, எங்கள் ஈழப் பார்தீபன் நகர்வு, சிதைத்தது பாரத வஞ்சத்தை. பழுவேட்டையர்கள் உடம்பு பல தழும்புகள் கொண்டதாம். போங்கடா போங்கள், எங்கள் பார்தீபன் உடம்பே தழும்பில்தான் இருந்தது. அவனுக்கு பொருத்தப் பட்டது ஆட்டு ஈரலாம். இருக்கட்டும், அவன் இதயம் வேங்கையினது. அவன் ஒரு சாரம் கட்டிய பொடியன். ஆனால், பாரதத்துக்கே காந்திய சாரம் புகட்டிய வலியன். மருத்துவனாய் வந்திருக்கவேண்டியவன், இனத்தின் ரணத்திற்கு தானே மருந்தாய் வந்தான். முடிவில் மருத்துவகல்விக்கு உடலை விருந்தாயும் தந்தான். தடை போடலாம் அவன் நிகழ்வுகளுக்கு, எம் மனதில் தினம் ஏந்தும் நினைவுகளுக்கு? பார்திபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான். அவன் கனவும் ..... —கோஷான்—
  5. 5- வகையான நெத்திலி மீன் வறுவல் செய்முறைகள்.. 1. சாதாரண கார நெத்திலி மீன் வறுவல் பொருட்கள்: நெத்திலி மீன் – 250 கிராம் மிளகாய் தூள் – 1½ டீஸ்பூன் மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு எண்ணெய் – வறுக்க செய்முறை: 1. மீனை சுத்தம் செய்து மசாலா, எலுமிச்சை சாறு சேர்த்து மேரினேட் செய்யவும். 2. 30 நிமிடம் ஊறவைக்கவும். 3. எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும். --- 2. மசாலா நெத்திலி மீன் வறுவல் பொருட்கள்: நெத்திலி மீன் – 250 கிராம் வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி – 1 இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன் கரம் மசாலா – ½ டீஸ்பூன் உப்பு – தேவைக்கு எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் செய்முறை: 1. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது வதக்கவும். 2. தக்காளி, மசாலா சேர்த்து வதக்கவும். 3. நெத்திலி மீன் சேர்த்து மெல்லிய தீயில் வதக்கவும். 4. குருமா போல் இல்லாமல் எண்ணெய் பிரியும் வரை வறுக்கவும். --- 3. கருவேப்பிலை நெத்திலி மீன் வறுவல் பொருட்கள்: நெத்திலி மீன் – 250 கிராம் பச்சை மிளகாய் – 3 வெங்காயம் – 1 கருவேப்பிலை – 1 கைப்பிடி மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் செய்முறை: 1. மிளகு, சீரகம், பச்சை மிளகாய், கருவேப்பிலை விழுது அரைக்கவும். 2. மீனை அதில் ஊறவைக்கவும். 3. வெங்காயம் வதக்கி, ஊறவைத்த மீன் சேர்த்து வறுக்கவும். 4. மணமிக்க கருவேப்பிலை நெத்திலி வறுவல் தயார். --- 4. குர்குரா நெத்திலி மீன் வறுவல் (Crispy) பொருட்கள்: நெத்திலி மீன் – 250 கிராம் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன் அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் கார்ன் பிளோர் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவைக்கு எண்ணெய் – ஆழ்வறுக்க செய்முறை: 1. மீனை மசாலா, அரிசி மாவு, கார்ன் பிளோருடன் கலக்கவும். 2. எண்ணெயில் ஆழ்வறுத்து மொறு மொறுப்பாக எடுத்துக்கொள்ளவும். 3. சூடாக சாப்பிட அருமை. --- 5. கொத்துமல்லி நெத்திலி மீன் வறுவல் பொருட்கள்: நெத்திலி மீன் – 250 கிராம் கொத்தமல்லி இலை – ½ கப் பச்சை மிளகாய் – 2 இஞ்சி – சிறிதளவு பூண்டு – 4 பல் எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு எண்ணெய் – வறுக்க செய்முறை: 1. கொத்தமல்லி, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு விழுது அரைக்கவும். 2. மீனை அதில் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து ஊறவைக்கவும். 3. எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும். 4. பச்சை மணம் மிக்க வறுவல் கிடைக்கும். தமிழ்நாடு ரெசிப்பீஸ்
  6. ராஜினி கொலையாளிகளை அம்பலப்படுத்திய பேரினவாதம்…! Vhg செப்டம்பர் 22, 2025 ராஜினி திராணகம அல்லது ராஜினி ராஜசிங்கம் திராணகம (பெப்ரவரி 23, 1954-செப்டம்பர் 21, 1989) இலங்கையில் இருந்த மனித உரிமை செயற்பாட்டாளரும் பெண் உரிமை செயற்பாட்டாளரும் ஆவார். ராஜினி இராஜசிங்கம் 1989ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர், கூடவே யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும். ராஜினி, வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணத்தின் தமிழ் கிறிஸ்தவக் குடும்பத்தில் பெப்ரவரி 23, 1954 இல் பிறந்தார். நிர்மலா, சுமதி, வாசுகி ஆகியோர் இவரின் சகோதரிகள் ஆவர். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்தில் முடித்துக் கொண்ட ராஜினி, 1973 இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் புலத்தில் இணைந்தார். அக்காலப்பகுதியில் மாணவர் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தார். இதன் போது அரசியல் ஈடுபாட்டைக் கொண்ட மாணவர் தலைவரான தயாபால திராணகமவை சந்தித்தார். தயாபால திராணகம பின்னாளில் களனிப் பல்கலைக்கழக விரிவுரையாளராக இணைந்து கொண்டார். 1977 இல் திராணகமவை ராஜினி மணந்து கொண்டார். அவர்களுக்கு நர்மதா (1978) ஷரிகா (1980) என இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். 1986 முதல் தயாபால திராணகம தலைமறைவாக இருக்கிறார். பட்டப்படிப்பின் பின்னர், 1978இல் பயிற்சி மருத்துவராக யாழ்ப்பாண மருத்துவமனையில் இணைந்தார். பயிற்சியின் பின்னர், 1979இல் இலங்கையின் மத்திய மலை நாட்டின் அப்புதளைக்கு அருகில் உள்ள அல்துமுல்லை என்ற இடத்தில் மருத்துவராகப் பணியாற்றினார். 1980 இல் ராஜினி போர் நிறைந்த நிலமான யாழ்ப்பாணம் திரும்பி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மருத்துவப் புலத்தில் உடற் கூறியல் விரிவுரையாளராக இணைந்தார். 1983 இல் பொதுநலவாய புலமைப் பரிசில் பெற்று உடற் கூறியலில் துறையில் பட்டப்பின் படிப்பை மேற்கொள்ள இங்கிலாந்து சென்றார். அங்கு சென்ற ராஜினி, 1982 இல் பயங்கரவாத தவிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைதாகிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரான தனது சகோதரி நிர்மலாவின் விடுதலைக்காக குரல் கொடுத்தார். 1982 இல் விடுதலைப் புலிகளின் உதவியுடன் சிறையில் இருந்து தப்பிய நிர்மலா இங்கிலாந்து வந்தார். இதன் பிறகு ராஜினி விடுதலைப் புலிகளோடு தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். ராஜினி விடுதலைப் புலிகளின் இங்கிலாந்து கிளையில் இணைந்து மனித உரிமை அமைப்புகளுக்கு இலங்கையின் நடப்புகளை வெளிப்படுத்தி வந்தார். 1986 இல் பட்டப்பின் படிப்பை முடித்து தனது இரண்டு குழந்தைகளுடன் இலங்கை திரும்பிய ராஜினி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற் கூறியல் பிரிவுத் தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில் கணித விரிவுரையாளராக பணியாற்றிய ராஜன் ஹூலுடனும், சிறிதரன், தயா சோமசுந்தரம் என்பவர்களுடன் இணைந்து 1990 இல் வெளியிடப்பட்ட முறிந்த பனை (The Broken Palmyra) என்ற ஆங்கில நூலை எழுதினார். இவர்கள் நால்வரும் இணைந்து 1988 இல் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை தொடங்கினர். செப்டம்பர் 21, 1989 அன்று பணியில் இருந்து வீடு திரும்பும் வழியில் அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். முறிந்த பனை நூலின் ஏனைய ஆசிரியர்களும் ராஜினியின் சகோதரி நிர்மலாவும் இக்கொலையை விடுதலைப் புலிகளே செய்ததாக குற்றம் சாட்டியிருந்தனர். ஆயினும் விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டு இந்திய படையினராலும் வரதராஜப் பெருமாளாலும் திட்டமிட்டுப் பரப்பட்டதாகவும் ராஜினியும் மற்றும் நான்குபேரும் இணைந்து வெளியிட்ட முறிந்தபனை ஆவணத்தில் இந்தியப் படைகளின் கொலைகள் சுட்டிக்காட்டப்பட்டதால் அவர்களில் ஒரு பிரிவினரும், ஈபிஆர்எல்எப் அமைப்பினரும் இணைந்து இந்தக் கொலையைச் செய்ததாகவும் அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை என்ற தொடரில் தினமுரசு ஆசிரியர் அற்புதன் குறிப்பிட்டுள்ளார். கார்த்திக்,தோமஸ் என்ற இரண்டு ஈபிஆர்எல்எப் உறுப்பினர்களே யாழ் மாவட்ட ஈபிஆர்எல்எப் பொறுப்பாளரின் உத்தரவின் பெயரில் அந்தக் கொலையை செய்ததாகவும் அதில் ஈடுபட்டவர்களில் ஒருவரான கார்த்திக் பின்னர் ஈபிடிபியில் இணைந்து செயற்பட்டதாகவும் அந்தத் தொடரில் தெரிவித்துள்ளார்.அற்புதன் ஈபிடிபி அமைப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு நாட்களும் தமிழ் தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் மீது சேறடிப்பதற்காக இச்சம்பவத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றது சிறிலங்கா சிங்கள பேரினவாத அரசு. பேரினவாதத்தின் ஏவலைத் தலைமேல் ஏற்று இயங்கும், “சொந்த நலன்களுக்காகவும், அற்பமான விருப்பு வெறுப்புகளுக்காகவும், குறுகிய பழிவாங்கல்களுக்காகவும் சேர்ந்த சிறு கும்பலொன்று ” அயர்ச்சி கொள்ளாமல், “ராஜினியை விடுதலைப் புலிகளே கொலை செய்தார்கள்” என்று ஒரு தலைமுறைக்கே பிரச்சாரம் செய்து வந்தது. ஆனால், இன்று இந்த சிறு கும்பலின் நவதூவாரங்களிலும் சுண்ணாம்பை வைத்து அடைத்தது போன்றதொரு வேலையைச் செய்துவிட்டது சிங்கள பேரினவாத அரசு. 1998 ஆம் ஆண்டில் வெளிவந்த தினமுரசு பத்திரிக்கை ஒன்றில் அற்புதன் என்பவர் , ராஜினி இராஜசிங்கத்தை இந்திய அமைதிப்படையும், ஈபிஆர்எல்எப் அமைப்பும் இணைந்து படுகொலை செய்ததை அம்பலப்படுத்தி எழுதிய, அந்தக் கட்டுரையை கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி வெளியான சிங்கள அரசின் அதிகாரபுர்வ பத்திரிகை, “சிலுமின”வில், 23 ஆம் பக்கத்தில் மொழிபெயர்த்து பிரசுரித்திருந்தார்கள். அதே பக்கத்தில் இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்ட சமயம், விடுதலைப் புலிகளின் தலைவர் யாழ் சுதுமலை அம்மன் கோயில் வளாகத்தில் ஆற்றிய உரை தொடர்பாகவும் ஒரு பதிவு எழுதப்பட்டிருக்கின்றது. பல வருடங்களுக்குப் பிறகு சிறிலங்கா அரசு இந்த விவகாரத்தை ஏன் கையில் எடுக்க வேண்டும்? அதைப் புரிந்து கொள்ள இக்கட்டுரை பிரசுரிக்கப்பட்ட காலப்பகுதியின் அரசியல் நிகழ்வுகளைப் படிக்க வேண்டும். கொழும்பு துறை முகத்தை இந்தியாவுக்கு கொடுப்பது தொடர்பான பிரச்சினை நடந்து கொண்டிருந்த காலம் அது. சனாதிபதி கோட்டபாய துறைமுகத்தை இந்தியாவுக்கு கொடுப்பதில் ஆர்வமாக இருந்தார். அரசாங்க தரப்பின் பிறிதொரு தரப்பு அதை எதிர்த்து கொண்டிருந்த து. குறிப்பாக மகிந்த இராசபக்சவே எதிராக நின்றார். எதிர்ப்புகள் காரணமாகத் திட்டத்தை கைவிட்டார் கோட்டபாய. பதிலடியாக இந்தியா கொடுத்திருந்த கடன் ஒன்றை உடனடியாக திருப்பி தா எனக் கேட்டது. இந்திய அழுத்தத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே மேற்படி கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருந்தது. பத்திரிக்கை நிர்வாகத்திற்கு மகிந்தவின் புதல்வர் ஒருவர் நேரடி அறிவுறுத்தல் கொடுத்திருக்கின்றார். இலங்கையுடனான இராசதந்திர உறவுகளில் இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால், சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் இந்திய விரோத உணர்வாகும். சிங்கள மக்களின் இந்த மனப்பான்மையை மாற்றி அமைப்பதற்காகப் பலத்த முயற்சி செய்து வருகின்றது இந்தியா. அதிலொன்றாக இந்திய மொழி திரைப்படங்கள், தொடர் நாடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முயல்கின்றது. இதற்காக இந்திய மொழித்திரைப்படங்களை சிங்கள உபதலைப்புகளுடன் இருவெட்டுகளில் தெரு தெருவாக விற்கப்படுகின்றது. இருவெட்டு தயாரிக்கும் வேலைகள் இந்தியத் தூதரகத்தின் அனுசரணையுடன் புறக்கோட்டை மற்றும் தெகிவளை பிரதேசங்களில் இயங்கும் இரண்டு தொழில் இடங்களில் நடந்து வருகின்றது. தொடர் நாடகங்கள் சிலவும் மொழிபெயர்க்கப்பட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்தியா இப்படி முயற்சிகள் செய்து வரும் நிலையில், தம் மீது அழுத்தங்களைக் கொடுத்தால் இந்திய விரோதத்தை மக்கள் மத்தியில் வளர்த்து விடுவோம் என்ற செய்தியைச் சொல்லவே மேற்படி கட்டுரைகளை அரச பத்திரிக்கையில் பிரசுரித்திருந்தார்கள். இதற்குப் பதிலடியாகத் தான், லொகானி எனும் சிங்கள பாடகியின் பாடல், இந்திய நடிகரும், இந்திய ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினரின் கணவருமான அமிதாப்பச்சன் மூலம் இந்தியாவில் பிரபலமாக்கப்பட்டது. இதனால் இந்தியா தொடர்பாகச் சிங்கள மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தில் ஒரு பாய்ச்சல் ஏற்பட்டதை யாரும் மறுக்க முடியாது. ஆனால்.... இந்தியாவுக்குச் சேதி சொல்லப் போய், நீண்டகாலம் பொத்தி வைத்துக் கொண்டிருந்த உண்மையை அவிழ்த்து விட்டு விட்டார்கள். மேற்படி கட்டுரையில் ராஜினி இராஜசிங்கம், இந்திய அமைதிப் படையின் கோரமுகங்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்த காரணத்தால், அவரை முடக்கும் நோக்கில் இந்திய அமைதிப் படையே ஈபிஆர்எல்எப் அமைப்பை ஏவி கொலை செய்தது என கூறப்படுகின்றது. அடுத்த கட்டுரையில் இந்திய -இலங்கை ஒப்பந்தம் என்ற பெயரில் விடுதலையை புலிகள் மற்றும் சிங்கள தரப்பின் விருப்பு இன்றி இந்திய அரசு தனது ஏதேசதிகாரத்தை நிலைநாட்டியது என்ற கருத்துச் சொல்லப்படுகின்றது. இந்த விடயத்தை அரச பத்திரிக்கை ஒன்றின் மூலம் அதுவும் இவ்வளவு காலம் கடந்து வெளியிடுவது இந்தியாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயல். உண்மை எவ்வளவு தாமதமாக வெளியே வந்தாலும் சுடும். ராஜினி இராஜசிங்கம் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பை உருவாக்கி இந்திய அமைதி படையினரின் அயோக்கிய செயல்களை வெளிப்படுத்தி வந்திருந்தார். மேலும், இது தொடர்பான விபரங்கள் அடங்கிய “முறிந்த பனை“ எனும் நூலை, ஆங்கில மொழியில் சக விரிவுரையாளர்களான தயா சோமசுந்தரம், ராஜன் ஊள், சிமாறிதரன் ஆகியோருடன் இணைந்து வெளியிட இருந்த தறுவாயில் படுகொலை செப்பப்பட்டிருந்தார். இந்நூலில் 1948 இல் மலையக தமிழர்களின் பிரசாவுரிமை பறிக்கப்பட்டதிலிருந்து சிங்கள பேரினவாத அரசு தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகள், 1987 இல் அமைதியை காக்கின்றோம் என்ற பெயரில் இந்தியப் படை தமிழ் பகுதிகளில் செய்த அட்டூழியங்கள் விவரமாக எழுதப்பட்டிருந்த து. குறிப்பாக இந்திய அமைதிப்படை யாழ் வைத்தியசாலையில் நடத்திய படுகொலைகள் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. பல்கலைக்கழக மட்டத்திலிருந்து இவ்வாறான விடயங்கள் ஆங்கில மொழியில் வெளிவருவது சர்வதேச கவனத்தைப் பெறும், அத்துடன் அமைதிப் படை என்ற பெயரில் இந்தியா செய்யும் கோரச் செயல்களை உலகின் முன் அம்பலப்படுத்தி விடும் என்ற பதற்றமே, ராஜினியின் படுகொலைக்குப் பிரதான காரணம் என்பதை, 22 வருடங்களுக்குப் பின்னர் சிறிலங்கா அரசே இன்று உறுதிப் படுத்தி இருக்கின்றது. தமிழ்ச் சூழலில் புதிதாக எழுத வருபவர்கள், முற்போக்கு , இடதுசாரி அரசியலில் காலடி எடுத்து வைக்கும் புதியவர்களை எல்லாம் அலேக்காக அள்ளிக் கொண்டு சென்று மூளைச் சலவை செய்ய இலக்கியம் - இடதுசாரியம் - முற்போக்கு அரசில் என இயங்கும் கும்பலொன்று இருக்கின்றது. இவர்களின் சூத்திரக் கயிறு சிறிலங்கா பேரினவாத அரசு என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவர்களுக்கு வழங்கப்பட்ட பணி நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மெல்ல மெல்லவோ, அல்லது எந்த நாடகம் போட்டே தமிழர்கள் சுயமரியாதை, அந்தஸ்துடன் வாழ்வதற்கான உரிமையைக் கோருவதை மடைமாற்றுவது. இந்த இடுபணியை செய்ய கையிலெடுத்திருக்கும் பிரதான ஆயுதம் விமர்சனம் என்ற பெயரில் புலிகள் மீதும் விடுதலைப் போராட்டத்தின் மீதும் அவதூறு பரப்பி வருவது. புதியவர்கள் இவர்களது வலையில் விழுவது தவிர்க்க இயலாத நிர்ப்பந்தம். ஏனெனில், இவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் மாப்பியத்தனத்தை மீறி இங்குத் தடம் பதிப்பது இலகுவான காரியம் அல்ல. ஒரு உதாரணம் இதை விளங்கப்படுத்தும். சில வருடங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் வருடாந்த இலக்கிய சந்திப்பு நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வுகளிலிருந்து ஈழத்து சூழலின் முக்கிய எழுத்தாளர்களின் ஒருவரான தீபச்செல்வன் ஒதுக்கப்பட்டிருந்தார். இத்துணைக்கும் இலக்கிய சந்திப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் தான் எழுத்தாளர் தீபச்செல்வன் வசிக்கின்றார். காரணம், தீபச்செல்வன் தமிழின விடுதலையை மூச்சாக கொண்டு எழுதி வருபவர். நன்கு அறியப்பட்ட தீபச்செல்வனுக்கே இந்த நிலைமை என்றால்….? இந்த மாபியா கும்பலின் ஒரு தரப்பு தான் ராஜினி இராஜசிங்கத்தை “விடுதலைப் புலிகளே கொலை செய்தார்கள்“ என்பதைப் பிரச்சாரம் செய்து வருபவர்களும். தமிழ்ச் சூழலில் கலை, இலக்கிய, அரசியல் செயற்பாடுகளில் காலடி எடுத்து வைக்கும் புதியவர்களை எந்த கேள்வியுமின்றி புலி எதிர்ப்பை ( மறைமுகமாகத் தமிழின விடுதலை எதிர்ப்பு அரசியல் ) ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திப்பது தான் இவர்களது வேலை. இல்லையெனில் அங்கீகாரமும், வாய்ப்பும் இங்கு மறுக்கப்படும். இவர்கள் முன்வைக்கும் விமர்சனங்களில் எந்த நேர் விளைவுகளும் இருப்பதில்லை. வெறுமனே காழ்புணர்வு மாத்திரமே இருக்கும். ராஜினி இராஜசிங்கம் முறிந்த பனை புத்தகத்தை எழுதியதற்காக விடுதலைப் புலிகள் கொலை செய்ததாகச் சொன்னார்கள். ஆனால், புத்தகத்தை வாசித்தால் சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளும், இந்தியா அமைதிப் படை என்ற பெயரில் நடத்திய கொடூரங்களும் தான் அம்பலமாகி இருந்தது. விடுதலை இயக்கங்கள் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் , குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கு எதிரானதாக இருந்தாலும் கூட, அவர்களது இராணுவ செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியவை அல்ல. அவை சரி செய்து கொள்ளப் பட வேண்டிய கருத்துகளாகவே இருந்தது. முறிந்தபனை நூல், முதலில் ஆங்கிலத்தில் தான் வெளிவந்தது. கிடைக்கும் தகவல்களின் பிரகாரம் ராஜினி படுகொலை செய்யப்பட்ட பின்னர் தான் புத்தகம் வெளியே வந்திருக்கின்றது. தமிழ் மொழி பதிப்பு 1996 ஆம் ஆண்டு தான் வந்தது. ஆக, இங்கும் இந்த புத்தகம் விடுதலைப் புலிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது எனச் சொல்வது அர்த்தமில்லாதது. புத்தகத்தில் கட்டுரை எழுதுவதற்காக தகவல் திரட்டிய விரிவுரையாளர் ஒருவர் , தான் இந்தியப் படை அதிகாரிகளால் அச்சுறுத்தப்பட்டதைப் பதிவு செய்திருக்கின்றார். அச்செய்திகள் அப்போதைய பத்திரிக்கையிலும் வெளி வந்திருக்கின்றது. இந்திய அமைதிப் படை யாழ் வைத்தியசாலையில் நடத்திய படுகொலைகள் மிகமிலேச்சத்தனமானவை. இந்த விடயம் வெளியே அதிகமாக கதைக்கப்படாமல் தடுக்கப்பட வேண்டிய அவசியம் இந்தியாவுக்கே இருக்கின்றது. இன்றுவரை அதை அவர்கள் செய்கின்றார்கள். ராஜினி இறப்பதற்கு முன்பாக எழுதிய கடிதம் ஒன்றில் உள்ளூர் இராணுவ அதிகாரிகள் தன்னை பழிதீர்க்க முயல்வதாக எழுதி இருக்கின்றார். பொதுவாக விடுதலைப்புலிகள் தங்கள் மீது சுமத்தப்படும் பழிகளுக்கு அவசியம் ஏற்படும் இடங்களில் மாத்திரமே மறுப்பு சொல்வார்கள். அதுவும் பிறர் மீது பழிகள் போடுவதில்லை. ஆனால், ராஜினி படுகொலை விவகாரத்தில் மறுப்பு சொல்லியதோடு, ஈபிஆர்எல்எப் ம், அவ்வமைப்பின் சார்பில் அப்போது வடகிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்து இந்திய அமைதி படையுடன் இணைந்து செயற்பட்ட வரதராஜபெருமாளும் தொடர்பு பட்டதைச் சொல்லி இருக்கின்றார்கள். வரதராஜபெருமாள், இந்திய அமைதிப்படையுடனும், தமிழ் தேசிய இராணுவம் என்ற பெயரில் தமிழ் இளைஞர்களைச் சேர்த்துக் கொண்டும் செய்த அட்டூழியங்களை ராஜினி அம்பலப்படுத்தி இருந்தார். படுகொலைக்குப் பின்னர், தியாகி திலீபனின் உடலை யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து பெறுவது தொடர்பாக ராஜினியுடன் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட முரண்பாடே கொலைக்கு காரணம் என வரதாராஜன் சொல்லி இருந்தார். ( தியாகி திலீபன் விரும்பியபடி விடுதலை புலிகளே அவரது உடலை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்குக் கொடுத்தனர்) இப்படி எழும் கேள்விகளும், ராஜினியை கொலை செய்தவர்கள் யார் என்பதைச் சட்டத்தின் முன் நிரூபிக்க வாய்ப்பிருந்தும் செய்யாமையும், இந்த படுகொலையை விடுதலைப் புலிகள் மீது சுமத்தி தொடர்ந்து பிரச்சாரம் செய்வது மூலம் இந்திய தரப்பு தப்பித்து கொள்ள முயல்வதும். ராஜினியை புலிகள் கொன்றார்கள் என பிரச்சாரம் செய்து நினைவு கூர்ந்து வருபவர்கள் ஒருபோதும் அவர் முறிந்த பனை நூல் மூலம் சொல்லிய விடயங்கள் தொடர்பாகக் கதைக்க விழையாமையும் உண்மை என்ன என்பதைப் புடம் போட்டுக் காட்டுகின்றது. இன்று சிறிலங்கா பேரினவாத அரசே அந்த உண்மையை அம்பலப்படுத்தி உதவி இருக்கின்றது https://www.battinatham.com/2025/09/blog-post_480.html
  7. பெயரைச் சுட்டிக் காட்டாமல் எழுதியிருக்கிறார், வழக்குப் போட்டு விடுவார்கள் என்ற அச்சமோ தெரியவில்லை😂. பேராசிரியர் பத்மநாதனாக இருக்குமென ஊகிக்கிறேன். அவர் தான் பாடநூலாக்கக் குழுவில் இருந்தார். இது தான் கொழும்பு நூதனசாலையில் இருக்கும் அந்த சிவன் பார்வதி சிலை பற்றிய கட்டுரை. https://amazinglanka.com/wp/shiva-kovil-no-1/ இவற்றைப் பாடப் புத்தகத்திலும், பேராசிரியரின் (யாரும் வாசிக்காத) புத்தகத்திலும் மறைத்து என்ன பயன்? பொதுத் தளங்களில் இந்தச் சிலை பற்றிய உண்மையான வரலாறு இருக்கிறது. இதை மறைக்க இயலாது.
  8. பெரியவர் 16 வயதில் வேலைக்கு சேர்ந்துள்ளார். முதலே இளைப்பாறி இருந்தால் 100 வயதுவரை வாழ்ந்திருக்க மாட்டார். இருந்தாலும் சுயநலம் பிடித்த மனிதன். எத்தனையோ பேர் வேலை இல்லாமல் தெருத்தெருவாக திரியும் நேரத்தில் 84 வயதுவரை வேலை செய்துள்ளார். அரசியல்வாதிகள் போல இவரும் குந்திய இடத்தைவிட்டு நகலாமல் இருந்துள்ளார்.
  9. இங்கு தாதி தானே முடிவெடுத்து சிறுமியின் கையை வெட்டி அகற்றி உள்ளாரா ? யாரோ ஒரு பெரிய வைத்தியரின் அனுமதி இல்லாமல் இவ்வாறு நடக்க சந்தர்ப்பம் உள்ளதா ? அந்த பெரிய வைத்தியர் தனியார் வைத்திய சாலைக்கு பகுதி நேரமாக கடமை ஆற்ற சென்று இருப்பார் முதலில் அவரைத்தான் பிடித்து தண்டிக்கணும் . இங்கு கூட இந்தியாவில் இருந்து அரைகுறை தாதிய அறிவுடன் மலையாளிகள் வந்து அனேகமா அவர்களுக்கு cannula எப்படி போடுவது எப்படி flush செய்வது என்பது புரியாமல் நோயாளிகளின் கைகளை கார்ட்டூன் படங்களில் வரும் மனிதர்கள் போல் வீங்க வைத்து இருப்பார்கள் பின்பு எப்படி சரி செய்கிறார்கள் என்று தெரியவில்லை கோமாவில் இருக்கும் நண்பனை பார்க்க செல்லும்போது ஆறுதலாக இருந்து பார்க்கணும் . இந்த சிறுமிக்கும் cannula வில் சரியாக flush செய்யாமல் விட்டதின் விளைவு காரணமாக பிழையான முடிவு எடுத்துள்ளார்கள் என்று கேள்வி . அரைகுறை அறிவு பண ஆசை ஒரு பட்டாம் பூச்சியின் சிறகை ஒடித்து தள்ளி விட்டது .இனிமேலும் பணம் பணம் என்று பாயும் வைத்தியர்கள் திருந்துவார்களா ?
  10. நித்திரையில் சித்திரக்கனவு ஒத்திகை பார்க்குது . .......! 😍
  11. யாழிலும் எண்ணுகிறார்களாமா? மாவட்டத்தை சொன்னேன்😂 பிகு நான் கடைசியாக எடுத்த ஆயுதம் - வெளிநாட்டுக்கு தப்பி ஓடியது😂.
  12. இதைச் சொல்வதற்காக நானும் கொஞ்சமாக வருந்துகிறேன். ஆள் பாதி ஆடை பாதி என்றாலும் முகராசி ஒன்று இருகிறது அல்லவா. உங்களை நேரில் பார்க்காவிட்டாலும் புரிந்து கொள்ள முடிகிறது😊
  13. குபீர் ரொட்டி ..........! 👍
  14. ஓராயிரம் பார்வையிலே படம் வல்லவனுக்கு வல்லவன்
  15. வழமை போல் தவறான சிரிப்பு விருப்பு வாக்கு என் ரத்தம் மீண்டும் இங்கே தன் கருத்தை வைப்பதை வரவேற்பதற்காக.
  16. அறிவியல் செய்தித் தளமாக வாசகர்களை ஈர்த்த யாழ்களத்தை வளரவிடாமல் ஒரு தலைப்பட்சமாக சிலரது அரசியல் கருத்துக்களையும் அவர்களது பொழுது போக்காக உரையாடும் தளமாகவும் கிணற்று தவளைத் தளமாக மாற்ற எடுத்த முயற்சிகளை கடிவாளம் போட்டு தடுத்து அறிவியல் தளமாக பேண யாழ்கள நிர்வாகத்தினராகிய நீங்கள் எடுத்த நடவடிக்கைகளை நன்றியுடன் நினைவு கொள்கிறோம். உங்கள் முயற்சியில் முழுமையான வெற்றியைப் பெற வேண்டும்.
  17. இத்தனை பெருந்தொகை ஈழத்தமிழர்களும் மேற்குலகு வந்து அவுத்துப் போட்டு அவர்களை அரவணைத்து நடப்பதால் தான் எம்மை இந்த நாடுகளில் தங்குமிட வசதி கொடுத்துள்ளார்கள் என்று கூற வருகின்றீர்களா?
  18. குமாரசாமி அண்ணே… கடைசியாக எடுத்த ஆயுதம் என்ன என்பதையும் சொல்லுங்கண்ணே. 🙂 எனது தோட்டத்திலும் சில குரங்குகள், 🐒🐒🐒 குரங்கு சேட்டை விட்டு கொண்டு திரிகுதுகள்… அதுகளின் வாலை ஒட்ட நறுக்க வேண்டி இருக்குது. 🐒🐒 🐵 😂
  19. இது ஒரு போருக்கான அமெரிக்காவின் தயாரிப்பாக நிச்சயமாக இல்லை என கருதுகிறேன், அமெரிக்க பொருளாதாரம் ஒரு பெரியளவிலான போர் ஒன்றை இரஸ்சியாவிற்கெதிராக ஆரம்பிக்காது, ஆனால் என்றுமில்லாதவாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இரஸ்சிய ட்ரோன் மற்றும் போர் விமானங்கள் அத்துமீறுவதாக கூறுகின்ற செயல்பாடு ஐரோப்பிய ஒன்றியம் ஒரு போருக்காக தயாராகி வருவதாக காட்டுகின்றன. முழு அளவிலான போர் ஒன்றினை நடாத்துவதற்கு ஏற்புடைய சூழ்நிலை ஐரோப்பாவிலும் இல்லை, ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் அண்மைய அறிக்கைகள் கடுமையாக இருக்கிறது, ஐரோப்பிய ஒன்றியம் தற்போதய உக்கிரேன் இரஸ்சிய போரில் ஏதேனும் வகையில் தலையீடு செய்யலாம். சில வேளை அமெரிக்க பொருளாதார அழுத்தத்திற்கு ஈடு கொடுக்கும் முகமாக தேவையற்ற உயரதிகாரிகளை பணிநீக்கம் செய்ய அதிக வாய்ப்புள்ளதாக கருதுகிறேன்.
  20. அந்த வாசகங்களின் உண்மை இப்ப தான் புரிகின்றது ...வயசு போக போக😅
  21. என்னைத் தூங்க வைத்ததற்கு ரொம்ப நன்றி தம்பி. இருந்தாலும் முதலே சொல்லியிருந்தால் இவ்வளவு இழுபறி இருந்திருக்காதில்ல.
  22. 🤣.................. அல்வாயனின் பதிவைப் பார்த்த பின், ஈழப்பிரியன் அண்ணாவிற்கு நித்திரை நன்றாகவே வந்திருக்கும் என்று நினைக்கின்றேன்................🤣. அந்த அடையாள அட்டையால் 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்.............' என்று அன்று இரண்டு கன்னங்களையும் காட்டிக் கொண்டே பல இடங்களில் நிற்க வேண்டி இருந்தது. இரண்டு கன்னங்களையும் காட்டியதற்காக பரலோகம் போகும் போது, பிதா என்னை அதிகமாக ஆசீர்வதிப்பார்............. வல்வெட்டித்துறை, பொலிகண்டி, கம்பர்மலை, தொண்டைமனாறு, இவை எல்லாம் ஒரே கணக்கிலேயே வரும்............ இவர்களில் எவரும் தப்பவே முடியாது அந்த நாட்களில். 'பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை..............' என்ற நடைப்பயணம் சில வருடங்களின் முன் நடந்த போது, மீண்டும் பொலிகண்டியா என்று மெல்லிய சிரிப்பு வந்தது.
  23. இத் திரியில் எனது கவனக் குறைவால் ஏற்பட்ட தவறுதலாலேயே சில பதிவுகள் தணிக்கை செய்யப்படவில்லை. வாசகர்களுக்கும் கருத்துப் பகிர்பவர்களுக்கும் அதுவே அவதூறுத் தகவல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் என நம்புகிறேன்.
  24. பெரும்பான்மைச் சமூகத்தின் மனநிலையை மாற்றுவது இனப்பிரச்சனையை தீர்க்க மிகவும் முக்கியமானதாகும். ஆனால் NDP எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, மேலும் அதைச் செய்யத் தயாராகவும் இல்லை. இனப்பிரச்சினையைத் தீர்க்காமல், பொருளாதார பிரச்சினையும் தீர்க்கவே முடியாது.
  25. ஊசிப்பட்டாசே வேடிக்கையா திரி வைத்தாலே வெடி டமார் டமார் .......! 😂
  26. 7. சிரமத்திற்கு மன்னிக்கவும் -------------------------------------------- சிட்னியிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸீக்கு திரும்பி வரும் விமானத்தின் புறப்படும் நேரம் காலை ஒன்பது மணி என்றிருந்தது. கிட்டத்தட்ட 14 மணி நேரங்கள் பயணம். இதை விட விமானத்தில் பறப்பதற்கு மோசமான ஒரு நேரத்தை கண்டுபிடிப்பது கடினம். காலைத் தூக்கம் முடிந்து, எழும்பி விமான நிலையம் வந்தால், அதற்குப் பின் பறக்கும் நீண்ட பயணத்தில் தூக்கம் எங்கே வரப் போகின்றது. ஆனாலும் விமானத்தில் விளக்குகளை அணைத்து இருட்டாக்கப் போகின்றார்கள். பலரும் கண்ணை ஒரு மறைப்பால் மறைத்து, மெல்லிய மற்றும் சற்றே கடுமையான சத்தங்களுடன் தூங்கப் போகின்றார்கள். விமானப் பணிப்பெண்கள் இடையிடையே வந்து போகப் போகின்றார்கள். நான் முழித்தே இருக்கப் போகின்றேன் என்பதும் விளங்கியது. எத்தனையோ வருடங்களின் முன் எமிரேட்ஸ் விமானத்தில் இலங்கைக்கு போய்க் கொண்டிருக்கும் போது, விமானத்தில் கடைசியாக படம் பார்த்திருக்கின்றேன். அதன் பின்னர், அந்தப் படத்தால், விமானத்தில் படம் பார்ப்பதில் ஒரு பலத்த ஒவ்வாமை ஏற்பட்டு, பயணம் முழுவதும் முன்னால் இருக்கும் கறுப்புத் திரையே பரவாயில்லை என்ற மனநிலைக்கு வந்திருந்தேன். விமானப் பயணத்தில் கடைசியாகப் பார்த்த அந்தப் படம் 'தெறி'. சில நண்பர்கள் ஏற்கனவே அந்தப் படத்தை சிலாகித்து சொல்லியிருந்தார்கள். அந்த நண்பர்களின் வரலாறு தெரிந்த நான் தான் கவனமாக இருந்திருக்கவேண்டும். ஆடம்பரமான ஒரு கடைத் தொகுதிக்கும், மலிவு விலை கடைத் தொகுதிக்கும் இருக்கும் வித்தியாசங்கள் என்று சிலவற்றை சொல்லிக் கொள்ளலாம். பொருட்களின் தரத்தில் இருக்கும் வேறுபாடு என்பது மிகப் பொதுவாக சொல்லப்படும் ஒரு வித்தியாசம். உதாரணமாக, அதிக விலையில் விற்கும் இடங்களில் விற்கப்படுபவை சாயம் போகாத, கசங்காத, நீண்டகாலம் நிற்கும் உடுப்புகள் என்று சொல்வார்கள். இங்கு அமெரிக்காவில் தொழில்நுட்பத்துறையில், வேறு பல துறைகளிலும் கூட, அணியும் ஆடைகளுக்கு எந்த மதிப்புமே கிடையாது. ஏதோ ஒன்றை போட்டுக் கொண்டு அலுவலகம் போனால் போதும். ஆள் நூறு, ஆடை பூச்சியம். சாயம் இருந்தாலும் போடலாம், சாயம் இழந்தாலும் போடலாம். போடும் உடுப்பு சாயம் போய், கசங்கி, அத்துடன் தலையையும் இழுக்காமல் அலுவலகம் போனால், ஆள் ஒரு அறிவுஜீவி போல என்று முதல் தோற்றத்தில் நம்புகின்றவர்களும் உண்டு. ஆனால் எது உண்மையோ, அது போகப் போக வெளியே வந்துவிடும். குறைவாகக் கதைப்பதும், கதைத்துக் கொண்டே நடுநடுவே அடிக்கடி கூரையை நிமிர்ந்து பார்ப்பதும் அறிவுஜீவி என்னும் பிம்பத்தை மேலும் சில காலத்துக்கு நீட்ட உதவலாம். இன்னொரு பெரிய வித்தியாசம் என்று சொல்லப்படுபவது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் இருக்கும் வேறுபாடுகள் என்கின்றனர். மலிவு விலைக் கடைகள் ஒரு அரச திணைக்களம் போல செயல்படுவார்கள். தியானத்தில் இருப்பவர்கள் போலக் கூட அங்கே சிலர் இருப்பார்கள். லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையம் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். உலகில் உள்ள மோசமான விமான நிலையங்கள் என்ற பட்டியலில் இது இருக்கும் என்றே நினைக்கின்றேன். ஆனாலும் சிட்னி விமான நிலையத்தில் பொதிகளைப் போடும் இடம் 'வேற லெவல்' என்றே சொல்லவேண்டும். சிட்னி விமான நிலையத்தின் அந்தப் பகுதிக்கு அரச திணைக்களங்களே பல மடங்கு பரவாயில்லை என்று சொல்லலாம். வரிசையில் காத்திருக்கும் ஒருவரின் அலுவல்கள் முடிவதற்கே பத்து அல்லது இருபது நிமிடங்கள் போய்விடுகின்றது. ஐந்து அல்லது ஆறு பேர்களே எங்களுக்கு முன்னால் நின்றார்கள். ஆனால் கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் அங்கே போனது. இதுவே வேறொரு விமான நிலையம் என்றால் ஒரு பத்து நிமிடங்களில் முடித்திருப்பார்கள். லாஸ் ஏஞ்சலீஸில் பொதிகளை எங்கள் கண் முன்னாலேயே தூக்கித் தூக்கி எறிந்திருப்பார்கள். பொதியின் உள்ளே இருக்கும் மஞ்சள் தூளும், மிளகாய் தூளும் கலந்து, நல்ல கறித்தூள் கிடைப்பதற்கு கூட சாத்தியங்கள் உண்டு. விமான நிலையத்தில் முற்றிலும் எழுந்தமானமாகவே ஓரிருவரை முழுச் சோதனைக்கு தெரிவு செய்கின்றார்கள் என்கின்றனர். அப்படித் தெரிவு செய்யப்படுபவர்களைப் பார்த்தால் அவர்கள் சொல்லும் எழுந்தமானம் பொய்யென்றே தெரியும். ஒரு கூட்டத்தில் எவர் எவரையெல்லாம் தெரிவு செய்வார்கள் என்றே சொல்லிவிடலாம். என்னைத் தெரிவு செய்தார்கள். காலணியை ஆராய்ந்தார்கள். நான் சிட்னிக்கு ஒரே ஒரு காலணியை மட்டுமே எடுத்துப் போயிருந்தேன். அங்கு வீட்டுக்கு அருகில் இருக்கும் கால்பந்தாட்ட மைதானத்தில் அதே காலணியுடனேயே அநேக நாட்களில் ஓடியும் இருக்கின்றேன். திரும்பி வரும் பயணத்திற்கு முந்திய நாளில் கூட, பெரிய மழை ஒன்றின் பின் வந்த சிறிய மழைக்குள் ஓடியிருந்தேன். காலணி கொஞ்சம் உப்பியே இருந்தது. பின்னர் கைப் பொதியை திறந்து பார்த்தார்கள். 'எல்லாமே சாக்லெட்................' என்றார்கள். 'இங்கிருந்து வேறு என்ன கொண்டு போவது என்று தெரியவில்லை......................' என்றேன். இறுதியாக 'சிரமத்துக்கு மன்னிக்கவும், சுகமாக போய் வீடு சேருங்கள்.............' என்று சொன்னார்கள். எத்தனை தடவை தான் சிரமத்துக்கு மன்னிப்பது. 9/11 அனர்த்தம் நிகழ்ந்த அடுத்த அடுத்த நாட்களில் ஒரு நாள். வேலையில் மதியம் சாப்பிட்டு விட்டு, வழமை போலவே நடந்து கொண்டிருந்தேன். வீதியைக் கடந்து அடுத்த பக்கம் வந்தால் கடற்கரைக்கு செல்லும் ஒரு குறுக்கு வீதி இருக்கின்றது. அந்தக் குறுக்கு வீதியில் கடற்கரைக்கு செல்லும் முன்பே ஒரு சிறிய மேம்பாலம் உள்ளது. மேம்பாலத்தின் கீழே இன்னொரு வீதி கடற்கரையை ஒட்டிச் செல்லுகின்றது. நான் அந்த மேம்பாலத்தில் நடந்து கொண்டிருக்கும் போது, திடீரென்று சில போலீஸ் வாகனங்கள் என்னை மறித்து எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்து நின்றன. 'எங்கே போகின்றீகள்...............' 'கடற்கரைக்கு...................' 'ஏன்.........................' 'தினமும் மதியம் போவேன்..............' 'எங்கே வேலை செய்கின்றீர்கள்..............' அங்கிருந்து பார்க்கும் போதே நான் வேலை செய்யும் அந்த உயர்ந்த கட்டிடம் தெரியும். அதைக் காட்டினேன். அடையாள அட்டை ஏதாவது இருக்கின்றதா என்றார்கள். கொடுத்தேன். ஒருவர் அதை எடுத்துக் கொண்டு அவர்களின் ஒரு வாகனத்துக்குப் போனார். சிறிது நேரத்தில் திரும்பி வந்தார். சிரமத்திற்கு மன்னிக்கவும், நீங்கள் போகலாம் என்றார்கள். அங்கே அப்படியே நின்று கொண்டிருந்தேன். முன்னர் சிறிது காலம் திருகோணமலையில் தங்கியிருந்த போது, ஒரு நாள் அங்கே தெருவில் நாங்கள் பலர் நின்று கதைத்துக் கொண்டிருந்தோம். சற்றுத் தள்ளி வேறு சிலரும் கூட்டமாக நின்று கதைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த வழியால் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இராணுவத்தினர் அவர்களின் மோட்டார் சைக்கிளை சடாரென்று நிற்பாட்டி விட்டு, அருகே கதைத்துக் கொண்டு நின்ற ஒருவரை ஏதோ கேட்டு விட்டு, இரு கன்னங்களிலும் அறைந்து விட்டுப் போனார்கள். கையாலாகாத நிலையின் ஒரு உச்சத்தில் நாங்கள் அங்கே நின்று கொண்டிருந்தோம். இங்கு நான் மேம்பாலத்தின் மேல் அப்படியே நிற்பதைப் பார்த்த ஒரு காவலர் திரும்பி வந்தார். 'ஆர் யு ஓகே...............' 'ம்............ ஒன்றுமில்லை.............' 'நான் மிகவும் வருந்துகின்றேன்............' என்றவர், யாரோ ஒருவர் அவர்களின் காவல் நிலையத்திற்கு தொலைபேசியில் அழைத்து, மேம்பாலத்தின் மேலே ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நிற்கின்றார் என்று அவசரத் தகவல் தெரிவித்ததாலேயே தாங்கள் இங்கே வந்ததாகச் சொன்னார். இது என்ன புதிதா எங்களுக்கு. (தொடரும்.......................)
  27. ஆஹா மாணவர்களுக்குப் பிடித்தமான மணியான பாடல் ஒன்று .......! 😂
  28. சிம்பிளான சிக்கன் பிரியாணி .........! 😂
  29. ஆசை கொண்ட நெஞ்சிரண்டு பேசுகின்ற போது . ..........! 😍
  30. சாயங்கால - உடன் போண்டா
  31. பருப்புக்கறியை இறைச்சிக் கறிக்கு நிகராக சமைத்து இருக்கிறார்கள் ......... ! 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.