Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Justin

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    7044
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87988
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    31948
    Posts
  4. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    4
    Points
    15789
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/06/25 in all areas

  1. ரசோவின் பதிலோடு உடன்படுகிறேன், அதற்கு மேலதிகமாக இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்: 1. "நியூயோர்க் நகரில் ஒரு கழுதையை நீலக் கட்சி நிறுத்தினாலும் அது வெற்றி பெறும்" என ஒரு ஜோக் இருக்கிறது. அது உண்மை என்றாலும், இந்த தேர்தலில் கூமோ (Andrew Cuomo) என்ற முன்னாள் நியூயோர்க் மாநில ஆளுனரும் சுயாதீன வேட்பாளராக போட்டியிட்டார். லிபரல், நீலக் கட்சிக் காரரான அவர் போட்டியிடக் காரணமே, மம்தானியின் சோசலிஸ்ட் கொள்கை, முஸ்லிம் மத அடையாளம், இஸ்ரேல் எதிர்ப்பு என்பன நீலக்கட்சியின் வாக்குகளை மம்தானி பக்கமிருந்து தன் பக்கம் திருப்பும் என்ற நம்பிக்கை தான். அப்படியிருந்தும் 9% வித்தியாசத்தில் மம்தானிக்கு வெற்றி என்பது எவ்வளவு தூரம் அவர் மீது சுமத்தப் பட்ட முத்திரைகள் வேலை செய்யவில்லை எனக் காட்டுகிறது. இன்னொரு ஜோக்கும் நடந்தது. தேர்தலுக்கு இரு நாட்கள் முன்பு ட்ரம்ப் "மம்தானியை விட கூமோவை நான் ஆதரிக்கிறேன்!" என்று ஒரு "பாரிய பாறாங்கல்லை" கூமோவின் கழுத்தில் கட்டி விட்டார்😂 - அன்றே கூமோவின் வெற்றி வாய்ப்பு பூச்சியமாகி விட்டது! 2. வேர்ஜினியா மாநிலம் எப்போதும் சிவப்பு நீலம் என மாறிக் கொண்டிருக்கும் ஒரு மாநிலம். அங்கே நீலக் கட்சியின் பெண் ஆளுனரும், மாநில சட்டமா அதிபராக ஒரு ஆபிரிக்க அமெரிக்கரும் வென்றிருக்கிறார்கள். எனவே, இது நியூயோர்க்கை விட முக்கியமான ஒரு அமிலப் பரிசோதனை முடிவு எனலாம். 3. நியூஜெர்சி- இது நான் வசிக்கும் மாநிலம். இதுவும் பல ஆண்டுகளாக நீல மாநிலம், ஆனால் சிவப்புக் கட்சியினர் ஆளுனர்களாக இருந்திருக்கின்றனர் - 2018 வரையில் இது சாத்தியமாக இருந்தது. போன வருடம் அதிபர் தேர்தலில், நியூஜேர்சி மாநிலத்தை வெறும் 6% வாக்கு வித்தியாசத்தில் கமலா ட்ரம்பை வென்றார் . அப்போதே நியூஜேர்சி சிவப்புக் கட்சியின் பக்கம் சாய்கிறதோ என அச்சம் வெளிப்பட்டது. ஆனால், இந்த ஆளுனர் தேர்தலில், ஷெரில் 15% வித்தியாசத்தில் சிவப்புக் கட்சி வேட்பாளரான ட்ரம்ப் விசிறியை வென்றிருக்கிறார். இந்த வாக்கு வித்தியாசம் தான் முக்கியமானது. நியூயோர்க் போலவே லண்டனும் ஒரு உலக ரீதியில் முக்கியமான நகரம் - சந்தேகமில்லை. ஆனால், அமெரிக்காவினதும் உலகினதும் பொருளாதார தலை நகரம் என்ற வகையில் ஒரு சோசலிஸ்ட் வென்றிருப்பது கவனத்திற்குரிய ஒன்று என நினைக்கிறேன். அச்சமின்றி, யூதர்களின் நிறுவனங்கள் ஆளும் நியூயோர்க் நகரிலேயே இஸ்ரேல் எதிர்ப்பை வெளிக்காட்டிய படி மம்தானி வென்றிருக்கிறார் என்பது இனப்படுகொலையை ஆதரிக்கும் தீவிர இஸ்ரேலியர்களுக்கு வயிற்றில் புளி கரைக்கும் ஒரு விடயம்!
  2. Advance Booking- ல Rape பண்ணிட்டு இருக்கீங்க | Kadhal Sadugudu | Vikram | Vivek முதல் மூன்று நிமிடம் 5 விநாடிகளில் நீங்கள் குறிப்பிட்ட தண்டனை மைனருக்கு வழங்கப்பட்டது.
  3. எல்லா வர்த்தக, கடன் பித்தலாட்டங்களும் ஒன்று அல்ல! ஆனால் எல்லா வர்த்தக, கடன், வியாபார பித்தலாட்டங்களுக்கும் அடிப்படை ஒன்று தானே? தனி நபரின் அறமில்லாத தன்மை. பொலிஸ் கண்காணிக்காத வீதியில் வேகக் கட்டுப்பாடில்லாமல் வாகனம் ஓடுவதற்கும், கண்காணிக்க வேண்டிய அமைப்புகள் கண்காணிக்காமல் விடும் இடத்தில் சுருட்டுவதற்கும் ஒரே அடிப்படை அறமில்லாத மன அமைப்புத் தானே ஐயா? இதைப் புரிந்து கொள்ள ஏன் தலைமுடியை இப்படி நார் நாராகப் பிரித்தெடுக்கிறீர்கள் என விளங்கவில்லை😂! இதே வேலையைத் தான் ராஜ் ராஜரட்ணம் பற்றிய கேசிலும் எங்கள் தமிழ் சமூகத்தில் சிலர் செய்வதைப் பார்த்தோம். அவர் சட்ட விரோதமான insider trading இனைச் செய்து கையும் மெய்யுமாகப் பிடிபட்டார். தண்டனை முடிந்து வெளியே வந்ததும், "எல்லோரும் செய்தார்கள், என்னை மட்டும் பிடித்தார்கள்" என்று "சமனற்ற நீதி" புத்தகத்தில் எழுத சிலர் "அதானே?" என்று அவரை தியாகி ரேஞ்சில் உயர்த்தினர். என்னைப் பொறுத்தவரை, இது போன்ற வெள்ளைக் கொலர் குற்றங்களை வெள்ளையடிப்பதும், சாதாரணமயப்படுத்துவதும் எங்கள் சமூகத்தை குட்டிச் சுவராக்க உதவும் செயல்கள் என நினைக்கிறேன்.
  4. இந்த திரியில் யாரும் இன்னும் தடக்கி விழவில்லை போலும்...
  5. அது காத்தான்குடி பக்கமிருந்துதான் ..முதலில் கிளம்பும் ..அது அப்படியே உடனடுயாக யாழில்வரும்
  6. தேர்தல்கள் நடந்த இடங்கள் எல்லாமுமே ஜனநாயக்கட்சி செல்வாக்குள்ள இடங்களே - நியூயோர்க், நியூ ஜெர்சி, வர்ஜினியா, கலிஃபோர்னியா. ஜனநாயக்கட்சி வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டாலும், ஜனநாயக்கட்சி பெற்ற அதிகமான வாக்கு வித்தியாசமே இதை ஒரு கொண்டாடும் வெற்றியாக மாற்றியுள்ளது, கோஷான். அதிபர் ட்ரம்பும், அவரது தீவிர ஆதரவாளர்களும் மம்தானியின் பேச்சை உதாரணமாக காட்டவே போகின்றார்கள். மதம் மட்டும் இல்லை, அவர் ஒரு தீவிர சோஷலிஸ்ட் என்பதும் பிரச்சாரம் ஆக்கப்படப் போகின்றது. ஆனாலும் உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவுகளும், பொருட்களின் விலைகளும், வேலையில்லாமல் போகின்றவர்களின் எண்ணிக்கையும் குடியரசுக்கட்சிக்கு எதிரான ஒரு பொது மனநிலையை உண்டாக்கியிருக்கின்றது போன்றே தெரிகின்றது.
  7. பாலித்தீவில் இந்த புனுகுபூனையின் பின்பக்க காப்பியை குடித்து பார்த்தேன். சும்மா…லுலுலுலா 😂
  8. பெரதெனியாவில் புதுமுக மாணவர்களிடம் பகிடிவதை மற்றும் தேவை அற்ற விடையங்களில் தலையிடக் கூடாது என்று ஆரம்ப்பதிலயே கையப்பம் வாங்கியுள்ளார்களாம்.நான் அடிக்கடி கதைத்துக் கொள்ளும் மாணவர் சொன்னார்.செப்ரம்பரில் விரிவுரைகளுக்கு உரிய ஆயத்தங்கள் தொடங்கி இப்போ தொடர்ந்து நடக்கிறது.யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் திறமை சித்தி பெற்று பெரதெனியா சென்ற ஒரு மாணவன் எனது பராமரில் இருக்கிறார்.
  9. பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் க.சுபகுணம் பிபிசி தமிழ் 5 நவம்பர் 2025 கட்டு வரியன் பாம்புக்கு வட இந்தியாவின் சில கிராமங்களில் 'மூச்சை விழுங்கும் பாம்பு' என்ற பெயருண்டு. அதன் கடிக்கு ஆளான பலரும் உறக்கத்திலேயே இறந்துவிடுவதுதான் இப்படி அழைக்கப்படுவதற்குக் காரணம். அதேவேளையில், கட்டு வரியன் கடித்துவிட்டாலே மரணம்தான் என்று அச்சப்படத் தேவையில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். சமீபத்தில், புதுக்கோட்டையில் அந்தப் பாம்பிடம் கடிபட்ட ஆறு வயது சிறுமி ஒருவர் ஒரு வாரம் கொடுக்கப்பட்ட தொடர் சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்திருப்பது அதற்குச் சான்றாக விளங்குகிறது. இருப்பினும், கட்டு வரியன் பாம்பு கடித்தால் பலரும் தூக்கத்திலேயே இறந்துவிடுவது ஏன்? அதன் நஞ்சு மனித உடலில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? இந்தத் தகவல்களை விரிவாகத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் பாம்புகள் மற்றும் அதன் நஞ்சு தொடர்பாக ஆராய்ந்து வரும் வல்லுநர்களைத் தொடர்புகொண்டது. வயிற்று வலியில் துடித்த ஆறு வயது சிறுமி புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே அமைந்துள்ளது குலவைப்பட்டி கிராமம். அங்கு வாழும் பழனி, பாப்பாத்தி தம்பதியின் ஆறு வயது மகள் ஸ்ரீமதி, கடந்த அக்டோபர் 15-ஆம் தேதியன்று இரவு திடீர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டார். சிறுமிக்கு என்ன நேர்ந்தது என்பதைப் பற்றிய தெளிவான தகவல்கள் ஏதும் பெற்றோர்களுக்குத் தெரிந்திருக்காத நிலையில், வயிற்று வலியில் துடித்த மகளை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பட மூலாதாரம், Dr A. Thanigaivel இரு வேறு தனியார் மருத்துவமனைகளில் வெவ்வேறு சிகிச்சைகளைப் பெற்று, முன்னேற்றம் இல்லாத நிலையில், இரண்டு நாட்கள் கழித்தே சிறுமி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கண்களைத் திறக்க முடியாத நிலையில் சிறுமியைக் கொண்டு வந்ததாகவும் மிகத் தாமதமாக வந்ததால் சிகிச்சை அளிப்பதில் பல சிரமங்கள் இருந்ததாகவும் பிபிசி தமிழிடம் தெரிவித்தார் குழந்தைகள் நல மருத்துவர் அரவிந்த். "சிறுமி கடும் வயிற்று வலியால் சிரமப்பட்டதாக பெற்றோர் தெரிவித்தனர். அதோடு, கண்களைத் திறக்க முடியாத நிலையில், இமைகளின் நரம்பு பாதிக்கப்பட்டு இருந்தது. அவர் சுவாசிக்கவும் சிரமப்பட்டார். இவையனைத்துமே கட்டு வரியன் பாம்பு கடித்தால் ஏற்படக்கூடிய அறிகுறிகள். இதை உணர்ந்தவுடன், உரிய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு உறுதி செய்தோம். பின்னர் பாம்புக்கடிக்கு கொடுக்கப்படும் நஞ்சுமுறி மருந்தை சிறுமிக்கு கொடுத்து சிகிச்சையளிக்கத் தொடங்கினோம்," என்று தெரிவித்தார். கட்டு வரியன் கடித்தும் அதிக நேரம் உயிர் பிழைப்பது சாத்தியமா? பாம்பு கடிக்கும்போது எந்த அளவிலான நஞ்சை மனித உடலுக்குள் செலுத்துகிறது என்பதைப் பொறுத்தே இது மாறுபடும் என்கிறார் யுனிவெர்சல் பாம்புக்கடி ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் மூத்த விஞ்ஞானியுமான முனைவர் மனோஜ். "இந்தக் குழந்தையைப் பொறுத்தவரை எப்போது பாம்பு கடித்தது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் கடிக்கும்போது சிறிய அளவிலான நஞ்சை மட்டுமே பாம்பு சிறுமியின் உடலில் செலுத்தியிருக்கலாம். இது அனைவருக்கும் அமையாது, நல்வாய்ப்பாக இந்தச் சிறுமிக்கு அமைந்துவிட்டது," என்று தெரிவித்தார் அவர். பட மூலாதாரம், Dr.M.P.Koteesvar படக்குறிப்பு, யுனிவெர்சல் பாம்புக்கடி ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் மூத்த விஞ்ஞானியுமான முனைவர் மனோஜ் இதுபோல கட்டு வரியன் கடித்து ஒரு நாள், இரண்டு நாட்கள் கழித்தும்கூட சிகிச்சைக்காக மக்கள் மருத்துவமனையை நாடுவதைத் தனது அனுபவத்திலும் சில முறை கண்டிருப்பதாக முனைவர் மனோஜ் தெரிவித்தார். "இதற்குக் காரணம், நாகப் பாம்பு போல இதன் நஞ்சு உடலுக்குள் சென்றவுடன் வேலையைக் காட்டுவதில்லை. ஒருவேளை நஞ்சின் அளவு குறைவாக இருந்தால், அதன் வீரியம் தெரியத் தொடங்குவதற்குச் சில மணிநேரம் முதல் ஒரு நாள் வரைகூட ஆகலாம். உடல் தாங்கக்கூடிய சிறிய அளவிலான நஞ்சை மட்டுமே பாம்பு உட்செலுத்தியிருந்தாலும், அதன் அறிகுறிகளை ஒருவர் அனுபவிப்பார். அதில் மாற்றமில்லை. ஆனால் அதற்கு எடுக்கும் நேரம் அதிகம். ஒருவேளை இப்படிப்பட்ட சூழலை புதுக்கோட்டையில் பாதிக்கப்பட்ட சிறுமி எதிர்கொண்டிருக்க வாய்ப்புள்ளது." என்று அவர் விளக்கினார். நஞ்சின் அளவு குறைவாக இருந்தாலும், அதற்கான விளைவுகளை உடல் அனுபவிக்கவே செய்யும் என்பதைக் குறிப்பிட்ட அவர் அதற்கு சிகிச்சை அளிக்கும் வரை அந்த பாதிப்புகள் நீங்காது என்றார். அதுவே, இரண்டு நாட்களுக்கு மேல் பிழைத்திருக்க முடிந்தாலும், குழந்தை பல்வேறு பாதிப்புகளை அனுபவித்தமைக்கு காரணமாக இருக்கக்கூடும் என்றும் மனோஜ் குறிப்பிட்டார். இரவில் கடிக்கும் கட்டு வரியன் பாம்பு கட்டு வரியன் கடித்த பிறகும் இரு நாட்களுக்கு மேல் உயிர் பிழைத்திருந்த சிறுமி, பின்னர் ஒரு வார சிகிச்சையைத் தொடர்ந்து முற்றிலுமாகக் குணமடைந்தார். இதுபோல, கடிபட்டதன் விளைவுகளை ஒருவர் அனுபவிக்கச் சிறிது நேரம் எடுக்கலாம் என்றார் மனோஜ். ஆனால், 'இந்தியாவில் நிகழும் பாம்புக்கடி மரணங்களில் கணிசமான இறப்புகளுக்கு கட்டு வரியனும் காரணமாக இருப்பது ஏன்?' என்ற கேள்வி எழுகிறது. பட மூலாதாரம், Getty Images அதுகுறித்துக் கேட்டபோது, "பாம்பின் நஞ்சு குறைவான அளவில் செலுத்தப்பட்டால் மட்டுமே இப்படியான நல்வாய்ப்புகள் கிடைக்கும்" எனக் குறிப்பிட்ட அவர், மற்றபடி கட்டு வரியனின் நஞ்சு நுரையீரலில் வீக்கத்தை ஏற்படுத்துவதால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வதாகக் கூறினார். ஊர்வனவியலாளர் ரமேஸ்வரனின் கூற்றுப்படி, கட்டு வரியன் ஓர் இரவாடிப் பாம்பு, இரவில் அதிக சுறுசுறுப்புடன் இயங்கக்கூடியது. குறிப்பாக, நள்ளிரவில் மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில்தான் அது சுறுசுறுப்பாக இயங்கும். அதோடு, "வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவை காணப்படுகின்றன. இரவில் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும்போது வீடுகளுக்குள் வருவதால் மக்கள் எளிதில் கவனிப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு. அது மட்டுமின்றி, கட்டு வரியன்கள் பிற நச்சுப் பாம்புகளைப் போல சீண்டப்படும்போது சத்தமிடுவது, எச்சரிப்பது போன்ற செயல்களைச் செய்யாது. எனவே அதன் இருப்பு கவனிக்கப்படாமல் போக அதிக வாய்ப்புள்ளது. அவை வருவதை, செல்வதைக்கூட யாரும் கவனித்துவிடாதபடி கூச்ச சுபாவம் மிகுந்த நடத்தைகளைக் கொண்டவை. இந்தக் காரணத்தால் கட்டு வரியன் இருப்பதையே பல நேரங்களில் மக்கள் கவனிக்கத் தவறும் சூழ்நிலை ஏற்படலாம்," என்று விவரித்தார் ரமேஸ்வரன். படக்குறிப்பு, ஊர்வனவியலாளர் ரமேஸ்வரன் கட்டு வரியனை பொறுத்தவரை, "மரக்கட்டை குவியல்கள், சிலிண்டர் சந்துகள் போன்ற மறைவிடங்களை அதிகம் நாடுகின்றன. மழை மற்றும் குளிர்காலங்களில் கதகதப்பான இடம் தேடி வீடுகளுக்குள் புகுவதும் நடக்கின்றன. அதோடு, அதன் உடலமைப்பும் வீடுகளுக்குள் யார் கண்ணிலும் படாமல் எளிதில் வந்து செல்லும் சாதகத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. கூடுதலாக இரவு நேரத்தில் அதிகம் இயங்குகின்றன. இதுவே இரவில் கட்டு வரியனால் பாம்புக்கடி விபத்துகள் அதிகம் ஏற்படக் காரணம். எனவே அவை குறித்த எச்சரிக்கை உணர்வு மிக அதிகமாக இருக்க வேண்டியது அவசியம்," என்றார் ரமேஸ்வரன். உடலில் கட்டு வரியன் பாம்பு கடித்த இடத்தை கண்டுபிடிக்க முடியாதா? நாகம், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் ஆகிய நச்சுப் பாம்புகளைப் பொறுத்தவரை கடித்த இடத்தில் அதைக் காட்டக்கூடிய காயங்கள் தென்படும். ஆனால் கட்டு வரியனில் அப்படி எதுவும் தெரியாது என்கிறார் முனைவர் மனோஜ். பொதுவாக பாம்பு கடித்துவிட்டால், கடித்த இடத்தில் கடுமையான வலி, நச்சுப் பற்கள் பதிவது, வீக்கமடைவது, சிவப்பு அல்லது கருமை நிறத்திற்கு மாறுவது, தீப்புண் போன்ற கொப்புளங்கள் வருவது எனப் பல்வேறு வடிவங்களிலான காயங்களைக் காண முடியும். ஆனால், "கட்டு வரியன் கடித்த இடத்தில் எவ்வித தடயங்களையும் காண முடியாது. இதனால், நோயாளி பாம்பு கடித்ததால் ஏற்பட்ட பாதிப்புகளைத்தான் அனுபவிக்கிறார் என்பதை உறுதி செய்வதே மருத்துவர்களுக்குப் பெரிய சவாலாக இருக்கும்," என்று மனோஜ் விளக்கினார். அவரது கூற்றுப்படி, நாகப் பாம்புகளின் நச்சுப் பற்கள் சராசரியாக 8 முதல் 10 மில்லிமீட்டர் வரை இருக்கும். "கண்ணாடி விரியனின் நச்சுப்பல் அதைவிடப் பெரியது, சுமார் ஒன்றரை இன்ச் வரைகூட இருக்கும். எனவே அவை கடித்த இடத்தை எளிதில் கண்டறிய முடியும். சுருட்டை விரியன் விஷயத்தில்கூட பற்கள் சிறிதாக இருந்தாலும் கடித்த இடத்தில் கொப்புளங்கள் போன்ற காயங்கள் ஏற்படும். அதை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் வெறும் 4 மில்லி மீட்டருக்கும் குறைவான அளவைக் கொண்ட நச்சுப் பற்களை உடைய கட்டு வரியன் கடித்த இடத்தில் இப்படி எவ்வித தடயமும் இருக்காது." இதோடு, வழக்கமாக பாம்புக்கடியை உறுதி செய்யப் பயன்படுத்தப்படும் 20 நிமிட ரத்த உறைவு பரிசோதனையில்கூட, நாகம் மற்றும் கட்டு வரியனின் நஞ்சு ரத்தத்தில் இருப்பதைக் கண்டுபிடிப்பது சிரமம் எனவும் மனோஜ் தெரிவித்தார். இந்த சவால்கள், ஒருவர் உடல்நல பாதிப்புகளோடு மருத்துவமனைக்கு வரும்போது "உடலில் பாம்புக்கடி பாதிப்பு இருக்கிறதா என்பதை ஆராய்வதை சிக்கலாக்குகிறது." அதனால், "நோயாளிக்கு இருக்கும் பாதிப்புகள் கட்டு வரியன் கடியின் அறிகுறிகளை ஒத்திருந்தால் உடனே தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து, உரிய பரிசோதனைகளைச் செய்த பிறகு சிகிச்சைகளைத் தொடங்க வேண்டும் என்பது நடைமுறை," என்று விளக்கினார் பாம்பின் நஞ்சு மற்றும் பாம்புக்கடி குறித்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆராய்ந்து வரும் முனைவர் மனோஜ். பட மூலாதாரம், Getty Images கட்டு வரியன் கடித்தால் தூக்கத்திலேயே இறந்துவிடுவார்களா? இதுகுறித்து விளக்கிய ஊர்வனவியலாளர் ரமேஸ்வரன், "கட்டு வரியன் கடிப்பதாலேயே தூங்கும்போது இறப்பு நிகழ்வதாக அர்த்தமில்லை. அவை பல நேரங்களில் மனிதர்களை தூங்கும்போது கடித்துவிடுகிறது என்பதே அதற்குக் காரணம்," என்றார். குளிருக்கு கதகதப்பாக இருக்கும் வீடுகளுக்குள் புகுந்துவிடும் இவை சில நேரங்களில் மனிதர்களுக்கு நெருக்கமாகச் சுருண்டு படுத்திருப்பதாகவும், அப்போது எதேச்சையாக அவற்றை மனிதர்கள் அழுத்திவிட்டாலோ காயப்படுத்திவிட்டாலோ உடனே கடித்து விடுவதாகவும் முனைவர் மனோஜ் குறிப்பிட்டார். மறுபுறம், இதுபோன்ற சம்பவங்கள் பதிவாவதாக வாய்மொழித் தகவல்கள் வந்தாலும், கட்டு வரியன் மனிதர்களை இரவு நேரத்தில் நெருங்கி வருவது ஏன் என்பது குறித்துத் தெரிந்துகொள்ள விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார் ரமேஸ்வரன். கட்டு வரியன் பாம்பின் நஞ்சு நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது என்பதால், கடிபட்டவர்களுக்கு கடும் வயிற்று வலி, வாந்தி வருவதைப் போன்ற உணர்வு, கண்களைத் திறக்க முடியாமல் போவது, துர்நாற்றத்துடன் எச்சில் வடிதல், சுயநினைவை இழப்பது ஆகிய அறிகுறிகள் ஏற்படுவதாக மனோஜ் தெரிவித்தார். "நரம்பியல் மண்டலத்தை அதன் நஞ்சு தாக்குவதால், நுரையீரலில் வீக்கம் ஏற்படுகிறது, கண் இமைகளைத் திறக்க முடியாமல் கடிபட்டவர்கள் அரை மயக்க நிலைக்குச் செல்ல நேரிடுகிறது, சுயநினைவை இழக்கின்றனர். நுரையீரல் ஆக்சிஜனை உடல் முழுக்க கொண்டு செல்ல முடியாமல் போவதால் சுவாசிக்க முடியாமல் கடிபட்டவர்கள் உயிரிழக்கின்றனர்." என்று அறிகுறிகளை விளக்கினார் மனோஜ். இரவு நேரங்களில் தூங்கும்போது ஒருவேளை கடித்து, காலை வரை அதை யாரும் கவனிக்காத சூழல் நிலவினால் கடிபட்டவர் மரணிக்க அதிக வாய்ப்புள்ளது என்றவர், அதையே "இரவில் தூக்கத்திலேயே அதன் கடி மரணத்தை ஏற்படுத்துவதாக" கூறப்படுகிறது எனவும் விவரித்தார். இதனாலேயே அவற்றை வட இந்திய கிராமங்கள் பலவற்றில் "மூச்சை விழுங்கும் பாம்பு" என மக்கள் குறிப்பிடுவதாகவும் அவர் தெரிவித்தார். ஒருவரை கட்டு வரியன் கடித்து பல மணிநேரம் கழித்தும்கூட அறிகுறிகள் தெரியத் தொடங்கும் எனத் தெரிவித்த அவர், மிக முக்கியமாக நரம்பியல் செயல்பாடுகளை அதன் நஞ்சு தடை செய்வதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, சுவாசம் தடைபடுவதாகக் கூறினார். "அதற்கு வென்டிலேட்டர் உதவியுடன் நுரையீரலில் நேரடியாக ட்யூப் செலுத்தி செயற்கை சுவாசம் வழங்குவதன் மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள்," என்று விளக்கினார் முனைவர் மனோஜ். அவரது கூற்றுப்படி, கட்டு வரியன் பாம்பின் நஞ்சு, நாகம் போன்ற பிற பாம்புகளின் நஞ்சைப் போல உடனடியாக பாதிப்புகளை ஏற்படுத்துவது குறைவுதான் என்றாலும், அவை கடித்துவிட்டதைக் கண்டுபிடிப்பதே கடினம் என்பதால், சவாலான பாம்புக்கடி சிகிச்சைகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. கூடுதல் தகவல்கள்: பிரபுராவ் ஆனந்தன், பிபிசி தமிழுக்காக - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2em107e7rlo
  10. தமிழர் பகுதியில் சீரழியும் கலாச்சாரம்..! Vhg நவம்பர் 06, 2025 அண்மைய காலங்களில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறு கலாசார சீரழிவுகள் , குற்ற செயல்கள், ஈழத் தமிழினத்தை அழிவு பாதைக்கு செல்லும் அவலம் தொடர்பில் சமூக வலைத்தங்கள் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர். போதைபொருள் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் இளம் குடும்ப தலைவிகள் ஒருபுறமும் , மறுபுறம் போதையாலும் குற்றசெயல்களாகும் கெட்டு சீரழியும் இளம் சமுதாயம் ஒரு புறமுமாக ஈழத தமிழர் கலாச்சாரம் வழி மாறி போய்கொண்டிருக்கின்றது. போதைபொருள் விற்பனை - கள்ள உறவுகள் ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்த காலங்கள் மலையேறி கொண்டிருக்கின்றது. குடும்ப வன்முறைகள் கொலைகளில் வந்து முடிகின்றது. சுகபோக வாழ்க்கை மற்றும் பணத்தின் மீதான மோகம் வாழ்க்கையில் அமைதியையும் உண்மையையும் மாற்றி விடுகின்றது. அந்தவகையில் யாழில் தவில் வித்துவானை நம்பி கணவன் பிள்ளைகளை கைவிட்டு சென்ற குடும்ப பெண் , தகாத உறவால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முல்லைத்தீவில் 26 வயதான பெண் ஒருவர் நான்கு திருமணங்கள் செய்த சம்பவங்கள் என பல்வேறு கலாச்சார சீரழிவுகள் தமிழர் பகுதிகளில் அரங்கேறி வருகின்றது. அதுமட்டுமல்லாது வவுனியாவில் நேற்று முன் தினம் மனைவியின் தகாத உறவால் கணவன் மனைவியை கொன்று பிள்ளையுடன் பொலிஸாரிடம் சரணடைந்த சம்பவமும் நடந்துள்ளது. அதேவேளை புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் எம்மவர்கள் சிலரும் இந்த சம்பவங்களுக்கு துணைபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் நம் கலாசாரம் இப்படி போகிறதே என தம்மை சீர்திருத்தி வாழ பழகாவிட்டால் அடுத்த சமுதாயத்தை எங்கே கொண்டு செல்லும் என்கின்ற கேள்வியை சமூக மட்டத்தில் எழவைத்துள்ளது. அதிலும் இளவயது குடும்ப பெண்கள் கலாசார சீரழிவுகளை நோக்கி நகர்வது வேதனைக்குரிய விடயம் ஆகும். உலகில் ஒப்பற்ற தமிழனமாக போற்றப்பட்ட எம்மினம் இன்று தடம்மாறி தடுமாறி போய்கொண்டிருக்கின்றது. குறிப்பாக யாழ்ப்பாணம், வன்னி பிரதேசங்களில் திட்டமிட்டு பரப்படும் விச செடிகள் படர்வது போல கலாசார சீரழிவுகள் தலை விரித்து ஆடுவது வேதனையை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். https://www.battinatham.com/2025/11/blog-post_707.html
  11. "ஒப்பற்ற தமிழினம்" தானாக எப்பவும் சீரழிவுகளைத் தேடுவதில்லை! வேறு யாராவது தான் திட்டமிட்டு தமிழினத்திற்குள் விசச்செடிகளைப் பரப்புகிறார்கள். மற்றும்படி தமிழினம் 100% நல்லவர்களால் நிறைந்தது😎! இப்படியான "பொறுப்பை எடுத்துக் கொள்ளாத" சிந்தனையே உண்மையான விஷம்!
  12. பரவாயில்லை அண்ணா, உங்களை அந்த பட்டியலில் சேர்க்கமாட்டோம்! சுவை எப்படி என்று சொல்லுங்கோ?!
  13. என்னது .....இடையிலே செய்திகளும் இருந்தனவா .........! 😊
  14. நான் வந்து படங்களுக்கிடையில் இருக்கும் செய்தியை வாசித்து விட்டுப் போய்க் கொண்டிருக்கிறேன்😇!
  15. மாட்டை களவெடுத்தவர்களின் படங்களையும் பெயர்களையும் பிரசுரிப்பார்கள். ஆனால் இப்படியான குற்றங்களை செய்கின்றவர்களின் பெயரையோ அவர்களின் புகைப்படங்களையோ வெளி விட மாட்டார்கள். இங்கு (கனடாவில்) இப்படியான குற்றங்கள் நடந்து ஒருவரை கைது செய்தால், அவரது புகைப்படத்தையும் வெளியிட்டு பெயரையும் வெளிவிடுவார்கள். இதன் மூலம், இவர்களால் பாதிக்கப்பட்டு இன்னும் வெளியில் சொல்லாமல் இருப்பவர்கள் துணிந்து வந்து சாட்சி சொல்வார்கள் (அப்படி சொல்கின்றவர்களின் தனிப்பட்ட விடயங்கள் அனைத்தையும் ரகசியம் காப்பார்கள்)
  16. *பாதுகாப்பு அமைச்சுக்கு 64800 கோடி ரூபா நிதி! 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டம் நாளை *கல்வி அமைச்சுக்கு கடந்த ஆண்டைவிட 3000 ஆயிரம் கோடி மாத்திரமே மேலதிக ஒதுக்கீடு - ----- ----- ------ அநுர அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக் கான வரவு செலவுத் திட்டத்தில், மொத்த செலவீனமாக 4 இலட்சத்து 43,435கோடியே 64,68000 ரூபா காண்பிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் செலவீனமாக 4இலட்சத்து 21824 கோடியே 80,18000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான செலவீனம் 21610கோடியே 84,50000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 61,744 கோடியே 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 64800 கோடி ரூபா ஒதுக்கப்பட் டுள்ளது. இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 3055 கோடியே 50 இலட்சம் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்காக அநுரகுமார வசமுள்ள பாது காப்பு அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் ,டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகிய 3 அமைச்சுக்களுக்கும் மொத்தமாக 11,6980 கோடியே 5 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்காக அநுரகுமார வசமுள்ள பாதுகாப்பு அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளா தார அபிவிருத்தி அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவற்றுக்கு 1.105.782.000000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்காக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சுக்கு 271,000,000,000ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில், 2026 ஆம் ஆண்டுக்காக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சுக்கு 301,000,000,000ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 3000 கோடி ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. (கடந்த செப்ரெம்பர் 26 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட முதலாம் வாசிப்பு மதிப்பீட்டு அறிக்கையில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் இவை) அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்-
  17. அண்மையில் பாலியில் (இந்தோனேசியா)இந்த காப்பி தயாரிக்கும் இடத்திற்கு போயிருந்தேன். சுவைத்துப்பார்ப்பதற்காக சிறிய அளவில் தந்தார்கள், மணந்து பார்த்தேன் வாசனை மிகவும் நன்றாக இருந்தது ஆனால் அதைக்குடிக்க மனம் இடம்தரவில்லை.
  18. எனக்கு பிடித்த Kama Sutra: A Tale of Love படத்தையும் இவரின் அம்மாதானே இயக்கினார்? 😊😊😊❣️
  19. இவரின் தந்தை உகண்டா முஸ்லீம் என்றும்… அதில் தாயாரின் பெயரை இந்திய இணையம் ஒன்றில் பார்க்க மலையாள இந்துக்களின் பெயர் போல இருந்தது. உண்மையா என தெரியவில்லை. காத்தான்குடிகாரருக்கு இந்த நியூயோர்க் செய்தி எட்டவில்லைப் போலுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை, ஜூம்மா தொழுகையின் பின்…. அந்தப் பெண்ணின் உடையை பிரித்து மேய்ந்து விடுவார்கள். 😂
  20. நிச்சயமாக £80 கொடுக்கவில்லை. ஒரு espresso கோப்பை அளவு அதிலும் அரைவாசி. நிச்சயம் £20 க்கு கீழேதான். 2017 இல்.
  21. அண்ணை, உண்டு கழித்த கோப்பிப்பழ விதையை சுத்தமாக்கி தான் பொடியாக்குவார்கள்! {யாழில ஒரு பெரும்புள்ளியை கண்டுபிடித்தாச்சி! ஒரு கப் கோப்பிக்கு 8000ரூபா(இந்திய) செலவளித்தால் பெரும்புள்ளி தானே?!}
  22. “நீயே எம் வேர்,” மக்கள் ஒன்றாய் முழங்கினர்! யாழ் நூலகம் அரசகாவலர்களால் எரிந்தது புத்தர் பெருமானும் சேர்ந்து எரிந்தார்! நூலகத்தின் முன்றலில் அவரின் சாம்பல் தொண்ணூறாயிரம் நூல்களின் சாம்பலுடன் கலந்து! அறிவார்ந்த அற்புதங்கள் உறைந்த இடம் ஆயிரமாயிரம் நூல்கள் வாழ்ந்த இடம்! இதயமற்ற அரசு நடத்திய கொடூரத்தில் ஈரமிழந்து வெம்மையில் வாடி வதங்கியது! அந்த நொடியில் நூலகத்தின் சுவர்கள் சாம்பலின் நினைவைக் கூறின! சாம்பலின் நடுவே விதை முளைத்தது தமிழர்களின் உள்ளத்தில் மீண்டும் மலர்ந்தாள்! மூடிய புத்தகங்கள் பிரார்த்தனையாய் திறந்தன மறைந்த எழுத்துக்கள் ஆசீர்வாதமாக மாறின! நூலகத்தின் அமைதி தெய்வீகத் தாலாட்டானது “நீயே எம் வேர்,” மக்கள் ஒன்றாய் முழங்கினர்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] “நீயே எம் வேர்,” மக்கள் ஒன்றாய் முழங்கினர்! https://www.facebook.com/groups/978753388866632/posts/32226482883666941/?
  23. Jan Gobeli · A Field Full of Red Mango Magic........!
  24. Creativity கிரியேட்டிவிட்டி · Anbu Anbu ·deSoosnrptn2l0 110b2:m,he9hr7m1 7h778aecail1a5t00afg2v948om7 · குஞ்சுப் பறவை ஒன்று சோகமாய் இருந்தது. அதன் தாய்ப் பறவை, ‘‘ஏன் சோகமாய் இருக்கிறாய்’’ என்று கேட்டது. குஞ்சுப் பறவை, ‘‘எனக்கு பிறரிடம் எதையும் கேட்பதற்கே கூச்சமாக இருக்கிறது’’ என்றது. ‘‘தேவையில்லாத வெட்கம் உன் வாழ்க்கையை சிறப்பில்லாததாக ஆக்கிவிடும்’ என்று தாய் எச்சரித்தது. குஞ்சு அதைக் கேட்டு, ‘‘சும்மா பொன்மொழியாக சொல்வது எளிது. செய்து காட்டுவது கடினம்’’ என்றது. இதைக் கேட்ட தாய்ப்பறவை, தன் குஞ்சுப் பறவையை அழைத்துக் கொண்டு பறந்தது. ஏரிக்கரையோரம் சென்று பறந்தபடி, நீரின் அருகே எச்சமிட்டது. ஏரியில் ததும்பிய சிற்றலை, எச்சத்தை நீரில் கரைத்தது. தாய்ப்பறவை ஏரியை அழைத்து, ‘‘எனக்கு என் எச்சம் வேண்டும். கொடுத்து விடு’’ என்றது. ‘‘அது என்னுள் கரைந்து போய்விட்டது. அதைத் திருப்பிக் கொடுக்க முடியாது. அதற்கு பதிலாக ஏரிக்குள் இருக்கும் மீன் ஒன்றைத் தருகிறேன்’’ என்றது ஏரி. தாய்ப்பறவை அந்த மீனை எடுத்துக்கொண்டு பறந்தது. ஒரு வீட்டின் முன்னால் வைத்துவிட்டு கொஞ்ச நேரம் மறைந்திருந்தது. வீட்டில் இருந்தவர்கள் மீனை எடுத்துச் சென்ற சிறிது நேரம் கழித்து கதவைத் தட்டி, ‘‘என் மீன் எங்கே? எனக்கு அது வேண்டும்’’ என்றது. ‘‘அதைக் குழம்பு வைத்து சாப்பிட்டுவிட்டோம். அதற்கு பதிலாக நாங்களே தயாரித்த தரமான கயிறு தருகிறோம்’’ என்று கொடுத்தார்கள். தாயும் குஞ்சும் கயிறை எடுத்துக் கொண்டு பறந்தன. வழியில் ஒருவர் கிணற்றருகே கவலையுடன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தன. அவருடைய கிணற்றில் கயிறு இற்றுப் போய்விட்டதாம். ‘‘கயிறில்லாமல் நீர் இறைக்க முடியாது. நீர் இல்லாமல் போனால் என் வீட்டில் நடக்க இருக்கும் விழா நடக்காது’’ என்று புலம்பினார். ‘‘நான் கயிறைக் கொடுத்தால் நீங்கள் என்ன தருவீர்கள்?’’ என்று தாய் கேட்டது. ‘‘என்னிடம் இருக்கும் அரிய வகை விதை நெல் ஒரு படி தருகிறேன். அது அழிந்து விட்டதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது அழியவில்லை. என்னிடம் விதையாக கொஞ்சம் இருக்கிறது’’ என்றார் அவர். தாயும் குஞ்சும் விதைநெல்லை சுமந்துகொண்டு வயலுக்கு வந்தன. அங்கே அந்நாட்டின் ராஜா விவசாயத்தை கண்காணித்துக் கொண்டிருந்தார். அவருக்கு விவசாயத்தில் அதிக ஆர்வம். அவர் அருகே விதை நெல்லைப் போட்டுவிட்டு தாயும் குஞ்சும் மறைந்தன. திரும்பி வந்தால் நெல் இல்லை. ராஜாவிடம் தாய் கேட்டது, ‘‘என் அரிய வகை விதை நெல் எங்கே?’’ ராஜா திடுக்கிட்டு, ‘‘அந்த அரிய வகை விதை நெல் யாருடையது என தெரியாது. நான் அதைப் பயிரிடச் சொல்லிவிட்டேன். அது உன்னுடையதா? அதற்கு பதிலாக நீ என்ன கேட்டாலும் செய்கிறேன்’’ என்றார். ராஜாவின் அரியணையில் ஒரு மணி நேரம் அமர்ந்து அரசாட்சி புரியும் உரிமையை தாய்ப்பறவை கேட்டது. ராஜாவும் ஒரு மணி நேரம் அதை ஆட்சி செய்ய வைத்தார். அதிகாரத்தைப் பெற்றதும் தாய்ப்பறவை, ‘‘எங்கள் பறவை இனங்களுக்கு தேவையான உணவை இனிமேல் ராஜாவே கொடுக்க வேண்டும்’’ என்றொரு ராஜ கட்டளை பிறப்பித்தது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குஞ்சுப் பறவை அசந்துவிட்டது. ஒன்றுக்குமே உதவாத எச்சத்தில் ஆரம்பித்து நாட்டை ஆளும் அதிகாரத்தைப் கைப்பற்றி, தங்களுக்கான உணவுக்கும் வழி செய்த அம்மாவின் செயல்திறன் பற்றி பெருமைப்பட்டு புகழ்ந்து சொன்னது. அதற்கு தாய்ப்பறவை, ‘‘நமக்கு இந்த உணவு வேண்டாம். ராஜாவிடம் சொல்லிவிடுவேன். நான் இதைச் செய்து காட்டியது உனக்கு புரிய வைக்கத்தான். ஒன்றுமே இல்லாத ஒன்றில் இருந்துகூட, கூச்சப்படாமல் கேட்கும் திறனால் பலவற்றை உருவாக்கிவிட முடியும். வெட்கப்படும் உயிரினங்களால் இவ்வுலகில் சிறப்பாக வாழ முடியாது. உனக்குத் தேவையானவற்றை கூச்சப்படாமல் உலகத்திடம் வாய்விட்டுக் கேள். கொடுப்பதும் கொடுக்காததும் அவர்கள் இஷ்டம். கேட்காமலேயே, ‘கொடுக்க மாட்டார்கள்’ என்று யூகம் செய்யாதே’’ என்றது. உழைப்போம் உயா்வோம்! படித்து பகிர்ந்தேன்!! Voir la traduction
  25. நல்லவிடயம். புதிய மாணவர்களுக்கு ஏற்கனவே தங்குமிடம் தொடக்கம் புதிய அணுகுமுறையில் கற்பது, பாடங்களை தெரிவு செய்வது, போக்குவரத்து , சாப்பாடு, காசு, குடும்பத்தை பிரிவது என ஏகப்பட்ட பிரச்சனைகள். பகிடிவதை தொல்லை இல்லை என்றால் அவர்களுக்கு கொஞ்சமாவது ஆறுதல் ஏற்படும்.
  26. வடக்கின் முதலமைச்சர் சுமந்திரன், கிழக்கின் முதலமைச்சர் சாணக்கியன். இது அவர்களின் கனவு. அதற்காக சில போலி அறிக்கைகள், சந்திப்புகள் தயாராகி இருக்கிறது. மக்கள் இன்னும் மூடர்கள் என்கிற மிதப்பு இவர்களுக்கு. தமிழரசுகட்சியென்றாலே; ஏமாற்றுக்கட்சி, மக்களை உசுப்பேத்தும் கட்சி என்பதை மக்கள் புரிந்துள்ளார்கள். வேறு தெரிவில்லாமலே அனுரா அரசை ஆதரிக்கிறார்கள் மக்கள். இத்தனை கட்சிகளை உள்ளிழுத்து விட்டவர்களே தமிழரசுக்கட்சிதான். பின் மக்களை குறை கூறுவார்கள். மக்களுக்கு கடமை செய்யாதவர்களுக்கு உரிமை இல்லை. எதுவும் செய்யாமல் கதிரையில் தொடர்ந்து இருக்க நினைப்பது சுத்த சுயநலம்.
  27. எங்களில் சிலர் கமலா ஹாரிஸ்சை வட மாகாணத்தை சேர்ந்தவர் என்று சொந்தம் கொண்டாடியது போன்று அதை விட தீவிரமாக மதத்தை கொண்டாடுகின்ற தனது இனம் தான் பின்பற்றுகின்ற முஸ்லிம் மதம் என்று சொல்கின்ற இலங்கையில் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் இருக்கின்றார்கள் அவர்கள் சோர்வடைந்து போகாமல் இருப்பதற்கு சந்தோசபட வைத்து நம்பிக்கை கொடுத்து உற்சாகபடுத்த தான் அவர்கள் பத்திரிக்கை அப்படி எழுதியுள்ளது. அவர்கள் சொல்ல வருவது அமெரிக்க நியூயோர்க் நகரமே முஸ்லிம் மதத்தின் கட்டுபாட்டின் கீழ் வந்துள்ளது.அடுத்து அமெரிக்க நாடு. அமெரிக்காவை முஸ்லிம் மதம் ஆண்டால் உலகையே முஸ்லிம் மதம் ஆட்சி செய்யும் 🤣
  28. அவர்கள் இறுதி இலட்சியமே முக்கிய முக்காத இடங்களில் எல்லாம் சிலைகள் வைத்து யாழ்ப்பாண அழகை நாசமாக்குவது தானே. சுத்தமான மலசலகூடம், குப்பைகள் ஒழுங்காக அகற்றும் ஏற்பாடுகளை செய்யட்டும்.
  29. மம்தானியின் முழு உரையும் கீழே இருக்கும் இணைப்பில் இருக்கின்றது. முழு உரையின் சில பகுதிகளை வெட்டி மேலே உள்ளதை உருவாக்கியிருக்கின்றார்கள். மம்தானியின் முழு உரையின் பொருள் வேறு. அவரை நியூயோர்க் மக்கள் தெரிவு செய்ததன் பின்னணியும் அதுவே. அதிபர் ட்ரம்பிற்கும், அவரது கட்சியினரின் அர்த்தமில்லாத நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளுக்கு எதிரான ஒரு மனநிலையே இன்று இங்கு நிலவுகின்றது. ஏதோ ஒன்று அல்லது சில அடையாளங்களுடன் இந்த வெற்றி மட்டுப்படுத்தப்பட்டதல்ல. மாறாக, இது பெரும்பாலான, வேறு வேறு அடையாளங்கள் கொண்ட மக்களின் இன்றைய அரசுக்கு எதிரான ஒரு தீர்மானம். எந்த ஊடகங்களாலும் திரிபுபடுத்த முடியாத வாக்குமூலம் ஒன்றை மக்கள் வழங்கியிருக்கின்றார்கள். https://www.theguardian.com/us-news/2025/nov/05/zohran-mamdani-victory-speech-transcript
  30. ஐந்து அடுக்கு பாதுகாப்பு. 😂
  31. விடுங்கோ பையா.அவருக்கு அவர் பிரச்னை.😀மற்றும் போட்டியை திறம் பட நடத்திய கந்தப்புவுக்கும் பங்கு பற்றிய மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.🙏
  32. போட்டியைத் திறம்பட நடத்திய கந்தப்புவுக்கு நன்றிகள்.போட்டியில் வெற்றிபெற்ற Ahasthiyan , அல்வாயன், செம்பாட்டான் வாழ்த்துகள்
  33. முதல் 3 இடத்தை பிடித்த அகஸ்தியன், அல்வாயான், செம்பாட்டான் , மற்றும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். போட்டியை திற‌ம்ப‌ட‌ ந‌ட‌த்திய‌ க‌ந்த‌ப்பு அண்ணாவுக்கு ந‌ன்றியும் பாராட்டுக்க‌ளும்👏
  34. போட்டியைத் திறம்பட நடத்திய @கந்தப்பு வுக்கு நன்றிகள். போட்டியில் வெற்றிபெற்ற @Ahasthiyan , @alvayan , @செம்பாட்டான் க்கும் வாழ்த்துக்கள்
  35. இந்தியா போன்ற நாட்டில் சும்மா சுட்டால் போதாது கால்களுக்கு இடையில் தொங்குவதற்கு குறிபார்த்து சுட்டால்தான் திருந்துவார்கள்.
  36. பகிடிவதையின்போது பலவந்தமாக மதுபானம் பருக்கிய இந்த சிரேஷ்ட நாய்களை முதலில் ஜெயிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.