Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87988
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33600
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    31956
    Posts
  4. alvayan

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    5416
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/18/25 in all areas

  1. அதுவம் ஒரு காரனம்.மற்றது மத்திய கிழக்கிலிருந்து கிழமைக்கு இரன்டு விமானமாவது வந்து பலாலியில் ரச் பண்னி போனாலே தெரியும் லாபமா நட்டமா என்று.பிரச்சனை அவர்களுக்கு விருப்பம் இல்லை .அவளவு தான்.
  2. அததெரண கருத்துப்படம்.
  3. இனவாதம், மதவாதத்தை கடந்து இலங்கையில் ஒன்றும் செய்ய முடியாது என்பதையே இந்தச்செயல் காட்டி நிற்கின்றது. தமிழரும் சிங்களவரும் ஒன்று சேர்ந்தால்; இலங்கையில் அரசியல் செய்ய முடியாது. இருபத்தோராந்திகதி பேரணிக்கு அச்சாணி பூட்டியாயிற்று. இதை பிடுங்கினால்; இவர்களது எதிர்ப்பு பூதாகரமாக மாறும். இதற்கு அடிபணிந்தால் எல்லா அடாவடியும் இந்த முறையிலேயே அரங்கேறும். இதற்கு செய்ய வேண்டியது; மக்களுக்கு விழிப்புணர்வு, விசேடமாக புத்தரை வைத்து அரசியல் நடத்தும், வயிறு விளக்கும் பிக்குகளுக்கு மத அறிவை போதிப்பது. அன்பை போதிக்கும் பௌத்தம் அடாவடியை வளர்க்கிறது. அதை எதிர்பார்த்து தூபமிட்டது யார்? அடுத்தவன் காணியில், தேவையற்ற இடத்தில், காரணமில்லாமல் சிலை வைப்பது, விகாரை எழுப்புவதுதான் சஜித்தின் நல்லிணக்கமா? அதை கேட்டால் நல்லிணக்கம் கெடுகிறது கேட்காவிட்டால் நாடுமுழுவதும் விகாரை எழுப்புவது, பின் இது சிங்கள பௌத்தநாடு என வரலாறு திரிப்பது. அது சரி சாணக்கியன் அண்மையில் ஒரு கதை எழுதினாரே, அதற்கு என்ன நடந்தது? இதே சஜித்துக்கு செம்பு தூக்கிய சுமந்திரன் இப்போ அருண் ஹேமச்சந்திரா பதவி விலகவேண்டுமென கூவி தன்னை மறைக்க பாக்கிறாரா? அல்லது சஜித் சொன்னவை சரியென்கிறாரா? இவர் ஒரு சட்ட மேதை என்று சிலர் கூவுகின்றனரே, எங்கே தன் சட்டத்திறமையை நிரூபித்து அந்த புத்தரை வெளியேற்றட்டும் பாப்போம்! ம், இன்று பதினெட்டாந்திக்காதி, இன்னும் மூன்று நாள் இருக்கிறது, தமக்கு சார்பாக மக்களை திரட்டி பேரணியை நடத்துவதற்கு. அதற்கு, கேவலம் மதத்தை பயன்படுத்துவதும், பிக்குகள் அடாவடி செய்வதும் உண்மையான மதமா? எனக்கென்னவோ இதற்குப்பின்னால் சஜித் இருப்பதுபோல் தோன்றுகிறது. நீதிமன்ற உத்தரவு வரும்வரை புத்தர் சிலை நிறுவுவதை நிறுத்தியிருக்கலாம், அதற்காக அடாவடிக்கு அடிபணிந்து எல்லாவற்றுக்கும் அடிபணியும் தோத்துப்போன அரசியலே நடைபெற வாய்ப்புள்ளது. அடாவடிகள் இதே அடாவடியை, தந்திரத்தை பாவித்து தமது காரியத்தை நிறைவேற்றுவார்கள்.
  4. தினமும் ஒரு வரி தத்துவம் · Suivre onsertSpdolc666m7t7fg19t30uah2m4h6141c2cm5tf 0mm2mg3a41t6cfi · படித்து பகிர்ந்து 🌹 தினம் ஒரு குட்டிக்கதை - வாய்ப்புகள் ஏராளம்... ஒரு ஊரில் தலைசிறந்த மாயாஜாலக் கலைஞர் வாழ்ந்து வந்தார். அவருக்கு தெரியாத மாயாஜாலக் கலைகளே கிடையாது. அவருடைய தனிச்சிறப்பு என்னவென்றால், எந்த ஒரு இடத்தில் அவரை பூட்டி வைத்தாலும், ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே அதில் இருந்து விடுபட்டு வெளியே வந்துவிடுவார். அவருடைய கை, கால்களை விலங்கிட்டு, தண்ணீருக்குள் போட்டு அழுத்தியபோது, லாவகமாக அதிலிருந்து சில மணித்துளிகளில் வெளியே வந்தார். இன்னொரு முறை, ஒரு அறையில் அவரை அடைத்தபோது அவர் கூறியவாறு ஒரு மணி நேரத்திற்குள்ளேயே அறைக்கதவை திறந்து வெளியே வந்தார். அவர் எப்படி இதனை செய்கிறார்? என்ன யுக்திகளை மேற்கொள்கிறார்? என்பது யாருக்கும் புரியாத புதிராகவே இருந்தது. அவர் வாழ்ந்து வந்த அதே ஊரில் உலகிலேயே மிகவும் கட்டுக்கோப்பான, யாரும் தப்பிக்க முடியாத சிறைச்சாலை ஒன்று இருந்தது. இதுவரை அந்த சிறைச்சாலையில் இருந்து ஒருவர்கூட தப்பித்தது இல்லை என்னும் சான்றும் பெற்றது அந்த சிறைச்சாலை. இதனை கேள்விப்பட்ட அந்த மாயாஜால கலைஞர் தன்னை அந்த சிறைச்சாலையில் அடைக்கும் படியும், ஒரு மணி நேரத்தில் நான் வெளியே வந்து என்னுடைய திறமையை உங்களுக்கு வெளிக்காட்டுகிறேன் என்றும் கூறினார். அதற்கு ஒப்புக்கொண்ட அந்நாட்டு அரசாங்கம், அவரை சிறைச்சாலையின் ஓர் அறையில் தள்ளி கதவை மூடினர். உள்ளே சென்று அவர் முதலில், தான் அணிந்திருந்த இடுப்பு பட்டையில் ஒளித்து வைத்திருந்த ஒரு கம்பியை வெளியே எடுத்தார். பின்னர் அந்த கம்பியை வைத்து கதவில் இருந்து சற்று தள்ளி இருக்கும் பூட்டை திறக்க முற்பட்டார். அரை மணி நேரம் முயன்று பார்த்தார் முடியவில்லை. ஒரு மணி நேரம் முயன்று பார்த்தார். ஆனால் முடியவில்லை. தொடர்ந்து இரண்டு மணி நேரம் முயன்று பார்த்தார். ஆனால் முடியவில்லை. மிகவும் சோர்வுற்று எரிச்சலுடன் காணப்பட்ட அவர் அசதியில் அந்த கதவின் மீது சாய்ந்தார். கதவு தானாக திறந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், கதவு பூட்டப்படவே இல்லை. அவருடைய எண்ணங்களிலேயே கதவானது பூட்டப்பட்டு இருந்தது. அதன் காரணமாகவே கண்டிப்பாக நம்மை பூட்டி இருப்பார்கள் என்று எண்ணி, பூட்டாத கதவை கம்பியை விட்டு திறக்க முயன்று கொண்டிருந்தார். கதையின் நீதி:- நம்மில் பலர் எண்ணங்களிலேயே இவ்வுலகில் வாய்ப்புகள் இல்லை என்று பூட்டு போட்டுக்கொண்டு உள்ளதால், செய்வதறியாது திகைத்துக் கொண்டு இருக்கிறோம். வாழ்க்கையில் வாய்ப்புகள் ஏராளம். அந்த வாய்ப்புகளை தேடி நாம் சென்றோம் என்றால் நமக்கான இடம் நிச்சயம் கிடைக்கும். படித்ததில் பிடித்தது. ~மகிழா. 💃" - மீள் பதிவு. 🌹 Voir la traduction
  5. Published By: Digital Desk 3 18 Nov, 2025 | 03:09 PM (இணையத்தள செய்திப் பிரிவு) ஏஐ கருவிகள் சொல்லும் அனைத்தையும் மக்கள் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஏஐ மாதிரிகளில் பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மற்றைய கருவிகளுடன் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம், ஏஐ தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பியிருக்காமல், செழுமையான தகவல் அமைப்பைக் (information ecosystem) கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. "இதனால்தான் மக்கள் கூகிள் தேடலையும் பயன்படுத்துகிறார்கள், மேலும் எங்களிடம் துல்லியமான தகவல்களை வழங்குவதில் அதிக உறுதியுடன் இருக்கும் பிற தயாரிப்புகளும் உள்ளன." "நீங்கள் ஆக்கப்பூர்வமாக ஏதேனும் எழுத விரும்பினால்" ஏஐ கருவிகள் உதவியாக இருந்தாலும், மக்கள் "இந்தக் கருவிகள் எதற்குச் சிறந்ததோ அதற்காகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும், சொல்லும் அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது" "எங்களால் முடிந்த அளவு துல்லியமான தகவல்களை வழங்குவதற்காக நாங்கள் செய்யும் பணியில் பெருமை கொள்கிறோம், ஆனால் தற்போதைய அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தில் சில பிழைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன," https://www.virakesari.lk/article/230693
  6. தன்னறம் -------------- நீங்கள் எல்லோரும் நலமா, ஒரு கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது, எப்படி எழுதுவது என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. நான் இதற்கு முன்னர் ஏதாவது கடிதம் எழுதி இருக்கின்றேனா என்றும் ஞாபகமில்லை. கடிதங்களை அவரே தான் எழுதினார். வந்த கடிதங்களை வாசித்தது கூட அவரேதான். சில வேளைகளில் சில கடிதங்களில் இருந்த ஒன்று இரண்டு சமாச்சாரங்களை சுருக்கமாகச் சொல்லியிருக்கின்றார். அவர் என்னை எதையும் வாசிக்க விடவில்லை என்றில்லை, உண்மையில் எதையாவது வாசி வாசி என்று எனக்கு அவர் சொல்லிக் கொண்டேயிருந்தார். நான் தான் எதையும் வாசிக்கவில்லை. எனக்கு ஒரு இடத்தில் இருந்து வாசிப்பதற்கு நேரம் இருக்கவில்லை என்று தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அது பொய், நானே உருவாக்கிய ஒரு காரணம் என்று இப்பொழுது எனக்குப் புரிகின்றது. இப்பொழுது இந்தச் சிறிய அறை தான் என்னுடைய உலகத்தின் மிகப் பெரும் பகுதி. இந்த அறையை சிறிது என்பதற்கு மேல் எப்படிச் சொல்வது என்றும் தெரியவில்லை. என்னுடைய வீட்டில், ஆமாம் அது என்னுடைய வீடு தான், ஐந்து அறைகள் இருந்தன. முதலில் நான்கு அறைகள் மட்டுமே இருந்தன, பின்னர் நாங்கள் ஒரு பெரிய அறையை வீட்டுடன் இணைத்துக் கட்டினோம். நான் சிறிய அறை, பெரிய அறை, சாமி அறை என்று இப்படித்தான் சொல்லுவேன். அவர் தான் யாரும் கேட்டால் ஒவ்வொரு அறைகளின் அளவையும் ஒரு பெருக்கல் வாய்ப்பாடு போல சொல்லுவார். இங்கு ஒவ்வொருவருக்கும் இதே போன்ற சிறிய அறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கட்டில், ஒரு வசதியான கதிரை, இரண்டு சின்ன அலுமாரிகள், சின்ன மேசை மற்றும் நானும் சேர்ந்து இந்த அறையை நிரப்பிவிட்டோம். ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் கொடுப்பார்கள். நான் அது வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். எதையாவது வாசி வாசி என்று அவர் சொன்னபடி புத்தகங்களை வாசித்துக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் என் அறையைத் திறந்தால், உங்கள் வலதுகைப் பக்கம் இருக்கும் அலுமாரிக்குள் இருப்பது அவ்வளவும் புத்தகங்களே. என்னுடைய சின்ன மகள் ஒவ்வொரு மாதமும் புதிது புதிதாக வாங்கி அடுக்கிவிடுகின்றார். எங்களுக்கு நான்கு பிள்ளைகள். இரண்டு ஆண் பிள்ளைகள், இரண்டு பெண்கள். ஆண், பெண், ஆண், பெண் என்று அடுத்தடுத்துப் பிறந்தார்கள். இப்பொழுது ஆறு பேரப் பிள்ளைகளும் இருக்கின்றார்கள். இங்கிருப்போர் பலருக்கும் இப்படியே பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் வெளியே அவரவர்களின் வீடுகளில் இருக்கின்றார்கள். பிள்ளைகள் மேல் கோபமோ அல்லது ஒரு மன விலக்கலோ இருந்தாலும் கூட, பேரப் பிள்ளைகளின் மேல் ஒரு இம்மியளவு கூட குறையாத பாசமே இங்கிருப்போர் எல்லோரிடமும் இருக்கின்றது. இந்த வராந்தாவில் முதல் அறையில் இருக்கும் அவர் ஒரு சரியான முசுடு. அவரின் மனைவி சில வருடங்களின் முன் போய்ச் சேர்ந்துவிட்டார். சில மாதங்களிலேயே அவரை அவரது பிள்ளைகள் இங்கு கொண்டு வந்து விட்டதாகச் சொல்கின்றார்கள். அவர் எவருடனும் முகம் கொடுத்து கதைப்பதில்லை. ஆனால் அவருடைய பேரப் பிள்ளைகள் வரும் நாட்களில் அவர் முழுதாக மாறி, மிகவும் உற்சாகமாக இருக்கின்றார். அப்படியான ஒரு நாளில் என்னைப் பார்த்து சிரித்தும் இருக்கின்றார். மீண்டும் கோவிட் வைரஸ் பரவுகின்றது என்று இப்பொழுது அறைக்குள்ளேயே இருக்கச் சொல்லிவிட்டார்கள். இந்த யன்னல் ஊடாக தெரிவது தான் நிலம், நீலம் என்றாகிப் போய்விட்டது. முன்னரும் முதலாவது கோவிட் தொற்றுக் காலத்தில் இப்படி இருந்திருக்கின்றேன். அப்பொழுது நான் இங்கு வந்து கொஞ்ச நாட்களே ஆகியிருந்தது. அந்த நாட்களில் அவருக்கு முன்னால் நான் போய்ச் சேர்ந்திருக்கலாமோ என்ற எண்ணம் சில தடவைகள் வந்தது. ஆனாலும் அவர் இவற்றை, இந்த தனிமையை தாங்கமாட்டார். எது நடக்க வேண்டுமோ, அதுவே நடந்தது போல. முதல் தொற்றுக் காலத்தில் அடிக்கடி இங்கு இழப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்பொழுது எனக்கு இங்கிருக்கும் எவரையும் அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் மனமெங்கும் ஒரு வலி இருந்து கொண்டிருந்தது. அது இல்லாமல் போய்க் கொண்டிருந்தவர்களைப் பற்றியதா, அல்லது என்னைப் பற்றியதா என்ற சந்தேகம் இன்றும் இருக்கின்றது. புத்தகங்கள் வாசித்தால் இப்படியான கேள்விகள் அதுவாகவே உள்ளுக்குள் வரும் போல. அவர் கதைக்கும் சில விடயங்கள், கேட்கும் சில கேள்விகள் அன்று எனக்கு விளங்காமல் முழித்துக் கொண்டு நின்றிருக்கின்றேன். அவர் வர வர கொஞ்சம் பைத்தியமாகிக் கொண்டிருக்கின்றாரோ என்று நான் நினைத்தாலும், நல்ல காலம், நான் அதை எவரிடமும் சொல்லவில்லை. சில சம்பவங்கள் நடந்த பின்னரே அவை நடந்து விட்டன என்ற உணர்வும், அதையொட்டிய விளைவுகளும் ஏற்படுகின்றது. அப்படியான சம்பவங்கள் உலகில் எப்போதும் நடந்து கொண்டேயிருக்கின்றன என்றோ, அவை எங்களுக்கும் நடக்கக் கூடுமோ என்ற பிரக்ஞை அற்றே மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர் இறந்தது, நான் இங்கே வந்தது மற்றும் இடையில் நடந்த சம்பவங்கள் இவை எதுவுமே புதிதல்ல. இவை ஆயிரம் ஆயிரம் தடவைகள் இப் பூமியில் இப்படியே ஏற்கனவே நடந்து இருக்கின்றன. முதுமை என்றாலே துன்பம் என்று நான் வாசித்த ஒரு புத்தகத்தில் இருந்தது. அப்படி ஒரேயடியாகச் சொல்லி விடலாம் என்று நான் நம்பவில்லை. ஆகக் குறைந்தது, அதை நான் இன்னமும் நம்பவில்லை. எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒரு கடமை எப்போதும் இருக்கின்றது தானே. முதுமையில், தனிமையில் கூட அப்படி ஒரு கடமை ஒன்று இருக்கத்தானே வேண்டும். நேற்று என்னைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார். அவர் வேறு ஒரு நாட்டில் இருந்து இங்கே விடுமுறைக்கு குடும்பத்துடன் வந்திருக்கின்றார். அப்படியே என்னையும் பார்க்க வந்தார். என்னை விட வயதில் மிகவும் இளையவர். உறவு முறையில் சொந்தக்காரரும் கூட. அவர்களின் வீட்டில் நாங்கள் இருவரும் இரண்டு தடவைகள் தங்கியிருக்கின்றோம். அப்பழுக்கற்ற ஒரு மனிதனாகவே அவர் தெரிந்தார். கோவிட் தொற்று என்பதால் ஒருவரையும் அனுமதிக்க முடியாது என்று சொல்லியிருக்கின்றார்கள். பின்னர் வேறு நாட்டில் இருந்து வந்தவர் என்று தெரிந்து, முகத்தை மறைத்து சில நிமிடங்கள் மட்டுமே உள்ளே அறைக்கு வர அனுமதி கொடுத்தார்கள். கதவைத் திறந்த அவர் அங்கேயே நின்று கொண்டிருந்தார். அப்படித்தான் நிற்கச் சொல்லியிருக்கின்றார்கள். நான் எதிர் மூலையில் நின்றேன். மௌனமாகவே நின்றவர் 'என்னைத் தெரிகின்றதா ............' என்று மெதுவாகக் கேட்டார். முகத்தின் பெரும்பகுதி மூடப்பட்டிருந்தாலும் அந்தக் கண்கள் எனக்கு நன்கு தெரிந்தவையே. ஆனாலும் அந்தக் கண்களை ஒரு கணத்துக்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. எனக்கு எவரின் பரிதாபமும் தேவையில்லை. 'அழும் போது ஒரு பெண் அபலையாகின்றாள்.................' என்ற ஒரு கவிதை வரியை என் கணவர் அவரது கடைசி நாட்களில் பல தடவைகள் சொல்லியிருக்கின்றார். அந்த முழுக் கவிதையையும் நான் இன்னமும் தேடி வாசிக்கவில்லை. நான்கு பிள்ளைகளும் அவர்களின் குடும்பங்களுடன் இடைக்கிடையே வந்து விட்டுப் போவார்கள். வரும் போது ஏதேதோ வாங்கி வருவார்கள். அவர்கள் வந்து போன பின், அவர்கள் வராமலே இருக்கலாம் என்றும் தோன்றுவதுண்டு. நான் சிறு வயதில் கோழிக்கு அடை வைப்பேன். ஒரு தடவை 15 முட்டைகள் வைத்து 14 குஞ்சுகள் பொரித்தன. அந்தப் 14 குஞ்சுகளையும் தாய்க் கோழி கவனமாகப் பார்த்துக் கொண்டது. ஒரு நாள் தாய்க் கோழி மட்டும் படுத்திருந்தது. ஒரு குஞ்சுகளையும் காணவில்லை. குஞ்சுகளுக்கு என்ன நடந்தது என்று பதறிப் போய் தாய்க் கோழிக்கு அருகே போனேன். மெதுவாக செட்டைக்குள்ளிருந்து ஒரு குஞ்சு எட்டிப் பார்த்தது. 14 குஞ்சுகளும் உள்ளேயே இருந்தன. எப்படி ஒரு கோழியால் இது முடிகின்றது என்று ஆச்சரியமாகவே இருந்தது. குஞ்சுகள் ஓரளவு வளர்ந்து, வீட்டு முற்றத்தில் நின்ற மாமரத்தில் அவைகளாகவே பறந்து ஏற ஆரம்பித்தவுடன், தாய்க் கோழி குஞ்சுகளை மெதுவாகக் கொத்திக் கலைக்க ஆரம்பித்தது. அதுவும் ஆச்சரியமே. நான் விரும்பியே இங்கே வந்தேன் என்று நேற்று என்னைப் பார்க்க வந்தவருக்கும் சொன்னேன். அவர் அதை நம்பவில்லை என்பதும் எனக்குத் தெரிந்தது. ஆனாலும் எனக்கென்று ஒரு கடமை இருக்கின்றதல்லவா. 'நீங்கள் இனிமேலும் கஷ்டப்படாமல் போங்கள்............. நான் இருக்கும் வரை பிள்ளைகளுக்கு குறை குற்றம் எதுவும் வராமல், என்னால் முடிந்த வரை, பார்த்துக் கொள்கின்றேன்..................' என்று அவருக்கு ஒரு வாக்கும் கொடுத்து இருக்கின்றேன்.
  7. அட பாவிகளா வாகனத்தை ஓரமா நிறுத்திவிட்டு ஒழுங்கா அனுபவித்திருக்கலாமே?
  8. கடன் பாக்கி வைக்காதீர். காரணம்.... 👆
  9. ஐயனார் கோயில்கள் முன்பே பரவலாக உள்ளன. ஐயப்பன் கோயில்கள் வெவ்வேறு இடங்களில் இப்போது உள்ளதாக தேடல் மூலம் அறிந்தேன். இலங்கையை விட்டு வெளியேறிய பின்பே ஐயப்பன் ஆலயம் அவ்வப்போது செல்கின்றேன். வழமையான சுவாமி தரிசனம் பெறுகின்றேன். ஐயப்ப பக்தர்கள் கடைப்பிடிக்கும் முறைகளை பின்பற்றுவது இல்லை.
  10. எம்.ஜி.ஆர் கடிகாரம் இன்னும் ஒடுதாமே.. அது நிற்காதாமே.. றிக் றிக் சவுண்டு கேட்குதா ..? காதை வச்சு கேளு..
  11. அப்படி வாங்கினால் இரண்டு விடயங்களை நிச்சயம் செய்யுங்கள். பள பள (satin) வெள்ளையாக இருக்கும் உள் வர்ணத்தை off white ஆக, அல்லது வேறொரு வெளிர்நிறமாக மாற்றி விடுங்கள். தரையை இப்படி வளுக்கல் தரையாக வைத்திருக்காமல், எங்கள் ஊர் லேலண்ட் பஸ்களில் இருக்கும் உராய்வு கொண்ட (friction) தரையாக மாற்றுங்கள். இல்லா விட்டால், கனடா இலண்டனில் இருந்து இதற்காகவே கூட்டமாக பிளைற் பிடித்து வந்து படகில் வழுக்கி விழுந்த பின்னர் நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போடுவார்கள்😂. நீங்கள் நஷ்ட ஈடு கொடுக்க இயலாமல் படகை நீங்களே மூழ்கடித்து விட்டு அதற்குரிய காப்புறுதியை எடுத்துக் கொண்டு பிரிட்டனுக்கு வந்து விட வேண்டியிருக்கும்! பிகு: இப்படித் தப்பிப் போவது தவறென்று யோசிக்காதீர்கள்! பிரிட்டன் சட்டங்களில் இதற்குரிய ஓட்டைகள் சலுகைகள் உங்களுக்கு இருக்கும், யாழ் களத்திலேயே உங்களுக்கு லோயரைப் பிடிக்கலாம்😎!
  12. பெடியன் ஹெல்மெட் போட்டுள்ள படியால்... அவரின் மோட்டார் சைக்கிளில், இவவின் ஆட்டோவை திரத்திக் கொண்டு வந்து வழி மறித்து இருக்கலாம். அந்த நேரம் இவ ஆட்டோவை நிறுத்தவும், அவன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி, இவவிற்கு கிட்ட வரும் நேரத்தில்... எதற்கும் ஒரு பாதுகாப்பிற்கு வீடியோவை ஓட விட்டிருக்கலாம். பெடியனுக்கு அனுபவம் காணாது. வெள்ளைத் தோலை கண்டவுடன் சொக்கிப் போய் விட்டான். 🤣 காணொளி ஓடிக் கொண்டு இருக்கின்றது என்பதை, அவர் பொம்பிளை சுதியிலை, கவனிக்காமல் விட்டு விட்டார். அந்தக் கைத்தொலை பேசியை இவ தனது கையில் வைத்திருக்கவில்லைத்தானே. அது ஒரு மூலையில் சிவனே என்று, வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தது. அதனை இவர் கவனிக்க சந்தர்ப்பம் குறைவாகவே இருந்திருக்கும். 😂
  13. பெண்ணின் சம்மதம் இல்லாமல், ஆணுறுப்பை அவருக்கு காட்டுவதும் பாலியல் குற்றம் தான். இதனையே பெண் ஆணுக்கு செய்தாலும் அதுவும் குற்றமே. இலங்கையில் இப்படியான சைக்கோ தனமானவர்கள் பாடசாலைக்கு செல்லும் பதின்ம வயது பெண் பிள்ளைகளுக்கு காட்டும் நிகழ்வு பரவலாக நிகழ்கின்றது. அனேகமான பெண்கள் இப்படியான ஒரு நிகழ்வை தெருவிலோ, பேரூந்துகளிலோ அல்லது நெருங்கிய உறவுகளிடம் இருந்தோ சந்தித்து இருப்பார்கள். ஒரு வாரத்துக்கு முன்னர் இங்கு ஒஷாவா எனும் சிற்றூரில், ஒருவர் மூன்று நான்கு வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தன் ஆணுறுப்பை அங்குள்ள வயதான பெண்மணி உட்பட சிலருக்கு காட்டி, இப்போது கைதாகி உள்ளார்.
  14. நானும் இதையே யோசித்தேன். இருந்தாலும் சாதாரணமாக ஒருவருடன் உரையாடும் போது எப்படி யோசித்தார். காணொளி பண்ணுகிறா என்று தெரிந்தும் சேட்டை விட்டவர் எப்படியான முட்டாள். இதிலே குடும்பஸ்தர் வேறயாம். மறியலால் வெளியே வந்து வீட்டுக்குள் ஊருக்குள் எப்படி நடமாடப் போகிறான்?
  15. காணொளி: 👉 https://www.facebook.com/watch/?v=720409650518617 👈 அவர் ஓடிக் கொண்டு இருக்கும் ஆட்டோவின் வலது பக்க மேல் மூலையில், Navigation, Google Map போன்றவை பார்ப்பதற்காக பொருத்திய கைத்தொலைபேசியில்... சந்தேகத்துக்கு இடமான ஒருவர் வழி மறிக்கும் போது, உசாராகி வீடியோவை ஓட விட்டிருக்கலாம். மொத்தத்தில் இப்படியான இடங்களில் தனியே சுற்றுபவர்கள்... உசார் பேர்வழிகளாக இருப்பார்கள்.
  16. வாழைப்பூ எப்படி இப்படி நிமிர்ந்து நிற்குது?
  17. மனிதர்களுடன் நெருக்கமாக உள்ள பிராணிகளில்... டொல்பின், நாய், பூனை போன்றவை முக்கியமானவை என நினைக்கின்றேன். யானை போன்ற மற்றைய விலங்குகள் மனிதர்களுடன் நெருக்கமாக பழகினாலும் சில நேரங்களில் ஆக்ரோசமாக மாறி விடும்.
  18. அண்ணை, விசா எடுக்காட்டியும் சனத்திற்கு இலவசமாக விளையாட்டு காட்டும் டொல்பின்களுக்கு நன்றி தான் சொல்லவேணும்.
  19. அதுகளுக்கு என்ன... விசா எடுக்காமல், நாடு நாடாக சுத்தி திரியுதுகள். 🐋 🐬 🙂
  20. எங்கெல்லாம் பணவசதி பெருகிய மக்களும் அறியாமையும் சேர்ந்து தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் ஐயப்பன் மட்டுமல்ல எல்லா சாமிகளும் எழுந்தருளுவார்கள்
  21. நானும் ஐயப்பனை வழிபடுகின்றேன். அறியா பருவ பிள்ளைகளிற்கு ஐயப்ப சுவாமிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்துவது எல்லாம் சரி. கற்கும் வயதில் நாடு தாண்டி பயணம் செய்யும் அளவுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டுமா? கடவுளை எமக்குள் காண வேண்டும் என்பதை தானே இந்து மதம் போதிக்கின்றது. இப்போதே காடு, மலை ஏறிச்சென்று கடவுளை தரிசிக்கும் ஆர்வத்தை சிறுவர்களிற்கு ஏற்படுத்தினால் அவர்கள் கடைசியில் சாமியாராக போகவேண்டியது தானா? ஐயப்பன் அனைவரையும் காக்கட்டும்!
  22. இதே முறையில் சிங்கப்பூரில் மின்சாரம் உற்பத்தி செய்கிறார்கள். சிறிய நாடான சிங்கப்பூரில் land fill முறை முடியாதது. பின்னர் வரும் சாம்பலை பாவித்து சிறிய தீவுகளை உருவாக்குகிறார்கள். சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வாயுக்களை வடிகட்டி அகற்ற முடியும் என நினைக்கிறேன். வடமாகாணத்துக்கு ஏற்ற முறை, ஆனால் எரிப்பதற்கு போதுமான அளவு திண்மக் கழிவுகள் இருக்கிறதோ தெரியவில்லை.
  23. நியூசிலாந்தோ...நெதர்லாந்தோ..பெட்டை கெட்டிக்காரி..உந்தப்பெரிய பாம்பைக்கண்டும் பதறாமல் ஆட்டோ ஓட்டிச் செல்வதென்றால் சும்மாவா...
  24. கழிவுகளை எரிப்பதன் மூலம் நீராவி உடற்பத்தியாக்கி அதன் மூலம் செய்வார்கள் என நினைக்கிறேன்.
  25. சிங்கள பகுதிகளை புனரமைக்க சீனா...? வடகிழக்கு பகுதிகளை புனரமைக்க இந்தியா...? ஐநாவுக்கு சொல்லாமல் இப்பவே பிரிச்சிட்டாங்கள் போல கிடக்கு...😎
  26. புத்தரை கொண்டுபோய் ..திருப்ப இறக்கினதில் அனுர கோஸ்டியின் சூட்ட்சுமமும் இருக்கலாம் ..21ம் திகதி கூடும் பிக்குமாருக்கு ...ஒரு ஆணி அடித்தமாதிரி ...நாம உங்களோடைதான் என்பது போலவும் அடுத்தது நம்ம நாமல்தம்பியும் ....தமிழரின் நகை வித்து எடுத்த காசிலை ..4 பிக்கருக்கு விசுக்க ..அவையும் அந்த பிளாஸ்டிக்கு புத்தரை கொண்டுவந்து வைத்து குழப்பம் ஏற்படுத்தி...பிக்குமாரை திசை திருப்பி..21க்கு கொண்டுபோக முயற்சித்திருக்கல்லாம் மாவீரர் நாளுக்குநாளிருக்கு ...நாமல் தம்பி ..அதுக்கும் ஏதாவது ஜொள்ளுவிட்டு ...ஆள்சேர்க்கல்லாம்.. சஜீத்து அண்ணையும் பாளிமெண்டிலை ...கொட்டு கொட்டென்று கொட்டிப்போட்டு போட்டார்...நம்ம ஆளூ லேசான ஆள்கிடையாது..10 ஆயிரம்..புத்த கோவிலுக்கு அத்திபாரம் போட்ட ஆள்..அதோடை தொல்பொருள் திணைக்கள ம் ..தொடங்கி ..காணீ பிடித்த ஆள்...மொத்தத்தில் அனுரவுக்கு வருசக்கடைசிப் பலன்..சரியில்லைப்போல
  27. நானும் அந்த வீடியோவை பார்த்தனான். அந்த தம்பி பாலியல் தொந்தரவு செய்யவே இல்லை.கையை பிடிச்சு இழுக்கக்கூட இல்லை. 🤣
  28. அட..யாராயிருந்தாலும் ..போடலாம்தானே....பொத்துவில் பக்கம் எண்டால் தனிக்குசி..
  29. அப்ப அவர்களின் மலையாளிகளின் பதிமுகம் தண்ணி எனப்படும் மூலிகை தண்ணி டுபாக்கூர் தானா ?
  30. தூக்கின காவடி இறங்க முன்னம் புத்தர் திரும்பி வந்திட்டார்😂
  31. யாழ்கள அனுர காவடிகள் இந்த புத்தர் சிலைக்கு கொஞ்சம் புனருத்தான நிதி அனுப்பி வைக்கும்படி கேட்கக்ப்படுகிறனர் 😂. ஹேமசந்திரா….(ன்) வின் தலையில் புத்தர் சிலை வைத்தாலும் அவரால் ஒரு மண்ணாங்கட்டியும் செய்ய முடியாது 😂
  32. பொத்துவில் பக்கம் எண்டதும் உங்கட எண்ணம் “அங்க” ஓடுது போல😂. பொலவந்தலாவ, எருவிலில் திருமணம் எண்டால் தமிழராக இருக்கவே வாய்ப்பு என நினைக்கிறேன். கவனம் 😂. பிகு வீடியோ பார்த்தனான். இந்த சின்ன விடயத்தை நெதர்லாந்து பிள்ளை வடிவா டீல் பண்ணி விட்டது😂.
  33. மன்னிப்பு கேட்டதாகவும் செய்தி வருகுது....மைதானத்தில் நல்ல பிள்ளையாக இருந்த பும்ரா ...ஆசியகப் ..பாகிஸ்தான் மச்சிலிருந்து ...குளப்படி காரனாக மாறியிருக்கிறார் இந்தியாவின் பிச் விளையாட்டு இந்தியாவையே பிச்சு விட்டுது...இந்தியாவின் இறுதி இன்னிச் துடுப்பாட்டத்தை..பார்க்கையில்...பனங்காணிக்குள் ரப்பர் பந்தில் விளையாடிய கிரிக்கட்டுப் போல இருக்குது..
  34. ரேடியோவுக்குள்.... எப்படி பேசும் ஆள், உள்ளே போனார். நல்லது செய்தால், நல்லது நடக்கும். இப்ப தான் தெரியுது எவ்வளவு பொய் அது. வெத்தலை போட்டால்... கோழி கொத்தும். பணம், பதவி... படைத்தவன் பொய் சொல்ல மாட்டான். அவன் நல்லவன். பணக்காரர்களுக்கு தான்.... Sugar, B P நோய் எல்லாம் வரும். பொய் சொன்ன வாய்க்கு, போஜனம் கிடைக்காது. பல்லு விழுந்த உடனே... அதை மண்ணிலே புதைக்காமல் விட்டால், அது திரும்ப முளைக்காது. தப்பு செய்தால்... சாமி கண்ணை குத்தும். நான் உங்களை மட்டும் தான், love பண்ணுறேன். டிகிரி படித்தவுடன் வேலை கிடைத்து விடும் என்று நம்பியது. மழையும் வெயிலும் ஒரு சேர வந்தால்... யானைக்கும், பூனைக்கும் கல்யாணம் நடக்கும். எம். ஜி. ஆர். அணியும், கூலிங் கிளாஸ் வழியாக பார்த்தால்... "ஆண், பெண் அனைவரும் ஆடை இல்லாமல் தெரிவார்கள்!"
  35. டொல்பின்களுக்கு இலுப்பைப்பழம் ரொம்ப பிடிக்கும் போலிருக்கு, அசப்பில் அதுவும் கடலில் வாழும் வௌவ்வால் இனம் போலிருக்கு ........! 😂
  36. ஜொத்பூர் பாலைவன புகையிரதம்
  37. இங்கிலாந்தில் AI யால் உருவாக்கப்படும் படங்களை கண்டறிய புதிய நடவடிக்கை! இங்கிலாந்தில் AI-யால் உருவாக்கப்படும் துஷ்பிரயோரயோகங்களை சமாளிக்க இங்கிலாந்தின் புதிய சட்ட மூலம் உதவும் என கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது. அதன்படி, AI மாதிரிகள் மூலம் உருவாக்கப்படும் போலி படங்களை அவை போலி என உறுதிப்படுத்துவதற்கும் அவற்றைச் சரிபார்ப்பதற்கும் இந்த புதிய விதிகள் உதவும் என கூறப்படுகிறது. AI-யால் உருவாக்கப்பட்ட விடயங்களை பயன்படுத்தும் குழந்தைகளை நிகழ்நிலையில் பாதுகாக்க இந்த முன்மொழியப்பட்ட சட்டமூலம் உதவுவதாக கூறப்படுகிறது. இதேவேளை, Internet Watch Foundation இன்டர்நெட் வாட்ச் ஃபவுண்டேஷன் (IWF) போன்ற நிறுவனங்களும், AI டெவலப்பர்களும், சட்டத்தை மீறாமல் அத்தகைய உள்ளடக்கத்தை அவதானித்து அதனை சோதனை செய்யமுடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1452604

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.