Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    31956
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    19112
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    7046
    Posts
  4. புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    16468
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/19/25 in all areas

  1. எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை, அமெரிக்காவில் (அல்லது எந்த மேற்கு நாட்டிலும்) வருமானம் இல்லா விட்டால் வாழ முடியாது. வருமானம் வேலையின் மூலம் பெற்றுக் கொள்ள முடியாதோர், அல்லது வரும் வருமானம் போதாமல் இருப்போர் ஆகிய தரப்பினருக்காக 60 களில் உருவாக்கப் பட்ட SNAP உணவுத் திட்டத்தைப் பற்றி அபிலாஷ் நுனிப்புல் மேய்ந்திருக்கிறார். இது பணவீக்கம் அதிகரித்தமையால் மக்கள் பட்டினி கிடக்க ஆரம்பித்த பின்னர் உருவான திட்டமல்ல. வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்போருக்கான உதவித் திட்டம் அவ்வளவு தான். வறுமை இல்லையானால் பெற்றுக் கொள்ள முடியாது. மற்றபடி இது மட்டுமே அமெரிக்காவில் உணவு உதவி புரியும் திட்டம் என்றும் சொல்ல முடியாது. பல்வேறு தொண்டு அமைப்புகளும், உள்ளூர் அரசு அமைப்புகளும், பள்ளிக் கூடங்களும் கூட குழந்தைகள் பட்டினி கிடக்காமல் இருக்க திட்டங்கள் வைத்திருக்கிறார்கள். தெருவில் நிற்கும் இந்தியர்களை மாடமாளிகையில் வாழும் இந்தியர்கள் பார்த்துக் கொள்வதை விட சிறப்பாக இங்கே வாழும் மக்கள் இத்தகைய திட்டங்களுக்கு நன்கொடை வழங்கி ஏனையோரின் பசி தீர்க்க உதவுகிறார்கள்.
  2. ஶ்ரீலங்கா பாராளுமன்றத்தில் பிரபாகரன் என் தலைவன் என்று வீர முழக்கமிடும் அர்ச்சனா பிரான்ஸ் வந்த போது தான் நடத்திய கூட்டதிற்கு தயவு செய்து தலைவர் படங்களையோ புலிக் கொடிகளையோ கொண்டு வரவேண்டாம் என்று கெஞ்சி கெஞ்சி மக்களிடன் வேண்டு கோள் விடுத்தது ஏன்? யாருகாவது தெரியுமா?
  3. தன்னறம் -------------- நீங்கள் எல்லோரும் நலமா, ஒரு கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது, எப்படி எழுதுவது என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. நான் இதற்கு முன்னர் ஏதாவது கடிதம் எழுதி இருக்கின்றேனா என்றும் ஞாபகமில்லை. கடிதங்களை அவரே தான் எழுதினார். வந்த கடிதங்களை வாசித்தது கூட அவரேதான். சில வேளைகளில் சில கடிதங்களில் இருந்த ஒன்று இரண்டு சமாச்சாரங்களை சுருக்கமாகச் சொல்லியிருக்கின்றார். அவர் என்னை எதையும் வாசிக்க விடவில்லை என்றில்லை, உண்மையில் எதையாவது வாசி வாசி என்று எனக்கு அவர் சொல்லிக் கொண்டேயிருந்தார். நான் தான் எதையும் வாசிக்கவில்லை. எனக்கு ஒரு இடத்தில் இருந்து வாசிப்பதற்கு நேரம் இருக்கவில்லை என்று தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அது பொய், நானே உருவாக்கிய ஒரு காரணம் என்று இப்பொழுது எனக்குப் புரிகின்றது. இப்பொழுது இந்தச் சிறிய அறை தான் என்னுடைய உலகத்தின் மிகப் பெரும் பகுதி. இந்த அறையை சிறிது என்பதற்கு மேல் எப்படிச் சொல்வது என்றும் தெரியவில்லை. என்னுடைய வீட்டில், ஆமாம் அது என்னுடைய வீடு தான், ஐந்து அறைகள் இருந்தன. முதலில் நான்கு அறைகள் மட்டுமே இருந்தன, பின்னர் நாங்கள் ஒரு பெரிய அறையை வீட்டுடன் இணைத்துக் கட்டினோம். நான் சிறிய அறை, பெரிய அறை, சாமி அறை என்று இப்படித்தான் சொல்லுவேன். அவர் தான் யாரும் கேட்டால் ஒவ்வொரு அறைகளின் அளவையும் ஒரு பெருக்கல் வாய்ப்பாடு போல சொல்லுவார். இங்கு ஒவ்வொருவருக்கும் இதே போன்ற சிறிய அறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கட்டில், ஒரு வசதியான கதிரை, இரண்டு சின்ன அலுமாரிகள், சின்ன மேசை மற்றும் நானும் சேர்ந்து இந்த அறையை நிரப்பிவிட்டோம். ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் கொடுப்பார்கள். நான் அது வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். எதையாவது வாசி வாசி என்று அவர் சொன்னபடி புத்தகங்களை வாசித்துக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் என் அறையைத் திறந்தால், உங்கள் வலதுகைப் பக்கம் இருக்கும் அலுமாரிக்குள் இருப்பது அவ்வளவும் புத்தகங்களே. என்னுடைய சின்ன மகள் ஒவ்வொரு மாதமும் புதிது புதிதாக வாங்கி அடுக்கிவிடுகின்றார். எங்களுக்கு நான்கு பிள்ளைகள். இரண்டு ஆண் பிள்ளைகள், இரண்டு பெண்கள். ஆண், பெண், ஆண், பெண் என்று அடுத்தடுத்துப் பிறந்தார்கள். இப்பொழுது ஆறு பேரப் பிள்ளைகளும் இருக்கின்றார்கள். இங்கிருப்போர் பலருக்கும் இப்படியே பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் வெளியே அவரவர்களின் வீடுகளில் இருக்கின்றார்கள். பிள்ளைகள் மேல் கோபமோ அல்லது ஒரு மன விலக்கலோ இருந்தாலும் கூட, பேரப் பிள்ளைகளின் மேல் ஒரு இம்மியளவு கூட குறையாத பாசமே இங்கிருப்போர் எல்லோரிடமும் இருக்கின்றது. இந்த வராந்தாவில் முதல் அறையில் இருக்கும் அவர் ஒரு சரியான முசுடு. அவரின் மனைவி சில வருடங்களின் முன் போய்ச் சேர்ந்துவிட்டார். சில மாதங்களிலேயே அவரை அவரது பிள்ளைகள் இங்கு கொண்டு வந்து விட்டதாகச் சொல்கின்றார்கள். அவர் எவருடனும் முகம் கொடுத்து கதைப்பதில்லை. ஆனால் அவருடைய பேரப் பிள்ளைகள் வரும் நாட்களில் அவர் முழுதாக மாறி, மிகவும் உற்சாகமாக இருக்கின்றார். அப்படியான ஒரு நாளில் என்னைப் பார்த்து சிரித்தும் இருக்கின்றார். மீண்டும் கோவிட் வைரஸ் பரவுகின்றது என்று இப்பொழுது அறைக்குள்ளேயே இருக்கச் சொல்லிவிட்டார்கள். இந்த யன்னல் ஊடாக தெரிவது தான் நிலம், நீலம் என்றாகிப் போய்விட்டது. முன்னரும் முதலாவது கோவிட் தொற்றுக் காலத்தில் இப்படி இருந்திருக்கின்றேன். அப்பொழுது நான் இங்கு வந்து கொஞ்ச நாட்களே ஆகியிருந்தது. அந்த நாட்களில் அவருக்கு முன்னால் நான் போய்ச் சேர்ந்திருக்கலாமோ என்ற எண்ணம் சில தடவைகள் வந்தது. ஆனாலும் அவர் இவற்றை, இந்த தனிமையை தாங்கமாட்டார். எது நடக்க வேண்டுமோ, அதுவே நடந்தது போல. முதல் தொற்றுக் காலத்தில் அடிக்கடி இங்கு இழப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்பொழுது எனக்கு இங்கிருக்கும் எவரையும் அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் மனமெங்கும் ஒரு வலி இருந்து கொண்டிருந்தது. அது இல்லாமல் போய்க் கொண்டிருந்தவர்களைப் பற்றியதா, அல்லது என்னைப் பற்றியதா என்ற சந்தேகம் இன்றும் இருக்கின்றது. புத்தகங்கள் வாசித்தால் இப்படியான கேள்விகள் அதுவாகவே உள்ளுக்குள் வரும் போல. அவர் கதைக்கும் சில விடயங்கள், கேட்கும் சில கேள்விகள் அன்று எனக்கு விளங்காமல் முழித்துக் கொண்டு நின்றிருக்கின்றேன். அவர் வர வர கொஞ்சம் பைத்தியமாகிக் கொண்டிருக்கின்றாரோ என்று நான் நினைத்தாலும், நல்ல காலம், நான் அதை எவரிடமும் சொல்லவில்லை. சில சம்பவங்கள் நடந்த பின்னரே அவை நடந்து விட்டன என்ற உணர்வும், அதையொட்டிய விளைவுகளும் ஏற்படுகின்றது. அப்படியான சம்பவங்கள் உலகில் எப்போதும் நடந்து கொண்டேயிருக்கின்றன என்றோ, அவை எங்களுக்கும் நடக்கக் கூடுமோ என்ற பிரக்ஞை அற்றே மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர் இறந்தது, நான் இங்கே வந்தது மற்றும் இடையில் நடந்த சம்பவங்கள் இவை எதுவுமே புதிதல்ல. இவை ஆயிரம் ஆயிரம் தடவைகள் இப் பூமியில் இப்படியே ஏற்கனவே நடந்து இருக்கின்றன. முதுமை என்றாலே துன்பம் என்று நான் வாசித்த ஒரு புத்தகத்தில் இருந்தது. அப்படி ஒரேயடியாகச் சொல்லி விடலாம் என்று நான் நம்பவில்லை. ஆகக் குறைந்தது, அதை நான் இன்னமும் நம்பவில்லை. எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒரு கடமை எப்போதும் இருக்கின்றது தானே. முதுமையில், தனிமையில் கூட அப்படி ஒரு கடமை ஒன்று இருக்கத்தானே வேண்டும். நேற்று என்னைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார். அவர் வேறு ஒரு நாட்டில் இருந்து இங்கே விடுமுறைக்கு குடும்பத்துடன் வந்திருக்கின்றார். அப்படியே என்னையும் பார்க்க வந்தார். என்னை விட வயதில் மிகவும் இளையவர். உறவு முறையில் சொந்தக்காரரும் கூட. அவர்களின் வீட்டில் நாங்கள் இருவரும் இரண்டு தடவைகள் தங்கியிருக்கின்றோம். அப்பழுக்கற்ற ஒரு மனிதனாகவே அவர் தெரிந்தார். கோவிட் தொற்று என்பதால் ஒருவரையும் அனுமதிக்க முடியாது என்று சொல்லியிருக்கின்றார்கள். பின்னர் வேறு நாட்டில் இருந்து வந்தவர் என்று தெரிந்து, முகத்தை மறைத்து சில நிமிடங்கள் மட்டுமே உள்ளே அறைக்கு வர அனுமதி கொடுத்தார்கள். கதவைத் திறந்த அவர் அங்கேயே நின்று கொண்டிருந்தார். அப்படித்தான் நிற்கச் சொல்லியிருக்கின்றார்கள். நான் எதிர் மூலையில் நின்றேன். மௌனமாகவே நின்றவர் 'என்னைத் தெரிகின்றதா ............' என்று மெதுவாகக் கேட்டார். முகத்தின் பெரும்பகுதி மூடப்பட்டிருந்தாலும் அந்தக் கண்கள் எனக்கு நன்கு தெரிந்தவையே. ஆனாலும் அந்தக் கண்களை ஒரு கணத்துக்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. எனக்கு எவரின் பரிதாபமும் தேவையில்லை. 'அழும் போது ஒரு பெண் அபலையாகின்றாள்.................' என்ற ஒரு கவிதை வரியை என் கணவர் அவரது கடைசி நாட்களில் பல தடவைகள் சொல்லியிருக்கின்றார். அந்த முழுக் கவிதையையும் நான் இன்னமும் தேடி வாசிக்கவில்லை. நான்கு பிள்ளைகளும் அவர்களின் குடும்பங்களுடன் இடைக்கிடையே வந்து விட்டுப் போவார்கள். வரும் போது ஏதேதோ வாங்கி வருவார்கள். அவர்கள் வந்து போன பின், அவர்கள் வராமலே இருக்கலாம் என்றும் தோன்றுவதுண்டு. நான் சிறு வயதில் கோழிக்கு அடை வைப்பேன். ஒரு தடவை 15 முட்டைகள் வைத்து 14 குஞ்சுகள் பொரித்தன. அந்தப் 14 குஞ்சுகளையும் தாய்க் கோழி கவனமாகப் பார்த்துக் கொண்டது. ஒரு நாள் தாய்க் கோழி மட்டும் படுத்திருந்தது. ஒரு குஞ்சுகளையும் காணவில்லை. குஞ்சுகளுக்கு என்ன நடந்தது என்று பதறிப் போய் தாய்க் கோழிக்கு அருகே போனேன். மெதுவாக செட்டைக்குள்ளிருந்து ஒரு குஞ்சு எட்டிப் பார்த்தது. 14 குஞ்சுகளும் உள்ளேயே இருந்தன. எப்படி ஒரு கோழியால் இது முடிகின்றது என்று ஆச்சரியமாகவே இருந்தது. குஞ்சுகள் ஓரளவு வளர்ந்து, வீட்டு முற்றத்தில் நின்ற மாமரத்தில் அவைகளாகவே பறந்து ஏற ஆரம்பித்தவுடன், தாய்க் கோழி குஞ்சுகளை மெதுவாகக் கொத்திக் கலைக்க ஆரம்பித்தது. அதுவும் ஆச்சரியமே. நான் விரும்பியே இங்கே வந்தேன் என்று நேற்று என்னைப் பார்க்க வந்தவருக்கும் சொன்னேன். அவர் அதை நம்பவில்லை என்பதும் எனக்குத் தெரிந்தது. ஆனாலும் எனக்கென்று ஒரு கடமை இருக்கின்றதல்லவா. 'நீங்கள் இனிமேலும் கஷ்டப்படாமல் போங்கள்............. நான் இருக்கும் வரை பிள்ளைகளுக்கு குறை குற்றம் எதுவும் வராமல், என்னால் முடிந்த வரை, பார்த்துக் கொள்கின்றேன்..................' என்று அவருக்கு ஒரு வாக்கும் கொடுத்து இருக்கின்றேன்.
  4. பனையின் கவலை! ********************** என் மண்ணைப் பற்றி பிடித்ததனால் மரமாக நிற்கின்றேன் பிள்ளைகளை மாடுழக்கி தோலுரித்து பற்களால்- உதிரக்கழி உறிஞ்சி தூக்கியெறிய வந்தவனோ பனம் பாத்தியென்று மண்தோண்டி மூடிச்சென்றான். நாளை வடலியாக வளருமென்ற நம்பிக்கையில்தான் நான் வாழுகின்றேன். -பசுவூர்க்கோபி.
  5. என்னது? காசு ..இல்லையா? சரி போகட்டும்! "Money is not everything" credit cards, letter of credit, unlimited credit line..என்று பல விடயங்கள் இருக்கே? அதில ஒன்றை எடுத்து "வியாபாரக் காந்தமாக" வலம் வரலாமே😂?
  6. பிரான்சில். தடை உண்டு. ஆகவே கூட்டத்தில். குழப்பம். ஏற்படமால். இருக்கவும். கூட்டம். தொடர்ந்து. நடக்கவும். ஆனால். இலங்கையிலும். தடை உண்டு. தான். அது. எங்கள். நாட்டை. அடக்கி ஆளும். நாடு. அங்கே. தான். நாங்கள். போராடுகிறோம். போராட வேண்டும். மாறாக. பிரான்சில் இல்லை. அதன். சட்டத்தை. மதிக்க. வேண்டும் அல்லவா ? சரியா. ஔ.?
  7. சிங்களர் தீர்வு மட்டும் அல்ல, சக வாழ்வை கூட தரப்போவதில்லை. இப்போ உள்ள அத்தனை தமிழ் அரசியல்வாதியும் - ஒரு சதம் தேறாத கேசுகள். வெளியக சுயநிர்ணயம் ஒருபோதும் சரிவராது. உள்ளக சுயநிர்ணயம், சமஸ்டி என்பன நீண்ட கால இலக்காக இருத்தல் அவசியம் ஆனால் இதற்கும் குறைவான ஒரு காணி உரிமையாவது பாதுகாக்கபடும் தீர்வை நோக்கி நகர்வதே இப்போ செய்ய கூடியதும், வேண்டியதும். இந்த 4 பிரபஞ்ச உண்மைகளி கீழ் புலம், புலம்பெயர் தமிழர் ஒன்றுபட்டு, ஒரு புதிய அரசியலை, தலைமையை உருவாக்க வேண்டும். சொல்வது மிக இலகு… செய்வது….
  8. ஒரே கல்லில் ஒன்பது மாங்காய் அடிப்பது என்பது இதைத்தான்😂 பிகு என்னிடம் சட்டின் வெள்ளை பெயிண்ட் வாங்க கூட காசில்லை. சும்மா ஒரு நப்பாசையில் எழுதியதுதான்😂
  9. வாழ்க்கையில் ஆண்கள் அதிகமாக முன்னதாகவே போய்விடுவார்கள். அவர்கள் போகும்வரை மனைவி துணை நிற்பாள். பெண்கள்தான் தனித்துப் போவார்கள். ஆனாலும் நீங்கள் குறிப்பிடுவது போல் ‘மனம்’தான் காரணம். எதையும் ஏற்றுக் கொள்வதும், இன்னும் வாழ்க்கை இருக்கின்றது என்பதும்தான் சிறந்தது. இந்த விடயத்தில் உங்களைப் போலவே கண்ணதாசனும் கோழியைத்தான் உதாரணம் காட்டுகின்றார். “பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை கட்டி வைத்தவன் யாரடா.. அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும் சோறு போட்டவன் யாரடா.. வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும் வருந்தவில்லையே தாயடா.. மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா..”
  10. எதிரணியினரை வார்த்தைகளால் தாக்குவதில் அவுஸ்ரேலியர்கள் மோசமானவர்கள், அவர்களின் நோக்கம் ஆட்டக்காரரின் கவனத்தினை சிதறடிப்பதே ஆகும், இந்தியணியினரின் இந்த உருவக கேலி நடவடிக்கை ஆட்டக்காரரின் கவனத்தினை சிதறடிப்பதற்காக செய்யப்படவில்லை, ரிவியு செய்யாப்படும் போது தமக்குள் பேசுவதாக உள்ளது, பொதுவாக வார்த்தை தாக்குதலே ஒரு மோசமான விடயமாக இருக்கும் போது இந்தியணியினர் செய்த இந்த செயல் மற்றும் அண்மையில் பாகிஸ்தான் அணியினருக்கு கைகுலுக்காமல் சென்றது (பிறகு எதற்காக அந்த அணியினருடன் விளையாடுகிறார்கள்) பாகிஸ்தான் பிரதிநிதியிடமிருந்து கோப்பையினை வாங்க மறுத்ததென இந்தியணியின் செயற்பாடுகள் கவலைக்குரியதாக மாறுகிறது, இத்தனைக்கும் சொந்த நாட்டிலேயே உதைவாங்குகிறார்கள். இந்த கட்டுரையின் ஆரம்ப்பத்திலிருந்து மீண்டும் மீண்டும் உருவக கேலியினை எதோ ஒரு வகையில் நியாயப்படுத்துவது போல காணப்படுகிறது, பாகிஸ்தான் வீரர் ஒருவர் சென்னையில் சிறப்பாக விளையாடியமைக்காக சென்னை இரசிகர்கள் எழுந்து நின்று கரகோசம் செய்தார்கள் என கூறுகிறார்கள், நியுசிலாந்து இரசிகர்கள் எதிரணி வீரர் 100 எட்டும் நிலையில் ஒட்டு மொத்த மைதானமும் தமது அணியினை கைவிட்டு எதிரணி வீரருக்கு பின்னால் அணி திரளும் போது பார்ப்பதற்கு சந்தோசமாக இருக்கும், அந்த மனிதர்களின் பண்பு முன்மாதிரியாக அனைவரும் பின்பற்றினால் நன்றாக இருக்கும், விளையாட்டுகளில் தேசப்பற்று இருப்பதில் தப்பில்லை ஆனால் வெறுப்பை கடத்துவது அந்த விளையாட்டினை அவமதிப்பதாகும்.
  11. இலங்கையின் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் பங்கமானவர்கள் என்றால் இந்த கிந்தியர்கள் தான். இது எனது வன்மம் அல்ல. வரலாற்று சம்பவங்களை பார்த்த அளவில்....
  12. தவறான தகவல். பெண் பயிற்சிவிற்பாளரைக் ( Dawn Brancheau) கொன்றது டொல்பின் அல்ல. Orca வகையை சார்ந்த திமிங்கிலம். அமெரிக்காவில் Orlando , Florida வில் Sea works Orlando எனும் animal theme park இல் 2010 இல் நிகழ்ந்தது.
  13. அட பாவிகளா வாகனத்தை ஓரமா நிறுத்திவிட்டு ஒழுங்கா அனுபவித்திருக்கலாமே?
  14. ஏ.ஐ துறையில் இது நடந்தால் 'எந்த நிறுவனமும் தப்பிக்காது' - சுந்தர் பிச்சை எச்சரிக்கை கட்டுரை தகவல் ஃபைசல் இஸ்லாம் பொருளாதார ஆசிரியர் ரேச்சல் க்ளன் வணிக செய்தியாளர் 18 நவம்பர் 2025, 12:15 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் செயற்கை நுண்ணறிவுக்காக்கான மவுசு குறைந்தால் ஒவ்வொரு நிறுவனமும் பாதிக்கப்படும் என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் தலைவர் சுந்தர் பிச்சை பிபிசியிடம் தெரிவித்துள்ளார். பிபிசி நியூஸிடம் பிரத்யேகமாக பேசிய சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) முதலீட்டின் வளர்ச்சி ஒரு "அசாதாரண தருணம்" என்றாலும், தற்போது அதில் சில "பகுத்தறிவற்ற தன்மை" உள்ளது என்றார். சமீபத்திய மாதங்களில் ஏ.ஐ தொழில்நுட்ப நிறுவனங்களின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சிலிக்கான் பள்ளத்தாக்கு மற்றும் அதற்கு அப்பால் இது பற்றிய அச்சங்கள் நிலவி வருகின்றன. மேலும் நிறுவனங்கள் வளர்ந்து வரும் இந்த தொழில்துறையில் பெரிய அளவில் செலவு செய்கின்றன. செயற்கை நுண்ணறிவு மவுசு சரிந்தால் ஏற்படும் தாக்கத்திலிருந்து கூகுள் தப்பித்துக் கொள்ளக்கூடுமா என்று கேட்டதற்கு, அந்த பிரச்னையை கூகுள் சமாளிக்க முடியும் என்று சுந்தர் பிச்சை கூறினார். ஆனால் ஒரு எச்சரிக்கையையும் வெளியிட்டார். "நாங்கள் உட்பட எந்த நிறுவனமும் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார். கூகுளின் கலிபோர்னியா தலைமையகத்தில் ஒரு விரிவான பிரத்யேக நேர்காணலில், அவர் எரிசக்தி தேவைகள், காலநிலை இலக்குகளை அடைவதில் தாமதம், பிரிட்டனில் முதலீடு, அவரது ஏ.ஐ மாதிரிகளின் துல்லியம் மற்றும் வேலைகளில் ஏ.ஐ புரட்சியின் தாக்கம் ஆகியவற்றை குறித்தும் பேசினார். செயற்கை நுண்ணறிவு (AI) சந்தையின் நிலை குறித்து முன்பைவிட மிக அதிகமாக தீவிரமான ஆய்வு இருக்கும் நேரத்தில் இந்த நேர்காணல் வந்துள்ளது. பட மூலாதாரம், Getty Images போட்டி யாருடன்? ஆல்ஃபபெட் பங்குகளின் மதிப்பு ஏழு மாதங்களில் இரட்டிப்பாகி 3.5 ட்ரில்லியன் டாலராக உயர்ந்துள்ளன. இதற்கு காரணம், கூகுள் நிறுவனத்துக்கு ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI உடனான போட்டியை சமாளிக்கும் திறன் அதிகம் உள்ளது என்று சந்தையில் நம்பிக்கை இருப்பதுதான். அல்பபெட் நிறுவனம் உருவாக்கி வரும் ஏ.ஐக்கான சிறப்பு சூப்பர் சிப்கள் மீது தற்போது அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இந்த சிப்கள், சமீபத்தில் உலகில் முதல்முறையாக $5 டிரில்லியன் மதிப்பை எட்டிய, என்வீடியா நிறுவனத்துடன் போட்டியிடுகின்றன. மதிப்பீடுகள் அதிகரித்து வரும் நிலையில், சில ஆய்வாளர்கள் OpenAI-ஐ சுற்றியுள்ள சிக்கலான 1.4 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு OpenAI- யின் வருமானம் மிகக்குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது முதலீட்டில் ஆயிரத்தில் ஒரு பங்கிற்கும் குறைவான வருவாயைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம், Getty Images டாட்காம் ஏற்றத்தின் போது, 2000 -ஆம் ஆண்டில் அந்த சந்தை வீழ்ச்சியடைவதற்கு முன்பே, 1996-ஆம் ஆண்டில் அமெரிக்க மத்திய வங்கித் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பான் சந்தையில் நிலவிய "பகுத்தறிவற்ற உற்சாகம்" குறித்து எச்சரித்தார். அதே கருத்துக்களை எதிரொலிக்கும் தொனியில் பேசிய சுந்தர் பிச்சை, இது போன்ற முதலீட்டு சுழற்சிகளில் தொழில்துறை "மிகையாக முதலீடு செய்யக்கூடும்'' என்று கூறினார். "நாம் இப்போது இணையத்தை திரும்பிப் பார்க்கலாம். நிறைய அதிகப்படியான முதலீடு (அப்போது) இருந்தது, ஆனால் இணையம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து யாருக்கும் சந்தேகங்கள் இல்லை," என்று அவர் கூறினார். "ஏ.ஐயும் அதே மாதிரியாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். எனவே இது பகுத்தறிவு மற்றும் இது போன்ற ஒரு தருணத்தில் பகுத்தறிவற்ற கூறுகள் இரண்டையும் கொண்டுள்ளன என்று நான் நினைக்கிறேன்" என்றார். சிப் முதல் யூடியூப் தரவு, அதிநவீன அறிவியல் வரை – அனைத்தையும் சொந்தமாக கொண்டிருப்பது கூகுளின் தனித்துவம் என்றும் இதனால் செயற்கை நுண்ணறிவு சந்தை மாற்றங்களை சமாளிக்கும் நிலையில் கூகுள் இருப்பதாக பிச்சை கூறினார். சுந்தர் பிச்சையின் நிறுவனம் பிரிட்டனிலும் தனது தடத்தை விரிவுபடுத்தி வருகிறது. செப்டம்பரில், ஆல்ஃபபெட் பிரிட்டனின் செயற்கை நுண்ணறிவு துறையில் முதலீடு செய்வதாக அறிவித்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு 5 பில்லியன் பவுண்டுகள் முதலீட்டை உறுதி செய்துள்ளது. லண்டனை தளமாகக் கொண்ட அதன் முக்கிய செயற்கை நுண்ணறிவு பிரிவான டீப்மைண்ட் உட்பட பிரிட்டனில் "அதிநவீன" ஆராய்ச்சிப் பணிகளை ஆல்ஃபபெட் உருவாக்கும் என்று பிச்சை கூறினார். அதிகபடியான மின்சார தேவைகள் முதல் முறையாக, கூகுள் "காலப்போக்கில்" "நமது (ஏஐ) மாதிரிகளை பயிற்றுவிக்க" ஒரு நடவடிக்கையை எடுக்கும் என்று அவர் கூறினார். இது பிரிட்டன் அரசாங்கம் அழுத்தம் கொடுக்கும் ஒரு நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கை அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது ஏ.ஐ "வல்லரசு" ஆக பிரிட்டனை உறுதிப்படுத்தும் என்று பிரிட்டன் அமைச்சர்கள் நம்புகின்றனர். "பிரிட்டனில் மிகவும் குறிப்பிடத்தக்க முறையில் முதலீடு செய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்று பிச்சை கூறினார். இருப்பினும், சர்வதேச எரிசக்தி முகமையின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு உலகின் மின்சார நுகர்வில் 1.5% ஆக இருந்த செயற்கை நுண்ணறிவின் அதிகபடியான மின்சார தேவைகள் குறித்தும் அவர் எச்சரித்தார். "ஆற்றலை அடிப்படையாகக் கொண்டு ஒரு பொருளாதாரத்தை கட்டுப்படுத்த (நெருக்கடிக்கு உள்ளாக்க) விரும்பவில்லை. அது விளைவுகளை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார். தனது நிறுவனத்தின் விரிவடைந்து வரும் ஏ.ஐ முயற்சிகள் காரணமாக மின்சார தேவைகள் தீவிரமாக இருப்பதால், நிறுவனத்தின் காலநிலை இலக்குகளில் சறுக்கல் இருக்கின்றன என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் புதிய எரிசக்தி தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதன் மூலம் 2030-க்குள் நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கான இலக்கை ஆல்ஃபபெட் இன்னும் கொண்டுள்ளது என்று வலியுறுத்தினார். 'மிக ஆழமான தொழில்நுட்பம்' ஏ.ஐ நாம் வேலை செய்யும் முறையையும் மாற்றும் என்று சுந்தர் பிச்சை கூறினார். இது மனிதகுலம் பணியாற்றிய "மிக ஆழமான தொழில்நுட்பம்" என்று கூறினார். "சமூக இடையூறுகளுக்கு நடுவில் நாம் செயல்பட வேண்டும்," என்று அவர் கூறினார், இது "புதிய வாய்ப்புகளை உருவாக்கும்" என்றும் கூறினார். "இது சில வேலைகளை உருவாக்கி மாற்றும், மேலும் மக்கள் மாற்றத்துக்கு தயாராக இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார். ஏ.ஐக்கு ஏற்ப மாற்றிக் கொள்பவர்கள் "சிறப்பாக செயல்படுவார்கள்" என்றார். "நீங்கள் ஒரு ஆசிரியராக [அல்லது] மருத்துவராக இருக்க விரும்புகிறீர்களா என்பது முக்கியமல்ல. அந்த தொழில்கள் அனைத்தும் இருக்கும். ஆனால் அந்த தொழில்கள் ஒவ்வொன்றிலும் சிறப்பாகச் செயல்படும் நபர்கள் இந்த கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொண்டவர்களாக இருப்பார்கள்," என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8749jzjxn2o
  15. அப்படி வாங்கினால் இரண்டு விடயங்களை நிச்சயம் செய்யுங்கள். பள பள (satin) வெள்ளையாக இருக்கும் உள் வர்ணத்தை off white ஆக, அல்லது வேறொரு வெளிர்நிறமாக மாற்றி விடுங்கள். தரையை இப்படி வளுக்கல் தரையாக வைத்திருக்காமல், எங்கள் ஊர் லேலண்ட் பஸ்களில் இருக்கும் உராய்வு கொண்ட (friction) தரையாக மாற்றுங்கள். இல்லா விட்டால், கனடா இலண்டனில் இருந்து இதற்காகவே கூட்டமாக பிளைற் பிடித்து வந்து படகில் வழுக்கி விழுந்த பின்னர் நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போடுவார்கள்😂. நீங்கள் நஷ்ட ஈடு கொடுக்க இயலாமல் படகை நீங்களே மூழ்கடித்து விட்டு அதற்குரிய காப்புறுதியை எடுத்துக் கொண்டு பிரிட்டனுக்கு வந்து விட வேண்டியிருக்கும்! பிகு: இப்படித் தப்பிப் போவது தவறென்று யோசிக்காதீர்கள்! பிரிட்டன் சட்டங்களில் இதற்குரிய ஓட்டைகள் சலுகைகள் உங்களுக்கு இருக்கும், யாழ் களத்திலேயே உங்களுக்கு லோயரைப் பிடிக்கலாம்😎!
  16. முதல் வேலையாக இவரது Facebook profile இனை ரிப்போர்ட் பண்ணியுள்ளேன். இதனை ஒரு 100 பேர் செய்தால், முகனூல் நிர்வாகம் இவரது கணக்கை முடக்கும் ( IP ban செய்யும் சில வேளை)
  17. யாழ்கள அனுர காவடிகள் இந்த புத்தர் சிலைக்கு கொஞ்சம் புனருத்தான நிதி அனுப்பி வைக்கும்படி கேட்கக்ப்படுகிறனர் 😂. ஹேமசந்திரா….(ன்) வின் தலையில் புத்தர் சிலை வைத்தாலும் அவரால் ஒரு மண்ணாங்கட்டியும் செய்ய முடியாது 😂
  18. நிரூபணவாதி --------------------- இங்கே யார் அவர் என்று என்னுடைய பெயரைச் சொல்லி கேட்டான் அவன். அப்பொழுது நேரம் இரவு எட்டு மணி ஆகியிருந்தது. விளையாட்டு ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் என்று ஒரு வழமையாக சொல்லியிருக்கின்றோம். நான் ஆறு ஐம்பது அளவில் அங்கே மைதானத்தில் நிற்பேன். ஏழு மணிக்கு ஓரிருவரும், ஏழரை மணி அளவில் சிலரும் என்று வந்து சேர்வார்கள், அப்படியே விளையாட்டை ஆரம்பித்துவிடுவோம். எட்டு மணி அளவில் அன்று வர இருந்தவர்கள் எல்லோரும் வந்து சேர்ந்துவிடுவார்கள். 'நான் தான் அது............ நீங்கள்..............' 'என் பெயர் சிட்டா............ உங்களுடன் சேர்ந்து நானும் ஆட வந்திருக்கின்றேன்...............' என்று சொன்னவன் தன்னை யார் இங்கே அனுப்பியது என்றும் சொன்னான். 'நல்லது சிட்டா............. கொஞ்ச நேரம் வெளியில் நிற்பவர்களுடன் பேசிக் கொண்டிருங்கள்............... நான் இந்த செட்டை முடித்து விட்டு வருகின்றேன்...........' 'ஏன், உங்களிடம் இன்னொரு நெட் செட் இல்லையா................இரண்டு நெட் போட்டால் எல்லோரும் ஒரே நேரத்தில் ஆடலாமே............' சிட்டாவிடம் ஏராளமான தலைமைத்துவப் பண்பு இருப்பது அவனை சந்தித்த ஒரு நிமிடத்திலேயே தெரிந்தது. இதோ வந்து விடுகின்றேன் என்று சொல்லிவிட்டு நான் விளையாட்டைத் தொடர்ந்தேன். சிட்டா ஏழரை மணிக்கு பின்னர் வந்து வெளியில் நின்றவர்கள் ஒவ்வொருவருடனும் கைகொடுத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தான். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் என்று நான்கு மொழிகளிலும் தன்னை அறிமுகப்படுத்தினான் என்றே காதில் விழுந்த அவனுடைய பேச்சுகளில் இருந்து தெரிந்தது. அவன் அநேகமாக தெலுங்கு தேசத்தை சேர்ந்தவனாக இருக்க வேண்டும் என்றே எனக்குப்பட்டது. தெலுங்கு மக்கள் அவர்களது பெயர்களின் ஒரு பகுதியாக தங்களது சொந்த ஊர்களின் பெயர்களையும் வைத்துக் கொள்ளும் வழக்கம் இருக்கின்றது. சிட்டா என்பது அவனுடைய ஊரின் பெயரின் ஒரு சுருக்கிய வடிவமாக இருக்கலாம். அவனுடைய நண்பர்கள் அவனை இந்தப் பெயரால் கூப்பிட்டு அதுவே நிரந்தரம் ஆகிவிட்டது போல. சிட்டா என்பது சிட்டு என்பது போலவும் அழகாக இருந்தது. தமிழர்களிடமும் இதே வழக்கம் ஓரளவு இருக்கின்றது. எம்ஜிஆரில் இருக்கும் எம் என்பது மருதூர் என்பதையே குறிக்கும். அவர் இலங்கையில் இருக்கும் நாவலப்பிட்டி என்னும் ஊரிலேயே பிறந்திருந்தாலும், கேரளவில் இருக்கும் அவரது பெற்றோர்களின் ஊரான மருதூர் என்பதையே தன் பெயருடன் சேர்த்து வைத்திருந்தார். நாவலப்பிட்டி கோபாலன் ராமச்சந்திரன் என்ற பெயர் அவருக்கு இருந்திருந்தால், நடிகர் சிவாஜிக்கும், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் போட்டியாக வாழ்ந்து, வாழ்நாள் முழுவதும் அவர்களை இரண்டாம் இடத்தில் தள்ள இன்னொருவர் தான் வந்திருக்கவேண்டும். நாவலப்பிட்டி என்னும் ஊரின் பெயரே கோபாலன் ராமச்சந்திரனை ஒன்றும் இல்லாமல் ஆக்கியிருக்கும். மிகவும் புகழ்பெற்ற கர்நாடக சங்கீத பாடகி எம் எஸ் சுப்புலட்சுமி அவர்களின் பெயர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி. மதுரை அவருடைய சொந்த ஊர், சண்முகவடிவு என்பது அவருடைய தாயாரின் பெயர். ஒருவரின் பெயரில் அவருடைய அன்னையின் பெயரும் சேர்ந்து இருப்பது முதலில் ஆச்சரியமாக இருந்தது. 'எப்படி இருக்கின்றீர்கள் சிட்டா...................... 'சூப்பராக இருக்கின்றேன்................. ஆமா, நீங்க கன்யாகுமரிப் பக்கமா..............' 'இல்லை சிட்டா, அதுக்கும் கீழே................. யாழ்ப்பாணம்.............' சிட்டா புரியாமல் ஒரு கணம் என்னையே பார்த்தான். நான் ஶ்ரீலங்கா என்றேன். சிட்டா தமிழ் இல்லை என்பது ஓரளவிற்கு உறுதியாகிவிட்டது. மொத்தமாக 18 பேர்கள் அன்று வந்திருந்தார்கள். சரியாக மூன்று அணிகளாக பிரிக்கலாம். ஒரு அணி வெளியில் நிற்க, மற்ற இரண்டு அணிகளும் 21 புள்ளிகள் அல்லது 15 புள்ளிகளுக்கு விளையாடலாம். தொடர்ச்சியாக இரண்டு செட்டுகள் விளையாடிய அணி வெளியே வந்து நிற்பார்கள். எங்களிடம் மூன்று நெட் இருக்கின்றன, ஆனால் 18 பேர்கள் இருக்கும் போது இரண்டாவது நெட் போடுவது அவ்வளவு நல்ல ஒரு யோசனை அல்ல என்று சிட்டாவிற்கு எங்களின் அடிப்படை பொறிமுறைகளை விளங்கப்படுத்தினேன். சிட்டா நிறையவே யோசித்தான். சிட்டா ஒரு படு மோசமான விளையாட்டுக்காரனாகவே இருந்தான். கரப்பந்தாட்டத்திற்கு தேவையான திறமைகள் எல்லாமுமே அவனுக்கு சராசரிக்கும் குறைவாகவே வாய்த்திருந்தன. ஆனால் மிகவும் நன்றாக எல்லோருடனும் பழகிக் கொண்டிருந்தான். அவன் ஒரு பெரிய நிறுவனத்தில் தொழில்நுட்பத்துறையில் மென்பொருளாளராக வேலை செய்து கொண்டிருந்தான். அத்துடன் காப்புறுதி மற்றும் வேறு சில சேவைகளும் வழங்கும் ஒரு சிறிய நிறுவனத்தையும் சொந்தமாக நடத்திக் கொண்டிருந்தான். அவன் எங்களுடன் கரப்பந்தாட்டம் விளையாட வந்திருக்கின்றானா அல்லது வாடிக்கையாளர்களை சேர்க்க வந்திருக்கின்றானா என்று எவராவது கேட்டால் அது ஒரு நியாயமான கேள்வியே. எப்போதும் எட்டு மணி அல்லது அதற்கும் பிந்தியே வந்தான். அவனை தங்கள் அணியில் சேர்த்துக் கொள்வதற்கு எவரும் விரும்பி முன்வருவதில்லை. ஆனால் அங்கு வருபவர்கள் எல்லோருக்கும் விளையாடும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எவரும் வெளிப்படையாக எதிர்ப்பதும் இல்லை. ஒரு நாள் சிட்டா ஏழு மணிக்கே வந்துவிட்டான். அங்கு நான் மட்டுமே நின்று கொண்டிருந்தேன். 'நான் இன்றிலிருந்து ஒரு ஸ்பைக்கர் ஆகப் போகின்றேன்........................' 'ஆகலாம் சிட்டா..............' 'நீங்களே அடிப்பதை பார்த்த பின் தான் எனக்கு ஒரு நம்பிக்கை.............. நீங்கள் அடிக்கும் போது நான் அடிக்க முடியாதா.............' உயரத்தையும், வயதையும் குறித்தே அதை அவன் சொல்லியிருக்கவேண்டும். அன்று நெட் கட்டுவதற்கும், எல்லைகளை போடுவதற்கும் ஓடியாடி உதவிசெய்தான். பின்னர் அடிப்பதற்கு ஆயத்தமாக வந்து நின்றான். 1, 2, 3 என்று மூன்று கால் அடிகள் ஓடி, மூன்றாவதில் பாய்ந்து, நெட்டிற்கு மேலே கையைச் சுற்றி நான் போடும் பந்தை அடிக்க வேண்டும் என்று சொன்னேன். முதல் முயற்சியில் பந்து அவன் கையில் படவேயில்லை. பந்து தலையின் பின்புறமாக விழுந்தது. இரண்டாவது முயற்சியில் அவன் பாய்ந்து எழும்பி மீண்டும் கீழே வந்து நின்று கொண்டு, ஒரு ஆளுக்கு அடிப்பது போல பந்தை அடித்தான். அது நெட்டின் கீழால் போனது. 'சிட்டா, நீ மேலேயே பந்தை சந்திக்க வேண்டும்....................' 'இன்னுமொரு தடவை போடுங்கள்................. இந்த தடவை பாருங்கள் என்னுடைய அடியை...............' 'சிட்டா, நீ குடித்திருக்கின்றியா.....................' அவன் கதைக்கும் போது மணம் வந்து கொண்டிருந்தது. 'ஆமாம்............... நான் எப்போதுமே குடித்து விட்டுத் தான் வருவேன்.............. ஏன், இங்கு விளையாடும் போது குடித்திருக்கக் கூடாதா................' 'அப்படியெல்லாம் ஒரு ஒழுங்குமுறை இங்கு இல்லை.............. ஆனால் உன்னால் சரியாகக் கவனிக்க முடியாமல் இருக்கும்............' எவ்வளவு குடித்திருந்தாலும் தன்னால் எப்போதும் விடயங்களில் கவனமாக இருக்க முடியும் என்று சொன்னான். தினமும் காலையிலேயே ஆரம்பித்து விடுவானாம் என்றான். எப்பொழுதும் காரிலும் இருக்கும் என்றான். இப்பொழுது எனக்கும் தரவா என்றும் கேட்டான். 'தினமுமா..................' 'ஆமாம்..............' 'ஈரல், உடல் பழுதாகிப் போகாதா..................' 'இல்லை........... அதற்கு நான் ஒரு கைமருந்து வைத்திருக்கின்றேன். சில மூலிகைகளை அவித்து, அந்தக் கஷாயத்தை தினமும் படுக்கைக்கு போக முன் குடிப்பேன். அது ஈரலையும், முழு உடலையும் சுத்தப்படுத்திவிடும்..................' இங்கு கோவிட் காலத்தில், வீட்டில் சுத்தமாக்க வைத்திருக்கும் குளோரெக்ஸ், லைசோல் போன்றவற்றில் கொஞ்சத்தை குடித்தால், உள்ளிருக்கும் கோவிட் வைரஸ் அழிந்து விடும் தானே என்று அன்று அதிபராக இருந்தவர் சொல்லியிருந்தார். அவர் தான் இப்போதும் மீண்டும் அமெரிக்காவின் அதிபர். சிட்டா சொன்னது அதை ஞாபகப்படுத்தியது. 'இதையெல்லாம் நீ ஏன் செய்ய வேண்டும், சிட்டா, ஓரளவாகப் போய்க் கொண்டிருக்க வேண்டியது தானே..................' 'இல்லை........... நான் ஒன்றை நிரூபித்துக் கொண்டிருக்கின்றேன்.................' 'என்ன அது.....................' 'இது ஒன்றும் கூடாத விடயம் அல்ல................ இதனால் உடலுக்கு ஒரு கேடும் இல்லை...........' 'யாருக்கு நிரூபிக்கின்றாய்..................' 'இந்த உலகத்துக்கு.........................' பலருக்கும் உலகமே ஒரு போட்டியாக அல்லது எதிரியாக தெரிகின்றது போல. இவர்கள் உலகம் என்று சொல்வது ஒரு நாலு மனிதர்களாக இருக்கலாம், நாற்பது மனிதர்களாக கூட இருக்கலாம். யார் என்றாலும் அவர்களுக்கு என்று சொந்த வேலைகளும், சிக்கல்களும் இருக்கும் தானே. யார், எதை நிரூபிக்கின்றார்கள் என்றா சகமனிதர்கள் இங்கே அவர்களின் வேலைகளை விட்டுவிட்டு காத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையை தினமும் நியாயப்படுத்த முயல்வது பரிதாபமான ஒரு நிலையே. சிட்டா ஒரு ஸ்பைக்கர் ஆகவில்லை, ஆனால் தினமும் வந்து கொண்டேயிருந்தான். ஒரு நாள் விளையாடி முடிந்த பின் என்னுடன் தனியே கதைக்க வேண்டும் என்று கூட்டிச் சென்றான். இனிமேல் விளையாட வரமாட்டேன் என்று சொன்னான். யாராவது அவனை ஏதாவது சொல்லி அல்லது திட்டி விட்டார்களா என்று கேட்டேன். அவனின் நிறுவனம் அவனை அமெரிக்காவின் மேற்கு கரையில் இருந்து கிழக்கு கரைக்கு மாற்றுகின்றார்கள் என்று சொன்னான். குடும்பத்தை இங்கே விட்டுவிட்டு அவன் மட்டும் உடனடியாக தனியே அங்கே போவதாகச் சொன்னான். பின்னர் அந்த வருட பாடசாலை ஆண்டு முடிந்தவுடன் குடும்பமும் அங்கே வந்து விடுவார்கள் என்றான். சில கணங்கள் இறுக்கிப் பிடித்தபடி நின்றான். பின்னர் சடாரென்று ஒன்றுமே சொல்லாமல் அவனுடைய காரை நோக்கி நடந்தான். விளையாட்டுத் திடலில் இருந்த மின் விளக்குகள் ஏற்கனவே அணைக்கப்பட்டிருந்தன. கார்களின் தரிப்பிடத்தில் மட்டும் தெரு விளக்குகள் மஞ்சள் நிறத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிந்து கொண்டிருந்தன. அவனுடைய காரைத் திறந்த சிட்டா ஒரு கணம் அங்கிருந்து என்னைப் பார்த்தான். அவனுடைய கண்கள் மினுமினுத்தன. பல வருடங்களின் முன் இங்கு மிகப் பிரபலமான ஒரு தொழில்முறை கூடப்பந்தாட்ட வீரர் பார்வையாளர் ஒருவரை அடித்துவிட்டார். அந்தப் பார்வையாளர் தான் வீரரை மிகவும் தகாத வார்த்தைகளாள் சீண்டியிருந்தார். மிகவும் முன்கோபியான அந்த வீரரால் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இங்கு தொழில்முறை வீரர்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் மிகவும் இறுக்கமானவை. அந்த வீரரை ஒரு வருடம் விளையாட்டுகளில் இருந்து இடைநிறுத்தினார்கள். அந்த வருடக் கொடுப்பனவும் இல்லாமல். அது ஒரு 20 அல்லது 30 மில்லியன் டாலர்கள் வரும். அது பெரிய செய்தியானது. அந்த வீரரின் பாடசாலை நாட்களில் அவருடைய பயிற்றுவிப்பாளராக இருந்தவரிடம் ஒரு பேட்டி எடுத்தார்கள். அவர் இப்படிச் சொல்லியிருந்தார் - நான் தினமும் செய்திகளைப் பார்க்க ஆரம்பிக்கும் முன் கடவுளிடம் வேண்டிக் கொள்வேன். இந்த வீரன் நேற்றிரவு துப்பாக்கியால் யாரையோ சுட்டான் என்ற செய்தி இருக்கவே கூடாது என்று தினமும் வேண்டிக் கொள்வேன் என்றார். சிட்டா இங்கிருந்து போன பின் அவனுடன் எந்த விதமான தொடர்புகளும் இல்லாமல் போனது. சிட்டாவைப் பற்றிய தகவல்கள் எதுவும் என்னை வந்தடையவே கூடாது என்று இடைக்கிடை நினைத்துக்கொள்வேன்.
  19. சமிக்கை கிறிஸ்டி நல்லரெத்தினம்- ஜூலை 13, 2025 No Comments வீட்டின் நடுவே இருந்த ஊஞ்சல் தனியே ஆடிக்கொண்டிருந்தது. அதில் உட்கார்ந்து கொண்டோ அல்லது படுத்துக் கொண்டோ தேவாரங்களை முணுமுணுத்துக் கொண்டோ இருக்கும் அப்பு அங்கில்லை. அவரின் சிம்மாசனம் அது. அதில் உட்கார்ந்து கொண்டு எங்கள் குடும்ப பிணைக்குகளை பஞ்சாயத்து செய்யும் அந்த ஜீவன் இல்லாத வீடு வெறிச்சோடிக்கிடந்தது. அப்பு, அவர்தான் என் தாத்தா, என்னிடம் கொண்டிருந்த அந்தப் பாசப்பிணைப்பு புறவயமானதன்று. எங்கள் இருவரையும் இணைத்த அந்த நூலை எவரும் தொட்டதில்லை. ‘“ ஏ, பையா, உன்ன உங்கம்மா தூக்கிறதக்கு முன்னமே நான்தான் தொட்டுத் தூக்கினன் தெரியுமோ?” என்று கூறி பெருமைப்படுவார். என்னை ஏனே அவர் ‘“பையா” என்று அழைப்பதில் ஒரு அணுக்கமான உரிமையும் உறவும் இருப்பதாய் தோன்றும். அம்மாதான் அவர் ஒரே மகள். எனவே அவருடன் தாத்தாவின் பாசமுடன் உரிமையும் ஒட்டிக்கொண்டது. ‘மகள், அத எடு… இத எடு’ என்று அம்மாவை விரட்டிக்கொண்டே இருப்பார். அம்மாவும் அவர் அன்பில் அடைக்கலமாவார். அப்பாவிற்கும் தாத்தாவிற்குமிடையே ஏனே பசை போதவில்லை. அப்பா எமது குடும்பத்தில் சங்கமமானது அறுபதுகளில். அப்பா ஒரு ‘வேதக்காறன்’. சமயம் மாறி வந்து அம்மாவை கைப்பிடித்ததாலோ என்னவோ அப்பாவின்மேல் ஒரு தாத்தாவிற்கு ஒரு இரண்டாந்தரம். அப்பாவிடம் தாத்தா நேராக முகம்பார்த்து பேசமாட்டார். அப்பா என்றும் மந்தையில் இல்லாத ஆடு. ஒரு முறை அப்பாவிற்கும் அப்புவிற்கும் இடையே ஏதோ பிணக்கு “என்ர சையிக்கிள தொட வேண்டாம் எண்டு சொல்லு” என்று அம்மாவிடம், அப்பாவின் காது பட, சற்று உரக்கவே சொல்லிவிட்டார். சாமானிய குடும்பங்களில் சைக்கிள்தான் அந்நாட்களில் டெஸ்லர். வீட்டிற்கு ஒரு வாகனம் மட்டுமே. அப்பாவோ சாது. ஒருபோதும் அப்புவை போருக்கழைத்ததில்லை! எதிர்வசை பாடி பிளவை பெரிதாக்கும் எண்ணம் அப்பாவிற்கில்லை. அப்புவின் சைக்கிளை அப்பாவும் பின்னர் தொட்டதில்லை. அப்புவைத் தேடி வீட்டிற்கு பலர் வந்து போவதால் எப்போதும் எங்கள் வீடு களைகட்டியிருக்கும். அதற்கும் காரணம் உண்டு. அப்புதான் ஊர் எலும்பு முறிவு மற்றும் ‘பாம்புக்கடி’ வைத்தியர் …. வைத்தியர் என்ன வைத்தியர் … ஊர் பரியாரியார். எங்கள் ஐந்து அறை கல் வீட்டின் முன் பரந்து இருக்கும் குருத்து மணல் முற்றம். முற்றத்தின் மருங்கில் இரண்டு பெரிய மாமரமும் பலா மரமும் (அதென்ன பலா? பிலா மரம் என்றே வாசியுங்கள்!) கிளை விரித்து நிற்கும் வேப்ப மரமும் இருந்தன. அப்புவைப்பார்க்க வருவோர் கூடி இருக்க ஒரு திறந்த ஓலை மேய்ந்த ஒரு குடில். குடில் என்றதும் ‘அம்புலிமாமா’வில் நீங்கள் பார்த்த குட்டி குடிலை கற்பனையில் இழுத்து வந்து எங்கள் முற்றத்தில் வைக்காதீர்கள். உயர்ந்த கூரையுடன் அறைகள் போல் இரு தடுப்பு சுவர் வேலி போட்டு மேய்ந்த அமைப்பு அது. அப்பு இருக்க கதிரை மேசை வசதிகள் உண்டு. மேசை மேல் இருக்கும் ‘ஒத்த றூள் கொப்பி’ தான் அப்பு மருந்து எழுதும் றெஜிஸ்டர். நோய் என வருவோரை தன் முன் இருக்கும் கதிரையில் அமர்த்தி நாடி பிடித்து, இருமச் சொல்லி, முட்டியை தட்டி மேலும் ஏதோ ஏதோ பரீட்சாத்தங்கள் செய்து பின் மேசைக்கு பின்னே இருந்த அலுமாரியை திறந்து வடகம், தூள்கட்டு என பல உருவங்களில் மருந்துகளை பரிமாறுவார். அவற்றை எப்போது சாப்பிட வேண்டும் என்ற விபரங்களை நான் சொன்ன ‘ஒத்த றூள்’ கொப்பியின் ஒரு பக்கத்தில் எழுதி அடிமட்டம் வைத்து கிழித்து நோயாளிக்கு கையளிப்பார். அப்பு எவருக்கும் ‘தண்ணி மருந்து’ கொடுத்ததை கண்டதில்லை. “இந்த தூளை தேனில கரைச்சு விடியத்தால சாப்பிட வேணும் கண்டியோ? …. என்ன… நான் சொல்லுறது விளங்தோ?” என்று சொல்லி தன் வார்த்தைகளின் புரிதலை உறுதிப்படுத்திக் கொள்வார். தேனுக்குப் பதிலாய் முலைப்பாலும் வந்து போகும். எலும்பு முறிவிற்கு ‘பத்துப் போட’ வருபவர்களைப்பார்க்க எனக்கு ஆர்வம் இல்லை. ஒரு முறை மரத்தால் விழுந்தவனை நாலு பேர் தூக்கிக் கொண்டு வந்து கிடத்தினர். அப்பு அருகில் குந்திக்கொண்டு குசலம் விசாரிப்பது போல் அவனிடம் பேசிக் கொண்டு அவனின் நோய்ப்பட்ட கையை மருந்தெண்ணை தடவி மெதுவாக நீவி விட்டார். அவனும் அப்புவின் கேள்விகளுக்கு அனுகிய குரலில் “ஓம் ஐயா… ஓம் ஐயா” என்று பதில் சொல்லிக் கொண்டு இருந்தான். அவன் முழங்கையில் விலகிய எலும்பு துருத்திக் கொண்டு முழங்கையில் நீலம் பாவித்து வீங்க வைத்திருந்தது. அப்பு அவன் மேல் கையை பலமாக பற்றியவாறு கேள்விகளை தொடுத்தவாறு இருந்தார். ‘இந்த முறை விழைச்சல் எப்படி?… இந்த போகத்தில நெல்லு வில என்னவாம்?…..’ போன்ற கமம் செய்பவனிடம் கேட்கும் கேள்விகளால் அவன் காதை நிரப்புவார். அவன் கவனம் எல்லாம் அவரின் கேள்விகளுக்கு பதில் தேடுவதிலேயே அப்போது இருந்தது. அதுதான் தருணம் என்று அப்பு உணர்ந்திருக்க வேண்டும். சடாரெண்டு அவன் கையை ஒரு பொம்மையின் கையை திருகுவதைப் போல் திருகி பலமாக இழுத்து விட்டார். “ஐயோ… எண்ட ஆண்டவனே “ என்ற அவன் கூக்குரல் கூரையை பிய்த்தது! இந்த தருணத்திற்கு காத்திருந்தாற்போல் அப்பு ஒரு புன்சிரிப்புடன் ”இனி பத்து ஒண்டு போட்டா சரி, எலும்பு மூட்டுக்குள்ள சரியா கொளுவிற்று .. மூண்டு கிழமையில பத்த கழற்ற ஏலும் “ என்று வலியால் துடித்தவனுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறி இனி ‘பத்துப்போடு’வதற்கான ஆயுத்தங்களில் இறங்கினார். அப்புவின் எலும்பு முறிவு வைத்தியத்தை விட பாம்புக்கடி வைத்தியம் பார்க்க சுவாரசியமாக, ஒரு நாடகத்தன்மையுடன் கூடியதாய், இருக்கும். ஒருமுறை எங்கள் ‘வயல்காறன்’ வேலுமணியை வயல் அறுவடை சீசனில் ஏதோ பாம்பு கடித்துவிட்டது. ஊரார், அவன் வாயில் நுரை தள்ள, தூக்கிக்கொண்டு அப்புவிடம் ஓடி வந்தனர். “புடையன் பாம்பு கடிச்சிப்போட்டாம் ஐயா” என்ற சபையோரின் சாட்சியத்தை காதில் வாங்காமல் கடித்த பாம்பின் உடல் அடையாளங்களை முதலில் கேட்டறிந்து கொண்டார் அப்பு. அந்த விபரணையில் இருந்து கடித்த பாம்பு என்னவென்று கணித்துக் கொண்டு அதற்கான மந்திரங்களை ஓதத் தொடங்கினார். ஏறிய விஷத்தை இறங்கும்படி உருக்கமாய் அம்மாளிடம் வேண்டுவதாகவே அந்த மந்திரங்கள் ஓதப்பட்டன. ஆம், அவை கட்டளைகள் என்பதை விட வேண்டுதல்களே! அப்பு கையில் ஒரு வேப்பிலை கத்தை எடுத்துக் கொண்டார்.. வேலுமணி அரை பிரஃஜையுடன் வாயில் நுரை தள்ள தரையில் பாதி உணர்வுடன் கிடந்தான். அப்புவின் ஒரு கையில் வேப்பம் கொத்து … மறு கையில் ஒரு கைப்பிடி மிளகு. வேப்பம் கொத்தால் அவன் கன்னதில் பலமாக மாறி மாறி அறைந்தவாறு மந்திரங்கள் ஓதியவாறு ஒரு மிளகை அவன் பற்களுக்கிடையே திணித்து “மிளக முன் பல்லால கடிச்சி நுனி நாக்கால ருசி பாரு… என்ன உறைக்குதா சொல்லு?” என்று கேட்க அவன் இல்லை என்பதற்கு அடையாளமாக தலையை பக்கவாட்டில் அசைத்தான். பாம்பின் விஷம் தலைவரைக்கும் ஏறிவிட்டது என்பதை உணர்ந்தார் அப்பு. இல்லையெனில் மிளகு உறைத்திருக்க வேண்டுமே. இனி காலம் தாழ்த்த முடியாது….. செய்வதை விரைவாய் செய்தாக வேண்டும். மீண்டும் வேப்பம் கொத்து கசையடியும் உச்சஸ்தானத்தில் மந்திரங்களும் தொடர்ந்தன. மீண்டும் அதே பரீட்சை…. மிளகு அவனுக்கு உறைக்கவில்லை…. விஷம் இன்னும் இறங்கவில்லை. மந்திரமும் கசையடியும் தொடர ஒரு கட்டத்தில் “ஐயா… மிளகு உறைக்கிதையா” என்றான் உரத்த குரலில். வேப்பம் கொத்தின் விசையோ அப்புவின் மந்திர ஓதல்களோ…. ஏதோ ஒன்று அந்த மாயையை செய்தன. “விஷம் இறங்கிற்று… இறங்கிற்று … அம்மாளே நன்றி அம்மா!“ என்று பூரண திருப்தியுடன் கூறி தலையை நிமிர்த்தி சூழ்திருந்த கூட்டத்தை பெருமையுடன் பார்த்தார் அப்பு. சூழ்ந்திருந்த கூட்டமும் வாய் திறந்து நின்றது! ஊர்க்கோயில் இருந்த திசையில் தலையை திருப்பி இரு கரங்களையும் தலைக்கு மேல் கூப்பி தெய்வானை அம்மானை வணங்கி அந்த சடங்கை முடித்து வைத்தார். அப்புவுடனான என் உறவு திவ்வியமானது. அப்பு நல்ல கதை சொல்லி. எனக்கு கம்பராமாயணத்தையும் கீதையையும் ஒரு தொடர்கதையின் சுவாரசியத்துடன் சொல்வார். ராமாயணம் ராமர் கதையை சொல்லும் ஆனால் காட்சியாக காட்டாது என்போர் சிலர். ஆனால் அப்புவின் விவரணங்களுடன் கூடிய ராமர் கதையில் காட்சிகள் அவர் வார்த்தைகளில் ஒரு ரம்யமான காட்சியாய் திரைப்படம் போல் கண் முன்னே விரியும். அவர் வார்த்தைகளில் வனத்தில் சீதை மட்டுமல்ல நானும் வனத்தில் ஒரு கல்லில் உட்கார்த்து காட்சிகள ரசிக்கும் ஒரு உணர்வை உருவாக்கித்தருவார். கதை கேட்கும் படலம் முடிந்ததும் ஒரு சிறு பரிசளிப்பு. அவர் அறையில் இருந்த பெரிய முதிரை மர அலுமாரியின் மேல் தட்டில் அவரின் வேட்டி சால்வையின் பின் மறைத்து வைத்திருக்கும் சிறு டப்பாவை திறந்து இரண்டு மூன்று ‘மில்க்டொபி’ இனிப்புகளை பரிசளிப்பார். மூன்றுதான் தினக்கணக்கு. அம்மாவின் கட்டளையை மீறி நடக்கும் ஒரு இரகசிய பரிசளிப்பு இது. ‘“அப்பு, இவன் சின்னவனுக்கு டொபி, சொக்களட் ஒண்டும் கொடுக்காதேயுங்கோ…. பல்லு சூத்தை குத்திப் போடும்“ என்ற அம்மாவின் அறிவுரைகளும் புறக்கணிக்கப்படும். வாய் நிறைய இனிப்புக்களுடன் நான் அம்மாவிடம் மாட்டிக் கொண்ட தருணங்கள் உண்டு. “ அப்பு, இவன்ர வாய்க்குள்ள டொபி போல…. நீங்களோ குடுத்த நீங்கள்?” என்ற கேள்விக்கு பலமான மறுப்பு தலையாட்டல் அப்புவின் தரப்பில் இருந்து வரும். அப்பு இப்படி குறும்பு பொய் பேசும் வேளையில் தன் வலது கை விரல்களை மடக்கி பெருவிரலை ஆள்காட்டி விரலூடாக நுழைத்து ஒரு சமிக்கை செய்வார். அவர் கண்கள் குறும்பு சிரிப்புடன் “என் விரலைப் பார்” என்று சொல்லாமல் சொல்லும். இது எங்கள் இருவருக்கும் மட்டுமே புரியும் இரகசிய பரிபாஷை! x. x. x. x. x. x. x நாட்கள் உருண்டோடி ஆண்டுகளுக்குள் அடங்கி அவையும் உருண்டோடி…. அப்புவிற்கு பாரிசவாதம் வந்து உடலின் இடது பக்கத்தை இழுத்துக் கொண்டது. சாமி அறைக்குப்பக்கத்தில் தான் அப்புவின் அறை. அந்த அறையில் இருந்து இப்போ அவர் வெளியே வருவதில்ல. எங்கள் வயல்காரன் சாமித்தம்பிதான் இப்போ அப்புவுக்கு எல்லாம். அவனுக்கும் அப்படி ஒன்றும் இள வயது இல்லை. காலையில் அவரை அணைத்தவாறு மூச்சு முட்ட தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு கிணற்றடியில் இருந்த கதிரையில் உட்கார்த்தி ஒரு குளியல். அவனே அப்புவின் தலையை துவட்டி புது வேட்டி உடுப்பித்து மீண்டும் அவரை வீட்டிற்குள் தூக்கிக்கொண்டு போவான். அப்புவிற்கு சாப்பாடு பிசைந்துதான் ஊட்டி விட வேண்டும். பற்கள் விடைபெற்றுக்கொண்ட வயது அவருக்கு. அதுவும் சாமித்தம்பியின்ர வேலைதான். ஆனால் அம்மாதான் சோறு கறிகள் எல்லாம் பீங்கானில் பரிமாறி தன் கையால பிசைந்து “சாமித்தம்பி…. இத அப்புவிற்கு தீத்தி விடு பாப்பம்… வேணாம் எண்டு சொன்னாலும் எல்லாத்தையும் தீத்தி விடப்பாரு… நேத்து மத்தியானமும் நல்லா சாப்பிட யில்ல… வர வர உடம்பும் சூம்பிக்கொண்டு போகுது!” என்று சொல்லி வேதனையுடன் அங்கலாய்ப்பார். அம்மாவிற்கும் முன்னரைப் போல் ஓடி ஆடி வேலை செய்ய முடியாது. நாடியில் கைவைத்தபடி அப்புவின் குளியலை பார்த்து ‘எப்படி இருந்த மனுஷன்? வயசு தான் என்னமா அப்புவின்ர சௌந்தரியத்த சிதைச்சுப் போட்டுது?” என்று முணுமுணுப்பார் அம்மா. அப்புவின் தேக சுகம் தேய்பிறையாய் மாறி வருவது அம்மாவின் சோகத்திற்கு முதல் காரணி. வாழ்வின் சோகங்களை வலைக்கரண்டி போட்டா வடித்தெடுக்க முடியும்? வாழ்ந்துதானே கழிக்க வேண்டும். அதுவே உலக நியதி அல்லா? அம்மாவிற்கும் இது தெரியாததல்ல. ஒரு நாள் அயல் வீட்டு செல்வி மாமி அப்புவின் நிலையை புரிந்து கொண்டு “இஞ்ச பாரு புள்ள… எத்தின நாளுக்கு பெரிய ஐயாவ வீட்டோட வச்சு பாக்கப்போறா? சாமித்தம்பியும் நெல்லு மூட்டய தூக்கிற மாதிரி அவர கஸ்டப்பட்டு தூக்கிற்று கிணத்தடியும் வீடும் எண்டு திரியிறான். ஒரு நாளைக்கு தடுக்கி விழுந்தினமோ அவ்வளவுதான். சீவன் போயிடும் கண்டயோ?” என பயம் காட்டினார். செல்வி மாமி சொன்னதும் அம்மாவிற்கு சரியாகவே பட்டது. அப்பாவை மாரடைப்பால் மூன்று வருடங்களுக்கு முன் இழந்த அம்மா தனியாக அப்புவை பார்ப்பதை ஒரு சுமையாகவே இப்போது கண்டார். நானும் மனிசியும் மகனும் குடும்பத்தோட கொழும்பு தெமத்தகொடவில இடம்பெயர்ந்துவிட்டதால் அம்மாவும் தனது கைத்துணையை இழந்து விட்டிருந்தார். தினசரி இரவு கைபேசி அழைப்புகளில் அப்புவின் நிலமை பற்றி அழுது புலம்புவது இப்போ வாடிக்கையாகிவிட்டது. செல்வி மாமி அம்மாவிடம் ‘“டவுனில இப்ப புதிசா ஒரு வயோதிபர் மடம் திறந்திரிக்கினமாம்… இப்ப கனடாவில இருக்கிற நம்மட கோயிலடி சண்முகத்தின்ர கொப்பரும் அங்கதானாம் இப்ப இருக்கிறாராம். வேளைக்கு நம்மட ஊர் சாப்பாடு… வருத்தம் வாதை எண்டால் உடனே டாகுத்தர் அங்கேயே வந்து பாப்பினமாம். ஒவ்வொரு நாளும் தியானம், யோகாசானம் எண்டு எல்லாம் இருக்குதாம். ஒருக்கா உன்ர மகனோட கதைச்சிப் போட்டு அப்புவையும் அங்க சேத்து விடலாம்தானே?” என்று ஓதி வைத்தாள். அம்மா தனது தினசரி நச்சரிப்புக்களுடன் இந்த செய்தியையும் என்னுடன் பகிர்ந்தார். அம்மாவின் வார்த்தைகளின் வலிமையை என்றும் உணர்ந்தவன் நான். ஒரு முடிவை எடுத்த பின் அதன் சாரத்தை என்னிடம் கூறி என் அனுமதிக்காய் காத்திராமல் ‘“அதத்தான் செய்வம் மகன்” என்று சம்பாஷணையை முடிப்பார். அப்புவின் இடப்பெயர்ச்சி அடுத்த மாதமே நடந்து முடிந்தது. என்னால் வேலை நிமித்தம் கொழும்பில் இருந்து ஊருக்கு உடனே திரும்பி வர முடியவில்லை. ஆனால் அடுத்த மாதமே லீவில் தனியே ஊர் திரும்பி அப்புவின் புதிய வாசஸ்தலத்தை பார்க்க விரைந்தேன். அம்மா அப்புவை அந்த வயோதிபர் மடத்தில் சேர்ப்பதற்கு பட்ட கஸ்டங்களை பட்டியல் போட்டார். வயல்காரன் சாமித்தம்பியின் பங்களிப்பை சிலாகித்துப் பேசினர் அம்மா. எனது இடைவெளியை நிரப்பிய அவன் உண்மையில் ஒரு புண்ணியவான்தான். அப்பு இல்லாத எங்கள் வீடு களையிழுந்து வெறிச்சோடியிருந்தது. அப்பு உட்காந்திருக்கும் ஊஞ்சல் சலனமற்று ஸ்தம்பித்து நின்றிருந்தது.. தான் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு தனது சொந்தங்கள் எடுக்கும் முடிவுகளால் நிகழும் இந்த இடப்பெயர்வுகள் கொடியன. தமது விருப்பத்திற்கு மாறாக, சொந்தங்கள் சொல்லும் தேன் பூசிய வார்த்தைகளை நம்பவது போல் பாசாங்கு செய்து, மௌனமே மொழியாகி பெட்டிக்குள் அடங்கும் பாம்பாக எத்தனை ஜென்மங்கள் தம் புளித்துப் போன மீதி வாழ்க்கையை சோகத்தில் வாழ்ந்து கரைக்கின்றன? மண்ணை மீறும் விதைகளாய் வாழ்ந்து காட்டுகிறேன் பார் என்று சமூகத்தை சவாலுக்கு அழைத்த இளமை ஓய்ந்துவிட வேர்கள் வெட்டப்பட்ட மரத்தின் தனிமையுடன் தம் குறுகிய உலகினுள் சுருங்கிக் கொண்ட ஜீவன்களின் பிரதிநிதிதான் அப்பு இன்று. அப்புவின் காலை உணவு பரிமாறப்பட்டதும் நானும் அம்மாவும் அவரை பர்க்க அந்த வயோதிபர் மடத்திற்கு சென்றிருந்தோம். அப்புவிற்கென ஒரு தனி அறை. மேலே மின்விசிறி சுழன்று அறைக்கு ஒரு ஆடம்பரத்தை கொடுத்தது. அப்பு உட்கார்ந்து வாசிக்க நல்ல மரக்கதிரை ஒன்று. மூலையில் ஒரு அரை அலுமாரி. குளியறைக்கு அழைத்துச்செல்லும வாசல் கதவு மூடியிருந்தது. கட்டிலின் அருகில் தொங்கிக் கொண்டிருந்த ‘காலிங் பெல்’. அடித்தால் உதவிக்கு ஆள் வரும். அப்பு என்றும் போலவே வெள்ளை ‘பாலாமணி’ யும் சாரனும் அணிந்து இருந்தார். கட்டிலில் படுத்தவாறு இருந்தவர் எம்மைக் கண்டதும் எழுத்து உட்கார எத்தனித்தார். முடியவில்லை. ‘“ நீங்க படுங்க அப்பு… நான் கட்டிலில கிட்ட இருக்கிறன்… எழும்பி கஸ்டப்பட வேணாம் “ என்று கூறி அருகில் அமர்ந்து கொண்டேன். அம்மாவும் ‘“ எப்படி அப்பா, எல்லாம் வசதி தானே… நல்லா பாத்துக் கொள்ளுகினமா?… உங்கட சாப்பாட்டில சீனி சேர்க்க வேண்டாம் எண்டு சொல்லியிருக்கன்…. இண்டைக்கு குளிப்பாட்டினவையளோ?” என்ற கேள்விக்கு அப்பா இல்லை என்று தலையாட்டியே பதிலளித்தார். மீண்டும் ஏதோ சொல்ல வேண்டும் போல் அவருக்கு தோன்றியிருக்க வேண்டும். முகத்தில் ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய மெளனம்… பறிபோன சொற்களை மீட்டெடுக்கும் மெளனம். ‘“மகள் … நான் வீட்டுக்கு வந்து இருக்கப்போறன் மகள்… இஞ்ச ஏலாது…. இஞ்ச இந்த அறைக்குள்ள தனிச்சிப் போயிட்டன் பிள்ள … பயமாய் இருக்கு மகள்… இஞ்ச எனக்கு யாரு இருக்கா?“ என்றபோது அவர் உடல் குலுங்கி அடங்கியது. அப்புவின் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் அம்மா என் முகத்தைப் பார்த்தார். அப்புவின் கண்கள் பனித்ததை அம்மாவும் கவனித்தார். ‘பையா… தனிச்சுப் போயிட்டன் ராசா… சாப்பாடும் குளிப்பும்தான் வாழ்கையில்ல பையா… குடும்பமடா… குடும்பம். அது இஞ்ச இல்ல மகன் … என்னை நம்மட வீட்டுக்கு கூட்டிப் போ ராசா“ என்று என்னைப் பார்த்து சொன்ன வார்த்தைகள் இடியாய் என்னுள் இறங்கின. அப்போது அறைக்கதவு திறந்து கொள்ள அந்த வயோதிபர் மடத்தின் ‘மேற்ரன்’ உள்ளே நுழைந்து எம் எல்லோரையும் கண்களால் துலாவி “ ஓ… ஐயாவ பார்க்க எல்லொரும் வந்திருக்காங்க போல“ என்று கூறி பின் அப்புவைப் பார்த்து “ எப்பிடி ஐயா இருக்கிறீங்கள். எல்லாம் வசதிதானே? ஏதாவது தேவையென்டால் சொல்லவேணும். என்ன… சந்தோசம் தானே?” என்ற கேள்விக்கு ‘“ஓம் … மெத்த சந்தோசம்… மெத்த சந்தோசம்” என்று தலையை ஆட்டியவாறு கூறி என் கண்களை ஏறிட்டுப்பார்த்தார் அப்பு. பின் அவர் கண்கள் தன் வலது கை விரல்களில் குத்திட்டு நின்றன. என் பார்வை அப்புவின் அந்த கை விரல்களில் குவிந்தது. பெருவிரல் ஆள்காட்டி விரலூடாக நுழைந்து எம்மிருவருக்கு மட்டும் தெரிந்த அந்த இரகசிய சமிக்கையை உருவாக்கிக் காட்டிற்று! https://solvanam.com/2025/07/13/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88/
  20. நீங்கள் ஒரு அடிப்படையில் நல்ல மனிதராக இருப்பீர்கள் எனும் புரிதல் உங்கள் கதைகளை வாசிக்கும் போது உருவாகிறது.
  21. 🤣................. மண்புழுக்கள், சிலந்திகள், பல்லிகள், குருவிகள், பூனைகள், மனிதர்கள் மற்றும் மரங்கள் போன்றவற்றின் ஊடாகவே நான் என்னைச் சுற்றி இருக்கும் உலகத்தை பார்க்கின்றேன்......... என்னால் முடிந்த வரை எந்தப் பக்கமும் சாயாமல் அப்படியே சொல்லவும் முயல்கின்றேன்........ வேலை வெட்டி இல்லாதவன் போல என்ற ஒரு புரிதல் வருவதில்லைதானே.............🤣.
  22. காலநிலை மாற்றம்: இலங்கையின் தமிழ்த்தாயகத்திக்கு கொண்டுவரும் புதிய நெருக்கடி நிலை Photo: ஐசாக் நிக்கோ | இலங்கையின் வட மாகாணத்திலும், போரினால் ஏற்பட்ட பேரழிவுகள், கட்டமைக்கப்பட்ட இனப்பாகுபாட்டு நடவடிக்கைகள் போன்றவற்றால் அவதிக்குள்ளாகியுள்ள தமிழ் மக்கள் மிகையளவில் பரம்பியுள்ள ஏனைய பிரதேசங்களிலும் சாதகமற்ற காலநிலை மாற்றங்களால் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலை தமிழ்த் தேசியத்துக்கு பல புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. “இந்த மண்ணில்தான் உங்களது இனத்தின் அடையாளம் ஆழ வேரூன்றியிருக்கிறது” என 1998ஆம் ஆண்டு, புலம்பெயர் தமிழ் மக்களிடையே உரையாற்றும்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தெரிவித்தார். இலங்கையின் வட கீழ் நிலப்பரப்பான தீவின் மேற்குக் கரையோரத்தில் கற்பிட்டி தொடங்கி கிழக்குக் கரையோரமான திருகோணமலை வரை உள்ள 14ஆம் 17ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் யாழ்ப்பாணம் இராசதானியின் பிரதேச எல்லைகளாக இருந்த பகுதியையே அவர் அவ்வாறு மேற்கோளிட்டார். இந்த மண்ணுக்காகவும், அதனை ஆளும் வல்லமைக்காகவும்தான், இலங்கை அரசுக்கும் பிரிவினைவாத தமிழ் சக்திகளுக்கும் இடையில் இடம்பெற்ற இருபத்தாறு வருடகால ஆயுதப் போராட்டத்தில் எண்ணிலடங்காத ஆண்களும் பெண்களும் போராடி உயிர்துறந்தனர். ஒரு முக்கியம் வாய்ந்த தமிழ் தேசிய கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் “போருக்குப் பிறகும், எங்களது இறைமையையும் விடுதலையையும் மீளப்பெற நாங்கள் இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம்” என என்னிடம் கூறினார். இந்நெருக்கடிநிலைக்கான தீர்வு இதுவரை எட்டப்படாத நிலையில் மேலதிகமாக இன்னுமொரு பிரச்சினை பிறந்திருக்கிறது: எந்த நிலத்தைப் பாதுகாக்க தமிழ் மக்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தார்களோ, எந்த நிலத்தில் அவர்களது அடையாளம் ஆழமாக வேரூன்றியிருக்கிறதோ அதே நிலம் ஒரு புதிய, மாறுபட்ட அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருக்கிறது. சுவிஸ் நாட்டின் விவசாய விஞ்ஞான பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களில் ஒருவரான நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா என்னிடம் தெரிவித்ததாவது, “இது இனிமேலும் வெறும் காலநிலை மாற்றம் அல்ல. இது ஒரு காலநிலை நெருக்கடி.” பல வளர்ந்து வரும் சிறுதீவு நாடுகள் போல இலங்கையும் காலநிலை மாற்றத்தில் மேற்கொள்ளப்படும் அநீதிக்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. குறிப்பிடத்தக்க அளவு உயர் காபன் உமிழ்வை மேற்கொள்ளாத போதும், உலகளாவிய காபன் இடர் குறியீட்டுப் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முதல் பத்து இடங்களுக்குள் வரிசைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், உலக வங்கியின் 2018ஆம் ஆண்டின் ஆய்வொன்றின்படி இலங்கையின் அதிகூடிய காலநிலை வெப்பநிலைத் தளங்களாக வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்கள் இனங்காணப்பட்டுள்ளன. தமிழ்த் தாயகத்தின் பகுதிகளாகக் கருதப்படும் யாழ்ப்பாணம், புத்தளம், மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களே காலநிலை இடர்பாட்டினால் அதிகூடிய பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பைக் கொண்டிருக்கும் மாவட்டங்களாக கருதப்படுகின்றன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இப்பிராந்தியங்கள் – நீண்டகால இனப் பாகுபாடு மற்றும் அரச வன்முறைகளுக்குள்ளான மாவட்டங்கள் – இக்காலநிலை இடரை எதிர்கொள்வதற்கான வளங்கள் மற்றும் வழிமுறைகளை அதிகுறைந்த அளவில் கொண்டிருக்கின்றன. பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் நடாத்தப்படும் காலநிலை மற்றும் அறிவியல் ஆய்வு மதிப்பீடுகளுடன் கூடிய கலந்துரையாடல்கள், தமிழ் தாயகத்தின் காலநிலை அவசர நிலையின் அதிர்ச்சியூட்டும் நிகழ்நிலைத் தரவுகளை வெளிப்படுத்துகின்றன. கடல்நீர்மட்ட உயர்வு, நிலம் உப்பாதல், வெள்ளம், வரட்சி, கரையோர மண்ணரிப்பு, பவள வெழுக்கம், வானிலையின் நிலையற்ற தன்மை மற்றும் தீவிர வெப்பம் போன்றவை ஏற்கனவே விவசாய மற்றும் மீன்பிடி சமூகத்தின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்த வண்ணம் உள்ளதோடு அந்நிலத்தின் தன்மை மற்றும் உற்பத்தித் திறனிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அதிகம் துஷ்பிரயோகிக்கப்பட்ட தமிழர்களும் அவர்களது தலைமைத்துவங்களாக தங்களைப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் தமிழ்த் தேசிய அமைப்புக்களும் இவ்வச்சுறுத்தல் தொடர்பான விழிப்புணர்வு இல்லாமல் வெறுமனே அவற்றை கடந்துசெல்லவே தயாராக உள்ளனர். நீர்வளமும் அதன் ஊடுருவலும் “ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் மழை இல்லாதபோது வயல் நிலங்களில் உப்புப் படிமங்கள் உருவாக்கியிருப்பதை காணலாம்” என மன்னார் மாவட்டம் விடத்தல் தீவைச் சேர்ந்த சூழலியலாளரான எடிசன் மேரிநாதன் என்னிடம் குறிப்பிட்டார். நிலம் மற்றும் நிலக்கீழ் நீரின் உப்புத்தன்மையை அதிகரிக்கின்ற, உப்புப் படிவாக்கம், இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஏற்கனவே யாழ். குடாநாட்டின் 43 சதவீதமான விவசாய நிலங்களின் நிரந்தரமான கைவிடப்படலுக்கு காரணமாக இருந்ததோடு, அது அப்பகுதி முழுவதுமான பயிர்ப்பாசனம் மற்றும் குடிநீர் விநியோகம் ஆகியவற்றுக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. 2020 இல் நிலக்கீழ் நீர்வளத்தின் உடனடி பரிபாலானத்தை வலியுறுத்தும்வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று, குறித்த ஆண்டில் யாழ். குடாநாட்டில் இருந்த கிட்டத்தட்ட 59 சதவீதமான கிணறுகளின் நீர், பயிர்ப் பாசனத்துக்கு பொருத்தமற்ற விதத்தில் உப்புத்தன்மை வாய்ந்ததாக மாறியிருந்தமை குறித்து கண்டறிந்தது. தொடர் நீர்ப்பற்றாக்குறைக்காக அறியப்பட்ட வட மாகாணத்தில் இதுவொரு எளிய பிரச்சினை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. காலநிலை சமநிலையின்மையின் அறிகுறிகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்ற ஏராளமான கரையோரக் கிராமங்களில் ஒன்றான மன்னார் மாவட்டத்தின் இலுப்பக்கடவையில் நீரினுள் நிற்கும் நாய். காலநிலை சமநிலையின்மையின் அச்சுறுத்தல்கள் பற்றிய விடயங்கள் இன்னும் பொதுவான கலந்துரையாடல் வடிவம் பெறவோ அல்லது தமிழ் பெரும்பான்மை கொண்ட வடக்கின் அரசியல் சிந்தனைகளாக கருத்தில் கொள்ளப்படவோ இல்லை. Photo: ஐசாக் நிக்கோ உப்புப் படிவாக்கம் அதிகளவான நீர் பாவனையின் விளைவு என காலநிலை விஞ்ஞானி தரணி கோபாலகிருஷ்ணன் விளக்குகின்றார். சனத்தொகை அதிகரிக்க அதிகரிக்க மக்கள் புதிது புதிதாக கிணறுகளை தோண்டிய வண்ணம் இருக்கிறார்கள். நீர்ப்பாசனம் மற்றும் வீட்டுத் தேவைகளுக்கான அதிகளவான நீர் பாவனைய, யாழின் நீர்கொள் படுகைகளாகச் செயற்படும் சுண்ணாம்புப் படுகைப் பாறைகளுக்கிடைப்பட்ட கடல் மற்றும் நன்னீர் சமநிலையை பாதிக்கின்றமை கிணறுகளிலுள்ள நீரை உவர்தன்மைமிக்கதாக மாற்றுகிறது. ஆனால், காலநிலை சமநிலையின்மையால் விளைந்த கடல்நீர்மட்ட உயர்வு மற்றும் நிலமட்டத்தைத் தாண்டிய கடல் நீரின் மிகை ஊடுருவல் போன்றவற்றாலும்கூட உப்புப் படிவாக்கம் நிகழ்கின்றது. உவர்நீர் ஊடுருவலின் விளைவாக யாழில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பும், நூற்றுக்கணக்கான கிணறுகளும் பாவனையிலிருந்து கைவிடப்பட்டுள்ளன. கோபாலகிருஷ்ணனின் கூற்றுப்படி பல்வேறு இடங்களில் மண்ணின் உப்புப் படிவாக்கம் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்பது தெரிகிறது. மேலும், பூநகரி அல்லது அரியாலையிலுள்ள கைவிடப்பட்ட வயல் நிலங்களுக்குச் சென்று பார்த்தோமானால், அங்குள்ள மண் கடல் மண்ணின் தன்மையில் காட்சியளிப்பதோடு சிலவேளைகளில் அவற்றில் சிப்பிகளையும் கண்டெடுக்க முடியும் என்று அப்பெண் தெரிவித்தார். பெரும்பாலான மக்கள் வாழும் கரையோரத்தின் சமதரையான யாழ். குடாநாட்டில் கடல்நீர்மட்ட உயர்வானது மண்ணரிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவற்றுக்கும் காரணமாக அமையும். மொத்த நிலப்பரப்பில் 35 சதவீதமும் பிராந்தியத்தின் விவசாய நிலங்களில் 52 சதவீதமும் 2100ஆம் ஆண்டளவில் அற்றுப்போகும் வாய்ப்புள்ளதாக காலநிலை விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணத்தின் மூன்றில் ஒரு பங்கு குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கின்ற நிலைமையில், யாழ்ப்பாணத்தின் உழைக்கும் மக்கள் தொகையில் நாலில் ஒரு பங்கினரை 2050 அளவில் நெல்லுற்பத்தியில் ஏற்படப்போவதாக கணிக்கப்படும் சுமார் ஒரு மில்லியன் டாலர்கள் வீழ்ச்சி நேரடியாக பாதிக்கும் அபாயம் உள்ளது. சனத்தொகை பெருக்கத்தோடு கூடிய நெல்லுற்பத்தியின் வீழ்ச்சி குடாநாட்டில் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்துவதோடு வறுமைக்கும் வழிவகுக்கும் என காலநிலை விஞ்ஞானிகள் எதிர்வு கூறுகின்றனர். இலங்கையின் வடமேற்குக் கரையோரமாக கிழக்கு அரிப்பு பகுதியில் நீரை அண்மித்த இரண்டடுக்கு செங்கல் மாளிகையொன்று தீவிர வெப்பம் மற்றும் கடலரிப்பின் விளைவாக அழிவடைந்த வண்ணம் காணப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டடம் ஒரு காலத்தில் இலங்கையின் முதல் பிரிட்டிஷ் ஆளுநரான பிரடெரிக் நோர்த் அவர்களின் வசிப்பிடமாக இருந்தது. இன்று இது அழிவடையும் நிலையில் உள்ளது. இன்னும் சில மீட்டர்கள் தூரத்தில் கடலலைகளின் தொடர் மோதலால் அங்குள்ள உருளைவடிவக் கிணறொன்றின் செங்கல் அடுக்குகள் படிப்படியாக வெளித்தெரியத் தொடங்கிவிட்டன. 71 வயதான கிராமவாசியான டீ.எம்.க்ரூஸின் கூற்றுப்படி கரையோர மண்ணரிப்பானது கடந்த மூன்று அல்லது நான்கே வருடங்களில் இக்கிணற்றைச் சுற்றியுள்ள மண்ணை உட்கொண்டுள்ளதாக தெரிகிறது. கடலிலிருந்து கரைக்கு மீன் கொண்டுவரும் கரையோர மீனவரான எஸ்.ஏ.பெர்னாண்டோ இக்கிணற்றிலிருந்து நன்னீரை குடிநீராகப் பயன்படுத்தி வந்தவர். தற்போது இக்கிணற்றில் குடிப்பதற்கு முடியாத நிலையில், நீரில் உப்பு கலந்திருப்பதாக அவர் கூறுகிறார். என்ன காரணத்தினால் கடலரிப்பு மற்றும் உப்பேற்றம் போன்றவை நிகழ்கின்றன என்ற எந்தவித அனுமானமும் அவருக்கு இல்லை. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் நீர்மட்ட உயர்வு கடலரிப்பு வீதத்தை அதிகரிக்கின்ற அதேவேளை, கரையோர கட்டுமானங்கள் போன்ற மனித நடவடிக்கைகள் மற்றும் இயற்கையில் ஏற்படும் இயல்பான மாற்றங்கள் போன்றவற்றின் விளைவுகள் கூட இவ்வாறான கடலரிப்புக்கு காரணமாக அமையலாம். கடலரிப்பின் விளைவால் பெரும்பாலான வடமேல் கரையோரங்களில் உள்ள நிலப்பரப்புக்கள் படிப்படியாக கடலினால் உள்வாங்கப்பட்டு வந்துள்ளன. உதாரணமாக முத்தரிப்புத்துறை மற்றும் சிலாவத்துறைக்கு இடைப்பட்ட பகுதிகளை குறிப்பிடலாம். “மக்கள் நடந்துசெல்கின்ற இடங்கள் கடலுக்குள் காணாமல் போய்விட்டன” என்கிறார் க்ரூஸ். “எதிர்காலததில் எது என்ன விதத்தில் நடக்கும் என்பது இறைவனுக்கே தெரியும்.” என்றும் க்ரூஸ் கூறுகிறார். எஸ்.ஏ.பெர்னாண்டோ இக்கிணற்றிலிருந்து நன்னீரை குடிநீராகப் பயன்படுத்தி வந்தவர். ஆனால், தற்போது இக்கிணற்று நீரில் குடிப்பதற்கு முடியாத நிலையில் உப்பு கலந்திருக்கிறது. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கில் காலநிலையின் உக்கிரம் உப்புப் படிவாக்கம் மற்றும் கடலரிப்பை அதிகரிக்கச் செய்கிறது. இருந்தும் பெர்னாண்டோ போன்றவர்களிடம் இவ்வுலகளாவிய காலநிலை நெருக்கடி பற்றிய விழிப்புணர்வு போதிய அளவு இல்லை. Photo: ஐசாக் நிக்கோ தமிழ் தாயகத்தை கடல் உள்வாங்கிக்கொள்ளும் எதிர்வுகூறல் தமிழின் புராண வரலாற்றை எதிரொலிக்கிறது. சங்கத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் குமரிக் கண்டம் – தமிழர்கள் இன்று வாழ்கின்ற நிலங்களுக்கு எந்த நிலத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்தார்களோ அந்தப் புராதன நிலத் துண்டம் – முற்றாகக் கடல் உள்வாங்கிக்கொள்ள முன்பு அந்நிலம் ஒரு பெரும் பிரளயம் அல்லது பிரளயங்களின் தொடர் போன்ற இயற்கைப் பேரழிவுகளை எதிர்கொண்டது. இத்தொன்ம வரலாறு எமக்கு வருத்தமளிக்கிறது. புத்தளம் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கல்பிட்டியின் தீவுகள் மற்றும் ஏனைய நிலப்பகுதிகள் இன்று கடலில் மூழ்கிக்கொண்டிருக்கின்றன. யாழ். குடாநாடு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பகுதியைச் சுற்றியுள்ள பெரும்பாலான தீவுகளை 2100ஆம் ஆண்டளவில் முற்றாக கடல் உள்வாங்கிக்கொள்ளும் என காலநிலை விஞ்ஞானிகள் எதிர்வு கூறுகின்றனர். அண்மைய வெள்ளப்பெருக்குகளை கருத்தில் கொள்ளும்போது கடந்தகால புராணங்களில் கூறப்பட்டுள்ள பிரளயங்கள் வினோதமான தீர்க்கதரிசனமாக தோன்றுகிறது. வருடா வருடம் இயற்கை அனர்த்தங்களால் இலங்கைக்கு ஏற்படும் பொருளிழப்பில் பெரும்பகுதியை வெள்ள அனர்த்தங்களே ஏற்படுத்துகிறன. வருடாந்தம் சுமார் 140 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கின்ற இத்தொகை 2030ஆம் ஆண்டளவில் 338 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் வெள்ளப்பெருக்கானது மண்சரிவு, தொற்றுநோய்கள் போன்ற இன்னோரன்ன அபாயங்களை அதிகரிக்கச்செய்து உயிர், வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் அச்சுறுத்தலாக அமையும் அபாயம் உள்ளது. 1964ஆம் ஆண்டு வடக்கில் சுமார் ஆயிரம் பேர் வரை உயிரிழக்க நேரிட்ட இராமேஸ்வரம் சூறாவளிக்குப் பின்னர் குறிப்பிடத்தக்களவு வெள்ள அனர்த்தங்கள் நிகழ்ந்ததாக தனது கவனத்தில் இல்லை என கரையோர நகரமான விடத்தல்தீவின் விவசாயக் குடும்பமொன்றின் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்த செபஸ்டியன்பிள்ளை சத்தியசேகரன் தெரிவித்தார். ஆனால், 2020 இல் புரெவி புயல் தாக்கியபோது பல இடங்கள் வெள்ளக்காடானதோடு சுமார் 70,000 இற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்புக்குள்ளாயினர். சத்தியசேகரத்தின் வயல் நிலம் முற்றாக நீரில் மூழ்கியதோடு அவரது மூத்த சகோதரர் அவ்வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து அவ்வருடத்துக்கான விவசாயத்தை முற்றுமுழுதாக கைவிட்டதாகச் சொன்னார். நிலக்கீழ்நீர் உப்பாகியிருக்கலாம் என ஊகித்து அடுத்த வருடமும் அவர் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளவில்லை. வெள்ள அனர்த்தங்களால் இலங்கையில் கடந்த முப்பது ஆண்டுகளில் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதிகரித்துவரும் வெள்ள அனர்த்தங்களின் நிகழ்தகவுகள் மக்கள் மத்தியில் முழுவதும் பதிவுசெய்யப்படவில்லை. நிலத்தின் மதிப்பானது அதன் நிலையமைப்பு, அங்குள்ள இயற்கை பேரழிவுகளுக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் தள விபரம் போன்ற அளவுகோல்களில் தங்கியுள்ளது என மன்னார் தீவைச் சேர்ந்த சொத்து மதிப்பீட்டாளர் செபஸ்டியன்பிள்ளை சத்யதீபன் அறிந்திருந்தார். இருப்பினும், கட்டுமானத்தை ஆரம்பித்து இரண்டாவது வருடத்திலேயே வெள்ளத்தில் மூழ்கிய ஒரு நிலத் துண்டில் குறித்த கட்டுமானத்தை அவர் இன்னும் தொடர்கிறார். “வெள்ளம் வடிந்ததும் நிலம் காய்ந்துவிடும்” என்றும் “அது ஒரு பெரும் பிரச்சினையல்ல” என்றும் அவர் சொல்கிறார். எனினும், குன்சன் மற்றும் எடிசன் மேரிநாதன் போன்ற சூழலியல் செயற்பாட்டாளர்கள் மன்னாரில் வாழும் மக்கள் தீவிர காலநிலையின் நெருக்கடி நிலை குறித்து போதிய விழிப்புணர்வின்றி அசிரத்தையாக இருப்பது குறித்து கவலை தெரிவித்தனர். கனமழையின்போது மன்னார் தீவை பிரதான நிலப்பரப்புடன் இணைக்கும் வீதியின் நீர் மட்டத்தை குன்சன் கண்காணித்து வருகிறார். இந்த வீதி விரைவில் நீரில் மூழ்கும் எனவும், அது மன்னாரை அத்தியாவசியப் பொருள் வழங்கலில் இருந்தும் துண்டித்துவிடுவதோடு, மக்களை அங்கிருந்து இடம்பெயரும் கட்டாயத்துக்கும் ஆளாக்கும் எனவும் எச்சரிக்கை செய்தார். வெம்மையும் அறுவடையும் காலநிலை மாற்றம் இலங்கையில் வரட்சி, வெள்ளப்பெருக்கு போன்ற அசௌகரியங்கள் ஏற்படுவதற்கான நிகழ்தகவு மற்றும் தீவிரம் போன்றவற்றை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2008 – 2018 இற்கு இடைப்பட்ட காலத்தில் வரட்சியால் நாட்டில் சுமார் எட்டு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். 2014, 2016 -17 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட வரட்சியில் வெப்ப வலயமான வட மாகாணம் அசாதாரணமான பாதிப்பை எதிர்கொண்டது. 2023 ஆகஸ்ட் மாதத்தில் வரட்சி போன்ற காலநிலை காரணமாக இலங்கையில் பத்து மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான குடிநீரின்றி அவதிக்குள்ளாயினர். குறிப்பாக யாழ்ப்பாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. கிட்டத்தட்ட பாதிக்கப்பட்ட 150,000 பேரில் 85 சதவீதமானோர் இம்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்வீடன் நாட்டின் விவசாய விஞ்ஞான பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்ரீஸ்கந்தராஜா, இலங்கையானது வெப்ப வலயங்கள் உட்பட அனைத்துப் பிரதேசங்களிலும் சீரான மழைவீழ்ச்சியை பெறும் ஒரு நாடு எனத் தெரிவிக்கிறார். அழுத்தம் மிக்க காலநிலை கொண்ட சூழலில் மோசமான நிலையில் உள்ள நீர் “மேலாண்மை” மற்றும் வளங்களின் வினைத்திறனான பரிபாலனத்தின் தேவை ஆகியன இன்னும் அழுத்தமான பிரச்சினையாக இருக்கின்றன எனவும் அவர் கூறினார். மேலும், “அதிக நீரை நுகரும்” சோள உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் வரையப்பட்டுள்ள தேசிய செயற்றிட்டத்தை விமர்சித்தவண்ணம், உள்ளூர் சாகுபடிகள் பற்றிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு விதைத்தலுக்கான பயிர்கள் மறுபரிசீலனை செய்யப்படல் வேண்டும் என்றும், நிலத்தின் தரைத்தோற்றம், தட்பவெப்பநிலை மற்றும் வளங்களின் கிடைப்பனவுகளுக்கு ஏற்புடைய விதத்தில் விவசாயப் பயிர்களை தேர்வுசெய்வது அவசியம் எனவும் அவர் வாதிடுகிறார். பசுமைப் புரட்சி காலத்தில், அதிக விளைச்சலைத் தரும் நெல் மற்றும் பிற பயிர்களால் பதிலீடு செய்யப்பட முன்னர் தமிழர்களின் உணவுக் கலாசாரத்தில் முக்கிய இடம் வகித்துவந்த, மிகக் குறைந்தளவு நீரின் கிடைப்பனவிலும் செழிப்பாக வளரக்கூடிய, தீவிர காலநிலையின் தாங்குதிறன் மிக்க பயிரான ‘தினை’யை தனது பாட்டன் காலத்து மக்கள் உண்டு பிழைத்த கதைகளை அவர் நினைவுகூர்ந்தார். புராணங்களில் முருகப் பெருமானின் மனைவி வள்ளி, தினை வயல்களுக்கு காவலரணாக இருந்ததை குறிப்பிட்டு, “கதிர்காமம் முருகன் கோவிலில் பிரசாதமாக தினை வழங்கப்படுவது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது” என்றும் ஸ்ரீஸ்கந்தராஜா கூறினார். காலநிலை சமநிலையின்மையால் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பானது அதிகரித்த வரட்சி மற்றும் அதனோடு தொடர்புடைய பல்வேறு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தவல்லது. தெற்காசியாவில் வெப்ப அலைகளின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இலங்கையின் வட பகுதி இதனால் அதிக தாக்கத்துக்கு உள்ளாகும் – சில எதிர்வுகூறல்களுக்கமைய இந்நூற்றாண்டின் முடிவில் 35 பாகை செல்சியஸை அண்மித்த சராசரி வெப்பநிலையை இப்பிராந்தியம் எதிர்கொள்ள நேரிடும். இந்த ஆண்டில் மட்டும் வெப்ப அலைகள் வட மாகாணத்தில் குறைந்தபட்சம் ஏழு பேரையேனும் கொன்றிருக்கும். தீவிர வெப்பநிலை அதிகரிப்பானது முறையான குளிரூட்டல் வசதிகள் இல்லாமல் திறந்த வெளியில் வேலை செய்யும்இ வடக்கிலுள்ள பல்லாயிரக்கணான விவசாயிகள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள தொழிலாளர்களது சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும். உயர் வெப்பநிலையால் விவசாய விளைச்சல்களும் பாதிப்புக்கு உள்ளாகும். குறிப்பாக இலங்கையின் முக்கிய சாகுபடியான நெற்பயிர் வெப்பநிலைக்கு உணர்திறன் கூடியது. வெப்பநிலை அதிகரிப்பால் விளைச்சலில் ஏற்படுகின்ற வீழ்ச்சி, குடும்ப மற்றும் தேசிய உணவு கிடைப்பனவை அச்சுறுத்துவதோடு, குறிப்பிடத்தக்களவு வறுமை வீதத்தையும் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்படுகிறது. மதிப்பீடொன்றின்படி தீவிர காலநிலை மாற்றம் இல்லாத நிலைமையில் ஏற்படக்கூடிய வறுமை வீத அதிகரிப்பை விட இது 12 இலிருந்து 26 சதவீதம் அதிகமாகும். சில இடங்களில் வெப்பநிலை அதிகரிப்போடு கூடிய விளைச்சல் வீழ்ச்சி ஏற்கனவே நலிவு நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக கிளிநொச்சி, வளைபாடு பிரதேசத்தில் யுத்தத்தில் கணவர்களை இழந்த பெண்கள் மேற்கொள்ளும் கடற்பாசி விவசாயத்தில் 2024ஆம் ஆண்டின் வெப்ப அலைகளின் தாக்கத்தால் 80 சதவீதம் பயிர்கள் சேதமடைந்துள்ளன. 2024 இல் வெப்ப அலைகளாலும் 2022 இல் குளிராலும் கால்நடைகளை இழந்த இலங்கையின் வடக்கைச் சேர்ந்த கால்நடை விவசாயி. காலநிலை நெருக்கடிக்கு மத்தியில், விவசாய வாழ்வாதாரங்கள் அதிக வெப்பநிலை மற்றும் கணிக்க முடியாத வெப்பநிலை ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. Photo: ஐசாக் நிக்கோ அதிக வெப்பநிலையானது உணவூட்டல் மற்றும் வளர்சிதை மாற்ற (உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கும், வளர்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், உடலில் உள்ள அனைத்து வேதிவினைகளின் தொகுப்பாகும்) விகிதங்களை துரிதப்படுத்தும். ஆகையால், இதன்மூலம் ஒரு சில குறிப்பிட்ட பீடைகளின் குடித்தொகை பரம்பலின் பெருக்கம் அதிகரிப்பதினூடு பயிர்ச்சேத வீதமும் அதிகரிக்கும். அதிகரித்த வெப்பத்துடன் கூடிய மழைப்பொழிவு ஆசியாவின் மிகவும் அழிவுகரமான நெல் பூச்சிகளில் ஒன்றான பழுப்பு நிற தத்தியின் திடீர் பரவலுக்கு வழிவகுக்கும். வெப்பநிலை உயர்வு மந்தைகளையும் பாதிக்கும் – கடுமையான வெயில் காலங்களில் வட பகுதி விவசாயிகள் தங்கள் கால்நடைகளை இழந்துள்ளனர் மற்றும் அனுமானிக்க முடியாத அழிவுகரமான வெப்பநிலை ஏற்ற இறக்கங்களும்கூட இவ்விழப்புக்கள் ஏற்படக் காரணமாக அமையலாம். டிசம்பர் 2022 இல் மாண்டூஸ் சூறாவளியின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மிகையான குளிரின் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்தன. சிலவேளைகளில் மிதமான காலநிலை இருந்தாலும்கூட அதன் கணிக்கமுடியாத தன்மை மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒரு அச்சுறுத்தலாகவே இருக்கும். “நாங்கள் காற்றை எதிர்பார்க்கும்போது, அது வீசாது. நாங்கள் மழையை எதிர்பார்க்கும்போது, அது பெய்யாது. நாங்கள் முன்பு பெற்ற விளைச்சலை இனிப் பெற இயலாது” என மன்னார் மாவட்டம், இலுப்பைக் கடவையைச் சேர்ந்த விவசாயியொருவரின் மனைவி மகாதேவி குறைகூறினார். இவ்வாறான எதிர்வுகூறமுடியாத தன்மை கூட மீனவர்களைப் பாதிக்கும். “முன்பெல்லாம் எமது மூதாதையர்கள் ஒரு குறித்த நாளில் மழை பெய்யும் என்று சொன்னால், அது நடக்கும். இன்று நிலைமை அப்படியல்ல” என அந்தோனியார்புரம் கரையோர கிராமத்தைச் சேர்ந்த மீனவர் கனகசபை குகசிரி கூறினார். இளைஞர்களின் கைகளிலுள்ள திறன்பேசிகள் வாயிலாக குகசிரிக்கு வானிலை தொடர்பான தகவல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடிந்தபோதும், வானிலை எதிர்வுகூறல்கள் எல்லா வேளைகளிலும் துல்லியமாக இருக்காது என அவர் அறிந்திருக்கிறார். “அவர்கள் இன்று காற்றின் வேகம் அதிகமாக இருக்குமென்று சொன்னார்கள், ஆனால் அப்படி இல்லை” என்று சலித்துக்கொண்டார். இலங்கை, மன்னார் மாவட்டத்தின் ஓய்வுபெற்ற மீன்பிடி உத்தியோகத்தர் எம்.எஸ் மிரன்டா, ஓர் சேற்று நண்டோடு. இலங்கையின் நீர்நிலைகளில் ஏற்றுமதித் தரம் வாய்ந்த சேற்று நண்டுகளின் எண்ணிக்கை குறைந்தவண்ணம் உள்ளது. ஆனால், அதற்கான காரணங்களை நிர்ணயிக்கும் வகையில் எவ்வித ஆய்வுகளும் முன்னெடுக்கப்படவில்லை. Photo: ஐசாக் நிக்கோ நிச்சயமற்ற வானிலையைத் தவிர, காலநிலை சமனிலையின்மை குறித்து மீனவர்கள் வேறெந்த சந்தர்ப்பத்திலும் விசனம் தெரிவிக்கவில்லை. அது கடல்சார் சுற்றுச் சூழலின் அமைப்பில் ஏற்படுத்தவல்ல தாக்கங்களை அவதானித்தல், அளவிடல் அல்லது விளங்கிக்கொள்ளல் எளிதல்ல. மிதமிஞ்சிய மீன்பிடி, அழிவுகரமான செயன்முறைகளான டைனமைட் மீன்பிடி, இழுவை வலை மீன்பிடிப்பு, அடிவலை மீன்பிடி போன்ற செயற்பாடுகளால் உள்நாட்டு நீரினங்களின் பல்வகைமை வீழ்ச்சி போன்ற காலநிலைச் சமநிலையின்மையால் ஏற்படுகின்ற பாதிப்புகளுக்கு நிகரான விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. யாழ். நகரின் குருநகரில் உள்ள மீனவர்கள் தங்களது நீர்நிலைகளில் முன்பைவிட மீன்களின் அளவும், அதன் பல்வகைமை குறைந்துள்ளதாகவும், ஒரு காலத்தில் மிகவும் பிரசித்தமான ஏற்றுமதி பொருளாக இருந்த சிங்க இறால்கள் போன்ற சில மீனினங்கள் அங்கு முற்றாக அற்றுப்போயுள்ளதாகவும் குறிப்பிட்டனர். காலநிலை சமநிலையின்மையால் அதிகரிக்கும் நிகழ்தகவுடைய நீரின் வெப்பநிலை அல்லது அதன் உப்புத்தன்மையால் நீர்வாழ் விலங்குகளின் இனப்பெருக்க இயல்புகள் பாதிக்கப்படலாம் என்பது தெரிந்திருந்தும், என்னோடு பேசிய சிலர் இம்மாற்றங்களுக்கு மிகை மீன்பிடி மற்றும் அடிவலை மீன்பிடியையே காரணம் காட்டினர். மற்றுமொரு அதிக இலாபம் தரும் ஏற்றுமதி உயிரினமான சேற்று நண்டுகள் எண்ணிக்கையில் குறைந்து வருவதாக மன்னார் மாவட்டத்திற்கான மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறையின் ஓய்வுபெற்ற உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.மிராண்டா சுட்டிக்காட்டினார். ஆனால், “அதற்கான காரணங்கள் பற்றி அறிந்துகொள்ள போதிய ஆய்வுகள் எம்மிடம் இல்லை” என்று அவர் தெரிவித்தார். காலநிலை சமநிலையின்மையின் பாதிப்புக்கள் பற்றி உய்த்தறிய மீனவர்கள் சிரமப்படுகின்றனர். “ஆனால் அப்பாதிப்புகள் கடுமையானவை” என பவளப்பாறை சூழலியலாளர், இலாப நோக்கற்ற உள்நாட்டு கடல் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு இணை நிறுவனர் நிஷான் பெரேரா வலியுறுத்தினார். குறிப்பாக ‘எல் நினோ’ மற்றும் ‘லா நினா’ காலங்களில் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பது, பவள வெளுப்பு மற்றும் பவள இறப்புக்கு வழிவகுக்கும் என அவர் கூறினார். 1998 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இலங்கையின் கரையோரங்களில் முக்கிய பவள வெளுப்பு நிகழ்வுகள் நடந்தேறின. அதேசமயம், கிழக்குக் கரையோரமானது 2019 இல் ஒரு சிறிய வெளுப்பு நிகழ்வை எதிர்கொண்டது. பவள வெளுப்பு நிகழ்வுகள் முருகைக் கற்பாறைகளில் வாழும் உயிரினங்களை அழிப்பதோடு, சில மீனினங்கள் மற்றும் உணவுச் சங்கிலியில் கீழ்நிலைகளில் அவற்றை உண்ணும் உயிரினங்களையும் இல்லாதொழிக்கும். 2023 இல் ஏற்பட்ட வெப்ப அலைகளுக்குப் பிறகு திருகோணமலையை அண்மித்த பகுதிகளில் ஆய்வாளர்கள் பவள வெழுப்பை அவதானித்தனர். அத்தோடு, மன்னாரிலும் வெளுப்பு நிகழ்வுகள் ஏற்படலாம் என அதிகாரசபைகள் அஞ்சின. 25 ஆண்டுகளாக அலங்கார மீன்களைப் பிடித்து வரும் முஹம்மது சதாத், பவளப்பாறை வெளுப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகளை அவதானித்ததாக கூறினார். திருகோணமலையிலிருக்கும் தனது இல்லத்திலிருந்து ஏற்றுமதிக்காக கடல்வாழ் உயிரினங்களை பெற்றுக்கொள்ள வடக்கு மற்றும் கிழக்கு கரையோரமாக மட்டக்களப்பு, கல்பிட்டி மற்றும் மன்னார் போன்ற இடங்களுக்கு அவர் பயணிப்பவர். பவளவெழுப்பின்போது ஏற்படும் வெளிறலைப்போல முருகைக்கற் பாறைகள் இறந்து வெண்மையாக மாறும்போது தமது நடத்தைகள் மூலம் பவளப்பாறைகளின் ஆரோக்கியத்தை அளவிட்டுக் காட்டும் கருவியாகவும் மீன் இனங்கள் ஆபத்தில் உள்ளமை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கையை வெளிப்படுத்தும் தன்மையுமுள்ளதாகவும் கருதப்படும் வண்ணமயமான பட்டாம்பூச்சி மீன்களில் சிலவற்றை அவதானித்ததாக சாதாத் விளக்கிக் கூறினார். தான் அவதானித்த பவள இறப்புக்கு 2004ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம், தொழில்முறை மீன்பிடித்தல் மற்றும் காலநிலை மாற்றத்தால் விளைந்த வெப்பநிலை அதிகரிப்பு போன்றவையே காரணம் என சாதாத் கருதுகிறார். நான் சந்தித்தவர்களில் அலங்கார மீன்பிடி வியாபாரத்தில் ஈடுபடும் சதாத் போன்ற வெகு சிலரே மீன்களின் குடித்தொகையில் ஏற்படும் வீழ்ச்சிக்கு வெப்பநிலை மாற்றத்தை காரணமாகக் கூறினர். “ஏனைய மீனவர்கள் பிரச்சினைக்கான புள்ளிகளை உரிய முறையில் இணைப்பதாகத் தோன்றவில்லை” என பெரேரா அவர்கள் தெரிவித்தார். அலங்கார மீன்களை பிடித்து வாழ்வாதாரம் செய்யும் முகமது சதாத் ஓர் தாமரைக்காத்தான் மீனுடன். இலங்கையில் உள்ள அலங்கார மீன்களைப் பிடிக்கும் மீனவர்கள் கடல் வெப்பநிலை அதிகரிப்பால் பவளப்பாறை வெளுப்பதை முதலில் கவனித்துள்ளனர். Photo: ஐசாக் நிக்கோ மோசமான தாக்கம்: தயாரற்ற நிலை 2022 இல் உச்சம் தொட்ட, இலங்கை எதிர்கொண்டுவரும் பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட வீழ்ச்சி, நாட்டின் காலநிலை நெருக்கடி நிலையை எதிர்கொள்ளும் திறனை குறைத்துள்ளது. ஒப்பீட்டளவில் வடமேல் மாகாணம் வளமானதாகக் காணப்பட்டாலும் காலநிலை அசாதாரண நிலைமையினால் அதிகளவு பாதிப்படையும் பத்து பிராந்தியங்களில் ஐந்து பிராந்தியங்கள் வளம் குன்றிய வட மாகாணத்தில் உள்ளன. பாதிப்படையும் அபாயம் உள்ள முதல் பத்து மாவட்டங்களில் இடம்பெறும் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் நாட்டின் வறிய மாவட்டங்களுமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை உட்பட தமிழ் பேசுபவர்கள் அதிகம் வாழும் பல்வேறு பகுதிகள், 2009 இல் பாரிய அட்டூழியங்கள் மற்றும் சிலரது வாதத்தின்படி இனப்படுகொலையுடன் முடிவடைந்த 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போதான கடுமையான சண்டை ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து படிப்படியாக மீண்டு வருகின்றன. இருந்தும், போரினால் சோர்வடைந்த தமிழ் மக்கள் இன்றும் தொடர்ச்சியான வன்முறைகளையும் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களையும் எதிர்கொண்டவண்ணமுள்ளனர். உள்ளூர் வளங்களின் பற்றாக்குறை மற்றும் போரினால் ஏற்பட்ட சேதம் போன்றவற்றோடு சுரண்டல், சந்தர்ப்பவாதம், மற்றும் போருக்குப் பின்னான சுற்றுச் சூழலை அழிவுக்குள்ளாக்கும் மோசமான பொருளாதார நடவடிக்கைகள் போன்றவற்றில் இருந்து நாட்டின் பொருளாதாரம் இன்னும் மீளவில்லை. இவை அனைத்தும் பொருளாதார நெருக்கடியின் விளைவால் இன்னும் மோசமான நிலையையே எட்டியுள்ளது. போருக்குப் பின் பவளப் பாறைகள், அதன் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் எளிய படகுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பாரம்பரிய தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் போன்றவற்றை சேதப்படுத்தும் வகையில் இந்தியாவின் இயந்திரமயமாக்கப்பட்ட கீழ்-விசைப்படகுகள் வட கரையோரத்தின் கடற்படுக்கையின் அடிவரை தங்கள் வலைகளை இழுத்துவந்தன. 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை கடற்பரப்பில் கீழ்-விசைப்படகுகள் தடைசெய்யப்பட்டபோதும், இந்த வழக்கங்களும் டைனமைட் மீன்பிடித்தல் போன்ற பிற தீங்கு விளைவிக்கும் பழக்கங்களும் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன. அதேபோல உள்ளூர் நிலப்பரப்பை மீளமுடியாத அளவில் மாற்றியமைக்கும் அச்சுறுத்தல்மிக்க அபிவிருத்திச் செயற்பாடுகளை தனியார் மண்ணகழ்வு நிறுவனங்கள் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் மேற்கொண்டுவருகின்றன. பல்லுயிர் மற்றும் கடலோர வாழ்வாதாரத்தின் நிலைபற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்ற நிலையில், இந்திய கூட்டு வர்த்தக நிறுவனமான அதானி குழுமம் கடந்த ஆண்டு பூநகரி மற்றும் மன்னாரில் பல மில்லியன் டாலர் செலவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ அரசிடம் ஒப்புதல் பெற்றிருக்கிறது. அத்திட்டத்தின் விலை நிர்ணயங்கள் மற்றும் பொருளாதார நன்மைகள் பற்றி பகுப்பாய்ந்த அரச செயற்றிட்ட ஆய்வாளர் ரோஹித் பெதியகொட அதனை “நாட்டை வறுமைக்குத் தள்ளும் வீண் மோசடி” என அழைக்கிறார். “இது அனைத்தும் பணம் சம்பந்தப்பட்டது” என விடத்தல்தீவு சூழலியலாளர் எடிசன் மேரிநாதன் கூறுகிறார். இயற்கை பற்றி அறிந்துகொள்வதற்காக மேரிநாதன் தனது இளைய மகன்களை அடிக்கடி கண்டல் நிலங்களுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். விடத்தல்தீவு இயற்கை காப்பகம் தொடர்பான சில உறுப்புரைகளை மாற்றியமைத்து அக்காப்பாகத்தின் வளமான சதுப்புநிலங்கள் தனியார் மீன்வளர்ப்பு வணிகங்களால் சுரண்டப்படக்கூடிய வகையில் மீள் வர்த்தமானியொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இக்காப்பகமானது ஒரு முக்கிய கரிமத் தேக்கம் மட்டுமல்லாது, பல்வேறு நீர்வாழ் இனங்களின் வாழ்வாதாரத்துக்கு ஏதுவான கரையோர பாதுகாப்பு அரணாகவும் விளங்குகிறது. இலங்கை அரசின் இந்த நகர்வானது இலங்கையின் மூன்றாவது முக்கிய கடலோரப் பாதுகாப்பு வலயத்தை அழிவுக்குள்ளாக்கக் கூடியது என்றும் இதுபோன்ற ஏனைய வலயங்களுக்கு அதுவொரு தவறான முன்னுதாரணமாக அமையும் எனவும் சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஈரநிலங்களையும் கரிமத் தேக்கங்களையும் பாதுகாப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்திருக்கின்ற வாக்குறுதியை “காலநிலை பாசாங்கு நடவடிக்கை” என இளைஞர்களால் முன்னெடுக்கப்படும் ‘பேர்ல் ப்ரொடெக்டர்ஸ்’ (Pearl Protectors) எனும் கடலோர பாதுகாப்பு அமைப்பு விளிக்கின்றது. “ஒட்டுமொத்த சூழலியல் மற்றும் பாதுகாப்புச் சமூகமும் இந்த முரண்பாட்டையே சுட்டிக் காட்டிய வண்ணம் உள்ளது. பெருமளவான அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான கெடுபிடிகளுக்குள் இப்பிரச்சினை இலகுவாக நழுவிப்போய்விடுகிறது” என லங்கா சுற்றாடல் நிதியத்தின் வினோத் மல்வத்தை அவர்கள் கூறினார். தமிழர் தாயகத்தில் அரசியல் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளில் நிலவும் சவால்களின் உடனடித் தன்மை மற்றும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு முகம் கொடுக்கப்போகும் உழைக்கும் வர்க்கத்தின் பொருளாதார நெருக்கடி போன்றவற்றைக் கருத்தில் கொள்கையில், மக்கள் மத்தியில் காலநிலை நெருக்கடி நிலை பற்றிய புரிதலை ஏற்படுத்தும் வாய்ப்பு மிகக் குறைவென்றே கணிக்கலாம். மீன்பிடிக் குடில்களும், நடைபாதைகளும் ஏற்கனவே கடலால் விழுங்கப்பட்ட நிலையிலும் அந்தோனியார்புர மீனவர்களுக்கு அது பற்றிக் கருத்தில்கொள்வதற்கான அவகாசமோ உணர்வு ரீதியான புரிதலோ இல்லை. “ஓரிரண்டு அடி நிலம் கடலால் அரித்துச் செல்லப்படுவதற்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது எடுக்கும். இதுபற்றி எதிர்கால சந்ததியினரே சிந்திக்க வேண்டும்.” என நாளூதியமே ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கும் குகசிரி கூறினார். மன்னாரில் உள்ள பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் உதயன், இலங்கையின் காலநிலை நெருக்கடிக்கு முகம்கொடுக்க தேவையான வளங்கள், அவற்றின் ஒருங்கிணைப்பு மற்றும் உபகரணங்களின் பற்றாக்குறை குறித்து முறையிட்டார். Photo: ஐசாக் நிக்கோ ஊடகவியலாளர்கள்கூட அடிப்படை அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர வினைத்திறன்மிக்க வேறெந்த செயற்பாடுகளையும் செய்யத் தலைப்படுவதில்லை. மூன்று தமிழ் செய்தி நாளிதழ்களில் இடம்பெற்ற நீர் பாதுகாப்பு குறித்த ஆய்வொன்றில் 80 சதவீதமான நாளிதழ்கள் வெறுமனே செய்திகளை வழங்குகின்றனவே தவிர நிகழ்ச்சி நிரல் அமைத்தல், கலந்துரையாடல்களை உருவாக்குதல் அல்லது சுற்றுச்சூழல் செயற்பாடுகளுக்கு ஊக்கமளித்தல் போன்ற விடயங்களை தங்கள் ஊடக செயற்பாட்டில் உள்ளடக்குவதில்லை. போதியளவு ஆய்வுகளின்மை இப்பிரச்சினையை மேலும் அதிகரிக்கின்றது. “பல்கலைக்கழக ஆய்வுத் தேவைக்காக மட்டுமே கிட்டத்தட்ட சுமார் 25 ஆண்டுகள் வரையான கால நீட்சியில் மேற்கொள்ளப்படவேண்டிய ஆய்வுகள் வெறும் ஆறு மாதகால குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்படுகின்றன” என மன்னார் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் உதயன் குறிப்பிட்டார். “நிலைபேறான ஏற்பாடுகளுக்கு நீண்டகாலமாக சேகரிக்கப்பட்ட தரவுகளின் உள்ளீடு அவசியம்” என்ற கருத்தை பவளப்பாறை சூழலியல் வல்லுனர் நிஷான் பெரேரா முன்வைத்தார். மீன்களின் இடம்பெயர்வு மாற்றங்கள், முட்டையிடும் இயல்பின் தளம்பல்கள் போன்ற காலநிலை மாற்றத்தின் படிப்படியான தாக்கங்களை கண்காணிப்பதற்கு வெறும் அடிப்படை ஆய்வுகள் மற்றும் குறுகிய கால திட்ட அடிப்படையிலான ஆராய்ச்சிகளுக்குப் பதிலாக நீண்டகால தொடர்-நேர தரவுகள் நமக்குத் தேவை. ஆனால் அவசியமான தரவு சேகரிப்பு வளங்கள் மற்றும் அதற்குத் தேவையான உபகரணங்களின் பற்றாக்குறையால் அவ்வாறான ஆய்வு முயற்சிகள் தடைப்பட்டுள்ளன. “மழை அளவீட்டுக் கருவிகள் போன்ற உபகரணங்கள் ஓரிரண்டு நகரங்களிலேயே கிடைக்கக்கூடியதாக இருக்கும். ஆனாலும் அவை எல்லா பகுதிகளிலும் இல்லை” எனவும் உதயன் குறிப்பிட்டார். வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களம் “போதுமான வளங்கள் இல்லாத நிலையில் பெரிய பகுதிகளை நிர்வகிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும், சில சிற்றலுவலகங்களில் அடிப்படை தளபாட வசதிகள் கூட கிடையாது. மீன்வளத் துறையைச் சேர்ந்த மீன்வள ஆய்வாளர்களிடம் உள்ள மோட்டார் சைக்கிள்கள் பழுதடைந்த நிலையில் இருக்கலாம் அல்லது அவர்களிடம் எரிபொருளுக்கான போதிய நிதிவசதிகூட இல்லாமலிருக்கலாம். ஆதலால், அவர்களுடைய கடமையை ஏற்புடைய விதத்தில் நிறைவேற்றுவதில் அவர்களுக்குள்ள சிரமம் உண்மையிலேயே ஒரு சவாலான விடயம்தான் என்கிறார் பெரேரா. இத்தரவுப் பற்றாக்குறை, நிறுவனங்களின் திறன்குறைபாடு, ஒருங்கிணைப்பின்மை மற்றும் பலவீனமான பின்னூட்ட வழிமுறைகள் ஆகிய பல்வேறு காரணிகளால் ஒன்றுசேர்ந்தது. உதயனின் குறிப்புப்படி இலங்கை முழுவதுமுள்ள வானிலை ஆய்வு மற்றும் விவசாய திணைக்களங்களுக்கிடையில் ஓர் சிறிய ஒருங்கிணைவு உள்ளது. பெரும்பாலும் நிர்வாக மொழியாக சிங்களத்தைப் பயன்படுத்தும் மத்திய அரசுக்கும் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட பிராந்தியங்களுக்கும் இடையிலிருக்கின்ற தொடர்பாடல் தடைகள் மற்றும் மோதல் வரலாறுகள் போன்றவை தரவுகளின் பரிமாற்றத்துக்கு இடையூறாக இருக்கின்றது. காலநிலை சமநிலையின்மையைத் தணிக்கும் முயற்சிகளுக்காக மாகாணங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி மத்திய அரசின் நடவடிக்கைகளால் குழப்பப்பட்டிருக்கலாம். ஆனால், காலநிலை மாற்றங்கள் குறித்து சிரத்தைக்கொள்ளவேண்டிய மாவட்ட நிலை அதிகாரிகள், மாகாணங்களின் தேவைகள் மற்றும் அவற்றுக்கான நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பான தொடர்பாடல்களில் நலிவான கீழிருந்து மேலான பின்னூட்ட வழிமுறைகளில் தங்கியுள்ளனர். அதேவேளை, “உயர் மட்டங்களில் காலந்துரையாடப்படுகின்ற விடயங்கள், உயர் மட்டங்களில் அவ்வாறான கலந்துரையாடல்கள் நிகழுமிடத்து, அவற்றில் சீர்தூக்கப்படும் அம்சங்கள் நிச்சயமாக அடிமட்டத்திலுள்ள ஊழியர்களுக்கு அதே முறையில் தொடர்பாடப்படுவதில்லை” என்று ஸ்ரீஸ்கந்தராஜா குறிப்பிடுகிறார். இலங்கையில் சர்வதேச சுற்றாடல் அமைப்புக்களின் வெற்றிடங்களும் வளங்களின் கிடைப்பனவை மட்டுப்படுத்துகின்றன. நாங்கள் உலகின் முக்கியமான 36 பல்லுயிர் மையங்களில் ஒன்றாக இருக்கிறோம். ஆனால், இங்கே உலக வனவிலங்கு நிதியம் (WWF) இல்லை. கன்சர்வேஷன் இன்டர்நேஷனல் (Conservation International) இல்லை. நேச்சர் கணசர்வென்ஸி (Nature Conservancy) இல்லை என்கிறார் மல்வத்தை. “இங்கே ஓர் கருந்துளை இருப்பதுபோல இருக்கிறது.” போர், இலங்கையில் சர்வதேச நிறுவனங்களை நிறுவுவதில் உள்ள சிரமங்கள், சர்வதேசத்தின் இலங்கை மீதான கவனத்தில் அரசுக்குள்ள நீண்டநாள் வெறுப்புணர்வு போன்றவற்றையே கருந்துளை என மல்வத்தை அவர்கள் விபரிக்கிறார். இயற்கையும் தேசமும் “என்னைப் பொறுத்த வரையில் தமிழ் தேசியம் என்பது தமிழர்கள் தம்முடைய நிலத்துடன் கொண்டிருக்கும் உறவு” என யாழ் பல்கலைக் கழகத்தின் ஆங்கில விரிவுரையாளரான மகேந்திரன் திருவரங்கம் கூறுகிறார். தமிழ் கவி புதுவை ரத்னதுரை அவர்களின் புகழ்பெற்ற தேசியவாத கவிதையான ‘மண்’ஐ அவர் மேற்கோளிடுகிறார். மண் நிலமிழந்து போனால், பலமிழந்து போகும். பலமிழந்து போனால், இனம் அழிந்து போகும். ஆதலால் மானுடனே! தாய்நிலத்தைக் காதலிக்கக் கற்றுக் கொள்! கடந்த காலங்களில் தமிழர்களுக்கும் இந்த மண்ணுக்கும் இடையிலான பிணைப்பு “தமிழீழ தாயகமே புலிகளின் வேட்கை” போன்ற விடுதலைப் புலிகளின் பிரபல கோஷங்களினூடாகவும் “இந்த நிலம் எங்கள் நிலம்’ மற்றும் வடகிழக்கின் மரங்கள், பூக்கள், மேய்ச்சல் நிலங்கள், ஏரிகள் மற்றும் பனை மரங்கள் அணிவகுத்த கடல்களுக்கு அஞ்சலி செலுத்தும் ‘பசுமை வெளிகள்’ போன்ற தேசியவாத பாடல்கள் போன்றவற்றால் பகிரங்கமாக கொண்டாடப்பட்டது. “எங்கள் தாயகமானது எங்கள் உயிர், எங்கள் உதிரம், எங்கள் உடலுடன் ஒன்றியது” என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் ஸ்ரீதரன் என்னிடம் கூறினார். ஆனால், தமிழர்களுக்கும் அவர்களின் தாயகத்திற்கும் இடையில் இவ்வாறான பிணைப்பு இருந்தபோதிலும், காலநிலை நெருக்கடி தொடர்பான விழிப்புணர்வு தமிழ் அரசியல் பரப்பில் முக்கிய இடத்தைப் பெறவில்லை. “நாங்கள் சுற்றாடலைப் பாதுகாக்க வேண்டும். நாங்கள் நிறைய மரங்கள் நட வேண்டும். சூழல் மாசை குறைக்க நாங்கள் வழிமுறைகளை கண்டடைய வேண்டும் போன்ற சொற்றொடர்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், காலநிலை மாற்றம் பற்றிய கலந்துரையாடல்களில் மக்கள் ஈடுபடுகிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை” என்கிறார் திருவரங்கன். வாழ்வாதாரம் மற்றும் தொழில்வாய்ப்பு போன்றவை குறித்து அவரது கட்சி தொடர்ந்து விவாதித்து வந்திருந்தாலும், காலநிலை மாற்றம் பற்றிய விவாதங்களை மேற்கொண்ட சந்தர்ப்பங்கள் குறித்து அவரால் நினைவுகூர முடியவில்லை என இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் குறிப்பிட்டார். தமிழர் அரசியல் முன்னெடுப்புக்கள் நிலத்தை மையப்படுத்தியதாகவும் விவசாயமும் மீன்பிடியும் அத்தேர்தல் தொகுதியின் மிக முக்கியமான தொழில்துறைகளாகவும் இருக்கின்ற வேளையில், சமீபமான எதிர்காலத்தில் காலநிலை மாற்றம் குறித்த விடயங்கள் தமிழ் தேசியத்தின் மேலாதிக்க சிந்தனைகளில் எந்தவித செல்வாக்கும் செலுத்தப்போவதாக தான் காணவில்லை எனவும் சுமந்திரன் அவர்கள் குறிப்பிட்டார். தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் நிறுவனர் பி.ஐங்கரநேசன் பேசுகையில், இலங்கையில் சுற்றுச்சூழல் தமிழ் தேசியவாதத்தின் முக்கியமான பகுதி எனவும் அது தமிழ் மொழி மற்றும் அதன் கலாச்சாரத்தில் பொதிந்துள்ளது எனவும் குறிப்பிட்டார். Photo: ஐசாக் நிக்கோ இலங்கையின் முதல் பசுமைக் கட்சியான தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஸ்தாபகரின் பார்வை வேறாக இருந்தது. தமிழ் தேசியவாதத்தில் சுற்றுச்சூழல் பற்றிய சிந்தனைகள் எப்போதும் பொதிந்துள்ளன என்று தான் நம்புவதாக பீ. ஐங்கரநேசன் கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஓர் சுற்றுச் சூழல் அலகு இருந்ததாகவும், அதன் தலைவர் பிரபாகரன் இயற்கையை தன் நண்பன் என மேற்கோளிட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார். “மொழி, கலாசாரம், சுற்றுச் சூழல் – தமிழ் தேசியம் இம்மூன்றாலும் ஒருசேரக் கட்டமைக்கப்பட்டது. வெளிநாடுகளில் உள்ள மக்கள் கோதுமையை தங்கள் பிரதான உணவாக உட்கொள்ளும்வேளை தமிழர்கள் அரிசியையே தங்கள் பிரதான உணவாகப் பயன்படுத்துகின்றனர். ஏனெனில் அது எமது காலநிலையில் இயல்பாகவே வளரக்கூடியது” என்கிறார் ஐங்கரநேசன். உணவைப்போலவே மொழியும் சூழலின் ஆதிக்கத்திற்குட்பட்டது. சங்க கால தமிழ் இலக்கியம் ஐந்து வெவ்வேறு திணைகளை தனித்துவமாக வேறுபடுத்திக் காட்டுகிறது – குறிஞ்சி (மலையும் மலை சார்ந்த இடமும்), முல்லை (காடும் காடு சார்ந்த இடமும்), நெய்தல் (கடலும் கடல் சார்ந்த இடமும்)இ பாலை (மணலும் மணல் சார்ந்த இடமும்)இ மற்றும் மருதம் (வயலும் வயல் சார்ந்த இடமும்). ஒவ்வொரு திணையும் தனித்துவமான தரைத்தோற்றத்தையும் புணர்தல், காத்திருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் ஆகிய வெவ்வேறு உணர்ச்சி நிலைகளையும் குறித்து நிற்கின்றது. ஐங்கரநேசனைப் பொறுத்தவரை, தமிழ் மொழி மற்றும் அதன் பண்பாட்டில் சுற்றுச்சூழல் எத்துணை முக்கியம் வாய்ந்ததாக உள்ளது என்பதற்கு இவ்வாறான குறியீடுகள் ஒரு பெரும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. ஆனால், யாழ் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் மற்றும் உடற்கூற்றியல் முதுகலை பட்டம் பெற்ற ஐங்கரநேசன் போன்ற அரசியல்வாதிகள் தமிழ் அரசியலில் மிக அரிதானவர்கள். தற்காலத்தில் உலகின் பல்வேறு நாடுகளிலும் இயங்கி வருகின்ற பசுமைக் கட்சிகளை தான் இனங்கண்டுகொண்டாலும், தனது வாக்காளர்கள் மத்தியில் பசுமை அரசியல் பிரசித்தம் பெறவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் ஸ்ரீதரன் ஒப்புக்கொள்கிறார். ஏனையவர்கள் மிக வெளிப்படையாக இருக்கிறார்கள். உதாரணமாக ஸ்ரீஸ்கந்தராஜாவின் கூற்றின் பிரகாரம், அரசியல் மட்டத்தில் காலநிலை நெருக்கடி என்று வரும்போது, “அவர்கள் அது தொடர்பாக ஆனந்தமான அறியாமையில் இருக்கிறார்கள்.” “எந்தவொரு அரசியல்வாதியும் இதுவரைகாலமும் இப்பிரச்சினை பற்றி இங்கு வந்து பேசிய வரலாறு இல்லை” என இலுப்பைக்கடவை விவசாயி ஒருவரின் மனைவியான மகாதேவி கூறினார். உயரடுக்கு மக்களின் குடியகல்வின் பின்னர் ஏற்பட்ட மக்கள் தொகை மாற்றத்தின் பிறகும், தமிழ் அரசியல் மற்றும் தமிழ் உயர்மட்ட தொழில்சார் வர்க்கங்கள் ஆகியவை ஆதிக்க-சாதி சமூகத்தினரால் நிறைந்துள்ளதாகவும், ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கான பிரதிநிதித்துவம் அங்கு மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவும் வட மாகாணத்தில் கூட்டுறவு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் ஆய்வாளர் அகிலன் கதிர்காமர் வாதிடுகிறார். அழிவுகரமான மீன்பிடி நடைமுறைகள் மற்றும் கிராமப்புற மக்களின் கடன்சுமை ஆகியவற்றை தமிழ் அரசியலால் புறக்கணிக்கப்பட்ட கிராமிய பொருளாதாரத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு எடுத்துக்காட்டுகள் என அவர் மேற்கோளிடுகிறார். “புத்திஜீவிகளும் கல்வியியலாளர்களும் கூட மீனவர்களினதும் விவசாயிகளினதும் இடர்களை நிவர்த்தி செய்ய மிகக் குறைந்தளவு பங்களிப்புக்களையே வழங்கியுள்ளனர்” என்கிறார் அவர். இலங்கையின் வடக்கு கரையோரத்தில் உள்ள இலுப்பைகடவையைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மனைவி மகாதேவி, வெப்ப அலைகள் மற்றும் கொந்தளிப்பான வானிலை குறித்து புகார் கூறினார். பருவநிலை மாற்றம் குறித்த அரசியல் உரையாடல்களை தான் கேட்டதில்லை என்றும் கூறினார். Photo: ஐசாக் நிக்கோ கட்டமைக்கப்பட்ட இனவாதம், வன்முறை மற்றும் நீதிவழங்கலில் உள்ள பாரபட்சங்கள் போன்றவை உள்நாட்டுப் போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்தும் தமிழர் நிலையை பறைசாற்றும் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. மாகாண ஆளுகைகளுக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும் இலங்கையின் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தம் போன்ற நீண்டகால தமிழ் அரசியல் கோரிக்கைகள் இன்னும் கவனத்தில் கொள்ளப்படாமலே இருக்கின்றன. “மன்னாரில், கிளிநொச்சியில், யாழ்ப்பாணத்தில், திருக்கோணமலையில், மட்டக்களப்பில், அம்பாறையில எமது நிலங்கள் தினமும் பறிக்கப்பட்டுவருகின்றன” என அரசியலின் தற்போதைய உடனடி சவால்களைப் பற்றி விவரிக்கும்போது ஸ்ரீதரன் கூறினார். இந்தப் பின்னணியில் வளம் குறைந்த மற்றும் நிறுவன ரீதியில் வலுவிழந்த தமிழ்த் தலைமைகளுக்கு பருவநிலை மாற்றத்தில் ஒரு புதிய, சரியாகப் புரிந்துகொள்ளப்படாத மற்றும் அருவமான ஓர் ‘எதிரியை’ எதிர்த்துப் போராடுவதற்காக, தமது அரசியல் மூலதனத்தைச் செலவிடுவது கடினமாக இருக்கலாம். ஒரு காலத்தில் தமிழ் சமூகத்தின் மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் அவர்களின் கூட்டாளிகளாக கருதப்பட்ட மேற்கத்தேய, முன்னேறிய, தொழில்மயமான நாடுகளின் நடவடிக்கைகளாலேயே எப்படி காலநிலை நெருக்கடியின் பின்னணியில் உள்ள இடப்பெயர்வு, வன்முறை மற்றும் பொருளாதார இழப்பு போன்றவை தூண்டப்பட்டது என்பது மற்றொரு சிக்கல். பாதை சார்ந்திருத்தலும் பாரம்பரிய அரசியல் கூட்டாளிகளை எதிரிகளாக மறுகற்பனை செய்வதில் உள்ள சிரமமும்கூட தமிழ் பொது உரையாடல்களில் காலநிலை நெருக்கடி தொடர்பான விடயங்கள் வெளித்தெரியாமை பற்றிய விளக்கத்தை வழங்கலாம். பாரம்பரிய அரசியலில் ஒரு சிறு அளவு புத்தாக்கத்தை உட்புகுத்துவதன் வாயிலாக புதிய நெருக்கடிகள் தொடர்பான விடயங்களை அவற்றில் உள்ளடக்கத்தகுந்த அவகாசங்களை உருவாக்கலாம். தொடர்பாடலில் உள்ள தடைகள், அரசிறை வரும்படியின் மையப்படுத்தல் ஆகியவை தமிழ் பேசும் மக்கள் காலநிலை நெருக்கடிக்கு முகம்கொடுக்கும் செயன்முறைக்கு தடையாக இருக்கும். அத்தோடு, தமிழ் பேசும் பிராந்தியங்களுக்கான மேம்பட்ட சுயநிர்ணயம் மற்றும் சுயாட்சி ஆகிய வழிகளில் இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது தமிழர்களின் வரலாற்றுக் கோரிக்கைகளோடு இணங்கிப்போகும். விவசாயம் மற்றும் மீன்பிடி தொடர்பான நிலைபேறான கொள்கை வகுத்தல்களுக்கான முன்மொழிவு மற்றும் செயல்படுத்தல்களை மேற்கொள்ள, உள்ளூர் நிலப்பரப்பு, காலநிலை, வளங்கள் கிடைக்கும் தன்மை, உணவுக் கலாச்சாரங்கள், முன்னுரிமைகள் மற்றும் தேவைகள் போன்ற அப்பிராந்தியம் பற்றிய பரிச்சியமும் அது தொடர்பான நெருக்கமான புரிதலும் இருப்பது அவசியம் என பருவநிலை விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர். மேலும், தாம் வாழும் பிராந்தியம் பற்றிய பரிச்சியமே வடக்கை அபிவிருத்தி செய்வதற்கும் அதனை ஆள்வதற்கும் தமிழர்களை பொருத்தமானவர்களாக ஆக்கும் என ஐங்கரநேசன் வலியுறுத்துகிறார். “நீங்கள் தென்பகுதியில் வசிப்பவராக இருந்தால் நீங்கள் தலகொயா (Asian water monitor) பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால், அந்த விலங்கு இங்கு எங்களிடம் இல்லை. தென் பகுதியில் கித்துள் மரங்கள் உள்ளன. ஆனால், எங்களுக்கு பனை மரங்கள்தான் பரிச்சியமானவை. அவர்களிடம் சிங்கராஜ வனம் உள்ளது. ஆனால் எங்களிடம் வரண்ட காடுகளே உள்ளன.” இலங்கையில் பிரபலமான தமிழ் அரசியலில் பசுமை அரசியல் ஒரு பகுதி அல்ல என்பதை தமிழ் தேசியவாதக் கட்சியான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஸ்ரீதரன் ஒப்புக்கொண்டார். ஆனால் “எதுவும் தொடக்கத்தில் சிறியது” என்று அவர் கூறினார். இறுதியாக அது நிலத்துடனான தமிழின் தொடர்பாகும் – தமிழ்க் கவிதை, பாடல், அரசியல் சொல்லாட்சி, எழுத்து மற்றும் கலை ஆகியவை அத்தொடர்புக்கு ஆதாரமாக விளங்குகிறது – தமிழர்கள் தங்கள் பருவநிலைமாற்றம் குறித்த இசைவாக்க முயற்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாடுகளில் வெற்றிபெறுவதற்கான ஒரு பெரும் ஊக்கத்தை அது வழங்கும். உண்மையில் தமிழர் அடையாளம் அவர்களது மண்ணில் வேரூன்றியிருந்தால், அதுபோலவே முக்கியமாக தமிழரின் நிலத்துடனான உறவாக தமிழ் தேசியம் இருந்தால், அந்நிலத்தில் ஏற்படும் மாற்றங்கள் தமிழ் அரசியல்வாதிகளை காலநிலை அவசரநிலை குறித்து அதிகம் குரல்கொடுப்பதற்குத் தூண்டவேண்டும். தமிழ் தேசியவாதிகளோ அல்லது பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் நெருக்கடிநிலையின் முக்கிய பங்குதாரர்களான தமிழால் அறியப்படும் சமூகத்தினர் மட்டுமல்ல – தமிழர் தாயகமாக அறியப்பட்ட பிரதேசங்களில் காலாகாலமாக வாழ்ந்துவருகின்ற இஸ்லாமிய மற்றும் சிங்கள மக்களும்கூட அதில் அடக்கம் என திருவரங்கன் சுட்டிக் காட்டினார். தமிழ் தேசியவாதத்தின் சில புறக்கணிப்புப் போக்குகளை விவரிக்கும்போது, பருவநிலை மாற்றத்தின் நெருக்கடிநிலை ஏனைய சமூகங்களைப் புறந்தள்ளி குறித்த ஒரு சமூகத்தின் ஆதிக்கத்தை முன்நிறுத்திய கதையாடலின் பகுதியாக ஆக்கப்படுவதை தவிர்ப்பது மிக அவசியம் எனவும் வகுப்பு, சாதி, இனம் மற்றும் யுத்தம் போன்றவற்றின் வழியில் ஏற்படுத்தப்பட்ட முரண்பாடுகள் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும்” எனவும் அவர் எச்சரித்தார். காலப்போக்கில், காலநிலை நெருக்கடிநிலையைப் புறக்கணிப்பது அல்லது நிராகரிப்பது மிகவும் கடினமாகிவிடும். இலங்கையில் தமிழர்கள் செறிந்து வாழும் பிராந்தியங்களில் காலநிலை மாற்றம் பற்றிய பேச்சுக்களின் வீச்சு இன்னும் பிரதான அரசியல் உரையாடல்களில் உள்வாங்கிக்கொள்ளப்படாவிடினும், கொஞ்சம் நம்பிக்கை எஞ்சியிருக்கிறது. தமிழ் தாயகத்தில் பசுமை அரசியலின் வளர்ச்சி பற்றி மேற்கோளிட்டு பேசும்போது, “தொடக்கத்தில் எதுவுமே சிறியதாகத்தான் இருக்கும். ஆனால், அந்த சிந்தனை தோன்றும். காலப்போக்கில் அது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று ஸ்ரீதரன் நம்பிக்கையூட்டினார். அமித்தா அருட்பிரகாசம் இலங்கையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ஆய்வாளர், மற்றும் சுயாதீன திட்ட வரைவு பகுப்பாய்வாளர். இக்கட்டுரைக்கான அனுசரணை புலிட்சர் மைய மானியத்தால் வழங்கப்பட்டதோடு இக்கட்டுரையின் ஆங்கில வடிவம் முதலில் ஹிமால் சவுத் ஏசியன் (Himal Southasian) இதழில் வெளியிடப்பட்டது. தமிழாக்கம்: ருக்‌ஷானா ஷரிபுதீன். https://maatram.org/articles/12249

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.