Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87988
    Posts
  2. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    11531
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    3
    Points
    46783
    Posts
  4. அன்புத்தம்பி

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    5633
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/20/25 in all areas

  1. நீங்கள், லண்டனில் தானே வசிக்கின்றீர்கள். ஒருக்கால்… City University ஐ, அணுகி பார்க்கிறது. 😂 லக்ஸ்மன் நாமல் ராஜபக்ச… ஒறிஜினலா, டூப்ளிகேட்டா என்று தெரிந்து விடும். 🤣
  2. பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் க.சுபகுணம் பிபிசி தமிழ் 19 நவம்பர் 2025, 02:42 GMT இயற்கை உலகின் அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுவது பறவைகளின் வலசை. கடல் கடந்து பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பறந்து செல்லும் அவற்றைக் காண பறவை ஆர்வலர்கள் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தலங்களுக்கு ஆவலுடன் செல்வது வழக்கம். அப்படி வரும் வலசைப் பறவைகளின் பயணப் பாதைகளை, பயணிக்கும் தொலைவை, ஓய்வெடுக்கும் இடங்களைக் கண்டறியும் முயற்சிகளை பறவை ஆய்வாளர்கள் மேற்கொள்கின்றனர். அத்தகைய ஒரு முயற்சியாக, இந்திய காட்டுயிர் நிறுவனம் (WII), மணிப்பூர் அமூர் வல்லூறு கண்காணிப்புத் திட்டத்தை முன்னெடுக்கிறது. அந்தத் திட்டத்தின் இரண்டாம் நிலையில், மூன்று அமூர் வல்லூறுகளுக்கு நவம்பர் 11ஆம் தேதி ரேடியோ பட்டைகளை அணிவித்து, அவற்றின் பயணத்தைக் கண்காணிக்கத் தொடங்கினர். அப்பபாங், அலாங், அஹு எனப் பெயரிடப்பட்ட மூன்று அமூர் வல்லூறுகள் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்றான அப்பபாங், "5 நாட்கள் மற்றும் 15 மணி நேரத்தில்" 5,400 கி.மீ தூரம் ஓய்வின்றி பயணித்து சோமாலியாவை அடைந்திருப்பதாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறை செயலாளர் சுப்ரியா சாஹு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அமூர் வல்லூறுகள் நாளொன்றுக்கு சுமார் 1000 கிலோமீட்டர் வரை பறக்கக் கூடியவை என்றும் எங்குமே தரையிறங்காமல் நாள்கணக்கில் பறந்து வலசைப் பயணத்தை முடிக்கக் கூடியவை என்றும் கூறுகிறார் இந்தத் திட்டத்தை வழிநடத்துபவரும், இந்திய காட்டுயிர் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானியுமான முனைவர் சுரேஷ் குமார். அமூர் வல்லூறுகள் ஐந்து நாட்களில் ஐந்தாயிரம் கிலோமீட்டர் தூரத்தை நிற்காமல் பறந்தது எப்படி? அவற்றின் உடலமைப்பு அதற்கு உதவுவது எப்படி? பட மூலாதாரம், Dr. R Suresh Kumar படக்குறிப்பு, ரேடியோ கருவி பொருத்தப்பட்ட நிலையில் அப்பபாங் எனப் பெயரிடப்பட்ட அமூர் வல்லூறு அமூர் வல்லூறுகளின் கடல் பயணம் ஆப்பிரிக்காவை நோக்கி வலசை போகும்போது, அமூர் வல்லூறுகள், இந்திய துணைக் கண்டத்தின் வழியே பயணிக்கின்றன. அப்போது இந்திய நிலப்பரப்பில் சிறிது ஓய்வெடுத்துவிட்டு அவை தம் பயணத்தைத் தொடர்கின்றன. சுமார் 160 முதல் 200 கிராம் வரை எடைகொண்ட இவைதான் வேட்டையாடி பறவைகளிலேயே நீண்ட தூரம் பயணிக்கக் கூடியவை. இவை ஓர் ஆண்டுக்கு 22,000 கி.மீ வலசைப் பயணம் மேற்கொள்கின்றன. அமூர் நதி அமைந்துள்ள ரஷ்யாவின் தென்கிழக்கு மற்றும் சீனாவின் வடக்குப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும் அமூர் வல்லூறுகள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்திய நிலப்பரப்புக்கு வருகின்றன. இமயமலையைச் சுற்றிப் பயணித்து, நாகாலாந்து, மணிப்பூர், கிழக்கு மேகாலயா ஆகிய பகுதிகளுக்கு இவை வருகின்றன. இந்திய நிலப்பரப்பில் ஓய்வெடுக்கத் தரையிறங்கும் இந்த வல்லூறுகள், பிறகு மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கி மேற்கு கடலோரத்தை அடைகின்றன. பின்னர் அங்கிருந்து அரபிக் கடலை மூன்றரை முதல் நான்கு நாட்கள் வரையிலான ஓய்வற்ற தொடர் பயணத்தில் கடந்து அவை சோமாலியாவை அடைகின்றன. இந்தப் பயணத்தில் இந்தியா வரும் பல ஆயிரக்கணக்கான வல்லூறுகளில் ஒரு சில தேர்வு செய்யப்பட்டு, வடகிழக்கு இந்தியாவில் விஞ்ஞானிகளால் செயற்கைக்கோள் கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. அப்படியாகக் கண்காணிக்கப்பட்ட சமீபத்திய மூன்றில் அப்பபாங் என்ற ஆண் வல்லூறு மணிப்பூரில் தொடங்கி, எங்குமே தரையிறங்காமல் முழுவீச்சில் அரபிக் கடலைக் கடந்து சோமாலியாவை அடைந்துள்ளது. பட மூலாதாரம், Dr. R Suresh Kumar படக்குறிப்பு, மூன்று அமூர் வல்லூறுகளும் நவம்பர் 16ஆம் தேதி நிலவரப்படி, அரபிக் கடலின் மீது பறந்து கொண்டிருந்தன. அதில் முன்னிலையில் இருந்த அப்பபாங் கிட்டத்தட்ட பாதி கடலை கடந்து விட்டிருந்தது மணிப்பூர் முதல் சோமாலியா வரை எங்கும் நிற்காமல் 5,400 கி.மீ பயணம் மணிப்பூர் அமூர் வல்லூறு கண்காணிப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்ட ஆய்வில், கண்காணிக்கப்படும் பறவைகள் பற்றித் தனது எக்ஸ் பக்கத்தில் விரிவாகப் பகிர்ந்துள்ள சுப்ரியா சாஹு, "அப்பபாங்கின் பயணம் அசாதாரணமானது" என விவரித்துள்ளார். ரேடியோ கருவிகளைப் பொருத்தி, செயற்கைக்கோள் மூலமாக இந்த மூன்று பறவைகளையும் விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். "அந்த டிராக்கர்கள் மூலம் கிடைக்கும் தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மணிப்பூரில் இருந்து புறப்பட்ட அப்பபாங், மத்திய இந்தியா மற்றும் அரபிக் கடலை கடந்து சோமாலியாவை நோக்கி கடல் கடந்து பறந்தது" என்று சுப்ரியா சாஹு குறிப்பிட்டுள்ளார். "அப்பபாங் அரபிக் கடலைக் கடந்து ஆப்பிரிக்காவின் சோமாலியாவுக்குள் நுழைந்துள்ளது. ஆண் வல்லூறான அப்பபாங், கிட்டத்தட்ட 5,400 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 5 நாட்கள், 15 மணி நேரம் மட்டுமே. அதாவது நாளொன்றுக்கு 1,000 கி.மீ என்ற கணக்கில் இடைவிடாது பறந்து அந்த பறவை சோமாலியாவை அடைந்துள்ளது," என்றும் அவர் தெரிவித்துள்ளார். நெடுந்தொலைவு பறக்க உதவும் கூர்மையான இறக்கைகள் உலகின் மிக நீண்ட வலசை பயணங்களில் ஒன்றை மேற்கொள்ளும் இவை பார்ப்பதற்கு வியப்பூட்டும் அழகுடன் இருக்கும். கண்களைச் சுற்றி, மூக்கைச் சுற்றி ஆரஞ்சு நிறத்துடன் இருக்கும் இவற்றுடைய இரு இறக்கைகளின் முனையும் வளைந்து, சற்றே கூர்மையாக இருக்கும். சிவப்பு அல்லது ஆரஞ்சு நிற கால்களுடன், குறுகிய வால்களைக் கொண்டிருக்கும் இவை பொதுவாக கூட்டமாக வாழக்கூடியவை. பட மூலாதாரம், P Jeganathan படக்குறிப்பு, நாகாலாந்தின் டொயாங் பகுதியில் வானில் கூட்டமாகப் பறந்து கொண்டிருக்கும் அமூர் வல்லூறுகள் இவற்றின் வளைந்த, சற்று கூர்மையான அமைப்பைக் கொண்ட இறக்கைகள், இந்த நீண்ட பயணத்திற்கு உதவிகரமாக இருப்பதாகக் கூறுகிறார் பறவை ஆய்வாளர் முனைவர் ப.ஜெகநாதன். நெடுந்தூரம் வலசை செல்லக்கூடிய அனைத்துப் பறவைகளின் உடல் அமைப்புமே சற்று வளைந்த, கூர்மையான இறக்கைகளுடன்தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். "உதாரணமாக, தவிட்டுக் குருவி பறக்கையில் அதன் இறக்கை வட்டமான வடிவத்தைக் கொண்டிருக்கும். ஆனால், அமூர் வல்லூறு, பட்டை வால் மூக்கன் போன்ற வலசைப் பறவைகளின் இறக்கைகள் கூர்மையாக வளைந்திருக்கும்," என்று விளக்கினார். கடந்த 18 ஆண்டுகளாக அமூர் வல்லூறுகளின் இந்த நெடுந்தூர வலசைப் பயணத்தைக் கண்காணித்து வருகிறார் இந்திய காட்டுயிர் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி முனைவர் சுரேஷ் குமார். அவரது கூற்றுப்படி, "அமூர் வல்லூறுகள் பொதுவாக வடகிழக்கு இந்திய நிலப்பரப்பில் ஓய்வெடுத்த பிறகு மத்திய இந்தியாவை கடந்து மேற்கு இந்தியாவின் கடலோரப் பகுதியை அடைகின்றன. ஓரிரவு மட்டும் அங்கே தங்கிவிட்டுத் தங்கள் கடல் பயணத்தைத் தொடங்கி, அரபிக் கடலை அவை கடந்து செல்கின்றன. ஆனால், அப்பபாங் போல அவ்வப்போது சில வல்லூறுகள் இப்படியாக எங்குமே ஓய்வெடுக்காமல் ஒரே மூச்சில் முழு தூரத்தையும் கடந்து சோமாலியாவுக்கு சென்றுவிடுகின்றன" என்றார். பட மூலாதாரம், Getty Images மழைக் காலத்தில் ஈசல்களை உண்ண வரும் வல்லூறுகள் இந்தப் பறவைகளின் உடலமைப்பு அவை பறப்பதற்கு ஏதுவான வளைந்த இறக்கைகளைக் கொண்டுள்ளன. அதேவேளையில், அவை நெடுந்தொலைவு பறக்க அதிக ஆற்றல் தேவை. அத்தகைய ஆற்றலைச் சேமித்து வைப்பதற்கான உணவை அவை வடகிழக்கு இந்தியாவின் நாகாலாந்து, மணிப்பூர் பகுதிகளில் அதிகம் பெறுவதாகக் கூறுகிறார் முனைவர் சுரேஷ் குமார். "வடகிழக்கு இந்தியாவில் அவற்றுக்குத் தேவையான இரை மிக அதிக அளவில் கிடைக்கக் கூடிய, சரியான காலகட்டத்தில் அவை அங்கு வந்தடைகின்றன. மழைக் காலத்தில் கூட்டம் கூட்டமாக இனப்பெருக்கத்திற்காக ஈசல்கள் பறக்கத் தொடங்குகின்றன. அந்த நேரத்தில் வந்து சேரும் அமூர் வல்லூறுகள், அந்த ஈசல்களை அதிகமாக உட்கொள்கின்றன. இதற்குப் பிறகு சோமாலியா சென்றடையும் வரை அவற்றுக்குப் போதுமான இரை கிடைக்காது என்பதை அவை அறிந்திருப்பதால், நன்கு சாப்பிட்டு, உடல் எடையைக் கூட்டிக் கொள்கின்றன," என்று விளக்கினார் சுரேஷ் குமார். அதாவது, அதிகளவிலான உணவை உட்கொள்வதன் மூலம் சேமித்து வைக்கப்படும் கொழுப்புச்சத்து அவற்றின் நீண்டதூர பயணத்திற்குத் தேவையான ஆற்றலை வழங்குவதாகக் கூறுகிறார் அவர். ஈசல் மட்டுமின்றி அமூர் வல்லூறுகளின் விருப்பமான இரையாக தேசாந்திரி தட்டானும் இருப்பதாகக் கூறுகிறார் முனைவர் ஜெகநாதன். "இந்த வல்லூறுகள் வலசை செல்லும் அதே காலகட்டத்தில், இந்தியாவில் இருந்து ஆப்பிரிக்காவுக்கு தேசாந்திரி தட்டானும் (Wandering Glider) கடல் கடந்து தங்கள் வலசைப் பயணத்தை மேற்கொள்கின்றன. வல்லூறுகள் இடைவிடாமல் பறந்து கொண்டிருக்கும்போதே, தங்கள் வழியில் செல்லும் இந்தத் தட்டான்களைப் பிடித்துச் சாப்பிட்டுக் கொள்கின்றன. அதுவும் ஓய்வின்றி நீண்ட தூரம் பறக்கத் தேவையான ஆற்றலை அவற்றுக்கு வழங்குகின்றன" என்று விளக்கினார் ஜெகநாதன். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தேசாந்திரி தட்டான் அரபிக் கடலை கடக்க உதவும் காற்று அரபிக் கடல் மீது பறக்கும் போது, சுமார் மூன்றரை முதல் நான்கு நாட்களுக்கு எங்கும் அவை தரையிறங்க முடியாது. அதோடு, தேசாந்திரி தட்டான் போல வலசை வரும் பூச்சிகள் கிடைத்தாலொழிய உணவு கிடைப்பதற்கும் வாய்ப்பில்லை. அப்படியிருக்கும் சூழலில், இந்திய நிலப்பரப்பில் அதீதமாகச் சாப்பிட்டு, கொழுப்புச்சத்தினை சேமித்துக் கொள்வது மட்டுமே அவற்றுக்கு உதவுவதில்லை என்கிறார் ஜெகநாதன். "அவை கடல் பரப்பில் பறக்கும்போது, அங்கு நிலவும் காற்றோட்டத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. அதற்கு ஏற்ற வகையில்தான் அவை தம் வலசைப் பயணத்தையே வடிவமைத்துள்ளன," என்றும் அவர் விளக்கினார். அவை வலசை செல்லும் நேரத்தில், பூமத்திய ரேகைப் பிராந்திய ஒருங்கிணைப்பு மண்டலம் (ITCZ) என்று அழைக்கப்படும் ஒரு வானிலை மண்டலம் உருவாகிறது. அந்த வானிலை மண்டலம் தென்மேற்கு நோக்கி நகரும் காற்றோட்டத்தைக் கொண்டு வருகிறது. அமூர் வல்லூறுகள் ஆப்பிரிக்கா நோக்கிப் பறக்கும்போது, "இந்தக் காற்றோட்டத்தை ஓர் உந்துதலாகப் பயன்படுத்திக் கொள்கின்றன" என்று விளக்கினார் ஜெகநாதன். அதாவது, மிதிவண்டியை மிதிக்கும் போது காற்று பின்னாலிருந்து வேகமாகத் தள்ளினால், மிதிவண்டியில் செல்வது எப்படி எளிதாக இருக்குமோ, அதேபோல, தான் பயணிக்கும் திசையிலேயே வீசும் காற்றைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அமூர் வல்லூறுகள் கடல் கடந்து பயணிக்கின்றன. பட மூலாதாரம், Dr. R Suresh Kumar படக்குறிப்பு, கடந்த நவம்பர் 17ஆம் தேதி நிலவரப்படி, அப்பபாங் அரபிக் கடலை முழுதாகக் கடந்து சோமாலியாவை அடைந்துவிட்டது வசந்த காலத்தின் பிற்பகுதியில், ஆசியாவுக்கு மீண்டும் திரும்பி வரும்போதுகூட, அமூர் வல்லூறுகள் இதேபோல காற்று வீசும் திசையைப் பயன்படுத்திக் கொள்கின்றன. அந்த நேரத்தில், அரபிக் கடலின் மீது வடகிழக்குத் திசை நோக்கி வீசும் காற்றை வல்லூறுகள் தங்கள் பயணத்திற்குப் பயன்படுத்துகின்றன. அதன் மூலம் கடலைக் கடந்து, இந்திய நிலப்பரப்புக்கு மேலே கிழக்கு நோக்கிப் பறந்து, பின்னர் வடக்கு நோக்கித் திரும்பி, அமூர் நதிப் பகுதியை அடைகின்றன. உணவுக்காக வேட்டையாடப்பட்ட அமூர் வல்லூறுகள் அமூர் வல்லூறுகள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாகா இன மக்களால் பெருமளவில் உணவுக்காக வேட்டையாடப்பட்டன. ஆனால், அத்தகைய செயல்கள் தற்போது முற்றிலுமாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருப்பதாகக் கூறுகிறார் முனைவர் சுரேஷ். அமூர் வல்லூறுகள் தங்களது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள வடகிழக்கு இந்தியாவில் சில காலம் தங்குவதைப் பற்றிப் பேசிய ஜெகநாதன், "நாகாலாந்தின் டொயாங் ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவை ஆயிரக்கணக்கில் கூடும்போது வானம் முழுக்க அவை பறந்து கொண்டிருப்பதை, முழு மரத்தையும் அவை ஆக்கிரமித்து அமர்ந்திருப்பதைப் பார்க்கவே அற்புதமாக இருக்கும்," என்று விவரித்தார். "அப்படி வரும் அமூர் வல்லூறுகளை மக்கள் கூட்டமாக வேட்டையாடி, உணவுக்காக விற்பனை செய்வது நீண்டகாலமாக நடந்து கொண்டிருந்தது. அதைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் மறைந்த காட்டுயிர் புகைப்படக் கலைஞரும் பறவை ஆர்வலருமான ராம்கி ஸ்ரீநிவாசன் பெரும்பங்காற்றினார்" என்றும் முனைவர் ஜெகநாதன் குறிப்பிட்டார். உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தில், இவற்றின் இறைச்சி விற்பனைத் தொழில் பங்கு வகிப்பதை உணர்ந்து, அதற்கு மாற்றாக சூழல் சுற்றுலா வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க அவர் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். "இத்தகைய நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதன் விளைவாகவே அமூர் வல்லூறுகளுக்கு இந்திய நிலப்பரப்பில் இருந்த பெரும் ஆபத்து தடுக்கப்பட்டது." கடந்த 2013ஆம் ஆண்டில், இறைச்சிக்காக வல்லூறுகளை வேட்டையாடுவதை மரபாகக் கொண்டிருந்த நாகா பழங்குடியின மக்கள், அவற்றைப் பாதுகாப்பதாக உறுதி பூண்டனர். தற்போதைய சூழலில், "அவற்றுக்கு இத்தகைய அபாயங்கள் இல்லையென்றாலும், வல்லூறுகள் வலசையின்போது ஓய்வெடுக்கும் நில அமைப்புகளைப் பாதுகாப்பதிலும், அவற்றின் உணவுத் தேவை பூர்த்தியாவதையும் உறுதி செய்ய வேண்டியது அவசியம்," என்று தெரிவித்தார் முனைவர் சுரேஷ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly9mdx7v18o
  3. எல்லை தாண்டும் மீனவர்களுக்காக முடடைக் கண்ணீர்விடும் பத்திரிகையாளர் மீனவர்களை எல்லை தாண்டி போகாமல் மீன் பிடிக்க சொல்லலாமில்ல.
  4. இந்தக் கட்டுரை எழுதியவரின் பெயர், விபரங்கள் இல்லாமல் சமூக ஊடகங்களில் வரும் கட்டுரைகள் போன்ற ஒன்றாக இருந்தால், இதை மிக இலகுவாக புறக்கணித்து விட்டு போய்விடலாம். ஆனால் பொறுப்பான ஒரு இடத்தில் இருக்கும், பொதுவெளியில் இயங்கும் அபிலாஷ் போன்ற ஒருவர் இவ்வளவு மேலோட்டமாக, பிழையான அனுமானங்கள் மற்றும் தகவல்களுடன், அவசரகதியில் எழுதியிருப்பது ஆரோக்கியமான ஒன்றல்ல என்றே தோன்றுகின்றது. என்னுடைய சொந்த அனுபவங்கள் மற்றும் நான் அறிந்தவற்றையும் அடிப்படையாகக் கொண்டு, தேவையான தரவுகளையும் தேடி எடுத்து, அமெரிக்காவின் நிலையையும், இந்தியாவின் நிலையையும் எந்தப் பக்கமும் சாராமல் எழுத ஆரம்பித்தால் அது ஒரு சின்ன புத்தகமாகவே முடியும். நான் 95ம் ஆண்டு இங்கு படிக்க வந்தேன். மூன்று மாதங்களின் பின்னர் மனைவியும் வந்தார். அடுத்த அடுத்த மாதங்களில் எங்களின் முதலாவது குழந்தை உண்டாகினார். படிக்கும் போது அமெரிக்க பல்கலைக்கழகமே முழுச் செலவையும் ஏற்றுக் கொண்டிருந்தது. அத்துடன் மாதம் மாதம் ஒரு தொகையை செலவுக்கு கொடுத்தார்கள். அந்தத் தொகை வறுமைக் கோட்டிற்கு மிகவும் கீழேயே இருந்தது. இந்த விடயம் அப்போது எனக்குத் தெரியாது ஏனென்றால் அவர்கள் கொடுத்த தொகையில் அரைவாசிக்கு மேல் மீதமாகிக் கொண்டிருந்தது. மகப்பேற்று மருத்துவரிடம் போன பொழுது, அவர் எங்களிடம் அமெரிக்க அரசின் வருமானம் குறைந்தவர்களுக்கான சமூகநலத் திட்டங்கள் பற்றி சொல்லிவிட்டு, எங்களை அதில் சேரச் சொன்னார். நாங்களும் சேர்ந்தோம். மாதம் மாதம் உணவு முத்திரைகள் கொடுத்தார்கள். இது நடந்தது 95, 96 மற்றும் 97ம் ஆண்டுகளில். பணவீக்கம், வேலையின்மை போன்ற காரணங்களால் இது இன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சமூகநலத் திட்டம் அல்ல. நாங்கள் அன்று அமெரிக்க அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டிருந்தது எங்கள் மூவருக்கும் தேவைக்கும் அதிகமாகவே இருந்தது. இங்கு மத்திய அரசின் செலவுகள் பிரதிநிதிகளால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். மத்திய அரசின் செலவீனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அல்லது கடன் முடிவடையும் தறுவாயில், புதிய நிதி அல்லது கடன் எல்லை பெரும்பான்மையான பிரநிதிகளால் அங்கீகரிக்கப்படவேண்டும். சில சமயங்களில் பிரேரிக்கப்படும் புதிய நிதி அல்லது கடன் எல்லைக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைப்பதில்லை. அந்த நாட்களில் மத்திய அரசின் திட்டங்களுக்கு புதிய நிதி வழங்குவது தடைப்படும். அரசின் சமூகநலத் திட்டங்களுக்கும் இங்கிருந்தே நிதி போகின்றது. ஆனாலும் நிதி வரப் போவதில்லையே என்று இங்குள்ள நிர்வாகத் துறைகள் இந்த சமூகநலத் திட்டங்களை என்றும் கைவிடுவதில்லை. 'இனிமேல் பூனைக்கறி தான் சாப்பிட வேண்டும்............' என்று சொல்வது நிலைமையின் அவசரத்தை அழுத்திச் சொல்லும் ஒரு முறையே அல்லாமல் அது நிஜம் அல்ல. தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்டது உண்மையிலேயே நடந்தது. இந்தியாவில் தொடரும் விவசாயிகளின் தற்கொலைகளும் உண்மையே. ஏழ்மையை ஒரு குற்றமாக இங்கு அமெரிக்காவில் எவரும் பார்ப்பதில்லை. ஒருவர் ஏழையா, இல்லையா என்று கூட இங்கு தெரிவதில்லை. அரசிடம் உதவி பெறுவதற்கு பலர் தயங்குகின்றார்கள், வெட்கப்படுகின்றார்கள் என்பது உண்மை தான். அது அவர்களின் தன்முனைப்பை, சுயமரியாதையை இழக்கும் ஒரு செயல் என்று அவர்கள் நினைப்பதால் மட்டுமே. அந்த நினைப்பே ஏழ்மையும், இல்லாமையும் தங்களின் தலைவிதி என்று அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அவற்றை கடந்து முன்னேறும் திறனை அவர்களுக்கு கொடுக்கின்றது. இந்தியாவில் பிறப்பு என்றும், தலைவிதி என்றும் கிடைத்த வாழ்வை ஏற்றுக்கொண்டு அப்படியே தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் பல கோடிக்கணக்கான மக்களை அபிலாஷ் போய்ப் பார்க்கவேண்டும். இன்றிருப்பதை விட 2008ம் ஆண்டில் இங்கு அமெரிக்காவில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அமெரிக்க வாகனங்கள் தயாரிக்கும் நகரான Detroit மிகவும் நலிவடைந்தது. வாகனங்கள் தயாரிக்கும் மூன்று பெரிய அமெரிக்க நிறுவனங்களில் இருந்தும் ஏராளமானோர் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். ஒரு செய்தித் துணுக்கில் ஒரு குடும்பம் வேலை இழந்து, அரசின் சமூகநலத் திட்டத்தில் போய் உதவி பெறும் நிலையை எண்ணி கண்கலங்கி நின்றார்கள். இப்படி அவர்கள் கேட்டது வேலையை மட்டுமே, அரசின் உதவியை அல்ல. பின்னர் அமெரிக்க அரசு ஒவ்வொரு நிறுவனத்துக்கும் பல பில்லியன் டாலர்களை கடனாகக் கொடுத்தது. புதிய வாகனங்கள் தயாரிக்கப்பட்டன. அமெரிக்கர்கள் அவற்றை வாங்கினார்கள். இது ஒரு அலையாக இங்கு நடந்தது. இந்தியர்களோ அல்லது வேறு நாட்டவர்களோ அன்று அமெரிக்க வாகனங்களை வாங்குவது இல்லை என்றே சொல்லலாம். அந்த நிறுவனங்கள் கடன்களை திருப்பிச் செலுத்தினார்கள். அமெரிக்காவும் அதன் மக்களும் மீண்டும் மீண்டும் மீண்டு வருவதற்கான பிரதான காரணம் இதுவே. 100 நாட்கள் வேலைத் திட்டம் பற்றி அறிய வயநாடு போகத் தேவையில்லை. தமிழ்நாட்டிலேயே அது பரவலாக இருக்கின்றது. அடிக்கடி ஊர்மக்கள் நிகழ்த்தும் போராட்டங்கள் செய்திகளில் வருகின்றது. திட்டத்தின் பிரகாரம் வேலை கொடுப்பதில்லை என்றும், கூலி கொடுப்பதில்லை என்றும் போராடுகின்றார்கள். இந்த திட்டத்தால் இதுவரை உற்பத்தி, சேவைகள் அல்லது எந்த மக்களினதும் வாழ்க்கைத்தரமாவது அதிகரித்திருக்கின்றதா. இதுவும் இன்னொரு இலவச உதவி வழங்கும் தேர்தல்கால வாக்குறுதியாகவே இருக்கின்றது. வேலையில் இருந்து கொண்டே ஏழையாகவும், பரதேசியாகவும் இருக்கும் நிலை அமெரிக்காவில் இருக்கின்றது என்கின்றார். வசந்தபாலனின் 'அங்காடித் தெரு' மற்றும் இவை போன்ற படங்கள் சினிமா அல்ல, அவை நிஜம் என்ற உண்மையை காணத் தவறிவிட்டார். அமெரிக்கா பாலும், தேனும் ஓடும் ஒரு தேசம் அல்ல. உலகில் அப்படி ஒரு தேசமுமே கிடையாது. ஆனால் இந்தியா போன்ற சமூகநீதி மறுக்கப்பட்ட, தேர்தல் காலங்களில் அன்றி வேறு எப்போதும் எவ்வகையிலும் மனிதர்களாகவே கருதப்படாத ஏழை எளிய மக்கள் படும் அவலங்களுக்கு பல மடங்குகள் குறைந்த அவலமே அமெரிக்காவிலும், உலகின் பல நாடுகளிலும் இருக்கின்றது. இந்த மாதம் ஜெயமோகன் அமெரிக்கா வந்தார். அவர் இங்கு வருவது இது ஐந்தாவது தடவை என்று நினைக்கின்றேன். பல வகைகளில் உலகின் சிறந்த தேசம் அமெரிக்காவே என்று ஜெயமோகன் ஒவ்வொரு தடவையும் எழுதுகின்றார். அபிலாஷ் தான் ஜெயமோகனுக்கு எழுத்திலும், சிந்தனையிலும் எதிர்முனை என்பார். இரண்டு முனைகளுக்கு நடுவில் அமெரிக்கா மாட்டுப்பட்டுவிட்டது போல....................🤣.
  5. அஸ்கு, புஸ்கு…😂 விசாரிப்பவர் தன்னை வெளிப்படுத்த வேணும். பிறகு நான் எப்படி கொலிடே போறது?😂 தக்க காரணமும் காட்ட வேண்டி வரலாம். பொதுநல காரணத்தை காட்டி ஊடகம், யூடியூப்பர் யாராவதுகேட்கலாம். லெட்டர் வேணும் எண்டால் அடிச்சுத்தரலாம்😂.
  6. அண்மையில் நல்ல அரச வேலையில் இருக்கும் எனது உறவினர் ஒருவர் இங்கே தன்னை கூப்பிட்டு விடுமாறு தனது மனைவியின் தமையனை கேட்டிருந்தார். அவர் எனது குடும்ப உறுப்பினர் என்பதால் என்னிடமும் ஒரு பகுதி உதவியை நாடினார். கூப்பிட்டு விடலாம் ஆனால் அவருக்கு இங்கே வந்தால் இவை தான் வேலை என்பதை மட்டும் சொல்லி விட்டு கூப்பிட ஏற்பாடு செய் என்றேன். வேலையை சொன்னதும் வரவில்லை என்று விட்டார்.
  7. இண்டைக்கு திருமலை நாளைக்கு மட்டகளப்பு, யாழ்ப்பாணம். கருண காட்டவே மாட்டாத தெய்வங்களுக்குகான காவடிகளை இறக்கி வைத்து விட்டு, தன் பலம், பலவீனம் அறிந்து, ஒரு கூர்ப்பில் முன்னேறிய உயிரி கூட்டம் போல் ஒன்றிணைந்து செயல்படாதவரை…. இந்த இனத்துக்கு உய்வே இல்லை.
  8. இதுதான்... ஆபத்தான பாறை மீன். நாம் சாப்பிடும் பாரை மீனை, பாறை மீன் என்று குழப்பி அடிக்கும் பத்திரிகையாளர்களை நினைக்க கடும் கோபம் ஏற்படுகின்றது. அடி முட்டாளுகள். இது...நாம் சாப்பிடும் பாரை மீன்.
  9. இந்த பாட்டரி நினைவில் இருக்கிறதா.?
  10. என்னை விட்டு விடுங்கள். நான் சொன்னது என்ன? இவர்கள் செய்வதுதான் என்னவோ? இன்பம் துன்பம் கடந்த நிலையில் எனது போதனைகள் இருந்தன. கடவுளாக என்னை ஏற்கச் சொல்லவில்லையே? எனது பெயரால் ஏனிந்தக் கொடுமைகள்? அன்பைப் போதித்த என்னை இப்படி அவமதிப்பது சரிதானா? மனதை பக்குவப்படுத்தச் சொன்னேன். என்னை வைத்து இனவாதக் கொடுமைகளா? தமிழர் நிலங்களைக் கைப்பற்ற எனது பெயரில் சிலை வைப்பா? நானோ ஆசைகளைத் துறந்தேன் ஆனால் என்னை சொல்லி சொல்லியே தமிழினத்தை அழிக்க நினைக்கிறார்களே மனங்களை பண்படுத்தச் சொன்னேன் தமிழரின் உரிமைகளை பறிக்க என்னை பயன்படுத்துகிறார்களே. இவர்களா என்னைப் பின்பற்றுகிறார்கள்? உயிர்களிடத்தில் அன்பு காட்டத்தானே சொன்னேன். என் போதனைகள் வழி நடப்பதாகச் சொல்பவர்கள் அடாவடித்தனமாக தமிழர் நிலங்களை பறிக்கிறார்களே/ காலம் காலமாமாக எனது பெயரால் தானே தமிழினப் படுகொலைகளைத் தொடர்கிறார்கள். இனி எனது பெயரால் உங்கள் இனவாதக் கொடுமைகளைத் தொடர்ந்திட வேண்டாம் என்னை விட்டு விடுங்கள். மந்தாகினி
  11. மஹிந்தவோ தானே பயங்கரவாதிகளை அழித்தவர் என சிங்களமக்களிடம் பாராட்டு வாங்குகிறார், அர்ச்சுனாவோ நாமலுக்காக வக்காலத்து வாங்குகிறார், தேசியத்தலைவர் தனது கடவுள் என்கிறார், இதை மஹிந்தவின் அரசாங்கத்தில் இவரால் சொல்ல முடிந்திருக்குமா? முடிந்திருந்தால் பயங்கரவாத சட்டத்திலோ, வெள்ளை வானிலோ காணாமல் ஆக்கப்பட்டிருப்பார். தனது நலனிற்காக எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் யாரோடும் பேசுபவர்தான் அர்ச்சுனா. மக்களுக்காக இவர் செய்ததை விட, தனது அடாவடியினால் காவற்துறை சென்றதே அதிகம். இவரை நம்பி வாக்களித்த மக்கள்தான் பாவம். இந்த லட்ஷணத்தில ஜனாதிபதி கனவோடு இவர் பின்னால் சுற்றுகிறார் நாமல். இவரோ தமிழ் மக்களின் ஒரேயொரு பிரதிநிதி தானென்கிறார். நாமலும் நம்பி விட்டார் போலும். தங்களின் அரசியற் செல்வாக்கு சரியும்போதெல்லாம் கையிலெடுக்கும் ஆயுதம் பௌத்தம், இனம். இதனாலேயே இவர்கள் அழியப்போகிறார்கள்.
  12. அததெரண கருத்துப்படங்கள்.
  13. அப்படி இவர் என்னத்தை பெரிதாக சாதித்து விட்டார், சாத்தான் வந்து கருத்தெழுதுவதற்கு? எப்போதும் உள்ளதையே செய்திருக்கிறார்கள், மாற்றி ஒன்றும் செய்யவில்லை. இதோ பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அழைப்பு வரப்போகிறது எனக்காத்திருந்தார், வரவில்லை. சவால் விட்டுப்பார்த்தார் பயனில்லை, எச்சரிக்கை செய்தார், மசியவில்லை. நாமலோடு பேச்சுவார்த்தை நடத்தினார், எதுவும் நடைபெறவில்லை. கடிதம் அனுப்பி கோரிக்கை வைத்து ஒருமாதிரி கதவு திறந்தாயிற்று. உள்நுழைந்தவர்கள் ஏதாவது கதிரை எதிர்பார்ப்பார்கள், ஒரு ஓரத்தில் பார்வையாளராக அனுமதித்தாலும் பரவாயில்லை என்பார்கள். மாகாண தேர்தலை நடத்த வேண்டுமாம், தான் முதலமைச்சர் கதிரையில் அமரவேண்டும். ஏன் ராஜபக்ச காலத்தில் மாகாண தேர்தல் கிரமமாக நடத்தப்பட்டதா? அப்போது இவர் தனது அதிருப்தியை வெளியிட்டாரா? ஏன் வெளியிடவில்லை? அன்று வெளியிட்டிருந்தால் பதவியில்லை, இன்று பதவி கொடுத்திருந்தால் இந்த கோரிக்கை எழுந்திருக்காது. இங்கு இரண்டுபேர் சுமந்திரனுக்காக காவடி எடுக்கிறார்கள் அதிலும் தூக்குக்காவடி! இன்றுதான் இந்தப்பிரச்சனைகள் உருவாகியதா? கடந்தகாலத்தில் இதை வலியுறுத்த மறந்ததேன்? இப்போ என்ன? அனுராவோடு கைகுலுக்கி படம் போட வேண்டும் அவ்வளவுதான். அது நடந்தால் எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என அறிக்கை வரும், வந்து கொண்டே இருக்கும்.
  14. சிங்கையில் இருந்து நானும், யு கேயில் இருந்து நீங்களும் தான் ரெண்டு பேரும் இறக்கிறோம், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் உள்ள போய் நீங்கள் பிச்சுமணி பைத்தியனை லேப்ட்டில் டீல் பண்ணுறீங்க நான் மிகுதி கூட்டத்தை ரயிட்டில் டீல் பண்ணுறேன் (வாழாந்தவக்கை சாணக்ஸ் உட்பட) . அரசியல் என்றால் என்ன என்று முழு வேர்ல்டுக்கும் காட்டுறோம்
  15. என்ன. பிரியன். சும்மா. இருக்க. ரம்பட். நம்மிடம். எல்லாம்பறித்து உங்களின். வங்கி. கணக்கில். போட்டு. உள்ளார். எனவே. மட்டற்ற மகிழ்ச்சியில். இருப்பதால் நீர்வேலியன். யாசோ. ஒருவரையும். காணவில்லை. வாழ்க. முஸலிம்.
  16. ஒரு நாட்டுக்கு முதல் தடவையாக வரும் ஒருவர் அதுவும் எங்கள் நாட்டிலிருந்து வருபவர்கள் எதிர் நோக்கும் சட்ட சிக்கல் பற்றி உண்மையாகவே உங்களுக்கு தெரியாது தானா.?.வைத்தியர் அர்ச்சனா ஊர் பாரளமன்றில் எப்படி பேசினாலும் அவர்களுக்கும் பழகி விட்ட போலும், ஆனால் ஒரு புதிய நாட்டுக்கு வரும் போது அனைத்து நடை முறைகளை கடைப்பிடிக்க வேணும் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும், அவருக்கும் தெரிந்திருக்கும்.வேணாம்..சில இடங்களில் எழுதுவது சுத்த வேஸ்ட்.
  17. நான் ஐ போண் வழியாக வந்து எழுதி பார்த்து விட்டு தான் இதனை எழுதுகிறேன்.நீங்களும் உங்கள் போண் ஊடாகவே யாழில் உள் வந்து எழுத வேண்டிய பகுதிக்கு கீளே உள்ள பெட்டியில் எழுதி விட்டு, மேலே உள்ள பெட்டியில் கொப்பி பேஸ்ட் செய்யுங்கள்.உங்களுக்கு இலகுவாக இருக்கும் என்பதற்காக இதை எழுதுகிறேன்.மற்றப்படி ஒன்றுமில்லை.
  18. ஆனால் இதே உதவிகளை பெறும் எம்மவர் ஊர் சென்று காட்டும் படம் பற்றி ஏராளன் அறிவது அவசியம்.
  19. தமிழர் தரப்பு அரசியல்வாத்திகள் 50,60 வருட காலமாக தமிழர் யாப்பு போல் எழுதி வைத்திருக்கும் வசனங்கள் இவை. சந்தர்ப்பங்களை தவற விட்டது மட்டுமல்லாமல்....பேரம் பேசும் அரசியல் ஒரு துளி கூட இல்லாதவர்கள். போகத்திற்கு போகம் வரும் சிங்கள இனவாத அரசியல் தலைவர்களை ஆதரிப்பதே இவர்கள் பிழைப்பு.
  20. எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை, அமெரிக்காவில் (அல்லது எந்த மேற்கு நாட்டிலும்) வருமானம் இல்லா விட்டால் வாழ முடியாது. வருமானம் வேலையின் மூலம் பெற்றுக் கொள்ள முடியாதோர், அல்லது வரும் வருமானம் போதாமல் இருப்போர் ஆகிய தரப்பினருக்காக 60 களில் உருவாக்கப் பட்ட SNAP உணவுத் திட்டத்தைப் பற்றி அபிலாஷ் நுனிப்புல் மேய்ந்திருக்கிறார். இது பணவீக்கம் அதிகரித்தமையால் மக்கள் பட்டினி கிடக்க ஆரம்பித்த பின்னர் உருவான திட்டமல்ல. வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்போருக்கான உதவித் திட்டம் அவ்வளவு தான். வறுமை இல்லையானால் பெற்றுக் கொள்ள முடியாது. மற்றபடி இது மட்டுமே அமெரிக்காவில் உணவு உதவி புரியும் திட்டம் என்றும் சொல்ல முடியாது. பல்வேறு தொண்டு அமைப்புகளும், உள்ளூர் அரசு அமைப்புகளும், பள்ளிக் கூடங்களும் கூட குழந்தைகள் பட்டினி கிடக்காமல் இருக்க திட்டங்கள் வைத்திருக்கிறார்கள். தெருவில் நிற்கும் இந்தியர்களை மாடமாளிகையில் வாழும் இந்தியர்கள் பார்த்துக் கொள்வதை விட சிறப்பாக இங்கே வாழும் மக்கள் இத்தகைய திட்டங்களுக்கு நன்கொடை வழங்கி ஏனையோரின் பசி தீர்க்க உதவுகிறார்கள்.
  21. இலங்கையிலும் பாராளுமன்றத்திற்கு வெளியே இதைச் செய்ய முடியாது. அர்ச்சுனா மட்டுமல்ல, கஜேந்திரகுமார் போன்றோர் கூட பாராளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி உள்ளே பேசலாம். அதற்கும் கட்டுப் பாடுகள் உண்டு - பேசி ஒலி/ஒளி போடலாம். ஆனால், கட்டுப் பாடுகளை மீறினால் அப்படியொரு உரை நிகழ்ந்ததற்கான அடையாளமே இல்லாமல் ஹன்சாட்டிலிருந்து உரையை அகற்றி விட முடியும். இதை விட நுணுக்கமான வேறு விடயங்களும் உண்டு. இலங்கை அரசியலைமைப்பின், "பிரிவினை கோருதல் குற்றம்" என்று சொல்லும் "6 வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்கிறேன்" என்று சத்தியப் பிரமாணம் எடுத்துத் தான் பா.உ க்கள் எல்லோரும் பதவியேற்றிருக்கிறார்கள். ஆனால், அனல் பறக்கும் பேச்சுக்களை மட்டும் கவனமாகப் பேசுவர்!
  22. இலங்கை தமிழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என பரிந்துரை செய்கின்றீர்கள்? அல்லது எப்படியான அரசியல் கொள்கைகளை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?
  23. சேமிப்பு பரிதாபங்கள்..
  24. பணி ஓய்வு பெற்றவரின் வாழ்க்கை! 1.ஓய்வு பெற்றவர் அதிக நேரம் படுக்கையில் படுத்திருந்தால்… மனைவி : இன்னுமா எழுந்துக்கல? எவ்வளவு நேரம் தூங்குவீங்க! வேலை இல்லைனா எப்ப பாரு தூங்கனுமா? 2.ஓய்வு பெற்றவர் அதிகாலையில் எழுந்துவிட்டால்… மனைவி : உங்களுக்கு தூக்கமே வராதா? காலைல 4 மணிக்கே எழுந்து சத்தம் போட்டால், மத்தவங்க எப்படி தூங்குவாங்க ? ஆஃபீஸ் இல்லன்னா, பேசாம தூங்குங்க! 3. ஓய்வு பெற்றவர் வீட்டிலேயே இருந்தால்… மனைவி : எழுந்ததும் மொபைலும் கையுமா உட்கார்ந்தா எப்படி? எப்பப் பாரு டீ டீ னு .கேட்டுக்கிட்டு.. ! சின்ன சின்ன வேலைகளை செய்யலாம் இல்ல ? வீட்டை விட்டு வெளியே கிளம்பாமல், இங்கேயே உக்காந்து கிட்டு... சும்மா... . உங்களால எல்லாருக்கும் வீட்டு வேலை லேட்டாகுது! 4. ஓய்வு பெற்றவர் எப்பொழுதும் வெளியே சுற்றித் திரிந்தால்… மனைவி : இவ்வளவு நேரம் எங்க போனீங்க? ஆஃபீஸ் தான் இப்ப கிடையாதே? இப்போவும் வீட்டிலே சும்மா இருக்க முடியலையா? குடும்பத்தோடு கொஞ்சம் பேசலாம் இல்ல .....! 5.ய்வு பெற்றவர் பக்தி வழிபாட்டில் ஈடுபட்டால்… மனைவி : கோவில் கோவிலா சுத்தினா பணம் வருமா? அப்படி இருந்திருந்தா பூசாரிகள் தான் பெரிய பணக்காரர்கள் ஆகிருப்பாங்க.... . டாடா, பில் கேட்ஸ் எல்லாம் இல்லையே! எப்பவும் "ராம்ராம்", சங்கரா சங்கரா.... மாலை, மணி—அதே வேலை தானா! ஓய்வு பெற்றவர் மீண்டும் வேலையிலே சேர்ந்தால்… மனைவி : உங்களுக்கு வேலைதான் எல்லாமா? இவ்வளவு வயசு ஆகிவிட்ட பிறகும் பணத்துக்காக ஓடிக்கொண்டே இருக்க வேண்டுமா? எப்பவுமே உங்களுக்காக காத்திருக்கனுமா நாங்க? 7.ஓய்வு பெற்றவர் மனைவியை புனித யாத்திரைக்கு அழைத்துச் சென்றால்… மனைவி : பக்கத்து வீட்டு மோகனப் பாருங்க.... ஒவ்வொரு மாதமும் தன் மனைவியை ஷிம்லா, டார்ஜிலிங் எல்லாம் கூட்டிட்டு போறாராம்! நீங்கோ, எப்பவும் என்னை மருதமலைக்குத் தான் கூட்டிக்கொண்டு போகிறீங்க! 8.ஓய்வு பெற்றவர் மனைவியை சுற்றுலா இடங்களுக்கு (நைனி தால், காஷ்மீர், கோவா, ஊட்டி…) அழைத்துச் சென்றால்… மனைவி : வீடு தான் முக்கியம் ! வீணா செலவு பண்ணுறீங்க. உங்க கிட்ட பணம் கொட்டிக் கிடக்குதோ? அந்தப் பணத்தை வச்சு வீட்ட modify செய்யலாம்... , எனக்கு நாலு புடவை வாங்கி தரலாம்.... 9.ஓய்வு பெற்றவர் பழைய பாடல்களை ரசித்தால்… மனைவி : கிழத்துக்கு காதல் பாட்டு கேக்குதோ.... ? இளைமை ஊஞ்சலாடுதோ? பாடணும்னா பக்திப் பாடல்கள் பாடுங்க! 10.ஓய்வு பெற்றவர் நண்பர்களை அழைத்துப் பேசினால்… மனைவி : எப்பவும் மொபைலும் கையுமா...... தான் பேச்சுப் பேச்சு.... ! யார் கிட்ட இவ்வளவு நேரம் பேசறீங்க? நாங்கள் யாரையும் இப்படி பேசி போரடிக்க மாட்டோம்! 11.ஓய்வு பெற்றவர் அழகாக மேக்கப் போட்டு இருந்தால் … மனைவி : இந்த வயசில அலங்காரம் கேக்குதோ ? வேற எங்கே போகப் போறீங்க? வீட்டில் மருமகள் இருக்கிறா—உங்களைப் பார்த்து என்ன நினைப்பா? ஆஹா! ஓய்வு பெற்ற வாழ்க்கை! எல்லா ஓய்வு பெற்ற நண்பர்களுக்கும் அன்பான அர்ப்பணிப்பு உண்மையிலேயே நம்மில் பலருக்கும் பரிச்சயமாக இருக்கும் அனுபவங்கள் தான்! நன்றி முகப்புத்தகம்
  25. நாச்சிமார் கோவிலடி வில்லுப்பாட்டு இராஜன் (இராசு) தம்பையா இராஜன் அவர்கள் இன்று (18.11.2025) காலமானார். இவர் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, பின்னர் ஜேர்மனி மற்றும் பிரான்ஸ்சிலும் வசித்துள்ளார். இவர் நாடகங்களை இயக்கியுள்ளார். இந்திரா பார்த்தசாரதியின் 'மழை' மற்றும் கே. பாலச்சந்தரின் 'மூன்று முடிச்சு' போன்ற நாடகங்களை இயக்கி மேடையேற்றியுள்ளார். யாழ் களமூடாக அறிமுகமான ஒருவர். ஒரு காலத்தில் ஈழத்திலும், ஐரோப்பா எங்கும் வில்லுப்பாட்டு நிகழ்வினூடாக கோலோச்சியவர். „மறுபக்கம்” என 2003 களில் நான் எழுதிய சிறுகதை ஒன்றை தொலைக்காட்சி நிகழ்வுக்காக வில்லுப்பாட்டாக செய்தவர். நினைவுகளில் என்றும் நிலைத்து நிற்பார். Inuvaijur Mayuran ########################################## ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கின்றேன். ஓம் சாந்தி. 🙏
  26. எப்படியாவது வெளிநாடு சென்றால் போதும் என்ற மனநிலையில் உள்ளவர்களுக்கு எவ்வாறு புரிய வைப்பது அண்ணை?! வங்கியில் முகாமையாளராக இருந்தவர் குடும்பமாக கனடா சென்று இலங்கையில் உள்ள சொத்துகளை விற்று வாழ்வதை கேட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. வெளிநாட்டில் இருப்போர் அங்குள்ள நிலைமைகளை எடுத்து சொன்னால் தாங்கள் அங்கு வந்து முன்னேறிவிடுவோம் என பொறாமைப்படுவதாக நினைக்கிறார்கள்! இங்க இருந்தும் கேள்விப்படும் செய்திகளை விளங்கப்படுத்தினாலும் யாரும் கேட்பதாக இல்லை! இருந்தாலும் விக்கிரமாதித்தன் போல சொல்லுவோம். சமீபத்தில் கோடி ரூபா கொடுத்து பிரான்ஸ் சென்றவர் தாக்குப்பிடிக்க முடியாது ஓராண்டுக்குள் ஊருக்கே திரும்ப வந்த கதையும் இருக்கே!
  27. ஏராளனுக்கு இவை தெரிந்தே இருக்குமென நம்புகிறேன். ஊரில் இருப்போருக்கு பெரும்பாலானோருக்கு தற்போது நிலைமை விளங்கியிருக்கலாம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், போன ஆண்டு இறுதியில் ஒரு நிகழ்வில் ஒருவரைச் சந்தித்த போது அப்படியல்ல என்று புரிந்தது. இலங்கையில் வங்கியில் ஒரு நல்ல வேலையில் இருந்த ஒருவர், அமெரிக்காவிற்கு வந்து சேர்ந்திருந்தார். எப்படி வந்தார் என்று நான் கேட்கவில்லை, ஆனால் குடும்பத்தோடு வந்திருந்தார். வேலை கிடைக்கவில்லை, மருத்துவக் காப்புறுதி இல்லை. நேரடியாக வங்கித் துறையில் வேலை கிடைத்து விடும் என்ற தவறான புரிதலில் வந்தாரோ தெரியவில்லை. மிகவும் கஷ்டப் பட்டார், என்ன செய்தார் என்று தெரியவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.