Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Justin

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    7047
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    87988
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    31956
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/21/25 in all areas

  1. 2000 களில் மாணவனாக வந்த, ஒற்றையாளாக இருந்த எனக்கும் இதே அனுபவம் தான். ரியூசன் இலவசம் (50% பணி செய்த காரணத்தால்), மருத்துவ காப்புறுதி 90% இலவசம். வீட்டு வாடகையும், உணவும் தான் செலவு. அமெரிக்காவின் வறுமைக் கோட்டிற்குக் கீழானது என்று எனக்கும் அன்று தெரியாமல் வந்த சம்பளத்தில் ஊருக்கு அப்பாவின் செலவுக்கும் அனுப்பி, எஞ்சிய சேமிப்பில் முதல் வாகனமாக மூவாயிரம் டொலர்களுக்கு ஒரு பழைய காரை வாங்கி அதில் பழகி சாரதி அனுமதிப் பத்திரம் எடுக்கவும் முடிந்தது. இத்தனைக்கும் நான் மாநில அரசின் உணவு உதவியைக் கூட பெற்றுக் கொள்ள முயலவில்லை (ஒரு கௌரவ கவரி மான் சின்ட்றோம் தான்😂!). இப்படி குடியேறிகளாக வந்த என்னையும் உங்களையும் போன்ற பலரை இலவசங்கள், சலுகைகள் கொடுத்து நிமிர்த்தி விட்டிருக்கிறார்கள். அதே உதவிக் கரங்களை இனி வரும் குடியேறிகளுக்கும் ஓரளவு கொடுப்பதற்கு நாம் ஆதரவாக இருக்கிறோம். ஆனால், எம்மிடையேயும் சிலர் விசித்திரமாக இருக்கிறார்கள். உதாரணமாக, "பெரும்பாலான அமெரிக்கர்களின் வரியை உயர்த்தாமலே, படிப்புக் கடன் -student loan பெற்றவர்களுக்கு அரசு ஒரு பகுதிக் கடனைக் கட்டி அவர்களை மீட்கும்" என்று பைடன் அறிவித்த போது, எதிர்ப்புக் காட்டிய என் ஈழத்தமிழ் அமெரிக்க நண்பர்கள் பலர், இதே சலுகையெல்லாம் அனுபவித்து தற்போது செல்வந்தர்களாக இருப்போர் தான்! "என்ன டிசைனோ?" என்று அடிக்கடி நான் யோசிப்பதுண்டு😂!
  2. இந்தக் கட்டுரை எழுதியவரின் பெயர், விபரங்கள் இல்லாமல் சமூக ஊடகங்களில் வரும் கட்டுரைகள் போன்ற ஒன்றாக இருந்தால், இதை மிக இலகுவாக புறக்கணித்து விட்டு போய்விடலாம். ஆனால் பொறுப்பான ஒரு இடத்தில் இருக்கும், பொதுவெளியில் இயங்கும் அபிலாஷ் போன்ற ஒருவர் இவ்வளவு மேலோட்டமாக, பிழையான அனுமானங்கள் மற்றும் தகவல்களுடன், அவசரகதியில் எழுதியிருப்பது ஆரோக்கியமான ஒன்றல்ல என்றே தோன்றுகின்றது. என்னுடைய சொந்த அனுபவங்கள் மற்றும் நான் அறிந்தவற்றையும் அடிப்படையாகக் கொண்டு, தேவையான தரவுகளையும் தேடி எடுத்து, அமெரிக்காவின் நிலையையும், இந்தியாவின் நிலையையும் எந்தப் பக்கமும் சாராமல் எழுத ஆரம்பித்தால் அது ஒரு சின்ன புத்தகமாகவே முடியும். நான் 95ம் ஆண்டு இங்கு படிக்க வந்தேன். மூன்று மாதங்களின் பின்னர் மனைவியும் வந்தார். அடுத்த அடுத்த மாதங்களில் எங்களின் முதலாவது குழந்தை உண்டாகினார். படிக்கும் போது அமெரிக்க பல்கலைக்கழகமே முழுச் செலவையும் ஏற்றுக் கொண்டிருந்தது. அத்துடன் மாதம் மாதம் ஒரு தொகையை செலவுக்கு கொடுத்தார்கள். அந்தத் தொகை வறுமைக் கோட்டிற்கு மிகவும் கீழேயே இருந்தது. இந்த விடயம் அப்போது எனக்குத் தெரியாது ஏனென்றால் அவர்கள் கொடுத்த தொகையில் அரைவாசிக்கு மேல் மீதமாகிக் கொண்டிருந்தது. மகப்பேற்று மருத்துவரிடம் போன பொழுது, அவர் எங்களிடம் அமெரிக்க அரசின் வருமானம் குறைந்தவர்களுக்கான சமூகநலத் திட்டங்கள் பற்றி சொல்லிவிட்டு, எங்களை அதில் சேரச் சொன்னார். நாங்களும் சேர்ந்தோம். மாதம் மாதம் உணவு முத்திரைகள் கொடுத்தார்கள். இது நடந்தது 95, 96 மற்றும் 97ம் ஆண்டுகளில். பணவீக்கம், வேலையின்மை போன்ற காரணங்களால் இது இன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சமூகநலத் திட்டம் அல்ல. நாங்கள் அன்று அமெரிக்க அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டிருந்தது எங்கள் மூவருக்கும் தேவைக்கும் அதிகமாகவே இருந்தது. இங்கு மத்திய அரசின் செலவுகள் பிரதிநிதிகளால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். மத்திய அரசின் செலவீனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அல்லது கடன் முடிவடையும் தறுவாயில், புதிய நிதி அல்லது கடன் எல்லை பெரும்பான்மையான பிரநிதிகளால் அங்கீகரிக்கப்படவேண்டும். சில சமயங்களில் பிரேரிக்கப்படும் புதிய நிதி அல்லது கடன் எல்லைக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைப்பதில்லை. அந்த நாட்களில் மத்திய அரசின் திட்டங்களுக்கு புதிய நிதி வழங்குவது தடைப்படும். அரசின் சமூகநலத் திட்டங்களுக்கும் இங்கிருந்தே நிதி போகின்றது. ஆனாலும் நிதி வரப் போவதில்லையே என்று இங்குள்ள நிர்வாகத் துறைகள் இந்த சமூகநலத் திட்டங்களை என்றும் கைவிடுவதில்லை. 'இனிமேல் பூனைக்கறி தான் சாப்பிட வேண்டும்............' என்று சொல்வது நிலைமையின் அவசரத்தை அழுத்திச் சொல்லும் ஒரு முறையே அல்லாமல் அது நிஜம் அல்ல. தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்டது உண்மையிலேயே நடந்தது. இந்தியாவில் தொடரும் விவசாயிகளின் தற்கொலைகளும் உண்மையே. ஏழ்மையை ஒரு குற்றமாக இங்கு அமெரிக்காவில் எவரும் பார்ப்பதில்லை. ஒருவர் ஏழையா, இல்லையா என்று கூட இங்கு தெரிவதில்லை. அரசிடம் உதவி பெறுவதற்கு பலர் தயங்குகின்றார்கள், வெட்கப்படுகின்றார்கள் என்பது உண்மை தான். அது அவர்களின் தன்முனைப்பை, சுயமரியாதையை இழக்கும் ஒரு செயல் என்று அவர்கள் நினைப்பதால் மட்டுமே. அந்த நினைப்பே ஏழ்மையும், இல்லாமையும் தங்களின் தலைவிதி என்று அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அவற்றை கடந்து முன்னேறும் திறனை அவர்களுக்கு கொடுக்கின்றது. இந்தியாவில் பிறப்பு என்றும், தலைவிதி என்றும் கிடைத்த வாழ்வை ஏற்றுக்கொண்டு அப்படியே தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் பல கோடிக்கணக்கான மக்களை அபிலாஷ் போய்ப் பார்க்கவேண்டும். இன்றிருப்பதை விட 2008ம் ஆண்டில் இங்கு அமெரிக்காவில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அமெரிக்க வாகனங்கள் தயாரிக்கும் நகரான Detroit மிகவும் நலிவடைந்தது. வாகனங்கள் தயாரிக்கும் மூன்று பெரிய அமெரிக்க நிறுவனங்களில் இருந்தும் ஏராளமானோர் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். ஒரு செய்தித் துணுக்கில் ஒரு குடும்பம் வேலை இழந்து, அரசின் சமூகநலத் திட்டத்தில் போய் உதவி பெறும் நிலையை எண்ணி கண்கலங்கி நின்றார்கள். இப்படி அவர்கள் கேட்டது வேலையை மட்டுமே, அரசின் உதவியை அல்ல. பின்னர் அமெரிக்க அரசு ஒவ்வொரு நிறுவனத்துக்கும் பல பில்லியன் டாலர்களை கடனாகக் கொடுத்தது. புதிய வாகனங்கள் தயாரிக்கப்பட்டன. அமெரிக்கர்கள் அவற்றை வாங்கினார்கள். இது ஒரு அலையாக இங்கு நடந்தது. இந்தியர்களோ அல்லது வேறு நாட்டவர்களோ அன்று அமெரிக்க வாகனங்களை வாங்குவது இல்லை என்றே சொல்லலாம். அந்த நிறுவனங்கள் கடன்களை திருப்பிச் செலுத்தினார்கள். அமெரிக்காவும் அதன் மக்களும் மீண்டும் மீண்டும் மீண்டு வருவதற்கான பிரதான காரணம் இதுவே. 100 நாட்கள் வேலைத் திட்டம் பற்றி அறிய வயநாடு போகத் தேவையில்லை. தமிழ்நாட்டிலேயே அது பரவலாக இருக்கின்றது. அடிக்கடி ஊர்மக்கள் நிகழ்த்தும் போராட்டங்கள் செய்திகளில் வருகின்றது. திட்டத்தின் பிரகாரம் வேலை கொடுப்பதில்லை என்றும், கூலி கொடுப்பதில்லை என்றும் போராடுகின்றார்கள். இந்த திட்டத்தால் இதுவரை உற்பத்தி, சேவைகள் அல்லது எந்த மக்களினதும் வாழ்க்கைத்தரமாவது அதிகரித்திருக்கின்றதா. இதுவும் இன்னொரு இலவச உதவி வழங்கும் தேர்தல்கால வாக்குறுதியாகவே இருக்கின்றது. வேலையில் இருந்து கொண்டே ஏழையாகவும், பரதேசியாகவும் இருக்கும் நிலை அமெரிக்காவில் இருக்கின்றது என்கின்றார். வசந்தபாலனின் 'அங்காடித் தெரு' மற்றும் இவை போன்ற படங்கள் சினிமா அல்ல, அவை நிஜம் என்ற உண்மையை காணத் தவறிவிட்டார். அமெரிக்கா பாலும், தேனும் ஓடும் ஒரு தேசம் அல்ல. உலகில் அப்படி ஒரு தேசமுமே கிடையாது. ஆனால் இந்தியா போன்ற சமூகநீதி மறுக்கப்பட்ட, தேர்தல் காலங்களில் அன்றி வேறு எப்போதும் எவ்வகையிலும் மனிதர்களாகவே கருதப்படாத ஏழை எளிய மக்கள் படும் அவலங்களுக்கு பல மடங்குகள் குறைந்த அவலமே அமெரிக்காவிலும், உலகின் பல நாடுகளிலும் இருக்கின்றது. இந்த மாதம் ஜெயமோகன் அமெரிக்கா வந்தார். அவர் இங்கு வருவது இது ஐந்தாவது தடவை என்று நினைக்கின்றேன். பல வகைகளில் உலகின் சிறந்த தேசம் அமெரிக்காவே என்று ஜெயமோகன் ஒவ்வொரு தடவையும் எழுதுகின்றார். அபிலாஷ் தான் ஜெயமோகனுக்கு எழுத்திலும், சிந்தனையிலும் எதிர்முனை என்பார். இரண்டு முனைகளுக்கு நடுவில் அமெரிக்கா மாட்டுப்பட்டுவிட்டது போல....................🤣.
  3. கனடா- பிரம்டன் நகரசபை தமிழீழத் தேசியக் கொடியை அங்கீகரித்துள்ளது. பிரம்டன் நகரில் ஏற்கனவே முள்ளிவாய்க்கால் முற்றம் போன்ற தாயக சார்ப்பு நகர்வுகள் இடம்பெற்ற நிலையில் இந்த புதிய முன்னெடுப்பு வந்துள்ளது. இந்த அங்கீகாரத்தின் அடிப்படையில் நாளை நவம்பர் 21 ஆம் திகதி காலை 9.30 க்கு பிரெம்ரன் நகரமுதல்வர் பற்றிக் பிறவுண் (Patrick Brown) தலைமையில் கென் வலன்ஸ் சதுக்கத்தில் (Ken Whillans Square) உள்ள கொடிக்கம்ப முற்றத்தில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்படும் என பிரம்டன் நகர சபை அறிவித்துள்ளது. தமிழீழத் தேசியக் கொடி முன்னதாக தமிழீழத் தேசியக் கொடி நாளை அங்கீகரித்து பிரம்டன் நகர சபை சுற்றுநிருபம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. தமது விடாமுயற்சி மற்றும் முன்னகர்வுகளால் தமிழீழத் தேசியக் கொடி நாளுக்குரிய இந்த அங்கீகாரம் கிட்டியதாக உலகத் தமிழர் உரிமைக் குரல் என்ற கனேடிய புலம்பெயர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. கனடாவில் இருந்து வெளியேறிச் செல்லும் மக்கள் https://tamilwin.com/article/recognition-of-tamil-eelam-national-flag-in-canada-1763634312
  4. இதைக் கொஞ்சம் 30,000 அடி உயரத்தில் இருந்து பாருங்கள்: கொழும்புப் பல்கலையின் கலைப் பீடத்தினுள் வரும் ஒரு பிரிவு (division) பொருளியல் பிரிவு. ஆனால், கொழும்புப் பல்கலையின் சட்ட பீடத்தில் முதலாவது பீடாதிபதியே (Dean) பேராசிரியர் நடராஜா எனும் தமிழர் தான். அதன் பிறகு வி.ரி. தமிழ்மாறன் கூட பீடாதிபதியாக இருந்திருக்கிறார். வேறு சில தமிழர்களும் இருந்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம், தற்போதும் கலைப் பீடத்தின் இது போன்ற பல பிரிவுகளில் முஸ்லிம்கள், அதுவும் பெண்கள் இருந்திருக்கிறார்கள். இந்தப் பெரிய பரப்புப் பார்வையில் இருந்து பார்க்கும் போது, பேராசிரியர் பொருளியல் பிரிவுக்கு தலைவராக வந்தது என்ன பெரிய ஆச்சரியம்? அவரது உழைப்பு மெச்சத் தக்கது! ஆனால், ஏன் இந்த தேவையற்ற "முதல் தமிழன்" அலட்டல்?
  5. கட்டான கட்டழகு கண்ணா .........! 😍
  6. எல்லை தாண்டும் மீனவர்களுக்காக முடடைக் கண்ணீர்விடும் பத்திரிகையாளர் மீனவர்களை எல்லை தாண்டி போகாமல் மீன் பிடிக்க சொல்லலாமில்ல.
  7. அண்மையில் நல்ல அரச வேலையில் இருக்கும் எனது உறவினர் ஒருவர் இங்கே தன்னை கூப்பிட்டு விடுமாறு தனது மனைவியின் தமையனை கேட்டிருந்தார். அவர் எனது குடும்ப உறுப்பினர் என்பதால் என்னிடமும் ஒரு பகுதி உதவியை நாடினார். கூப்பிட்டு விடலாம் ஆனால் அவருக்கு இங்கே வந்தால் இவை தான் வேலை என்பதை மட்டும் சொல்லி விட்டு கூப்பிட ஏற்பாடு செய் என்றேன். வேலையை சொன்னதும் வரவில்லை என்று விட்டார்.
  8. நீங்கள் இப்படிஎழுதுவதாலும் ஏதாவது நன்மை உண்டா...எனாவெ அவனவன் செயல்பாட்டினால் ஏதோ முடிந்தளவு செய்கின்றார்கள் ... நன்மை கிடைக்குதோ இல்லையோ ...எமக்காக உயிர்விட்டவர்களுக்கு அவர்கள் செய்யும் பிரதியுபகாரம் நன்மை செய்வாரென்று தூக்கிபிடித்த அனுரவால் என்ன செய்யமுடிந்தது..திரும்ப புத்தர் சிலயைத்தான் வைக்கமுடிந்தது ....உவ்வளவும் செய்கின்றார் எனத் தூக்கிப்பிடித்த அனுரவுக்கு ..சிங்களவர் செய்தது என்ன ..லட்சக்கணக்கில் கூடி ஆதரவு தெரிவித்துள்ளார்கள் ... இங்கு நாம் என்ன செய்கின்றோ ம் என்றூ செய்வது எல்லாவற்றிர்கும் முட்டையில் மயிர் புடுங்க யோசிக்கின்றோம் ..இந்த சிந்தனை மாறினாலே ஓரளவு நின்மதி கிடைக்கும்...முதலில் தமிழனாக யோசிக்கவேண்டும்
  9. அததெரண கருத்துப்படம்.
  10. Prashantha Kumar · இளையராஜாவின் தன் மனைவியின் மேல் கொண்ட காதல்! அதற்கு என்ன என்று தானே கேட்கிறீர்கள்.. விஷயத்துக்கு வருவோம்... 1985ல் இதய கோவில் என்று ஒரு படம் மணிரத்னம் இயக்கத்தில் வந்தது. இசை இளையராஜா தான். மொத்தம் 7 பாடல்கள், எல்லா பாடல்களும் செம ஹிட். ஒவ்வொரு பாடலை எழுதியதும் ஒவ்வொரு கவிஞர்கள். இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் … இந்த பாடலை எழுதியது சாட்சாத் ராஜா தான். தன்னை ஒரு கவிஞராக அறிமுகப்படுத்தி கொண்டது இந்த பாடல் வழியே தான். அதற்கு பின் நம் ஆத்மாவை தொடும் பல பாடல்கள் அவர் இயற்றி இருக்கிறார். அதெல்லாம் சரி, இன்னும் திருமதி ராஜா பற்றி விஷயம் எதுவும் வரவேயில்லையே! இதோ வரேன்!! இந்த பாடலில் ஒவ்வொரு சரணத்திலும் தன மனைவி பெயர் வருமாறு எழுதியுள்ளார். திருமதி ஜீவா என்பது அவர் மனைவியின் பெயர். பல்லவியிலேயே வண்டியை செகண்ட் கியர் போட்டு தூக்கி விட்டார்: இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன் சரணத்தை கவனியுங்கள்: ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை! ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை!! எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது இப்பொழுது இரண்டாவது சரணத்துக்கு செல்வோம். காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால் ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும் ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏற்றினாரம்மா! அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார் என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது? சும்மா எப்போ பார்த்தாலும் ரெக்கார்டிங்! ரெக்கார்டிங்ன்னு பிரசாத் ஸ்டூடியோவிலேயே இருந்தால், யுவன் ஷங்கர் ராஜாவுக்கு யார் ஹோம்வர்க் சொல்லி குடுக்கறதாம்? எல்லா பாடத்திலயும் முட்டை வாங்கிட்டு வரான்! என்று ஒரு வேளை திருமதி ஜீவா அவர்கள் ராஜாவை அன்போடு கேட்டிருக்கலாம். கடைசி சரணத்தில் அம்மணிக்கு நாசூக்கா ஒரு செய்தி வேறு சொல்லி விடுகிறார். பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா மீராவின் கண்ணன் மீராவிடமே எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே வாழ்க நீயும் வளமுடன் என்றும் வாழ்கவே தனது முதல் பாடலை அவர் நினைத்திருந்தால் ஒரு ஜனரஞ்சக டூயட்டாகவோ, ஐட்டம் நம்பராகவோ எழுதி இருக்கலாம். தம் மனதில் இருக்கும் அன்பை, காதலை, பிரமத்தை, ப்யாரை எவ்வளவு பக்திபூர்வமாக சொல்லியிருக்கிறார் பாருங்கள். காரணம் திருமதி ஜீவா மிகுந்த தெய்வ நம்பிக்கை உடையவர்கள். பிரின்ஸ் ஜுவல்லரிகாரர்கள் வேண்டுமானால் "காதலை சொல்லிடும் வழி தங்கம்!" என்று World Gold Council tagline ஐ தாங்களே யோசித்து எழுதிய வரிகள் போல விளம்பரப்படுத்தி நம் தலையில் மிளகாய் அரைக்கலாம். மேதைகள் தமக்கே உரிய பாணியில், அசால்ட்டா சொல்லி விட்டு போய்க் கொண்டேயிருப்பார்கள். சூட்சம புத்தியுளளவர்களுக்கு புரியும். மற்றவர்கள் "என்னடே பாட்டு இது? என்று கொட்டாவி விட்டு கேண்டினில் பஜ்ஜி சாப்பிட்டு விட்டு வருவார்கள். ஆனால் தனது மனைவியின் மேல் உள்ள காதலை இளையராஜா பாடல் சொல்லிய விதம் ஒரு கவிஞரால் மட்டும் தான் முடியும் . நன்றி ரங்கா அவர்கள் முகநூல் தொகுப்பு:பிரசாந்த் Voir la traduction
  11. தன்னறம் -------------- நீங்கள் எல்லோரும் நலமா, ஒரு கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது, எப்படி எழுதுவது என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. நான் இதற்கு முன்னர் ஏதாவது கடிதம் எழுதி இருக்கின்றேனா என்றும் ஞாபகமில்லை. கடிதங்களை அவரே தான் எழுதினார். வந்த கடிதங்களை வாசித்தது கூட அவரேதான். சில வேளைகளில் சில கடிதங்களில் இருந்த ஒன்று இரண்டு சமாச்சாரங்களை சுருக்கமாகச் சொல்லியிருக்கின்றார். அவர் என்னை எதையும் வாசிக்க விடவில்லை என்றில்லை, உண்மையில் எதையாவது வாசி வாசி என்று எனக்கு அவர் சொல்லிக் கொண்டேயிருந்தார். நான் தான் எதையும் வாசிக்கவில்லை. எனக்கு ஒரு இடத்தில் இருந்து வாசிப்பதற்கு நேரம் இருக்கவில்லை என்று தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அது பொய், நானே உருவாக்கிய ஒரு காரணம் என்று இப்பொழுது எனக்குப் புரிகின்றது. இப்பொழுது இந்தச் சிறிய அறை தான் என்னுடைய உலகத்தின் மிகப் பெரும் பகுதி. இந்த அறையை சிறிது என்பதற்கு மேல் எப்படிச் சொல்வது என்றும் தெரியவில்லை. என்னுடைய வீட்டில், ஆமாம் அது என்னுடைய வீடு தான், ஐந்து அறைகள் இருந்தன. முதலில் நான்கு அறைகள் மட்டுமே இருந்தன, பின்னர் நாங்கள் ஒரு பெரிய அறையை வீட்டுடன் இணைத்துக் கட்டினோம். நான் சிறிய அறை, பெரிய அறை, சாமி அறை என்று இப்படித்தான் சொல்லுவேன். அவர் தான் யாரும் கேட்டால் ஒவ்வொரு அறைகளின் அளவையும் ஒரு பெருக்கல் வாய்ப்பாடு போல சொல்லுவார். இங்கு ஒவ்வொருவருக்கும் இதே போன்ற சிறிய அறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கட்டில், ஒரு வசதியான கதிரை, இரண்டு சின்ன அலுமாரிகள், சின்ன மேசை மற்றும் நானும் சேர்ந்து இந்த அறையை நிரப்பிவிட்டோம். ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் கொடுப்பார்கள். நான் அது வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். எதையாவது வாசி வாசி என்று அவர் சொன்னபடி புத்தகங்களை வாசித்துக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் என் அறையைத் திறந்தால், உங்கள் வலதுகைப் பக்கம் இருக்கும் அலுமாரிக்குள் இருப்பது அவ்வளவும் புத்தகங்களே. என்னுடைய சின்ன மகள் ஒவ்வொரு மாதமும் புதிது புதிதாக வாங்கி அடுக்கிவிடுகின்றார். எங்களுக்கு நான்கு பிள்ளைகள். இரண்டு ஆண் பிள்ளைகள், இரண்டு பெண்கள். ஆண், பெண், ஆண், பெண் என்று அடுத்தடுத்துப் பிறந்தார்கள். இப்பொழுது ஆறு பேரப் பிள்ளைகளும் இருக்கின்றார்கள். இங்கிருப்போர் பலருக்கும் இப்படியே பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் வெளியே அவரவர்களின் வீடுகளில் இருக்கின்றார்கள். பிள்ளைகள் மேல் கோபமோ அல்லது ஒரு மன விலக்கலோ இருந்தாலும் கூட, பேரப் பிள்ளைகளின் மேல் ஒரு இம்மியளவு கூட குறையாத பாசமே இங்கிருப்போர் எல்லோரிடமும் இருக்கின்றது. இந்த வராந்தாவில் முதல் அறையில் இருக்கும் அவர் ஒரு சரியான முசுடு. அவரின் மனைவி சில வருடங்களின் முன் போய்ச் சேர்ந்துவிட்டார். சில மாதங்களிலேயே அவரை அவரது பிள்ளைகள் இங்கு கொண்டு வந்து விட்டதாகச் சொல்கின்றார்கள். அவர் எவருடனும் முகம் கொடுத்து கதைப்பதில்லை. ஆனால் அவருடைய பேரப் பிள்ளைகள் வரும் நாட்களில் அவர் முழுதாக மாறி, மிகவும் உற்சாகமாக இருக்கின்றார். அப்படியான ஒரு நாளில் என்னைப் பார்த்து சிரித்தும் இருக்கின்றார். மீண்டும் கோவிட் வைரஸ் பரவுகின்றது என்று இப்பொழுது அறைக்குள்ளேயே இருக்கச் சொல்லிவிட்டார்கள். இந்த யன்னல் ஊடாக தெரிவது தான் நிலம், நீலம் என்றாகிப் போய்விட்டது. முன்னரும் முதலாவது கோவிட் தொற்றுக் காலத்தில் இப்படி இருந்திருக்கின்றேன். அப்பொழுது நான் இங்கு வந்து கொஞ்ச நாட்களே ஆகியிருந்தது. அந்த நாட்களில் அவருக்கு முன்னால் நான் போய்ச் சேர்ந்திருக்கலாமோ என்ற எண்ணம் சில தடவைகள் வந்தது. ஆனாலும் அவர் இவற்றை, இந்த தனிமையை தாங்கமாட்டார். எது நடக்க வேண்டுமோ, அதுவே நடந்தது போல. முதல் தொற்றுக் காலத்தில் அடிக்கடி இங்கு இழப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்பொழுது எனக்கு இங்கிருக்கும் எவரையும் அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் மனமெங்கும் ஒரு வலி இருந்து கொண்டிருந்தது. அது இல்லாமல் போய்க் கொண்டிருந்தவர்களைப் பற்றியதா, அல்லது என்னைப் பற்றியதா என்ற சந்தேகம் இன்றும் இருக்கின்றது. புத்தகங்கள் வாசித்தால் இப்படியான கேள்விகள் அதுவாகவே உள்ளுக்குள் வரும் போல. அவர் கதைக்கும் சில விடயங்கள், கேட்கும் சில கேள்விகள் அன்று எனக்கு விளங்காமல் முழித்துக் கொண்டு நின்றிருக்கின்றேன். அவர் வர வர கொஞ்சம் பைத்தியமாகிக் கொண்டிருக்கின்றாரோ என்று நான் நினைத்தாலும், நல்ல காலம், நான் அதை எவரிடமும் சொல்லவில்லை. சில சம்பவங்கள் நடந்த பின்னரே அவை நடந்து விட்டன என்ற உணர்வும், அதையொட்டிய விளைவுகளும் ஏற்படுகின்றது. அப்படியான சம்பவங்கள் உலகில் எப்போதும் நடந்து கொண்டேயிருக்கின்றன என்றோ, அவை எங்களுக்கும் நடக்கக் கூடுமோ என்ற பிரக்ஞை அற்றே மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர் இறந்தது, நான் இங்கே வந்தது மற்றும் இடையில் நடந்த சம்பவங்கள் இவை எதுவுமே புதிதல்ல. இவை ஆயிரம் ஆயிரம் தடவைகள் இப் பூமியில் இப்படியே ஏற்கனவே நடந்து இருக்கின்றன. முதுமை என்றாலே துன்பம் என்று நான் வாசித்த ஒரு புத்தகத்தில் இருந்தது. அப்படி ஒரேயடியாகச் சொல்லி விடலாம் என்று நான் நம்பவில்லை. ஆகக் குறைந்தது, அதை நான் இன்னமும் நம்பவில்லை. எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒரு கடமை எப்போதும் இருக்கின்றது தானே. முதுமையில், தனிமையில் கூட அப்படி ஒரு கடமை ஒன்று இருக்கத்தானே வேண்டும். நேற்று என்னைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார். அவர் வேறு ஒரு நாட்டில் இருந்து இங்கே விடுமுறைக்கு குடும்பத்துடன் வந்திருக்கின்றார். அப்படியே என்னையும் பார்க்க வந்தார். என்னை விட வயதில் மிகவும் இளையவர். உறவு முறையில் சொந்தக்காரரும் கூட. அவர்களின் வீட்டில் நாங்கள் இருவரும் இரண்டு தடவைகள் தங்கியிருக்கின்றோம். அப்பழுக்கற்ற ஒரு மனிதனாகவே அவர் தெரிந்தார். கோவிட் தொற்று என்பதால் ஒருவரையும் அனுமதிக்க முடியாது என்று சொல்லியிருக்கின்றார்கள். பின்னர் வேறு நாட்டில் இருந்து வந்தவர் என்று தெரிந்து, முகத்தை மறைத்து சில நிமிடங்கள் மட்டுமே உள்ளே அறைக்கு வர அனுமதி கொடுத்தார்கள். கதவைத் திறந்த அவர் அங்கேயே நின்று கொண்டிருந்தார். அப்படித்தான் நிற்கச் சொல்லியிருக்கின்றார்கள். நான் எதிர் மூலையில் நின்றேன். மௌனமாகவே நின்றவர் 'என்னைத் தெரிகின்றதா ............' என்று மெதுவாகக் கேட்டார். முகத்தின் பெரும்பகுதி மூடப்பட்டிருந்தாலும் அந்தக் கண்கள் எனக்கு நன்கு தெரிந்தவையே. ஆனாலும் அந்தக் கண்களை ஒரு கணத்துக்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. எனக்கு எவரின் பரிதாபமும் தேவையில்லை. 'அழும் போது ஒரு பெண் அபலையாகின்றாள்.................' என்ற ஒரு கவிதை வரியை என் கணவர் அவரது கடைசி நாட்களில் பல தடவைகள் சொல்லியிருக்கின்றார். அந்த முழுக் கவிதையையும் நான் இன்னமும் தேடி வாசிக்கவில்லை. நான்கு பிள்ளைகளும் அவர்களின் குடும்பங்களுடன் இடைக்கிடையே வந்து விட்டுப் போவார்கள். வரும் போது ஏதேதோ வாங்கி வருவார்கள். அவர்கள் வந்து போன பின், அவர்கள் வராமலே இருக்கலாம் என்றும் தோன்றுவதுண்டு. நான் சிறு வயதில் கோழிக்கு அடை வைப்பேன். ஒரு தடவை 15 முட்டைகள் வைத்து 14 குஞ்சுகள் பொரித்தன. அந்தப் 14 குஞ்சுகளையும் தாய்க் கோழி கவனமாகப் பார்த்துக் கொண்டது. ஒரு நாள் தாய்க் கோழி மட்டும் படுத்திருந்தது. ஒரு குஞ்சுகளையும் காணவில்லை. குஞ்சுகளுக்கு என்ன நடந்தது என்று பதறிப் போய் தாய்க் கோழிக்கு அருகே போனேன். மெதுவாக செட்டைக்குள்ளிருந்து ஒரு குஞ்சு எட்டிப் பார்த்தது. 14 குஞ்சுகளும் உள்ளேயே இருந்தன. எப்படி ஒரு கோழியால் இது முடிகின்றது என்று ஆச்சரியமாகவே இருந்தது. குஞ்சுகள் ஓரளவு வளர்ந்து, வீட்டு முற்றத்தில் நின்ற மாமரத்தில் அவைகளாகவே பறந்து ஏற ஆரம்பித்தவுடன், தாய்க் கோழி குஞ்சுகளை மெதுவாகக் கொத்திக் கலைக்க ஆரம்பித்தது. அதுவும் ஆச்சரியமே. நான் விரும்பியே இங்கே வந்தேன் என்று நேற்று என்னைப் பார்க்க வந்தவருக்கும் சொன்னேன். அவர் அதை நம்பவில்லை என்பதும் எனக்குத் தெரிந்தது. ஆனாலும் எனக்கென்று ஒரு கடமை இருக்கின்றதல்லவா. 'நீங்கள் இனிமேலும் கஷ்டப்படாமல் போங்கள்............. நான் இருக்கும் வரை பிள்ளைகளுக்கு குறை குற்றம் எதுவும் வராமல், என்னால் முடிந்த வரை, பார்த்துக் கொள்கின்றேன்..................' என்று அவருக்கு ஒரு வாக்கும் கொடுத்து இருக்கின்றேன்.
  12. "தன்னறம் " நல்ல தலைப்பு + நல்ல அனுபவமான கதை . .......! வீதியில் நேராய் ஓடும் ஒரு பெரிய தேரை ஒரு சிறிய மரக்கட்டை தடம்மாற்றி திருப்பி விடுதல் போல் வாழ்க்கையும் சிறு சிறு நிகழ்வுகளால் தடம்மாறிப் போய் விடுகின்றது .......! முதுமை வரும்போது மனம் உற்சாகமாய் இருந்தாலும் உடல் அதிகம் ஓய்வை தேடுவதால் மனமும் தானாகவே அமைதியாகி விடுகின்றது . .....! சமீபத்தில் சில நிகழ்வுகள் வீடியோவில் பார்த்தேன் . ......! உசைன்போல்ட் ..... ஓட்டத்தில் பல சாதனைகள் செய்த மனிதர் . ....... இப்போது வாசல்படி ஏறவே சிரமப்படுகிறார் .....கொஞ்சம் கூடுதலாக ஓடி விட்டார் போல......! முகமதலி (கசியஸ்கிலே) எவ்வளவோ போட்டிகளில் எதிரிகளைப் பந்தாடியவர் ....... இப்போது பக்கத்தில் இருவர் அவர் விழுந்து விடாமல் பிடித்துக் கொண்டு வர நடந்து வருகிறார் . ........ கொஞ்சம் கூடுதலாக குத்து வாங்கியிருக்கிறார் போல .......! சில யதார்த்தங்களை நாம் ஏற்றுக்கொண்டுதான் வாழ்க்கையை கடந்து போகணும் . ......!
  13. நாடு ஒன்று, பார்வை இரண்டு.
  14. எந்தப் பெரிய பதவியில் இருந்தாலும் தனது ஆரோக்கியத்திற்கு💪 உடற்பயிற்சி அல்லது வீட்டு, தோட்ட வேலைகள் செய்தே ஆகவேண்டும்.
  15. சஜீத்…. மழைக்குக் கூட, பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்காத ஆள் போலை இருக்கு. 😂
  16. நாமலை மட்டுமல்ல...சஜீத்தின் ...சேர்டிபிக்கட்டையும் செக் பண்ணவேணும்.
  17. வங்கி முகாமையாளர் உயர் அதிகாரிகள் ஒரு சிலரை இலங்கையில் தெரிந்து இருக்கின்றேன் அவர்களுக்கு உடம்பு வளையாது 😂 ஏதாவது போய் எடுத்து வர கொடுக்க Peon இருக்கிறார்.
  18. அண்மைக்காலங்களில் சிங்களம் தமிழர்களை கடற்தொழில் அமைச்சர்களாக நியமிக்கும் போதே பல சூட்சுமங்கள் விளங்கிக்கொள்ளலாம். ஒரு காலத்தில் நீதி அமைச்சராக ஒரு தமிழர் நியமிக்கப்பட்டார்.அப்போதுதான் தமிழருக்கெதிரான பல அநியாயங்கள் நடந்தன. தமிழர் பதவிகளை முன்னணியாக வைத்து ஈழத்தமிழர்களை அழிப்பதில் சிங்களம் வலு கில்லாடிகள்..சேர் பொன் இராமநாதன் தொடக்கம் கதிர்காமர் ஊடாக இன்றைய கருணா,சம்பந்தன்,சுமந்திரன் வரை அந்த யுக்தியை பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.
  19. இங்கு எல்லை தாண்டுவதை விட உலகில் தடை செய்யப்பட்ட மீன் பிடி முறையே பாரிய பிரச்சனை அந்த முறை மூலம் அவர்கள் நாட்டுக்குள் அண்டை மாநில மீனவர்களை இதே வேதாரணியம் மீனவர்கள் சிறை பிடித்து பாரிய சர்ச்சைகள் உருவாகுவது வழமை ஆனால் வேண்டும் என்றே அந்த செய்திகள் மழுங்கடிக்கப்பட்டு போகின்றன . இந்த விளக்கம் கூட தெரியாத வகையில் இலங்கை மீன்பிடி அமைச்சர் இருக்கிறார் . பி பி சி தமிழ் இங்கிலாந்து வரி பணத்தில் வாழ்ந்து கொண்டு இந்திய மத்திய அரசுக்கு ஆதரவாக செய்தி வெளியிடும் ஊது குழல் அவர்களிடம் உண்மை வருமா ? செய்தி இருட்டடிப்பு தாண்டி உண்மை செய்திகள் அத்தி பூத்தது போல் வரும் அதில் ஒன்று கிழே இணைக்கிறேன் . இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் மீன்பிடிப்பது தொடர்பாக அண்மைக் காலங்களில் மீனவர்களுக்கிடையே நிகழ்ந்துவரும் மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை கொள்ளச் செய்கிறது. ஒரே நாட்டின் அண்டை மாநில, மாவட்ட மீனவர்களுக்குள்ளேயே ஒற்றுமையோ, விட்டுக் கொடுத்தலோ இல்லாத நிலையில், அயல்நாட்டு மீனவர்கள் விட்டுக்கொடுத்து அவர்களது கடல் வளத்தை நம்மோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? அண்மையில் கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வெளிமாவட்ட மீனவர்கள் 26 பேரையும், அவர்களது 8 விசைப் படகுகளையும் வேதாரண்யம் மீனவர்கள் பிடித்து ஆறுகாட்டுத்துறை படகு துறையில் சிறை வைத்து விட்டனர். காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் 2 படகுகளில் ஆந்திர மாநில கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அம்மாநில மீனவர்கள் 50-க்கும் மேற்பட்டோரால் தாக்கப்பட்டுள்ளனர். படகுகளை நோக்கி நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. வாக்கிடாக்கி, கைப்பேசிகள் மற்றும் மீன்பிடி வலைகள் பறிக்கப்பட்டுள்ளன. மேலும், மீனவர்களை சிறை பிடித்துச் சென்றுவிட்டனர். சமாதான பேச்சுக்குப் பிறகு மீனவர்கள் மட்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தூத்துக்குடி கடல் பகுதியில் நாட்டுப் படகு மற்றும் விசைப் படகு மீனவர்களுக்கு இடையே அவ்வப்போது தொழில் போட்டியால் மோதல் சம்பவங்கள் நிகழ்வது வாடிக்கையாக மாறி இருக்கிறது. கடந்த 2024 மார்ச்சில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் கேரள மீனவர்கள் தூத்துக்குடி கடல் பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி, அங்குள்ள மீனவர்களால் சிறை பிடிக்கப்பட்டனர். கிழக்குக் கடற்கரையில் மட்டும்தான் இந்த மோதல் என்றில்லை. மேற்குக் கடற்கரையில் கர்நாடக மீனவர்கள் கோவா கடல் பகுதியில் அத்துமீறி புகுந்து மீன் பிடித்து வருவதாகக் கூறி மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த 2022 முதல் 2024 வரையில் அவ்வாறான மோதல் சம்பவங்கள் தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் எல்லாவற்றுக்கும் கூறப்படும் ஒரே காரணம் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாகக் கூறுவதுதான் வேடிக்கை. நாட்டைச் சுற்றியுள்ள வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் ஆகிய மூன்று கடல் பகுதிகளிலும் சுமார் 12 கடல் மைல் பகுதிக்கு முழுமையான இறையாண்மை மத்திய அரசுக்குத்தான் உண்டு. சுமார் 200 கடல் மைல் பகுதி வரையில் உள்ள பொருளாதார வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாநில அரசுகள் அருகில் உள்ள கடல் பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு போன்றவற்றை மட்டுமே செய்துகொள்ள முடியும். ஒரு மாவட்ட, மாநில மீனவர்கள் கடலைச் சொந்தம் கொண்டாடிக் கொண்டு மற்ற மீனவர்களை தங்களது எல்லைகளுக்குள் வரக் கூடாது என சட்டபூர்வமாக தடுக்க முடியாது. ஆனால், மீனவர்கள் அவரவர் பயன்பாட்டின் அடிப்படையில் செயற்கையான எல்லை ஒன்றை வகுத்துக் கொண்டு மோதிக் கொள்வது வாடிக்கையாகி வருவது வருத்தமளிக்கிறது. நாட்டின் கடல் பகுதியை எல்லையாகக் கொண்ட 9 மாநிலங்களிலும் மீனவர்கள் எதிர்கொள்ளும் இந்த மோதல்களுக்கு முக்கியக் காரணம், கடலில் மீன் வளம் குறைந்து வருவதும், மாறி வரும் நவீன மீன்பிடி தொழில்நுட்ப முறைகளும்தான். அதிவேக விசைப் படகுகள் மற்றும் இரட்டைமடி வலைதான் பிரச்னையின் மையப்புள்ளி. ஆந்திர மீனவர்கள் 200 முதல் 300 குதிரைத் திறன் கொண்ட என்ஜின்களை மீன்பிடி படகுகளில் பயன்படுத்துகின்றனர். ஆனால், காரைக்கால் மீனவர்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 600 குதிரைத் திறன் கொண்ட என்ஜின்களை பயன்படுத்துகின்றனர். இதனால் வலைகள் மற்றும் மீன் வளம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதாக ஆந்திர மீனவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலை பயன்பாடு நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. இதே காரணங்களால் தமிழக கடல் பகுதியில் மீன் வளம் குறைந்துள்ளது. அதனால்தான், ராமேசுவரம் மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இங்கு மீன் வளம் குறைந்துள்ள நிலையில், எஞ்சி இருக்கும் கொஞ்ச வளத்தையும் அபகரித்துச் செல்ல வரும் குளச்சல் மற்றும் கேரள மீனவர்களைச் சிறைபிடிக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. ஆந்திர கடல் பகுதியிலும் மீன் வளம் குறைந்துவிட்டதாலும், அடிக்கடி புயல் தாக்குதல் இருப்பதாலும் அம்மாநில மீனவர்கள் கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். ஆதலால், அண்டை மாநில மீனவர்கள் அங்கு வந்து மீன் பிடிப்பது உள்ளூர் மீனவர்களின் கோபத்தை அதிகரிக்கச் செய்கிறது. தடை செய்யப்பட்ட என்ஜின் மற்றும் வலைகளை மீனவர்கள் தொடர்ந்து பயன்படுத்துவதைத் தடுக்க மீன்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாலும், அவற்றால் பயன் எதுவும் ஏற்படவில்லை என்பதைக் கள நிலவரங்கள் உணர்த்துகின்றன. கடலோர காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்புக் குழுமம் கண்காணிப்புப் பணிகளை முறையாக மேற்கொண்டால் இந்த மோதல்களைத் தடுக்க முடியும். மோதல்களுக்கான காரணங்கள் கண்கூடு. அவற்றைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. https://www.dinamani.com/editorial/2025/Oct/07/marine-resources-are-dwindling
  20. எனக்கும்… ஶ்ரீலங்காவுக்கு “கொலிடே” போற ஐடியா இருக்கு. 😂 எதற்கும் @satan ஐ கேட்டுப் பார்ப்போம். 🤣
  21. அஸ்கு, புஸ்கு…😂 விசாரிப்பவர் தன்னை வெளிப்படுத்த வேணும். பிறகு நான் எப்படி கொலிடே போறது?😂 தக்க காரணமும் காட்ட வேண்டி வரலாம். பொதுநல காரணத்தை காட்டி ஊடகம், யூடியூப்பர் யாராவதுகேட்கலாம். லெட்டர் வேணும் எண்டால் அடிச்சுத்தரலாம்😂.
  22. அரசதிகாரமே வேண்டாம் என துறவறம் போனவரை வைத்து ....
  23. ஆம், பாரை மீன், ஏனெனில் பரந்து பட்ட அதன் உருவஅமைப்பு. பாறை மீன் - நேரடியாக மொழி பெயர்த்தால் - stone fish - இது மிகவும் விடம் உள்ள மீன், பாறையோடு பாறையாக பாறை தன்மை உள்ள கடலில், கடற்கரையில் மறைந்த்து இருப்பது. (இந்த மீன்கள் ஈரலிப்பு உள்ள இடத்தில் நீண்ட நேரம் இருக்க கூடியவை) அதனால், பாறை த்தன்மை உள்ள கடற்கரையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், அதன் முள் குத்தும் போது ஊசியினால் மருந்த்து ஏற்றுவது போல விஷத்தை ஏற்றும் இதன் விளைவுகள் - இறப்பு, அல்லது அங்கம் (அல்லது உடல் பகுதி) அகற்ற படவேண்டிய நிலை பொதுவாக. அருமையாகவே, இவை தவிர்க்கப்படுவது.
  24. எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை, அமெரிக்காவில் (அல்லது எந்த மேற்கு நாட்டிலும்) வருமானம் இல்லா விட்டால் வாழ முடியாது. வருமானம் வேலையின் மூலம் பெற்றுக் கொள்ள முடியாதோர், அல்லது வரும் வருமானம் போதாமல் இருப்போர் ஆகிய தரப்பினருக்காக 60 களில் உருவாக்கப் பட்ட SNAP உணவுத் திட்டத்தைப் பற்றி அபிலாஷ் நுனிப்புல் மேய்ந்திருக்கிறார். இது பணவீக்கம் அதிகரித்தமையால் மக்கள் பட்டினி கிடக்க ஆரம்பித்த பின்னர் உருவான திட்டமல்ல. வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்போருக்கான உதவித் திட்டம் அவ்வளவு தான். வறுமை இல்லையானால் பெற்றுக் கொள்ள முடியாது. மற்றபடி இது மட்டுமே அமெரிக்காவில் உணவு உதவி புரியும் திட்டம் என்றும் சொல்ல முடியாது. பல்வேறு தொண்டு அமைப்புகளும், உள்ளூர் அரசு அமைப்புகளும், பள்ளிக் கூடங்களும் கூட குழந்தைகள் பட்டினி கிடக்காமல் இருக்க திட்டங்கள் வைத்திருக்கிறார்கள். தெருவில் நிற்கும் இந்தியர்களை மாடமாளிகையில் வாழும் இந்தியர்கள் பார்த்துக் கொள்வதை விட சிறப்பாக இங்கே வாழும் மக்கள் இத்தகைய திட்டங்களுக்கு நன்கொடை வழங்கி ஏனையோரின் பசி தீர்க்க உதவுகிறார்கள்.
  25. அப்படி வாங்கினால் இரண்டு விடயங்களை நிச்சயம் செய்யுங்கள். பள பள (satin) வெள்ளையாக இருக்கும் உள் வர்ணத்தை off white ஆக, அல்லது வேறொரு வெளிர்நிறமாக மாற்றி விடுங்கள். தரையை இப்படி வளுக்கல் தரையாக வைத்திருக்காமல், எங்கள் ஊர் லேலண்ட் பஸ்களில் இருக்கும் உராய்வு கொண்ட (friction) தரையாக மாற்றுங்கள். இல்லா விட்டால், கனடா இலண்டனில் இருந்து இதற்காகவே கூட்டமாக பிளைற் பிடித்து வந்து படகில் வழுக்கி விழுந்த பின்னர் நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போடுவார்கள்😂. நீங்கள் நஷ்ட ஈடு கொடுக்க இயலாமல் படகை நீங்களே மூழ்கடித்து விட்டு அதற்குரிய காப்புறுதியை எடுத்துக் கொண்டு பிரிட்டனுக்கு வந்து விட வேண்டியிருக்கும்! பிகு: இப்படித் தப்பிப் போவது தவறென்று யோசிக்காதீர்கள்! பிரிட்டன் சட்டங்களில் இதற்குரிய ஓட்டைகள் சலுகைகள் உங்களுக்கு இருக்கும், யாழ் களத்திலேயே உங்களுக்கு லோயரைப் பிடிக்கலாம்😎!
  26. முதல் வேலையாக இவரது Facebook profile இனை ரிப்போர்ட் பண்ணியுள்ளேன். இதனை ஒரு 100 பேர் செய்தால், முகனூல் நிர்வாகம் இவரது கணக்கை முடக்கும் ( IP ban செய்யும் சில வேளை)
  27. ஒரு ஆங்கில கவிதை. நான் சிறுவனாக இருந்தபோது, இந்த உலகை மாற்ற ஆசைப்பட்டேன், நடக்கவில்லை. இளைஞனான போது ஊரைத் திருத்த முனைந்தேன், முடியவில்லை. குடும்பத் தலைவன் ஆனபோது, குடும்பத்தையாவது திருத்த விழைந்தேன், இயலவில்லை. தந்தையான போது, பிள்ளைகளை மாற்றிவிட துடித்தேன், எவரும் என் பேச்சை கேட்கவில்லை. இவ்வளவு முயற்சிகள் செய்ததற்குப் பதிலாக, "நான் கொஞ்சம் மாறியிருக்கலாம்" என்று மரணப் படுக்கையில் தான் புரிகின்றது எனக்கு, ஆனால் நேரம் கடந்துவிட்டது..... ----------------------------------------------------------------------------------------யாஸிர். இடுகையிட்டது யாஸிர் அசனப்பா. https://civilyasir.blogspot.com/2011/09/blog-post_18.html
  28. இந்தப் படகுசேவையில் கடந்த வருடம் நயினாதீவு போயிருந்தேன். அளவு கணக்கில்லாமல் மக்களை ஏற்றுகிறார்கள். ஏதாவது ஒரு விபத்து நடந்தால் கீழ்த் தட்டில் இருப்பவர்கள் உயிர் பிழைப்பது அருமையே. இதுவரை இதுபற்றி யாருமே அலட்டிக் கொள்ளாதது வியப்பாக உள்ளது. நயனை அம்மாளும் நயினை புத்தரும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் மக்கள் போய் வருகிறார்களோ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.