Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    20007
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    87986
    Posts
  3. மோகன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    3
    Points
    9997
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/25/25 in all areas

  1. வணக்கம் உறவுகளே 🙏 எபாபடியிருக்கிறீங்கள் எனது பழைய ஐடி நித்திலா 2009ம் ஆண்டுக்கு பிறகு இன்றுதான் மீண்டும் உறுப்பினராக இங்க வருகிறேன், வாசகியாக பலமுறை வந்து போயிருக்கிறன். எத்தினை பேர் ஞாபகம் வைச்சிருக்கிறீங்களோ தெரியாது. முதல் பதிவிலேயே எழுத்துப்பிழை 😊
  2. Part 1 http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part1.pdf Part 2 http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part2.pdf Part 3 http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part3.pdf இணைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளது.
  3. உணர்வுபூர்வமான பாடல் ...பாடலுக்கும் வெளியீட்டுக்கும் நன்றி மாவீரர் தெய்வங்களுக்கு வீர வணக்கம்
  4. இயலாமை உடைய நபர்கள் தொடர்பில் அனுதாபப்படத் தேவையில்லை, அவர்கள் சுயமாகச் செயற்படுவதற்குத் தேவையான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதே அவசியமானது – தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாந்து 25 Nov, 2025 | 05:23 PM இயலாமை உடைய நபர்கள் தொடர்பில் அனுதாபப்படவேண்டிய அவசியமில்லை, அவ்வாறு அனுதாபப்படுவது அவர்களை ஒரு விதத்தில் அவமரியாதைப் படுத்துவதுபோன்றாகும். இயலாமை உடைய நபர்கள் தமது கடமைகளைச் சுயமாக நிறைவேற்றத் தேவையான சூழலை உருவாக்குவதையே செய்ய வேண்டியிருப்பதாக தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாந்து தெரிவித்தார். இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக அமைச்சுக்களில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள செயலமர்வுத் தொடரில், முதலாவது செயலமர்வு தொழில் அமைச்சில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) அனுசரணையுடன், தொழில் அமைச்சு மற்றும் நிறுவனங்களில் மக்கள் தொடர்புப் பிரிவில் பணிபுரியும் பணியாளர்களை இலக்காகக் கொண்டு, இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தினால் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கமைய, இயலாமை உடைய நபர்கள் பற்றிய விழிப்புணர்வுக் கருத்துக்கள் சமூகமயமாக்கப்படும் வரை, சட்டதிட்டங்கள் மூலம் ஒருங்கிணைப்பை அடைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அமைச்சர் அனில் ஜயந்த குறிப்பிட்டார். சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் மூலம் மாத்திரம் இந்தக் குழுவினருக்குத் தேவையான ஆதரவை வழங்குவது போதுமானதாக இருக்காது என்றும், மனப்பான்மையில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் இயலாமை உடைய நபர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். தனியார் துறையிலும் இயலாமை உடைய நபர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இங்கு உரையாற்றிய இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா, இயலாமை உடைய நபர்கள் வேலைசெய்யக் கூடிய வகையில் பணியிடங்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என்றார். இதைச் செயல்படுத்த, முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், இந்த நாட்டின் பொருளாதார செயல்பாட்டில் இயலாமை உடைய நபர்கள் பங்கேற்பதற்கான அனைத்து தடைகளும் நீக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதன் ஊடாக இயலாமை உடைய நபர்களும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் ஓர் அங்கமாக இருப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார். இயலாமை உடைய நபர்கள் ஏனையவர்களைச் சார்ந்தவர்களாக அன்றி, பொருளாதார செயல்முறைக்குப் பங்களிப்பவர்களாக இருக்கும் நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இயலாமை உடைய நபர்களைக் கொண்ட வளவாளர்களினால் குறித்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டது. மேலும் இந்தச் செயலமர்வில் வளவாளர்களாகக் கலந்துகொண்ட இயலாமை உடைய நபர்கள் தங்கள் அனுபவங்களையும், தங்கள் பணியிடங்களில் எதிர்கொண்ட பிரச்சினைகளையும், வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் அவர்கள் எதிர்கொண்ட சவால்களையும் பகிர்ந்து கொண்டனர். எதிர்காலத்தில் அனைத்து அமைச்சுக்களையும் இலக்காகக் கொண்டு இதுபோன்ற செயலமர்வுகளை நடத்துவதற்கு இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் திட்டமிட்டுள்ளது. இச்செயலமர்வில் தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.பியதிஸ்ஸ, இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் அதிகாரிகள், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் இந்ரக உபேசேகர, இத்திட்டத்தின் அதிகாரி அனோஜிதா சிவாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள், இயலாமை உடைய நபர்களுக்கான அமைப்புக்கள் மற்றும் அவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/231424
  5. அததெரண கருத்துப்படம். அது குறி சுடுவது இல்லை அண்ணை! நலமடித்தல்!! கதறக்கதற கிட்டி நலமா?! இல்லை மருத்துவர் மூலமாக நோகாமல் விறைப்பூசியடித்து எடுக்கப்போறாங்களா தெரியல!
  6. யாழ்பாணத்தில் சுவாமி ஞானபிரகாசர் பிறப்பின் முப்பொன் விழா
  7. இந்த போர் நிற்காது என கருதுகிறேன், மேற்கு உக்கிரேனிற்கு போருக்கு தேவையான ஆயுத பண உதவியினை செய்கிறது, ஆனால் அதனை ஐரோப்பிய ஒன்றியத்திலோ அல்லது நேட்டோவிலோ ஏன் தாமாக இணைக்க முன்வரவில்லை (ஆனால் பெயரளவில் உக்கிரேனிற்கு தேவையான அனைத்தையும் செய்வதாக கூறுகிறார்கள், உக்கிரேனிற்கு தேவையானது போரா?)? போர் முடிவடைய வேண்டுமாயின் இரஸ்சிய வளங்கள் மீதான நலனை எதிர்நோக்கும் பெரு நிறுவனங்களின் நலன் பேணப்படும் வகையில் இரஸ்சியா இறங்கி வரவேண்டும் அல்லது போரை தொடரவே சம்பந்தப்பட்ட தரப்புக்கள் விரும்பலாம். இரஸ்சியா 2026 பொருளாதார ரீதியாக நெருக்கடி நிலையினை எட்டும் என கூறுகிறார்கள் குறித்த தரப்பினர், அதற்கு ஏற்றது போல இராணுவத்திற்கான சலுகைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். இரஸ்சியாவினை உடைக்கிறோம் என கூறி பிள்ளையார் பிடிக்க போய் குரங்கானது போல எதோ செய்யாமல் இருக்கமாட்டார்கள் போல உள்ளது🤣.
  8. 🤣ஆம் உறவே! அநுர பால்குடி. "ஆணைப் பெண்ணாக மாற்றுவது தவிர எல்லாம் செய்யும் வல்லமை பெற்ற" அதிபர் பதவியில் இருந்த படி, ஆனந்த சுதாகரனைக் கூட விடுவிக்காமல் இருக்கும் அநுர, நீங்கள் சொன்னது போல இனவாதியல்ல! இது வெறும் அலகு குத்திய காவடியல்ல உறவே, அலகை "வேறெங்கோ" குத்திக் கொண்டு தூக்கும் அபூர்வ காவடி😎!
  9. 2009 போர் நிறைவடைந்தது. இப்போது ஆண்டு 2025 நிறைவடையும் தருவாயில் உள்ளது. இலங்கை அரசின் அனுமதியுடன் புத்தபகவான் வடக்கு, கிழக்கில் சிலைகளாகவும், விகாரைகளாகவும் வியாபிக்கின்றார். தொல்பொருள் திணைக்களம் காலங்காலமாக தமிழர் உரிமைகொண்டாடும் இடங்களை கையகப்படுத்துகின்றது. இலங்கை அரசு தரப்பில் யாராவது அனைத்து மக்கள் நலன்களையும் கருத்திற்கொண்டு அக்கறையுடன்/கரிசனையுடன் இப்படியான விடயங்களை கையாள்வதாகவோ கண்டுகொள்வதாகவோ தெரியவில்லை. யதார்த்தம் இலங்கையில் இவ்வாறு காணப்படுகையில் வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் தமது இருப்பை, நலன்களை உறுதிப்படுத்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள். விடுதலை புலிகளை அனைத்து தமிழர்களும் ஆதரித்தார்களா ஆதரிக்கின்றார்களா என்பதற்கு அப்பால் அவர்களால் அடையாளப்படுத்தப்பட்ட தேசியகொடி ஒரு வெளிநாட்டு மாநகரசபையின் அங்கீகாரத்தை பெறுவதற்கு பலர் உழைத்து வெற்றி பெற்றுள்ளார்கள். இது தவறான விடயமாக தெரியவில்லை.
  10. ஆரா ரோ ஆரிரரோ.. கண்ண தொறக்கணும் சாமி.. கைய புடிக்கணும் சாமி ..
  11. நண்பர்களே, 2021 செப்டம்பர் மாதம் என் வாழ்க்கை ஒரு கணநேரத்தில் தகர்ந்து போனது. ஒரு வழக்கமான மருத்துவப் பரிசோதனையில் அன்று ஒரு பயங்கரமான நோயைக் கண்டறிவதாக மாறியது. Acute Lymphoblastic Leukaemia (ALL) எனும் இரத்த புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. மருத்துவராகிய நான் உண்மையை அறிந்திருந்தேன்: Donor (தானமளிப்பவர்) ஒருவரிடமிருந்து Stem cell transplant சிகிச்சை இல்லாமல் முழு குணமடைவது கடினம். என் சகோதரரும் குடும்பத்தினரும் உடனடியாக சோதனை செய்து கொண்டனர், ஆனால் யாரும் முழு பொருத்தமாக இல்லை. அதிக அளவு chemotherapy மற்றும் radiotherapy சிகிச்சைகள் பழுதடைந்த என் bone marrow களை முற்றிலுமாக அழித்தே விடும். பிறகு Stem cell சிகிச்சை மூலமாக முழுமையாக குணமடைய முடியும். Stem cells (ஸ்டெம் செல்கள்) என்பது உடலின் “ஆரம்ப நிலை செல்கள்”. இவை எந்த விதமான செல்களாகவும் (ரத்த அணுக்கள், நோய் எதிர்ப்பு செல்கள், திசு செல்கள்…) மாறும் திறன் கொண்டவை. பொருத்தமான donor ஒருவரிடமிருந்து என்னுடலில் பொருந்தத்தக்க Stem cells களிற்காக காத்திருந்த ஒவ்வொரு நாளும் மரணத்தின் விளிம்பை அண்மித்துக் கொண்டிருத்ததை நன்றாகவே உணர்ந்தேன். நம்பிக்கை உலகளாவிய தானமளிப்பவர் பட்டியல் (Donor registry) -களுக்கு திரும்பியது. பொதுவாக பொருத்தம் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களிடம் தான் கிடைக்கும். நான் ஒரு இலங்கைத் தமிழர். Donor registry-களில் எமது சமூகம் மிகக் குறைவாகவே பதிவு செய்திருக்கிறது. உலகெங்கிலும் உள்ள சிறுபான்மை இனத்தவருக்கும், பழங்குடி மக்களுக்கும் இதே கசப்பான உண்மை தான்: donor-கள் மிகக் குறைவு, விழிப்புணர்வு இல்லாததால் பல உயிர்கள் தவிக்கின்றன. வாரங்கள் ஊர்ந்தன. பின்பு 2021 இறுதியில், ஒரு 100% பொருத்தம்! அமெரிக்காவில் வசிக்கும் ஒரு அந்நியப் பெண்மணி, பல வருடங்களுக்கு முன்பே registry-யில் பதிவு செய்திருந்தார். அவரது இரத்த HLA எனும் மரபணுக்கள் என்னுடையவற்றின் சரியான பிரதிபலிப்பு. எனது குடும்பத்திற்கு நிம்மதியையும் நம்பிக்கையையும் மீளவும் கொண்டு வந்தது. தயக்கமின்றி அவர் ஒப்புக் கொண்டார். தானம் செய்வது? ரத்தம் கொடுப்பது போலத்தான் எளிமையானது. சில நாட்கள் ஊசி போட்டு stem cell-களை அதிகரித்து, பின்பு மருத்துவமனையில் ஒரு நாள் செலவழித்து இரத்தத்திலிருந்து எடுத்துக் கொள்வார்கள். பெரும்பாலான donor-கள் ஒன்று இரண்டு நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார்கள் - சற்று சோர்வு மட்டுமே. ஆனால் இந்த தானம், நோயாளிக்கு அவர்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும். Registry-யில் சேர்வது மிக எளிமை: ஒரு கன்னத்துச் சோதனை (cheek swab), வாய் உட்புறக் கன்னத்தைத் துடைத்து DNA சேகரிக்கும் முறை மட்டுமே. பல வருடங்கள் அல்லது பல தசாப்தங்களுக்குப் பிறகு கூட நீங்கள் யாருக்காவது பொருத்தம் ஆகலாம். அப்போதுதான் உண்மையான உறுதிப்பாடு தேவைப்படும். மார்ச் 2022: நான்கு விலைமதிப்பற்ற பைகளில் அவரது stem cell-கள் என்னிடம் வந்து சேர்ந்தன. திரவ வடிவிலான புதிய உயிர். என் நரம்புகளில் செலுத்தப்பட்டு, மெதுவாக வேலை செய்ய ஆரம்பித்தன. குணமடைவது மிக மெதுவாக இருந்தது - தொற்று நோய்களும் பின்னடைவுகளும் நடந்தன. இன்று 2025: நான் என் குடும்பத்திடமும், வேலையிடத்திலும், வாழ்க்கையிலும் மீண்டும் அடியெடுத்து வைத்தேன். என் donor-க்கு தைரியமும், நேரமும், இதயமும் தேவைப்பட்டது. ஆனால் எனது உயிரைக் காப்பாற்றிய அந்த உன்னத ஜீவன் யார்? விதிகள் காரணமாக பல வருடங்கள் அவர் அடையாளம் மறைக்கப்பட்டு வைத்திருக்கும். 2025-ல் ஒஸ்ரேலியாவில் நடந்த ஒரு தொண்டு நிகழ்ச்சியில் திருப்பம்: ஒரு பெண்மணி என் நண்பரிடம் வந்து, “நான் பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் stem cell தானம் செய்தேன். எனது பெறுபவர் எனது வயதுடையவர், என் இனத்தைச் சேர்ந்தவர், ஒஸ்ரேலியாவில் வசிப்பவர் என்று மட்டும் கூறினார்கள். அவர் உயிருடன் இருக்கிறாரா என்றே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பேன்” என்றார். நண்பர் அதிர்ச்சி அடைந்தார். விவரங்கள் அனைத்தும் பொருந்தின. தேதிகள், இரத்த வகை, கால அட்டவணை - எல்லாம் பொருந்தியது! இருவரது சம்மதத்துடன் என் நண்பர் எங்களை இணைத்தார். அந்த பெண் 2008-ல் அவரது 4 வயது மருமகனுக்கு stem cell transplant தேவைப்பட்டபோது registry-யில் சேர்ந்திருந்தார். எல்லா முயற்சிகளையும் செய்தும், அந்தக் குழந்தை உயிர் பிழைக்கவில்லை. 14 வருடங்கள் கழித்து அழைப்பு வந்தது - வேறொருவருக்கு அவர் stem cells பொருத்தம். நாங்கள் சந்தித்தோம். அணைத்துக் கொண்டோம். கண்ணீர் வழிந்தது. எனக்கு உயிர் கொடுத்த கையை இறுதியாகப் பிடித்தேன். சகோதர-சகோதரி சந்திப்பது போல இருந்தது. தன்னலமற்ற தானம் காரணமாக பிறந்த, தற்செயலால் இணைந்த, அறிவியலால் உறுதிப்படுத்தப்பட்ட பிணைப்பு. பிரியும்போது அவர் சொன்னது: “பின்னால் திரும்பிப் பார்க்காதே. மகிழ்ச்சியோடு எதிர்காலத்தை பார்.” ஒரு தாய் மகனிடம் சொல்வது போல இருந்தது. இது என் வாழ்க்கையின் அதிசயம் மட்டுமல்ல - இது அனைவருக்கும் அழைப்பு. ஒரு cheek swab-ஆல் அவர் என் உயிரைக் காப்பாற்றினார். நீங்களும் வேறொருவர் உயிர் காப்பாற்றுவீர்களா? ஒரு கன்னத்துச் சோதனை மட்டுமே போதும் registry-யில் சேர. பல வருடங்கள் கழித்து கூட நீங்கள் யாருடைய உயிரையாவது காப்பாற்றலாம். Stem cell தானத்தில் இனப் பொருத்தம் அரிது. நம் விழிப்புணர்வே சக்தி. யாரோ ஒரு நபர் வாழ்க்கை கதையில் நாயகி அல்லது நாயகனாகுங்கள். இன்றே பதிவு செய்யுங்கள். • US: nmdp.org • Australia: stemcelldonors.org.au • Canada: blood.ca/en/stemcells • UK: blood.co.uk/stem-cell-donor-registry/ • France: dondemoelleosseuse.fr • Germany: dkms.de • Sri Lanka: praana.lk • India: datri.org இந்த கதை - என் தானமளிப்பவரின் மருமகனுக்கு சமர்ப்பணம். அந்தக் குழந்தை விட்டுச் சென்ற நினைவு - என்றென்றும் நம்பிக்கையாக வாழ்கிறது. :J, Australia.
  12. 13க்கு குறி சுடப் போறாங்களோ? ஏன் இந்தியா எட்டியும் பார்க்கவில்லை?
  13. இது விதியின் உருட்டு ........! 😂
  14. அரசியல் தீர்வு என்பது முழுமையாய் ஏமாற்று பொருளாய் மாறிய பின் .உங்கள் பார்வையில் எப்படி நடந்து கொண்டு இருந்தால் நல்லது நடந்து கொண்டு இருக்கும் அந்த தீவில் ?
  15. மஹிந்த பீடத்தின் தலைவர் என்றால் இப்படித்தான் இருக்கும். நாட்டிலும் வெளிநாட்டிலும் கொடிகட்டிப்பறக்கிறது அவரது பெயர். போதாதற்கு அவர் விழுந்தால், காவி கழன்று விழுந்து விடுமோ என்று இத்தனை காவலர்கள் பாதுகாப்பு வேலியை பிடித்தவண்ணம். அவரோ நிறை தண்ணியில்.
  16. நீங்கள் இப்படிஎழுதுவதாலும் ஏதாவது நன்மை உண்டா...எனாவெ அவனவன் செயல்பாட்டினால் ஏதோ முடிந்தளவு செய்கின்றார்கள் ... நன்மை கிடைக்குதோ இல்லையோ ...எமக்காக உயிர்விட்டவர்களுக்கு அவர்கள் செய்யும் பிரதியுபகாரம் நன்மை செய்வாரென்று தூக்கிபிடித்த அனுரவால் என்ன செய்யமுடிந்தது..திரும்ப புத்தர் சிலயைத்தான் வைக்கமுடிந்தது ....உவ்வளவும் செய்கின்றார் எனத் தூக்கிப்பிடித்த அனுரவுக்கு ..சிங்களவர் செய்தது என்ன ..லட்சக்கணக்கில் கூடி ஆதரவு தெரிவித்துள்ளார்கள் ... இங்கு நாம் என்ன செய்கின்றோ ம் என்றூ செய்வது எல்லாவற்றிர்கும் முட்டையில் மயிர் புடுங்க யோசிக்கின்றோம் ..இந்த சிந்தனை மாறினாலே ஓரளவு நின்மதி கிடைக்கும்...முதலில் தமிழனாக யோசிக்கவேண்டும்
  17. சுவியர், காணொளி.... டக்கென்று முடிந்து விட்டது. 😂 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.