1) லெப். ஜோன்சன் (ஜெயா ஜுனைதீன்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 22.08.1963 — 30.11.1985 படையினரைத் தாக்கிவிட்டு சிறையில் இருந்து தப்பிச் செல்கையில் சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. தமிழீழ விடுதலைப்போரில் களச்சாவான முதலாவது இசுலாமிய தமிழ் மாவீரர் இவராவார். 2) வீரவேங்கை லத்தீப் (முகமது அலியார் முகமது லத்தீப் ஒல்லிக்குளம்) காத்தான்குடி, மட்டக்களப்பு. 16.11.1962 — 24.12.1986 மட்டக்களப்பு தாழங்குடாவில் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் தேசவஞ்சகக் கும்பலின் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 3) வீரவேங்கை நசீர் (முகமது நசீர்) காங்கேயனோடை, மட்டக்களப்பு. 15.03.1963 — 30.12.1987 மட்டக்களப்பு காத்தான்குடியில் ஜிகாத் கும்பல் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 4) வீரவேங்கை சாபீர் (சரிபுதீன் முகமது சாபீர்) தியாவெட்டுவான், மட்டக்களப்பு. 13.05.1988 நாசிவன்தீவில் ரெலோ தேசவஞ்சகக் கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் வீரச்சாவு. 5) வீரவேங்கை ஜெமில் (ஜெயாத் முகமது உசைதீன்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 28.03.1968 — 05.08.1989 மட்டக்களப்பு ஓட்டமாவடியில் இந்தியப் படையினருடனான சமரில் வீரச்சாவு. 6) வீரவேங்கை ஆதம் (எஸ்.எம். ஆதம்பாவா) சாய்ந்தமருது, அம்பாறை. 21.12.1967 — 03.01.1990 மட்டக்களப்பு கல்முனைக்குடியில் முஸ்லிம் ஜிகாத் கும்பல் மேற்கொண்ட கோரத் தாக்குதலில் வீரச்சாவு. 7) வீரவேங்கை அலெக்ஸ் (அகமது றியாஸ்) மருதமுனை, நீலாவணை, மட்டக்களப்பு. 23.01.1970 — 04.05.1990 அம்பாறை கல்முனை இறக்காமத்தில் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 8 ) வீரவேங்கை கபூர் (முகமது அலியார் முகமது சலீம்) காங்கேயனோடை, மட்டக்களப்பு. 11.06.1990 மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு.
9) வீரவேங்கை தாகீர் (முகைதீன்பாவா அன்சார்) திருகோணமடு, பொலன்னறுவை. 29.04.1972 — 11.06.1990 மட்டக்களப்பு கல்குடா பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு.
10) வீரவேங்கை அன்வர் 15.06.1990 அம்பாறை பாணமையில் விடுதலைப் புலிகளின் தாவளத்தை சிறிலங்கா படையினர் முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு. 11) வீரவேங்கை தௌவீக் (இஸ்மாயில்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 12.06.1990 திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தாவளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 12. வீரவேங்கை ஜிவ்றி (முகம்மது இலியாஸ்) 4ம் வட்டாரம், மீராவோடை, வாழைச்சேனை, மட்டக்களப்பு. 05.03.1974 — 13.06.1990 திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தாவளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 13) வீரவேங்கை அர்ச்சுன் (சொந்தப்பெயர் தெரியவில்லை)ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 14.06.1990 திருகோணமலை திருமலை 3ம் கட்டை பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 14) வீரவேங்கை ஜலீம் (முகமது இஸ்மாயில் மன்சூர்) ஏறாவூர், மட்டக்களப்பு. 01.09.1990 முல்லைத்தீவில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற நேரடிச் சமரில் வீரச்சாவு. 15) வீரவேங்கை மஜீத் (முகமது இஸ்காக் கூப்சேக்அலி) மீராவோடை, மட்டக்களப்பு. 18.06.1990 வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 16) வீரவேங்கை ஜின்னா (லெப்பைதம்பி செய்னூர்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 20.10.1970 — 19.06.1990 அம்பாறை பொத்துவில் கொட்டுக்கலவில் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு.
17) வீரவேங்கை தர்சன் (அப்துல்காதர் சம்சி) ஊரின் பெயர் தெரியவில்லை,13.06.1990 18) வீரவேங்கை நகுலன் (ஜுனைதீன்) அட்டாளைச்சேனை, காரைதீவு, அம்பாறை. 26.06.1988 அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படையினர் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 19) வீரவேங்கை அகஸ்ரின் (சம்சுதீன் அபுல்கசன்) அக்கரைப்பற்று, அம்பாறை. 15.08.1971 — 27.10.1988 அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படை மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஆயுதகுழு மோதல் வீரச்சாவு. 20) வீரவேங்கை நசீர் (சம்சுதீன் நசீர்) ஒலுவில், அம்பாறை. 19.02.1960 — 17.02.1989 மட்டக்களப்பு நிந்தவூரில் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் ஆயுதகுழுவால் பிடிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கோரத்தாக்குதலில் வீரச்சாவு. 21) வீரவேங்கை பாறூக் (நாகூர்தம்பி பாயிஸ் ஆதாம்லெப்பை) அக்கரைப்பற்று, அம்பாறை. 08.01.1973 — 22.06.1989 அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படை ஈ.என்.டி.எல்.எவ்வினரின் முற்றுகையின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு. 22) வீரவேங்கை அஸ்வர் (ஜபார் ஜாபீர்) அட்டாளைச்சேனை, அம்பாறை. 06.12.1989 பழுகாமத்தில் ஈ.என்.டி.எல்.எவ் ஆயுதகுழு தாக்குதலின்போது வீரச்சாவு. 23) வீரவேங்கை சியாத் (மீராசாகிபு காலிதீன்) சாய்ந்தமருது, அம்பாறை. 18.08.1972 — 06.12.1989. பழுகாமத்தில் ஈ.என்.டி.எல்.எஃவ் அயுதகுழு பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 24) வீரவேங்கை சந்தர் எ சுந்தர் (அகமது லெப்பை செப்லாதீன்) வேப்பானைச்சேனை, அம்பாறை. 25.02.1973 — 25.05.1990 அம்பாறை காரைதீவு பகுதியில் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 25) வீரவேங்கை ராவ் (முகமது ரவீக்) பொத்துவில், அம்பாறை. 15.06.1990 அம்பாறை இலகுகல்லில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு.
26) வீரவேங்கை இராமன் (மாப்பிள்ளை லெப்பை அல்வின்) இறக்காமம், அம்பாறை. 16.06.1990 மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 27) வீரவேங்கை கனியா (அபுசாலி புகாரி) அக்கரைப்பற்று, அம்பாறை. 15.07.1990
28) வீரவேங்கை கமால் மட்டக்களப்பு 07.06.1990 29) வீரவேங்கை கசன் (ஆதம்பாவா கசன்) மூதூர், திருகோணமலை. 05.11.1989 முல்லைத்தீவு மாங்குளத்தில் தவறுதலாக ஏற்பட்ட வெடிநேர்ச்சியின்போது வீரச்சாவு.
30) வீரவேங்கை சலீம் 03.07.1987 அம்பாறை மாவட்டம் தாண்டியடி பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 31) வீரவேங்கை ஜெகன் (ஆப்தீன் முகமது யூசுப்) குச்சவெளி, திருகோணமலை. 08.04.1972 — 15.06.1990 திருகோணமலை கட்டைபறிச்சான் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 32) வீரவேங்கை நியாஸ் மூதூர், திருகோணமலை. 17.06.1990 --> மட்டக்களப்பில் சிறிலங்கா வான்படையினர் மேற்கொண்ட உலங்குவானூர்தி தாக்குதலில் வீரச்சாவு. 33) வீரவேங்கை கலையன் (கச்சுமுகமது அபுல்கசன்) முதலாம் வட்டாரம், புல்மோட்டை, திருகோணமலை. 14.06.1990 (அறியில்லா இடத்தில்) சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 34) வீரவேங்கை டானியல் (கனீபா முகமது ராசீக்) திருகோணமலை. 23.06.1970 — 22.06.1990 திருகோணமலை திருமலை 2ம் கட்டை பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 35) வீரவேங்கை நிர்மல் (அப்துல் நசார்) புடவைக்கட்டு, திருகோணமலை. 19.01.1972 — 27.07.1990 திருகோணமலை திருமலை திரியாயில் ஏற்பட்ட வெடிநேர்ச்சியில் வீரச்சாவு. 36) வீரவேங்கை உஸ்மான் கிழங்கு (அப்துல்காதர் சாதிக்) யாழ்ப்பாணம். 10.05.1966 — 25.08.1986 யாழ். கோட்டையில் சிறிலங்கா படையினருடனான முற்றுகைச் சமரில் வீரச்சாவு. 37)வீரவேங்கை குபீர் அக்கரைப்பற்று, அம்பாறை. 15.06.1990 அம்பாறை பாணாமையில் விடுதலைப் புலிகளின் முகாமை சிறிலங்கா படையினர் முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு. 38) வீரவேங்கை பர்ஸாத் செட்டிக்குளம், வவுனியா 10.06.1990 (பிறந்த திகதி சம்பவம் தெரியவில்லை)
39)வீரவேங்கை ரகுமான் 08.05.1986 வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் ஸ்ரீலங்கா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு. 40) வீரவேங்கை ரகீம் 08.05.1986 ( பிறந்த திகதி சம்பவம் தெரியவில்லை) 41) வீரவேங்கை வசந்தி (அப்துல்கரீம் கற்பகரூபவதி) முள்ளியான், கட்டைக்காடு, யாழ்ப்பாணம் 06.05.1978 - 26.06.1999 மன்னார் பள்ளமடு பகுதியில் ரணகோச நடவடிக்கைப் படையினரின் முற்றுகை முயற்சிக்கெதிரான முறிடிப்புச் சமரில் வீரச்சாவு. 42) வீரவேங்கை பர்சாண் (அப்துல்காதர் சம்சுதீன்) காக்கையன்குளம், வவுனியா 04.05.1969 - 15.06.1990 வவுனியா காமினி வித்தியாலயத்தில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 43) வீரவேங்கை நசீம் (கஜன்) (அப்துல்மானாப் முகமது நசீம்) மூதூர், திருகோணமலை 05.07.1964 - 25.07.1986 மூதூர் ஆலிம்சேனைப்பகுதியில் சிறிலங்கா படையினரின் சுடுகலச்சூட்டில் வீரச்சாவு. 44) ஈரோஸ் மாவீரர் நியாஸ் மன்னார் 11.07.1986 தமிழீழக் கடற்பரப்பில் பயணம் செய்து கொண்டிருக்கையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட வான்குண்டு வீச்சில் வீரச்சாவு 45) ஈரோஸ் மாவீரர் கஜன் எ நசீம் (அப்துல் மானாஃப் முகம்மது நசீம்) மூதூர், திருகோணமலை 05.07.1964 - 25.07.1986 மூதூர் ஆலிம்சேனைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் சுடுகலச் சூட்டில் வீரச்சாவு 46) ஈரோஸ் மாவீரர் கசாலி (சேகு முகமது சகாப்தீன்) ஆலிம்சேனை, மூதூர், திருகோணமலை 23.05.1989 மூதூர் 64ம் கட்டைப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு நடாத்தப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு 47) ஈரோஸ் மாவீரர் ரசிட் இயற்பெயர் அறியில்லை திருகோணமலை 26.08.1989 திருகோணமலையில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலுடனான மோதலில் வீரச்சாவு 48) ஈரோஸ் மாவீரர் மிஸ்வின் இயற்பெயர் அறியில்லை அக்கரைப்பற்று, அம்பாறை 09.11.1989 49) வீரவேங்கை அருள் (மேலதிக விபரம் கிடைக்கப்பெறவில்லை) மன்னார்
50) வீரவேங்கை மருதீன் எ முகமது (சந்திரயோகு மருத்தீன்) உயிர்த்தராசன்குளம், மன்னார் 25.10.1965 - 15.10.1987 யாழ்ப்பாணம் கோட்டை பகுதியில் இந்தியப்படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 51) வீரவேங்கை பதூர்தீன் எ குஞ்சான் (காலித்தம்பி காதம்பவா) அக்கரைப்பற்று, அம்பாறை. 16.10.1963 - 07.06.1987 52) வீரவேங்கை கசாலி (சேகு முகமது சகாப்தீன்) ஆலிம்சேனை, மூதூர், திருகோணமலை 23.05.1989 மூதூர் 64ம் கட்டைப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டு வீரச்சாவு. 53) வீரவேங்கை குமார் (சேதுதாவீது காசிம்) இரத்தினபுரம், கிளிநொச்சி. 26.11.1988 யாழ்ப்பாணம் காரைநகரில் இந்தியப்படையின் சுற்றிவளைப்பின்போது வீரச்சாவு. 54) வீரவேங்கை கலீல் (கலீல் ரகுமான்) தோப்பூர், திருகோணமலை. 27.04.1988 யாழ்ப்பாணம் கப்பூது வெளியில் இந்தியப்படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு. 55) வீரவேங்கை அசீம் அஷாத் ( திகதி. இடம் தெரியவில்லை) 56) 2ம் லெப். சாந்தன் (நைனா முகைதீன் நியாஸ்) நிலாவெளி, திருகோணமலை. 17.05.1972 — 06.02.1990 திருகோணமலை மாவட்டம் ஜமாலியா பகுதியில் அமைந்திருந்த ஈ.என்.டி.எல்எஃவ் கும்பலின் முகாமை தாக்கிவிட்டு தளம் திரும்பும்போது ஏற்பட்ட படகு நேர்ச்சியில் வீரச்சாவு. 57) லெப். ஜெமில் (கரீம் முஸ்தபா) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 12.06.1990 திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 58) லெப். ராஜிவ் எ ரகீம் எ நஜீம் (காசிம் துலானி) பட்டாணிச்சூர், புளியங்குளம், வவுனியா 15.09.1990 வவுனியாவில் நெஞ்சுவலி காரணமாக சாவு. 59) லெப் அருள் (யூசப் ஜாசிர்) உப்புக்குளம், வவுனியா 14.05.1975 - 05.11.1995 யாழ். வலிகாமத்தில் சூரியகதிர் எதிர்ச்சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது வீரச்சாவு. 60) லெப். ஈழநாதன் எ ஈழமாறன் (காதர்முகைதீன் சருதீன்) ஒட்டருத்தகுளம், வவுனிக்குளம், முல்லைத்தீவு 01.10.1978 - 07.04.1998 கடற்புலி லெப் கேணல் மாறன் எ குன்றத்தேவன் அவர்களது உடன்பிறப்பு ஜெயசிக்குறுய் காலத்தில் முல்லைத்தீவு ஒலுமடுவில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது காயச்சாவு.
61) கப்டன் பாறூக் (அகமதுலெப்பை முகமது கனீபா) அக்கரைப்பற்று, அம்பாறை. 12.06.1959 — 07.01.1987 யாழ்ப்பாணம் கோட்டையில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு.
62) கப்டன் குட்டி எ தினேஸ் (முகமது அலிபா முகமது கசன்) பேராறு, கந்தளாய், திருகோணமலை. 28.04.1987 திருகோணமலை கந்தளாயில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு.
63) கப்டன் நசீர் சாளம்பைக்குளம், வவுனியா 00.11.1990 64 வீரவேங்கை தமிழ்மாறன் (அப்துல் ரகுமான் நிமால்) ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு 01.01.1983 - 19.10.2000 யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் - 04” நடவடிக்கையின்போது வீரச்சாவு. 65) வீரவேங்கை ரவீஸ் ராமநாதபுரம், கிளிநொச்சி. 08.08.2006 66) வீரவேங்கை கணேசன் (அப்துல்ஜபார் கணேசன்) யாழ்ப்பாணம் 19.03.2007 யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு. 67) கடற்புலி லெப் கேணல் முல்லைமகள் (முகைதீன் ஜெரீனா-பெண்புலி) 50 வீட்டுத்திட்டம், கள்ளப்பாடு, முல்லைத்தீவு. 19.06.2007 யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு. 68) கடற்புலி லெப் கேணல் மாறன் எ குன்றத்தேவன் (காதர்முகைதீன் நஜீம்கான்) முல்லைத்தீவு 29.09.2008 அக்கராயன் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முன்னேற்ற நடவடிக்கைக்கெதிரான மறிப்புச் சமரின்போது வீரச்சாவு. இவருடைய உடன்பிறப்பு ஒருவரும் மாவீரர். அவருடைய பெயர் லெப். ஈழமாறன் என்பதாகும். 69) லெப். கேணல் அப்துல்லா (முகைதீன்) காத்தான்குடி, மட்டக்களப்பு 02.04.2009 ஆனந்தபுரம் முற்றுகைச் சமரின்போது வீரச்சாவு. இவர் லெப்.ஜுனைதீன் அவர்களின் ( ஒரு முஷ்லிம் பெண் மாவீரர், 68, ஆண்மாவீரர்கள் உட்பட 69 முஷ்லிம் மாவீரர்கள் வீரச்சாவை தழுவியதாக அறியமுடிகிறது) -அரியம் -25/11/2025-