Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33600
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    87986
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    31932
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    3043
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/28/25 in all areas

  1. தமிழ் சிறி தாத்தாக்கு வாழ்த்துக்கள் அவருடைய குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்
  2. சிறிதாத்தாவுக்கும் பேத்தி சிவானிக்கும் எங்களின் பாசம் மிகுந்த வாழ்த்துகள் ........! 💐
  3. தொடர்ந்து தகவல்களை தந்து கொன்டிருக்கும் ஏராளன் மற்றும் பிழம்பு ஆகியோருக்கு மிக்க நன்றிகள்.
  4. இரஸ்சியாவிற்கு ஐரோப்பிய நாடுகள் மேல் தாக்குதல் செய்யும் எந்தவித நோக்கம் இல்லை எனவும் அவ்வாறு கூறுவது அபத்தாமானது வேணுமென்றால் எழுத்துபூர்வ உறுதிமொழி வழ்ங்கலாம் என புட்டின் அறிவித்துள்ளார், மறுவளமாக ஐரோப்பிய நாடுகள் இரஸ்சியாவினை தாக்குவதற்கு இரகசிய திட்டத்துடன் உள்ளார்கள் என வோல்சிரீர் ஜேர்னல் கூறூகிறது. யதார்த்ததிற்கு புறம்பான ஒரு அச்சுறுத்தல் பிரச்சாரத்தினை மேற்கு கை கொண்டுள்ளது அதற்காக ஊடக தர்மத்திற்கெதிராக தமக்கான கதை உருவாக்கங்கள் மற்றும் சுதந்திர ஊடக மீதான தடை மூலம் ஒரு தேவையற்ற போரினை ஏற்படுத்த விளைகிறார்கள், இதன் மூலம் உலகின் அமைதியின்மைக்கும் பல உயிரழிவிற்கும் காரணமாகின்றனர்.
  5. நினைத்துப் பார்க்க முடியாத அளவு கவலையாய் இருக்கிறது . .......! நீங்களும் சிரமம் பாராமல் தகவல்களைத் தந்து கொண்டு இருக்கிறீர்கள் .........நன்றி . ......!
  6. Benitto Kumar · வியாபாரியின் அகந்தையை உடைத்த தெனாலி ராமன். சிறுகதை. வெகு நாட்களாக வெளியூரில் தங்கியிருந்த புத்திக்கூர்மையின் உருவமான தெனாலி ராமன், ஒரு நாள் தன் ஊரான ஹம்பி நகருக்குத் திரும்பி வந்தான். ஊருக்குள் நுழைந்தவுடனே எங்கும் மக்கள் கூட்டம், கிசுகிசுப்பு, பரபரப்பு! எல்லோரும் ஏதோ ஒரு அதிசயத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். “என்ன விஷயமாக இப்படி ஊரே கலகலப்பாக இருக்கிறது?” என்று வியப்புடன் ராமன் தன் வீட்டுக்குள் நுழைந்தான். அங்கு அவன் வேலைக்காரர்கள் இருவரும் கூடி ரகசியமாக ஆலோசனை செய்வது போல பேசிக்கொண்டிருந்தனர். இதைக் கண்ட தெனாலிக்கு சந்தேகம் வந்தது. ஒருவனை அழைத்து, “ஏய்! என்ன விஷயம்? ஊரும் பேசுது… நீங்களும் பேசுறீங்க?” என்று கேட்டான். பயந்து நடுங்கிய வேலைக்காரன் சொன்னான்: “ஐயா… நம்ம ஊருக்கு ஒரு வடநாட்டு வியாபாரி வந்திருக்காராம். அவரிடம் ஒரு அதிசயமான சவால் இருக்காம்…” “என்ன சவால்?” என்று தெனாலி கேட்டான். “அவர் வைத்திருக்கும் ஒரு பொருளின் எடையை சரியாகக் கண்டுபிடித்தால், எடைக்கு எடை பொன் தருவேன் என்கிறாராம். தவறினால்… நம்ம வாழ்க்கை முழுக்க அவருக்கு அடிமையாக வேலை செய்ய வேண்டுமாம்!” இந்தக் கொடூரமான நிபந்தனையைக் கேட்ட ராமன் சற்று சிந்தித்து, நேராக அரச சபைக்குச் சென்றான். அங்கு மன்னர் கிருஷ்ணதேவராயர் அந்த வியாபாரியின் சவாலை ஏற்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தார். தெனாலி வந்ததும் மன்னர் மகிழ்ச்சியுடன், “இந்தச் சவாலுக்கு நீயே தீர்வு காண வேண்டும்!” என்று உத்தரவிட்டார். தெனாலி ராமன் வியாபாரியைப் பார்த்து, “எந்தப் பொருளின் எடை வேண்டும்?” என்று கேட்டான். கர்வமாகச் சிரித்த வியாபாரி சொன்னான்: “வீதியில் நிற்கும் என் யானையின் எடை சொல்ல வேண்டும்!” சபையே அதிர்ந்தது. யானையை தராசில் எப்படி நிறுத்துவது? இதற்கெல்லாம் எடை கருவியே இல்லையே! அனைவரும் திகைத்து நின்றனர். ஆனால் தெனாலி ராமன் சற்றும் கலங்கவில்லை. “நான் நாளை காலை பதில் சொல்கிறேன்!” என்று கூறிவிட்டு வீட்டுக்குச் சென்றான். இரவில் தன் மனைவியிடம் இந்தச் சிக்கலைச் சொல்லிக்கொண்டிருக்கும் போது, அவனது புத்தியில் திடீரென மின்னல் போல ஒரு யோசனை உதித்தது. நதி… படகு… மரக்கட்டைகள்… மாபெரும் புத்திசாலித்தனம்! அடுத்த நாள் காலை, மன்னர், மக்கள், வியாபாரி ஆகிய அனைவரும் ஆவலோடு நதிக்கரையில் கூடியிருந்தனர். தெனாலி ராமன் முதலில் யானையை ஒரு பெரிய படகில் ஏறச் செய்தான். யானை ஏறியதும் படகு நீரில் எவ்வளவு ஆழம் அமிழ்ந்தது என்பதை குறிக்கும் வண்ணம் படகின் உட்புறத்தில் ஒரு கோடு போட்டான். பிறகு யானையை இறக்கிவிட்டு, அதே படகில் மரக்கட்டைகளை ஒன்றன் பின் ஒன்றாக வைத்து, படகு முன்னர் யானை ஏறிய போது அமிழ்ந்த அதே அளவு வரை நிரப்பினான். பின்னர் மன்னரைப் பார்த்து, “அரசே! இப்போது இந்த மரக்கட்டைகளைத் தனித் தனியே எடை போடுங்கள். அவை அனைத்தின் மொத்த எடைதான் யானையின் உண்மையான எடை!” என்றான். அரச சபையே ஆனந்த அதிர்ச்சியில் முழங்கியது. மன்னர் கிருஷ்ணதேவராயர் மகிழ்ச்சியில் திளைத்தார். மன்னர் வியாபாரியை நோக்கி, “நீ சொன்ன சவாலை எங்கள் தெனாலி நிறைவேற்றிவிட்டான். இப்போது நீ சொன்னது போல பரிசைத் தந்தே ஆக வேண்டும்!” என்றார். ஆனால் அப்போது தெனாலி ராமன் இடைமறித்து, “மன்னர் பெருமானே… இவன் ஒன்றைத் தெளிவாகச் சொல்லவில்லை! ‘எடைக்கு எடை பொன்’ என்று சொன்னான்… எந்த எடைக்கு? என் எடைக்கா? அல்லது யானையின் எடைக்கா?” என்று கேட்டான். இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் வியாபாரியின் முகம் வெளுத்துப் போனது. யானையின் எடைக்கு ஈடான பொன் கொடுக்க அவனால் முடியாது! அவனது சூழ்ச்சியும், பல நாடுகளில் மக்களை அடிமையாக்கிய பாவமும் வெளிச்சத்துக்கு வந்தது. உடனே மன்னர் உத்தரவிட்டார்: “இப்படிப்பட்ட சூழ்ச்சிக்காரனுக்கு சிறையே சரியான தண்டனை!” என்று அவனைச் சிறையில் அடைத்தார். மன்னர் தெனாலி ராமனைப் புகழ்ந்து, பெரும் அளவு பொன்னும் பரிசுகளும் வழங்கினார். மக்கள் அனைவரும் ஒரே குரலில் கூறினார்கள்: “வல்லவனுக்கு வல்லவன் இவ்வுலகில் உண்டு!” கருத்து: யாரையும் துன்புறுத்தி மகிழாதே. அகந்தையால் வாழ்பவன் ஒருநாள் தன் அகந்தையாலேயே வீழ்வான்.......!
  7. இதைவிட. பாப்பா. ரசோ. சிறந்தது. கருத்துகள். நிறைந்தது. ஏராளன்.
  8. இலங்கைக்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை! - அவசர அறிவிப்பு – காலை 5.00 மணிக்கு வெளியீடு Published By: Priyatharshan 28 Nov, 2025 | 07:23 AM இலங்கையைச் சுற்றி உருவாகியுள்ள டித்வா ‘Ditwah’ சூறாவளிப் புயல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் மோசமான வானிலையியல் சூழ்நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அவசர சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், நாடளாவிய ரீதியில் அதிகபட்ச மழை மற்றும் பலத்த காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. நாட்டின் சில மாகாணங்களில் 200 மில்லிமீற்றரை மீறும் மிக கன மழை பெய்யும் என்றும் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றருக்கு இடைப்பட்ட வேகத்தில் பலத்த காற்றும் சில மாகாணங்களில் மணிக்கு 80 முதல் 90 கிலோமீற்றர் வேகத்தில் காற்றடிக்கும் அபாயம் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல இடங்களில் உயர் அபாய நிலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. * திடீர் வெள்ளப்பெருக்கு * நிலச்சரிவு * மரங்கள் சாய்வது/வீழ்வது * கடல் பகுதிகளில் மிகவும் கடுமையான அலை ஏற்கனவே பதிவான மிக கன மழை அளவுகள் * வவுனியா - செடிக்குளம் – 315 மிமீ * முல்லைத்தீவு, அலம்பில் – 305 மிமீ * கண்டி – 223.9 மிமீ * மன்னார், மடு – 218.5 மிமீ * இரத்தினபுரி – 208 மிமீ பொது மக்களுக்கு அறிவுறுத்தல் * அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும் * அதிகாரிகள் வழங்கும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் * வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்படும் பகுதிகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும் https://www.virakesari.lk/article/231741
  9. அததெரண கருத்துப்படம்.
  10. இந்த இரஸ்சியாவின் உக்கிரேன் ஆக்கிரமிப்பு போர் ஆரம்பிப்பதற்கு முன்னர் இரஸ்சியா தனது பாதுகாப்பு உத்தரவாதத்தினை மேற்கிடம் கோரியிருந்தது, போர் ஆரம்பித்த பின்னர், இரஸ்சியாவின் இராணுவ வல்லமையினை பற்றி அன்டனி பிளிங்கன் குறிப்பிடும் போது "இரஸ்சியா உலகில் இரண்டாவது பெரிய இராணுவம் அல்ல, உக்கிரேனில் இரண்டாவது பெரிய இராணுவம் என" (உக்கிரேன் முதலாவது பெரிய இராணுவம்) கூறியிருந்தார், அதனை கள உறவுகள் கூட கருத்தாக கூறியிருந்ததாக நினைவுள்ளது. ஆனால் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இரஸ்சியா எழுத்து மூலமான பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க தயாராக உள்ளதாக கூறுகிற நிலை ஒன்று கொன்று முரணான சமூக ஊடக பிரச்சாரமாக உள்ளதா? அல்லது உண்மையில் இரஸ்சியா அவ்வாறான பலமான நாடா? குடிகாரன் பேச்சு என்பது போல இந்த அரசியல் செல்கிறது.
  11. உங்களுக்கு குடிக்கிற ஆக்களை கண்ணிலை காட்டக்கூடாது போல கிடக்கு....😂
  12. https://youtu.be/jXdrntebgng?si=cc-X7ylDoR9dvEJJ https://youtu.be/jXdrntebgng?si=cc-X7ylDoR9dvEJJ
  13. ❤️தமிழ் சிறீ தாத்தாவிற்கும், பேத்திக்கும் இனிய வாழ்த்துகள் தாயும் சேயும் நலமுடன் வாழ அன்போடு வாழ்த்துகின்றேன். 💐
  14. 🤣................... அக்னிக்குஞ்சு நிறுவனத்தை ஆதவன் நிறுவனம் வாங்கி விட்டதா, சொல்லவேயில்லை...................😛. எத்தனை பாபாக்கள் வந்தாலும் அத்தனையையும் பூமியும் தயக்கம் இல்லாமல் தாங்குதே..................🤣. பாபாக்கள் சொல்லும் விடயங்களை விட, அவர்கள் தங்கள் வாய்க்குள் இருந்து எடுக்கும் சிவலிங்கங்களை விட, அவர்கள் காற்றிலிருந்து வரவழைக்கும் பொருட்களை விட, இப்படியான அவர்களினால் நிகழ்த்தப்படும் எல்லா அதிசயங்களையும் விடவும் அதிசயமான விசயம் என்னவென்றால்.............. பாபாக்களின் அருள் வார்த்தைகளை கேட்டு 'நிபுணர்கள்' எனப்படுவோர் குழம்பி நிற்கின்றார்கள் என்ற செய்தியே...............😜. இது என்ன நிபுணத்துவம் என்று தெரிந்தால் நாங்களும் கற்றுத் தேரலாம் என்ற ஒரு ஆவல் தான்....................🤣.
  15. நேற்று 25 கார்த்திகை அன்று தம்பி தமிழ்சிறியை அவர் மகள் யாழினி தாத்தாவாக்கிவிட்டார். அவர் குடும்பத்தில் உதித்த முதல் பேரப்பிள்ளை, பேத்தியின் பெயர் சிவானி. பேத்தி சிவானி வளமுடன் வாழ வாழ்த்துக்கள்!!🙌
  16. இன்னுமா அமெரிக்க அதிபர் சொல்வதை இந்த உலகம் நம்பி கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்........................🤣. நாளைக்கு விடிந்தால் அவர் என்ன சொல்லுவார் என்று எங்களுக்கு மட்டும் இல்லை, அவருக்கே தெரியாது...................😜. இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த வாரம் ஒரு விடயத்தை கடுமையாகச் சொல்லியிருந்தார். பாகிஸ்தானில் இருக்கும் சிந்து பகுதியை இந்தியாவுடன் இணைக்கப் போவதாக அவர் சொல்லியிருந்தார். பாகிஸ்தானின் சிந்து பகுதியில் வாழும் மக்கள் இந்தியாவுடன் இணையவே விரும்புகின்றார்கள் என்று அவர் சொல்லியிருந்தார். சிந்து நதியின் புனிதம் பற்றியும் சொல்லியிருந்தார். ரஷ்யா உக்ரேனை இணைக்கலாம். அமெரிக்கா கனடாவை இணைக்கலாம். இந்தியா சிந்துவை இணைக்கலாம்................. இலங்கையில் வடக்கை தெற்கு இணைக்கலாம்...........🙃.
  17. யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்கள் சிறந்த கலைஞர்களாகவும் இருக்கிறார்கள். பாராட்டுக்கள். நேரமிருக்கும் போது பார்த்து உற்சாகப்படுத்துங்கள்.
  18. சீரற்ற காலநிலையால் யாழில் ஏற்பட்ட பெரும் பாதிப்பு - வெளியான நிலவரம் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 231 குடும்பங்களைச் சேர்ந்த 746 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதன்போது ஒரு வீடு முழுமையாகவும் 17வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அத்தோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது ஒரு இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டு 9 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தின் பொன்னாலை - காரைநகர் வீதியில் கடல் நீர் வீதிக்கு வந்துள்ளதுடன், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதனால் கீரிமலை கடல் பகுதி கொந்தளிப்புடனும் காணப்படுகின்றது. இதேவேளை யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வல்வெட்டித்துறை பகுதியில் காற்றுடன் தொடர்ச்சியான மழை பெய்த வண்ணம் காணப்படுகின்றது தவிசாளரின் வாகனம் சேதம் மேலும், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தனின் வாகனம் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் வாகனம் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது. இன்றையதினம் சேந்தாங்குளம் பகுதியில் ஏற்பட்ட அனர்த்தத்தை பார்வையிடுவதற்காக தவிசாளர் அங்கு சென்ற வாகனத்திற்கு மேல் முறிந்து விழுந்துள்ளது. வெள்ள வாய்க்கால் அடைப்பு பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட. திக்கம் நாச்சிமார் கோவிலடி வீதியின் வெள்ள வாய்க்கால் மழைகாரணமாக அடித்துச் செல்லப்பட்ட மரக்குற்றிகள் மற்றும் வாழைத்தண்டுகள் உட்பட்ட கழிவுகளால் வெள்ளம் வழிந்தோடும் மதகுகள் அடைபட்டிருந்தது. இந்நிலையில் பருத்தித்துறை பிரதேச சபை செயலாளரது கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது குறித்த மதகு மற்றும் வடிகால் என்பன பருத்தித்துறை பிரதேச சபை செயலாளர் ரமேஸ்கரன் தலைமையில் களப்பணி உத்தியோகத்தர்கள் அடக்கலான குழுவினர் சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பகுதியில் வெள்ளம் வழிந்தோடும் பிரதான வடிகாலாக குறித்த நாச்சிமார் கோவிலடி வெள்ளவாய்க்கால் காணப்படுகிறது. செய்தி - தீபன், கஜிந்தன் https://tamilwin.com/article/746-people-affected-in-jaffna-inclement-weather-1764320991
  19. இலங்கையும் அதனை சுற்றியுள்ள கடலும் கடும் ஆபத்தில்! ‘சிவப்பு’ எச்சரிக்கை ! 27 Nov, 2025 | 05:38 PM இலங்கையின் தென் கிழக்கில் உருவாகி வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த தாழமுக்கம் காரணமாக, இலங்கையும் அதனைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கும் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்கிழக்கு கடற்பகுதியில் நிலவும் தாழமுக்கம், வலுப்பெற்று, மட்டக்களப்புக்கு தென்கிழக்கில் சுமார் 120 கிலோற்றர் தூரத்தில் மையங்கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணிநேரங்களுக்குள் சூறாவளியாக (Cyclonic Storm) உருவெடுத்து, வட- வடமேற்கு திசையில் நகர அதிக வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வானிலை அமைப்பின் தாக்கத்தினால், நாடெங்கும் நிலவும் கனமழை மற்றும் பலத்த காற்று அடுத்த சில நாட்களும் நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் 200 மில்லிமீற்றருகு்கு மேற்பட்ட மிக கனமழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேற்கு மாகாணங்கள் மற்றும் மட்டக்களப்பு, பதுளை மாவட்டங்களில் 150 மில்லிமீற்றருக்கும் மேல் மழை எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின், ஏனைய பகுதிகளிலும் 100 மில்லிமீற்றருக்கும் மேல் மழை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதேவேளை, நாடளாவிய ரீதியில் 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்திலும், சில பகுதிகளில் 80 கிலோமீற்றர் வரை காற்றடிக்கும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில், பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் 60–70 கிலோமீற்றர் மற்றும் இடையிடையே 80 கிலோமீற்றர் வரை காற்றடிக்கும். கடற்பரப்பில் 3.0 – 4.0 மீற்றர் உயரமுள்ள பெரும் அலைகள் எழும்பக்கூடும். புத்தளம் முதல் காங்கேசன்துறை வரை — கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை வழியாக காற்று அதிகரிக்கக்கூடும். இதனால், கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கடற்படை மற்றும் மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விழிப்புடன் இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் கடுமையான வானிலை குறித்து நவம்பர் 30, 2025 வரை பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. அவசரநிலைகளில் அருகிலுள்ள பாதுகாப்பு நிலையங்களை தொடர்புகொண்டு உதவி பெறுமாரும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கையும் அதனை சுற்றியுள்ள கடலும் கடும் ஆபத்தில்! ‘சிவப்பு’ எச்சரிக்கை ! | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.