Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87984
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    2947
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    8906
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    3043
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/12/25 in all areas

  1. இவ் வகையான குடியேற்றங்கள் முன்னரும் நிகழ்ந்தது. டேவிட் ஐயாவின் 'காந்தியம்' அமைப்பு, 1970கள் மற்றும் 1980களில் வன்னிப் பகுதியில் இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்தது. 1977 ஆம் ஆண்டில் மருத்துவர் சோ. இராஜசுந்தரத்துடன் இணைந்து டேவிட் ஐயா (எஸ். ஏ. டேவிட்) இந்த அமைப்பை நிறுவி அதன் மூலம் 1970களில் ஏற்பட்ட இன வன்முறைகளால் / இனப்படுகொலைகளா; இடம்பெயர்ந்த சுமார் 5000 மலையக (இந்திய வம்சாவளி) தமிழர்களை வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மற்றும் திருகோணமலை போன்ற தமிழ்ப் பிரதேசங்களில் குடியமர்த்தினர். 80 களின் பின் வன்னியில் பிறந்து போராட்டத்தில் இணைந்து மாவீரர்களான பலரின் முழுப்பெயரை கவனித்தால் தெரியும், அதில் பலரது தந்தையின் பெயர் மலையக / இந்திய வம்சாவளி தமிழர்களின் பெயர்களாக இருக்கும். வன்னி மண்ணின் வீரத்துக்கும் தியாகத்துக்கும் இவர்களின் பங்களிப்பும் ஒரு காரணமாக இருந்தது. தாயகத் தமிழர்கள் வாஞ்சையுடன் இவர்களை அணைத்து அரவணைத்து உள் வாங்கிக் கொள்ள வேண்டும்.
  2. என்னை பொறுத்தவரையில் இது எப்போதோ நடந்திருக்க வேண்டிய ஒரு காலக் கடமை. 200 வருட அடிமை சாசன வாழ்க்கையில் அந்த பெருந்தோட்ட மக்கள் கூட்டம் அடைந்த முன்னேற்றம் என்பது ஆமை வேகத்தில் தான் நடந்திருக்கிறது. இன்று தேயிலையும் கூட இலங்கையின் ஏற்றுமதி பொருளாதார வருவாய் சுட்டியில் முன்னிலையில் இல்லை. மலையக மக்களின் புதிய சந்ததி ஒன்றும் தேயிலை கூடையை தலையில் மாட்டி.. சாக்கு துணியை இடுப்பில் கட்டி கொழுந்த்து பறிக்கும்தொழிலுக்கு போகப் போவதும் இல்லை. இப்போதே அநேக இளையவர்கள் கொழும்பு, கண்டி என்ற பெரு நகரங்களை நோக்கியும் வெளிநாடு செல்லுவதுமாகத்தான் அவர்கள் வாழ்க்கை இருக்கிறது. சுமந்திரன், மற்றும் தமிழ் அரசியல்வாதிகளின் இந்த வெண்டுகோள் தூர நோக்கில் சரியானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நடைமுறையில் நிறைய சிக்கல்கள் வரலாம். அடையாள இழப்பு, பொருளாதார சிக்கல், சமூக சிக்கல் இப்படி பல இன்னல்களை சந்தித்தாலும், ஓரிரு தலைமுறைகளின் பின்னர் இவர்களின் வாழ்வு ஓரளவுக்கு சுபிட்சமாக இருக்கும் என நான் நம்புகிறேன். எனக்கு தெரிந்த பல குடும்பங்கள் 1983 காலங்களிலும், அதன் பின்னரும் மலையகத்தை விட்டு வெளியேறி வடக்கில் குடியேறியவர்கள் ஆரம்பத்தில் பல சிக்கல்களை அனுபவித்தாலும், இன்று வட, கிழக்கு மக்களின் யதார்த்த வாழ்வை போல கல்வி, தொழில், வெளிநாடு, கோயில் குளம் என்று சந்தோசமாக இருக்கிறார்கள். சிங்களத்தின் கருணையில், பச்சாதாபா பிச்சையில் வாழ வில்லை என்ற கௌரவத்தோடு தமிழராக வாழ்கிறார்கள். தவிர இந்த உரையாடல், அரசுக்கு மலையக மக்களுக்கு செய்யவேண்டிய காலம் கடந்த நீதியை செய்ய ஒரு அழுத்தத்தை கொடுக்கும் என்றும் கூட நினைக்கிறன்.
  3. உள்நாட்டு யுத்தத்தால், புலம் பெயர்ந்து தமிழர்கள் இலட்சக்கணக்கில் இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழமுடியுமென்ற நிலை இருக்கும் போது. இது முடியாதா என்ன? சுமந்திரனுக்கு ஒரு ‘சபாஸ்’👏
  4. பெப் 07 தானே ஆரம்பம். கிறிஸ்மஸுக்கு முன்னர் கேள்விக்கொத்து தயாரிக்கலாம். மழையால்☔️ எத்தனை போட்டிகள் தடைப்படும் என்றும் ஒரு கேள்வி போடலாம்.🤣 20 பேர் வரை கலந்துகொண்டால்தான் சுவாரஸ்யம்😁
  5. அண்ணா, பிரதேசவாதமும், பிரதேச மேட்டிமைவாதமும் வேறுபட்டவை. உலகெங்கும் பெரும்பாலான மனிதர்கள் தங்களுக்கென்ற சில அடையாளங்களுடனேயே வாழ்கின்றார்கள். அது இனம், மொழி,மதம், பிரதேசம் என்று பல வகைகளில் இருக்கலாம். குலம், கோத்திரம் என்று கூட இந்த அடையாளங்கள் இருப்பதுண்டு. தங்களின் அடையாளங்களுக்கு விசுவாசமாகவும், தங்களின் அடையாளங்களை முன்னிறுத்தியும் மனிதர்கள் வாழத் தலைப்படுகின்றார்கள். ஆனால் தங்களை நிகர்த்த அடையாளங்கள் இல்லாதவர்கள் கீழானவர்கள், இழிவானவர்கள், திறமையற்றவர்கள், வீரம் அற்றவர்கள் என்பது போன்ற ஒப்பீடுகளும், கணிப்புகளும் மேட்டிமைவாதம் என்னும் வகையிலேயே வருகின்றது. பிறப்பினாலேயே தங்களை மேலானவர்கள் என்று நினைத்துக் கொள்வது மட்டும் இல்லாமல், அப்படியே நடந்து கொள்வதும் மேட்டுமைவாதமே. இந்த பிரதேச மேட்டுமைவாதமே இலங்கையில் சில பிரதேச மக்களிடம் இருக்கின்றன என்று தான் நான் சொல்ல முயன்றிருந்தேன். உதாரணம்: யாழ்ப்பாண தமிழ் மக்கள், கண்டி சிங்கள மக்கள். இவர்கள் இருவரும் இந்த விடயத்தில் வெளிப்படுத்தும் மேட்டுமைவாதத்தை இலங்கையில் வேறு எவரும் வெளிப்படுத்துவதில்லை என்பதே என் அனுபவம். பிறப்பினாலேயே ஒருவர் சிறந்தவர் ஆகி விடுகின்றார் என்றால், இங்கே எதற்குமே பொருள் இல்லை என்று ஆகிவிடுகின்றது அல்லவா.
  6. கிருபன் சிறப்பாக கடந்த T20 போட்டியினை நடாத்தியதினால் அவரை மீண்டும் இம்முறையும் போட்டியை நடாத்தும் படி வேண்டிகொள்கிறேன்.
  7. வட கிழக்குத் தமிழர்கள் மட்டும் இலங்கையில் தங்கள் உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுக்கலாம் . மலையக மக்கள் மட்டும் அப்படியே எல்லாவற்றையும் துறந்து இன்னொரு பிரதேசத்தில் ஏதும் இல்லாதவர்களாக, குடியேறிகளாக வாழ வேண்டுமா? அவர்களுடைய பிரச்சனைகளுக்காக அவர்கள் போராடும் நிலையில் நாம் வட கிழக்குத் தமிழர்கள் அவர்களுக்கான தார்மீக ஆதரவை வழங்குவதுதான் சிறப்பான தெரிவாக இருக்கும் இன்றும் தமிழ் நாட்டில் எந்த உரிமையும் இல்லாமல் வாழும் வட கிழக்குத் தமிழர்களின் நிலை எல்லோருக்கு தெரியும் வடகிழக்கில் குடியேறி வாழ்ந்த இஸ்லாமிய சகோதரர்களுடைய நிலை போராட்ட காலத்தில் எப்படி இருந்தது இப்போது எப்படியான நிலையில் உள்ளது என்பதும் யாவரும் அறிந்ததே.
  8. எண்பதுகளில் நாங்கள் பட்ட துன்பங்கள் பெரிது. விசா இல்லாமல், வேலையில்லாமல், ஊரில் உள்ளவர்களோடு தொடர்பு கொள்ள முடியாமல், கரிகளைப் போட்டு எரித்து குளிர் காய்ந்து, புரியாத மொழியில் விழி பிதுங்கி, மூன்று வருடங்கள் முகாம்களில் முடங்கிக் கிடந்து……. “உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்தது நிம்மதி தேடு..” என்ற பழைய பாடல் வரியொன்றுதான் நினைவுக்கு வந்தது.
  9. ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள் அண்மையில் இஸ்ரேலுக்குப் பயணம் செய்த தனது அனுபவங்களை திரு நிராஜ் டேவிட் அவர்கள் காணொளிகள் வாயிலாக வெளியிட்டு வருகிறார். அவற்றில் சில காணொளிகளில் அவர் அங்கு தங்கியிருந்த‌ நாட்களில் பயணித்த பலவிடங்களையும் காட்சிப்படுத்தியிருந்தார். அவற்றுள் ஒன்று யூத மக்கள் மீது இரண்டாம் உலக யுத்த காலத்தில் நாசிகளால் மேற்கொள்ளப்பட்ட இனக்கொலை தொடர்பான சாட்சியங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றினை பாரிய நினைவாலயம் ஒன்றினுள் காட்சிப்படுத்தியிருந்தமை பதிவுசெய்யப்பட்டிருந்தது. தம்மீது நிகழ்த்தப்பட்ட இனக்கொலை தொடர்பாக தமது சந்ததிகள் தொடர்ச்சியாக அறிந்துகொள்ளவேண்டும் என்பதும், இனிமேல் அவ்வாறனதொரு இனக்கொலை தமது இனம் மீது நடக்காது தவிர்ப்பது எந்தளவு முக்கியமானது என்பதையும் தம் இன மக்களுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்துவதும் இந்நினைவாலயத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். கொல்லப்பட்ட அறுபது இலட்சம் யூதர்களில் ஒரு பகுதியினர் பயன்படுத்திய காலணிகள், அவர்களால் அணியப்பட்ட கறுப்பும் வெள்ளையும் சேர்ந்த வரிரியிலான ஆடைகள், அவர்கள் பயன்படுத்திய உணவருந்தும் பாத்திரங்கள், அவர்களின் புகைப்படங்கள் என்பவற்றோடு அவர்களை வதைப்படுத்திக் கொன்றுபோட்ட பல நாசிப் படைத் தளபதிகளின் புகைப்படங்களும் அங்கு மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இவற்றைத் தனது காணொளிகளில் காண்பித்த டேவிட் அவர்கள், எமதினத்திற்கு நடந்த அக்கிரமங்கள், அழிவுகள் குறித்து நாம் பேசுவதை எம்மில் ஒரு பகுதியினரே தடுத்து வருவதையும், சிங்கள இனத்தோடு நாம் ஒன்றித்து வாழ்வதை இவ்வாறான "பழங்கதைகள் பேசுதல்" எனும் முயற்சி தடுத்துவிடும் என்றும், அது இனவொற்றுமையினைக் குலைத்துவிடும் என்றும் காரணம் கூறிவ‌ருவதையும் குறிப்பிட்டு அங்கலாய்த்திருந்தார். யூதர்கள் தமக்கு நடந்த அழிவினைத் தொடர்ச்சியாகப் பேசியும், காட்சிப்படுத்தியும், ஆவணப்படுத்தியும் வரும் நிலையில், நாமோ எம்மீது நடத்தப்பட்ட அழிவுகளை வேண்டுமென்றே மறுத்தோ அல்லது மறைத்தோ வாழத் தலைப்படுதல் ஈற்றில் எமது இருப்பிற்கே முடிவாய் அமைந்துவிடும் என்பதும் அவரது ஆதங்கமாக இருந்தது. இக்காணொளிகளின் இறுதிப்பகுதியில் தமிழ் மக்களை நோக்ல்கி வேண்டுகோள் ஒன்றினை அவர் முன்வைத்தார். அதுதான் நாம் அனைவரும், தனிப்பட்ட ரீதியிலோ அல்லது ஒரு குழுவாகவோ எம்மீது நடத்தப்பட்ட அனைத்து அக்கிரமங்களையும் ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒருவடிவில் கட்டாயம் ஆவணப்படுத்தியோ அல்லது காட்சிப்படுத்தியோ தீரவேண்டும் என்பது. அவரது காணொளிகளைப் பார்த்தபோது அவர் கூறுவது எனக்குச் சரியென்றே பட்டது. ஏனென்றால், எம்மீது நடத்தப்பட்ட அநீதிகளை நாமே பேசவோ அல்லது காட்சிப்படுத்தவோ மறுப்பின், வேறு யார்தான் இதைச் செய்யப்போகிறார் எனும் கேள்வி எனக்குள் வந்தது. ஆகவேதான் எம்மீது நடத்தப்பட்ட அக்கிரமங்கள் தொடர்பான எனது அனுபவங்களை இங்கு பதிவிடலாம் என்று நினைக்கிறேன். இத்தளத்தில் இருக்கும் ஏனையவர்களும் தமது தனிப்பட்ட அனுபவங்களை இங்கு பகிருமாறும் வேண்டிக்கொள்கிறேன்.
  10. புதிய உறுப்பினர் மாதிரி உள் நுளைகிறேன் , உங்கள் அனுமதியுடன்.
  11. நிவாரணப் பொருட்களுடன் திருகோணமலையில் தரையிறங்கிய அமெரிக்க விமானம் ! Published By: Vishnu 12 Dec, 2025 | 08:06 PM அமெரிக்க விமானப்படையின் விமானம் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களுடன் சீன குடா விமான நிலையத்தில் வந்திறங்கியது. இலங்கையின் பேரிடர் நிவாரண உதவிகளை விரைவாக இலங்கை முழுவதும் வழங்கும் திட்டத்தின் கீழ் இவ் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் எடுத்து வரப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் டித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு கிண்ணியா, மூதூர், வெருகல் பகுதிகளின் இடைத்தங்கல் முகாம்களில் இருந்து வீடு திரும்பிய 250 குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள் இன்றைய தினமே வழங்கி வைக்கப்பட்டது. அவுஸ்திரேலிய உதவி திட்டம்,இங்கிலாந்து உதவித் திட்டம்,யுனெப்ஸ் மூலம் வழங்கப்பட்ட நிவாரண பொருட்களே இவ்விமானத்தில் எடுத்து வரப்பட்டிருந்தது.இந்நிவாரண உதவிகளை அகம் மனிதாபிமான வள நிறுவனம் விருத்தி வலையமைப்புடன் இணைந்து உரிய இடங்களுக்கு வழங்கின. மாவட்டத்தில் கிண்ணியா, மூதூர், வெருகல் பிரதேச செயலாளர்களுடன் இணைப்பை ஏற்படுத்தி இச்சேவையை,வொக்கோட் நிறுவனம்,மக்கள் சேவை மன்றம் ஆகிய நிறுவனங்கள் நிவாரண உதவிகளை உரியவர்களுக்கு வழங்கின. இதன் அடிப்படையில் கிண்ணியா பிரதேசத்தில் 50 குடும்பங்களுக்கு மக்கள் சேவை மன்றம் நிறுவனமும், மூதூர் பிரதேசத்தில் 100 குடும்பங்களுக்கு வொக்கோட் நிறுவனமும்,வெருகல் பிரதேசத்தில் 100 குடும்பங்களுக்கு அகம் நிறுவனமும் இன்றைய தினமே நிவாரணங்களை வழங்கி இருந்தன. இந்நிகழ்வில் யுனெப்ஸ் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் மற்றும் அகம் மனிதாபிமான வள நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/233218
  12. அழைப்பு மணியின் சத்தம் கேட்டு அவசரமாகக் கதவைத் திறந்தாள், றீட்டா காபென்பிறாண்ட்ல். கதவைத் திறந்தவள் முன்னால் எட்டுப் பேர்கள் நின்றிருந்தனர். நிறத்தால் வேறுபட்ட அந்நிய நாட்டவர்கள். அந்த எண்மரில் ஒருவர் பெண்ணாக இருந்தார். அந்தப் பெண்ணின் முகத்தில் ஒட்டியிருந்த சோகம், குளமாயிருந்த அவளது கண்கள், றீட்டாவின் மனதை கலங்க வைத்தது. "நாங்கள்….."அவர்களில் ஒரு ஆண் அங்கு நிலவிய நிசப்தத்தை நீக்க முயற்சித்தான். றீட்டா அந்த சத்தம் வந்த திசையை நோக்கித் தன் பார்வையைத் திருப்பினாள். வந்திருந்த பெண் மட்டுமல்ல, ஆண்களும் சோகத்தில்தான் இருந்தார்கள். “இலங்கைத் தமிழர்கள். பாரிசிலிருந்து வருகின்றோம். பூரணநாயகியின் விசயம் கேள்விப்பட்டு….” பேச்சை அவர்கள் முடிக்கவில்லை. இல்லை, அவர்களால் மேற்கொண்டு பேச முடியவில்லை என்பதே சரியாக இருக்கும். இதயத்தின் அடியில் இருந்து எழுந்த அந்தச் சோகம், தொடர்ந்து சொற்களை வரவிடாமல், விழுங்கிக் கொண்டிருந்தது. றீட்டா புரிந்து கொண்டாள், இவர்கள் ஏன் வந்திருக்கிறார்கள் என்று. “உள்ளே வாருங்கள்” அன்பாக அவர்களை அழைத்தாள். மேற்கொண்டு றீட்டா எதுவும் பேசவில்லை. பேசக்கூடிய நிலையில் அவளும் இப்போதில்லை. அவர்களது சோகம் அவளிடமும் சேர்ந்து கொண்டது. சூடான உணவுகளையும், தேநீரையும் அவர்கள் முன் கொண்டு வந்து வைத்தாள் றீட்டா. "நீண்ட தூரப் பயணத்துக்கும், குளிரான இந்த நேரத்துக்கும், இச்சூடான உணவும், தேநீரும் உங்களுக்கு இதமாக இருக்கும். தயவு செய்து உணவருந்துங்கள். “நீங்கள் உணவருந்தி முடிவதற்குள் நான் 'போன்' செய்து பாதர் அம்ரொஸ் றூமரை இங்கு வரவழைக்கிறேன். அவர் உங்களுக்கு முழு விபரமும் தருவார். நான் அவரது வீட்டுச்சமையல் வேலை செய்பவள். எனது பெயர் ரீட்டா காபென்பிறான்ட்ல்." டிசம்பர் 7ம் திகதி செக் நாட்டில் இருந்து ஜேர்மனியில் உள்ள பயர்ன் மாநில எல்லையை நோக்கி முழங்கால் வரை புதையும் உறைபனியூடாக நால்வர் நடந்து வந்து கொண்டிருந்தனர். அதில் பூரணநாயகியும் இருந்தாள். அவளுடன் இன்னும் ஒரு தமிழ் இளைஞனும், இரண்டு ஏஜென்சிகளும் நடந்து வந்தனர். இரண்டு ஈழத் தமிழர்களதும் அணிந்திருந்த உடைகள் குளிர்காலத்திற்கு ஏற்றவை அல்ல. . பனிக்குளிர், பூரணநாயகி அணிந்திருந்த மெல்லிய உடுப்புகளுக்கூடாகவும், அவளது சாதாரண சப்பாத்துக்கூடாகவும் உட்புகுந்து, அவளது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் உறையச் செய்து கொண்டிருந்தது. இவர்களது திசை ஓசர் மலையை நோக்கிய குறுகிய ஒரு பாதையாக இருந்தது. ஒரு கிலோமீற்றர் உயர மலையை ஒரு விதமாகச் சென்றடைந்தார்கள். அந்த மலையின் முடிவில் ஆரம்பமாகியது ஜேர்மனிய எல்லை. முழங்கால் வரை உள்ள பனியில் காலை வைத்து திரும்ப எடுத்து நடப்பதே பெரும் சிரமமாக இருந்தது. இப்படி ஒரு தடவை காலை பனியில் வைத்து எடுக்கும் போது காலில் போட்டிருந்த இளைஞனின் சப்பாத்து பனிக்குள் புதைந்து போனது அதைத்தேடி எடுக்க அந்த இளைஞனுக்கு அவகாசமில்லை. முன்னால் சென்று கொண்டிருக்கும் அந்த ஏஜென்சிகள் தங்கள் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். பின்னால் வரும் இவ் இருவரைப் பற்றிய கவலைகள், அவர்கள் படும் வேதனைகள் அவர்களுக்குத் தேவையில்லாதிருந்தது. அவர்களுக்குத் தேவையான 'தரகு'ப் பணம் அவர்களுக்குக் கிடைத்து விட்டது. ஜெர்மனிய எல்லைக்குள் இருவரையும் விட்டுவிட்டால் ஏஜென்சிகளின் வேலை முடிந்து விடும். இருட்டுநேரம் பார்வையைத் தவறவிட்டால் ஏஜென்சிகள் மறைந்து விடுவார்கள். இளைஞன் சப்பாத்தைப் பனிக்குள் விட்டுவிட்டு காலில் போட்டிருந்த காலுறையுடன் தனது பயணத்தைத் தொடர்ந்தான் பூரண நாயகியால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. ஜேர்மனிய எல்லைக்குள், 500 மீட்டர் தூரத்தில் இருந்த ஹோட்டல் ஒன்றின் வெளிச்சம் கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. பூரணநாயகியால் மேற்கொண்டு நடக்க முடியாத நிலையில் அந்த பனிக்குள் தள்ளாடியபடி இருந்து விட்டார். மறுநாள் பொழுது வழமைபோல் விடிந்தது. ஹோட்டல் உரிமையாளர் யூர்கன் கோல்ஸ், தனது ஹோட்டலின் முன்பாக நின்ற இளைஞனை உற்று நோக்கினார். ஒரு காலில் Cowboy Stiefelம், மறுகாலில் வெறும் காலுறையும் அணிந்து கொண்டு, பயத்துடன் என்ன செய்வது? என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த அந்த இளைஞனை அநுதாபத்துடன் அணுகினார். "ஏதாவது உதவி வேண்டுமா?" என்று அந்தத் தமிழ் இளைஞனை பார்த்து அவர் ஜேர்மனிய மொழியில் கேட்டதை, அந்த தமிழ் இளைஞன் விளங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.ஆனாலும் தான் ஒரு தடவை தொலைபேசியில் கதைக்கவேண்டுமென்று தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அந்த இளைஞன் கேட்டான். அதைப் புரிந்து கொண்ட யூர்கன் கோல்ஸ், அவனைத் தனது தொலைபேசியைப் பாவிக்க அநுமதித்தாரர். தொலைபேசியில் அந்த இளைஞன் கதைத்து முடித்தபின் யூர்கன் கோல்ஸிற்கு தனது நன்றிகளைத் தெரிவித்து விட்டு வெளியில் நடக்கத் தொடங்கினான். காட்டுப் பாதையொன்றில் திடீரென வந்த ஜேர்மனியப் பொலிஸாரின் கண்களில் அந்த இளைஞன் பட்டு விடுகிறான். கேள்விகளுக்கு மேல் அவர்கள் அந்தத் தமிழ் இளைஞனை கேட்கத் தொடங்கினார்கள். அவனும் எதையும் மறைக்க விரும்பவில்லை நடந்தவற்றை அப்படியே. ஒப்புவித்தான். பூரணநாயகியைத் தனது சகோதரியெனச் சொல்லி வைத்தான். ஆனால் உண்மையிலேயே பூரணநாயகி அவன் சொந்தச் சகோதரியல்ல. நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட பொலிஸார், அந்த இளைஞனையும் கூட்டிக் கொண்டு பூரணநாயகியைத் தேடிச் சென்றார்கள். அவர்கள் கண்டது, பனிகளுடன் உறைந்து போயிருந்த பூரணநாயகியின் உடலைத்தான். ஜேர்மனியப் பத்திரிகைகள், இத்தகவலை பத்திரிகைகளில் பிரசுரித்த போதும், யாருமே பூரணநாயகியைப் பற்றி உரிமை கோராத பட்சத்தில், அவரது பூதவுடல் கிறிஸ்தவ தேவாலயத்தின் பின்புறமாக இருந்த சேமக் காலையில் டிசம்பர் 14ந் திகதி கத்தோலிக்க முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. அவளின் கல்லறையில் "அமைதியாக உறங்கு" என்ற வாசகங்கள் பொருந்திய மரத்தினால் செய்த சிலுவையை வைத்து, அந்த நகரத்து மக்கள் பூக்களினால் அஞ்சலி செய்தனர். "நான் கத்தோலிக்க பாதிரியார் அம்புரோஸ் ரூமர்" பாதிரியார் தன்னை அந்த எட்டுப் பேருக்கும்" அறிமுகம் செய்து கொண்டார். தன்னுடன் கூடவந்த அந்த நகரத்து மேயர் ஜோகன் முல்பவுரையும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் எல்லோருமாக பூரண நாயகியை அடக்கம் செய்த இடத்துக்குச் சென்றனர். நன்றாக இருண்டு விட்ட நேரத்திலும், பயங்கரமான குளிருக்கு மத்தியிலும் எல்லோரும் பூரணநாயகியின் கல்லறை முன் நின்றனர். எண்மரில் ஒருவரான ஒரு பெண், இவர் பூரண நாயகியின் மூத்த சகோதரி, கல்லறை மேல் விழுந்து கதறியழுத காட்சி மேஐரை கரைத்துவிட்டது. "ஒரு பெண்ணின் சடலம். இறந்தது டிசம்பர் 7ந் திகதி காலை 9.45 மணிக்கு, என்ற தகவலே எனக்குத் தெரியும். ஆனால்...... இப்படி ....இதன் பின்னால் ஒரு மனித சோகத்தை நான் எதிர்பர்க்க வில்லை." என்று மேஜர் கண்கள் கலங்க அந்த இடத்தில் கூறினார். "பூரண நாயகி ஒரு இந்துவாக இருந்த போதிலும், அவரை அடக்கம் செய்து அஞ்சலி செய்வது எங்களது கடமை. நான் அரசியல்வாதியாகவோ, காவல் துறையிலோ இருக்க விரும்பவில்லை. அகதிகளாக அல்லல் பட்டு, உயிர் வாழ நம்பிக்கையுடன் ஓடி வரும் மக்களை அரவணைத்து ஆதரவு தரவே விரும்புகிறேன" எனப் பாதிரியார் அம்புரோஸ் ரூமர் தனது உரையில் தெரிவித்தார். ஏஜென்சிகளை நம்பி, ஜேர்மன் எல்லையில் ஆற்றைக் கடக்கும் போதும், குளிரினாலும் பல அகதிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள் லொறிகளில் அடைத்து வரப்பட்டு மூச்சுத்திணறியும் பலர் இறந்திருக்கிறார்கள். 1995ம் ஆண்டு ரூமேனியாவில் இருந்து ஹங்கேரி ஊடாக ஜேர்மனிக்கு கொண்டு வரப்பட்ட 18 அகதிகள் லொறிக்குள் மூச்சுத் திணறி இறந்திருக்கிறார்கள். கண்மூடித்தனமாக ஏஜென்சிகளை நம்பி, பெரும் பணத்தைக் கொடுத்து, உயிரைப் பணயம் வைக்கும் செயல் இதுவென ஜேர்மனிய காவல்துறை தெரிவித்திருந்தது. ஐரோப்பிய நாடுகள், அகதிகளாக வரும் வெளி நாட்டவர்கள், தங்கள் நாடுகளுக்குள் நுளைய முயலும் ஒவ்வொரு வழிகளையும் கண்டறிந்து மூடி வருகிறார்கள். ஆனாலும் அகதிகளாக வருபவர்கள் ஏதாவது வழியில் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். கிருபன் இணைத்திருந்த ஷோபா சக்தியின் “பொப்பி என்பது புனை பெயர்” கதையை வாசித்த போது, எனக்கு நினைவுக்கு வந்தது பூரணநாயகியின் சம்பவம்தான். 1995ம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவம். நான் நினைக்கிறேன், ஐரோப்பிய நாட்டுக்குள் நுளையும் ஈழத் தமிழர்களின் முதல் மரணம் பூரணநாயகியினுடையதாகவே இருக்க வேண்டும். 07.12.1995இல் நிகழ்ந்த அந்த மரணத்தைப் பற்றி அப்பொழுது நான் எழுதியது இது. சரியாக முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு (07.12.2025) கிருபன் பூரணநாயகியை நினைவூட்டியிருக்கின்றார்.
  13. அகதிகளாக வருவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. உயிர் தப்பிப் பிழைக்கவேண்டும் என்பதுதான் முக்கியமானது. மத்திய தரைக் கடலிலும், ஆங்கிலக் கால்வாயிலும் பலர் கடலில் மூழ்கி இறக்கும்போது அம்மரணங்கள் வெறும் இலக்கங்களாகவே செய்திகளில் வருகின்றன. அவர்களின் கதைகள் அறியப்படாமலேயே போகும். தமிழர்கள் அதிகளவு புலம்பெயர்ந்த காலத்தில் ஆபத்தான வழிகள் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து மேற்கு ஐரோப்பாவுக்குள் நுழைவதுதான். சிலர் உறைபனிக்குள் சிக்கி உயிர்துறந்தனர். அண்மைக் காலங்களில் ரஷ்யா ஊடாக வரமுயன்றவர்களை உக்கிரேன் யுத்தமுனைக்கு அனுப்பியதும் செய்திகளாக வந்தது. ஆனாலும் தமது இலக்கை அடையவேண்டும் என்று வரும் அகதிகள் எவ்வகை ஆபத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்கள். மனிதக் கடத்தல்காரர்கள், முகவர்களுக்கு அவர்கள் பணம் சம்பாதிக்கும் முதலீடு. நானும் பதின்ம வயதில் அகதியாக வந்தேன். ஆனால் ஒப்பீட்டளவில் ஆபத்துக்கள் இல்லாத வழி. பல அனுபவங்களைத் தந்து என்னை நானே கண்டுகொள்ள உதவியது!
  14. குவின்டன் துடுப்பாட்டத்திலும் பார்ட்மன் பந்துவீச்சிலும் அசத்தல்; இந்தியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது தென் ஆபிரிக்கா 12 Dec, 2025 | 12:42 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கு எதிராக நியூ சண்டிகார் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (11) இரவு நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்கா 51 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை தென் ஆபிரிக்கா 1 - 1 என சமப்படுத்தியுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 101 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது. இரண்டாவது போட்டியில் குவின்டன் டி கொக் அதிரடியாக குவித்த அரைச் சதம், ஒட்நீல் பார்ட்மன் பதிவுசெய்த 4 விக்கெட் குவியல் என்பன தென் ஆபிரிக்காவின் வெற்றியில் பிரதான பங்காற்றின. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா குவின்டன் டி கொக்கின் அதிரடி துடுப்பாட்டத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 214 ஓட்டங்களைக் குவித்தது. குவின்டன் டி கொக் 46 பந்துகளில் 5 பவுண்டறிகள், 7 சிக்ஸ்கள் உட்பட 90 ஓட்டங்களைப் பெற்றார். அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராமுடன் 2ஆவது விக்கெட்டில் 83 ஓட்டங்களை குவின்டன் டி கொக் பகிர்ந்தார். இதேவேளை, டொனவன் பெரெய்ரா, டேவிட் மில்லர் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவுக்கு மொத்த எண்ணிக்கை 200 ஓட்டங்களைக் கடக்க உதவினர். டொனவன் பெரெய்ரா 30 ஓட்டங்களுடனும் டேவிட் மில்லர் 20 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். ஏய்டன் மார்க்ராம் 29 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 214 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 162 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இந்தியாவின் எதிர்கால ரி20 நட்சத்திரங்கள் என வருணிக்கப்படும் ஷுப்மன் கில் (0), அணித் தலைவர் சூரியகுமார் யாதவ் (5) ஆகிய இருவரும் இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர். துடுப்பாட்ட வரிசையில் 3ஆம் இலக்கத்துக்கு உயர்த்தப்பட்ட அக்சார் பட்டெல் 21 ஓட்டங்களைப் பெற்றார். மத்திய வரிசையில் திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். திலக் வர்மா 2 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 62 ஓட்டங்களையம் ஹார்திக் பாண்டியா 20 ஓட்டங்களையும் ஜிட்டேஷ் ஷர்மா 27 ஓட்டங்களையும் கைப்பற்றினர். பந்துவீச்சில் ஒட்நீல் பார்ட்மன் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் லுங்கி நிகிடி, மார்க்கோ ஜென்சன், லூத்தோ சிப்பல்மா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: குவின்டன் டி கொக். https://www.virakesari.lk/article/233172
  15. அவர்களைப்போல் சில்லறைத்தனமாக நடந்துகொள்ளாமல், பெருந்தன்மையோடு நடந்துகொள்ளும் கொள்கைத்திட்டம். அதனால் மதத்தை தவிர்த்திருக்கலாம். அது பாரபட்ஷம் (துவேசம்) காட்டுதல் என்று தீர்ப்பாகலாம். அவர்கள் எல்லோரையும் சமமாக நடத்துவதாலேயே இன்று பல மொழி, மத, கலாச்சார மக்கள் அங்கு வாழ முடிகிறது. இரண்டு மொழி உள்ள நாட்டிலேயே எத்தனை பாகுபாடுகள். இவர்கள் எந்தப்பிரச்னையுமில்லாமல் எல்லோரையும் வாழ விடுகிறார்கள். இவர்கள் வந்து அந்தபொதுப்பண்பை மாற்ற விளைவதே பிரச்சனை. இனிமேல் யாரும் எங்கேயும் எதையும் கழுவலாம் என்கிற சட்டம் வருமா அங்கே? பிறகு குத்துது குடையுது என்பார்கள். அடைக்கலம் கொடுத்த நாட்டிலேயே தங்கள் மதத்தின் பெயரால் தாராளமான கொலைகள், பாதிக்கப்படுவது அடைக்கல பெருந்தன்மையை எதிர்க்காத சாதாரண மக்களே
  16. அன்று இனக்கலவரத்தினால் அடியுண்டு சிதறுண்ட மக்களை காந்தீயம் என்கிற அமைப்பு வரவேற்று அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து குடியமர்த்தினர். ஆனாலும் கணிசமான மக்கள் மீண்டும் தமது பழைய இடங்களுக்கு சென்றனர். ஒரு இடத்தில வாழ்ந்து பழக்கப்பட்டவர்களை திடீரென வேறொரு இடத்திற்கு மாற்றுவது அவர்களின் இயல்பான வாழ்வை பாதிக்கும், அதோடு ஆண்டாண்டு காலமாக நாட்டுக்காக உழைத்து ஓடாகிப்போன அவர்களுக்கு வேண்டிய நிவாரணத்தை கொடுத்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டியது அரசின் கடமை. இவர்களை நாம் வரவேற்பது பிரச்சனையல்ல, அவர்கள் எமது தயவில் வாழ வேண்டிய நிலையிலும் சங்கடத்திலும் வாழ்வதிலும் பார்க்க அவர்களுக்குரிய நஷ்ட ஈடு கொடுக்கப்படவேண்டும், வாழ்வாதாரம் உயர்த்தப்படவேண்டும், அதற்கு அவர்கள் உரித்துடையவர்கள். அவர்களுக்கு சேரவேண்டிய உரிமைகளை தடுத்து, தடங்கல்களை ஏற்படுத்தி அரசின் கடமைப்பாட்டிலிருந்து வலிய விலக்கிக்கொள்வதாக அமையும். அவர்கள் பெற வேண்டிய நிவாரணங்களை நஷ்ட ஈட்டைப்பெற முழு உரித்துமுடையவர்கள் அது அவர்களது உரிமை. அதை தடுத்து பரோபஹாரம் செய்கிறோம் எனும் பெயரில் ஏதிலிகளாக்காமல் இருந்தால் சரி. அதன் பின் அரசும் தனது கடமையிலிருந்து அவர்களை கைகழுவி விடும். பிறகு அவர்களுக்கு எந்த ஆதரவுமில்லாமல் போய்விடும். தமிழரசியல் வாதிகள் தமது மக்களையே அவர்களின் தேவைகளையே கவனிப்பதில்லை இதில் இவர்களை அழைத்து வாழ வைத்து விடுவார்கள். மனோ கணேசன் தனது கடமையிலிருந்து இலகுவாக தப்பித்துக்கொள்ள முயற்சிக்கிறார்.
  17. மலையக தமிழ் மக்களை வடக்கு / கிழக்கு இக்கு குடியமர்த்துவது நல்ல ஒரு முடிவு. இதன் முலாம் தமிழரது எண்ணிக்கையை நாங்கள் உயர்த்தலாம் மற்றும் சிங்கள குடியேற்றங்களை குறைக்கலாம். எங்கள் வீட்டிலும் அயல் தோடடங்களிலும் நிறைய மலையக தமிழர்கள் வாழ்ந்தார்கள். நாங்கள் அவர்களிடம் மற்றவர்கள் போல்தான் பழகினோம். மிக நல்ல மனிதர்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமாகவே இருந்தது. சில தமிழ் மக்கள் தமது வறட்டு கெளரவத்தை விடதான் வேண்டும்.
  18. சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை இன்று (11) ஆரம்பமானது. ஆரம்ப விலை இந்தியா மற்றும் இலங்கையில் 2026 பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறும் இத்தொடரின் டிக்கெட்டுகளின் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்குக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. @கிருபன் @கந்தப்பு போட்டியை இருவரில் ஒருவர் முன்வந்து நடத்தலாமே. அடுத்து ஐபிஎல் லும் வருகிறது. இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை ஆரம்பம் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை இன்று (11) ஆரம்பமானது. ஆரம்ப விலை இந்தியா மற்றும் இலங்கையில் 2026 பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறும் இத்தொடரின் டிக்கெட்டுகளின் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்குக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப விலை (இந்தியா): 100 இந்திய ரூபா, ஆரம்ப விலை (இலங்கை): 1000 ரூபா ஆகும். ஐ.சி.சி.யின் இந்த நடவடிக்கை, கிரிக்கெட் ஆர்வலர்கள் அனைவரும் குறைந்த செலவில் உலகத் தரம் வாய்ந்த போட்டிகளை மைதானத்தில் சென்று பார்ப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Tamilwinஇருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு...சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை இன்று (11) ஆரம்பம...
  19. இங்குள்ள பேர்மிங்கம் இந்த கூட்டம் வாழும் இடத்தில் போய் பார்த்தவர்களுக்கு புரியும் ஏன் பிரித்தானிய அகதிகளை அவசர அவசரமாய் தடுப்பதில் மும்முரம் காட்டுகிறது என்று .அவர்கள் இடத்தில் போக்குவரத்து விதிகள் வாகன தரிப்பிடங்கள் எவற்றையுமே மதிப்பதில்லை வாகன தண்டபனம் ரிக்கெட் வைப்பவர்கள் பலமுறை அடிவாங்கி உள்ளார்கள் .அந்த பகுதியில் வீடு வாடகைக்கு எடுப்பது என்றால் அரச உதவிகளில் தங்கியுள்ளவர்களுக்கே முன்னுரிமை .அந்த பகுதி கடைகளில் கார்ட் மிசின் என்பதே கிடையாது எல்லாமே பண புழக்கம் அதற்கே முன்னுரிமை . அதே போல் கிழக்கு லண்டனும் ஈஸ்ட் காம் தெருக்களும் மெல்ல மெல்ல மாறிக்கொண்டு வருகிறது வெள்ளி கிழமைகளில் டபுள் மஞ்சள் கோட்டில் சர்வ சாதரணமாய் கார்கள் பார்க் பண்ணி விட்டு தொழுகைக்கு செல்வார்கள் கேட்ப்பார் பார்ப்பார் கிடையாது காரணம் அந்த பகுதி அரசியல்வாதி அவர்கள் இனமாய் இருப்பார் . அதே ஈஸ்ட் காம் தெருவில் மகாலட்சுமி கோவில் கோபுரம் கட்ட அதற்கு எதிராக அருகில் உள்ள மசூதிகளில் இருந்து எதிர்ப்பு பெட்டிசம் போக கவுன்சில் நீதி மன்றத்தை நாட பல காலம் இழுபட்டது கடைசியில் நீதிபதி சொன்ன தீர்ப்பு அனைவரும் அறிந்ததே .
  20. எனது முதலாவது கருத்து என்னவென்றால் கப்பல் நினைப்பில் இருப்பவர்கள் வெளிநாடு வரக்கூடாது. இரண்டாவது கருத்து என்னவென்றால் அந்த கப்பல் நினைப்பு உள்ளவர்களுக்கான காணொளிகளை தூக்கிக்கொண்டு திரியக்கூடாது. அவர் கஷ்டப்பட்டு வேலை செய்ய மாட்டாராம். அவர் செல்வந்தராம். நிறம் கூடினவராம்.வடிவானவராம்.நடிகர் மாதிரி இருக்கிறாராம்.இதுதான் ஒரு மனிதனுக்கு மூலதனமென்றால் அந்த மனிதரை கடந்து செல்வதே மேல். மற்றும்படி.....காணொளியில் வரும் ஜேர்மனியின் கடின வாழ்க்கை சித்தரிப்பு நம்பக்கூடிய மாதிரி இல்லை.
  21. இது ஒரு நல்ல முயற்சி இல்லை என்றே எனக்குத் தோன்றுகின்றது. அரசை நிர்ப்பந்திப்பதற்கான ஒரு வெறும் பேச்சாக இது இருக்கலாம், ஆனால் இது நடைமுறையில் மலையக தமிழ் மக்களை பல தசாப்தங்கள் பின்னுக்கு தள்ளி விடும் ஒரு நிகழ்வகாவே இருக்கும். 1970ம் மற்றும் 80 ஆண்டுகளில் என்னுடைய ஊரில் குடியேற்ற்றத் திட்டம் என்னும் ஒரு சிறிய இடம் இருந்தது. இது ஊரின் சுடலையின் முன்னே இருந்தது. பருத்தித்துறை - வல்வெட்டித்துறை வீதியின் ஒரு பக்கம் சுடலையும், மறுபக்கம் இந்த குடியேற்றத் திட்டமும் இருந்தன. அங்கு இந்த மலையக மக்களே குடும்பங்களாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் எல்லோரும் நகரசபையில் சுத்திகரிப்பு பணியாளர்களாக வேலை செய்தனர். வெறும் கைகளாலும், கைகளால் தள்ளும் வண்டில்களும் கொண்டு அவர்கள் தங்கள் வேலைகளைச் செய்தனர். மனிதக் கழிவுகளை கூட அவர்களே அள்ளினார்கள்...........😭😭. அவர்களை நான் வேறு எங்கும், எந்த நிகழ்வுகளிலும் கண்டது இல்லை. அவர்களின் பிள்ளைகள் எங்களுடன் பாடசாலையில் படித்தார்களா என்றும் எனக்கு தெரியவில்லை. கோவில்களுக்குள் நிச்சயம் விட்டிருக்கமாட்டார்கள். யாழ்ப்பாண மக்கள் வறட்டுத்தனமான கௌரவம் மிகவும் அதிகமாக உள்ள சமூகங்களில் ஒன்று. இதை நான் ஊரில் இருந்த நாட்களில் என் வீட்டிலேயே பார்த்திருக்கின்றேன். யாழ்ப்பாண மக்கள் வேறு எவரையும் ஏற்றுக் கொள்வதில்லை. இப்பொழுது நான் ஊருக்கு போகும் போதெல்லாம் அந்த குடியேற்ற திட்டம் இருந்த இடத்திற்கு ஒரு தடவையாவது போகின்றேன். அங்கு எவரும் இல்லை. பாழடைந்து போய்விட்டது. ஆனாலும் அங்கே யாரையோ தேடுகின்றேன். இலங்கையிலிருந்து சாஸ்திரி - பண்டா ஒப்பந்தத்தின் பின் தமிழ்நாட்டில் குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் நிலையும் தமிழ்நாட்டில் இதுவேதான். அங்கும் அவர்களை எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. விளிம்பு நிலை மக்களாக, பட்டியலின மக்களாகவே அவர்கள் இன்றும் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மலையகப் பூமியே மலையக தமிழ் மக்களுக்கு சுயமரியாதையையும், கௌரவத்தையும் கொடுக்கும். மலையகத்தை கட்டி எழுப்ப வேண்டியது அரசினது கடமையே. அதை இனியாயினும் செய்ய முன்வந்தார்கள் என்றால் அதுவே மலையக மக்களுக்கான சரியான ஒரு தீர்வாக இருக்கும். ஆனால் இலங்கையின் வடக்கும், கிழக்கும் குடிசனப் பரம்பல் மிகக் குறைந்த இடங்களாக வந்துவிட்டன. வவுனியாவின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வரப் போகும் சிங்கள மக்களை எதுவும் தடுக்கப் போவதில்லை.
  22. மதம் புகுத்தப்பட்டது வேறு சமாச்சாரம். ஒரு நாடு தன்னை இன்ன/ இந்த மத சார்பு நாடாக அடையாளப்படுத்துவது முக்கிய விடயம் என நான் நினைக்கின்றேன். இது சம்பந்தமாக உங்கள் கருத்தை எதிர்பார்க்கின்றேன். கந்தையர்! உங்களுக்கு ஐ போனிலை எழுதுறது சரிப்பட்டு வராது போல கிடக்கு. சொல்லுக்கு சொல் முற்றுப்புள்ளி வைக்கிறது வடிவில்லாமல் கிடக்கு.😁 சரி அது கிடக்கட்டும்....😊 அந்த ஆசிரியர் ஏன் எதற்காக பிரித்தானியா கிறிஸ்தவ நாடு என்பதை கூறினார் என்பதற்கு விளக்கங்கள் இல்லை.அவர் சும்மா வீதியால் சென்ற ஒருவரை கூப்பிட்டு இது கிறிஸ்தவநாடு என சொல்லவில்லை.அல்லது சந்தியில் நின்று இது கிறிஸ்தவ நாடு என மதவாதம் பேசவில்லை. எனது அனுமானம் என்னவெனில்..... அந்த முஸ்லீம் மாணவர் ஒட்டு மொத்த கழிவறையையும் நாறடித்திருப்பார்.இதை ஆசிரியர் கண்டித்திருப்பார். அதற்கு அந்த மாணவர் எங்கள் மார்க்கம்,அல்லா அது இது என பொங்கியிருப்பார். ஆசிரியரும் தன் பங்கிற்கு கொட்டியிருப்பார்.அவ்வளவுதான்😎 இன்னுமொன்று..... அந்த ஆசிரியருக்கு தண்டனை பகிரங்கமாக கொடுக்காமல் விட்டால்....சம்பந்தப்பட்ட அவர்கள் சம்பந்தமான குஞ்சுகுருமன்கள் எங்கும் எப்போதும் காலம் காத்து சின்ன வெங்காயம் ,பச்சைமிளைகாய் நறுக்கிற கத்தியால அப்பாவி பொதுமக்களை குதறிக்கொண்டே இருப்பார்கள். இது இன்றைய உலக அனுபவங்கள்😭
  23. இலங்கைக்கு அடிமைகளாக இருந்தவர்களை இப்போது இலங்கைத் தமிழர்களும் அவர்களை அடிமைகளாக மாற்றலாம் என்ற ஒரு முயற்சிகவே இந்த வரவேற்பினை நான் பார்க்கின்றேன் மலையகம் இந்திய வம்சாவழித் தமிழர்களின் தாயகம். அங்கெ அவர்களுக்கு உரிய உரிமைகள் அதாவது முதன்மையாக காணி உரிமை இல்லை . பல சதாப்தங்களாக மாறி மாறி வந்த சிங்கள அரசுகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் குறிப்பாக மலையகத் தமிழக கட்சிகளும் அந்த மக்களுடைய வாழ்வுரிமையை எந்த விதத்திலும் மேம்படுத்தல் செய்யாமல் தங்கள் அரசியல் தேவைகளுக்காக ஏற்ற நேரத்தில் வாய்ப்பு பேச்சுக்களால் ஏமாற்றி வந்துள்ளனர். மனோ கணேசன் மீண்டும் மலையக மக்களை ஏமாற்றி அல்லது அவர்களை முன்னிறுத்தித் தனது அரசியல் ஆதாயத்தை தேட முயல்கின்றார். மலையக மக்களின் வாழ்வாதாரம் பெரும் தோட்டம் மற்றும் சிறு தோட்டங்களை நம்பி இருக்கும் நிலையில்..... வட கிழக்கில் அகதிகளாக அவர்களை மீண்டும் ஒருமுறை இடம்பெயர வைக்க முயற்சிப்பதா ? அந்த முடிவு எப்போதும் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு முடிவாகவே இருக்கும் மனோ கணேசன் யார்? அவர் ரணிலை இத்தனை காலம் ஆதரித்தவர் இப்போது சஜித் அவர்களின் ஆதரவாளர்.. அனுராவின் ஆட்சிக்கு எதிராக வினையாற்ற மலையக மக்களை பகடைக் காய்களாகப் பயன்படுத்த நினைக்கின்றார் மனோ கணேசன் . அதற்கு எங்கள் தமிழ் மக்கள் கடந்த தேர்தலில் நிராகரித்த சஜித்தின் ஆதரவு நிலையில் இருக்கும் சுமந்திரனும் துதி பாடுகின்றார் . மலையகத்தில் மலையக மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் பேணப்பட்டு அவர்களை அவர்களின் இடத்திலேயே வாழ வழி சமைக்க வேண்டும். மலையகம் இந்திய வம்சாவழித் தமிழர்களின் தாயகம் என்று ரோஹண விஜேவீர 70 களிலேயே அறை கூவியிருந்தார்
  24. வாழைப்பூ வடை -------------------------- வீட்டுக்கு வெளியே என்னை இருக்க வைத்திருப்பதற்கு அவன் ஏற்கனவே இரண்டு தடவைகள் மன்னிப்பு கேட்டிருந்தான். வீட்டுச் சுற்றுமதிலுக்கும் வெளியே இரண்டு பிளாஸ்டிக் கதிரைகளையும், ஒரு சின்ன பிளாஸ்டிக் மேசையும் போட்டிருந்தான். எனக்கு துடக்கு என்று அவன் சொன்னான். இறந்தவர் எனக்கு ஆண் வழியில் உறவுமுறை என்பதால் இந்த துடக்கு 31 நாட்கள் வரை இருக்கும் என்றான். அவனின் வீட்டில் ஏதோ கோவில் விரதமோ அல்லது மாலை போட்டிருக்கின்றார்கள், அதனால் என்னை வீட்டின் உள்ளே விடவில்லை என்றும் சொன்னான். நான் அதை சரியாகக் கவனிக்கவில்லை. பிளாஸ்டிக் பொருட்கள் அழிவதும் அரிது, அவற்றை துடக்கு கூட தொட முடியாது போல என்று நினைத்துக் கொண்டே கவனமாக கதிரையின் உள்ளே வசதியாக உட்கார முயன்று கொண்டிருந்தேன். நேற்று துக்க வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வந்த ஒரு குடும்பத்தில் ஒரு மகன் மிகவும் செழிப்பாக இருந்தார். அவர் அங்கிருந்த பிளாஸ்டிக் கதிரைக்குள் மிகவும் சிரமப்பட்டே தன்னை திணித்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு தடவை எட்டி எடுப்பதற்காக அசைந்த போது அந்தக் கதிரை ஒரு கணம் வளைந்து படீரென்று உடைந்து போனது. துக்கம் விசாரிக்க வந்தவர்கள் பதறிப் போனார்கள், அவர்களின் பிள்ளைக்கு ஏதேனும் அடிபட்டு விட்டதோ என்று. அவனை நான் கடைசியாகப் பார்த்து 35 வருடங்களுக்கு மேல் இருக்கும். சிறு வயதில் ஒரே வகுப்பில் படித்தோம். பாடசாலையிலிருந்து என்னுடைய வீட்டுக்கு வரும் வழியிலேயே அவனுடைய வீடு இருந்தது. அவனுடைய வீட்டுக்கு அடிக்கடி போயிருக்கின்றேன். அங்கே எல்லோருமே அழகாக இருந்தார்கள். பயில்வான்கள் போன்ற உடற்கட்டும் அவர்களுக்கு இருந்தது. படிப்பு தான் சுத்தமாக வரவில்லை. அவனோ அல்லது அவன் வீட்டிலோ அதையிட்டு எவரும் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. என் வீட்டிலும் அதே நிலைதான். பிள்ளைகள் காலை எழும்பி கண் காணாமல் எங்கேயாவது போனால் போதும் என்றே பல குடும்பங்கள் இருந்தன. தினமும் பாடசாலை முடிந்த பின்னும் நாங்கள் உடனேயே வீடு போய் சேர்ந்ததும் இல்லை. அங்கங்கே நின்று இருந்து என்று வீடு போக பொழுது செக்கல் ஆகிவிடும். எவரும் எவரையும் தேடவில்லை என்பது இப்போது ஆச்சரியமாக இருக்கின்றது. ஒரு நாள் பாடசாலை முடிந்து கடலாலும், கரையாலும் நடந்து வந்து கொண்டிருந்த போது, இரண்டு ஆட்கள் அளவு இருக்கும் பெரிய சுறா மீன் ஒன்றை கடல் தண்ணீரில் வைத்து துண்டு துண்டாக்கிக் கொண்டிருந்தார்கள். நீலக் கடல் செக்கச் சிவந்து இருந்தது அப்போது. பின்னரும் அந்தக் கடல் பல சமயங்களில் சிவப்பாகியது. உலகில் கடல் போல வேறு எதுவும் தன்னைத் தானே உடனடியாக விரைவாகச் சுத்தம் செய்து கொள்வதில்லை. பயில்வான் போன்று இருந்தவன் இப்போது மிகவும் மெலிந்து இருந்தான், ஆனால் முகம் அதே அழகுடன் இருந்தது. அடுத்த கதிரையின் நுனியில் ஒரு எச்சரிக்கையுடன் இருந்து கொண்டே எப்படியடா இருக்கின்றாய் என்று ஆரம்பித்தான். அவன் வீட்டிலேயும் யாரோ ஒரு கதிரையை உடைத்து இருப்பார்கள் போல. நல்லா இருக்கின்றேனடா என்று சொல்ல வேண்டிய பதிலைச் சொன்னேன். மனைவியையும், மகளையும் கூப்பிட்டு அழைத்து என்னை அறிமுகப்படுத்தினான். நாங்கள் சிறு வயது நண்பர்கள் மட்டும் இல்லை, சொந்தக்காரர்கள் கூட என்று அவர்களுக்கு சொன்னான். அவர்கள் கொஞ்சம் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். துக்கம் நடந்த வீட்டுக்கும் அவனுக்கும் போன வாரம் கூட பெரிய சண்டை நடந்து கொண்டிருந்ததாக எனக்கு முன்னரேயே சொல்லி இருந்தார்கள். அவன் வளர்க்கும் கோழிகளை அவர்களின் வீட்டு நாய்கள் கடித்துக் கொன்று விட்டன என்பதே கடைசி சண்டைக்கான காரணம். அவர்களோ தங்களிடம் நாய்களே இல்லை என்கின்றார்கள். ஆனால் தெருவில் போய் வரும் வாழும் எந்த நாய்க்கும், அதன் குட்டிகளுக்கும் அவர்கள் மிஞ்சுவதை போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களின் வீட்டின் முன்னால் எப்போதும் ஒரு நாலு ஐந்து படுத்தே இருந்தன. எல்லோருமே சொந்தமா என்பதே அவனுடைய மனைவியினதும், மகளினதும் ஆச்சரியமாக இருக்கவேண்டும். தலைமுறை தலைமுறையாக அங்கேயே பிறந்து, அங்கேயே திருமணமும் முடித்தால், அங்கே எல்லோரும் சொந்தமாகத்தானே இருக்கவேண்டும். பிராமண குடும்பங்களில் வழக்கத்தில் இருக்கும் ஒரே கோத்திரத்தில் இருப்பவர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற முறையை அந்த ஊரில் அறிமுகப்படுத்தினால், அந்த ஊரின் நிலை சிக்கலாகிவிடும். நீ எப்படியடா இருக்கின்றாய் என்று தான் நானும் ஆரம்பித்தேன். வசதிக்கு ஒரு குறைவும் இல்லை என்றே தெரிந்தது. அழகான பெரிய புது வீடு கட்டியிருந்தான். வீட்டின் வெளியே தெருவிலேயே இரண்டு வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு உள்ளூர் சுற்றுலாக்களையும், வாகனங்களையும், ஏனைய வசதிகளையும் செய்து கொடுக்கும் தொழிலில் இருந்தான். தொழிலும் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது என்றே தெரிந்தது. நான் நினைத்தவற்றையே அவனும் சொன்னான். வாழைப்பூ வடை என்றபடியே அவனுடைய மகள் ஒரு தட்டு நிறைய வடைகளை கொண்டு வந்து பிளாஸ்டிக் மேசையில் வைத்தார். வாழைப்பூ வடை சாப்பிட்டு சில வருடங்கள் ஆகியிருந்தது. தமிழ்நாட்டு நண்பன் ஒருவன் ஒரு நாள் வேலையில் கொண்டு வந்திருந்தான். வீட்டில் செய்ததாக ஞாபகம் இல்லை. வாழைத் தண்டிலும் அவர்கள் கூட்டு அல்லது கறி என்று ஏதோ செய்வார்கள். பல மரக்கறிகளைப் போலவே அதுவும் எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் மிகவும் நல்லது, உடல்நலத்திற்கு உகந்தது என்றார்கள். உடல்நலத்திற்கு உகந்தவை எல்லாம் கொஞ்சம் முயற்சி செய்தே சாப்பிட வேண்டியவை போல, 'கொஞ்சம் சுகர்..........' என்று சொன்னான். அப்பொழுது தான் அவனை கவனமாக உற்றுப் பார்த்தேன். பயில்வான் போல இருந்தவன் மெலிந்து போயிருந்த காரணம் தெரிந்தது. கொஞ்சம் என்றில்லை, மிக நன்றாகவே நீரிழிவு அவனை தாக்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. மருந்து ஏதும் எடுக்கின்றாயா என்றேன். தான் முந்தி ஆங்கில மருந்துகள் எடுத்ததாகவும், ஆனால் இப்போது எடுக்கவில்லை என்றும் சொன்னான். ஆங்கில மருந்துகள் எதுவுமே வேலை செய்யவில்லை என்றான். நல்ல ஒரு நாட்டு வைத்தியர் அங்கே இருப்பதாகவும், அத்துடன் தான் சில பத்தியங்களை பின்பற்றுவதாகவும் சொன்னான். அதில் ஒன்று வாழைப்பூ வடை. உடம்புக்கும், இரத்தத்திற்கும் மிகவும் நல்லது என்றான். சுவையாகவும் இருந்தது. பழங்கள் சாப்பிடாமல்ல் காய்களைச் சாப்பிடுவதாகவும் சொன்னான். மாம்பழம் சாப்பிடாமல்ல் மாங்காய் சாப்பிடுவதாகச் சொன்னான். அதுவும் ஒரு மருந்து என்றான். இதை ஆபிரிக்காவில் ஒரு ஆராய்ச்சியில் கண்டு பிடித்து இருக்கின்றார்கள் என்றான். ஆபிரிக்காவில் மனிதர்கள் தோன்றினார்கள் என்ற தகவலை விட வேறு எந்த தகவலையும் நான் அதுவரை ஆபிரிக்காவுடன் இணைத்து வைத்திருக்கவில்லை. ஆபிரிக்க மாங்காய் புதிய தரவு ஒன்றாக தலைக்குள் போனது. ஒரு சிவராத்திரி பின் இரவில் ஒரு வீட்டு மாமரத்தில் ஏறி மாங்காய்கள் பிடுங்கிக் கொண்டிருந்தோம். நான் தான் மரத்தில் ஏறி இருந்தேன். உச்சியில் நின்று கொண்டிருந்தேன். சத்தம் கேட்டோ அல்லது இயற்கை உபாதை ஒன்றை கழிக்கவோ அந்த வீட்டுக்காரர் எழம்பி அவர்களின் பின் வளவு நோக்கி வந்து கொண்டிருந்தார். கீழே நின்றவர்கள் எல்லோரும் ஓடிவிட்டார்கள். டேய்............டேய்.......... என்று சத்தம் போட்டுக் கொண்டே வீட்டுக்காரர் நடந்து வந்தார். அவருக்கு வயிறு முட்டியிருந்தது போல, அவர் ஓடி வரவில்லை. உச்சியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த நான் இனிமேல் இறங்குவதற்கு நேரமில்லை என்று ஒரே குதியாகக் குதித்து விழுந்து ஓடினேன். கைகால்கள் எதுவும் உடையவில்லை. சில உடம்புகள் மிகப் பாவம் செய்தவை. அவை சில ஆன்மாக்களிடம் மாட்டுப்பட்டு எந்தக் கவனிப்பும் இல்லாத ஒரு சீரழிந்த வாழ்வை வாழ்கின்றன. அவன் தனக்கு இது எதுவுமே ஞாபகம் இல்லை என்றான். ஆனால் நாங்கள் அப்பவே மாங்காய்கள் நிறைய சாப்பிட்டது நல்ல ஞாபகம் என்றான். சில நாட்களின் பின், நான் திரும்பி வருவதற்கு விமான நிலையம் போவதற்கு அவனுடைய இரண்டு வாகனங்களையே எடுத்திருந்தோம். ஒன்றில் அவனும் வந்தான். அருகே இருந்தான். கோழிச் சண்டைக்காக அங்கே இருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டான். வழியில் போக்குவரத்து மிகவும் நெரிசலாகி விமான நிலையம் வந்து சேர்வதற்கு மிகவும் தாமதமானது. யாரோ அமைச்சரோ அல்லது பிரபலமான ஒருவர் அந்த வழியால் போய்க் கொண்டிருந்தார் போல. அவசரமாக இறங்கி, இரண்டு வாகனங்களிலும் வந்த சொந்தபந்தங்களிடம் இருந்து விடைபெற்று, ஓடி ஓடி, விமானம் கிளம்பும் கதவடிக்கு வந்த பின் தான் அவனுக்கு நான் போய் விட்டு வருகின்றேன் என்று சொல்லவில்லை, அவனை நான் திரும்பிக் கூட பார்க்கவில்லை என்பது புரிந்தது. அவன் இறந்து விட்டான் என்ற செய்தி சில மாதங்களில் வந்தது.
  25. இப்படியான விளக்கங்கள் தான் இணையத்தில் கிடைக்கின்றன: ஒரு கறுப்பு மனிதன் தனது தோலின் நிறத்தை மாற்றிக்கொள்ள முடியாது. ஒரு சிறுத்தை தனது புள்ளிகளை மாற்றிக்கொள்ள முடியாது. இதைப் போலவே, எருசலேமே, நீயும் உன்னை மாற்றி நன்மை செய்ய முடியாது. நீ எப்போதும் தீமையே செய்கிறாய். எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 13:23
  26. இது எங்கள் தமிழ் ஆட்களிடம் தனித்துவமாக இருக்கும் கிரகிப்புக் குறைபாடோ தெரியவில்லை. மருத்துவர்கள் "வாழைத் தண்டிலும் பூவிலும் நிறைய நார்த்தன்மை இருக்கிறது, எனவே கிளைசீமிக் இண்டெக்ஸ்" குறைவு, அதனால் சாப்பிட்டாலும் சுகர் ஏறாது" என்று எழுதினால், வாசிப்போர் "வாழைத்தண்டு, வாழைப்பூ சுகர் வருத்தத்தைக் குணப் படுத்தும் மருந்து" என்று பெருப்பித்து விளங்கிக் கொள்கிறார்கள்! சுகர் வருத்தத்திற்கான மருந்து என்பது இன்சுலின் சுரப்பையோ அல்லது சுரக்கும் இன்சுலின் தொழில்பாட்டையோ அதிகரிக்கும் வேலையைச் செய்தால் மட்டுமே அது சுகர் வருத்தத்திற்கான மருந்து. தற்போதைக்கு மெற்போமின் போன்ற ஆங்கில மருந்துகள் மட்டும் தான் இந்த வேலையைச் செய்கின்றன. வேறெந்த மந்திர மாயமும் நாட்டு வைத்தியமும் இந்த வேலையைச் செய்வதாக ஆதாரங்கள் இல்லை! இந்த கிரகிப்புக் குறைபாட்டை வேறு பல வடிவங்களிலும் காண்கிறேன். அண்மையில் ஒரு நண்பர் தான் வொட்கா குடிக்க ஆரம்பித்திருப்பதாகச் சொன்னார். "நீங்கள் அல்கஹோல் குடிப்பதில்லையே, இப்போது புதிதாக ஆரம்பித்திருக்கிறீர்களா?" என்று கேட்ட போது "வொட்கா குடித்தால் இரத்த சுகர் ஏறாது என்பதால் குடிக்கிறேன்" என்றார்😂. நடந்தது என்னவென்றால், "உடலில் சுகரை ஏற்றாமல் எந்த மதுபானத்தைக் குடிக்கலாம் டொக்ரர்?" என்று எங்கள் தமிழ் நோயாளிகள் கேட்கும் போது சில டொக்ரர் மார் "வொட்காவில் சுகர் இல்லை, எனவே கொஞ்சம் குடிக்கலாம்" என்று பதில் சொல்கிறார்கள். இதனைத் தான் "வொட்கா குடித்தால் சுகர் ஏறாது" என சிலர் விளங்கிக் கொண்டிருப்பதாகத்தெரிகிறது.
  27. வணக்கம்… வல்வை லிங்கம், உங்களை… மீண்டும் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. ஏன்… இந்த நீண்ட இடைவெளி. தொடர்ந்து இணைந்திருங்கள்.
  28. நீங்கள் இன்னும் உறுப்பினராக 5 யூரோ கட்டணம் செலுத்த வேண்டும். நான் மடலில் கணக்கு அனுப்பி விடுகிறேன். கட்டிவிடுங்கள் சரியா?
  29. வணக்கம்.வாருங்கள்.
  30. வணக்கம் வாங்கோ. உங்களை நன்றாக ஞாபகம் உள்ளது.
  31. வணக்கம் லிங்கம். மிகப் பழைய ஒரு உறவு போல......................👍.
  32. தமிழ் யூனியன் வீரர்கள் ஷாருஜன், வியாஸ்காந்த் அபார ஆற்றல்கள் Published By: Digital Desk 3 09 Dec, 2025 | 03:16 PM (நெவில் அன்தனி) ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் (SLC) நடத்தப்பட்டுவரும் முதல்தர கழகங்களுக்கு இடையிலான மேஜர் லீக் கிரிக்கெட் 2025-26 ஆரம்பப் போட்டியில் தமிழ் யூனியன் வீரர்களான சண்முகநாதன் ஷாருஜன் துடுப்பாட்டத்திலும் விஜயகாந்த் வியாஸ்காந்த் பந்துவீச்சிலும் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர். தமிழ் யூனியன் அண்ட் அத்லெட்டிக்ஸ் க்ளப் அணிக்காக இந்த வருடத்திலிருந்து முழுமையாக விளையாட ஒப்பந்தமாகியுள்ள 19 வயதுடைய சண்முகநாதன் ஷாருஜன் அக் கழகத்துக்கான தனது முதலாவது போட்டியிலேயே முதல் தர கிரிக்கெட்டுக்கான சதத்தைக் குவித்து பலத்த பாராட்டைப் பெற்றார். இதில் விசேஷம் என்னவென்றால், ஷாருஜன் தனது முன்னாள் கழகமான பதுரெலியா விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக கன்னி சதத்தைக் குவித்தாகும். தொலைக்காட்சி நேர்முக வர்ணனையாளர் மறைந்த டோனி க்ரெய்கினால் 'லிட்ல் சங்கா' (குட்டி சங்கா) என வருணிக்கப்பட்ட சண்முகநாதன் ஷாருஜன் இப்போது அந்தப் பெயரை மெய்ப்பிக்கும் வகையில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தொடங்கியுள்ளார். எஸ்எஸ்சி மைதானத்தில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது ஷாருஜனுக்கு இந்தப் புனைப்பெயரை எதேச்சையாக டோனி க்ரெய்க் சூட்டினார். அவுஸ்ரேலிய துடுப்பாட்ட வீரர் பிலிப் ஹயூஸ் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தபோது எஸ்எஸ்சி மைதானத்தின் பார்வையாளர் பகுதியில் ஷாருஜன் ஒரு துடுப்பைக் கொண்டு (Bat) விதவிதமான அடிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது தொலைக்காட்சி கமராவில் 5 வயது சிறுவனின் துடுப்பாட்ட பாணியும் காட்டப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில்தான் சிறுவன் ஷாருஜனின் துடுப்பாட்ட பாணியைப் பார்த்து இரசித்த டோனி க்ரெய்க் அவருக்கு 'லிட்ல் சங்கா' என்ற புனைப்பெயரை சூட்டினார். இப்போது தமிழ் யூனியன் கழகத்திற்காக தனது 19ஆவது வயதில் விளையாடிவரும் சண்முகநாதன் ஷாருஜன் சதம் குவித்து அதனை மெய்ப்பித்து வருகிறார். கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சன்முகநாதன் ஷாருஜன், வார இறுதியில் சிசிசி மைதானத்தில் நடைபெற்ற பதுரெலியா கழகத்துக்கு எதிரான பி குழு போட்டியில் மிகுந்த அனுபவசாலிபோல் 230 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 123 ஓட்டங்களைக் குவித்தார். இந்த வருடம் மேஜர் லீக் கிரிக்கெட் போட்டிகள் யாவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தீர்மானத்திற்கு அமைய நடுநிலையான மைதானங்களில் நடைபெற்றுவருகின்றன. ஒரு கட்டத்தில் தமிழ் யூனியன் கழகம் 5 விக்கெட்களை இழந்து 112 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மிக மோசமான நிலையில் இருந்தது. ஆனால், பொறுப்புணர்வுடனும் நிதானத்துடனும் துடுப்பெடுத்தாடிய ஷாருஜன், 3 சிறந்த இணைப்பாட்டங்கள் உட்பட கடைசி 5 விக்கெட்களில் மொத்தமாக 235 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார். 51 ஓட்டங்களைப் பெற்ற சச்சித்த ஜயதிலக்கவுடன் 6ஆவது விக்கெட்டில் 97 ஓட்டங்களையும் 35 ஓட்டங்களைப் பெற்ற தரிந்து ரத்நாயக்கவுடன் 8ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களையும் 21 ஓட்டங்களைப் பெற்ற கலன பெரேராவுடன் 9ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களையும் கொண்ட சிறந்த இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி அணியை பலமான நிலையில் இட்ட ஷாருஜன் கடைசி வீரராக ஆட்டம் இழந்தார். இதன் பலனாக தமிழ் யூனியன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 347 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பதுரெலியா விளையாட்டுக் கழகம் சகல விக்கெட்களையும் இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றது. யாழ். மத்திய கல்லூரி கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் விஜயகாந்த் வியாஸ்காந்த் மிகத் துல்லியமாக பந்துவீசி 4 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 19 ஓவர்களில் 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் 9 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தமிழ் யூனியன் தனது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. 240 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பதுரெலியா கழகம் திங்கட்கிழமை (08) மாலை ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 2 விக்கெட்களை இழந்து 56 ஓட்டங்ளைப் பெற்றிருந்தது. இப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தபோதிலும் முதல் இன்னிங்ஸுக்கான வெற்றிப் புள்ளிகளை தமிழ் யூனியன் பெற்றுக்கொண்டது. https://www.virakesari.lk/article/232873
  33. வீட்டிலிருந்து கொண்டுவந்த தேங்காய்கள், அரிசி மற்றும் சில மரக்கறிகள் ஓரிரு வாரத்திலேயே தீர்ந்துவிட்டது. மீண்டும் போகலாம் என்று முடிவெடுத்தோம். அந்நாட்களில் வேறு சிலரும் கோண்டாவில் பகுதிகளில் தமது வீடுகளைப் பார்க்கப் போய்வருவது தெரிந்தது. ஆகவே, நாம் இரண்டாவது தடவையாகவும் எமது வீடு நோக்கிப் பயண‌மானோம். இம்முறை கெடுபிடிகள் சற்றுக் குறைந்திருந்ததைப்போலத் தெரிந்தது. ஆனால் இந்திய ராணுவத்தின் பிரசன்னம் அப்பகுதியில் இருந்தது. பலாலி வீதியின் ஓரத்தில் முகாம்களை அமைத்திருந்தார்கள். போய்வருவோர் கடுமையாகச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். எம்மையும் அவர்கள் சோதித்தார்கள். எதற்காக வீடுகளுக்குச் செல்கிறோம் என்று கேட்கப்பட்டது. இன்னமும் சேதப்படாமல் இருக்கும் பொருட்களை எடுத்துச் செல்ல வந்திருக்கிறோம் என்று கூறினோம், அனுமதித்தார்கள். இம்முறை நாம் வீட்டை அடைந்தபோது பக்கத்து வீட்டில் ஆட்கள் பேசும் சத்தம் கேட்டது. சென்று பார்த்தபோது அவ்வீட்டில் ஒருவரான பழனியண்ணாவும் இன்னுமொருவரும் நின்றிருந்தார்கள். வீட்டிலிருந்து துரத்தப்பட்ட நாளுக்கு முன்னைய நாளில் அவரைக் கண்டதற்கு இன்றுதான் அவரைக் காண்கிறேன். என்னைப் பார்த்தவுடன் அழத் தொடங்கினார். எதற்காக அழுகிறார் என்பது எனக்குப் புரியவில்லை. ஏன் என்று நான் வினவியபோது அவர் . நடந்ததை விபரித்தார். அவர் விபரிக்க விபரிக்க‌ அன்றிரவு நடந்த அகோரம் எனக்கு வெளிச்சமாகியது. எமது வீடுகளுக்குள் இந்திய ராணுவம் நுழைந்த நாளன்று பக்கத்து வீட்டில் எவருமே இல்லையென்றுதான் நாம் நினைத்திருந்தோம். ஏனென்றால், தாம் நல்லூருக்குப் போகப் போவதாக பாமா அக்கா கூறிவிட்டுச் சென்றதனால், அவர்கள் அங்கு இல்லை என்றுதான் முதலில் எண்ணியிருந்தேன். ஆனாலும் அன்றிரவு எமது வீட்டைக் கடந்து சென்ற இந்திய இராணுவம் பாமா அக்கா வீட்டினுள் நுழைந்தபோது கேட்ட அழுகுரல்களும் அதனைத் தொடர்ந்து கேட்ட நீண்ட துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் எனக்கு அங்கு ஆட்கள் இருந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லிற்று. ஆனால் அங்கிருந்தோர் யார், எத்தனைபேர், அவர்களுக்கு என்ன நடந்ததது என்பதுபற்றி பழனியண்ணை சொல்லும்வரை எனக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. காலையில் என்னுடன் பேசிவிட்டுச் சென்ற பாமா அக்காவின் குடும்பம் நல்லூருக்குப் போக ஆயத்தமாகியிருக்கிறது. ஆனால் செல்வீச்சுக் கடுமையாக நடக்க ஆரம்பித்ததையடுத்து, நிலைமை ஓரளவிற்கு சுமூகமானதும் நல்லூருக்குச் செல்லலாம் என்று இருந்திருக்கிறார்கள். ஆனால் நள்ளிரவுவரை செல்த்தாக்குதல் குறையவில்லை. அதன்பின்னர் துப்பாக்கிச் சண்டைகள் ஆர்ம்பமாகிவிட்டிருந்தமையினால் அவர்கள் நல்லூருக்குச் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு வீட்டிலேயே இருக்கலாம் என்று இருந்துவிட்டார்கள். பாமா அக்காவின் வீட்டிற்குப் பின்னால் அமைந்திருக்கும் பேபி அக்காவின் வீட்டினரும் அன்றிரவு பாமா அக்காவின் வீட்டிலேயே அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். இந்திய இராணுவம் அவர்களது வீட்டருகில் வந்தபோது, பாமா அக்காவின் வீட்டிற்கு முன்னால் அமைந்திருக்கும் புகையிலைகளுக்கு புகைபோடும் குடிலுக்குள் பாமா அக்கா, பேபியக்கா, குலம் அண்ணா, மற்றும் பேபியக்காவின் இரு சகோதரர்கள், பேபியக்காவின் தகப்பனார் என்று ஏழுபேர் அடைக்கலம் புகுந்திருக்க ஏனையோர் அனைவரும் வீட்டினுள் இருந்திருக்கிறார்கள். முதலில் வீட்டினுள் நுழைந்த இராணுவம் சமயலறைப் புகைப்போக்கியின் கீழ் அமர்ந்திருந்த குடும்ப உறுப்பினர்களை யன்னலூடாகப் பார்த்துத் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய ஆரம்பித்திருக்கிறது. அதன்போதே "ஐய்யோ, சுடாதேயுங்கோ" என்ற அழுகுரல்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அதன்பின்னர் புகையிலைக் குடில்ப் பக்கம் தனது பார்வையைத் திருப்பிய இந்தியப் பேய்கள் உள்ளிருப்போரை வெளியே வரும்படி அழைத்திருக்கின்றன. தம்மை அவர்கள் கொல்லம்மாட்டார்கள் என்று நம்பிய குலம் அண்ணை முதலில் வெளியே வர அவரை வெட்டிச் சாய்த்தது இந்திய ராணுவம். அப்போதுதான், "ஐயோ, பிள்ளைகளை வெட்டாதேயுங்கோ" என்று பேபியக்காவின் தாயார் அலறியிருக்கிறார். குலம் அண்ணை கொல்லப்பட்டதைக் கண்ட ஏனையோர் தொடர்ந்தும் குடிலுக்குல் ஒளிந்திருக்க, அவர்கள்மீது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டதோடு கைக்குண்டுகளையும் வீசி எறிந்திருக்கிறது இந்தியாவின் சாத்தான்படை. உள்ளிருந்தோர் அனைவரும் கொல்லப்பட்டு குடிலுடன் எரிக்கப்பட்டார்கள். ஆனால் வீட்டினுள் இன்னமும் பதுங்கியிருந்தோருக்கு வெளியே நடக்கும் அகோரம் எதுவுமே தெரிந்திருக்கவில்லை. காலையில் எம்மை இழுத்துச் சென்றது போல அவர்களின் வீட்டினுள் மீதமாயிருந்தோரையும் இந்திய இராணுவம் இழுத்துச் சென்று துரத்திவிட்டிருக்கிறது. ஆகவே குடிலுக்குள் தஞ்சமடைந்திருந்தோர் இன்னமும் உயிருடன் இருப்பதாகவே குடும்பங்களின் ஏனையோர் நினைத்திருந்திருக்கின்றனர். சில வாரங்களின் பின்னர் பாமா அக்கா எமது குடும்பத்துடன் நல்லூர்க் கோயிலில் காணப்பட்டதாக அவரது குடும்பத்திடம் யாரோ கூறிவிட அவர்கள் எம்மை பல வாரங்களாகத் தேடியிருக்கிறார்கள். எம்முடன் பாமா அக்கா இருப்பதாக அவர்கள் நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களது நம்பிக்கைகளையெல்லாம் வேறோடு அறுத்துவிட்ட சம்பவம் நாம் இரண்டாவது தடவையாக வீடுகளைப் பார்க்கச் சென்றபோது அவர்களுக்கு நடந்தது. பாமா அக்காவின் மாமனாரான பழனியண்ணாவும் அவரது உறவினர் ஒருவரும் எம்மைப்போலவே தமது வீடுகளைப் பார்க்க‌ வந்திருக்கின்றனர். முதலில் வீட்டினுள் சென்று அழிவுகளை நோட்டம்விட்டு விட்டு, பின்னர் புகையிலைக் குடிலுக்குள் சென்றிருக்கின்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை கடுந்துயரத்தில் ஆழ்த்திவிட்டது. உள்ளே பாதி எரிந்த நிலையில் ஏழு சடலங்களை அவர்கள் கண்ணுற்றிருக்கிறார்கள். அப்போது அங்கு இருந்தது யாரென்பது ஓரளவிற்குத் தெரிந்துவிட்டது அவர்களுக்கு. அங்கு கிடந்த ஏழு சடலங்களுல் ஒன்று பாமா அக்காவினுடையது. அவர் அணிந்திருந்த மோதிரமும், அவர் தலையில் குத்தியிருந்த இரும்பிலான கிளிப்பும் அவரை அடையாளம் காட்டின. அங்கிருந்த மற்றைய பெண்ணின் சடலம் பேபி அக்காவுடையது. பாதி எரிந்த நிலையில் காணப்பட்ட அவரது ஆடைமூலம் அவரை அடையாளம் கண்டுகொண்டார் பழனியண்ணை. அவர்களைத் தவிர மீதமாயிருந்த நால்வரும் குலம் அண்ணை, பேபியக்காவின் தந்தை மற்று பேபியக்காவின் இரு சகோதரர்கள் என்பதை நாம் உணர்ந்துகொண்டோம். பாமா அக்கா உயிருடன், எம்முடன் இருக்கிறார் என்று அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை அன்று காலையுடன் அற்றுப்போனபோதே அவரை துக்கம் ஆட்கொண்டது. அதனாலேயே என்னைக் கண்டவுடன் அவர் அழத் தொடங்கினார். அன்று அவரும் அவரது உறவினரும் எமது ஒழுங்கையினுள் காணப்பட்ட சடலங்கள் அல்லது எலும்புக் கூடுகளை ஒரு குவியலாகப் போட்டு எரித்தார்கள். அவர்களது உறவினர்கள் ஏழுபேருடையவை தவிர்ந்த இன்னும் இருபது மனித எச்சங்களை அவர்கள் ஒழுங்கையின் அருகிலிருந்து தூக்கிவந்தார்கள். உடைந்த தளபாடங்கள், மரங்கள் , சருகுகள் கொண்டு நாம் அவர்களுக்கான இறுதிக் கிரியைகளைச் செய்தோம். எமது ஒழுங்கையில் மட்டுமே கொல்லப்பட்ட எம்மக்களின் எண்ணிக்கை 27.
  34. எம்முடன் கூட வந்த இந்திய ராணுவத்தினன் பலாலி வீதியுடன் நின்றுவிட நானும் தகப்பனாரும் மெதுவாக எமது ஒழுங்கைக்குள் நுழைந்தோம். அப்பகுதி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போயிருந்தது. மதில்கள் ஒழுங்கையின் நீளத்திற்கு வீழ்ந்துகிடக்க, ஒழுங்கையின் இருபக்கமும் பற்றைகள் வளர்ந்து ஒழுங்கையினை மறைத்தபடி நின்றது. அங்கிருந்த 5 வீடுகளில் ஒன்றேனும் தப்பியிருக்கவில்லை. இந்திய இராணுவம் இப்பகுதியில் நிலைகொண்ட பின்னர் மீதமாயிருந்த வீடுகளையும் இடித்துத் தள்ளியிருக்க வேண்டும். எல்லாமே அழிவுகளைச் சுமந்து காணப்பட்டன. ஆளுயரத்திற்கு மேலாய் வளர்ந்திருந்த பற்றைகளைத் தாண்டி எமது வீட்டினை அடைந்தோம். வீட்டின் பெரும்பகுதி எரியூட்டப்பட்டது போலக் காணப்பட்டது. முதலாவது அறையில் இந்திய ராணுவம் தங்கியிருக்கிறது என்பது தெரிந்தது. அவர்கள் பாவித்த சில பொருட்கள், இந்தியாவின் ப்ரூ கோப்பி என்று சில இந்தியப் பொருட்களும், அயலில் உள்ள வீடுகளில் இருந்து அவர்கள் எடுத்து வந்திருந்த தளபாடங்களும் அவ்வறையில் பரவிக் கிடந்தன. இடிந்த மதில்களின் கற்களை எடுத்துவந்து காப்பரண் கட்டியிருந்தார்கள். இவ்வீடுகளில் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதோ அல்லது இவ்வீடுகளை அவர்கள் தமது வாழ்நாள் உழைப்பின் மூலமே கட்டியிருந்தார்கள் என்பதோ அவர்களுக்கு ஒரு பொருட்டாக இருந்திருக்காது. நாம் வெகு நேரம் அங்கு நிற்க விரும்பவில்லை. 30 நிமிட நேரமே இருக்கமுடியும், அதற்குள் எடுத்துக்கொள்ள முடியுமானவற்றை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடவேண்டும் என்று அந்த அதிகாரி பணித்தது எமக்கு நினைவில் இருந்தது. ஆகவே சில தேங்காய்கள், சமயலறையில் இன்னமும் மீதமாயிருந்த மாப்பியன் அரிசி, வாழைக்காய் என்று சிலவற்றையும் ஓரிரு பாத்திரங்களையும் எடுத்துக்கொண்டு எமது சைக்கிள்களில் கட்டிக்கொண்டோம். இவற்றுக்கு மத்தியில் அப்பகுதியெங்கும் துர்நாற்றம் வீசுவதை நான் அவதானித்தேன். இறந்த விலங்குகளின் உடல்களாக இருக்கலாம் என்று எண்ணினேன். அவை மனிதர்களின் உடல்களாகவும் இருக்கலாம். ஆனால் பற்றைகளுக்குள் என்னவிருக்கின்றது என்று பார்க்கும் துணிவு எனக்கு இருக்கவில்லை. வீட்டிலிருந்து துரத்தப்பட்டபோது எம்முடைய மூன்று நாய்கள் பற்றி நாம் யோசிக்கவில்லை. ஆனால் மீண்டும் அங்கு சென்றபோது அவற்றுக்கு என்னவாகியிருக்கும் என்று எண்ணத்தொடங்கினேன். அப்பகுதியில் இருந்த இந்திய ராணுவத்தினரின் காதுகளுக்கு எட்டாத வகையில் அவற்றின் பெயர் சொல்லி அழைத்தேன், எவையுமே வரவில்லை. எமது வீட்டைச் சுற்றிப் படர்ந்திருந்த பற்றைகளும், துர்நாற்றமும், அயல்வீடுகளில் இருந்து வந்த உய்த்தறிய முடியாத சத்தங்களும் அச்சத்தை ஏற்படுத்தின. பேய்நகரம் போன்று காட்சியளித்த அப்பகுதியில் தொடர்ந்தும் நிற்க‌ விரும்பாது அங்கிருந்து வெளியேறினோம். மீண்டும் பலாலி வீதி, கோண்டாவில்ச் சந்தி என்று இந்திய ராணுவ நிலைகளூடாக வெளியேறி சைக்கிள்களைத் தள்ளிக்கொண்டே பாசையூரை வந்தடைந்தோம்.
  35. அன்றிரவு முழுதும் நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்களில் யாழ்நகர், குருநகர், பாசையூர், சின்னக்கடை, கொழும்புத்துறை, சுண்டுக்குளி ஆகிய பகுதிகளில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். இதில் வேதனை என்னவென்றால் அப்பகுதியெங்கிலும் புலிகளையோ அல்லது அவர்களது முகாம்களையோ நாம் காணவில்லை என்பதுதான். பழைய பூங்கா பகுதியில் அமைந்திருந்தத் புலிகளின் பயிற்சிமுகாமும் அன்றைய நாட்களில் இயங்கியிருக்க வாய்ப்பில்லை. அப்படியிருந்தபோதிலும், சனநெரிசல் மிகவும் அதிகமான அப்பகுதி மீது மிகவும் கண்மூடித்தனமான முறையில் செல்த்தாக்குதலை இந்தியாவின் சாத்தான்படை சகட்டுமேனிக்கு நடத்திக்கொண்டிருந்தது. நாம் பாசையூரில் அடைக்கலமாயிருந்த சில நாட்களில் யாழ்நகரினை இந்தியப் படை ஆக்கிரமித்துக்கொண்டது. வீதிகளில் ரோந்துவரும் இந்திய ராணுவத்தினை தூரத்திலேயே ஊர் நாய்கள் காட்டிக் கொடுத்துவிட சனமெல்லாம் வீடுகளுக்குள் அடைந்துவிடும். இந்திய ராணுவத்தின் பிரசன்னம் வீதியில் இருப்பது தெரியாது வீடுகளுக்கு வெளியே வந்தவர்கள் சிலர் வீதிகளிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பல மணிநேரமாக வீதிகளில் கிடந்த உடல்களை இந்திய ராணுவம் சென்றபின்னர் ஊரில் இருப்பவர்கள் எடுத்துவந்து அடக்கம் செய்தார்கள். சில சடலங்களின் மேலால் இந்திய ராணுவ வாகனங்கள் ஏறிச்சென்ற‌ அடையாளங்களும் காணப்பட்டன. சுமார் ஒன்று அல்லது ஒன்றரை மாத காலம் பாசையூரில் இருந்திருப்போம், கோண்டாவில், இருபாலை ஆகிய பகுதிகளில் மக்கள் தமது வீடுகளுக்குச் சென்று தேவையான பொருட்களை எடுத்து வர இந்திய ராணுவம் அனுமதியளித்திருக்கிறது என்று யாரோ சொன்னார்கள். ஆகவே பாசையூரில் நாம் தங்கியிருந்த வீட்டில் ஒரு சைக்கிளை கேட்டு எடுத்துக்கொண்டு கோண்டாவிலுக்குச் செல்லலாம் என்று தந்தையார் சொல்லவே, நானும் ஆம் என்றேன். பலாலி வீதியால் செல்லாதீர்கள். தின்னைவேலியில் இன்னும் சண்டை நடக்கிறதாம். பிரதான வீதிகளைத் தவிர்த்துவிடுங்கள் என்று ஆளாளுக்கு அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார்கள். அவர்கள் கூறியவாறே குச்சொழுங்கைகளுக்கூடாக‌ எமது பயணத்தை ஆரம்பித்தோம். பின்னர் ஆலய வீதி வழியே சென்று தின்னைவேலியில் ஆடியபாதம் வீதி, பாற்பண்ணை, மாதிரிக்கிராமம் என்று முழுவதுமாக உள் வீதிகளுக்கூடாக‌ நுழைந்து கோண்டாவில்ச் சந்திக்கும், பாமர்ஸ் ஸ்கூல் (கமல நல சேவைகள் நிலையம்) அமைந்திருந்த பகுதிக்கும் இடைப்ப்ட்ட பகுதியில், பலாலி வீதி கண்ணுக்குத் தென்படும் தூரத்தில் நாம் வந்தபோது, கோண்டாவில்ச் சந்தியில் இருந்து தின்னைவேலி நோக்கி இந்திய ராணுவத்தின் வாகனத் தொடரணி போய்க்கொண்டிருந்தது. வீதியின் இடதுபுறத்தில், சுமார் 50 மீட்டர்கள் தொலைவில் நின்றிருந்த எம்மைக் கண்டதும் வாகனத் தொடரணியை நிறுத்திவிட்டு துப்பாக்கிகளை நீட்டியவாறு பாய்ந்து வந்தது இந்திய ராணுவம். எனது கையில் ஒரு ஷொப்பிங் பை நிறைய தேசிக்காய்கள், வழியில் வரும்போது யாரோ ஒருவருடைய மரத்தில் பிடுங்கி எடுத்துக்கொண்டது. அப்பகுதியெங்கும் பற்றைக்காடுகளாய் மூடி வளர்ந்திருக்க, எம்மைக் கொன்றாலும் எவருக்குமே தெரியப்போவதில்லை என்று உணர்ந்துகொண்ட நாம், இந்திய ராணுவம் கட்டளையிட்டவாறே நிலத்தில் விழுந்து படுத்துக்கொண்டோம். எம்மைச் சுற்றிவளைத்த அவர்கள், "நீங்கள் புலிகளா, இங்கு ஏன் வந்தீர்கள், எங்கே போகிறீர்கள்?" என்று சரமாரியாக கேள்விகளை அடுக்கிக் கொண்டு போனார்கள். "நாம் புலிகள் இல்லை, பொதுமக்கள், எமது வீடுகளைப் பார்க்க வந்திருக்கிறோம்" என்று தந்தையார் கூறவும், எனது பக்கம் திரும்பி, "பையில் என்ன வைத்திருக்கிறாய்?" என்று ஒருவன் ஆங்கிலத்தில் கேட்டான். தேசிக்காய் என்று நான் கூறவும், அதனை நம்பாது பையைப் பறித்து நோட்ட‌மிட்டான். பின்னர் எங்கள் இருவரையும் இழுத்துக்கொண்ம்டு பலாலி வீதிக்கு வந்தார்கள். வீதியின் நீளத்திற்குக் காப்பரண்களும், இந்திய ராணுவ வாகனங்களும் தென்பட்டன. கோண்டாவில்ச் சந்திப்பகுதியில், வீதியினை மறித்து பாரிய ராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. எம்மை அங்கு கொண்டு சென்றார்கள். நிலத்தில் இருத்திவைக்கப்பட்ட எம்மை அவர்களின் அதிகாரியொருவன் வந்து பார்த்தான். ஆங்கிலத்தில் தந்தையாருடன் பேச்சுக்கொடுக்கவே, தன்னை மீளவும் தபால் அதிபர் என்று அவர் கூறியபோது, "என்னை ஞாபகம் இருக்கிறதா?" என்று அவர் கேட்டான். எமது வீட்டிற்கு வந்து, எம்மை வெளியே இழுத்துவந்து தாக்கிய அதே அதிகாரிதான் அவன். "உங்களின் புலிகள் எங்களில் பலரைக் கொன்றுவிட்டார்கள், நாம் அவர்களை விடப்போவதில்லை, அழித்தே தீருவோம்' என்று கர்வத்துடன் கூறிவிட்டு, "ஏன் இங்கே வந்தீர்கள்? இன்னமும் உங்களது வீட்டுப்பகுதியில் சண்டை நடக்கிறது, நீங்கள் அங்கு போகமுடியாது" என்று அவன் கூறினான். "வீட்டில் சமைப்பதற்குக் கூடப் பாத்திரங்கள் இல்லை, எமது சைக்கிள்களும் எமக்குத் தேவை. வீட்டிலிருந்து சில தேங்காய்களையும், மரக்கறிகளையும் எடுத்துவரத்தான் வந்திருக்கிறோம். ஒரு 30 நிமிடத்திற்குள் முடித்துவிட்டுக் கிளம்பிவிடுவோம்" என்று தந்தையார் மன்றாட்டமாகக் கேட்கவும், "நாம் உங்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, சண்டையில் அகப்பட்டு வீணாகச் சாகப்போகிறீர்கள், உங்கள் விருப்பம்" என்று கூறிவிட்டு, எமது வீடு அமைந்திருந்த ஒழுங்கை வரை எம்மை அழைத்துச் செல்லுமாறு ஒரு ராணுவ வீரனைப் பணித்தான். அவன் எங்களை அங்கு அழைத்துச் செல்லும்போது அப்பகுதியெங்கும் நிலையெடுத்திருந்த ஏனைய இந்திய ராணுவத்தினர் ஏதோ ஜந்துக்களைப் பார்ப்பது போன்று பார்த்துக்கொண்டார்கள்.
  36. சுமார் நான்கு அல்லது ஐந்து மணித்தியாலங்கள் கிறீஸ்த்து ராசா கோயிலில் தங்கியிருந்தோம். செல்த்தாக்குதல் மெது மெதுவாக குறையத் தொடங்கியது. அதிகாலை 4 மணியளவில் மீளவும் கொய்யத்தோட்டத்தில் அமைந்திருந்த வீட்டிற்கு வந்தோம். ஆனால் வழமைபோல மறு நாள் மாலையும் செல்த்தாக்குதல்கள் ஆரம்பித்தன. அதே கொடூரமான, இடைவிடாத தாக்குதல்கள். பாசையூர் அந்தோணியார் ஆலயத்தை அகதிகள் முகாமாக அறிவித்திருக்கிறார்கள். இந்திய இராணுவம் அப்பகுதி மீது தாம் தாக்குதல் நடத்தப்போவதில்லை என்று உறுதியளித்திருக்கிறது. ஆகவே அங்கே போகலாம் என்று யாரோ சொன்னார்கள். ஆகவே இரவு 8 மணியளவில் சில உடுதுணிகளை எடுத்துக்கொண்டு பாசையூர் நோக்கிச் சென்றோம். எதிர்பார்த்ததுபோலவே அப்பகுதியெங்கும் சனக்கூட்டம். கோயிலின் உட்பகுதிக்குச் செல்ல முடியவில்லை, முற்றாக மக்களால் நிரம்பி வழிந்தது. ஆகவே ஆலய முன்றலில், கொடிக்கம்பத்தைச் சுற்றியிருந்த மணற்றரையில் அமர்ந்திருந்த பல நூற்றுக்கணக்கான மக்களுடன் நாமும் அமர்ந்துகொண்டோம். பாய்கள், படுக்கை விரிப்புக்கள் என்று கைகளில் அகப்பட்டதை மணலில் விரித்து குடும்பம் குடும்பமாக மக்கள் அமர்ந்திருந்தார்கள். யாழ்நகர் நோக்கி முன்னேறிவரும் இந்திய ராணுவம் அப்பகுதி நோக்கிக் கடுமையான செல்த்தாக்குதலைனை நடத்திக்கொண்ன்டிருந்தவேளை, கடலில் இருந்து கரையோரப் பகுதிகள் மீது கடுமையான பீரங்கித் தாக்குதலினை இலங்கை கடற்படை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக குருநகர், பாசையூர், கொழும்புத்துறை ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த குடியிருப்புக்களை இலக்குவைத்தே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பாசையூர் அந்தோணியார் ஆலயத்தில் அகதிகள் தஞ்சமடைந்திருப்பது இலங்கைக் கடற்படைக்குத் தெரியுமாதலால், அப்பகுதி இலக்குவைக்கப்படலாம் என்று பலர் கருதினர். ஆகவே சில குடும்பங்கள் அங்கிருந்து வேறு பகுதிநோக்கி கிளம்பிச் செல்ல ஆரம்பித்தன. தொடர்ச்சியாகப் பெய்துகொண்டிருந்த மழை, ஆலயமும் இலக்குவைக்கப்படலாம் என்கிற அச்சம் ஆகியவை எம்மை ஆட்கொள்ள நாமும் ஆலயத்திலிருந்துந்து புறப்பட்டு கொழும்புத்துறை நோக்கிச் செல்லும் வீதியில் ஒரு வீட்டில் அடைக்கலமானோம். அவ்வீட்டில் வசிப்பவர்கள், அன்றிரவு அங்கு வந்து அடைக்கலமானவர்கள் என்று சுமார் 30 அல்லது 40 வரையான மக்கள் அன்றிரவு அங்கு அச்சத்துடன் அமர்ந்திருந்தோம். செல்த்தாக்குதல் மீளவும் ஆரம்பமானது. ஒவ்வொரு இரவும் நடத்தப்படும் இத்தாக்குதல்களில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டார்கள். அன்றிரவும் அப்படித்தான். அப்பகுதியெங்கும் பல வீடுகள் செல்பட்டு உடைந்து நொறுங்குவது எமக்குக் கேட்டது. பாசையூர் அந்தோணியார் ஆலயத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்திலேயே நாம் அடைக்கலமாகியிருந்த வீடு அமைந்திருந்தது. இரவு 10 அல்லது 11 மணியிருக்கலாம், ஆலயப்பகுதியினை இலக்கு வைத்து கடுமையான தாக்குதலினை இந்திய ராணுவமும், இலங்கைக் கடற்படையும் நடத்தின. ஆலய முன்றலில் வீழ்ந்து வெடித்த செல்களினால் அங்கிருந்த பலர் துடிதுடித்து இறந்து போனார்கள். குறைந்தது 30 பேராவது கொல்லப்பட்டிருக்கலாம், பலர் காயப்பட்டார்கள் என்று அங்கிருந்து வெளியே ஓடிவந்தவர்கள் கூறியபோது, சில மணிநேரத்திற்கு முன்னர் நாம் அமர்ந்திருந்த இடமே தாக்குதலுக்கு உள்ளானது என்று அறிந்தபோது நாம் அச்சத்தில் உறைந்துபோனோம்.
  37. எல்லைக் காவலனாக ரம் தான் போய் காவல் காக்க வேண்டும்.
  38. சாத்தானின் படையுடனான எனது அனுபவம் இடம்: கோண்டாவில், யாழ்ப்பாணம் காலம் : ஐப்பசி, 1987 அது ஒரு மாலை வேளை. பலாலி வீதியூடாக இந்திய இராணுவம் பலாலியில் இருந்து யாழ்நகர் நோக்கி நகர்ந்துவருவதாக அயலில் பேசிக்கொண்டார்கள். மிகக்கடுமையான செல்வீச்சு எமது பகுதிநோக்கி நடத்தப்பட்டுக்கொண்டிருந்தது. காலையில் இருந்து அயலில் உள்ளவர்கள் நல்லூர் கந்தசுவாமிக் கோயிலுக்குப் போவதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தனர். "நீங்கள் போக இல்லையோ? இருக்கவே போரியள்? வந்தாங்கள் எண்டால் சுட்டுக் கொண்டு போடுவாங்கள். உரும்பிராயில நியாயமான சனத்தைக் கொண்டுட்டாங்களாம். நாங்கள் போகப்போறம். கொப்பரிட்டைக் கேட்டுப்போடு நீங்களும் வாங்கோ" என்று பக்கத்துவீட்டு பாமா அக்கா கூறிவிட்டுச் சென்றார். அவர் சொன்னதை தகப்பனாரிடம் கூறினேன். "தேவையில்லை, அவை போறதெண்டால் போகட்டும், நாங்கள் வீட்டிலை இருப்பம்" என்று ஒரே போடாய்ப் போட்டுவிட்டார். முதல் நாள் மாலையில் இருந்து எமது ஒழுங்கையில் சில போராளிகள் ஆயுதங்களோடு தரித்து நின்றிருந்தார்கள் நான்கு அல்லது ஐந்து பேர் இருக்கலாம். எமது வீட்டின் முன்னால் அமர்ந்திருந்த அவர்களுக்கு தேநீரும் சில உணவுப் பொருட்களையும் கொண்டுபோய்க் கொடுத்தேன். என்னைப்போலவே அருகில் இருந்தவர்களும் அவர்களைக் கவனித்துக் கொண்டார்கள். தகப்பனாரின் முகத்தில் ஈயாடவில்லை, வேறு நேரமாக இருந்திருந்தால் என்னை கொடுமையாகத் தாக்கியிருப்பார், ஆனால் புலிகளின் பிரசன்னம் அவரைத் தடுத்து விட்டிருந்தது. உரும்பிராய்ப் பகுதியை வட்டமடித்தபடி இந்திய விமானப்படையில் எம் ஐ 24 உலங்குவானூர்திகள் வானிலிருந்து மிகக்கடுமையான கனரக பீரங்கித் தாக்குதலையும் இயந்திரத் துப்பாக்கித் தாக்குதலையும் நடத்தத் தொடங்கியிருந்தன. அவை வானில் வட்டமடித்தவேளை கோண்டாவில் டிப்போவின் மேலாகவும் வந்துபோயின. புலிகள் அப்பகுதியில் நிற்பதைக் கண்டால் எமது பகுதிமீதும் தாக்குதல் நடக்கலாம் என்று அஞ்சிய நாம் வீட்டினுள் புகுந்துகொண்டோம். சில நாட்களாகவே மின்சாரம் தடைப்பட்டு இருந்தது. சந்தைகளும் இயங்கவில்லை. வீட்டில் கிடந்த பொருட்களைச் சேர்த்து சிற்றன்னையார் சமைத்திருந்ததை மதியம் அனைவரும் உட்கொண்டோம். மதியவேளைக்குப் பின்னர் செவீச்சின் உக்கிரம் அதிமானது. ஒவ்வொரு செல்லும் ஏவப்படும் போது எழுப்பும் ஒலியும், அது வீழ்ந்து வெடிக்கும்போதும் எழும்பும் ஒலியும் மிகத் துல்லியமாக‌ இப்போது கேட்கத் தொடங்கின. ஒரு சில கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்தே அவற்றினை ஏவுகிறார்கள் என்பது தெரிந்தது. சுமார் பத்து செக்கன்களுக்கு ஒன்று என்ற ரீதியில் செல்கள் வந்து வீழ்ந்து வெடிக்க ஆரம்பித்தன. எமது வீட்டின் மேலாகப் பறந்துசென்று கோண்டாவில்ச் சந்திப்பகுதியில் அவை வீழ்ந்து வெடித்தன. ஒவ்வொருமுறையும் அவை வந்து வெடிக்கும்போது எங்கள் வீட்டின் கூரைகள் சலசலத்து, கீழே வீழ்ந்து நொறுங்குவது தெரிந்தது. வீட்டின் பின்புறத்தில் ஒடுங்கலான பகுதியொன்றில் சீமேந்தினால் கட்டப்பட்ட கூரைப்பகுதியின் கீழ் நாங்கள் நின்றுகொண்டோம். வீட்டின்மீது செல் வீழ்ந்தாலும் நாம் நின்றபகுதி பாதுகாப்பானது என்பது எமது எண்ணம். சுமார் பகல் 2 மணியிலிருந்து இரவு 8 மணிவரை அவ்விடத்திலேயே அசையாது அமர்ந்திருந்தோம். இடைவிடாது நடத்தப்பட்ட செல்வீச்சினால் மனதளவிலும், உடலலளவிலும் அச்சத்துடன் நடங்கியபடி அங்கு அமர்ந்திருந்தோம். இரவாகியிருந்தாலும் கூட செல்கள் எமக்கு மேலால் பறந்து சென்று வெடித்தபோது மின்னல் பாய்ச்சியதுபோன்ற வெளிச்சத்தை ஏற்படுத்திச் சென்றது. ஒவ்வொருமுறையும் வீழ்ந்து வெடிக்கும் செல்களினூடு இதயமும் நின்று மீளவும் இயங்கியதுபோன்ற வலி.
  39. சமிக்கை கிறிஸ்டி நல்லரெத்தினம்- ஜூலை 13, 2025 No Comments வீட்டின் நடுவே இருந்த ஊஞ்சல் தனியே ஆடிக்கொண்டிருந்தது. அதில் உட்கார்ந்து கொண்டோ அல்லது படுத்துக் கொண்டோ தேவாரங்களை முணுமுணுத்துக் கொண்டோ இருக்கும் அப்பு அங்கில்லை. அவரின் சிம்மாசனம் அது. அதில் உட்கார்ந்து கொண்டு எங்கள் குடும்ப பிணைக்குகளை பஞ்சாயத்து செய்யும் அந்த ஜீவன் இல்லாத வீடு வெறிச்சோடிக்கிடந்தது. அப்பு, அவர்தான் என் தாத்தா, என்னிடம் கொண்டிருந்த அந்தப் பாசப்பிணைப்பு புறவயமானதன்று. எங்கள் இருவரையும் இணைத்த அந்த நூலை எவரும் தொட்டதில்லை. ‘“ ஏ, பையா, உன்ன உங்கம்மா தூக்கிறதக்கு முன்னமே நான்தான் தொட்டுத் தூக்கினன் தெரியுமோ?” என்று கூறி பெருமைப்படுவார். என்னை ஏனே அவர் ‘“பையா” என்று அழைப்பதில் ஒரு அணுக்கமான உரிமையும் உறவும் இருப்பதாய் தோன்றும். அம்மாதான் அவர் ஒரே மகள். எனவே அவருடன் தாத்தாவின் பாசமுடன் உரிமையும் ஒட்டிக்கொண்டது. ‘மகள், அத எடு… இத எடு’ என்று அம்மாவை விரட்டிக்கொண்டே இருப்பார். அம்மாவும் அவர் அன்பில் அடைக்கலமாவார். அப்பாவிற்கும் தாத்தாவிற்குமிடையே ஏனே பசை போதவில்லை. அப்பா எமது குடும்பத்தில் சங்கமமானது அறுபதுகளில். அப்பா ஒரு ‘வேதக்காறன்’. சமயம் மாறி வந்து அம்மாவை கைப்பிடித்ததாலோ என்னவோ அப்பாவின்மேல் ஒரு தாத்தாவிற்கு ஒரு இரண்டாந்தரம். அப்பாவிடம் தாத்தா நேராக முகம்பார்த்து பேசமாட்டார். அப்பா என்றும் மந்தையில் இல்லாத ஆடு. ஒரு முறை அப்பாவிற்கும் அப்புவிற்கும் இடையே ஏதோ பிணக்கு “என்ர சையிக்கிள தொட வேண்டாம் எண்டு சொல்லு” என்று அம்மாவிடம், அப்பாவின் காது பட, சற்று உரக்கவே சொல்லிவிட்டார். சாமானிய குடும்பங்களில் சைக்கிள்தான் அந்நாட்களில் டெஸ்லர். வீட்டிற்கு ஒரு வாகனம் மட்டுமே. அப்பாவோ சாது. ஒருபோதும் அப்புவை போருக்கழைத்ததில்லை! எதிர்வசை பாடி பிளவை பெரிதாக்கும் எண்ணம் அப்பாவிற்கில்லை. அப்புவின் சைக்கிளை அப்பாவும் பின்னர் தொட்டதில்லை. அப்புவைத் தேடி வீட்டிற்கு பலர் வந்து போவதால் எப்போதும் எங்கள் வீடு களைகட்டியிருக்கும். அதற்கும் காரணம் உண்டு. அப்புதான் ஊர் எலும்பு முறிவு மற்றும் ‘பாம்புக்கடி’ வைத்தியர் …. வைத்தியர் என்ன வைத்தியர் … ஊர் பரியாரியார். எங்கள் ஐந்து அறை கல் வீட்டின் முன் பரந்து இருக்கும் குருத்து மணல் முற்றம். முற்றத்தின் மருங்கில் இரண்டு பெரிய மாமரமும் பலா மரமும் (அதென்ன பலா? பிலா மரம் என்றே வாசியுங்கள்!) கிளை விரித்து நிற்கும் வேப்ப மரமும் இருந்தன. அப்புவைப்பார்க்க வருவோர் கூடி இருக்க ஒரு திறந்த ஓலை மேய்ந்த ஒரு குடில். குடில் என்றதும் ‘அம்புலிமாமா’வில் நீங்கள் பார்த்த குட்டி குடிலை கற்பனையில் இழுத்து வந்து எங்கள் முற்றத்தில் வைக்காதீர்கள். உயர்ந்த கூரையுடன் அறைகள் போல் இரு தடுப்பு சுவர் வேலி போட்டு மேய்ந்த அமைப்பு அது. அப்பு இருக்க கதிரை மேசை வசதிகள் உண்டு. மேசை மேல் இருக்கும் ‘ஒத்த றூள் கொப்பி’ தான் அப்பு மருந்து எழுதும் றெஜிஸ்டர். நோய் என வருவோரை தன் முன் இருக்கும் கதிரையில் அமர்த்தி நாடி பிடித்து, இருமச் சொல்லி, முட்டியை தட்டி மேலும் ஏதோ ஏதோ பரீட்சாத்தங்கள் செய்து பின் மேசைக்கு பின்னே இருந்த அலுமாரியை திறந்து வடகம், தூள்கட்டு என பல உருவங்களில் மருந்துகளை பரிமாறுவார். அவற்றை எப்போது சாப்பிட வேண்டும் என்ற விபரங்களை நான் சொன்ன ‘ஒத்த றூள்’ கொப்பியின் ஒரு பக்கத்தில் எழுதி அடிமட்டம் வைத்து கிழித்து நோயாளிக்கு கையளிப்பார். அப்பு எவருக்கும் ‘தண்ணி மருந்து’ கொடுத்ததை கண்டதில்லை. “இந்த தூளை தேனில கரைச்சு விடியத்தால சாப்பிட வேணும் கண்டியோ? …. என்ன… நான் சொல்லுறது விளங்தோ?” என்று சொல்லி தன் வார்த்தைகளின் புரிதலை உறுதிப்படுத்திக் கொள்வார். தேனுக்குப் பதிலாய் முலைப்பாலும் வந்து போகும். எலும்பு முறிவிற்கு ‘பத்துப் போட’ வருபவர்களைப்பார்க்க எனக்கு ஆர்வம் இல்லை. ஒரு முறை மரத்தால் விழுந்தவனை நாலு பேர் தூக்கிக் கொண்டு வந்து கிடத்தினர். அப்பு அருகில் குந்திக்கொண்டு குசலம் விசாரிப்பது போல் அவனிடம் பேசிக் கொண்டு அவனின் நோய்ப்பட்ட கையை மருந்தெண்ணை தடவி மெதுவாக நீவி விட்டார். அவனும் அப்புவின் கேள்விகளுக்கு அனுகிய குரலில் “ஓம் ஐயா… ஓம் ஐயா” என்று பதில் சொல்லிக் கொண்டு இருந்தான். அவன் முழங்கையில் விலகிய எலும்பு துருத்திக் கொண்டு முழங்கையில் நீலம் பாவித்து வீங்க வைத்திருந்தது. அப்பு அவன் மேல் கையை பலமாக பற்றியவாறு கேள்விகளை தொடுத்தவாறு இருந்தார். ‘இந்த முறை விழைச்சல் எப்படி?… இந்த போகத்தில நெல்லு வில என்னவாம்?…..’ போன்ற கமம் செய்பவனிடம் கேட்கும் கேள்விகளால் அவன் காதை நிரப்புவார். அவன் கவனம் எல்லாம் அவரின் கேள்விகளுக்கு பதில் தேடுவதிலேயே அப்போது இருந்தது. அதுதான் தருணம் என்று அப்பு உணர்ந்திருக்க வேண்டும். சடாரெண்டு அவன் கையை ஒரு பொம்மையின் கையை திருகுவதைப் போல் திருகி பலமாக இழுத்து விட்டார். “ஐயோ… எண்ட ஆண்டவனே “ என்ற அவன் கூக்குரல் கூரையை பிய்த்தது! இந்த தருணத்திற்கு காத்திருந்தாற்போல் அப்பு ஒரு புன்சிரிப்புடன் ”இனி பத்து ஒண்டு போட்டா சரி, எலும்பு மூட்டுக்குள்ள சரியா கொளுவிற்று .. மூண்டு கிழமையில பத்த கழற்ற ஏலும் “ என்று வலியால் துடித்தவனுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறி இனி ‘பத்துப்போடு’வதற்கான ஆயுத்தங்களில் இறங்கினார். அப்புவின் எலும்பு முறிவு வைத்தியத்தை விட பாம்புக்கடி வைத்தியம் பார்க்க சுவாரசியமாக, ஒரு நாடகத்தன்மையுடன் கூடியதாய், இருக்கும். ஒருமுறை எங்கள் ‘வயல்காறன்’ வேலுமணியை வயல் அறுவடை சீசனில் ஏதோ பாம்பு கடித்துவிட்டது. ஊரார், அவன் வாயில் நுரை தள்ள, தூக்கிக்கொண்டு அப்புவிடம் ஓடி வந்தனர். “புடையன் பாம்பு கடிச்சிப்போட்டாம் ஐயா” என்ற சபையோரின் சாட்சியத்தை காதில் வாங்காமல் கடித்த பாம்பின் உடல் அடையாளங்களை முதலில் கேட்டறிந்து கொண்டார் அப்பு. அந்த விபரணையில் இருந்து கடித்த பாம்பு என்னவென்று கணித்துக் கொண்டு அதற்கான மந்திரங்களை ஓதத் தொடங்கினார். ஏறிய விஷத்தை இறங்கும்படி உருக்கமாய் அம்மாளிடம் வேண்டுவதாகவே அந்த மந்திரங்கள் ஓதப்பட்டன. ஆம், அவை கட்டளைகள் என்பதை விட வேண்டுதல்களே! அப்பு கையில் ஒரு வேப்பிலை கத்தை எடுத்துக் கொண்டார்.. வேலுமணி அரை பிரஃஜையுடன் வாயில் நுரை தள்ள தரையில் பாதி உணர்வுடன் கிடந்தான். அப்புவின் ஒரு கையில் வேப்பம் கொத்து … மறு கையில் ஒரு கைப்பிடி மிளகு. வேப்பம் கொத்தால் அவன் கன்னதில் பலமாக மாறி மாறி அறைந்தவாறு மந்திரங்கள் ஓதியவாறு ஒரு மிளகை அவன் பற்களுக்கிடையே திணித்து “மிளக முன் பல்லால கடிச்சி நுனி நாக்கால ருசி பாரு… என்ன உறைக்குதா சொல்லு?” என்று கேட்க அவன் இல்லை என்பதற்கு அடையாளமாக தலையை பக்கவாட்டில் அசைத்தான். பாம்பின் விஷம் தலைவரைக்கும் ஏறிவிட்டது என்பதை உணர்ந்தார் அப்பு. இல்லையெனில் மிளகு உறைத்திருக்க வேண்டுமே. இனி காலம் தாழ்த்த முடியாது….. செய்வதை விரைவாய் செய்தாக வேண்டும். மீண்டும் வேப்பம் கொத்து கசையடியும் உச்சஸ்தானத்தில் மந்திரங்களும் தொடர்ந்தன. மீண்டும் அதே பரீட்சை…. மிளகு அவனுக்கு உறைக்கவில்லை…. விஷம் இன்னும் இறங்கவில்லை. மந்திரமும் கசையடியும் தொடர ஒரு கட்டத்தில் “ஐயா… மிளகு உறைக்கிதையா” என்றான் உரத்த குரலில். வேப்பம் கொத்தின் விசையோ அப்புவின் மந்திர ஓதல்களோ…. ஏதோ ஒன்று அந்த மாயையை செய்தன. “விஷம் இறங்கிற்று… இறங்கிற்று … அம்மாளே நன்றி அம்மா!“ என்று பூரண திருப்தியுடன் கூறி தலையை நிமிர்த்தி சூழ்திருந்த கூட்டத்தை பெருமையுடன் பார்த்தார் அப்பு. சூழ்ந்திருந்த கூட்டமும் வாய் திறந்து நின்றது! ஊர்க்கோயில் இருந்த திசையில் தலையை திருப்பி இரு கரங்களையும் தலைக்கு மேல் கூப்பி தெய்வானை அம்மானை வணங்கி அந்த சடங்கை முடித்து வைத்தார். அப்புவுடனான என் உறவு திவ்வியமானது. அப்பு நல்ல கதை சொல்லி. எனக்கு கம்பராமாயணத்தையும் கீதையையும் ஒரு தொடர்கதையின் சுவாரசியத்துடன் சொல்வார். ராமாயணம் ராமர் கதையை சொல்லும் ஆனால் காட்சியாக காட்டாது என்போர் சிலர். ஆனால் அப்புவின் விவரணங்களுடன் கூடிய ராமர் கதையில் காட்சிகள் அவர் வார்த்தைகளில் ஒரு ரம்யமான காட்சியாய் திரைப்படம் போல் கண் முன்னே விரியும். அவர் வார்த்தைகளில் வனத்தில் சீதை மட்டுமல்ல நானும் வனத்தில் ஒரு கல்லில் உட்கார்த்து காட்சிகள ரசிக்கும் ஒரு உணர்வை உருவாக்கித்தருவார். கதை கேட்கும் படலம் முடிந்ததும் ஒரு சிறு பரிசளிப்பு. அவர் அறையில் இருந்த பெரிய முதிரை மர அலுமாரியின் மேல் தட்டில் அவரின் வேட்டி சால்வையின் பின் மறைத்து வைத்திருக்கும் சிறு டப்பாவை திறந்து இரண்டு மூன்று ‘மில்க்டொபி’ இனிப்புகளை பரிசளிப்பார். மூன்றுதான் தினக்கணக்கு. அம்மாவின் கட்டளையை மீறி நடக்கும் ஒரு இரகசிய பரிசளிப்பு இது. ‘“அப்பு, இவன் சின்னவனுக்கு டொபி, சொக்களட் ஒண்டும் கொடுக்காதேயுங்கோ…. பல்லு சூத்தை குத்திப் போடும்“ என்ற அம்மாவின் அறிவுரைகளும் புறக்கணிக்கப்படும். வாய் நிறைய இனிப்புக்களுடன் நான் அம்மாவிடம் மாட்டிக் கொண்ட தருணங்கள் உண்டு. “ அப்பு, இவன்ர வாய்க்குள்ள டொபி போல…. நீங்களோ குடுத்த நீங்கள்?” என்ற கேள்விக்கு பலமான மறுப்பு தலையாட்டல் அப்புவின் தரப்பில் இருந்து வரும். அப்பு இப்படி குறும்பு பொய் பேசும் வேளையில் தன் வலது கை விரல்களை மடக்கி பெருவிரலை ஆள்காட்டி விரலூடாக நுழைத்து ஒரு சமிக்கை செய்வார். அவர் கண்கள் குறும்பு சிரிப்புடன் “என் விரலைப் பார்” என்று சொல்லாமல் சொல்லும். இது எங்கள் இருவருக்கும் மட்டுமே புரியும் இரகசிய பரிபாஷை! x. x. x. x. x. x. x நாட்கள் உருண்டோடி ஆண்டுகளுக்குள் அடங்கி அவையும் உருண்டோடி…. அப்புவிற்கு பாரிசவாதம் வந்து உடலின் இடது பக்கத்தை இழுத்துக் கொண்டது. சாமி அறைக்குப்பக்கத்தில் தான் அப்புவின் அறை. அந்த அறையில் இருந்து இப்போ அவர் வெளியே வருவதில்ல. எங்கள் வயல்காரன் சாமித்தம்பிதான் இப்போ அப்புவுக்கு எல்லாம். அவனுக்கும் அப்படி ஒன்றும் இள வயது இல்லை. காலையில் அவரை அணைத்தவாறு மூச்சு முட்ட தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு கிணற்றடியில் இருந்த கதிரையில் உட்கார்த்தி ஒரு குளியல். அவனே அப்புவின் தலையை துவட்டி புது வேட்டி உடுப்பித்து மீண்டும் அவரை வீட்டிற்குள் தூக்கிக்கொண்டு போவான். அப்புவிற்கு சாப்பாடு பிசைந்துதான் ஊட்டி விட வேண்டும். பற்கள் விடைபெற்றுக்கொண்ட வயது அவருக்கு. அதுவும் சாமித்தம்பியின்ர வேலைதான். ஆனால் அம்மாதான் சோறு கறிகள் எல்லாம் பீங்கானில் பரிமாறி தன் கையால பிசைந்து “சாமித்தம்பி…. இத அப்புவிற்கு தீத்தி விடு பாப்பம்… வேணாம் எண்டு சொன்னாலும் எல்லாத்தையும் தீத்தி விடப்பாரு… நேத்து மத்தியானமும் நல்லா சாப்பிட யில்ல… வர வர உடம்பும் சூம்பிக்கொண்டு போகுது!” என்று சொல்லி வேதனையுடன் அங்கலாய்ப்பார். அம்மாவிற்கும் முன்னரைப் போல் ஓடி ஆடி வேலை செய்ய முடியாது. நாடியில் கைவைத்தபடி அப்புவின் குளியலை பார்த்து ‘எப்படி இருந்த மனுஷன்? வயசு தான் என்னமா அப்புவின்ர சௌந்தரியத்த சிதைச்சுப் போட்டுது?” என்று முணுமுணுப்பார் அம்மா. அப்புவின் தேக சுகம் தேய்பிறையாய் மாறி வருவது அம்மாவின் சோகத்திற்கு முதல் காரணி. வாழ்வின் சோகங்களை வலைக்கரண்டி போட்டா வடித்தெடுக்க முடியும்? வாழ்ந்துதானே கழிக்க வேண்டும். அதுவே உலக நியதி அல்லா? அம்மாவிற்கும் இது தெரியாததல்ல. ஒரு நாள் அயல் வீட்டு செல்வி மாமி அப்புவின் நிலையை புரிந்து கொண்டு “இஞ்ச பாரு புள்ள… எத்தின நாளுக்கு பெரிய ஐயாவ வீட்டோட வச்சு பாக்கப்போறா? சாமித்தம்பியும் நெல்லு மூட்டய தூக்கிற மாதிரி அவர கஸ்டப்பட்டு தூக்கிற்று கிணத்தடியும் வீடும் எண்டு திரியிறான். ஒரு நாளைக்கு தடுக்கி விழுந்தினமோ அவ்வளவுதான். சீவன் போயிடும் கண்டயோ?” என பயம் காட்டினார். செல்வி மாமி சொன்னதும் அம்மாவிற்கு சரியாகவே பட்டது. அப்பாவை மாரடைப்பால் மூன்று வருடங்களுக்கு முன் இழந்த அம்மா தனியாக அப்புவை பார்ப்பதை ஒரு சுமையாகவே இப்போது கண்டார். நானும் மனிசியும் மகனும் குடும்பத்தோட கொழும்பு தெமத்தகொடவில இடம்பெயர்ந்துவிட்டதால் அம்மாவும் தனது கைத்துணையை இழந்து விட்டிருந்தார். தினசரி இரவு கைபேசி அழைப்புகளில் அப்புவின் நிலமை பற்றி அழுது புலம்புவது இப்போ வாடிக்கையாகிவிட்டது. செல்வி மாமி அம்மாவிடம் ‘“டவுனில இப்ப புதிசா ஒரு வயோதிபர் மடம் திறந்திரிக்கினமாம்… இப்ப கனடாவில இருக்கிற நம்மட கோயிலடி சண்முகத்தின்ர கொப்பரும் அங்கதானாம் இப்ப இருக்கிறாராம். வேளைக்கு நம்மட ஊர் சாப்பாடு… வருத்தம் வாதை எண்டால் உடனே டாகுத்தர் அங்கேயே வந்து பாப்பினமாம். ஒவ்வொரு நாளும் தியானம், யோகாசானம் எண்டு எல்லாம் இருக்குதாம். ஒருக்கா உன்ர மகனோட கதைச்சிப் போட்டு அப்புவையும் அங்க சேத்து விடலாம்தானே?” என்று ஓதி வைத்தாள். அம்மா தனது தினசரி நச்சரிப்புக்களுடன் இந்த செய்தியையும் என்னுடன் பகிர்ந்தார். அம்மாவின் வார்த்தைகளின் வலிமையை என்றும் உணர்ந்தவன் நான். ஒரு முடிவை எடுத்த பின் அதன் சாரத்தை என்னிடம் கூறி என் அனுமதிக்காய் காத்திராமல் ‘“அதத்தான் செய்வம் மகன்” என்று சம்பாஷணையை முடிப்பார். அப்புவின் இடப்பெயர்ச்சி அடுத்த மாதமே நடந்து முடிந்தது. என்னால் வேலை நிமித்தம் கொழும்பில் இருந்து ஊருக்கு உடனே திரும்பி வர முடியவில்லை. ஆனால் அடுத்த மாதமே லீவில் தனியே ஊர் திரும்பி அப்புவின் புதிய வாசஸ்தலத்தை பார்க்க விரைந்தேன். அம்மா அப்புவை அந்த வயோதிபர் மடத்தில் சேர்ப்பதற்கு பட்ட கஸ்டங்களை பட்டியல் போட்டார். வயல்காரன் சாமித்தம்பியின் பங்களிப்பை சிலாகித்துப் பேசினர் அம்மா. எனது இடைவெளியை நிரப்பிய அவன் உண்மையில் ஒரு புண்ணியவான்தான். அப்பு இல்லாத எங்கள் வீடு களையிழுந்து வெறிச்சோடியிருந்தது. அப்பு உட்காந்திருக்கும் ஊஞ்சல் சலனமற்று ஸ்தம்பித்து நின்றிருந்தது.. தான் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு தனது சொந்தங்கள் எடுக்கும் முடிவுகளால் நிகழும் இந்த இடப்பெயர்வுகள் கொடியன. தமது விருப்பத்திற்கு மாறாக, சொந்தங்கள் சொல்லும் தேன் பூசிய வார்த்தைகளை நம்பவது போல் பாசாங்கு செய்து, மௌனமே மொழியாகி பெட்டிக்குள் அடங்கும் பாம்பாக எத்தனை ஜென்மங்கள் தம் புளித்துப் போன மீதி வாழ்க்கையை சோகத்தில் வாழ்ந்து கரைக்கின்றன? மண்ணை மீறும் விதைகளாய் வாழ்ந்து காட்டுகிறேன் பார் என்று சமூகத்தை சவாலுக்கு அழைத்த இளமை ஓய்ந்துவிட வேர்கள் வெட்டப்பட்ட மரத்தின் தனிமையுடன் தம் குறுகிய உலகினுள் சுருங்கிக் கொண்ட ஜீவன்களின் பிரதிநிதிதான் அப்பு இன்று. அப்புவின் காலை உணவு பரிமாறப்பட்டதும் நானும் அம்மாவும் அவரை பர்க்க அந்த வயோதிபர் மடத்திற்கு சென்றிருந்தோம். அப்புவிற்கென ஒரு தனி அறை. மேலே மின்விசிறி சுழன்று அறைக்கு ஒரு ஆடம்பரத்தை கொடுத்தது. அப்பு உட்கார்ந்து வாசிக்க நல்ல மரக்கதிரை ஒன்று. மூலையில் ஒரு அரை அலுமாரி. குளியறைக்கு அழைத்துச்செல்லும வாசல் கதவு மூடியிருந்தது. கட்டிலின் அருகில் தொங்கிக் கொண்டிருந்த ‘காலிங் பெல்’. அடித்தால் உதவிக்கு ஆள் வரும். அப்பு என்றும் போலவே வெள்ளை ‘பாலாமணி’ யும் சாரனும் அணிந்து இருந்தார். கட்டிலில் படுத்தவாறு இருந்தவர் எம்மைக் கண்டதும் எழுத்து உட்கார எத்தனித்தார். முடியவில்லை. ‘“ நீங்க படுங்க அப்பு… நான் கட்டிலில கிட்ட இருக்கிறன்… எழும்பி கஸ்டப்பட வேணாம் “ என்று கூறி அருகில் அமர்ந்து கொண்டேன். அம்மாவும் ‘“ எப்படி அப்பா, எல்லாம் வசதி தானே… நல்லா பாத்துக் கொள்ளுகினமா?… உங்கட சாப்பாட்டில சீனி சேர்க்க வேண்டாம் எண்டு சொல்லியிருக்கன்…. இண்டைக்கு குளிப்பாட்டினவையளோ?” என்ற கேள்விக்கு அப்பா இல்லை என்று தலையாட்டியே பதிலளித்தார். மீண்டும் ஏதோ சொல்ல வேண்டும் போல் அவருக்கு தோன்றியிருக்க வேண்டும். முகத்தில் ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய மெளனம்… பறிபோன சொற்களை மீட்டெடுக்கும் மெளனம். ‘“மகள் … நான் வீட்டுக்கு வந்து இருக்கப்போறன் மகள்… இஞ்ச ஏலாது…. இஞ்ச இந்த அறைக்குள்ள தனிச்சிப் போயிட்டன் பிள்ள … பயமாய் இருக்கு மகள்… இஞ்ச எனக்கு யாரு இருக்கா?“ என்றபோது அவர் உடல் குலுங்கி அடங்கியது. அப்புவின் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் அம்மா என் முகத்தைப் பார்த்தார். அப்புவின் கண்கள் பனித்ததை அம்மாவும் கவனித்தார். ‘பையா… தனிச்சுப் போயிட்டன் ராசா… சாப்பாடும் குளிப்பும்தான் வாழ்கையில்ல பையா… குடும்பமடா… குடும்பம். அது இஞ்ச இல்ல மகன் … என்னை நம்மட வீட்டுக்கு கூட்டிப் போ ராசா“ என்று என்னைப் பார்த்து சொன்ன வார்த்தைகள் இடியாய் என்னுள் இறங்கின. அப்போது அறைக்கதவு திறந்து கொள்ள அந்த வயோதிபர் மடத்தின் ‘மேற்ரன்’ உள்ளே நுழைந்து எம் எல்லோரையும் கண்களால் துலாவி “ ஓ… ஐயாவ பார்க்க எல்லொரும் வந்திருக்காங்க போல“ என்று கூறி பின் அப்புவைப் பார்த்து “ எப்பிடி ஐயா இருக்கிறீங்கள். எல்லாம் வசதிதானே? ஏதாவது தேவையென்டால் சொல்லவேணும். என்ன… சந்தோசம் தானே?” என்ற கேள்விக்கு ‘“ஓம் … மெத்த சந்தோசம்… மெத்த சந்தோசம்” என்று தலையை ஆட்டியவாறு கூறி என் கண்களை ஏறிட்டுப்பார்த்தார் அப்பு. பின் அவர் கண்கள் தன் வலது கை விரல்களில் குத்திட்டு நின்றன. என் பார்வை அப்புவின் அந்த கை விரல்களில் குவிந்தது. பெருவிரல் ஆள்காட்டி விரலூடாக நுழைந்து எம்மிருவருக்கு மட்டும் தெரிந்த அந்த இரகசிய சமிக்கையை உருவாக்கிக் காட்டிற்று! https://solvanam.com/2025/07/13/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88/
  40. ஜேர்மனியில் யாழ் இளைஞர் விபரீத முடிவு.! Vhg டிசம்பர் 09, 2025 யாழ்ப்பாணம் ஊரேழு கிழக்கு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஜேர்மனியில் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளஞன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஜேர்மனி சென்று அங்கு அகதி என பதிவு செய்தார். அதன் பின்னர் ஜேர்மன் அதிகாரிகள் அவரை அகதி முகாமில் தங்கவைத்தனர். விசா இல்லை வேலை இல்லை, தனிமை விசா இன்மை, வேலை இன்மை, தனிமை, மொழிப் பிரச்சனை போன்ற காரணங்களினால் இளைஞர் மனவிரக்திக்குள்ளாகி மீண்டும் ஊருக்கு வர போகின்றேன் என அடிக்கடி குடும்பத்தினருக்கு கூறி வந்ததாக கூறப்படுகின்றது. குடும்பத்தினரும் போன காசை உழைத்துக்கொண்டு வா என்று ஆறுதல் கூறியும் இளைஞர் இளைஞர் விபரீத முடிவெடுத்து இன்று (9.12.2025) அதிகாலை முகாமில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் ஊரெழு கிழக்கு பகுதியைச் சேர்ந்த 25 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இளைஞனின் மரணம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. https://www.battinatham.com/2025/12/blog-post_480.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.