Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    3074
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    3001
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19253
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    7082
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/17/25 in all areas

  1. மரப்பாவம் ----------------- 'உங்கள் வீட்டில் நிற்கும் தென்னை மரத்தை நீங்கள் வெட்ட வேண்டும்.........' என்றார் அவர். அவர் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர். பக்கத்து வீட்டுக்காரரின் மகள். மிகவும் வயதாகிவிட்ட தந்தைக்கு உதவியாக சில மாதங்களின் முன் இங்கு குடி வந்தார். நான் இருக்கும் அமெரிக்காவின் மேற்கு கரையில் ஒரு தென்னை மரம் கூட கிடையாது என்று யாரோ சொல்லக் கேட்டிருக்கின்றேன். மேற்கு கரை எங்கெனும், மேலே கனடா எல்லையில் இருந்து கீழே மெக்சிகோ எல்லையில் வரை உள்ள சில ஆயிரம் மைல்களிலும், தென்னை மரமே இல்லை என்னும் போது, என் வீட்டில் தென்னை மரமா என்ற யோசனையுடன் அவரைப் பார்த்தேன். 'தென்னை மரமா................... என் வீட்டில் இல்லையே..................' 'ஆமாம்.............. அந்த மரம் முன்னர் இங்கிருக்கவில்லை.............. ஆனால் இப்பொழுது ஒரே இரவில் இப்படி வளர்ந்திருக்கின்றது.........' 'என் வீட்டிலா அல்லது உங்கள் வீட்டிலா..............' என்று உண்மையான சந்தேகத்துடன் கேட்டேன். 'என் வீட்டில் மரம் எதுவுமே இல்லை.............. உங்கள் வீட்டில் தான் ஏராளமான மரங்கள் நிற்கின்றன..........' என்றார் கொஞ்சம் கடுமையுடன். என்னுடைய ஆங்கிலத்தின் தொனி தான் அவரை சினமடைய வைத்திருக்க வேண்டும். நான் சாதாரணமாகவே தான் கேட்டேன், ஆனால் ஆங்கிலம் தான் அந்தக் கணத்தில் கையைவிட்டு விட்டது. இரவல் மொழியில் பணிவு இல்லாமல் போய் விட்டது என்று விளக்கம் கொடுக்கவா முடியும். நிறைய காய்களும் தன்னுடைய வீட்டுக்குள் விழுந்திருக்கின்றன என்றார் அவர். அதனால் அவர் வீடு ஒரே குப்பையாகக் கிடக்கின்றது என்றும் குற்றப் பத்திரிகையைத் தொடர்ந்து வாசித்தார். 'தேங்காய்களா.....................' என்றேன் ஆச்சரியத்துடன். இங்கு ஒரு டாலருக்கு விற்ற தேங்காய்கள் இப்பொழுது மூன்று டாலர்கள் ஆகிவிட்டன. ஆனால் என் வீட்டில் எந்த மரத்தில் தேங்காய்கள் காய்க்கின்றன என்று தெரியவில்லையே. 'இல்லை................... அவை மாதுளையின் காய்கள்......................' என்றார். மாதுளை இந்த வருடம் எந்த வருடமும் இல்லாதது போல காய்த்து நிற்கின்றது. நீலி என்ற ஒரு பெண் தெய்வம் பற்றி உங்களுக்கு தெரியுமா. நீலியை ஒரு கொடிய பேய் என்று சொல்பவர்களும் உண்டு. இந்த மாதுளையும் ஒரு பெரும் நீலித் தெய்வம் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு பிரமாண்டமாய் நிற்பது போல நிற்கின்றது. ஆகாயத்தின் ஒரு பகுதியையே மறைத்து அதன் கீழ் முழு நிழலை வைத்திருக்கின்றது. மாதுளை மரம் இப்படியும் வளருமா என்றே நம்ப முடியாமல் இருக்கின்றது. இது அமெரிக்காவில் நின்றாலும், இது அமெரிக்க மாதுளை இல்லை, ஆசிய மாதுளை என்றே ஒரு இடத்தில் விற்றார்கள். ஒவ்வொரு திசையிலும் நூற்றுக் கணக்கான காய்களுடன் ஆயிரம் கண்களுடைய நீலி போல நிற்கும் மாதுளையின் ஒரு பக்கம் பக்கத்து வீட்டுக்குள் சரிந்திருந்தது. 'மன்னிக்க வேண்டும்............... நான் உங்களின் வீட்டுக்குள் வரும் அந்த மாதுளையின் பகுதியை இந்த வாரத்துக்குள் வெட்டி விடுகின்றேன்.............' 'தென்னை மரம்.................?' என்று கேள்வியாக நின்றார். தென்னை மரத்தை தயவு செய்து கொஞ்சம் காட்ட முடியுமா என்றேன். இந்த தடவை வந்த ஆங்கிலத்தில் பணிவு நன்றாகவே இருந்தது. வாருங்கள் என்று அவர் வீட்டின் ஒரு பக்க கதவைத் திறந்து உள்ளே கூட்டிப் போனார். அங்கே பாருங்கள் உங்களின் தென்னை மரத்தை என்று மேலே விரலை உயர்த்திக் காட்டினார். 'இதுவா................. இது தென்னை மரம் இல்லை............. இது வாழை மரம்...............' பல வருடங்களின் முன்னர் ஒரு நாள் இங்கு ஒரு செய்தி நிறுவனம் வட கொரியா எங்கே இருக்கின்றது என்று ஒரு உலக வரைபடத்தில் சுட்டிக் காட்டும்படி பலரை நேரலையில் கேட்டிருந்தார்கள். பல அமெரிக்கர்கள் கனடாவையே வட கொரியா என்று சுட்டிக் காட்டியிருந்தார்கள். எனக்கு வாழை தென்னை ஆகியது அதை விட பெரிய செய்தி. 'இந்த வாழை மரங்கள் என் வளவுக்குள் தானே நிற்கின்றது. இதில் நான் எதை வெட்ட வேண்டும்.................' 'இந்தப் பக்கம் வரும் இலைகள் எல்லாவற்றையும் நீங்கள் வெட்ட வேண்டும். இவை ஏன் என் வீட்டின் கூரையின் மேல் ஆடிக் கொண்டு நிற்கின்றன.......... என்ன பெரிய இலைகள்...................' என்று சலித்துக் கொண்டே அவரின் கூரைக்கு மேல் போயிருந்த வாழை இலைகளை காட்டினார். அங்கே பார்த்தேன். சமீபத்தில் வீசிய பெருங்காற்றில் வாழை இலைகள் கிழிந்திருந்தன. யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று அவை அயல் வீட்டுக்கார பெண்ணின் கோபம் அறியாமல் அடுத்த வீட்டுக் கூரையின் மேல் காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. சுற்று முற்றும் பார்த்தேன். மற்ற வீடுகளில் மரங்கள் எல்லாம் அடக்க ஒடுக்கமாகவே நின்று கொண்டிருந்தன. என் வீட்டில் எல்லா மரங்களிலும் நீலித்தெய்வம் குடியேறியிருந்தார். ஒரு பிரச்சனையும் இல்லை, வாழை இலைகளை வெட்டி விடுகின்றேன், ஆனால் இரண்டு வாழைகள் குலைகள் போட்டிருப்பதால் உடனடியாக வெட்ட முடியாது என்றேன். எப்போது வெட்ட முடியும் என்று ஒரே பிடியாகவே நின்றார். குளிர்காலம் முடிந்து, வசந்த காலம் வரும் போது குலைகள் மீண்டும் முற்ற ஆரம்பிக்கும் என்று வழக்குக்கு ஒரு வாய்தா கேட்டேன். காற்றும் புயலும் மழையும் மாறி மாறி வருகின்றது, இவை முறிந்து வீட்டுக்கு மேல் விழுந்தால் என்னவாவது என்று ஒரு காப்புறுதி நிறுவனப் பணியாளர் போல கேட்டார். சில வருடங்களின் முன்னர் ஒரு வாழை முற்றிய குலையுடன் அவர்களின் வீட்டுக்குள் விழுந்ததைச் சொன்னேன். வாழை முறிந்து விழுந்தாலும் அதனால் சேதம் எதுவும் ஆகாது என்று உறுதிப்படுத்தவே அதைச் சொன்னேன். அதைக் கேட்டு திடுக்கிட்டவர் அப்பா சொல்லவில்லையே என்றார். 'உங்களின் அப்பா மிகவும் நல்ல ஒரு மனிதர்..................' 'அவர் சரியான அப்பாவி................... மனிதர்கள் அவரை ஏமாற்றி விடுகின்றார்கள்...............' எந்தப் பக்கம் போனாலும் கல்லால் எறிவது என்று அவர் முடிவெடுத்து விட்டார் என்று தெரிந்தது. அப்பாவை எங்கே சில நாட்களாக வெளியே காண்வில்லையே என்று கேட்டேன். அப்பா குளியலறையில் வழுக்கி முன் பக்கமாக விழுந்து மிகவும் பலமாக அடிபட்டு, படுத்த படுக்கையாகவே கிடக்கின்றார் என்றார். முன்னர் வாழை ஒன்று முறிந்து அவர்களின் வீட்டுக்குள் விழுந்த போது, அவரின் அப்பா வாழைக்குலையை தான் எடுக்கவா என்று மட்டுமே கேட்டார். சந்தோசத்துடன் சம்மதித்தவுடன், குலையை எடுத்து விட்டு மிகுதியை அவரே வெட்டி எடுத்து அப்புறப்படுத்தினார். இது நல்ல குணமா அல்லது அப்பாவித்தனமா என்று ஏஐயிடம் ஒரு தடவை நான் கேட்டுப் பார்க்கவேண்டும். அந்த வாரமே மாதுளையையும், அவர்களின் வீட்டுக்குள் எட்டிப் பார்த்த வேறு சில மரங்களையும் வெட்டினேன். அந்தப் பெண் மிகவும் சந்தோசப்பட்டார். அந்த வீட்டின் சொந்தக்காரியாக ஆவதற்கு அவர் தயாராகி விட்டார் என்றே தெரிந்தது. பின்னர் ஒரு நாள் நான் வெளியில் நின்று வேலை செய்து கொண்டிருக்கும் போது அந்தப் பெண்ணின் காரை ஒரு கார் இழுக்கும் வாகனத்தில் கொண்டு வந்து அவருடைய வீட்டின் முன்னே இறக்கினார்கள். அவருடைய காரின் மேற்கூரை முற்றிலும் உள்ளே போயிருந்தது. கார் இழுக்கும் வாகனத்துக்குள் இருந்து அந்தப் பெண்ணும் இறங்கினார். 'என்ன............... விபத்து ஆகிவிட்டதா..............உங்களுக்கு ஒன்றும் இல்லை தானே.................' என்று கேட்டேன். 'ஆமாம்............. எனக்கு எதுவும் ஆகவில்லை. நான் காரை விட்டு விட்டுப் போயிருந்தேன்.............. காரின் மேல் ஒரு பெரிய மரக்கிளை முறிந்து விழுந்து விட்டது.................' 'கடவுளின் அருள்......... நீங்கள் அங்கே இல்லாதது.................' 'ஆமாம்....................' 'பெரிய சேதமாக இருக்கின்றதே................ என்ன மரம் உங்களின் கார் மேல் விழுந்தது................' ''
  2. "போர்க்கால பாதுகாப்பு முஸ்லிம் குடிபெயர்வு!" வாவ்😂! என்ன ஒரு "சொற் சிலம்பம்" நெடுக்கர். முஸ்லிம்கள் "தாமாகவே சொத்துக்களை விட்டு விட்டு போர் சூழலில் இருந்து குடி பெயர்ந்தனர்" என்று எதிர்காலத்தில் எழுதுவார்கள் என நினைக்கிறேன்😂.
  3. பரா ரூமி Farah Rumy இலங்கை வம்சாவளி தமிழ் பெண் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணைத் தலைவராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பரா ரூமி சுவிஸ் கூட்டாட்சி நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இலங்கையில் பிறந்த நபர் ஆனார். இனவாதம் பார்க்காத சுவிட்சர்லாந்து நாட்டிற்கும் பாரா ரூமிக்கும் வாழ்த்துக்கள். https://dailynews.lk/2025/12/15/local/914618/farah-rumy-34-first-lankan-born-elected-to-swiss-federal-parliament/
  4. மலையக தமிழ் மக்களின் நில உரிமை உட்பட அனைத்து அடிப்படை உரிமைகளையும் மறுதலித்து மலையக தமிழ் மக்கள் மீதான சிங்கள பேரின இனச்சுத்திகரிப்டஸ்ரீபுக்க துணை போவதே இந்த அழைப்பின் உண்மை நோக்கம். போர் கால பாதுகாப்பு முஸ்லிம் குடிபெயர்வை இனச்சுத்திகரிப்பு என்றவர் இந்த இன சுத்திகரிப்புக்கு தெரிந்தும் துணை போவது ஏன்?? அ. திட்டமட்ட கருத்தடை ஆ. மக்கள் நல அபிவிருத்தி இன்மை இ. உழைப்புக்கு ஏற்ற ஊதியமினமை ஈ. பாதுகாப்பற்ற வாழ்விடங்கள் உ. நீர்தேக்க விரிவாக்கம் என்ற போர்வையில் வாழிட நிலப்பறிப்பு ஊ. நிர்வாகம் கல்வி கலாசாரம் சிங்கள பௌத்த மயமாக்கம் எ. விகிசாதார கல்வி வேலை வாய்ப்பில் புறக்கணிப்பு ஏ. தோட்ட மக்களின் நவீன தேவைகளுக்கு பிற நகரங்களை தங்கி இருக்கரசெய்தல் ஐ. திட்டமிட்ட இனக்கலவரங்கள் சொத்தழிப்பு ஒ. இயற்கை அனர்த்தங்களுக்கு சரியான நிவாரணமின்மை.. எதிர்கால அனர்த்தங்களில் இருந்து பாதுகாக்க நீண்ட கால திட்டங்கள் செயற்படுத்தாமை. இவற்றோடு இயற்கை அனர்த்த அழிவை பயன்படுத்தி மலையக தமிழ் மக்களை துரித இனச்சுத்திகரிப்பு செய்ய நிற்கும் ஜேவிபிக்கு இவர் ஏன் அடி எடுத்து கொடுக்கிறார்????
  5. விழுந்ததும் தென்னையோ அண்ணை?!
  6. வீட்டில் நான்தான் சமையல் என்பதால் எனக்கு ஆபத்து இல்லை.
  7. கதையின் நகர்வு மிக்கது திறமையாக இருந்தது எங்கள் ஊரில் ஒரு வீட்டில் ஒரு மாமரம் இருந்தது. அதன் கொப்புகள் இரண்டு அயல் வீட்டாரின் வேலிக்கு மேலாக சென்று அவர்களின் காணிக்குள் நீண்டு இருந்தது, அவர்கள் இரு குடும்பத்திற்கும் இடையில் நல்ல சுமுகமான உறவு இருக்கும் வரை மாமரம் காய்க்கும் போது பக்கத்து வீட்டுக்காரர் அதை அனுபவித்து வந்தனர் . சில காலங்களின் பின்னர் இரு குடும்பத்தாருக்கும் இடையில் உறவு ஏதோ ஒரு காரணத்தால் முறிந்து விட்டது. அடுத்த நாள் அந்த மாமரத்தின் இரு கொப்புக்களும் மரத்தின் உரிமையாளரால் வெட்டப்பட்டு விட்டன. இதில் ஒரு முக்கியமான விடையம்..... அந்த இரு குடும்பத்தவர்களும் ஒரே பெற்றோருக்குப் பிறந்த இரு சகோதரிகள்😂
  8. மிக்க நன்றி வில்லவன். அவரை கடைசியில் அப்படிக் கேட்டிருக்கக் கூடாது போல, ஆனால் பழைய சங்கதிகள் எதையும் மனதில் வைத்து அப்படிக் கேட்கவில்லை. 🤣............. எக் காலத்திலும் உங்களை அவருக்கு நான் அறிமுகப்படுத்தி வைப்பதாக இல்லை, அண்ணா................. நீங்கள் சொல்வதைக் கேட்டால், அவர் ஒரு வழக்கே தாக்கல் செய்துவிடுவார்..................🤣.
  9. சிறப்பான கதை அண்ணை. கடைசி வரியில் சிறப்பான(!) சம்பவம் ஒன்றோடு முடித்திருக்கிறீர்கள் 😁. உங்கள் கதைகளில் உரையாடல்கள் மிகவும் இயற்கையாக அமைவது ஒரு நல்லியல்பு.
  10. நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. இது நான் கண்ட அனுபவம். அது போல் கேம்பிரிச்,ஒக்ஸ்போர்ட்,இம்பிரியால் போன்ற யூனிகளில் படித்தவர்கள் சொல்வதெல்லாம் உண்மையுமல்ல.நியாயங்களும் அல்ல.
  11. இந்திய அரசியல் கொள்கையினால் அதிகம் பாதிக்கப்பட்டு பாரிய அழிவுகளை சந்தித்தவர்கள் என்றால் அது ஈழத்தமிழர் மட்டுமே. இன்று கூட தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழ் அகதிகள் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் அகதி முகாம் வாழ்க்கையே வாழ்கின்றார்கள். வெளியே வாழ்பவர்களுக்கு கூட சாதாரண மனித உரிமைகள் கூட இல்லை.காலம் காலமாக இந்திய உதவிக்கரத்தை நீட்டியவர்கள் ஈழத்தமிழர்கள். அதை அன்று தொடக்கம் இன்று வரைக்கும் உதாசீனம் செய்தது இந்தியா மட்டுமல்ல. தமிழ்நாட்டு சில பல அரசியல்வாதிகளும் தான்..... அவர்களின் அந்த வர்ம/ வன்மம் இன்றும் தொடர்வதால் அமெரிக்க தரையிறக்கத்தை ஆதரிப்பதில் எந்த தவறும் இல்லை என்பது என் கருத்து. நெடுந்தீவிலும் புங்குடுதீவிலும் பருத்தித்துறையிலும் மன்னார் மற்றும் மட்டக்களப்பிலும் அமெரிக்க இராணுவ முகாம்களை அமைத்து மார்ஷல் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என வேண்டிக்கொள்கின்றேன்.🙏
  12. சம்பந்தனின் “அடுத்த தீபாவளிக்குள் தீர்வு” ஜவ்வு மிட்டாய் போல… மலையகமக்களை தோட்டங்களிலேயே ராஜாவாக்குவோம்.. என இங்கே சில அறை கூவல்களை கேட்க கூடியதாக உள்ளது. ராசாமார்….உங்களுக்கு சிங்களவன் தமிழ் ஈழம் கூட தருவான்…ஆனால் இதை செத்தாலும் செய்யமாட்டான்…. இது உங்களுக்கும் தெரியும். ஆனால் நேரடியா மலையக மக்கள் எம் ஊரில் வேண்டாம் என சொன்னால் இமேஜ், டமேஜ் ஆகிவிடும் என்பதால், இப்படி ஒரு சம்பந்த வியாக்கியானம் கொடுக்கிறீர்கள். ஆப்கானிய, எகிப்திய, ஜோர்தானிய, லெபனானிய இன்னும் பல நாடுகளில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் துன்புற்ற யூதர்களை இஸ்ரேல், உள்ளே எடுத்து, வீடும் காணியிம், தொழிலும் கொடுத்தத்து. இப்படி செய்யதால் அது இனச்சுத்தீகரிப்பாகிவிடும்…எனவே நீங்கள் அங்கேயே கிடந்து மாளுங்கள் என சக யூதர்களை அவர்கள் விட்டு விடவில்லை. ம்ம்ம்…அவன் யூதன்…கூர்ப்பில் முன்னேறியவன். நாங்கள் பெயருக்குத்தான் ஜப்னா ஜூ 😂. மூலோபாய சிந்தனை அறவே அற்ற கூட்டம்.
  13. மரங்களை பராமரிப்பது கடினமானதும், உடனடிப் பிரயோசனம் அற்றதுமான ஒன்று என்றே பலரும் நினைக்கின்றார்கள் போல. வீடுகளில் முன்னும், பின்னும் இருக்கும் நிலங்களை காங்கிரீட் அல்லது டைல்ஸ் அல்லது அழகான கற்களால் மூடி விடுவதும் இங்கு ஒரு வழமையாகிவிட்டது. நிலமும் மூச்சு விடக்கூடாது.............🤣. இந்தப் பக்கம் முழுவதும் வீட்டுத்தோட்ட வேலைகளை செய்வதும் அவர்களே. அவர்கள் தங்களுக்கு ஆங்கிலம் தேவையில்லை என்று கூடி முடிவெடுத்து இருக்கின்றார்கள் போல. முன்னர் ஒரு அயலவர் இருந்தார். அப்பவே வயதான ஒரு இந்தியர். அவர் எந்த மரத்தை, செடியை அவர் வீட்டில் வைத்தாலும், அது வளருவதேயில்லை. ஆனால் அங்கு தோட்டவேலைகள் செய்பவர் அந்த வீட்டில் எதை வைத்தாலும் அது நன்றாக வளர்ந்தது. அவர்கள் ஒரு செடியை அல்லது மரத்தை தலைகீழாக நட்டாலும் அவை துளிர்க்கும், அவர்களின் கைராசி அப்படி என்று அவர் அடிக்கடி சொல்லுவார். என் வீட்டில் மனைவி சில செடிகளை அங்கிருந்து இங்கு, இங்கிருந்து அங்கு என்று இடம் மாற்றுவார். ஒரு நாள் அந்த அயலவர் என்னைக் கூப்பிட்டு, 'மரங்களும் மனிதர்கள் போலவே. மண்ணுடன் ஒட்டினால் மட்டுமே அவை பிழைக்கும். அடிக்கடி இடம் மாற்றினால் அவை எங்கும் ஒட்டாமல் போய் விடும்................' என்றார். அவர் செடிகளைத் தான் சொன்னார், ஆனால் அதுவே எங்கள் வாழ்க்கையின் பாடமும் கூட.................
  14. அண்ணை யாரும் யாரையிம் அடியோடு புடுங்க, கேட்காமல் இழுத்து வர கேட்கவில்லை. அவர்கள் எமம்முடன் வந்து வாழும் ஏது நிலையை உருவாக்குவோம்… முதலில் ஒரு சிலர் வரட்டும்…அவர்களை கைதூக்கி விடுவோம்… அதன் பின் அவர்கள் ஏனையோரை அழைப்பர்…அடித்தடுத்த சந்ததி..அவர்களுக்கு அவர்களே வழிகாட்டுவார்கள். இப்படித்தானே அண்ணை, கொழும்பையே காணாத, ஊரில் காலை எழுந்ததும் பனங்கூடலுக்க ஒதுங்கின ஆட்களை எல்லாம் இலண்டன், பரிஸ், கனடா எண்டு எடுத்து விட்டு…இப்ப அவை எல்லாம் செருப்பு போடாமல் நடக்க முடியாது எண்டு சொல்லும் அளவுக்கு “முன்னேறி” இருக்கினம். 2026 இல் 50 குடும்பங்களை, 200 தனி ஆண்களை இப்படி எடுத்து விட்டால், ஆண்டு 9+ படிக்கும் பிள்ளையள் 200 பேரை எமது பள்ளிகளில், பள்ளிக்கு 20 பேர் என ஹொஸ்டலில் சேர்த்து விட்டால்—- 2056ம் வருடத்தில் லைன், தேயிலை பறிக்கும் தொழில் எதுவும் இருக்காது. தேயிலை ஒன்றில் சிங்களவர் பறிக்கலாம், அல்லது அதற்குரிய சம்பளத்தில் சகல இனத்தவரையும் வேலைக்கு அமர்த்தலாம் அல்லது தானியங்கிகளை அறிமுகம் செய்யலாம். வளைவு, கோபுரம், கோவில், விளையாட்டு மைதான சுற்று மதில், அம்மா, அப்பா பெயரில் அன்னதானம்… #இன்ன யாவிலும் புண்ணியம் கோடி புண்ணியம் மட்டும் இல்லை, வடக்கும் தொடர்ந்து தமிழர் நிலமாக நிலைக்கும்😂. அதாவது மாவட்டம்/மாகாணத்துகுரிய வழமையான 100% சுயநலத்துடன் சிந்தித்தால் கூட இது நல்ல விடயமே😎.
  15. எனக்கும் இது பெரிய ஆச்சரியமாக உள்ளது. 5-10 பேர் என்றால் பயத்தில் திரும்ப போகவில்லை என்று சொல்லலாம். கோசான் பொறுத்த நேரத்தில் இலங்கை பயணம் மேற்கொண்டு இருக்கிறீர்கள். எதுவித துன்பமும் இல்லாமல் சுகமாக திரும்ப வந்தது சந்தோசம். இந்த தடவை முக்கியமான பயணமாக இருந்திருக்கும். எனவே நேரமிருந்தால் உங்கள் பயணத்தை நேரடி அனுபவங்களை எழுதுங்கள்.
  16. பயணிகள் என்ன ஆனார்கள்? வீரகேசரி ஆதவனுக்கு தமிழ் திக்குவது போல டெய்லி மிரருக்கு ஆங்கிலம் திக்கி உள்ளது. இரண்டு பந்தியும் முதலாவது (திரும்பி வந்த) பறப்பைத்தான் சுட்டுகிறன. ஆனால் ஒரு இடத்தில் 202 என்றும் மற்ற இடத்தில் 51 எண்டு அடித்துள்ளனர். டைப்போ என நினைக்கிறேன்.
  17. வேற என்ன வாழைமரம் தான். காருக்கே இவ்வளவு சேதம் என்றால் வீட்டின் மேல் விழுந்தால் வீடே நசிந்திருக்கும்.
  18. அயலவர் உங்களுக்குத்தானே தொல்லை தந்தார். அப்படிப் பார்த்தால் அது உங்கள் பாவம் என்றுதானே ஆகிவிடும். அயலவர்கள் தொல்லை எல்லா இடங்களிலும் உண்டு. மரப்பாவம் பொல்லாதது என்று நீங்கள் சொல்வதால் மரங்களை நட்டு இயற்கையைப் பாதுகாப்போம். வழமைபோல் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.👏
  19. வீடுகளில் மரங்களை வைக்கும், அல்லது இருக்கும் மரங்களைப் பேணும் பழக்கம் அருகி வருகிறது. இரு வீடுகளின் எல்லையில், எங்கள் காணிக்குள் நின்ற ஒரு Pin Oak மரம் இறந்து வரும் அறிகுறிகள் தெரிவதாக அயல் வீட்டுக் காரர் என்னிடம் சொன்னார். முறைப்பாடுகள் செய்யாத நட்பான மனிதர். வெட்டும் செலவில் அரைவாசியை தான் ஏற்றுக் கொள்வதாகவும் சொல்லி, அவரே மரம் தறிக்கும் கம்பனி ஒன்றையும் ஏற்பாடு செய்தார். ஆங்கிலத்தில் ஒரு சொல்லும் தெரியாத மெக்சிக்கன் வேலையாட்கள் வந்து சர சரவென்று 2 மணி நேரங்களில் சாய்த்து விட்டுப் போனார்கள். வீட்டின் முன் பக்கம் நிழல் பெரிய இழப்புத் தான் என்றாலும், புயல் காற்றில் வீட்டின் மேல் சாய்ந்திருந்தால் பெரிய வேலையாக முடிந்திருக்கும். எப்போதாவது வரும் புயல், மரம் வீழ்தல், காப்புறுதி என்று வலு சீரியசாக யோசிக்கும் இந்திய அமெரிக்க அயலவர்கள் வீடு வாங்கியவுடன் செய்யும் முதல் பணிகளில் ஒன்று சுற்றி நிற்கும் மரங்களை வெட்டிச் சாய்ப்பது தான்.
  20. அவர் சொல்லாமலேயே போய் விட்டார், ஏராளன். முறைக்காமல் விட்டதே பெரிய விசயம் போல..................🤣. நாக்கு இடைக்கிடை புத்தியை முந்தி விடுகின்றது.............😜. பெண்பாவம் பொல்லாதது என்பார்கள். ஆண்பாவம் மட்டும் என்னவாம் என்று பாண்டியராஜன் ஒரு படம் எடுத்தார். மரப்பாவம் மட்டும் சும்மாவா.............. அவருடைய காரை காப்புறுதி நிறுவனம் திருத்திக் கொடுத்தார்கள் என்று நினைக்கின்றேன்.............
  21. வாழ்த்துக்கள்! இவரது பெயரை முன்னரும் கேள்விப் பட்டிருக்கிறேன். சுவிசில் மேல் மட்ட அரசியல் பதவிகளுக்கு வருவது என்பது பிரிட்டன், அமெரிக்காவில் இருப்பது போல இலகுவான காரியமல்ல!
  22. கந்தையா அண்ணா அவா புர்க்கா போடாத பெண் ஆனபடியயால் பயப்பட வேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறேன் படத்தை இணைக்க முயற்ச்சித்தேன் முடியவில்லை.
  23. நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு லிந்துலை டிலிகூல்றி தோட்டத் தொழிலாளர்கள் நிதி உதவி Published By: Digital Desk 3 17 Dec, 2025 | 11:19 AM டித்வா சூராவளியைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகள் பாரிய அனர்த்தத்திற்கு உள்ளாகின. இதில் பலர் உயிரிழந்ததுடன், பெறுமதிமிக்க சொத்துகளும் முற்றாக சேதமடைந்தன. பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் வீடுகள் இடிந்து விழுந்தும், முழுமையாக நாசமாகியும் உள்ளன. மண்ணில் புதையுண்டவர்களை மீட்க முடியாமல் மீட்பு பணியாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். இதன் விளைவாக, பல குடும்பங்கள் கடுமையான வாழ்வாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இந்நிலையில், பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி தலைமையில் அரசாங்கம் பல சவால்களை எதிர்கொண்டு செயல்பட்டு வருகிறது. அதனுடன், அரசாங்கம் மற்றும் வெளிநாடுகளின் உதவியுடன் பாரிய அளவில் மனிதாபிமான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்புவதற்காக தேசிய நிதியம் ஒன்றை உருவாக்கியுள்ளது. உலகின் பல பகுதிகளில் இருந்து மனிதாபிமான அடிப்படையில் நிதி மற்றும் நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. மலையகத்தில் பல அரசியல் தலைவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் கோடிக்கணக்கான சொத்துகள் இருந்த போதிலும், இந்நிதியத்திற்கு ஒரு சதம் கூட வழங்க முன்வராத நிலை காணப்படுகிறது. இதற்கு மாறாக, எந்தவித வசதி வாய்ப்புகளும் இன்றி, ஒருநேர உணவுக்கே போராடி வாழும் தோட்டத் தொழிலாளர்கள் தங்களின் நேர்மையான உழைப்பிலிருந்து ஒரு பகுதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் வழங்க முன்வந்தமை பாராட்டத்தக்கதாகும். அந்த வகையில், நுவரெலியா மாவட்டம், லிந்துலை – நாகசேன டிலிகூல்றி தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள், விவசாயிகள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து தேசிய நிதியத்திற்கு நிதி உதவி வழங்கியுள்ளனர். இதன்படி, 114 பேர் இணைந்து ரூ. 1,81,100 இலங்கை வங்கி திறைசேரி கணக்கில் வைப்பு செய்துள்ளனர். இது குறித்து சிலர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இது தொடர்பில் நிதி பங்களிப்பு செய்த எம். சத்யானந்தன் கருத்து தெரிவிக்கையில், “நாட்டில் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி அவர்கள் பெரும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார். மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர அவர் கடுமையாக உழைத்து வருகிறார். இந்த நிலையில், தோட்டத் தொழிலாளர்களாகிய நாமும் நிதி உதவி வழங்கி ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். உறவுகளை இழந்து துயரத்தில் தவிக்கும் மக்களுக்கு எங்களால் இயன்ற அளவில் உதவி செய்ய கிடைத்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நாட்டில் அனைவரும் நலமாக இருந்தால்தான் நாங்களும் நிம்மதியாக வாழ முடியும். பெரிய உதவி செய்ய இயலாவிட்டாலும், சிறிய உதவியையாவது செய்ய முடிந்ததற்கு இறைவனுக்கு நன்றி.” மேலும், “தோட்ட மக்களிடம் உதவி கேட்கும் போது யாரும் மறுக்கவில்லை. அவர்களால் இயன்ற அளவு மன நிறைவோடு பங்களிப்பு செய்தனர். ஒவ்வொருவரின் பெயரிலும் வங்கியில் வைப்பு செய்து, ரசீதுகளும் வழங்கப்பட்டுள்ளன. இன்றைய அரசியல் சூழலில் பலர் மக்களின் பணத்தை தனிப்பட்ட சுகபோக வாழ்க்கைக்குப் பயன்படுத்தும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு ரூபாய் கூட வழங்காதது மன வேதனையை ஏற்படுத்துகிறது. இருப்பினும், ஜனாதிபதி மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இந்த நிதியுதவியை வழங்கியுள்ளோம். நாடு நன்றாக இருந்தால்தான் எங்களின் பிள்ளைகளின் எதிர்காலமும் பாதுகாப்பாக இருக்கும்” என அவர் தெரிவித்தார். நிதி பங்களிப்பு செய்த கலைச்செல்வி கருத்து தெரிவிக்கையில், “கடவுளின் ஆசீர்வாதத்தால் எங்கள் தோட்டத்தில் பெரிய அனர்த்தம் ஏற்படவில்லை. ஆனால், எங்கள் உறவுகள் பலர் இன்று தங்கள் உறவுகளை இழந்து நிராதரவாக உள்ளனர். அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இருந்தது. இந்த நிலையில், தோட்ட இளைஞர்கள் வீடு வீடாக வந்து உதவி கோரிய போது, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக எங்கள் சம்பளத்திலிருந்து ஒரு தொகையை வழங்கினோம். இது எங்களுக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது. தோட்டத் தொழிலாளர்கள் வருமான ரீதியாக எப்போதும் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும், உதவி செய்யும் மனம் எங்களிடம் உள்ளது. வெளிநாடுகளில் இருப்பவர்கள் எங்கள் நாட்டுக்கு உதவி செய்கிறார்கள் என்றால், நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. எங்களால் முடிந்த சிறிய உதவியை செய்துள்ளோம்” என்றார். இன்றும் பல பகுதிகளில் மக்கள் ஒருநேர உணவுக்கே போராடி, உறவுகளை இழந்து கண்ணீருடன் வாழ்கின்றனர். அவர்களுக்கு உதவுவது தங்களுக்கும், தங்களின் பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சியை தருவதாகவும் அவர் குறிப்பிட்டார். வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்தாலும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் செயல்படும் தோட்டத் தொழிலாளர்கள், நாட்டிற்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குகின்றனர். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப தங்களின் உழைப்பிலிருந்து நிதி பங்களிப்பு வழங்கிய தோட்ட மக்களுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/233603
  24. சகோதரி திருமணத்திற்காக வைரம் தேடிய இரு நண்பர்களுக்கு 20 நாளில் கிடைத்த அதிர்ஷ்டம் பட மூலாதாரம்,AMIT RATHAUR படக்குறிப்பு,சுரங்கத்தில் தோண்டியபோது கிடைத்த வைரங்களுடன் சஜித் முகமது (இடது) மற்றும் சதீஷ் காதிக். கட்டுரை தகவல் விஷ்ணுகாந்த் திவாரி பிபிசி செய்தியாளர் 16 டிசம்பர் 2025 தன் சகோதரிக்காக ஒரு சகோதரனால் என்ன செய்ய முடியும்? மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் வசிக்கும் இரண்டு நண்பர்களின் கதை இந்தக் கேள்வியுடன் தொடங்குகிறது. டிசம்பர் 9-ஆம் தேதி, குளிர்ச்சியான காலை நேரம். பன்னா வைர அலுவலகத்தின் வெளியே பெரிதாக எந்த நடமாட்டமும் இல்லை. ஆனால், பல அடுக்கு காகிதத்தில் சுற்றப்பட்ட ஒரு சிறிய பொட்டலத்தை கையில் வைத்துக் கொண்டு நின்றிருந்த சஜித் முகமது மற்றும் சதீஷ் காதிக் ஆகிய இருவருக்கும் இது ஒரு சாதாரண நாள் அல்ல. அந்தப் பொட்டலத்திற்குள் 15.34 காரட் வைரம் இருந்தது. அதனுள், பலர் வைரத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையும் இருந்தது, ஆனால் அது ஒரு சிலருக்கே நிஜமாகிறது. சஜித் ஒரு சிறிய பழக்கடை வைத்திருக்கிறார். சஜித்தும் சதீஷும் கடைக்கு எதிரில் அமர்ந்திருக்கிறார்கள். பிபிசியிடம் பேசிய சஜித், "நீங்கள் ஒரு வைரத்தைக் கண்டால், அது தானாகவே உங்களுக்குப் புரியும். அது ஒரு மின்னல் போல இருக்கும். உங்கள் உடல் சிலிர்க்கும், ஆம், இது ஒரு வைரம் தான் என்று நினைப்பீர்கள்" என்று கூறினார். பன்னா வைர அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள அரசாங்க வைர நிபுணர் அனுபம் சிங், பிபிசி-யிடம் பேசுகையில், "சதீஷ் காதிக் மற்றும் சஜித் முகமது கண்டுபிடித்த வைரம் 15.34 காரட் கொண்டது. சுரங்கம் சதீஷ் பெயரில் இருந்தது, இருவரும் சேர்ந்து இந்த வைரத்தைக் கண்டுபிடித்தனர்" என்று கூறினார். வைரத்தைக் கண்டெடுத்த தருணத்தை நினைவு கூர்ந்த சதீஷ், "இவ்வளவு பெரிய தொகை இவ்வளவு சீக்கிரம் எங்களுக்கு கிடைக்கும் என்று நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இப்போது எங்களால் எங்கள் சகோதரிகளுக்கு நன்றாகத் திருமணம் செய்து வைக்க முடியும்" என்கிறார். 'வைர நகரத்துக்குப்' பின்னால் உள்ள கதை பட மூலாதாரம்,SIDDARTH KEJRIWAL படக்குறிப்பு,பன்னாவில் வைரங்களைத் தோண்டுவது வெறும் வேலையல்ல, நம்பிக்கைக்கும் நிச்சயமற்ற தன்மைக்கும் இடையில் எடுக்கப்படும் ஒரு முடிவு. பண்டேல்கண்ட் பகுதியில் அமைந்துள்ள பன்னா, நாட்டின் 'வைர நகரம்' (Diamond City) என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த அடையாளத்திற்குப் பின்னால், வறுமை, தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வேலைவாய்ப்பின்மை பற்றிய நீண்ட வரலாறும் உள்ளது. இங்கு, நிலத்தை தோண்டுவது என்பது ஒரு வேலை மட்டுமல்ல, நம்பிக்கைக்கும் நிச்சயமற்ற தன்மைக்கும் இடையே எடுக்கப்படும் ஒரு முடிவு. சஜித்தும் சதீஷும் வைரத்தைக் கண்டுபிடிக்கும் ஆவலில் அதே பாதையைத் தான் தேர்ந்தெடுத்தனர். பன்னாவில் பலரும் தங்கள் முழு வாழ்க்கையையும் வைரங்களைத் தேடுவதிலேயே செலவிடுகிறார்கள். ஆனால் இந்த இரண்டு நண்பர்களும் வெறும் 20 நாட்களில் இந்த வெற்றியை அடைந்துள்ளனர். சஜித்தும் சதீஷும் சிறுவயது முதலே நண்பர்கள். அவர்களின் வாழ்க்கையும் ஒரே போல் இருக்கிறது. இருவரது வீடுகளும் பன்னாவின் ராணிகஞ்ச் பகுதியில் உள்ளன. இவர்களின் முந்தைய தலைமுறையினர் வைரங்களைத் தேடுவதிலேயே தங்கள் வாழ்க்கையைக் கழித்துள்ளனர். சதீஷ் பன்னாவில் ஒரு சிறிய இறைச்சிக் கடை நடத்தி வருகிறார், அதே சமயம் சஜித்தின் குடும்பம் பழக்கடை நடத்தி வருகிறது. சகோதரிகளின் திருமணத்திற்கான செலவு குறித்து நீண்ட காலமாக இரு குடும்பங்களுக்கும் கவலை இருந்தது. பெரும்பாலும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் இந்த பொறுப்பு குறிப்பிடத்தக்க சவாலாக மாறுகிறது. "எங்கள் தந்தையும் தாத்தாவும் பல ஆண்டுகளாக நிலத்தைத் தோண்டினார்கள், ஆனால் ஒரு வைரத்தைக் கூட கண்டுபிடிக்கவில்லை"என்று சஜித் கூறுகிறார். சதீஷின் குடும்பக் கதையும் வேறுபட்டதல்ல. ஆனால் ஒவ்வொரு முறை அவர்கள் ஒரு மண்வெட்டியை எடுக்கும் போதும், இந்த முறை தங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கக் கூடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஒரு புறம் உயர்ந்துவரும் குடும்பச் செலவுகளும், சகோதரிகளின் திருமணத்தைப் பற்றிய கவலைகளும் நவம்பர் மாதத்தில் இந்த இரண்டு நண்பர்களையும் வைரங்களைத் தேடுவது என்ற முடிவுக்கு இட்டுச் சென்றன. பன்னாவைப் பொறுத்தவரை, இந்த முடிவு ஆச்சரியமான ஒன்றல்ல. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பல தலைமுறைகளாக வைரங்களைக் கண்டுபிடிக்க போராடி வரும் ஒரு பகுதியில், இரண்டு இளம் நண்பர்களின் முடிவு ஆச்சரியமல்ல. ஆனால் 20 நாட்களுக்குள் அவர்கள் எல்லா இடங்களிலும் பேசப்படத் தொடங்கினர். பன்னாவில் வைரம் கண்டுபிடிக்கப்படுவது எப்படி ? பட மூலாதாரம்,AMIT RATHAUR படக்குறிப்பு,சுரங்கத்தில் தோண்டிய போது சஜித் முகமது மற்றும் சதீஷ் காடிக் கண்டுபிடித்த வைரம் 15.34 காரட் எடை கொண்டது, இதன் சந்தை விலை ரூ. 50 முதல் 60 லட்சம் வரை இருக்கலாம். பன்னாவில் உள்ள தேசிய கனிம மேம்பாட்டுக் கழகத்தால் (NMDC) இயக்கப்படும் மஜ்கவான் வைரச் சுரங்கம், நாட்டின் ஒரே ஒழுங்கமைக்கப்பட்ட வைர உற்பத்தி மையமாகும். கூடுதலாக, பன்னாவில் உள்ள எவரும் மாநில அரசிடம் இருந்து 8x8 மீட்டர் நிலப்பரப்பை ஒரு வருடத்திற்கு குத்தகைக்கு எடுத்து சட்டப்பூர்வமாக வைரங்களை வெட்டி எடுக்கலாம். இதற்கான ஆண்டு கட்டணம் 200 ரூபாய். தோண்டிய பிறகு உங்களுக்கு நிச்சயமாக வைரம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சஜித்தும் சதீஷும் அது போன்ற ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்து, தோண்டத் தொடங்கினர். கிட்டத்தட்ட இருபது நாட்கள் கடின உழைப்புக்குப் பிறகு, டிசம்பர் 8ஆம் தேதி காலையில், அவர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்ட அந்த கல்லைக் கண்டுபிடித்தனர். மறுநாள் வைரம் பன்னா வைர அலுவலகத்திற்கு வந்தபோது, அது பரிசோதிக்கப்பட்டு 15.34 காரட் எடை கொண்டதாகக் கண்டறியப்பட்டது. அதன் விலை குறித்த கேள்விக்கு, அனுபம் சிங் பதில் கூறுகையில், "வைரத்தின் சரியான விலையைக் கூறுவது கடினம், ஏனெனில் இது சர்வதேச சந்தையைப் பொறுத்தது. ஆனால் தற்போதைய மதிப்பீடுகளின்படி, அதன் விலை ரூ. 50 முதல் 60 லட்சம் வரை இருக்கலாம்"என்றார். அவரைப் பொறுத்தவரை, பன்னாவில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட விலையுயர்ந்த வைரம் 2017-18 ஆம் ஆண்டில் மோதிலால் பிரஜாபதி என்பவரால் கண்டெடுக்கப்பட்டது. அந்த வைரம் 42.58 காரட் எடை கொண்டது மற்றும் ஏலத்தில் காரட் ஒன்றுக்கு ₹6,00,000 விலையைப் பெற்றது, அதன் மொத்த மதிப்பு ₹2.5 கோடிக்கும் அதிகமாகும். ஏலத்தில் விற்கப்படாமல் எஞ்சியிருக்கும் வைரங்கள் குறித்து கேட்ட போது, பெரும்பாலான வைரங்கள் ஐந்து ஏலங்களுக்குள் விற்கப்படுகின்றன என்று அனுபம் சிங் கூறினார். ஒரு வைரம் விற்கப்படாவிட்டால், அதைக் கண்டுபிடித்தவர் அரசாங்கத்திடம் நிர்ணயிக்கப்பட்ட உரிமத் தொகையை (royalty) செலுத்தி அதைத் திரும்பப் பெற்று, பின்னர் தனியார் சந்தையில் விற்கலாம். ஏலத்திலிருந்து பெறப்படும் மொத்தத் தொகையில் 12 சதவீதத்தை அரசாங்கம் வைத்துக் கொள்கிறது. மீதமுள்ள தொகை வைரத்தைக் கண்டுபிடித்தவர்களுக்குச் செல்லும். பட மூலாதாரம்,SIDDARTH KEJRIWAL படக்குறிப்பு,பன்னாவில், மாநில அரசிடமிருந்து 8x8 மீட்டர் நிலத்தை ஒரு வருடத்திற்கு குத்தகைக்கு எடுத்து, எந்தவொரு நபரும் சட்டப்பூர்வமாக வைரங்களை வெட்டியெடுக்கலாம். சஜித் மற்றும் சதீஷின் சகோதரிகள், முதல் முறையாக தங்கள் வாழ்க்கை மாறப் போகிறது என்று உணர்வதாகக் கூறுகிறார்கள். சஜித் மற்றும் சதீஷ், தங்களின் மாத வருமானம் சில ஆயிரம் ரூபாயைத் தாண்டாததால், இந்தக் தொகை கற்பனைக்கு அப்பாற்பட்டது என்று கூறுகிறார்கள். வைரத்தைக் கண்டுபிடித்த செய்தி முதல்முறையாக குடும்பத்தில் புதிய நம்பிக்கையைக் கொண்டு வந்துள்ளது என்று சஜித்தின் சகோதரி சபா பானு கூறுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "என் தந்தைக்கும் தாத்தாவுக்கும் இந்த அளவுக்கு வெற்றி கிடைத்ததில்லை. என் சகோதரரும் சதீஷ் அண்ணாவும் எங்கள் திருமணங்களை ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளனர். எங்கள் குடும்பம் முழுவதும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார். "வைரத்தைக் கண்டுபிடித்த அன்றைய இரவு எனக்கு தூக்கமே வரவில்லை. பணத்தை விட, ஒரு பாதுகாப்பான எதிர்காலம், என் சகோதரிகளின் திருமணம், ஒரு வீடு மற்றும் வாழ்க்கையில் ஒருவித நிலைத்தன்மை பற்றியதாகவே என் கனவுகள் இருந்தன" என்று சஜித்தும் சதீஷும் கூறுகிறார்கள். "இங்கே, கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை பெரும்பாலான வழிகள் மூடப்பட்டுள்ளன. எனவே பல தலைமுறைகளாக அதிர்ஷ்டம் மட்டுமே மிகப்பெரிய ஆதரவாக உள்ளது"என்று சதீஷ் கூறுகிறார். பன்னாவில் ஒரு வைரத்தைத் தேடுவது என்பது நம்பிக்கைக்கும், விரக்திக்கும் இடையில் ஊசலாடும் ஒரு பயணம். பெரும்பாலான மக்கள் வெறுங்கையுடன் திரும்புகிறார்கள், ஆனால் ஒருவர் வைரத்தைக் கண்டுபிடிக்கும் போது, அதன் மகிழ்ச்சி ஒரு குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் எல்லோருக்கும் பரவுகிறது. அடுத்து மற்றொருவருக்கு கிடைக்கலாம் என்ற நம்பிக்கை துளிர்விடுகிறது. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2k488j5ewno
  25. 🤣................... அவர்களே எஸ்ஐஆரின் பின்னே கோடிக் கணக்கிலோ அல்லது பல லட்சங்கள் கணக்கிலோ வாக்காளர்கள் காணாமல் போய் விட்டார்கள் என்று அவசரமாகத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். அதற்குப் பிறகு விஜய்யின் ஈரோடு கூட்டம், அடுத்த கட்டம் என்று அவர்கள் எல்லோருமே படு பிசி............... திருவண்ணாமலை தூண் சமணர் தூணா அல்லது ஒரு அளவையாளார் வைத்த தூணா அல்லது தொல்பொருளா என்றே தெரியாமல் குழம்பிப் போய், அவர்கள் ஒருவருடன் ஒருவர் மல்லுக்கட்டிக் கொண்டும் நிற்கின்றார்கள்.......... இதை விட பெரிய பிரச்சனை காங்கிரஸ் 60 சீட் கேட்பதும், பாஜக அதற்கு மேலே கேட்பதும்.................. வெறுமனே அறிக்கை விட்டுக் கொண்டிருந்தால் மட்டும் போதாது...........அப்பப்ப ஆக்சனிலும் இறங்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் போல ஒரு நிபுணர் சொல்லியிருப்பாரோ..............🤣.
  26. பரம்பரை பரம்பரையாக லைன் ஒற்றை அறை குடிசைக்குள் மூன்று, நான்கு தலைமுறைகள் ஒன்றாக வாழ்ந்தபடி, எந்த சமூக, காணி, மனித அங்கீகாரம் கூட இன்றி, உழைக்கும் இயந்திரங்களாக, நவீன அடிமைகளாக… வெறும் 100 கிமி தொலைவில்… வாழும்… சக தமிழனை… அவன் சுய விருப்பில்…. எமது இடம் கூட்டி வந்து, அவமாக போகும் எமது மனைகளில் இடம், கொடுத்து, ஒரு தொழிலுக்கான பாதையையும் காட்டலாம் என்கிறோம்… யூதனோ, சிங்களவனோ தன் சக இனத்தை இப்படித்தான் நடத்தி இருப்பான். ஆனால் சுண்ணாம்பு தமிழர்களுக்கு இது வினோதமான கோரிக்கையாக இருக்கிறது. சிங்களவரின் பாரம்பரிய தாயகத்தில் அவன் நாலாம் தர பிரஜையாக இருப்பதே அவனுக்கு நல்லது என்கிறீர்கள் 😂. இந்த மனோநிலை வினோதம் அல்ல… விசம்…விசம்…விசம்.
  27. ஓம் தெரியும். ஆக நீங்கள் சொல்வது? புங்குடுதீவு/யாழ்/வடக்கு மக்கள் கெட்டிக்காரர் அவர்கள் எந்த ஊர், நாடு போனாலும் அந்த ஊருக்கு ஏற்ப பிழைத்து நல்லா வருவார்கள். ஆனால் மலையக மக்களுக்கு கரம்பனில் இருக்க இடமும், தொழிலுக்கு உதவியும் கொடுத்தாலும் அவர்களால் முடியாது. ஏனெனில் அவர்கள் மொக்கர். சரியாக புரிந்துள்ளேந்தானே? தாங்காளும் போய் இருக்காயினம்🤦‍♂️ ஆதாரம் எங்கே?
  28. வைரமுத்துவிற்கு என் அஞ்சலிகள். வேளாண்மை செய்பவர்களுக்கும் கடின வேலை செய்பவர்களுக்கும் புட்டு,ரொட்டி அவசியமான உணவு. சுழல் கதிரை தொழிலாளர்களுக்கு அது வில்லங்க உணவு. 👈 மற்றும் படி புட்டும் தேங்காய் பூவும் அருமையான உணவு. புட்டு சாப்பிடுவதால் தான் நீரிழிவு என்றால் இலங்கை இந்திய நாடுகளில் அநேகம் பேர் உயிரிழந்திருப்பர். சாப்பிட்ட சாப்பாடு எதுவோ அதற்கேற்ப வேலை செய்தால் எந்த விக்கனமும் வராது. இது என் சொந்த அனுபவம். புட்டின் அருமை தெரியாதோர் கம்பேக்கருக்கு அடிமையானோர்.😜 சோம்பேறியாக இல்லாமல் வேலை செய்து பாருங்கள். இரும்பும் கரையும்.😎
  29. அப்படி நாங்களே கேட்க தொடங்கினால்............ உலகத்தில் உங்களுக்கு என்ன மரியாதை? உங்களைப்போன்ற அறிவாளிகள் பிறந்த இனத்தின் பிறந்தோம் என்ற இன்பமே எங்களுக்கு அனுபவித்து முழுவதுமாக களிப்புற ஆயுள்காலம் போதவில்லை. இதில் வேண்டாத வேலைகள் எதற்கு நமக்கு? நீங்களே கேளுங்கள் ...... நீங்களே செல்லுங்கள் உங்கள் நிழலில் நாங்கள் நடந்து வருகிறோம்.
  30. அட பாவி இந்த முடிவை 3 வருடத்துக்கு முதலே எடுத்திருக்கலாமே? இந்த 26 ஆம் புலிகேசியை ஜனாதிபதி ஆக்கியதே உக்ரைனை அழிக்கத்தானே ........ அவர் அதை செவ்வனவே செய்து முடித்துள்ளார். அந்த வகையில் பாராட்டிடலாம். கடந்த 3 வருடமாக முழு பலத்தையும் பாவித்து முக்கிய மேற்கு ஆதிக்கம் ரசியாவுடன் மோதி தனது தோல்வியை ஒப்புக்கொண்டது என்பதுதான் இதில் முக்கிய செய்தி. ரசியாவையும் சீனாவையும் ஒரு வழிக்கு கொண்டுவர ஒரு கடடத்தில் ஈரானை அழித்து வெற்றிபெறலாம் என்று எண்ணினார்கள் அதற்கும் ஈரான் இஸ்ரேலுக்கு கொடுத்த அடியுடன் மூடி கட்டிக்கொண்டு கிளம்பி விடடார்கள். ஆனால் இந்த யுத்தத்தை உருவாக்கிய மேற்கு பணக்கார வர்க்கம் தனது இலக்கை அடைந்து வெற்றியை கண்டுள்ளார்கள். அவர்கள் இலக்கு ஆயுத விற்பனை .... உலகில் உணவு பற்றாக்குறையை உண்டுபண்ணுவது, (இரண்டிலும் வெற்றிதான்) அதன் மூலம் மோன்சடோ பேயர் ( Monsanto, Bayer ) என்ற இரண்டு மகா கம்பெனிகளும் உலகம் பூராக விவசாயத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டுவருவது. அவர்கள் எண்ணம் அமெரிக்காவிலேயே பெரும் வெற்றியை கண்டிருக்கிறது அமெரிக்க விவசாயிகள் பெரும் கடனில் மூழ்கி இனி இவர்களிடம் சரண் அடைவது என்பதை தவிர்த்து வேறு வழியின்றி பரம்பரை விவசாயிகள் விவசாயத்தையே கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். முன்புபோல் விவசாயிகளால் இனி லாபம் பார்க்க முடியாது ....... இந்த இரண்டு கொம்பனிகளின் கொத்தடிமைகளாக இருந்துகொண்டு அவர்களின் விதைகள் உரங்களை கொள்வனவு செய்து அவர்களுக்கு உழைக்கும் ஒரு துரதிர்ஷ்ட்ட நிலையில் நிற்கிறார்கள். சமகாலத்தில் சீனா தென்னமெரிக்க நாடுகளில் விவாசாயத்தை முன்னெடுத்து பெரும் வெற்றியை கண்டுள்ளது இது ஆப்ரிக்காவிட்ற்கும் விரிவாக்கம் செய்யப்படலாம் ஆனால் மேற்கின் அடிமைகளான நைஜீரியா ருவாண்டா தென் ஆப்ரிக்கா அதை முறியடிப்பார்கள். தென் அமெரிக்காவில் ஒரு கலகத்தை உண்டுபண்ணி அமெரிக்க இராணுவ தளங்களை நிறுவுவதன் மூலம் சீனவை விரட்டிடலாம் எனும் நோக்கில்தான் இப்போ வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்த தயாராகி வருகிறார்கள். மீடியாக்களின் உதவியுடன் இப்போ மூளைச்சலவை தொடங்கி வெற்றிகரமாக போய்க்கொண்டு இருக்கிறது. இனி வெனிசுவேலா என்ற நாடே மேற்கை குறிப்பாக அமெரிக்காவை அழிக்கத்தான் தோன்றியது போன்ற பரப்புரையை இங்கிருக்கும் ஆடுகள் நம்ப தொடங்கும்போது அது நடக்கும் என எண்ணுகிறேன் அதன் மூலம் இரண்டு இலக்குகள் எடடபடும் ஒன்று வெனிசுவேலாவின் எண்ணெய் அவர்கள் சொத்தாக ஆகும் மற்றது தென்னமெரிக்காவில் ஒரு குழப்ப நிலையை உருவாக்கி விவசாயத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டு வருவது.
  31. ஆரும் பப்பா மரத்தில் ஏற்றி விட்டால், கண்ணை மூடிக் கொண்டு ஏறும் ஆள்தான்… செலென்ஸ்கி. இப்ப… நாரி முறிய, கீழே விழுந்து கிடக்கிறார். 😂
  32. புட்டைக் கைவிடுவதும் உடலின் ஒரு பாகத்தை இழப்பதும் சமம் எனக்கு. 365 நாளும் புட்டு சாப்பிட ஆசைப்படும் ஜென்மம் நான். எல்லாம் சிவபெருமானால் வந்தது. அந்தாள் புட்டுக்கு மண் சுமந்ததால் வந்த வினை இது ஐரோப்பியர்களும் புட்டினும் (புட்டும்) ஒன்றுதான்.
  33. இன்றிலிருந்து நிழலி புட்டு சாப்பிடுவதையே அறவோடு கைவிடுகின்றான்.
  34. நாற்பது, ஐம்பதுகளின் இலங்கையின் இருந்த பிரதேச பாகுபாடுகள் மலையகத் தமிழர்களின் வாழ்க்கையை ஆழமாக பாதித்திருந்தது. குறிப்பாக யாழ்ப்பாணப் பகுதியில் சில யாழ்ப்பாணத் தமிழர்கள், தேயிலைத் தோட்டங்களில் இருந்து மலையகத் தமிழர்களை வீட்டு வேலைக்கும், கழிவுகளை அகற்றும் பணிகளுக்கும் அழைத்து வந்து அமர்த்திய நிகழ்வுகள் நிறைய இருக்கின்றன. அப்பொழுதெல்லாம் யாழ்ப்பாணம் வறண்ட பிரதேசம். மலையகம் செழிப்பான பூமி என்று யாரும் பேசவில்லை. தாய் தந்தையை உறவுகளை மலையகத்திலேயே விட்டு விட்டு,சிறுமியையோ, சிறுவனையோ பிரித்து கூட்டிக் கொண்டு வந்து வேலை செய்ய விட்டு தன் பிள்ளைகளை படிக்க விட்ட போது யாருமே ‘குய்யோ முறையோ’ என்று கத்தவில்லை. தாயக விடுதலைக்காக கரும்புலியாகப் போனவனை, “இது எங்கள் போராட்டம் நீ வளமும், உன் வாழ்வும் உள்ள உன் மலையகத்துக்குப் போ” என்று சொல்ல பிரபாகரனே சொல்லவில்லை. புலிகள் அறிவித்தவுடன், “ஊரில் உழாத மாடு வன்னியில் எப்படி உழும்” என்று சொன்னவர்கள் வன்னிக்கு இடம் பெயர்ந்து வாழவில்லையா? புகையிலைத் தோட்டம், மிளகாய் தோட்டம் என்று வாழ்ந்தவன் இடம் பெயர்ந்து 10,000 கிலோ மீற்றர்கள் பறந்து வந்து சீமையிலே வாழ முடிந்தது என்றால்,தேயிலைத் தோட்டத்தில் வாழ்ந்தவன் உள்ளூரில் இடம் பெயர்ந்து வாழ முடியாதா? சுமந்திரனை நீங்கள் தூற்றுங்கள். பாரளுமன்றத்தில் யாராவது பிரபாகரனுக்கு பிறந்தநாள் சொன்னால் போற்றுங்கள். அது உங்கள் விருப்பம். சுமந்திரன் சொன்னார் என்பதற்காக நல்லதை எதிர்ப்பது எந்தவகையில் நியாயம்? ஒன்று நிச்சயம் கால் மேல் கால் போட்டு மல்லாக்காகப் படுத்திருந்து வானத்தை நோக்கி துப்பிக் கொண்டிருப்பவர்களால் ஈழத் தமிழர்களுக்கு எந்த பிரயோசனமும் கிடையாது.
  35. வடக்குக் கிழக்கில் மலையகத் தமிழர்கள் வந்து குடியமர்வது நண்மையான விடயம். இது எமது இனச்செறிவை எமது தாயகத்தில் அதிகரிக்கும். மலையகத்தில் அவர்கள் வாழ்ந்தபோதிலும், எப்போதுமே சிங்களவர்கள் மத்தியில் வாழ்கிறோம் என்கிற அச்சமும், அடிக்கொருதடவை சிங்களவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற இனவன்முறைகளுக்கு அவர்கள் முகம் கொடுப்பதும் நடக்கிறது. ஆகவே அவர்கள் வடக்குக் கிழக்கில் குடியேறுவது அவர்களுக்குப் பாதுகாப்பானது. அடுத்ததாக, வடக்குக் கிழக்கில் காணப்படும் பெருமளவிலான அரச காணிகளில் தொல்லியல் திணைக்களமும், வன ஜீவராசித் திணைக்களமும் கட்டம்போட்டு அபகரித்துவரும் நிலையில், இப்பகுதிகளில் மலையகத் தமிழர்கள் குடியேறுவது என்பது சிங்கள பெளத்த மயமாக்கலினைத் தடுக்க உதவும். 80 களின் ஆரம்பகாலத்தில் இது நடந்திருக்கிறது. தமிழர் தாயகத்தின் எல்லைகளில் பல மலையகத் தமிழர்களும், யாழ்ப்பாணத் தமிழர்களும் குடியேறினார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகவே இப்போதும் இது நடப்பதென்பது எமக்கு நண்மையே. நிச்சயமாக நடக்க வேண்டும்.
  36. சும்மா ஒரு பேச்சுக்கு மனோவும், சுமனும் சொன்னதுக்கே….. யாப்பணீஸ் இந்த திரியில் படுறபாட்டை பார்த்து சிரிப்புத்தாளவில்லை😂. வாழ்வாதாரம் இல்லையாம்…மலையகம் அவர்களின் தாயகமாம்…அதாம்….இதாம்…😂 கரவு புத்தியை எப்படி எல்லாம் பெயிண்ட் அடித்து மறைக்க வேண்டி கிடக்கு 😂. இன்னும் ஒருவர் பிரதேசவாதம் எல்லாரிடமும் இருப்பதுதானாம்😂… நீங்கள் வெளிநாட்டில் வந்து தட்டு தூக்கி, 20 வருடத்தில் தொழிலதிபர்கள் ஆக முடியும் என்றால் ஏன் இந்த மக்கள் வடக்குக்கு வந்து வாழ முடியாது? நீங்கள் இரந்த போது வெளிநாட்டு அரசும் மக்களும் உங்களுக்கு தந்த அனுசரணையில் 10% நீங்கள் இவர்களுக்கு கொடுத்தாலே போதும். பிகு வடக்கை தமிழ் மாகாணமாக வைத்திருக்க இதுவே கடைசி உத்தி. ஆனால் தான், தனக்கு என்று மட்டுமே சிந்திக்கும் சுண்ணாம்பு மூளைகளுக்கு இது விளங்காது. ஆகவே இந்த பஸ்சும்…மிஸ்
  37. என்னை பொறுத்தவரையில் இது எப்போதோ நடந்திருக்க வேண்டிய ஒரு காலக் கடமை. 200 வருட அடிமை சாசன வாழ்க்கையில் அந்த பெருந்தோட்ட மக்கள் கூட்டம் அடைந்த முன்னேற்றம் என்பது ஆமை வேகத்தில் தான் நடந்திருக்கிறது. இன்று தேயிலையும் கூட இலங்கையின் ஏற்றுமதி பொருளாதார வருவாய் சுட்டியில் முன்னிலையில் இல்லை. மலையக மக்களின் புதிய சந்ததி ஒன்றும் தேயிலை கூடையை தலையில் மாட்டி.. சாக்கு துணியை இடுப்பில் கட்டி கொழுந்த்து பறிக்கும்தொழிலுக்கு போகப் போவதும் இல்லை. இப்போதே அநேக இளையவர்கள் கொழும்பு, கண்டி என்ற பெரு நகரங்களை நோக்கியும் வெளிநாடு செல்லுவதுமாகத்தான் அவர்கள் வாழ்க்கை இருக்கிறது. சுமந்திரன், மற்றும் தமிழ் அரசியல்வாதிகளின் இந்த வெண்டுகோள் தூர நோக்கில் சரியானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நடைமுறையில் நிறைய சிக்கல்கள் வரலாம். அடையாள இழப்பு, பொருளாதார சிக்கல், சமூக சிக்கல் இப்படி பல இன்னல்களை சந்தித்தாலும், ஓரிரு தலைமுறைகளின் பின்னர் இவர்களின் வாழ்வு ஓரளவுக்கு சுபிட்சமாக இருக்கும் என நான் நம்புகிறேன். எனக்கு தெரிந்த பல குடும்பங்கள் 1983 காலங்களிலும், அதன் பின்னரும் மலையகத்தை விட்டு வெளியேறி வடக்கில் குடியேறியவர்கள் ஆரம்பத்தில் பல சிக்கல்களை அனுபவித்தாலும், இன்று வட, கிழக்கு மக்களின் யதார்த்த வாழ்வை போல கல்வி, தொழில், வெளிநாடு, கோயில் குளம் என்று சந்தோசமாக இருக்கிறார்கள். சிங்களத்தின் கருணையில், பச்சாதாபா பிச்சையில் வாழ வில்லை என்ற கௌரவத்தோடு தமிழராக வாழ்கிறார்கள். தவிர இந்த உரையாடல், அரசுக்கு மலையக மக்களுக்கு செய்யவேண்டிய காலம் கடந்த நீதியை செய்ய ஒரு அழுத்தத்தை கொடுக்கும் என்றும் கூட நினைக்கிறன்.
  38. கன்னியா வெந்நீரூற்றும் அழிந்து போகும் நாமும்..! கன்னியா வெந்நீரூறுப் பகுதியில் புதிதாக பெரிய புத்தர் சிலை ஒன்று திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. எனது தாய் தந்தை அவர்களின் தாய் தந்தை அதற்கு முன் இருந்தவர்கள் என இந்த இடம் முழுமையாக சைவர்களின் வழிப்பாட்டுத் தலங்களால் நிறைந்து இருந்தது. நாம் சிறுவயதில் சென்று நீராடி அருகில் உள்ள சிவன் கோவில் பூசைகளில் கலந்துகொள்வோம். இறந்தவர்களுக்கான பிதிர்கடன் செய்யும் இடமாகவும் இருந்தது. 180 வருடங்கள் பழமையான பிள்ளையார் கோவிலும் அங்குள்ளது. அந்த கோவில் இடம் முழுமையாக தனியாருக்கு சொந்தமானது. குறித்த உரிமையாளர் தனது ஏக்கர் கணக்கான காணியை பிள்ளையார் கோவில் கட்ட வழங்கியிருந்தார். யுத்தம் முடிந்த பின் படிப்படியாக இடங்களை கொள்ளையடிகும் நோக்குடனும் பெளத்த மயப்படுத்தும் நோக்குடனும் இருந்த பெளத்த பேரினவாதம் முழுமையாக சிங்களவர்களை கொண்ட தொல்பொருள் எனும் பித்தலாட்டத்தின் மூலம் வரலாறுகளை புதிதாக உருவாக்கி தமிழர் காலாகாலமாக இருந்த இடங்களை வழிப்பாட்டுத்தலங்களை கொள்ளையடித்தது. அதில் திருகோணமலை தழிழர்கள் இழந்த அரிய சொத்து எமது வெந்நீர் ஊற்று. அங்கிருந்த சிவன் கோவிலும் பூட்டப்பட்டது. பிள்ளையார் கோவில் கட்ட வாசலுக்கு ஒரு சிறிய இடம் மட்டுமே வழங்கப்பட்டது அதுவும் செய்ய தடைகள் வந்தது. பிதிர்கடன் செய்ய வருபவர்களுக்கு அதற்கு முன் பல அனுமதிகள் எடுக்க வேண்டியிருக்கின்றது. இராணவன் வரலாற்றுப் பதாகை உடைக்கப்பட்டு, புது அனுராதபுர வரலாறு எழுதப்பட்டது. இராணுவத்தினர் அங்கு இருந்தனர். விகாரை உருவானது. முழு நேரம் ஒலி பெருக்கியில் பண ஓதப்படுகிறது. உப்புவெளி பிரதேச சபையிடம் இருந்த இடம் தொல்பொருள் திணைக்களத்துக்கு மாற்றப்பட்டது. வருமானமும் அங்கு செல்கிறது. மொத்தமாக சிதைக்கப்பட்ட ஒரு வரலாற்றை நாம் கண் முன் காண்கிறோம். ஒவ்வொரு திருகோணமலைத் தமிழனும் இதை நினைத்து வருந்திக்கொண்டே இருக்கின்றனர். தொல்பொருள்த் திணைக்களம் மூலம் எல்லாளன் கால கோவில்களைத் தேடுவார்களா? அல்லது ராஜராஜ சோளன் கால கோவிலைகளைத் தேடுவார்களா? இவர்களது நோக்கம் ஒரு பொழுதும் தொல்பொருளைத் தேடுவதல்ல மாறாக இனவழிப்பை நடத்துவதே. அதனால் தான் விகாரைகள் புத்தர் சிலை தொடர்பில் ஏனையோர் ஆவது அவதானமாக இருங்கள். திருகோணமலை போல் ஆகி விடாதீர்கள். https://www.facebook.com/share/p/1AMkhjKGR6/ Rajkumar.Rajeevkanth.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.