Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    88127
    Posts
  2. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    10239
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19253
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    3074
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/20/25 in all areas

  1. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும், தமிழ்நாட்டு மக்களும் ஈழத் தமிழர்களின் அரசியலை கடந்து போய்விட்டார்கள். ஒரு மாற்று அரசியல் செய்கின்றோம் என்று முன்நிற்கும் ஓரிரு அரசியல்வாதிகளைத் தவிர வேறு எவரும் இவை பற்றி அங்கே ஒரு பொருட்டாக பேசுவது கூடக் கிடையாது. மாற்று அரசியல் செய்பவர்களும் தங்களின் சுயலாபம் கருதியே ஈழ அரசியலை பேசுகின்றார்களோ ஒழிய, திராவிடத்தை எதிர்க்கும் ஒரு ஆயுதமாக கையில் எடுக்கின்றார்களே ஒழிய, ஈழ மக்களுக்கான ஒரு தீர்வாக அவர்கள் எதையும் முன்னெடுப்பதில்லை. இவர்களில் எவருக்கும் சரியான புரிதல் கூட இவர்களுக்கு கிடையாது என்பதை மீனவர்களின் பிரச்சனையிலேயே காண்கின்றோம். அங்கே தேர்தல் விஞ்ஞாபனங்களில் பத்தோடு ஒன்றாக ஈழத் தமிழ் மக்களுக்கு, அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று எழுதி வைத்துக் கொள்வார்கள். அவர்களின் விஞ்ஞாபனத்தை கனமாக்குவதற்கு மட்டுமே இது உபயோகமாக இருக்கும். எங்கள் நாட்டில் முதல் பாராளுமன்றப் பேச்சில் வடக்கு தமிழர்களுக்கு மட்டும் இல்லை, கிழக்கு தமிழர்களுக்கு மட்டும் இல்லை, மலையக தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் அகதிகளாக முகாம்களில் இருக்கும் தமிழர்களுக்குமாக நான் குரல் கொடுப்பேன் என்று பேசி விட்டு, பாராளுமன்ற உணவு விடுதியில் சோறும், சொதியும் மட்டுமே உள்ளது என்று அதற்காகப் போராடும் எங்கள் அரசியல்வாதிகளும், தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் ஒன்றே தான். இவர்களின் பேச்சுகளை கேட்டு நாங்கள் அவசரப்பட்டு ஆனந்தப்படுகின்றோம், பின்னர் வசதியாக மறந்து விடுகின்றோம். இவர்களின் இந்த பேச்சுகள் விடிந்தால் போச்சு.............. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளால் மத்திய அரசின் ஒரு நீட் பரீட்சையை கூட அசைக்க முடியாது என்பதே உண்மை. இதில் எங்களுக்கு இவர்கள் சமஷ்டி பெற்றுத் தருவார்களா. ஊழலில் திளைக்கும் இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளினதும் இன்றைய பிரச்சனை பாஜகவிடம் இருந்து எப்படித் தப்பி, அவர்களின் வாரிசு அரசியலைக் கொண்டு நடத்துவது என்பதே. தமிழ்நாட்டின் நலனும் அங்கே இல்லை, ஈழத்தின் நலனும் அங்கே இல்லை. மாற்று என்று வந்திருப்பவர்கள் அதைவிடக் கீழே. 'யார் அந்த ஏழு பேர்கள்..................' என்று ரஜனி கேட்டதை விட விஜய்யின் நிலை மோசம். யாரோ எழுதிக் கொடுக்க, அதை விஜய் பாடமாக்கிய பின் இவர்களுடன் பேச வேண்டும். இதற்கு ஒரு வாரமாவது எடுக்காதா................. தமிழ்நாட்டில் இன்னமும் அகதிகளாக இருக்கும் எம் மக்களை பற்றி இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுடன் பேசலாம். அங்கே எம் மக்கள் மூன்றாவது தலைமுறையாக முடங்கிக் கிடக்கின்றார்கள். தமிழ்நாட்டு அரச வேலைகளில் ஒரு சிறிய பகுதியை சில வருடங்களுக்காகவது அங்கிருக்கும் எங்களின் மக்களுக்கு ஒதுக்குங்கள் என்று கேட்கலாம். இந்தியக் குடியுரிமை கொடுங்கள் என்று கேட்கலாம். கியூ பிராஞ்சின் கெடுபிடிகளை அகற்றுங்கள் என்று கேட்கலாம். இப்படியான விடயங்கள் தான் நடைமுறையில் ஓரளவு சாத்தியமானதும், பலன் தருவதும் ஆகும்.
  2. நில உயிர்கள் -------------------- ஒரு பக்கமாக சாய்ந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தவர்கள் யுத்தங்களால் இழப்பன்றி வேறு எதுவும் இல்லை சமாதானம் சமாதானம் என்றனர் நாடு நகரம் குடும்பம் குழந்தை எதிர்காலத்துடன் இப்படியே போனால் உன்னைக் கூட இழக்கப் போகின்றாய் என்றனர் எத்தனை நாளைக்குத்தான் முடியும் மூன்று வாரங்கள் கூட தாங்க மாட்டாய் என்றனர் மூன்று வாரங்கள் தாண்டி மூன்று வருடங்களும் வந்து போனது ஒரு மலையை உளியால் பிளப்பது போல என் வீட்டுக்குள் வரும் பலசாலியை என்னால் முடிந்த வரை நிறுத்தப் போராடுகின்றேன் அவர்களின் கணக்கு சரியே நான் இழந்து கொண்டேயிருக்கின்றேன் என் குலமும் நிலமும் வளமும் அழிந்து கொண்டிருக்கின்றன இழந்து இழந்து எதற்காகப் போராடுகின்றாய் இப்போது கூட நீ அடங்கினால் ஒரு மூலையில் ஒதுங்கினால் உயிர் தப்பி பலசாலியுடன் வாழலாம் என்கின்றனர் சாய்ந்து நிற்பவர்கள் உயிர் விட்ட பின்னும் நிலமாகப் பரந்து நீராக ஓடி அங்கே புதிய உயிர்களாக நித்தியமாக வாழும் மனிதர்களை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா..........? உங்கள் வீட்டுக்குள்ளும் ஒரு பலசாலி வரும் போது பணிந்து குனிந்து வழிவிடுவீர்களா...............?
  3. 😂 முன்பே சொல்லி உள்ளேன்னே ஐலண்ட்… அவர்கள் வட்டத்தை பெருப்பிக்கும் ஆட்கள்… மலையாளி, தெலுங்கன், பாண்டியன், கரைநாட்டு தமிழன், மலைநாட்டு சிங்களவன், கரை நாட்டு சிங்களவன், தெலுங்கு பழங்குடியினன் எல்லோரையும் சிங்களவர் என்ற ஒற்றை வட்டத்துக்குள் கொண்டு வந்து விட்டார்கள். தேவநம்பிய தீசனின் தந்தை மூத்த சிவன் எனும் தமிழனா? கவலையே இல்லை…தேவநம்பிய திஸ்ச சிங்களவனே என வரலாற்றை புனைந்தாவது அவனையும் வட்டத்து@ இழுத்து விடுவார்கள். நாம்? வட்டத்தை சிறுபித்து, அதற்குள் மேலும் பல வட்டங்களை கீறும் இனம். அண்மையில் தமிழகம் இருந்தும்…2000 ஆண்டுகளா ஏன் சிங்கள இனம் தொடர்ந்தும் இலங்கை தீவில் கோலோச்சுகிறது என்பதற்கான பதிலும் இதுவே.
  4. ஒட்டு மொத்த சமகால தமிழக-ஈழ தமிழர் உறவின் நிலையை சகல கோணங்ளிலும் ரத்தின சுருக்கமாக தந்துள்ளீர்கள். புலம்பெயர் தமிழ் தேசியவாதிகள் என தம்மை காட்டி கொண்டு, சிலர் செய்த அவதூறு அரசியலின் பின்னும் கஜனை ஸ்டாலின் சந்தித்ததே என்னை பொறுத்தவரை கொஞ்சம் ஆச்சரியமான விடயம்தான். யாழில் கூட எங்கள் புலவர் பலத்த கஜன், சீமான் ஆதரவாளர். திமுக எதிர்ப்பாளர். இப்படி பலர் உளர். இனியாவது திராவிடத்தை புடுங்கிறோம், கிளறுறோம் என வேண்டாத வேலை செய்வதை இப்படியானவர்கள் விட்டு விட்டு, தமிழக தலைவர்கள் அனைவரையும் சம தூரத்தில் வைக்கும் வழிக்கு திரும்ப வேண்டும்.
  5. இந்த திரி பத்து பதினைந்து பக்கங்கள் உருளும் என்று பார்த்தால் ஏமாற்றமாய் கிடக்கிது.
  6. 1826 காலப்பகுதியில் தலைமன்னார் பகுதியில் கொண்டு வந்து இறக்கிய நாள் தொட்டு பெருந்தோட்ட பயிர் செய்யக்கூடிய நிலத்தை நோக்கி பயணப்பட்டு, தாமாகவே பாதைகளையும் உருவாக்கிக் கொண்டு, பற்றை காடுகள், மலை சரிவுகள் கொடிய விஷம் கொண்ட பாம்புகள், அட்டைகள், மலேரியா, அம்மை நோய் இதையெல்லாம் தாண்டி சிலோனை தேயிலைக்கு முதலாம் தர நாடாக மாற்றிய சக தமிழனை வெறுமனே 3 - 4 மணித்தியால நகர்வில் வரும் பாரம்பரிய தமிழர் நிலத்தில் இந்த தமிழர்கள் வந்து எந்த தொழிலை, எப்படி செய்வார்கள்இ அவர்கள் வயிற்றுப பிழைப்பை எப்படி பார்ப்பார்கள் என்று நம்மவர்கள் அதீத கலக்கம் அடைவது மிகவும் கவலைக்குரிய நிலைப்பாடு. அந்த தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் இன்னும் கூட பிரதேச சபைஇ கிராமசபை மற்றும் எந்த ஒரு பிரிவுக்குள்ளும் உள்வாங்குப்படவில்லை என்ற உண்மை இவர்களுக்கு தெரியுமா தெரியாது. நவீன Artificial Intelligence உலகில் பெரிய தோரை, கங்காணி, கணக்குப்பிள்ளை, கிளாக்கரு இவர்களின் தயவில் கூழை கும்பீடு போட்டு வாழ்வது உசிதம் என்றும் நினைக்கிறார்கள் போல உள்ளது.
  7. சமூகவலைத் தளங்களைக் கலக்கும் நமது மண்ணின் பாடன் வாகீசன் இராசையா! குறிப்பாக கேரளா இந்தப்பாட்டுக்கு அடிமையாகிவிட்டதோ என்னும் அளவுக்கு ரீல் போடுகிறார்கள்.
  8. வீழ்ச்சி லஷ்மி சரவணகுமார் கள்ளக்காதல் விவகாரத்தில் தனது கணவனைத் தற்கொலைக்குத் தூண்டிய அந்தப் பெண் ஒரு வாரமாகத் தன்னைத் தொடர்ந்து வருவதைக் கவனித்த மூர்த்தி பதற்றமடையத் துவங்கினான். திருச்சி நீதிமன்றத்தில் செய்தி சேகரிக்கச் சென்றவன் தேநீர் அருந்துவதற்காக ஒரு கடையில் ஒதுங்கியபோதுதான் முதல் தடவையாக எதிர்ப்பட்டாள். அவளை அடையாளம் தெரியாததால் அவன் பொருட்படுத்தவில்லை. அடுத்தநாள் தனது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் வழியில் பிஷப் ஹீபர் காலேஜ் சிக்னலில் பச்சை விளக்கிற்காகக் காத்திருந்த இடைவெளியில் தனக்குப் பின்னால் பழைய இரு சக்கரவாகனத்தில் அந்தப் பெண் இருப்பதைப் பார்த்தான். கூர்மையாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கொலை ஆயுதம் ஒன்றின் முனையிலிருக்கும் கூர்மைமிக்கப் பார்வையது. நரம்புகள் அதிர்ந்ததுபோல உடலை உதறிக் கொண்டவன் அவளிடமிருந்து பார்வையை விலக்கி அவசரமாக சிக்னலைக் கடந்து சென்றான். இரவு உறக்கம் பிடிக்கவில்லை. அவளது பார்வையிலிருந்த ரெளத்ரம் அச்சமூட்டுவதாக இருக்க, யாராக இருக்குமெனச் சிந்தனைவயப்பட்டான். அறையில் மிக மெல்லிய நீல வெளிச்சம் படர்ந்திருக்க, அவனது பூனை தனது முகத்தால் கதவை முட்டித் திறந்துகொண்டு வந்தது. ம்யாவ்.. என நான்கைந்து முறை ஒலியெழுப்பியபின் தலையைத் தூக்கிப் பூனையைப் பார்த்தான். அந்த மென் வெளிச்சத்தில் பூனையின் கண்கள் ஒளிரும் உருண்டைகளாய் மின்னியது. ‘அப்பா கிட்ட வா….’ என அழைத்தவனை நோக்கி உடலை நோக்கி நெட்டி முறித்தபின் ஒரே தாவலில் கட்டிலுக்கு வந்தது. அவனது வயிற்றில் தலையைச் சாய்த்துக் கண்களை மூடி உறங்கத் துவங்கிய பூனையை வருடிக் கொடுத்தான். அதன் உடலிலிருந்து மூச்சுவிடும் பர்ர்ர் சத்தம் மெல்லிய ஒலியில் கேட்டுக் கொண்டிருக்க, அடிபட்ட மிருகம் போலிருந்த அந்தப் பெண்ணின் நினைவு மின்னலைப் போல் தலைக்குள் தோன்றி மறைந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்னால் அந்தச் செய்தியை மூர்த்திதான் முதலில் தனது பத்திரிகையில் எழுதினான். வயலூருக்கு அருகே சிறிய கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு அதே ஊரைச் சேர்ந்த ஆளுடன் கள்ள உறவு இருந்ததாகவும் அதனைத் தட்டிக் கேட்ட கணவனைக் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதால் அவனே தற்கொலை செய்துகொண்டதாகவும் விசாரணை அதிகாரி சொல்லியிருந்தார். தனது கணவனைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றம் அவளுடையது. அன்றைக்கு வேறு பெரிய செய்திகள் எதுவும் கிடைக்காததால் மூர்த்தி மாவட்டப் பகுதியில் இந்தச் செய்திக்குச் சிறப்புக் கவனம் கொடுத்துக் கால் பக்கத்திற்கு எழுதியிருந்தான். கள்ளக்காதல்களுக்காக இன்னும் எத்தனை மரணங்கள்? எனத் தலைப்பு, அதன் இரு பக்கத்திலும் அரிவாள் படம் போடப்பட்டு அதற்கு நாடகத்தன்மையும் சேர்ந்திருந்தது. அதன்பிறகு தொலைக்காட்சிச் செய்திகள், யூட்யூபர்களென ஒவ்வொருவரும் தங்களக்குத் தெரிந்த உண்மைகளை எல்லாம் தேடித் திரட்டிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பின்பு எல்லோரையும் போலவே மூர்த்தியும் அந்தச் செய்தியையும் பெண்ணையும் மறந்திருந்தான். ஆனால் எதற்காக அவள் தன்னைப் பின்தொடர வேண்டுமெனக் குழப்பமாக இருந்தது. அடுத்தநாள் ஒரு வழக்கறிஞரைச் சந்திப்பதற்காக சென்ட்ரல் மார்க்கெட் அருகில் ஒரு கட்டிடத்தில் காத்திருந்தான். வழக்கத்தை விடவும் அதிகமான வெக்கையில் உடல் வறண்டுபோயிருந்தது. ‘ஸார் வந்தா சொல்லுங்க… நான் பக்கத்துல கட வர போயிட்டு வரேன்.. எனக் கிளம்பி வெளியே வந்தான். கண்ணைப் பறிக்கும் ஒளியில் சாலை தகித்துக் கொண்டிருந்தது. அந்தக் கட்டிடத்திற்கு அடுத்தாற்போலிருந்த பிரியாணி கடையிலிருந்து இறைச்சி வேகும் மணம் அடர்த்தியாய்ப் பரவியது. நெரிசலான சாலையில் இரு சக்கர வாகனங்களுக்கு நடுவே நுழைந்து சென்றவன் நான்கு கடைகள் தள்ளி உள்நோக்கி அமைந்திருந்த பழக்கடைக்குள் நுழைந்தான். அவனுக்குப் பின்னால் அவனது நிழலும் கடையின் சுவர்களில் பரவி வந்தது. சில நிமிடங்களிலேயே சட்டை வியர்த்திருந்தது. ‘அண்ணே ஒரு ஆரஞ்ச் ஜூஸ் குடுங்க… சக்கர இல்லாம…’ என்றவன் காற்றாடிக்குக் கீழ் அமர்ந்தான். ‘ஏன் சக்கர வியாதியா உங்களுக்கு..’ வசீகரமான ஒரு பெண் குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்க, அவனுக்குப் பின்னால் அந்தப் பெண் கையில் ஒரு கோப்பையோடு இவனைப் பார்த்துச் சிரித்தாள். திருத்தமான முகம். புகைப்படங்களில் தெரிந்த முதுமை நேரில் பார்த்தபோது இல்லை. முப்பத்தைந்து வயதிற்கு மேலிருக்க வாய்ப்பில்லை என்பதைப் போல் தோற்றம். கண்களுக்குக் கீழிருந்த சுருக்கத்தில் அவள் பூசியிருந்த டால்கம் பவுடர் வியர்வையில் வழிந்து ஓடியிருந்தது. ‘என்ன ஸார் அப்பிடிப் பாக்கறீங்க? என்னயத் தெரியலையா? எனச் சாதாரணமாகக் கேட்டாள். அவனுக்கு அடையாளம் தெரிந்தது, பெயர் நினைவில்லை. தெரிந்தது போல் சிரித்தவனை நெருங்கி வந்தாள். ‘தீபா… வயலூர்… ரெண்டு மாசத்துக்கு முன்ன என்னயப் பத்தி ஒரு ஸ்டோரி எழுதியிருந்தீங்களே…’ எனச் சிரித்தாள். ‘ஸ்டோரி இல்லங்க… நியூஸ்…’ என அவசரமாகச் சொன்னான். ‘சரி சரி.. நியூஸ்தான்…’ எனச் சிரித்தவள் தனது கோப்பையிலிருந்து கொஞ்சம் பழச்சாறு அருந்தினாள். ‘நீங்க எப்பிடி? எனச் சந்தேகத்தோடு அவன் கேட்க, ‘ஜாமீன் ல வந்துட்டேன்… சூசைட் கேஸ் இல்லயா… அதனால எனக்கு ஈசியா ஜாமீன் கெடச்சிருச்சு…’ என அவள் சொல்ல மேற்கொண்டு என்ன பேசுவதெனத் தெரியாமல் மூர்த்தி தடுமாறினான். அந்த இடைவெளியில் அவனுக்கு ஜூஸ் வர, அவன் அவசரமாகக் குடித்தான். தயக்கமோ அச்சமோ இல்லாமல் அவனைப் பார்த்தவளிடம் குறுகுறுப்பு அதிகமானதால் ‘நா ரெண்டு மூணு நாளாவே கவனிக்கிறேன். நீங்க என்னய ஃபாலோ பன்ற மாதிரி தோணுது… எதாச்சும் சொல்லணுமா?…’ எனத் தயங்கியபடியே கேட்டான். ‘ஆமாங்க… கொஞ்சம் பேசணும்… உங்களுக்கு எப்ப வசதின்னு சொல்லுங்க பேசலாம்…’ என்றாள். ‘எதப் பத்தி…?’ ‘என்னோட கேஸ் தாங்க… நீங்க அதப் பத்திரிகை ல எழுதணும்னு இல்ல… ஆனா எனக்கு உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கணும்னு தோணுச்சு… உங்களுக்கு ஆட்சேபன இல்லன்னா உங்க நம்பர் குடுங்க…’ எனக் கேட்டாள். அவன் தயங்கியபடியே பழச்சாறைக் குடித்துவிட்டு, குவளையைக் கீழே வைத்தான். தனது பழச்சாறுக்கான பணத்தைக் கொடுக்கச் சென்றவனிடம் ‘நான் குடுத்துடறேன் நீங்க போங்க…’ எனச் சிரித்தாள். சங்கடத்தோடு பார்த்தவன் ‘9790125671 என தனது எண்ணைப் பகிருந்து கொண்டான். தனது அலைபேசியில் சேமித்துக் கொண்டவள் ‘நன்றிங்க… நாம அப்பறம் பேசலாம்.’ என்றபடியே பழச்சாறுக்கான பணத்தைக் கட்டிவிட்டுக் கிளம்பிவிட்டாள். வந்த வேலையின் மீது ஆர்வமில்லாமல் போக, அவன் அந்த அலுவலகத்தின் வாசலில் நிறுத்தியிருந்த தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு மனம் போன போக்கில் சென்றான். வெயிலின் உக்கிரத்தில் கண் கூசியதால் திரைப்படம் பார்க்க முடிவெடுத்து ஒரு திரையரங்கினுள் நுழைந்தான். வெக்கையிலிருந்து மீண்டு ஏசியின் குளிருக்குள் வந்ததும் அசதியில் கண்கள் செருகின. காதல், ரவுடியிசம், அரசியல் என எல்லாம் கலந்த ஒரு திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. நாயகனை விட நாயகி முதுமையாகத் தெரிந்தாள். திரையில் மனம் ஒன்றாமல் இன்ஸ்டாக்ராமில் நடிகைகளை வைத்துப் போடப்பட்ட ஆபாச மீம்களைப் பார்க்கத் துவங்கினான். எதன் மீதும் கவனம் செலுத்தமுடியாத இந்த இடைவெளியைக் காமத்தால் நிரப்பிக் கொள்ள முடிவுசெய்து பார்த்துக் கொண்டிருந்தான். சில நொடிகளிலேயே குறி விறைத்து உடல் சூடானது. திரையரங்கில் கூட்டம் குறைவாக இருந்ததால் சுற்றிலும் தலையைத் திருப்பிப் பார்த்தான்… அவனது வரிசையில் அவனைத் தவிர ஒருவருமில்லை. தனது இடது கையால் மெதுவாகக் குறியைத் தடவத் துவங்கியபோது ‘ஹாய்’ என ஒரு புதிய எண்ணில் இருந்து வாட்ஸப்பில் செய்தி வந்தது. சட்டெனக் கையை விலக்கிக் கொண்டவன் யாரெனத் தெரியாமல் செய்தியைத் திறந்தான். புகைப்படத்திற்குப் பதிலாக ஒரு செம்பருத்தி பூ படம் வைக்கப்பட்டிருந்தது. ஒரு கேள்விக்குறியை மட்டும் பதிலாக அனுப்பினான். அடுத்த நொடியே ஒரு கேலியான சிரிக்கும் ஸ்மைலியும் ‘தியேட்டர் ல மாஸ்டர்பேட் பன்றது தப்பில்லயா? எனக் கேட்டு ஒரு செய்தி வரவும் பதறிப்போனவன் நாலாப் புறமும் தலையைத் திருப்பிப் பார்த்தான். அவனுக்கு முன் வரிசையில் தன்னை நோக்கிப் பார்க்கும் இரண்டு கண்களை அந்த இருளினூடாகக் கண்டு அதிர்ந்தான். அவசரமாக அங்கிருந்து தப்பித்து ஓடிவிட நினைத்து எழுந்தபோது ‘எதுக்கு பயந்து ஓட்றீங்க… நான் யாருகிட்டயும் சொல்ல மாட்டேன். நீங்க கன்டினியூ பண்ணுங்க…’ எனப் பதில் வந்தது. அந்தச் செய்திக்குப் பதில் அனுப்பாமலேயே அவன் அவசரமாகத் திரையரங்கிலிருந்து வெளியேறினான். வீடு திரும்பும் வரை அவனுக்குப் பதற்றம் குறையவில்லை. தனது அறைக்குள் நுழைந்து உடைமாற்றும் போது மீண்டும் அவளிடமிருந்து செய்தி வந்தது. ‘ஏன் ஓடிட்டீங்க… நான் ஒன்னும் உங்கள பயமுறுத்தலையே…’ என்று இருந்த செய்தியை வாசித்தவன் இவளுக்கு என்ன வேண்டும்? எதற்காக தன்னை இத்தனை தீவிரமாகக் கண்காணிக்கிறாள் எனக் குழம்பியபடியே படுக்கையில் அமர்ந்தான். ஒருவேளை தன் மீது ஈர்ப்பிருக்குமோ? என நினைத்தபோதே ஆர்வத்தில் அவனுக்கு மீண்டும் குறி விறைத்தது. தன்னைக் கண்ணாடியில் பார்த்தான். தன் மீது அவளுக்கு ஆர்வம் இருக்கிறது என்பது தெரிந்ததுமே அவளோடு பேச வேண்டுமெனத் தூண்டுதல் உருவானது. ஆனால் தயங்கினான். அவளனுப்பிய செய்தியைப் பார்ப்பதற்காகத் திறந்தபோது செம்பருத்திப் பூவிற்குப் பதிலாக அவள் தனது புகைப்படத்தை வைத்திருந்தாள். திரட்சியான உடலைப் பார்த்து அவனுக்குச் சிலிர்த்தது. ஆனால் எச்சரிக்கை உணர்வோடு பதில் அனுப்புவதைத் தவிர்த்தான். பிறகு அவளும் செய்தி அனுப்பவில்லை. கிறீச் ஒலியுடன் சுற்றும் காற்றாடியைப் பார்த்தபடியே கிடந்தவனின் கண்கள் சிவந்துபோயின. அசதியில் அப்படியே உறங்கிப் போனவன் கண் விழித்ததும் அவசரமாக அலைபேசியை எடுத்துப் பார்த்தான். அவளிடமிருந்து எந்தச் செய்திகளும் இல்லை. தனது அன்றாட வேலைகளைக் கவனிக்கச் சென்றவன் அடிக்கொரு முறை அலைபேசியை எடுத்துப் பார்க்கத் துவங்கினான். அவளிடமிருந்து எப்போது செய்தி வருமென்கிற குறுகுறுப்பு அதிகரித்தது. இரவு வரையிலும் காத்திருந்து பொறுமையற்றுப் போனவன் பதினோறுக்கு மேல் எச்சரிக்கை உணர்வையும் மீறி அவளுக்குச் செய்தி அனுப்பினான். ஹாய்..’ சில நொடிகளிலேயே அவளிடமிருந்து பதில் வந்தது. ‘சொல்லுங்க…’ ‘ஏதோ பேசனும்னு சொன்னீங்களே?..’ ‘ம்ம். ஆமா…’ ‘என்ன பேசனும்…’ ‘ஒன்னுமில்ல… என்னப் பத்தி… எங்க வீட்டுக்காரரப் பத்தி…’ அவனுக்கு இந்த உரையாடலில் ஆர்வமில்லை… ‘ஓ..’ எனப் பதிலளித்து விட்டு அமைதிகாத்தான்… ‘ஏன் நீங்க என்ன நெனச்சீங்க…?’ அவளாகவே அடுத்த கேள்வியைக் கேட்க தான் நினைத்தது சரிதானென அவனது உள்மனம் சொன்னது. ‘நான் எதும் நெனைக்கலீங்க… உங்க வீட்டுக்காரர் சம்பவம் முடிஞ்சிருச்சு. இனி அதப் பத்தி என்ன சொல்லப் போறீங்க. கேஸ் கோர்ட்ல இருக்கு. அதனால அதுல நான் கமெண்ட் பண்ணவும் முடியாது…’ அவன் அனுப்பிய செய்திக்கு அவள் பதில் அளிக்கவில்லை… ‘ஹலோ…’ என மீண்டும் அனுப்பினான்… ‘ம்ம்… எனப் பதில் அனுப்பியவள். சரிங்க… குட்நைட்.’ எனச் சுருக்கமாக முடித்துக் கொண்டாள். அவனுக்குச் சப்பென்றானது. இந்த விளையாட்டு இத்தனை சீக்கிரமாக முடிந்திருக்க வேண்டாமென ஏமாற்றமடைந்தான். எதாவது பேசி அந்த உரையாடலை வளர்க்க வேண்டுமெனக் கைகள் பரபரத்தன. அவன் தட்டச்சு செய்யத் துவங்கும் முன்பாகவே அவள் டைப் செய்வதாகக் காட்டியது. பொறுமை காத்தான். ‘தியேட்டர் ல யார நெனச்சு மாஸ்ட்ரூபேட் பண்ணீங்க…’ அவள் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட்டாள். இவன் வெறும் சிரிக்கும் ஸ்மைலி மட்டும் அனுப்பினான். ‘சும்மா சொல்லுங்க…’ என அவள் வற்புறுத்த ‘அந்தப் படத்துல நடிச்ச நடிகையப் பாத்துதான்…’ எனப் பதில் அனுப்பினான். ‘பொய்…’ அவள் மீண்டும் கேலியான ஸ்மைலி அனுப்பினாள். ‘நிஜமாத்தான்… தீபா…’ என அப்பாவியாகச் சொன்னான். அவளிடமிருந்து அதன்பிறகு பதில் இல்லை. ‘ஹலோ… எனக் கேட்டு நிறைய கேள்விக் குறிகளையும் அனுப்பினான். அவளும் பதிலுக்குக் கேள்விக் குறிகளை அனுப்பினாள். ‘கால் பண்ணவா?’ இந்த முறை அவனது காமம் அவனதுக் கட்டுப்பாட்டை வென்றது. எல்லா ஒழுக்கசீலனுக்குமான எல்லை வாய்ப்பு கிடைக்கும் வரைதான். வாய்ப்புகள் உருவாகும் சிறிய சாத்தியங்கள் தென்பட்டால் கூட ஆண்கள் காமத்தில் திளைக்கவே விரும்புகிறார்கள். பெண்கள் விஷயத்தில் ஆண்கள் கடைபிடிக்கும் கட்டுப்பாடுகள் எல்லாமே தற்காலிகமானவை. ‘எதுக்கு எனக் கேட்டு உடன் ஆங்க்ரி ஸ்மைலியும் அனுப்பினாள். ‘சும்மா பாக்கதான்…’ எனப் பதில் அனுப்பிவிட்டுப் படபடப்போடு காத்திருந்தான். அவள் ஒரு பேய்ப் படத்தை அனுப்பினாள். ‘பேய் நிறையப் பாத்திருக்கேன். உங்களப் பாக்கணும்.’ என எவன் கேட்க, தனது இன்னொரு புகைப்படத்தை அனுப்பினாள். நைட்டியில் அவளது மார்புகள் அடங்க முடியாமல் திமிறிக் கொண்டிருக்க, இவனுக்கு நரம்புகள் முறுக்கேறின. ‘தியேட்டர் ல விட்டத இப்ப முடிச்சுட்டுப் பேசாமப் படுங்க…’ என்றவள் கண்ணடிக்கும் ஸ்மைலியை அனுப்பினாள். அதற்கு மேல் காத்திருக்க முடியாமல் அவளை வீடியோ காலில் அழைத்தான். உடனடியாக இணைப்புத் துண்டிக்கப்பட்டது. ஆத்திரத்தோடு தனது அலைபேசியை முறைத்தான். ‘இப்ப பேசமுடியாது… ஸாரி..’ எனப் பதில் அனுப்பியவள் அதன்பிறகு உரையாடலைத் தொடரவில்லை. வெறுமையிலும் ஏமாற்றத்திலும் புரண்டு படுத்தவனுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. மீண்டும் அவளது புகைப்படத்தைப் பார்க்கலாமென அலைபேசியை எடுத்தபோது அந்தப் படம் அழிக்கப்பட்டிருந்தது. அவன் அலைபேசியைத் தலையணைக்குள் எறிந்துவிட்டுப் படுக்கையிலிருந்து எழுந்துகொண்டான். ஜன்னலுக்கு வெளியே இருள் அடர்த்தியாக வீதியை ஆக்கிரமித்திருந்தது. அதிகாலை கண் விழித்தபோது கை தானாக அலைபேசியைத் தேடி எடுத்தபோது ‘ஸாரி’ என அவளிடமிருந்து செய்தி வந்திருந்தது. அதற்குப் பதில் அளிக்கவே கூடாதென்கிற உறுதியோடு தனது அன்றாட வேலைகளைக் கவனிக்கச் சென்றான். ஒரு மணி நேரத்திற்குப் பின் ‘கோவமா?’ என அடுத்த செய்தி வந்தது. அதனையும் பொருட்படுத்தாமல் அவன் செய்தி சேகரிக்க மருத்துவமனைக்கும் பின் காவல் நிலையத்திற்கும் சென்றான். அவளிடமிருந்து வெவ்வேறு உடைகளில் புகைப்படங்கள் வந்திருந்தன. அவன் எதற்கும் பதிலளிக்கவில்லை. மதிய உணவிற்காக வீடு திரும்பியபோது உள்ளாடை மட்டுமே அணிந்து புகைப்படமொன்றை அவனுக்கு அனுப்பியிருந்தாள். அதைப் பார்த்ததும் பரவசமானவன் கட்டுப்படுத்த முடியாமல் அவசரமாக அறைக்குள் சென்று கதவைச் சாத்தினான். அந்தப் புகைப்படத்திற்கு ஆட்டின் போட்ட அடுத்த நொடி மீண்டும் அது அழிக்கப்பட்டது… அவன் எரிச்சலில் ‘ங்கோத்தா உனக்கு வெளயாட்டா இருக்கா?’ என டைப் செய்து அனுப்ப, அவளிடமிருந்து கால் வந்தது. அவசரமாக எடுத்தான். குறைவான வெளிச்சத்திற்கு நடுவே உடல் முழுக்கப் போர்வையால் மூடியிருந்தவள் இவனைப் பார்த்து வெட்கத்தோடு சிரித்தாள். அவன் அவசரமாக தனது உடைகளைக் களைந்தான். உள்ளாடையோடு நின்றவனைப் பார்த்து வெட்கத்தோடு கண்ணை மூடிக் கொண்டாள். ‘கண்ண வேணா மூடிக்கோடி மத்தத எல்லாம் தொறந்து காட்டு..’ எனச் சிரித்தான். ‘ச்சீ என்ன இவ்ளோ அசிங்கமா பேசறீங்க..?’ எனப் பொய்யாகக் கோபப்பட்டாள். ‘ஓ அசிங்கமா…? ஏன் நல்லா இல்லயா? இண்ட்ரஸ்ட் இல்லாமயா எங்கிட்ட பேசிட்டு இருக்க…?’ என அவளைச் சீண்டினான். ’அதெல்லாம் ஒன்னுமில்ல.. ஒங்ககிட்ட பேசணும்னு தோணுச்சு. அவ்ளோதான். இதெல்லாம் நீங்க தூண்டி விட்டதால நடந்துடுச்சு…’ என அப்பாவியாகச் சொன்னாள். ‘ஆமாடி ஒனக்கு ஒன்னும் தெரியாது பாரு… சரி பெட்ஷீட்ட கொஞ்சம் ரிமூவ் பன்றியா…’ என வழிந்தான். ‘ச்சீ ச்சீ.. நான் பண்ணமாட்டேன்..’ என அடம் பிடித்தாள். அவன் பொய்யான கோபத்தோடு அவளை முறைத்தான். ‘பெரிய ரிப்போர்ட்டர் உங்களுக்கு ஆள் இல்லாம இருக்குமா? எங்கிட்ட வழிஞ்சுட்டு இருக்கீங்க…’ எனச் சீண்டினாள். ‘என்னதான் வீட்டு மாங்கா இருந்தாலும் திருட்டு மாங்காய்க்கு ருசி அதிகம் இல்லயா… அதான்…’ எனச் சிரித்தான். ‘நீங்க எந்த மாங்காவச் சொல்றீங்க…?’ எனக் கேலியாகக் கேட்டாள். ‘அதான் தெரியுதுல்ல.. அப்பறம் என்ன கேக்கற… என்னய டென்ஷன் பண்ணாத… சீக்ரமா..’ என அவசரப்படுத்தினான்… மின்னல் வேகத்தில் போர்வையை விலக்கிவிட்டு மீண்டும் மூடிக் கொண்டாள். ஒரு நொடிக்கும் குறைவான அவகாசத்தில் பார்த்த அந்த உடலின் நிர்வாணம் அவனைப் பித்து கொள்ளச் செய்தது. ‘ஏய் இன்னும் ஒரு தடவ நல்லாக் காட்டுடி… ப்ளீஸ் ப்ளீஸ்…’ என மன்றாடினான்.. ‘நோ… என்னால முடியாது… வேணும்னா நேர்ல பாத்துக்கங்க..’ எனச் சொல்லிவிட்டு அவள் இணைப்பைத் துண்டித்துவிட்டாள். கையிலிருந்த அலைபேசி நடுங்கியது. சமநிலை குலைந்தவனாய் உடல் முழுக்க மயிர் கூச்செரிந்து நின்றான். அந்த உடலைக் கட்டியாள வேண்டும். ஒவ்வொரு துளியையும் அள்ளிப் பருகவேண்டுமெனத் தாபமெடுத்தபோது அவளது முகம் தெரியாத காதலனின் மீது காழ்ப்பும் வெறுப்பும் வந்தது. வெக்கையில் உடல் வியர்த்துக் கொட்ட, அவளது மற்ற புகைப்படங்களை எடுத்துப் பார்த்தான். அவளைச் சந்திப்பதையும் அவளோடு உறவுகொள்வதையும் தன்னால் தள்ளிப்போட முடியாதென உணர்ந்தவன் ‘எப்போ மீட் பண்ணலாம்?’ என அவளிடம் கேட்டான். ‘உங்க விருப்பம்….’ என அவளிடமிருந்து பதில் வந்தது. அவசரமாகச் செய்து முடிக்கும் காரியமில்லை. அவளோடு முழுமையாக நேரம் செலவிட வேண்டுமென நினைத்தவன் அலுவலகத்தில் பேசி இரண்டு நாள் விடுமுறை எடுத்துக் கொண்டான். வீட்டில் பெற்றோர்களிடம் ஒரு செய்தி சேகரிக்க வேண்டி நாளை காலை வெளியூர் செல்கிறேன் என்று சொல்லிவிட்டான். ‘நாளைக்கு மீட் பண்ணுவமா?’ என அவளிடம் கேட்க, அவள் மறுக்காமல் சம்மதித்தாள். வெளியூர் அழைத்துச் செல்லும் முடிவில் இருந்தவனிடம் ‘எங்கயும் போ வேணாம் என் வீட்டுக்கே வாங்க. நான் மட்டுந்தான் இருக்கேன்.’ எனச் சிரித்தபடி பதிலளித்தாள். வீட்டுக்கா? எனத் தயக்கத்தோடு அவன் கேட்க, ‘பயப்படாதிங்க… இங்க நான் மட்டுந்தான் இருக்கேன். எங்கூட வேற யாருமில்ல.’ என்றாள். ‘இல்ல… வேற யாருக்காச்சும் தெரிஞ்சா தப்பாயிருமே…’ ஆசையும் குழப்பமும் அவனை அலைக்கழித்தன. ‘ரிஸ்க் எடுக்காம எஞ்சாய் பண்ணணும்னா எப்பிடி ஸார்…? இஷ்டம்னா வாங்க… இல்லன்னா விடுங்க… என்னால வெளிய எங்கயும் வர முடியாது…’ எனக் கறாராகச் சொல்லிவிட்டாள். இதில் யோசிக்க ஒன்றுமில்லையென முடிவெடுத்தவன் வீட்டிற்கு வர ஒப்புக்கொண்டான். இரண்டு நாட்களுக்குத் தேவையான மது போத்தல்களை வாங்கிச் சேமித்துக் கொண்டவனுக்கு இரவு உறக்கம் பிடிக்கவில்லை. இந்த இரண்டு நாட்களில் நடந்த எதையும் அவனால் நம்பமுடியவில்லை. யாரிவள்? திடீரென இவ்வளவு நடந்துவிட்டதே… பெண்ணுடலுக்காக எத்தனையோ நாட்கள் ஏங்கித் தவித்தபோது இப்படி ஒருத்தி கிடைக்கவில்லையே எனத் தன் மீது கழிவிறக்கம் கொண்டான். இன்னொரு புறம் பெண்கள் இத்தனை எளிதில் சோரம் போகக் கூடியவர்களா என வியப்பாகவும் இருந்தது. தனக்கு வேண்டுமானால் இது முதல் முறையாக இருக்கலாம். அவள் கையாளுவதைப் பார்க்கையில் அப்படி இருக்க வாய்ப்பில்லையெனச் சமாதானம் சொல்லிக் கொண்டான். உறங்க நினைத்துக் கண் மூடிய போதெல்லாம் அந்தத் திரண்ட மார்புகள் முன்னால் வந்து தொந்தரவு செய்தன. உடல் சூடு குறையாமல் கட்டிலில் புரண்டவன் அதிகாலையிலேயே வீட்டிலிருந்து கிளம்பிவிட்டான். அவள் அனுப்பியிருந்த முகவரி அவனது வீட்டிலிருந்து அரை மணி நேரப் பயணத் தூரத்திலிருந்தது. திருச்சியிலிருந்து குளித்தலை செல்லும் முக்கியச் சாலையிலிருந்து பிரிந்து குளுமணி செல்லும் சிறிய கிராமத்துச் சாலை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்வெளிகள். இந்தப் புதிய முகவரிக்கு வந்து சில நாட்கள்தான் ஆனதென்றாள். ஊருக்கு வெளியே இருந்த புதிய வீடு. தனித்திருக்கும் அச்சம் இல்லாமல் உற்சாகமாக இருந்தாள். நன்கு அறிமுகமானவனை வரவேற்பது போல் வரவேற்றவள் அவனுக்குத் தேநீர் கொடுத்தாள். நிதானமாக வீட்டைக் கவனித்தான். திருத்தமான வீடு. தனது கணவரோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள். குழந்தைகளோடு இருந்த புகைப்படங்களைப் பார்த்தபோதுதான் அந்த வீட்டில் குழந்தைகள் இருப்பதற்கான தடயங்களே இல்லை என்பதைத் தெரிந்துகொண்டான். ‘உன்னோட பசங்க எங்க போயிட்டாங்க…?’ தயக்கத்தோடு கேட்டான். ‘மாமனார் மாமியார் வீட்டுல…’ எனச் சிரித்துவிட்டு, ‘ஒழுக்கம் கெட்ட பொம்பளகிட்ட புள்ளைங்க வளந்தா அதுங்களும் கெட்டுப் போயிருமாம்.’ என ஏமாற்றத்தோடு சொன்னவளை எதிர்கொள்ள முடியாமல் தலையைக் குனிந்துகொண்டான். ‘நீங்க ரெஸ்ட் எடுங்க… இட்லியும் குடல் குழம்பும் செஞ்சுட்டு இருக்கேன். கொஞ்ச நேரத்துல சாப்புடலாம்…’ எனச் சொல்லிவிட்டு சமையலறை நோக்கிச் சென்றாள். அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவசரமாகப் பின்னால் சென்று அவளை அணைத்தான். கழுத்தில் கடித்தவனை விலக்கியவள் ‘எதுக்கு இவ்ளோ அவசரம்?… இங்கதான இருக்கப் போற… பொறுமையா இரு…’ எனச் சிரித்தாள். மீண்டும் அவளது கழுத்தில் கடித்துவிட்டுக் கண்களில் காமம் மிளிர அவன் வெளியே வந்தான். உடை மாற்றிக் கொண்டு வந்தபோது அந்த வீடு அவனுக்குப் பழகியிருந்தது. தனது பையிலிருந்து மதுக்குப்பியை எடுத்தவன் அவளைத் தேடி வந்தான். ‘ நீ குடிப்பியா?’ எனக் கேட்டான்… ‘இல்ல நீங்க குடிங்க..’ எனச் சொல்லிவிட்டு தம்ளரை எடுத்துக் கொடுத்தாள். அவன் சமயலறை மேசையில் ஏறி அமர்ந்து கொண்டு மதுவை ஊற்றி நிதானமாகக் குடித்தான். கொதிக்கும் குடல் கறியின் வாசனையும் அவளது வியர்வை வாசனையும் அவனை அதீதமாய்க் கிளர்த்த அவளுடலைச் சீண்டியும் வருடியும் விளையாடினான். அவளது இதழ்களை வருடினான். அவள் பொய்யாகக் கோபப்பட்டாள். வெட்கப்பட்டாள். அந்த விளையாட்டுப் பிடித்துப் போக அவளுடலை உரசியபடியே முத்தமிட்டான்… ‘கொஞ்ச நேரம் சும்மா இரேன்…’ என்றவளை மேற்கொண்டு பேசவிடாமல் இறுக்கி அணைத்து ஆழமாய் முத்தமிட்டான். அவள் தன்னை முழுமையாக அவனிடம் ஒப்புக் கொடுத்தாள். நீண்ட காத்திருப்பில் அவளுடலை நெருங்கிய சில நிமிடங்களிலேயே உச்சம் பெற்று அவனது லுங்கி ஈரமானது. ஏமாற்றத்தோடு அவன் விலக அவள் சத்தமாகச் சிரித்தாள். ‘போதுமா. போ … போயி வாஷ் பண்ணிட்டு உக்காரு. சாப்டலாம்…’ என அன்பாகச் சொன்னாள். அவன் உடலைச் சுத்தப்படுத்திக் கொண்டு மீண்டும் மதுவருந்தினான். வெக்கை குறைந்ததில் உடல் லேசாகியிருந்தது. உணவைப் பரிமாறியவளிடம் உரையாட விரும்பினான். மதுவின் அடர்த்தி உடல் முழுக்கப் பரவியிருந்ததால் உணவின் காரம் இதமாக இருந்தது. எங்கிட்ட ஏதோ பேசணும் பேசணும்னு சொன்னியே… என்ன பேசணும்..’ சாப்பிட்டபடியே கேட்டான். ‘ம்க்கும் நீ எங்க என்னய பேச விட்ட… சாப்டு அப்றம் பேசிக்கலாம்..’ என வெட்கப்பட்டாள். அவனும் சிரித்தபடியே மதுவையும் உணவையும் ஒருசேர எடுத்துக் கொண்டான். அந்தக் காலை நேரம் வசீகரமானதாக மாறியிருந்தது. தொலைக்காட்சியில் ஒலித்த பாடலை ரசித்தபடியே படுக்கையில் சாய்ந்து அமர்ந்தான். அவள் உடைமாற்றிக் கொண்டு சிரித்த முகத்தோடு வந்தாள். ஜன்னல்களின் வழியாய் வந்த மெல்லிய வெளிச்சம் அறையில் நிரம்பியிருக்க, அவனருகில் அமர்ந்தாள். இந்தமுறை அவளை நிதானமாகக் கையாண்டான். மறுப்பேதும் சொல்லாமல் ஒத்துழைத்தவள் அவனது உடைகளைக் களைந்து தூண்டினாள். அவள் வேகத்திற்குத் தன்னை ஒப்புக் கொடுத்தவனின் குறியை இறுகப் பற்றித் திருகினாள். அவன் வலியில் ‘ஏய் என்னடி செய்ற… வலிக்கிது.. விடு…’ எனக் கத்தினான்.. ‘நான் கள்ளக் காதல் பண்ணேன்னு உனக்கு யார்ரா சொன்னது தாயோலி…’ எனக் கத்தியவள் அவனது குறியை முன்னைவிடவும் இறுக்கமாகத் திருகினாள். ‘அய்யோ வலிக்கிது… வலிக்கிது விட்று.. என்னய… போலிஸ்காரந்தான் சொன்னான்…’ எனக் கதறினான். ஓங்கி அவனது முகத்தில் குத்தினாள். ‘போலிஸ்காரன் சொன்னா நீ எழுதுவியா? ஒங்கொம்மாள ஒருத்தன் தேவ்டியான்னு சொன்னா நீ என்ன ஏதுன்னு விசாரிக்காம எழுதுவியாடா தேவ்டியா பயலே…’ மீண்டும் மீண்டும் அவள் தாக்கியதில் அவன் நிலைகுலைந்து போனான். போதையில் உடல் தடுமாற தனது உடைகளைத் தேடினான். அவள் அடிப்பதை நிறுத்தவில்லை. ‘அய்யோ என்னய மன்னிசிரு.. மன்னிச்சிரு…’ என கைகளை உயர்த்திக் கெஞ்சினான். ‘பத்திரிகக்காரன் ஒரு செய்திப் போடறதுக்கு முன்ன எது நெசம் எது பொய்யின்னு நாலு பேருகிட்ட விசாரிக்கணும். ஒருத்தன் சொல்ற பொய்ய விட அரகுறையா தெரிஞ்சிக்கிட்ட உண்ம எவ்ளோ ஆபத்துன்னு தெரியுமாடா ஒனக்கு. சொல்லுடா…’ அவனுக்கு வலியிலும் ஆற்றாமையிலும் கோபம் வந்தது. ‘யேய் நான் மட்டுமாடி செய்தி போட்டேன்.. எல்லாருந்தான் போட்டானுக… போயி அவனுகள நொட்டு… எனக் கத்தினான். மீண்டும் ஓங்கி அறைந்தவள் ‘நீதாண்டா ஆரம்பிச்சு வெச்ச… இது நியூஸா மாறி அதிகமா பரவுனதுக்கு நீதான் காரணம். உண்மை என்னனு எல்லாருக்கும் தெரியறதுக்கு முன்னயே கள்ளக்காதல்னு எழுதுனவன் நீதான்… நீ சொன்னத வெச்சுதான் எல்லாரும் கத சொல்லிட்டானுக… என்னயத் தேவ்டியாவா ஆக்குனது இந்தக் கை தான… எனக் கேட்டபடியே அதனைக் கட்டிலில் வைத்து மிதித்தாள். அவன் வேதனையில் அலறினான். ‘என்னய மன்னிச்சுரு… மன்னிச்சிரு.. வலிக்கிது தீபா விட்று…’ எனக் கெஞ்சியவனை முறைத்தாள். ‘ங்கோத்தா நான் என்ன உன் பொண்டாட்டியா தீபான்னு பேரச் சொல்ற.. அக்கான்னு சொல்ற…’ எனக் கத்தினாள். அவன் பேச்சற்று இறுகிப்போனான். வலியில் கண்ணீர் வழிந்தது. ஆத்திரத்தில் மூச்சு வாங்கியபடியே முகத்திலும் கழுத்திலுமிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டவளுக்கு அழுகை வந்தது. ‘என் பேரக் கெடுத்து ஜெயிலுக்குப் போக வெச்சு என் பிள்ளைகளும் என்னய விட்டுப் போயிருச்சுங்க… ஒரு நாளைக்கு எத்தன பேரு ஃபோன் பண்ணி என்னய படுக்கக் கூப்டறானுக தெரியுமா? எல்லாம் ஒன்னால…. முன்னப் பின்ன தெரியாத ஒருத்தரப் பத்தி எழுதறமேன்னு பயம் இல்லாமப் போச்சுல்லா ஒங்களுக்கெல்லாம்… நான் ஒங்களுக்கு என்னடா பாவம் பண்ணேன்…’ திரும்பி அவனை முறைத்தாள். அவன் இன்னும் அச்சம் விலகாமல் பார்த்துக் கொண்டிருந்தான். ‘என் புருஷன் கேம் அடிக்ட்… ஆன் லைன் கேம்ல நிறைய காச விட்டு கடன் ஆகிட்டான். என் தாலி முதக்கொண்டு எல்லாத்தையும் வித்துக் குடுத்தேன். நாளைக்குத் திருந்திருவேன்னு சொல்லி திரும்பப் போயி விளையாடி தோத்துட்டு வருவான்… இருந்த வீட்டையும் கடன்காரனுக்கு வித்த அப்பறம் யாருக்கும் பதில் சொல்ல முடியாதேன்னு பயந்து செத்துப் போனான் அந்த நாயி…. இந்த உண்மைய நான் வெளிய சொல்றதுக்குள்ள நீ என்னய தேவ்டியாவா ஆக்கிட்ட… ம்ம்…’ எனக் கத்தியவள் மீண்டும் அவனை அடித்தாள். அவசரமாகக் கையெடுத்துக் கும்பிட்டவன் ‘நான் வேணா மறுப்புச் செய்தி போட்டுடறேன்…’என மன்றாடினான். ‘போடா மயிரே… தெனம் எவன் குடி கெடும்… எந்தப் பொம்பள எவனக் கூட்டிட்டு ஓடினா, எவன் தாலிய எவன் அறுத்தான்னு தெரிஞ்சுக்க வெறி புடிச்சு அலையிற கூட்டம் நீ சொல்ற மன்னிப்பக் கவனிக்கும்னு நெனைக்கிறியா? ம்ஹூம்… எல்லாருக்கும் அன்னிக்கி ஜாலி பண்ண ஒரு கிசு கிசு வேணும்… ஊரான் வீட்டுப் பிரச்சனைன்னா ஓநாய்க்கு எச்சில் வடியற மாதிரி வந்துடறீங்கள் ல….’ எனக் கேட்டபடியே அவனது உடைகளைத் தூக்கி முகத்தில் அடித்தாள். அவன் பதற்றத்தோடு அவளைப் பார்த்தான். ‘போ… நீ செஞ்ச சில்றத்தனத்தையும் வெக்கமே இல்லாம எங்கூட அத்துமீறிப் பேசுனதையும் இப்ப ஊரு உலகமே பாத்திருச்சு…’ என்று சிரித்தவளை அதிர்ச்சியோடு பார்த்தான்… ‘என்னடா பாக்கற… நீ இந்த வீட்டுக்குள்ள வந்ததுல இருந்து இவ்ளோ நேரம் நடந்த அவ்வளவையும் ஃபேஸ்புக் ல லைவ் போட்றுக்கேன்… இன்னும் ஓடிட்டுதான் இருக்கு. தெனம் ஒரு ஹாட் நியூஸுக்காக நாய் மாதிரி அலையிவ ல… இன்னிக்கி நீதான் ஹாட் நீயூஸ்… போ உன் கம்பெனில உனக்கு மெடல் குடுப்பாங்க… வெளிய போடா மயிரே… சத்திய மூர்த்தி… **** மூர்த்தின்னு… பேரப் பாரு…’ எனக் கத்தியவளை எதிர்கொள்ளத் திராணியின்றி அவசரமாக உடை மாற்றியவன் தனது அலைபேசியைத் தேடி எடுத்தான். அவனுக்குத் தெரிந்தவர்களும் நண்பர்களுமாய் நிறைய அழைப்புகள் வந்திருந்தன. ஆத்திரத்தில் அவளை ஏதாவது செய்ய வேண்டுமென வெறி வந்தது. வேகமாக நெருங்கியவனை ஓங்கி மிதித்தாள். அவன் கதவுக்கு வெளியே தடுமாறி விழுந்தான். காலைப் பிடித்து இழுத்து வந்தவள் வீட்டிற்கு வெளியே போட்டாள். வெயில் உக்கிரமாய் இருந்தது. தடுமாறியபடியே எழுந்து தனது இரு சக்கர வாகனத்தை உதைத்தான். அவனுக்குப் பின்னால் அவள் கதவை அடித்துச் சாத்தும் சத்தம் மூர்க்கமாய் எதிரொலித்தது. https://thadari.com/fall-short-story-lakshmi-saravanakumar/
  9. பிரத்தியோகமாக என் நண்பர்கள் வட்டத்தில் மூவர் வட்டக்கச்சி, துணுக்காய் போன்ற பகுதியில் இருக்கும் விவசாய காணியை (ஒரு பிரிவில்) , கொட்டில் வீடோடு தரும் விருப்பத்தை தெரிவித்துள்ளார்கள் அண்ணண். நோர்வேயில் இருக்கும் எனது அண்ணனும் கம்பளை வெள்ளத்தில் அனைத்தையும் இழந்து பௌத்த துறவிகளிடம் தஞ்சம் புகுந்து இருக்கும் 2 குடும்பத்தாரை அவர்கள் விருப்பத்தோடு நாவற்குழி க்கு கொண்டுவரும் யோசனையில் உரையாடிக்கொண்டு இருக்கிறோம். பொதுமையாக புலம்பெயர் என்று எல்லாரையும் ஒரே மாதிரி பார்க்க வேணாமே. சந்தர்ப்பம் கிடைத்தால் நீங்களும் ஏதாவது செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.
  10. 1930-1940 களில் இருந்தே அப்பாவி தமிழனை சிங்களவன் கலவரங்கள் பல உருவாக்கி தாக்குவதும், அழிப்பதுமாகவே வாழ்க்கை ஓட... எங்கோ இருந்து வந்த வண்டுப்பையன் (மேதகு) 1983 இல் நின்று அடித்து சிங்களத்தை ஒரு கணம் நிலை குழையவைத்தான். அப்போ அந்த செயலை நித்திரையில் இருந்து எழும்பிய ஒருவரின் செயலாக பார்த்தோமா ? இல்லை தானே. சுமந்திரனின் அந்த "கருத்து" வெறும் ஆறுதல் படுத்தல் அவ்வளவே. நமக்கு தெரிந்தவர் ஒருவரின் வீட்டில் செத்தவீடு நடந்தால் அவர்கள் துயரத்தில் பங்கு கொண்டு ஏதாவது உதவி வெண்டுமானால் தயங்காமல் அழையுங்கள் என்று சொல்லும் பார்மாலிட்டி போன்றது. ஆனாலும் அந்த சொல்லில் ஒரு ஆற்றுப்படுத்தல், நம்பிக்கையூட்டல், இப்படி பல அம்சங்கள் இருக்கும். இதில் பெரும் தலைவர் மேதகுவையும், சுமந்திரனையும் தொடர்பு படுத்தி பேசியதாக நினைக்க வேண்டாம்.
  11. மரத்தில் இருப்பது இலைகளா அல்லது கிளிகளா.
  12. தமிழக முதல்வருடன்... செல்பி எடுத்த, ஈழத்து கோமாளிகள்.
  13. T20 World cup 2026: இந்தியக் குழாம் அறிவிப்பு - சுப்மன் கில் நீக்கம் Dec 20, 2025 - 03:17 PM எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடருக்கான இந்தியக் கிரிக்கெட் குழாம் இன்று (20) பிற்பகல் அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளதுடன், உப தலைவர் சுப்மன் கில் குழாத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கமைய, அக்ஷர் படேலுக்கு உப தலைமைத்துவப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் குழாத்தில் ரிங்கு சிங் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. 2026 T20 உலகக்கிண்ணத்திற்கான இந்தியக் குழாம் பின்வருமாறு, சூர்யகுமார் யாதவ் (தலைவர்) அக்ஷர் படேல் (உப தலைவர்) அபிஷேக் சர்மா சஞ்சு சம்சன் (விக்கெட் காப்பாளர்) திலக் வர்மா ஹர்திக் பாண்டியா சிவம் டுபே ரிங்கு சிங் ஜஸ்பிரித் பும்ரா ஹர்ஷித் ரானா அர்ஷ்தீப் சிங் குல்தீப் யாதவ் வருண் சக்ரவர்த்தி வாஷிங்டன் சுந்தர் இஷான் கிஷன் (விக்கெட் காப்பாளர்) https://adaderanatamil.lk/news/cmje46uix02y7o29nu7984w56
  14. இயற்கை அனர்த்தத்தை காரணமாக்கி ஒரு இடத்தில் இரு நூற்றாண்டுகளாக வாழ்ந்த மக்களை வெளியேற்றி பின்னர் அங்கே ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப இங்கேயிருந்து அங்கே மக்களைக் குடியேற்றி எல்லா மக்களின் மனதுகளையும் குழப்பி சலுகைகளைக் கொடுத்து மனதுகளை மாற்றி இங்கே பார்..... அங்கே பார்..... தெரிகின்றதா ஒளி வட்டம்..... என்று ஆர்ப்பரித்து......... சாமிப்பிள்ளையை சமி பிலே.... ஆக்கி மயில்வாகனத்தை மல்லி வானே.... யாக்கி இது புத்தன் இயேசு பிறந்த பூமி என்று மகாவம்சத்தையே மாற்றி..... இப்படியே மாற்றத்தையே வேண்டும் வேண்டும் என..... மக்களை ஏய்ப்பதே இந்த அரசியல்வாதிகளின் தொழில் . அதற்கு வக்காலத்து வேறை....... 😂
  15. அன்றைய ஜெ. வி. பி. நீதிமன்றம் சென்று சாதித்தது. அந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி சில்வா கூறியிருந்தார், நீதிமன்றம் சென்று இதற்கு எதிராக வாதாடி தீர்ப்பை மாற்றலாமென்று.ஆனால் நம்மவர் யாரும் முன்வரவில்லை. வேண்டுமென்றே இருபகுதியும் நடந்து கொண்டன. சட்ட மேதையும் தூங்கிவிட்டார் பாருங்கோ. நாம்தான் பேரம் பேசும் சக்தி, ஏகோபித்த கட்சி என்று கூறி வாக்கு மட்டும் சேகரித்தார்கள்.
  16. இருந்தாலும் வேறுபாடு உள்ளது சுமந்திரன் இலங்கையில் இருப்பவர் மலையக தமிழர்களை யாழ்பாணம் வந்து குடியேறுங்கோ என்று சொன்னார். இவர்கள் வெளிநாட்டில் இருப்பவர்கள் யாழ்பாணத்து காணிகளின் புனிதம் கெட்டுவிடும் என்று அதை விரும்பவில்லை .
  17. சுமன் லவ்வர்ஸுக்கு ஒரு சிறுகுறிப்பு. சுமன் வானத்தில் இருந்து வந்தவர் அல்ல. உங்களவர்தான். உங்களுக்குரிய அத்தனை “சிறப்பு குணாதிசயங்களையும்” ஒருங்கே சேர்த்து அமைக்கப்பட்ட மாதிரிதான் சுமன். சுமனை நீங்கள் இனம் கண்டு வெறுப்பது போலத்தான் இலங்கையில் உள்ள ஏனையவர்கள் உங்களை வெறுப்பதும்.
  18. செயற்கை நுண்ணறிவால் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு – இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை! தொழில்துறை புரட்சியின் போது காணப்பட்டதைப் போலவே, செயற்கை நுண்ணறிவு (AI) பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுவது தொழிலாளர்களை வேலைகளிலிருந்து வெளியேற்றுவதற்கான வாய்ப்பாக அமையும் என்று இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் எச்சரித்துள்ளார். பொருளாதாரம் முழுவதும் செய்கை நுண்ணறிவு பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வரும் நிலையில், தொழிலாளர்களை அதிகளவில் தொழில்நுட்பத்தில் ஈடுபடுத்த உதவுவதற்காக ஐக்கிய இராஜ்ஜியம் செயற்கை நுண்ணறிவு பயிற்சி, கல்வி மற்றும் திறன்களில் முதலீடு செய்யவது அவசியம் என்றும் இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி கூறினார். அந்த அடித்தளங்கள் இல்லாமல் போனால் தொழிலாளர் சந்தை மேலும் துண்டு துண்டாக உடையும் அபாயத்தை எதிர்கொள்ளும் என்றும் அவர் எச்சரித்தார். அண்மைய ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. மேலும் வணிகங்கள் மற்றும் பொதுத்துறையினரால் இது அதிகளவில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் கணினிகள் அதிக அளவிலான தரவை செயலாக்கவும், வடிவங்களை அடையாளம் காணவும், அந்தத் தகவலை என்ன செய்வது என்பது குறித்த விரிவான வழிமுறைகளைப் பின்பற்றவும் அனுமதிக்கிறது. இருப்பினும், இது ஏற்கனவே வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து இங்கிலாந்தில் கவலைகள் அதிகரித்துள்ளன. இந்த வாரம் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள், ஒக்டோபர் மாதத்துடன் முடிவடைந்த கடந்த மூன்று மாதங்களில் ஐக்கிய இராஜ்ஜியத்தின் வேலையின்மை விகிதம் 5.1% ஆக உயர்ந்துள்ளதை வெளிக்காட்டியது. இதில் அதிகளவானோர் இளைய தொழிலாளர்கள் ஆவர். ஒக்டோபர் மாதம் வரையிலான கடந்த மூன்று மாதங்களில் 18 முதல் 24 வயதுடைய வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 85,000 அதிகரித்துள்ளது. இது நவம்பர் 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகப்பெரிய வேலையின்மை உயர்வு என்று இங்கிலாந்தின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் (ONS) தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1456759
  19. கொலிடே தேடி போகும் உங்களுக்கு வேண்டியதுதான் கண்ணுக்கு தெரியும். ஏன் அங்கே நிரந்தரமாக இருக்க முடியவில்லை உங்களால்? கொலிடே போகிறவர்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையை ஆராய்ந்து தமது கொலிடேயை பாழாக்க விரும்பமாட்டார்கள். சரி, யாராவது வந்தால், வாழ வழியை காட்டுங்கள். எந்தத் தமிழனும் யாழ்ப்பாணம் வரமாட்டான் என்று நீங்களே சொல்லி விட்டு யாரை குடியேற்றப்போகிறீர்கள்?
  20. வேறு, வேறு தளங்களில் வந்த செய்தி..இந்த பெண் ஏற்கனவே கணவரது நடவடிக்கைகள் காரணமாக பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத பட்சத்திலயே இப்படி நடந்திருக்கிறது..கணவரின் அடியினால் ஒரு பக்க காது கேட்காமலேயே போய் விட்டதாகவும் சொல்லி இருக்கிறார்.நான்கு பிள்ளைகளில் இருவர் திருமணம் செய்து தனியாக போய் விட்டவர்கள்.மற்றய இரண்டு பிள்ளகைளும் இப்போ தனித்து விடப்பட்டுள்ளதாகவும் சொல்லப் பட்டிருந்தது.நான் வாசித்ததை தான் இற்கு பதிகிறேன்.நன்றி
  21. கிந்தியன் என்றும் தன் இனம் சார்ந்து சிந்திப்பான். அதில் தமிழர்களுக்கு விடிவில்லை. தமிழ் நாட்டிலேயே தமிழை அழிக்க முனைபவன்.இந்த வகையில் கிந்தியன் ஈழத்தமிழர்களுக்கு தேவையில்லாத ஆணி. இது ஒரு ஈழத்தமிழனின் 60 வருட அனுபவம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆதாயம் இல்லாமல் செட்டி ஆற்றோடு போவாரா என்பதற்கமைய.....கிந்தியா கூட தன் அரசியல் ஆதாயம் இல்லாமலா அன்று தொடக்கம் இன்று வரைக்கும் தமிழர்களை பகடைக்காய்களாக நகர்த்திக்கொண்டிருக்கின்றது? அதனால் ஈழத்தமிழர்கள் நிர்க்கதியானார்களே தவிர வேறொன்றுமில்லை. இன்றுவரைக்கும் அது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. நிலைமை இப்படி இருக்க...... ஈழத்தமிழினம் தொடர்ந்தும் கிந்தியனின் உதவிக்கரத்தை எதிர்பார்த்து அழியக்கூடாது. பெருமாளும் என் கருத்தையே பிரதிபலிக்கின்றார்.நன்றி பெருமாள். சிங்கள இனம் யார்பக்கமோ எந்த அரசியலோ எனக்கு அக்கறையில்லை. ஈழ இனத்தை பொறுத்தவரை அடுத்த தெரிவு அமெரிக்காகாவாக இருக்க வேண்டும்.சிங்களம் விகாரைகள் கட்ட நினைக்கும் இடத்திலும், சிங்கள இராணுவம் இருக்கும் இடத்திலும் அமெரிக்க இராணுவம் இருக்கட்டும்.
  22. இவ்வளவு காலமும் இந்தியன் இருந்து எங்களுக்கு என்ன செய்தார்கள் ? எவன் வந்தாலும் அவனின் சுய நலத்துக்கே வருவான் இலங்கையின் பூர்வ குடி நாங்கள் என்று கடைசியில் எங்களின் இருப்பே பறி போகிறது அதை இந்தியா ரசித்து கொண்டு இருக்கு தமிழ்நாட்டில் தமிழர்கள் டாஸ்மார்க்கில் விழுந்து கிடக்கிறார்கள் .வடகிழக்கில் இருப்பே பறி போகையில் எவன் வந்து எம்மை சாட்டி அரசியல் செய்தால் அதை பிடித்து கொண்டு மேலே போவதுதான் சாணக்கியம் . பழிவாங்கும் இந்திய படங்களை பார்த்து இன்னும் இன்னும் அழிந்து கொண்டு இருக்கிறோம் நல்லகாலம் ஜப்பான்காரன் அணுகுண்டு வீச்சுக்கு பின் அத்தகைய படங்களை பார்க்கவில்லை அவர்களை யார் அழித்தார்களோ அவர்களின் உதவியின் ஊடே வளர்ந்து காட்டி கொண்டார்கள் .
  23. உரிமை உள்ளவர்கள் இலங்கை அருகில் உள்ளது சிங்களவர்கள் கிந்தி பாட்டை ரசித்து கொண்டாடுவார்களே தவிர நம்பி நம்ம வடகிழக்கு தமிழர்களின் கண்மூடித்தனமாய் விசுவாசம் போல் ஏமாற மாட்டார்கள் தங்களின் இந்திய அரசியலில் மிக தெளிவாய் இருப்பார்கள் . உதாரணத்துக்கு இந்திய அரசின் உசுபேத்தளில் நம்மவர் திருகொணோஸ்வரருக்கு மிகபெரிய காண்டா மணி இங்கிலாந்தில் வைத்து செய்து அங்கு கொண்டு சென்றார்கள் கடைசியில் சிங்கள அரசு மறுப்பு தெரிவிக்க கொண்டு போன மணி சேமிப்பு கிடங்கில் கிடக்கு . இப்படி டெல்லியின் இயலாமை வெள்ளிடைமலை.
  24. என்ன எண்ணைக் கிணறை விட்டு விட்டீர்கள்😂? பெற்றோல் நிலையம் வாங்கிய புலத் தமிழ் "பிசினஸ் மேக்னற்" கசாக்ஸ்தானில் எண்ணைக் கிணறையும் வாங்கினார் என்று எழுதினால் இன்னும் தூக்கலாக இருக்கும்! ஆனால், இந்த வளர்ச்சி, சாதனையெல்லாம் யாழ்ப்பாணத் தண்ணீர் குடித்து வளர்ந்தவர்கள் தான் செய்யலாம்! வெளியே இருந்து வந்தால் வீட்டில் வேலைக்குத் தான் வைத்திருப்போம்😎!
  25. சுத்துமாத்து சுமந்திரனின்… “லூஸ்” கதையை கேட்டு, எவனும் வடக்கிற்கு வர மாட்டான் என்று அடித்து சொல்லலாம். மலையக மக்களுக்கு… சுமந்திரன், ஒரு முத்தின பைத்தியம் என்று நன்கு தெரியும்.
  26. ராதாகிருஸ்ணன் ஏன் போக போறார்? அவர் என்ன லைனிலா வாழ்கிறார்? அவர் சம்பளம் என்ன 1000 மா? அந்த மக்கள் கொட்டடியில் மாய்ந்தால்தான், இவர் எம்பி இல்லாவிட்டால்? ஆகவே அவர் இப்படித்தான் பசப்பு வார்த்தை பேசுவார். நாங்களும் பதிலுக்கு நிகர்நிலை உதவி கரம் நீட்டினால் - எல்லாம் சுபம் 😂. இவர்களின் மலையக மக்கள் மீதான கரிசனையும், கருணாநிதியின் ஈழத்தமிழர் மீதான கரிசனையும் ஒரே வகை.
  27. ரத்த திலகம் வைத்த காலங்களில் கூட்டணி தலைவர்கள் உசுபேற்றும் வகையில் பேசுவார்கள் என கேள்விப்பட்டேன். டெமோ காட்டியமைக்கு நன்றி. இத்து போன ஈரோஸ், ஈபி யை தவிர, அவர்களும் பின்னர் இதை கைவிட்டு விட்டார்கள் - எவரும் எந்த காலத்திலும் மலையகம் தமிழர் தாயகம் என கோரியதே இல்லை. மலையகத்தை விட கொழும்பு மாவட்டத்தில் தமிழர் செறிவு அதிகம். அதற்காக கொழும்பு தமிழர் தாயகமா? இனவழி, மரபுபழி தாயாகம் என்பது சும்மா புல்டா போண்டா கதை அல்ல. எழுந்தமானமாக யாழில் வீரவசனம் எழுதுவதால் மட்டும் மலையகம் தமிழர் தாயகம் என ஆகிவிடாது. சக தமிழனை அடுத்த நூறு ஆண்டுக்கு லைன்களில் கட்டி வைத்து, சிங்கள மேலாண்மையின் ரத்த கூலிகளாக இருக்க வைக்கும் -வடக்கில் தமிழ் இனப்பரம்பல் குறைந்து போனாலும் பரவாயில்லை எனது ஆள் இல்லா காணியில் இன்னொரு தமிழனை (இன்னொரு சாதியை சார்ந்த யாழ்ப்பாண தமிழனை கூட) இருக்க விடேன் எனும் நவீன பொன்னம்பலங்கள் சமூகத்தில் இருந்தே ஒதுக்கி வைக்கப்பட வேண்டியவர்கள்.
  28. இப்படியான ஒரு கருத்து பொதுவாக எல்லோருக்கும் பொருந்தாது கலவரத்தால் பாதிக்கப்பட்டு பாடசாலை செல்லப்பயந்து உயிர் அச்சம் கருதி பெற்றோரால் கட்டாயமாக வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டவர்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றார்கள். அவர்கள் வந்தபோது ஜெர்மனி சென்றால் பாத் ரூம் கழுவலாம் பாரிஸ் சென்றால் தூசு தட்டலாம் இத்தாலி சென்றால் சாப்பாட்டு மேசை துடைக்கலாம் என்ற நினைப்பில் வரவில்லை ஒரு சில காலத்தில் திரும்பவும் நாட்டு நிலைமை சரி வந்துவிடும் 70 களில் ஜேவிபி ஐ அழித்தமாதிரி தமிழர்களின் போராட்டமும் அழிந்துவிடும் என்று நினைத்த பெற்றோர்களும் இருந்தார்கள் காலப்போக்கில் நிலைமையை உணர்ந்தவர்கள் தான் ஐரோப்பாவில் தங்களுக்கு கிடைத்த வேலைகளை செய்து பணம் ஈட்ட ஆரம்பித்தார்கள் இது என் அனுபவமும் கூட
  29. 🤣................... அவர்களே எஸ்ஐஆரின் பின்னே கோடிக் கணக்கிலோ அல்லது பல லட்சங்கள் கணக்கிலோ வாக்காளர்கள் காணாமல் போய் விட்டார்கள் என்று அவசரமாகத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். அதற்குப் பிறகு விஜய்யின் ஈரோடு கூட்டம், அடுத்த கட்டம் என்று அவர்கள் எல்லோருமே படு பிசி............... திருவண்ணாமலை தூண் சமணர் தூணா அல்லது ஒரு அளவையாளார் வைத்த தூணா அல்லது தொல்பொருளா என்றே தெரியாமல் குழம்பிப் போய், அவர்கள் ஒருவருடன் ஒருவர் மல்லுக்கட்டிக் கொண்டும் நிற்கின்றார்கள்.......... இதை விட பெரிய பிரச்சனை காங்கிரஸ் 60 சீட் கேட்பதும், பாஜக அதற்கு மேலே கேட்பதும்.................. வெறுமனே அறிக்கை விட்டுக் கொண்டிருந்தால் மட்டும் போதாது...........அப்பப்ப ஆக்சனிலும் இறங்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் போல ஒரு நிபுணர் சொல்லியிருப்பாரோ..............🤣.
  30. பெப் 07 தானே ஆரம்பம். கிறிஸ்மஸுக்கு முன்னர் கேள்விக்கொத்து தயாரிக்கலாம். மழையால்☔️ எத்தனை போட்டிகள் தடைப்படும் என்றும் ஒரு கேள்வி போடலாம்.🤣 20 பேர் வரை கலந்துகொண்டால்தான் சுவாரஸ்யம்😁
  31. தமிழ் நாடு அரசால் இந்த விடயத்தில் எந்த அழுத்தத்தையும் கொடுக்கும் அரசியல் சூழ்நிலை இப்போது இல்லை என்பதும், அதற்கான அரசியல் அதிகாரம் தமிழ்நாட்டு அரசுக்கு இல்லை என்பதும், அவ்வாறு அழுத்தம் கொடுப்பது இருக்கும் பிரச்சனைகளை இன்னும் சிக்கலாக்குமே தவிர உதவப் போவதில்லை என்பதும் பட்டறிவின் மூலம் ஸடாலினுக்கு நன்கு தெரிந்திருக்கும். ஆனால், இந்த லூசுகள் வந்து கேட்பதால் ஏதோ லூசுகளை திருப்திப்படுத்த அப்படி கூறியிருப்பார் என்று நினைகிறேன். நிச்சயமாக அப்படி அழுத்தம் கொடுக்கும் மகா முட்டாள்தனத்தை அவர் செய்ய மாட்டார் என்பது தெரிந்த விடயம். அரை லூசுகள் மட்டுமே அவர் அப்படி அழுத்தம் கொடுப்பார் என்பதை நம்புவார்கள்.
  32. குடும்பத்துக்குள்ளேயே ஏற்றத்தாழ்வு, தராதரம் பார்ப்பவர்கள் நிறைந்த மாவட்டம் யாழ்ப்பாண மாவட்டம். இதற்குள்தான் நானும் பிறந்து வளர்ந்தேன். குறியேறிகளுக்கு தேனீர் கொடுக்கவும் சிரட்டையை நாடுதே என்மனம்.🧐

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.