Leaderboard
-
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்9Points20186Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்7Points19368Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்5Points88402Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்4Points46894Posts
Popular Content
Showing content with the highest reputation on 01/06/26 in all areas
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
"முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026" இது வரை இந்த வேலைத்திட்டத்திற்கு ஆதரவு தர உறுதியளித்திருக்கும் உறவுகள் குமாரசாமி அண்ணா கோஷான் கவி அருணாசலம் அண்ணா ஏராளன் வாத்தியார் ஈழப்பிரியன் அண்ணா உதவி செய்ய விரும்பும் உறவுகள் விரும்பினால் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள் . பெயர் தெரிவிக்க விரும்பாதவர்கள் ஏராளனுடனோ அல்லது கோஷானுடனோ?(கோஷான் விரும்பும் பட்சத்தில் ) தனி மடல் மூலம் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்3 points
-
ஒரு கிலோ டூனா மீனின் விலை 11,413 யூரோக்கள்.
உலகின் பல நாடுகளில் நிலவும் சில பாரம்பரியங்கள் சில நேரங்களில் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு விசித்திரமான நம்பிக்கையே ஐப்பானியர்களிடையே காணப்படுகிறது. புத்தாண்டு தினத்தில் பிடிக்கப்படும் புளூபின் டூனா (Bluefin Tuna) மீன் அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அதனால் தான் ஆண்டின் தொடக்கத்தில் சந்தைக்கு வரும் அந்த டூனா மீன் ஏலத்தில் ஆச்சரியப்படவைக்கும் விலைக்கு விற்கப்படுகிறது. இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கு இல்லை. ஏலத்தில் விடப்பட்ட 243 கிலோ எடையுள்ள டூனா மீன், 2.8 மில்லியன் யூரோக்களுக்கு விற்கப்பட்டிருக்கின்றது. கணக்குப் போட்டுப் பார்த்தால், ஒரு கிலோ டூனாவின் விலை 11,413 யூரோக்கள். இவ்வளவு விலைக்கு அந்த மீன் தரமானதா, சுவையானதா என்றெல்லாம் பெரிதாக அவர்கள் ஆராய்ச்சிகள் செய்வதில்லை. “புதிய ஆண்டு நல்லதைத் தர வேண்டும்” என்ற ஒரு நம்பிக்கையே எல்லாவற்றையும் மீறி அவர்களிடம் இருக்கிறது. அந்த நம்பிக்கையே பணமாக மாறுகிறது. மக்களின் நம்பிக்கையை வியாபாரமாக மாற்றிக் கொள்ளும் சந்தையின் தந்திரம் இதுதான் போலும். சில நேரங்களில் பாரம்பரியம், நம்பிக்கை, வியாபாரம் மூன்றும் ஒன்றாகக் கலந்தால் உருவாகும் அதிர்ஷ்டம் இதுதான். https://edition.cnn.com/2026/01/05/travel/japan-bluefin-tuna-record-auction-intl-hnk2 points
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
நானும் அப்பப்ப செய்வேன். ஓய்வூதியத்தில் வாழ்வதால் எல்லாமே திட்டமிட்டே செலவு.2 points
-
கருத்து படங்கள்
2 points2 points
- ரஷ்ய முதலீட்டாளர்கள் வடக்கில் முதலீடு செய்வதற்கு ஊக்குவியுங்கள் - ரஷ்ய தூதுவரிடம் வடக்கு ஆளுநர் கோரிக்கை
இல்லை சுவை அப்படி எதுவும் நினைப்பதில்லை. நானும் வருடாவருடம் ஊருக்கு போய் வருகிறேன். 35 மணிநேரம் தொடர்ந்து பயணம் செய்ய எனக்கும் ரொம்ப கஸ்டமாகவே உள்ளது. பலாலியில் போய் இறங்கினால் எனக்கும் சந்தோசமே.2 points- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
பூரணப்படுத்த எவ்வளவு பணம் வேண்டும் என்பதை வட்ஸ் அப்பில் எழுதி விடவும். உங்கள் கருத்து சரியானதே. இருந்தாலும் சில இடங்களில் தனி நபர்களுக்கு நேரடியாக உதவி செய்யப்போய் ஏமாற்றப்பட்டதுதான் மிச்சம். அடிப்படை உதவிகள் செய்ய வெளிக்கிட்டு கடைசியில் தேவையில்லாத தேவைகளுக்கும் பணம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.அதில் எனது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தை வைத்து செய்யக்கூடாத வேலைகள் எல்லாம் செய்ய ஆரம்பித்தார்கள். இதற்காகவே நம்பிக்கையான ஏராளனையும் அவரது புலர் நிறுவனத்தையும் தேர்வு செய்தேன். இப்போதும் சொல்கிறேன் தனி நபர்கள் வங்கி இலக்கத்திற்கு நான் நேரடியாக பணம் அனுப்புவதாயின்.....அதற்கு என் உடன்பாடு இல்லை.2 points- மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும்
முதலீடு என்றால் பார் திறப்பதுதானே ?2 points- யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
நன்றி அண்ணை. எனக்கு சம்பளம் தர விரும்பினால் அதனை புலர் அறக்கட்டளைக்கு உங்கள் நன்கொடையாக தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். (உண்மையில் சேவைக்கு ஊதியம் தேவையில்லை அண்ணை) என்னை இப்பணியில் ஈடுபட கேட்பது எனக்கு மிக மகிழ்ச்சி தருவது. ஏனெனில் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நான் இந்தப்பணிகளுக்காக வெளியே பயணிப்பதில் அளவிட முடியாத மகிழ்வடைவேன். புதிய மூன்று சக்கர வாகனம் ஒன்றும் எனது கனடிய நண்பர் வாங்கித்தந்துள்ளார். ஒரே ஒரு பிரச்சனை நினைத்தவுடன் புறப்பட முடியாது. இன்னொருவர் வந்து வாகனத்தில் ஏற்றிவிடவேண்டும், முன்னர் தந்தையார் ஏற்றி விடுவார். உதவிக்கு வருபவர் பின்னேரம் தான் வருவார். இவையெல்லாவற்றையும் தாண்டி பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு உதவுவதில் ஆத்ம திருப்தி அடைகிறேன்.2 points- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
கீழ்கண்ட திரியில் ஆலோசித்து ஏற்று கொண்ட வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான திரி. பிகு இதை கேணல் சங்கர் ஞாபகார்த்த அடிப்படை வசதி திட்டம் என பெயர் சூட்ட விரும்புகிறேன்ழ் புலத்தில் மிகபெரிய வசதி வாய்ப்பை உதவி விட்டு நாடு திரும்பிய முதலாவது வான்படை சிறப்புத்தளபதி கேணல் சங்கர் பெயரலால் இதை செய்வதில் அனைவரும் உடன்படுவீர்கள் என நம்புகிறேன். மாற்று கருத்து இருப்பின் தெரியப்படுத்தவும்.1 point- "எங்கள் பேத்தி ஜெயாவின் பிறந்தநாள் இன்று!" (ஜனவரி 6, 2026)
"எங்கள் பேத்தி ஜெயாவின் பிறந்தநாள் இன்று!" (ஜனவரி 6, 2026) ஒன்பது ஆண்டுகளுக்கு முன் - ஒரு பெயர் மீண்டும் குழந்தையாய் - மண்ணில் பிறந்தது! விடியலைப் போல - அது மென்மையாக நினைவுகளைப் போல - உறுதியாக மலர்ந்தது! ஒரு வாழ்க்கை அன்று - சுமந்த பெயர் அது அன்பின் - சாட்சியான பெயர்! பாட்டியின் அமைதியான - வலிமையும் அழகும் இன்று உன் பெயராக - மெல்லத் திகழ்கிறது! பனிமூடிய கனடா வானின் - கீழ் பிறந்தாய் மேப்பிள் இலைகளின் - நிழலில் வளர்ந்தாய்! ஆனாலும் உன் பெயர் - ஒளி மிக்க முற்றங்களையும் யாழ்மண்ணின் வாசனையையும் - நினைவு கூருகிறது! ஜெயா எனறால் - ஒரு வெற்றி கேள்வி கேட்கும் - ஒரு துணிவு மகிழ்வு கொட்டும் - ஒரு புன்னகை எதிர்பார்ப்பு இல்லாத - ஒரு அன்பு! ஒன்பது வயதில் - இன்று நீ குழந்தைப் பருவத்திற்கும் - மாறுதலுக்கும் இடையில்! இரண்டு உலகங்களுக்கு - இடையில் நீ நேற்றைய நினைவுகளுக்கும் - நாளைய கனவுகளுக்கும் இடையில்! உன் பாட்டி - மறைந்து விடவில்லை உன் கண்களின் - அமைதியில் வாழ்கிறாள் உன் புன்னகையின் - பொறுமையில் வாழ்கிறாள் நீ அறியாமலே காட்டும் - மரியாதையில் வாழ்கிறாள்! கல்வி என்றும் - உன் நாள்களை நிரப்பட்டும் பாதுகாப்பான கனவுகள் - இரவுகளை அலங்கரிக்கட்டும் கத்தாமல் நிலைக்கும் துணிவு - மனத்தில் வேரூன்றட்டும் பெண்ணின் பெருமையை - உன் வாழ்வு சொல்லட்டும்! ஓட்டாவா உனக்கு - இறக்கைகள் தரட்டும் குடும்பம் உனக்கு - வேர்கள் ஆகட்டும்! உன் பெயர் - எப்போதும் சொல்லட்டும் நீ வந்தது - மங்காத அன்பிலிருந்து என்று! இனிய 9ஆம் பிறந்தநாள் - வாழ்த்துகள் ஜெயா! நீ எதிர்காலத்தில் - நினைவுகூரப் படுபவள் இன்றே அளவில்லாமல் - நேசிக்கப் படுபவள் என்றும் எங்கள்வீட்டின் - தேவதை ஆனவள்! தாத்தா: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் “Today we celebrate our granddaughter’s birthday!” (January 6, 2026) Nine years ago, a name returned as a child, soft as dawn, strong as memory. You were given a name that once held a life, a love, a grandmother’s quiet strength— now carried gently by you. Born under Canadian skies, raised among snow and maple leaves, yet your name remembers sunlit courtyards, warm hands, and stories whispered in another land. Jeya— a word that means victory, but your victories are small and bright: The courage to ask a question, a fearless laugh, a kindness offered without being asked. At nine, you stand between worlds— between childhood and becoming, between yesterday’s memories and tomorrow’s dreams. Your grandmother is not absent; she lives in the calm of your eyes, in the patience of your smile, in the grace you show without knowing why. May your days be filled with learning, your nights with safe dreams, your heart with courage that does not shout, but endures. May Ottawa give you wings, may family give you roots, and may your name remind you always that you come from love that does not fade. Happy 9th Birthday, dear Jeya. You are remembered forward, and loved without measure. Granddad: Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna "எங்கள் பேத்தி ஜெயாவின் பிறந்தநாள் இன்று!" (ஜனவரி 6, 2026) https://www.facebook.com/kandiah.thillaivinayagalingam/posts/pfbid02JWaoQvka6tVZKxvLzcLtQsEeRnFfJDufSF9YTedzmt6wKAeqx4gKMRbcrfn2pCSYl?1 point- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
செலன்ஸ்கி தன் இனத்துக்காக போராடுவதால் அவர் எனக்கு கதாநாயகந்தான். ஆனால் உங்களை போல் நான் தனிமனித வணங்கி அல்ல. ஆகவே செலன்ஸ்கி பிழை விட்டால் அதை நான் சரி என வாதிடுவதில்லை. ஆனால் நீங்கள் செலன்ஸ்கி சொன்னதை மிக தவறாக சித்தரிக்கிறீர்கள் (வேண்டும் என்றே ?) செலன்ஸ்கி சொன்னது - சர்வாதிகாரிகளை இவ்வாறு அகற்ற முடியும் என்றால் மொஸ்கோவுக்குதான் முதலில் போக வேண்டும் என. அதில் வெனிசுவேலாவில் நடந்ததை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. ஆனால் - மிக இக்கட்டான நிலையில் தன் இனமும் நாடும் இருக்கும் போது, அமெரிகாவின் தயவில் தங்கி இருக்கும் நிலையில், இப்படி ஒரு கேள்வியை இவ்வளவு ராஜதந்திரமாக கையாண்ட கோமாளி செலன்ஸ்கி பெரிதாக போற்றபடும் பல தலைவர்களை விட இராஜ்தந்திரத்தில் ஒரு படி மேலே என்பது வெள்ளிடமலை. அடுத்து - உக்ரேனின் எதிரி வெனிசுவேலா. ரஸ்யாவின் உக்ரேன் மீதான அத்தனை அத்துமீறலையிம் ஏற்று கொண்டு, ரஸ்யாவோடு ந்ல்லுறவை பேணும் நாடு - அவர்களுக்காக அழும் நிலையில் செலன்ஸ்கி இல்லை.1 point- தாலிக்கொடியை யுவதியிடம் இழந்த யாழ் வங்கி ஊழியர்
அதுசரி களவா உல்லாசம் , சல்லாபம், டண்டணக்கா அனுபவிக்க போனவர் எதுக்கு மனைவியின் 9 பவுன் தாலிக்கொடியை கொண்டு போனார். சைத்தாங்கே பச்சி!!!1 point- தாலிக்கொடியை யுவதியிடம் இழந்த யாழ் வங்கி ஊழியர்
யுவதி உழைப்புக்கு ஊதியம் எடுத்துக் கொண்டு போயிருக்கிறா. விசயத்தை அப்பிடியே அமுக்கி இருக்கலாம். இப்ப கொடியும் போச்சு மானமும் போச்சு.1 point- யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
இதில் அனைவரும் ஒன்று சேர்ந்து உதவ வேண்டும் என்பது எனது விருப்பம் ..சோ..முடிந்தவர்கள் யாயினி பாக்கிற வேலை பாருங்களன் என்று மனதுக்குள் தன்னும் திட்டாமல் பங்காளிகளாக மாறுவீர்கள் என்று நம்புறன்.மாதந்தம் கொண்டாங்களுக்கு மொய் எழுதிறதில் கொஞ்சம், சுற்றுலாக்களுக்கு ரிக்கற் போடுவதில் கொஞ்சம்,உணவங்களுக்கு போறதில் கொஞ்சம் ,புத்தகங்களுக்கு போறதில் கொஞ்சம் ,இப்படி நிறைய செலவுகளிலிருந்து சிறிதளவு எங்கள் மக்களுக்காகவும் ஒதுக்குவோமே..✍🤭1 point- நாம் பெற்றோர்களாக தோல்வியுறுகிறோமா? டிஜிட்டல் காலத்தில் பெற்றோர் பங்கு — உளவியல் நிபுணர் டாக்டர் சரண்யா ஜெயக்குமார் விளக்கம்
1 point- மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும்
1 point- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
குமாரசாமி, உங்களது ஆதங்கம் நியாயமானதே. எனக்கும் இவ்வாறான அனுபவங்கள் இருக்கின்றன. எங்கள் இருவருக்கும் இருக்கும் இந்தப் பிரச்சினை பலருக்கும் இருக்கும். தனியாளாக உதவி செய்ய முன்வரும் போது இந்தச் சிக்கல் கண்டிப்பாக எவரும் எதிர்நோக்க வேண்டி வரும். இதில் யாரையும் குறை சொல்ல முடியாது. அங்கே அவர்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள் அதிகம். முன்னோடி, ஒரு உதவி நிறுவனமாக செயற்பட ஆரம்பிக்கும் போது, அதற்கான தனி வங்கிக் கணக்கு இருக்கும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. முன்னோடியின் செயற்பாடுகள் பற்றி அதன் செயற்பாட்டாளர்கள் விரைவில் அறிவிப்பார்கள். காத்திருப்போம்.1 point- ரஷ்ய முதலீட்டாளர்கள் வடக்கில் முதலீடு செய்வதற்கு ஊக்குவியுங்கள் - ரஷ்ய தூதுவரிடம் வடக்கு ஆளுநர் கோரிக்கை
Choose your preferred flight from Chennai to Jaffna MAAJAF Tue, 06 Jan -- Non-stop Low cost first Day departures Fly Your Way Select your preferred cabin & seats. Stretch | Business Economy 6E 1177 10:30 MAA, T2 01h 15m Non-stop 11:45 JAF Filling Fast Starts at ₹11,319 + Earn 1,058 IndiGo BluChips Fare Types Know more Baggage Change/cancellation Add-ons and services Saver fare ₹11,319 + Earn 1,058 IndiGo BluChips 7 kg Cabin bag allowance 15 kg Check-in bag allowance Change charges upto INR 5999 Cancellation charges upto INR 10000 Flexi plus fare ₹12,264 + Earn 1,166 IndiGo BluChips 7 kg Cabin bag allowance 15 kg Check-in bag allowance Change charges upto INR 1999 Cancellation charges upto INR 8024 Complimentary meal Complimentary standard seat Super 6E fare ₹15,519 + Earn 1,538 IndiGo BluChips 7 kg Cabin bag allowance 20 kg Check-in bag allowance Change charges upto INR 649 Cancellation charges upto INR 2999 Complimentary meal Complimentary XL (Extra legroom) Seat Click here to know more about flight இந்த பாதையால் செல்லலாம்தானே ? அவர்களுடன் தொலைபேசியில் / ஈமையிலில் பேசினால் ஒரு கடடனத்துடன் இன்னும் ஒரு பொதி கொண்டு போக முடியும் என்று நம்புகிறேன். கொழும்பு ( மாலைதீவு) விமானநிலையம் அண்ணளவாக $120 டாலர்கள் வரி விதிக்கிறார்கள். எப்போதும் சென்னையில் இருந்து அல்லது வேறு இந்திய விமானநிலையத்தில் இருந்து டிக்கெட் குறைந்த விலையிலேயே கிடைக்கும். டிக்கெட்டும் மலிவாக கிடைக்கும் என்றே எண்ணுகிறேன்.1 point- விடுதலைப் புலிகள் மருத்துவ அணியின் சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம்!
முடிவுவரை தொய்வில்லாமல் அலட்டாமல் சிறப்பாக எடுத்துள்ளார்கள்🙏🙏🙏1 point- தையிட்டி விகாரைக்கெதிராக போராடியவா்களுக்கு சொந்தப் பிணை
இது நடப்பது நீங்கள் ஆதரிக்கும் அநுரவின் அரசில்த்தானே?1 point- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
இதுகுறித்த எனது அவதானிப்பை இங்கே பதிகிறேன். உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பினை எதிர்த்து நான் எழுதிய கருத்துக்களுக்கு குமாரசாமி தனது கருத்துக்களை முன்வைத்து வந்தார். அவ்வாறான வாதத்தில் ரஸ்ஸியா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக உக்ரேனை ஆக்கிரமிப்பது நியாயமானதுதான் என்று எழுதினார். பின்னர் ஒருபடி மேலே சென்று இந்தியா தனது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு தமிழ் மக்களின் போராட்டத்தினை அழித்ததையும் தன்னால் புரிந்துகொள்ளமுடியும் என்று கூறி உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் பலவந்த ஆக்கிரமிப்பினை நியாயப்படுத்துவதற்கான உசாத்துணையாகப் பாவித்திருந்தார். இதற்காக நான் அவரைக் கடிந்துகொண்டபோதும் இன்றுவரை அவர் இக்கருத்தினை மீளப்பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இந்தியாவின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த தான் சேர்ந்த இனமான தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்டது நியாயமானதுதான் என்று கருதும் ஒருவர், எம்முடன் சம்பந்தப்படாத உக்ரேன் எனும் நாட்டின் இருப்பைத் தியாகம் செய்து, தான் போஷிக்கும் சோசலிஸ ரஸ்ஸியாவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் என்று விரும்புவதை என்னால் புரிந்துகொள்ள முடியும்.1 point- மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும்
சாத்தான் வேதம் ஓதுகிறது.1 point- "எங்கள் பேத்தி ஜெயாவின் பிறந்தநாள் இன்று!" (ஜனவரி 6, 2026)
தில்லை உங்கள் பேத்தியின் பிறந்தநாளை உங்களுடன் சேர்ந்து நாங்களும் கொண்டாடுகிறோம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயா.1 point- மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும்
நான் குடித்ததில்லை. ஆனால் குடிக்கு எதிரானவனும் அல்ல. ஆனால் திட்டமிட்ட இன ஒழிப்பின் ஒரு அங்கமாக, வகை தொகையின்றி எமது பகுதியில் பார்கள் திறந்து விடப்பட்டுள்ள நிலையில்… ஊரில் போதை கலாச்சாரம் பற்றியும் அதன் தாக்கம் பற்றியும் இந்த யாழில் எத்தனை அருமையான பதிவுகள், திரிகள்…. அத்தனைக்கும் பிறகும்….மக்கள் நலன் பேண வேண்டிய ஒரு எம்பி….. கள்ள கொமிசனுக்க்காக பார் லைசன்ஸ் வாங்கி கொடுத்து விட்டு…. பிடிபட்டு விடுவோம் என பயந்து ஆனுர அரசு சொல்லும் சகல விடயத்துக்கும் ஒரு பணய கைதி போல் ஓம்படுகிறார்… இந்த கள்ளனுக்கு வக்காலத்து வாங்கவும் சிலர்🤦♂️.1 point- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
இதுதான் (புட்டின் காதலால்) ஏற்பட்டுள்ள பச்சை இரெட்டைதன்மை. அமெரிக்கா உக்ரேன் ஒப்பந்தத்தின் போது நீங்கள்தான் உக்ரேனில் வளமுள்ளது அதை அமெரிக்கா சுரண்டுகிறது என எழுதினீர்கள். ஆனால் அதையே ரஸ்யா செய்தால் - அது வளக்கொள்கை அல்ல, பாதுகாப்பு 😂. இதையேதான் டிரம்பும் சொல்கிறார். எண்ணை என்பது அமெரிக்காவின் பொருளாதார-பாதுகாப்பு சம்பந்தபட்டது என்று. இங்கே உக்ரேனை ஆதரித்த எவரும், வெனிசுவேலா மேலான அமெரிக்க தாக்குதலை ஆதரிக்கவில்லை. மாறாக கடுமையாக கண்டித்துள்ளனர். ஆனால் நீங்கள் ? புட்டினுக்கு ஆலவட்டம் பிடிப்பதற்க்காக… இலங்கையில் இந்தியா நடந்து கொண்டவிதம் சரி என எழுதும் அளவுக்கு போனவர். யார் நடு ரோட்டில் நிற்கிறார்கள்… யார் சொந்த இனத்தின் போராட்டத்தை கூட புட்டினுக்காக கொச்சை படுத்தி விட்டு நடுரோட்டில் மகாராஜாவின் உடையோடு பவனி வருகிறார்கள் என்பதை களம் அறியும். இதுவும் தனிமனித தாக்குதல் அல்ல.1 point- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
@ரதன் அமெரிக்கா மனிதன் ஒருவன் நிலவில் கால் பதித்தது என்பதை ரதனும் நம்பவில்லை 😂1 point- நான்காவது கொலை - கருணாகரன்
1 pointநான்காவது கொலை - கருணாகரன் ‘உங்களுடைய பொருளை நேரில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று அன்பான அழைப்பில் ஒரு கடிதம் சுங்கப் பகுதியிலிருந்து வந்திருந்தது. இலங்கையின் சுங்கப் பகுதியிலிருந்து இப்படி ஒரு அன்பான கடிதம், தமிழ் எழுத்தாளருக்கு வருவதாக இருந்தால், அந்தக் கடிதத்தின் எடையை நீங்கள் கற்பனை செய்தே பார்க்க முடியாது. தலையிலும் மனதிலும் சட்டென அந்தப் பாரம் ஏறி விடும். ‘அப்படியென்ன பெரிய பாரம்?’ என்று நீங்கள் கேட்கலாம். இந்தக் கேள்விக்கான பதிலை நான் சொல்வதையும் விட, நீங்களும் என்னோடு வந்தால் அதை அறிந்து விடலாம். நாங்கள் அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு சுங்கப் பகுதிக்குச் செல்கிறோம். பொதிகள் பரிசீலனைப் பிரிவிலுள்ள வாடிக்கையாளர் இருக்கையில் ஐந்தாறுபேர் மட்டுமே இருக்கிறார்கள். நல்லவேளை, இன்று கூட்டம் அதிகமில்லை. சிலவேளை நிறையபேர் காத்திருப்பார்கள். கூட்டம் இல்லை என்பது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. எதிர்பார்த்தபடியே அரை மணி நேரத்துள் கட்டண உத்தியோகத்தரைச் சந்திக்க முடிகிறது. கடிதத்தைக் கொடுக்கிறோம். அவர், கடிதத்தை வாங்கிப் பார்த்து விட்டு உதவியாளரை அழைத்து, அவரிடம் கொடுக்கிறார். உதவியாளர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த பொதி இலக்கத்தைச் சரிபார்த்து, பொதியை எடுத்து வருகிறார். ஏற்கனவே பொதி பிரிக்கப்பட்டிருக்கிறது. இது எதிர்பார்க்கப்பட்டதே. அதிகாரியின் முன்னே உள்ள மேசையில் பொதியிலிருந்து பொருட்களை எடுத்து வைக்கிறார், உதவியாளர். நாங்கள் அதிகாரியைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஐந்து புத்தகங்கள். கவிதை நூல் ஒன்று. நாவல் ஒன்று. படுகொலைகளைக் குறித்த நூலில் மூன்று பிரதிகள். அவற்றோடு, ஏதோ எழுதி வைக்கப்பட்ட ஒரு தாள். அநேகமாக அந்தப் பொதியைப் பற்றிய குறிப்பாக இருக்கலாம். புத்தகங்களைப் பார்த்த கட்டண உத்தியோகத்தர், மொழிபெயர்ப்பாளரை அழைத்து வருமாறு உதவியாளரிடம் பணிக்கிறார். அதற்கிடையில் அந்தத் தாளை எடுத்து கவனமாகப் படிக்கிறார், புருவங்கள் சுருங்குகின்றன. மொழிபெயர்ப்பாளர் வந்து புத்தகங்களை எடுத்து கையில் வைத்து கொண்டு எங்களிடம் சொல்கிறார், “இந்தப் புத்தகங்களில் கொலைகளைப் பற்றியெல்லாம் எழுதப்பட்டிருக்கு” அவருடைய குரலில் அதிகாரத்தின் வெம்மை புலப்படுகிறது. நாங்கள் ஒருவரை ஒருவர் பார்க்கிறோம். அப்படியே அதிகாரியையும் மொழிபெயர்ப்பாளரையும் பார்க்கிறோம். அவர்களும் எங்களைக் கூர்ந்து பார்க்கிறார்கள். இதொன்றும் வியப்பான சங்கதி இல்லை என்று எங்களுக்குத் தெரியும். ஏற்கனவே இந்த மாதிரி பல சந்தர்ப்பங்களில் பல புத்தகங்கள் தடுத்தாட்கொள்ளப்பட்டன. சிலவற்றை வாதிட்டு மீட்டிருக்கிறோம். சில கடல் கொண்டதைப்போல கைவிடப்பட்டன. பாதுகாப்பு அமைச்சு என்பது இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் ஆழக்கடல்தான். ‘தாழ்வதும் மீள்வதும் அதன் அருளாலே’ என்று ராகவன் பகடியாகச் சொல்வார். ‘அதன்’ என்று அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்று எல்லோருக்கும் தெரியும். பாதுகாப்புத்துறையின் தங்க மூளை. நான் வலிந்து, மெல்லிதாகச் சிரிக்கிறேன். ‘இதெல்லாம் எங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். இப்படித்தான் நடக்கும் என்று அறிவோம். இதைத்தானே எப்போதும் செய்து கொண்டிருக்கிறீர்கள்?’என்ற மாதிரி அவருக்கு அந்தச் சிரிப்புச் சொல்லியிருக்க வேணும். “ஆகவே, உங்களிடம் இவற்றை நாங்கள் தர முடியாது. இதை நாங்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்புவோம். அங்கிருந்து பதில் கிடைக்கும்போது உங்களுக்குத் தகவல் தருவோம்” என்கிறார் மொழிபெயர்ப்பாளர். அதற்கும் சிரிக்கிறேன். இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் சிரிப்பு ஒரு ஆயுதம். சில நேரங்களில் அது பலமான கேள்விகளின் குறியீடாகும். “கொலைகள் நடந்தால், அதைப் பற்றி எழுதாமல் வேறு எதைப்பற்றி எழுதுவது?” கேட்கிறேன். அவர் பதிலளிக்கவில்லை. அதிகாரியின் முகத்தில் இறுக்கம் கூடுகிறது. பொருட்படுத்தாத மாதிரி, அவர் ஒரு படிவத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறார். எழுதுவதை நிறுத்தி விட்டுத் தலையை நிமிர்த்தி, எங்களைப் பார்த்துக் கொண்டு சொல்கிறார், “எங்களை நீங்கள் கோவித்துக் கொள்ளக் கூடாது. எங்களுடைய கடமையைச் செய்கிறோம். அதைத்தான் நாங்கள் செய்ய முடியும்” இந்தப் பொன்னான வார்த்தைகளைக் கேட்க உண்மையிலேயே எனக்குப் பெரிதாகச் சிரிப்பு வந்து வந்து விடுகிறது. அவர் ஒரு மாதிரியாக என்னைப் பார்க்கிறார். அந்தப் பார்வையில் தன்னை இளக்காரமாக எண்ணித்தான் சிரிக்கிறேனா? என்றொரு எண்ணம் ஓடியதாகப் பட்டிருக்க வேணும். முகத்தில் அசடு வழிகிறது. அவரை மேலும் குழப்பாமல், ”இங்கே கொலைகள் நடந்ததால், அதைப் பற்றி எழுதப்பட்டிருக்கு. அதற்கான ஆதாரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. புத்தகத்தை நன்றாகப் படித்துப் பாருங்கள். அப்பொழுது உங்களுடைய இதயம் என்ன சொல்ல விரும்புகிறதோ அதைச் சொல்லுங்கள்…” என்கிறேன். “மன்னிக்க வேணும். இதைப்பற்றி நீங்கள் எங்களோடு பேசுவதால் பயனில்லை. எங்களுக்குப் பணிக்கப்பட்டதைத்தான் நாங்கள் செய்ய முடியும்” மீண்டும் அதே பதிலைச் சொல்கிறார் அவர். மேலே ஏதோ நிழலாட, நான் அண்ணாந்து பார்க்கிறேன், ஒரு சிறிய குருவி அங்குள்ள கண்காணிப்புக் காமிராவின் மேலே வந்து அமர்கிறது. “இது, இந்தக் கொலைகள் நடந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இப்பொழுது ஒரு புதிய ஆட்சி வந்திருக்கு. நாட்டில் மாற்றங்களும் நீதி வழங்கல்களும் நிகழ்த்தப்படும் என்று சொல்லப்படுகிறது. அதனால், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான நீதிக்காக இந்தக் குரலை இங்கே முன்வைத்திருக்கிறார்கள். இது அவசியமல்லவா! இதில் என்ன தவறிருக்கு?“ எனக் கேட்கிறேன். அவருக்கு ஒரு மாதிரி ஆகி விடுகிறது. “ஆம், நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால், எங்களால் என்னதான் செய்ய முடியும்? நாங்கள் அரச உத்தியோகத்தர்கள். அரசாங்கத்தின் உத்தரவையும் கட்டளையையும்தான் நிறைவேற்ற முடியும். எங்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலின்படி இப்படியான புத்தகங்களோ, பொருட்களோ வந்தால், அதை நாங்கள் படைத்துறைக்குத்தான் (Military of Defence) பாரப்படுத்த வேண்டும். அவர்கள்தான் இதைப் பற்றிய இறுதி முடிவைச் சொல்ல வேணும். இல்லையென்றால் என்மீதுதான் கேள்விகள் வரும். நான்தான் அதற்கான பதிலைச் சொல்ல வேண்டியிருக்கும். இதற்குத் தனியே முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. நீங்கள் சொல்வதைப் போல, ஆட்சியாளர்கள் மாறியிருக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால், கட்டளைகள் – உத்தரவுகள் எதுவும் மாறவில்லையே!“ இதற்கு மேல் தன்னால் என்ன செய்ய முடியும் என்பது போல, ஒரு பரிதாபகரமான தோற்றத்தைக் காண்பிக்கிறார். உங்களுக்குச் சிரிப்பு வருகிறது. ஆனாலும் அந்தச் சூழலில் சிரமப்பட்டு உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்கு முயற்சிக்கிறீர்கள். “அரசாங்கம், பல அறிவிப்புகளைச் செய்திருக்கு. படைகளை விலக்குவதாக. ஜனநாயகத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாப்பதாக. (நாற்பத்தைந்து வயதுடைய பயங்கரவாதச் சட்டத்தைப் பற்றி அப்பொழுது உங்களுக்கு நினைவுக்கு வருகிறது). போராளிகள் புதைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களில் நிலைகொண்டிருக்கும் படையினர் கூட விலக்கப்படுவார்கள்… என்றெல்லாம். ஆனால், நீங்களோ இந்தச் சாதாரண புத்தகங்களையே தர மாட்டோம் என்று தடுத்து வைத்திருக்கிறீர்கள்… இது எவ்வளவு அநியாயம்?” என்று அப்பாவித்தனமாகக் கேட்பதைப் போல கேட்கிறேன். “ஐயா, நீங்கள் பேசுவது அரசியல். நாங்கள் இங்கே செய்வது நிர்வாகம். நான் அரசாங்கத்தின் உத்தரவைத்தான் செய்ய முடியும். என்னை மன்னித்து விடுங்கள். நான் ஒரு சிங்கள அதிகாரி. முன்பு இப்படி இங்கே, யாழ்ப்பாணத்தில் வந்து என்னைப் போன்ற ஆட்கள் வேலை செய்ய முடியாது. எனக்கும் யாழ்ப்பாணத்தில் நடந்த அநீதிகள் எல்லாம் கவலையைத்தான் தருகின்றன. இந்த நூலகம் (யாழ்ப்பாண நூலகம் இருந்த திசையைச் சுட்டி) எரிக்கப்பட்டதும் இங்கே உள்ள மக்கள் சிரமப்பட்டதும் எல்லாம் வேதனையே. ஆனால், நாங்கள் சமாதானமாக – சந்தோசமாக இருப்போம்… நீங்கள் இந்தப் படிவத்தில் கையெழுத்து இடுங்கள். நாங்கள் இந்தப் புத்தகங்களைப் பாதுகாப்பு அமைச்சுக்கு (MOD) அனுப்புகிறோம். அங்கிருந்து பதில் வந்ததும் உங்களுக்குத் தகவல் சொல்கிறோம்…” நீங்கள் இப்பொழுது அண்ணாந்து அந்தப் பணிமனையின் கூரையைப் பார்த்து சற்றுச் சத்தமாகவே சிரித்து விடுகிறீர்கள். அதிகாரி சற்றுக் கலவரமடைந்தது போல தெரிகிறது. வியப்புடன் எங்களைப் பார்க்கிறார். “அப்படியென்றால் அரசாங்கத்தரப்பினரால் சொல்லப்படுகின்ற மாற்றங்கள் எதுவுமே நடக்கவில்லையா?” என்று கேட்டுவிடுகிறீர்கள். “ப்ளீஸ்.. இதற்கு மேல் என்னை எதுவும் கேட்காதீர்கள். அதுதான் நான் சொன்னேன், நான் ஒரு சாதாரண உத்தியோகத்தன் என்று. நான் எதையும் தீர்மானிக்க முடியாது. அரசியல்வாதிகள் அப்படித்தான் சொல்வார்கள். அவர்கள் அதையெல்லாம் எங்களுக்கு எழுத்தில் – உத்தரவாகத் தந்தால் நாங்கள் அதை உங்களுக்குச் சேவையாகச் செய்வோம்.. இதற்கு மேல் என்னால் எதுவும் சொல்ல முடியாது… ஏனென்றால், என் மீதான உத்தியோக பூர்வமான கேள்விகளுக்கு நான்தான் பதில் சொல்ல வேண்டும். எந்தத் தலைவர்களும் அதைச் சொல்ல வர மாட்டார்கள்…” என்று எழுந்து விட்டார். அவருடைய முகத்தில் மெல்லிய சினம் நிழலாக ஆடியது. “நீங்கள் ஒற்றுமை பற்றி பேசுகிறீர்கள்? யாழ்ப்பாணத்தில் வேலை செய்வதில் மகிழ்ச்சி என்று சொல்கிறீர்கள். ஆனால் இந்த ஐந்து சாதாரண புத்தகங்களையே தடுத்து வைத்துக் கொண்டு, எப்படி நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும்? இந்த மாதிரி செயல்களால், எப்படி எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கப் போகிறீர்கள்?” அதிகாரி குழப்பமடைந்து விடுகிறார். “மறுபடியும் சொல்கிறேன், நான்… நான் ஒரு சாதாரண அதிகாரி. நான் விதிகளைப் பின்பற்றுகிறேன்” “விதிகள்? இது சட்டபூர்வமாக தடை செய்யப்பட்ட புத்தகம் அல்ல! இது ஒரு வரலாற்று ஆராய்ச்சி. நடந்த சம்பவங்களைப் பற்றிய ஆதாரபூர்வமான குரல். இது உண்மையைப் பதிவு செய்கிறது. நாம் நமக்கு முன்னே உள்ள இடைவெளிகளை நிரப்பாமல், ஒற்றுமைக்கான பாலத்தை நிர்மாணிக்க முடியுமா? ஆனால், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும், ஏனென்றால் நீங்கள் இந்த அமைப்பின் பாதுகாப்பில் இருக்கிறீர்கள். நீங்கள், எங்களுடைய குரல்களைக் கட்டுப்படுத்தும்போது, எப்படி நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும்?” அதிகாரி சில நொடிகள் மௌனமாக இருக்கிறார். அவர் தனது கைகளை விரித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆழ்ந்த யோசனை. “நான்… என்னால் என்ன செய்ய முடியும்? நான் ஒரு சிறிய கடிகாரத்தின் பல். அவ்வளவுதான்” “ஆமாம், நீங்கள் ஒரு கடிகாரத்தின் பல்தான். ஆனால் ஒவ்வொரு பல்லும் முழு கடிகாரத்தின் செயல்பாட்டிற்கு அவசியம். நீங்கள் இல்லாமல், இந்த அடக்குமுறை இயந்திரம் செயல்படாது. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும், ஆனால் உங்கள் மகிழ்ச்சி, எங்கள் வலியின் மீதல்லவா கட்டப்பட்டுள்ளது” மின்விசிறியின் சத்தம் அறையில் முழுதாக நிரம்பிக்கிடக்கிறது. அதைத் தவிர சில நொடிகள் அங்கே வேறு எந்த ஒலிகளும் இருக்கவில்லை. மெதுவாக, ஆனால் கூர்மையாக அவருக்குச் சொல்கிறேன், “நீங்கள் ஒற்றுமையைப் பற்றிப் பேசுகிறீர்கள்? யாழ்ப்பாணத்தில் வேலை செய்வதில் மகிழ்ச்சி என்று சொல்கிறீர்கள்?” அதிகாரி தலையை உயர்த்துகிறார். “ஆம்…” “இப்படியான செயல்களால் எங்களுக்கு எப்படி மகிழ்ச்சியை அளிக்கப் போகிறீர்கள்?” அதிகாரி திணறுகிறார். “நான்… நாங்கள் விதிகளைப் பின்பற்றுகிறோம். ஒற்றுமைக்காக…” “ஒற்றுமை என்பது பாலம் கட்டுவது. இந்தப் புத்தகங்கள் அதற்கான இடைவெளிகளை நிரப்புகின்றன. இவை உண்மையைச் சொல்ல முயல்கின்றன. உண்மைகளை ஏற்றுக் கொள்வது கைகளை இறுகப் பற்றிக் கொள்வதாகும். இது சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்ட புத்தகம் அல்ல! இது வெறும் வரலாற்று ஆவணம்.” “ஆனால்… பாதுகாப்பு…” “எந்தப் பாதுகாப்பு? யாருடைய பாதுகாப்பு? உண்மையிலிருந்து பாதுகாப்பா? நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். நீங்கள் ஒரு வேலையைச் செய்கிறீர்கள். ஆனால் உங்கள் மகிழ்ச்சி எங்கள் மீதான கட்டாய மௌனத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. அது எப்படி ஒற்றுமையாகும்?” இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நீங்கள் பொறுத்துக் கொள்ள முடியாமல், இடையில் சொல்கிறீர்கள், “ஒற்றுமை என்பது வேறுபாடுகளை ஏற்றுக் கொள்வதில் வருகிறது, வேறுபாடுகளை மறைப்பதில் அல்ல“ அதிகாரி, தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டு, எங்களை நோக்கி முன்னே சரிந்து சற்றுத் தணிந்த மெல்லிய குரலில் சொல்கிறார், “நீங்கள் சொல்வதிலுள்ள நியாயத்தை நான் அறிவேன். ஆனால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இங்கே ‘மகிழ்ச்சி’ என்பது ஒருவகை உயிர்வாழ்தல். நான் மகிழ்ச்சியாக இருப்பதாகச் சொல்கிறேன், ஏனென்றால் நான் பயந்திருக்க வேண்டாம் என்று நினைக்க விரும்புகிறேன். நான் ஒற்றுமை பற்றி பேசுகிறேன், ஏனென்றால் நான் மோதல்களையோ முரண்பாடுகளையோ எதிர்கொள்ள விரும்பவில்லை” அவர் ஒரு ஆழமான மூச்சை விடுகிறார். எனக்கு ஒரு புதிய நம்பிக்கை ஏற்படுகிறது. குறைந்தது, இந்த அதிகாரியுடனாவது இந்த மாதிரி பேச முடிகிறதே! “இந்தப் புத்தகம் உண்மையின் ஒரு சிறிய பகுதியே. இதை விட நடந்தவற்றின் ரத்த சாட்சியாக உலகமெங்கும் பலர் இருக்கிறார்கள். அவர்களின் நினைவுகள், அவர்களின் கதைகள் – அவை எங்கும் உள்ளன” அவர் மேசையில் இருக்கும் புத்தகங்களைத் தொடுகிறார். முகம் மெல்லிதாக வாட்டமுறுகிறது. “இன்றைய அறிவியல் யுகத்தில், இந்தப் புத்தகத்தை மின்நூல்களாக லட்சம் பிரதிகள் உருவாக்க முடியும். இணையம் எங்கும் உள்ளது. அப்படியிருக்கும்போது…” என்று சிரிக்கிறேன். அது கசப்பான சிரிப்பு. “நீங்கள் இதைத் தடுப்பது, சூரியனைக் கைகளால் மறைப்பது போல சிரிப்புக்குரியது. உங்களுக்கு இது வெட்கம் தரும் செயலாக இல்லையா? நீங்கள் இதைத் தடுத்தாலும், இதை ஒளிப்படங்களாகவும், யூடியூப்களாகவும், PDF பிரதிகளாகவும் நாம் வெளியே இருந்து எடுக்கலாமே. உங்களுடைய விதிமுறைகள் அப்பொழுது என்ன செய்யும்? ஏராளமாக விரிந்து பரவிக் கிடக்கும் வலைத்தளங்களைத் தடுக்க முடியுமா? ஒவ்வொரு மின்நூலையும் கண்காணிக்க முடியுமா?” “நீங்கள் சொல்வது சரிதான். ஆனால்…” அவருடைய அகத்தில் வெட்கம் ஏற்படுவதை உணர்கிறோம். முகம் அதைப் பிரதிபலிக்கிறது. அது அவருடைய வெட்கம் அல்ல. அது நாட்டினுடைய, ஆட்சியினுடைய, அதிகாரத்தினுடைய வெட்கம். “ஆனால் நாங்கள் எங்களிடம் வரும் பொருட்களை மட்டுமே கட்டுப்படுத்துகிறோம். மின்நூல்கள்… அவை வேறு துறை. அது தொழில்நுட்பத் துறை. எங்களுக்கு எட்டாதது” “அப்படியானால், இந்தத் தடை வெறும் காட்சி மட்டுந்தானா? பொய்யான பாதுகாப்பா?” சமாளித்துக் கொண்டு அவர் சொல்கிறார், ”மக்கள் இவ்வாறான தடையைப் பார்க்கிறார்கள். அது ஒரு செய்தியை அவர்களுக்குச் சொல்கிறது. ‘இது அனுமதிக்கப்படாதது’ என்று. அதாவது இந்தப் பொதி தடுக்கப்படுவதை அவர்கள் பார்க்க முடியும். அது அவர்களை நிதானமடைய வைக்கும்” நான் அவரிடம் கேட்கிறேன், “இப்படிச் சொல்வதும் சிந்திப்பதும் வெட்கம் தருவதாக இல்லையா?“ அவருடைய கண்கள் கலங்குவதைப்போலிருக்கிறது. ஒரு நீண்ட மௌனத்திற்குப் பிறகு, “வெட்கமா? ஆம். எனக்கு வெட்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் நான் என்ன செய்ய முடியும்? உண்மையில் நாங்கள் ஒரு நாடகம் நடத்துகிறோம். இது அந்த நாடகத்தின் ஒரு காட்சி” அவர் சுற்றுமுற்றும் பார்க்கிறார், குரலைத் தாழ்த்திக்கொண்டு சொல்கிறார். “நீங்கள் PDF செய்தால், அதை அனுப்புங்கள். யூடியூபில் போடுங்கள். ஆனால்… இந்த இந்தப் புத்தகங்களை நாங்கள் தடுக்க வேண்டும். ஏனென்றால்… ஏனென்றால் அது எங்களுடைய ‘செயல்முறை’. இந்தச் செயல்முறை முக்கியம். மக்கள் அதைப் பார்க்க வேண்டும்: அரசு கட்டுப்பாட்டில்தான் எல்லாம் உள்ளது என்று.” “அப்படியானால், இது வெறும் பாசாங்கு?” “இல்லை. இது ஒரு அடையாளம். ஒரு குறியீடு. நாங்கள் நடைமுறை உலகில் இன்னும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டைக் காட்ட வேண்டும். டிஜிட்டல் உலகில்… அங்கே நாங்கள் தோற்கடிக்கப்படுகிறோம். உண்மைதான். ஆனால் இங்கே இல்லை” ‘எங்களுக்கு அவரைப் பார்க்கப் பரிதாபமாக உள்ளது. அவரைப் பார்க்கும்போதல்ல, அரசாங்கத்தை எண்ணிப்பார்க்கும்போதுதான் பரிதாபமாக உள்ளது’ என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அதனால் உங்களுக்குச் சிரிப்பு வருகிறது. கூடவே கவலையும். ‘எப்படியெல்லாம் இந்த அதிகார மயக்கம் உள்ளது‘ என்று நினைத்துச் சிரிக்கிறீர்கள். கவலைப்படுகிறீர்கள். எத்தனை அறிவுசார் முன்னேற்றங்கள் வந்தாலும் அதிகாரத்தின் அறை எப்போதும் இருளாகத்தான் உள்ளது. நான் அதிகாரியிடம் சொல்கிறேன், “நான் இதை PDF ஆக மாற்றுவேன். அப்பொழுது எழுதுவேன், ‘இன்று சுங்கத்தில் தடுக்கப்பட்ட புத்தகம் இது. இப்போது இது உலகம் முழுவதும் வருகிறது. இனி இது உங்களுடையது‘ என்று. ஆனால் நான் இந்தப் பிரதிகளையும் விடமாட்டேன். ஏனென்றால்… இந்த எதிர்ப்பு முக்கியம். இது ஒரு குறியீடு. மக்கள் இந்தத் தடையைப் பார்க்க வேண்டும். அதற்கான எதிர்ப்பையும் அவர்கள் காண வேண்டும். இது சாட்சியமாக இருக்க வேண்டும். இது நீங்கள் செய்யும் கட்டுப்பாட்டு நாடகத்தின் சாட்சியாக. அதைப்போல, இந்தத் தடையை நாம் உடைப்பதையும் மக்கள் பார்க்க வேண்டும்” அதிகாரி ஆச்சரியத்துடன் பார்க்கிறார். “ஏன்? PDF ஆக்கி இணையத்தில் பரவ விடும்போதே உங்களுக்கு வெற்றி கிடைத்து விடுகிறதே?” “இது வெற்றி பற்றியது அல்ல. இது சாட்சி பற்றியது. இந்தப் புத்தகங்கள் இங்கே தடுக்கப்பட்டதை உலகம் பார்க்க வேண்டும். அது சாட்சியமாக இருக்க வேண்டும்.” அவர் எழுந்து நின்று, ஜன்னலுக்கு அருகில் செல்கிறார். “நீங்கள் கேட்டீர்கள் – எனக்கு வெட்கமாக இல்லையா? என்று. ஆம், வெட்கம்தான். ஆனால் இப்போது அந்த வெட்கம் வேறு வகையானது. இது எங்கள் சக்தியினுடைய வெட்கம். நாங்கள் இன்னும் காகிதத்துடன் போராடுகிறோம், ஆனால் உலகம் இலத்திரனியலில், தொழில்நுட்பத்தில், அறிவில் முன்னேறிவிட்டது” அவர் திரும்பிப் பார்க்கிறார். “நீங்கள் வார்த்தைகளைத் தடுக்கலாம், ஆனால் உண்மையைத் தடுக்க முடியாது. நீங்கள் புத்தகங்களைத் தடுக்கலாம், ஆனால் யுகங்களைத் தடுக்க முடியாது” எங்களுடன் தொடர்ந்து உரையாடவும் முடியாமல், அதைத் தவிர்க்கவும் விரும்பாமல் தடுமாறுகிறார் அதிகாரி. அவரிடம் “ஒரு கேள்வி. ஒன்று மட்டும்” என்கிறேன். அவர் அலுவலகத்தைக் கண்களால் சுற்றிப் பார்க்கிறார். அங்கே மௌனமான, கனத்த சுவர்கள், படிவங்களின் அடுக்குகள், விதிமுறைகளின் கனம் கூடியிருக்கிறது. நான், மெதுவாக, ஒவ்வொரு வார்த்தையும் எடை போட்டபடி, “ஆம், கொலைகளைக் கண்டு நீங்கள் அச்சமடைகிறீர்கள். அதனால்தான் இந்தத் தடை” என்கிறேன். அவர் பதறத் தொடங்கி விடுகிறார். முகம் கறுத்துச் சட்டெனச் சிவக்கிறது. கண்களும் சிவந்து கலங்குகின்றன. அவர் ஒரு புத்தகத்தை எடுத்து, அதைத் திறந்து ஒரு பக்கத்தைக் காட்டுகிறார். அது ஒரு செய்தித் தாளின் நகல். “மண்டைதீவில் கொல்லப்பட்டவர்கள் கிணற்றுக்குள் போடப்பட்டனர்” என்ற தலைப்பு. “நீங்கள் அந்தக் கொலைகளைச் செய்யாமல் தடுத்திருக்கலாம் அல்லவா? அதாவது உங்களுடைய படைகள், உங்களுடைய அரசாங்கம். அதுதானே நியாயமானது? அதுதானே சரியானது?” என்கிறேன். அதிகாரியின் முகம் வெளிறுகிறது. “நான்… நாங்கள்…” தடுமாறுகிறார். கண்ணாடியைக் கழற்றி மேசையில் வைத்து விட்டு, முகத்தைத் துடைத்துக் கொள்கிறார். “சரி. அதை விட்டுவிட்டுவோம். இப்பொழுது கொலைக்கான சாட்சியங்களைத் தடுப்பது, என்ன வகையில் நீதியாகும்?” அவர் புத்தகத்தை மேசைமீது வைக்கிறார். அது ஒரு சத்தமான தட்டச்சுப் போல் ‘தொப்‘ என ஒலித்தது. “இது இன்னொரு கொலை அல்லவா? ஆம். சாட்சியங்களின் கொலை.” அறை முழுவதும் மௌனம் பெருகித் தடித்துக் கனமாயிற்று. அவர் எதுவுமே பேசவில்லை. மொழிபெயர்ப்பாளர் மெதுவாக நழுவிச் செல்கிறார். நான் அவரைப் பார்த்துச் சிரிக்கிறேன். இப்போது அந்தச் சிரிப்பு கசப்பானது அல்ல; அது விடுதலை தரும் சிரிப்பு. அந்தச் சிரிப்பு அதிகாரிக்கு வெட்கத்தை அளித்திருக்க வேண்டும். அவர் வேறு ஒரு கோப்பை எடுத்து அந்த வேலையில் மூழ்குவதாக நடிக்கிறார். மெதுவான குரலில் சொல்கிறேன், “முதல் கொலை, உயிரை எடுத்தார்கள். இரண்டாவது கொலை, அந்த உயிரின் கதையை எடுக்கிறார்கள். மூன்றாவது கொலை, அந்தக் கதையின் நினைவை எடுக்கிறார்கள். இது எத்தனை மடங்கு கொலை?” அவர் நாற்காலியில் சாய்ந்து, இரண்டு கைகளையும் உயர்த்தித் தலையின் பின்பக்கமாகச் சரிந்து, கண்களை மூடுகிறார். முகம் மேலே மின்விசிறி நோக்கிக் கொண்டிருக்கிறது. “நீங்கள் விதிமுறைகளைச் சொல்கிறீர்கள். நான் நீதியைச் சொல்கிறேன். விதிமுறைகள் காகிதம். நீதி இரத்தம். எது கனமானது?” என்று கேட்கிறேன். அவருடைய இதயமும் காதுகளும் மிக விரிந்து கேட்டுக் கொண்டிருக்கின்றன. இப்போது முற்றிலும் அமைதியாக, ஆழ்ந்த துக்கத்துடன் குரலைத் தாழ்த்தி, அழுத்தமாகச் சொன்னேன், “நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் மனிதர்களை மட்டும் கொல்லவில்லை” அவர் எழுந்து நின்று, சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் வரைபடத்தை நோக்கி நடக்கிறார். “நீங்கள் உண்மையைக் கொல்கிறீர்கள். வரலாற்றைக் கொல்கிறீர்கள். இந்தப் புத்தகம் வெறும் காகிதம் அல்ல; இது நடந்தவற்றின் சாட்சியம். நீங்கள் இந்தச் சாட்சியத்தைக் கொல்கிறீர்கள்” திரும்பி எங்களை அவர் பார்க்கிறார். என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?‘ என்று கேட்பதைப்போலிருக்கிறது அந்தப் பார்வை. காட்டில் தனித்துத் தவித்து அலையும் மானின் கண்களைப்போல அவர் மிரட்சியடைவதைப் பார்க்கிறோம். “உண்மையும் வரலாறும் கொலை செய்யப்பட்டால் மிஞ்சுவது என்ன? பொய்களின் கோட்டை! உண்மைகள் மறக்கப்பட்ட பாலைவனம்!! ஒரு தேசத்துக்கு உண்மையும் வரலாறும் வேண்டாமா?” அதிகாரி மௌனமாக வந்து அமர்கிறார். அவருடைய விரல்கள் மேசையின் மீது வெறுமையாக எதையோ எழுதுகின்றன. “நடந்தவற்றுக்குப் பொறுப்புக் கூறுதலும் குற்றங்களை ஒப்புக்கொள்ளுதலும் அவசியமில்லையா? ஒரு தேசம் தன் குறைகளை ஒப்புக்கொள்ளாமல், தன் பிழைகளை மறைக்காமலும் எப்படி முன்னேற முடியும்? இது ஒரு குழந்தைத்தனத்தைப் போலல்லவா? தவறு செய்து, அதை மறைக்க முயல்வது? ஆனால், இங்கே வன்மையான கபடம் உள்ளது” அவர் புத்தகத்தைத் தூக்கி, அதை மெதுவாகத் தடவுகிறார். அது அவருடைய மனதின் உறுத்தல் என்று உங்களுக்குத் தோன்றுகிறது. “இந்தக் கொலைகள் நடந்தன. இது உண்மை. இப்போது, உண்மையைச் சொல்வதைத் தடுப்பது – இது இரண்டாவது குற்றம். முதலில் செய்த தவறை ஒப்புக்கொள்ளாமல், இரண்டாவது தவறும் செய்வது.” அவர் ஒரு ஆழமான மூச்சை விடுகிறார். “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வரலாற்றை மறைத்தால், அது மாறிவிடுமா? இல்லை. அது காயமாகவே இருக்கும். ஆனால் அந்தக் காயம் சீழ்பிடித்துக் கொள்ளும். தேசத்தின் ஆன்மாவில் சீழ்பிடித்த காயம்” ‘ஆம்’ என்பது போல மெல்லத் தலையசைக்கிறார். ‘இருந்தாலும்..’ என்பதுபோல.. கண்கள் எதையோ சொல்ல முற்படுகின்றன. “ஒரு கேள்வி தோன்றுகிறது. நீங்கள் நூலகம் எரிக்கப்பட்டதைப் பற்றி வருத்தமடையவாகச் சொன்னீர்கள். அது ஒரு பெரும் இழப்பு என்றும். ஆனால்… இப்போது நீங்களே இந்தப் புத்தகங்களைத் தடுத்து வைக்கிறீர்கள். இந்த இரண்டுக்கும் இடையே என்ன வித்தியாசம்?” அதிகாரியின் முகம் வெளிறுகிறது. அவர் ஒரு வினாடி மௌனமாயிருக்கிறார். அவரது வாய் சிறிது திறந்திருக்கிறது. ஆனால் வார்த்தைகள் வரவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு மெல்லச் சொல்கிறார், “அது… அது வித்தியாசமான விஷயம்.” “உண்மையாகவா? 1981 இல், நூலகத்தில் இருந்த புத்தகங்கள் எரிக்கப்பட்டன. 2025இல், நூலகத்துக்கு வரவிருக்கும் புத்தகங்கள் தடுக்கப்படுகின்றன. இரண்டும் ஒரே இலக்கை நோக்கிய திட்டமில்லையா? ஞாபகங்களை, வரலாற்றை இல்லாமலாக்குவது? வரலாற்றை முடக்கி வைப்பது?” “அப்போது அதில் நான் இல்லை. நான் அங்கே இல்லை…” அவசரமாக மறுக்கிறார். “ஆனால் இப்போது நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். இப்போது நீங்கள்தான் அந்தத் தடையாளி. நூலகத்தின் காவலாளிகள் அன்று தீயை வைத்தனர். இன்று நீங்கள் இப்படிக் கதவைச் சாத்துகிறீர்கள். வித்தியாசம் என்ன?” அதிகாரி தனது நாற்காலியில் பின்னால் சாய்கிறார். அவரது கண்கள் கரைகின்றன. “நான் எரிக்கவில்லை. நான் வெறும் காகிதப் பரிமாற்றம் செய்கிறேன். ஒரு படிவம். ஒரு கையெழுத்து. MOD க்கு அனுப்புகிறேன். இது வித்தியாசம்தானே? நான் எரிக்கவில்லை. நான் எனக்குரிய… நிர்வாகப் பணியைச் செய்கிறேன். அவர்களே பொறுப்புச் சொல்ல வேண்டும்“ நான் அவரை மறுத்துச் சொல்கிறேன், “வித்தியாசம் இல்லை. கையாளும் முறை மட்டுமே மாற்றம். தீ மாறி படிவமாகியிருக்கிறது. அத்துமீறல் இங்கே மாற்றமடைந்து அதிகார உத்தரவாகியிருக்கிறது. இலக்கு ஒன்றே. வார்த்தைகளையும் எண்ணங்களையும் மௌனமாக்குவது, வரலாற்றை முடக்கி வைப்பது” அந்தப் புத்தகப் பொதியைச் சுட்டிக்காட்டிச் சொல்கிறேன், “மேலும் ஒரு விஷயம். இந்தப் புத்தகங்களைத் தடுத்து வைப்பது – இது உண்மையை மறைப்பது மட்டுமல்ல. இது ஒரு சிறை வைத்தலும்தான். அரசியற் கைதிகளைச் சிறை வைப்பதைப் போல, புத்தகங்களையும் சிறை வைக்கிறீர்கள். இவை அறிவுச் சிறை கைதிகள். சிந்தனைச் சிறை கைதிகள். உண்மையின் சிறை கைதிகள்” என்னுடைய குரலில் ஆவேசமும் புத்துணர்வும் ஏற்படுகிறது. அதிகாரியின் கண்களுக்குள் நாங்கள் புகுந்து இதயத்தைத் தாக்கி விட்டதைப்போலிருக்கிறது. அப்படித்தான் அவருக்கும் தோன்றியிருக்கக் கூடும். அவர் மிகச் சங்கடத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார். “நம்முடைய நாட்டின் அரசியற் சாசனத்திலோ, நீதித்துறையின் விதிமுறைகளிலோ, இதைப் பற்றி எழுதப்பட்டுள்ளதா? ‘புத்தகங்களைச் சிறை வைத்தல்’ என்று எந்தச் சட்டத்தில் உள்ளது? ‘கருத்துக்களைச் சிறை வைத்தல்’ என்று எந்தச் சட்டப் பிரிவில் சொல்லப்பட்டுள்ளது?” அதிகாரி பதிலளிக்க முன், தொடர்கிறேன், “நான் சட்டத்தைப் படித்தவன் அல்ல. ஆனால் இதை நன்றாக அறிவேன். சட்டம் மனிதர்களைச் சிறை வைக்கலாம். குற்றம் செய்தவர்களை. ஆனால் எண்ணங்களை? வார்த்தைகளை? உண்மைகளை? அவற்றை சிறை வைக்க முடியுமா? அது எந்தச் சட்டம்?” அவர் எங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார். உதவியாளருக்குச் சங்கடமாகி விட்டது. தனக்கு ஆயிரம் வேலைகள் உண்டு என்பதைப்போல, எதையோவெல்லாம் செய்து கொண்டிருந்தார். காதுகளை இங்கே வைத்திருப்பதும் எடுப்பதும் என்ற மாதிரி இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்தார். “இல்லை. இது சட்டம் அல்ல. இது பயத்தின் ஆட்சி. பயம் சட்டமாகும்போது, சட்டம் சிறைச்சாலையாகிறது. பயம் நீதியாகும்போது, நீதி நியாயமெல்லாம் கொலை செய்யும் கருவியாகிறது.” உதவியாளர் வந்து ஒரு கோப்பை அதிகாரியின் முன்னே வைத்துவிட்டுச் செல்கிறார். “நீங்கள் ஒரு புதிய வகை சிறையை உருவாக்குகிறீர்கள். இது பொது சிறையல்ல. இது ‘அறிவுச் சிறை’. இங்கு கைதிகள் மனிதர்கள் அல்ல; எண்ணங்கள். தண்டனை, தூக்குத் தண்டனை அல்ல; மறத்தல். இந்தச் சிறையில், புத்தகங்கள் செத்துக் கிடக்கின்றன. ஆனால் அவை இறக்கவில்லை; அவை மறைக்கப்படுகின்றன” சட்டென எழுந்து அவர் மறுக்கிறார் “இது… இது கடுமையான விமர்சனம்” குரல் சற்று உயர்ந்து காட்டமாக இருக்கிறது. “உண்மை எப்போதும் கடுமையானதுதான். சட்டம் மென்மையாக இருந்தால், அது சட்டம் அல்ல; விருந்தோம்பலாகி விடும் என்ற கலக்கம்” “போதும் இத்தோடு நாம் நிறுத்திக் கொள்வோம்” என்ற அதிகாரி, உதவியாளரை அழைத்து, அவ்வளவு புத்தகங்களையும் MOD க்கு அனுப்புவதற்கான படிவத்தை நிரப்பி, என்னிடம் கையெழுத்தைப் பெறுமாறு பணிக்கிறார். அலுவலகத்தின் மின்விசிறி சுற்றும் ஒலியைவிட, அவருடைய மனசாட்சி சத்தமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது என்பதை அவருடைய குரலின் பதட்டம் காட்டுகிறது. MOD. பாதுகாப்பு அமைச்சு. ஒரு மூன்றெழுத்து வார்த்தைதான். ஆனால் அது ஒரு கண்ணி. திறக்கக் கடினமான ஒரு கடவுச்சொல். பல சந்தர்ப்பங்களிலும் அது ஒரு கல்லறை என்று உங்களுடைய மனதில் தோன்றுகிறது. MOD க்கான படிவம்: SR / Jaf / Post / 56 / 4054 மூலப்பிரதி தொடர் இல: 196448 மூடைகளைத் தடுத்து வைத்தல் பெயரும் கடவுச் சீட்டு / அடையாள அட்டை இலக்கமும்: ஞானசேகரம் அருட்குமரன் தடுத்து வைத்தலுக்கான காரணம்: பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தகவல் துறையின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது (Pending Approval from MOD and Department of Information) தடுத்து வைக்கப்பட்ட பொருட்களின் விவரம் (எண்ணிக்கை, மாதிரி இல, முதலியவை) 05 புத்தகங்கள் (தமிழ்) 1. 1990 – லைடன்தீவு மண்டைதீவு படுகொலைகளும் புதைகுழிகளும் – 02 2. ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் – 02 3. நெரிந்து – 01 பரிந்துரை: பரிசீலனை செய்யப்பட வேண்டும். காரணம்: தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். பொருட்கள் தடுத்து வைத்த திகதி: 2025.11.20 சொந்தக்காரரின் ஒப்பம் உதவிக் கட்டண உத்தியோகத்தர் நான் ஒரு புன்னகையுடன் அவரைப் பார்க்கிறேன். “அப்படியென்றால், எதுவுமே மாறவில்லை. யுத்த கால நிலவரம்தான் இப்போதும். அப்போதும் MOD தான். இப்போதும் MOD தான்” அவர் எதுவுமே சொல்லவில்லை. சிரிக்கவும் முடியாமல், முறைக்கவும் முடியாமல் நெளிகிறார். அவர் கேட்கிறார்: “பெயர்?” நான் சொல்கிறேன்: எழுத்தாளர்களின் பெயர்களை அவர் எழுதினார்: “தமிழ் எழுத்தாளர்” நான் சொன்னேன்: “வரலாற்றாசிரியர்கள் அல்ல” அவர் எழுதினார்: “அரசியல் உள்ளடக்கம்” நான் சொன்னேன்: “மனித உரிமைப் பதிவு” அவர் எழுதினார்: “MOD-க்கு அனுப்பவும்.” நான்: கொலைகளைப் பற்றிய கதைகள்தான் உங்களை அச்சுறுத்தலாம். சாதியக் கவிதைகள்? அவர்: பாதுகாப்புச் சிந்தனையில் எல்லாம் ஒன்றுதான் நான்: ஆமாம், சரியாகச் சொன்னீர்கள். இலக்கை நோக்கி வீசப்படும் குண்டு வீச்சில் அதிகமாகக் கொல்லப்படுவது பொதுமக்கள்தான். அதைப்போலவே கொலைகளின் ஆவணமே இல்லாத மற்ற இரண்டு கவிதை நூல்களையும் தடுத்து விட்டீர்கள்… சுங்க அதிகாரியின் கண்ணெதிரே, புத்தகங்கள் பொதிசெய்யப்படுகின்றன. அவர் அதை ‘சரக்கு’ என்று நினைக்கிறார். நான் அதை ‘வரலாறு’ என்று எண்ணுகிறேன். இந்த உரையாடலை எல்லாம் கேட்ட புத்தகங்கள் அமைதியாக இப்போது ‘To MOD’ என்று எழுதப்பட்ட பெட்டியில் இருக்கின்றன. 02 புத்தகங்களின் குரல் இணைகிறது: “எங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாங்கள் சாட்சியங்கள். எங்களில் சிலர் எழுதப்பட்டோம். பெரும்பாலானோர் எழுதப்படவில்லை. எங்களில் சிலர் இந்தப் புத்தகத்தில் இருக்கிறோம். பலர் இல்லை. ஒவ்வொரு தடுக்கப்பட்ட புத்தகமும், ஒவ்வொரு மௌனமான கதையும், ஒவ்வொரு அழிக்கப்பட்ட சாட்சியமும் – இவை அனைத்தும் ஒரே கொலையின் பகுதிகள். நீங்கள் இந்தப் புத்தகத்தைத் தடுக்கிறீர்கள் என்று நினைக்கிறீர்கள். ஆனால் உண்மையில், நீங்கள் மீண்டும் கொல்வதைத் தொடர்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் எங்கள் கதையைத் தடுக்கிறீர்கள், எங்களை மீண்டும் கொல்கிறீர்கள். ஆனால் நீங்கள் எங்களைக் கொல்ல முடியாது. ஏனென்றால், சாட்சியங்கள் இரத்தத்தில் எழுதப்படுவது மட்டுமல்ல; அவை காலத்தில் எழுதப்படுகின்றன. அவை காற்றில் எழுதப்படுகின்றன. அவை மனித நெஞ்சில் எழுதப்படுகின்றன. எங்களை எரியுங்கள். இன்னும் நூறு புத்தகங்களை எழுதுவோம். இன்னும் ஆயிரம் கதைகளைச் சொல்வோம். நாங்கள் சாட்சிகள். எங்கள் வேலை, சாட்சியமளித்தல். உங்கள் வேலை, அதைத் தடுத்தல். யார் வெல்லுவார்கள் என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் எங்களைப் பொதியில் அடைத்தீர்கள். எங்களை MOD க்கு அனுப்புகிறீர்கள். ஒரு ஆவணமாக எண்ணுகிறீர்கள். தவறு. நாங்கள் வெறும் வார்த்தைகள் அல்ல. நாங்கள் கண்கள். 1983இல் நூலகத்தின் ஜன்னல்களில் இருந்து பார்த்த கண்கள். 1987இல் வீதிகளில் நடந்த கண்கள். 2009இல் முள்ளிவாய்க்கால் கரையில் நின்ற கண்கள். உண்மையான வரலாறு பகிரங்கமாக வெளியே உள்ளது. எல்லோருக்கும் தெரிந்தது. அது ஒவ்வொரு வீட்டு முற்றத்திலும் உள்ள ஆழமான வெட்டு. ஒவ்வொரு குடும்ப மரத்திலும் உள்ள ஆறாத புண். அந்தக் காயங்களில் இருந்து வடியும் குருதி – அது எங்கள் மையில் உள்ளது. நீங்கள் எங்களை மறைத்து வைக்கலாம். இந்த ஐந்து புத்தகங்களைத் தடை செய்யலாம். ஆனால் வெளியே உள்ள உண்மையை… அதனுடைய ஆதாரத்தை… காயாத அந்தக் குருதியை எப்படி மறைக்க முடியும்? அது யாழ்ப்பாணத்தின் மண்ணில் இருக்கிறது. கிளிநொச்சியின் வேர்களில் இருக்கிறது. முள்ளிவாய்க்காலில் வீசும் காற்றில் இருக்கிறது. கொக்கட்டிச்சோலையில், உடும்பன்குளத்தில், ஏறாவூரில், மன்னார் – முருங்கனில், வாகரையின் மணலில் கொதித்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் எதிரொலிகள். உண்மையின் எதிரொலிகள். கண்காணிப்புக் காமிரா 04: ரிக்கார்டிங். 10:25:15. பொருள்: ஒரு (அடையாளம்: தமிழ்) எழுத்தாளரும் நீங்களும் புத்தகப் படிவங்களோடு நுழைகிறீர்கள். நேரம் 10:45:22. பொருள்: சுங்க அதிகாரி (அடையாளம்: காமினி லொக்குபண்டார) புத்தகங்களைப் பிரிக்கிறார். 10:58:41. ஆண் சிரிக்கிறார். வாய்ப்பதிவு இல்லை. பாதுகாப்புக் காரணங்களுக்காக ஓடியோ ரிக்கார்டிங் முடக்கப்பட்டுள்ளது. 12:12:07. புத்தகங்கள் பக்கேஜ் செய்யப்படுகின்றன. 12:20:33. எழுத்தாளர் கையெழுத்திடுகிறார். காமிரா கோணம்: அவரது கைகள் மட்டுமே தெரிகிறது. புத்தகங்கள் மட்டுமே தெரிகிறது. முகங்கள் தெளிவாகத் தெரியவில்லை. ரிக்கார்டிங் முடிந்தது. கோப்பு MOD க்கு மாற்றப்படுகிறது. பறவை பார்த்தது: நீல நிறக் கூண்டு ஒன்று. அதன் உள்ளே, இரண்டு கால்கள் உள்ள மனிதப் பறவைகள், வெள்ளைத் தாள்கள் என்ற இறகுகளை அடுக்கி வைத்திருந்தனர். ஒருவர் மற்றவருக்கு ஒரு கறுப்பு வட்டத்தை (முத்திரை) கொடுத்தார். அது உணவு போல இல்லை; ஆனால் அவர் அதை வாங்கிக் கொண்டார். ஒரு பெரிய பொட்டலம், சிறு சிறு கறுப்பு எழுத்துகளால் நிறைந்தது. அது ஒரு பெட்டியில் வைக்கப்பட்டது. அந்தப் பெட்டியில் மற்றொரு பெரிய கூண்டுக்கு அனுப்பப்படும் என்பது போல, ‘MOD’ என்று குறிக்கப்பட்டிருந்தது. (பறவைக்குப் புரியவில்லை) எழுத்துகள் விதைகளா? இல்லை, அவை முளைக்கவில்லை. அவை பறக்கவும் முடியாது. பிறகு ஏன் அவற்றை காப்பாற்றுகிறார்கள்? அல்லது அழிக்கிறார்கள்? பறவை சிறகை அசைத்தது, மேலே பறந்தது. கீழே, நீலக் கூண்டு இன்னும் அங்கேயே இருந்தது. அதன் வாயில், ஒரு சிறிய மனிதப் பறவை நின்று கொண்டிருந்தான், காலத்தை வெளியே எறிந்து கொண்டிருந்தான்” பறவை பறந்து சென்றது. அது கீழே உள்ள நீலக் கூண்டைப் பார்த்தது. அது ஒரு பெரிய கட்டிடத்தைப் பார்த்தது. அதன் மீது மூன்று எழுத்துக்கள்: M O D. சுங்க அதிகாரியின் குறிப்பு: “அந்தப் பொதியைக் கட்டவிழ்க்கச் சொன்னபோது, என் கைகள் ஈரமாயின. ‘நடவடிக்கை எண் 15(ஆ): தேசிய பாதுகாப்புக்கு இடையூறான வெளிநாட்டு பொருட்கள்’ என்ற பிரிவு என் மனத்தில் ஒளிர்ந்தது. ஆனால் மறுகணம், ‘இவை புத்தகங்கள். வார்த்தைகள். காகிதம் மீது மை’ என்ற மெல்லிய குரல் எழுந்தது. பார்த்தேன் – அந்த எழுத்தாளர் அசைவற்று இருந்தார். அவர் கண்களில் எதிர்பார்ப்பும் தீவிரம் குன்றாத அறிவும் களைப்பான உறுதியும் மட்டுமே இருந்தது. அவர் எத்தனை முறை இந்த நாடகத்தில் முடிவில்லாமல் வாழ்ந்து கொள்ள வேண்டியுள்ளது? நான் எத்தனை முறை இந்த வரிகளைப் பேசியிருக்கிறேன்? துக்கமும் அவமானமுமாக உள்ளது. உண்மையும் நியாயமும் புரிகிறது. சரிகளைத் தெரிந்தும் அதை ஏற்றுக் கொள்ள முடியாமலிருப்பது, அவமானச் சுமையினால் அழுந்துவதன்றி வேறென்ன? ஒரு கணம், நான்தானா இந்தப் பொம்மலாட்டத்தை நடத்துகிறேன் எனத் தோன்றியது. பின், அலுவலகத்தின் பட்டியலில் என் பெயரைக் கண்டேன். காமினி லொக்குபண்டார’ ஆம். நான் இங்குள்ளேன். நான் இதைச் செய்வேன். கையெழுத்து. முத்திரை. MOD க்கு கடமை முடிந்தது. ஆனால் ஏன் இந்த மார்பு இப்படி இடிக்கிறது?” ஏனிந்தக் கண்களில் நீர்? MOD பெட்டியின் கண்ணோட்டம்: “நான் ஒரு பெட்டி. என்னுள் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால் இதுவரை, என்னுள் வந்த பல காகிதங்கள் ‘ரகசியம்’ என்று முத்திரை குத்தப்பட்டுள்ளன. அவற்றில் சில உண்மையில் ரகசியங்களாக இருக்கலாம். பெரும்பாலானவைப் பெரும் உண்மைகள். ஆனால் ‘ரகசியம்’ என்ற முத்திரை, ஒரு சாதாரண உண்மையைக் கூட ஒரு ஆயுதமாக மாற்றிவிடும்” அதிகாரியின் உள்உரையாடல்: “சாட்சியங்களின் கொலை.” இந்த வார்த்தைகள் என் நெஞ்சில் குத்தின. அவர் சொன்னது சரிதான். நாங்கள் என்ன செய்தோம்? நாங்கள் கொலைகளைத் தடுக்கவில்லை. அதைச் சொல்ல நான் பயப்படுகிறேன். ஆனால் அது உண்மை. 1983இல் நான் இளம் வயதினன். நாங்கள் செய்திகள் கேட்டோம். ‘தேசியப் பாதுகாப்பு’ என்று சொன்னார்கள். ‘அமைதி’ என்று சொன்னார்கள். ஆனால் இப்போது… இப்போது நான் கொலைகளைத் தடுக்கும் படையின் ஒரு பகுதி. ஆனால், நான் சுங்க அதிகாரி. அல்ல, இன்னும் மோசமானது. நான் கொலைகளை மறக்க வைக்கும் படையின் ஒரு பகுதி. முதல் கொலை: அவர்களுடைய உயிர். இரண்டாவது கொலை: அவர்களுடைய குரல். மூன்றாவது கொலை: அவர்களுடைய நினைவு. நான்காவது கொலை: அவர்களுடைய நீதி. ஆம், நான்கு கொலைகள். நான் நான்காவது கொலையில் பங்கு கொள்கிறேன். நான் ‘நீதியை’ கொல்கிறேன். வெறும் கையெழுத்து மூலம். வெறும் படிவம் மூலம். சட்டம் சொல்கிறது: இது தவறு அல்ல. ஆனால் மனசாட்சி சொல்கிறது: இது கொலை. 03 அவருடைய பதட்டத்தைக் கண்ட அந்த உதவிப் பணியாளர், இயந்திரம்போல மிக வேகமாக அதையெல்லாம் செய்து ஒப்பத்துக்காகப் பத்திரத்தை அதிகாரிடம் கொடுக்கிறார். பிரிக்கப்பட்ட பொதியில் புத்தகங்களை உள்ளிட்டு, மீளவும் பொதியாக்கி, To the MOD என்று எழுதுகிறார் உதவிப் பணியாளர். “ஆட்கள் மாறியிருக்கிறார்களே தவிர, ஆட்சி மாறவில்லை” என்கிறேன். ‘அதேதான்’ என்பது போல சிரித்தார் அதிகாரி. முகத்தில் ஒரு சிநேகபாவம் தோன்றியது. “உங்களுக்கு நல்ல பதில் கிடைக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்” என்றார். “நல்ல பதில் அல்ல. புத்தகங்கள்தான், நீதிதான் கிடைக்க வேண்டும்” ஒப்பமிட்ட பின் ‘தடைசெய்யப்பட்டன புத்தகங்கள்’ என்று எழுதப்பட்ட பத்திரத்தை, அதிகாரியைப் பார்த்துக் கொண்டு வாங்குகிறேன். அந்த முத்திரையிட்ட உறையை வாங்கும்போது, என் கைகள் நடுங்கவில்லை. வரலாறு மீண்டும் தடுக்கப்பட்டதை உணர்கிறேன். ஆனால் அதிகாரியின் கண்களில், முன்பு இல்லாத ஒரு வெளிச்சம் இருக்கிறது. அவர் கடித உறையை நீட்டும்போது, அவரது விரல்கள் மெதுவாக என் கையினைத் தொடுகின்றன. அது ஒரு தவறுதலாக, தற்செயலானதாக இருக்கலாம். அல்லது ஒரு மௌனமான உரையாடலாக இருக்கலாம். அந்தத் தொடுகையில் நடுக்கத்தை உணர்கிறேன். நாங்கள் வெளியேறும்போது, அவர் மெதுவாகச் சொல்கிறார், “உங்கள் புத்தகம்… அதில் பல பக்கங்கள்… மிகவும் நன்றாக எழுதப்பட்டுள்ளது” அந்த வார்த்தைகள், அந்த இரும்புக் கதவைத் தாண்டி வந்து, எங்களுடன் நடந்து கொண்டிருக்கின்றன. 04 “அன்றிரவு, உங்களுடைய கனவில், நூலகமும் சுங்க அலுவலகமும் ஒன்றாக மாறியிருந்தன. புத்தக அலமாரிகள் சுங்க அலுவலக கவுண்டர்களாகி விட்டன. ஒவ்வொரு புத்தகத்தின் மேலும் ‘தடை செய்யப்பட்டது’ என்ற முத்திரை. ஆனால் புத்தகங்கள் பேசிக் கொண்டிருந்தன. அவை சத்தமாகப் படித்துக் கொண்டிருந்தன. ‘நாங்கள் எரிக்கப்பட்டோம். ஆனால் எங்கள் வார்த்தைகள் மட்டும் எரியவில்லை’ என்று ஒரு புத்தகம் சத்தமிட்டது. 05 இப்படியெல்லாம் நடப்பதைப் பற்றி நீங்கள் ஆழமாக யோசித்துக் கொண்டேயிருக்கிறீர்கள். இது உங்களுடைய மனதில் கனமான ஒரு நெருப்புத் துண்டைப்போலவே கிடக்கிறது. அப்படி யோசித்துக் கொண்டிருக்கும்போது உங்களுடைய நினைவுக்கு வந்த பதிவொன்று – அலெக்ஸாண்டிரியாவின் பழமையான நூலகத்தை (Library of Alexandria) பற்றி தெரியுமா உங்களுக்கு? இது எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில் கி.மு 03 ஆம் நூற்றாண்டில் தாலமிக் வம்சத்தால் நிறுவப்பட்டது. ‘மௌசியோ’வின் (Mouseion) ஒரு பகுதியான இந்த நூலகம், உலகின் அனைத்து இலக்கியங்களையும் சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இதில் 40,000 முதல் 400,000 சுருள்கள் (scrolls) இருந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. விரிவுரைக் கூடங்கள், ஆய்வகங்கள், தோட்டங்கள் மற்றும் விலங்கியல் பூங்காக்களும் இதில் இருந்தன. அறிஞர்களுக்கான தங்குமிடம், வரி விலக்குகள், ஊதியத்தை எல்லாம் வழங்கியது. அறிஞர்களான பிளாட்டோ, அரிஸ்டாட்டில், ஹிப்போகிரேட்டஸ் போன்றோரின் படைப்புகள் இங்கே இருந்தன. இங்குப் பழங்காலத்தின் மிக பிரபலமான சிந்தனையாளர்கள் பலர் ஆய்வுகள் செய்தனர். பெரும்பாலான புத்தகங்கள் பாபிரஸ் காகித சுருள்களாக வைக்கப்பட்டிருந்தன. இது கலைகளின் ஒன்பது தெய்வங்களான, முஸைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. கி.பி. 03 ஆம் நூற்றாண்டில் நடந்த உள்நாட்டுப் போரின்போது முக்கிய நூலகம் அழிந்தது. பின்னர், அதன் துணை நூலகமான செராபியம் (Serapeum) கி.பி 391 இல் கிறிஸ்தவர்களால் அழிக்கப்பட்டது. இந்த நூலகத்தில் உள்ள நூல்கள் தீக்கிரையாக்கப்பட்டு அழிவுக்கு உள்ளாயின. அதன் அழிவானது கலாச்சார அறிவு இழப்புக்கான ஒரு சின்னமாக மாறியது. இதனுடைய முழுமையான அழிவு கி.மு. 48 இல் ஜூலியஸ் சீசரின் இராணுவத்தால் மற்றும் கி.பி 270 இல் ஆரேலியனின் தாக்குதல் ஆகியவற்றால் ஏற்பட்டிருக்கலாம். எகிப்தை முஸ்லீம்கள் வெற்றி கொண்ட காலமான கி.பி. 642 இல் (அல்லது அதற்குப் பிறகு) நூலகம் இறுதியாக அழிந்தது. 06 இந்தக் கதையைக் கொந்தளிப்போடு நீங்கள், உங்களுடைய மகளுக்குச் சொன்னபோது, அவள் கேட்டாள், “வரலாற்றின் மனநோயாளிகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” “அவர்கள் வரலாற்றைக் கண்டு அச்சமடைகிறார்கள் மகளே!” 00 https://vallinam.com.my/version2/?p=108331 point- கருத்து படங்கள்
1 point- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
இன்று வெனிசுலாவில் அரங்கேறி வரும் அமெரிக்காவின் அதே "கடத்தல்" தந்திரம், முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவின் ஒரு மண்ணில் மிக மோசமாகத் தோல்வியடைந்தது. அந்த வரலாற்றுப் பாடத்தின் பெயர்: 'Mogadishu War' (1993). 1993-ல் சோமாலியாவின் உள்நாட்டுப் போரில் தலையிட்ட அமெரிக்கா, அங்கிருந்த முக்கியத் தலைவர்களைக் கடத்தத் திட்டமிட்டது. இதற்காக உலகின் மிகச்சிறந்த படைப்பிரிவாகக் கருதப்படும் Delta Force மற்றும் Rangers களமிறக்கப்பட்டனர். நவீன ஆயுதங்கள், அதிநவீன ஹெலிகாப்டர்கள் என ஒரு சினிமா பாணியில் அந்தத் தாக்குதல் தொடங்கியது. அமெரிக்காவின் கர்வத்தை உடைக்கும் விதமாக, சோமாலிய வீரர்கள் எளிய ஆயுதங்களைக் கொண்டு அமெரிக்காவின் பெருமைமிகு இரண்டு பிளாக் ஹாக் (Black Hawk) ஹெலிகாப்டர்களைச் சுட்டு வீழ்த்தினர். வானில் பறந்த அந்த இரும்புப் பறவைகள் மண்ணில் சரிந்தபோது, அமெரிக்காவின் திட்டமும் சுக்குநூறானது. ஒரு சில மணிநேரங்களில் முடியும் என்று நினைத்த அந்த நடவடிக்கை, 15 மணிநேரக் கொடூரப் போராக மாறியது. அடி என்றால் அப்படி ஒரு அடி…கனவிலும் கூட அப்படி ஒரு அடிவிழும் என நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்… அந்த எதிர்த்தாக்குதலில் 18 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். 73-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மிக முக்கியமாக, உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் உடல்கள் மொக்டிஷோ நகரின் தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டன. உலகமே தொலைக்காட்சியில் பார்த்த அந்த காட்சிகள், அமெரிக்காவின் முகத்தில் பூசப்பட்ட அழிக்க முடியாத கரியானது. ஒரு வல்லரசின் அராஜகம், வீரமும் விசுவாசமும் நிறைந்த ஒரு எளிய தேசத்தின் முன்னால் எப்படிப் பாழாகிப் போகும் என்பதற்கு இதுவே சாட்சி. இந்த வரலாற்று அவமானத்திற்குப் பிறகு, சோமாலியா பக்கம் எட்டிப் பார்க்கவே அமெரிக்கா நீண்ட காலம் அஞ்சியது. இன்று வெனிசுலாவில் நடக்கும் அதிகார ஆக்கிரமிப்புகளுக்குப் பின்னால் அதே போன்ற ஒரு 'வெற்றி' கிடைக்கும் என அமெரிக்கா கணக்குப் போடலாம். ஆனால், வரலாறு எப்போதும் ஒரு பாடத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறது: "மண்ணின் மைந்தர்களின் வீரம், எந்த நவீன ஆயுதத்தையும் விட வலிமையானது." (குறிப்பு: இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்துத்தான் புகழ்பெற்ற 'Black Hawk Down' திரைப்படம் எடுக்கப்பட்டது) email1 point- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
நான் மேலே கூறியவை யாவும் எடுகோள்களே. செய்திக்கு அப்பால் சென்று, என்ன நடக்கிறது என்பதை உய்துணர முயலும் முயற்சி மட்டுமே. இப்படித்தான் நடக்கிறது என்றால்… இந்த சங்கியிலின் ஓரங்கமாகவே நான் டிரம்பின் முதலாவது தேர்தல், பிரெக்சிற், கொவிட் உருவாக்கம், டிரம்பின் 2ம் தேர்வு ஆகியவற்றை காண்கிறேன். பிகு இவை 100% சதிகோட்பாட்டு என புறம்தள்ள தக்க கருத்துக்கள் என்பதை முழுதாக ஏற்கிறேன்.1 point- கருத்து படங்கள்
1 point1 point- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
நீங்கள் கூறுவது விளங்குகிறது. உலக பிரச்சனைகளின் ஆணிவேர் பொருளாதாரம் என கருதுகிறேன், இந்த வெனிசுலா பிரச்சினை மற்றும் புதிய உலக ஒழுங்கின் போக்கு கோவிட் கால பாதிப்பு நீட்சியாக இருக்குமோ என கருதுகிறேன். கோவிட் காலத்தில் இருந்ததனை போல வழங்கல் சங்கிலியில் மிக பெரிய இடையுறு தற்போதுதான் உள்ளது, தற்பொதய முயற்சிகள் ஒரு தன்னிறைவு பிராந்திய பொருளாதாரத்தினை மையமாக மாற்றம் ஏற்படுவது போல உணருகிறேன். அமெரிக்க பொருளாதார நெருக்கடி; அமெரிக்க பாதுகாப்பு செலவீடுகளை மட்டுப்படுத்துகிறது, இது சேத கட்டுப்பாடு நடவடிக்கையாக இருக்குமா? முன்னரை போல அமெரிக்க பாதுகாப்பிற்கு அமெரிக்காவினால் செலவிடமுடியாது என கருதுகிறேன். இது ஒரு தவிர்க்கமுடியாத கால மாற்றம், அதற்கு சில கடந்த கால கொள்கைகளும் காரணமாகிறது என கருதுகிறேன்.1 point- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
அமெரிக்கா முன்னர் நடத்திய இராணுவ நடவடிக்கைகள் அல்லது அக்கிரமிப்புப் போர்களில் முவைத்த பொய்யான காரணங்களைப் போல் அல்லாமல் வெனிசுவேலா மீது தாம் மூன்று மணிநேர நடவடிக்கையினை நடத்தி மடூரோவைக் கைது செய்ததன் உண்மையான நோக்கம் வெனிசுவேலாவில் இருக்கும் எண்ணை வளத்தைத் தாம் கைய்யகப் படுத்தத்தான் என்று ட்ரம்ப் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். எண்ணெய்க் கிணறுகளை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து, அவற்றை மீளக் கட்டியெழுப்பி, முன்னர் அங்கு இயங்கிய அமெரிக்க எண்ணெய்க் கம்பெணிகள் கடந்த இரு வெனிசுவேலா நிர்வாகங்களினால் மூடப்பட்டபோது ஏற்பட்ட இழப்புகளுக்கான நட்டவீட்டை வளங்கப்போவதாகவும், பின்னர் எண்ணெயினை அகழ்ந்தெடுத்து, சுத்திகரித்து , ஏற்றுமதி செய்வதன் மூலம் பெறப்படும் பணத்தை இக்கம்பெணிகள் எடுக்கும் என்றும், வெனிசுவேலா நாட்டினை அபிவிருத்தி செய்யவும் இந்நிதி பயன்படும் என்றும் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். ஆக, மடூரோ தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டதோ அல்லது அமெரிக்காவினுள் போதைவஸ்த்தை கொண்டு வருவதைத் தடுக்க ஆவண செய்யாமலிருப்பதோ அவர் கைதுசெய்யப்பட்டு இழுத்துவரப்படுவதற்குக் காரணமில்லை. ட்ரம்ப்பிற்கும் புட்டினுக்கும் இடையே உள்ள ஒற்றுமை என்னவென்றால், ட்ரம்ப் வெனிசுவெலாவின் எண்ணெய் வளத்தை பலாத்காரமாகத் திருடப்போகிறார், புட்டின் உக்ரேனை ஆக்கிரமித்து வருகிறார்.1 point- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
1987 இல் ஆசைக்கு வடகிழக்கை வைத்திருந்தவர்கள் தானே. இந்தவருடம் இலங்கையை யார் வைத்திருப்பார்கள். திருகோணமலையை அமெரிக்கா வைத்திருக்குமோ?1 point- கருத்து படங்கள்
1 point1 point- சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது – சீன ஜனாதிபதி!
4 மீன்பிடி கப்பலுக்கு குண்டுபோட்டு கொஞ்ச போதைப் பொருளை எடுத்துவிட்டு நாட்டைப் பிடிக்க வேண்டியது தான். பழையபடி எல்லோரும் அரசர்கள் தான்.1 point- விடுதலைப் புலிகள் மருத்துவ அணியின் சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம்!
"சல்லியர்கள்" ஈழத்தமிழர் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.ஈழத்தமிழர்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டிய படைப்பு.1 point- 🏥 பாரதிராஜா அவசர சிகிச்சைப் பிரிவில் ) அனுமதிக்கப்பட்டுள்ளார்
அறிமுகமான முதல் படத்திலேயே ஒரு கொட்டகைக்குள்(எவிஎம் ஸ்ரூடியோ) படப்பிடிப்பை நடத்துவதை உடைத்த முதல் மனிதர். எனக்கு இவர்மேல் அலாதிபிரியம்.1 point- கருத்து படங்கள்
1 point1 point- கருத்து படங்கள்
1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
"ஒழுங்கா" மகிழ்ச்சியோ இன்பமோ ஒழுங்கா என்பதில் ஒருபோதும் இல்லை. அதை எப்போது மீறுகிறோமோ அங்கேதான் இன்பம் துளிர்க்கும். அப்படி இல்லையெனில் எப்படி ரோலர்கோஸ்ட்டர் பாரக்குகள் பணம் பார்க்க முடியும்? ஒரு திரில் எப்படி வரும். கள்ள காதலாகவே இருந்தாலும் ஓடு கழட்டி அதை கோவில் கர்ப்பகிரகத்திற்கும் அரேங்கேற்றும்போதுதான் சிவன் - பார்வதியின் ஆசிர்வாதத்துடன் முழுமை அடையும். சிவனுக்கும் பார்வதிக்கும் அவர்கள் படைத்த ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் சம்மத்துடன் இன்பம் ஈர்க்கிறார்கள் அதில் அவர்கள் படைப்பின் உன்னதம் மட்டுமே தெரியும். மனிதர்களுக்கு அவர்களே எழுதாத அவர்களுக்கே புரியாத ஒரு ஆயிரம் வருடம் முன்பு யாரோ யாருக்கோ எதுக்காகவோ எழுதிய வரைமுறைகளை வழக்குகளும் வரையறைகளும் குறுக்கே நிற்கும். புத்தானே பல ஆயிரம் வருடங்கள் முன்பு சொல்லி இருக்கிறான் ....... "நீ பயத்தை எப்போது விடுகிறாயோ அந்த நொடியில் இருந்து வாழ தொடங்குகிறாய்" என்று அவர்கள் வாழ்ந்து இறந்து இருக்கிறார்கள் ........ நாங்கள் சாப்பிட்டுவிட்டு சுவாசித்துக்கொண்டு இருக்கிறோம்1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இனிமேல் தான் தலையிடிகள் இருக்கின்றது. அமெரிக்காவின் பரம எதிரியான ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சம் தலையில் பல தேசிக்காய்கள் உக்ரேன் பிரச்சனை மூலம் அரைக்கப்படும் என நினைக்கின்றேன்.😂1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
- ரஷ்ய முதலீட்டாளர்கள் வடக்கில் முதலீடு செய்வதற்கு ஊக்குவியுங்கள் - ரஷ்ய தூதுவரிடம் வடக்கு ஆளுநர் கோரிக்கை
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.