Leaderboard
-
goshan_che
கருத்துக்கள உறவுகள்18Points19557Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்18Points88721Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்12Points39247Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்8Points20307Posts
Popular Content
Showing content with the highest reputation on 02/13/26 in all areas
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஸிம்பாப்வே அணி, பிரயன் பென்னிட்டின் ஆட்டமிழக்காத 64 (56 பந்துகள்) ஓட்டங்களுடனும், தடிவனஷே மருமனியின் 35 (21 பந்துகள்) ஓட்டங்களுடனும், றயான் பேர்ளின் 35 (30 பந்துகள்) ஓட்டங்களுடனும் 2 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு 170 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்ததால் நிலைகுலைந்தனர். மற் றென்ஷோ 65 (44 பந்துகள்) ஓட்டங்களுடனும், கிளென் மக்ஸ்வெல் 31 (32 பந்துகள்) ஓட்டங்களுடனும் நிலைகொள்ள முயன்றும் விக்கெட்டுகள் சரிந்ததால் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து அதிர்ச்சியான தோல்வியைத் தழுவியது. பிளெஸிங்க் முஸர்பனி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். முடிவு: ஸிம்பாப்வே அணி 23 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ஸிம்பாப்வே அணி வெல்லும் எனக் கணித்த @நிலாமதி அக்காவுக்கு மாத்திரம் இரு புள்ளிகள் கிடைக்கும். மற்றைய 22 பேருக்கும் புள்ளிகள் கிடையாது! இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி, ஹர்ஷ் தாக்கரின் 50 (41 பந்துகள்) ஓட்டங்களுடனும், நவ்னீட் தலிவாலின் 34 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், 7 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ஜுனைட் சித்திக் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமீரகம் அணி, அர்யன்ஷ் ஷர்மாவின் ஆட்டமிழக்காத அதிரடியான 74 (53 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷொஹைப் கானின் புயல்வேக 51 (29 பந்துகள்) ஓட்டங்களோடும், 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: ஐக்கிய அமீரகம் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ஐக்கிய அமீரகம் அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். கனடா அணி வெல்லும் எனக் கணித்த 09 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்கா அணி, சைடெஜா முக்கமல்லாவின் அதிரடியான 79 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷுபம் ரஞ்சனேயின் ஆட்டமிழக்காமல் மின்னல்வேகத்தில் எடுத்த 48 (24 பந்துகள்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பாடிய துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணியின் வீரர்கள் நிலைத்து ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 15.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. ஹர்மீட் சிங் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: ஐக்கிய அமெரிக்கா அணி 93 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நெதர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: இன்று முதல்வர் நாற்காலியை @alvayan அலங்கரிக்கின்றார் 😆6 points
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
இவை எல்லாமும் மட்டும் அல்ல அதிபர் ஆனந்தராஜா போன்றோர் கொலைகளும் அரங்கேறின. இவை அரசியல் கொலைகள். ஆனால் களவுக்கு புலிகள் மரண தண்டனை வழங்கியதாக நான் அறியவில்லை. கப்பம் கேட்டு கொடுக்காத போது புளொட் சுட்டு கொன்றது என கேள்விபட்டுள்ளேன். புலிகள் பல கொலைகளை, குறிப்பாக 85-86 மற்றும் 87-90 இல் செய்தார்கள். எங்கள் ஊரில் புலியும் ஈப்பியும் ஏட்டிக்கு போட்டியாக கொன்றவர்கள் லிஸ்ட் மிக பெரிது. ஆனால் எல்லாமும் அரசியல், இராணுவ சம்பந்த பட்ட கொலைகளே. கோழி கள்ளன், மாட்டுக்கள்ளனை எல்லாம் சுட்டார்கள் என்பது - சோபா சக்தி போன்றோரின் மிகைபடுத்தல் மொழி என்றே நான் நினைக்கிறேன்.3 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட சிறிலங்கா அணி, பவன் ரத்னாயக்கவின் புயல்வேக 60 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் தசுன் ஷானகவின் மின்னல்வேக 50 (20 பந்துகள்) ஓட்டங்களுடனும், குசல் மென்டிஸின் அதிரடியான 61 (45 பந்துகள்) ஓட்டங்களுடன் 5 விக்கெட்டுகளை இழந்து இத் தொடரின் தற்போதைய அதிகூடிய 225 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் அணியில் மொஹமட் நடீம் மாத்திரம் ஆட்டமிழக்காமல் 53 (56 பந்துகள்) ஓட்டங்களை எடுத்தார். மற்றையோர் தொடர்ச்சியாக ஆட்டமிழந்ததால் இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: சிறிலங்கா அணி 105 ஓட்டங்களால் வெற்றியீட்டியது சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஓமான் அணி வெல்லும் எனக் கணித்த @நிலாமதி அக்காவுக்கு புள்ளிகள் இல்லை. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நேபாளம் அணியின் வீரர்கள் ஒருவரும் நிலைத்து ஆடாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. பதிலுக்கு 124 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி, சகோதரர்களான அந்தனி மொஸ்காவின் புயல்வேக ஆட்டமிழக்காத 62 (32 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜஸ்டின் மொஸ்காவின் அதிரடியான ஆட்டமிழக்காத 60 (44 பந்துகள்) ஓட்டங்களோடும் 12.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 124 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: இத்தாலி அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது இத்தாலி அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நேபாளம் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்திய அணியின் இஷான் கிஷனின் மின்னல்வேக 61 (24 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஹார்டிக் பாண்டியாவின் புயல்வேக 52 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும் 9 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பந்துவீச்சில் நமீபியா அணித்தலைவர் ஜெர்ஹார்ட் எரஸ்மஸ் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய துடுப்பெடுத்தாடிய நமீபியா அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்கள் 20 க்கு மேற்பட்ட ஓட்டங்களை எடுத்திருந்தாலும், விக்கெட்டுகள் தொடர்ச்சியாக வீழ்ந்ததனால் 18.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. முடிவு: இந்தியா அணி 93 ஓட்டங்களால் வெற்றியீட்டியது இந்திய அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நமீபியா அணி வெல்லும் எனக் கணித்த @நிலாமதி அக்காவுக்கு புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:3 points
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
சாவச்சேரி டெலோ காம்பை அடித்து முடித்து விட்டு வந்த புலிகளுக்கு சோடா உடைத்து கொடுத்தேன் என சொன்ன காலம் தொட்டு, அதற்கு முன் சண்டியர்களை ஹீரோ போல் நடத்திய காலம் தொட்டு இந்த மனநிலை உள்ளது. அன்றைய நிலையில் டெலோவின் கை ஓங்கி, புலிகளை அடித்திருந்தாலும் - டெலோவுக்கும் இன்னும் ஒரு குரூப் சோடா உடைத்து கொடுத்திருக்கும். இதே மனநிலையை நீங்கள் ஆப்கானிகளிடமும் காணலாம். சங்கிகளிடமும், தென் தமிழ்நாட்டு சாதி சங்க அடிப்பொடிகளிலும் காணலாம். இலண்டனில் பெரியார் வாசக வட்டத்தில் போய் ஒரு பெண்ணோடு வம்பிழுத்த கூட்டத்திடமும் காணலாம். வன்முறையை வீரம் என்றும், பிற்போக்குத்தனத்தை மானம் என்றும் தலைகீழாக விளங்கி கொள்ளும் சகல மொக்கு கூட்டங்களிலும் இது உண்டு. ஆனால் சிங்கள காடையர்கள் திரண்டு வருகிறார்கள் என்றால் எதிர்த்து ஒரு குருவி நிற்காது. இவர்கள் பலசாலிகளை மட்டும் போற்றும் பச்சோந்திகள். புலிகள் பலமாய் இருந்தால் புலிகள்… அனுர பலமாய் இருந்தால் அனுர… இவர்கள் தமது அடிப்படைவாத உந்தலில் முகநூலில் வந்து எழுதும் குப்பைகெல்லாம், புலிகளை பொறுப்பாக முடியாது என்பது என் கருத்து. அதே போல் அவர்கள் செய்யாத விடயங்களையும் பொத்தாம் பொதுவில் (கோழி கள்ளன், மாட்டு கள்ளன்) அவர்கள் தலையில் போடக்கூடாது. இதை ஒரு figure of speech ஆக நீங்கள் சொல்லி இருக்கலாம். ஆனால் கோழி பிடித்தவன், மாட்டு கள்ளன், பிற்பொக்கற் அடித்தவனை எல்லாம் புலிகள் மரண தண்டனைக்கு உள்ளாக்கினர் என்பதை - போராட்ட காலத்தில் வாழ்ந்த, வாசித்த என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதலமைச்சர் அல்வாயனுக்கு வாழ்த்துக்கள். பின்வாங்கு கோஸ்டியோடு சேர வேண்டாமென @வீரப் பையன்26 க்கு சொல்ல சொல்ல கேட்காமல் சேர்ந்த பலனை நாளை அனுபவிப்பார். @ரசோதரன் கெட்டிக்காரன் மெதுவா விலகிவிட்டார்.2 points
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
கோபுவை பற்றி நான் அறியவில்லை. ஆனால் போயா, ஜப்பான் ஆகியோர் கொலை பற்றி அறிந்துள்ளேன். அதை புலிகள் செய்யவில்லை என நினைக்கிறேன். ஆனால் அந்த மனைவி கழுத்தை வெட்டியதை “தலைவன் வழி” என எத்தனை பெயர் எழுதினாலும் அவர்களுக்குதான் மண்டை பிழையே ஒழிய, இது அவரின் வழி அல்ல, என்பது வெள்ளிடமலை. சில பழமைவாத மடமைவாதிகள் தம் மனதில் தோன்றும் பிற்போக்கு அழுக்குகளை எல்லாம், தலைவர் வழி, புலிகள் வழி என பக்கெட் பண்ண முயல்வதை நாம் யாழில் கூட காண்கிறோம். ஆனால் அது உண்மை அல்ல.2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@நிலாமதி அக்கா இந்த ஒரு வெற்றி போதும். இது சாதாரண வெற்றி அல்ல. இந்த தொடரையே நீங்க வென்றதற்கு சமம். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். ஆனையிறவு களத்தை புலிகள் கைப்பற்றியது போல உள்ளது.2 points
-
நீதிபதியாகும் கேரளாவின் முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்
'நான் படிக்க முடியுமா என கேட்பார்கள்' - நீதிபதியாகும் கேரளாவின் முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் பட மூலாதாரம்,Thanya Nathan படக்குறிப்பு,24 வயது தான்யா பிறவியிலிருந்தே பார்வை சவால் உடையவர் ஆவார். கட்டுரை தகவல் நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 12 பிப்ரவரி 2026, 05:59 GMT வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் "சவால்களை கடப்பதை தவிர எனக்கு வேறு எந்த வாய்ப்புகளும் இல்லை. கடின உழைப்பும் நிலையான பயிற்சியும் இருந்தால் நினைத்ததை சாதிக்க முடியும்." 24 வயது தான்யா நாதனின் பேச்சில் உறுதியும் தெளிவும் வெளிப்படுகிறது. இவர், பிறவியிலிருந்தே பார்வை சவால் உடையவர் ஆவார். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த தான்யா, கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்றுபூர்வ தீர்ப்பை தொடர்ந்து, அதே ஆண்டில் கேரள நீதித்துறை சேவை தேர்வெழுதி, அதில் மாற்றுத்திறனாளிகள் போட்டியாளர்களுக்கான தகுதிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். இதன்மூலம், கேரளாவில் சிவில் நீதிபதியாகும் (இளநிலை பிரிவு - Junior division) முதல் முழு பார்வை மாற்றுத்திறன் கொண்ட நபராக தான்யா உள்ளார். "நான் நீதிபதியாவது என்பது சாத்தியமில்லாத, கனவுகளுக்கும் அப்பாற்பட்ட ஒன்றாகத்தான் இருந்தது. ஆரம்பத்தில் நாங்கள் (பார்வையற்றவர்கள்) தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. 2025ம் ஆண்டில் தான் உச்ச நீதிமன்றம் பார்வையற்றவர்கள் நீதிபதி தேர்வெழுத அனுமதித்து தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பு தான் என் திருப்புமுனை." என்கிறார் தான்யா நாதன். உத்வேகம் அளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் பார்வையற்ற நபர்களும் நீதிபதியாகலாம் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மத்திய பிரதேச நீதித்துறை சேவைகள் தேர்வில் இருந்த விதிமுறைகளை ரத்து செய்து, நீதிபதிகள் ஜேபி பர்டிவாலா மற்றும் ஆர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த முக்கியமான தீர்ப்பை வழங்கியது. மத்திய பிரதேச நீதித்துறை தேர்வு விதிமுறை 6(ஏ)-வின்படி, நீதித்துறை நியமன நடவடிக்கைகளில் பார்வையற்றோர் பங்குபெறுவது தடை செய்யப்பட்டிருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியதாக லைவ் லா இணைய தளம் கூறுகிறது. இதன்மூலம், நீதித்துறையில் பார்வை மாற்றுத்திறனாளிகளின் உரிமையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. "மாற்றுத்திறனாளிகள் நீதித்துறையில் எவ்வித பாகுபாட்டையும் எதிர்கொள்ளக்கூடாது. இதனை உறுதியான நடவடிக்கை மூலம் மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்." என உச்ச நீதிமன்றம் கூறியிருந்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. முதல்நிலை, முதன்மை எழுத்துத் தேர்வு அதன்பின் நேர்காணல் என மூன்று அடுக்கு தேர்வு முறைகளை கொண்ட கடினமான செயல்முறைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது சிவில் நீதிபதி தேர்வு முறை. இந்த தேர்வில் தான்யா அவ்வளவு எளிதில் வெற்றி பெறவில்லை. "படிப்பதற்கு தேவையான புத்தகங்கள் கிடைப்பது சவாலாக இருந்தது. சட்டம் போன்ற துறைகளில் புத்தகங்கள் அனைத்தும் முழுமையாக டிஜிட்டல் வடிவிலோ அல்லது பிரெய்லி புத்தகங்களாகவோ எங்களுக்கு கிடைப்பதில்லை. தேர்வுக்கு தயாராவதில் இதுதான் எனக்கு பிரச்னையாக இருந்தது." என கூறுகிறார் தான்யா நாதன். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,"மாற்றுத்திறனாளிகள் நீதித்துறையில் எவ்வித பாகுபாட்டையும் எதிர்கொள்ளக்கூடாது." என கூறியிருந்தது உச்ச நீதிமன்றம் பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்த இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குடிமைத் தற்காப்புச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றில் மாற்றம் செய்யப்பட்டு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய புதிய சட்டங்கள் 2024ம் ஆண்டு ஜூலை மாதம் நடைமுறைக்கு வந்தன. எனவே, பழைய சட்டங்கள் குறித்த குறிப்புகள் டிஜிட்டல் வடிவில் கிடைப்பது தனக்கு சவாலாக இருந்ததாக தான்யா குறிப்பிடுகிறார். படிப்பதில் சிரமங்கள் "எனக்கு தேவையான குறிப்புகளை மற்றவர்களை போன்று நான் உடனேயே படித்துவிட முடியாது. முதலில் குறிப்புகளை டிஜிட்டல் வடிவிலோ அல்லது பிரெய்லி வடிவமாகவோ மாற்றிதான் படிக்க வேண்டும். என்னுடைய செல்போனில் எழுத்துகளை ஒலி வடிவில் மாற்றித்தரும் செயலியையே நான் அதிகம் சார்ந்திருக்கிறேன். இவையெல்லாம் அதிக நேரம் எடுக்கும் செயல்முறை. நீங்கள் தேர்வை எழுத வேண்டும் என நினைத்தால் இந்த வழிமுறைகளை செய்துதான் ஆக வேண்டும், ஏனெனில் அதுதான் எங்களுக்கு இருக்கும் ஒரே வழி." அவரின் தாய் பபிதா - தந்தை ஜெகந்நாதன் இருவரும் வெளிநாட்டில் வசிக்கின்றனர். அவருடைய மூத்த சகோதரியும் வெளிநாட்டில் பணிபுரிகிறார். தான்யா சோர்ந்துபோகும் நாட்களில், "பரவாயில்லை, இதுவும் சரியாகிவிடும்," என்றே தன்னுடைய பெற்றோர் கூறுவார்கள் என்கிறார். தானும் அத்தகைய சமயங்களில் சிறிது காலம் அமைதியாக இருந்து அந்த சவாலை ஏற்றுக்கொண்டு கடக்க முயற்சிப்பேன் என்கிறார் தான்யா. பள்ளி, கல்லூரி நாட்களில் எவ்வித கேலியையோ அல்லது பெரிய புறக்கணிப்புகளையோ தான் சந்தித்ததில்லை என்கிறார் அவர். ஏழாம் வகுப்பு வரை கண்ணூரின் தர்மசாலாவில் உள்ள பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் படித்தார், பின்னர் 12ம் வகுப்பு வரை அனைவரையும் உள்ளடக்கிய பள்ளியில் படித்தார். பின்பு, கண்ணூர் பல்கலைக்கழகத்தில் எல்எல்பி படிப்பில் முதல்தரத்தில் தேர்ச்சி பெற்று, 2024ம் ஆண்டில் வழக்கறிஞராக தன்னை பதிவு செய்துகொண்டார். பட மூலாதாரம்,Thanya Nathan "நீதித்துறையை தேர்ந்தெடுத்ததற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. சட்ட ரீதியான அறிவு நிச்சயமாக ஒரு பலம். விவாதம் நடத்துவதோ அல்லது குரலை உயர்த்துவதோ இத்துறைக்கு முக்கியம் அல்ல. உங்களின் கருத்துகளை தெளிவாக சொல்வதுதான் முக்கியம் என்பதில் எனக்கு தெளிவு இருந்தது. விளிம்புநிலையில் உள்ள என்னைப் போன்றவர்களுக்கு சட்ட அறிவு நிச்சயம் வேண்டும். உங்களின் உரிமைகளை தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான், நீங்கள் எந்தவித தாக்குதலுக்கு ஆளாகும்போதும் உங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்." சிறப்புப் பள்ளியில் படித்தது முக்கிய காலகட்டம் என்று கூறும் அவர், அங்குதான் பிரெய்லியில் படிப்பது உள்ளிட்ட மற்ற சமூக திறன்களை கற்றுக்கொண்டதாக கூறினார். "என்னுடைய சிறுவயது எல்லோரை போலவேதான் இருந்தது, ஒரு வித்தியாசம் எனக்கு பார்வை ரீதியான சவால் இருந்ததுதான். என்னைப் போன்றவர்கள் இந்த உலகத்துக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ள போராட வேண்டியிருக்கும். அதற்கு என் குடும்பம், நண்பர்கள், என்னுடைய சீனியர் சுனில் குமார் போன்றோர் எனக்கு உறுதுணையாக இருந்துவருகின்றனர். என் சீனியர் சுனில் குமார் எனக்கு தந்தை போன்றவர். ஒரு குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது போல சொல்லித் தருவார்." தான்யாவின் மூத்த வழக்கறிஞர் சுனில் குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது. "ஆரம்பத்தில் அவர் எப்படி பணியாற்றுவார் என்பதில் எங்களுக்கு பயம் இருந்தது. ஆனால், ஒரு வாரத்திற்குள்ளேயே தான்யா தன் திறமையை வெளிப்படுத்தினார். தான்யாவின் வாதங்களை நீதிபதிகள் அடிக்கடி பாராட்டுவார்கள். ஒரு வழக்கை தாக்கல் செய்வது, வாதிடுவது என எல்லா பணிகளையும் தனியாக பார்ப்பார்." என்றார். தான்யா நீதிமன்றத்தில் தனக்கென உதவியாளர் யாரையும் வைத்துக்கொள்ளவில்லை. எனினும், தனக்காக கிளார்க் ஒருவரை நியமித்துள்ளார், அவர் தான்யாவுக்காக தட்டச்சு செய்வது உள்ளிட்ட பணிகளில் உதவுகிறார். நீதித்துறையில் சவால்கள் பாகுபாட்டுடன் அணுகுபவர்களையோ அல்லது அவர்களின் கருத்துகளையோ தான்யா நாதன் பொருட்படுத்துவதில்லை. "நான் எல்எல்பி படிப்பை படிக்க முடியுமா என சிலர் கேட்பார்கள். என்னால் வழக்கறிஞராக வேலை பார்க்க முடியுமா என கேள்வி கேட்பார்கள். நான் அவற்றில் கவனம் செலுத்துவதில்லை." பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பிரெய்லி புத்தகம் (சித்தரிப்புப் படம்) நீதித்துறையில் பார்வை சவால் கொண்டவராக அவருக்கான வாய்ப்புகள் எப்படி இருந்தன? "நிச்சயமாக சமவாய்ப்பு என்பது இல்லை. ஆனால், சிலவற்றை செயல்படுத்துவதன் மூலம் இதனை மாற்ற முடியும். குறிப்பாக, கேரளாவில் நீதிமன்ற நடவடிக்கைகளை டிஜிட்டல்மயப்படுத்துவது நடைபெற்று வருகிறது. இதன்மூலம், சம வாய்ப்புகள் கிடைப்பதை உறுதிப்படுத்த முடியும்." என்கிறார் தான்யா. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கண்ணூரில் உள்ள தலிபரம்பா நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்துவந்தார் தான்யா. எனவே, அவர் இந்த தேர்வுக்காக தனியே பயிற்சி பெறவில்லை. வழக்கறிஞராக பயிற்சி பெறுவதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களே தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு போதுமானதாக இருந்திருக்கிறது. அவர் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, இன்னும் ஓராண்டு காலம் அவர் வழக்கறிஞராக பயிற்சி பெற வேண்டும். "வழக்கறிஞராக பணியை தொடங்கியபோது என் மனதில் நிறைய நிச்சயமற்ற விஷயங்கள் இருந்தன. எனக்கு வேலை செய்வதற்கான சௌகரியமான சூழல் கிடைக்குமா என்ற கேள்வி இருந்தது. ஆனால், இந்த அழுத்தங்கள் எல்லாம் நீதிமன்றத்தில் கால்பதித்த உடனேயே மறைந்துவிட்டது. முதல் நாள் நீதிமன்றம் சென்றபோது நான் மிகுந்த ஆவலுடன் இருந்தேன். சிவில் வழக்கில்தான் வாதாடினேன். என்னுடைய வாதத்தை நீதிபதி பாராட்டினார். மற்ற வழக்கறிஞர்கள் எல்லோரும் எனக்கு ஊக்கமளித்தனர். நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக்கொண்டனர். நான் எப்போதெல்லாம் வாதிடுகிறேனோ அப்போதெல்லாம் நீதிபதிகள் என்னை மனதார பாராட்டினர். அந்த ஊக்கம் தான் தொடர்ந்து என்னை முன்னேறச் செய்தது." என கூறுகிறார் தான்யா. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் என்ன மாற வேண்டும்? பார்வை சவால் உட்பட மாற்றுத்திறன் உடையவர்களுக்கு நீதிமன்றங்கள் அணுகக்கூடிய விதத்தில் இருக்கின்றதா என கேட்டதற்கு, "நீதிமன்றங்களில் உள்கட்டமைப்புகள் நன்றாக இருக்கின்றன. எங்களின் ஊன்றுகோல் உதவியுடன் நாங்கள் நீதிமன்றங்களின் எல்லா இடங்களுக்கும் செல்ல முடியும். ஆனால், உடலியல் ரீதியான சவால்களை கொண்டிருப்பவர்களுக்கு நீதிமன்றங்கள் முழுவதும் அணுகக் கூடியதாக இல்லை. மாடிப்படிகள் அவர்களுக்கு தடைகளாக இருக்கின்றன, மேலும் சில இடங்களில் சாய்வு நடைபாதை (ramp) இருப்பதில்லை. இவையெல்லாம் மாற வேண்டும்." என கூறினார். தான்யாவுக்கு வழக்குகள் தொடர்பாக மலையாள மொழியில் உள்ள பழைய ஆவணங்கள் பிரெய்லி அல்லது டிஜிட்டல் வடிவில் இல்லாததால், அவரால் அவற்றை அணுகுவதில் சிரமங்கள் இருப்பதாக கூறுகிறார் வழக்கறிஞர் சுனில் குமார். எனவே, அவற்றை டிஜிட்டல்மயப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார். தொழில்நுட்பத்தின் மூலம் இந்த விஷயங்களை மேம்படுத்த வேண்டும் எனவும் அதன்மூலம் தான் சமவாய்ப்பை உறுதிப்படுத்த முடியும் எனவும் தான்யா வலியுறுத்துகிறார். ஸ்க்ரைப் உதவி மூலம் தனி அறையில் தேர்வு எழுதியுள்ளார் தான்யா. மாற்றுத்திறன் உடையவர்கள் இத்தகைய தேர்வெழுதுவதற்கான தற்போதைய நடைமுறைகள் நன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார். "ஸ்க்ரைப் நியமித்தல், பதவி உயர்வு போன்றவை தொடர்பாக சமீப காலங்களில் உச்ச நீதிமன்றங்கள் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை உறுதிசெய்துள்ளன." என அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார். "நம்முடைய இலக்கை அடைவதற்கு தொடர்ந்து கடினமாக உழைக்கும்போது அதற்கு பலன் கிடைக்கும். மாற்றுத்திறனாளிகள் தயங்கக்கூடாது. உச்ச நீதிமன்றம் நமக்கான வழியை திறந்துவிட்டுள்ளது, இனி, நாம்தான் நீதித்துறைக்குள் நுழைவதற்கான வேலைகளை செய்ய வேண்டும்." கடந்த 2009ம் ஆண்டு வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே திமிரி கிராமத்தை சேர்ந்த பார்வை மாற்றுத்திறன் கொண்ட டி.டி. சக்கரவர்த்தி மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் 4 வயதில் உடல்நலக் குறைபாட்டால் பார்வையை இழந்ததாக ஊடக செய்திகள் கூறுகின்றன. அதேபோன்று, 2018ம் ஆண்டு ராஜஸ்தானை சேர்ந்த பிரம்மானந்த சர்மா என்பவர் சிவில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் தன்னுடைய 22வது வயதில் கிளைகோமா நோயால் பார்வையை இழந்தவர் என ஊடக செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில், முழு பார்வை மாற்றுத்திறன் கொண்டவரான தான்யா, இளம் வயதில் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்று குறிப்பிடத்தக்க சாதனையை புரிந்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y4x3l6d38o2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
2 points
-
கருத்து படங்கள்
2 points2 points
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பின்வாங்கில உப்பிடி ஒருத்தர் எப்பவும் இருப்பார். டேர்ம் டெஸ்ட் நேரம் எல்லாம் எங்களோடு கிடந்து பிரண்டு போட்டு… ஓ எல், ஏ எல் சோதனை கிட்ட வந்தோன படிக்க தொடங்கி…நல்ல ரிசல்டும் எடுத்து விடுவார்கள்😂.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ரசோதரன் படிக்காத பிள்ளை எல்லோ. இப்போ படிக்கத் தொடங்கீட்டார் போல. 🤑1 point- பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
இங்கு எந்த எந்தக் குறூப் யாரை கொலை செய்தது என்பதற்கோ ஏன் கொலை செய்தார்கள் என்பதற்கோ எவராலும் விடை காண முடியாது. ஆனால் எனது கேள்வி என்ன வென்றால் ஒரு குடும்பத்தில் நடந்த கொடூரக் கொலையை எமது மக்களில் பெரும்பாலோனோர் கொண்டாடும் , ஆதரவாகக் கருத்திடும் மனநிலையை எங்கிருந்து பெற்றார்கள் என்பதை தான். இது நடந்தது ஏதோ நீண்ட காலத்துக்கு முன்பு அல்ல. சமீபத்தில் தான் என்பதால் தான் இந்தக் கேள்வி எழுந்தது.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ரபாடாவின் பந்து வீச்சு முன்பு போல் இல்லை அவரின் பந்துக்கு எப்பவும் இந்திய மைதானங்களில் அடி தான்................1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சொன்னமாரி செய்திட்டியல் என்ன? நாளைக்கு சவுத் ஆபிரிக்கா உங்களை பதிய விட்டு கிளப்பும் எண்டு ஜக்கம்மா சொல்றா😂1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளை சனி 14 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE எதிர் OMA அனைவரும் அயர்லாந்து அணி வெல்வதாகக் கணித்துள்ளனர்! இப்போட்டியில் போட்டியில் எல்லோருக்கும் முட்டைகள் பரிமாறப்படுமா? 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இங்கிலாந்து SCOT எதிர் ENG ஒரே ஒருவர் மாத்திரம் ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனவும் மற்றைய 22 பேர் இங்கிலாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ஸ்கொட்லாந்து சுவி இப்போட்டியில் @suvy ஐயாவுக்கு புள்ளிகள் கிடைக்க குருபார்வை உள்ளதா? 24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா NZ எதிர் SA 07 பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் 16 பேர் தென்னாபிரிக்கா அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். நியூஸிலாந்து வசீ புலவர் வீரப் பையன்26 கிருபன் கோஷான் சே நியாயம் நந்தன் தென்னாபிரிக்கா செம்பாட்டான் ஏராளன் சுவைப்பிரியன் அல்வாயன் ஈழப்பிரியன் நியூ பலன்ஸ் வாத்தியார் கறுப்பி வாதவூரான் சுவி அஹஸ்தியன் கந்தப்பு எப்போதும் தமிழன் ரசோதரன் பிரபா நிலாமதி இப்போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அண்ணை, அதெல்லாம் ஏற்கனவே பதிஞ்சிட்டனே! இனி மாற்ற சட்டத்தில் இடமில்லை!🤪1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அதுக்கு பல terms and conditions இருக்கு, அப்பிளிகேசன போடுங்கோ பாப்பம்😂1 point- தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்; தபால் போக்குவரத்துக்கு 10 லொறிகள், 20 கெப் வாகனங்களும் கையளிப்பு
தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள் ; தபால் போக்குவரத்துக்கு 10 லொறிகள், 20 கெப் வாகனங்களும் கையளிப்பு 13 Feb, 2026 | 04:41 PM (செ.சுபதர்ஷனி) தபால் சேவையில் நிலவிவரும் மனிதவள தேவையை நிவர்த்தி செய்ய 2,800 புதிய நியமனங்கள் வழங்கப்பட உள்ளதுளடன். தற்போது கடமையாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தபால் சேவையை தற்காலத்திற்கு ஏற்ப நவீனமயப்படுத்தி, அதன் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில் 849 மில்லியன் ரூபா செலவிலான விசேட திட்டங்கள் வியாழக்கிழமை (12) தபால் தலைமையகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தபால் போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்தும் நேக்குடன் 590 மில்லியன் ரூபா பெறுமதியான 10 லொறி வண்டிகள் மற்றும் 20 'குரு கெப்' (Crew Cab) ரக வாகனங்கள் என்பன உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டது. அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக, தபால்காரர்களின் மோட்டார் சைக்கிள்களுக்கான புதிய பொதி காவிப் பெட்டிகள் விநியோகிக்கப்பட்டதுடன், தபால் நிலையங்களின் பணிகளை இலகுபடுத்தும் நோக்கில் டெஸ்க்டொப் மற்றும் லெப்டொப் கணினிகள் மற்றும் 'டேப்' கருவிகள் என்பனவும் வழங்கப்பட்டன. மேலும், தபால் சேவையின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு பதில் பிரிவும் இதன்போது திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, கடந்த ஆண்டு தபால் திணைக்களம் 13,450 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. சில நெறுக்கடிகளுக்கு முகங்கொடுத்திருப்பினும், இதனை பார்க்கிலும் தபால் துறையால் அதிக வருமானத் பெறலாம். இவருடம் எதிர்பார்க்கப்பட்டுள் வருமான இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கையுள்ளது. தபால் சேவையில் நிலவிவரும் மனிதவள தேவையை நிவர்த்தி செய்ய 2,800 புதிய நியமனங்கள் வழங்கப்பட உள்ளதுளடன். தற்போது கடமையாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தபால் கட்டணம் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சியினர் பல விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். தபால் சேவையின் முன்னேற்றத்தை விரும்புவோர் இச்சேவையை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். தபால் சேவையை நிரந்தரமாக மூடிவிடும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை. சகல நவீன வசதிகளையும் வழங்கி அதனை உலகத்தரம் வாய்ந்த சேவையாக மாற்றுவதே தமது நோக்கமாகும் என்றார். https://www.virakesari.lk/article/2385861 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உங்கள் அவையடக்கம் பிடிக்கும். குயிலப் பிடிச்சு கூட்டுக்க வைத்தாலும்......1 point- பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
1984 - 1987 காலப்பகுதியில் இயக்கங்களால் கொடுக்கப்பட்ட தண்டனைகள் பொதுவாக இராணுவத்ததோடு தொடர்புவைத்துக்கொண்டு இயக்க நடவடிக்கைகளை காட்டிக்கொடுத்தல் (ஒத்தோடிகள்) தொடர் கொள்ளைகள், பாலியல் வல்லுறவுகள் இப்படியானவர்கள் மீது உடனடியாக இருந்தது. அதிலும் பல, தடவைகள் எச்சரிக்கை விடப்பட்டு, தொடர்ச்சியின் காரணமாக மரண தண்டனை வழங்கப்பட்டது. மரணதண்டனை கொடுத்ததை இன்று நான் ஆதரிக்கவில்லை. அன்று 16,17 வயதில் ஆழமாக சீர்தூக்கி பார்க்கும் பக்குவமும் இருக்கவில்லை. அன்றைய சூழ்நிலையில் கெரில்லா போராட்ட முறைகள் உலகம் முழுவதும் அப்படித்தான் இருந்தன என்று நினைக்கிறன். வெறும் கோழி திருடியவன், ஆடு திருடியவன் எல்லாம் மின்கம்பத்தில் கட்டப்படவில்லை. எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, பச்சைமட்டை பிரயோகப் படுத்தப்பட்டு தண்டனைகள் கொடுக்கப்பட்டது. எங்கள் ஊரில் ஒரு இளம்பெண் (எனது வகுப்பு தோழி, பெயர் சொல்வதை தவிர்க்கிறேன்) இந்திய இராணுவ சிப்பாய் ஒருவரோடு காதல் போன்ற ஒரு உறவில் இருந்தார். இந்திய ராணுவம் தோழியின் வீட்டு வாசலில் அடிக்கடி வாகனத்தை நிறுத்தி, களைப்பாறி, இளைப்பாறி போவார்கள். ஊர் மக்களுக்கும் கூட இதில் அதிருப்தி இருந்தது. அன்றைய நாவற்குழி இயக்க பொறுப்பாளர் அருள் ஓரிரு தடவைகள் தோழியின் வீட்டுக்கு சென்று தாய் தகப்பன் சகோதரர்களோடு உறவாடி எச்சரிக்கை விடுத்து இருந்தார். இருந்தும் இந்திய ராணுவம் வீட்டுக்கு வருவதை நிறுத்தவில்லை. தோழியும் இதை சீரியஸாக எடுக்கவில்லை. கடைசியில் பொறுப்பாளர் தோழியின் வீட்டு வாசலில் வைத்தே அவருக்கு தண்டனை வழங்கினார். அதிசயமாக அந்த பிள்ளையும் முகத்தில் பாரிய முகம் சிதைந்த காயத்துடன் உயிர் தப்பியது. இதேபோல வெள்ளையன் என்று அழைக்கப்பட்ட (பின்னாளில் EPRLF / EPDP அட்டகாச குழு உறுப்பினர் ) பல சிறிய திருட்டு செயல்களுக்காக, பெண்கள் சேஷ்ட்டை காரணங்களுக்காக இயக்க முகாமுக்கு அழைக்கப்பட்டு பச்சை மட்டை தண்டனை வழங்கப்பட்டு கொஞ்ச காலம் அமைதியாக இருந்தார். இந்திய ராணுவம் வந்தவுடன் EPDP, EPRLF குழுக்களோடு சேர்ந்தது ஊரில் பெரும் அட்டகாசங்கள் செய்தார். இரண்டு, மூன்று அப்பாவி இயக்க ஆதரவாளர்கள் கொலைகளோடு கூட அவனின் பெயர் பேசப்பட்டது.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அப்படியும் எனக்கு மேலே போக போகிறீர்கள். கடைசியாய் வாறது சும்மா லேசுபட்ட விடயம் அல்ல என இப்போ புரிந்திருக்கும்😂 எனக்கு 1 பொரிக்கும் போல கிடக்கு. ஆனால் நிலை அதே தான் 😂1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சுவி அண்ணா இந்தளவு மகிழ்ச்சி இல்லை . எதோ குருட்டு லக் என்பார்கள் . எல்லாம் டக் டிக் டோஸ் ...விளையாட்டுத்தான்1 point- பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
பெயர் தெரியாத முகநூல் தளத்தில், யாரோ நா... தாரி (மொக்கை) கருத்தை இப்படி ஒரு சமூகத்தின் கொள்கை தீர்மானமாக நீங்கள் எடுத்து காவித்திரிவது சிரிப்பை உண்டாகிறது சகோ. இதை எழுதியவன் நோக்கம் கூட இந்த சமூகத்தை அசிங்கப்படுத்திடுவதாகவும் இருக்கலாம்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்று நெதர்லாந்து (அமெரிக்கா) ஒரு முடிவோட தான் இறங்கியிருக்கு.1 point- அகில இலங்கையில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான உதைபந்தாட்ட போட்டியின் இறுதிபோட்டியில் வெற்றி பெற்ற தெல்லிப்பழை யூனியன் கல்லூரி
1 point- அகில இலங்கையில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான உதைபந்தாட்ட போட்டியின் இறுதிபோட்டியில் வெற்றி பெற்ற தெல்லிப்பழை யூனியன் கல்லூரி
இந்த அணிக்கு பாராட்டுக்கள். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியும் முன்னர் உதைபந்தாட்டத்திற்கு பெயர் போனதாக இருந்தது.1 point- நீதிபதியாகும் கேரளாவின் முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்
1 point- பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
உதாரண வழக்குகள் எல்லாம் சிங்களவர் மீது பொலிஸ் சுட்ட நிகழ்வுகள். தமிழர் என்பதால் ஏதாவது நாயை சுட்ட வழக்கு இருந்தால் - அதுதான் செல்லுபடியாகும்😂. நான் அறிய காட்டி கொடுத்தோர், அரசியல் எதிரிகள்தான் இப்படி கொலை செய்யப்பட்டனர். கோழி, நகை கள்ளர் இப்படி சுட்டு கொல்லப்பட்ட சம்பவங்கள் ஏதேனும் ஆவணப்படுத்த பட்டுள்ளதா? உண்மை. சாவில் கூட அரசியல் பார்த்துத்தான் இந்த உலகம் நிலை எடுக்கும்.1 point- பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
தெற்கில் ஜேவிபி ஆட்சிக்கு வந்த பின் போதை பொருள் மாபியா என பலரை போட்டு தள்ளிய போது, களை எடுப்பு என்று ஆதரித்தோர்…இது அனைவருக்கும் நடக்க அதிக காலம் செல்லாது என நான் எச்சரித்ததை கண்டு கொள்ளவே இல்லை. இனி மாடு பிடிக்கிறான், கண்டு பிடிக்கிறான் என கண்ட மேனிக்கு சுடுவார்கள் போல் உள்ளது. இந்த கொலைக்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஏன் ஜனாதிபதியால் ஒரு நேரடி விசாரணைக்கு உத்தரவிட முடியவில்லை? இப்போது புரிகிறதா ஏன் அத்தனை அடியையும் வாங்கி கொண்டு யாழ்களத்தில் ஜஸ்டின் அண்ணா போன்றோர் fact checking செய்கிறார்கள் என்பது. தமது அரசியல் எதிரிகள் என்பதால் யாழில் மீண்டும், மீண்டும் சுமந்திரன், கருணாநிதி மீது பொய் தகவலைகளை (உண்மையான தகவல்களை சொல்ல இல்லை) தெரிந்து கொண்டே பரப்புவதும் இந்த வகையே. மொத்தத்தில் ஒட்டு மொத்தன் இனத்தையும் பொய்யை நம்பும் மூடர் கூட்டம் ஆக்கி விடுவோம்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இண்டைக்கு கனடாவும், அமெரிக்காவும் தோத்தால் நான் எனது வீட்டை மீட்டு விடுவேன்😂1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஐக்கிய அமெரிக்காவிற்கு இவ்வளவு ஆதரவா.................. இந்தச் சேதி வெள்ளை மாளிகைக்கு தெரிந்தால், நாளைக்கே ஊரைக் கூட்டி சொல்லிவிடுவா.................🤣.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளை வெள்ளி 13 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே AUS எதிர் ZIM 22 பேர் அவுஸ்திரேலியா அணி வெல்வதாகவும் ஒரே ஒருவர் மாத்திரம் ஸிம்பாப்வே அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஸிம்பாப்வே நிலாமதி இப்போட்டியில் போட்டியில் @நிலாமதி அக்காவுக்கு புள்ளிகள் கிடைக்க வாய்ப்புள்ளதா? 20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம் CAN எதிர் UAE 09 பேர் கனடா அணி வெல்லும் எனவும் 14 பேர் ஐக்கிய அமீரகம் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். கனடா செம்பாட்டான் ஏராளன் சுவைப்பிரியன் வீரப் பையன்26 சுவி கிருபன் கோஷான் சே எப்போதும் தமிழன் பிரபா ஐக்கிய அமீரகம் வசீ புலவர் அல்வாயன் ஈழப்பிரியன் நியூ பலன்ஸ் வாத்தியார் கறுப்பி வாதவூரான் அஹஸ்தியன் கந்தப்பு நியாயம் ரசோதரன் நிலாமதி நந்தன் இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? 21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா NED எதிர் USA 10 பேர் நெதர்லாந்து அணி வெல்வதாகவும் 13 பேர் ஐக்கிய அமெரிக்கா அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். நெதர்லாந்து ஏராளன் வசீ புலவர் நியூ பலன்ஸ் கறுப்பி வாதவூரான் சுவி அஹஸ்தியன் நியாயம் எப்போதும் தமிழன் ஐக்கிய அமெரிக்கா செம்பாட்டான் சுவைப்பிரியன் அல்வாயன் ஈழப்பிரியன் வாத்தியார் வீரப் பையன்26 கிருபன் கோஷான் சே கந்தப்பு ரசோதரன் பிரபா நிலாமதி நந்தன் இப்போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?1 point- கருத்து படங்கள்
1 point1 point- புலிகளின் முதல் உள்நாட்டு வானூர்தி தயாரிப்பு முயற்சி | கண்கண்ட சாட்சிகளின் நினைவுகள்
புலிகளின் முதல் விமானம் Friday, February 06, 2009 எழுத்தாளர்: சாத்திரியார் அபி அப்பா என்றொரு பதிவர். அவர் பல விடயங்களை நல்ல நகைச்சுவையாகப்பதிவார். அவரது நகைச்சுவை பதிவுகளை நானும் படித்து சிரிப்பதுண்டு அப்படித்தான் .எப்போதும் போடும் நாய் இன்னிக்கு போடலை.என்றொரு பதிவிட்டிருந்தார் நானும் ஏதோ நகைச்சுவைப்பதிவாகவே இருக்குமென நினைத்து உள்ளே போய் பார்த்தால் அங்கு அவரது பதிவில் ஈழத்து இயக்கங்களில் ஒன்றாகவிருந்த ரெலோ என்கிற இயக்கத்தின் இரண்டு விமானங்களை புலிகள் குண்டு வைத்து தகர்த்தனர் என்கிற ஒரு தவறான கருத்தினையும் எழுதிப்பதிவிட்டிருந்தார். அதற்கான பதிலினை நான் அவரது பதிவிலேயே இட்டிருந்தாலும்.மேலும் இதுபோன்ற தவறான தகவல்கள் அதனைப்படித்தவர்கள் மனங்களில் பதிந்து போகாமல் இருக்கவே புலிகள் முதலில் செய்த விமானம் பற்றிய விபரத்தினையும். ரெலோ அமைப்பு விமானங்கள் செய்யும் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லையென்பதனையும் தெளிவு படுத்தவே எனது இந்தப்பதிவாகும். 1985 ம் ஆண்டளவில் திம்புப்பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த காலத்தில் யாழ் குடாநாட்டின் அப்போதைய புலிகளின் தளபதியாக இருந்த கிட்டு தலைமையில் யாழ் குடாநாடு முதன் முதலாக புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியாகியது. வடக்கு கிழக்கின் மிகுதிப் பகுதிகளெல்லாம் இலங்கையரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. (ஏன் மற்றைய இயக்கங்கள் காவலுக்கு நிக்கவில்லையாவென யாராவது அனானியாக வந்து பதிவு போடாமல் தங்கள் அடையாளத்துடன் வந்து பதிவிட்டால் அதற்கான பதில் தரப்படும்)இந்தக் காலகட்டத்தில் புலிகள் அமைப்பு யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் தங்கள் ஆயுதத் தொழிற்சாலைகளை உருவாக்கி ஆயுதங்களையும் செய்யத் தொடங்கியிருந்தனர்.அவற்றினுள் முக்கியமான பெரியதொரு ஆயுதத் தொழிற்சாலைதான் எனது கிராமமான மானிப்பாயில் இருந்த தொழிற்சாலை. அங்கு அப்பையா அண்ணை என்கிற புலிகளின் மூத்த உறுப்பினரின் கண்காணிப்பில் அந்தத் தொழிற்சாலை இயங்கி வந்தது. (அவரைப் பற்றிய பதிவு) அவருடன் நானும் பலகாலங்கள் இணைந்து அந்த தொழிற்சாலையில் பணியாற்றியிருக்கிறேன்.இங்கு புலிகளிற்கு வேண்டிய கண்ணி வெடிகள் புலிகளின் சொந்தத்தயாரிப்பான எறிகணைகள்(மோட்டார் செல்கள்) எல்லாம் இங்கு தயாரிக்கப்படும். அதே நேரம் அப்பையா அண்ணையும் இராணுவத்திறகெதிராக பயன்படுத்தககூடியதாய் புதிது புதிதாய் ஏதாவது வெடிபொருட்கள். இராணுவ வாகனங்கள் என்று செய்ய முயற்சிப்பார். அப்படியான ஒரு முயற்சிதான் புலிகளிற்காக விமானம் செய்யும் முயற்சியும்.அன்றைய காலகட்டத்தில் உள்ளுர் தொழில் நுட்பத்தில் இலகுவாய் உருக்கக்கூடிய அலுமினியத்தில்தான் விமானம் வடிவமைக்கப்பட்டது. அதற்கான தொழில் நுட்ப வேலைகளை கண்ணாடி வாசுவும் (அவரைப்பற்றிய பதிவு) றஞ்சன் என்கிற ஒரு பொறியியலாளரும். பாலா என்பவருமே செய்வார்கள். அந்தத் தொழிற்சாலைக்கு வேண்டிய வெடி பொருட்கள் மற்றும் உபகரணங்களை வினியோகிக்கும் பொறுப்பு குட்டி சிறியிடம் இருந்தது. நிதி மற்றும் அங்கு பணியாற்றுபவர்களிற்கான உணவு வழங்குதல்என்பனவற்றிற்கு மானிப்பாய் பகுதியின் அன்றைய அரசியல் பொறுப்பாளராக இருந்த மயூரன் பொறுப்பாக இருந்தார்..ஆரம்பத்தில் ஜெர்மனிய நிறுவனமான வொக்ஸ் வாகன் கேவர் காரின் இயந்திரத்தினைத்தான் விமானத்திற்கு பொருத்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இரண்டு 125.சி சி ஊருந்துளியின் (மோர்டார் சைக்கிள்) இயந்திரத்தினையும் பயன்படுத்தி விமானத்தினை பறக்கவைக்கும் முயற்சிகள் நடந்தது.தயார் செய்த விமானத்தினை எடுத்துச்செல்ல இலகுவாக அதன் இறக்கைப்பகுதிகளை களற்றியெடுத்து உழவுஇயந்திரத்தில் கல்லுண்டாய் வெளிக்கு கொண்டுபோவோம். கல்லுண்டாய் வெளியென்பது மானிப்பாய்க்கும் அராலிக்குமிடையில் உள்ளதொரு பரந்தவெளி இங்கு விமானம் ஓடுவதற்கு வசதியாக வளைவுகளற்ற நேரான ஒரு வீதி உண்டு. அந்த வீதியில் விமானத்தினை மீண்டும் பொருத்தி பறப்பதற்கான முயற்சிகள் நடைபெறும்.அனேகமாக வாசு அல்லது பாலாதான் விமானத்தினை உள்ளிருந்து இயக்குவார்கள்.இதே நேரம் யாழ் பண்ணைக்கடலில் விழுந்த இலங்கை இராணுவத்தின் உலங்கு வானூர்தி ஒன்று மீனவர் ஒருவரின் வலையில் அகப்பட அதனையும் கட்டியிழுத்து வந்து அதன் இயந்திரப்பகுதியை பிரித்தெடுத்து இயக்கும் முயற்சிகளும் நடந்தது. ஆனால் அந்த இயந்திரம் பலகாலம் கடல்நீரில் கிடந்ததால் பலனேதும் கிடைக்கவில்லை. இப்படி விமானம் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கையில் கண்ணாடி வாசுவும் றஞ்சனும் நாவற்குழி முகாம்தாக்குதல் முயற்சியில் இறந்து போனாலும் விமானம் செய்யும் முயற்சி இந்தியப்படையின் வருகையும் அவர்களுடனான புலிகளின் யுத்தம் தொடங்கியதையிட்டு இந்திய உலங்குவானூர்திகள் மானிப்பாயிலிருந்த ஆயுதத் தொழிற்சாலை மீது உந்துகணை(றொக்கற்)தாக்குதல் நடத்தியதில் அந்த தொழிற்சாலையுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு விமானங்களும் அழிக்கப்பட்டதுடன். புலிகளின் விமானம் செய்யும் முயற்சி தறகாலிகமாக ஒரு ஓய்விற்கு வந்திருந்தது. இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் ஆரம்பகால விமானத்தயாரிப்பில் ஈடுபட்டிருந்த எவரும் இல்லாத நிலையில் மீண்டும் லெப்.கேணல் சங்கரண்ணாவின் முயற்சியும் வெளிநாடுகளில் விமானத்தெழில் நுட்பமும் வானோடிகளாகவும் பயிற்சி பெற்ற சில இளைஞர்களின் முயற்சியும்தான் இன்றைய புலிகளின் விமானங்கள். அவைபற்றிய முழு விபரங்கள் அதற்குரிய காலம் வரும்பொழுது பதிவாகும்.இதுவே புலிகள் அமைப்பின் விமானத்தயாரிப்பின் முயற்சிகளாகும். ஆனால் 1985ம் ஆண்டு அழிக்கப்பட்டு விட்ட ரெலோ இயக்கம் விமானம் செய்வதானால் அதே யாழ்குடாநாட்டில்தான் செய்திருக்கவேண்டும். ஏனெனில் இந்தியாவில் செய்யமுடியாது அப்படியொரு முயற்சியை இந்திய அரசு விரும்பாது. அப்படி யாழ்குடாநாட்டில் செய்திருந்தாலும் விமானம் பறப்பு முயற்சிகளை மேற்கொள்வதங்கு உகந்ததாக நேரான பாதையும் மரங்கள் வீடுகளற்றதொரு வெளியான இடம் யாழ் குடாவில் மூன்றுதானிருந்தது அதில் ஒன்று வல்லைவெளி இங்கு அருகிலேயே தொண்டைமானாறு இராணுவ முகாம் இருந்ததாலும் மற்றும் இந்தவீதி வடமராட்சியையும் தென்மராட்சியையும் இணைக்கும் முக்கியமானதொரு வீதி என்பதால் வாகனப்போக்குவரத்துக்கள் அதிகம். எனவே இங்கு விமானத்தை பரீட்சிக்கமுடியாது. அடுத்தது கோப்பாய் சாவகச்சேரி வீதியில் வரும் கோப்பாய் வெளி இதற்கருகிலும் நாவற்குழி இராணுவ முகாம் இருந்தது. அடுத்ததாக புலிகள் விமானத்தினை பரீட்சித்த கல்லுண்டாய் வெளியாகும். இங்கும் ரொலே எவ்வித விமானப் பறப்பு முயற்சியும் மேற்கொள்ளவில்லை..அப்படியானால் ரெலோ விமானத்தை எங்கு செய்தது எங்கு பரீட்சித்தது??? அப்படியானால் ரெலோ விமானவடிவில் கடதாசியில் பட்டம் செய்து விட்டுப்பார்த்திருக்கலாம். அதனை புலிகள் குண்டு வைத்து எல்லாம் தகர்க்கத்தேவையில்லை கையாலேயே கிழித்தெறிந்திருக்கலாம்.அட எதுக்கு இவ்வளவு சிரமப்படுவான் ரெலோவின் ஆரம்பகால உறுப்பினரும் தற்போதைய ரெலோ அமைப்பின் தலைவராகவும் பாராழுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் செல்வம் அடைக்கலநாதனின் மின்னஞ்சலை இங்கு இணைக்கிறேன் - selvamtelo@yahoo.com அவரிடமே கேட்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்.இதற்கு மேலும் யாராவது வந்து ரெலோ செய்த விமானத்தை புலிகள் குண்டு வைத்து தகர்த்தனர் என்று அடம்பிடித்தால் என்லை முடியலை முடியலை மேலதிகமாக சில விபரங்கள். அன்றைய காலகட்டத்தில் மானிப்பாய் ஆயுதத்தெழிற்சாலையில் நான் பழகிய போராளிகளான. முத்து.முகுந்தன்.வெள்ளைப்பிறேம்.கொன்னைப்பிறேம்.பாரத்.சுபாஸ்.சுதா. ஆகியோர் இந்திய இராணுவத்துடனான மேதலில் இறந்துவிட்டார்கள்.குட்டி சிறி கிட்டுவுடன் வங்கக்கடலில்வைத்து இந்தியக் கடற்படையால் கொல்லப்பட்டான்.அந்த முகாமை நிருவகித்த அப்பையா அண்ணை யாழ் இடப்பெயர்வின்பொழுது ஈ.பி.டி.பியினரால் கடத்திக்கொண்டுபோய் கொல்லப்பட்டார்.மானிப்பாய் அரசியல்துறை பொறுப்பாளராயிருந்த மயூரன் மற்றும் பாலா கண்ணன் சத்தியா .ஆகியோர் வெளிநாடுகளில் வசிக்கின்றார்கள். https://sathirir.blogspot.com/2009/02/blog-post_4579.html?m=11 point- புலிகளின் முதல் உள்நாட்டு வானூர்தி தயாரிப்பு முயற்சி | கண்கண்ட சாட்சிகளின் நினைவுகள்
இந்த விமானப்பறப்பு முயற்சியை நான் காணவில்லை. ஆனால் போய் பார்த்து வந்தவர்களின் நேரடி விபரிப்பை கேட்டுள்ளேன். VW வான்/பஸ் ஒன்றின் இயந்திரமே பயன்பட்டது என சொன்னார்கள். மீனவரின் வலையில் அகப்பட்ட ஹெலியை புலிகள் பார்வைக்கு வைத்த போது பள்ளிக்கூடத்தால் நேரே போய் பார்த்தேன். அப்போதே இயந்திர பகுதி அகற்றபட்டிருந்தது. பாசிபடிந்து ஒரு வித கடல் மணம் வீசியது. புலிகள் இதை திருத்தியதும் முதலாவது அடி கோட்டைக்குத்தான் என நாம் நண்பர்கள் (பிரைமறி பெடியள்) எமக்குள் பேசி கொண்டோம்😂. டெலோ இப்படி எதுவும் செய்யதாக ஒரு நியாபகமும் இல்லை.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வீரப்பனுக்கு வாழ்த்துக்கள், பங்குபற்றிய எல்லோருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். இந்த தடவை சிறியர், குமாரசாமியரை போட்டியில் காணவில்லை. பழைய போட்டிகளில் நொந்து போனார்களோ. எனது தெரிவுகள் எல்லாம் தர நிலைகளை அடிப்படையாக கொண்டவை. ஆனால், நான் விரும்புவது எல்லாம் ஒவ்வொரு தடவையும் தர நிலையில் குறைவான அணி தர நிலையில் உயர்வான அணியை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். விளையாட்டை பார்ப்பது எல்லாம் இல்லை. அவ்வப்போது ஓட்டவிபரத்தை பார்ப்பது மட்டும்தான். விளையாடும் பெரும்பாலான வீரர்களின் முகமே எப்படி என தெரியாது.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு 188 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, ரஹ்மனுல்லா குர்பாஸினின் மின்னல்வேக 84 (42) ஓட்டங்களின் உதவியுடன் 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 187 ஓட்டங்களைப் பெற்று போட்டியை சமப்படுத்தியது. லுங்கி என்கிடியும் கேஷவ் மஹராஜும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். இந்நிலையில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சுப்பர் ஓவரில், விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்களை ஆப்கானிஸ்தான் அணி பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி ஒரு விக்கெட்டை இழந்து 17 ஓட்டங்களைப் பெற முதலாவது சுப்பர் ஓவர் முடிவிலும் வெற்றியாளர் தீர்மானிக்கப்படவில்லை. அடுத்த சுப்பர் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 23 ஓட்டங்களை தென்னாபிரிக்கா அணி பெற்றது. 24 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 19 ஓட்டங்களையே பெற்றுத் தோல்வியடைந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி இரண்டாவது சுப்பர் ஓவர் முடிவில் வெற்றியீட்டியது தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 05 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி, மார்க்கஸ் ஸ்டொய்னிஸின் அதிரடியான 45 (29 பந்துகள்) ஓட்டங்கள், ஜொஷ் இங்லிஸின் மின்னல்வேக 37 (17 பந்துகள்) ஓட்டங்கள், மற் றென்ஷோ 37 (33 பந்துகள்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அயர்லாந்து அணியில் ஜோர்ஜ் டொக்ரல் 41 (29 பந்துகள்) ஓட்டங்களைத் தவிர பிறர் வேகமாகப் பவிலியனுக்குத் திரும்பியதால் 16.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 115 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. நாதன் எலிஸும் அடம் ஸாம்பாவும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். முடிவு: அவுஸ்திரேலியா அணி 67 ஓட்டங்களால் வெற்றியீட்டியது அனைவரும் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்தமையால் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தாலும், பின்னர் வந்த வீரர்கள் வேகமாக ஓட்டங்களைப் பெற்றதாலும், ஷேர்ஃபான் ரதர்போர்ட்டின் புயல்வேக 76 (42 பந்துகள்) ஓட்டங்களுடனும் ஜேசன் ஹோல்டரின் மின்னல்வேக 33 (17 பந்துகள்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணியின் வீரர்கள் வேகமாக அடித்தாட முயன்று ஆட்டமிழந்து பவிலியனுக்குத் திரும்பிக்கொண்டதாலும், பின்னணி வீரர்கள் குறைவான ஓட்டங்களுடனேயே ஆட்டமிழந்ததாலும், சாம் கரனின் ஆட்டமிழக்காது எடுத்த 43 (30 பந்துகளில்) ஓட்டங்களுடன் 19 ஓவர்களின் சகல விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 30 ஓட்டங்களால் வெற்றியீட்டியது மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த 05 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: இன்றைய முதல்வராக @வீரப் பையன்26 கதிரையில் வீற்றிருக்கின்றார்!1 point- கருத்து படங்கள்
1 point- 1750 பெற்றுக்கொண்டமைக்கு பெருந்தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி!
மிக மகிழ்ச்சியான செய்தி. மாதத்தில் 22 நாட்களாவது இவர்களுக்கு வேலை கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அனுர அரசு, வடக்கில் தமிழ் கட்சிகளுக்கு மட்டுமல்ல, மலையக தமிழ் கட்சிகளுக்கும் ஆப்பு அடித்துக் கொண்டு இருக்கின்றது. மனோ, இராதாகிருஷ்ணன் போன்ற பம்மாத்து அரசியல்வாதிகளுக்கு இனி கடின காலம் தான்.1 point- கருத்து படங்கள்
1 point1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 pointபுழுங்கல் அரிசியுடன் தேங்காய் சேர்த்து ஒரு அருமையான சிற்ரூண்டி .......கூடவே சைட் டிஷ்சும் உண்டு .........! 👍1 point- தமிழனின் சிற்பக் கலை.
1 pointஅந்த காலத்திலேயே மனுசன் வாழ்ந்து ரசித்து சிலை வடிச்சிருக்கானப்பா.. இடம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்..1 point- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
தமிழர்களில் இசுலாமிய மதத்தை பின்பற்றுகின்ற தமிழர்கள் மதத்தின் மீதுள்ள வெறித்தனமான பற்று காரணமாக தங்களை அந்த மதத்தின் பெயரை சொல்லி ஒரு இனமாக அறிவிக்கின்றனர்.அவர்கள் நவீனமாக சிந்தித்து மற்றவர்களுடன் இணங்கி போக தாயார் இல்லாததும் ஒரு காரணம்1 point- கருத்து படங்கள்
1 point- சிரிக்கலாம் வாங்க
1 point1 point- இதுவும் ஒரு தமிழீழ மருத்துவக் கதை தான்…
இதுவும் ஒரு தமிழீழ மருத்துவக் கதை தான்… 1992 கார்த்திகை 23 ஆம் நாள் ஒரு பெரு வீரன் எம்மை விட்டு விதையாகிய நாள். லியோ என்றும் மலரவன் என்றும் நாமம் கொண்ட வேங்கை அந்த மகாவீரன். பசீலன் -2000 என்ற விடுதலைப்புலிகளினால் தமிழீழத்தில் தயாரிக்கப்பட்ட பீரங்கி அணி ஒன்றின் அணித்தலைவன். யாழ்கோட்டை, மணலாறு, முல்லைத்தீவு, கொண்டச்சி, மாங்குளம் சிலாவத்துறை காரைநகர் என்று பல முகாம்களின் வெற்றிக்கு வலுச்சேர்த்த அந்த அணியின் திறன் வாய்ந்த அணித்தலைவன். யாழ் மாவட்டத்தின் மாணவரமைப்புப் பொறுப்பாளர். அப்படி பலவற்றை சொற்களால் அடுக்கி அவன் வீர வரலாற்றை மேலெழுப்பிக் கொண்டே செல்லலாம். மணலாற்றுக் காட்டில் இருந்து 1991 கார்த்திகை மாதம் 21 ஆம் திகதி ஆரம்பித்த மாங்குளம் முகாம் மீதான் முற்றுகை மற்றும் கைப்பற்றல் நடவடிக்கைக்காக தனது பீரங்கிகளுடனும் தனது அணியோடும் பயணித்த ஒரு பெரும் பயணத்தை இலக்கியப்படைப்பாக்கி அதற்குள் மக்களின் நடைமுறை வாழ்வியலை, போராளிகளின் வீரதீரங்களை, அவர்கள் படும் வேதனைகளை, பிரிவுகளை, வெற்றிகளை “போருலா” என்று பெயரெடுத்து போர்ப்புதினமாக எமக்குத் தந்த இலக்கிய வீரன். பணியில் சிரத்தையும் தேசம் மீது கடுமையான பாசமும், தமிழீழ மண்மீட்பில் நம்பிக்கையும், அண்ணன் மீது அளவில்லாத நேசமும் கொண்டவர். தனது நண்பர்கள் ஒவ்வொருவராய் வீழ்வது கண்டு துடித்துப்போகும் ஒவ்வொரு தடவைகளிலும் அவரது கரங்களின் ஒன்று இறுகப்பற்றியது துப்பாக்கிப் பிடிகளை. மறுகரம் இறுகப்பற்றிக்கொண்டது எழுத்து எனும் பெரும் ஆயுதத்தை உருவாக்கும் பேனாவை. அதனால் எம் மனங்களில் என்றென்றும் நேசத்துக்குரிய மகாவீரனாகிவிட்டார். 1992 ஆம் வருடம் பலாலி இராணுவமுகாமை சுற்றி இருந்த 150 காவலரண்களை தகர்க்கும் சண்டையை திட்டமிட்ட போது, களமுனையின் ஒரு பகுதி அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்செல்வனுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அப்போது பசீலன் அணியில் இருந்து அரசியல்துறைக்கு பிரிவு மாற்றப்பட்டிருந்தார் மலரவன். அந்த நிலவொளி கூட இல்லாத வெற்று இருட்டுக்குள் சண்டை தொடங்கியது. அதற்குள் இருந்துகொண்டு வெற்றிகளை சுவைத்துக்கொண்டிருந்த எமது அணிகள். பகைவன் தமது நிலைகளை விட்டு ஓடத்தொடங்கினான். பகையணிகளிடம் இருந்து கைப்பற்றும் ஆயுத தளபாடங்கள் அனைத்தையும் உடனடியாக பின்னால் அனுப்பிக் கொண்டிருந்தார்கள் போராளிகள். அதற்காக விநியோக அணி வெகு சிரமத்தின் மத்தியிலும் தமது உயிரைத் துச்சமென மதித்து ஓடிக்கொண்டிருந்தன. சண்டையணிகளுக்கு பெரும் உறுதுணையாக இருக்கும் இந்த அணியை வழிநடாத்துபவனாக மலரவன் ஓடித்திருந்தார். பிரிகேடியர் தமிழ்செல்வனின் கட்டளையை ஏற்று நடப்பதாலோ என்னவோ களமுனையின் முன்னிலைக்கு செல்வதற்கு அவனால் முடியவில்லை. சண்டையணிகளோடு பயணிக்க அனுமதி அவரால் மறுக்கப்பட்டிருந்தது. தன்னுடனே நிற்குமாறு தமிழ்செல்வன் பணித்திருந்தார். பணிக்கப்பட்ட கட்டளையை மீற முடியாது வரும் ஆயுத தளபாடங்களை பின்னணிக்கு பாதுகாப்பாக அனுப்பும் பணியை செய்து கொண்டிருந்தார் மலரவன். அதே நேரம் களமுனையின் பின்னணியில், களமருத்துவர்களை ஒருங்கிணைத்தபடி ஒரு வேங்கை பிரதான மருத்துவநிலையில் இருந்தார். வைத்திய கலாநிதியான சுஜா என்ற அந்த புலிவீரன் விழுப்புண்ணடைந்து வரும் வேங்கைகளின் குருதி மண்ணுக்கு உரமாகிவிடாமலும் அவர்களின் உயிர்கள் பிரிந்து விதையாகிவிடாமலும் இருக்க தன் மருத்துவத்திறனை பயன்படுத்திக் கொண்டிருந்தார். விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவின் முக்கிய பொறுப்பாளரும் போராளி மருத்துவரும் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக பழைய மருத்துவ மாணவனும் மருத்துவக் கலாநிதியுமாகிய அந்த சகோதரனும் மலரவனும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரர்கள். இரு சகோதரர்களும் ஒரே களமுனையில் வேறு வேறு பணியில் சோர்வின்றி தமது பணிகளை செய்து கொண்டிருப்பார்கள். அன்றும் அப்படித்தான். இருவரும் தம்பணி செய்து கொண்டிருந்தனர். திடீர் என்று எதிரியின் பல எறிகணைகள் பிரிகேடியர் தமிழ்செல்வனின் அணியிருந்த இடத்தில் வீழ்ந்து வெடித்தன. மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தார்கள். பலர் விழுப்புண் அடைந்தனர். அவர்கள் அனைவரும் பின்னணி மருத்துவநிலைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். அதில் மலரவனும் படுகாயமடைந்து பின்நிலைக்கு அனுப்பப்படுகிறார். ஆனால், மருத்துவ நிலைக்கு கொண்டு செல்ல முன்பே மலரவனின் உயிர் பிரிந்து விதையாகிவிட்டது. வோக்கிகள் மலரவனின் பெயர் தாங்கி சோகச் செய்தியை போராளிகளிடையே கொண்டுபோய் சேர்க்கிறது. பலநூறு போராளிகளின் உயிரைக் காத்த அந்த மருத்துவ சகோதரனுக்கும் அச்செய்தி வந்து சேர்கிறது. அவர் எத்தனையோ உயிரற்ற போராளிகளின் உடலங்களைப் பார்த்திருக்கிறார். சிதறிப்போன மக்களின் வெறும் தசைத்துண்டங்களைப் பார்த்திருக்கிறார். அவற்றில் எல்லாம் அவர் திடமாக உறுதி பெற்றிருக்கிறார். அடுத்த கணமே கலங்கிய விழிகளைத் துடைத்துவிட்டு அடுத்த போராளியைக் காப்பாற்றிவிட துடித்திருக்கிறார். அப்படியானவருக்கு தன் தம்பியும் உயிரற்ற உடலாக வந்திருப்பது பெரும் அதிர்ச்சி தான். ஒருவேளை சாவு மலரவனை அணைத்திருக்காவிட்டால் சுஜா அண்ணன் தன் தம்பியை நிச்சயமாக காப்பாற்றி இருப்பார். பல ஆயிரம் போராளிகளின் உயிர்களைக் காத்த அந்த கரங்கள் மலரவன் உயிரையும் நிச்சயம் காப்பாற்றி இருக்கும். இருந்தாலும் அதற்கு முன்பே மலரவன் விதையாக வீழ்ந்து விட்டார். மருத்துவ சகோதரனின் அடிமனதில் உள்ள பல ஆயிரம் வேதனைகளோடு தம்பியின் பிரிவு வேதனையும் இணைந்து கொள்கிறது. அவரது கரங்கள் மருத்துவக் கருவியை இறுகப்பற்றிக்கொள்கின்றன. கால்கள் இன்னொரு போராளியின் உயிரைக்காப்பாற்ற வேகம் கொள்கின்றன. விழிகள் மட்டும் தம்பிக்காக பலமணி நேரங்கள் கரைந்து கொண்டிருந்தன. ஏனெனில் அவரும் எம்மைப்போன்ற சாதாரண மனிதப்பிறவியாக புவியில் உதித்துத் தானே விடுதலை எனும் பெருவிருட்சத்தை தாங்கும் விழுதுகளில் ஒரு மூத்த மருத்துவக்கலாநிதியாக உருவாகியிருந்தார். அவருக்கும் உள்ளே வலித்திருக்கும். விழிகள் உதிரும் நீரை அவர் யாரும் அறியாவண்ணம் எத்தனை தடவை துடைத்திருப்பார். அப்படியே இன்றும் அவர் துடித்துப்போனார். ஆனால் “கடமை அவரை அழைத்துவிட நினைவுகளில் அவரின் தம்பி அமர்ந்து கிடக்க. விடுதலைப்போராட்டத்தின் இறுதி நாள்வரை ஓயாது ஓங்கி இருந்த அவரின் கரங்கள் மீண்டும் கரத்தில் தெலஸ்கோப்பினை இறுகப்பற்றிக்கொண்டன. நினைவோடு இ.இ.கவிமகன் நாள்: 04.02.20261 point- சிரிக்கலாம் வாங்க
1 point1 point- புலிகளின் முதல் உள்நாட்டு வானூர்தி தயாரிப்பு முயற்சி | கண்கண்ட சாட்சிகளின் நினைவுகள்
நிழலாடும் நினைவுகள் எழுத்தாளர்: சாத்திரியார் 2007/03 கப்ரன் வாசு (கண்ணாடி வாசு/ ஐடியா வாசு), வல்வெட்டிதுறை 1984 ம் ஆண்டு ஒரு கோடைகாலத்தின் மாலை நேரத்தில் யாழ் அராலி வீதி கல்லுண்டாய் வெளியில் ஒருவர் மட்டுமே அமரகூடிய ஒரு சிறிய விமானம் உள்ளே அதனை இயக்க தயாராய் வாசு அமர்ந்திருக்கிறான். அதனருகே மாவீரர்களான லெப்.கேணல் அப்பையா அண்ணை, குட்டிசிறி, கப்ரன் பாரத், மேஜர் சுபாஸ் இவர்களுடன் மேலும் பல போராளிகள் நிற்கிறார்கள். வாசு மற்யை போராளிகளை பார்த்து, "எல்லாம் சரி, எல்லாரும் சேர்ந்து வேகமா தள்ளுங்கோ, இந்த முறையாவது பிளேன் பறக்கவேணும்" என்று சொல்லவும் எல்லா போராளிகளும் சேர்ந்து விமானத்தை தள்ள அது வீதியில் உருள ஆரம்பிக்கவும் வாசு மற்றவர்களிடம் "இன்னும் இன்னும் வேகமா" என்று கத்தியபடி அந்த விமானம் மேலே கிழம்ப வசதியாய் அதன் இறக்கைகளை இயக்குகிறான். அந்த நேரம் பார்த்து ஒரு போராளி ஏலேலோ அய்லசா என்று பாடவும் விமானத்தை தள்ளிய மற்றறைய போராளிகள் தள்ளுவதை நிறுத்தி விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டனர். வாசு அவர்களை பார்த்து கோபமாய் கத்துகிறான், "மேலை எழும்பினா காணும். நான் எப்பிடியாவது கோட்டைக்குள்ளை கொண்டு போய் இரண்டு ஆமிகாரன்ரை தலையிலையாவது விழுத்துவமெண்டா இவங்களோடை ஒண்டும் செய்ய ஏலாது. பகிடியை விட்டிட்டு தள்ளுங்கோடா" என்கிறான். போராளிகள் தொடர்ந்து விமானத்தை தள்ள விமானம் சில அடிகள் மேலே எழுவதும் கீழே விழுவதுமாய்.... கடைசியில் அந்த வீதியோரத்தில் நின்ற ஒரு பூவரசு மரத்துடன் மோதி ஒரு பக்க இறக்கை உடைந்து போக வாசு சில சிராய்ப்பு காயங்களுடன் விமானத்தை விட்டு இறங்குகிறான். ஆனாலும் விமானம் செய்கின்ற முயற்சி தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. வாசு எப்பவுமே தன்னைபற்றியோ தன்னுயுரிரைபற்றியோ கவலைபடாமல் எப்படியாவது எங்கேயாவது எதிரிக்கு இழப்பை ஏற்படுத்துவதை பற்றியே சிந்திப்பவன். அது மட்டுமல்ல கண்ணிவெடிகள் தயாரிப்பது ரவைகட்டுவது(ஆரம்பகாலத்தில் 9 மி.மீ.துப்பாக்கி ரவைகூடுகளை சேகரித்து திரும்ப அவைகளை ரவைகளாக தாயாரிப்பார்கள்) அன்றைய காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தின் பழுதடைந்த ஆயுதங்கள் அனைத்தையும் திருத்துபவனாகவும் இருந்தான். ஈழத்தில் இருந்த போராட்ட குழுக்களிற்கு இந்தியா அன்று ஆயுதங்கள் வழங்கிய போது புலிகள் இயக்கத்திற்கும் ஒரு தொகுதி ஆயுதங்களை வழங்கியது ஆனால் அவை பெரும்பாலும் ஏன் 80 வீதம் பாவிக்க முடியாத ஆயுதங்களையே கொடுத்திருந்தது. அவற்றையெல்லாம் வாசு இரவு பகலாக இருந்து முடிந்தவரை திருத்தி போராளிகளிடம் கொடுப்பான். அந்த ஆயுதங்கள் யுத்த களத்தில் சில நெரங்களில் இயங்க மறுக்கும்.யுத்தகளத்தில் ஒரு போராளியின் ஆயுதம் இயங்கா விட்டால் அது எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அனைவரிற்கும் தெரியும். அந்த போராளிகள் வாசுவை திட்டியபடியே அந்த ஆயுதங்களை அவனிடம் கொண்டு போய் கொடுப்பார்கள்.அவன் சிரித்தபடியே என்ன மச்சான் செய்யிறது இந்தியா ஆயுதத்தை தந்த நேரம் அதை இரும்பா தந்திருந்தா நான் அதை உருக்கி ஒரு நல்ல ஆயுதமா செய்து தந்திருப்பன்.ஆனால் என்ன செய்ய அவங்கள் இப்பிடி தந்திட்டாங்கள் நானும் முடிஞ்சவரை திருத்திறன் எனறவாறே மீண்டும் அவற்றை திருத்த தொடங்கிவிடுவான்.அப்போது 1987ம் ஆண்டு தொடக்கத்தில் யாழ் நாவற்குழி இராணுவ முகாம் மீது புலிகள் ஒரு தாக்குதலை நடாத்த திட்டமிட்டனர். அந்த இராணுவ முகாமிற்கு தண்ணீர் வெளியில் இருந்து ஒரு பெளசர் முலமே எடுத்து செல்லபடுவது வழைமை எனவே அதே போல ஒரு பெளசரை தயாரித்து அதன் உள்ளே வெடிமருந்தை நிரப்பி அதனை முகாம் உள்ளே அனுப்பி வெடிக்க வைப்பது பின்னர் அது வெடித்ததும் அதிர்ச்சியில் இருக்கும் இராணுவத்தினரை தாக்குவது என்று திட்டம் தீட்டப்பட்டு.அதற்கான அந்த முகாம் மீதான வேவுபார்த்தல் மற்றும் இராணுவ நடமாட்டங்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் பொறுப்பு அன்றைய சாவகச்சேரி பொறுப்பாளராக இருந்த கேடில்சிடமும். வெடிமருந்து நிரப்பிய பெளசரை தயாரிக்கும் பொறுப்பு வாசுவிடமும் ஒப்படைக்க பட்டது. அதுவும் எதிரிக்கு எந்தவித சந்தேகமும் வந்து விடாதபடி தண்ணீர் கொண்டு போகின்ற அதேபோன்றதொரு அச்சுஅசலாக இன்னொரு பெளசரை தயாரிக்க வேண்டும்.சிரமமானதும் சவாலானதமான ஒரு பணி ஆனால் வாசு ரஞ்சன் என்கிற ஒரு பொறியியலாளரின் உதவியோடு ஆர்வத்துடன் செயற்பட்டான். அசல் தண்ணி பெளசரில் எங்கெங்கு கறள் பிடித்திருக்கின்றது. எங்கெங்கு நெளிந்திருன்றது என்று பார்த்து பார்த்து நகலை அசல் போல ஒரு மாதங்களிற்கு மேலாக செய்து முடித்தான்.அது மட்டுமல்ல தண்ணீர் பெளசர் இராணுவ முகாமிற்கு உள்ளே போகும் போது இராணுவத்தினர் பெளசரின் உள்ளெ தண்ணீர் தானா உள்ளது என்று பரிசோதித்து தான்அனுப்புவார்கள்.அதனால் அந்த பெளசரின் மேல் பாதியில் தண்ணீரும் கீழ் பாதியில் வெடிமருந்தும் நிரப்பி தயாரிக்கப்பட்டது.தாக்குதலுக༢r />??கான நாளாக 14.02.87 அன்று மாலை தீர்மானிக்கபட்டது.அந்த தாக்குதலிற்கு பொறுப்பாக அன்றைய யாழ் மாவட்ட தளபதி கிட்டு பொறுப்பேற்றிருந்தார்.அவர் போராளிகளிற்கு அன்று காலை தாக்குதல் பற்றிய விழக்கங்களை அளித்து மாலை 6.30 மணியளவில் முகாமின் உள்ளே அந்த பெளசர் வெடிக்கும் அதை தொடர்ந்து தொலைதொடர்பின் ஊடாககட்டளை வந்ததும் முகாம் மீதான தாக்குதலை தொடங்கும்படி வழியனுப்பி வைத்தார். அதன்படி போராளிகள் எல்லோரும் அன்று மாலை 4 மணியளவிலேயே தயாராய் நாவற்குழி முகாம் தாக்குதலிற்காக அவரவர் இடங்களில் நிலையெடுத்து காத்திருந்தனர்.இறுதியாக அந்த பெளசரை வெடிக்க வைப்பதற்காக நேர கணிப்பு பொறியை லெப். கேணல் பொன்னம்மானும் வாசுவும் இணைத்து முடித்திருந்தனர். எல்லா போராளிகளும் தங்களிற்கு தந்தவிடயங்களையும் எதிரியை எப்படியெல்லாம் தாக்கலாம் என்று தங்கள் மனங்களிலேயே ஒத்திகை பார்த்தபடி அந்த வெடி வெடிக்க போகும் 6.30 மணி எப்போவரும் என தங்கள் கை கடிகாரங்களை அடிக்கடி ஒரு பரபரப்புடன் பார்த்து கொண்டிருந்த வேளை 5.30 மணியவில் அந் பகுதியையே அதிர வைக்கும் ஒரு வெடியொசை கேட்டது. எல்லா போராளிகளின் முகங்களிலும் ஒரு வித கேள்வி குறி யுடன் தொலை தொடர்பு கருவி வைத்திரந்தவர்களை பார்த்தனர். தொலை தொடர்பில் எல்லோரும் கிட்டுவை அழைத்தபடி இருந்தனர்.அண்ணை என்ன நடந்தது. அங்கை வாசு பென்னம்மான் ஒரதரின்ரை தொடர்பும் கிடைக்கேல்லை என்ன நடந்ததெண்டு தெரியேல்லை எல்லாரும் அப்பியே நில்லுங்கோ நான் இடத்திற்கு போய் பாத்திட்டு உங்களை தொடர்பு கொள்ளுறன்கிட்டுவின் குரல் ஒலித்தது. அரை மணி நெரத்தின் பின்னர் அனைவரையும் தங்கள் முகாம்களிற்கு திரும்பும்படி கிட்டுவின் கட்டளை கிடைத்தது. ஆம் 5.30 மணிக்கே அந்த பெளசர் வெடித்து சிதறிவிட்டது. எப்படி எங்கே தவறு நடந்தது என்று யாருக்கும் தெரியாது காரணம் அதனருகில் நின்றிருந்த பொன்னம்மான் கேடில்ஸ் ரஞ்சன் அகியோருடன் வாசுவும் கந்தக காற்றுடன் கலந்து எங்கள் தேசத்தில் வீசும் காற்றாகி போனான். வாசு மட்டுமல்ல அவனது குடும்பத்தில் அவனது சகோதரன் மேஜர் ஜேம்ஸ். சகோதரி கப்ரன் சுந்தரி ஆகியோரும் எங்கள் மண்ணிற்காய் மாவீரர்களாகி போனார்கள். அவர்களிற்காய் எனது தலை தாழ்த்தி வணக்கத்தை தெரிவித்து கொண்டு நினைவுகளை தொடர்வேன்... மேலே நான் இணைத்த கட்டுரை சுவிசில் இருந்து வெளியாகும் நிலவரம் பத்திரிகைக்காக எழுதியது. அந்த கட்டுரையை எழுதி பத்திரிகைக்கு அனுப்பிய பின்னர் புலிகளின் வான்படை நடாத்திய தாக்குதல் செய்திகள் வெளிவந்த போது ஒருகணம் புலிகளிற்கு ஒரு வான்படை உருவாக்கும் கனவுகளுடன் அயராது உழைத்த வாசு, அப்பையா அண்ணை, குட்டிசிறி, பாரத் போன்றவர்களுயும் பின்னர் சங்கரண்ணாவும் ஒரு கணம் நினைவில் வந்து போயினர். http://sathirir.blogspot.com/2007/03/blog-post_30.html1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.