Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    20444
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    33926
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19869
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    89120
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/22/26 in all areas

  1. ஆரம்பத்தில் துடுப்பாடப் போனது தவறோ என நினைத்தேன். சரியாகவே ஆடியிருக்கிறார்கள். இந்திய மண்ணிலே இந்தியா தோற்றது இன்னம் சந்தோசம். ஞாயிறு என்றால் @கிருபன் னைப் பிடிப்பது ரொம்ப கஸ்டம். எத்தனை மணிக்கு வந்து புள்ளிகள் போடுவாரோ? அவருக்கு இரண்டு முட்டை என்று குவாட்டர் அடித்திட்டு படுக்கிறாரோ?
  2. இரண்டு கிழமைக்கு முன்பு... தோட்டத்தில் இருந்த ரோஜா செடிகளின் கிளைகளை வெட்டும் போது... முள் ஒன்று நடு விரலில் குத்தி விட்டது. இப்படி வேலை செய்யும் போது, வழமையாக குத்தினாலும்... அடுத்த நாளில், முள் குத்திய இடமே தெரியாமல் மாறிவிடும். இம்முறை, அது குத்திய சில மணி நேரங்களில்... விரல் பயங்கரமாக வீங்கி, சரியான குத்து வலியாக இருந்தது. நானும், இரண்டு நாள் பொறுத்து வைத்தியரிடம் செல்வோம்... அது வரை எமக்குத் தெரிந்த வீட்டு வைத்தியங்களான "ஐஸ்" ஒத்தடம் கொடுத்தல், "நோ" கிறீம் பூசுதல், நோவை குறைக்க சில குளிசைகள் என்று போட்டும், பலன் கிடைக்காததால்... குடும்ப வைத்தியரிடம் போக... அவர் இதுவரை நான் செய்த வைத்திய முறைகளை கேட்டு விட்டு, சிலவேளை கிருமி தொற்று ஏற்பட்டிருக்க சாத்தியக் கூறுகள் உள்ளது என்று... Antibiotic குளிசைகளை காலையும், மாலையும் 5 நாட்களுக்கு போடும்படி தந்தார். 5 நாட்களும் கடந்த பின்பும்... Antibiotic குளிசைக்கு நோவும், வீக்கமும் சொல்வழி கேட்கவில்லை. இப்படியே பொறுத்து இருந்தால்... கடைசியில் பிரச்சினை பெரிதாகி விடும் என நான் முடிவெடுத்து, அருகில் உள்ள வைத்தியசாலையின் அவசர நோயாளர் பிரிவிற்கு சென்று நடந்ததை சொல்ல... அவர்கள் "எக்ஸ் ரே", இரத்தப் பரிசோதனை எல்லாம் எடுத்து சோதித்து பார்த்து விட்டு... மூன்று நாட்களுக்கு, தினமும் மூன்று போத்தல் வீதம்... கையில் Antibiotic ஐ, திரவ வடிவில் ஏற்றி கண்காணிக்க வேண்டும் என்றும், வீக்கம் வற்றாது விட்டால்... அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரலாம் என்றும் சொன்னார்கள். நமக்கும்... ஆஸ்பத்திரி சாப்பாடு சாப்பிட்டு கனநாள், ஒரு மாற்றமாக இருக்கட்டுமே என்று , அவர்கள் நீட்டிய காகிதங்களில் கையெழுத்தை போட்டுக் கொடுத்து விட்டு... நான் அந்த ஆஸ்பத்திரியின் வாடிக்கையாளன் என்ற படியால், எங்கு அடுத்துப் போக வேண்டும் என்று எனக்கு ஒருவரும் கூட்டி வந்து காட்ட வேண்டிய தேவை இருக்கவில்லை . அவர்கள் தந்த சில காகிதங்களை வாங்கிக் கொண்டு, நான் தங்க வேண்டிய பகுதிக்கு பொறுப்பான "நேர்ஸ்" ஐ சந்திக்க சென்றேன். தொடரும்... ✍
  3. இன்றைய முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி, ஃபில் சோல்ற்ரின் அதிரடியான 62 (40 பந்துகள்) ஓட்டங்களுடன் 9 விக்கெட்டுகளை இழந்து சுமாரான 146 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சிறிலங்கா அணியின் வீரர்கள் ஆடுதளத்தில் நிற்கமுடியாமல் வேகமாக ஆட்டமிழந்து திரும்பிக்கொண்டிருந்தனர். அணித்தலைவர் தசுன் ஷானக ஓரளவு நிலைத்தாடி 30 (24 பந்துகளின்) ஓட்டங்களை எடுத்தார். எனினும் விக்கெட்டுகள் தொடர்ச்சியாகக் சரிந்ததனால் 16.4 ஓவர்களில் 95 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. இந்த ஓட்ட எண்ணிக்கை இத் தொடரில் மிகக் குறைவான ஓட்ட எண்ணிக்கையாக இருக்க அதிக சாத்தியம் உள்ளது! முடிவு: இங்கிலாந்து அணி 51 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த 07 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. இப்போட்டியில் விளையாடாத மேற்கிந்தியத் தீவுகள் அணியைத் தெரிவு செய்த @வீரப் பையன்26 க்கும் புள்ளிகள் கிடையாது! இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, டேவிட் மில்லரின் அபாரமான 63 (35 பந்துகள்) ஓட்டங்களுடனும், டெவால்ட் பிறெவிஸின் புயல்வேக 45 (29 பந்துகள்) ஓட்டங்களுடனும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸின் மின்னல்வேகத்தில் ஆட்டமிழக்காமல் எடுத்த 44 (24 பந்துகள்) ஓட்டங்களோடும் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, ஆரம்பத்தில் இருந்தே நட்சத்திர வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வேகமாக ஓட்டம் எடுக்கலாம் என அடித்தாடி வீரர்கள் விரைந்து வெளியேறினர். ஷிவம் டுபே மாத்திரம் 42 (37 பந்துகள்) ஓட்டங்களை எடுத்தார். மற்றையோர் மிகவும் குறைவான ஓட்டங்களை எடுத்ததால், 18.5 ஓவர்களின் சகல விக்கெட்டுகளையும் இழந்து 111 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 76 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்தமையால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! இன்றைய போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: முதல்வர் @கந்தப்பு தனது நாற்காலியை மேலும் பலப்படுத்தியுள்ளார்!
  4. இங்கை தான் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா ஒம் வ‌ருன்ட‌ ப‌ந்து இன்று ந‌ல்லா சுழ‌ல‌ வில்லை............. இர‌ண்டு த‌மிழ‌ர்க‌ள் இந்திய‌ அணியில் இன்று விளையாடுகின‌ம் நாச‌மாய் போன‌ இல‌ங்கை அணியில் த‌மிழ‌னுக்கு இட‌ம் இல்லை...................இல‌ங்கை ப‌டு தோல்வி................
  5. இதுஒரு சங்கடமான தருணம்தான் .......எனக்கும்கூட சவுதியில் காலை இழக்கும் நிலையில் ஒரு விபத்து ஏற்பட இருந்து நூலிழையில் தப்பினேன் ........! அந்தக் குடும்பம் நன்றாக வாழ வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ........!
  6. பெயர்: அனுர வேறு பெயர்: அரவிந்த, தமிழருக்கு சேர் பழைய தொழில்: கச்சான் விற்பது புதிய தொழில்: கஞ்சா விற்பது அல்ல அப்போது: பொதுவுடமைவாதி தற்போது: தேசியவாதி எப்போதும்: இனவாதி நம்புவது: பெளத்தாகமத்தை நம்பாதது: தமிழர்களை, முஸ்லிம்களை பழைய நண்பர்கள்: சந்திரிக்கா, மகிந்த, பசில், கோட்டா, விமல், டக்லஸ், கருணா, பிள்ளையான் புதிய நண்பர்கள்: இந்தியா, அமெரிக்கா பழைய எதிரிகள்: இந்தியா, அமெரிக்கா புதிய எதிரி: டில்வின் சில்வா எப்போதும் எதிரிகள்: தமிழர் உரிமையை கோருவோர், ரணில் பிடித்த டிவி சீரியல்: சித்தி பிடிக்காத படம்: மேட்டுக்குடி ஆர்ப்பாட்டமாய் செய்வது: யாழில் நடைபயிற்சி அமசடக்கமாய் செய்வது: வவுனியாவில் குடியேற்றம் அகற்றபடக்கூடாது: தமிழர் நிலத்தில் - புத்தர் சிலை அகற்ற பட வேண்டியது: தமிழர் மனதில் -சமஸ்டி நீண்டகால சாதனை: வடக்கு கிழக்கு பிரித்தது குறுகிய கால சாதனை : வடக்கில் 3 எம்பிக்களை பிடித்தது ஶ்ரீதரன் மறக்க கூடாதது: பார் லைசனஸ் விசாரணையை தமிழர்கள் மறக்க வேண்டியது: போர்குற்ற விசாரணையை தியாகிகள்: ஆயுதம் ஏந்திய சிங்கள இளைஞர்கள். பயங்கரவாதிகள்: ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்கள் இலங்கையில் இல்லாதது: டொலர் கையிருப்பு, இனப்பிரச்சனை இலங்கையில் இருப்பது: வர்க்க அடக்குமுறை எப்போதும் பெருமை: முள்ளிவாய்க்கால் அவலத்தை சேர்ந்து நடத்தியது ஒருபோதும் வருந்தாதது: முள்ளிவாய்க்கால் அவலத்தை சேர்ந்து நடத்தியது மிரட்டினால் பணிபவர்: ஶ்ரீதரன் மிரட்டாமலே பணிபவர்: சந்திரசேகரன் நிரந்தர தலைவலி: சிங்கள வாக்காளர் ஒரே நிம்மதி: தமிழ் அனுர காவடிகள்
  7. நான் மகனை கிரிகெட் பயிற்சிக்கு கூட்டி போயிருந்ததால் கிரிக் இன்போ வில் தான் ஸ்கோர் பார்த்தேன். அப்படி இருந்தும் நல்ல விறு விறுப்பாய் இருந்தது (இந்தியா, இலங்கை தோத்தபடியால்).
  8. எங்கவீட்டு பிள்ளையில் நம்பியாரிடம் எம் ஜி ஆர் அடிவாங்கி கொண்டு இருப்பார். அதே நம்பியாரை (மற்றொரு) எம் ஜி ஆர் திருப்பி அடிப்பாரே. அந்த காட்சியை பார்க்கும் போது விறுவிறுப்பாக இருக்கும். ஐசிசி அண்மைக்காலங்களில் இந்தியாவுக்கு சார்பாக அதிக ஐசிசி தொடர்களை இந்தியாவில் நடாத்தி வருகிறது. இந்தியாவுக்கு சார்பான மைதானங்களில் முக்கிய அரை இறுதி போட்டிகளில் நடைபெற்று வருகின்றன. பணம் ஒன்றே முக்கிய குறிக்கோளாக இந்தியாவுக்கு சார்பாகவே ஐசிசி போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவை மில்லரும், பேபி டிவிலர்ஸும் அடி அடி என்று 6, 4 ஓட்டங்கள் அடித்தார்களே அதை பார்க்கும் போது எவ்வளவு விறுவிறுப்பாக இருந்தது தெரியுமா?. ஒரு காலத்தில் சிறிகாந்தும், கபில் தேவ்வும் அடிக்கும் போது பார்த்து இரசித்தவன் நான். ஆனால் இப்பொழுது?
  9. இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் இடது கை துடுப்பாட்டக்காரர்கள், ஆடுகளம் கறுப்பு மண் கொண்ட மெதுவான ஆடுகளம், வலது கை மார்க்ரமின் பந்து வீச்சு இடது கை துடுப்பாட்டக்காரருக்கு உள்ளே இருந்து வெளியே போகும் (இ டமிருந்து வலமாக மட்டையின் வெளிப்புறம்). இலங்கை இங்கிலாந்து போட்டியில் வளமையாக தொடக்க ஒவர் போடும் வலது கை சமீரவிற்கும் தீக்சணவிற்கும் பதிலாக இ டது கை மது சங்க இடது கை வெல்லாலெகே பந்து வீசினார்கள், இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் வலது கை ஆட்டக்காரர்கள். சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் துடுப்பாட்டக்காரர் அதே போல இசான் கிசனும் விக்கெட் கீப்பர் துடுப்பாட்டக்காரர், இசானுக்கு மாற்றீடாகவே சாம்சனை இற்க்குவார்கள், அபிசேக்கிற்கு மாற்றீடாக இறக்கமாட்டார்கள் என நினைக்கிறேன். இசான் கிசன் நன்றாக விளையாடுகிறார் என நினைக்கிறேன்.
  10. இவன் சரியான வெடிமுத்து. தன்னை இயக்கம் வந்து கட்டாயமாக பிடித்துக்கொண்டு போய் களமுனையில் பதுங்ககழி வெட்ட விட்டதாகவும், பின்னர் தான் ஏதோ உளவாளியாக கண்டறியப்பட்டதால் தன்னை கொல்லாமல் ஆமிக்குள்ள போய் இருபக்க முகவராக (double agent) வேலை செய்யுமாறு அனுப்பியதாகவும், தான் அங்கு ஆமியிடம் சரணடைந்து/பிடிபட்டு யாழ்ப்பாணத்திற்குள் சிறிலங்கா இராணுவம் நுழையும் வழிகளை காட்டியதாகவும் அதனால் தான் இராணுவம் யாழை வென்றதாகவும் கதை கூறியுள்ளான். தனது இந்த நடவடிக்கை காரணமாக தன்னை புலிகள் தேடியதாகவும் அதனால் சிங்கப்படை தன்னை கனடாவிற்கு தமது முகவராக அனுப்பியதாகவும் தான் அங்கு வந்து கனேடிய புலனாய்வுத்துறையோடு சேர்ந்து வேலை பார்த்து குடிவரவில் பணியாற்றிய புலிகளின் முகவர் ஒருவரை பிடித்துக் கொடுத்ததாகவும் வெடித்துள்ளான். பின்னாளில் தன்னை க. பு. பாவித்ததாக்வும் இறுதிபோரில் தன்னால் ஆன உதவிகளை சிங்கப் படையிற்கு தான் செய்ததாகவும், பயங்கரவாதத்தை அழிக்க, கொக்கரித்துள்ளான். மட்டுமின்றி தான் நடாத்திய புலிகள் தொடர்பான Presentation ஐயும் வெளியிட்டு பீற்றியுள்ளான். பின்னாளில், 2009, கனடா வந்த கப்பல்களில் இருந்தோர் புலிகள் இல்லையென்று சொல்லி தான் நீதிமன்றில் தெரிவித்து அவர்கள் அத்தனை பேரையும் காப்பாற்றியதாக்வும் இதனால் ரொகான் குணரத்ன (அடுத்த கோமாளி) இவன் மேல் கடுப்பில் இருந்ததாகவும் மேலும் பீற்றியுள்ளான். ************************************* இவன்ர பங்கர் வெட்டின கதையே இவன் ஒரு பொய்யன் என்பதை எடுத்துக்காட்டுது. இருப்பினும் புலிகளுக்கு எதிராக செயற்படுவதில் என்ன இன்பம் இவன் போன்றோருக்கு உள்ளதோ தெரியவில்லை!
  11. முதல்வர் @கந்தப்பு க்கு வாழ்த்துக்கள்
  12. அடப்பாவி யாழ் அகவை 28 க்கு ஒரு முள் கதையோடு முதலாவதாக வந்திருக்கிறியள் ........ பாராட்டுகள் ! 😂
  13. என்னதான் சொன்னாலும் கறுத்தப் பையன் ராசிகாரன் ...இந்த கிசன் ஒரு திருநங்கை ...இப்ப பார்க்கப் போனால்..தலை மூன்றும் தறுதலையாகிட்டுது ...காப்பீரி மூடிக்கிட்டு தூங்கவேண்டியதுதான் அட ...நான் இன்றைக்கு உதயநிதி.... நன்றி கிருபன் ஜீ
  14. எனக்கும்தான் பிடித்த வீரர். குழந்தைப்பிள்ளை முகம். ஆனால் அடிக்கத் தொடங்கினால் ராட்சசன். அவர் திரும்பி வந்தது தென்னாபிரிக்காவுக்கு ஒரு ஸ்திரத்தன்மையைக் கொண்டு வந்து விட்டது.
  15. இருவருக்கும் இதுதான் கடினமான போட்டி. தென்னாபிரிக்கா அழுத்தாமாகக் காலைப் பதித்துவிட்டது. அடுத்த இரு போட்டியும், எதிர் ஸிம்பாப்வே - மேற்கிந்தியா, இருவருக்கும் இலகுவாகவே இருக்கும்.
  16. ஓம்…இந்தியா அடுத்தடுத்த மாட்ட்சுக்கு சுதாகரிச்சுடக்கூடாது எண்டதுதான் எண்ட கவலை எல்லாம்.
  17. முந்தி என‌க்கும் இல‌ங்கைக்கும் ஆகும் மார்கேட்டில் கீரை விக்கிற‌வ‌ங்க‌ள் எப்ப‌ கிரிக்கேட் விளையாட‌ வ‌ந்தாங்க‌ளோ அதோட‌ உவ‌ங்க‌ளை நான் ந‌ம்புவ‌தில்லை சூப்ப‌ர்8ரில் இவை தான் க‌ட‌சி இட‌ம் வ‌ருவின‌ம் என‌ க‌ணித்தேன் அது ந‌ட‌க்கும் போல் தெரியுது குரு ஹா ஹா😄😛.........................
  18. இலங்கை இன்று எனக்கு இரண்டு கன்னங்களிலும் அடித்து இருக்கின்றது................ இன்னும் ஒரு மூன்று ரன்கள் சேர்த்து அடித்து தோற்று இருந்தால் ஒரு கன்னமாவது தப்பியிருக்கும்............🤣. இலங்கைக்கும் நமக்கும் அவ்வளவாக ஆவதில்லை..................😜.
  19. இன்றைய நடுவர்களைப் பார்த்தால் அண்ணன் தம்பி போல உள்ளது.
  20. தென்னாபிக்கா வென்றால் சந்தோசமே. வருணின் பந்துக்கு இப்படி சாத்துகிறார்களே? பையனின் சத்தத்தைக் காணவில்லை. குப்புற படுத்திட்டாரோ?
  21. சிலவேளை 200 க்கு மேல் எடுப்பார்கள் போல
  22. சாணக்கியனும் வந்தாலே அவர் சம்மதிப்பார். எப்பாடு பட்டாவது சாணக்கியனை கூட்டிவரவும். சிவிகேயையும் கேட்கிறாரோ தெரியவில்லை.
  23. பையனின் வலது கை. குறைந்த ஓட்டங்களுக்கு விளையாட்டை முடிக்க போகிறார்கள் என எண்ணினேன். மத்தியில் வந்தவர்கள் விளையாடுகிறார்கள்.
  24. தர முடியாது என்பதை மரியாதையாகத் தெரிவித்துக் கொள்கிறோம் 😁
  25. நீங்கள் கவனக்குறைவால் இந்த போட்டியில் வெல்வது மேற்கு இந்தியா என தெரிவித்து இருக்கிறீர்கள். இலங்கையா இங்கிலாந்தா என்றால் நீங்கள் நிச்சயம் இங்கிலாந்து அணியைத்தான் தெரிவு செய்திருப்பீர்கள்
  26. ஆனாலும் கஞ்சி வீணாகாது அப்படியே ஸ்ரீலங்காவுக்கு ஊத்திட வேண்டியதுதான் .........! 😂
  27. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! கண் கலங்க வைத்த தம்பதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை இடம்பெற்ற சம்பவம் அங்கிருந்த பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டிற்கு வேலைக்காக சென்ற தனது கணவன், 5 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்பும் நிலையில் அவரை வரவேற்பதற்காக அவரது மனைவி மலர்க்கொத்துடன் விமான நிலையத்தில் காத்திருந்துள்ளார். இதன் போது விமான நிலையத்தை வந்தடைந்த தனது கணவரை கண்டதும் ஓடிச் சென்று அவரைக் கட்டிப்பிடிக்க முயன்றார். ஆனால், எதிர்பாராத விதமாக கணவர் அவரைத் தள்ளிவிட்டு, தன்னிடம் வரவேண்டாம் எனவும் தள்ளி நிற்குமாறு என்று சத்தமிட்டுள்ளார். பயணிகள் குழப்பம் தனது மனைவியை மதிக்காமல் கணவன் நடந்துகொள்வதாக அங்கிருந்த பயணிகள் குழப்பம் அடைந்தனர். இதன் போது கணவன் தான் அணிந்திருந்த பெரிய கோட்டைக் கழற்றியுள்ளார். அப்போது இயந்திரத்தில் சிக்கி அவரது இடது கை முழங்கையோடு துண்டிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. நாட்டை விட்டு போகும்போது ஒரு முழு மனிதனாகப் போனேன், ஆனால் இன்று ஒரு ஊனமுற்றவனாகத் திரும்புகிறேன். எனக்கு இப்போது வேலையில்லை, நான் உனக்கு ஒரு சுமை. என்னை விட்டுவிடு” என கணவர் கீழே அமர்ந்து கதறி அழுததாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கணவனின் நிலையைக்கண்டு அவரது மனைவி மற்ற கையைப் பற்றிக்கொண்டுள்ளார். நான் உங்கள் கைகளை திருமணம் செய்யவில்லை, உங்களைத்தான் திருமணம் செய்தேன். உங்களால் வேலை செய்ய முடியாவிட்டாலும், நான் கூலி வேலை செய்தாவது உங்களை பார்த்துக்கொள்வேன். என்னை விட்டுப் பிரிந்து போக வேண்டாம் என கூறிய சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளதாக அந்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/emotional-incident-at-bia-1771635198
  28. SL 35/5 நானும் இங்கு சுகமே… நீ(ங்கள்) அங்கு சுகமா? 😂
  29. எனக்கு இன்று இரண்டு புள்ளிகள் வேண்டும்!
  30. Rukmani Palaniappan ·oodntpeSrsu6m5tm7i7cml260076c2gat39mfgfa2lltcfi8u 2c1ah6lh6t · வாலி- துரத்தி விட்ட 3 அசிஸ்டெண்ட்ஸ்.. நாளடைவில் சினிமாவையே ஆட்சி செய்யும் டைரக்ட்டர்களான அதிசயம்!! கடந்த 1967ஆம் ஆண்டு தன்னிடம் மூன்று பேர் உதவியாளராக சேர முயன்றனர் என்றும் ஆனால் தான் மறுத்துவிட்டதாகவும் அதன் பின்னர் அவர்கள் படிப்படியாக முன்னேறி மிகப்பெரிய இயக்குனர் ஆகினர் என்றும் கவிஞர் வாலி பேட்டி ஒன்றில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கூறியுள்ளார். கவிஞர் வாலி ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டார். தந்தை இறந்த நேரம் தாயும் நோய்வாய் படுக்கையில் இருந்த நேரம், தன்னுடைய வயிற்று சாப்பாட்டிற்கு கூட சம்பாதிக்க முடியாத நிலை இருந்தது. அந்த நேரத்தில் அவருக்கு ஒரு சில பாடல்கள் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. கவியரசு கண்ணதாசன் உச்சத்தில் இருந்ததால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் கண்ணதாசனுக்கு மட்டுமே பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தனர். இந்த நிலையில்தான் ‘நல்லவன் வாழ்வான்’ என்ற படத்திற்காக வாலி ஒரு பாடல் எழுதினார். எதையும் தாங்கும் இதயம் என்ற அந்த பாடல் நல்ல ஹிட் ஆனாலும் அதன் பிறகு வாலிக்கு பாடல்கள் வாய்ப்பு பெரிதாக கிடைக்கவில்லை. இந்த நிலையில் இனி சினிமாவே வேண்டாம். மதுரைக்கு போய் விடுவோம் என்று வாலி முடிவு செய்தார். மதுரையில் டிவிஎஸ் கம்பெனியில் தனது நண்பர் வேலை பார்த்ததால் அவரிடம் சொல்லி ஒரு வேலை தேடிக் கொள்ளலாம் என்று அவர் முடிவு செய்தார். அவர் பெட்டிகளை எடுத்துக் கொண்டு செல்லும்போது தான் அவரை பாடகர் பிபி ஸ்ரீனிவாஸ் சந்திக்க வந்தார். எங்கே செல்கிறீர்கள் என்று அவர் கேட்டபோது, ‘இனிமேல் எனக்கு சினிமா வேண்டாம், நான் மதுரை செல்கிறேன்’ என்று வாலி கூறினார். பிபி ஸ்ரீனிவாஸ் அப்போது, ‘இந்த பாடலை நீ ஒரு முறை கேள், அதன்பிறகு நீ மதுரை செல்ல வேண்டும் என்று முடிவு செய்தால் நான் தடுக்க மாட்டேன்’ என்று கூறினார். அந்த பாடல் கண்ணதாசன் எழுதிய ‘மயக்கமா கலக்கமா’ என்ற பாடல். வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் என்ற வரியை கேட்டதும் இனி சினிமாவிலேயே போராடுவது என்று வாலி முடிவு செய்தார். அதன் பின்னர்தான் அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்பு கிடைத்தது. ஒரு கட்டத்தில் சினிமாவின் உச்சத்திற்கு சென்றார். இந்த நிலையில் தான் திடீரென கண்ணதாசனிடம் உதவியாளராக சேர வாலிக்கு வாய்ப்பு கிடைத்தது. மாதம் 300 ரூபாய் சம்பளம் என்றும் பேசப்பட்டது. இந்த வாய்ப்பை கண்ணதாசனிடம் கேட்டு வாலிக்கு வாங்கி கொடுத்தவர் இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். ஆனால் அந்த வாய்ப்பை வாலி மறுத்துவிட்டார். ஏன் என்று கேட்டபோது, ‘நான் கண்ணதாசனுக்கு எதிராக கடைவிரிக்க வந்திருக்கிறேன், அவரிடமே போய் உதவியாளராக இருந்தால் என்னுடைய தனித்தன்மை போய்விடும். ஒரு டெய்லர் கடையில் வேலைக்கு சேர்ந்தால் கடைசி வரைக்கும் காஜா போட தான் வைப்பார்கள். மிஷினில் உட்கார விடமாட்டார்கள். அதேபோல் நான் கண்ணதாசனின் உதவியாளராக சென்றால் கடைசி வரை உதவியாளராகவே இருக்க வேண்டிய நிலை ஏற்படும், என்னுடைய தனித்தன்மை போய்விடும். இருக்கிற தமிழ் கொஞ்சமாக இருந்தாலும் அதை எப்படி காசு பண்ண வேண்டும் என்று பார்க்க வேண்டுமே தவிர, ஒருவரிடம் உதவியாளராக வேலை செய்ய எனக்கு விருப்பமில்லை’ என்று கூறினார். இதனால் ஜி.கே.வெங்கடேஷ் அதிர்ச்சியடைந்து, ‘நீ உருப்படவே மாட்டாய்’ என்று சாபம் விட்டு சென்றார். அன்றைக்கு வாலி எடுத்த முடிவு மிகச் சரியானது என்பது போகப் போக தெரிய வந்தது. அன்றைக்கு மட்டும் அவர் கண்ணதாசனிடம் வேலைக்கு சேர்ந்திருந்தால் அவருடைய தனித்தன்மை மறைந்திருக்கும். கடைசி வரை கண்ணதாசனிடம் அவர் உதவியாளராக இருந்திருப்பார். இந்த நிலையில்தான் தன்னிடம் யாரும் உதவியாளராக வேலை கேட்டு வந்தால் அனுமதிக்க கூடாது என்று முடிவு செய்தார். மேலும் தன்னிடம் உதவியாளராக சேர்ந்தால் கடைசி வரை அவர்கள் உதவியாளராக இருக்க நேரிடும் என்பதுதான் அவர் அனுபவத்தில் கற்ற பாடம். இந்த நிலையில்தான் மூன்று பேர் தன்னிடம் உதவியாளராக சேர வாய்ப்பு கேட்டு வந்தனர் என்றும், ஆனால் நான் மூவரையுமே சேர்த்து கொள்ள மறுத்துவிட்டேன் என்றும் வாலி கூறியிருந்தார். ஆனால் அதன் பிறகு அந்த மூவருமே தட்டு தடுமாறி திரையுலகில் வெற்றி பெற்றனர். அந்த மூவர்தான் கங்கை அமரன், ராம நாராயணன், மற்றும் ஆர்.சி.சக்தி. பின்னாளில் இந்த மூவரின் படங்களுக்கும் நான் பாடல்கள் எழுதினேன் என்றும் வாலி கூறினார். மேலும் என்னிடம் நீங்கள் உதவியாளராக சேர்ந்திருந்தால் இந்த அளவுக்கு பெரிய இயக்குனராக வந்திருக்க மாட்டீர்கள், இது நான் அனுபவத்தில் கற்ற பாடம், எதனால் நான் உங்களை உதவியாளராக சேர்க்கவில்லை என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று அவர்கள் முன்னிலையிலேயே வாலி கூறினார். நமக்கு என்ன திறமை இருக்கிறதோ அந்த திறமையை வைத்து, நாமாக முன்னேற வேண்டுமே தவிர இன்னொருவருக்கு உதவியாளராக இருந்து நமது திறமையை வீணடிக்க கூடாது என்ற வாலியின் வாழ்க்கை பாடம் நம் அனைவருக்குமே பொருந்தும்......!
  31. அந்த கால சிவனடியார் - இது பணம் வைக்கும் பையா அல்லது திருநீரு பையா ? ரெல் மீ கிளியர்லி..! ஆரண்யேஸ்வரர் கோயில் - திருவலங்காடு
  32. மேற்குலகின் இசை அல்பங்கள் போல அல்லாமல்... தென்னிந்தியாவின் இசை அல்ப்பம் ---- தான் இசை அமைத்த பாட்டுக்கு கூலியை வாங்கி கொண்டுள்ளார், எனவே படத்தின் பாடல், இசை உரிமை தயாரிப்பாளரிடமும் அவரிடம் உரிமையை வாங்கிய நிறுவனமிடமுமே உள்ளது என்பதே வாதம். இதை இந்திய சட்டப்படி கோர்ட் அணுகும். ஒவ்வொரு படத்திலும் இவருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் இருந்த ஒப்பந்த அடிப்படையில் சில உரிமை இவருக்கு வரலாம், வராமலும் போகலாம். இதெல்லாம் காப்புரிமை அடிப்படையில் கோர்ட் முடுவு செய்யும். இதில் காப்பரேட் கீப்ப்ரடேட் என புலம்புவது மாய்மாலம். காப்பரேட் லைக்காவையும், சோனியையும் தேவை என்டால் தலையில் வைத்து ஆடும் வியாபாரமே சினிமா. இவர்கள் என்ன தன்னார்வ தொண்டா செய்கினம் ? பிஜேபி கைக்கூலியான ராஜாவுக்காக டெல்லியில் அளுத்தம் கொடுக்காமல் இருக்க வேண்டும்.
  33. என்ன இருந்தாலும் ஜீரணிக்க முடியாதது.
  34. இரண்டு "தெலுங்கர்களும்" சந்தித்த போது... பேச வார்த்தைகள் வரவில்லையே. விஜயகாந்தின் மனிசி பிரேமலதா.... தனக்கும், தன்ரை தம்பி சதீசுக்கும்... பதவி எடுக்கத்தான், உந்த ஆட்டம் எல்லாம் ஆடுது.
  35. வாச்சாத்தி வன்மம் நிறைந்த வரலாறு. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்....... அதே மக்கள் தெரிவு செய்த அரசியல் அதே மக்களை அழிக்கும் ஈனச்செயல்களை செய்யும் அரசியல். வாச்சாத்தி, வெண்மணி போன்ற படுகொலை சம்பவங்களை வரலாறு காலா காலத்திற்கும் எடுத்துச்செல்லட்டும்.
  36. லக்சபான நீர் வீழ்ச்சியில் ஜி தமிழ் தொலைக்காட்சி குழுவினரின் சாதனை. இதுவரை லக்சபான நீர்வீழ்ச்சியைப் பார்த்ததில்லை.முதல்தடவையாக இவர்களின் இந்த நிகழ்ச்சி மூலம் பார்த்தேன். லக்சபானவில் இருந்து மின்சாரம் பெறுகிறார்கள் என்று ஏதோ படித்த ஞாபகம். ஆனாலும் நான் கண்ட காட்சிகளில் அப்படி ஏதும் நடப்பதாக தெரியவில்லை. யாராவது லக்சபான போயுள்ளீர்களா? அங்கிருந்து மின்சாரம் பெறுகிறார்களா? இந்த மாதம் 15ம் திகதி ஜி தமிழில் நடந்த கில்லாடி ஜோடி நிகழ்ச்சியில் ஏறத்தாள 500-550 அடி மேலேயிருந்து கயிறு மூலம் கீழே இறங்குகிறார்கள். நான் றொக் கிளைமிங் செய்திருக்கிறேன். இப்படி பெரியதொரு மலையில் இருந்து இறங்கிய அனுபவம் ஏதும் இல்லை. TAMILTVSERIAL - Tamil Serials & ShowsKhiladi Jodies 15-02-2026 Zee Tamil tv Show - TamilTvSeri...Khiladi Jodies show,Zee Tamil tv showshttps://www.tamildhool.tech/zee-tamil/zee-tamil-show/killadi-jodis/killadi-jodis-15-02-2026-zee-tamil-show/ யாராவது இந்த நிழகழ்ச்சியை பார்க்க விரும்பினால் மேலுள்ள சுட்டியை அழுத்தி பார்க்கலாம்.(இங்கே பார்க்கக் கூடியவாறு உள்ளது.)
  37. நீங்கள் இளவயதில் வேலைக்கென வெளிக்கிட்டவர், இப்போ போனாலும் நேரே யாழ் போவபர் என் சொன்ன நினைவு. முடிந்தால் இலங்கையின் மற்ற இடங்களையும் பார்த்து வாருங்கள். ஒவ்வொரு நீழ்வீழ்ச்சியும் ஒவ்வொரு அழகு.
  38. அத தெரண கருத்துப்படங்கள்.
  39. கண்ணாலே பண்பாடும் . .......! படம் : திரும்பிப்பார் , நரசிம்மபாரதி & கிரிஜா .......! 😍
  40. உருளை கிழங்கு பொடி கறி..
  41. எகிப்து மன்னர்களின் கல்லறைகளில் தமிழ் பெயர்கள்: யார் அந்த சிகை கொற்றன்? பட மூலாதாரம்,Ingo கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் எகிப்தில் உள்ள 'மன்னர்களின் பள்ளத்தாக்கு' பகுதியில் இருக்கும் கல்லறைகளில் தமிழ் பிராமி, சமஸ்கிருதம், பிராகிருத மொழிகளில் எழுதப்பட்ட சுமார் 30 எழுத்துப் பொறிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான எழுத்து பொறிப்புகள் தமிழ் - பிராமியில் எழுதப்பட்டவை என்கிறார்கள் ஆய்வார்கள். இந்தக் கல்லறைகளில் தமிழில் எழுதியது யார்? எகிப்தில் உள்ள மன்னர்களின் பள்ளத்தாக்கு (Valley of the Kings) பகுதியில் இருக்கும் கல்லறைகளில் இந்திய மொழிகளில் எழுதப்பட்ட சுமார் 30 எழுத்துப் பொறிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. மொத்தம் ஆறு கல்லறைகளில் இந்த 30 எழுத்துப் பொறிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன. இவைகளில் பெரும்பாலான எழுத்து பொறிப்புகள் தமிழ் பிராமி எழுத்துகள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சென்னையில் நடந்துவரும் தமிழ் கல்வெட்டியல் தொடர்பான பன்னாட்டுக் கருத்தரங்கில் லோசான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் இங்கோ ஸ்டராச்சும் தூர கிழக்கு ஆய்வுகளுக்கான பிரெஞ்சு நிறுவனத்தைச் (French Institute of Far Eastern Studies) சேர்ந்த பேராசிரியர் சார்லட் ஸ்மித்தும் "மன்னர்களின் பள்ளத்தாக்கிலிருந்து இந்தியா வரை: எகிப்தில் இந்திய எழுத்துப் பொறிப்புகள்" (From the Valley of the Kings to India: Indian Inscriptions in Egypt) என்ற தலைப்பில் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டனர். இங்கோ ஸ்ட்ராச், 2024ஆம் ஆண்டின் துவக்கத்தில் மன்னர்களின் பள்ளத்தாக்குப் பகுதிக்குச் சென்றார். அதற்குப் பிறகு அவருடன் பேராசிரியர் சார்லட் ஸ்மித்தும் இணைந்துகொண்டார். இவர்கள் இருவரும் சேர்ந்து அங்குள்ள ஆறு கல்லறைகளில் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 30 எழுத்துப் பொறிப்புகளைக் கண்டறிந்தனர். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாக ஜூல் பெய்லி என்ற ஆய்வாளர் இங்குள்ள கல்லறைகள் அனைத்தையும் ஆராய்ந்து, அதில் உள்ள எழுத்துகளைத் தொகுத்திருக்கிறார். இருந்தபோதும் இந்தியாவைச் சேர்ந்த எழுத்துகளை அவரால் இனம்காண முடியவில்லை என்பதால், அவை இந்தியாவைச் சேர்ந்த எழுத்துகள் என்றே அறியப்படாமலேயே இத்தனை ஆண்டுகளாக இருந்தன. தற்போது இந்தக் கல்லறைகளில் அடையாளம் காணப்பட்டிருக்கும் எழுத்துகள், மூன்று இந்திய மொழிகளைச் சேர்ந்த எழுத்துகளில் எழுதப்பட்டிருந்தன. இந்த எழுத்துகளை எழுதியவர்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதி, மேற்குப் பகுதி, தென்னிந்தியப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்தப் பிரதேசங்களில் இதுபோல இந்தியாவைச் சார்ந்த எழுத்துகள் கிடைப்பது முதல் முறையல்ல என்பதையும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சகுத்தரா (Socotra) தீவுகளில் உள்ள ஹாக் குகைகள், செங்கடல் பிரதேசத்தில் உள்ள துறைமுகமான பெரெனிகே (Berenike) ஆகிய இடங்களில் இந்திய எழுத்துப் பொறிப்புகள் இதற்கு முன்பு கிடைத்துள்ளன. படக்குறிப்பு,ஆய்வை மேற்கொண்ட இங்கோ ஸ்டராச் மற்றும் சார்லட் ஸ்மித் மன்னர்களின் பள்ளத்தாக்குகளில் உள்ள கல்லறைகளில் தமிழ் எகிப்தின் தற்போதைய லக்ஸர் நகருக்கு அருகில், நைல் நதிக்கு மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது மன்னர்களின் பள்ளத்தாக்குப் பகுதி. பழங்கால எகிப்தின் புதிய ராஜாங்கத்தைச் (New kingdom - கி.மு. 16ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 11ஆம் நூற்றாண்டுவரை) சேர்ந்த பாரோக்கள், அவர்களுடைய பிரபுக்களுக்காக உருவாக்கப்பட்ட 65 கல்லறைகள் இங்கே கண்டறியப்பட்டுள்ளன. ரோமானியர்களின் காலத்தில் பலர் இந்த இடத்தை பார்த்துச் சென்றிருக்கின்றனர். அப்படி இந்தப் பகுதிக்கு வந்தவர்கள் அந்தக் கல்லறைகளின் சுவர்களில் தங்களது பெயர்களை எழுதிச் சென்றிருக்கின்றனர். ஜூல் பெய்லி, இந்தக் கல்லறைகளை 1888-89 காலகட்டத்திலும் 1913–14 காலகட்டத்திலும் ஆய்வுசெய்து, அங்கிருந்த 2,000 கிறுக்கல்கள் அல்லது எழுத்துகளைத் தொகுத்து வெளியிட்டார். ஆனால், அவரால் இந்திய எழுத்துகளை அடையாளம் காண இயலவில்லை. அவற்றை அவர் Exotic, Asianic என்ற வார்த்தைகளில் குறிப்பிட்டாரே தவிர, அவை என்ன சொல்கின்றன என்பதை ஜூலை பெய்லியால் புரிந்துகொள்ள முடியவில்லை. தற்போது நடந்த ஆய்வில், 1, 2, 6, 8, 9, 14 என்ற இலக்கமிடப்பட்ட ஆறு கல்லறைகளில் இந்திய எழுத்துப் பொறிப்புகள் கிடைத்துள்ளன. தமிழ், பிராகிருதம், காந்தாரி (பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இருந்த ஒரு பேச்சு வழக்கு), சமஸ்கிருதம் ஆகிய நான்கு மொழிகளில் இந்த எழுத்துப் பொறிப்புகள் கிடைத்தன. இந்த மொழிகளில் எழுத மூன்று விதமான எழுத்துகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. காந்தாரி மொழியை எழுத கரோஷ்டி என்ற எழுத்து வடிவமும் பிராகிருதத்தையும் சமஸ்கிருதத்தையும் எழுத பிராமி எழுத்துகளும் தமிழை எழுத தமிழ் - பிராமியும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கல்லறைகளில் கிடைத்த பெரும்பாலான எழுத்துப் பொறிப்புகள் தமிழைச் சார்ந்ததாகவே இருந்தன. பட மூலாதாரம்,Timothee Sassolas படக்குறிப்பு,தமிழ் எழுத்து பொறிப்புகள் உள்ள உயரத்தில் வேறு யாரும் எழுதவில்லை முதலாம் எண் கல்லறையில்தான் இருப்பதிலேயே அதிக இந்திய எழுத்துப் பொறிப்புகள் கிடைத்துள்ளன. இங்கு கிடைத்த 16 எழுத்துப் பொறிப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை தமிழில் இருந்தன. அதேபோல, காந்தாரியில் எழுதப்பட்ட ஒரே எழுத்துப் பொறிப்பும் இந்தக் கல்லறையில்தான் கிடைத்தது. இந்த மொழியில் எழுதியிருப்பவர் தன்னை க்ஷத்திரியனாக அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதேபோல இந்தப் பள்ளத்தாக்குப் பகுதியில் கிடைத்த எழுத்துகளிலேயே மிக நீண்ட வரியும் இந்தக் கல்லறையில்தான் கிடைத்தது. இது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்தது. க்ஷஹரத மன்னனின் தூதுவன் இங்கு வந்ததாக அந்த வரி குறிப்பிடுகிறது. இந்த க்ஷஹரத மன்னர்கள் இந்தியாவின் மேற்குப் பகுதியை கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு முதல் ஆட்சி செய்தவர்கள் என்பதால், இந்திய எழுத்துகளின் காலத்தைக் கணிக்க இது உதவுகிறது. இங்குள்ள பல கல்லறைகளில் கிடைக்கும் தமிழ் எழுத்துப் பொறிப்புகளில் Cikai Korran (சிகை கொற்றன்) என்ற வார்த்தை காணப்படுகிறது. இந்தப் பெயர் எட்டுக் கல்லறைகளில் காணப்படுகிறது. முதலாவது கல்லறையில் 'சிகைக் கொற்றன் வந்தான், பார்த்தான்' என மூன்று முறை எழுதப்பட்டிருக்கிறது. கல்லறையின் வாசலில் எதிரெதிராக இரண்டு இடங்களில் இந்த வார்த்தைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அடுத்ததாக, இரண்டாவது கல்லறையில் மொத்தம் ஐந்து எழுத்துப் பொறிப்புகள் கிடைத்தன. இவை யாவும் தமிழில் எழுதப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றன. ஆனால், அந்த எழுத்துகள் சொல்ல வருவது என்ன என்பதில் தெளிவில்லை. இந்தக் கல்லறையிலும் 'சிகைக் கொற்றன்' தனது பெயரை எழுதி வைத்திருக்கிறார். ஆறாவது கல்லறையில் இரண்டு எழுத்துப் பொறிப்புகள் கிடைத்திருக்கின்றன. நுழைவாயிலுக்கு அருகில் இருக்கும் சுவற்றில், உயரத்தில் இவை எழுதப்பட்டிருக்கின்றன. இதிலும் ஒன்று 'சிகைக் கொற்றன்' எழுதியது. இந்தக் கல்லறையில் கிரேக்க எழுத்துகள் உள்ளே எழுதப்பட்டிருந்தாலும், அந்த உயரத்தில் வேறு யாரும் எழுத்துப் பொறிப்புகளைச் செய்யவில்லை. பட மூலாதாரம்,JULES BAILLET படக்குறிப்பு,ஜூல் பெய்லி 100 ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்த போதும் அவரால் இந்திய எழுத்துகளை அடையாளம் காண இயலவில்லை எட்டாவது கல்லறையில் ஆறு எழுத்துப் பொறிப்புகள் கிடைத்துள்ளன. அதில் நான்கு தமிழிலும் இரண்டு மத்திய இந்தோ - ஆரிய மொழியிலும் எழுதப்பட்டுள்ளன. இந்தக் கல்லறையிலும் முதலாவது கல்லறையில் எழுதியதைப் போலவே எதிரெதிராக இரண்டு இடங்களில் தனது பெயரை அவர் எழுதியிருக்கிறான் 'சிகை கொற்றன்'. ஒன்பதாவது கல்லறையைப் பொறுத்தவரை, இங்குதான் பெரிய அளவில் கிரேக்க எழுத்துப் பொறிப்புகள் கிடைத்திருக்கின்றன. இந்த கல்லறையின் வாயிலில் தமிழில் எழுத்துப் பொறிப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன. 14வது கல்லறையில் ஒரே ஒரு மொழியில்தான் எழுத்துப் பொறிப்புதான் கிடைத்துள்ளது. அது தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. அதை எழுதியவர் சிகைக் கொற்றன் தான். அதுவும் வாசலில் மட்டுமே எழுதப்பட்டிருப்பதால், அந்தக் காலகட்டத்தில் இந்தக் கல்லறைக்கு பெரிய அளவில் யாரும் வந்திருக்க மாட்டார்கள் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பட மூலாதாரம்,JULES BAILLET படக்குறிப்பு,பள்ளத்தாக்குப் பகுதிக்கு தான் வந்துபோனதை எல்லோருக்கும் சொல்ல விரும்பியவனாக சிகைக் கொற்றன் இருந்திருக்கிறான் என்கிறார்கள் ஆய்வாளர்கள் கல்லறைகளில் தமிழில் எழுதிவைத்த சிகைக் கொற்றன் யார்? சிகைக் கொற்றன் என்ற பெயர் 1, 2, 6, 8, 14 ஆகிய கல்லறைகளில் கிடைத்திருக்கிறது. தான் மன்னர்களின் பள்ளத்தாக்குப் பகுதிக்கு தான் வந்துபோனதை எல்லோருக்கும் சொல்ல விரும்பியவனாக சிகைக் கொற்றன் இருந்திருக்கிறான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 14வது குகையில் ஒரு விசித்திரமான வரி இருக்கிறது. அதாவது, "சிகை கொற்றன் வரும்போது/வந்ததால்/வந்துவிட்டதால் பார்த்துவிட்டான்." என்கிறது அந்த வரி. சிகைக் கொற்றன் என்ற வார்த்தைகளில், சிகை என்பது சமஸ்கிருத வார்த்தை. இது கிரீடத்தையோ, குடுமியையோ குறிக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். கொற்றன் என்பது தமிழ்ப் பெயர். கொற்றவை, கொற்றவன், கொற்றம் ஆகியவற்றோடு தொடர்புடைய வார்த்தை. புறநானூற்றுப் பாடல் ஒன்றிலும் கொற்ற என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. புகளூரில் கிடைத்த சேர நாட்டுக் கல்வெட்டுகளிலும் இந்தப் பெயர் காணக் கிடைப்பதாக இந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது. "இந்தப் பகுதிக்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வர்த்தகர்களாகத்தான் இருக்கவேண்டும். ஆனால், சிகை கொற்றன் என்பது ஒரு வர்த்தகனின் பெயராக இருக்கும் வாய்ப்புகள் குறைவு. அவர் ஒரு வீரராக இருந்திருக்கலாம். அல்லது வர்த்தகர்களுடன் பாதுகாப்பிற்காக வந்தவர்களாக இருக்கலாம்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் பேராசிரியர் சார்லட் ஸ்மித். வேறு மொழிகளில் கிடைத்த 'க்ஷத்ரியர்' என்ற வார்த்தை, 'க்ஷஹரத அரசின் தூதர்' என ஒருவர் தன்னைப் பற்றி குறிப்பிட்டுக்கொண்டிருப்பது ஆகியவற்றைப் பார்க்கும்போது, அந்தச் சூழலோடு சிகை கொற்றனும் ஒரு படை வீரனாக இருந்திருக்கலாம் என்ற கருத்தே பொருந்திப் போகிறது என்கிறார் சார்லட். கிரேக்க மொழியில் எழுத்துப் பொறிப்புகளைச் செய்திருப்பவர்களும், 'வந்தேன், பார்த்தேன்' என்ற வகையில் எழுதியுருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள் ஆய்வாளர்கள். சிகை கொற்றனும் அதேபோல, 'வர, கண்ட' என்றே குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே, இந்தக் கல்லறைகளில் இருந்த மற்ற கிறுக்கல்களை, குறிப்பாக கிரேக்கக் கிறுக்கல்களை சிகை கொற்றன் கண்டிப்பாக பார்த்திருக்கவேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஏற்கனவே உள்ள கிரேக்க எழுத்துப் பொறிப்புகளுக்கு மேலே இருக்கும்வகையில் சிகை கொற்றன் தமிழ் எழுத்துப் பொறிப்புகளைச் செய்திருக்கிறார். இந்தக் கல்லறைகளில் சிகை கொற்றனின் எழுத்துகள் இருக்கும் இடத்தைப் பார்க்கும்போது, அவர் ஏற்கனவே இருந்த கிரேக்க எழுத்துகளை படித்திருக்க வேண்டும் அல்லது யாராவது அவருக்கு அதன் பொருளைச் சொல்லியிருக்க வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சிகை கொற்றன் தவிர, வேறு சில பெயர்களும் இங்கே காணக் கிடைக்கின்றன. ஒன்றாம் கல்லறையில் கோபன் என்பவர் தனது பெயரை, சிகை கொற்றனைப் போலவே எழுதியிருக்கிறார். அதாவது 'கோபன் வரத கண்டன்' என எழுதியிருக்கிறார். சேலம் அம்மன் கோவில்பட்டி கல்வெட்டிலும் இதே பெயர் வருவதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 8வது எண் கல்லறையில் 'சாத்தன்' என்பவரது பெயர் வருகிறது. 9வது கல்லறையில் 'கீரன்' என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. கீரன் என்ற பெயர் புகளூர் கல்வெட்டிலும் ஓமனில் கிடைத்த ஒரு பானை ஓட்டிலும்கூட காணக்கிடைத்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள் ஆய்வாளர்கள். ஒட்டுமொத்தமாக, இந்த எழுத்துகள் அடையாளம் காணப்பட்டது, ரோமானியர்களின் காலத்தில் நிலவிய இந்திய-எகிப்தியத் தொடர்புகளை சுட்டிக்காட்டும் அதே நேரத்தில், அந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் எந்தெந்தப் பகுதிகள் ரோமானியப் பேரரசுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தன என்பது குறித்த சிறு வெளிச்சத்தையும் பாய்ச்சியிருக்கின்றன. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz0gr47ezd7o
  42. எனக்கு இளையராஜாவின் மீது விமர்சனங்கள் உண்டு. ஒரு மனிதராக அவர் பல பிழைகளைக் கொண்ட ஒருவர். ஆதி திராவிட சமூகத்தில் பிறந்து விட்டு, அதை மறுக்கும் விதமாக நடந்து கொள்வதுடன் தன்னை ஒரு பார்ப்பனராக, ஒரு சங்கியாக நினைப்பதுடன், மற்றவர்களும் தன்னை அவ்வாறுதான் நடத்த வேண்டும் எனும் எண்ணம் கொண்ட ஒருவர். எந்த சமூகம் அதிகாரத்துடன் உள்ளதோ, அதில் தானும் சங்கமிப்பதனூடாக, அதிகாரம் அற்ற, குரலற்ற சமூகங்களை ஏளனப்படுத்த முனைகின்ற ஒருவர் இளையராஜா. மோடிக்கு முன், முதலமைச்சர் முன், கோயில் பூசாரி முன், குருக்கள் முன் பவ்வியமாக கைகட்டி நிற்பார். அவர்கள் இவரை மதிக்காவிடின் கூட, அவர்கள் கால்களை கழுவி விடக் கூட துணிவார். ஆனால் ஒரு சாதாரண ஊடகவியலாளரைக் கூட மதிக்க மாட்டார். சபை நாகரீகம் என்பது மேட்டுக்குடியினருக்கு மட்டுமே என்ற கொள்கை கொண்டவர். ஆரம்பத்தில் தன் குருக்களாக, பழைய இசையமைப்பாளர்களை ஒவ்வொரு மேடையிலும் குறிப்பிட்டுச் சொல்வார். இன்று தன்னை பிரம்மாவாக நினைத்துக் கொள்கின்றார். மிகுந்த தலைக்கனம் பிடித்தவர். குடும்பத்தினருடன் கூட தலைக்கனமாக நடந்து கொள்கின்றவர். அவருக்கு பா.ஜ.க வின் மூலம் கிடைத்த ராஜ்யசபா எம் பி பதவி என்பது தலையில் சந்தனம் என்று நினைத்து அவரே வைத்துக் கொண்ட மலக் குவியல். ஆனாலும் இளையராஜா ஒரு அற்புதமான, அருமையான, இயற்கை எமக்கு அருளிய ஒரு கொடை. இதுவரைக்கும் அவர் கிட்டத்தட்ட 7000 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அதில் ஒரு 100 பாடல்கள் வரைக்கும் ஏனைய பாடல்களின் மெட்டுக்களை உருவி இசையமைத்து இருப்பார். ஆனால் அதை மட்டும் வைத்துக் கொண்டு அவரது அளப்பரிய இசையை எடை போட்டு மட்டம் தட்ட முடியாது. என்னைப் பொறுத்தவரைக்கும் ரஹுமான், ஹரிஸ் ஜெயராஜ் போன்றவர்கள் சமூகத்தில் உள்ள எல்லா மட்டத்தினரையும் கவரக்கூடிய இசையை அளிப்பவர்கள் அல்ல. ஆனால் இளையராஜாவால் அது முடியும். சாதாரண, படிக்காத, அன்றாடம் காச்சி, பாமரனான் ஒருவராலும் அவரது இசையை ரசிக்க முடியும்; தனி விமானம் வைத்து பயணம் செய்கின்றவர்களாலும் ரசிக்க முடியும். கருவில் இருந்து சுடுகாடு போகும் வரைக்குமான வாழ்வின் அனைத்து தருணங்களுக்கும் அவர் இசையமைத்துள்ளார். அந்தந்த கட்டங்கள் வாழ்வில் வரும் போது, அதற்கு ஏதுவாக ஒரு பாடலை , இசையை ஏற்கனவே அவர் இசையமைத்து இருப்பார். பாடல்கள் மட்டுமல்ல, அவரது பின்னனி இசையும் அற்புதமானது. பிதாமகன் படத்தில் கள்ளச்சாராயம் காச்சி குதிரைகளில் வைத்து கடத்தி செல்லும் காட்சியில் பின்னனி இசைத்து இருப்பார். கண்ணை மூடிக் கொண்டு கேட்டால், பரவசம் அடைவோம் (இப் படத்தில் உள்ள பிறையே பிறையே பாடல் தனிமையில் கேட்கும் போது புல்லரிக்க வைக்கும்). மெளனராகத்தின் படத்தின் பின்னனி இசை முழுதுமே ஒரு தனி அல்பமாக போட்டு கேட்க முடியும். தளபதி படத்தில் வரும் பின்னனி இசை இன்னொரு வகையான பரவசம். -------- என் அம்மாவுக்கு 80 வயதாகின்றது. இப்ப இருக்கும் அம்மா முன்னர் இருந்த என் அம்மா மாதிரி அல்ல. எப்பவும் தன்னை பற்றி மட்டுமே கதைக்கின்ற, தற்பெருமை பேசுகின்ற, என் அப்பாவை எப்பவும் உயர்த்தி மட்டுமே கதைக்கின்ற ஒருவராக இப்ப அம்மா உள்ளார். அறளை பெயர்ந்து தற்பெருமை பேசும் ஒருவராக அம்மா மாறிவிட்டார். ஆனாலும் அம்மா மீதான என் பாசம் குறையவில்லை. அவர் எனக்கு செய்த அனைத்து நன்மைகளையும் நான் மறக்கவில்லை எனக்கு இளையராஜாவும் அப்படித்தான். இன்னும் சொன்னால், நான் அம்மாவுடன் கழித்த ஒட்டுமொத்த நிமிடங்களை விட, இளையராஜாவின் இசையும் கழித்த நிமிடங்கள் பல மடங்கு அதிகம். Wishing you long life Ilayarajah

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.