Leaderboard
-
goshan_che
கருத்துக்கள உறவுகள்9Points19869Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்7Points39465Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்7Points89120Posts -
செம்பாட்டான்
கருத்துக்கள உறவுகள்6Points1610Posts
Popular Content
Showing content with the highest reputation on 03/05/26 in all areas
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்று நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்திய அணி, சஞ்சு சாம்சனின் மின்னல்வேக 89 (42 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷிவம் டுபேயின் வேகமான 43 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும், இஷன் கிஷனின் அதிரடியான 39 (18 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஹர்திக் பாண்டியாவின் விரைவுச் சூடான 27 (12 பந்துகள்) ஓட்டங்களுடனும், திலக் வர்மாவின் அதிவேகமான 21 (07 பந்துகள்) ஓட்டங்களோடும் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் ஜொஃப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 61 ஓட்டங்களைக் கொடுத்திருந்தார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே எல்லைக்கோட்டுக்கு வெளியே பந்துகளைச் சிதறடித்து பின்தொடர ஆரம்பித்ததனால் விக்கெட்டுகளை இழக்கவேண்டி ஏற்பட்டது. எனினும் ஜேக்கப் பெத்தெல்லின் அபாரமான மரண அடியுடன் எடுத்த செஞ்சுரியான 105 (48 பந்துகள்) ஓட்டங்களுடனும், வில் ஜக்ஸின் வேகமான 35 (20 பந்துகள்) ஓட்டங்களோடும் வெற்றி இலக்கை அண்மித்தபோதும் இறுதி ஓவரில் ஜேக்கப் பெத்தல் ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்த பின்னர் ஜொஃப்ரா ஆர்ச்சர் 3 சிக்ஸர்களை அடித்தும் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ஓட்டங்களையே எடுத்தது. வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 64 ஓட்டங்களை இறைத்திருந்தார்! முடிவு: இந்திய அணி 7 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அத்தோடு இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியையும் பெற்றது. யாழ் களப் போட்டியாளர்களில் 21 பேர் இந்திய அணி ஏதாவது ஒரு அரையிறுதிப் போட்டி வெல்லும் எனக் கணித்திருந்தமையால், தலா மூன்று புள்ளிகள் வழங்கப்படுகின்றது! இருவர் இந்திய அணி வெல்லும் எனக் கணிக்காததால் அவர்களுக்கு புள்ளிகள் இல்லை. இரண்டாவது அரையிறுதிப் போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:3 points
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
கடஞ்சா, நீங்கள் எல்லா தரப்புகளையும் பார்ப்பதாக கூறுகின்றீர்கள். ஆனால், ஒரு தரப்பையும், மறு தரப்பையும் நீங்கள் ஒரே மாதிரி விளிப்பதில்லையே. நீங்கள் ஆதரிக்கும் தரப்பை மிகவும் மரியாதையுடனும், மறு தரப்பை மிகவும் இழிவாகவுமே குறிப்பிடுகின்றீர்கள். கருத்துகள் எழுதும் பலரும் இப்படியே செய்கின்றார்கள். இதன் அடிப்படையே நீங்கள் அல்லது அவ்வகையான கருத்துகள் எழுதுபவர்கள் ஏற்கனவே ஒரு பக்க சார்பானவர்கள் என்பதே. அவ்வாறான இடங்களிலிருந்து நடுநிலையான கருத்துகளை எதிர்பார்க்க முடியாது. உங்களின் கருத்துகளும் அப்படியான ஒரு பக்க சார்பானதே, ஆனால் அவை நடுநிலையானவை என்று நீங்கள் நினைக்கின்றீர்கள். ஈரானிய சுப்ரீம் லீடர் எனக்கு ஏதாவது தீங்கு செய்தாரா என்று கேட்கின்றீர்கள். ஹிட்லர் எனக்கு ஏதாவது தீங்கு செய்தாரா................ இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு எனக்கு ஏதாவது தீங்கு செய்தாரா...................... அதிபர் ட்ரம்ப் எனக்கு ஏதாவது தீங்கு செய்தாரா...............மஹிந்த எனக்கு ஏதாவது தீங்கு செய்தாரா............ இந்திய பிரதமர் மோடி எனக்கு ஏதாவது தீங்கு செய்தாரா......................... ஆனாலும் இங்கு நானும், வேறு பலரும் இவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்துகளை எழுதிக் கொண்டிருக்கின்றோம். அதே போலவே ஈரானிய சுப்ரீம் லீடரின் நடவடிக்கைகளுக்கும் எதிராக கருத்துகளை சொல்லுகின்றோம். ஒரு சாதாரண உலகக் குடிமகன் என்றே ஒரே ஒரு தகுதியே அதற்கு போதும். உலகில் எந்த தலைவரின் இறப்புக்கு மக்கள் கூடவில்லை, துக்கம் அனுசரிக்கவில்லை.......... ஹிட்லரின் மரணத்திற்காக கூட இன்றும் துக்கம் அனுசரிப்பவர்களும் இருக்கின்றார்கள். அவர் செய்தது சரி என்று வாதிடுபவர்களும் இருக்கின்றார்கள். அதன் அர்த்தம் அவர் ஒரு நல்ல தலைவர் என்பது அல்ல. எந்த நாடும் எந்த நாட்டையும் ஆக்கிரமிப்பதோ அல்லது அதன் தலைவர்களையோ அல்லது மக்களையோ கொல்வதையோ நாங்கள் ஆதரிக்கவில்லை. அதை மீண்டும் மீண்டும் இங்கே எழுதிக் கொண்டிருக்கின்றோம். அது எந்த நாடு என்றாலும் - அமெரிக்காவோ, ரஷ்யாவோ, இந்தியாவோ எது என்றாலும்.2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாங்க தாங்காத சுமையா… பைனலில் வெண்டா போகும் இடமெல்லாம் பானிபூரி வாயனுகள் கெட்ட ஆட்டம் போடுவானுகளே😂2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
2 points
- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
திருமண விழாவிற்கு சோடியாக வந்த விஜய், திரிஷா. காணொளி: 👉 https://www.facebook.com/reel/1406221364085514 👈 சோடிப் பொருத்தம் எப்படி உள்ளது... ப்ரோ. 😂2 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா வெற்றி. இறுதி போட்டியில் நியூசிலாந்துக்கு ஆதரவு2 points- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
நீங்கள் மஹாபாரத காலத்தில் சூர்ய அஸ்தமனத்தின் பின் போர் செய்ய கூடாது, பென் உருவில் வருபவர்ரை கொல்ல கூடாது என்று ஏதேனும் பண்டைய போர் விதிகளை பின் பற்றுகிறீர்களா? இதில் ஜெனிவா ஒப்பந்தம் உட்பட எந்த யுத்த விதியும் மீறப்படவில்லை. அமெரிக்கா, இஸ்ரேல் நாலு நாளைக்கு முன்பே ஈரானின் அத்தனை அரச சார்புடைய அமைபுகள் மீதும் தாக்குதலை ஆரம்பித்து விட்டார்கள். இது ஒரு போர் கப்பல், இந்தியாவில் இருந்து யுத்த முனை நோக்கி நகர்கிறது. இதை யுத்த முனைக்குள் நுழைந்த பின் தான் தாக்க வேண்டும் என எந்த அவசியமும் இல்லை. 2ம் உலக போரில் ஜேர்மனியின் யூபோர்ர்டுகள் பலவும், பிரித்தானியாவின் மேர்ச்ண்ட் நேவி மற்றும் நேவி கப்பல்களும் நடு அத்லாந்திக்கில் வைத்து இரு தரப்பாலும் மூழ்கடிக்கப்பட்டன. அது போலவே இதுவும். ஆனால் இந்தியாவை தேவையில்லாமல் டென்சன் ஆக்க கூடாது என்பதால் - அதன் territorial waters மட்டும் அல்ல exclusive economic zone ஐயும் தாண்டிய பின் இலங்கை EEA க்குள் வைத்து அடித்துள்ளார்கள். இது கூட முடிந்தளவு உயிரிழப்பை தவிர்க்க என்றே நினைக்கிறேன. இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையே அல்லது மாலைதீவுக்கும் Horn of Africa வுக்கும் இடையில் வைத்து போட்டிருப்பின் - காப்பாற்ற எவரும் இன்றி அத்தனை பேரும் செத்திருப்பார்கள்.2 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
2 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நீங்கள் களத்தில் கேக்கேலை போல. ஆந்தை பூனை எல்லாம் கேக்கத் தெரிஞ்சனீங்கள், இங்க களத்தில கேக்கத் தோனலையோ. இங்க கன சில பேர் இந்தியா தேக்கவேணும் என்டினம். ஆனா மூன்று புள்ளியும் வேணுமாம். இது எப்பிடி சரியா வரும். எப்பிடி கூட்டிக் கழிச்சுப் பார்த்தாலும், கணக்கு உதைக்குதே 🤣2 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்று நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் நிலைத்து ஆடாததால் ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுகளை இழந்து 77 ஓட்டங்களில் நின்றது. எனினும் மார்கோ ஜன்சனின் ஆட்டமிழக்காமல் அதிரடியாக எடுத்த 55 (30 பந்துகள்) ஓட்டங்களுடனும், டெவால்ட் பிறெவிஸின் நிதானமான 34 (27 பந்துகள்) ஓட்டங்களுடன், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸின் 29 (24 பந்துகள்) ஓட்டங்களோடும் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே எல்லைக்கோட்டுக்கு வெளியே பந்துகளைச் சிதறடித்து தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களைப் பதம் பார்த்தனர். ஃபின் அலென்னின் அபாரமான மரண அடியுடன் ஆட்டமிழக்காமல் எடுத்த செஞ்சுரியான 100 (33 பந்துகள்) ஓட்டங்களுடனும், டிம் செய்ஃபேர்ட்டின் புயல்வேக 58 (33 பந்துகள்) ஓட்டங்களோடும் 12.5 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 173 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: நியூஸிலாந்து அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அத்தோடு இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியையும் பெற்றது. யாழ் களப் போட்டியாளர்களில் எவரும் நியூஸிலாந்து அணி அரையிறுதிப் போட்டியில் வெல்லும் எனக் கணிக்காததால், ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! முதலாவது அரையிறுதிப் போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றமில்லை):2 points- அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!
1970, 1980 களில் இலங்கை முஸ்லீம்கள் மத்தியில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தை விதைத்ததே ஈரான் தான். முஸ்லீம் அரசியல்வாதிகளினூடாக பள்ளிவாசல் முதல் பள்ளியறை வரை அபாய முதல் ஹலால் வரை மத அடிப்படை சிந்தனையை வளர்த்துவிட்டவர்கள் அவர்கள் தான்.2 points- அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!
உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை, மத்தியகிழக்கில் இருக்கும் வேற்றின முஸ்லீமிற்கும் எங்கோ ஒரு ஓரத்தில் வாழும் இலங்கை முஸ்லீம்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பென்ன? மத்திய கிழக்கில் வாழும் அரபு முஸ்லீம்கள், மற்றைய முஸ்லீம்களை, குறிப்பாக ஆசிய முஸ்லீம்களை தமக்கு நிகராகக் கருதுவதில்லை. இரண்டாம் மூன்றாம் தர நிலை கூட அவர்களுக்குக் கொடுப்பதில்லை. ஆனால், இவர்களோ அவர்களைக் கடவுள்கள் போலக் கொண்டாடுகிறார்கள். சொந்த நாட்டில் வாழும் சகோதர இனத்திற்கெதிராக கொலைகளையும், இன்னொரு இனத்துடன் கூட்டுச் சேர்ந்து இனவழிப்பையும் மேற்கொள்வார்கள்.2 points- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
துருக்கியிலையும் ஈரான்காரன் குண்டு போடுறானம்.நேட்டோ மறிச்சடிக்கிற சிஷ்டம் வேலை செய்ததாலை குண்டு நிலத்திலை விழேல்லையாம். 🤣 போற போக்க பாத்தால் வழமை போல நேட்டோவும் களத்திலை இறங்கும் போல கிடக்கு....☹ என்ன கோதாரியெண்டாலும் சட்டு புட்டெண்டு சோலியை முடியுங்கோப்பா....காருக்கு பெற்றோல் அடிக்க காசு குடுத்து கட்டேலாமல் கிடக்கு....😁1 point- சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் - இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
இரண்டாம் உலகப்போரில இலங்கையிலும் குண்டு விழுந்ததாமெல்லே....😄1 point- ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
இங்கே யாராவது எப்போதாவது கொமெய்னி ஒரு சர்வாதிகாரி என எழுதினார்களா? யாரும் எழுதவில்லை. அவர் ஒரு மத எதேச்சாதிகாரத்தின், தியோகிரசியின் தலைவர். இந்த முல்லாக்களின் ஈரான் மீதான பிடியை விளங்கி கொள்ள கொஞ்சம் வரலாறு தெரிய வேண்டும். இந்த ஏ ஐ உலகில் இதை தேடிபடிப்பது மிக இலகு. ஈரானின் ஷா ஒரு அமெரிக்க பொம்மையாக இருந்தார். அவருக்கு நாட்டில் எதிர்ப்பு வலுவாக இருந்தது. அப்போது, கம்யூனிஸ்டுகள், லிபரல்கள், பெண்ணியவாதிகள், இவர்களோடு இஸ்லாமிய முல்லாக்களும் சேர்ந்து ஒரு புரட்சியை நடத்தினர். அப்போது பலரும் ஜின்னா கனவு கண்ட பாகிஸ்தான் போல் ஒரு நவீனமடைந்த இஸ்லாமிய நாடாக ஈரான் வரும் என்றே உழைத்தனர். கொமேனியும் ஆட்சிக்கு வரும் வரை தன் சுயரூபத்தை காட்டாமலே நடந்தார். எந்தளவுக்கு என்றால் பிரான்ஸ், புரட்சியின் போது கொமேனிக்கு அடைக்கலம் கொடுத்து, முடிவில் ஒரு ஏர் பிரான்ஸ் தனி விமானத்தில் அனுப்பி வைக்கும் அளவுக்கு கொமேனி அமசடக்கியாய் இருந்தார். ஆனால் ஆடை அமைத்ததும் அவர் முதலில் வேட்டை ஆடியது பெண்ணியவாதிகள், கம்யூனிஸ்ட், லிபரல்கள், படித்த சமூகத்தைதான். அதன் பின் ஒரே அடியாக அல்ல, படி படியாக பெண்கள் மீதும், ஏனைய சிறுபான்மை மீதும் கடுமையான தடைகளை ஏற்படுத்தினர். ஆனால் கொமேனியின் பூட்டியை அவர்கள் கனடாவுக்கு அனுப்பி படிக்க வைத்தனர். அவர் அங்கே சுதந்திரமாக ஆடை அணிந்தார். இப்படி ஒரு இரட்டை தன்மையான நிலையில்தான் ஈரான் தலைமை இருந்தது. கொமேனி சாக, 88 முல்லாக்கள் கூடி கமேனியை தெரிந்தார்கள். அவரின் மகனும், இப்போ தெரிவாகி உள்ளவரும் கூட ஆண்மை குறைபாட்டுக்கு இலண்டன் வந்து உயர் சிகிச்சை எடுத்தார், இலண்டனில் பல மில்லியன் சொத்துக்கள் பினாமி பெயரில் வைத்துள்ளார் என அண்மையில் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதான் ஈரானிய முல்லாக்கள் சாம்ராஜ்யத்தின் இலட்சணம். ராஜபக்சகள் இனவாதத்தை பயன்படுத்தியது போல் மதவாதத்தை பயன்படுத்தும் மிலேச்சர்கள்தான் இந்த முல்லாக்கள். இவர்களை எதிர்த்து பல தடவை மாணவர்களும் மக்களும் போராடி அழிந்தனர். இவர்கள் ஈரானிய சமுதாயத்தின் ஒவ்வொரு படிநிலையையிம் கட்டுப்படுத்துவதால் மக்கள் பயத்தின் காரணமாக அடங்கி உள்ளனர். இதே ஈரானிய புலம்பெயர்ந்தவர்களை பார்த்தால் இஸ்ரேல் கொடியோடு நடனம் ஆடும் அளவுக்கு அவர்கள் முல்லாக்களை வெறுக்கிறனர். நானும், குசா அண்ணையும் கூட எம் அண்மைய அனுபவங்களை எழுதினோம். ஒரு காலத்தில் சதாமையும், கடாபியையும் இதை விட அதிக கூட்டம் ஆதரித்தத்து. ஆனால் அவர்கள் கையில் பவர் இல்லை எண்டதும் அதே மக்கள் கூட்டம் தெருவில் நாயை போல அடித்து இழுத்து போனது. முசோலினிக்கும் இதேதான். ஆகவே இவற்றை வைத்து மக்கள் ஆதரவை எடை போட முடியாது. நான் - இத்தனை அழுத்தத்துக்கு மத்தியில் 50 ஆண்டுகளாய் ஈரானில் போராடும் மக்கள், புலம்பெயர் தேசத்தில் பயம் இல்லாத நிலையில் ஈரான் மக்கள் எடுக்கும் நிலைப்பாட்டை பார்த்து சொல்கிறேன்- அதிகாரமும் அதன் பால் பட்ட பயமும் இல்லாமல் போகும் போது ஈரான் மக்கள் முல்லாக்களுக்கு நாயடி, பேயடி கொடுப்பார்கள். ஆனால்… அப்படி நடக்குமா என்பது கேள்வி குறியே. பிகு நான் மேலே சொன்னவை அனைத்தும் தரவுகளின் அடிப்படையிலே - ஆனால் இதை “மேற்கின் பிரச்சாரம்” என சதி கோட்பாடோடு ஒருவர் வருவார். அந்த பேய்கதைகளுக்கு எல்லாம் நான் நக்கலை மட்டுமே பதிலாக தருவேன்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
புள்ளகள்போனால் போகட்டும்.நியூசிலாந்து சாம்பியன்வென்றுபாணிப்பூரிவாயன்களைஅடக்க வேண்டும்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உறைப்பா ரண்டு பானிப்பூரியச் சாப்பிட்டுப் போக வேண்டியதுதான்.1 point- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
திருமணத்துக்கு அப்பாலன உறவு வைத்துள்ள எந்த பெரியாரிஸ்ட் தமிழ் நாட்டு தலைவரினதும் மனைவி, துணைவி எவரும் கோர்ட் படி ஏறவில்லை. ஆனால் தமிழ் தேசியம்(மும்) பேசும் சீமானுக்கும், விஜைக்கும்தான் இப்படி சீர்கேடு நடந்துள்ளது. ஆகவே இங்கே விஜை பெரியாரை விட, சீமானை வழிஒற்றி நட்ச்க்கிறார் என்பதே சரி 😂. கொம்பிளைண்டே விஜிதான் கோவிலில் மலை மாற்றிய முதல் மனைவி என்பதுதான். அந்த திருமண நிகர் உறவில் இருந்தபடி, இரெண்டாவதாக கயல் அண்ணியோடும் திருமணபந்ததை ஏற்படுத்தி கொண்டார் என்பதே விஜி அண்ணியின் முறைப்பாடு.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சின்னச் சின்ன நிகழ்வுகள்தான் போட்டியின் திசையை மாற்றியது. அக்ஸரின் இரண்டு பிடிகள். பாண்டியாவின் கடைசிப் பந்துப் பரிமாற்றம். பாண்டியாவின் எறி. பெத்தலை ஓட்டமிழக்க வைத்தது. இங்கிலாந்து தவற விட்ட சாஞ்சுவின் பிடி.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பெத்தல். அருமையான ஆட்டம். இந்தியாவுக்குப் பீதியக் குடுத்துவிட்டான். மிக இலகுவாக சுழல் பந்தாளர்களை எதிர் கொண்டார்.1 point- ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
ஈரான் விடயத்தில் அதன் உச்சபட்சத் தலைவரை மட்டுமல்ல, படைத்துறை சார்ந்த மற்றும் பாராளுமன்றம் சார்ந்த 40 க்கு மேற்பட்ட தலைவர்களையும் கொன்றொழித்திருக்கிறது. ஓர் அரச கட்டமைப்பினை ஆட்டம் காணச் செய்யக்கூடிய இந்தக் கூட்டுப் படுகொலைகூட ஈரானில் ஆட்சிமாற்றத்தை நிகழ்த்த முடியாமல் போனது அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கிற மிகப் பெரும் அதிர்ச்சி. அந்தளவுக்கு கமெய்னி அவர்கள் ஏகாதிபத்தியத்தின் தன்மையை புரிந்துகொண்டு அரச கட்டமைப்பிலுள்ள தலைவர்களை தாமதமின்றி பிரதியீடு செய்யக் கூடிய வகையில் ஒரு பன்முகப்பட்ட அமைப்புமுறையை உருவாக்கியிருக்கிறார். இது சர்வாதிகாரியாக இருக்கும் ஒருவரின் பண்புநிலைகளுக்கு முரணானது. சர்வாதிகாரிகள் தன்னைத் தவிர ஒருவரையுமே நம்புவதில்லை. இரண்டாம் கட்டத் தலைமையைக்கூட வளர விடுவதில்லை. இந்தத் தன்மைகளை கமெய்னி அவர்கள் கொண்டிருந்திருந்தால் அவரின் திடீர் மரணத்தோடு, ஈரானின் ஆட்சி பொலபொலவென உதிர்ந்து கொட்டுண்டு, ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கும். 46 வருடமாக ஈரானைவிட்டு அமெரிக்காவில் வசிக்கும் அமெரிக்க எடுபிடி ஷா மன்னின் வாரிசு கறள்பிடித்த அரசமுடியோடு மீண்டும் பதவிக்கு வந்திருக்கவும் முடிந்திருக்கும்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா இன்று வெல்லும் 😀 ஆனால் இறுதிப் போட்டியில் சறுக்கும்🤪1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சாஞ்ஜு ஆடிவிட்டுப் போட்டார். என்ன ஒரு ஆட்டம். அடி பொலி.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ooreSdsptn9u29gir6hr36f4771i0:l503mfue 221l213852u7f,0v8é6 a · "நான் ஆடம்பரத்தை விரும்புபவனல்ல. எளிய குடுபத்தினனாக இருந்து இப்போது 30, 40 இலட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை அணிய வாய்ப்பிருக்கும்போது இது சாதாரண மக்களுக்கு எவ்வளவு பெரிதென்று எனக்குத்தோன்றும். இது அவர்களின் வாழ்க்கையையே மாற்றக்கூடிய செல்வம் எனத்தோன்றும்.. அதேபோல் லட்சம் மதிப்புள்ள கடிகாரத்தை அணிந்துகொண்டு நான் என் நண்பர்கள் மத்தியில் செல்வதில்லை அது எனக்கு குற்ற உணர்வைத்தருவதாக இருக்கிறது. அவர்களில் பலர் இன்னமும் உணவு கொண்டுசேர்க்கும் ஊழியர்களாக பணிசெய்கிறார்கள். அவர்களுடன் நான் எளியவனாகவே, என்றும் அவர்களின் நண்பனாகவே இருக்க விரும்புகிறேன்.. " - வருண் சக்கரவர்த்தி. 👏" வருண் தன்னோட திடீர் ஆடம்பரத்துல இருந்து விலகி இருக்கறதா சொல்றார். இன்னொரு விசயம் பகிர்ந்திருந்தார், 'நான் எந்த வேலையும், Carrer ம் இல்லாம இருந்தப்ப என் காதலிகிட்ட சொன்னேன். என்னை நம்பாதே, உன்ன பாத்துக்க முடியுமா தெரியலைன்னு. அவ சொன்னா, நீங்க கிரிக்கெட் ஆடி 6000 சம்பாதீங்க, நான் வேலைக்குப்போயி 15,000 சம்பாதிக்கறேன் குடும்பத்த நான் பாத்துக்கறேன்னு.' 👏" இன்னைக்கி அவர் மனைவி சகல வசதிகளோட நிறைவா இருப்பாங்க இல்லையா... 👏" ஆண்களுக்கு எல்லா பெண்களும் தேவதைகள்தான். ஆனால் உண்மையான தேவதைகள் சில ஆண்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த தேவதைகள் இறக்கைகளோட இருக்கிறார்கள். 👏"1 point- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
நல்லூர் போகலாம்😂 - ஆனால் நேரடி விமானத்தில் அல்லது துருக்கி வழியே போக வேண்டி வரலாம்.1 point- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
நீங்கள் சொல்வது போல்... இப்போது பயணத்தை தொடர்ந்தால் கப்பலுக்கு எப்படியும் அடி விழும். இலங்கையில் நிற்க அனுமதி கொடுத்தால்... இலங்கைக்கு பிரச்சினை வரும். ஸ்ரீலங்கா எமக்கு எதிரான போரில்... அமெரிக்காவிடமும், ஈரானிடமும் மிகவும் கடமைப் பட்டுள்ளார்கள். என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. கடைசியில் இரண்டு பேரும் சேர்ந்து இலங்கைக்கு அடி விழப் போகுதோ தெரியாது. 😂 இந்த வருச... நல்லூர் திருவிழாவுக்கு போக ஏலாது போல கிடக்கு. 🤣1 point- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
(Three ஷா.) 😂 சுவியர்… சுவைப்பிரியனுக்கு வயசுக் கோளாறாக இருக்குமோ… 🤣1 point- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நோ ...... அவர் 3 சாவை கவனித்து வந்திருக்கிறார் . ........! 😂1 point- இஸ்ரேல் மீதான ஈரானின் புதிய ஏவுகணைத் தாக்குதல்; ஆறாவது நாளாகவும் தொடரும் மோதல்!
இஸ்ரேல் மீதான ஈரானின் புதிய ஏவுகணைத் தாக்குதல்; ஆறாவது நாளாகவும் தொடரும் மோதல்! ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் ஆறாவது நாளை எட்டியபோதும், அமெரிக்க வான்வழித் தாக்குதலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் வொஷிங்டனில் தடுக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பின்னரும் வியாழக்கிழமை (05) அதிகாலை இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியது. இதனால், மில்லியன் கணக்கான குடியிருப்பாளர்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். வொஷிங்டனில் உள்ள குடியரசுக் கட்சி செனட்டர்கள், வான்வழித் தாக்குதலை நிறுத்துவதையும், இராணுவ நடவடிக்கைக்கு காங்கிரஸால் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். இதனால் மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் மோதல்கள் தொடர்ந்து விரிவடைந்து வருவதால், போரை இயக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிகாரம் பெரும்பாலும் கட்டுப்பாடற்றதாக உள்ளது. அமெரிக்க செனட் 53க்கு 47 என்ற வாக்குகளில் தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டாம் என்று வாக்களித்தது, பெரும்பாலும் கட்சி அடிப்படையில், ஒரு குடியரசுக் கட்சியைத் தவிர மற்ற அனைவரும் நடைமுறை தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர் மற்றும் ஒரு ஜனநாயகக் கட்சியைத் தவிர மற்ற அனைவரும் அதை ஆதரித்தனர். புதன்கிழமை இலங்கைக்கு அருகில் ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடித்ததில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டனர். மேலும் துருக்கியை நோக்கி ஏவப்பட்ட ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணையை நேட்டோ வான் பாதுகாப்புப் படைகள் அழித்ததன் மூலமும், அமெரிக்க-ஈரான் போர் கூர்மையாக விரிவடைந்துள்ளது. ஈரானின் கொல்லப்பட்ட உச்ச தலைவரின் சக்திவாய்ந்த மகன் அவருக்குப் பின் வருவதற்கான முன்னணிப் போட்டியாளராக வெளிப்பட்டதால் இந்த மோதல் ஆழமானது. இது, நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று உலக சந்தைகளை உலுக்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையின் அழுத்தத்திற்கு தெஹ்ரான் அடிபணியப் போவதில்லை என்பதை வெளிப்படுத்தியது. இந்த ஏவுகணை சம்பவம், ஈரானின் எல்லையை ஒட்டியுள்ள மற்றும் நேட்டோவின் இரண்டாவது பெரிய இராணுவத்தைக் கொண்ட துருக்கி மோதலில் ஈடுபடுவது இதுவே முதல். வியாழக்கிழமையும் போர் தொடர்ந்ததால், ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து முடங்கியது, மத்திய கிழக்கு நாடுகளின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஓட்டம் தடைபட்டது. வியாழக்கிழமை எண்ணெய் விலைகள் உயர்ந்து வருவதால், அதிகரித்து வரும் செலவுகளைக் கட்டுப்படுத்த கப்பல்களுக்கு காப்பீடு மற்றும் கடற்படை பாதுகாப்பு வழங்குவதாக ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையின் மதிப்பீடுகளின்படி, குறைந்தது 200 கப்பல்கள் கடற்கரையில் நங்கூரமிடப்பட்டுள்ளன. போரில் சிக்கித் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான குடிமக்களை வீட்டிற்கு அழைத்து வர பல நாடுகளின் அரசாங்கங்கள் விரைந்ததால், புதன்கிழமை மத்திய கிழக்கிலிருந்து திருப்பி அனுப்பும் விமானங்கள் புறப்பட்டன. சர்வதேச பயணிகளுக்கு உலகின் பரபரப்பான விமான நிலையமான துபாய் உள்ளிட்ட முக்கிய வளைகுடா மையங்கள் பாதிக்கப்பட்டதால், பிராந்தியத்தின் பெரும்பகுதியில் வணிக விமானப் போக்குவரத்து பெரும்பாலும் இரத்து செய்யப்பட்டிருந்தன. கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு சனிக்கிழமை இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட 86 வயதான ஆயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் குறித்த திட்டங்கள் சந்தேகத்தில் இருந்தன. ஒரு நாட்டின் உயர்மட்ட ஆட்சியாளர் வான்வழித் தாக்குதலில் முதன்முறையாக படுகொலை செய்யப்பட்டார். புதன்கிழமை மாலை முதல் தெஹ்ரானில் உள்ள ஒரு பெரிய மசூதியில் உடல் அஞ்சலி செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மூன்று நாட்கள் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதாகவும், இறுதிச் சடங்கு திகதி அறிவிக்கப்படவில்லை என்றும் ஈரான் அறிவித்தது. பெயர் வெளியிட விரும்பாத இரண்டு ஈரானிய வட்டாரங்கள், ஈரானின் கொல்லப்பட்ட உச்ச தலைவரின் மகன் மொஜ்தபா கமேனி, அவரது தந்தை கொல்லப்பட்டபோது தெஹ்ரானில் இல்லை என்று ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தன. புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நிபுணர்கள் சபை விரைவில் தனது முடிவை அறிவிக்கும் என்றும், 1979 இல் இஸ்லாமிய குடியரசு நிறுவப்பட்டதிலிருந்து இரண்டாவது முறையாக அவ்வாறு செய்யும் என்றும் ஈரான் கூறியது. சட்டமன்ற உறுப்பினர் அயதுல்லா அகமட் கட்டாமி அரசு தொலைக்காட்சிக்கு வேட்பாளர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதாகவும், ஆனால் அவர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றும் கூறினார். உயர் தலைவருக்கான பிற வேட்பாளர்களில் இஸ்லாமிய குடியரசின் நிறுவனரின் பேரனும் அண்மைய தசாப்தங்களில் ஒதுக்கி வைக்கப்பட்ட சீர்திருத்தவாத பிரிவின் ஆதரவாளருமான ஹசன் கோமேனியும் அடங்குவர். https://athavannews.com/2026/14672081 point- ` மண்ணுக்கு போற உடம்பு; படிப்புக்கு உதவட்டுமே!'- உடல் தானப் பதிவுசெய்த அற்புதம் அம்மாள், பேரறிவாளன்
1 point"ரொம்ப நாள் ஆசைய்யா... ஆனா யார்கிட்ட கேட்டாலும் யாராவது சொந்தக்காரங்க சாட்சிக் கையெழுத்துப் போடணும்னு சொன்னாங்க. யாரைக் கூட்டிட்டிப் போறதுன்னு தெரியாம இருந்தேன். இப்போ அறிவு இருக்கான்ல... நல்லகண்ணு அய்யாவே தன்னோட உடலை தானம் செஞ்சுட்டாரு... இதுக்கு மேல காத்திருக்கக் கூடாதுன்னு போய் எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டேன்..." - அற்புதம் அம்மாளின் வார்த்தைகளில் அத்தனை திருப்தி. அற்புதம் அம்மாளும் பேரறிவாளனும் இன்று (மார்ச் 4) சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனையில் உடல் தானம் செய்வதற்கான ஒப்புதலை வழங்கியிருக்கிறார்கள். தமிழகத்தின் முதுபெரும் தலைவர் தோழர் நல்லகண்ணு தன் உடலைத் தானம் செய்த பிறகு உடல் தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. "எப்படியிருந்தாலும் மண்ணுக்குப் போற உடம்பு... மருத்துவம் படிக்கிற நம்ம பிள்ளைகளோட ஆராய்ச்சிக்கு தேவையில பாதிகூட உடல்கள் கிடைக்கிறதில்லைன்னு சொல்றாங்க. அவங்களுக்கு உதவட்டுமே... ரொம்பநாளா நினைக்கிறேன். ஆனா அதுக்கான நடைமுறைகள் அவ்வளவு எளிதா இல்லை. இன்னைக்கு நிம்மதியா முடிச்சுட்டேன். அறிவுக்கிட்ட சொன்னப்போ, கொஞ்சம் யோசிச்சான்... 'போடுப்பா கையெழுத்தைன்னு சொல்லிட்டேன். என் உடலைத் தானம் செய்யப்போனா கூடவே அவனும் செஞ்சிட்டான்... சாங்கியம், சடங்குகள் எல்லாம் வழக்கமா நாங்க செய்றது இல்லை. அதனால முழு மனதோட இந்த முடிவை எடுத்தோம்... எனக்கு அவனும் அவனுக்கு நானும் சாட்சிக் கையெழுத்துப் போட்டுக்கிட்டோம்..." என்கிறார் அற்புதம் அம்மாள். "அம்மா தொடர்ச்சியா சொல்லிக்கிட்டே இருந்தாங்க. கூட இருக்கவங்ககிட்டயும் நிறைய பார்க்கிறோம். சமீபத்துல என் நெருக்கமான நண்பர், 'கீற்று' ரமேஷ் மனைவி காலமானபோது அவர் ரொம்ப உறுதியா நின்னு உடல்தானம் செஞ்சார். இத்தனைக்கும் அவங்க இறக்கும்போது 43 வயதுதான். தஞ்சாவூர்ல ஒரு நண்பர் தன் அப்பாவோட உடலை தானம் செஞ்சார். ஒரு தம்பி தன் பிள்ளையோட கண்ணை தானம் செஞ்சார். இது எல்லாத்திலயும் கூட நின்னேன். எனக்கு இதெல்லாம் பெரிய தாக்கத்தை உருவாச்சு. நல்லகண்ணு அய்யாவோட உடலை தானம் செஞ்ச பிறகு அம்மா ரொம்ப உறுதியா நின்னாங்க. கூடவே நானும் பதிவு செஞ்சுக்கிட்டேன்... இது பெரிய விஷயமில்லை. ஆனா, நிறைய பேர் செய்ய முன்வரணும்..." என்கிறார் பேரறிவாளன். உடல் தானம் உறுப்பு தானம் பலரின் உயிரை மீட்கும். உடல் தானம், மருத்துவத்துறை மாணவர்கள் கற்றுத்தேர்ந்து மனித குலத்தைக் காக்க உதவும்! தாயும் பிள்ளையும் ஒருசேர உடல் தானத்துக்குப் பதிவு செய்திருப்பது நல்லதொரு முன்னுதாரணம்... வாழ்த்துகள்! காங்கிரசுக்கு 28+1 இடங்கள் ஒதுக்கீடு: திமுக கூட்டணியில் ஒப்பந்தம் கையெழுத்து!1 point- ` மண்ணுக்கு போற உடம்பு; படிப்புக்கு உதவட்டுமே!'- உடல் தானப் பதிவுசெய்த அற்புதம் அம்மாள், பேரறிவாளன்
1 pointஇங்கே வெறும் பழகுவதற்காக மட்டும் கொடுக்கும் கார் லைன்சன்ஸ் எடுக்கும் போதே உறுப்புதானம் செய்ய விரும்புகிறீகளா என கேட்பார்கள். முன்பு விரும்ப்பம் என்றால் டிக் அடிக்க வேண்டும். இப்போ விருப்பம் இல்லாட்டில் டிக் அடிக்க வேண்டும். இப்படியான முறை மருத்துவ படிப்புக்கு உடலை கொடுக்கும் முறைக்கு இல்லை. ஆனால் அதற்கும் 18 வயதாயிருந்தால் போதும். இந்தியாவிலும் 60 வயதாகவேண்டும் என்ற நியதி இல்லை என்பதை செய்தியே சொல்கிறது.1 point- ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
@Kadancha , நீங்கள் சமீபத்திய நிகழ்வுகளால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றீர்கள் போல தெரிகின்றது. ஏதாவது சில வகைகளில் ஆறுதல் அடைய முயற்சி செய்யுங்கள். இந்த தலைவர்கள் எவருமே நாங்கள் எங்கள் வாழ்க்கைகளை தொலைத்து இவர்களுக்காக துக்கம் அனுசரிக்கும் அளவுக்கு புனிதர்களோ அல்லது நல்ல மனிதர்களோ கிடையாது. நீங்கள் தொடர்ந்தும் தமிழில் எழுத முயற்சி செய்வது பாராட்டுக்குரிய ஒரு விடயம்............👍.1 point- ஈரானுக்கான புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கொமெய்னி தெரிவு!
இலங்கையில் தங்கள் கொலை, கொள்ளை, ஊழல்களை மறைக்க இல்லாத புலிகளையும் புலம்பெயர் தமிழரையும் குற்றம்சாட்டி தம்மை மறைத்துக்கொள்வதுபோல், வளம் நிறைந்த நாடுகளை கொள்ளையடிக்க, அடிமைப்படுத்த அணுஆயுதம் தயாரிக்கிறார்கள் என்று அவர்கள்மேல் போர் தொடுப்பது அமெரிக்காவின் வழமை. சரி, அவர்கள் அணு ஆயுதம் தயாரித்தவர்களாகவே இருக்கட்டும் அதனால் அமெரிக்காவுக்கு என்ன பிரச்சனை? அமெரிக்கா தயாரிக்கவில்லையா அணுஆயுதம்? அமெரிக்கா தயாரித்தால், அமெரிக்காவின் தாக்குதலில் இருந்து இருந்து தம்மை பாதுகாக்க மற்றைய நாடுகளும் தயாரிக்க உரிமை இல்லையா அவர்களுக்கு? மத்திய கிழக்கு நாடுகளை குழப்பி, அவர்களை அவர்கள் உலகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு இழுத்து விட்டதே அமெரிக்கா தான். ஆதன் பலனை பல நாடுகள் அனுபவித்து வருகின்றன. ரஷ்யா தயாரிக்கிறது, சீனா தயாரிக்கிறது அணு ஆயுதங்களை, அவர்களை தாக்கட்டும் பார்ப்போம்! அமெரிக்கா இடங்கண்ட நாடுகளைத்தான் தாக்குவார்களாம். எனக்கென்னவோ ஈரானால்த்தான் டிரம்புக்கு அழிவுபோல்தெரிகிறது. அமெரிக்கா அநிஞாயமாக பழி சுமத்தி அழித்த வளங்களை, கொள்ளையடித்த நாடுகள் தங்கள் சுயத்தை இழந்து பழிவாங்க துடிக்கின்றன, வாங்குகின்றன. அதற்கு பலியாகுபவர்கள் எந்த விதத்திலும் இதனோடு சம்பந்தப்படாத அப்பாவிமக்களே. அமெரிக்காவின் இந்த அடாத்தான செயல்களுக்கு நட்பு நாடுகள் துணை போகக்கூடாது அமெரிக்காவை தனிமைப்படுத்தி விடவேண்டும். ஐக்கியநாடுகள் சபை பாதுகாப்பு போர்படையை அனுப்பி தாக்கப்படும் நாடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும், அல்லது ட்ரம்பை கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும்.1 point- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
இது ஒரு ஏற்றுக் கொள்ள முடியாத தாக்குதல் .நிராயுதபாணிகளாக வந்த கப்பலைத்தாக்குவதும். பாதையில் போவோரை பெரிய வாகனங்களில் வந்து அடித்துக் கொல்வதும். கத்திக்குத்துத் தாக்குதல் செய்வதும் பெரிய வித்தியாசம் இல்லை.முஸ்லிம் செய்தால்பயங்கரவாதம் அமெரிக்கா செய்தால் யுத்தம் என்பது ஏற்புடையதல்ல. அமெரிக்கா ஈரானோடு யுத்தம் செய்வதை ஏற்றுக் கொள்ளலாம். அது யுத்தம். ஆனால் இது கோழைத்தனமான தாக்குதல். இனி ஈரானின் எப்படிப்பட்ட யுத்த நெறிமுறைகளை மீறிய தாக்குதல்களையும் இது நியாயப்படுத்தும். அது சரி ஐநா என்று ஒரு அமைப்பு இருந்ததே. ஒருவாரமாக பேச்சு மூச்சில்லாமல் இருக்கிறது. செத்து விட்டதா?1 point- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
கப்பலை அடிச்சவன் சொல்கிறான் ...நான் அடிச்சது என்று....உதவிக்கு போனாக்கள்..கப்பலையே காணாமல்...அப்படியில்லை என்று மறுக்கினம்...என்னையா அங்கை நடக்குது...லங்காவுக்கு ஆப்பிழுத்த குரங்கின் நிலைதான்1 point- ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. தொழில் நுட்பங்கள் அனைத்தும் மேற்குலகிற்குரியது. அவர்களால் எதையும் செய்ய முடியும். எனவே மேற்குலகிற்கு எதிராக எதையும் கணணி,கைத்தொலைபேசி மூலம் எழுதி விடாதீர்கள். நித்திரை பாயோடு தூக்கிக்கொண்டு போய் விடுவார்கள். 😂1 point- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் நீர்க்குண்டு மூலம் ஈரானிய கப்பலை இலங்கை அருகில் மூழ்கடித்தது கிந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிகையாக எடுக்கலாமா?1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கிந்தியாவின் அண்மைய விளையாட்டை பார்க்கும்போது இங்கிலாந்தை வெற்றி பெறுமா என்பது சந்தேகமே. இன்றுபோல் விளையாடினால் நியூசிலாந்து கோப்பையை தூக்கும் என எதிர்பார்க்கலாம். போட்டிகள் முடியும்வரை கிருபன் ஜீ கைதட்டி கூப்பிட்டு நமக்கு புள்ளிகள் ஏதும் இல்லை என தெரிவிக்க போகின்றார். திரும்பி பார்க்காமல் நடக்க வேண்டியதுதான்.1 point- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
இந்த ஈரான் கப்பல்... காத்தான்குடி இணைய போராளிகளை, ஈரான் போருக்கு அழைத்துப் போக வந்ததாக சொல்கிறார்கள். 😂 அதனை கேள்விப்பட்ட அமெரிக்கா... இதனை தாட்டுப் போட்டுதாம். 🤣1 point- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
அதுகள் பாவங்கள்😂… நீர்மூழ்கி கப்பல் கொழும்பு ஹாபருக்கு வந்து போனாலும் அவைக்கு தெரிய வருமோ தெரியாது😂 தவிர எல்லாருக்கும் நண்பனான எமக்கு இதென்னடா சோதனை - பேசாம விபத்து என முடிப்பம் என நினைத்திருக்க கூடும். ஆனால் அமெரிக்கா உரிமை கோரியதோடு வீடியோவும் வெளியிட்டுள்ளது. 2ம் உலக போரின் பின் நீர்மூழ்கியால் மூழ்கடிக்க பட்ட முதல் கப்பல் இதுவாம். இதேபோல் ஹொர்ர்ம்ஸ் நீரிணையை மூடுவோம் என மிரட்டி, அதை நடைமுறை படுத்த ஈரான் நம்பி இருந்த போர் கப்பலும், ஈரானின் பெரிய கப்பல் தளமான பந்தா அப்பாசின் வாயிலில் ஜெகஜோதியாய் ஏரிகிறது.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எனக்கு புள்ளிகளை கணக்குப் பார்க்கும் வேலை இன்று இல்லை!1 point- பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதா?; டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்
“மரணத்திற்குப் பின்னரான பாலியல் வன்முறை” நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் March 4, 2026 டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இறந்த பெண்ணின் சடலத்தை அங்கு வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர் எனக் கூறி டிக்கோயா கிளங்கன் ஆதாரவைத்தியசாலைக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த 25 ஆம் திகதி ஹட்டன் ஏபோட்ஸ்சிலி தோட்டப் பகுதியில் 23 வயதுடைய பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சடலத்தை கிளங்கன் வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் மூன்று சிற்றூழியர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற காரணம் என்ன என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது. மரணமடைந்த உடலுடன் பாலியல் செயல் செய்வது மனநல மருத்துவத்தில் “நெக்ரோபிலியா” (Necrophilia) என அழைக்கப்படுகிறது. இது ஒரு அரிதான மற்றும் கடுமையான பாராபிலிக் குறைபாடாக கருதப்படுகிறது. காரணம், மரணமடைந்த நபர் ஒப்புதல் (consent) வழங்க முடியாது என்பதே ஆகும். மனநல மருத்துவ வரையறைகளின்படி, ஒப்புதல் அளிக்க முடியாத நபரை மையமாகக் கொண்ட பாலியல் ஈர்ப்பு ஒரு குறைபாடாக வகைப்படுத்தப்படுகிறது. அடிப்படை உளவியல் காரணிகள் நெக்ரோபிலியாவிற்கு ஒரே காரணம் இல்லை. பல உளவியல் காரணிகள் இணைந்து செயல்படலாம். (A) முழுமையான கட்டுப்பாட்டு உந்துதல் சிலருக்கு உறவு சார்ந்த அச்சங்கள் அதிகமாக இருக்கலாம் உதாரணமாக நிராகரிப்பு பயம், நெருக்க உறவு உருவாக்க இயலாமை, பாலியல் செயல்திறன் குறித்த பதட்டம் போன்றவை. ஆனால் மரணமடைந்த உடல் எதிர்ப்பு காட்டாது, தீர்ப்பளிக்காது, மறுக்காது. இதனால் “முழு கட்டுப்பாடு” என்ற உணர்வு உருவாகலாம். இது உறவு சார்ந்த உளவியல் குறைபாடுகளின் பிரதிபலிப்பாக இருக்கலாம். (B) இணைப்பு (Attachment) கோளாறு சிறுவயதில் பாசக்குறைவு, பாதுகாப்பற்ற இணைப்பு, உணர்ச்சி புறக்கணிப்பு இவற்றால், நபர் உண்மையான மனித உறவுகளைத் தவிர்த்து, பாதுகாப்பான (ஆனால் அசாதாரணமான) கற்பனை உலகில் ஈடுபடலாம். (C) Conditioning (பழக்கமாதல்) பாலியல் தூண்டுதல் சில சமயங்களில் குறிப்பிட்ட சூழல்களுடன் இணைக்கப்பட்டு பழக்கமாக மாறலாம். உதாரணமாக மரணம் தொடர்பான அனுபவங்கள், மோர்ச்சரி வேலை சூழல் போன்றவை. (D) ஆளுமைக் கோளாறுகள் சில சந்தர்ப்பங்களில் சமூக விரோத ஆளுமைக் கோளாறு, சாடிசம் (Sadism), மனச்சாட்சி குறைவு போன்ற ஆளுமைக்குறைபாடுகள் இவ்வாறான நடத்தைகளில் ஈடுபடுபவர்களிடத்தில் காணப்படலாம் . இருப்பினும், எல்லா நெக்ரோபிலிக் நடத்தைகளும் ஆளுமைக் கோளாறுடன் தொடர்புடையவை அல்ல. (E) மனவெறுக்கோளாறு (Psychosis) மிக அரிதாக கடுமையான மனவெறுக்கோளாறு, மாயநம்பிக்கைகள் போன்ற நோய் நிலைமைகளினால் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறலாம் நரம்பியல் (Neurobiological) காரணிகள் நரம்பியல் பார்வையில், பாலியல் உந்துதல் மூளையின் சில முக்கிய பகுதிகளுடன் தொடர்புடையது: Hypothalamus – பாலியல் உந்துதல் கட்டுப்பாடு Limbic system – உணர்ச்சி செயலாக்கம் Prefrontal cortex – தீர்மானம் மற்றும் சமூக கட்டுப்பாடு சில ஆய்வுகள், தன்னாட்சி கட்டுப்பாட்டின் குறைவு (impulse control deficit) மற்றும் உணர்ச்சி செயலாக்க கோளாறுகள் அசாதாரண பாலியல் நடத்தைக்கு காரணமாக இருக்கலாம் என முன்வைக்கின்றன. வகைப்பாடு சில உளவியல் ஆராய்ச்சியாளர்கள் நெக்ரோபிலியாவை பின்வருமாறு வகைப்படுத்துகின்றனர் முதன்மை நெக்ரோபிலியா – பிரதான பாலியல் விருப்பம் வாய்ப்புச் சூழ்நிலை – கொலைக்குப் பிறகு திடீர் உந்துதல் கற்பனை மட்டுமே சட்டப் பார்வை மரணமடைந்த உடலுடன் பாலியல் செயல் (post-mortem sexual act) என்பது சட்டரீதியாக மிகவும் கடுமையான விஷயம். இலங்கையில் இது குறித்து தனித்துப் “necrophilia” என்ற பெயரில் பிரிவு இல்லாவிட்டாலும், பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றமாகப் பார்க்கப்படுகிறது. இலங்கையின் தண்டனை சட்டத்தின் பிரகாரம் (a) Section 365 – “Unnatural offences” பழமையான பிரிவாக இருந்தாலும், மனித உடலுடன் இயற்கைக்கு மாறான பாலியல் செயல் மேற்கொண்டால் குற்றமாகப் பார்க்கப்படும். மரணமடைந்த நபருடன் நடந்த பாலியல் செயலும் இப்பிரிவின் பரப்பளவுக்குள் வரலாம். (b) Section 292 – Trespassing on burial places கல்லறை அல்லது அடக்கம் செய்யப்பட்ட இடங்களை அவமதிக்கும், கல்லறையை சேதப்படுத்தும் அல்லது சடலத்தை அசட்டையாக கையாளும் செயல்கள் குற்றமாகும். (c) Section 346 – Causing disappearance of evidence மரணத்திற்குப் பிந்தைய பாலியல் செயல், முன் நடந்த குற்றத்தை மறைக்க மேற்கொள்ளப்பட்டதாக இருந்தால், ஆதாரங்களை மறைத்தல்/மாற்றுதல் குற்றமும் சேர்க்கப்படும். சட்டரீதியான நிலைப்பாடு மரணமடைந்த நபர் ஒப்புதல் வழங்க முடியாததால், இது “ஒப்புதல் இல்லாத செயல்” என கருதப்படும். மனித மரியாதை (human dignity) மரணத்திற்குப் பின்பும் சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது நெக்ரோபிலியா என்பது மிகவும் அரிதான, கடுமையான மற்றும் சட்ட ரீதியாக தண்டனைக்குரிய பாராபிலிக் குறைபாடாகும். இது இயல்பான மனித பாலியல் நடத்தை அல்ல. இதன் பின்னணி உளவியல், நரம்பியல் மற்றும் சமூக காரணிகளின் சிக்கலான ஒருங்கிணைப்பாகும். இந்நிலையைப் புரிந்து கொள்ளும் போது மருத்துவ அறிவு, நீதிமுறை உணர்வு மற்றும் சமூக பொறுப்பு ஆகியவை ஒன்றிணைந்த அணுகுமுறையாக இருக்க வேண்டும். Dr. கனகசபாபதி வாசுதேவா MBBS , Post Graduate Diploma in Legal Medicine (DLM ), Post Graduate Diploma in Toxicology மற்றும் MD (Forensic Medicine) “மரணத்திற்குப் பின்னரான பாலியல் வன்முறை”1 point- ஈரானுக்கு எதிராக ஓரணியில் உலக நாடுகள்!
ஐரோப்பாவை அவமதிக்கும் போது நேட்டோவை பலவீனபடுத்த முயற்சித்த போது இவர் நினைத்து பார்த்திருக்க வேண்டும்1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point- குட்டிக் கதைகள்.
1 pointeotrnSposd1a75f67 414ég5a72067,ev2igl37tru2g7hr 4ic0g2tt:30h · 1962 ஆம் ஆண்டு கலாச்சார தூதுவராக சிவாஜி அமெரிக்காவுக்கு சென்றபோது அவரின் நடிப்பு த்திறமையை கேள்விப்பட்டிருந்த ஹாலிவுட் முன்னணி நடிகர்களான ... (பென்ஹர், டென் கமாண்மெண்ட்ஸ் ஹீரோ) கார்ல்ட்ட்ன் ஹெஸ்டன், ஜேம்ஸ் கார்னர், ஜேக் லெம்மான் போன்றோரெல்லாம் தேடி ஓடி வந்தார்கள். சிவாஜியிடம் மனம்விட்டுபேசி குரூப் போட்டோவும் எடுத்துக்கொண்டு போனார்கள். இதற்கு முன்பு இன்னொரு வெளிநாட்டு சமாச்சாரம்.. 1960… எகிப்தின் கெய்ரோ ஆப்ரோ-ஆசியா படவிழாவில் வென்ற முதல் இந்திய திரைப்படம் வீரபாண்டிய கட்டபொம்மன்தான். சிறந்த படம், சிறந்த நடிப்பு, சிறந்த இசை ஆகிய மூன்று பிரிவுகளில் விருதை அள்ளியது. விருது வாங்க சிவாஜி எகிப்து சென்றபோது அந்நாட்டின் அதிபர் நாசர் வெளிநாடு போயிருந்தார். இதனால் நாசர்-சிவாஜி சந்திப்பு நடக்காமல் போனது. பின்னர் இந்தியா வந்தபோது நாசர் இதுபற்றி பிரதமர் நேருவிடம் நினைவூட்ட தனிப்பட்ட ரீதியில் நாசருக்கு விருந்து வைக்க சிவாஜிக்கு பிரதமர் நேரு அனுமதி தந்தார் என்பது இன்னொரு வரலாறு. உலக சினிமா வட்டாரத்தில் நடிப்புமேதை என போற்றப்பட்ட மார்லன் பிராண்டோவே, சிவாஜியை நேரில் சந்தித்து பேசிய பின்னர், சொன்ன வார்தைகள் இவை.. ‘’சிவாஜியால் என் அளவுக்கு சர்வசாதாரணமாக நடித்துவிடமுடியும்.. ஆனால் அவர் அளவுக்கு என்னால் நடிக்கவேமுடியாது’’.......!1 point- சர்வதேச போர்க்கப்பல் அணிவகுப்பு: இந்திய கடற்படைத் தளபதியுடன் இலங்கை கடற்படைத் தளபதி பங்கேற்பு
1 pointவளர்ந்துவிட்ட இந்திய வல்லரசினதும், குட்டி வல்லரசாக மாறிவரும் சிறிலங்கவினதும் ஆழம் புரியாது நகைச்சுவையா? இவர்களது ஒத்திகையை அடுத்து றம்பே சற்றுத் தயங்கிநிற்பதாகப் பிந்திய செய்திகள் கூறுகின்றனவாம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி1 point- அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!
பாத்திமா மாஜிதாவின் ‘பர்தா’ நாவலில் மிகவும் விரிவாக இதைப்பற்றி எழுதி உள்ளார். அவர் இப்பொழுது இங்கிலாந்தில் வசிக்கிறார். 1970களில் இவர் கிழக்கு இலங்கை சம்மாந்துறையில் 4 ஆம் - 5ஆம் வகுப்புகளில் கல்விகற்கும் காலத்தில் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக "தூய இஸ்லாமிய" (அரேபிய) நடைமுறைகள் பள்ளிக்கூடங்களில், வீடுகளில் புகுத்தப்பட்டது, அதை ஊரில் யார் முன்னின்று செய்தார்கள், அவர்களுக்கான நிதி முதலில் ஈரானில் இருந்து தொடங்கி பின்னைய காலங்களில் சவுதியின் பங்கு எப்படி இருந்தது என்று விரிவாக எழுதியுள்ளார். அருமையான புத்தகம், கிடைத்தால் எடுத்து வாசியுங்கள். கிழக்கு இலங்கை முஸ்லீம் மக்களின் வட்டார மொழியோடு வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கும். Ethir Veliyeeduபர்தாAuthor: மாஜிதா Genre: நாவல் Language: தமிழ் Type: Paperback பாத்திமா மாஜிதாவின் ‘பர்தா’ காலத்துக்குப் பொருத்தமான படைப்பாக வெளிவருகிறது.உண்மையில், காலத்தைத் தீவிரமாக விசாரிக்கும் படைப்பு இது. இஸ்லாம1 point- கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது
கனடாவில் இந்த தடவை பனி கொட்டி இன்னும் சிலர் இயல்பாக வெளியில் போக இயலாத நிலை.சில இடங்களில் பனியை அள்ளி எடுக்கும் போது மண்ணையும் சேர்த்து எடுக்கபட்டுள்ளதால் பஸ் தரிப்பு இடங்களுக்கு அருகில் இலகுவாக வயோதிபர்கள், இயலாதவர்கள் தெரிலிலிருந்து கரைக்கு மாறிக் கொள்ள இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.பஸ் தரிப்பு இடங்களுக்கு அருகில் மிகவும் அவதானமாக பார்த்து போவது நன்று.1 point- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
அப்ப சீமான் இரண்டு பொண்டாட்டி வைத்திருந்தது என்ன கணக்கு. முப்பாட்டன் முருகன் இரண்டு பொண்டாட்டி வைத்திருந்தாதால் அதை பின்பற்றி செபஸ்டியன் சீமானும் வைத்திருந்தார் என்று கூறிவீர்களா புலவரே!0 points - "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.