Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    89365
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    20143
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20564
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    34065
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/20/26 in Posts

  1. இது இப்படியானவர்களின் மனநிலை பற்றிய சரியான அலசலாகவே எனக்கும் படுகிறது. எம்ஜிஆர் படம், கம்பன் கழக ஜெயராஜ், திண்டுகல் லியோனி, சாலமன் பாப்பையா வகையில் இதையும் ரசிக குஞ்சு மனநிலையில், அணுகுகிறார்கள். கூடவே இப்போ ஏ ஐ கூட இருப்பதால் - காசுக்காக அடியான் தரவழிகள் பொய்யாக தெரிந்து கொண்டே வீடியோக்களை போட்டதும் இவர்கள் அதை அப்படியே கவ்வுகிறார்கள். இவர்கள் எவருக்கும் நான் யாழுக்கு வெளியே எந்த எதிர்வினையும் செய்வதில்லை. அடிக்கடி சிலர் என்னை அங்க வா, இங்க வா என கூப்பிடுவதும் உண்டு. நான் யாழை விட்டு அரங்குவதில்லை😂. ஏன் எண்டால் எலோன் மஸ்க் போன்றோருக்கும் அடியானுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இருவரும் பொய்யை காசாக்கும் ஆட்கள்தான். அந்த சகதியில் போய் நாம் தரவு போராட்டம் நடத்தினால் கும்பலாக ஜோம்பிகள் போல வந்து கடித்து குதறி விடுவார்கள். இந்த ஜோம்பிகளை யூடிப்பில் கேள்வி கேட்கும் @ரஞ்சித் மிகவும் பொறுமை, தைரியசாலி. என்னால் முடியாது. ஆனால் அடியானுக்கு ரஞ்சித் சொன்னது உண்மை என தெரியும். ஆகவே அவரோடு வாதிக்காமல் கொமெண்டை நீக்கி விட்டார். கொமெண்டை வைத்திருந்தால் ஜோம்பிகள் விழித்து கொண்டால் அவர் சோத்தில் மண் விழும் என்ற பயம். இந்த அப்பட்டமான பேச்சுரிமை மீறல், பொய் உரைத்தலை யூடியூப் எதுவும் செய்யவில்லை. இதுவே யாழ்களத்தில் எண்டால் உறுப்பினரே தோய்த்து தொங்க விட்டிருப்பார்கள். நிர்வாகம் செய்ய வேண்டியதை செய்திருக்கும். யாழில் கூட பலர் இப்போ இந்த மாதிரி பொய்களை, அரை பொய்களை, பிரச்சாரத்தை இணைக்க முடியாது என்பதால் தாம் எழுதுவதில்லை என கூறுவதை கண்டுள்ளேன். அவர்களுக்கு ஒரு ஆங்கில சொல்லாடல்தான் என் பதில். Good riddance to bad rubbish ! உங்கள் குப்பையை மஸ்கின், மார்க்கின் குப்பை தொட்டிகளில் போய் போதுமானளவு கொட்டி கொள்ளுங்கள்.
  2. அத தெரண கருத்துப்படங்கள்.
  3. வீட்டில் 80 வீதமான பொரியலுக்கு நாம் அவகாடோ எண்ணெய்யை பயன்படுத்துகின்றோம் இப்போது. மிகுதி 20 விகிதத்தில் 15 வீதம் நல்லெண்யையும் 5 வீதம் canola எண்ணெயையும் பயன்படுத்துகின்றோம். இறைச்சி, மீன் marinade பண்ண , salad போன்றவற்றுக்கு ஒலிவ் எண்ணையை பாவிக்கின்றோம். வீட்டில் பார்ட்டி, விருந்தினர்கள் கனக்க எனில் இருக்கவே இருக்கு சூரியகாந்தி பூ எண்ணெய்.😁
  4. தமிழ்நாடு அரசியல் என்பது எப்போதுமே சினிமாவும் சமூகமும் சந்திக்கும் ஒரு விசித்திரமான மேடை. அந்த மேடையில் “நடிகர் அரசியலுக்கு வரலாமா?” என்ற கேள்வி புதியதல்ல. ஆனால் ஒவ்வொரு தலைமுறையும் அதை புதிய கோணத்தில் கேட்கிறது. இன்று நடிகர் விஜயை மையமாகக் கொண்டு எழும் இந்த விவாதம், கடந்த காலத்திலும் பலமுறை எழுந்ததே. அரசியலுக்கு யாரும் வரலாம். அதுதான் ஜனநாயகம். தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் முதல்வராக வர முடிந்ததென்றால், சினிமா நடிகர் துணை முதலமைச்சராக வர முடிந்ததென்றால், நடிகர் விஜய் அரசியலுக்கு ஏன் வரக்கூடாது? இந்த கேள்விக்கான பதிலை கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் தெளிவாகத் தெரியும். அது எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்த காலம். அப்போது அவரைச் சுற்றி எழுந்த விமர்சனங்கள் இன்று கேட்கும் விமர்சனங்களுக்குச் சற்றும் குறைவானவை அல்ல. இன்னும் சொல்லப் போனால் அவை கூடுதலானவை. எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோது, “நீதிக்கு முன்னால் ‘அ’ போட்டால் அநீதி அதுபோலத்தான் திமுகவுக்கு முன்னால் ‘அ’ போடுவது” என்று கருணாநிதி கிண்டல் செய்தார். “இந்தக் கட்சி நூறு நாள் தான் ஓடும்” என்று கண்ணதாசன் ஆருடம் கூறினார். “அண்ணாயிசம் என்றால் என்ன?” என்று கேள்வி துக்ளக் சோவினால் எழுப்பப்பட்டது. இவ்வாறான எத்தனையோ விமர்சனங்கள் எம்ஜிஆரை நோக்கி இருந்தன. அப்போது ஒரு நடிகர் அரசியல் கட்சி தொடங்குவது என்பது வெறும் சிரிப்புக்குரியதாகவே கணிக்கப்பட்டது. ஆனால் ஒரு இடைத்தேர்தல் அந்த சிரிப்பை அடியோடு மாற்றியது. திண்டுக்கல் இடைத்தேர்தலில், பெரிய அரசியல் பின்னணி இல்லாத மாயத்தேவர் என்பவரை நிறுத்தி, ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் எம்.ஜி.ஆர், மாயத்தேவரை வெற்றிபெறச் செய்தபோது, அவரை எதிர்த்தவர்கள் அவரின் உண்மையான பலத்தை உணர்ந்தார்கள். எம்ஜிஆரை விட்டு ஒதுங்கி நின்ற அவரின் வலது கையான ஆர்.எம். வீரப்பன் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டார். அப்போது கிண்டல் செய்தவர்கள், பின்னர் வரலாறு உருவாகுவதைக் கண்டு நின்றார்கள். இன்று எள்ளி நகை ஆடுபவர்கள், மீண்டும் அதே வரலாறு திரும்புமா என்று கேட்கிறார்கள். 1977இல் நடந்த சட்டசபைத் தேர்தலில், பெரிய கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே எம்.ஜி.ஆர் வெற்றி கண்டது, மக்கள் மனதில் நடிகருக்கான இடம் வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது அரசியல் சக்தியாகவும் மாற முடியும் என்பதை நிரூபித்தது. இந்த வரலாற்றை இன்று நடிகர் விஜயைச் சுற்றியுள்ள சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது, சில முக்கியமான வேறுபாடுகள் தெளிவாகத் தெரிகின்றன. எம்.ஜி.ஆர் எதிர்கொண்ட அளவிலான அரசியல் அழுத்தங்களும், வன்முறைகளும் இன்று இல்லை. ஆனால் அதற்கு பதிலாக ஒரு புதிய சவால் உள்ளது. அது சமூக ஊடகங்கள். அப்போது ஊடகங்கள் குறைவு. இன்று சமூக ஊடகங்கள் அதிகம். அப்போது விமர்சனங்கள் குறைவு. இன்று ஒரு வார்த்தை பேசினால், அது ஒரு நிமிடத்தில் ஆயிரம் விமர்சனங்களாக திரும்பி வருகிறது. ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு கருத்தும் உடனுக்குடன் சத்திரசிகிச்சை செய்யப்படுகிறது. விஜயின் விஷயத்தில், எம்ஜிஆர் போல் அவருக்கும் ரசிகர்கள் அதிகம். இளைஞர்கள், நடுத்தர வர்க்கம், சமூக அக்கறை கொண்டவர்கள் ஆகியோரிடையே அவருக்கு ஆதரவு இருக்கிறது. ஆனாலும், அரசியலில் ரசிகர்கள் ஒரு தொடக்கத்தை உருவாக்கலாம். ஆனால் வெற்றியை நிர்ணயிப்பது வாக்காளர்கள். எம்.ஜி.ஆர் வெற்றியின் பின்னால் இருந்தது அவரது திரை விம்பம் மட்டுமல்ல. மக்களுடனான நேரடி தொடர்பு, தாய்ககுலத்தின் ஆதரவு, அவர் மீதான நம்பிக்கை, மற்றும் அவரின்அரசியல் அனுபவம். இந்த அம்சங்களில் சில விஜயிடம் இன்னும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. மேலும், எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது போல, தனது பலத்தை நிரூபிக்க இடைத்தேர்தல் வாய்ப்பு விஜய்க்கு கிடைக்கவில்லை. அவர் நேரடியாகவே சட்டசபைத் தேர்தலின் மூலம் தனது ஆதரவை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார். அதனால் இந்தத் தேர்தல் விஜய்க்கு ஒரு சாதாரண அரசியல் போட்டி அல்ல. அது ஒரு சோதனை. சிங்கம் தனியாகத்தான் வருகிறது. அந்தப் பக்கம் கூட்டமாக இருக்கிறது. எதுவானாலும் வெற்றியை நிர்ணயிப்பது திருவாளர் பொதுமகன்தான் மே மாதம் 4ஆம் தேதி, வாக்குகள் மட்டும் எண்ணப்படாது, ஒரு நடிகரின் அரசியல் பயணத்தையும், தமிழ்நாட்டின் எதிர்கால அரசியலையும் மக்கள் தீர்மானிக்கப் போகிறார்கள்.
  5. இரகுவரனும் இரவிக்கை நாடாவும். சேவல்கள் கூவ காகங்கள் கரைய இளங்காலைக் கதிர் காமத்துடன் பூமியைத் தழுவிக் கிடக்கையில் நல்லூரானின் முன் சந்நிதியில் மேளங்கள் முழங்க மாவிட்டபுரத்தழகி பூரணியின் பொன்னிறக் கழுத்தில் மங்கலநாண் பூட்டினான் நம்ம இரகுவரன் தாவணி போர்த்தி தாவி நடந்தவளை தரதரவென இழுத்து வந்து அறிவுரை தந்து ஆறுமுழம் சீலையை அழகாய் உடுத்தி விட்டு அலங்கரித்த அறைக்குள் தள்ளி விட்டனர் தோழியர் " இஞ்சேருங்கோ கொஞ்சம் வாங்கோ " கெஞ்சி கொஞ்சி அழைக்கிறாள் வஞ்சி, நம்ம இரகுவும் கண்கள் மின்ன நெஞ்சம் களித்திட கால்கள் தயங்க "என்னங்கோ " ஒற்றை வார்த்தை முனகி வருகிறது கட்டிய சேலை காலடியில் விழுந்து கிடக்க ஜாக்கட் தளர்ந்து தோள்வழி சரிய நின்றவள் கொஞ்சம் " இந்த நாடா கொக்கியை கழட்டி விடுங்களேன் கை எட்டுதில்லை " கிளி கொஞ்சுகிறது தாமரைக் கிழங்கும் சுவாசித்திருக்கும் தண்ணியில்லாத் தாமரைக் குளத்தில் முட்டிமோதி கிழங்கெடுக்கும் வராகம்போல் - நம்ம ரகுவும் தட்டுத்தடுமாறி கொக்கியை கழட்டுகிறான் ஆடை பாதி ஆசை மீதியென அலைக்கழிந்தவளை அள்ளியெடுத்து தன்னுடன் சேர்த்தணைத்தபடி அப்படி இப்படியென ஆயிற்று ஐயிரண்டு மாதம் அவன் கைகளில் ஓர் மழலை கொள்ளைச்சிரிப்புடன் காற்றும் புகாத நெருக்கத்திலும் முளைத்திருந்தான் நடுவில் மூத்தமகன் கட்டிலின் ஓர் புறத்தில் பூரணி ஆங்கே ஓர் ஓரத்தில் படுத்தும் புரண்டு படுத்திடவும் கால் நீட்டிடவும் இடமில்லை நம்ம இரகுவரனுக்கு கனிந்ததொரு சிறுபொழுதில் கணநேர ஸ்பரிசத்தில் மலர்ந்து சிரித்தன இரு மொட்டுகள் கொள்ளை அழகுடன் பூரணியோடு பிள்ளைகளுமாய் கட்டில் நிறைந்திட - இன்று மன்னவன் ரகு படுப்பதோ ஹாலில் கிடைக்கும் செற்றியில் செற்றியின் கட்டிலை இழுத்துறங்க அருகே ஒரு முனகல் பார்த்தால் காலடியில் வந்து கிடக்குது கடுவன் நாயும் நாலைந்து வருடங்கள் வேலையும் வீடுமாய் விரைந்தோடிட பூரணியின் நாணமும் வெட்கமும் கூடவே போயின நம்ம ரகுவுக்கு காதலும் காமமும் கணவாய் போயின ஆசைகள் மட்டும் அடிமனதில் கனன்று கொண்டிருக்கும் கல்லுக்குள் தேரையாய் கரைந்திருந்த நேரமது பிள்ளைகள் வளர்ந்தன படித்தன வெளியே பறந்தன " இஞ்சேருங்கோ இங்கே கொஞ்சம் வாங்களேன் " பூரணி அழைக்கிறாள் கிளி கொஞ்சும் குரலில் அதுவும் கொஞ்சம் என்கிறாள் அந்த கொஞ்சம் இன்று கொஞ்சத்தானோ , கற்பனைகள் பல அறைக்குள் வந்து அருகில் நெருங்கி ஆசையை மறைத்து மீசையை முறுக்கி "என்ன" என்று மிடுக்காய் வினவ மோகமாய் முறுவலித்து மெதுவாய் சொல்கின்றாள் இரவிக்கைக் கொக்கி நெளிஞ்சு போச்சு கையால் கழட்டிட வருகுதில்லை , முறுவலிக்கிறாள் பூரணி பரந்த முதுகு பழைய கதைகள் பல கூறுது மனம் சூடாகுது எனக்கு மட்டுமா அவளும் இந்நாள்வரை இதுக்காக காத்திருந்தாளா பல்லால் கடித்து இறுக்கி இழுத்திட ரவிக்கை நாடாவும் அறுந்து விட கழன்ற கொக்கியும் தெறித்துப் பறந்தது பயந்த மாதும் அவன் மார்பில் பதுங்கினள் பாசமுடன் பரிவாய் ரகுவரனும் அவளை மெதுவாய் அணைக்கிறான் சத்தம் கேட்டு அங்கே வந்த கடுவன் நாயும் கதவால் எட்டிப் பார்த்தே அனுங்கியவாறு ஹாலுக்கு வந்து செற்றியை பார்த்துக் கொண்டு வாலையும் ஆட்டியபடி நடந்தது வாசற்படிக்கு ......! யாழ் இணையம் 28 க்காக ஆக்கம் சுவி .......!
  6. வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்! ஈரானின் மீது போர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தபோது, அமெரிக்காவின் F-35 ரக மறைமுகத் தாக்குதல் போர் விமானம் ஒன்று சேதமடைந்ததால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் அவசரமாகத் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானி உயிர் தப்பி, தற்போது சீரான நிலையில் உள்ளார். ஆனால், இந்தச் சம்பவம் குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். தனது வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி அந்த விமானத்தை வெற்றிகரமாகத் தாக்கியதாக ஈரான் கூறியுள்ள நிலையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், தற்போதைய மோதலின் போது அமெரிக்காவின் மிகவும் மேம்பட்ட ஜெட் விமானங்களில் ஒன்றை தெஹ்ரான் தாக்குவது இதுவே முதல் முறையாக இருக்கலாம். இந்தக் கூற்றை வொஷிங்டன் முழுமையாக உறுதிப்படுத்தவில்லை, ஆனால் ஈரானியத் தாக்குதல் என்று நம்பப்படும் ஒன்றால் அந்த விமானம் தாக்கப்பட்டதை அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் செய்தித் தொடர்பாளரான கேப்டன் டிம் ஹாக்கின்ஸ், ஐந்தாம் தலைமுறை ஜெட் விமானம் ஈரான் மீது ஒரு போர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது தரையிறங்க நிர்பந்திக்கப்பட்டதாகக் கூறினார். விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது, விமானியும் சீரான நிலையில் உள்ளார் என்று கூறிய அவர், இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இது ஏன் கவனிக்கப்பட வேண்டிய விடயம் F-35 லைட்னிங் II என்பது சாதாரண போர் விமானம் மட்டுமல்ல; அது அமெரிக்க மற்றும் நேச நாடுகளின் வான் சக்தியின் முதுகெலும்பாகவும், இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் மேம்பட்ட போர் விமானங்களில் ஒன்றாகவும் பரவலாகக் கருதப்படுகிறது. ஒரு விமானத்துக்கு 100 மில்லியன் டொலருக்கும் அதிகமான செலவில், 19க்கும் மேற்பட்ட நாடுகளால் இயக்கப்படும் அல்லது ஆர்டர் செய்யப்பட்ட F-35, உலகின் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமானமாகும். இது மறைந்திருந்து தாக்கும் திறன், மேம்பட்ட உணர்விகள் மற்றும் வலையமைப்புப் போர் திறன்களை ஒருங்கிணைத்து, வான்வழிப் போர் நடத்தப்படும் விதத்தை அடியோடு மாற்றியமைக்கிறது. இதன் பிரதான விடயம் மறைந்திருந்து தாக்கும் திறனாகும். இந்த விமானம் அதன் வடிவம், பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் உள்ளக ஆயுதக் கிடங்குகள் மூலம் ரேடார் கண்டறிதலில் இருந்து தப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இது எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்த விமானத்தை கண்காணிப்பதையோ அல்லது குறிவைப்பதையோ மிகவும் கடினமாக்குகிறது. https://athavannews.com/2026/1469336
  7. உடப்பு கிராமம் 'குட்டி வல்வெட்டித்துறை' என்றும் சொல்லப்படுகின்றது. சில வருடங்களின் முன்னர் நான் அங்கே போயிருந்தேன். என் மனைவி அங்கேயுள்ள கோவிலில் ஏதோ நேர்த்தி வைத்ததாக கூட்டிப் போனார். அந்த மக்கள், அந்தக் கோவில், கோவிலின் அமைப்பு, உள்ளிருக்கும் வர்ண வேலைகள் என்று எல்லாமே எனக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றாகவே இருந்தன. ஆனாலும் நான் அதற்கு முன்னர் அங்கு போயிருக்கவில்லை. நான் கவனித்த இன்னொரு விடயம், இரண்டு கோவில்களிலும் பல புதிய உபயங்களை செய்ததாக சிங்கள மக்களின் பெயர்களே இருந்தன. உடப்பைச் சுற்றியிருக்கும் பல கிராமங்கள் சிங்கள மக்கள் மிகப் பெரும்பான்மையாக வாழும் இடங்களாக மாறிவிட்டன. அங்கிருந்து திரும்பும் போது உடப்பு எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும் என்ற யோசனையும் சேர்ந்திருந்தது.
  8. ட்ரம்ப் செய்கிற குறுக்காஸ் வேலைகளுக்கெல்லாம் முரட்டு முட்டுக் கொடுக்கும் ஒரு நண்பர்கள் குழு ஒன்று (அமெரிக்க இலங்கையர்கள், தமிழர்கள் தான் எல்லோரும்) இங்கே என் ஊரில் இருக்கிறது. மஸ்க் தாறு மாறாக மத்திய அரசின் வேலையாட்களை வீட்டுக்கனுப்பி குடும்பங்களை வறுமையில் தள்ளிய போது, இப்படி "ஒரு மூவாயிரம் டொலர் செக் எல்லோருக்கும் மஸ்க் அனுப்புவார்" என்று முட்டுக் கொடுத்தார்கள். தற்போது இந்த நண்பர்கள் கொடுக்கும் ஒரு முட்டு இருக்கிறது, என்ன தெரியுமா? "ட்ரம்ப் தான் ஆட்சியில் இருந்து போக முன்னர் சகல அமெரிக்கர்களுக்கும் வருமான வரியை இல்லாமலாக்கி விடுவார்" என்பது தான் அந்த முட்டு! வருமான வரி இல்லாத அமெரிக்கா😂! இதைக் கேட்டால் ட்ரம்பே அதிர்ச்சியில் போய் சேர்ந்து விடுவார்!
  9. 🤣ஈலோன் மஸ்க்கும் ட்ரம்பும் டோஜி-DOGE மூலம் சிக்கனமாகச் சேமித்து ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தந்த மூவாயிரம் டொலர் இலாபச் செக்கே இன்னும் செலவழித்து முடியவில்லை! இதற்கிடையில் இந்த எண்ணை ஏற்றுமதி இலாபத்தையும் ட்ரம்ப் எங்களுக்குத் தந்தால், கடவுளே எங்க கொண்டே நாங்கள் காசைக் கட்டி வைக்கிறது😂?
  10. நசுங்க போகுது..… என்று, வேறை எதையோ... சொல்லப் போகிறீர்கள் என நினைத்து விட்டேன். 😂
  11. இப்படி தவிப்பதிலும் வாய்ப்பு கிடைக்கும் போது தாகம் தீர அருந்துவதிலும் தான் இருக்கின்றது தாம்பத்தியத்தின் சுவை.
  12. 😂 சிறிமா இப்படி சொன்னார் என ஆதாரம் உங்களிடம் கட்டாயம் இருக்கும் போட்டு விடுங்கள்😂. அல்லது உங்களுக்கு மட்டும் காதுக்குள் சொன்னாரா?😂 வாசகருக்கு, மேலே உள்ள சொல்லாடல் ஒரு அதிகாரத்தில் உள்ளவர், மக்களிடம் இருந்து, அவர்களின் யதார்த்த துன்பங்களில் இருந்து எவ்வளவு தூரம் விலகி போய் உள்ளார் என்பதை காட்ட உதாரணமாக பயன்படும் சொல்லாடல். பிரெஞ் புரட்சி காலத்தில் இருந்து பிரபலமானது. 1998 இந்தியாவில் கூட, கார் விலை குறைந்ததை அரசு சுட்டி காட்டிய போது, உணவு விலை கூடியதை அரசு கண்டு கொள்ளவில்லை என்பதால், அது அண்டர்நட் போல பாணுக்கு பதில் கேக்கை சாப்பிடுங்கள் என சொல்லுவது போல் நடப்பதாக விமர்சித்தனர். இப்படியான அரசியல்வாதியை விமர்சிக்கும் போது let them eat cake எண்ற “தோரானையில்” அவர் நடப்பதாக அரசியல் எதிரிகள் விமர்சிப்பர். இதைத்தான் மேற்படியார் எங்கோ வாசித்து, தப்பாக மொழி மாற்றி விளங்கி கொண்டுளார் என நினைக்கிறேன். உவமையாக சொன்னதை, அச்சொட்டாக சொன்னதாக விளங்கியுள்ளார். தவிர அரசியலில் எதை சொல்ல கூடாது என்பதில் மேலே உள்ள வாசகம் ஒரு பாலபாடம். அதை சிரிமா சொல்லி இருக்க வாய்ப்பே இல்லை. ஆதாரமும் இல்லை.
  13. இச்செய்தியை யாழ்கள ஆய்வாளர்கள் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய விரைவில் ஆஜர் ஆகின்றார்கள், கவலைப்படவேண்டாம் சகோதரா😁😁
  14. நாங்கள் நம்பீட்டம். 😁 இஸ்ரேலின் கதையை நம்பாதவன்… இரத்தம் கக்கி சாவான். 😂
  15. பயணிகளை இடைநடுவில் இறக்கிய தனியார் பேருந்துக்கு மூன்று நாள் சேவைத் தடை 20 Mar, 2026 | 09:57 AM (எம்.நியூட்டன்) பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு, தனியார் நிறுவனப் பணியாளர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்துக்கு 3 நாட்கள் சேவையிலீடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பேருந்தின் நடத்துனருக்கு 5 நாட்கள் சேவைத் தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார். பயணி ஒருவரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 14.03.2026 அன்று தனியார் பேருந்தில் பயணித்த பயணிகளை, பேருந்து பழுதடைந்துவிட்டதாகக் கூறி நடத்துனர் இடைநடுவில் இறக்கிவிட்டுள்ளார். எனினும், சிறிது நேரத்தின் பின்னர் அதே பேருந்து வேறொரு தனியார் நிறுவனத்தின் (ஆடைத் தொழிற்சாலை) பணியாளர்களை ஏற்றிச் சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பயணியால் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு ஆதாரங்களுடன் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது. இந்த முறைப்பாடு தொடர்பில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் தனியார் பேருந்தின் வழியனுமதிப்பத்திர உரிமையாளர் நேரில் அழைக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டது. விசாரணையின் போது, பேருந்து திருத்த வேலைக்குச் சென்றதும், அதன் பின்னர் ஆடைத்தொழிற்சாலை பயணிகளை ஏற்றச் சென்றதும் உறுதிப்படுத்தப்பட்டது. எனினும், பயணிகளை அசௌகரியத்துக்குள்ளாக்கி, அவர்களைப் பொறுப்பற்ற விதத்தில் இடைநடுவில் இறக்கிவிட்ட தவறான செயற்பாட்டுக்காக, தனியார் பேருந்து 3 நாட்களுக்குச் சேவையில் ஈடுபடுவதற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இடைநடுவில் இறக்கி விடப்பட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பிய பயணிகளுக்கு உரிய பதிலளிக்காது முரண்பட்டமை உள்ளிட்ட காரணங்களுக்காக நடத்துனர் 5 நாட்களுக்குச் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளார். மேலும், இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகளில் அவர் ஈடுபடமாட்டார் என்பதற்கான உறுதியுரையும் அதிகார சபையால் பெறப்பட்டுள்ளது. பாதுகாப்பானதும், தரமானதுமான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்துவதற்காகவே வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நிறுவப்பட்டுள்ளது. எனவே, பொதுப் போக்குவரத்தின் போது இவ்வாறான அசௌகரியங்கள், விதிமீறல்கள் அல்லது முறைகேடுகள் இடம்பெற்றால், பொதுமக்கள் தயங்காது ஆதாரங்களுடன் (ஒளிப்படம் அல்லது காணொலி) 071 9090900 என்ற வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கத்துக்கு அனுப்பி வைக்குமாறு அதிகார சபையின் தலைவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/241426
  16. @goshan_che நான் வடகொரியாவுக்கு ஒன்று ரஷ்யாவுக்கு ஒன்று விண்ணப்பம் அனுப்பி வைக்கட்டுமா
  17. Melbourne, AustraliaAP — On shelves crammed with cuddly toy native animals in an Australian airport gift shop, one fluffy possum stood out: Its big brown eyes were moving. A browsing passenger first spotted a living Australian brushtail possum peering out from among the kangaroos on the display shelf at the departure terminal shop at Hobart Airport in Tasmania state on Wednesday, an airport retail manager Liam Bloomfield said on Thursday. Above the possum were bilbies, marsupials with rabbit-like long ears, and dingoes, Australia’s native dog. Beside the possum in the kangaroo section were Tasmanian devils, a growling carnivore that inspired the feisty Warner Bros. cartoon character Taz. “A passenger reported it to… one of the staff members on shift who couldn’t quite believe what she was hearing,” Bloomfield said. “She then called the (airport) management and said we’ve got a possum in the store.” A staff member took a video of the possum with her phone before the animal grew wary of the growing attention and left the shop. Airport staff were able to remove the possum from the airport unharmed. Bloomfield didn’t know what attracted the possum to the toy shelf. “I’m imaging it saw some of the plush animals that were for sale on the shelf and it decided to make its home with those. It wanted to blend in,” Bloomfield joked. How the possum got into the store and how long it spent there are also unknown. It was unlikely to have been placed there as a prank. Someone would have had to put the possum through X-ray screening to get it into the secure departure terminal area. https://edition.cnn.com/2026/03/19/travel/possum-toys-australia-airport-shop-intl-scli ஆஸ்திரேலிய விமான நிலையம் ஒன்றின் பரிசுப் பொருள் கடையில், உள்ளூர் விலங்குகளின் மென்மையான பொம்மைகளால் நிரம்பியிருந்த அலமாரிகளில், ஒரு பஞ்சுபோன்ற ஆஸ்திரேலிய ஓபோசம் தனித்து நின்றது: அதன் பெரிய பழுப்பு நிறக் கண்கள் அசைந்து கொண்டிருந்தன. தாஸ்மேனியா மாநிலத்தில் உள்ள ஹோபார்ட் விமான நிலையத்தின் புறப்பாடு முனையக் கடையில், புதன்கிழமை அன்று காட்சி அலமாரியில் இருந்த கங்காருக்களுக்கு மத்தியில், உயிருள்ள ஒரு ஆஸ்திரேலிய பிரஷ்டெயில் ஓபோசம் எட்டிப் பார்ப்பதை, பொருட்களைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பயணி முதலில் கண்டார் என்று விமான நிலைய சில்லறை விற்பனை மேலாளர் லியாம் ப்ளூம்ஃபீல்ட் வியாழக்கிழமை தெரிவித்தார். அந்த ஓபோசத்திற்கு மேலே, முயல் போன்ற நீண்ட காதுகளைக் கொண்ட பைப்பாலூட்டிகளான பில்பிகளும், ஆஸ்திரேலியாவின் பூர்வீக நாயான டிங்கோக்களும் இருந்தன. கங்காருக்கள் பிரிவில் அந்த ஓபோசத்திற்கு அருகில், உறுமும் மாமிச உண்ணியான தாஸ்மேனியன் டெவில்கள் இருந்தன; இந்த விலங்குதான் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் துடிப்பான கார்ட்டூன் கதாபாத்திரமான 'டாஸ்'-க்கு உத்வேகம் அளித்தது. "ஒரு பயணி இதைப் பற்றி... பணியில் இருந்த ஊழியர்களில் ஒருவரிடம் தெரிவித்தார், அவரால் தான் கேட்டதை முழுமையாக நம்ப முடியவில்லை," என்று ப்ளூம்ஃபீல்ட் கூறினார். "பின்னர் அவர் (விமான நிலைய) நிர்வாகத்தை அழைத்து, 'கடையில் ஒரு ஓபோசம் இருக்கிறது' என்று கூறினார்." அதிகரித்து வரும் கவனத்தால் அந்த விலங்கு எச்சரிக்கையடைந்து கடையை விட்டு வெளியேறும் முன், ஒரு ஊழியர் தனது கைபேசியில் அந்த ஓபோசத்தை வீடியோ எடுத்தார். விமான நிலைய ஊழியர்கள் அந்த ஓபோசத்தை விமான நிலையத்திலிருந்து காயமின்றி வெளியேற்றினர். பொம்மை அலமாரியை நோக்கி அந்த ஓபோசத்தை எது ஈர்த்தது என்று ப்ளூம்ஃபீல்டுக்குத் தெரியவில்லை. "அலமாரியில் விற்பனைக்கு இருந்த சில மென்மையான பொம்மைகளை அது பார்த்துவிட்டு, அவற்றுடன் தன் இருப்பிடத்தை அமைத்துக்கொள்ள முடிவு செய்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். அது மற்றவற்றுடன் ஒன்றிப்போக விரும்பியது," என்று ப்ளூம்ஃபீல்டு நகைச்சுவையாகக் கூறினார். அந்த ஓபோசம் எப்படி கடைக்குள் வந்தது, எவ்வளவு நேரம் அங்கே இருந்தது என்பதும் தெரியவில்லை. அது ஒரு குறும்புக்காக அங்கே வைக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை. பாதுகாப்பான புறப்பாடு முனையப் பகுதிக்குள் அதை அனுமதிப்பதற்காக, யாராவது அந்த ஓபோசத்தை எக்ஸ்-ரே பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும்.
  18. 130 விட அதிகரிக்கலாம் என கருதுகிறேன், பல கட்டுமானங்கள் இரு தரப்பும் ஏட்டிக்கு போட்டியாக அழிக்கிறார்கள், போர் உடனேயே முடிவிற்Kஉ வந்தாலும் 5 மாதங்களுக்கு மேலாகும் நிலமையினை பழைய நிலைக்கு மீள பெற என ஒருவர் வானொலியில் பேசினார். இந்தியாவின் இராஜதந்திரம் என கூறி இரண்டு கப்பலினை இந்தியா தருவித்தது பற்றி சில செய்தியாளர்கள், இந்தியா யுவானில் கட்டணம் செலுத்தியே அதனை பெற்று கொண்டதாக கூறுகிறார்கள். உண்மை நிலவரம் தெரியவில்லை. பணவீக்கம் அதிகரிப்பிற்கெதிராக வட்டி விகிதம் அதிகரிக்கப்படும். பணவீக்கம் மிகையான பணமும் குறைவான பொருளும் காணப்படுவதால் பொருள்களின் விலை அதிகரிக்கின்றது, அதனை கட்டுப்படுத்துவதற்கு ஒர் கருவியாக வட்டி விகிதம் பயன்படுத்துவார்கள்.
  19. படத்தில் எங்க ஆமிக்காரரை காண இல்லை? ஆமிக்காரர் தானே வடக்க்கில் வாழும் பெருன்பான்மை சிங்கள மக்கள்.
  20. நாங்கள் சோசலிசம், சோசலிசம் என்று இந்திய , ரஸ்ஸிய கொள்கைகளின் பின்னால் ஓடியதால் அமெரிக்காவிற்கு எதிரானவர்களாக அடையாளம் காணப்பட்டோம். அதன் விளைவே இலங்கையரசு அமெரிக்காவை எமக்கெதிராகப் பாவித்தமை. அமெரிக்காவுடன் அனுசரித்துப் போகவேண்டும் என்கிற தெளிவு எமக்கு ஏற்பட்டபோது எல்லாமே தலைகீழாய் மாறிவிட்டது. எமது கையில் இருந்த விடுதலைப் போராட்டத்தைக் காவுகொடுத்துவிட்டு இன்று எவரதோ போராட்டத்திற்காக, எவரதோ அதிகாரத்திற்காக, எவரதோ விடிவிற்காக, எவரதோ பாதுகாப்பிற்காக பிரிந்து நின்று விவாதித்துக்கொண்டிருக்கிறோம். சர்வதேச அரசியலில் ஏதிலிகளாக்கப்பட்டிருக்கும் நாம் எம்முடன் சம்பந்தப்படாத பிணக்குகளில் இடதுசாரியென்றும், வலதுசாரியென்றும் பிரிந்துநின்று எம்மை அடையாளம் காணப் பார்க்கிறோம். நாம் இழந்தவை ஏராளம். இவை எதனையும் மீட்பதற்கான மனோநிலையோ, சூழ்நிலையோ இல்லாத கையறு நிலையில் நானும் நீங்களும் நின்றுகொண்டிருக்கிறோம்.
  21. கண்ணாடி வீட்டுக்காரன் கல்லெறிய முன்பு யோசிக்க வேண்டியவை. இஸ்ரேல் பிரதமர் சொல்லுறதையே நீங்க கேட்கணும் ஐயா. அவருக்கு நீங்க ஒன்றும் சொல்லக் கூடாது.
  22. அங்கே. யாரை. நிறுத்தினாலும். இப்படிப்பட்ட. கதைகள். வரத் தான். செய்யும். விசுகர். எங்கே. போய்விட்டார். நித்திரையா. ? இலங்கை. தமிழரிடம். கேட்கப்படாது. என்பது. சரியான. கருத்து. தமிழ். நாட்டில். சீமான். சேகரிக்கலாம். வீடும். தோட்டமும். . வேறு. சொத்துகளும். வேண்டலாம்.
  23. சீமான் காமராஜர் படத்தை போட்டு பிச்சை எடுத்தால் எடுக்கட்டும். தலைவர் படத்தை போட்டு ஏன் பிச்சை எடுக்கிறார் என்பதே அவர் திரள்நிதி திரட்டுவதை ஈழ தமிழர் எதிர்க்க காரணம். மாவீர தினம் நடத்தி அதில் பிச்சை எடுத்தவர் சீமான். அந்த காசு யாருக்கு பயன் பட்டது? ஏதாவது ஒரு முன்னாள் போராளிக்கு? மாவீரர் குடும்பத்துக்கு? இல்லை - அவர் காப்பி தோட்டம் வாங்கவும், பஜரோ ஜீப் வாங்கவும், நீலங்கரையில் ஆறு கோடிக்கு மாளிகை வாங்கவும், அதில் ஒரு குட்டி மிருக காட்சிசாலை போல் வைத்திருக்கவும், மகன்களை தனியார் ஆங்கில பள்ளியில் சேர்க்கவும், குடித்து வெறித்து விட்டு பொட்டம்மானை தூசணத்தில் ஏசவும்…விஜி அண்ணிக்கு மாசம் 50,000 கொடுத்து ஆபாச ஆடியோவை பெறவும்.. தலைவர் படத்தை போட்டு எடுத்த பிச்சையை பயன்படுத்தினந்ல் அதை கேட்கத்தான் வேண்டும். தலைவர் படத்தை சீமான் போடாமல் இருந்தால் கூட சீமான் இப்படி உண்டியல் குலுக்கியபடியே, 20 வருடமாக ஒரு வேலையும் செய்யாமல் சொத்து மேல் சொத்து குவிப்பதை யாரும் கேள்வி கேட்கலாம். அப்படி பார்த்தால் செந்தில் பாலாஜிக்கு யாரோ காசு கொடுக்குறார், ஓபிஎஸ் சுக்கு சேகர் ரெட்டி கொடுத்தால்…உனக்கு ஏன் குமட்டுது எனவும் கேட்கலாம். பொதுவெளியில் உள்ளவர் பணவிசயத்தில் இப்படி களவாக நடந்தால் ஒரு பொதுமகனுக்கு குமட்ட வேண்டும். இது எனக்கு குமட்ட கூடாது என்று சொல்பவர்கள், தாமும் பொது சொத்தை எப்படி கையாண்டார்களோ என்ற சந்தேகம் கூட எழ வாய்ப்புள்ளது.
  24. ஜேர்மனியின் ஜனநாயக சகதியில் கிடந்து கஸ்டபடாமல், வடகொரியா, ரஸ்யாவுக்கு போறது அண்ணை? எதுவும் வேண்டாம். கொஞ்சம் சர்வாதிகாரம் கூடிய நாடு ஹங்கேரி. ஈயு நாடு எனவே நீங்கள் நாளைக்கே அங்கே போகலாம். மொழி பிரச்சனையிம் குறைவு. செய்வீர்களா?
  25. விட்டுத்தள்ளங்கள் விசுகர்! கட்சி நிதி என்பது எல்லா நாடுகளிலும் உள்ள விடயம். அநேகமான நாடுகளில் கட்சி அங்கத்தவர் சந்தா கட்டணம் கட்டாயம் எனும் ஒரு விடயம் உள்ளதை தெரியாமல் பரிதவிக்கின்றார்கள். தமிழ் நாட்டில் ஏனைய கட்சிகளின் நிதி சேகரிப்புகளை அறியாமல் பேசுகின்றார்கள்.
  26. ஆக, யாழ் அகவை 28இல் ஊர்க்கதை வாசிக்க வாய்ப்பிருக்கின்றது.☺️
  27. இதை முன்னரும் நிழலி ஒரு தடவை கேட்டிருந்தார். மத்திய தரை (Mediterranean) நாடுகளில் ஒலிவ் எண்ணையை உணவின் மீது தெளித்து, சூடாக்காமல் பாவிப்பதால் இந்த தவறான புரிதல் என நினைக்கிறேன். சாதாரண வதக்கல் (frying), தீவிர வதக்கல் (deep frying): முட்டை பொரித்தல் அல்லது அல்லது எதையாவது கொஞ்ச எண்ணையில் வறுத்தல் போன்றவற்றிற்கு தூய ஒலிவ் எண்ணை (extra virgin olive oil) பாவிக்கலாம். எண்ணையின் smoke point ~400 F வரை இருப்பதால் கருகிய பக்க விளைவுகள் உருவாகாது. அதை விட அதிக வெப்ப நிலை வேண்டும் மீன் பொரித்தல் போன்ற தேவைகளுக்கு light-tasting olive oil என்ற ஒரு வகை இருக்கிறது. இதன் smoke point ~470 F வரை இருப்பதால் கூடுதல் பாதுகாப்பு. இந்தப் பாதுகாப்பிலும் திருப்தி இல்லையெனில், அவகாதோ எண்ணை பொரிக்கப் பாவிக்கலாம். இதன் smoke point ~520 F வரை இருக்கும். அதே வேளை ஒலிவ் எண்ணையின் ஆரோக்கிய அம்சங்கள் அவகாதோ எண்ணையிலும் இருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், எங்கள் அனேக சமையல் தேவைகளுக்காக ஒலிவ் எண்ணையைச் சூடாக்கலாம்.
  28. இதோ இது என் நெஞ்சிலே .......... படம் : வட்டத்துக்குள் சதுரம் ....... இசை: இளையராஜா ........நடிப்பு : லதா & சுமித்ரா ......... 😍 ஒருமுறை நடிப்புடன் பாட்டையும் கேட்டுப்பாருங்கள் ........ அமிர்தம்.......!
  29. ஈரானை.... நொட்டிப் பார்த்ததில் இருந்து, நிம்மதி இழந்து... முத்தீட்டுது.
  30. இந்தத் தகவல்கள் "புதியவை" என்று சொல்வதை விட "விசித்திரமானவை" என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். தெற்காசியர்கள் - இந்தியர், இலங்கையர், பாகிஸ்தானியர், வங்கதேசத்தினர் - வெள்ளையின மக்களையும், கிழக்காசிய மக்களையும் விட 4 மடங்கு இதய நோய் தாக்கும் ஆபத்துடையவர்கள் ! இதற்குக் காரணங்கள் அவர்களுடைய ஜீன்களிலேயே இருக்கின்றன. இரத்தம் இலகுவாகக் கட்டியாகும் நிலை (thrombosis). இரத்தக் கொழுப்பு ஆரோக்கியமற்ற நிலை (dyslipidemia). அழற்சி (inflammation) அதிகரிக்கும் நிலை ஆகிய 3 காரணிகள் இந்த 4 மடங்கு அதிகரித்த இதய நோய் வாய்ப்பின் காரணங்கள். இந்த 3 காரணிகளுள் முதலாவதைக் கட்டுப் படுத்த மாத்திரைகள் தேவைப் படலாம் (blood thinners). ஏனைய இரண்டையும் கட்டுப் படுத்த உணவும், உடற் பயிற்சியும் பயன்படுத்தலாம். 1. இரத்தக் கொழுப்பு நிலை: இதை நாம் உள்ளெடுக்கும் எண்ணையில் இருக்கும் கொழுப்பு பிரதானமாகத் தீர்மானிக்கும். தேங்காய் எண்ணை, பாம் எண்ணை என்பவற்றில் இருக்கும் நிரம்பிய கொழுப்பமிலம் இரத்தத்தின் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் காரணி. இவர் குறிப்பிடும் பாமோலின் எண்ணை கூட 50% வரை நிரம்பிய கொழுப்புக் கொண்டது. அதைச் சாதாரணமாக "விரும்பினால் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று ஆலோசனை சொல்வது ஆபத்தானது. 2. PUFA இனைப் பொரிக்க/வதக்கப் பாவித்தால் அதில் இருந்து புற்று நோய் உருவாக்கும் காரணிகளும், அழற்சியைக் கூட்டும் பொருட்களும் உருவாகும் என்பது உண்மை. MUFA இனைச் சூடாக்கினால் இந்த ஆபத்துக்கள் குறைவு. இந்த இரண்டு நிபந்தனைகளையும் நிறைவு செய்யும் எண்ணை வகை ஒலிவ் எண்ணை: அதில் இருக்கும் கொழுப்பமிலம் பெருமளவு MUFA வகை. நிரம்பிய கொழுப்பும் குறைவு. இதை விட்டு விட்டு பாமோலின் எண்ணையை எடுத்துக் கொள்ளும் படி சொல்லும் ஆலோசனைக்கு என்ன விஞ்ஞான அடிப்படை இருக்கிறதெனத் தெரியவில்லை.
  31. இதெல்லாம் மேற்கின் பொய் பிரச்சாரம். என் தலைவனின் நாட்டில் மாதம் மும்மாரி பொழிகிறது😂
  32. இவ்வளவு வேகமாகத் தொடரை எப்பிடித்தான் எழுதி முடிச்சியளோ அண்ணா. நன்றாக இருக்கிறது. ஆனாலும் பலரையும் காணவில்லை. யாழை விட்டுப் போய்விட்டார்களா என்ன? கருத்திடாவிட்டாலும் மனம் சலிக்காது எழுதியமைக்கு வாழ்த்து அண்ணா.
  33. கடலில் செல்லும் ஒரு எண்ணை கப்பலில்… எண்ணை கசிவு ஏற்பட்டாலே, பூமி மாசு படுகின்றது என்று பதறும் உலகம்… மாறி, மாறி எண்ணை உற்பத்தி வயல்களை தாக்கும் போது ஏற்படும் கரும் புகை, முழு உலகத்தையே பாதிப்புக்கு உள்ளாக்கும். இந்தப் பாதிப்புக்களை… இந்தப் போரில் எதுவித சம்பந்தமும் இல்லாத, உலகில் ஒவ்வொரு தனி மனிதனும், வருங்கால சந்ததியும் அனுபவிக்க வேண்டி வரும்.
  34. கண்ணோடு பார்க்கும் மோகம் ....... முத்துராமன் & மஞ்சுளா..........! 😍
  35. இந்தப்பிரச்சினையை போலீசார் விசாரிக்க முடியுமா?யார் யார் விசாரிக்கபட்டார்கள்? என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று எதுவும் கூறவில்லை, பொலிஸாருக்கு எதுக்கு பொன்னாடை போர்த்துகிறார்கள்? மக்களின் சமூக பிரச்சனைகளை தீர்க்க முடியாத போலீசார், கல்விசார் பிரச்சனைகளை தீர்க்கமுடியுமா? சைவ ஆலயங்களை இடித்து பௌத்த விகாரைகளை அமைப்போரையும் போலீசார் விசாரித்து பிரச்சனைகளை தீர்த்து சமூகத்தில் இந, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாமே? என்ன கோமாளிக்கூத்தெல்லாம் நடத்துது சிவசேனை.
  36. வீதியோரம் . மலர் . ........... 14. வீட்டுக்குள் சுஜிதா இன்னமும் பயம் தெளியாமல் குத்துக்காலிட்டு தரையில் அமர்ந்திருக்கிறாள்.மணிமேகலை மூவருக்கும் சுட சுட தேநீர் போட்டு எடுத்து வந்து அவளைத் தன்னுடன் சேர்த்தணைத்து பருக்குகிறாள்.தொண்டைக்குள் தேநீர் சூடாக இறங்கியதும் அவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறாள். அப்போது விநோதன் அவளிடம் உனக்கு அவர்களை முன்பே தெரியுமா என்று வினவ ஓம் என்று தலையாட்டுகிறாள். எப்படி என்று கேட்க அவர்கள் என் அப்பாவின் நண்பர்கள். அப்ப நான் சின்னப் பிள்ளை. அடிக்கடி வீட்டுக்கு வருவார்கள்.வீட்டுக்கு வரும்போது சாப்பாட்டு சாமான்கள், இனிப்புகள்,சொக்கிலேட் எல்லாம் எனக்கும் தம்பிக்கும் கொண்டு வந்து தருவார்கள். இவர்கள் வந்தால் அப்பாவின் கையில் நிறைய காசு இருக்கும். — சரி பிறகு….. — அப்படித்தான் அன்றும் இவர்கள் வந்தார்கள். வந்து அப்பாவிடம் வேறொரு ஊருக்கு போய் வேலை செய்யவேண்டும் அங்கு வீடு எல்லாம் இருக்கு நீ முதல்ல போய் நிலமையைப் பார்த்து பின் வந்து இவர்களைக் கூட்டிக்கொண்டு போகலாம் என்று சொன்னவர்கள். சரியென்று அப்பாவும் புறப்பட்டும் போனவர். பின் இரண்டு மூன்று மாதங்களாய் ஒரு தகவலும் இல்லை. இவர்கள் இடைக்கிடை வந்து சாமான்கள்,பணம் எல்லாம் அம்மாவிடம் குடுத்துவிட்டு போவார்கள். அண்டைக்கு இவர்களோடு புதுசாய் ஒருவர் வந்தவர். இப்ப என்னை முதலாய் திரத்தினவர் அவர்தான். அவர் என்னைப் பார்த்து நீ காம்புக்கு வாறியா அங்கு சின்ன சின்ன வேலைகள் செய்ய எமக்கு ஆட்கள் தேவை என்று சொல்ல அம்மா குறுக்க வந்து அவ சின்னப்பிள்ளை இதெல்லாம் வேண்டாம் என்று தடுத்தவ.மற்றவர்களும் வேண்டாம் அன்னை, இது எங்கள் நண்பனுடைய குடும்பம் விட்டுட்டு வாங்க போகலாம் என்று சொல்ல அவர் கேட்கவில்லை. உடனே அம்மாவை வீட்டுக்குள் கூட்டிப்போய் என்ன சொன்னாரோ தெரியாது பின் அம்மா வெளியில் வந்து பிள்ளை நீ இப்ப இவர்களோடு காம்புக்கு போ, நீ விரும்பிய நேரம் உன்னை இங்கு கூட்டி வருவார்கள் நானும் இடைக்கிடை அங்கு வந்து பார்ப்பேன் என்று அழுதுகொண்டு சொல்கிறா. இப்ப நீ போகாவிட்டால் அம்மாவையும் தம்பியையும் சுடுவன் என்று சொல்லுறாண்டி . பிறகு நான் இவர்களுடன் காம்புக்கு வந்தேன். அங்கு வந்தது முதல் சமையல் வேலைகள் எல்லாம் செய்ய வைத்தார்கள். பிறகு தப்பு தப்பான வேலைகள் எல்லாம் செய்ய சொன்னார்கள் செய்யாட்டி அடிப்பார்கள்.ஒருநாள் நான் காட்டுக்குள்ளால் வெளியே ஓடிவந்து ரோட்டில் நடந்து வரும் போதுதான் அந்த ஜீப்பில் வந்தவர்கள் என்னையும் தூக்கி கொண்டு வந்து ஒரு வீட்டில் வைத்து என்று சொல்ல மேகலை தடுத்து அது வேண்டாம் அப்புறம் சொல்லு என்கிறாள், பிறகு இன்னொரு ஜீப்பில் வந்தவர்கள் அவர்களிடம் என்னவோ சொல்லி அனுப்பி விட்டு என்னையும் அந்த ஜீப்பில் ஏற்றிக் கொண்டுவர அதற்குள் யுகேந்திரன் அழுதுகொண்டு இருந்தவன். பிறகுதான் உங்களையும் ஏற்றிக் கொண்டு வந்தவர்கள். சரி நீ போய் குளித்துவிட்டு வந்து சாப்பிட்டுட்டு படு….. இதெல்லாவற்ரையும் மறந்துவிடு. ஒருத்தரிடமும் ஏன் யுகேந்திரனிடமும் கூட சொல்ல வேண்டாம். இனி ஒரு பயமுமில்லை ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். நல்லாப் படிச்சு முன்னுக்கு வரவேண்டும்.என்று சொல்லிவிட்டு விநோதன் எழுந்து செல்ல கூடவே மேகலையும் வருகிறாள். — அப்பாடா ஒருமாதிரி எல்லோருடைய பிரச்சினைகளும் தீர்ந்தமாதிரி இருக்கு, இல்லையா விநோ ….. —- அதெப்படி சொல்ல முடியும் மேகலை…..எப்பவும் நாங்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். “ஒருபோதும் விதைகள் உறங்குவதில்லை அதுபோல்தான் குற்றங்களும்” இதெல்லாம் எங்களுக்கு சரியாக இருக்கலாம் ஆனால் சட்டங்களுக்கு மனிதாபிமானம் கிடையாது…..புரிந்து கொள் ….. —-- எப்படி ….. —-- முதலையால் கை கால் இழந்தவன் இன்னும் ஆஸ்பத்திரியில்தான் இருக்கிறான். இந்த மூவரையும் கொன்றது எங்கள் மூவருக்கும் தெரியும்…. ஒருத்தருக்கு தெரிந்தால்தான் அது இரகசியம்….சுஜிதா இப்ப கொஞ்சம் வளர்ந்த பிள்ளைதான் ஆனால் ஒருநாளோ ஒரு வருடமோ பத்து வருடமோ இன்னும் வளர்ந்து காலவோட்டத்தில் பயம் தெளிய யாரோடாவது வாய் தடுமாறி உளறவும் கூடும். இப்ப யுகேந்திரனுக்குத் தெரியாதுதான் ஆனால் ஒரு காலத்தில் தெரியவும் வரலாம். அப்போ அவனுக்கு எங்கள் மீது கோபம் வரலாம்…அதுதான் எந்நேரமும் நாங்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று சொல்கிறேன். — சும்மா போ விநோ நீ அதை இதை சொல்லி கலவரப் படுத்திறதே உனக்கு வேலையாய் போச்சு ….. . காட்டுக்குள் யானைகளின் மரங்கள் முறிக்கும் சத்தமும், பிளிறலும் கேட்டு, அவை அருகில் எங்கோ இருப்பதை உணர்த்துகின்றன . ...... விநோதனும் சைக்கிளை எடுத்து அந்த வெள்ளை வானில் போட்டு விட்டு அதை ஒட்டிக்கொண்டு காட்டுப்பாதையால் போகிறான்...........! சுபம் …..! படங்கள் உபயம்: கூகுள். யாவும் கற்பனை …..! யாழ் அகவை 28 காக ஆக்கம் சுவி…..!
  37. வீதியோரம். மலர் .......... 6. மாலைப்பொழுதில் இருள் கூடிவரும் நேரம், வீதியின் எதிர்பக்கத்தில் சொகுசுக் கார் ஒன்று வந்து நிக்கின்றது. அதில் இருந்து தம்பதிகள் இருவர் வீதியைக் கடந்து கடைக்கு வருகின்றனர். அப்போது அந்தக் காரின் முன்னால் பேரூந்து ஒன்றும் வந்து நிக்க அதில் இருந்து பிரயாணிகளும் தட தடவென்று இறங்கி வருகின்றனர். முன்னாள் வந்த பெண் கடைக்குள் வந்து மலசல கூடத்தை விசாரித்துக் கொண்டு அங்கு செல்கிறாள். அவளைத் தொடர்ந்து அவனும் போகிறான். சிறிது நேரத்தில் தமது கடமைகளை முடித்துக் கொண்டு இருவரும் கடைக்குள் வருகிறார்கள்.கடை ஆட்களால் நிறைந்து இருக்க இரவு வியாபாரம் களைகட்டுகிறது. அவர்கள் இருவரும் தேவையானதை வாங்கி சாவகாசமாய் சாப்பிடுகிறார்கள். பஸ்ஸில் வந்தவர்களும் உணவருந்திவிட்டுப் போக அதுவும் புறப்பட்டுப் போகின்றது. அந்த இடத்தில் வேறொரு மினிவான் வந்து நிக்கின்றது. அந்தப் பெண்ணும் கணவனிடம் நீங்கள் இங்கு இருங்கள், நான் காருக்கு சென்று பிள்ளையை தூக்கிக் கொண்டு வருகிறேன். அவன் இன்னும் எழும்பி இருக்க மாட்டான் என்று சொல்லிவிட்டுப் போகிறாள். சற்று நேரத்தில் எதிர்ப் பக்கத்தில் ஒரே பரபரப்பு.அந்தப் பெண் குழறிக் கொண்டு கடைக்கு ஓடி வருகிறாள். “கடவுளே நான் இனி என்ன செய்வேன் காருக்குள் இருந்த என்ர பிள்ளையைக் காணவில்லையே. தன் மனைவியின் குரல் கேட்டு எழுந்தவன் வெளியே வந்து பார்க்க அவள் காலில் பாட்டா தடுக்க தோளில் துப்பட்டா பறக்க தடுமாறி ஓடி வருகிறாள். — என்னடி என்ன ஆச்சு . — என்னங்க, நம்ம குழந்தையை காரில் காணவில்லை. கதவெல்லாம் திறந்திருக்கு. நீங்கள் காரை சரியாகப் பூட்டினீர்களா என்று கேட்க, அவனும் தான் அவசரத்தில் பூட்டவில்லையோ என யோசித்துக் கொண்டு காருக்கு ஓடுகின்றான். காரின் பின் கதவு திறந்திருக்க பிள்ளை படுத்திருந்த கூடை கீழே கிடக்கு. அதனுடன் இருந்த பையும் அதில் இருந்த மா, பிஸ்கட் எல்லாம் நிலத்தில் சிதறிக் கிடக்கு. சில பொருட்கள் காட்டினுள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பரந்துபோய் கிடக்கு. இருட்டாகி விட்டதால் சிலர் டோர்ச் லைட் அடித்துப் பார்க்க சிலர் வண்டியின் லைட்டை காட்டுப்பக்கமாய் திருப்புகிறார்கள்.ஆங்காங்க்கே விலங்குகளின் காலடித் தடங்கள் தென்படுகின்றன. அவர்கள் எல்லோரும் நரியோ ஓநாயோதான் பிள்ளையை இழுத்துக் கொண்டு ஓடியிருக்கும் என்று கதைத்து கொள்கிறார்கள்.அதற்குள் யாரோ போலீசுக்கு அறிவித்து அவர்களும் வந்திருந்தார்கள். அவனும் அருகில் இருந்த இராணுவத்துக்கு தன்னை அறிமுகப்படுத்தி கடிதம் ஒன்று ஒரு வண்டியில் குடுத்து விட சற்று நேரத்தில் அவர்களும் தகுந்த ஆயத்தங்களுடனும், மோப்ப நாய்களுடனும் இரு ட்ரக்குகளில் வந்து இறங்குகிறார்கள்.எல்லோருமாய் டார்ச் லைட்டுகளுடன் காட்டுக்குள் பல பக்கங்களுக்கும் தடம் பார்த்து பிரிந்து தேடித் போகிறார்கள். அவள் அந்த வீதியோரத்தில் தன் தலையில் அடித்துப் புலம்பிக் கொண்டிருக்கிறாள். கடவுளே ஏழு வருடங்களின் பின் தவமிருந்து பெற்ற பிள்ளை. இன்னும் இருமாதங்களில் அவனுக்கு இரண்டாவது பிறந்தநாள் வருகிறது.நான் இனி என்ன செய்வேன். “கடவுள் இன்பத்தை தரும்போது ஒன்றுக்குப் பத்தாகத் தருவார் . துன்பத்தைத் தரும்போது பத்துக்கு பதினொன்றாய் தருவதுதான் வாடிக்கை போலும்” கதறி அழுகிறாள். சில மணி நேரங்களின் பின் காட்டுக்குள் சென்றவர்கள் எல்லாம் வெறுங்கையுடன் திரும்பி வருகின்றார்கள்.ஒரு போலீஸ்காரர் அவர்கள் இருவரிடமும் நடந்த சம்பவங்களையும், அவர்கள் பெயர் விலாசங்களையும் விசாரித்து பதிவு செய்து கொண்டிருக்கிறார். அவன் மனைவி குழந்தையுடன் நாட்டுக்குள் சுற்றுலா போய்விட்டு வரும் வழியில் சிரமபரிகாரம் செய்ய இங்கு வண்டியை நிறுத்தியிருக்கிறான். காரில் வேறு ஏதாவது பொருட்கள் காணாமல் போயிருக்கின்றதா என்று சோதித்துப் பார்க்கின்றார்கள். கார் டாஸ்போர்ட்டில் இருக்கும் பணம் முதலான பொருட்கள் எல்லாம் இருக்கின்றன, அவளது கைப்பையில் இருக்கும் பணம், சிறு நகைகள்,அவசியமான மேக்கப் பொருட்கள் மற்றும் காண்டம் எல்லாம் அப்படியே இருக்கின்றன. — என்னடி இது, இது எப்படி இங்கே என்று காண்டத்தைக் காட்டி அவன் கேட்க ….. — போதும் நீ முடிட்டு போய் பிள்ளையைத் தேடு…. பிறகு இருக்கு உனக்கு என்று அவள் சொல்ல ….. — என்ன சொல்கிறாய் நீ ….. — உன் வண்டவாளமெல்லாம் எனக்குத் தெரியும்…… பாக்கிறவளோடெல்லாம் படுக்கிற உனக்குதான் இதுகள் தேவை ……எனக்கு இல்லை……என்று சொல்ல இவள் என்ன சொல்ல வருகிறாள்…… யோசிச்சவன் அட …… ஒருவேளை நான் கழுவப் போட்ட களுசான் பொக்கட்டுக்குள் இருந்து எடுத்திருப்பாளோ என்று நினைக்கும் போது ……. நாய்களின் இரைச்சல்களுடன் மற்றவர்களும் அங்கு வந்துவிடுகிறார்கள் ….. அதனால் அவர்கள் அங்கிருந்த தடயங்களை வைத்து பிள்ளையை ஏதோ விலங்குகள்தான் இழுத்துக் கொண்டு போயிருக்க வேண்டும் என்னும் முடிவுக்கு வருகின்றார்கள். இரவு பன்னிரண்டு மணிக்கு மேலாகி விட்டது.இரவின் நிசப்பத்தில் காட்டு விலங்குகள் ஊளையிடுவதும் ஆந்தைகள், வௌவால்கள்,சில்வண்டுகள் போன்ற இரவாடிகளின் அலறல்களும் பயங்கரமாய் இருக்கின்றது.இதுவரை இது போன்ற ஒரு இரவு இங்கு இருந்ததில்லை. கடையிலும் கூட்டங்கள் எல்லாம் குறைந்து போய் ஓரிருவர் மட்டும் ஆங்காங்கே இருக்கின்றனர். இவ்வளவு களேபரத்திலும் அந்த விலைமாதுக்களின் தொழில் மட்டும் காட்டுக்குள் ஜோராய் போய் வந்து கொண்டிருக்கு. பின்பு பிள்ளையைத் தொலைத்த தம்பதிகளும் கூட போலீசுக்குப் பின்னால் போய் விட்டார்கள். விநோதனுக்கும் மணிமேகலைக்கும் கூட அந்தசம்பவம் மனசைப் பாதித்த படியால் இருந்தவர்களுக்கு தேவையான உணவுகளைப் பரிமாறிவிட்டு விளக்குகளை அணைத்து கடையை சாத்தி விட்டு வீட்டுக்கு போகிறார்கள். …………………………. 6. மலர் .......... 🌼 6.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.