Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    34714
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    89445
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    20222
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    3215
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/03/26 in Posts

  1. யாழின் 28வது அகவையை முன்னிட்டு செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கிய பாடல் song01.mp3.b69e6075a681396cde4d95c3bd303d57.mp3
  2. ஓம், உங்கள் "கூர்மையான" 😎 வாதத்தினால் என் மூக்குடைந்து இரத்தம் கட்டுப் பாடில்லாமல் ஓடுகின்றது ஐயா! உங்கள் அடிப்படைகளும், ஆதாரங்களும் இல்லாத, எதையும் literal meaning இல் எடுத்து, நம்பி, இங்கே சீரியசாக நீங்கள் பகிரும் போது வாசிப்பவர் உடலில் சில பாகங்கள் உடைந்து நொறுங்குவது உண்மை தான்! ஆனால் அது "அதீத சிரிப்பினால்" நிகழ்வது😂! வடகொரியாவில் "யாப்பு"?? அப்ப அத்தைக்கு "மீசை, தாடி, விதைப்பை எல்லாம் இனி உருவாகி விடுமென நினைக்கிறேன்!
  3. அண்ணை, கலகலப்பு கொமடி தான் எனக்கு ஞாபகம் வருது! "இங்க அடிச்சா இங்கதான் வலிக்கும்" https://www.instagram.com/reel/DVfEirBjDfi/?utm_source=ig_web_copy_link
  4. ஈழத்தில் போர் நடந்து கொண்டிருக்கும் போதே அரசியல் மேடைகளில் ஈழத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் சீமான். அது திருமாளவனின் அரசியல் மேடை என நினைக்கின்றேன்.சீமான் அன்றிருந்த கொள்கையில் இன்றும் நிலை மாறவில்லை. அது அவர் பிரச்சனை. ஈழ அரசியலுக்காக நான் சீமானை ஆதரிப்பதில்லை.ஏனென்றால் அரசியல் என்பது காலத்திற்கு காலம் மாறும். அதில் யாருமே பந்தயம் கட்ட முடியாது. சீமான் தன் அரசியல் இலாபத்திற்காக ஈழத்தை கையில் எடுத்தார் என்றால்.... பழ. நெடுமாறன் என்ன மாதிரி? அவரின் இன்றைய நிலைகள் என்ன? எப்படி?
  5. இந்த வான் ஓடத்தில் டிரம்ப் ஐயாவையும், நெத்தென்யாகு ஐயாவையும் ஏற்றி இருக்கலாமே.
  6. ஈழ மண்ணின் போர்ச் சூழலையும், அதனால் சாமானியர்கள் படும்பாட்டையும் த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநரான சோமிதரன். 1988-ல் இலங்கை வடக்குப் பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் போர்ச் சூழலுக்கிடையில் வசித்து வருகிறார் வாசுகி (கபிலா வேணு). அடுத்த நாள் அவரின் மகளின் (சிது குமரேசன்) திருமணம் நடக்கவுள்ளதால், முதல் நாள் சொந்தங்களால் நிறைந்து மொத்த வீடே மகிழ்ச்சியில் இருக்கிறது. இந்நிலையில், அன்று இரவு இந்திய அமைதிப் படையின் கேப்டன் நவீன் சந்திரா தலைமையிலான ஒரு ராணுவக் குழு, ஆயுதப் போராளிக் குழு ஒன்றுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த வாசுகியுடைய வீட்டின் அருகில் பதுங்குகிறது. அதைத்தொடர்ந்து, ஒரு சில காரணங்களால் அவ்வீட்டிற்குள்ளும் நுழைகிறது. இந்நிலையில், மறுநாள் திருமணம், வீடு முழுவதும் சொந்தபந்தம், வீட்டிற்குள் நுழைந்த இந்திய அமைதிப் படை, வெளியே போராளிக் குழு, எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடக்கலாம் என்ற பதற்றச் சூழல் உருவாகிறது. பல இன்னல்களுக்கிடையில் நீளும் அந்த ஓர் இரவின் வழியாகப் போரின் வலியைப் பேசுகிறது அறிமுக இயக்குநர் சோமிதரன் இயக்கியுள்ள 'நீளிரா' திரைப்படம். மகள் திருமணம் குறித்து மகிழ்ச்சி, துப்பாக்கிகளுக்கு அஞ்சாத தீரம், தன்னை நம்பியிருக்கும் பெண்களை நினைத்து வரும் பதற்றம், தன் வீட்டைக் காக்க எடுக்கும் அழுத்தமான முடிவுகள், எங்கும் சரியாத சமநிலையோடு நிற்கும் உறுதி எனப் போர்ச் சூழலுக்கிடையில் சிக்கித் தவிக்கும் குடும்பங்களின் பிரதிநிதியாக தன் தேர்ந்த நடிப்பால் படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறார் கபிலா வேணு. இந்திய ராணுவ அதிகாரியாகக் கதை நகர்விற்கும், பரபரப்பைக் கடத்தவும் உதவியிருக்கிறது நவீன் சந்திராவின் பொறுப்பான நடிப்பு. ஒரே காட்சியில் தன் கதாபாத்திரத்தைத் தூக்கி நிறுத்திக் கைதட்டல் வாங்குகிறார் ரூபா கொடுவாயூர். ஆக்ரோஷம், காதல் என்ற இருவழிப்பாதையைப் போராடிக் கடந்திருக்கிறார் சனந்த். வீட்டுப் பெரியவராக நமச்சிவாயம், ஆணவமான ராணுவ வீரராக ரோஹித் கொகாடே ஆகியோர் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். இவர்கள் தவிர, சிது குமரேசன், 'கயல்' வின்செண்ட், விது ஆகியோர் நடிப்பில் குறைகளில்லை. நீளிரா விமர்சனம் | Neelira Review ஓர் இரவு, ஒரு வீடு, அவ்வீட்டைச் சுற்றி சிறிய தோட்டம் என மிகச்சிறிய கதைக்களத்திற்குள் ரிப்பீட் அடிக்காத ப்ரேம்களால் பதற்றத்தையும், எமோஷன்களையும் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வரத்னம் பிரதீபன். முக்கியமாக, ஒளியைக் கச்சிதமாகப் பயன்படுத்திய விதத்தாலும், ஆங்காங்கே வரும் கவித்துவமான ப்ரேம்களாலும் கதாபாத்திரங்களின் கையறுநிலையையும் இறுக்கத்தையும் பார்வையாளர்களின் மனதில் பதிய வைத்திருக்கிறார். அழுத்தமான எமோஷனையும், நிதானமான த்ரில் அனுபவத்தையும் அதன் அழுத்தம் குறையாமல் கோத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ராதா ஸ்ரீதர். சிவா பத்மயன் இசையில், வாகீசன் ராசய்யா குரலில் 'கலியான பைலா' பாடல் 'துள்ளல்' ரகம்! எமோஷனை அடர்த்தியாக்கி, காட்சிகளை வீரியமாக்கியிருக்கிறது ஒரு கதாபாத்திரமாகவே படம் முழுதும் வரும் கே-வின் பின்னணி இசை. 80களின் இறுதியிலுள்ள ஈழத்தின் கல்யாண முறை, அக்கால வீடுகள், சினிமா டெக்குகள் எனக் கலை இயக்குநர் மார்டினின் எதார்த்தப் படையலுக்கு, சுபைர்-தரங்கேனி கூட்டணியின் ஆடை வடிவமைப்பும் கைகொடுத்திருக்கிறது. சிறுவர்களின் விளையாட்டு, கல்யாண வீட்டுக் குதூகலம், உறவுகளுக்கிடையிலான செல்லச் சண்டைகள் என ஆர்ப்பாட்டமில்லாமல் வீட்டிற்குள்ளே இருந்து தொடங்கும் திரைக்கதை, வெளியுலகிற்குள் செல்ல செல்ல, போர்ச் சூழலையும், ராணுவ அடக்குமுறைகளையும் கதையோட்டத்துடனேயே சொல்லத்தொடங்குகிறது. கல்யாண சடங்குகள், விஜயகாந்த் படங்கள், அச்சூழலிலிருக்கும் வாழ்வாதாரங்கள் என எக்கச்ச விவரணைகளுடன் நுணுக்கமாக விரிகிறது திரைக்கதை. இரவிற்குப் பின் த்ரில்லர் மோடுக்கு நகரும் படம், இடைவேளைக் காட்சி வரை பரபர பிடியை விடாமல் பற்றிக்கொள்கிறது.முன்னாள் ராணுவ வீரரான வீட்டுப் பெரியவர், குடும்பத்தைக் காக்கும் வாசுகி, கல்யாணக் கனவிலிருக்கும் மணப்பெண், இளம் காதல் ஜோடி, குச்சியை வைத்து விளையாடும் சிறுவர்கள் என எல்லாத் தலைமுறை கதாபாத்திரங்களும் இடம்பெற்றிருப்பதும், அவற்றை தனித்தனியாகக் கிளைக்கதைகளாக விவரிக்காமல், மையக்கதையுடனேயே விவரித்திருப்பதும் திரைக்கதையை ஆழமாக்குகின்றன. ராணுவத்தால் அக்கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் ஏற்படும் வெவ்வேறு தாக்கங்களும் அழுத்தமாகப் பதிகின்றன.முக்கியமாக, தன்னைப் பற்றி வீட்டுப் பெரியவர் சொல்லும் கதை, ராணுவம் மீது கட்டமைக்கப்படும் புனிதங்களை உடைத்தெறிகிறது. நீளிரா விமர்சனம் | Neelira Review டெக் சினிமாவிற்கு இடையில் ஓடும் இயக்கப் பிரசாரப் பாடல், ராணுவம் வீட்டிற்குள் நுழைந்தவுடன் கூடுதல் ஆடைகளை உடுத்தும் பெண்கள், மரக்குச்சிகளை துப்பாக்கிகளாகப் பாவித்து விளையாடும் சிறுவர்கள் எனக் குறியீடுகள் நிறைய வந்தாலும், அவை மேதாவித்தனமாகக் காட்சிப்படுத்தப்படாமல் எதார்த்தமாகவும் உயிர்ப்போடும் வருவது அவ்வீட்டிற்குள்ளே நம்மையும் ஓர் உறுப்பினராக்கிவிடுகிறது. இடைவேளைக்குப் பிறகு ஒரே இடத்திலேயே காட்சிகள் சுழல்வது போன்ற அயர்ச்சி சில இடங்களில் மேலோங்கினாலும், நுணுக்கமான விவரணைகள் அவற்றைக் களைத்து, சுவாரஸ்யத்தைக் கூட்டி நம்மைப் பரபர பாதைக்கு மடைமாற்றிவிடுகின்றன.உணர்ச்சிகளைப் பிழிய எக்கச்சக்க தருணங்கள் இருந்தாலும், அவற்றை விடுத்து, மையக்கதையிலிருந்து எங்கும் பிறழாமல், எதார்த்தமான உணர்ச்சிகளையும் வசனங்களையும் வைத்தே, போரின் வலியை ஆழமாகப் பேசியிருக்கிறது திரை எழுத்து. 'எல்லா ராணுவமும் ஒன்றுதான்', 'போரில் எப்படி அமைதியைத் தேடுவீர்கள்?', 'இந்த வீட்டிலாவது அமைதியை நிலைநாட்டுங்கள்' என எல்லா வசனங்களும் உரையாடல்களோடே எதார்த்தமாக வருகின்றன. போரால் பாதிக்கப்பட்ட மக்கள் vs இந்திய ராணுவத் தரப்பு என விரியும் உரையாடல்களையும் நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர். நீளிரா விமர்சனம் | Neelira Review வசனங்களோ, நிறைய ஷாட்களோ இல்லாமல் மிகச் சில நொடிகள் மட்டுமே வரும் இறுதிக்காட்சி, கதையின் ஆன்மாவைப் பேசுகிறது. திரைமொழி, அரசியல், புனைவாக்கம் என எல்லாவற்றிலும் கவனிக்க வைத்து, தமிழ் சினிமாவில் முக்கிய முன்னெடுப்பாக மாறியிருக்கிறது இந்த 'நீளிரா'.
  7. எங்கு இருந்தாலும் தமிழன் தமிழனே… செம்பவள வாரிசு என் தலைவன்… தவிர சுவிஸ்லாந்தில் டேட்ட்லஸ் முடி ஸ்டைல் கற்று அதை பேணுபவர்… தனக்கு மட்டும் இன்றி ஊருக்கும் சேர்த்து டிரவுசர் தைத்துப்போடும் பரோபகாரி. செத்தகிளி, தம்பர், சீமானுக்கு அடுத்து யாழ்களத்தில் அதிக விருப்பு வாக்கு எண்டால் அது நம்ம தலைக்குத்தான்
  8. கையில் சாப்பாட்டு தட்டுடன் இந்த திரிக்கு வந்தது மகா தப்பு............. பீட்றூட் குழம்பு தரையெல்லாம் சிதறிவிட்டது................🤣. 'என்ன இரத்தம் இரத்தமாக கொட்டிக் கிடக்குது......... வாழ்வே மாயம் கமலின் அந்தப் பாட்டை இந்த மனுசன் அடிக்கடி பார்க்கிறதே............. அந்தப் பாட்டில் இருந்தே ஏதாவது வருத்தம் இந்த மனுசனுக்கு தொற்றி இருக்குமோ.................' என்று வாழ்வே மாயத்தையும், வைரஸையும் இணைத்து, இல்லாத பொல்லாத கதைகள் வருவதற்கு முன், நான் பாய்ந்து தரையை துடைத்துவிட்டேன்............. வட கொரியாவைப் பார்க்க வந்த என்னுடைய கறி போயிட்டுதே என்ற சின்னக் கவலை இருந்தாலும், இந்த திரிக்கு பொருத்தமாக நானும் ஏதோ எழுதி விட்டேனே என்று சந்தோசமாக இருக்கின்றது....................😜. மொத்தமாக வாசித்துப் பார்த்ததில், வட கொரியாவுக்கு கூட இரண்டு மூன்று வாக்குகள் தேறும் போல தெரியுதே..............🤭.
  9. Tilly காகிதக்கூழ் சிற்பங்களை வடிவமைப்பதில் திறமையான யேர்மனியக் கலைஞர். யேர்மனியில் நடைபெறும் ரோசன்மொண்டாக் (Rosenmontag) கார்னிவலின் அணிவகுப்புகளில் இடம்பெறும் அவரது அரசியல் கேலிச்சிற்பங்கள் பரவலாகப் பேசப்படுபவை. அரசியல்வாதிகள், உலகத் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்கள், குறிப்பாக தீவிர வலதுசாரிகளைக் கேலிச்சித்திர வடிவில் சித்தரிப்பதில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவரது சிற்பங்கள் பெரும்பாலும் வெளிப்படையான அரசியல் செய்திகளை வெளிப்படுத்துகின்றன. 2024 ஆம் ஆண்டு, அவர் உருவாக்கிய ஒரு காகிதக்கூழ் சிற்பம் புடினுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அதே ஆண்டில் நடைபெற்ற ரோசன்மொண்டாக் கார்னிவல் ஊர்வலத்தில் இடம்பெற்ற அந்தச் சிற்பத்தில், சீருடை அணிந்த புடினும், பேட்ரியார்க் கிரில்லும் ஓரினச்சேர்க்கை சார்ந்த அசிங்கமான காட்சியில் சித்தரிக்கப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து, ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், மாஸ்கோ நீதிமன்றம் Tillyக்கு எட்டு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கில், அவர் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும், ரஷ்ய ஆயுதப்படைகள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. நீதிபதி கான்ஸ்டன்டின் ஓசிரோவ் இந்தத் தீர்ப்பை வழங்கியதுடன், 2,000 யூரோ குற்றப் பணமும் Tillyக்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு ஆண்டுகள் கலைத்துறையில் பணியாற்றுவதற்கும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. Tilly தற்போது யேர்மனியிலேயே இருப்பதால், ரஷ்யாவிற்கு நாடுகடத்தப்படுவதற்கான ஆபத்து இல்லை. இருப்பினும், ரஷ்யாவுடன் நட்பு உறவு கொண்ட நாடுகளுக்கு அவர் பயணம் செய்யும் போது சிக்கல்கள் ஏற்படலாம். அத்தோடு மாஸ்கோ நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், இன்டர்போல் மூலம் அவருக்கு எதிராக சர்வதேச கைது வாரண்ட் பிறப்பிக்கப்படவும் வாய்ப்பு இருக்கின்றது. யேர்மனியின் NRW மாநில முதலமைச்சர் ஹென்றிக் வூஸ்ட் இதுகுறித்து, “கலைஞர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள சர்வாதிகார ஆட்சிகள் விமர்சனங்களை ஒடுக்க முயற்சிக்கின்றன. Tilly கடந்த 30 ஆண்டுகளாக தைரியமாக தனது கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். அவர் எந்த அதிகாரத்திற்கும் அஞ்சுவதில்லை. மாநில அரசின் முழுமையான ஆதரவு அவருக்கு உள்ளது” என்று தெரிவித்துள்ளார். காகிதக்கூழ் சிற்பத்தைப் பார்க்க விரும்பினால், tagesschau.deMoskau: Prozess gegen Karnevalswagenbauer Tilly wird fort..."Verunglimpfung der Staatsorgane" lautet der Vorwurf der russischen Justiz gegen den Düsseldorfer Karnevalswagenbauer Tilly. Heute hätte der Prozess gegen ihn in Abwesenheit fortgesetzt werden sollen
  10. புரிகிறது. நீங்கள் பெட்டியைத்தானே சொல்கிறீர்கள். கருத்துப்படம் 29.03.2024 இந்த வரிசையில் சீமான்தான் கடைசி. இனியொருவர் வருவதற்கு வாய்ப்பில்லை ….
  11. முந்தைய இருப்பு 139,755.48+383.87=140,139.35 ரூபா சேமிப்பு வட்டியுடன் தற்போதைய வங்கி மீதி. 140,139.35-38.39=140,100.96 ரூபா தற்போதைய வங்கி மீதி. பிடித்து வைத்தல் வரி 38.39 ரூபா.
  12. விழுந்த விமானம் F-15 என்று இப்பொழுது சொல்லுகின்றார்கள். இரண்டு விமானிகளில் ஒரு விமானியை மீட்டு விட்டதாகவும் இங்கு அமெரிக்காவில் செய்திகளில் போய்க் கொண்டிருக்கின்றது. இரண்டாவது விமானியை தேடிக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் அதே செய்தியில் இருந்தது. அமெரிக்க மக்களை, முக்கியமாக அதிபர் ட்ரம்பின் முன்யோசனை இல்லாத, ஆபத்தான, தேவையற்ற நடவடிக்கைகளையும், கொள்கைகளையும் நிபந்தனை இன்றி ஆதரித்து வரும் அமெரிக்க மஹா குழுமத்தைச் சேர்ந்தவர்களை, இந்த நிகழ்வு சிறிதாவது அசைத்துப் பார்க்கும் என்று நம்புகின்றேன்.
  13. போதனா சிவாநந்தன் இங்கிலாந்து பெண் செஸ் போட்டியாளர் பட்டியலில் முதலிடம். முதல் 20க்குள் இன்னும் பல தமிழ் பிள்ளைகள்❤️💪
  14. மத்திய கிழக்கில் இருந்த ஆகப் பெரிய பாலத்தை அமெரிக்க குண்டு வீசி தகர்த்த காணொளியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூட நேற்று பகிர்ந்திருந்தார். ஈரானிய அப்பாவி மக்களுக்கு ஏன் இப்படி ஒரு கொடுமை நடந்து கொண்டிருக்கின்றது என்ற ஏக்கத்துடனும், அதே நேரத்தில் எதுவும் செய்ய முடியாத வருத்தத்துடனுமே இரவு போனது. விடியும் போது அமெரிக்காவின் ஒரு விமானம் வீழ்ந்து விட்டது என்று செய்தியில் இருந்தது. இப்பொழுதாவது அமெரிக்கா இந்த தேவையற்ற தாக்குதல்களை நிற்பாட்டிக் கொள்ளலாம். இனி இழப்பதற்கு எதுவுமே இல்லை, எது வந்தாலும் வரட்டும் என்று ஒரு ஓர்மத்துடன் நிற்கும் மக்கள் முன் இந்த வல்லரசுகள் ஒன்றுமேயில்லை. அந்த மக்களை இந்த வல்லரசுகள் கற்காலத்துக்கு அனுப்பலாம், ஆனால் அப்பொழுது கூட அவர்கள் அங்கிருக்கும் கற்களின் துணயுடன் போரடியே அழிவார்கள். அந்த மக்களும், எதிர்த்து நிற்கும் அவர்களின் அரச நிர்வாகமும், அது எத்தகைய மக்கள் விரோத கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், இங்கு வல்லவன் வகுத்தது மட்டுமே பாதை இல்லை என்னும் ஒரு நம்பிக்கையை இந்த உலகுக்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஏற்கனவே உக்ரேன் மக்களும், உக்ரேன் அரசும் கூட இதை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.
  15. எங்கள் "பன்னாடை" யின் அமைச்சரவையில் அவர்களது துறையில் கீழ்மட்டத் தகுதி கூட இல்லாத பலர் இருக்கின்றனர். அவர்களுள் முக்கியமானவர் பீற் ஹெக்செத் என்ற "யுத்த😎 அமைச்சர்". புகழ் பெற்ற பிரின்ஸ்ரன் பல்கலையில் அரசியலில் கலைமாணிப் பட்டம் பெற்ற ஹெக்செத், அதிக பட்சமாக ஒரு 50 பேரை நிர்வாகம் செய்த கப்ரன் தர அதிகாரி மட்டுமே. சீரூடை அணியும் விருப்பத்தால் தொண்டர் படை (National Guard) யில் சேர்ந்து 10 வருடங்களுக்கு மேலாக முக்கி முக்கி, தலைமை அனுபவம் வெளிப்படக் கூடிய மேஜர் பதவி கிடைத்தவுடன், இராணுவத்தில் இருந்து வெளியேறி செய்தி ஊடக நிறுவனத்தில் சேர்ந்து நன்கு சம்பாதிக்க ஆரம்பித்தார். 3 / 4 நட்சத்திர ஜெனரல்களும், West Point luminaries உம் மட்டுமே பெரும்பாலும் வகிக்கும் பதவியை இந்த "பிளாட்டூன் லீடரிடம்" கொடுத்து விட்டு பன்னாடை படும் பாடு ரசிக்கக் கூடியதாகவே இருக்கிறது😂!
  16. அததெரண கருத்துப்படம்.
  17. எல்லாரும் ஐபிஎல் மட்சுக்களைப் பார்த்து Home work செய்வதில் பிஸி போலிருக்கு! போட்டியில் பங்குகொள்ள இறுதிநாள் ஞாயிறு 12 ஏப்ரல்!
  18. பாடலும் இசையும் மட்டும் அல்ல, ஒவ்வொரு நுணுக்கத்திலும் ஒரு அழகும், ஒவ்வொரு ஒலியிலும் ஒரு உயிரும் தெரிகிறது. முழுக்க முழுக்க மனதை கவரும் அளவுக்கு நன்றாக உள்ளது.
  19. இந்தியாவில்…. இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, ராகுல் காந்தி… போன்ற பலரும் இரட்டை தொகுதிகளில் போட்டியிடுபவர்களே. அதிலும் இந்த காந்திக்கள்…. வடக்கில் ஒரு தொகுதியும், தெற்கில் ஒரு தொகுதியும் என்று அகலக் கால் வைத்திருப்பார்கள். 😂
  20. அருமை. நல்ல எழுத்துக்கள். இன்றைய காலம். அதனோடு சேர்ந்திருக்க அருமையான இணைப்பு.
  21. அருமை … எழுத்தே ஆயுதமாய்…🖋️ சொல்லே கேடயமாய்….🛡️ வாழ்க யாழ்…வெல்க தமிழ்
  22. tonSodpres19 fhàashi06gltf:9155f1l2t9 1L2el3cmg3 i5i926lmrt · பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா… கோபம் என்றால் என்ன, கொலைவெறி என்றால் என்ன…? இந்த ரெண்டுக்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லையே…!” அப்பா ஒருகணம் யோசித்தார். “மகனே… நான் உனக்கு இதை விளக்குவதைவிட ஒரு செயல்முறை செய்து காட்டுகிறேன் வா…” என்று அவனை லேண்ட்லைன் போனிடம் அழைத்துப் போனார். “இப்போ உனக்கு கோபம்னா என்னனு காட்டறேன்…” என்றவர் போனை எடுத்து ஏதோ ஒரு எண்ணை டயல் செய்தார். மறுமுனையில் ரிங் போய் எடுத்தவுடன் ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டுக் கேட்டார். “ஹலோ… முனுசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” மறுமுனையில் அந்த நபர் பொறுமையாய் பதில் சொன்னார். “சார்.. நீங்க தப்பான நம்பரைக் கூப்பிட்டுருக்கீங்க. இங்க முனுசாமினு யாரும் இல்ல…” போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா… இதுதான் கோபமா…?’ “இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார். ஸ்பீக்கர் போனை மறுபடி ஆன் செய்துவிட்டுக் கேட்டார். “ஹலோ… முனுசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” மறுமுனை இப்போது சற்று உஷ்ணமாகியது. “சார்.. நான் முதல்லயே சொன்னேன். இந்த நம்பர்ல முனுசாமின்னு யாரும் இல்ல. நீங்க நம்பரைக் கொஞ்சம் சரியா பார்த்து டயல் பண்ணுங்க…” போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா… இதுதான் கோபமா…?’ “இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மீண்டும் அதே எண்ணை ரீடயல் செய்தார். “ஹலோ… முனுசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” இப்போது மறுமுனை சற்று அதிகக் காட்டமாகவே பேசியது. “ஏங்க… உங்களுக்கு ஒரு தடவ சொன்னாப் புரியாதா… எத்தனை தடவ இதே நம்பருக்கு போன் பண்ணுவிங்க… தயவுசெஞ்சு நம்பரைச் சரியாப் பாத்து போன் பண்ணுங்க…” போனின் மறுமுனை டொக்கென்று வைக்கப்பட அப்பா மகனிடம் சொன்னார். “மகனே… இப்பத்தான் கோபம்னா என்னனு பாக்கப்போற…” என்றவர் இப்போதும் அதே எண்ணுக்கு ரீடயல் செய்தார். “ஹலோ… முனுசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” மறுமுனை இப்போது ஹை டெஸிபலில் கத்தியது. “டேய்… அறிவு கெட்டவனே… நீயெல்லாம் சோத்தத் திங்கறியா…இல்ல வேற ஏதாவதத் திங்கறியா…? அறிவில்ல உனக்கு…? இன்னொரு தடவ போன் வந்ததுச்சுனு வச்சிக்கோ… அப்புறம் நீ எங்க இருந்தாலும் தேடி வந்து வெட்டுவேன் பாத்துக்க… வைடா போனை…!” மகன் அப்பாவிடம் சொன்னான். “அப்பா… கோபம்னா என்னனு புரிஞ்சுடுச்சு… கொலைவெறின்னா என்னப்பா….?” “இப்பக் காட்டறேன்…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார். ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டு ரிங் போய் மறுமுனையில் போனை எடுத்தவுடன்… … லேசாய்க் குரலை மாற்றிக் கேட்டார். “ஹலோ… நான் முனுசாமி பேசறேன். உங்க நம்பர்ல எனக்கு எதாவது போன் வந்துச்சா…😂" Voir la traduction.....!
  23. யாழில் பிறக்கும் பாடலிசை காதுக்கு இனிமை தரும். யாழ் களத்திற்குப் பிறந்த பாடலிசை இனிமையோடு கருத்தையும் கவர்கிறதே. வாழ்க யாழ்களம் வளர்க எம்மினம்……..ஆகா….அருமை😍
  24. ஏழையா இருந்தால் தானே மக்களுக்கு சேவை செய்யலாம். பாவம்நடிகைகளுக்கு செலவளித்துநொந்து போனார் போலை
  25. அடப்பாவமே............... அடுத்த முதல்வர் என்னை விட ஏழையாக இருக்கின்றாரே.......................🤣.
  26. கேட்க மிகவும் இனிமையாய் இருக்கின்றது .......... பாராட்டுகள் ........! 👍
  27. நான் இவர்களிடம் காணும் மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் ஒரு ஒன்றுபட்ட எழுச்சியை நான் இவர்களிடம் எப்போதும் கண்டதேயில்லை. எந்த வேளையிலும் இவர்கள் நாடும் நலன்கள் ஒன்றானவை இல்லை. சமூக நலன்கள் என்ற பெயரில் இவர்கள் சாதியத்தை முன்னெடுக்கின்றார்கள். அதன் வழியே பிரிகின்றார்கள். இது தான் மிகப்பெரிய கேடு. முழுத் தமிழ்நாட்டையும் ஒரு சமூகமாக பார்க்கும் பார்வை மிகப் பெரும்பான்மையான மக்களிடம் கிடையாது. ஆன்மீகம் என்ற பெயரில் தீண்டாமையையும், வெறுப்பையும் வளர்க்கின்றார்கள். இப்படியான ஆன்மீக வழி மக்களின் அரசியலையும் இதுவே எப்போதும் தீர்மானிக்கின்றது. பின்னர் எங்கிருந்து வரும் எழுச்சியும், மாற்றமும்...................... இரண்டு தேசியங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. ஒன்று இந்திய தேசியம் மற்றது தமிழ்த் தேசியம். இரண்டுமே தமிழ்நாட்டில் குறுந் தேசியங்களாகவே முடங்கிக் கிடக்கின்றன. காங்கிரஸின் இந்திய தேசியம் தமிழ்நாட்டில் மட்டும் என்றில்லை, முழு இந்தியாவிலுமே தேய்ந்துவிட்டது. சீமான் போன்றவர்களின் தமிழ்த் தேசியம் சில குறிப்பிட்ட பிரிவினரின் குரலாகவும், அத்துடன் வேகத்துடன் வரும் இளைஞர்களின் இடமாகவும் இருக்கின்றது. வேகத்துடன் வரும் இளைஞர்கள் அதே வேகத்தில் ஏமாற்றத்துடன் வெளியேறியும் விடுகின்றார்கள். இணையத்தை தவிர்த்துப் பார்த்தால், சீமானால் ஒரு எழுச்சியையும், மாற்றத்தையும் நிஜத்தில் கொண்டு வர முடியாதுள்ளது. மக்கள் லஞ்சத்தையும், ஊழலையும் அன்றாட வாழ்வில் மிகச் சாதாரணமாக ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். உதாரணமாக, ஒருவர் இறந்தால் அவரின் சடலத்தை வெளியில் எடுப்பதற்கு கூட லஞ்சம் வாங்கும், கொடுக்கும் வழக்கத்தை என்னவென்று சொல்வது..................... லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்கப் போகின்றேன் என்னும் கோஷம் தான் தமிழ்நாட்டில் உள்ளதிலேயே மிகப் பெரிய வெற்றுக் கோஷம். இந்த வெற்றுக் கோஷத்தால் எதுவுமே மாறவில்லை, மாறவும் போவதில்லை. இதயசுத்தியுடன், கைகளும் சுத்தமானவரான ஒரு மனிதர் அங்கு பெரும் தலைவராக நீண்ட காலமாக வரவேயில்லை. அப்படி ஒருவர் வருவதற்கு, அவர் அங்கு நிலைத்திருக்கும் சாதிய, சமய, தேசிய சக்திகளை தாண்ட வேண்டும், அதன் பின்னர் சினிமாக் கவர்ச்சியுடன் வருபவர்களை ஓரங்கட்ட வேண்டும், அதன் பின்னரே அவரால் ஒரு எழுச்சியை கொண்டு வர முடியும், அது கூட அவர் தன் வாழ்வு முழுவதையும் தமிழ்நாட்டுக்காக தியாகம் செய்தால் மட்டுமே முடியும்.
  28. மாற்று கருத்து எண்டு பெரிசா இல்லை. விஜை மட்டும் இல்லை….புலம்பெயர் தேசத்தில் எம்மவர் எத்தனை பேருக்கு கை சுத்தம்? குறிப்பாக வரி விடயத்தில்? அரிதிலும் அரிது. இதை சில விடயங்களில் சொல்லப்போய்…பிழைக்க தெரியாதவர், வியாபார நுணுக்கம் தெரியாதவர் போன்ற பட்டமளிப்புகளை நான் அடைந்ததும் உண்டு. நிற்க, நான் சொல்ல வருவது அதை அல்ல. வரி ஏய்ப்பும் மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதுதான். ஆனால் அரசியல்வாதி மட்டும் அல்ல, இந்தியாவில் வரி கட்டும் ஆட்களில் பெரும்பான்மை வரி ஏய்ப்பாளர் என நினைக்கிறேன். விஜையை நான் நல்ல கண்ணு என சொல்லவில்லை. ஆனால் ஸ்டாலின், சீமான் போல் அப்பட்டமாக ஊழல், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவரில்லை விஜை -அல்லது இன்னமும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
  29. இரண்டி நாள் போட்டிகளை பார்த்தபோதூ...தொடக்கம் முதல் இறுதிப் போட்டிவரை சூப்பராக இருக்கும்போல் தெரிகிறது ...முதல் தொகுதி போட்டிகளை ஆய்வு செய்து போட்டியில் பங்கு பெறுவது நன்றாக இருக்கும் ...கிருபன் சாமி கொலிடே போய் கெதியில் வாருங்கள் ... வினாக்கொத்தை அனுப்புங்கள்... போட்டி நடத்த முன்வந்ததிற்கு நன்றி.. முன்னாள் முதல்வரை சதி முயற்சியால் ..அடித்து விரட்ட முயற்சியோ...விடக்கூடாது வாருங்கள் உள்ளே
  30. மீல்மேக்கர் இருந்தா இப்டி செய்ங்க ருசிய மறக்கவே மாட்டிங்க......! 👍
  31. 😂😂😂 சில அவதானிப்புகள். இந்த உலகில் வட கொரியா மட்டுமே கம்யூனிச நாடு. 1990 ற்கு பின் ரஸ்யா பக்கா முதலாளிதுவ நாடு. ஆங்கிலத்தில் hypocrisy என ஒரு சொல் உண்டு. தமிழில் அதை சொல்வது ஒன்று, செய்வது இன்னொன்று அல்லது இரெட்டை நிலைப்பாடு என சொல்ல முடியும். நாம் ஒரு விடயத்தை சொன்னால் - அது சும்மா பம்பலுக்கு சொல்லும் கருத்தாக இருக்க கூடாது. உளப்பூர்வமாக அந்த கருத்தை நாம் நம்பி சொல்ல வேண்டும். நாமும் சொலவதன் படி நடக்க வேண்டும். வடகொரியா போல் ஒரு சர்வாதிகார நாட்டில் வாழ்வது, ஜேர்மனி போல் ஜனநாயக நாட்டில் வாழ்வதை விட மேலானது என்பது உங்கள் கருத்து. ஆனால் ஜேர்மனியில் வாழ்ந்து கொண்டு அதை சொல்வது இரெட்டை தன்மையானது. நான் மட்டும் அல்ல நீங்களும் இலங்கையர்தான். நீங்கள் ஏன் இலங்கை திரும்பவில்லை? ஜனநாயக குறை பாடு, கட்டுப்பாடு, சர்வாதிகாரம் உள்ள இலங்கையில் உங்கள் அரசியலை நீங்கள் இப்போ செய்வது போல் செய்தால், அல்லது நீங்கள் முன்னர் செய்த அரசியலால் உங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது என்பதால். ஆகவே உங்களுக்கே ஒரு உச்சபட்ச ஜனநாயக நாட்டில்தான் பாதுகாப்பு, பேச்சுரிமை உத்தரவாதம் உள்ளது. இப்படி ஒரு நிலையில் நீங்கள் ஜனநாயக நாட்டை விட சர்வாதிகார நாட்டில் வாழ்வது திறம் என எழுதினால், அந்த இரெட்டை நிலைப்பாட்டை சுட்டி காட்டும் உரிமை இன்னொரு கருத்தாளருக்கு உள்ளது. இதன் அடிப்படையில் உங்களை ஒரு hypocrite என எழுதுவது தனிமனித தாக்குதல் அல்ல. உங்கள் இரெட்டை நிலைப்பாட்டுக்கு மேலதிகமாக, வடகொரியா, ரஸ்யா போன்ற நாடுகள் ஜனநாய நாடுகளை விட மேலானவவை என்ற உங்கள் கருத்து மிகவும் அபத்தமானது. இதையும் ரொம்ப மட்டமான, அபத்தமான கருத்து என சாடி எழுதும் உரிமை ஏனைய கருத்தாளருக்கு உள்ளது. இதில் ஏன் நிர்வாகத்தை இழுத்தீர்கள் என்பது விளங்கவில்லை. காரசாரமாக விவாதிப்பது என்பது நிர்வாகம் தலையிடும் வண்ணம் சக கருத்தாளரை தாக்குவதோ அல்லது ஏலும் எண்டால் எண்ட ஏரியாவுக்கு வா என சண்டிதனம் பண்ணுவதோ அல்ல. இதே திரியில் கூட காரசாரம், நக்கல், நையாண்டி எல்லாமும் விதிக்குட்பட்டு எடுத்தாளப்பட்டுள்ளதை காண்க.
  32. என்னக்கா நீங்களே இப்படிச் சொல்லலாமா? இது அவர்களின் குடும்ப சூழலை வெளிப்படுத்த எடுத்த படங்கள், நன்கொடை அளிப்பவர்களுக்கு வெளிப்படையாக தெரியப்படுத்தும் நோக்கம் மட்டுமே. இவர்களுக்கும் இன்னும் 24 பேருக்கும் 20 லட்சம் ரூபா (முகப்புத்தகத்தில் 30 லட்சம் என தவறாக குறிப்பிட்டுள்ளார்கள்) வீட்டுத்திட்டம் திரு சுவிஸ் நாதன் அண்ணாவினால் கட்டிக்கொடுக்கப்பட உள்ளது. மலசலகூடம் அந்த திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. @வாத்தியார் அண்ணா கிராமசேவகருடன் கதைத்தபோது உறுதிப்படுத்தினார். திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தரும் இதனை உறுதிப்படுத்தினார். ஆகவே அவர்களுக்கு மலசலகூடம் கட்டிக்கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும் என்பது எனதும் வாத்தியார் அண்ணாவினதும் அபிப்பிராயம்.
  33. இந்த கேள்வி எனக்கும் இருந்தது அண்ணா.பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்தவர்களுக்கு ஒரு மாற்று உடை வாங்கிக் கொண்டு போய் குடுக்க முடியாமலா இருந்தவர்கள்..இந்த இசாராவின்ட கொண்டாட்டத்தாலா..யாழில் அனைவருமே ஒராளின்ட பிறந்த நாளை மறந்துட்டீனம்.ஒண்டும் பிரச்சனை இல்லை.🤭
  34. எனக்கு இங்கு இரவில் வாகனம் ஓட்டுவது என்டால் நடுங்கும்.காரனம் எல்லா வாகனங்களும் பெரிய விளக்கை போட்டுத்தான் ஓடுவார்கள்.☹️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.