Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    86
    Points
    88521
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    32
    Points
    19407
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    25
    Points
    32855
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    23
    Points
    20237
    Posts

Popular Content

Showing content with the highest reputation since 01/25/26 in Posts

  1. மனைவியின் மறைவுக்கு கருத்துக்களத்திலும் தனி மடல்கள் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் ஆறுதலளித்த அனைத்து யாழ் உறவுகளுக்கும் நன்றி.
  2. அது சரி இவர் சுவிசில் மாநில முதல்வர் ஆகும் தகுதி உண்டா? பல தலைமுறையாக தமிழ்நாட்டில் வாழ்ந்து அம்மண்ணின் மைந்தர்களாக தமிழை தவிர வேறு மொழி தெரியாதவர்களையே வந்தேறி, வாழலாம், ஆளக்கூடாது, என்று அடுத்த நாட்டின் அரசியலுக்குள் புகுந்து அதுவே சரி என நாட்டாண்மை காட்டும் கும்பல்கள் எல்லாம் இந்த முதலாம் தலைமுறை வந்தேறித் தமிழர் மாநில முதல்வர் ஆகியதைப் பாராட்டுகிறார்களே! அந்த கொள்கையை தள்ளி வைத்து விட்டார்களா? இந்த அநியாயத்தை கேட்க சுவிசில் ஒரு செபஸ்டியான் இல்லையா? 😂
  3. சுத்துமாத்து சுமந்திரனுக்கு 99 வீதமான எதிர்ப்பு வாக்குகள்… வெளி நாட்டில்தான் உள்ளது. 🤣 சென்ற நாடுகள் எல்லாம், "செருப்படி" வாங்கிய செம்மல் அவர்.
  4. மோகன், ஆழ்ந்த இரங்கல்கள். காலம் உங்கள் கவலையைப் போக்கட்டும்.
  5. எல்லாமே ..சுத்துமாத்துத்தான்....நாம வாயைப்பிளந்துகொண்டு இருக்க வேண்டியதுதான் ...இந்த விபரத்தை கேட்டவுடனேயே...தமிழரசுக்கட்சி வழக்குப்போட்டு ..தடையுத்தரவு வாங்கிவிடும்..
  6. புதன் கிழமை இறுதிக் கிரியைகள் நடைபெறும் இடத்திற்குக் கிடைக்கக் கூடியவாறு இறுதிச் சடங்கு மலர் கொத்து ஒன்று யாழ் கள உறவுகள் சார்பாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
  7. ஆதிமந்தி ஆட்டனத்தி - சுப.சோமசுந்தரம் உலகில் பரவலாக அறியப்படும் காதல் இணையரான ரோமியோ - ஜூலியட், ஆன்டனி - கிளியோபாட்ரா, லைலா - மஜ்னு, அம்பிகாபதி - அமராவதி போன்று சங்க காலத்தில் நம் தமிழ் நிலத்தில் ஆதிமந்தி - ஆட்டனத்தி காதலானது காவியம் போல் பேசப்பட்டுள்ளது என்பது சங்க இலக்கியங்களான குறுந்தொகை, அகநானூறு, மற்றும் சங்க மருவிய காலத்து சிலப்பதிகாரம் மூலமாகத் தெளிவு. ஆனால் இன்றைய பெரும்பான்மைத் தமிழ்ச் சமூகம் இக்காதலை அறியாமல் போனது விந்தையிலும் விந்தை. ஈழத் தமிழறிஞரான திரு.கந்தையா விநாயகலிங்கம் அவர்கள் யாழ் இணையதளத்தில் எழுதிய கட்டுரையானது அடியேனையும் எழுதத் தூண்டியது எனலாம். அன்னார் எழுதியதிலிருந்து பெரிதும் வேறுபட்ட எதனையும் எழுத எண்ணாமையால், பின் ஏன் இந்த எழுத்து எனும் கேள்வி எழல் இயல்பு. திருக்குறளுக்குக் காலந்தோறும் வெவ்வேறு சான்றோர் உரை எழுதுவது ஒவ்வொரு எழுத்தும் பார்வையும் தனித்தன்மை கொண்டமையாலும், உயரிய பொருள் மீண்டும் மீண்டும் உரைக்கப் பெற்று மென்மேலும் வளம் பெறுவதினாலுமேயாம். கண்ணதாசன் எழுதிய கவிதை நாடகமான ஆதிமந்தி ஆட்டனத்தி, அதன் திரை வடிவமான மன்னாதி மன்னன், பாரதிதாசன் படைத்த சேரதாண்டவம் எனும் நாடக நூல் ஆகியவை ஈண்டு கவனத்தில் கொள்ளத்தக்கவை. இவை நாம் முன்னம் குறித்த சங்கப்பாடல்கள் மற்றும் சிலப்பதிகாரம் வழியமைந்த ஆதிமந்தி - ஆட்டனத்தி கதையினை ஒட்டி அமைந்த புனைவு இலக்கியங்களாகும். நாம் இக்கட்டுரையில் கையிலெடுப்பது சங்கப்பாடல்கள் வழி நின்ற கதையை மட்டுமே. சோழன் கரிகால் பெருவளத்தான் காலத்தில் ஆடற் கலையில் சிறந்த ஆட்டனத்தி (ஆடல் + அத்தி) என்ற வீர இளைஞனும் ஆதிமந்தி எனும் ஆடல் மகளும் காதல் வயப்பட்டனர். சோழ நாட்டவர் தமக்குச் சோறிடும் காவிரி அன்னைக்குப் (காவிரியாற்றுக்கு) பெருவிழா எடுக்கும் வழக்கம் இருந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட நாளன்று சோணாட்டின் கழார் என்னும் துறையில் மன்னன் கரிகாலன் முன் ஆட்டனத்தி காவிரியில் தன் ஆட்டத்தின் திறம் காட்டிச் சாகசம் புரிந்தான்; நீர் விளையாட்டும் ஆட்டத்தில் ஒரு வகையாக இருந்திருக்க வேண்டும். அவன் ஆடற்திறம் கண்டு மன்னனும் மக்களும் குதூகலித்தனர் - ஆதிமந்தியும்தான். அப்போது காவிரியில் திடீரெனப் பெருக்கெடுத்த வெள்ளம் அவனை வாரிச்சுருட்டிச் சென்று விட்டது. காவிரி கடலில் கலக்குமிடம் கரை ஒதுங்கிக் கிடந்தவனை மருதி எனும் மீனவப்பெண் கண்டெடுத்துப் பேணி வந்தாள். கட்டழகன் அத்தியிடம் கட்டுக்கடங்காத காதல் கொண்டாள். (அவனும் அந்த மீனவப் பெண்ணின் காதல் வலையில் கட்டுண்டு பேரின்ப உலகில் திளைத்திருக்க வேண்டும். ஆடவன் பல காதல் கொள்ளும் முறை சங்க காலத்தில் இருந்தமைக்கான சான்றுகள் உண்டு (polygamist society). எனவே தற்கால ஒழுக்க அளவுகோல் அங்கு அவசியமில்லை). காதலனை இழந்த காரிகையான ஆதிமந்தி அருந்துயருற்றுக் கையறு நிலையில் அவனைத் தேடி காவிரிக் கரையிலுள்ள ஊரெல்லாம் அலைந்து திரிந்தாள். இறுதியாக மருதியிடம் வந்து சேர்ந்தாள். ஆதிமந்தி அத்தியிடம் கொண்ட காதல் திறம் கண்ட மருதி அவனை அவளிடமே ஈந்து தான் கடலுள் மாய்ந்து அக்காலத்தில் அழியா புகழ் பெற்றாள். இந்த ஆதிமந்தி - ஆட்டனத்தி காதலும், பிறிதின் நோய் தந்நோயாய்ப் போற்றிய மருதியின் தகைமையும் சங்க இலக்கியங்களில் ஆங்காங்கே அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சிந்தாமல் சிதறாமல் அள்ளிப் பருகுவோமா ? முதலில் நம் கண் முன் காட்சி தருவது குறுந்தொகையில் ஆதிமந்தியார் எனும் பெயர் கொண்ட பெண்பாற்புலவரின் பாடல். புறநானூற்றில், பாட்டுத்திறம் படைத்த சேரமான் கணைக்கால் இரும்பொறை தன் நிகழ்வினைத் தானே பாடியது போல் சங்க காலத் தலைவி ஆதிமந்தியே ஆடற்கலையுடன் பாடல் திறனும் கொண்டு, தன் நிலையைக் கூறி இப்பாடலைப் பாடி இருக்கலாம். அல்லது ஔவையைப் போல் ஆதிமந்தியும் அப்போது பொதுவான பெயராய் இருந்து (common name), ஆதிமந்தியார் எனும் புலவர் தம் பெயரையுடைய நாயகியைப் பாடியிருக்கலாம். மூன்றாவது வாய்ப்பாக, பாடலின் புலவர் பெயர் தெரியாததால் பாடலில் உள்ள தலைவியின் பெயரே அவருக்குச் சூட்டப்பட்டிருக்கலாம் (பாடலில் உள்ள சொல்லால் பெயர் பெற்ற செம்புலப் பெயல்நீரார், அணிலாடு முன்றிலார் போல). பாடியவர் குறித்த வரலாறு தெளிவற்று இருப்பினும், பாடற் பொருள் தெளிவானது; பாடல் சுட்டும் வரலாறும் தெளிவு. பாடலில் தலைவி ஆதிமந்தி தோழியிடம் தனது பிரிவாற்றாமையை வெளிப்படுத்துகிறாள். இவ்வெளிப்பாடு காவிரியாற்றுக் கோர நிகழ்வுக்குப் பின் ஆற்றங்கரை ஊர்களில் அவனைப் பல இடங்களில் அவள் தேடித் திரிந்ததைச் சொல்கிறது. "வீரர்கள் கூடும் விழாக்கள், (அவன் ஆடற்தலைவன் என்பதால்) துணங்கை கூத்து நடைபெறும் இடங்கள் எனப் பலவாறு தேடியும் மாட்சிமை பொருந்திய அவனைக் காணேன். யானும் ஓர் ஆடுகள மகளே ! சங்கினை அறுத்து அமைக்கப்பெற்ற என் கை வளையல்கள் (நான் உடல் மெலிந்ததால்) நெகிழ்ந்திடக் காரணமான பெருமைமிக்க தலைவனான அவனும் ஓர் ஆடுகள மகனே !"என்கிறாள். "மள்ளர் குழீஇய விழவி னானும் மகளிர் தழீஇய துணங்கை யானும் யாண்டுங் காணேன் மாண்டக் கோனை யானுமோ ராடுகள மகளே யென்கைக் கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே" (குறுந்தொகை பாடல் 31; பாடியவர் ஆதிமந்தியார்) அருஞ்சொற்பொருள் : மள்ளர் - வீரர்; குழீய - குழுமிய, கூடிய; விழாவினானும் - விழாக்களிலும்; மகளிர் தழீஇய - மகளிரைத் தழுவிய; துணங்கையானும் - துணங்கைக் கூத்து நிகழிடங்களிலும்; யாண்டுங் காணேன் - எவ்விடத்தும் யான் காணவில்லை; மாண் தக்கோனை - மாட்சிமை பொருந்தியவனை; கோடு - சங்கு; ஈர் - அறுத்து; இலங்கு வளை - அமைத்து விளங்கும் வளையல்களை; நெகிழ்த்த - நெகிழ வைத்த; பீடு கெழு - பெருமை பொருந்திய; குரிசில் - தலைவன் (குருசிலுமோர் - குருசிலும் ஓர்). அடுத்து அகநானூறு பாடல் 45 ஐக் காண்போம். பாடுபொருள் வேறாய் இருப்பினும் ஆதிமந்தி பற்றிய குறிப்பு அதன் கண் வரல் சிறப்பு. பிரிவாற்றாமையால் வருந்தும் தலைவியொருத்தி தோழி எத்துணைத் தேற்றினாலும் தேறாது, "காதலனால் ஏற்பட்ட சிறுமையுடன் (ஊரார் புறம் பேசும் சிறுமை), பிரிவுத் துயர் எனும் நோய் மேலிட ஆதிமந்திபோல் மனம் பேதலித்து ஆதரவற்று (அலந்து) உழன்று திரிவேனோ (உழல்வென் கொல்லோ)?" என்று புலம்புகிறாள். "காதலன் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்துஆதிமந்தி போல பேது உற்றுஅலந்தனென் உழல்வென் கொல்லோ" (அகநானூறு பாடல் 45 ன் பகுதி; பாடியவர் - வெள்ளி வீதியார்) சங்கப் புலவர் பரணரின் பாடல்களில் இருந்து வரலாற்றுக் குறிப்புகளும் கிடைப்பதால் அவர் வரலாற்றுப் பதிவாளராயும் அறியப்பெறுகிறார். எடுத்துக்காட்டாக, பரணர் பாடிய அகநானூறு பாடல் எண் 135 ன் முற்பகுதியில் ஆதிமந்தி பற்றிய குறிப்பும் பிற்பகுதியில் வேளிர் குடி அரசர் பதினான்கு பேர் சேர்ந்து தாக்கிய தலைநகர் காமூரையும் கழுவுள் அரசனையும் பற்றிய குறிப்புகளும் வருகின்றன. நாம் தற்போது கையிலெடுத்துள்ள தலைப்பைக் கருத்தில் கொண்டு பாடலின் முற்பகுதியை மட்டும் பேசி, பிற்பகுதியை இக்கட்டுரையை வாசிப்போர்க்கே விட்டு விடுகிறோம். மீண்டும், பிரிவாற்றாமையில் வாடும் தலைவியொருத்தி தோழியிடம் கூறுவது : " திதலை மாமை தளிர் வனப்பு அழுங்கபுதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பபசலை பாய்ந்த நுதலேன் ஆகிஎழுது எழில் மழை கண் கலுழ நோய் கூர்ந்துஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி பேது உற்றிசினே காதலம் தோழி" (அகநானூறு பாடல் 135 ன் முற்பகுதி; பாடியவர் பரணர்) பொருள் : எனது தேமல் (திதலை), மாநிறம் ஆகியவற்றின் தளிர் வனப்பு கெட (அழுங்க), புதர்களில் படர்ந்த (புதல் இவர்) பீர்க்கின் புதுமலர் (எதிர் மலர்) போன்ற (கடுப்ப) பசலை படர்ந்த நெற்றிடையுடையவள் ஆனேன் (நுதலேன் ஆகி). ஓவியம் போன்ற எழில் மிக்க, குளிர்ச்சி பொருந்திய கண்கள் அழும்படியாக (எழுது எழில் மழை கண் கலுழ) பிரிவுத் துயருற்று (நோய் கூர்ந்து) ஆதிமந்தி மதி மயங்கியது போல் (ஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி) பேதலித்து நிற்கிறேன் (பேது உற்றிசினே), அன்பு கொண்ட அழகிய தோழியே ! (காதல் அம் தோழி ). பிரிவுத் துயரில் வாடி நின்ற ஒரு தலைவியைத் தோழி அழைக்கிறாள் : "முழவு முகம் புலரா கலி கொள் ஆங்கண்கழாஅர் பெரும் துறை விழவின் ஆடும் ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின்ஆட்டன்அத்தி நலன் நயந்து உரைஇதாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின்மாதிரம் துழைஇ மதி மருண்டு அலந்தஆதிமந்தி காதலன் காட்டி படு கடல் புக்க பாடல் சால் சிறப்பின்மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர்சென்மோ வாழி தோழி" (அகநானூறு பாடல் 222 ன் பகுதி; பாடியவர் பரணர்) பொருள் : முழவின் (ஒரு வகை முரசு) முகம் உலறா வண்ணம் (முகம் புலரா) - அதன் இடைவிடாத முழக்கத்தினால் - ஆர்ப்பரிக்கும் (கலி கொள்) கழார் என்னும் (காவிரி) துறையில் மென்மேலும் பெருகும் அழகுடன் (ஈட்டு எழில்) பொலிந்து எடுப்பான தோள்களுடன் திகழும் (ஏந்து குவவு) வலிமையான (மொய்ம்பின்) ஆட்டனத்தியின் நலன்களை விரும்பி (நலன் நயந்து), தனது பரந்து (உரைஇ) தாழ்ந்த இருண்ட கூந்தலால் (தாழ் இரும் கதுப்பின்) காவிரி கவர்ந்து கொண்டதால் (வவ்வலின்), திசையெல்லாம் தேடி (மாதிரம் துழைஇ) மதிமயங்கி (மதி மருண்டு) ஆதரவற்றுத் திரிந்த (அலந்த) ஆதிமந்தியிடம் அவளது காதலனான ஆட்டனத்தியைக் காட்டி - ஈந்து - ஒலிக்கும் கடல் புகுந்த (படுகடல் புக்க), புலவர் பெருமக்களால் பாடப்பெற்ற சிறப்பினையுடைய மருதியைப் போல் புகழ் பெறச் செல்வோமாக ! வாழிய தோழி ! (அஃதாவது தலைவனைத் தேடியும் காணாவிடத்து உயிர் துறந்து புகழ் பெறலாம் எனச் சொல்கிறாளோ !). (பாடலைப் போன்றே முற்றுப்புள்ளியின்றி பொருளை எழுதியமைக்கு மன்னிக்கவும். அப்படிதான் எழுத வந்தது !). பிரிவாற்றாமையை வகை வகையாய் பதிவு செய்கிறது அகநானூறு. "......................................அல்கல் அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்பகொடும் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கைஅறியாமையின் அழிந்த நெஞ்சின்ஏற்று இயல் எழில் நடை பொலிந்த மொய்ம்பின்தோட்டு இரும் சுரியல் மணந்த பித்தை ஆட்டன்அத்தியை காணீரோ எனநாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்கடல் கொண்டன்று என புனல் ஒளித்தன்று எனகலுழ்ந்த கண்ணள் காதலன் கெடுத்தஆதிமந்தி போல ஏதம் சொல்லி பேது பெரிது உறலே" (அகநானூறு பாடல் 236 ன் பகுதி; பாடியவர் பரணர்) பொருள் : இரவில் (அல்கல்) மணம் வீசும் சந்தனம் பூசி (அணி கிளர் சாந்தின்) அழகிய பட்டாடையினால் பொலிவு பெற்று (அம் பட்டு இமைப்ப), வளைந்த குழையணிந்த மகளிரிடம் (கொடுங்குழை மகளிரின்) அவன் சேர்ந்த இடம் (ஒதுங்கிய இருக்கை) அறியாது வருந்திய மனதுடன் (அறியாமையில் அழிந்த நெஞ்சின்) உள்ளேன். காளையைப் போன்று தீரத்துடன் நடையும் (ஏற்று இயல் எழில் நடை) பொலிவு பெற்ற வலிமையான தோள்களும் (பொலிந்த மொய்ப்பின் தோட்டு) கரிய சுருள் முடியும் (இரும் சுரியல்) கொண்டவனை (ஆட்டனத்தியைக் குறிப்பது) மணந்து பித்துப் பிடித்தவளாய் (மணந்த பித்தை), "ஆட்டனத்தியைக் கண்டீரோ ?"என்று நாடு நகரெங்கும் கூவித் திரிந்து, "கடல் கொண்டதோ ? ஆற்று வெள்ளம் (புனல்) ஒளித்துக் கொண்டதோ ?" என்று அழுத கண்ணோடு காதலனால் வருந்திய (காதலன் கெடுத்த) ஆதிமந்தி போல துயரினைக் கூறிப் (ஏதம் சொல்லி) பெரிதும் வருந்துகிறேன் (பேது பெரிது உறலே). பரணர் பாடிய அகநானூறு 76 ஆம் பாடலில் பரத்தை ஒருத்தி, "(இடுப்பில்) கச்சினை அணிந்தவனும், (காலில்) கழலை அணிந்தவனும், தேனொழுகும் மாலையினை மார்பில் அணிந்தவனும் (தேம் தார் மார்பினன்), வகையாக அமைக்கப்பெற்று வனப்புடன் பொலிவுறும் மாலையை அணிந்தவனும் (வகை அமை பொலிந்த வனப்பு அமை தெரியல்), சுருள் முடியுடன் (சுரியல்) திகழும் அழகிய (அம்) கூத்தனைக் (பொருநனை) கண்டீரோ என ஆதிமந்தி பித்துப் பிடித்து (பேதுற்று) அரற்றித் (இனைய) திரிய, கரையினில் மோதி (சிறை பறைந்து) உராய்ந்து (உரைஇ) செந்நிறம் கொண்ட கிழக்குத் திசையில் (செம் குணக்கு) பாயும் (ஒழுகும்) அழகிய குளிர்ச்சி பொருந்திய காவிரி (அம் தண் காவிரி) போல - காவிரியாறு ஆட்டனத்தியை இழுத்துச் சென்றது போல - (என்னிடம் வந்த தலைவனை) நானும் (யானே) கரம் பிடித்துக் கொண்டு செல்ல எண்ணுகிறேன் (கொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின்)" என்கிறாள். "கச்சினன் கழலினன் தேம் தார் மார்பினன்வகை அமை பொலிந்த வனப்பு அமை தெரியல்சுரியல் அம் பொருநனை காண்டிரோ எனஆதிமந்தி பேது உற்று இனைய சிறை பறைந்து உரைஇ செம் குணக்கு ஒழுகும்அம் தண் காவிரி போலகொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின் யானே" (அகநானூறு பாடல் 76 ன் பகுதி; பாடியவர் பரணர்) அகநானூறு பாடல் 376 ல் காதல் பரத்தை தலைவனுடன் பேசுவதாக வருவது : "செல்லல் மகிழ்ந நின் செய் கடன் உடையென்-மன்கல்லா யானை கடி புனல் கற்று எனமலி புனல் பொருத மருது ஓங்கு படப்பைஒலி கதிர் கழனி கழாஅர் முன்துறைகலி கொள் சுற்றமொடு கரிகால் காண தண் பதம் கொண்டு தவிர்ந்த இன் இசைஒண் பொறி புனை கழல் சே அடி புரளகரும் கச்சு யாத்த காண்பின் அம் வயிற்றுஇரும் பொலம் பாண்டில் மணியொடு தெளிர்ப்பபுனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு மன்னோநும் வயின் புலத்தல் செல்லேம்" (அகநானூறு பாடல் 376 ன் பகுதி; பாடியவர் பரணர்) பொருள் : செல்லாதே, மருதநிலத் தலைவனே ! (செல்லல் மகிழ்ந). உனக்கு நான் செய்யும் கடமை உள்ளது. (பாகனிடம்) கல்லாத யானை செறிந்த நீரோட்டத்தில் (கடி புனல்) விளையாடக் கற்று நீரில் மோத அதனால் பேரலையாய் எழுந்த நீர் (மலி புனல்) மோதும் மருத மரங்கள் உயர்ந்து நிற்கும் நிலங்களையும் (மருது ஓங்கு படப்பை), செழித்து வளர்ந்த கதிர்களைக் கொண்ட வயல்களையும் உடைய கழார் என்னும் ஊரின் (காவிரி) முன் துறையில் மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கும் சுற்றத்தாரோடு (கலி கொள் சுற்றமொடு) (சோழ மன்னன்) கரிகாலன் கண்டு மகிழ, புனல் விழாக்கோலம் பூண்டு (தண் பதம் கொண்டு) இன்னிசை தரவல்ல ஒளிரும் சதங்கை அணிந்த கழல் (இன்னிசை ஒண் பொறி புனை கழல்) சிவந்த காலடியில் புரள (சேவடி புரள), கருமையான கச்சு அணிந்து காண்பதற்கு அழகிய தன் வயிற்றில் (கருங் கச்சு யாத்த காண்பின் ஆம் வயிற்றில்) பெரும் பொன்னாலான (இரும் பொலம்) பாண்டில் எனும் இசை கருவி மணியுடன் ஒலிக்க (பாண்டில் மணியொடு தெளிர்ப்ப), புனலைப் பெரிதும் விரும்பி (புனல் நயந்து) ஆடிய அத்தியின் (ஆட்டனத்தியின்) அழகினை விரும்பி (ஆடும் அத்தி அணி நயந்து) காவிரி அவனைக் கவர்ந்து ஒளித்துக்கொண்டதைப் போல உன்னைக் கவர்ந்து வைத்துள்ளேன் (காவிரி கொண்டு ஒளித்தாங்கு அன்றோ). (உன் தலைவி உன்னைக் கவர்ந்து செல்லுமாறு) உன்னுடன் புலந்து நிற்க மாட்டேன் (நும் வயின் புலத்தல் செல்லேம்). அகநானூறு 396 லும் காதல் பரத்தை ஒருத்தி தலைவனிடம் சொல்கிறாள் : "இனி யான் விடுக்குவென் அல்லென் மந்திபனி வார் கண்ணள் பல புலந்து உறையஅடும் திறல் அத்தி ஆடு அணி நசைஇநெடு நீர் காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு நின்மனையோள் வவ்வலும் அஞ்சுவல்" (அகநானூறு 396 ன் பகுதி; பாடியவர் பரணர்) பொருள் : இனி உன்னை விடமாட்டேன் (இனி யான் விடுக்குவென் அல்லென்). ஆதிமந்தி நீர் வார்த்த கண்ணுடன் பலவற்றைச் சொல்லித் துயருறுமாறு (மந்தி பனிவார் கண்ணள் பல புலந்து உறைய), போர்த் திறம் கொண்ட ஆட்டனத்தி (அடுதிறல் அத்தி) ஆடும் அழகினை விரும்பி (ஆடு அணி நசைஇ) பெருவெள்ளம் கொண்ட காவிரி அவனைக் கவர்ந்து ஒளித்துக்கொண்டதைப் போல் உன்னை ஒளித்து வைத்துள்ளேன் (நெடுநீர் காவிரி கொண்டு ஒளித்தாங்கு). (அவனை மீண்டும் அவன் தலைவி ஆதிமந்தி கவர்ந்து கொண்டதைப் போல்) உன் மனையாள் உன்னைக் கவர்ந்து கொள்வாள் என அஞ்சுகிறேன் (நின் மனையாள் வவ்வலும் அஞ்சுவல்). இறுதியாக சங்கமருவிய காலத்துக் காப்பியமான சிலப்பதிகாரம் ஆதிமந்தி - ஆட்டனத்தி காதலைக் குறிக்கக் காணலாம். "மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன் தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று கன்னவில் தோளாயோ என்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக் கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள் ..............." (சிலப்பதிகாரம்; மதுரைக் காண்டம்; வஞ்சின மாலை; வரிகள் 11-15) பொருள் : வஞ்சி நகரத் தலைவனைப் (ஆட்டனத்தியை) பேராற்று வெள்ளம் கொண்டு செல்ல, மன்னன் கரிகாலன் பெருவளத்தான் மகள் (ஆதிமந்தி) தானும் அப்புனலின் வழி சென்று, "மலையொத்த தோளினை உடையவனே (கன்னவில் தோளாயோ)" என்று கூவிக் கதற, கடலானது அவனை அவள் முன்னிறுத்திக் காட்ட, அவனைத் தழுவிப் பொற்கொடியைப் போல் திரும்பி வந்தாள். சிலம்பில் ஆதிமந்தி மன்னன் கரிகாலனின் மகளாகவும் ஆட்டனத்தி வஞ்சித் தலைவனாகவும் காட்டப்படுகின்றனர். ஆனால் அவர்களைப் பேசும் சங்கப்பாடல் எதிலும் அத்தகைய வரலாற்றுக் குறிப்பு இல்லை. குறிப்பாக, வரலாற்றுப் பதிவாளராகக் கொள்ளப்படுகிற பரணர் அவர்களைக் குறித்த ஆறு பாடல்களில் ஒன்றில் கூட அவ்வாறு குறிப்பிடவில்லை. எனவே சங்க இலக்கியங்களிலிருந்து, அவர்கள் இருவரும் ஆடுகள மக்களாகவே புலப்படுகின்றனர். சங்கமருவிய காலத்திலேயே காப்பியங்கள் தோன்றின. காப்பியங்கள் தன்னேரில்லாத் தலைவனையே முதன்மைப்படுத்தின. சிலம்பு குடிமக்கள் காப்பியம் எனப் பெயர் பெற்றாலும் கோவலனும் கண்ணகியும் சாதாரணக் குடிமக்கள் அல்லர். மன்னர் குலத்தவராக இல்லாவிடினும் நிலப்பிரபுத்துவ சமூகத்தில் செல்வச் செழிப்புள்ள வணிகர் குலத் தோன்றல்களாகவே காட்டப் பெறுகின்றனர். எனவே சிலம்பில் புகழ்பெற்ற தலைவன் - தலைவியாக சுட்டப்பெறும் ஆட்டனத்தி - ஆதிமந்தியும் ஏற்கனவே அக்கால மக்கள் வழக்கில் திரிபுகளைப் பெற்று மன்னர் குலத்தவராகக் கருதப்பட்டது இயல்பான ஒன்றே. புனைவும் காப்பியத்தின் அங்கம்தானே ! எது எப்படி ஆயினும் உலகக் காதலர்களைக் கொண்டாடும் தமிழ்ச் சமூகம் முதலில் ஆதிமந்தி - ஆட்டனத்தி காதலைத் தலையாயதாய்க் கொண்டாடுவதும், அதனை உலகோர் பார்வைக்குக் கொண்டு செல்வதும் தமிழர் பண்பாட்டை உலகிற்குக் கடத்தும் முயற்சியில் ஒன்றாய் அமையும்.
  8. வட்டு தெற்கு பரராஜசிங்கம் ஐயாவின் மலசலகூடக் குழி கல்லு கட்டும் வேலை நடைபெறுகிறது. காரைநகர் புதிய மலசலகூடத்திற்கான மாதிரி அளவுத்திட்டம்.
  9. கள்ளத்தீனி ரெண்டாம் வகுப்பு தமிழ்ப் புத்தகம் எண்டு நெக்கிறன் “பாடசாலை முடிந்து வீடு வந்த பாலாவையும் தங்கையையும் அம்மா கை கால் அலம்பிவிட்டு சாப்பிட அழைத்தார், “அம்மா முழுவதும் சாப்பிட்டால் என்ன தருவீர்கள்” எண்ட பாலாவின் கேள்விக்கு “ ஒவ்வொரு வாழைப்பழம் தருவேன்” எண்டு அம்மா பதில் சொன்னார்”, எண்டு வாசிச்சது மனசில பதிய, நானும் சாப்பிட்டாப்பிறகு என்ன இருக்கெண்டும் எண்ட ஆராய்ச்சியோட தான் சாப்பிடவே தொடங்கிறனான். சின்னனில சாப்பாடு எப்பவுமே பிரச்சினையாத்தான் இருந்திச்சுது. சோத்துக்குள்ள ஒளிஞ்சிருக்கிற கறிகளை தேடிக் கஸ்டப்பட்டு அடைஞ்சிட்டு, மிச்சச் சோத்தை குளம்போ , சொதியோ இல்லாட்டி ரசத்தையோ சேத்து விழுங்கீட்டூ , நான் உண்ட களையில அம்மா படுக்க, extra சாப்பாட்டுக்கு அவ ஏதும் ஒளிச்சு வைச்சிருக்கிறாவோ எண்டு கண் ஆராயத் தொடங்கும். பூனை போனாலே எழும்பிற அம்மா நான் போய் தேடித் திரியிறது தெரிஞ்சிருக்கும் எண்டு நம்பிறன் , ஆனாலும் தெரியாத மாதிரி இருப்பா ஏனெண்டா சோத்தைச் சாப்பிடாதவன் உதையாவது சாப்பிடட்டும் எண்டு. எங்களுக்குப் பின்னேரத் தேத்தண்ணி வாழ்க்கையில முக்கியமானது. வெள்ளைக்காரனுக்கு dinner table மாதிரித் தான் எங்களுக்கு பின்னேரத் தேத்தண்ணி. (தே)தண்ணியைப் போட்டபடி தான் பல குடும்பத்தில சில முடிவுகளை எடுக்கிறது. காலமைச்சாப்பாடு இருந்தாலும் சாப்பிட நேரம் இருக்காது, அதை ஓட ஓட விழுங்கிறதாலேம், மத்தியானச் சாப்பாடு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நேரம் சாப்பிடறதாலம், இரவுச் சாப்பாட்டு மத்தியானம் மிஞ்சிறதுக்கேத்த மாதிரித் தான் இருக்கும் எண்டதாலேம், தேத்தண்ணிக்குத் தான் எல்லாரும் ஒண்டா இருக்கிறது. என்ன “தேத்தண்ணியைக் குடிச்சிட்டு விளையாடப் போ” எண்டு அம்மா சொன்ன காலம் மாறி இப்ப , தேத்தண்ணி வேணாம் கிளாசுக்குப் போ எண்ட நிலமை வந்திட்டுது. கூப்பிட்ட உடன போகாட்டி தேத்தண்ணி ஆறிப் போடும் எண்டதாலேம், அம்மா எதையாவது கடிக்கத் தருவா எண்ட நம்பிக்கையாலேம், நாலு மணியெண்டா வெளி விறாந்தையில எல்லாரும் இருப்பம். சாப்பாடு எல்லாம் வீட்டுக்குள்ள இல்லாட்டி குசினீலயோ வைச்சு முடிச்சிடுவிம். அதுகும், காலமை ஓடிக்கொண்டேயும் மத்தியானம் மேசையில நிண்டபடியும், இரவு அடுப்படீல குந்தியும் தான் சாப்பிடிறது. ஆனாத் தேத்தண்ணி நேரம் ஆர் வந்தாலும் குடுக்கிறதுக்கோ தெரியேல்லை எல்லாரும் வெளி விறாந்தையில தான் இருக்கிறது. மகேந்திரன் மாஸ்டர் வீட்டு மாடு கண்டு போட்டால் பால் தேத்தண்ணி, அதில்லாட்டி lakspray இருந்தா மாப்போட்ட தேத்தண்ணி , ரெண்டுமில்லாட்டிப் பிளேன்ரீ. மாசத் தொடக்கத்தில முதல் சீனி போட்டும், பிறகு சீனியை நக்கியும் பிறகு குட்டித்துண்டுப் பனங்கட்டியும் வர விளங்கும் இது மாசக்கடைசி எண்டு. பனங்கட்டியைப் பல்லால நருவி சூட்டோட தாற மூக்குப்பேணி பிளேன்ரீயைக் குடிச்சிட்டு கடைசி வாய்க்கு ஒட்டின விரலைச் சூப்ப, அது இன்னும் இனிக்கும். மாதச் சாமாங்கள் “பாய் கடை”(பிரியாணி விக்கிறேல்லை) வாங்கேக்க வாங்கிற Marie biscuit இல்லாட்டி பிறவுன் கலரில பூ மாதிரி டிசைனில வாற மஞ்சி பிஸ்கட்டை வாங்கி, பழைய Laxpray ரின்னுக்க போட்டு ஒளிச்சு வைச்சு, வாங்கின ஒரு கிலோவை எல்லாருக்கும் பங்கிட்டு அந்த மாசம் முழுக்க குடுக்கோணும். பங்கீட்டுப் பிரச்சினையால பாதிக்கப்பட்டு ஒண்டு மட்டும் கிடைக்கேக்க அப்பப்ப களவா இன்னும் ஒண்டு ரெண்டெண்டு எடுத்தாத்தாதன் வயிறு தாக்குப்பிடிக்கும். ஏனோ தெரியேல்லை எனக்கெண்டா கூடப் பசிக்கிறது பின்னேரத்தில தான். காலமை சாப்பாடு lunch box இல கொண்டாறது ஒருத்தனுக்கே காணாது ஆனாலும் பத்து மணிக்குத் திறக்க பதினைஞ்சு கை உள்ள வைக்க கடைசீல lunch boxஐக் கழுவாமலே உள்ள வைக்கலாம். மத்தியானம் வெய்யிலுக்கால வந்தா சோறு சத்திராதி, இரவு புட்டுத்தான் தேசிய உணவு . ஏதோ கொஞ்சமா இருந்தாலும் விதம் விதமா கிடைக்கிறது பின்னேரம் தான். அதுகும் வரியத்துக்கு ஒருக்காத் தான் குகானந்தபவானில வடை வாங்கிறது மற்றும் படி லோக்கல் தயாரிப்புத் தான். பின்னேர tiffin நாங்கள் சாப்பிடிறேல்லை, கொறிக்கிறது. வாயை தொடந்து அசைக்கிற மாதிரித் தான் சாப்பாடு தேவைப்படும். வீட்டையோ இல்லாட்டி சொந்தத்திலயோ விசேசங்கள் வந்தால் தான் பலகாரம் இல்லாட்டி அதுகும் இல்லை. நாலும் வீட்டை கடுவன் குட்டி எண்டதால சாமத்தியங்களும் இல்லை ஆனாலும் இந்தப் பின்னேர “ Tiffin”, விதம் விதமா சீசனுக்கு ஏத்த மாதிரி ஏதாவது கிடைக்கும். வாங்கினது , செஞ்சு ஒளிச்சு வைச்சது, ஒண்டும் இல்லாட்டி அடிப்படையா தேங்காய்பூவையும் சீனியையும் வைச்சு எதை சேத்தாலும் ஒரு தீனி ரெடி . ஆனால் என்ன தேத்தண்ணிக்கு சீனி “கட்”. புழுங்கல் அவிச்சிக்குத்தி வாற புழுங்கல் அரிசியைப் வறுத்து தேங்காய்ப்பூ சீனி சேத்துக் குழைக்க பொங்கிப் பொரிஞ்ச அரிசியைக் கடிக்க வாற பெரிய சத்தம் .அதோட சீனியும் அரைபட வாற சின்னச் சத்தம் , இது ரெண்டொடேம் தேங்காய்பூவும் அரைபட வாய்குள்ள ஒரு mill ஓட, கடைவாயால தேங்காய்ப்பால் வடிய அதையும் துடைச்சு நக்கிச் சாப்பிட, …..அது சாப்பிட்டவனுக்கு மட்டும் தான் தெரியும் . இல்லாட்டி அரிசிமா இடிச்சிட்டு வறுத்து மாவை அரிக்கேக்க வாற அரிசிமாக் கட்டைக்கும் சீனியும் தேங்காய்ப்பூவும் சேத்தாலும் அமரக்களம் தான் என்ன விழுங்கேக்க விக்கும். Barbecue நாங்களும் காலம் காலமாச் செய்யிற நாங்கள் என்ன மச்சத்துக்கில்லை மரக்கறிக்குத் தான். உள்ளி, ராசவள்ளிக் கிழங்கு, பனங்கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சோளம், கஜூ, பிலாக்கொட்டை எண்டு எல்லாத்தையும் மத்தியானம் சமைச்ச அடுப்பில சுட்டுச் சாப்பிடிறனாங்கள். பங்குனி எண்டால் ராசவள்ளிக் கிழங்கை சமைச்சு அடுப்புத் தணலில போட்டிட்டு சுட்டெடுத்துத் தோலை உரிச்சிட்டு திருவலையில திருவீட்டு அதுக்கும் தேங்காய்ப்பூவும் சீனியும் சேத்தா அதுகும் அல்வா தான். சித்திரையில அம்மா புளி வாங்கி பினைஞ்செடுத்திட்டு எறியிற புளியங்கொட்டையை வறுத்துக் கோதுடைச்சு சாப்பிடிறது. ஒண்டு காணும் ஒரு நாள் முழுக்க பல்லுக்க வைச்சு அராவ பல்லுக்கும் புளிக்கும் சண்டை நடந்து எப்பிடியும் பல்லு வெண்டிடும். ஆவணீல நல்லூரோட தான வத்தாளங் கிழங்கு வரும். என்ன பிரச்சினை கூடி உருளைக்கிழங்கு இல்லாமல் போக அது கள்ளத்தீனீயாய் இருந்து கறியாப் போட்டுது. மாரீ காலத்தில ஒண்டும் இல்லாட்டி புழுக்கொடியலும் முட்டுத் தேங்காய்ச் சொட்டும் பல்லுக்கும் வாய்க்கும் நல்ல வேலை தரும். அதோட புழுக்கொடியல் மாவும் தேங்காய்ப்பூ பனங்கட்டியும் எப்பவாவாது கிடைக்கும். என்னத்தை தான் எப்பிடிச் சாப்பிட்டாலும் நொறுக்குத்தீனியை தேடித் தேடிச் சாப்பிடிறது ஒரு சந்தோசம். எல்லா நேரத்திலேம் களவெடுத்துச் சாப்பிடாட்டியும் சாப்பாட்டுக்கு கள்ளப் பட்டடிட்டு , கொறிச்சித் திண்ண இஸ்டப்பட்டுச் சாப்படிறதாலயோ தெரியேல்லை அதுக்கு கள்ளத்தீனீ எண்டு பேர் வந்தது. பேர் எப்பிடி இருந்தாலும் இப்பத்த சாப்பாட்டிலும் பாக்க இந்தக் கள்ளத்தீனி நல்ல தீனி தான். Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்
  10. உண்மை இங்கே எந்த ஒரு அவசரமும் இல்லை எங்களால் முடிந்த அளவிற்கு ஏற்றமாதிரி உதவிகளை செய்யலாம் பேனர் தொடர்பாக நானும் முன்னர் எழுதி விட்டேன் . எனது அனுபவப்படி இப்போதைக்கு அது தேவையில்லை செயலில் காட்டிவிட்டு விளம்பரம் செய்யலாம் என நினைக்கின்றேன் அடுத்து ஒரு மலசல கூடம் அமைப்பதற்கான நிதி சேர்ந்தவுடன் அந்த வேலையை ஆரம்பிக்கலாம் . முதலில் எங்கே ஆரம்பிப்பது என்பதை எராளன் தெரியப்படுத்தவும். கள உறவுகளும் அதற்கான சம்மதத்தைத் தெரியப்படுத்திய பின்னர் ஆரம்பிக்கலாம் . எப்படியும் மாசி மாதத்தில் குறைந்தது ஒன்றையாவது கட்டி பயனாளியின் கைகளில் ஒப்படைக்கலாம் என்று நினைக்கின்றேன் .
  11. இலச்சினை,அடையாளங்கள் ஏதுமில்லாமல் பணிகளை தொடரலாம் என்பது என் கருத்து.விளம்பரங்கள் இப்போதைக்கு தேவையுமில்லை.காலம் இருக்கிறது. அனுபவங்கள் வரும். அதன் பின் அத்திவாரங்களை போடலாம். எனக்கு ஏராளன் மீது நம்பிக்கை இருக்கின்றது. அவர்தான் என் அத்திவாரம். மிகுதியை காலம் போக போக பார்க்கலாம்.
  12. மன்னிக்க வேண்டும். வேலைப்பழுவினால் தொடர்ந்து எழுதமுடியாது போய்விட்டது. மொறட்டுவைப் பொலீஸ் நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட நாளன்று இரவு, கல்கிஸ்ஸை பொலீஸின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் அதிகாரியான ஜெயரட்ணமும், நிலாப்டீனும் மொறட்டுவை பொலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டார்கள். கைதுசெய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட தமிழ் மாணவர்கள் அனைவரையும் விசாரிப்பதே அவர்களுக்கு வழங்கப்பட்ட வேலை. நான் உட்பட இன்னும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆறு இறுதியாண்டு மாணவர்களை அவர்கள் தனியான அறைக்குச் சென்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். நாங்கள் அறுவரும் கோண்டாவில், மாணிப்பாய், பருத்தித்துறை, சித்தங்கேணி, தெல்லிப்பழை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். சிலர் 1995 ஆம் ஆண்டிற்குப் பின்னரே யாழ்ப்பாணத்திலிருந்து பல்கலைக்கழக அனுமதி கிடைத்தவுடன் கொழும்பிற்கு வந்தவர்கள். நான் 1990 ஆம் ஆண்டில் மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கு உயர்தரத்தில் கற்பதற்காக வந்திருந்தேன். எங்களை ஒவ்வொருவராக அழைத்து விச்சரிக்க ஆரம்பித்தனர் ஜெயரட்ணமும் நிலாப்டீனும். சிறிய மரத்தினால் ஆன மேசை. மேசையின் ஒரு பக்கத்தில் ஜெயரட்ண‌ம் அமர்ந்துகொள்ள, இன்னொரு பக்கத்தில் நிலாப்டீன் அமர்ந்துகொண்டான். எங்களை ஒவ்வொருவராக அழைத்து ஜெயரட்ணத்தின் முன்னால் இருக்கச் சொல்லிப் பணித்தார்கள். அவனது கைய்யில் புகைப்பட அல்பம் ஒன்று இருந்தது. அதிலிருந்தவர்களைக் காண்பித்தவாறே அவனது விசாரணை ஆரம்பித்தது. முதலில் நான். ஜெயரட்ணமே முதலில் விசாரணையினை ஆரம்பித்தான். "எந்த ஊரடா நீ?" கோண்டாவில் என்று நான் கூறவும், உடனேயே அல்பத்தை திறந்து சில புகைப்படங்களைத் தேடினான். பின்னர் குறித்த ஒரு புகைப்படத்தைக் காட்டி, "இவனை உனக்குத் தெரியுமா?" என்று அதட்டியபடி கேட்டான். அப்புகைப்படம் புலிகளின் வீரர் ஒருவருடையது. கோண்டாவில் பகுதியில் அமைந்திருந்த புலிகளின் முகாம் அல்லது அலுவலகத்தில் பணியாற்றிய போராளி ஒருவருடையது. ஆனால் எனக்கோ அவரைத் தெரியவில்லை. ஆகவே, "இவரை எனக்குத் தெரியாது" என்று கூறவும், நிலாப்டீன் அறைந்தான். "கோண்டாவில் எண்டு சொல்கிறாய் ஆனால் இவனை உனக்குத் தெரியவில்லையா ?" என்று அவன் கத்தினான். "எனக்குத் தெரியாது " என்று மீண்டும் கூறினேன். அதன் பிறகு இன்னும் சில புகைப்படங்களைக் காண்பித்து அவர்களைத் தெரியுமா என்று ஜெயரட்னம் கேட்கவும், அவர்களில் ஒருவரையும் தெரியாது என்று மீண்டும் கூறினேன். தொடர்ந்தும் நான் எவரையும் தெரியாது என்று கூறவும், "எப்பயடா கொழும்பிற்கு வந்தனீ?" என்று ஜெயரட்ணம் கேட்டான். "1990 ஆம் ஆண்டு" என்று நான் கூறவும், "சரி, போ" என்று என்னை விட்டுவிட்டான். அதன் பின்னர் மானிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரபாவின் முறை. அவனது தம்பி புலிகள் இயக்கத்தில் இணைந்து சிலாவத்துறைச் சண்டையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டிருந்தவன். மாவீரர் குடும்பமாதலால் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தபோது பிரபாவினால் இலகுவாக கொழும்பிற்கு வர முடிந்திருந்தது. மாவீரர் குடும்பத்தைச் சாராதவர்கள் சரியான காரணங்கள் இன்றி கொழும்பிற்கு வருவதென்பது அக்காலத்தில் புலிகளால் தடுக்கப்பட்டிருந்தது. ஆகவே பிரபா 1995 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கொழும்பிற்கு வந்தமையானது அவன் மீது கடுமையான சந்தேகத்தை ஜெயரட்ணத்திற்கும், நிலாப்டீனுக்கும் ஏற்படுத்தி விட்டிருந்தது. முதலில் புலிகளின் புலநாய்வுப்பிரிவினரால் அனுப்பப்பட்டவன் என்று கூறி அவனை இருவரும் கடுமையாகத் தாக்கினார்கள். அவன் "இல்லை, நான் பல்கலைக்கழக அனுமதி கிடைத்ததினால்த்தான் கொழும்பிற்கு வந்தேன்" என்று கூறவும், "அப்படியானால் நீ மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவன் தான், உண்மையை ஒத்துக்கொள்" என்று கூறி மீளவும் தாக்கினார்கள். அடி தாங்காமல் அவன் அழத் தொடங்கினான். பின்னர் அவனைத் தனியாக ஒரு மூலையில், தரையில் இருத்திவிட்டு, "விடியும் முன்னர் நீ எப்படி கொழும்பிற்கு வந்தனீ எண்டதைச் சொல்லிப்போடு, இல்லையெண்டால் காலையில உன்னை நாலாம் மாடிக்கு கொண்டுபோவோம், அங்க போன பிறகு நீ உயிரோடு திரும்ப இயலாது" என்று மிரட்டினார்கள். அடுத்தவன் லீலாகிருஷ்ணன். பருத்தித்துறையைச் சேர்ந்தவன். பல்கலைக்கழக மல்யுத்த அணியில் இருந்தவன், அதனால் உடலை எப்போதுமே கட்டுக்கோப்பாக வைத்திருப்பவன். 1995 ஆம் ஆண்டிற்குப் பின்னரே அவனும் கொழும்பிற்கு வந்திருந்தமையினால் அவனையும் தாக்கியபடியே விசாரித்தார்கள். அவனது குடும்பம் மாவீரர் குடும்பமா என்று எனக்குத் தெரியாது. இவ்வாறே தெல்லிப்பழையைச் சேர்ந்த ஆனால் கொழும்பில் வெகுகாலம் வாழ்ந்துவந்த புஸ்ப்பாகரன், சித்தங்கேணியைச் சேர்ந்த ரமேஸ் என்று மீதியாய் இருந்தவர்களையும் விசாரித்தார்கள் இடையிடையே தாக்கினார்கள். எல்லோரையும் நாலாம் மாடிக்கு அழைத்துச் செல்லப்போகிறார்கள் என்றே நாம் நம்பியிருந்தோம். ஆனால் மறுநாள் காலை 8 மணிக்கு மொறட்டுவைப் பல்கலைக்கழக துணைவேந்தர் மொறட்டுவைப் பொலீஸ் நிலையத்திற்கு வந்தார். பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர்களை புலிகள் என்று தவறாகப் பிடித்து வைத்திருக்கிறீர்கள் என்று அதிகாரி பீரீஸுடன் அவர் வாதிட்டார். "உன்னைப்போன்ற‌ சிங்கள துரோகிகளால்த்தான் புலிகள் கொழும்பில் குண்டுவைக்கிறார்கள். இவங்களை என்னிடம் விட்டுவிட்டு உனது வேலையைப் பார்த்துக்கொண்டு போ" என்று அவருடன் கர்ஜித்தான் பீரிஸ். ஆனால் அவர் விடுவதாய் இல்லை, "இவர்களில் இறுதியாண்டில் படிக்கும் ஆறு மாணவர்களையும் என்னுடன் அனுப்பி வைய்யுங்கள், இவர்களுக்கான பரீட்சை நடந்துகொண்டிருக்கிறது. உங்களுக்குத் தேவைப்பட்டால் நானே இவர்களை பரீட்சை முடிந்தவுடன் உங்களிடம் அழைத்து வருகிறேன்" என்று மன்றாட்டமாக அவர் பீரிஸிடம் கெஞ்சினார். சிங்களவராக இருந்தும் தமிழ் மாணவர்கள் பரீட்சையினைத் தவறவிடக் கூடாது என்ற அக்கறை அவருக்கு இருந்தது. அவருடன் சில நிமிடங்கள் தர்க்கித்துவிட்டு, "சரி, அழைத்துச் செல், ஆனால் இவர்களால் ஏதாவது தீங்கு ஏற்படுமாக இருந்தால் நான் உன்னை வந்து கொல்வேன்" என்று கத்தியவாறே எங்களை அவருடன் அனுப்பி வைத்தான். ஆனால் எங்களைத் தவிரவும் மூன்றாம், இரண்டாம் வருடங்களில் படித்துக்கொண்டிருந்த இன்னும் நாற்பது மாணவர்களை பீரிஸ் தொடர்ந்தும் தடுத்து வைத்திருந்தான்.
  13. இது, நம்புகின்ற மாதிரி இல்லையே… 😁 “கேட்கிறவன் கேனையன் என்றால்… 🐃—-, ஏரோப்பிளேன் ஓட்டுமாம்.” 😂 🤣
  14. 📢 ஈ.பி.டி.பி-யை எழுச்சி கொள்ள வையுங்கள்! – தோழர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அறைகூவல். adminJanuary 25, 2026 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) தேசிய மாநாட்டினை நடாத்தி, கட்சியை மீண்டும் ஒரு பெரும் சக்தியாக எழுச்சி பெறச் செய்ய அனைவரும் தயாராக வேண்டும் என கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். யாழ். தலைமையகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 📌 “என் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த உண்மைகளை எதிர்காலமும், நான் நேசிக்கின்ற மக்களும் நிச்சயம் வெளிப்படுத்துவார்கள்.” மாற்றத்தை விரும்பி மக்கள் வாக்களித்த போதிலும் எதிர்பார்ப்புகள் இன்னும் நிறைவேறவில்லை. இருப்பினும், சவாலான சூழலில் பொறுப்பேற்றுள்ள இந்த அரசாங்கத்திற்கு இன்னும் கால அவகாசம் வழங்குவதே நியாயமானது. எந்தவொரு அரசும் தமிழ் பேசும் மக்களுக்கு எதையும் தாம்பாளத் தட்டில் வைத்து தரப்போவதில்லை. எமது நற்புறவு, சினேகபூர்வ உரையாடல் மற்றும் தேசிய நல்லிணக்கத்தின் மூலமே உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். கடந்த காலங்களில் எமக்கு போதிய அரசியல் பலம் இருந்திருந்தால் இன்னும் பலவற்றை சாதித்திருக்கலாம். தற்போதுள்ள ஆளும் கட்சி தமிழ் உறுப்பினர்கள் அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் கரைந்து போயுள்ளனர். அவர்களுக்கு அனுபவமோ ஆற்றலோ போதாது. அரசாங்கத்துடன் பேசித் தீர்ப்பதற்கான ஒரு தளத்தை உருவாக்க வேண்டுமாயின், மக்கள் எமக்கு மீண்டும் அந்த ஆணையை வழங்க வேண்டும். “கட்சியின் பலவீனங்களை அடையாளங்கண்டு, கட்டமைப்புகளைச் சீரமைப்பதன் மூலம் ஈ.பி.டி.பி-யை மீண்டும் எழுச்சி கொள்ள வைக்க முடியும். இதற்காக அனைத்து உறுப்பினர்களும் ஆத்மார்த்தமாக உழைக்க வேண்டும்.” என டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். https://globaltamilnews.net/2026/227462/
  15. உங்களுக்கு... கொடுத்து வைத்த நண்பர்கள் உள்ளார்கள். 😂 நமக்கும் இருக்கிறார்களே.... "வீடியோ வந்திட்டுதா, வீடியோ வந்திட்டுதா..." என்று, நள்ளிரவு என்றும் பாராமல், தொலைபேசியில்... ஒரே தொல்லை கொடுக்கிறார்கள். 🤣
  16. நான் அறிந்தவரையில் யாழ்ப்பாண கோட்டை விடுதலை புலிகள் அமைப்பினால் அடிமையின் சின்னமாக கருதப்பட்டதாலேயே இராணுவம் வெளியேறியதும் பகுதி பகுதியாக இடிக்கப்பட்டது. பல நூறு போராளிகள் இந்த யாழ் கோட்டையை தகர்ப்பதற்காக தமது உயிர்களை தியாகம் செய்தார்கள். இந்த கோட்டை துயரத்தின் அடையாளம். கோட்டையில் கொட்டும் பணத்தை, வளத்தை வீடு, மலசலகூடம் இல்லாத மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற செலவிடலாமே.
  17. அமைச்சரவைத் தீர்மானம். வெளிநாட்டில் வாழுவோரும் வாக்களிக்க முடியும்! --- --- --- *வாக்களிக்கத் தகுதியானோர் பற்றிய விபரங்கள் தெளிவில்லை... *ஐரோப்பிய, மேற்கு நாடுகளில் வாழ்வோர் வாக்களிக்க முடியுமா? *மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிவோர் மாத்திரமா? *முடிவுத் திகதிக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் அனுப்பிய கடிதம்... -- -- --- வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள், இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு, தேர்தல் பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்வது தொடர்பாக. 23 /09 /2025 இல் இடம்பெற்ற அமைச்சவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. நடவடிக்கை குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் -- 26/1 என்று மாத்திரம் குறிப்பிட்டு திகதியிடப்படாமல், ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் கடிதத்தை குறித்த குழு அனுப்பியுள்ளது. அதாவது -- தங்கள் பிரதேசங்களில் இருந்து, வெளிநாடுகளில் வாழ்வோர் பற்றிய விபரங்களை வழங்கமாறு கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. முடிவுத் திகதி ஜனவரி 31 ஆனால் -- இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை கூட்டம் முடிவடைந்து, இரண்டரை மாதங்களின் பின்னர் அதுவும், முடிவுத் திகதிக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் தான், கட்சிகளின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் கடிதங்களை குறித்த குழு அனுப்பியிருக்கிறது. கோரப்பட்டுள்ள நான்கு அம்சங்களும் வருமாறு --- 1) வெளிநாடுகளில் இருக்கிற தேருநர்களை தேர்தல் இடாப்பில் பதிவு செய்தல். 2) தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள். 3) வாக்களித்தல் 4) வாக்கெண்ணுதல். என்ற நான்கு அம்சங்கள் பற்றியும் கட்சிகளின் கருத்துகள் குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளன. ஆனால், கடிதத்தில் கோராப்பட்டுள்ள முதலாவது அம்சம் தொடர்பாக கேள்விகள் எழுகின்றன. A) “வெளிநாடுகளில் வாழ்வோர்” என்றால், ஐரோப்பிய மற்றும் மேற்கு நாடுகளில், இலங்கைக் கடவுச் சீட்டுடன் வாழ்வோரும் உள்ளடக்கமா? B) அல்லது மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் பெண்கள் மற்றும் பொறியியலாளர்கள், போன்ற உத்தியோகஸ்த்தர்களாக பணிபுரியும் இலங்கையர்கள் மாத்திரம் வெளிநாடுகளில் வாழ்வோர் என்று அர்த்தப்படுத்தப்படுகிறதா? ஆகவே -- இந்த விடயங்கள் செயலாளர்களுககு அனுப்பியுள்ள கடிதத்தில் விபரமாக இல்லை. அதாவது வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வாக்களிக்க முடியும் என்ற அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானம் விளக்கமாக கடிதத்தில் இல்லை. இவை பற்றி தமிழ்த்தேசியக் கட்சிகள் உள்ளிட்ட வேறு எந்தவொரு சிங்களக் கட்சியும் இதுவரை விளக்கம் கோரவுமில்லை. குறிப்பாக -- வடக்கு கிழக்கு தமிழர்கள் அதுவும் யாழ்ப்பாண தமிழர்கள் பலர், ஐரோப்பிய, ஸ்கண்டிநேவிய மற்றும் மேற்கு நாடுகளில், இலங்கைக் கடவுச்சீட்டுடன் வாழ்கின்றனர். வேறு சிலருக்கு இரட்டைப் பிரஜாவுரிமையும் உண்டு... ஆகவே, வாக்களிக்கத் தகுதியான வெளிநாட்டவர்கள் யார் என்பது பற்றி விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சு அல்லது வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யவதற்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு தெளிவுபடுத்த வேண்டும். அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid0sy9i7wSuEkL3QrrHoM3vE75bMhAMhLtm8YvAKXu4e8zTumtqAe3YfC3PQ33c9b2cl/?
  18. பிச்சை எடுத்து பழகியவன்... ஒரு நாளும் சமைத்து சாப்பிட மாட்டான். 😂
  19. மேலுள்ள காணொளியில் கடைசி 5 நிமிடத்தில் முன்னோடி செயற்திட்டம் பற்றியும் அதற்கு முன் வட்டு.தெற்கு வட்டுக்கோட்டை மலசலகூடப் புனரமைப்பு பற்றியும் குறிப்பிடப்படுகிறது. @வாத்தியார் அண்ணை, @goshan_che அண்ணை, @குமாரசாமி அண்ணை, @Kavi arunasalam ஐயா, @யாயினி அக்கா, @ஈழப்பிரியன் அண்ணா மற்றும் கள உறவுகள் கவனத்திற்கு. மேலுள்ள காணொளியில் மஞ்சள் வேட்டி, தாடியோடு இருப்பவர் எனது தந்தையார்.
  20. தமிழ்த்தேசியம் என்றாலே புலிகளின் மீளுருவாக்கம், புலிகளுக்கான ஆதரவு என்று தட்டிக் கழித்துவிடுகின்ற மனநிலை ஒன்றினை மிகவும் திட்டமிட்டே உருவாக்கி வருகிறார்கள். தமிழர்களிடையே தேசியம் பேசுவோர் சமூக விரோதிகளாக, பழ‌மைவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் தமிழ்த்தேசியம் என்பது புலிகளைத் தாண்டியதென்பதும், அது தமிழரின் அடையாளம், தாயகம், கலாசாரம் உட்பட்ட ஒட்டுமொத்த இருப்பிற்கான தேவையென்பதை தெரிந்தும் இச்சூட்சுமத்தில் ஈடுபடுகிறார்கள். இதனை முன்னின்று செய்வதுகூட தமிழர்களில் ஒரு பகுதியினர்தான். இத்தளத்திலேயே தமிழ்த் தேசியத்திற்குப் புலி முலாம் பூசுவதன் மூலம் அதனை நீர்த்துப்போகச் செய்ய எத்தனிப்போர் இருக்கின்றனர். சிலர் மிகவும் வெளிப்படையாகவும் இன்னும் சில மறைமுகமாகவும் இதனைச் செய்கின்றனர். புலிகளை எதிர்ப்பதாக, விமர்சிப்பதாக இவர்களது கருத்துக்கள் வெளியில் தோற்றம்பெரினும், அவர்கள் உண்மையாகவே எதிர்ப்பது தமிழ்த் தேசியம் எனும் அடையாளத்தைத்தான் என்பது வெளிப்படை.
  21. அத தெரண கருத்துப்படங்கள்.
  22. தாத்தாக்களை… அடுத்த முறை எழுத்துபிழை இல்லாமல் எழுதவும்😂
  23. ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் . .......! 😍
  24. அப்படியே செய்யலாம் அண்ணை. முதலில் நாங்கள் ஏனையோர் கொண்டு வரும் கொடையாளிகளின் பணத்தில் வேலைகளை மெல்ல, மெல்ல செய்ய ஆரம்பிப்போம். தொடர்சியாக நீங்கள் வேலையிட பளு குறைந்த பின் உங்கள் ஆட்களை சேர்க்கலாம். அவசரப்பட்டு செய்ய எந்த அவசியமும் இல்லை.
  25. ஓ…. அப்ப நல்லதாய் போச்சு குமாரசாமி அண்ணை. அப்பிடியே அந்த ரீச்சர்மாரின், கணவர்களை நேரில் சந்தித்து… நாலு ஆறுதல் வார்த்தை சொல்லி விட்டு வாங்கோ. 🤣
  26. பலாலி முகாம் ஆட்லறி செல்களை இயக்கம் மண்டதீவை தாக்கியபோது மட்டுமே யாழ்நகர் பக்கம் ஏவியது நினைவில் உள்ளது. ஆனால் தென்மாராட்சி பக்கம் அடிக்கடி ஆட்லறி அனுப்பி உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
  27. ரம் குளத்தைக் கலக்கி பருந்துக்கு இரையாக்கியுள்ளார்.
  28. துணைவேந்தர் ஒருவாறு எங்களை தன்னுடன் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் சென்றார். புலிகள் என்று கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் மாணவர்களை துணைவேந்தரே மீளவும் பல்கலைக்கழகத்திற்கு அழைத்து வந்தமையானது சிங்கள மாணவர்களைடையே அதிருப்தியினை ஏற்படுத்தி விட்டிருந்தது. அவர்கள் பலரிடம் இருந்த கேள்வி, "உங்களை எப்படி போக விட்டார்கள்?" என்பதுதான். எங்களை முன்னின்று பிடித்துவந்து, பொலீஸில் கொடுத்த மாணவர்களில் சிலர் மொறட்டுவைப் பொலீஸ் நிலையத்திற்கு வந்திருந்தார்கள். அதில் மாணவர் சங்க தலைவனும் ஒருவன். சந்திரிக்காவின் சுதந்திரக் கட்சியின் கம்பகா மாவட்ட இளைஞர் அணியைச் சேர்ந்த அவன் பொலீஸ் நிலையத்தில் மிகவும் சாதாரணமாக உலாவந்தான். நாம் அடைத்துவைக்கப்பட்டிருந்த அறைக்கு வந்து, "எப்படி இருக்கிறீர்கள்? உங்களை என்ன செய்வதாகச் சொல்கிறார்கள்?" என்று சர்வ சாதாரணமாகக் கேட்டான். "தெரியாது, எவராவது வந்து எம்மை மீட்டுச் செல்லும்வரை பார்த்திருக்கிறோம்" என்று நாம் கூறினோம். "நீங்கள் யோசிக்கத் தேவையில்லை, உங்களை விசாரித்துவிட்டு, பிரச்சினை ஏதும் இல்லையென்றால், உடனேயே விட்டுவிடுவார்கள்" என்று பாசாங்காக பதிலளித்தான் அவன். அவன் செய்வது என்னவென்று எமக்கு நன்கு தெரிந்திருந்தது. நாங்கள் அறுவரும் பல்கலைக்கழகத்தை அடைந்தபோது எம்மைச் சூழ்ந்துகொண்ட சிங்கள மாணவர்கள் எமக்கு பொலீஸ் நிலையத்தில் நடந்தது என்னவென்பதை அறிவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். ஆனால் எவருக்கும் எம்மீது அனுதாபம் இருக்கவில்லை. எம்மைக் காட்டிக்கொடுத்து, பொலீஸில் கையளித்தவர்களில் ஒருசிலர் வந்து எம்மிடம் பேசியபோது நான் வெளிப்படையாகவே "எங்களை பிடித்துக்கொண்டு வந்து பொலீஸில் கொடுத்ததே நீங்கள் தானே? இப்போது எதற்காக எங்களைப்பற்றி விசாரிக்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர்களிடம் பதில் இருக்கவில்லை. எமது கைதின் பின்னர், அதுவரை எம்முடன் சகஜமாகப் பேசும் சிங்கள மாணவர்களே எம்மிடமிருந்து விலகி இருக்கத் தொடங்கியது அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனால், நாம் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டதை அறிந்த இன்னொரு மாணவர் அமைப்பைச் சேர்ந்த சிலர் எம்முடன் தொடர்பு கொண்டார்கள். கொழும்பில் வெளிவந்த அத்த எனும் சிங்களப் பத்திரிக்கை தமிழ் மாணவர்களுக்கு நடந்த அநீதிபற்றி கட்டுரை ஒன்றினை வெளியிட இருப்பதாகவும், எம்மால் எமது அனுபவங்களை அப்பத்திரிக்கை நிருபருடன் பகிர்ந்துகொள்ளமுடியுமா என்றும் கேட்டார்கள். சிங்களத்திலேயே பேட்டி இருக்கும் என்பதனால் என்னையும், இரண்டாம் ஆண்டில் பயின் று வந்த வெள்ளை எனும் புனை பெயர் கொண்ட இன்னொரு மாணவனையும் சொய்ஸாபுர தொடர்மாடியில் அமைந்திருந்த ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே அந்தப் பத்திரிக்கை நிருபரும், மாணவர் அமைப்பின் சில உறுப்பினர்களும் இருந்தார்கள். சுமார் இரு மணித்தியால‌ங்களாவது எமது அனுபவங்களைக் கேட்டபடி இருந்தார்கள். பொறுமையாக , இடையூறுகள் இன்றி, நாம் பேசி முடிக்கும்வரை காத்திருந்து, அடுத்த கேள்வியினைக் கேட்டார்கள் அவர்களின் முகத்தில் காணப்பட்ட உண்மையான வருத்தமும், தவறிழைத்துவிட்டோம் என்கிற கழிவிரக்கமும் எமக்கு ஆறுதலாக இருந்தது. நாம் பேசுவதைக் கேட்டுவிட்டு இறுதியாக, "உங்களை இந்த நிலமைக்கு உள்ளாக்கியவர்கள் சிங்களவர்கள். ஆனாலும், மனிதநேயம் கொண்ட‌ சிங்களவரும் இருக்கிறோம். உங்களைப் புலிகள் என்றே அனைத்து பிரதான பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் நாம் உங்களின் அனுபவங்களைச் சொல்லவிருக்கிறோம், எங்கள் இனத்தால் உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக வருந்துகிறோம்" என்று சொல்லி பேட்டியினை முடித்துக்கொண்டார்கள். அப்பத்திரிக்கையின் அடுத்தவார இதழில் எமது பேட்டி வெளியாகியிருந்தது. நாம் கூறியவற்றில் பெரும்பாலான விடயங்களை அப்படியே மாற்றம் செய்யாது வெளியிட்டது அத்த பத்திரிக்கை. அத்த பத்திரிக்கையில் வெளியான எமது பேட்டி பல சிங்கள மாணவர்களை ஆத்திரப்படுத்தியிருந்தது. இப்பேட்டியினை வழங்கியது யாரென்று அறிய அவர்கள் முயன்றார்கள். சிங்களம் பேசுக்கூடியவன் என்பதனால் என்னிடம் வந்து, "நீயா இப்பேட்டியைக் கொடுத்தது? எங்களை இரக்கமற்றவர்கள் போன்று பேசியிருக்கிறாயே?" என்று கேட்டார்கள். அந்தப் பேட்டிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று நாம் மறுத்துவிட்டபோதிலும், "நீங்கள் செய்ததைத்தானே பத்திரிக்கையும் பேட்டியாக வெளியிட்டிருக்கிறது?" என்று என்னிடம் பேச வந்த சிங்கள மாணவர்களிடம் கூறினேன், அவர்களிடம் பதில் இருக்கவில்லை. இனவாதம் தலைக்கேறிய பின்னர் கூடவே படிக்கும் தமிழ் மாணவர்களையும் பயங்கரவாதிகள் என்றும், கொலைகாரர்கள் என்று அடையாளம் காணும் சிங்கள மாண‌வச் சமூகத்திலேயே எமது பல்கலைக்கழக படிப்பும் நடந்தேறியது.
  29. சாதாரணமாக இப்படியான செய்திகளுக்கு... @விசுகு , @குமாரசாமி , @தனிக்காட்டு ராஜா போன்றவர்கள் பாய்ந்தடித்து வருகின்றவர்கள். இப்போ அவர்களுக்கு... வயது போய் விட்டது போலுள்ளது. கோயில், குளம் என்று... திரிகிறார்கள் என நினைக்கின்றேன். 😂 🤣
  30. ஆட்களை பொறுக்கியா இல்லையா என்பதை கண்டு பிடிக்கும் உங்கள் அளவீடு பிரமிக்க வைக்கின்றது.
  31. விசேடமான விடயம் எது என நினைவில் இல்லை. சாரை சாரையாக போராளிகள் அங்கும் இங்குமாக நிகழ்ச்சிக்கு வந்து சென்றார்கள். உலக தமிழினத்தின் ஒளிவிளக்கு எனும் பாடல் ஒலித்தது இப்போதும் காதுகளில் கேட்கின்றது. அன்றைய பொழுதுகளில் சைக்கிள் திருட்டு அதிகம். நிகழ்ச்சிக்கு வந்த பலரின் சைக்கிள்கள் களவாடப்பட்டது. பெல் மூடிகளும் திருடப்பட்டன. பெல் மூடிகளை மாலையாக அணிவித்து பிடிபட்ட ஓரிருவரை இயக்கம் மணிக்கூட்டு கோபுர சந்தியில் காண்பித்தது நினைவில் உள்ளது. இராணுவம் நிகழ்ச்சிகளை அப்போது குழப்பவில்லை. அது மண்டைதீவில் நிலைகொண்டு காணப்பட்டது. உலக தமிழினத்தின் ஒளிவிளக்கு பாடலை தேடல் செய்து பார்த்தேன். கீழ்கண்ட இணைப்பில் உள்ளது. https://tamileelamsongs.com/parani-paaduvom/
  32. இராணுவம் வெளியேறியதும் சிறிது காலத்தில் கோட்டை உடைப்பு தொடங்கிவிட்டது. அப்போதைய காலத்தில் இயக்கத்தை விட்டு வெளியேற விரும்பியவர்களுக்கு கோட்டை இடிப்பு தண்டனையாக கொடுக்கப்பட்டது. பொதுவாக தண்டனைக்காலம் மூன்று மாதங்கள் கோட்டை இடிப்பு என கேள்விப்பட்டுள்ளேன். கோட்டையில் இடிக்கப்பட்ட கற்களை இயக்கம் பின்னர் பல்வேறு தேவைகளிற்கு பயன்படுத்தியதாக நினைவு. கோட்டைக்குள் எதிர்காலத்தில் மீண்டும் இராணுவம் வரக்கூடாது என்பது அடிப்படை காரணம் என்பதில் சந்தேகம் இல்லை. கோட்டை இராணுவ முகாமை தகர்ப்பதற்கு விடுதலை புலிகள் அமைப்பு கொடுத்த விலை, உயிர்த்தியாகங்கள் அதிகம். அனைத்து கோட்டை தாக்குதல்களும் தோல்வியிலேயே நிறைவடைந்தன. கோட்டை முற்றுகை இராணுவம் தாமாக வெளியேறியதுடன் நிறைவுக்கு வந்தது. 1995ம் ஆண்டு இறுதிகளில் இலங்கை படைகள் யாழ்ப்பாணத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்வரை கோட்டை இடிப்பு தொடர்ந்தது. இடிப்பு இதனால் முழுமை பெறவில்லை. கோட்டை இராணுவ வெளியேற்றத்தின் பின் முத்தமிழ் விழா சிறப்பாக நடைபெற்றதும், அதைப்பார்க்க சென்று வந்ததும் நினைவில் உள்ளன. கோட்டையில் உயரமாக சென்றி பொயிண்ட் அமைத்து அதில் சினைப்பர்கள்/குறி பார்த்து சுடும் இராணுவத்தினர் துவக்கை யாழ் மத்திய கல்லூரி நோக்கி நீட்டுவதாக காண்பிக்கலாம். சுற்றுலா பயணிகளிக்கு வரலாறு தெரியவேண்டும் அல்லவா.
  33. மிகவும் சாதரணமான ஒரு இலச்சினையாக இருந்தால் நன்று.எதையும் அடையாளப்படுத்துவதாக இல்லாதிருந்தால் மிகவும் நல்லது..காரணம்..வேறு குறியீடுகளை சேர்க்கும் போது மக்கள் எல்லா விதமான உதவிகளையும் எதிர்பார்ப்பார்கள், கேட்பார்கள்.எல்லாவற்றையும் செய்யும் சூழ் நிலை இப்போ இல்லை என்று நினைக்கிறேன்.இலச்சினை கூட இன்னும் கொஞ்சக் காலம் போன பின் செய்தால் நன்று என்றே எனக்கு தோணுது..ஆரம்பமே பனர் அது, இது என்று தொடங்கினால் உண்மையான தேகைளுக்கு பணம் போதிமானதாக இருக்காது..எல்லாவற்றையும் அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்.விளம்பரப்படுதல்கள் கூடுதல் பழுக்களை ஏற்படுத்திக் கொள்ளப் போறீர்கள் போல் தெரிகிறது..எனக்கு மனதில் தோன்றியதை சொல்கிறேன்.இதற்கு மேல் உங்கள் விருப்பம்.நன்றி.
  34. நானா, கேட்ட கேள்விக்கு இது பதிலில்லையே! கேள்வி திரிக்கு சம்பந்தமில்லாததை ஏன் எழுதுகிறீர்கள் என்பது!! தாங்கள் என்ன அரசியலில் PHD பட்டம் எடுத்தவரோ? எடுப்பதெல்லாம் புலியெதிர்ப்பு வாந்தி இதில தம்பட்டம் வேற!!🤣
  35. மதுபானத்தை போலிசாருக்கு இலவசமாக அல்லாமல் காசுக்கு கொடுக்கக்கூடாது தானே.
  36. என்னுடைய கண்ணில், இந்த வீடியோ காட்சிகள் இன்னும் படவில்லை. 😂 சில வேளை... பொய் செய்தியாக இருக்குமோ. 🤣
  37. சுமந்திரன் தமிழரசுக்கட்சியிலிருந்து துரத்தப்படவேண்டியவர். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இதற்குள் வலிந்து மதத்தை இழுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழரசுக்கட்சியை இழுத்து மூடவேண்டுமென அடம்பிடிக்கிறார் அவர். இவரோ பகிடி விடுகிறார்.
  38. முடிந்தளவு செய்யுங்கள். முயல்வோம், முன்னோடுவோம், முன்னேறுவோம். இதற்காக செலவை ஏற்க ஒருவரை பிடித்து விட்டேன். அவரும் காரைநகர்தான். அங்கேதான் செய்ய வேண்டும் என அவர் சொல்லவில்லை. ஆனால் அப்படி செய்வது ஒரு நல்ல touch ஆக இருக்கும். இன்னும் சிலருடன் பேசிகொண்டிருக்கிறேன். விரைந்து தகவல்களை பெற்றால் ஆரம்பிக்கலாம்.
  39. விமான நிலையங்களை சுற்றி ஐந்து மைல்கள் சுற்று வட்டாரங்களுக்குள் அதன் வான்பரப்பில் கருவிகள்/பலூன்கள்/டிரோன்கள் போன்றவற்றை செலுத்துவதற்கு/பறக்கவிடுவதற்கு வெளிநாடுகளில் முன் அனுமதி பெறவேண்டும்.
  40. சுத்துமாத்து சுமந்திரன் தனது இருப்பை தக்க வைத்து கொள்ள, தனது வெற்றியை உறுதிப்படுத்த, தனது சொந்த வாக்கு வங்கியை அதிகப்படுத்த, தமிழரசு கட்சியை அதன் யாப்பை காட்டி எப்படி எல்லாம் சிதைத்தார். தமிழ் தேசிய ஆதரவாளர்களை நீக்கி, தமிழ் தேசிய உணர்வாளர்களை நீக்கி, தமிழ் தேசிய நீக்கம் செய்து கொண்டிருக்கிறார் பாருங்கள். A. மாவை சேணாதிராசாவை செயற்படவிடாமல் செய்தார் B. அருந்தவபாலனை ஓரம் கட்டினார் C. அரியநேத்திரனை வெளியேற்றினார் D. சிவகரனை தள்ளி வைத்தார் E. சிவமோகனை கலைத்தார் F. விக்னேஸ்வரனை முடக்கினார் G. அனந்தியை வெளியேற்றினார் H. தவராசாவை ஓரம்கட்டினார் I. சரணவபவனை கலைத்தார் J. அன்பில் செவ்வேஸ்ஸை முடக்கி வைத்திருக்கிறார் K. சசிகலா ரவிராஜ் மௌனியாக்கப்பட்டார் L. குகதாசனை ஓரம் கட்டுகிறார் M. கோடீஸ்வரனை ஓரம் கட்டுகிறார் N. சிறீநேசனை முடக்க நினைக்கிறார் O. சத்தியலிங்கம் தமிழ் தேசியம் பற்றி கதைத்தால் தேசிய பட்டியலை பறிப்பேன் என்று கூறி அடிமையாக்விட்டார் P. ரவிகரனின் தேசியபற்றை முடக்குகிறார் Q. சிவஞானத்தை ஊமையாக்கி தனது புகழ் பாடும் அடிமையாக்கி வைத்திருக்கிறார் R. சுரேஸ் பிரேமசந்திரனை ஓட வைத்தார் S. சித்தாத்தன் பிரிந்து போனார் T. அடைக்கலநாதன் வெளியேறினார் U. டக்கிளசுடன் கொஞ்சி குலாவுகிறார் V. சந்திரகுமாருடன், கபிலனுடன், சந்திரசேகருடன், இளங்குமரனுடன் பின்கதவால் உறவு வைத்திருக்கிறார் W. இப்போது தனது வடமாகாண முதலமைச்சர் கனவு வெற்றி பெற சுரேசுடனும் சித்தார்த்தனுடனும் செல்வத்துடனும் சந்திரகுமாருடனும் சேர்ந்து வடமாகாண சபையில் போட்டியிட பார்க்கிறார் X. வடமாகாண சபையில் போதிய ஆசனம் கிடைக்காவிட்டால் டக்கிளசுடனோ Nppஉடனோ கூட்டணி வைத்து முதலமைச்சர் ஆக திட்டமிடுகிறார் Y. தற்போது சிறீதரனை வெளியேற்ற சதி பண்ணுகிறார் Z. தற்போது சுமந்திரன் மத்திய குழு செயற் குழு என்ற பெயரில் தன்னை எதிர்த்து கேள்வி கேட்க வக்கற்ற தனது அடிமைச் செம்புகளையும் தனக்கு வாளி வைப்பவர்களை மட்டுமே வைத்துள்ளார் வாழ்க சுமந்திரனின் தமிழரசுக் கட்சி. Roy Roy
  41. இரா சம்பந்தன் கூட்டிக்கொண்டு வந்த ஆளிட்ட கனக்க/நல்லதை எதிர்பார்க்கப்படாது கண்டியளோ.😀 அமிர்தலிங்கம்,சம்பந்தன் வரிசையில் வந்த இன்னொருவர்தான் இந்த சுமந்திரனார்.வழமை போல் பதவியை மோகத்தை தவிர வேறேதும் இல்லை.🤣 இவர்கள் எல்லாம் பொன்னம்பல இராமநாதன் காலத்து மூளைசாலிகள்.😂
  42. ஏராளன் எதோ பேச்சுக்கு கருத்தை எழுதி விட்டு விடாமல் எழுதிய கருத்தை செயலாக்கியவர் நீங்கள் தான். நாங்கள் நாலு பேர் வெளியில் இருந்து என்னவும் கதைக்கலாம் காசு தருவோம் என்று கூறலாம் அல்லது தரலாம்.... ஆனால் அந்த நேரத்தில் கிடைத்த அந்த நிதியை உடனேயே பயனாளிகளுக்கு கிடைக்கச் செய்து அவர்களின் அத்தியாவசியமான தேவையை நிறைவேற்றியவர் நீங்கள் தான். உண்மையாகவே சொல்கின்றேன் இங்கே இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு நீங்கள் தான் முதற் காரணம் . அரசியல் வேண்டாம் என்பதால் திருப்பி அனுப்பப்பட்ட நிதிகளைப் பற்றிப் பேச விரும்பவில்லை ஆகவே உங்ககளுக்கே நாங்கள் கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம் . தொடர்ந்தும் உங்களின் ஆதரவும் செயற்பாடும் முன்னோடி அமைப்பிற்குத் தேவை என்பதையும் கூறி உங்களுக்கு எங்களின் நன்றிகளையும் கூறிக்கொள்கின்றோம் . 🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.