Everything posted by Paanch
-
அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
இந்து மதம் என்றும், சைவ சமயம் என்றும் பள்ளியில் பாடம் படிப்பித்தார்கள். கொழும்பான் அவர்கள் இந்துவும் சமயம் என்று சொல்கிறாரே? 🧐
-
அமெரிக்காவில் ஆண் – பெண் என்ற இரு பாலினம் மட்டுமே அங்கீகரிக்கப்படும்! -ட்ரம்ப் அறிவிப்பு!
உலகில் எத்தனை பாலினங்கள் உள்ளன.???????????🧐
-
இன, மத மனங்களையும் சுத்தப்படுத்துவதான் கிளின் சிறிலங்காவின் நோக்கம் : அமைச்சர் சந்திரசேகர்
RishiK அவர்களே! முதலில் உங்கள் கிளீன் லங்கா பற்றிய முழுப் புரிதலையும் எழுதுங்கள் அறிய ஆவலாக உள் ளோம்.🧐
-
கல்முனையில் நீதிமன்றத் தடையை மீறி, திருவள்ளுவர் சிலை
மாவிட்டபுரம் சிவபூமி திருக்குறள் வளாகத்தின் அடிக்கல் நாட்டு வைபவம் 25.10.2021 காலை 10.00 மணிக்கு செஞ்சொற் செல்வர் கலாநிதி.ஆறு. திருமுருகன் தலைமையில் நடைபெற்றது. மிகப் பிரமாண்டமாக தயாராகி வரும் திருக்குறள் வளாகத்திற்கு, தெய்வப் புலவர் திருவள்ளுவாின் திருவுருவச் சிலை கொண்டு வரப்பட்டு மிக வேகமாக பணிகள் நடைபெற்று வருகிறது. எதிா்வரும் 02.02.2025ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ள இலங்கையின் முதலாவது திருக்குறள் வளாகத்தில் 1330 குறள்களும் கருங்கல்லில் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. பல தலைமுறைகள் கடந்து திருக்குறள் ஒவ்வொருவரின் மனங்களுக்கும் சென்று சேரும் வண்ணம் செஞ்சொற்செல்வாின் முயற்சியால் இந்த அரிய பணி நடைபெற்று வருகிறது. திருக்குறள் தொடர்பான ஆய்வுகளை மேற் கொள்வதற்கும், தியானங்களை மேற் கொள்வதற்கும், திருக்குறள் தொடர்பாக பல்வேறு மொழிகளில் வெளிவந்த நூல்களை வாசிப்பதற்கான, இங்கு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
கல்முனையில் நீதிமன்றத் தடையை மீறி, திருவள்ளுவர் சிலை
குறளுக்கு பற்பலர் உரை எழுதியிருக்கலாம். ஆனால் எனது உரையே உண்மையானது. அதாவது முன் இல்லாதோர் கல்லாதவர் உடையார் முன் இல்லார்போல்ஏக்கற்றும் கற்றார் கடையரே கல்லா தவர்.😂
-
இறந்த பிறகு மீண்டும் உயிர்த்தெழ முடியுமா? அமெரிக்கா, ஜெர்மனியில் என்ன நடக்கிறது?
சிறு தவறு மாறிப் பதிந்துவிட்டேன்
-
இறந்த பிறகு மீண்டும் உயிர்த்தெழ முடியுமா? அமெரிக்கா, ஜெர்மனியில் என்ன நடக்கிறது?
இலங்கையில் மகியங்கனை என்ற ஊரில்உள்ள குகை ஒன்றில் இராவணனின் உடல் இன்றும் அழியாது இருப்பதாகவும், அதற்குள் செல்வதற்கான உதவிகளை அரசு வழங்கினால் அவரது உடலைக் காண்பிப்பேன் என சிறிமாவோ பிரதமராக இருந்த காலத்தில் ஒரு புத்தபிக்கு தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்ததைப் படித்த ஞாபகம் உள்ளது. ஆனால் அது உண்மையானால், தமிழர்கள் இலங்கையின் பூர்வீக குடிகள் என்பது உறுதியாகிவிடும் என்பதால் அரசு அதில் தீவிரம் காட்டவில்லை என்ற விமர்சனங்களும் வந்ததாக ஞாபகம். இன்றுவரை அந்தப் பிக்குவுக்கு என்ன நடந்ததோ, ஏதுநடந்ததோ யாமொன்றும் அறியோம் பராபரனே. இதுபற்றி யாழ்கள உடவுகள் யாரேனும் ஒரு துரும்பளவாவது அறிந்திருந்து பதிந்தால்…..எனது இந்தப் பதிவு என் கனவோ, கற்பனையோ அல்ல என்று நானே என்னைப் பாராட்டி மகிழ்வேன்.😌
-
வடக்கு கடற்றொழிலாளர்களை ஏமாற்ற முயலும் அரசியல்வாதிகள் : டக்ளஸ் குற்றச்சாட்டு
‘ முயல்பிடிக்கிற நாயை மூஞ்சையில் தெரியுமாம்.
- முச்சக்கரவண்டி மேலதிக உதிரிபாகங்கள் அகற்றப்படாது - பொலிஸ்
-
பொங்கல் சிரிப்புகள்.
- புலம்பெயர் இலங்கை ஏதிலிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!
சிங்களம் என்ற தனது ஆசைநாயகி தன்னைவிட்டு வேறு நாயகனைத் தேடாதவகையில் அவளைக் கட்டில் வைத்திருப்பதற்கு இலங்கைத் தமிழர்கள் என்ற கடிவாளம் இந்தியாவுக்குப் பேருதவியாக உள்ளது. ஆகவே அங்கு புகலிடம் தேடிவரும் இலங்கைத் தமிழர்களை அகதிகள் என்ற தாழ்வு நிலைக்குத் தள்ளிச் சிறுமைப்படுத்தாமல் பாதுகாத்து வருகிறது.- தேசிய தைப்பொங்கல் பண்டிகை யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் ஆரம்பம்!
வெசாக் பண்டிகையை தேசியப் பண்டிகையாக மே மாத அமாவாசையில் கொண்டாடப் போவதாக அரசு முடிவெடுத்த செய்தி நனவா, கனவா?? அர்ச்சுனா நீ எங்கே???- இன்று ரம்புக்கு தீர்ப்பு.
நான் பிறந்த வீட்டுக்குப் பக்கத்து வளவில்தான் கொல்லன் பட்டடை. அடிக்கேக்கை கோமணம் அவிழும், பிடிகழரும், சுத்தியல் விழும் என்று பயந்து பாத்துக்கொண்டிருப்பேன், நல்லகாலம் ஒருநாளும் அப்படி நடக்கேலை.🧐😌- மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை
தமிழினம் சுயமரியாதோடு இன்னொரு இன அரசின் ஆதிக்கத்திற்கு அடிமைப்படாமல் தங்களைத் தாங்களே ஆட்சிசெய்து வாழ்வதற்காக வேண்டிப் போராடி உயிர் நீத்தவர்கள் மாவீரர்கள். இதனை எதிர்த்து அரசுக்குத் துணை போய், பல மாவீரர்களைக் கொல்வதில் ஈடுபட்டு, அந்தச் செயற்பாட்டில் உயிர்நீத்து துரோகியாகியவர்களும் உள்ளனர். ஆகவே மாவீரர்களுக்கு “மாவீரர் துயிலும்” இல்லம் அமைத்து நினைவேந்தல் செய்வதுபோல், துரோகிகளுக்கும் “துரோகிகள் துயிலும்” இல்லம் அமைத்து நினைவேந்தல் செய்யவைத்தால் பிரச்சனை நீர்த்துவிடும்.🧐- விசர்நாய் கடிக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகம் என்கிறார் வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ
கலிபோர்னியா எரிந்தபோது தங்கள் நாயைத் தூக்கிக் கொண்டு பலபேர் ஓடினார்களே! படமோ, வீடியோவையோ ஐயா பார்க்கவில்லையா!!🐕- நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
இடப்பக்கத்தில் நிற்பவர் அச்சொட்டாகத் தமிழ்சிறி தான். சனாதிபதியை எப்போ சந்தித்தார்??🤔- இன்று ரம்புக்கு தீர்ப்பு.
சாமியார் தன்ரை வேலையைத் தொடங்கிவிட்டார். நித்தியானந்த சாமியாரையே தூக்கிச் சாப்பிடுவார் போலத் தெரிகிறது.😳- விசர்நாய் கடிக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகம் என்கிறார் வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ
நீண்ட காலத்தின் பின்பு, இப்போதுதான் மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது. நான் கடிவாங்கியது தெருநாயிடமோ, பறைநாயிடமோ அல்ல, உயர்சாதி நாயிடம். அறியத்தந்தமைக்கு நன்றி தம்பி. இத்துடன் எந்த நாயினம் என்று அறியத்தந்தால் இன்னும் மகிழ்ந்து நன்றி கூறுவேன்.🙏🐕🕺 பாக்கர்வால் - கால்நடை பாதுகாவல் நாய் பஞ்சாரா வேட்டை நாய் புல்லி குத்தா - காவல் நாய் குல் டாங் - காவலர் நாய் வேட்டை நாய் குல் தெரியர் நாய் இமாலய மேய்ப்பு நாய் கால்நடை பாதுகாவல் நாய் இந்திய பரியா நாய்- இன்று ரம்புக்கு தீர்ப்பு.
டிரம்புக்கு தண்டனை கிடைத்திருந்தால் என்ன நடந்திருக்கும்??- விசர்நாய் கடிக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகம் என்கிறார் வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ
தெரியவில்லை ஐயா! என்னைக் கடித்ததால் வந்த இரத்தம் அதற்குள் பரவி, அது எங்கோ ஓடிப்போய் இறந்திருக்கலாம். மனிதர் கடித்தாலும் ஊசி போடவேண்டும் என்ற வைத்தியரின் ஆலோசனையை அறிந்திருக்கிறேன். அத்தனை கொடிய விடம் மனிதரிலும் இருக்கிறதாம்.😳- ”என்ன செய்தாலும் தம்பியை (துமிந்த சில்வா வை) விடுவிக்க மாட்டோம்”
அன்று மீன் சாப்பிடும்போது தலை எனக்கு வேண்டும் என்று அம்மாவிடம் அடம்பிடிப்பேன். ஆனால் இன்றைய உயர் நீதிமன்றம் தலையைவிட்டு வால்தான் வேண்டுமென்று அடம்பிடிக்கிறதே.!!🤔- யாழில் இராணுவத்தினரின் தடுப்பு வேலிகளை தகர்த்த முச்சக்கரவண்டி!
ஓட்டோவில் பொருத்தியிருந்த அலங்காரப் பொருட்களை அகற்றியபோது அதிலிருந்த அலங்கார வைரவர் சூலமும், கிளீன் சிறீலங்கா திட்டத்தில் அகற்றப்பட்டதாம், அதனை அறியாத வயிரவருடைய வாகனம் ஆத்திரம்கொண்டு, ஓட்டோவை விபத்துக்கு உள்ளாக்கி இருப்பதாக மைபோட்டுப் பார்த்ததில் தெரிந்ததாக ஒரு செய்தி.😳🤔- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
மகளும், யாழ் உறவுகளும் நலமே இருப்பதாக அறிந்த நிறைவால், நலிந்த வயிறு துள்ளி ஆடுதே பிரியரே! உங்கள் நிம்மதி எங்களுக்கும் மகிழ்ச்சி. 🤩 நல்லிரவு.🙌- தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
இலங்கையில் நிரந்தரமான அரசியல் தீர்வுக்கு அமெரிக்காவை நீதிபதியாக்க முயலும்…. குரங்கு ஆப்பம் பகிர்ந்த கதை மறந்த ஈழத்துப் பூனைகள்.!!- விசர்நாய் கடிக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகம் என்கிறார் வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ
சாமியார் எத்தனை? ஏனையவர்கள் எத்தனை தரம் யோசிக்க வேண்டும்?? என்பதைக் குறிப்பிட்டால் தன்யனாவேன். - புலம்பெயர் இலங்கை ஏதிலிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.