Everything posted by Paanch
-
ஆட்சியை கைப்பற்றி 3 ஆண்டுகள் - ராணுவ அணிவகுப்பு நடத்திய தாலிபன்கள்
என் மகன்கள் இருவருமே ஸ்ரைல் தாடி வைத்திருக்கிறார்கள், 🧔🏻🧔🏻நான் தினமும் முகச்சவரம் செய்து முகத்தைப் பளிச்சென்று வைத்திருக்க வேண்டும், அப்போதுதான் என் பத்தினியின் முகத்தில் மலர்வையும் மகிழ்வையும் ஒருசேரக் காணலாம். என் பேரனுக்கு இப்போதுதான் நாலு முடிந்து ஐந்து தொடங்கியது, “அப்பப்பா ஏன் தாடியை வெட்டினீங்கள்” என்னைக் கண்டால் முகக்கடுப்போடு வருகிறான்.👨🏽🦳
- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சென்ற புதன்கிழமை பிறந்தநாள் கொண்டாடிய எங்கள் குமாரசுவாமி அவர்கள், 🏃நொடி இல்லாமல் பல்லாண்டு வாழ்க, வாழ்க என வாழ்த்துகின்றோம்.!!🙌
-
ஆட்சியை கைப்பற்றி 3 ஆண்டுகள் - ராணுவ அணிவகுப்பு நடத்திய தாலிபன்கள்
தம்பி தமிழ் சிறி! நாங்கள் துள்ளித் திரியும் காலத்திலேயே அடங்கி மூன்று முடிச்சுப்போட்டுப் பாடம் பயின்றவர்கள், ஒருமுறை போட்ட முடிச்சை வாழ்நாள் முழுவதும் அவிழாமல் பாதுகாத்துவரும் பரம்பரையைச் சேர்ந்த உத்தமர்கள். எங்கள் பத்தினிகளும் முடிச்சு அவிழ விடமாட்டார்கள். “இன்று சுமங்கலி பூசை”🙏😌
-
ஆட்சியை கைப்பற்றி 3 ஆண்டுகள் - ராணுவ அணிவகுப்பு நடத்திய தாலிபன்கள்
அட இப்பதான் எனக்குப் புத்தியில் உறைத்தது. தலைக்குப் போட்டதுதான் தவறி அவர் கால்களில் விழுந்ததா.??😳
- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
-
தமிழ் வேட்பாளருக்கு சங்கு.
ஆரம்பிப்பதை சங்கு ஊதி ஆரம்பிப்பார்கள், முடிவையும் சங்கை ஊதி முடிப்பார்கள், அத்தனை சிறப்பு சங்கிற்கு. தமிழ் வேட்பாளரை சங்கு ஊதி வரவேற்போம்!🙌 அட சங்குகளில் உயர்வான, சிறப்பான சங்கு என்பெயரிலேயே உள்ளது. 😁 பாஞ்ச சன்யம்.😌
-
தமிழ் வேட்பாளருக்கு சங்கு.
இது எந்தக் கண்டத்தில், எந்தநாட்டில், எந்த ஊரில் பேசப்படும் மொழி.????🤔
-
தமிழ் வேட்பாளருக்கு சங்கு.
தேர்தல் ஆணையகம் சங்கைச் சின்னமாக தமிழ் தமிழ் பொது வேட்பாளருக்கு அளித்தது நன்மைக்கனதே!🙌 சங்கு, தமிழர் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தது. 'மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும், விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே' என்று பக்திபாவத்தோடு ஆண்டாளும், 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு' என்று பாவேந்தரும் பாடுவது அதன் அன்றாடப் பயன்பாட்டில் இருந்த முக்கியத்துவத்தின் காரணமாகத்தான். மங்கலச் சடங்குகளின்போதும் அமங்கலச் சடங்குகளின்போதும், சங்கின் பயன்பாடு தவிர்க்க இயலாதது. கடலிலிருந்து கிடைக்கும் சங்குப்பூச்சியின் உடற்கூட்டினையே சங்காகப் பயன்படுத்திவருகிறோம். சங்கில் மணி, துவரி, பாருதம், பூமா, துயிலாசங்கு, வெண்சங்கு, வைபவ சங்கு, திரிசங்கு எனச் சங்கில் பல வகைகள் உண்டு. சங்க காலத்தில் நம் முன்னோர்கள், தங்களின் செல்வங்களை இரண்டாக வகைப்படுத்தினர். அதில் ஒன்று, 'பத்ம நிதி' மற்றொன்று 'சங்க நிதி (வலம்புரிச் சங்கே அதன் அடையாளம்)'. இந்த இரண்டையும் கொண்டோரை 'இருநிதிக்கிழவன்' என்றழைத்தனர். இதன்மூலம் அவர்கள் சங்கைத் தங்களது தலையாய செல்வமாகக் கருதினர் என்பது தெளிவாகிறது. மேலும், கடவுளை பூஜிக்கும் ஒரு பொருளாக சங்கைப் பயன்படுத்திவந்தனர். நீரிலிருந்து கிடைக்கும் பொருள்கள் எல்லாம் புனிதமானவை என்ற நம்பிக்கை நம் மரபில் உண்டு. பாற்கடலை, அமிர்தத்திற்காக தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது கிடைத்த பொருள்களில் ஒன்று சங்கு என்பது ஐதிகம். எனவே, இது மங்கலப் பொருள்களில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. சங்கில் நான்கு வகைகள் உண்டு. முதல்வகை 'இடம்புரிச் சங்கு'. இது, ஆயிரம் சிப்பிகள் கூடும் இடத்தில் கிடைக்கும். இரண்டாம் வகை, 'வலம்புரி'. ஆயிரம் இடம்புரி சங்குகள் கூடும் இடத்தில் இது கிடைக்கும். வலம்புரிச்சங்குதான் கோயில் பூஜைகளில் முதன்மைபெறுகிறது. மூன்றாவது 'சலஞ்சலம்'. ஆயிரம் வலம்புரிகள் சங்கு கூடும் இடத்தில் ஒரு சலஞ்சலம் கிடைக்கும். இது, அபூர்வ வகை. நான்காவது 'பாஞ்சஜன்யம்'. இது, ஆயிரம் சலஞ்சலங்கள் கூடும் இடத்தில் கிடைக்கும். கிருஷ்ணபகவானின் கையில் இருக்கும் சங்கு இதுதான். சங்கு, மிகச்சிறந்த மருத்துவ குணங்கள் நிறைந்த பொருள். சங்கிலிருந்து தயாரிக்கப்படும் 'சங்கு பஸ்பம்' குழந்தைகளுக்கு நுண்ணுயிரிகளால் தொண்டையில் ஏற்படும் டான்சில்ஸ் தொற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இது கூகுள் ஆண்டவரிடம் சங்குபற்றிக் கிடைத்த செய்தி.😌🙏
-
ரஷ்யா - யுக்ரேன் போர் உக்கிரம்: மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் திடீர் தீ - தாக்குதல் நடத்தியது யார்?
செஞ்சோலையில் பிஞ்சுக் குழந்தைகளென்றும் பாராமல், அதுவும் யுக்ரையின் பெண் விமானிகள் கொன்றழித்ததாகச் செய்திகள் வந்ததே, யார் கண்டித்தார்கள்.????
-
தற்போதைய தமிழர் தரப்பு அரசியலிலிருந்து ‘புலி நீக்கம்’ அவசியம் (சொல்லித்தான் ஆகவேண்டும்!)
அடிமை வாழ்வில் ஒரு சுகம் இருக்கிறது. இது சம்பந்தர் காலத் தமிழினம் அனுபவிக்கும் நிகழ்வல்ல. நாங்கள் உலகாண்ட தமிழர் என்று பெருமைப்படும் சோழர் காலத்திலிருந்தே அனுபவித்துவரும் சுகம். எங்கள் கடவுள்களையே எமது தாய்மொழியால் அழைத்து வணங்காமல், வடவரின் மொழிக்கு அடிமைப்பட்டு அதன் அதிகாரத்தில் பணிந்து வணங்கிவரும் இனம். தமிழினத்திற்கு ஒரு தமிழன் தலைவனாக வந்தால் தாங்கமாட்டோம். வேற்று இனத்தவன் ஒருவன் தலைவனாக வந்தால் அவனுக்கு அடிமைப்பட்டு வாழ்ந்து, வந்தது, வருவதுதான் எங்கள் வரலாறு.😩
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
இன்னொரு இனக்கலவரத்தைத் தூண்டிவிட்டால் போச்சு, பெருமளவு குறுகிவிடும்.🤪
-
கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா: எடப்பாடி,அண்ணாமலைக்கு அழைப்பு.
கோழி எச்சம் அளைந்த குரங்கு அதன் துர்நாற்றம் தாங்காது கையை தேய்த்துத் தேய்த்து இரத்தம் ஒழுகி இறுதியில் இறந்துவிடுமாம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். கள உறவுகள் யாராவது இதுபற்றி அறிந்துள்ளீர்களா.?????? அவதானம் அவசியம்.🤔🥴
-
நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
“கறுப்புத் தோலிற்குள் ஒரு வெள்ளை மனசு இருக்கிறது.” இது தவறு. தோலுக்குள் அல்ல, காலுக்குஅடியில் வெள்ளைத் தோலே இருந்து மிதிபடுகிறது. இது இயற்கை கறுவலுக்கு தந்த வரம். அறியாமல் அடிமைப்பட்டோம்.🥴
-
ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொதுக்கட்டமைப்பு
- நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
என் ஜாதகத்திலேயே சொல்லிவிட்டார்கள். என் ஆயுள்வரை சோற்றுக்குப் பஞ்சமில்லையாம்.😆🙏- நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
மன்னிக்கவும், நான் கந்தையாண்ணையோடு நேரடியாக மோதப்போவதில்லை. அவர் எனக்கு புதுப்பெண் பார்க்கும் படலத்தில் இருப்பவர், அதுவும் இளம்பெண்.😆🥰 அதிகமாக நான் அமெரிக்கர்களோடு வேலை பார்த்தவன், அனேகமாக அவர்கள் தங்கள் மனைவியை அறிமுகப்படுத்தும்போது இது இரண்டாவது இது மூன்றாவது என்று சொல்லித்தான் அறிமுகப்படுத்துவார்கள், நான் பேந்தப் பேந்த முழிப்பேன்.😳- நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
ஐயா ஓணாண்டி அவர்களே! கறுப்பன் வெயிலில் நின்றாலும் கறுப்பன்தான், நிறம் மாறாது. வெள்ளையன் நின்றால்….. ஓணான்போல் நிறம்மாறிவிடுவானே!!🤪- நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
கந்தையா57 அவர்களே! எனக்காக இளமங்கை ஒருவரைப் பெண்பார்க்கும் தெய்வமே!! எனக்கு கறுப்பும் வேண்டாம், வெள்ளையும் வேண்டாம், றோஸ்கலரில் ஒன்றைப் பாருங்கள் சாமி.🙏🌸- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
கல்கி குமுதம் ஆனந்தவிகடன் என்று இந்திய வெளியீடுகள் என் மனைவியை இந்திய நாட்டுக்கலாச்சாரத்தைப் பின்பற்ற வைத்திருந்ததை அறியமுடிந்தது. கணவன் வேலையால் வந்ததும் அவர்பாதணியைக் கழற்றி சேவைகள் செய்யவேண்டும், அவர் சாப்பிட்ட தட்டிலேயே சாப்பிட வேண்டும் இப்படி பல எண்ணங்களை மனதில் வளர்த்துக்கொண்டவர். இப்போது உங்கள் சிந்தனையில் உதித்த ஊட்டத்தைப் பார்த்ததும் என்னை நோக்கி செருப்பைக் கழற்றினாலும் பரவாயில்லை இரும்பு லாடம் அடித்த தனது பழைய குதிக்கால் செருப்பை பரணில் தேடுகிறா.😳- தமிழ்நாட்டு மீனவர்களை ஆபத்தில் தள்ளும் கடல் உயிரினம் – அமெரிக்க கப்பலில் சென்னை வந்ததா?
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். ஈழத் தமிழினக் கொலைகார இராணுவத்துடன் பாதீனச்செடி விதைகளையும் ஈழத்திற்கு அனுப்பி, இன்றுவரை அங்கு பயிர் செய்கைகளை அது அழிந்துவருவதற்கு காரணம் யார்.???🤔- முருங்கைக்காய் விலையில் வீழ்ச்சி! விவசாயிகள் பாதிப்பு
இது இப்படியே போனால் வயாக்கர மாத்திரைகள் உற்பத்தி செய்யும் கம்பனிகளை இழுத்து மூடவேண்டியதுதான்.😳😩- இலங்கைக்கு 24.5 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கியது அமெரிக்கா
சிறீலங்கன் பணக்கார வரிசையில் ரணில் மகிந்தாவை முந்தப்போறார், டும் டும் டும்.🏃😆🥴- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
நாவூறு கூடிப்போச்சு என்று சகதர்மினியிடம் சொன்னேன், செத்தல் மிளகாய் தட்டுப்பாடு நெருப்பு விலை என்று சொன்னார். அப்பப்பாவுக்கு ஏன் தூ தூ செய்யவில்லை என்று பேரன் அப்பம்மாவோடு சண்டை.😩😂- தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
கண்டவனை எல்லாம் தமிழன் என்று கொண்டால் அது கொண்டலடிக் கரடிதான்.🤔😩 - நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
Important Information
By using this site, you agree to our Terms of Use.