Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. அண்ணன் அடலேறு ஈழப்பிரியன் வாழ்க! இப்படி பலர் சிந்தித்தால் - அனுர கட்சி வரவால் ஏனைய தமிழ் தேசியம் அல்லாதா கட்சிகளுக்கும் பாதிப்பு வரும் போல இருக்கிறது. ஒ…நான் இதுவரை கந்தையா57 என்பதே ஒரு கள்ள ஐடி என்றல்லவா நினைத்தேன் 🤣 (பகிடிக்கு).
  2. வாக்கு சாவடியில் நின்று பிரச்சாரம் செய்தல் ஆகாது🤣.
  3. அப்ப @புலவர் உடன் மினிமம் 2 வாக்கு கரண்டி🤣 கள்ள ஐடி(கள்) வைத்திருப்போர் ஐடிக்கு ஒரு வாக்கு போடலாம். #குத்துங்க எசமான், குத்துங்க🤣
  4. இல்லை. முதலில் கட்சிக்கு வாக்கு. பின்னர் நீங்கள் வாக்களித்த கட்சியில் கேட்க்கும் 3 பேருக்கு விருப்பு வாக்கை அளிக்கலாம். கட்சி எண்டால் கட்சிகள் மட்டும் அல்ல. சுயேற்சை குழுக்களும்தான். சுயேற்சை குழு 17 க்கு போட்டு விட்டு, பின் அதில் அருச்சுனா அல்லாத 3 வருக்கு போடலாம். நான் இதில் கட்சிக்கான வாக்கை மட்டுமே கருதுகிறேன். தனி நபர்களுக்கான விருப்பு வாக்கை அல்ல. எனவே இதுதான் உங்கள் நிலைப்பாடு எனில் சுயேற்சை குழு அருச்சுனா வுக்கே நீங்கள் டிக் அடிக்க வேண்டும். ஓம். அவரவர் விருப்பம். நான் இன்னும் வாக்களிக்கவில்லை. வாக்களிக்கும் போது சொல்லுவேன்.
  5. ரணிலின் பட்டபடிப்பு தகவலுக்கு நன்றி. அவர் வெளிநாட்டில் படிக்கவில்லை என்பது ஓரளவு ஊகிக்க கூடியதே, ஏன் என்றால் 24 வயதிலோ என்னமோ எம்பி ஆகிவிட்டார். நீங்கள் ஒரு வாட்சப் செய்தியை சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். அதில் அவர் பற்றி சொல்லப்பட்டவை டமால், டுமீல் ரகம்தான்🤣. ஆதரவாளர்கள் என்றால் அப்படித்தானே🤣. இப்போ நம்மட சிறிதரனின் கைப்பொடியளை எடுங்கோ, சாராய பிர்மிட் பணத்தை, இலண்டனில் எம்மூலம் முதலிட்டார் என்பதையா சொல்லுவர்கள், இல்லைதானே. அவர் அஞ்சா நெஞ்சன், அரசியல் ஆலமரம், ராஜதந்திர பப்பா மரம் எண்டுதானே எடுத்து விடுவினம்🤣. அது போல் ஒரு அரசியல் தாமாசுதான் இந்த ரணில் சம்பந்தமான பட்டியலும். அதில் ரணிலை அமரிக்கா ஜனாதிபதியாக கேட்டடார்கள் என்பதை தவிர மீதி எல்லாம் இருக்கு🤣.
  6. இந்த தேர்தலில் நீங்கள் ஒரு இலங்கை வாக்காளர் எனில் யாரை தேர்வீர்கள். வடக்கு கிழக்கு வாக்காளராக உங்களை பாவிக்கவும். இது இரகசிய வாக்கெடுப்பு. 14/11/2024 யூகே நேரம் காலை 11:59 க்கு தேர்தல் தானாக நிறைவுறும்.
  7. அருட்தந்தை சொன்னது 99% சரி. ஆனால் எம்மை போலவே அவரும் இல்லாத மேய்ப்பனை தேடுகிறார் போலும், அதனால் எவரையும் கைகாட்டி இவருக்கு போடுங்கள் என சொல்ல முடியவில்லை. ஆனால் குறைந்தபட்சம் என்பிபி பற்றிய அபாய சங்கையாவது ஊதுகிறார்🙏. ———————— யாழில் நான் ஒரு மானசீக வாக்கெடுப்பு நடத்த போகிறேன். அன்று, நீங்கள் ஊரில் வாக்காளராக இருந்தால் எந்த கட்சிக்கு போடுவீர்கள் என. @தமிழ் சிறி அண்ணை ஆக்களை சேர்க்கவும்🙏
  8. ஒப்பீட்டளவில் ஒரு யூகே மாணவன் ஆக்ஸ்போர்ட், கேம்பிரிஜ் போவதை விட சற்றும் கடினமானதல்ல இலங்கை மாணவன் ஒருவன் பல்கலை கழகம் போகும் வழி. போனபின், நல்ல பல்கலை கழகம் எதுவென்றால் அது வேற கேள்வி. ஆனால் எனது அனுபவத்தில் யூகேயில் முதல் 10,15 யூனிக்கு போவதும், இலங்கையில் எந்த ஒரு யூனிக்குப் போவதும் ஒரே அளவு கஸ்டமான விடயம்தான். யூகேயில் மத்திய, கீழ தர வரிசை யூனிக்கெல்லாம் படுத்து கொண்டே போகலாம்🤣. ஆனால் நரி LLB (பல்கலை படிப்பு) இல்லை என நினைக்கிறேன் Attorney At Law (சட்ட கல்லூரி படிப்பு) மட்டும்தான்?
  9. மிகவும் தெளிவான அவதானிப்பு. முன்னர் ஒரு முறை நான் ஒரு கருத்தை எழுதி இருந்தேன். உண்மையில் அது எனது கருத்தல்ல, சேப்பியன்ஸ் என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் சொல்கிறார், சேப்பியன்ஸ் எம்மை விட உடல் வலுவும், மூளை அளவும் கூடிய நியண்டதால் மனிதர் மடிய, நாம் தக்கண பிழைத்தமைக்கு காரணம் - கூர்ப்பில் எமக்கு இருந்த ஒரு அனுகூலம் என. அந்த அனுகூலமாக அவர் குறிப்பிடுவது, எண்ணிக்கை பெரிதாக இருப்பினும், ஒரு குழுவாக செயற்படும் இயலுமையை. அதாவது பத்தாயிரம் சேப்பியனும், பத்தாயிரம் நியந்தாலும் ஒரு பள்ளத்தாக்கில் வசித்தால்….. நியந்ததால் மனிதனால் ஒரு விடயத்துக்கு (போர்) 10 பேரை மட்டும் சேர்க்க முடியும் போது - சேப்பியனின் கூர்ப்பு அனுகூலத்தால் அவனால் 1000 பேரை சேர்க்க முடியுமாக இருந்ததாம். இதனால்தான் சேப்பியன் குடும்பம் என்ற அலகை, ஊர், சாதி, இனம், நாடு, பேராரசு என பெரிதாக்கி கொள்ள, குடும்பத்துக்கு மேலாக சிந்திக்க முடியாத நியந்ததால் சேப்பியனில் கரைந்து போனார்களாம். இப்போ நீங்கள் சொன்ன விடயம்…. நீங்கள் சொன்ன பொதுமகன் இலங்கை தமிழ் பொதுமகன் மட்டுமே? சிங்கள பொதுமகன்…கடும் பொருளாதார நெருக்கடிக்கு பின்னும், பெளத்த-சிங்கள இலங்கை என்பதில் ஒற்றுமையாக, உறுதியாக நிற்கிறான். அவனுக்கு இருக்கு ஓர் பெளத்த மடாலய ஆழ்-அரசு போல் ஏன் நமக்கிடையே இல்லை. புலிகள் ஆழ்-அரசுக்குரிய கூறுகளை கொண்டிருந்தாலும் அவர்கள் ஒரு வெளித் தெரிந்த அரசியல்-இராணுவம். யூதருக்கு இருப்பதாக சொல்லப்படுவது போல், சனாதனிகளுக்கு ஆர் எஸ் என் போல், தமிழக திராவிட அமைப்புகளுக்கு தி.க. போல், சிங்களவர்க்கு பெளத்த பீடங்கள் போல்…. திம்பு கொள்கையை ஏற்று கொள்ளும் அனைவரும் ஏற்று கொள்ள கூடிய, கொள்கை வழி நடத்த கூடிய ஒரு அமைப்பு ஏன் எம்மிடம் ஒரு போதும் உருவாகவில்லை? கூர்ப்பில் சறுக்கிறோமோ?
  10. ஆங்கிலத்தில் softening the audience என்பார்கள். பார்வையாளரை மெதுமைப்படுத்துவது - அதன் பெறுபேறைரைத்தான் நீங்கள் பார்கிறீர்கள். இப்போ அல்ல, சில காலத்துக்கு முன்பே யாழில் கூட இதை நான் கண்டுள்ளேன். யாழில் சில காலத்துக்கு முன், மேற்கை, தமிழக கட்சிகளை நம்பமுடியாது - நாம் சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைகாரன் காலில் விழலாம் என ஒருவர் தொடர்ச்சியாக எழுதினார்…. சீனா உள்ளே வந்தே விட்டது, தமிழர் சீனாவோடு பேரம் பேச வேண்டும் என்ற இன்னொரு மாயக்கதையின் பிண்ணனியில் இது வெளிவந்தது. அதில் ஒரு பலத்த தேசியவாதி கூட அள்ளுண்டு போய் கருத்துக்களை அதே தொனியில் எழுதினார். நான் கூட, நீங்களா இப்படி எழுதுவது என கேட்டிருந்தேன். அவர் போல தேசிய உணர்வில் அர்ப்பணிப்பான, உண்மையானவர்களையே மெதுமைபடுத்த முடியும் போது, சாதாரணமானவர்கள் எம்மாத்திரம். யாழில் நடந்தது ஒரு சோறு, புலத்தில், புலம்பெயர் நாட்டில் நடந்தது, நடப்பது ஒரு பானை.
  11. பின்கதாவால் ஜனாதிபதியாகிய நரிக்கு பேச்சப்பாரு (வசிவுக்கரசி, காந்திமதி குரலில் வாசிக்கவும்).
  12. வணக்கம் சின்னக்குட்டி. மீள் வரவு நல்வரவாகட்டும். பலநாள் வாசகராக உங்கள் கருத்துக்களை வாசித்துள்ளேன். நான் எழுத தொடங்கிய காலத்தில் நீங்கள் வருவதை விட்டு விட்டீர்கள் என நினைக்கிறேன்.
  13. வணக்கம். நல்வரவு🙏. வில்லவன் இந்த பகுதியிலேயே நிண்டிடாமல், களத்துள் வந்து சொல்லவன் ஆகுங்கள்🙏.
  14. வணக்கம் சுண்டல் மீள காண்பதில் மகிழ்ச்சி. பழசை எல்லாம் (மண்டையன் குழு தர்கங்கள்) மறந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்🤣. இணைந்திருங்கள், முக்கியமாக தொடர்ந்து எழுதுங்கள்🙏.
  15. எல்லாத்தையும் விடுங்கோ பாஸ், சுன்னாகத்தில் பொலிஸ்காரார் மீது தமிழ் ஆள் முதலில் கைவைக்கவா? அல்லது தமிழ் ஆளில் பொலிஸ் கைவைக்க வா சாத்தியம் கூட ? இங்கே உள்ளதில் பெரிய பிழை அவரை அடித்தது, குழந்தையை தூக்கி ஏறிந்து பயணிகளா கூட வந்தோரை இம்சித்தது. இதை எல்லாம் விட்டுட்டு, வானுக்கு பெல் இருக்கா, லைட் இருக்கா என பாக்கிறியள்🤣.
  16. 1. விபத்து நடந்த இடத்தில் இருந்து போகக்கூடாது என்பது எப்போதும் இல்லை, விபத்து நடந்த இடத்தில் உடனடியாக நிப்பாட்டினால் அவருக்கு ஆபத்து என பயந்தால், அல்லது வேறு தக்க காரணம் இருந்தால் போகலாம். போய்விட்டு முடிந்தளவு விரைவில் அருகில் உள்ள பொலிஸ்நிலையம் போகலாம். அல்லது அவசர இலக்கத்தை தொடர்பு கொள்லலாம். மோட்டார் சைம்கிளில் வந்தோர் பொலிசார் என்பது கவனிக்கப்பட வேண்டியது. 2. இனக்கலவரம் - இதைத்தான் சொன்னேன் . 83 இல் நடந்தது இன கலவரம் அல்ல. கலவரம் எண்டால் (இரு) பகுதியும் அடித்து கொள்வது. 83 இல் நடந்தது ethnic riots அல்ல, pogrom. இனவழிப்பு எனலாம். 👆👍 அதே
  17. நியாயமான கேள்வி. ஆனால் இது பிரான்ஸ் இல்லையே அண்ணை. இலங்கை. அரசு இயந்திரம் சிங்களவரான (?), பொலிஸ் பக்கம் சாராமல் தமிழரான (?) வான் சாரதி பக்கம் சாய்வது கொஞ்சம்…புதிசு கண்ணா புதுசு. ம்ம்ம்.. 83 இல் தமிழரும் சிங்களவரும் அடித்து கொண்டார்கள் என யாரோ எழுதியது போல இருக்கு ஜி. சுன்னாகத்தில், சிவிலில் நிக்கும் ஒரு பொலிஸ் கூட்டத்தின் மேல் - ஒரு சாதாரண வான் காரார் தானாக போய் கைவைத்திருப்பார் என நம்புகிறீர்களா ஜி?
  18. இதை சொல்ல கூட தைரியம் இல்லை எண்டா பிறகு என்ன ஹைகோர்ட்டுக்கு பாராளுமன்றம் போற ஆசை. அவர் சொல்லாட்டில் என்ன? நீங்களே ஏத்துறது தண்டவாளத்தில்? கலையரசனும் கேக்கிறாதாமா? பிறகு நம்மட நேரு ஜூனியர் - இலண்டனில் குளிர் எண்டா அம்பாறை அரசியலில் கூதல் காய்வாரே, அவரும் கேட்கிறாரா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.