Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. நானும் அப்படியே நினைக்கிறேன். அண்மை வரை கூட ஈரானிய வெளிவிவகார அமைச்சர் கடும் தொனியில் கதைத்தார். அத்தோடு இஸ்ரேல் டமாஸ்கஸ், அலெப்போ விமான தளங்களை குண்டு வீசி தாக்கியதால், இப்போ ஈரான் வழியாகவே சிரிய-இஸ்ரேல் எல்லை க்கு விநியோகம் நடக்கிறதாக சொல்கிறார்கள். ——— காஸாவின் வைத்தியசாலைகளில் எரி பொருட்கையிருப்பு இன்னும் 24 மணி நேரத்துக்கு மட்டுமே. -ஐ நா-
  2. ஹமாசை கைவிட்டதா ஈரான்? ஈரானை, ஈரானின் நலன்களை, குடிகளை, இஸ்ரேல் தாக்காது விடின், இஸ்ரேலுடன் நாம் மோதலுக்கு போக போவதில்லை என ஐநாவில் இயங்கும் ஈரான் தூதரகம் அறிவித்துள்ளதாம். இது ஈரான் ஹமாஸை கைவிட்டு விலகுவதை காட்டுகிறதா அல்லது பதுங்கி பாயும் உத்தியா எனத் தெரியவில்லை.
  3. உங்கள் வியாக்கியானம் எந்தளவு தூரம் பொருத்தமானது என தெரியவில்லை. ஹமாஸ் எப்போதும் இஸ்ரேலுடன் சமாதான உடன்படிக்கை செய்யவில்லை. எப்போதும் இஸ்ரேலை வரைபடத்தில் இருந்தே தூக்குவதே அதன் கொள்கையாக இருந்தது. இஸ்ரேல் கூட மதச்சார்பற்ற ஃப்ட்டாவை நியாயமாக நடத்தி ஒரு அதிகாரம், போதிய நிலம் உள்ள பலஸ்தீன அதிகாரசபையை கொடுக்கவில்லை. மாறாக காலத்தை இழுத்தடித்து, முடிந்தளவு மதச்சார்பற்ற, ஆயுத வழியை கைவிட்ட தரப்புகள் மீது பலஸ்தீன மக்கள் நம்பிக்கை இழக்கும் விதமாகவே இஸ்ரேல் நடந்து கொண்டது. காஸாவில் படை பிரசன்னம், குடியேற்றம், பொருளாதார முற்றுக்கை என காஸா மக்களை அமைதி பேச்சில் முற்றாக நம்பிக்கை இழக்க செய்தபின், தன்னிச்சையாக இஸ்ரேல் காஸாவில் இருந்து விலகியது. கமாஸ் தேர்தலில் வென்று, காஸாவில் இருந்து ஃபெட்டவை திரத்தியடித்தது. பலஸ்தீன தரப்பில் சமாதானத்துக்கு தயாராக இருந்தோரை இஸ்ரேல் முடிந்தளவு பலவீனப்படுத்தி, அந்த வெற்றிடத்தை ஹமாஸும் பலஸ்தீனிய ஜிகாதும் நிரப்புவதை மறைமுகமாக ஊக்குவித்தது. இந்த பிண்ணனியில்தான் காஸா நிலப்பரப்பு கமாஸின் கைக்கு போனதும் அங்கே யுத்த தயாரிப்புகள் மேற்கொள்ள பட்டதும் நிகழ்ந்தது. பிகு 1. கமாஸ் காஸாவை கைப்பற்றியதும் எகிப்து எல்லையை அடித்து மூடியது. இடையில் அங்கே முஸ்லீம் பிரதர்ஹுட் ஆட்சி அமைத்த போது (இவர்களின் பலஸ்தீன பிரிவே ஹமாஸ் என்றாகியது) உறவுகள் மேம்பட்டன. 2. எப்படி இஸ்ரேலை மேப்பில் இருந்து அழிக்க வேண்டும் என்பது ஹமாஸ் நிலைப்பாடோ அதே போல், தமக்கு சமனான ஒரு பலஸ்தீன நாடு அமையவே கூடாது என்பது நெத்தன்யாகு போன்ற கடும்போக்கு இஸ்ரேலியரின் நிலைப்பாடும் ஆகும். #ஜாடிக்கேத்த மூடி இன்னும் ஒரு விடயம் இஸ்ரேலின் நரித்தனத்தை விளக்க: 2007 இல் விலகிய பின் ஹமாசின் பிடியில் இருந்த காஸாவில் ஒரு துண்டு நிலத்தைதானும் இஸ்ரேல் எடுக்கவில்லை. ஆனால் மிதவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த மேற்கு கரையை மிக வேகமாக கபளீகரம் செய்தது. இதுவும் கூட ஹமாஸ் அல்லது அழித்தொழிப்பு என்ற இரு மோசமான தெரிவுகளை மட்டும் பலஸ்தீனருக்கு கொடுக்கும் இஸ்ரேலின் நகர்வின் ஒரங்கமே.
  4. இதை நான் பார்க்கவில்லை. ஆனால் காஸாவினுள் ஒரு நெடிய சுரங்க கட்டமைப்பு உள்ளதும் அது இஸ்ரேலுக்குள்குள்ளும், எகிப்துள்ளும் முன்னர் ஊடுருவியுள்ளதும் உண்மைதான். இப்படியான சுரங்கங்களை தவிர்க்க எல்லையில் இஸ்ரேல் பத்தடி ஆழத்தில் காங்ரீட் சுவர்களை அமைப்பதும் உண்டு. அதேபோல் காசா-எகிப்து இடையான எல்லையில் பிலடெல்பியா கோடு என ஒரு சிறு பகுதியை இஸ்ரேல் கண்காணிக்கும் (எகிப்து-இஸ்ரேல் அமைதி ஒப்பந்த படி). இந்த எல்லை வழியாக ஆட்கள் மட்டும் போகவே அனுமதி (பொருட்கள் இஸ்ரேல் பக்கம் உள்ள சாவடி வழியாகவே போகலாம்). இதற்கு கீழாலும் சுரங்கம் அமைத்து எகிப்தில் இருந்து பொருட்கள் கடத்தப்பட்டதாக கூறி இஸ்ரேல் நடவடிக்கை எடுப்பதுண்டு. இந்த சுரங்கங்களில் சிலது இஸ்ரேல் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது அமைத்தவை. ————- லெபனான்-இஸ்ரேல் எல்லையில் இஸ்ரேல் காவல் அரணில் ஹிஸ்புல்லா கொடி பறக்கிறாதாம்.
  5. இஸ்ரேலிய தரை நகர்வு இந்த வார இறுதியில் அல்லாமல், வரும் வார நடு அல்லது கடைசி பகுதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாம். வானிலை காரணமாக காட்டப்பட்டுள்ளது. டெல் அவிவில் நேற்று வெள்ளமாம். ஆனால் இல்லை - இஸ்ரேல் பயப்படுகிறது அல்லது முஸ்லிம் உலக எதிர்ப்பை கண்டு அமெரிக்கா தடுக்கிறது என வேறு வகையிலும் பலர் வியாக்கியானம் கொடுக்கிறார்கள். ஹமாஸ் குழந்தைகளின் தலையை கொய்யவில்லை, சுட்டுத்தான் கொன்றது என பக்கம் பக்கமாக எழுதி விவாதிக்கிறீர்கள் என்றால் - உங்கள் தார்மீக திசை காட்டி திருத்த முடியாதளவுக்கு பழுதாகி விட்டது என்றே அர்த்தம். (உங்கள் - பொது பன்மையாக பாவிக்கப்பட்டுள்ளது).
  6. ஈரானிய அரச ஊடகம் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈடுபட முன்வருமாறு ஆட்சேர்ப்பு.
  7. தரவு-சரி பார்தலுக்கு (fact checking) நன்றி தம்பி. நான் பகிர்ந்த பின்னர் X உம் context சேர்த்துள்ளது.
  8. ——- வெள்ளை பொஸ்பரஸ் என ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் வெளியிட்ட ஆதாரம் - உண்மையில் புகை குண்டுகள் என இஸ்ரேலிய படைத்துறை மறுத்து -இதை பற்றி X தளத்தில் ஒரு சர்ச்சை ஓடுகிறது.
  9. யுத்தம் சம்பந்தமான தகவல்களை பகிர்வதும். Fog of war ற்கு மத்தியில் உண்மையை தேடுவதும், அதை விவாதிப்பதும், பொப்கோன் கொறித்தல் அல்ல என்பதை நீங்கள் ஏற்பீர்கள் என நம்புகிறேன். முள்ளிவாய்க்கால் சமயம், இப்படி ஒரு யூத தளமோ, அரபு தளமோ எம்மை பற்றி கதைக்கவில்லை. வெஸ்மினிஸ்டர் சதுக்கத்தில் நாம் மட்டுமே தனியே நின்றோம் இல்லையா? 10 நிமிட தூரத்தில் Edgeware Road இல் அரபிகளும், 20 நிமிட தூரத்தில் Golders Green இல் யூதர்களும் - எதுவுமே நடவாதது போல் தம் வாழ்வை தொடர்ந்தார்கள் இல்லையா? ஆகவே இதையிட்டு சஞ்சலப்படும், அக்கறைப்படும் நாம் இப்போதும் moral high ground இல் தான் நிற்கிறோம். அடிவாங்கிய இனம் என்பாதால் - அதிக ஒப்புவமைகள் இருப்பது காரணமாகலாம். 👆🏼👍 ———— ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹமாஸ் தலைவரை கட்டாரில் வைத்து சந்தித்தார்.
  10. ஐ நா வழியாக ஈரான் இஸ்ரேலுக்கு ஒரு செய்தியை அனுப்பி உள்ளதாம். நாம் இந்த பிணக்கு மேலும் தீவிரமடைவதை விரும்பவில்லை. ஆனால் காஸா நடவடிக்கை தொடர்ந்தால் தாம் தலையிட நேரும் என்பதே அச்செய்தியாம்.
  11. இடுக்கண் வருங்கால் நகுக என்றார் வள்ளுவர். இந்த மனித பேரவலதிலும் நக இயலுமா? பார்த்து விட்டு சொல்லுங்கள்
  12. அகதிகள் தொடரணி தாக்குதல் பற்றி மேற்கில் இருந்து இராணுவ விடயங்களை எழுதும் ஒரு கணக்கின் பார்வை. முழு நூல் (thread) ஐயும் வாசிக்கவும் (X ஐ ஏனைய மொழிகளிலும் மொழிமாற்றிப்பார்க்கலாம்). சண்டையின் ஆரம்பத்தில் நிகழ்ந்த இஸ்ரேல்-ஹமாஸ் கடற்சண்டை. ஹாமாசின் படகு ஏரிகிறது. கடலில் குதித்தோர் மீது இஸ்ரேலிய படையினர் தாக்குகிறனர்.
  13. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள சிரிய பகுதியான கோலான் குன்றுகள் மீது சிரியாவில் இருந்து ஒரு வான்வெளி ஆயுதம் ஏவப்பட்டதாம். காஸா எல்லையில் காத்து நிற்கும் மருந்து, உணவு இதர நிவாரணங்கள். இஸ்ரேல் உள்நுழைய அனுமதி மறுப்பு.
  14. இதுதான் பலஸ்தீன அகதிகள் தொடரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலாம். இஸ்ரேலிய ஆதரவு கணக்குகள் இது வான்வழித் தாக்குதல் அல்ல - தரையில் இருந்து வெடித்துள்ளது, ஹமாஸ் சொந்த மக்களையே தாக்கியது என்கிறனர். பிகு இந்த X கணக்கு மொசாட் என்ற பெயரில் இயங்கினாலும் அது உண்மையான மொசாடின் கணக்கு அல்ல. அதன் அருகில் satirical என போடப்பட்டுள்ளதை காண்க. கடந்த சனியன்று நடந்த தாக்குதலுக்கு முன் இது இஸ்ரேல் பற்றிய சுய நையாண்டிகளையே பகிர்ந்து வந்தது. தாக்குதல் நடந்த தினத்தில் இருந்து, Iron Dome தாக்குதல் முடியும் வரை இஸ்ரேல் சார்பாக நையாண்டி அற்ற தகவல்களை வெளியிடுகிறது. இது இஸ்ரேலியரின் கணக்கு, ஆனால் மொசாட்டின் கணக்கு அல்ல.
  15. கழுகு கண் என்பது போல் வெளவ்வால் காதைய்யா உங்களுக்கு😂. ஆனால் இதை கொப்பி அல்லாமல் inspiration எண்டு தான் சொல்லோணும் என இளையராஜா, ரெஹ்மான், தேவா எல்லாரும் சொல்லி இருக்கினம். அவையே அப்படி எனும் போது, அடிப்படை உபகரணங்களை வைத்து இசையமைச்ச நாமும் ஓகேதான்😎.
  16. அந்த பயம் இருக்கட்டும்😝 விடவில்லை. நினைத்தேன். ஆனால் ரொகிங்கியர்களை அடிப்பவர்கள் மதவாத பெளத்த சங்கத்தால் வழிநடத்தப்படுபவர்கள் என்பதால் - அவர்களுக்கு கொஞ்சம் மனமிரங்கினார்கள் என நியாபகம்😂
  17. பிடிக்கும் (like) என்பதை விட அவர்கள் மீது எனக்கிருப்பதை begrudging respect தயக்கம்-சேர் மரியாதை எனலாம்.
  18. இண்டைக்கு நான் தப்பித்தேன். உங்களைத்தான் தோலை உரித்து உப்பு கண்டம் போடப்போகிறார்கள்🤪. #கச்சேரி களைகட்டும்😂
  19. என்னது? பாலஸ்தீன ஆதரவாளர்களா😝. ஜோக் அடியாதேங்கோ அண்ணை. இப்படி எழுதும் ஆட்களில் 90% க்கும் மேல் அக் மார்க் முஸ்லிம் வெறுப்பாளர்கள். அவர்கள் சொந்த நிலத்தில், எங்கள் எதிரியான இந்தியா கஸ்மீரி முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்து, அவர்கள் சிறப்புரிமையை மீறி, மாநில அந்தஸ்தை பறித்து, மாநிலத்தை இரண்டாக்கிய போது அதை வரவேற்றவர்கள். ஒரு அப்பாவி முஸ்லிம் பெண்ணின் அபாயாவை இரத்தினபுரியில் காடையர் கழட்டிய போது அதை சரி என வாதாடியவர்கள். உகிர் முஸ்லீம்களுக்கு ஒரு அநியாயமும் நடக்கவில்லை என எழுதியவர்கள். இங்கே பாலஸ்தீனத்துக்கு ஆதரவாய் எழுத ஒரு காரணம் மட்டும்தான். இஸ்ரேலை மேற்கு ஆதரிப்பதே அந்த காரணம். இஸ்ரேலை மேற்கு ஆதரிக்காமல், மேற்கின் இடத்தில் சீனா இருந்திருந்தால்…இப்ப வெட்டடா, கொத்தடா எண்டு இஸ்ரேலுக்கு ஆதரவாக எழுதி இருப்பார்கள்🤣.
  20. 1. காஸாவில் இருந்து வெளியேறி கொண்டிருந்த சிவிலியன் வாகன தொடரை இஸ்ரேல் தாக்கி குறைந்தது 12 பேர் பலி 2. துருக்கி தொலைகாட்சியில் பேசிய முன்னாள் ஹமாஸ் தலைவர் “எமக்கு சிவிலியன்களும், ஆமியும் ஒன்றுதான்” என கூறி ஹாமாசின் அண்மைய தாக்குதல் நியாயப்படுத்தியுள்ளார்.
  21. பிரித்தானியாவில் வாக்குரிமை தனியே பிரித்தானிய பிரஜைகளுக்கு மட்டும் அல்ல, சகல பொதுநலவாய நாட்டு பிரசைகளுக்கும் உண்டு. பிரித்தானியாவில் வாழும் ஒரு பொது நலவாய பிரசையும் தேர்தலில் வாக்களிக்கலாம். நிற்க, இது இன்றைய நிலை. போன வருடம் வரை பிரித்தானியாவில் வாக்களிக்க போகும் போது வாக்காளர் அடையாளம் காட்டும் தேவையில்லை. வாக்காளர் டாப்பில் பெயர் இருந்தால் - கையை விசுக்கி கொண்டு போய் தரும் சீட்டை வாக்கி, பென்சிலால் ஒரு கீறை போட்டு போய்கொண்டே இருக்கலாம். இப்போ சட்டத்தை மாற்றி இது கட்டாயம் என ஆக்கி உள்ளார்கள். இதை செய்யும் அளவுக்கு வாக்கு களவு ஒண்டும் நடக்கவில்லை. ஆனால் அடையாள ஆவணங்களை வைத்திராமல் இருப்போர் யார்? அடிமட்டத்தில் இருப்போர், சிறுபான்மையினர், பொருளாதார ரீதியில் நலிவுற்றோர், மற்றும் ஏற்கனவே வாக்கு போட பஞ்சிபடும் இளையோர் - இவர்கள் அட்டை இருந்தாலும் அதை எடுத்து போகும் அலுப்பில் போகாமலே விட கூடிய ஆட்கள். இப்படியானவர்களின் வாக்கு தொழிற்கட்சிக்கே கிடைக்கும் (அநேகம்). இதை குறைக்க பழமைவாதிகள் கொண்டு வந்த சட்டம்தான் இந்த கட்டாய அடையாள ஆவணம் கோரும் சட்டம். ஒரு கோழியை உரிக்க பல வழிகளுண்டு (ஆங்கில பழமொழி there are many ways to skin a cat - அப்படியே எழுதினால் @Eppothum Thamizhanடென்சன் ஆகி விடுவார்😝). வெளிப்படையாக இன்ன இனம் அல்லது மதம் சார்ந்தோருக்கு வாக்குரிமை இல்லை என ஆக்க தேவையே இல்லை. பயங்கரவாதத்தை பெருமையாக கூறல் (glorifying terrorism) எனும் குற்றத்தை செய்வோருக்கு வாக்குரிமை இல்லை என ஒரு சட்டம் கொண்டு வந்தாலே போதும். தவிரவும் ஒரு சில கவின்சில் வார்டுகளை தவிர - லண்டன் மேயர் கான், ஸ்காட்லாந்து முதல் மந்திரி யூசூப், முன்னாள் நிதி மந்திரி ஜாவிட் போன்றோர் முஸ்லிம் வாக்குகளாலேயே வென்றனர் என்பது தவறு. இவர்களுக்கு வாக்களித்தோரில் அறுதி பெரும்பான்மையினர் முஸ்லிம் அல்லாதோரே. ஜாவிட்டின் பொம்ஸ்குரொவ் மத்திய இங்கிலாந்தில் இருக்கும் வசதியான வெள்ளையர் அதிகம் இருக்கும் தொகுதி. அதேபோல சுனாக்கின் ரிச்மண்ட் தொகுதி வட இங்கிலாந்தில் உள்ள இன்னுமொரு வசதி படைத்த வெள்ளையர் வாழும் தொகுதி. ஆகவே இப்போதும் கூட வெள்ளை இனத்தவர் அல்லாதோர் வெல்வது வெள்ளை இனத்தவர் வாக்கு போடுவதாலே. நான் எதிர்வு கூறும் நிலை வரின், இப்படி நடவாது. அதாவது ரிசிக்களும், சுவேலாக்களும், பிரீதிகளுக்கும் தொடர்ந்து போடுவார்கள் - ஆனால் ஜாவிட்களையும், கான்களையும் ஒதுக்கி விடுவார்கள். இன்னொரு விடயம் இங்கே இப்போ உள்த்துறை அமைச்சர் ஒரு ஆசியர். அதாவது தமிழ் தாய்+கோவா தந்தை. பிறப்பு இங்கே. மிக கடுமையான வலதுசாரி, இஸ்ரேலிய ஆதரவாளர். குடியேற்றவாசிகள் தொடர்ந்தும் வருவதை எதிர்ப்பவர். நான் மேலே வரவிருப்பதாக சொல்லிய சட்ட மாற்றங்கள் இவர் சொல்லியே ஆலோசிக்கப்படும். ஆகவே எல்லா வெள்ளை இல்லாதவரையும் ஒரே சட்டியில் போட்டு வறுக்க மாட்டார்கள். எல்லா இஸ்லாமியரையும் கூட இல்லை. ஆனால் ஆய் ஊய் என கத்துபவர்கள், போராடுபவர்கள், யூதரை தொந்தரவு செய்வோர், பலஸ்தீனுக்கு நிதி சேகரிப்போர், சமூக வலைதளங்களில் எழுதுவோர் - கண்காணிக்கப்படுவாகள். இப்படியான சிலரை காத்திருந்து வெளிநாடு போன பின், பாஸ்போர்ட்டை பறித்து நடு தெருவில் விட்ட சம்பவங்கள் ஏலவே நடந்துள்ளன. இங்கே மதத்தை விட ideology தான் முக்கியம். ஜனநாயக தாராளவாதமா அல்லது அடிப்படை இஸ்லாமியவாதமா என்பதே கேள்வி. இந்த மோதலில் ஆரம்ப கட்டம் இப்போ. காலம் போக போக இது வலுப்பெறும். அப்போ ஜனநாயக சிஸ்டத்தில் இருந்து கொண்டு, அது கொடுக்கும் மட்டுபட்ட சுதந்திரம், மனித உரிமையை பயன்படுத்தி, அதையே தாக்க விடமாட்டார்கள்.
  22. இதை மிக இலகுவாக ஏனையோரை பதப்படுத்தல் மூலம் மாற்றலாம். வேறு ஒரு விடயத்துக்காக இப்படியான பதப்படுத்தல் பிரெக்சிற்றில் வெற்றி பெற்றது. இந்த டிவீட்டில் உள்ளது ஒரு சின்ன non scientific பரிசோதனை. ஆனால் இது வரலாற்றில் அடிக்கடி நடக்கும் ஒன்றே.
  23. ஹம்சா யூசூபின் மாமியாரின் செய்தி. இவர் ஒரு ஓய்வு பெற்ற தாதி, டண்டி யை சேர்ந்தவர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.