Jump to content

satan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9067
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by satan

  1. சாச்சா..... உதெல்லாம் தமிழரசுக்கட்சியில் போட்டியிட அனுமதிக்கப்படாதவர்களின் வீண் பேச்சு, சுமந்திரன் மேலுள்ள பொறாமையால் பேசுகிறார்கள். மக்கள் சுமந்திரனை அமோகமாக வரவேற்பார்கள். "ஒருவர் சொன்னால்; கேட்டோடு, ஊரோடினால்; சேர்ந்தோடு (ஒத்தோடு)." சுமந்திரன் மேல் எல்லோருக்கும் ஏன் இவ்வளவு விமர்சனம்? அவரது திருகு தாளம் வெளிப்படையானது. இதன் காரணம், இப்போ கட்சியிலிருந்தே வெளிப்படுகிறது. இதைவிட உதாரணம் வேறென்ன வேண்டும்? ஆனால் காலதாமதம், தலைமையின் இயலாத்தன்மை, மக்களின் குரலுக்கு செவி கொடுக்காமை அவரை இந்தளவுக்கு கட்டுக்கடங்காதவராக உருவாக்கியிருக்கிறது. இவரது அபிமானிகள், உறவுகள், நண்பர் இன்னும் இவர் உத்தமர் என்று வாதாடி தம்மைத்தாமே ஏமாற்றுகின்றனர்.
  2. இவர் அவுஸ்ரேலிய பல்கலைக்கழகத்தில் பயின்றவர். மக்களுக்காக தன் இளமையை, வளமான வாழ்வை அர்ப்பணித்தவர். இறுதி நாட்களில் இந்தியாவில் ஆங்கில ரியூசன் சொல்லி கொடுத்து தன் வாழ்வாதாரத்தை தேடினார் என்பது என்னை மிகவும் கண் கலங்க வைத்தது. ஆனாலும், அவர் எந்த மண்ணுக்காக எல்லாவற்றையும் இழந்தாரோ, அந்த மண்ணில் அவரது இறுதியாசை, இறுதி மூச்சை நிறுத்தியது மன மகிழ்வைத்தந்தது. அவர் பிறந்த இடம் கரம்பன் என நினைக்கிறன். அவரது இறப்பில் சொந்தங்கள் கூட இல்லை, உறவுவழிக்காரர் வாரிசுகள் இறுதிக்கிரிகையை நடத்தியதாக கேள்வி.
  3. கேட்டு நெஞ்சு நோ? யாருக்கு? பேசிய அவருக்கா? யாரை ஆத்த? நல்ல வைத்தியரை அணுகுங்கள்!
  4. அரசியல்வாதிகளுக்கு அளிக்கப்படும் கஸ்ரப்படாமல் கூடிய சம்பளம், பகட்டான ஆடம்பர வாழ்க்கை, வசதி வாய்ப்பு, புகழ், சொத்து, மரியாதை. இதற்கு வேண்டிய தகுதி; மக்களை உசுப்பேற்றவும் ஏமாற்றவும் தெரிந்திருக்க வேண்டும். வேறு தகுதிகள் தேவையில்லை.வேலையில்லாப் பிரச்சனை. முன்னைய அரசியல்வாதிகளின் வாழ்க்கையால் ஈர்ப்பு. பின்னாளில் இவர்களுக்கு வரப்போகும் சிக்கல் தெரியாமை. இன்னும் பல.....
  5. மக்களின் மனமாற்றத்தையும் அதற்கான காரணத்தையும் நிஞாய பூர்வமாக வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ்த்தேசியம் என்பதை விட்டு விலகி, எனது கிராமம், வீடு என்று மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டார்கள். ஏன்,அதற்கு யார் காரணம்? நாங்கள் சிங்கள, தமிழ் மொழியை கற்று சமாதானமாக வாழ, நாட்டை கட்டியெழுப்ப முன்னேற்ற தயாராகிவிட்டார்கள். ஆனால் வற்புறுத்தி சாதிப்பதை வெறுக்கிறார்கள். இந்த ஒன்று இல்லையென்றால் தமிழ் தலைமைக்கும், சிங்கள தலைமைக்கும் அரசியல் சூனியம். ஆகவே, தமிழ்த்தேசியம் பேசி மக்களை உசுப்பேற்றி ஏமாற்றுபவர்களையும் இனவாதம் பேசி அரசியல் குளிர் காய்பவர்களையும் மக்கள் விரட்டியடிக்க வேண்டும். இதற்கு இரு பக்க மக்களும் முன்வரவேண்டும். இன்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தலைவர், யுத்த குற்ற விசாரணைகளின் முக்கியத்துவம் பற்றி கூறியிருக்கிறார். நாளடைவில் மக்களும் அதை ஏற்றுக்கொள்வர், ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயமுள்ளது. தவறும் பட்ஷத்தில் எதை எதிர்கொள்ள வேண்டுமென்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். என்றோ ஒருநாள் உண்மையை சந்தித்தே ஆக வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறார். எங்களின் ஈடு செய்ய முடியாத இழப்புகள், அழிவுகளுக்கு பதில் சொல்லி இனிமேல் இப்படி நடவாது என்கிற உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். அதுவே யுத்த குற்ற விசாரணைகளின் தண்டனையின் மூலம் சொல்லப்படும் செய்தியாகும்.
  6. ஐயோ..... இருக்கிற கட்சிகள் போதாதென்று நீங்கள் வேறை! இவர்களை யார் கட்சியில் சேர்ப்பார்கள்? எல்லாம் சிங்கள துதி பாடி, தம்மை வீரர்களாக காட்டும்போது, இவர்கள் உண்மையை பேசி வேட்டியை உருவி. மானத்தை வாங்கி விட மாட்டார்களா என்ன?
  7. ஒருவர் இருவர் சொன்னால் விட்டுத்தள்ளலாம், அவர்களை களையலாம் கட்சியை விட்டு, பலர் சொல்வதை யோசிக்க,ஏற்றுக்கொள்ள, திருந்த மறுக்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு, யாரை வெட்டி எறிய வேண்டுமென்று ஒட்டுமொத்தமாக சொல்லப்படும் நாள் வெகு தொலைவிலில்லை. நானல்ல அவர்கள். என்பவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் மக்களுக்கு? மக்கள் வெட்டி எறியப்படவேண்டியவர்கள், எங்கள் தனி மனித அரசியலுக்காக என்பார்களா?
  8. வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும், ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும். மக்களை வைத்து விளையாடியவர்கள் இப்போ, மக்கள் இவர்களை விரட்டியடிக்கப்போகிறார்கள். அதன் பின் எதை யாருக்காக சரி செய்வது, ஒன்று சேர்ந்து செயலாற்றுவது? மக்கள் எத்தனை முறை எச்சரித்தார்கள் உங்களை? நீங்களோ கவனத்தில் எடுக்கவில்லை, உங்களை விட்டால் மக்களுக்கு வாக்களிக்க வேறு யாருமில்லை என்கிற மமதையில் இருந்தீர்கள், மக்களே உங்களை உதறிவிட்டு தூர விலகி விட்டார்கள், உங்களால் தங்களுக்கு விமோசனம் இல்லையென உணர்ந்து கொண்டார்கள். அடுத்த தேர்தலில் மக்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்க தயார் செய்து கொள்ளுங்கள் உங்களை. ஜனாதிபதி தேர்தல் பகிடி, அவருக்கும் போட்டேன் இவருக்கும் போட்டேன். நாடாளுமன்ற தேர்தல் பகிடி, தேர்தலில் போட்டியிடும் எல்லோரும் வெற்றி பெறவேண்டும். தன் பொறுப்பை சரிவர திறமையுடன் செய்யாமல் பக்க சார்பாக நடந்து கொண்டதால் இன்று தனித்து, மௌனமாய், நகைச்சுவையாளனாய் வருந்துகிறார். சொல்லவும் முடியல மெல்லவும் முடியல அவரால்.
  9. சிறீதரனை போட்டியிடுவதிலிருந்து நீக்குவதற்காக மதுபான விற்பனை பெற்றவர்களின் பெயரை பகிரங்கப்படுத்துங்கள், அவ்வாறு செய்தால் குறித்த நபர்களை பதவியிறக்கம் செய்ய உதவியாக இருக்கும் என்று அனுராவிடம் கோரிக்கை வைத்தார், அதில் ஏமாந்த இவர், தோல்வியடைந்தவர்களுக்கு வாய்ப்பில்லை என்று சொல்லி மாற்றி, சிறீதரனையும் சாள்சையும் கைக்குள் போட்டு, அதிலும் ஒரு பொறி வைத்துள்ளார். நல்ல வேளையாக சார்ள்ஸ் அந்தப்பொறியில் இருந்து நழுவி விட்டார். தேர்தலில் சிறீதரன் தோற்றால்; தமிழரசுக்கட்சி தோற்றால், பழி யார் தலையில் விழும்? போனதடவை, மாவை தோற்ற போது, தலைவர் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் ஆகவே தலைவர் பதவி விலக வேண்டுமென கூறி, தலைவருக்கு தெரியாமலேயே பத்திரிகைகளில் அறிக்கை விட்டு, அவமானப்படுத்தி குழி பறித்தவர். இன்று அதை நிறைவேற்றியும் விட்டார். அன்று, எல்லோரும் சம்மதித்தால், அந்த பதவியை ஏற்க நான் தயார் என்று அறிக்கை விட்ட சிறீதரன், இன்றுஅதே பொறியில். இவரையும் விலக்கி விட்டால், சுமந்திரனின் ரூட் கிளியர்! ஆனால் நாம் நினைப்பது ஒன்று, நடப்பது வேறொன்று, பாப்போம் சுமந்திரனின் சாமர்த்தியத்தை.
  10. இலங்கைச் வரலாற்றில் அப்படி யாரும் இருந்தார்களா? இருந்திருந்தால் நாடு இப்படி அழித்திருக்குமா? அப்படி யாரும் இருந்தால்; அவரை மக்களுக்கு சுட்டிக்காட்டுவது தங்களின் கடமை. அதை விட்டு இல்லாத ஒன்றை இருப்பதாக பொய் கூறக்கூடாது.
  11. உண்மை. ஆளும் தரப்பினருடன் சேர்ந்து விட்டால் சுகம் அனுபவிக்கலாம் என வௌவால் போல தொங்கும் கூட்டம், தங்கள் பழைய எஜமானரையும் கட்சியையும் துறந்து வேறொரு பிறப்பெடுக்க முயற்சிக்கின்றனர். புதிய மொத்தையில் பழைய கள் குடுக்க முயற்சிக்கின்றனர், குடிப்பவர் யார்? அனுரா குடிப்பாரானால் முன்னையவர்கள் துரத்தியடிக்க பட்டிருக்க மாட்டார்களே. மாற்றத்தை வேண்டித்தான் மக்கள் இவரை நாடினர், அது அவருக்கு நன்றாகத்தெரியும். அவர்களின் அவாவை நிறைவேற்றி வைக்க வேண்டியது இவரின் கடமை. இது இவருக்குள்ள பாரிய பொறுப்பு, இந்த சந்தர்ப்பத்தை கைவிட்டால் இவர்களுக்கோ, வேறு யாருக்கோ இப்படிப்பட்ட ஒரு பொன்னான சந்தர்ப்பம் இவர்களே நினைத்தாலும் திரும்பி வராது. சந்திரிக்கா நழுவ விட்டு இப்போ புலம்புகிறார். மஹிந்த மனதுக்குள்ளேயே குமுறுவார், நான் செய்த தவறு அவர்களின் தலைவரை கொன்றதுதான் என்று வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் தாங்கள் செய்யாததை வேறொருவர் செய்து புகழடைவதை விரும்பவில்லை, தடைக்கற்களாக இருக்கிறார்கள். தங்கள் வாரிசுகள், சொத்துக்களுக்காக பொன்னான நாட்டை அடகு வைத்து அழிக்கிறார்கள். கண் கெட்டபின் நீலிக்கண்ணீர் வடித்து, நமஸ்காரம் செய்வதில் பயனில்லை. காலம் ஓடிக்கொண்டே இருக்கும், அது யாருக்காகவும் தன் ஓட்டத்தை நிறுத்தப்போவதில்லை.
  12. மீண்டும் இவரிடமே ஆசி பெற்றனரா? எல்லோரையும் ஒன்றிணைத்து செயற்பமுடியாத, முதுகெலும்பில்லாத தலைவர். ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக்கட்சியாக சஜித்துக்கு ஆதரவு, பாராளுமன்ற தேர்தலில் இருதலைக்கொம்பு எறும்பாக, தனது கட்சியையும் அதிகாரத்தையும் பறிகொடுத்த, இழந்த தலைவராக யாருக்கு ஆதரவு கோருவார் மக்களிடம்? மாம்பழத்துக்கா, வீட்டுக்கா? ஒரு தலைவன், முப்பத்தைந்து ஆண்டுகளாக பலதரப்படடட, திறமையுள்ள, திறமையற்ற போராளிகளை வைத்து சிங்களத்துக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது எவ்வாறு? நினைத்ததை சொன்னார், சொன்னதை நிறைவேற்றினார், யாருக்காகவும் தன் கொள்கையை விட்டுக்கொடுக்காத தன்மை எதைக்கண்டும், யாரைக்கண்டும் பயப்படாத, சுட்டிக்காட்டி திருத்தி வழிநடத்தும் நெஞ்சுரம், திறமை, பொறுப்பு எதிரிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டாலும் தீரமுடன் போராடி மக்களுக்காக உயிர் விட்டிட ஒரே தலைவன். இதில் ஏதாவது ஒன்று நமது இன்றைய தலைவர்களிடம் உண்டா? அவர் கட்டியெழுப்பியதை சிதைத்ததை தவிர.
  13. இப்போ..... மக்கள்தான் இவர்களுக்கு தீர்ப்பு வழங்கும் கடவுள்! இவர்கள், அவர்களை மன்றாடவேண்டியுள்ளது வாக்குக்காக. மக்களால் அந்தஸ்து பெற்றவர்கள், அந்த மக்களை ஏமாற்றுவது எவ்வளவு துரோகத்தனம். இவர்கள் யாராவது, அதை நினைத்து மனவருத்தப்பட்டிருப்பார்களா? தாங்கள் தோற்றவுடன், மக்களை குறை கூறுவார்கள். தாங்கள் செய்யாத வேலைக்கு மக்கள் கூலி தர மறுத்து விட்டார்களென.
  14. ம்....ம்... அத்தோடு, தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்த நன்மைகள் என்ன, இனிமேல் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதையும் சொல்லி சவால் விட்டால், உங்களை நாங்கள் மனமார வாழ்த்தவும், மற்றைய வேட்பாளர்கள் உங்களை பின்பற்ற உதவியாகவும் முன்மாதிரியாகவும் இருக்கும். யாரும் சவால் விடலாம் செய்வது யார்?
  15. அதோடு மூட்டை கட்டியவர்தான் மஹிந்தர், இவர் அரசியல் அனாதையாக்கப்பட்டுவிட்டார், அரசனை நம்பி புருஷனை கைவிட்ட மாதிரி. மீண்டும் தமிழ் உணர்வுள்ள கட்சியிற்தான் சேருவேன் என ஏலம் விட்டுக்கொண்டு திரிந்தார், யாரும் ஏற்கவில்லை. இவர் வெளியேறிய வீட்டுக்குள் வேறொருவர் குடியேறி விட்டார். சுமந்திரன் அவரை தட்டு வைத்து கூட்டி வந்து குடியேற்றினார்.
  16. தேர்தல் திணைக்களமும் திணறப்போகுது, போட்டியிடும் கட்சிகளின் தொகை வாக்களிக்கும் மக்களின் தொகைக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என. இதில் யாரும் மக்களுக்காக சேவை செய்ய விரும்பவில்லை, மக்களை ஏமாற்றி தங்களை சிறப்பிக்க, சும்மா இருந்து சுக வாழ்வு அனுபவிக்க விரும்புகிறார்கள் என்பது. இதற்கு அனுரா ஒரு முடிவு கட்டவேண்டும். ஒரு பதவியை வகிப்பவர் அந்த துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும் என்பதுபோல், இதற்கும் ஒரு வரையறை கொண்டுவந்து இவர்களை கட்டுப்படுத்த வேண்டும், அதற்கான பொறுப்புக்கூறல் செய்ய வைக்க வேண்டும். அதன் பின் தகுதியற்றவன் அரசியல் பக்கம் தலைவைத்து படுக்கவே மாட்டான்.
  17. தமிழரசு கட்சியை விட்டு விலகி, சிங்களத்திற்கு முட்டுக்கொடுக்கும்போது மஹிந்தரிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுவிட்டார் வியாழேந்திரன். அபிவிருத்தி அரசியல் செய்யப்போறேன் என்று சவால் விட்டார், அபிவிருத்தியுமில்லை, அரசியலுமில்லை. தமிழ் கோசம் போட்டு வெல்லலாம் என்று நினைப்பவர்கள் அதை விட்டு விலக மாட்டார்கள், சாதிப்போம் என்று விலகியவர்கள் தொடர்வது மிகக்குறைவு. தேசியத்தை வைத்து வயிறு வளர்த்தவர்கள், புகழ் சேர்த்தவர்கள் இனி வீட்டோடு இருக்க அனுப்பப்படப்போகிறார்கள். பெரும்பான்மை கட்சிகளைவீட்டுக்கு அனுப்ப சிங்களமக்கள் முடிவெடுத்தார்கள், தமிழ் மக்களும் தங்களை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதிலும் இவர்கள் கோட்டை விட்டால் தங்கள் மேல் தாங்களே மண்ணை அள்ளிக்கொட்டுகிறார்கள். தமிழ் அரசியல் வாதிகளுக்கு கப்பம்கொடுத்து நாட்டை குட்டிசுவராக்குவதை விட்டு, தமிழரின் உரிமையை கொடுத்து நாட்டை கட்டியெழுப்ப எந்த முட்டாள் சிங்கள அரசியல், இனவாதிகளுக்கு தெரிவதில்லை, ஏற்றுக்கொள்வதுமில்லை. ஒரு முட்டாள் செய்வதை, வரும் முட்டாள்களும் தொடர்ந்து நாட்டை அதல பாதாளத்திற்கு கொண்டு செல்கிறார்கள், அதில் பெருமை வேறு. தமிழரை அழிப்பதாக கூறி, நமது நாட்டை எமது தலைமையிலேயே அழித்தோமென கொண்டாட்டங்கள் வேறு.
  18. குட்டையை குழப்பி மீன் பிடித்து விடலாம் என்று கணக்கு போடுபவர்களுக்கு, மீன்கள் குழப்பத்தில் குட்டையை விட்டு வெளியேறி வேறொரு குட்டையையோ, நீர்நிலையையோ தேடஆயத்தமாகி விட்டன என்பது தெரியாமலிருக்கலாம். எந்த சின்னம் எந்த கட்சிக்கு என்று தெரியாமல் குழப்பமாக இருந்தாலும், தங்களுக்கு வேண்டாத சின்னம், தங்களை ஏமாற்றிய சின்னம், தங்களால் தூக்கி எறியப்படவேண்டிய சின்னம் எது என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அதிலொரு குழப்பமுமில்லை மக்களுக்கு. இப்போ முளைத்த சின்னத்தால் தமக்கு எதுவும் நடக்காது ஆகவே அந்த சின்னத்தையோ வேட்பாளரையோ பற்றியோ மக்கள் நினைவில் வைத்திருக்கவோ சிந்திக்கவோ மாட்டார்கள். இவர்கள் செய்யும் கூத்து, ஒரே ஒரு சின்னம், அனுராவின் சின்னத்தை, அனுராவை நோக்கி மக்களை தள்ளுகிறார்கள் என்றே நினைக்கிறன்.
  19. இவையெல்லாம் இனிவருங்காலத்தில் இருக்குமா என்பது கேள்விக்குறியே? மக்களின் இரத்தத்திலும் வியர்வையிலும் சொகுசு வாழ்க்கை, ஏமாற்று வேலை. இவையெல்லாம் நிறுத்தப்பட வேண்டும். மக்களுக்கு சேவை செய்ய வருவோருக்கு இத்தனைசலுகைகள் ஏன்? இவர்கள் மக்களின் பணத்தில் சும்மா இருந்து சலுகைகளை அனுபவிக்கிரறார்கள், மக்கள் அனுபவிப்பது துயரம். இவர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகளை நிறுத்தி மக்களுக்கு பகிர்ந்தளித்தால்; இப்படி வகை தொகையின்றி போட்டியிடுவோர் குறைந்து, உண்மையாகவே மக்களுக்கு சேவை செய்வோர் தோன்றுவர். அல்லது காணாமற் போவர். செய்வாரா அனுரா?
  20. எல்லா சிங்கள தலைமைகளும் கதிரையேறியவுடன், தம்மை புகழவும் சாமரை வீசவும் தாம் காலால் இட்ட பணியை தலையால் செய்துமுடிக்கவும் இவருக்கு முதலாக அழைப்பு விடுவது வழக்கம். ஆனால் இந்த தலைவர் இவரை அழைக்கவுமில்லை, இவர் தெரிவித்த கருத்துக்களுக்கு பதில் அளிக்கவுமில்லை, தேர்தலில் இவர் வெல்லக்கூடிய வாய்ப்புமில்லை. தொடங்கிவிட்டார், கடிதம் எழுதி, தான் தான் செய்வித்தேன் என்று கூவ. அவர் ஒரு தந்திரம், இவர் ஒரு தந்திரம். அனுரா தான் செய்ய விரும்புவதை தன் கட்சி சேர்ந்தவர்களின் கருத்துகளுக்கமையசெய்வாரேயொழிய இவர் சொன்னார் என்றோ அல்லது தனி நபர் சொன்னார் என்றோ செய்யப்போவதில்லை. இவர்களின் தில்லுமுல்லுகளையும் வேஷங்களையும் அறியாதவரா அவர்? இவர்கள் தங்களுக்குள் ஒவ்வொரு எண்ணம். இவர் சொன்னாற்த் தானே யாரும் கேட்ப்பதற்கு. இவருக்கு எதையும் கேட்க தகுதியுமில்லை தராதரமுமில்லை தேவையுமில்லை. அதற்காக அவர்களோடு அவர்கள் இணைக்கவுமில்லை. இவர் சிங்களத்துக்கு சேவகம் செய்ய பணிக்கப்பட்டவர், மக்களுக்காகவல்ல. சொல்லப்போனால் கோமாளி எல்லா துறையிலும் தலையை காட்டி, தான் ஏதோ பிரபல்யமானவர்போல் காட்டிக்கொள்வார். அண்மையில் நான் அனுராவின் ஆள் என்று தெருவில் நின்று, என்ன நடந்தது என்று கூட தெரியாமல் கூவினார் ஒருவர், அவரை நினையுங்கள், அவர்தான் இவர். அவர் தெருவில், இவர் மேடைகளில் அழையாமலே கூட்டத்துக்குள் புகுந்து படம் காட்டுவார் வாக்குறுதிகள் அள்ளி விடுவார் அந்த வாக்குறுதிகள் நிலுவையில் இருக்க வேறொரு துறைக்குள் மூக்கை நீட்டுவார்
  21. இதுகளெல்லாம் விமர்சிக்குமளவுக்கு இருக்கிறது தமிழ் கட்சிகள். அன்று தலைவருக்கு வாய்த்த விநாயகமூர்த்தி முரளிதரன், சிவநேசதுரை சந்திரகாந்தன் போல தமிழரசுக்கட்சிக்கு வந்து வாய்த்த ஒன்றால் அந்த துரோகி இவர்களை பார்த்து சிரிக்கிறது. தங்களது வாழ்வாதாரத்திற்கு தமிழ் போராட்டத்தையும், தமிழ் உணர்வையும் வைத்து பிழைக்கும் கூட்டம். இந்த விநாயக மூர்த்தி முரளிதரன் போன்றவர்களுக்கு அரசியல் செய்ய என்ன லாயக்கு? போராட்டத்தை விற்று அரசியல் செய்யுது. அதற்குள் விமர்சனம் வேறு.
  22. சரி, அவர்களெல்லாம் பிழையானவர்கள் தாங்கள் ஒரு பேட்டி கொடுக்க வேண்டியதுதானே? உண்மையை சொல்கிறவர்கள் தவறானவர்கள், தவறு செய்கிறவர்கள்தான் சரியானவர்கள். தேர்தல் முடிவுகள் எல்லோரின் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கும், அப்போ உங்கள் கருத்தை எழுதி சரி பிழையை விளக்குங்கள்.
  23. தமிழரசுக்கட்சியில் போட்டியிடுவதால், தாம் வெற்றியடையப்போவதில்லை என்பதுடன் தமது எதிர்கால அரசியல் பாதிக்கப்படும் என பயப்படுகிறார்கள் இளையவர்கள். முக்கிய காரணம் சுமந்திரன் என்பதை சுட்டிக்காட்டாமல் ஒருசிலரின் செயற்பாடு என்கிறார்கள். சாள்ஸ் நிர்மலநாதன் தான் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்தாலும், சுமந்திரன் தானும் அத்தகைய முடிவை எடுக்க வேண்டும், அதை தவிர்ப்பதற்காக அவரை கைக்குள் போட்டுக்கொண்டார். என்னை கட்சி வற்புறுத்தியது, மக்கள் கேட்டுக்கொண்டார்கள் என்று புலுடா விட முடியாதென்பதால், சூட்ச்சுமகாக இவர்களை அணைத்துக்கொண்டார் சுமந்திரன். இப்போ, அவர்களுக்கே அவமானமாக இருப்பதால், மீண்டும் நழுவிவிட்டார் சாள்ஸ். மக்கள் கேட்டுக்கொண்டார்கள் என்பதெல்லாம் பொய். சுமந்திரன் என்று சொல்ல வாய் வரவில்லை. சிறீதரனும் விலகா விட்டால் வருத்தப்படுவார். சுமந்திரனை தனியே விடவும், அப்போதான் அவரின் திறமை, மக்கள் அவர்மேல் வைத்திருக்கும் நம்பிக்கை வெளிப்படும். கும்பலில கோவிந்தா என்று கூவி விட்டு, நான் தான் பொருத்தமானவர் என்று சொந்தம் கொண்டாடுவார்.
  24. நாடு பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை, தமிழரை அழிக்கவேண்டும், வாழ விடக்கூடாது என்று செயற்பட்டால், கூத்தாடிகள் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
  25. தனக்கு எந்த நேரமும் எதுவும் நிகழலாம் என்பதால் ஒரு பத்திரிகையிடம் முழு விடயத்தையும் ஒப்புவித்ததாக சொல்கிறார். லசந்த விக்கிரம துங்கவை விட்டு வைக்காதவர்கள் இப்பவே அந்த பத்திரிகைக்காரரை தேடி குறி வைப்பார்கள். இவரும் அந்த பயங்கர கூட்டத்தில் இயங்கியவர். உண்மையை கண்டறிந்து தண்டிக்கிறவராக இருந்தால் இவருக்கு பாதுகாப்பளிப்பது அனுரவின் கடமை. தட்டிக்கழிப்பாரா, அல்லது செய்து நிரூபிப்பாரா தான் சொன்னதை?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.